New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது


Guru

Status: Offline
Posts: 20711
Date:
ஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது
Permalink  
 


 

ஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது!

 

ஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப்பால் VI சந்தித்ததுதாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது!

John Ganesh preaching Bible

John Ganesh preaching Bible

சகோதரர்கள் வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றது: மைக்கேல் திருச்சியில் இருக்கும் போது, ஜான் கணேஷைப் பற்றி விசாரித்து இருக்கக் கூடும். ராஜாராமன் மிருதங்கம் வாசிப்பதில் தனது தொழிலை செய்து வந்த நிலையில், கணேஷுக்கு மட்டும் அத்தொழில் தெரியாததால், ஆங்கிலம் டியூசன் சொல்லிக் கொடுத்து வந்த நிலையில், ஒரு நாள் கிருத்துவர் பிரசங்கக் கூட்டத்தைக் காண நேர்ந்தது. அதில் ஆங்கிலத்தில் பேசுபவர் சிரமப்பட்டு பேசுவதும், அதனை தமிழில் மொழிபெயர்த்தவர், அதை விட கஷ்டப்பட்டு மொழிபெயர்ப்பதும், தவிர தவறாகவும் மொழிபெயர்ப்பதை கவனித்தார். அதனால், கூட்டம் முடிந்தவுடன், மொழிபெயர்க்கும் வேலையை தனக்குக் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் பார்த்தார். அவர்களோ, பைபிளைப் பற்றி உமக்கு என்ன தெரியும் என்றெல்லாம் கேட்டபோது, தனக்குத் தெரிந்த வசனங்களை எண்களுடன் கூறி, அதற்கு விளக்கம் கொடுத்தார். அது மட்டுமல்லாது, மடமடவென்று சிறிதும் தயக்கம் இல்லாமல், தமிழிலும் மொழிபெயர்ப்பது காட்டினார். மேலும், அவர் பேசிய ஆங்கிலம் பிரமாதமாக இருந்தது. இதைக் கவனித்த அவர்கள் மயங்கி, அசந்து போய்விட்டனர். இதைப் போன்ற ஆள் தமக்குக் கிடைத்தால், கூட்டங்களை எல்லாம் அமோகமாக நடத்தலாமே என்றும் நினைத்தனர்.  யோசித்துச் சொல்கிறோம் என்று அவரை அனுப்பி விட்டு, எப்படி அவரது திறமையை தமக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். கணேஷ் கிருத்துவராகி விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை என்று முடிவெடித்தவுடன், கணேஷைக் கூப்பிட்டு, தாங்கள் அவருக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பிரசங்கம் செய்யும் வேலையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினர். அதற்கு ஒப்புக்கொண்டபோது, கிருத்துவத்திற்கு மதம் மாற வேண்டும், அப்பொழுது தான் அந்த வேலையைக் கொடுக்க முடியும் என்றும் சொன்னார்கள். கணேஷ் ஒப்புக்கொண்டார். அதன்படியே, ஞானஸ்தானம் பெற்று ஜான் கணேஷ் ஆனார். இவ்விதமாக கானாடு காத்தான் மிருதங்க வித்வான் மலையப்ப ஐயரின் மகன்கள், வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றார்கள். ராஜாராம் மிருதங்க வித்வானாக இருந்து, பல கச்சேரிகளில் வாசித்துள்ளார். திருச்சி “ஆல் இந்தியா ரேடியாவில்” பணி புரிந்து ஓய்வு பெற்றதாக அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்[1].

Ariyakudi - mirudhangam player

Ariyakudi – mirudhangam player

ஜான் கணேஷ் சுவிசேஷகர் புகழ் பெற்று பிரசித்தியானது: பிறகு, இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[2]. ஒருமுறை அவருடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார்.

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்

அருளப்பா ஆர்ச் பிஷப்பானதும், ஆராய்ச்சி தீவிரமானது: 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப் ஆனதும், தனது ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தினார். 1968ல் தாம்பரம் – கிறிஸ்தவ கல்லூரியில், பொன்னு ஏ. சத்தியசாட்சி தலைமையில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது[3].  ஒருபக்கம் மு. தெய்வநாயகம், வீ. ஞானசிகாமணி முதலியோர் தமது ஆராய்ச்சிகளை முடிக்கிவிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணியில் ச. வே. சுப்ரமணியன் (1972 – 1985) என்பவர் இயக்குனராக இருந்தார். அப்பொழுது அன்னி தாமஸ் என்பரை அங்கு வேலைக்கு வந்தார். உண்மையில் அருளப்பாவின் திட்டத்திற்கேற்ப அவரை அங்கு வேலைக்கு வைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இவருக்கும் சவேசுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று பேசப்பட்டது[4]. அவரே அன்னி தாமஸ் பற்றி கூறியுள்ளது, “அன்னி தாமஸ் அரங்கம் இவர் என் மாணாக்கிஉரிமையுடன்வாழவேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் 63 வயதிலும் தமிழ்ப்பணியாற்றி வருபவர்.[5] “கிறித்தவமும் தமிழும்” என்ற அறக்கட்டளை அருளப்பாவின் விருப்பத்திற்கு ஏற்றபடி அங்கு ஏற்படுத்தப்பட்டது. தெய்வநாயகத்தின் ஆய்வுக்கட்டுரையை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தவும் திட்டம் போடப்பட்டது. ஆனால், யாரும் அதனை சீண்டவில்லை. இவர்களது பொய்யான ஆராய்ச்சியை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், இவர்களும் அதனை விடுவதாக இல்லை. ஞானசிகாமணி தனது “சித்தர்” ஆராய்ச்சியில் வேலை செய்து கொண்டிருந்தார். என்னத்தான் தமிழில் இப்படி இருந்தாலும், ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி இருந்தால், உலகம் முழுவதும் பரவும், ஆதரவு கிடைக்கும் என்று அறியப்பட்டது. அதற்கு ஜான் கணேஷை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

9._the_pope_prays_in_front_of_the_bleeding_cross_of

9._the_pope_prays_in_front_of_the_bleeding_cross_of

அருளப்பா கணேஷ் ஐயரை வாடிகனுக்கு கூட்டிச் செல்லல்: அருளப்பா, ஜான் கணேஷின் பைபிள் ஞானம், இறையியல், விளக்கம் கொடுக்கும் தன்மை, வாதம் செய்யும் திறமை, எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கில அறிவு முதலியவற்றைக் கண்டு அதற்கு அவர்தான் சரியான ஆள் என்று தீர்மானித்தார். வாடிகனின் அனுமதி பெற்று விட்டால், பெரிய அளவில் ஆராய்ச்சியை ஆரம்பித்து விடலாம், பிறகு நிதியுதவி பற்றி கவகைப்பட வேண்டாம், சென்னை பல்கலைக்கழகத்திலேயே அதற்கான பிரிவையும் ஆரம்பித்து விடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார். அருளப்பா இதற்காக வேண்டியனவெல்லாம் செய்தார். ஜான் கணேஷுக்கு “ஆச்சார்யா பால்” என்ற பெயருடன், தனது முகவரியே “கேர் ஆப்” என்று கொடுத்து 1976ல் ஆச்சார்ய பாலுக்கு பாஸ் போர்ட் எடுக்கப்பட்டது. 1977ல் ஆர்ச் பிஷப் அருளாப்பாவோடு, கணேஷ் ஐயர் வாடிகனுக்கு சென்று, போப்பைச் [Pope Paul VI] சந்தித்தார்[6]. அருளப்பா அவரை “இந்தியாவில் கிறிஸ்தவம்” பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளதாக அறிமுகப்படுத்தினார். அவர் கண்டுபிடித்ததாக இரண்டு ஆதாரங்களையும் அருளப்பா போப்பிடம் காட்டினார். ஆனால், அவற்றைக் கண்டு போப் அசைந்ததாகத் தெரியவில்லை[7]. “மிகவும் நல்லது, மிகவும் நல்லது,…” என்று புகைப்படங்கங்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாலும், அவை அவரது கைகளிலிருந்து கீழே விழுந்தன. அருளப்பா ஜாக்கிரதையாக பிடித்துக் கொண்டார். அவர் அவற்றை நம்பவில்லை என்று தெரிந்தது. 20 நிமிடங்கள் போப்புடன் அருளாப்பா மற்றும் ஆச்சார்யா பால் உரையாடினர். ஆச்சார்யா பால் சொன்னதையெல்லாம் போப் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அருளப்பா சொன்னதை அவர் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். ஆனால், அவர் ஆச்சார்யா பாலிடம் கனிவாக நடந்து கொண்டார். எத்தனையோ பெரிய-பெரிய முக்கியஸ்தர்கள், முதலியோர் வெளியே காத்துக் கிடந்த போதும், 20 நிமிடங்கள் அவரிடம் பேசினார்.  ஆரம்பத்தில் ஆச்சார்யா பாலே நம்பவில்லை என்று குறிப்பிடப்பட்டது, பிறகு போப் எப்படி நம்புவார். அவருக்கு என்ன கிறிஸ்தவ மதத்தின் சரித்திரம் தெரியாதா என்ன?[8]

ஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்

ஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்

சென்னைக்கு திரும்பலும்மற்றவர்கள் பொறாமை படுதலும்: அருளப்பாவுக்கும் மனது கனகத்தான் செய்தது. இருப்பினும் முயற்சியை விடுவதாக இல்லை. பிறகு, ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தனர். பல செமினரிகளில் ஆச்சார்யா பாலை பேச வைத்தார். அவரது பேச்சைக் கேட்டவர்கள் பாராட்டத்தான் செய்தார்கள். ஒரு இந்தியருக்கு அத்தனை அறிவா என்று வியந்தனர். இவையெல்லாம் தமிழகத்தில் கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர்களிடம் பரவலாக விவாதிக்கப்பட்டது. தமிழில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த குழுக்களுக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை. என்ன அருளப்பா இப்படி இரட்டை நாடகம் போடுகிறாரே என்று கூட பேசிக் கொண்டனர். ஒருபுறம் நம்மை ஆதரிக்கிறார், ஆனால், இன்னொரு புறம் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார் என்றும் புழுங்கினர். எப்படி இதை சமாளிப்பது அல்லது மாற்றுவது என்று சந்தர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னைக்குத் திரும்பியதும், ஆச்சார்யா பால் ஶ்ரீரங்கத்திற்கு வந்து விட்டார். நிறைய நாட்களாக அருளப்பாவிடமிருந்து எந்த செய்தியும் வராதலால், சந்தேகமடைந்து, சென்னைக்குச் சென்று அருளப்பாவை பார்த்தார். தான் இல்லாத நேரத்தில், யாரோ தமக்கு எதிராக வேலை செய்துள்ளதாகவும்[9], யாரோ பொலீஸிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், வழக்கு தொடரப்படமாட்டாது என்றெல்லாம் கூறினார்[10]. இதனால், கணேஷ் ஐயருக்கு பெருத்த கவலை ஏற்பட்டது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1]  ராஜாராமுடன் வயலின் வாசித்த வித்வானிமிருந்து பெற்ற தகவலின் மீது ஆதாரமாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

[2] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.

[3] தாமஸ் மலை குறவஞ்சி என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். St. Thomas Literati Fraternity, 1999.

[4]  அன்னி தாமஸுக்கும், சவேசுவிற்கும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சவேசுக்கு ஏற்கெனவே திருமணம்மனவர் என்றும் குறிப்பிடத்தக்கது. இங்கு தனிமனிதனுடைய வாழ்க்கைப் பற்றி விமர்சிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் எப்படி எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுகின்றனர் என்பது தான் எடுத்துக் காட்டப்படுகிறது.

[5] அன்னி தாமஸ் பற்றி, சவேசு கூறுவது, “இதோ இந்த நூல்நிலையக் கட்டிடத்தின் பெயர் அன்னி தாமஸ் அரங்கம் இவர் என்மாணாக்கிஉரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக திருமணம்செய்துகொள்ளாமல் 63 வயதிலும் தமிழ்ப்பணியாற்றி வருபவர்அவர் தமிழூரை வந்து பார்த்துவிட்டு நான் மறுத்தபோதும் ஒருலட்ச ரூபாய் கொடுத்து இந்த அரங்கம் கட்டச்செய்தார்” என்று தம்மாணாக்கர்களைப் பற்றிக் கூறியபோது அவர்தம் முகத்தில்தெரிந்த பெருமிதத்திற்கு அளவே இல்லை”.  தமிழ்த்துறவி ச.வே.சு, அரசர்களுக்குப் பரிசு கொடுத்த புலவர்கள்!, நக்கீரன், 01-12-2012,  http://nakkheeran.in/Users/frmArticles.aspx?A=15002

[6] K. P. Sunil, Hoax! – Special Report, Illustrated Weekly of India, April 26, 1987, pp.32-35.

[7] போப்பாக வாடிகனிலபிருப்பவருக்கு, கிருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலா இருப்பார். அவருக்கும், எல்லாவிதமான கட்டுக்கதைகளும் தெரிந்துதானே இருக்கும்.

[8] On 27 September 2006, Pope Benedict XVI made a speech in St. Peter’s Square at Vatican City in which he recalled an ancient St. Thomas tradition. He said that “Thomas first evangelised Syria and Persia and then penetrated as far as western India, from where Christianity also reached South India.” As quoted in Deccan Chronicle, Chennai, of 23 November 2006, under the title “Pope angers Christians in Kerala”.

https://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/pope-benedict-xvi-denies-st-thomas-evangelized-south-india-ishwar-sharan/

[9]  பிறகு நீதிமன்றத்தில் அருளப்பாவே வந்து, ஜான் கணேஷுக்கு எதிராக சாட்சி சொன்னது தான் “கிளைமாக்ஸ்” என்பதா, துரோகம் என்பதா என்பதை கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்.

[10] “What wrong have I done?” Ganesh Iyer speaks out fr the first time in an interview with K. P. Sunil, Illustrated Weekly of India, April 26, 1987, pp.34-35.__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

ஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது,  வழக்குப் போட்டது யார்? ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா? யார், யார்?

 

ஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்ததுவழக்குப் போட்டதுயார்ஆர்ச் பிஷப் அருளப்பாமரியதாஸ்ஜான் தாமஸ் மற்றும்அந்தோனி ராயப்பாயார்யார்?

Thomas myth manufacturers சந்திப்பு

Thomas myth manufacturers சந்திப்பு

ஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்ததுவழக்குப் போட்டதுயார்? ஆச்சார்ய பால் கேட்டபோது, “தான் இல்லாத நேரத்தில், யாரோ தமக்கு எதிராக வேலை செய்துள்ளதாகவும்[1], யாரோ பொலீஸிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், வழக்கு தொடரப்படமாட்டாது”, என்றெல்லாம் அருளப்பா கூறினார்[2]. இதனால், கணேஷ் ஐயருக்கு பெருத்த கவலை ஏற்பட்டது என்று பார்த்தோம். அதாவது, அருளப்பா கூறியதில் அவருக்கு திருப்தி இல்லை என்றாகிறது. பொய் சொல்கிறார் என்று அவருக்கு புரிந்திருக்கும். அதே நேரத்தில் மரியாதாஸ் புகார் கொடுத்தார் என்றுள்ளது. இல்லை, புரொட்டஸ்டென்ட் பாதிரிகள் தாம் புகார் கொடுத்தனர், அதனால் வழக்கு போட வேண்டியதாகிற்று என்றும் சொல்லப்பட்டது. இல்லை, தெய்வநாயகம், தெய்வசிகாமணி, தயானந்தன் பிரான்சிஸ், தேவசஹாயம், சத்தியசாட்சி போன்றோர்க்கு, ஆச்சார்ய பாலுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்ததை விரும்பாதலால், பொறாமையினால் அவர்களில் ஒருவரோ, அல்லது அந்த ஒருவரால் தூண்டப்பட்டவர் தாம் புகார் கொடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்ற இரு கிறிஸ்தவகள் சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து சம்மதம் பெற்று[3], அருளப்பா அவ்வாறு பணத்தை விரயம் செய்வதை தடுக்க ஆர்ச்பிஷப் மீதே வழக்குப் போட்டனர் என்று இந்தியாடுடேவில் காணப்படுகிறது[4]. இந்த இரண்டு பேர் யார் என்று தெரியவில்லை.

இந்தியா டுடே - கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை - அருளப்பா

இந்தியா டுடே – கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை – அருளப்பா

1977 முதல் 1980 வரை என்ன நடந்தது?: யார் இருந்த ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்று தேடிப் பார்த்தால், நமக்குக் கிடைத்துள்ள நீதிமன்ற ஆவணங்களிலிருந்து இவர்களைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. இப்பொழுதும், இவ்வழக்குகல் பற்றிய ஆவணங்கள் எல்லாம் மறைக்கப்படுகின்றன. இருப்பினும் சில நீதிமன்ற ஆவணங்களிலிருந்து, C. S. No 318 of 1980, Application nos. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985 என்றுள்ளதால் 1980லேயே வழக்கு ஆரம்பித்துள்ளது தெரிகின்றது[5]. ஆனால் அதில் “The Most Rev. Dr. R. Arulappa Archbishop of Madras Mylapore”………….Applicant”, அதாவது மிக்க மரியாதைக்குரிய டாக்டர் ஆர். அருளப்பா, சென்னை மைலாப்பூர் ஆர்ச்பிஷப் வாதி / வழக்கு போட்டவர் என்றும், “Ganesa Iyer alias Dr. M. Paul, alias M. Acharya Paul, alias Murugesan Paul alias Genesan alias Acharaya Ganesh alias Dr. M. Acharya alias Dr. Hariharanath……. And 6 others …………..Respondents” அதாவது, கணேஷ ஐயர் என்கின்ற டாக்டர் எம். பால் என்கின்ற எம். ஆச்சார்ய பால் என்கின்ற முருகேசன் பால் என்கின்ற கணேசன் என்கின்ற ஆச்சார்ய கணேஷ் என்கின்ற டாக்டர் எம். ஆச்சார்யா என்கின்ற டாக்டர். ஹரிஹரநாத் என்பவர் தாம் பிரதிவாதி / புகார் கொடுக்கப்பட்டுள்ளவர் என்று தெளிவாக உள்ளது.  இங்கு திடீரென்று பிரதிவாதியின் பெயரை ஜாதி குற்ப்பிட்டு வழக்கு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதும், ஊடகங்களும் அவ்வாறே செய்திகளில் வெளியிட்டுள்ளதையும் கவனிக்கத்தக்கது.

இந்தியா டுடே - கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை - அருளப்பா மீது வழக்கு - ஜான் தாமஸ், அந்தோனி ராயப்பா

இந்தியா டுடே – கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை – அருளப்பா மீது வழக்கு – ஜான் தாமஸ், அந்தோனி ராயப்பா

போப் பால் VIன் இறப்பும்அருளப்பாவின் நிம்மதியும் (1978):  போப் பால் VI [Pope Paul VI (1897-1978)] திடீரென்று 1978ல் – ஆகஸ்ட்.6, 1987 அன்று மாரடைப்பால் இறக்கிறார். அருளப்பா நிச்சயமாக பெருமூச்சு விட்டு நிம்மதியாகி இருப்பார். எப்படி புகைப்படங்களைக் காட்டியபோது, கீழே நழுவ விட்டார், அவற்றை தான் பிடித்தது பற்றி, நினைத்துப் பார்த்திருப்பார். ஆனால், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. யாரோ ஆள்மாறாட்டம் செய்து, போப் போல உலா வந்தார் என்றும் கூறப்பட்டது[6].  வாடிகனில் நுழைய மார்க்சீய யூதர் ஒருவர் சதிசெய்தார் என்றெல்லாம் விளக்கப்பட்டது[7]. உண்மையில் அருளப்பா, தெய்வநாயகம், ஞானசிகாமணி போன்ற கோஷ்டிகள் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆனால், அவற்றை விடுத்து, இவ்வாறு மோசடிகளை செய்து கொண்டு, கள்ள ஆவணக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார், யார் தான், அத்தகைய ஏமாற்று வேலைகளை நம்புவர்? இவர்களே, இவர்களுக்கு அத்தாட்சி பத்திரங்கள், சான்றிதழ்கள் கொடுத்துக் கொள்ளலாம். ஆனால், விசயம் தெரிந்தவர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை.

போப் பால் - 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987 - pukaippatam

போப் பால் – 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987 – pukaippatam

தாக்குதலுக்கு குறியான அருளப்பா தப்பிஆச்சார்யா பால்பலிகடா ஆனது (1977-1980): அப்படியென்றால் 1977 மற்றும் 1980களில் முன்னர் குறிப்பிட்டப்படி –

 1. மரியாதாஸ் புகார் கொடுத்தாரா?
 2. புரொட்டஸ்டென்ட் பாதிரிகள் தாம் புகார் கொடுத்தனரா?
 3. தெய்வநாயகம், தெய்வசிகாமணி, தயானந்தன் பிரான்சிஸ், தேவசஹாயம், சத்தியசாட்சி போன்றோர்க்கு, ஆச்சார்ய பாலுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்ததை விரும்பாதலால், பொறாமையினால் அவர்களில் ஒருவர் போட்டாரா?,
 4. அல்லது அந்த ஒருவரால் தூண்டப்பட்டவர் தாம் புகார் கொடுத்தாரா?
 5. ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்ற இரு கிறிஸ்தவகள் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து சம்மதம் பெற்று,  அருளப்பா அவ்வாறு பணத்தை விரயம் செய்வதை தடுக்க ஆர்ச் பிஷப் மீதே வழக்குப் போட்டனரா?

என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அனைவருமே கிருத்துவர்கள் ஆவர். ஆகவே, அது அவர்களது உட்புறப் பிரச்சினை என்று கொள்லப்பட்டது. மற்றவர்கள் இவ்விசயத்தில் நுழைவதை சர்ச்சோ, வாடிகனோ விரும்புவது கிடையாது என்பது உலகறிந்த விசயம். போப் வரை ஏற்கெனவே அருளப்பா மற்றும் ஆச்சார்யா பால் சென்று வந்துள்ளதால், அவர்கள் தாம் பொறுப்பேற்க வேண்டும் என்று நன்றாகவே தெரிந்தது. அதனால், ஒருவேளை, மேலே குறிப்பிட்டவர்கள் புகார் அல்லது வழக்குப் போட்டிருந்தாலும், பிரச்சினை பெரிதாகும் மற்றும் விவரங்கள் வெளிவரும் போது, அதிக பாதிப்பு ஏற்படும் என்று கருதி, அவை அல்லது அவர்களை வாபஸ் வாங்க வைத்திருப்பர். இதிலும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், முதலில் அருளப்பாவின் மீது தான் புகார் எழுந்தது, வழக்கு போடப்பட்டது, பிறகு, அவை எப்படி திடீரென்று அவரது பிரியமான தோழரான டாக்டர் ஆச்சார்ய பாலின் மீது திரும்பியது என்று தெரியவில்லை.

போப் பால் - 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987

போப் பால் – 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987

தெய்வநாயகம்ஞானசிகாமணி வீறுகொண்டெழல்அதேபோலி ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப் படல் (1980-85): ஆச்சார்யா பாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், அருளப்பாவின், “”புனித தோமையார்” என்ற புத்தகம் “குட் பாஸ்டர் பிரஸ்”, சென்னை – 600 001 என்ற அச்சகத்தினரால் வெளியிடப்படுகிறது[8]. உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, “முதல் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு” என்று திருச்சியில் டிசம்பர் 28 முதல் 30 வரை 1981ல் நடத்தியது[9].  ஞானசிகாமணி “அகத்தியர் ஞானம் [விளக்கவுரை]” என்ற புத்தகத்தை அங்கு வெளியிடுகிறார். அதற்கு “பாராட்டுரை” எழுதியது, பொன்னு ஆ. சத்திய சாட்சி! ஞானசிகாமணி வேதாகம மாணவர் பதிப்பகம் என்று வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை முடிக்கி விட்டார். திடீரென்று பிராமண எதிர்ப்பும் வெளிப்படுகிறது. எஸ். இம்மானுவேல் நரசுராமன் எழுதியதாக, “ஒரு பிராமணன் கண்ட பரப்பிரம்மம்” என்ற பிரச்சாரப் பிரசுரம் (ஏப்ரல் 1983) இவரது அறிமுகத்துடன் வெளியிடப்படுகின்றது. தெய்நாயகமும் தீவிரமாக செயல்பட்டார். 1984ல் சென்னை பல்கலைக்கழகத்தில் “கிறிஸ்தவ படிப்பிற்காக” ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆரவாரமாக, தெரஸா அம்மையாரை வைத்தே திறந்து வைக்கப்பட்டது[10]. இதற்கும் அருளப்பா தான் நிதியுதவி அளித்தார். பிப்ரவரி 5, 1986ல் போப் ஜான் பால் II சென்னைக்கு விஜயம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அருளப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

18-10-2015

[1]  பிறகு நீதிமன்றத்தில் அருளப்பாவே வந்து, ஜான் கணேஷுக்கு எதிராக சாட்சி சொன்னது தான் “கிளைமாக்ஸ்” என்பதா, துரோகம் என்பதா என்பதை கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்.

[2] “What wrong have I done?” Ganesh Iyer speaks out fr the first time in an interview with K. P. Sunil, Illustrated Weekly of India, April 26, 1987, pp.34-35.

[3] In Tamil Nadu, two laymen, John Thomas and Anthony Royappa, obtained leave from the Madras High Court to file a suit against the most Rev. Dr R. Arulappa, Archbishop of Madras-Mylapore diocese, for “squandering” church funds. Dr Arulappa had “misused” over Rs 14 lakh by paying Ganesha Iyer alias Acharya Paul for conducting research about the origin of Christianity in India. The research was meant to prove that Tiruvalluvar, the Tamil saint-poet, was a Christian and that the Kapaleeswarar temple in Mylapore and the Arunachaleswarar temple in Tiruvannmalai were ancient Christian places of worship. Thomas and Royappa said the Archbishop was the sole trustee of vast church properties and funds and since he was “frittering away” trust funds, they were constrained to file the suit. The High Court ruled that there was an imperative need for suitable legislation for proper management of church properties.

Southern Buareau, Catholic church: Language of the masses- Christmas services in many Catholic Churches in Karnataka held under police protection, January 31, 1981;  January 21, 2014,  UPDATED 17:56 IST.

[4] http://indiatoday.intoday.in/story/christmas-services-in-many-catholic-churches-in-karnataka-held-under-police-protection/1/401460.html

[5]  இவையெல்லாம் கஷ்டப்பட்டு கிடைத்த தகவல்கள் ஆகும். இன்று ஆளைக்கூட தெரிந்து கொள்ளாமல், நேரில் பார்க்காமல், எல்லாம் தெரிந்தது போல புத்தகக்களை எழுதி கொண்டிருக்கிறார்கள். பணம் இருந்தால், எப்படி போலி ஆராய்ச்சி நடத்தப்படுகிறதோ, அதே போல, பணம் இருந்தால், அடுத்தவர்களது ஆராய்சிகளைத் திருடி, அவற்றை குறிப்பிடாமலேயே, தானே எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டது போல எழுதி வருகிறார்கள்.

[6]http://www.catholicbook.com/catholicbook/fidelis_et_verus_issue_81.htm

[7]http://www.henrymakow.com/was_pope_paul_vi_replaced_by_a.html

[8] உண்மையில் அப்புத்தகத்தில் தேதி எதுவும் கொடுக்கப்படவில்லை. தொகுத்தவர் இரா. அருளப்பா சென்னை-மயிலை பேராயர் மற்றும் பின்னட்டையில் “Printed at The Good Pastor Press, Madras – 600 001” என்றுள்ளது. விசாரித்ததில், அது 1980ல் அச்சிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

[9] இப்பேரவை (உலகக் கிறிஸ்தவ தமிழ் பேரவை) தொடங்கப் பெற்ற ஆறுமாத காலத்திற்குள் தனது முதற் சாதனையாக, முதல் உலகக் கிறித்தவத் தமிழ் மாநாட்டினை 1981 டிசம்பர் 28,29,30 ஆகிய நாட்களில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சீரோடும் சிறப்போடும் நடத்திக் காட்டியது. மேனாள் திருச்சி-தஞ்சைத் திருமண்டிலப் பேராயர் டாக்டர். சாலமன் துரைசாமி அவர்களின் சீரிய தலைமையில், பேராசிரியர் பொன்னு. ஆ. சத்தியசாட்சி, பேராசிரியர் ப.ச. ஏசுதாசன், முதல்வர் பேராசிரியர் தே.சுவாமிராஜ் முதலியோரின் ஆற்றல்மிகு செயல்திறனால் நிகழ்ந்தேறிய இம்மாநாட்டில் ஆழமான ஆய்வுரைகள் வழங்கப்பட்ட கருத்தரங்குகள், சுவைமிக்க கவியரங்கம், விறுவிறுப்பான பட்டிமண்டபம், இனிய இசைப் மொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள், முதுபெரும் கிறிஸ்தவத் தமிழ் அறிஞர்களுக்குப் பட்டமளிப்பு முதலிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வுகளில் பல்வேறு திருச்சபைகளின் பேராயர்கள் உள்ளிட்ட கிறித்தவத் தலைவர்களும் முன்னணிக் கிறித்தவத் தமிழ் அறிஞர்களும், கிறித்தவக் கவிஞர்களும், கலைஞர்களும் பங்கேற்றதோடு, மேனாள் நீதியரசர் மு.மு. இஸ்மாயில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,தவத்திரு. குன்றக்குடி அடிகளார், சென்னை மாநகர மேனாள் செரிபு டாக்டர் பி.எம்.ரெக்ஸ் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். http://wcta2010.blogspot.in/2010/09/blog-post.html

[10] The Department of Christian Studies was started in 1984 as an Endowment Chair in Christianity during the post-centenary Silver Jubilee Celebrations of the University of Madras.  It was inaugurated by Mother Teresa of Calcutta.  http://www.unom.ac.in/index.php?route=department/department/about&deptid=19-- Edited by Admin on Saturday 16th of June 2018 11:13:42 PM

__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
RE: ஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது
Permalink  
 


 தாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்!

தாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர்மரியதாஸின் பங்குஜான் கணேஷை அருளப்பாவுக்குஅறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்!

Srivillupputtur nexus with thomas fraud 1975

Srivillupputtur nexus with thomas fraud 1975

ஜான் கணேஷின் அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[1]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார்.

John Ganesh, Deivanayagam, Gnanasigamani, Mariadass, Arulappa

John Ganesh, Deivanayagam, Gnanasigamani, Mariadass, Arulappa

ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸ் ஜான் கணேஷை சந்தித்தது[2]: அந்த ஒருவர் தான் ஜே. மரிய தாஸ் ஆவர். 1971-1976 காலத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் மடாலத்தில் ஜே. மரியா தாஸ் என்ற பாதிரி இருந்துள்ளார். “உள்கலாச்சாரமயமாக்கல்” மற்றும் கிறிஸ்தத் தொன்மையினை நிலைநாட்டுவதற்கு ஆதாரங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இவருக்கும் ஏதோ தொடர்பு இருந்தது தெரிகிறது. திருச்சியில் மைக்கேல் என்ற பாதிரி “தமிழ் இலக்கியக் கழகம்” என்ரு ஒன்றை வைத்துக் கொண்டு அத்தகைய ஆராய்ச்சியை செய்து வந்தார். இவர் தாம், ஜான் கணேஷை மரிய தாஸுக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு தெரிந்தவராகவும் இருந்தார். இந்நிலையில் தான், ஜான் கணேஷின் திறமையைக் கண்டு, அவர் தமது வேலைக்கு உதவக்கூடும் என்று தீர்மானித்துள்ளார். இதனால், ஜான் கணேஷுடன் பேசிப்பார்த்ததில், அவர் ஒரு விசுசாசியாகவும், பைபிள் ஞானத்தில் தலைசிறந்தும் விளங்குவதை கண்டு கொண்டார். அவரைப் பற்றி ஆர்ச் பிஷப் அருளப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.

Thomas myth manufacturers சந்திப்பு

Thomas myth manufacturers சந்திப்பு

ஆர்ச் பிஷப் அருளப்பா தாமச் கட்டுக்கதையை உருவாக்கிஆதாரங்களை தயாரிக்க முற்படுதல்: விவரம் அறிந்த அருளப்பா அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார். 1973-74 காலத்தில், மரியா தாஸ் என்ற கத்தோலிக்க பாதிரி, கணேஷ் ஐயரை ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1975ல் ஏற்பாடு செய்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மைலாப்பூரில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. கணேஷ் ஐயரிடம் பணம் இல்லை என்பதனை அறிந்து கொண்டு, அவ்வப்போது பணம் கொடுத்து, அருளப்பா அவரை தன்பால் இழுக்க முயற்சி செய்தார். தான் எழுதிய “பேரின்ப விளக்கு” என்ற புத்தகத்தில், செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார், திருவள்ளுவருக்கு பைபிளை சொல்லிக் கொடுத்தார், அதனால் தான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார், திருவள்ளுவரே ஒரு கிறுத்துவர் என்றெல்லாம் ஒரு கருதுகோளை உருவாக்கி வைத்துள்ளார் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூற ஆரம்பித்தார். பிறகு, “அதற்கான ஆதாரங்களைஉருவாக்க வேண்டும்அப்படி செய்தால் நாம் இருவரும்அனைத்துலக ரீதியில் பெரும் புகழைப் பெறலாம்அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்”, என்ற கோரிக்கோளை வைத்தார். ஜான் கணேஷுக்கு முதலில் தான் ஒரு கிருக்கரிடம் வந்து மாட்டிக் கொண்டோமா என்று கூட யோசித்தார்.

ஓலைச்சுவடிகள்தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றைத் தயாரிக்க அருளப்பாவின் திட்டம்: கணேஷ் ஐயருக்கு இதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை நன்றாகவே தெரியும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் தாமஸ் இந்தியாவுக்கு வந்த 1950வது தினம் என்று கொண்டாடினார்கள். அதில் அப்பொழுதைய பிரதமர் நேரு கலந்து கொண்டார். “உண்மையிலேயே தாமஸ் இந்தியாவுக்கு வந்தது மெய்யா?”, என்று அவர் கேட்ட போது, அருகில் இருந்த எந்த ஆர்ச் பிஷப்போ, பாதிரியோ வாயைத்திறக்கவில்லை. புன்னகைத்து, நேருவின் கவனத்தைத் திருப்ப முயன்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. இவ்விசயங்களை அருளப்பாவிடம் சொன்னபோது, அருளப்பா சொன்னார், “அவ்வாறு ஆதாரங்கள் இல்லையென்றால், ஆதாரங்களை நாம் உண்டாக்க வேண்டும். ஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் போன்றவற்றை தயாரிக்க வேண்டும்”. கணேஷ் ஐயர், “அத்தகைய வேலையை நான் விரும்பவில்லை, ஆனால், அப்பொழுது எனக்கு பணம் தேவையாக இருந்தது, அதனால், அத்தகைய கள்ள ஆவணங்களைத் தயாரிக்கும் வேலைக்கு ஒப்புக்கொண்டேன்”, என்கிறார். அவ்வாறே கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. “சாந்தி ஆஸ்ரமம்” என்றும் அவருடைய மேற்பார்வையில் கட்டப்பட்டது.

 திருவள்ளுவர் கிருத்துவரா - கருணாநிதி

1960களில் நடத்தப் பட்ட மோசடிகள்போலி ஆராய்ச்சிகள்முதலியன: 1963ல் பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி, ஆர். அருளப்பா முதலியோர் கூடி எப்படி பிரச்சாரத்திற்காக துண்டு-பிரசுரங்கள், சிறு புத்தகங்கள் எழுதி வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு தமது முடிவுகளுக்கு ஏற்றவாறு ஆதாரங்களை உருவாக்குதல்-தயாரித்தல் மற்றும் அதற்கேற்ற முறையில் புத்தகங்களை வெளியிடுவது பற்றி பேசி, ஒரு திட்டமும் தயாரித்துள்ளது, ஜான் கணேஷுக்குத் தெரியவந்தது. இரட்சண்ய யாத்திரிக நிலையம், 7, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 23 என்ற இடத்தில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு செயல்பட்டனர். எம். தெய்வநாயகம் அதற்கேற்றவாறு அருளப்பாவின் ஆதரவுடன் சிறு-சிறு புத்தகங்களை அருகிலேயே மெய்ப்பொருள் அச்சகம்[3] என்று வைத்துக் கொண்டு, வெளியிட ஆரம்பித்தார். “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார்.  இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” வெளியிடப்பட்டபோது, கருணாநிதி அதற்கு “மதிப்புரை” வழங்கி பாராட்டியுள்ளார். சரித்திர ஆதாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை. இன்னொரு பக்கம் சித்தர் பாடல்களில் இடைசெருகல் செய்வது, புதியதாக பாடல்களை எழுதி வெளியிடுவது போன்ற மோசடிகளும் ஆரம்பித்தன. 1969ல் டேவிட் சாலமோன் என்பவர் 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற சிறுநூலை வீ. ஜானசிகாமணிக்குக் கொடுத்தாராம்[4]. அதை வைத்துக் கொண்டும் மோசடி ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.

வீ. ஞானசிகாமணி - அகத்தியர் ஞானம்

வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம்

1970களில் நடத்தப் பட்ட மோசடிகள்போலி ஆராய்ச்சிகள்முதலியன: அத்திட்டத்தின் கீழ் கண்ட குறும்புத்தகங்கள் வெளிவந்தன:

ஆண்டுகுறும்புத்தகத் தலைப்புஆசிரியர்முன்னுரை / முகவுரை வழங்கியோர்அணிந்துரை / பாராட்டுரை
1970ஐந்தவித்தான் யார்?எம். தெய்வநாகம்கா. அப்பாதுரைபொன்னு ஆ. சத்தியசாட்சி
1971வான் எது?எம். தெய்வநாகம்  
1971நீத்தார் யார்?எம். தெய்வநாகம்  
1972சான்றோர் யார்?எம். தெய்வநாகம்  
1972எழுபிறப்புஎம். தெய்வநாகம்  
1973அருட்செல்வம் யாது?எம். தெய்வநாகம்  
1973மூவர் யார்?எம். தெய்வநாகம்  
1974மனித இன ஒருமைப்பாடுஆர். அருளப்பா  
1974சான்றாமைஆர். அருளப்பா  
1974Tirukkural A Christian Book?ஆர். அருளப்பாஆர். அருளப்பாவி. டி. தேவசகாயம்
1975பேரின்ப விளக்கம்ஆர். அருளப்பா மற்றும் எம். தெய்வநாகம்  
1976God The Bridegroomஆர். அருளப்பா  
1976God in Thirukkuralஆர். அருளப்பாச. வே. சுப்ரமணியன்வீ. ஞானசிகாமணி

இவ்வாறு முன்னரே தீர்மானம் செய்து போலி ஆராய்ச்சி நடத்தி, ஒருவருக்கு ஒருவர் பாராட்டுத் தெரிவித்து, தொடர்ந்து செயல்பட்டதை சுலபமாக யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

16-10-2015

[1] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.

[2] https://vaticanculturation.wordpress.com/tag/relic-manufacturing/

[3] மெய்ப்பொருள் அச்சகம், 5, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 600 023.

[4]  வீ. ஞானசிகாமணி கூறுகிறார், “என் நினைவு சரியாக இருக்குமானால் அகத்தியர் ஞானம் என்னும் சிறு நூல், 16 பக்கங்களுடையதாய் 1969-ல் எனக்குக் கொடுக்கப்பட்டது. டாக்டர் டேவிட் சாலமோன் எம்.பி.பி.எஸ்., இதனை என்னிடம் கொடுத்தார்”. முன்னுரை, அகத்தியர் ஞானம் [விளக்கவுரை], “ஞானோதயம்”, 66/7, அசோசியேசன் சாலை, சென்னை – 600 050.__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

 கடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்

கடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்

 

கடற்கறையில் கபாலீசுவரக் கோவில் இருந்ததை சரித்திரப் புத்தகங்களில் எழுதாமல் இருந்தது தான், தமிழர்கள் செய்த தவறு. சென்னையின் 300 வருட சரித்திரம் என்று சொல்வதும், கொண்டாடுவதும், ஆயிரம்-இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் திருவொற்றியூர், திருவான்மியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, என பற்பலகோவில்கள் உள்ளதை மறந்து, மறைத்து செய்யும் பாதக வேலையாகும். சரித்திரத்தன்மை சிறிதும் இல்லாமல், படிப்பறிவு இருந்தும், கூச்சமில்லாமல் அபந்தங்களை சமைக்கும் படித்த விபச்சாரிகளாக சிலர் செய்வது, மற்றவர்களை இருளில் தள்ளும் தொரோகச் செயலுக்கு வழிவகுக்கிறது. அதனால்தான், கிருத்துவர்கள் சிறிதும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமில்லாமல் பொய்களை வைத்துக் கொண்டே, வாய்சவடால் மூலம், கதையளந்து, தமது பணபலத்தால் கட்டுக்கதைகளைப் பரப்பி விட்டுள்ளனர்.

 

இந்தியநாட்டு நூல்களை விட்டுவிட்டு, அயல்நாட்டுக் குறிப்புகளின் மீது ஆதாரமாக எழுதப்படும் நிலை: சரித்திரம் என்றாலே, அயல்நாட்டுக்காரர்கள் குறிப்புகளைக் கொண்டுதான் எழுதப்படவேண்டும் என்ற காரணமில்லாத, தேவையில்லாத மற்றும் போலித்தனமான மேதாவித்தன மனப்பாங்கு எழுத்தாளர்களிடம் குடிகொண்துள்ளதால், முதலில் கிரேக்கர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள், அரேபியர் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று ஆரம்பித்து, பிறகு நமது நாட்டு வேத, இதிகாச, புராணங்கள் என்ன சொல்லியிருக்கின்றன என்று தலைகீழ் சரித்திரம் எழுதும் முறையில் நமதாட்கள் எழுதிவருகின்றனர். ஒருவேளை அவர்கள் குறிப்பிடாவிட்டால், இந்தியர்கள் சரித்திரமே இல்லை என்று முடிவு செய்து விடுவார்கள் போலும். எனவே முதலில் நமது நாட்டு நூல்கள் என்ன சொல்கின்றன என்று குறிப்பிட்டுவிட்டு, பிறகு அயல்நாட்டு நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கவேண்டும்.

 

ஸ்தலப்புராணங்களை மதிக்க மறந்த இந்தியர்கள்: ஸ்தலபுராணங்கள், பிரபந்தங்கள் போன்ற நூல்கள் இருக்கும்போது, அவைச் சொல்லியிருக்கும் செய்திகளையும் படித்துப் பார்க்க வேண்டும். இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அதாவது 1922ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் அதாவது 1894ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது. இஃது மொத்தம் 806 செய்யுட்களைக் கொண்டுள்ளது. இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன. ஆக நூற்றாண்டுகள் மேலாக, அச்சிலுள்ள புத்தகங்களிலேயே இக்கோவில் சரித்திரத்தைக் கண்டறியலாம். ஆனால், இந்த காலம் தான் அந்நூலின் காலமல்ல, ஏனெனில், அவற்றின் ஓலைச்சுவடிகள் அதற்கும் நூறு-இருநூறு-முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக் கூடும். ஆகவே, அதை வைத்துக் கொண்டுதான் காலத்தை குறிப்பிடமுடியும்.

கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரம் கோவிலை 1523ல் போர்ச்சுகீசியர் இடித்து விட்டனர். பிறகு, ஒரு சர்ச்சைக் கட்டினர். அந்த சர்ச் இடிக்கப்பட்டு பெரிதாகக்கட்டப்பட்டது. அதுவும் சமீபத்தில் மாற்றியமைத்துக் கட்டப்பட்டது. உண்மையில் கிருத்துவர்கள் அவர்கள் செய்த காரியங்களுக்கு வெட்கப்பட வேண்டும். மேலும், கிருத்துவர்கள் எனும் போது, அவர்களும் இந்துக்கள் தாம். 50-100-200 வருடங்களில் தான் மதம் மாறி கிருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். அதனால், அவர்கள் தங்களது மூலங்களை, வேர்களை, பாரம்பரியங்களை மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மாறாக போலியான சரித்திரம் எழுதுவது, அதற்காக கள்ள ஆவணங்களை தயாரிப்பது, மோசடி ஆராய்ச்சி செய்வது போன்றவற்றால், உண்மையான சரித்திரத்தை மறைத்து விட முடியாது.

© வேதபிரகாஷ்

06-04-2012__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

தாமஸ் கட்டுக்கதை உருவாக்கத்தில் மகாபலிபுரமும், ஶ்ரீரங்கமும்: முன்னதில் இறையன்பு என்றால், பின்னதில் அருளப்பா!

 

தாமஸ் கட்டுக்கதை உருவாக்கத்தில் மகாபலிபுரமும்ஶ்ரீரங்கமும்முன்னதில் இறையன்பு என்றால்பின்னதில்அருளப்பா!

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் 1987

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் 1987

அருளப்பாவால் தூண்டப்பட்ட ஆச்சார்யா பால்[1]: 1980களில் கணேஷ் ஐயர் என்பவரைத் தேடிக் கொண்டு ஶ்ரீரங்கத்திற்கு சென்றிருந்தேன். ஏனெனில், அவரைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.  ஆர்ச் பிஷப் அருளப்பாவிடமிருந்து ரூ.14 லட்சங்கள் பெற்று மோசடி செய்து விட்டதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.  சரி அப்பணத்தை ஏன் அருளப்பா கொடுக்க வேண்டும் என்றால் பொய்யான ஆவணங்கள், கள்ள அத்தாட்சிகள், போலி ஓலைச்சுவடிகள், மாய்மால தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றை உருவாக்கக் கொடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது[2]. அப்படியென்றால், கணேஷ் ஐயர் செய்த குற்றங்களுக்கு, அவற்றைச் செய்யத் தூண்டிய அருளப்பாவும் பொறுப்பாவனர் என்பதுதானே, நிதர்சனம்[3]. பிறகு, ஒருதலைப் பட்சமாக கணேஷ் ஐயர் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் அருளப்பா அத்தகைய மோசடிக்கு வித்திட்டிருந்தால், சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள், ஆவண-விற்பன்னர்கள், கல்வெட்டு-ஓலைச்சுவடி அறிஞர்கள் அதனைக் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அமைதியாகத்தான் இருந்து, தங்களது வேலைகளை விசுவாசமாக செய்து கொண்டிருந்தனர்[4].

R Arulappa biodata

R Arulappa biodata

ஶ்ரீரங்கத்தில் கணேஷ் ஐயர் காணப்படவில்லை: ஶ்ரீரங்கத்தில் வந்து இறங்கியதும், கணேஷ் ஐயரைப் பற்றி விசாரித்த போது, யாருக்கும் தெரியவில்லை. இந்தியன் வங்கி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்று நாளிதழ்களில் படித்ததால், அங்கு சென்றேன். அங்கும் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றுதான் கூறினர். “நீங்கள் யார், இதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்” என்றும் ஒருவர் கேட்டார். ஒருவர் மட்டும், “இது சட்டப்பிரச்சினை என்பதினால், சென்னையில் உள்ள “லீகல் செல்லுக்குச்” சென்று கேளுங்கள்”, என்று சொன்னார். பிறகு, ஒரு வழியாக, அவரது வீடு எங்கிருக்கிறது என்று கேட்டு விசாரித்து வந்தபோது, ரங்கநாதப்ரம் என்ற இடத்தில் ஒரு பழைய வீடு இருந்தது. அன்றைக்கு பூட்டப்பட்டிருந்ததால், யாரையும் பார்க்கவோ, சந்திக்கவோ முடியவில்லை. அப்பொழுது என்னிடத்தில் கேமரா இல்லாததால், போட்டோவும் எடுக்கமுடியவில்லை. இப்பொழுது 2015ல் அங்கு சென்றபோது, அவ்வீடு இடிக்கப்பட்டு, ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. “கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்” என்ற கல்வெட்டை ஞாபகார்த்தமாக புதிய வீட்டின் மதிற்சுவர்-கேட்டின் தூண் மீது பதித்துள்ளார்கள் போலும்.

ஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015

ஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015

கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர்இல்லம்: 35 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் இப்பொழுது ஶ்ரீரங்கம் சென்றபோது, கணேஷ் ஐயர் வாழ்ந்த வீட்டைப் பார்க்கலாம் என்று நண்பருடன் சென்றேன். அந்த வீடு மாறிவிட்டது. அதாவது, இடிக்கப்பட்டு “பிளாட்” / அடுக்குவீடு கட்டப்பட்டிருந்தது. கேட் அருகில் சென்று பார்த்தபோது, மதிற்சுவற்றின் தூண்களில் இரண்டு பக்கங்களிலும் பழைய கல்வெட்டுகள் அப்படியே இருந்ததை காண முடிந்தது. “கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்” என்றதைப் பார்த்தவுடன் திகைப்புடன் நின்றேன்.

கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம் - கல்வெட்டு

கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம் – கல்வெட்டு

அரியக்குடி ராமானுஜ ஐய்யங்காருக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்த மலையப்ப ஐயரின் கதி இவ்வாறானது போலும். சரித்திர ஆதாரங்களைப் பற்றி வாய்கிழிய பேசும், கத்தும் சரித்திராசிரியர்கள், அறிவுஜீவிகளளிவற்றைப் பற்றி கண்டுகொள்ளாதது ஆச்சரியம் தான். ஒரு பக்கம், தாமஸ் கட்டுக் கதையினை விடாமல், அதற்கான போலி ஆவணங்களை தயாரிப்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமது எழுத்துகளில் வலிய அத்தகைய பொய்களை சரித்திரம் போல சேர்த்துக் கொண்டு எழுதுவது, சினிமா எடுப்பேன் என்பது, சிலையை வைப்பது என்றேல்லாம் செய்து கொண்டிருக்கும் போது, உண்மையில் அத்தகைய மோசடிகள் வெளிவர காரணமாக இருந்த கணேஷ் ஐயரின் வீடு மறைந்து விட்டது. நாளைக்கு, மேற்குறிப்பிட்ட அனைத்தும் மறைக்கப்படும், மறக்கப்படும், பிறகு மறுக்கப்படும். இந்தியாவில் சரித்திரம் அவ்வாறுதான் பொய்மையுடன் தயாரிக்கப் பட்டு எழுதி வைக்கப்படுகிறது.

ஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015- இன்னொரு தோற்றம்

ஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015- இன்னொரு தோற்றம்

மலையப்ப ஐயரின் ஏழ்மையும்கணேஷ் ஐயரின் கல்விதேடலும்: கானாடுகாத்தான் சிவகங்கையில் உள்ள ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகும். பழைய ராமநாதபுரம் மாவட்டம் / சமஸ்தானத்தில் இருந்தது, பிறகு புதுக்கோட்டை சமஸ்தானில் வந்தது. இப்பொழுது புதுக்கோட்டைக்கு கீழே, காரைக்குடிக்கு மேலேயுள்ளது. கிழக்கில் அறந்தாங்கியும், மேற்கில் திருப்பத்தூரும் உள்ளன. சங்கீத வித்துவான்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாக இருந்தது.

கானாடு காத்தான் இருப்பிடம் - கூகுள் மேப்

கானாடு காத்தான் இருப்பிடம் – கூகுள் மேப்

அங்குதான் மலையப்ப ஐயர் வாழ்ந்து வந்தார். இவரிடம் அரியக்குடி ராமானுஜ ஐய்யங்கார் இசை பயிற்சி பெற்றார். ஆனால், குடும்பம் ஏழ்மையில் தான் இருந்தது. இதனால், தன் குடும்பத்துடன் சில ஆண்டுகள் இலங்கைக்குச் சென்றும் வாழ்ந்தார். பிறகு மறுபடியும் இந்தியாவுக்கு வந்து, ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்ததாக தெரிகிறது. இவர் இறந்த பிறகும், இவரது பெயரில் உள்ள “பிக்ஸட் டெபாசிட்டுகள்” மூலம் வரும் வட்டி பெறப்படாமல் உள்ளது என்பதும் தெரிகிறது[5]. அதில் ரங்கநாதபுரம் விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 1920-30களில் இவரால் தனது குழந்தைகளைப் படிக்கவைக்க முடியவில்லை. இவரது மகன் தான் ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர், ஏழாவது வரையில் தான் படிக்க முடிந்தது. இலங்கையில் இவர் ஏ. எச். வில்லியம்ஸ் என்ற பேராசிரியரை சந்திக்க நேர்ந்தது. அவர் தாம் இவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். கணேஷ் ஐயரின் ஈடுபாடு, சீக்கிரம் புரிந்து கொள்ளும் தன்மை முதலியவற்றைக் கண்டு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் போதே, கிருத்துவம் பற்றியும் நைசாக சொல்லிக் கொடுத்தார். இதனால், கிருத்துவ மதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.  ஆங்கிலத்திலும் அபார தேர்ச்சி பெற்றார். மறுபடியும் கானாகாத்தான் கிராமத்திற்குத் திரும்பச் சென்றவுடன், ஆங்கிலத்தில் டியூசன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

கணேஷ் ஐயர் ஜான் கணேஷ் ஆனதுஇறையியல் வல்லுனர்ஆனது (1965-75)[6]: எவ்வளவு கஷ்டப்பட்டும் வருமானம் போதவில்லை. இதனால், கிருத்துவமதப் புத்தகங்களைப் படித்து, பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். இதனால், கொஞ்சம் வருமானம் வர ஆரம்பித்தது. மதம் மாறி தனது பெயரை ஜான் கணேஷ் என்று மாற்றிக் கொண்டார். அவரது அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[7]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார். இதனால், 1973-74 வாக்கில் அவர் இவரை ஆர். அருளப்பாவிடம் கூட்டிச் சென்றனர்.

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்

1975ல் பால் கணேஷ் அருளப்பாவைச் சந்தித்தது[8]: இன்னோரு விவரத்தின் படி, திருச்சியில் 1975ல் மைக்கேல் என்ற பாதிரியை பால் கணேஷ் சந்தித்ததாகவும், அவர் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மரியா தாஸ் என்பவருக்கு அறிமுகம் மே 1975ல் செய்து வைத்ததாக உள்ளது[9]. ஜான் கணேஷ் இறையியல் பேராசிரியர் மற்றும் பிரம்மச்சாரி, அலஹாபாதில் உள்ள “கர்மா மற்றும் கலாச்சார சங்கம்” என்ற அமைப்பில் இருந்தவர், பெரிய வித்துவான் என்றெல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. கிருத்துவப் பாதிரிகளின் வேண்டுக்கோளுக்கு இணங்க, தமிழகத்தில் உள்ள கோவில்களின் சரித்திரத்தைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக, மதுரை மீனாக்ஷி கோவில் முன்பு கிருத்துவர்களுக்கு சொந்தமாக இருந்தது என்றெல்லாம் கூறியதாக சொல்லப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் வலங்கைமான் என்ற இடத்தில் கிடைக்கும் என்றும் சொன்னதாக கிருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த மரியா தாஸ் தான், பால் கணேஷை அருளப்பாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்[10].

© வேதபிரகாஷ்

14-10-2015

[1] K. P. Sunil, Hoax! – Special Report, Illustrated Weekly of India, April 26, 1987, pp.32-35.

[2] The so-called copper plates: Cladius Buchanan recorded as follows: “But there are other ancient documents in Malabar, not less interesting than the Syrian Manuscripts. The old Portuguese historians relate, that soon after the arrival of their countrymen in India, about 300 years ago, the Syrian Bishop of Angamalee (the place where I now am) deposited in the Fort of Cochin, for safe custody, certain tablets of brass, on which were engraved rights of nobility, and other privileges granted by a Prince of a former age ; and that while these Tablets were under the charge of the Portuguese, they had been unaccountably lost, and were never after heard of. Adrian Moens, a Governor of Cochin, in I770j who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates ; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. The Learned in general, and the Antiquarian in particular, will be glad to hear jthat these ancient Tablets have been recovered within this last month by the exertions of Lieutenant- (Colonel Macauley, the British Resident in Travan-core, and are now officially deposited with that Officer. ‘ The Christian Tablets are six in number. They are composed of a mixed metal. The engraving on the largest plate is thirteen inches long, by about four broad. They are closely written, four of them on both sides of the plate, making in all eleven pages. On the plate reputed to be the oldest, there is writing perspicuously engraved in nail-headed or triangular- headed letters, resembling the Persepolitan or Babylonish. On the same plate there is writing in another character, which is supposed to have no affinity with any existing character in Hindoo* tan. The grant on this plate appears to be witnessed by four Jews of rank, whose names are distinctly engraved in an old Hebrew character, resembling the alphabet called the Palmyrene: and to each name is prefixed the title of ‘ Alagen,’ or Chief, as the Jews translated it. — It may be doubted, whether there exist in the world many documents of so great length, which are of equal antiquity, and in such faultless preservation, as the Christian Tablets of Malabar. — The Jews of Cochin indeed contest the palm of antiquity: for they also produce two Tablets, containing privileges granted at a remote period; of which they presented to me a Hebrew translation. As no person can be found in this country who is able to translate the Christian Tablets, I have directed an engraver at Cochin to execute a copper-plate facsimile of the whole, for the purpose of transmitting copies to the learned Societies in Asia and Europe. The Christian and Jewish plates together make fourteen pages. A copy was sent in the first instance to the Pundits of the Shanscrit College at Trichiar, by direction of the Rajah of Cochin ; but they could not read the character.* — From this place I proceed to Cande-nad, to visit the Bishop once more before I return to Bengal.’ [Claudius Buchanan, Two Discourses preached before the University of Cambridge, on the commencement of Subday July 1, 1810 and a sermon before the Society of Missions to Africa and the East; at their tenth anniversary. June 12, 1810. To which added Christian Researches in Asia, T. Cadell and W. Davies, in the Strand; and J. Deighton, Cambridge, London, 1811, pp.121-122.

In footnote, he recorded, “Most of the Manuscripts which I collected among the Syrian Christians, I have presented to the University of Cambridge; and (they are now deposited in the Public Library of that University, together with the copper-plate fac-similes of the Christian and Jewish Tablets.” (Ibid. P.122). Thus, it is evident that there were no originals of the said copper plates and thus, the available / claimed copper plates have no historical value.

[3]  கிருத்துவர்களைப் பொறுத்தவரையில், இத்தகைய மோசடிகளை செய்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தாமஸ் கட்டுக்கதையை பரப்புவதில், வளர்ப்பதில் அவர்கள் வெட்கமே இல்லாமல் செய்து வருகின்றனர். கேரளாவிலும் இத்தகைய போலி தயாரிப்புகளில் ஈடுபட்டதது எடுத்துக் காட்டிய போது, கிருத்துவர்களுக்கு கோபம் தான் வந்தது.

http://www.nasrani.net/2007/02/16/the-plates-and-the-privileges/

[4] தமிழக வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய் வரலாற்றுப் பேரவை போன்ற அமைப்புகளில் திட்டமிட்டே இக்கட்டுக்கதை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது.

[5] 1987ல் இவருக்கு 67 வயது எனும் போது, மலையப்ப ஐயருக்கு 87-90 இருக்கலாம். பிறகு நேர்ந்த விசயங்களினால், அவரது குடும்பத்தினர், அதனைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

[6] “What wrong have I done?” Ganesh Iyer speaks out fr the first time in an interview with K. P. Sunil, Illustrated Weekly of India, April 26, 1987, pp.34-35.

[7] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.

[8]  The Hindu, Compromise suit filed by Madras-Mylapore Archbishop, March.29, 1985.

[9]  இந்தியன் எக்ஸ்பிரஸ், Ganesh Iyer gets 10 months’ RI, பிப்ரவரி.14, 1986.

[10] மைக்கேல், மரிய தாஸ் முதலியோர் யார், இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்பதனையும் ஆராயவேண்டும். அவர்களுக்கு கணேஷ் ஐயர் அல்லது ஜான் கணேஷ் பற்றி அதிகமாகவே தெரிந்திருக்கும்.__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 


pl1221062.jpg

போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை

“நான் ஏசுவினிடத்தில் சத்தியத்தைச் சொல்லுகிறேன். நான் பொய்யுரைக்கவில்லை. புனித ஆவி என் மனச்சாட்சிக்கு நிரூபணம்”
ரோமன்ஸ் 9:1, விவிலியம் ([0])

 

புனித தோமையார் (செயின்ட் தாமஸ்) அதிக பட்சம் இன்று பாகிஸ்தான் என்றழைக்கப் படும் மேற்கு இந்தியா வரைக்கும் போயிருக்கலாம். அதற்கு மேல் அவர் போனதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. வெகுகாலம் பின்னர் தென்னிந்தியா மற்றும் பல பகுதிகளில் கிறித்தவம் பரவியது, ஆனால் கண்டிப்பாக புனித தாமஸ் அங்கு போகவில்லை. வாடிகனில் தான் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றில், போப் பெனடிக்ட் XI இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் (பார்க்க [1], [2]).

இதைக் கேட்டு பல இந்திய திருச்சபைகள் துணுக்குற்றன. இந்த செய்திக்கு ரொம்ப விளம்பரம் தராமல் அமுக்கியும் விட்டன. இஸ்லாம் பற்றிய போப்பின் உரையை முந்திக் கொண்டு வெளியிட்ட இந்தியப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்திய வரலாறு தொடர்பான போப்பின் இந்த முக்கியமான கருத்தைப் பெரிதாக வெளியிடவே இல்லை! கேரள ஒய்.எம்.சி.ஏ. தலைவர் சன்னி பரியாரம் “போப் தெரியாமல் சொல்லிறார். மிளகு, ஏலக்காய், முந்திரி வாணிகக் கப்பல்கள் அந்தக் காலத்தில் மேற்கிலிருந்து கேரளாவிற்கு நிறைய வந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றில் ஏறி புனித தாமஸ் வந்தார்” என்று தன் ஆழமான சரித்திர அறிவை வெளிப்படுத்தியயுள்ளார். கேரள பாதிரியார்கள் சங்கத் தலைவர் மறைதிரு. ஸ்காரியா வர்கீஸ் போப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இருக்காதா பின்னே? “புனித தோமையார் கி.பி. 52 லேயே (வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடிப்பதற்கு 1400 ஆண்டுகள் முன்பு) கடல் மார்க்கமாக கேரளா வந்தார். அங்கிருந்த நம்பூதிரிகள் உட்பட பல பேரை மதம் மாற்றினார். பின்னர் அப்படியே பொடி நடையாக சென்னை மயிலாப்பூர் வந்து ஏசுவின் நற்செய்தியை வழங்கினார். சின்னமலையில் வாழ்ந்தார். பக்கத்தில் இருந்த பரங்கி மலையில் சில வெறியர்களால் கொல்லப்பட்டார்” இப்படியாக தோமையார் பற்றிய நவரசங்களும் நிறைந்த ஒரு கற்பனைக் கதையை இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் கிறிஸ்தவ மிஷநரிகள் காலம் காலமாகப் பரப்பி வந்துள்ளனர். வரலாற்று ஆதாரங்கள் படி, கிபி. 345-ல் தாமஸ் கானானியஸ் (Thomas Cananeus) என்ற வணிகர் தான் முதன்முதலில் கேரளத்தில் ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்தினார். பின்னர் 14-15 ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் படையெடுப்பின் வன்முறைகள், கொள்ளைகளுடன் தான் கிறித்தவம் தமிழகத்தில் பெருமளவில் அறிமுகமாயிற்று. ஆனால், அதற்கு ஒரு தொன்மை வாய்ந்த வரலாறு இருப்பது போலக் காண்பிப்பதற்காக மிக நேர்த்தியாகச் செய்யப் பட்ட புரட்டு இது. இந்தப் புளுகு மூட்டையைப் போட்டு உடைத்து விட்டார் போப்!

சொல்லப் போனால் ஆதாரபூர்வமான வரலாற்று ஆய்வுகள் புனித தாமஸ் இந்திய வருகையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. இது பற்றி ஈஷ்வர் சரண் மிகத் தெளிவான விளக்கங்களுடன் “The Myth of St. Thomas and the Mylapore Siva Temple” என்ற நூலை எழுதியிருக்கிறார் (பார்க்க http://www.hamsa.org). 24 பகுதிகளைக் கொண்ட இந்த நூலில் ஆர்ச்பிஷப் அருளப்பா, ஆச்சார்யா பால், டாக்டர் தெய்வநாயகம், எஸ்.ஏ.சைமன் இவர்களது புனித தோமையார் கதை பற்றிய ஒவ்வொரு பொய் வாதத்திற்கும் திட்டவட்டமான பதில் அளித்துள்ளார்.

இதன் உச்சமாக புனித தோமையரை திருவள்ளுவருடன் தொடர்பு படுத்தும் பெரிய ஊழல் 80களில் நடந்தது. தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குறள் “உலகப் பொதுமறை” என்று அறியப் பட்டதும் இதற்குத் தோதாகப் போயிற்று. அவர் சைவரா, வைணவரா, சமணரா என்ற உண்மையான, இலக்கியத் தனமான வாதங்களின் நடுவில் இப்படி ஒரு விஷயம் நுழைக்கப் பட்டது. “தோமையரு சாந்தோம்ல இருந்தாரு, வள்ளுவரு மயிலாப்பூர்ல. இரண்டு பேரும் கடற்கரையோரமா அப்படியே பேசிகிட்டே போவாங்க ! தோமயரு ஏசு பிரான் பத்தி வள்ளுவருக்கு சொன்னாரு, பைபிள்ள இருக்கறத அப்படியே வள்ளுவரு எழுதிப்புட்டாரு” என்று ஒரு கிறித்தவத் தமிழாசிரியர் காட்டுக் கத்தல் கத்திச் சொன்னது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது ! இதற்காகப் பல வரலாற்று ஆதாரங்களைத் திரிக்கவும், புரட்டவும் தமிழ் அறிஞர் என்று அறியப் பட்ட கணேச அய்யருக்கு ரூ. 14 லட்சம் லஞ்சம் மறைதிரு. அருளப்பா குழிவினரால் வழங்கப் பட்டதும் 1986ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண்:100087/82) அம்பலப் படுத்தப் பட்டது. தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமான திருக்குறளை கூசாமல் கிறிஸ்தவத்திலிருந்து காப்பியடித்தது என்று நிறுவ முயன்ற மிஷநரி கயமைத் தனம் இதில் வெளியாயிற்று. (பார்க்க: [3])

இன்று பரங்கி மலை என்று அழைக்கப் படும் இடம் 1910களில் கூட “பிருங்கி மலை” என்று அழைக்கப் பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. புனித தோமையார் தன் கையாலேயே உருவாக்கிய சிலுவை என்று காட்டப்படும் அழகிய சிலுவை உருவம் விஜயநகர காலத்திய தமிழர் சிற்பக்கலையுடன் வடிவமைக்கப் பