New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா
Permalink  
 


 

திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா

Cover athigan-page001

செறிவு

நிலமிசை நீடு வாழ்வார் என மூன்றாவது குறளில் துவங்கி,பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,மற்றீண்டு வாரா நெறி,பிறப்பெனும் பேதைமை நீங்க எனப்பலவாறாகவும் ஆங்காங்கே,குறள்களில் இறவாநிலையை வாழ்ந்து கொண்டிருக்கையிலேயே எய்தும் நெறியை உலகறியச் செய்தவர் திருவள்ளுவர்.

இறவாநிலையை முதற்கண் இலக்காகப் போதிக்கும் சனாதன இந்து அறநெறிப்படி,குறள் நூலாசான் தன் வாழ்நாட்களில் ஆத்திகனாக வாழ்ந்து இருந்தால் மட்டுமே அல்லால்,அக்கோட்பாட்டையே தீந்தமிழில் குறள்களின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் எவ்வாறு வெளிக்கொணர்ந்திருக்க முடியும்?

தெய்வம் என்றால் என்னவென்ற தத்துவ ஆய்வில் முழுவதும் ஈடுபட்டு தன் வாழ்நாளிலேயே அகத்தே வானுறையும் தெய்வமாகத் திகழ்ந்திருந்த பெருந்தகையால் மட்டுமே அல்லால்,வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் அடையக் கூடும் பயனைப் பற்றித் தெள்ளத்தெளிவாக புனைய இயலும்?

ஆனாலும்,இந்த வலைப்பதிவிற்கு பட்டிமன்றப் பேச்சுத் தலைப்பு போன்ற  தலைப்பு எதற்கு? காரணங்கள் உண்டு.

திருவள்ளுவமாலை (http://bit.ly/2te6gvx என்ற நூலின் ஒரு சில பாக்களை வாசித்தாலே புலனாகும்,வள்ளுவன் தன்னை உலகிற்கே அளித்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என பாரதி எதற்காக பாடினான் என்று. திருவள்ளுவ தெய்வத்தைப் போற்றி அத்தகைய முறையில் சில வரிகளை எழுத இந்த சிறியேனுக்கும் எழுந்த அவா முதற்காரணம்.

அங்ஙனம் முற்படுகையில்,சமூக ஊடகங்களில் திருவள்ளுவர் அரை நாத்திகன் எனவும்,கடவுள் மறுப்பாளர் எனவும் எவ்வித ஆய்வுகளை மேற்கொளாமலும் கூறப்படும் கருத்துக்களை வாசிக்க நேர்ந்தது.தமிழ் கூறும் நல்லுலகில் பொய்யாமொழிப் புலவனைப் பற்றி இத்தகைய வசைச் சொற்கள் பரவிக் கிடப்பதை எண்ணி பதைபதைத்தது மனம் என்பது உண்மை.

திருவள்ளுவனுக்கான இச்சிறியேனால் சூட்டப்பெறும் புகழ்மாலையில் வள்ளுவனின் குறள்களைக் கொண்டே,தெய்வம் பற்றிய தத்துவ ஆய்வை மேற்கொளல் வேண்டும் என அப்போதே மனம் உறுதி பூண்டது.அதன்படியே,தன்னாலியன்ற இச்சிறு பங்காற்றுவதன் மூலம் தமிழ்மறை தெய்வத்தின் புகழ் வானோங்கச் செய்வதே இவ்வலைப் பதிவின் சிறப்புக் காரணமாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

விடாமுயற்சிக்கான மிகப் பரவலான மேற்கோளாக பலரும் குறிப்பிடுவது இக்குறளையன்றோ!

 மேற்கூறிய குறளில் ஆகாது என்ற சொல்இயலாது,முடியாது என்று தான் பொருள்படும்.தெய்வத்தினால் முடியாமற் போனாலும்,என தெய்வத்திற்கும் எல்லை உண்டு என்றே திருவள்ளுவர் கூறுவதாகப் பொருள்படுத்த வேண்டும். “

பயனை எதிர்நோக்காது வினையாற்றுக,பயனை ஊழ்வினைக்கேற்ப அளிப்பது தெய்வத்திடமன்றி மற்றவிடத்தில் கிடையாது என்ற பகவத்கீதைப் பொன்மொழியையொத்த பொருளைக் கூறும் பரிமேலழகர் உள்ளிட்ட பல ஞானியரின் விளக்கங்களுக்கு இடையிலே மேற்கண்டவாறு பொருள் கொண்டிருப்போரையும்கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம்– எனவும் விளக்கம் தந்திருக்கும்புல்லறிவாளரையும் என்னென்பது!

முரணான பொருள் கூறும் இவ்வாறான மிகுத்த தவறைச் செய்வது கல்லா மாந்தர் என்றால் கவலையில்லை.ஆனால் திருக்குறள் விளக்கம் புனைய தமிழ் மொழியில் ஆளுமை உண்டென்ற ஒற்றைத் தகுதி போதுமானது என்ற ஆணவ மிகுதியாலன்றோ,இவர் தமது அற்ப அறிவை உலகிற்குக் காட்ட,தன் விருப்பத்திற்கேற்பப் பொருள் உரைக்கின்றனர்?

இல்லாமை பலவற்றுள் மிக்க இல்லாமை அறிவில்லாமையே  என புல்லறிவாண்மையின் முதற் குறளில் இத்தகையோரைத் தான் திருவள்ளுவர் சாடியுள்ளாரோ!

வள்ளுவனே அறிவுறுத்திய,வாழும் உயிர்க்கு இரு கண்ணெனத் தக்கவையான எண் (எண்ணுதல்-தத்துவ ஆய்வு மேற்கொளல்மற்றும் எழுத்து இலக்கணம்இவற்றுள் இரண்டினையுமே அரைகுறையாகத் தெரிந்து பிதற்றும் இவர்களை எண்ணி பரிதாபமே கொள்ளவியலும்.

இத்தகையோர், தங்களின் நாத்திகக் கருத்தை பகிர,வள்ளுவன் புகழை மாசுபடுத்தும் இழிசெயலில் ஈடுபடுகிறார்கள்.

sm msg athigan-page001

சமூக ஊடகங்களில் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கும் மேலேயுள்ளதைப் போன்ற பதிவுகளைப் பதிவரை வேறு என்னவென்பது!

மொத்தம் 1330 குறள்களில் பத்து குறள்களை கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் கீழ் உட்படுத்தியிருக்கும் பொய்யாமொழிப் புலவனான  திருவள்ளுவரைக் குறித்து,தெய்வப்புலவர் என்ற ஈடற்ற புகழ் மிக்க வள்ளுவனைக் குறித்து,அவர் நாத்திகன்,அரை நாத்திகன் என்ற வகையில் கருத்துக்களை சமூக வலைதளங்கள் பலவற்றில் பரப்பிக் கொண்டிருப்பவர்களின் சிற்றறிவை எள்ளி நகையாடத் தான் வேண்டும்

குறுகிய மனநிலை கொண்டோரால் மட்டுமே இவ்வாறான தீஞ்சொல்லை பரப்பவியலும் என ஒரு பக்கம் எண்ணி இந்த அரைவேக்காடான கருத்துக்களைப் புறந்தள்ளவியலும்.

அதேவமயம்,நிறைமொழி மாந்தர் பெருமை போற்றுவோர்,வள்ளுவனின் வான்புகழை அவ்வப்போது நல்லுலகிற்கு பரப்பும் நற்தருணமாகவும் இச்சூழ்நிலை அணுக வேண்டிய அறப்பொறுப்பில் உள்ளனர் என்பதையும் மறக்கவியலாது.  

இம்மாதிரியான பதிவுகள் யாவுமே,தெய்வத்தான் ஆகாதெனினும் போன்ற,தெய்வம் என்னும் சொல் இடம் பெறும் ஒரு சில குறள்களை மட்டும் எடுத்து,அவற்றை தவறாகப் பொருள்படுத்துவதால் ஏற்படும் பொதுவான விளைவுகளே.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா
Permalink  
 


கடவுள் நம்பிக்கை பற்றிய ஐயம் பலருக்கும் இயல்பேயாயினும், அத்தகையவரில் சிலர்,தாம் ஆத்திகம் பற்றி கொண்டுள்ள ஐயமுடைய கருத்துக்கு வள்ளுவர் போன்ற சான்றோரும் விதிவிலக்கு அல்ல என்ற கண்ணோட்டத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.

இந்த வலைப்பதிவின் நோக்கம் இத்தகைய தவறான கண்ணோட்டத்தை சீர்படுத்த,மறைமொழி ஆய்வு முயற்சியை மிகச்சிறு அளவில் மேற்கொள்வதேயாம்.

வள்ளுவன் முதற்குறளில் ஆதிபகவன் என்ற சொல்லில் துவங்கி, இறைவன்,தெய்வம்,அமரர்,உலகியற்றியான் என ஒரே மெய்ப்பொருளைக் குறிப்பால் உணர்த்தும் பல சொற்களையும் கையாண்ட முறை பற்றி மிகவும் சுருக்கமாக ஆராய முற்பட்டதன் விளைவே இந்த வலைப்பதிவாகும்.

இறைதத்துவத்தைப் பற்றிய சரியான நோக்கலும்,புரிதலும் நம் அன்றாட வாழ்வின் பல்வேறு சூழல்களை நல்ல விதத்தில் எதிர்கொள்ள வகை செய்கிறது.நீள்விசும்பு அருளும் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

நன்றிக்கு நல்வித்தாக்கும் ஒரேயெண்ணம் கொண்டு,இச்சிறுமுயற்சியை அடியேன்,இறைவன் மற்றும் ஆசானின் அருளை வேண்டித் தொடர்கிறேன்…………

ஆத்திகன்,நாத்திகன் – சொற்பொருள் விளக்கம்

பலரும் இவ்விரு சொற்களை பயன்படுத்துவதால் மட்டுமே,இவற்றின் சரியான புரிதலுண்டு எனக் கூறவியலாது. சரியான புரிதலுள்ளவர்கள் திருவள்ளுவனை இன்னும் நன்கு உணர்ந்து போற்றத்தகுந்த ஆசானாக உயர்வாக நடத்துவார்கள், மனதில் வள்ளுவனைப் பற்றிய இவ்வாறான எண்ணங்கள் தோன்றினாலும்,அத்தகைய ஐயங்களைத் தீர்க்க முனைவார்களேயன்றி,அதை விடுத்து,வள்ளுவனைக் குறை பாடிக் கொண்டிருக்கமாட்டார்கள்.

சனாதன இந்து அறநெறியின்படி,முதலும் முடிவுமற்ற பரமன் என்பதே மெய் என்றஇறைமைக் கோட்பாட்டை ஏற்பவரை ஆத்திகர் என்போம்.இந்த ஆத்திகர் ஆறு ஆன்மீக நெறிகளுள் ஒன்றை நம்பிக்கையுடன் (சிரத்தையாக) பின்பற்றபவர் ஆவார்.ஷண்மதம் எனப்படும் ஆறு ஆன்மீக நெறிகளாவன

1.   காணபத்யம் ( ஆனைமுகன்/கணபதி வழிபாடு )

2.   கௌமாரம் ( குமரன்/முருகன் வழிபாடு )

3.   சௌரம்: ( சூரியன் வழிபாடு )

4.   சாக்தம் ( அன்னை/சக்தி வழிபாடு )

5.   சைவம் ( சிவன் வழிபாடு )

6.   வைணவம் (திருமால் வழிபாடு )

அவ்வாறன்றி கடவுள் நம்பிக்கையின்மை,இறைமறுப்பு பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துபவரைக் குறிக்கும் சொல் நாத்திகன் ஆகும்.

பொதுவாக சமூக வழக்கத்தில் இறைவன்/தெய்வம் இச்சொற்களுக்கு ஆங்கிலச் சொல்லான காட் (God/Gods) என்பதன் பயன்பாடே பெருமளவில் உள்ளது.அதேபோல்ஆத்திகன்/நாத்திகன் என்பதற்கும் ஆங்கிலச் சொற்களான தீஸ்ட்/ஏதீஸ்ட் (theist/atheist)இவற்றின் பயன்பாடே பெருமளவில் உள்ளது.ஆனால்,தீஸ்ட்/ஏதீஸ்ட்/காட் இச்சொற்கள் யாவுமே ஆபிரகாமிய கோட்பாடுகளை மையமாகக் கொண்டதால்,இவற்றைக் கொண்டுசனாதன இந்து அறநெறியின் ஆத்திகன்/நாத்திகன் ஆகிய சொற்களைப் பொருள்படுத்த முயல்தல் முற்றிலும் தவறான அணுகுமுறையே.

ஒருவன் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்பதை கண்டறிய தான் உலகவாழ்வில் கடைத்தேற,பண்டைய இந்தியாவில் தொன்றுதொட்டு ஆன்றோர்கள் அமைத்த ஆன்மீகநெறி வழிகள் பலவற்றுள் தனக்கு உகந்ததை கடைப்பிடிக்க விழைவதன் மூலம் தான் தீர்மானிக்கமுடியும்.

ஆத்திக நெறிகளும்,வலிய  சான்றுகளும்  

நான்கு வேதங்களை ஏற்றுக்கொள்ளும் ஆறு ஆன்மீக நெறிகள் தத்தமது நெறிகள் முன்னிறுத்தும் வழிபாட்டுக் கடவுளை பரம்பொருளின்/பரமனின் அம்சமாகக் கொண்டு வீடுபேறு எய்துவதை உயரிலக்காகக் கொண்டவை.அவ்வாறே வள்ளுவனும் அறம்,பொருள்,இன்பம்,உயிரச்சம் என நான்கு திறன்களைக் கூறுகிறான்.

இவை யாவுமே வலிய சான்றுகளை (ப்ரமாணம்அடிப்படையாகக் கொண்டவை.ஆதலால் வலிய சான்றுகள் எவை என முதலில் தெளிவோம்.

நாம் ஏனைய பொருட்களைப் பற்றிய அறிவை அடைய உதவும் கருவியாகவும்,அடைந்த அவ்வறிவை ஏற்றுக்கொள்ள குறிப்பீடாகவும் உள்ளது வலிய சான்று எனப்படுகிறது.இவை ஆறும் கீழே விளக்கப்பட்டுள்ளன:

1, நேர்ப் பொறியுணர்வு

இது சுவை,ஒளி,ஊறு,ஓசை நாட்டம் ஆகியன உணரும் நம் ஐம்புலன்களைக் கொண்டு பெறும் அறிவு.

பொதுவாக நம்முடைய ஐந்து புலன்களின் நேரடி வீச்சிற்குள்ள பொருளின் இருப்பும்,தன்மையும் எளிதில் நம்மால் அறியப்படுகிறது. நம் மனதில் தோன்றி மறையும் இன்ப,துன்ப,விருப்பு,வெறுப்பு,பொருட்களைப் பற்றிய அறிவு மற்றும் அறியாமை யாவும் நேர்ப் பொறியுணர்வில் அடங்கும்.

பொறியுணர்வின் மிகப்பெரிய குறைபாடு யாதெனின் மிகமிகக் குறுகிய வட்டத்திற்குள் உள்ள அதன் செயல்பாடேயாகும்.

நேர்ப் பொறியுணர்வு முழுமையான அறிவைப் புகட்டாது.அரைமீட்ட விட்டமுள்ளதாகத் தெரியும் கதிரவன்,கானல் நீர்,நேராக உள்ள குச்சி கண்ணாடிக் குமிழி நீரிலோ ஒளிச்சிதறலால் வளைந்திருப்பதாகத் தோன்றுவது போன்றவை நேர்ப் பொறியுணர்வின் வாயிலாகப் பெறப்படும் தவறான அறிவிற்கு மற்றும் சில எடுத்துக்காட்டுகள்.

நாத்திக வாதம் என்பது இந்த நேர்ப்பொறியுணர்வினால் பெறும் அறிவு மட்டுமே போதுமானது/இறுதியானது என முடிவாக்கலே.

பிறப்பெனும் பேதைமை என்றார் வள்ளுவர்.நம் பிறப்பு என்னும் முக்கிய நிகழ்வே நேர்ப் பொறியுணர்வு மூலம் அறியப்படாத ஒன்று.அவ்வாறு இருக்கையில் நேர்ப் பொறியுணர்வு ஒன்றை மட்டும் பயன்படுத்தி வாழ்வில் எழும் இன்ன பிற முக்கிய வினாக்களுக்கு விடை கண்டறிதல் சாத்தியமோ?

அம்மாதிரியான வினாக்கள் தேவையற்றவை என்ற நிலைப்பாட்டில் இருப்போருக்கு ஏனைய ஐந்து வலிய சான்றுகளுமே தேவையில்லை தான்.

2. ஊகம் அல்லது தொடர்ப் பொறியுணர்வு

முன்பே வேறொரு பொருளைப் பற்றி புலனுணர்வு மூலம் அடைந்த அறிவைத் தொடர்ந்து, அடையப்படும் அறிவு ஊகம் அல்லது தொடர்ப் பொறியுணர்வு ஆகும்.

நெருப்பும்,புகையும் நம்மால் சேர்ந்தே உணரப்படுவதால்,தொலைவிலுள்ள மலையில் தெரியும் புகையின் அடிப்படையில்,கண்ணுக்குத் தெரியாத நெருப்பும் அறியப்படுவது ஊகமாகும்.

சிடுசிடுப்பான முகங்கொண்டவர் சினமுள்ளவர் போன்ற பொதுப்படையான கருத்துக்கள் உண்டாவது ஊகத்தினால் தான்.மழைபொழியும் போதெல்லாம் கருமேகங்களின் இருப்பைக் கண்டு,கருமேகங்களைக் கொண்டு மழை வருகையை எதிர்நோக்குவதும் ஊகமே.

வேறொரு பொருளைப் பற்றிச் சார்ந்து அடையும் அறிவு என்பதால் இதுவும் முழுமையான அறிவைப் புகட்டாது.

3. உவமை

பொருளின் தன்மையை விளக்க பிறிதொரு பொருளின் தன்மையுடன் ஒப்பிட்டு அறிவது உவமையாகும்.

பரமனின் ஒளி சூரியனின் ஒளியை ஒத்தது என்பது உவமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மறைநூல் வாக்காகும்.தன்னொளியை மறைக்கும் மேகக்கூட்டத்தையும் ஒளிர்விப்பது கதிரவனே.அவ்வாறே பரமன் நம்மறிவின் உள்ளொளியாய்த் திகழ்கிறான் என்ற உவமை பரம்பொருளை எளிதே விளக்கும் பெருமை வாய்ந்தது.

பொதுவாக எப்பொருளும் உண்டாக மூலக்காரணம் உள்ளது என்ற அடிப்படையில் இந்த அண்டத்தை படைத்த ஒருவர் உள்ளார் என்ற பொருள்பட வள்ளுவன் பாடிய முதற்குறளின் வரிகளான எழுத்தெல்லாம் அகர முதல,உலகு ஆதிபகவன் முதற்றே“என்பது ஊகம்,உவமை சான்றுகளை உள்ளடக்கியதாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

4. ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஏற்பு

ஒரு நிகழ்வை எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தாது,அந்நிகழ்வை உறுதிப்படுத்தல்ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஏற்பு எனப்படும்.

மறைநூலிலும் இம்முறைச் சான்று பலவாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக தன்னை உணர்ந்த ஞானி துன்பப்படுவதில்லை என பறைசாற்றுவதிலிருந்து நாம் அறிவது யாதெனில் ஞானம் துன்பத்தை அழிக்குமெனவே,துன்பம் என்பது பொய்த் தோற்றமாக இருந்தாலொழிய,அறிவினால் அதை அழிக்கவியலாது என்பதே.

இவ்வாறான முடிவை எட்டுவதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஏற்பு என்கிறோம்.பற்பல குறள்களில் வள்ளுவன் இதைப் பயன்படுத்தியுள்ளான். மற்றுமோர் எடுத்துக்காட்டுக் குறள் கீழே:

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

5. இல்லாமை உணர்வு

ஒரு பொருளின் இருப்பை முதலில் சொன்ன பொறியுணர்வு மூலம் அறிவது போன்றே,பொருளின் இல்லாமையையும் புலனுணர்வு மூலம் அறிவதை நாம் பார்க்கிறோம்.

வகுப்பில் ஆசிரியர் இல்லை,ஒலி கேட்கப்படவில்லை போன்ற கூற்றுக்கள் இல்லாமை உணர்வை தெரியப்படுத்துகிறது.

அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவை“ என்ற குறள்வரிகள் இல்லாமை உணர்வுக்குஎடுத்துக்காட்டு ஆகும்.

6. மறைமொழி அல்லது மறைநூல் சான்று

மொழிச் சான்று என்பது யாதென முதலில் தெளிவோம்.

சிறு வயது முதலே செவிவழிச் செய்தியாக பெற்றோர்,பெரியோர், உடனிருப்போர்களின் பேச்சை,பொருட்களின் இருப்புக்கும்,தன்மைக்கும் நேர்ப் பொறியறிவு அன்றியும் சான்றாகக் கொள்வதே.நூல்கள்,செய்தித் தாள்கள், நாளேடுகள்,ஊடகங்கள் மூலம் அறியப்படும் யாவும் நம்பத்தகுந்த நபர்/கள் மற்றும் அமைப்புக்களிலிருந்து பெறப்படுகிறது.

இவற்றை மொழிச் சான்றெனக் கொண்டால்,பரம்பொருளின் இருப்புக்கும், விளங்கிக் கொண்டிருப்பதற்கும் மறைமொழி அல்லது மறைநூற்களை மட்டும் தான் சான்றாகக் கொள்கிறோம்.

முன்னர் நோக்கிய ஐந்து சான்றுகள் யாவும் நம்பிக்கை சார்ந்த அறிவே.

தான் இவ்வுலகில் பிறந்தது புலன்களால் நேராக அறியப்படாததால், புலன்களை நேராகவும்,மறைமுகமாகவும் கொண்டு உலகைப் பற்றி அடையும் மற்ற பொருளறிவு(தன்னுடல்,மனம்,புத்தி உட்பட) யாவும் நம்பிக்கை சார்ந்ததே.

இதற்கு மாறானது மறைநூற் சான்று.எவ்வாறெனில்,மறைநூற் சான்று என்பது அறிவு சார்ந்த நம்பிக்கையாம்.ஏனெனில் பரம்பொருள் மட்டுமே ஏற்கெனவே இருந்தும்,விளங்கியும் கொண்டிருக்கும் தத்துவாகும்.அப்பரம்பொருளை புலன்களைக் கொண்டோ, புலன்களுக்கப்பால் உள்ள மனம்,புத்தியைக் கொண்டோ அறியவியலாது,மறைநூற் சான்று ஒன்றைக் கொண்டு மட்டுமே அறியவியலும்.

அவ்வாறே உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்,ஒன்றே குலமும்,ஒருவனே தேவனும்,அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்“ போன்ற கூற்றுகள் இறைவனின் இருப்புக்கு நம்மாழ்வார்,திருமூலர்,கம்பர் போன்ற சமய குருமார்களின் மறைநூற் மொழிச் சான்றாகும்.

மறைகள் மைய இலக்கான மெய்ப்பொருளை விளக்க,இறைதத்துவத்தை முன்னிறுத்தியும்,இறைதத்துவத்தை விளக்குமுகமாக மறுபிறப்பு, இருவினைப்பயன் ஆகியன எடுத்துரைத்தும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன.

மறைமுடிவு நூல் கூற்றுக்கள் பலவற்றுள்,பரமன் உளன் என நேராகவே பறை சாற்றுபவற்றில் ஒன்றாக தைத்திரிய உபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயம் பிரம்ஹானந்தவல்லி,ஆறாம் பகுதியின் துவக்கத்தில் உள்ள இரு சொற்றொடர்களைக் கூறலாம்:

அஸந்நேவ ச பவதி;அஸத் ப்ரம்ஹேதி வேத சேத்

அஸ்தி ப்ரம்ஹேதி சேத்வேத;ஸந்தமேனம் ததோ விது:ருதி

இதன் பொருள்-பரமனை இல்லை என்று அறிபவன் தன்னையே இல்லை என்பவன் என ஆகிறான்.பரமனை உண்டு என்று அறிந்தவனை கற்றுணர்ந்தவன் என அறிஞர்கள் போற்றுகின்றனர் என்பது.

தமிழ்மறையாகிய திருக்குறளிலும்,இதே கருத்தையே குறள் 850ல் காணக் கிடைக்கிறது:

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். ”

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வள்ளுவன் ஆத்திகனே என்ற கருத்தை திடமாக்கும் ஒற்றைக் குறள்

மேற்சொன்ன குறள் 850ன் சொற்பொருள் உலகத்தார்–அறிஞர்கள், உண்டென்பது-உண்டு எனச் சொல்லியதை, இல்லென்பான்-இல்லை என மறுப்பவன்,வையத்து– (அவ்வறிஞர்களைப் பின்பற்றும்)வையத்து மக்களால்,அலகையா வைக்கப்படும்- (கண்ணால் காணாத)பேய்க்கு நிகராய் கருதப்படுவான். தைத்திரிய உபநிடதக் கூற்று மற்றும் இக்குறளின் ஆழ்ந்த ஒப்பீட்டை பிரிதோர்  பதிவில் காணலாம்.

ஆக,மறைநூல் சான்றை துளியும் கருத்து மாற்றாமல்,அப்படியே இறைவனின் இருப்புக்குச் சான்றாகக் கூறியுள்ள இந்த ஒரு குறளை வைத்தே, வள்ளுவன் ஆத்திகனே என்ற முடிவான தீர்மானத்திற்கு நம்மால் வர முடியும்.

பின்னும் தொடர்ந்து யோசித்தால்,.வள்ளுவன் ஆத்திகனே என தீர்மானத்தை எட்டினாற் போல்,அவன் அரைநாத்திகனோ,முழு நாத்திகனோ அல்ல எனவும் உணரமுடியும்.

ஏற்கெனவே பார்த்தது ஆறு ஆன்மீக நெறிகளாவன.ஆயின் நாத்திக வழி ஏற்றுக்கொள்ள விழையும் சான்று நேர்ப் பொறியுணர்வு என ஒன்று மட்டுமே எனக் கண்டோம்.அவ்வாறே வள்ளுவன் ஆறு வித வலிய சான்றுகளையும் குறள்களில் வெளிப்படுத்தி உள்ளதையும் கண்டோம்.

ஆக தெய்வப் புலவர் திருவள்ளுவர் நாத்திகன் அல்ல என்பதும் தெளிவு.

இனி இந்த வலைப்பதிவின் மையக் கருத்தான தெய்வத்தான் ஆகாது என்பதை தவறாகப் பொருள் கொள்வதற்கு அடிப்படைக் காரணமான ஐயத்தை அலசுவோம்.அதையும் வள்ளுவரே மெய்யுணர்தல் அதிகாரத்தின் முதற் குறளில் தெளிவாக்குகிறார்:

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. ”

மருள் என்பது தவறான உணர்வு,மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் எனவெண்ணும் தவறான உணர்வு.

மேற்சொன்ன ஆறு சான்றுகளில்,மறுபிறப்பு,இருவினைப்பயன்,இறைவன் ஆகியவை விளக்கும் மொழிச் சான்றான மறைநூலை அண்டியே இந்த மருளாகிய ஐயம் நீங்கப்பெற்று இதே மெய்யுணர்தல் அதிகாரத்தின் இரண்டாவது குறளில் சொல்லப்பட்ட‘மாசறு காட்சியை’ உணரவியலும்.

மறுபிறப்பு,இருவினைப்பயன் ஆகியன நம்பிக்கை சார்ந்தது. ஆனால் இறைவனோ முதலில் நம்பிக்கையுடன் அணுகப்பட்டு, இறுதியில் அறிவே உருவானவனாய்த் தெளியப்படுபவன்.

வழக்கத்தில் இறைவன் என்ற சொல்லைத் தவிரவும்,பகவன் அல்லது பகவான்,தெய்வம் ஆகிய சொற்களையும் பற்றிய தெளிவின்மையே மருளென்னும் ஐயத்தைத் தொடரச் செய்கிறது. எனவே இந்தத் தெளிவின்மையை நீக்கிக்கொள்வது இன்றியமையாத் தேவை,

இறைவனை தெய்வம் என அழைப்பது சரியா, இறைவனைத் தொழுதலும், தெய்வத்தை தொழுதலும் வேறா போன்ற ஐயங்கள் ஏற்படுவதும் மருளினால் தான்.

கடவுள்,இறைவன்,தெய்வம்- இச்சொற்கள் யாவும் ஒரே பொருள் குறிப்பனவா?

மறைகள் யாவிலும், 1.தெய்வம் (அல்லது தேவன்,அமரன்,பகவான்) மற்றும்,2.கடவுள்(அல்லது ஆதிபகவன்,இறைவன்,ஆண்டவன்,படைத்தவர்) ஆகிய இரு சொற்களின் பொருள்களும் தெளிவாக்கப் பட்டுள்ளன.

பரமன் எனும் மெய்ப்பொருள் இடத்தாலும், காலத்தாலும் நிறைந்த இறை தத்துவமாகப் பேசப்படுகையில் இறைவன் எனப்படுகிறார். அதே இறைவன் இவ்வுலகிற்கான மூலமாகப்மூல காரணமாக பேசப்படுகையில் முதற்குறளில் சொன்ன ஆதி,ஆதிபகவன் அல்லது ஆண்டவர்,படைத்தவர் எனப்படுகிறார்.அதே இறைவன் குணங்களுடன் கூடியவராக,பக்தன் பக்தியை செலுத்த/வழிபாட்டில் ஈடுபட ஏதுவாக உருவம்/அவதாரம் எடுக்கையில் பகவான் எனவும்,தேவன் எனவும் தேவதேவன் தேவர்களின் தேவன் ) எனவும் பற்பல பெயர்களைப் பெறுகிறார்.

தெய்வம்,தேவன் எனும் சொல்,சாதி ஒருமை குறித்த சொல்லாதலால் ஒருமை மட்டுமல்லாது,தெய்வங்கள்,தேவர்கள்-என்ற சொற்களாக,ஒருமை, பன்மை என்றவாறும் வழக்கத்தில் உள்ளது.

ஆனால் இதனின் வேறான கடவுள்,இறைவன் என்ற சொல்லோ ஒருமை,பன்மை இவை கடந்து, ஆண்டவன்,படைத்தவர் எனப் பொருளைக் கொண்டு,ஒருமையை என்றல்ல,இரண்டற்ற ஒன்றை மட்டும் குறிக்கும் சொல்லாகத் திகழ்கிறது. வேறு எந்த பெயர்ச்சொல்லுக்கும் பொருந்தும் பன்மை வடிவம்,கடவுள்,இறைவன்,ஆண்டவன்,படைத்தவர் ஆகிய சொற்களுக்கு உளவாகா.

தாவர, விலங்கு,மனித இனங்கள் போலவே தெய்வம்,தேவன் இதுவும், ஆண்டவனால் படைக்கப் பட்டவையே எனும் சேதியே மறைநூல் தெளிவுபடுத்துவதாகும்.

ஆனால் இறைவனோ-ஒருவன் ஆவார்,இறைவனே ஆண்டவர்,படைத்தவரும் அவரே –தெய்வங்கள் உட்படப் படைத்தவர்.படைத்த இறைவன் படைப்புக்குப் பின் ஒவ்வொரு படைப்பினுள்ளும் நுழைந்தார் எனவும் மறைநூலில் சொல்லப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.

ஆகவே தான்,வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும், என்று மனிதர்களும் தேவர்களில் ஒருவராக உயர இயலும் என,மனிதர்களின் உயரிய பரிணாம இலக்காகவள்ளுவன் சொல்லியிருப்பதையும் காண்கிறோம்.

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து கொண்டுள்ள பத்து குறள்களிலுமே,தெய்வம் எனும் சொல் இடம் பெறாததையும் நாம் நோக்கலாம்.அது மட்டுமன்றி, கடவுள் குறித்த இலக்கணங்களும் இந்த பத்து குறள்களில் தெளிவாக்கப்பட்டுள்ளன.

ஆதலால் முதன்மையாக, திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்து குறள்களிலும்,இறைவனைப் போற்றும் முறை,தொழும் முறை,அவ்வாறு போற்றித் தொழுதலால் கிட்டும் பயன்கள் ஆகியன பற்றிக் கூறும் முறையை நோக்குவது மிக மிக அவசியம்.அவை கீழே அட்டவணையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன:

கடவுள் வாழ்த்து-page001

கடவுள் வாழ்த்தின் குறள்களை ஆராயப் புலனாவது யாதெனில், பத்துக் குறள்களில் எடுத்தரைத்தபடி கடவுளின் குணங்களை கண்டறிந்து தொழுவது , மேற்கூறிய அட்டவணையில் கூறியுள்ள பயன்களை எதிர்நோக்கியதாகும்.

இதைத்தவிரவும்,படைத்தவன் எனப் பொருள்படும் உலகியற்றியான் என்ற சொல்லுடை குறளும் உண்டு.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்

இரவச்சம் அதிகாரத்தின் இக்குறளில் முயற்சி செய்து வாழ்வதை விட்டு, பிச்சை எடுத்து வாழ்வதும் செய்தொழிலில் அடங்கும் என்ற கருத்துடன் ஆண்டவன் இவ்வுலகைப் படைக்கவில்லை எனவுணர்த்த,அவ்வாண்டவனும் கெட்டொழியட்டும் என்கிறார். அதாவது முயற்சி செய்து வாழ்வதே வாழ்க்கை என்ற காரணத்தின் அடிப்படையில் தான் மனிதர் படைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தை முன்னிறுத்துவது தான் வள்ளுவப் பெருந்தகையின் நோக்கமேயன்றி,ஆண்டவனைக் குறை கூறவோ,பழிக்கவோ அன்று.

தெய்வம்-ஒரு தத்துவ ஆய்வு.

தேவ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபுவே தெய்வம் என்பது.தேவ என்பதற்கு ஒளிர்பவர் எனவும் ஒரு பொருளாகும்.படைக்கப்பட்ட 14 உலகங்களிலும் ஒளிர்பவர்கள் யாவர் எனில்,அமரர்கள் (இறவாநிலை எய்தியவர்கள்) எனவும் கூறப்படும் படைக்கப்பெற்ற தேவர்களேயாம்.

ஒரு இருப்பிடத்தை இலக்காகக் கொண்டு பயணிக்கையில்,திக்கு புலனாகாதபோது இரவில் தோன்றும் ஒளிரும் விண்மீன்களை வழிகாட்டிகளாகக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்து இலக்கை அடைவது போலவே, ஆன்மீகத் தேடுபவனுக்கும்,ஒளிரும் தேவர்களே வழிகாட்டிகளாக செயல்பட்டு கடவுள்வாழ்த்து மூன்றாம் குறளில் கூறப்பட்ட(மலர்மிசை ஏகினான்),உள்ளத்தாமரையில் வீற்றிருக்கும் இறைத்தன்மையை உணர ஏதுவாகிறார்கள்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’  என்ற திருமூலரின் வாக்கு நம்மால் உண்மையிலேயே உணரப்படவேண்டின் ஒளிரும் தேவனும்,ஒளிர்விக்கும் இறைவனும்,இவ்விரண்டினையும் வெவ்வேறென நோக்கும் ஆன்மீகத் தேடுபவனும் பிளவுகள் அற்ற ஒன்றே என்பது சாத்தியப்பட வேண்டும்.

தெய்வம்/அமரர் என்ற சொற்கள் குறள்களில் கையாளப்பட்டுள்ள முறை

தெய்வம் என்னும் சொல்லை பன்மையாகவும்,சாதி பற்றிய ஒருமையாகவும் திருவள்ளுவர் கையாண்டுள்ளதைக் காணலாம்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

நீத்தார் பெருமை அதிகாரத்தின் இக்குறளில் அகல் விசும்புளார்- அகன்ற வானத்தில் உள்ளவர்கள் என தெய்வத்தைக் குறிப்பிட்டு அத்தெய்வர்களின் தலைவனாக இந்திரனைக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

இனி மறைநூலில் தேவர்கள் விளக்கப்பட்டிருப்பதை சுருக்கமாகக் காணலாம்.தேவ என்னும் வடமொழிச் சொல் திவ என்னும் மூலச் சொல்லினின்று பெறப்பட்டதாகும்.பத்து வெவ்வேறு செயல்களை உணர்த்துவதாய் உள்ளது இச்சொல்.

அச்செயல்கள் விளையாடுதல்,யாவற்றுள்ளும் மேம்பட்டு விளங்குதல்,பலவற்றுள்ளும் தன்னை ஈடுபடுத்துதல்,மின்னுதல்,போற்றுதல் / துதித்தல்,மகிழ்ச்சி,உவகை,இன்பம் கொள்ளுதல்,களிப்பு,பூரிப்பு கொள்ளுதல், கனா காணல்,ஒளிர்தல்,இயங்குதல் ஆகியன

மறைகளின் படி,தேவர்கள் முப்பத்து மூவர் ஆவர்.வேதத்தில் சுக்ல யஜுர்வேதத்தின் சதபத பிராமணம் ( 14.6.9- 3,4,5,6 மற்றும் 7 ) ஆகிய பகுதிகளில் 8 வசுக்கள், 11 உருத்திரர்கள் மற்றும் 12 ஆதித்தியர்கள், தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் பிரஜாபதி,ஆக மொத்தம் 33 தேவர்கள் என பேசப்பட்டுள்ளது.

தேவர்கள்-page001

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சாதி பற்றிய ஒருமைச் சொல்லாக,தெய்வம் என்ற சொல்லைக் கையாண்டு இல்வாழ்க்கை வாழ்பவன் பாராட்டவேண்டிய ஐந்து அம்சங்களுள் ஒன்றாக தெய்வத்தைக் குறிக்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43

மேற்சொன்ன குறளில், ஐந்து அம்சங்களுமே இறைவன் படைத்தவையே என்பது முக்கியமாக நினைவில் நிறுத்த வேண்டியதாகும்.

ஆக ஐந்தில் ஒன்றாக தெய்வ அம்சத்தைச் சொன்ன வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவன் என்ற சொல்லை ஒருமையில் கையாண்ட விதத்தை நோக்கும்போதும், ஏனைய பிற குறள்களிலும் தெய்வம் என்ற சொல்லைக் கையாண்ட விதத்திலும் உள்ள வேறுபாடு மிகத் தெளிவன்றோ!

‘இல்வாழ்க்கை‘ அதிகாரத்தின் குறள் எண் 50ல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். 50

என இக்குறளிலும்,இல்வாழ்க்கை வாழ்பவனுடைய இலக்காக தேவலோகத்தைக் குறிக்கும் விதமாக வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்,என்று மனிதர்களில் எவரும் தெய்வங்களுள் ஒருவராக உயர இயலும் என,மனிதர்களின் உயரிய பரிணாம இலக்காகச் சொன்னார்.

இதே கருத்தையே அடக்கமுடைமை அதிகாரக் குறளிலும் ’அமரருள்’ என்ற சொல்லைக் கையாண்டு முன்னிறுத்தியுள்ளார்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். 121

இனி தெய்வத்தின் சிறப்பு,தொழுவோர்கள் வேண்டுவதை மாறாமல் வழங்குவதேயாம் என்பதை கீழ்க்கண்ட குறளில் விளக்குகிறார்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. 55

‘வாழ்க்கை துணைநலம்‘ என்னும் அதிகாரத்திலுள்ள இக்குறள் கற்புடை இல்லாளின் பெருமை பேசுகையில்,கொண்ட கணவனையே தெய்வமாகத் தொழுபவள் எனக் கூறி, அத்தகை மகளிரின் வேண்டுதல் மழையென்றால், அம்மழை பொழிந்தே தீரும் எனக் கூறியதால்,தெய்வத்தின் சிறப்பு, வேண்டுவதைத் தந்தே தீருவது என்பதும் நிலை நாட்டப்பட்டதாகிறது.

தெய்வம் கட்டையிலோ, கல்லிலோ அல்லது மண்ணிலோ உண்டாவதன்று, நம் மனப்பாங்கில் தான் உள்ளதாகையால், மனப்பாங்கே முக்கியம் என்ற பொருள்படும் சாணக்கியனின் வரிகள் நினைவில் நிறுத்தத் தக்கவை.

வள்ளுவனுக்கு நாத்திகப் பட்டம் சூட்டுவதை,வாழ்நாளின் இலக்காகக் கொண்டுள்ள புல்லறிவாளர் சிறப்பாகப் பொருள் கூறும் குறளை ஆராய்வோம்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். 619

‘ஆள்வினையுடைமை‘ அதிகாரத்தில் வரும் இதில்,தெய்வத்தான் ஆகாது எனினும்என்பதற்குப் பொருள் முன்வினையின் விளைவாக,இப்போது செய்யும் வினைக்கான பயன் தெய்வத்தால் தடைபெற்றாலும் கூட என்பதே. ஆனால் இருவினைப் பயன் உண்டு என்ற வகையில் ஒவ்வொரு வினைக்கான பயனைத் தருவது தெய்வத்தின் தன்மை என்பதே இதன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.அத்தகைய பயன் நமக்கு கட்புலனாகாத முன்வினையின் விளைவாகத் தடைபடுவதையே தெய்வத்தான் ஆகாது எனும் சொற்கள் அறிவுறுத்துகின்றன.

ஊழ் அதிகாரத்தில் வரும் குறள் 377ஐ நோக்குவோம்:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

கோடி பொருள்கள் முயன்று சேகரித்தவர்களுக்கும்,தெய்வம் வகுத்த வகை தான் அப்பொருட்களை நுகர நேரிடும் என தெய்வத்தின் தன்மையான வினைப்பயனைத் தருவதை வகுத்தான் என்ற சொல்லினால் விளக்குகிறார்.

இதனைத் தெளிவாக்கிக் கொள்ள, நம் அன்றாட வாழ்வில் நிறுவனங்கள் அடிப்படையாக செயல்படும் விதத்தை ஆராயப் புலனாகும். நிறுவனத்தின் உரிமையாளர், பல மேலாளர்களை பணியில் அமர்த்துகையில்,ஒவ்வொரு மேலாளருக்கும் அதிகாரங்களை தனித்தனியே பிரித்து பொறுப்புக்களை ஒப்படைப்பதால்,உரிமையாளரின் அதிகாரங்கள் குலையாமையையும், மேலாளர்களுக்கு அளிக்கப்படும் திறன்கள் வரையறைகளுக்கு உட்பட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளதையும் நோக்குகிறோம்.

இறைவன் உரிமையாளர் எனவும், தெய்வங்கள் மேலாளர்கள் எனவும் உருவகப்படுத்தி நோக்கினால் இக்கருத்து தெளிவாகும்.

நாம் புரியும் ஒவ்வோர் வினைக்கும் வினைப்பயன் உண்டு என்பது நியதி என்றால் அந்த நியதியை உருவாக்கி உறுதிசெய்ய அறிவுணர்வுள்ள ஒரு திறனாளியாலன்றி அந்த நியதி சாத்தியமாகாது.

உலகைப் படைத்தவரான திறனாளியே அந்த இறைவன். படைக்கப்பட்டோரின் தன்மைகளுக்கேற்ப இறைவன் பற்பல பெயரும்,உருவமும்,வினைப் பயனளிக்கும் திறன்களும் கொண்ட பலப்பல தெய்வங்களாக மறை நூல்களிலும்,இதிகாச புராணங்களிலும் பேசப்பட்டுள்ளார்.

அடுத்து கீழேயுள்ள ‘குறிப்பறிதல்‘ அதிகாரத்தின் குறளில்,அமைச்சனின் தன்மையாக,ஆளும் அரசனின் கண்ணால் காணவியலாத மனத்தை அறியும் வல்லமை பற்றிக் கூறி,அத்தகை அமைச்சனை, தெய்வத்துடன் ஒப்புமையாகக் கூறுகிறார்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல். 702

இங்ஙனம் தெய்வத்தின் மற்றொரு தன்மையாக மனிதர்களின் கட்புலனாகாத மனத்தை அறியும் வல்லமை கூறப்பட்டது.

‘குடிசெயல்வகை‘ அதிகாரத்தினின்று மற்றொரு குறளை அலசுவோம்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும். 1023

தன் குடியினை உயர்த்த உறுதி பூண்டு,அதற்கேற்ற முயற்சி மேற்கொள்பவனுக்கு தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு முன்னே நிற்கும் என்பது இதன் பொருள்.நம் முயற்சிக்கு என்றும் முன்னே நின்று நம்மை உயர்த்துவது தெய்வத்தின் மற்றுமோர் சிறப்பாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாய் கயமை அதிகாரத்தின் இக்குறளில் கயவரைப் புகழ்வது போலப் பழித்துக்கூற,கயவரை தேவர் குழாத்திற்கு ஒப்பிடுகிறார்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். 1073

தனக்கு படைத்தவனால் அளிக்கப்பட்டுள்ள திறன்களை தங்கு தடையின்றி வெளிக்கொணர்வது தான் தேவர்களின் இயல்பு.

என்றுமே வானில் திகழ்ந்து அனைத்துக்கும் ஒளியூட்டும் கதிரவன் ஓர் எளிய எடுத்துக்காட்டு.அத்தகைய தேவர்களை கயவருடன் ஒப்பிட்டு,தான் விரும்பியதை செய்து முடிப்பதில் தேவரும்,கயவரும் எவ்விதத்தில் ஒரே தன்மையவர் என விளக்க கயவர் அறநெறிப்படி செல்லாது,தான் விரும்புவதை தன் போக்கில் செய்வதாகப் புகழ்வது போலப் பழிக்கிறார்.

சொந்த விருப்பு வெறுப்பு ஏதுமற்று, தனக்கு உள்ள திறன்களை செவ்வனே வெளிக் கொணர்பவர்கள் என்பதாக தேவர்களின் பெருமை கூறப்படுகிறது.

தொகுப்புரை

இதுகாறும் தெய்வம் என்ற சொல்லை திருவள்ளுவர் கையாண்ட விதத்தைகீழ்க்கண்ட அட்டவணையில் தொகுத்துள்ளோம்:

தெய்வம்-page001மொத்தத்தில் நம் தெளிவின்மையை தெய்வப் புலவராம் வள்ளுவன் மேல் ஏற்றுவதைத் தவிர்த்து,முழு நம்பிக்கையுடன் வள்ளுவன் கூறிய நல்லுரைகளை உணர முற்படுவது நலம்.

இவ்வாறாக, நாம் ஆய்ந்தறிந்து,திருவள்ளுவர் பற்றிய ஐயம் நீங்கித் தெளிவோம்,அங்ஙனம் தெளிந்தால்,திருவள்ளுவர் வெறும் ஆத்திகனல்ல;வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுந்த அமரர் எனவும்,அறிவு சார்ந்த நம்பிக்கையுடைய நம் போன்ற ஆத்திகரை வழிநடத்தி,அமரருள் உய்க்க வகை செய்யும் உயர்ந்த ஆசானெனவும் நன்றே விளங்கும்.

நன்றி!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருக்குறள்,தைத்திரீய உபநிடதம்-ஒப்பீடு

Taitiriya kural blog cover-page001திருக்குறளில் ஒரு குறள், அப்படியே முழுமையாக தைத்திரிய உபநிடதத்தின் ஒரு செய்யுளின் முழு மொழிபெயர்ப்பாக உள்ளது என்றால் விந்தை தான் அல்லவா?
ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் விந்தை ஏது? எனத் தோன்றும். உயர்ந்தோரின் சி
ஒருமித்த கருத்தையே மையமாகக் கொண்டுள்ளவை என்றவாறு நோக்கினால் விந்தை இல்லை தான்.
ஆயினும் ஒரு கருத்தை சொல்ல முற்படுகையில், வெவ்வேறு மொழிகளில் உள்ள இரு நூல்களும்,சொல்லும் முறையில் கூட இம்மியளவும் மாறாமல் இருப்பது விந்தை தானே!
வேதாந்தம் எனப்படும்
>லில் ஒன்றான ஸம்ஸ்க்ருதத்திலுள்ள தைத்திரிய உபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயம் பிரம்ஹானந்தவல்லி, ஆறாம் பகுதியின் துவக்கத்தில் உள்ள இரு சொற்றொடர்களின் உட்பொருள் சொல்லப்பட்ட விதம், திருக்குறள் அதிகாரம் புல்லறிவாண்மை, எண்
r>குறள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். தைத்
உபநிடதம் பற்றிய சிறு விளக்கம்.
1.    தைத்திரிய உபநிடதம் ,நான்கு வேதங்களுள் ஸ்ரீகிருஷ்ண யஜூர்வேதத்தில் தைத்திரீய ஆரண்யகத்தின் 7,8 மற்றும் 9வது பிரிவாக வருவதாகும்.
2.    தித்திரீ என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் கௌதாரி பறவை எனப் பொருள்.
முனி யாஞவல்க்யரை அவரது குருவான
சம்பாயணர்,  படித்த வேதத்தையெல்லாம் திருப்பி
சொல்ல, யாஞவல்க்யரும்

வாகத் திருப்பித்தருகையில்,மற்
ர்கள் திருப்பித்தரப்பட்ட செரித்த உணவை,வேதத்தை
பறவைகள்
ங்கொண்டு விழுங்கினர் எ

லப்படுகிறது. வேதங்களும், அறிவும் என்றும் அழியாதது என்பதை சூசகமாக அறிவிப்பதே இக்கதை.
3.    முக்கிய அறிவுரையான “உண்மையைப் பேசு, அறநெறியைப் பின்பற்
னப் பொரு
“ஸத்யம் வத,தர்ம
ம் வாசகமும், “தாயை ,தந்தையை, ஆசிரியனை ,விருந்தாளியை தெய்வமாக
று” எ ருளுடைய, “மாத்ரு தே
>பித்ரு தே
, ய தேவோ பவ, அதிதி தேவோ பவ “ எனும் வாசகங்களும் இதில் தான் உள்ளது.
4.    ஆசார்யர்கள் பலரும்

டுத்துச் சொல்ல இவ்வுபநிடதத்தி
தான் பல மேற்கோள்களை எடுத்து விளக்கியுள்ளனர். இரண்டாவது அத்தியாயமான பிரம்ஹானந்தவல்லியின் முதல் செய்யுளில் வரும் “
க்ஞானம் அனந்தம் பிரம்ஹா “

ஸ்வா

மும்மணிக் கோவை’ எனு
ழ் பிரபந்தத்தில் “நந்துதலில்லா நல்விளக்கு“ எனவும் ,“அந்தமில் அமுதம்“ எனவும் மொழிந்து

இனி தைத்திரிய
தத்தின் அந்த
br>சொற்றொடர்களை முதலில் அறிவோம்:
“ அஸந்நேவ ச பவதி ; அஸத் ப்ரம்ஹேதி வேத சேத்<b
தி ப்ர
சேத்வேத ;ஸ
ம் ததோ விது:ருதி “
இதன் பொருள்- பரமனை இல்லை என்பவன் தன்னையே இல்லை என்பவன் ஆகிறான். பரமனை உண்டு என்று அறிந்தவனை கற்றுணர்
என
ர்கள் போற்றுகின்றனர்.
இதனை குற
0 உடன் ஒப்பு நோக்குவோம்:
“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா<b
படும் " சொற்பொருள்:
உலகத்தார்
ஞர்க
றோர்கள்
உண்டென்பது- உண்டு எனச் சொல்லியதை<br
ன்பான்-
எனமறுப்பவனை
வையத்து– (அவ்வறிஞர்களைப் பின்பற்றும்) வையத்து மக்கள்அலகையா வைக்கப் படும்- (கண்ணால் காணாத) பேய்க்கு நிகராய் கருதுவார்கள்.விளக்கம்-எவ்வாறு கண்ணால் காணாத பேயை, தீமை எனக் கருதி விலக்குகிறோமோ., அவ்வாறே அறிஞர்களைப் பின்பற்றும் வையத்து மக்கள், அவ்வறிஞர்க
பரமன் எனும் மெய்ப்பொருள்  டு எனச் சொல்லியதை ஏற்காதவனையும் பேய் போன்ற தீமை எனக் கருதுவார்கள்.உலகத்தார் என்ற சொல்லின் பொருள் உலகத்தின் கண் உள்ள மக்கள் என்பது தானே சரி;(கற்றுணர்ந்
அறிஞர்கள் என ஏன் பொருள் கொள்ளம்?இதற்கு விடை ,திருவள்
போன்ற பெரியோர் எவ்வாறு வா றருக்கு சான்றாக இருந்தார்களோ, அத்தகையயே
னப் பொருள் படு
நாம் உணர வேண்டும்.இப்போது உத்தைகுறளையும் ஒப்பிட்டு நோ
உபநிடதத்தில் உரம்ஹ அல்லது பரமன் என்ஈடான எந்த சொல்லும் குறளில் இல்லையே, ஆகவே எவ்வாறு இரண்டும் ஒரே பொருளைத் தருகிறது எனக் கருத முடியும் என்ற கருத்
ன்னடைவு ஏற்படுகிறது.இதற்குத் தீர்வு, குறளில்
“உண்டு“ எ
ரமனெனும் மெவேறு எதைக் குறிக்க முடியும்?
ஆராய்கிடைக்குவள்ளுவர்யுணர்தல் “ என்ற தனி அதிகாரம் முழுவதிலும் மெ
விளக்கி.
357ல் மெய்யுணர்தலை “உள்ணரின்“ எ
காட்டும்.உங்களி
று அறி
த், சித்,“
தில் ‘ஸத்’ என்பதற்டு என்ள்மே சொல்லப்பட்டுள்ளது.ந



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் “உண்டு”

 

திருக்குறள்,தைத்திரீயஉபநிடதம்ஒப்பீடு என்ற என் முந்தைய வலைப்பதிவின் பின்னூட்டில்,திரு.அஷ்ரஃப், முக்கிய வினாவை/ஐயமொன்றை எழுப்பியிருந்தார்.நன்றி திரு.அஷ்ரஃப்  திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய பல செய்திகளை உள்ளடக்கியுள்ள அகன்ற வலைதளம் இவருடையது.( http://kural-of-valluvar.blogspot.in/ ) திரு.அஷ்ரஃப் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவில்லை என்பதற்கு அவர்தம் வலைதளத்திலுள்ள பல கூற்றுக்களுள் “He talks about worship, but nothing about the way of worship-திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டைப் பற்றிப் பேசுகிறார்,ஆனால் வழிபடும் முறைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை“. எனப்பொருள்படும் ஒற்றைக்கூற்றே சான்று.திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டைப் பேசும் முறை பற்றிய என்  வலைப்பதிவு- https://thiruvalluvarkadavulvazhthu.wordpress.com/

திரு.அஷ்ரஃபின் வினா,திருக்குறள் மெய்யுணர்தல் மற்றும் புல்லறிவாண்மை அதிகாரக் குறள்களை மேற்கோள் காட்டி விளக்கத் தூண்டியது. ஆதலின், அவ்வினாவிற்கான என் பதிலுரை நீண்டமையால்,“திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் உண்டு“,என்ற தலைப்புடன் இவ்வலைப்பதிவைத் துவங்குகிறேன்.

திரு.அஷ்ரஃப் அவர்களின் பின்னூட்டு அவர் தட்டச்சு செய்த வண்ணமே தமிழும்,ஆங்கிலமும் கலந்து,இதோ கீழே:

“பின்னூட்டின் துவக்கம்:

 

//குறளில் உள்ள “உண்டு “என்ற சொல் பரமனெனும் மெய்ப்பொருள் அல்லாது வேறு எதைக் குறிக்க முடியும்? //

 

என்று ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள்….. இந்த குறள் ஒரு வேளை கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வந்திருந்தால், நீங்கள் சொல்லுவது 133% சரிதான். ஆனால் இது வரும் அதிகாரம் ‘புல்லறிவாண்மை’. All the 10 couplets in the chapter are generic and it can refer any knowledge. Since Valluvar has devoted few chapters for spiritual knowledge or enquiries elsewhere in Arathuppaal and it comes just after chapter பேதமை, I do not think this word உண்டு has anything to do with மெய்ப்பொருள்.

 

One more point. There is not evidence in Kural to show that மெய்ப்பொருள் is creator God.

 

ஆங்கிலத்திலுள்ள பின்னூட்டின் மொழிபெயர்ப்பு :

 

 ‘புல்லறிவாண்மை’ அதிகாரத்தின் 10 குறள்களுமே பொதுப்படையானவை, அவை,ஆன்மீகம்என்றல்ல,எந்த அறிவுத்துறையையும் சுட்டலாம்.ஆன்மீக அறிவு அல்லது தேடல்கள் குறித்து அறத்துப்பாலின் மற்ற சில அதிகாரங்களில் வள்ளுவர் தெளிவுபடுத்தியமையாலும்,இந்த குறள் உள்ள (எண் ) புல்லறிவாண்மை அதிகாரம் ,பேதைமை அதிகாரத்திற்கு அடுத்து வந்துள்ளமையாலும் இக்குறளிலுள்ள உண்டு என்ற சொல், மெய்ப்பொருளைக் குறிக்காது என்பது என் ( திரு.அஷ்ரஃப்) கருத்து.

 

மற்றுமோர் ஐயப்பாடு : திருக்குறள் முழுவதிலும், மெய்ப்பொருள் என்பது படைத்த ஆண்டவன் என உணர்த்தும் சான்று ஏதுமில்லை.

 

பின்னூட்டின் முடிவு.”

என் விரிவான பதிலுரை:

குறள்களைப் பற்றிய என்னுடைய மொத்தக் கருத்தாக்கமும் பரிமேலழகரின் விளக்கத்தை ஒட்டியும்,குரு.ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்களிள் குறளும், கீதையும் சொற்பொழிவுகளை ஒட்டியும் மற்றும் இதுவரை மறைமுடிவு நூல்களை செவிமடுத்ததன் அடிப்படையிலும் தான் அமைத்துள்ளேன்.

அதன்படி வள்ளுவனார் மெய்ப்பொருளைத் தான் ‘உண்டு‘ என்ற சொல்லில் பொருளாக்கியுள்ளார் என உறுதியாகக் கூறமுடியும்.இது 133%  என்றவாறு சதவீதம் பற்றியது அல்ல,வெறும் உறுதியுமல்ல, ”மறைவாக்குறுதி” ஆகும், சதம்,வீதம் இரண்டனுக்கும் அப்பாற்பட்டதால்.

உலகத்தார் உண்டென்பார் என்ற குறள் ( குறள் எண் 850 ) கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறாமல் புல்லறிவாண்மை அதிகாரத்தில் வந்துள்ளது. ஆகவே மெய்ப்பொருளை, ‘உண்டு‘ என்ற சொல்லுக்குப் பொருளாகச் சொல்லியிருக்கமாட்டார் வள்ளுவர் என்பது முதல்ஐயம். இந்த ஐயத்தை நீக்க மூன்று படிகளில் முயலலாம்.

முதற்படியாக, குறள் எண் 850 ,புல்லறிவாண்மை அதிகாரத்தில் இடம் பெறுவது எங்ஙனம் பொருந்தும் என ஆராய்வது தேவை.அவ்வாறு ஆராயவே தான் இக்குறளிலுள்ள ஆழ்ந்த மறைமொழிக் கூற்று புலனாகும்.

புல்லறிவாண்மை குறள்களின் கருத்துக்களை எண்வாரியாக எடுத்தாய்வோம்.

  1. இல்லாமையில் கொடிய இல்லாமை நல்லறிவு இல்லாமை
  2. புல்லறிவுடையவர் நல்வினை ஆற்றியறியாதவர்
  3. அறிவிலார் தனக்கும் மிக்க தீயன செய்து கொள்வர்
  4. புல்லறிவுடையோரின் இலக்கணம் தன்னைத்தானே அறிவுடையவன் என்ற செருக்கு கொள்வதாகும்
  5. புல்லறிவுடையோரின் மற்றுமோர் இலக்கணம் தான் கல்லாததையும் கற்றது போல் காட்டிக்கொள்வதாகும்
  6. புல்லறிவுடையவர் தன் குற்றத்தை நீக்காதிருப்பர்
  7. புல்லறிவினன் மறையறிவுரை பெற்றும்,ஏற்காது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்திக் கொள்வான்
  8. புல்லறிவினன் அறிவுடையார் சொல்லையும் கேட்கிலன், சொந்த அறிவும் இல்லாதவன்
  9. புல்லறிவினனுக்கு நல்லது புகட்ட முயலும் அறிவுள்ளவன்,தான் அறிவற்றவற்றவனாகக் கருதப்படுவதோடன்றியும், புல்லறிவினன் அறிவுள்ளவனாகக் காட்டப்பட்டு விடுவான்.
  10. உயர்ந்தவர் பலரும் உண்டு என்பதை இல்லை என்பான் புல்லறிவினன்.

இதை நோக்குங்கால்,இந்த அதிகாரம் generic  அதாவது பொதுவானது என எண்ணுவதற்கில்லை.வள்ளுவர் அவர்தம் காலத்து மறைமுடிவு தத்துவ ஆய்வுகளின் போது,மறை ஆசானின் சொற்களை புறந்தள்ளி,தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்பது போல,விதண்டாவாதம் எனச் சொல்லப்படும் வறட்டாக தர்க்கம் ( ஏரணம்) புரிவோரை அடையாளங்கண்டு சாடியிருப்பதாக,மேற்கண்ட குறள்களின் கருத்துகளிலிருந்து ஊகித்தறியலாம்.

முதல் ஐயத்தை நீக்கும் இரண்டாவது படியாக,குறள் எண் 850 கடவுள் வாழ்த்துக் குறளாய் அமையாமல், புல்லறிவாண்மைக் குறளாய் அமைந்தது தகுமா என ஆராய்வோம்.கடவுளின் இலக்கணங்களாக,முதற் குறளில் ஆதிபகவன் எனத் துவங்கி,பத்தாமதில் இறைவன் என நிறைவு செய்து,கடவுளை வாழ்த்திப் பாடும் ஒரே நோக்கில் மட்டும் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துக் குறள்களை வடிவமைத்துள்ளார்.

ஆனால் குறள் எண் 850 ல் உள்ள “உண்டு“ என்ற சொல்லோ, கடவுள் உண்டு என மட்டும் அறிவுறுத்தி நிற்காமல்,கடவுளை உணர வழிவகை செய்யும் கருத்துக்களான மறுபிறப்பு, இருவினைப் பயன் ஆகியனவும் உண்டு என மெய்யுணர்ந்தோர் இயம்பும் மெய்ப்பொருள் தத்துவத்தை பொதுவில் அறிவுறுத்துகிறது.ஆதலின் இக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறாததால் தவறேதுமன்று.

குறள் எண் 850,மெய்யுணர்தல் அதிகாரத்திலும் இடம் பெறாததற்கும் கூட மேற்சொன்ன அதே காரணமே பொருந்தும்.

இறுதிப்படியாக இக்குறள் எண் 850 ல்,புல்லறிவினனான இல்லென்பான் அடையும் பேய் என்னும் இழிநிலையைச் சுட்டியே,உண்டு என்பது மெய்ப்பொருளையே சுட்டும் எனக் கொளவியலும்.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் துவக்கத்திலேயே,பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தலை மயக்கமென எடுத்துரைத்ததால்,இல்லென்பானே அத்தகைய முழுமயக்கநிலையில் இருக்க உத்தேசிப்பவனாகிறான்.எனவே உண்டு என்பது மெய்ப்பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஏனெனில்,மெய்யுணர்ந்தோர் உண்டெனக் கூறும் இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுளையும்,மறுபிறப்பின் விளைவுகளான சுவர்க்கம்,நரகம் இவற்றினையும்,மறுபிறப்புக்குக் காரணங்களான இருவினைப்பயன் யாவற்றையும் இல்லையென மறுப்பவனுக்கு புகலிடம் எனவொன்று என்பதேது?

இரண்டாவதுஐயம் எந்தவொரு குறளிலும், ”மெய்ப்பொருள்” படைத்த ஆண்டவன் (creator god ) என்பதாகப் பொருள் சொல்லப்படவில்லையே என்பது.

”மெய்ப்பொருள்” என்பதற்கு பொருள் சொல்லப்படவில்லை என்ற அளவில் மட்டும் இதற்கு நான் உடன்படுகிறேன். ஏனெனில் மெய்ப்பொருள் இன்னது என பொருள் சொல்லி அறிவதன்று. உணர்தல் பற்றியதாகையால் , எல்லா மறைமுடிவு நூலிலும்,மெய்ப்பொருள் குறிபபாக மட்டுமே உணர்த்தப்பட்டுள்ளது.

அதையே தான் வள்ளுவனாரும் கடைப்பிடித்துள்ளார்,முக்கியமாக மெய்யுணர்தல் அதிகாரத்தில்.மெய்யுணர்தலில் வரும் 10 குறள்களின் கருத்துச் செறிவை நோக்குவோம்.

  1. மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என உணர்தல் மருளென்னும் மயக்கத்தால் நிகழ்வதால்,மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடுகிறது.(மெய்ப்பொருள் இன்னது என பொருள் சொல்லப்படவில்லை)
  2. அத்தகைய மயக்கம் நீங்கப்பெறும் மெய்யுணர்ந்தோர் வீடுபேற்றை எய்துவர்.(மெய்யுணர்ந்தோரின் தன்மையும்,அவர் அடையும் பயனும் கூறப்பட்டதேயன்றி,மெய்ப்பொருள் இன்னது என சொல்லப்படவில்லை)
  3. மெய்யுணர்ந்தோர் ஐயம் நீங்கப் பெற்று,வையத்தைக் காட்டிலும், வானுலகம் தெளிவு என்பர் (இதிலும் மெய்யுணர்ந்தோரின் தன்மையும், அவர் அடையும் பயனும் மட்டுமே கூறப்பட்டது )
  4. மெய்யுணர்வு இல்லாதாருக்கு ஐம்புலன்களால் உண்டாகும் பயன் ஏதுமன்று.(இக்குறள் மூலம் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டது மெய்யுணர்தல் என எதிர்மறைக் குறிப்பால் உணர்த்துகிறார். )
  5. யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், யாவற்றுக்கும் மெய்யாகவுள்ள மெய்ப்பொருளை உணர்தல் அறிவு. ( மெய்யுணர்தலின் இலக்கணம் சொல்லப்பட்டது )
  6. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்ற மெய்யுணர்ந்தோர் மீண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் மூன்று படிகளுள் முதலாவதும்,அதன் பயனும் சொல்லப்பட்டது )
  7. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்று, மறு ஆய்வு செய்து மெய்யுணர்ந்தோர் மீண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் இரண்டாவது படியும்,பயனும் சொல்லப்பட்டது )
  8. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்று, மறு ஆய்வு செய்து,அறிவுச்செறிவுப் பயிற்சி மேற்கொண்டு மெய்யுணர்ந்தோர் மீண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் முறையின் இறுதிப்படியும்,பயனும் சொல்லப்பட்டது )
  9. மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ள மெய்ப்பொருளை   உணர்ந்து, விருப்பு,வெறுப்பு நீக்கினால்,முன்னுள்ள இருவினைப் பயன்கள் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. ( மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ளது மெய்ப்பொருள் என்ற குறிப்பு இலக்கணம் கூறப்பட்டுள்ளது )
  10. காமம்,வெகுளி,மயக்கம் இவை மூன்றினையும் பெயருக்குக் கூட இல்லாமல் செய்வோருக்கு,அந்த மூன்றினால் வரும் வினைப்பயன்கள் உளவாகா. ( மெய்யுணர்தலை எய்தும் முறையும்,பயனும் சொல்லப்பட்டது )

இவ்வாறாக,மெய்ப்பொருளை,மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ளது எனவும்,படைத்த இறைவனை முதற்குறளில் ஆதிபகவன் எனவும்,தனித்தனி அதிகாரங்களினூடே மிகவும் பொருந்தியே கூறி, வள்ளுவன் தன்னை, அறிவுடைய சான்றோரில் தலையாயவர் என நம் யாவர்க்கும் உறுதிப்படுத்தியுள்ளார் அன்றோ!

சொற்பொருளை உணர்த்தும் தெளிவில், மெய்ப்பொருள் என்ற சொல்லே எத்துனை அழகு! தன்னுள் எக்கணமும்,யாவற்றிற்கும் அடிப்படையாய் உணரப்படுவதால்,மெய்யுணர்தல் என்பது இருமை நிலை கடந்த உணர்வு.

மேலும் விளக்கவேண்டின்,கடவுள் வாழ்த்து என்பது பகவன்,பத்தன் என இருமை நிலைப்பட்டது.ஆகவே தான் கடவுள் வாழ்த்துக் குறள்கள் அடி/தாள் சேர்தல்/தொழுதல்,புகழ் புரிதல்,ஒழுக்கநெறி நிற்றல்,வணங்குதல் ஆகிய செய்கைகள் உள்ளடங்கியதாகக் கூறப்பட்டது.

மெய்யுணர்தல் என்பதோ இருமை கடந்து, மெய்ப்பொருள் கண்ட நிலை அல்லது மெய்ப்பொருள் உணர்ந்த நிலையைக் குறிக்கும்.மெய்ப்பொருளின் தன்மை,மெய்யுணர்ந்தோரிடம் மட்டுமே புலனாகும். மருள் எனும் மாயையை நீக்கப் புலனாவது,புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மெய்யான இப் பரம்பொருளே.

மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு,இருள்நீங்கி இன்பம் பயக்கும் என்றுரைத்த முறையே,மாசறு காட்சியவர்களுள் ஒருவராகவன்றோ வள்ளுவனார்  ஒளிர்கிறார்!!

”கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி” எனவுரைத்ததனால்,வள்ளுவனாரும் மெய்ப்பொருள் கண்டார் ஆவார் அன்றோ!

அத்தகைய மெய்ப்பொருள் கண்ட வள்ளுவனாரின் திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் உண்டு எனச் சிறப்பாக எடுத்துரைப்போம்.

நன்றி!!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருவடி பற்றி திருவள்ளுவர்

 

திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்

வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார் அதனாலே நமது முன்னோர்கள் இதை உலக பொதுமறை என கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடைய வில்லை எனில் நம்மை பிறவி தொடரும் எனவும் தீர்க்கமாக சொல்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர்

மேலோட்டமாக பார்த்தால் திருவள்ளுவர் கடவுளை அடைவதை (அ) எப்படி அடைவது என்பதை பற்றி தீர்க்கமாக சொல்லாதது போல தோன்றினாலும். எதை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் கடவுள் வாழ்த்து பகுதியில்.

10 வது குறளில்

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இந்த குறளில் வள்ளுவ பெருந்தகை அவர்கள் பிறவி பற்றியும் இறைவன் அடி பற்றியும் மேலும் இந்த இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்

“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
நற்றாள் தொழார் யெனின்”

நாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார்.இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.

திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ஐ பார்ப்போம்

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”

இந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார்க், தாளை இந்த வார்த்தைகளை நன்கு கவனிக்கவும். ஆம், இறைவன் திருவடியை (அ) மெய்பொருளைஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார். நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்க்காக.

இந்த அடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக காட்டும் அதாவது பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி விடலாம் என்கிறார்.

இப்படி கடவுள் வாழ்த்தில் உள்ள 10 க்கு 7 குறளில் பட்டவர்த்தனமாக அடி என்று தெளிவாக சொல்கிறார் திருவள்ளுவர். ஆம், நற்றாள், அடி, தாள், மாணடி, இலானடி, தாளை, தாள்(2) என்று குறிப்பிடுகிறார். இப்படி 7 விதமாக சொன்னாலும் இந்த 7 வார்த்தைகளும் நிச்சயமாக் ஒரே பொருளைத்தான் குறிக்கும். சரியா?

ஆம், வார்த்தைகள் 7 ஆனால் அர்த்தம் 1

ஆம், இறைவனை அடையும் வழிகளை 7 விதமான வார்த்தைகளால் சொல்லியிருந்தாலும்  வழி 1 தான்.

அதுதான் இறைவன் திருவடி (அ) மெய்பொருள் (அ) சும்மா இரு என்கிற ஞான வழி!

இந்த தலைப்பில் இறைவன் திருவடி என்று எதை சொல்கிறார் என்று நாங்கள் இதுவரை சொல்லவில்லை ஆனால் இறைவன் திருவடி க்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர் என்று பதிந்திருக்கிறோம். இனி வரும் விளக்கங்களில் வள்ளுவர் திருவடி என்று கண்களைத்தான் சொல்கிறார் என்று சொல்லியிருக்குகிறோம். படித்து புரிந்து கொள்க!

திருக்குறளில் (Thirukural)  கடவுள் வாழ்த்து பகுதியில் 10வது குறளில் என்ன சொல்கிறார்.

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்” – 10
 

பிறவி என்னும் பெருங்கடலை தாண்ட வேண்டுமானால் இறைவன் அடியை சேர வேண்டும் என்கிறார்.

இப்பொழுது இந்த குறளை பார்ப்போம்

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும். – 349

பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.

ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் மேலும் திருவள்ளுவரும் (Thiruvalluvar), திருமூலரும் (Thirumoolar), அவ்வையாரும் (Avvaiyar) மற்றும் திருவருட் பிரகாச வள்ளலாரும் (Ramalinga Swamigal) பற்றற்ற என்ற இடத்தில் மிக சரியாக ஒத்து போகிறார்கள் என்பதை வேறு பதிவுகளில் மிக விரைவில் பதிவோம் (Click Here to see  – Soon We will give the link here). ஏன் எனில் அந்த பற்றற்ற இடத்திலே இறைவன் துலங்குகிறான்! அதுவே திருவடி அல்லது மெய்பொருள்

கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” – 214

இந்த குறளும் மறைமுகமாக திருவடி பற்றிதான் சொல்கிறது. மேலும் இப்படி அறிந்து உணர்ந்து இருப்பவர்களே உயிர் வாழ்வார்கள் என்று தெளிவாக சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் இறைவனை உணர உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் 700 கோடி வழிகள் பற்றி எல்லாம் இந்த குறளில் சொல்லவில்லை. இந்த குறளில் உள்ள வழி உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் பொதுவான ஒரே வழியான ஞான வழியை ப்ற்றி மட்டும்தான் சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம். இந்த “ஒத்தது அறிவான்” என்ற குறளுக்கான விளக்கம் “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” என்ற குறளுடன் மிக தொடர்புடையது இதுவே ஞான இரகசியம்.

விளக்கம்:

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” – 214

ஒத்தது அறிந்தவன் உயிர் வாழ்வான் அறியாதவன் செத்து போவான்.

ஒத்தது எது? நம் உடம்பில் ஒரு கண்ணைப்போல உள்ள மற்றொரு கண்!?

ஒத்தது எது? உலக மக்கள் அனைவருக்கும் ஒன்று போல் உள்ள கண்கள்!

ஏன் ஒன்று போல் உள்ளது? இறைவன் எல்லார் கண்மணி-ஊசிமுனை துவாரத்தின் உள்ளிலும் ஊசிமுனை அளவாக ஒரே அளவாக இருக்கிறான்! இறைவனுக்கு பாகுபாடே இல்லை! எல்லாரும் அவர் பிள்ளைகளே! எல்லாருக்கும் சமமான – ஒரே தன்மையில் தான் இறைவன் – பரமாத்மா – சீவனாக – ஒளியாக கண்களில் மிளிர்கிறான்!

நமது இரு கண்களும் ஒப்பற்றவை! நம் உடம்பில் ஒரேமாதிரி உள்ள இரண்டு பொருள் கண்கள் மட்டும்தான். நமது உடம்பில் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒன்று போல் இருப்பது கண்கள்தான்! கண்-மணி தான்! நம் வாழ்வே கண்ணில்தான் இருக்கிறது! நமது கண்களில் – மணியில் – மத்தியில் – ஊசிமுனை துவார்த்தின் உள்தான் ஊசிமுனை அளவு ஒளி உள்ளது!

உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவாக இருப்பதும் கண் மணியே!

கண்தானம் யார் வேண்டுமானலும் எந்த பாகுபாடுமின்றி யாருக்கும் கொடுக்கலாமல்லவா?

ஏன்?

எல்லார் கண்ணும் ஒன்றாக இருப்பதால்தான்!? யாருக்கும் எந்த வித்தியாசமும் கண்ணில் இல்லை! ஆம், 700 கோடி மக்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இந்த கண்கள்தான்.

இதுவே மாபெரும் இரகசியம்!

திருக்குறளில் மேலும் சில குறள்களை கொடுக்க முடியும் எனினும் எல்லா ஞானிகளின் பாடல்களையும் சொல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அடுத்தடுத்த ஞானிகளின் திருவடி (அ) மெய்பொருள் பாடல்களை கொடுக்க போகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 The final nail in the coffin


Here I provide the most important evidence, outside the first chapter on "Praise of God", to show that Valluvar defined the very basis of Kural's ethics, namely கொல்லாமை, இன்னா செய்யாமை and பொய்யாமை, in Jaina terms.

(i) Repeated emphasis on "Not killing" கொல்லாமை 

Gopalan (1979), who compared the Kural with Brahminical Hinduism, Buddhism and Jainism to determine its affilitation, deals with Jaina claims more elaborately for he himself agrees that stronger claims have come from Jainism than from Buddhism. If ahimsā or no-violence is the foundation of Jainism, then we have many places in Kuŗal that reiterate this principle of non-killing. 

Valluvar himself asks the question: What is virtue?
And the reply is "not killing because killing causes every ill" (321) 

He asks a different question: “What is grace and disgrace?”. 
He gives the same reply: "killing is disgrace and non-killing grace". (254) 

To another question, “What is the perfect path”, he says the same: 
“It is the path of avoiding killing anything” (324) 

If you ask “What is the characteristic of penance” 
He says it lies in "harming no life" (261) in "non-killing" (984). 

And what is the topmost teaching ever written? Here also the answer is no different:
"It is to share your food and protect all life" (322) 

Sutrakritanga of Jainism says "A man should wander about treating all creatures as he himself would be treated" (1.11.33). In Kuŗal, Valluvar even goes a step higher and says in couplet 327:

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
Avoid removing the dear life of another 
Even when your own life is under threat
.
 NV

(ii) Repeated emphasis on "Not hurting" (இன்னா செய்யாமை)

And not to forget the chapter preceding to Chapter 33. This one on "Not hurting" together with "Not killing" forms the sum and substance of the ahimsā docrtine of "Non Injury". Two couplets from Chapter 32 would suffice here as examples to show Valluvar's resolve on not hurting.

Couplet 317
It is best to refrain from willfully hurting 
Anyone, anytime, anyway. 
PS

Couplet 320
Hurt comes to the hurtful; hence it is those 
Who don't want to be hurt cause no hurt.
 * PS

Like "Not killing", Valluvar has over and over again emphasized "Not hurting" in many places even outside the designated Chapter 32 (see couplets 109, 160, 579, 852, 881, 987) and at times the same idea has been put forward in different contextச். To cite an example, in Chapter 32: இன்னா செய்யாமை, Valluvar says:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல். 
(314)
Punish an evil-doer 
By shaming him with a good deed.* 
PS

The same idea is repeated in Chapter 99 on Goodness (சான்றாண்மை):

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? 
(987)
What good is that goodness if it does not return good 
Even to those who cause evil? * 
PS

Couplet 579 in Chapter 58 on "Compassion" also recaps the same idea:

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் 
பொறுத்தாற்றும் பண்பே தலை. 
That quality of forbearance and sympathy is the best, 
Even to those who hurt us. 
NV

Yet again the same idea is repeated, this time in Chapter 86 on Hostility (இகல்):

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னா செய்யாமை தலை. 
(852)
Even if disagreeable things are done to cause rift, 
Better do nothing painful to avoid conflict. 
* DL, NV

There is no doubt that the foremost teaching of Valluvar is ahimsā as he has emphasized it not only through chapters like கொல்லாமை, புலால் உண்ணாமை, இன்னா செய்யாமை and இகல் but also through many other couplets in அறத்துப்பால் and பொருட்பால். One may ask if these references to ahimsā are sufficient enough to conclude that only a person of Jaina faith would have written the Kuŗal. Many non-Jaina works also reiterate the concept of ahimsā, but they do not repeatedly emphasize Not-killing as a virtue, grace, as a characteristic of penance, as the perfect path and the topmost code to have been ever written! And not to speak of "Not hurting" which has also been emphasized over and again.

(iii) Placing Ahimsā above Satyā 

The characteristic of Jainism is that, of the five vratās or vows (ahimsā, satyā, asteya, brahmāchārya and apārigraha), the second vratā truthfulness is subordinate to the the first vratā of ahimsā (Jain, 2002). Valluvar states this explicitly in Kuŗal in the following words:

Kuŗal 323. 
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று. 
The first and foremost good is ‘Non killing’. 
Next to it in rank comes ‘Not lying’.
 
NV

Valluvar places satyā after ahimsā which is in direct contradiction to Harichandra who put satyā above ahimsā (Subramanian and Rajalakshmi, 1984). One wonders what prompted Valluvar to talk about "பொய்யாமை" in the Chapter on "கொல்லாமை" and that too make a specific mention that "Not lying" comes only next to "Not killing" in rank! There can be no better explanation than this: that the author of Thirkkural was consciously defining ethics based on Jaina ideals. 

(iv) But Satyā should also be Ahimsic

Interestingly, the Jaina definition of Truthfulness (வாய்மை) or Not speaking falsehood (பொய்யாமை) itself has ahimsā connotation. Says H.R. Jain (2002) in his book on Jaina Tradition in Indian Thought: "It is interesting to note that even speaking truth which results in injury to others should be avoided". Avoiding harsh speech is one of the oft repeated pronouncements of Valluvar. He emphasized it not only under chapter 10 on "Pleasant Speech" (couplets 99, 100) but also in may places outside this chapter (see couplets 35, 386, 566, 567). 

Sūtrā 400 under Self-control in Saman Suttam, an anthology of well known Jaina sūtrās, says: 

तहेव फरुसा भासा, गुरुभूओवघाइअणी ।
सच्चा-वि सा न वत्तव्वा, जओ पावस्स आगमो
 ॥१७॥

The monk should not use harsh words 
Or speak what is harmful to other living beings; 
Even if its true, because it is sinful. 
(400)

Three points have been brought out in the above Sūtrā: 

(i) What is to be avoided? Speaking harsh words. 
(ii) What is a harsh word? Any speech harmful to other living beings.
(iii) What to do if truth to be conveyed causes harm? Avoid it, because it is a sin. 

The last point is worth taking note of. Anything that harms others should be avoided, even if it is the truth. In other words, better lie than speak the truth in situations that may harm the other. This is exactly what Valluvar says in the very first two couplets in chapter 30 on Truthfulness. 

Couplet 291. 
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 
What is truthfulness? It is nothing but 
Utterance wholly devoid of ill.
 
VS, PS

Couplet 292. 
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின். 
Even a lie would take the place of truth,
If it brings blameless benefit.
 NV, VR 

The second couplet is actually a supplement to the first. Valluvar's definition of truthfulness is perhaps the most clinching evidence, if one may say so, to prove his inclination towards Jaina ideals and morality. The Jaina commentator of the 16th century AD Vāmana Munivar (சமய திவாகர வாமன முனிவர்) while commenting on the Jaina work Neelakéci, cites this couplet from Kuŗal and adds the phrase "so says our scripture" (எம் ஒத்து ஆதலின்) (Zvelebil, 1975; Shanmugampillai, 2005). Sabramanyam (1987) reiterates that it is in this chapter that the poet implies the ahimsā doctrine of the Jainas. Interestingly such a definition of truthfulness is not hard to find in other texts as well! In Panchatantra (Book III in 'Crows and Owls'), we see a similar pronouncement: "Even truth should be concealed if causing sorrow when revealed". As I mentioned in one of my earlier postings, it is not a surprise to know that the popular recensions of Panchatantra have been the works of the Jains (Jain, 1999).

(v) From the concluding chapter of my article on "Jaina ideas in Tirukkural":

What makes Kuŗal Jaina in character is the combination of all these: 

a) An Invocation in the very beginning that is consistent with the terminologies and beliefs employed for praising of Jaina godheads, Arhat and Siddha 

b) Valluvar's repeated emphasize on Not-killing and Not hurting even outside the chapters on Not-killing (கொல்லாமை) and Not-hurting (இன்னா செய்யாமை) 

c) Valluvar's frequent reference to Not-killing as virtue (அறம்), grace (அருள்), perfect path (நல்லாறு), characteristic of penance (தவத்திற்கு உரு), and as the topmost code ever written (தொகுத்தவற்றுள் எல்லாம் தலை) 

d) The chapter headings in the first division Virtue (அறத்துப்பால்) that are very much in line with the spirit of the Jaina tradition (compared with Jaina anthologies like Saman Suttam and Pearls of Jaina Wisdom) 

e) His definition of truthfulness as something that should not cause any harm to others 

f) The special mention of Not-killing as a vow above Truthfulness (as I and II vratās respectively) 

Therefore there is no doubt that the ethic Valluvar builds in his work is based on Jaina principles. In a state like Tamil Nadu, dominated by the majority Hindus and with a tradition of four of the five great commentators of Kuŗal (Pariperumaal, Parithiar, Parimelazhagar and Kalingar) interpreting the first chapter in Hindu non-Jaina terms, it is nothing but natural that Jaina renderings have taken a back seat. Zvelebil (1975), citing M. Irakava Iyenkar's reference to an inscription of 1272 in Sri Varadaraja Temple in Kanchi that refers to a Jaina commentators, mentions that many of the Jaina commentaries of Kuŗal were suppressed by the commentary of the 13th century Parimelazhagar. 

While the majority are ignorant of the Jaina terminologies, the Jains who are supposed to know them are unfortunately a marginal minority. No wonder their voices are never heard. One is left to wonder, what would have been the recognition given to the Kuŗal had the state been a Jaina majority. The Jains have every right to say that Valluvar was a Jain, or at least claim that the author of the Kuŗal was inclined towards Jaina ideals. But they do not have the right to claim the Kuŗal as their scripture for the simple reason that the Kuŗal was not written for any particular sect in mind. 

Let us now revisit what Rajaji said: "It is claimed by many that Tiru-Valluvar was a Jain. I do not accept this theory". But Rajaji didn't explain why he denied such claims. He only said "Tiru-Valluvar was one of those rare and great men whose catholic spirit rose above all denominations and whose vision was not clouded by dogma or prejudice of any kind". Even those who claim Valluvar to be a Jain say so! They also declare that in spite of being a Jain, Valluvar's Kuŗal is a non-sectarian composition, with the author making no attempt or whatsoever to impart the doctrines of his own religion on others.

The Deity Valluvar invokes in Chapter is sufficient enough to show that Valluvar must have been a Jain. In spite of all these, Thirukkuŗal is not a book on Jainism or Jaina philosophy but a book written by someone who must have been either a Jain or someone who was impressed by Jaina ideals of life. As Subramaniyam (1987) said, Valluvar made great use of ideas that came his way, be it from Hinduism or Buddhism, but the greater part of his familiarity is with Jainism.

References:

Jain, J.P. 1999. Religion and Culture of the Jains. Bharatiya Jnanpith. p. 191

Jain, H.R. 2002. Jaina Tradition in Indian thought. Editor: D.C. Jain. Sharada Publishing House, Delhi. pp 273-289

Shanmugampillai, M. 2005. Thiruvalluvar a Jain (வள்ளுவர் சைன சமயம் சார்ந்தவர்). Available at http://blog.360.yahoo.com/blog-IHs9F...Ww--?cq=1&p=13

Subramanyam, K. N. 1987. Tiruvalluvar and His Kuŗal. Bharatiya Jnanpith Publication. 220 pages

Subramanian, N. and Rajalakshmi, R. 1984. The Concordance of Tirukkural (With Critical Introduction). Ennes Publications, Madurai. 250 pages

Venugopala Pillai, M.V. (undated) Who is Adhibagawan? (English translation of Tamil essay). Available at Ahimsā Foundation.(http://www.jainsamaj.org/literature/...wan/300103.htm)

Zvelebil, K.V. 1975. Tamil Literature. E.J. Brill. p. 125-26



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard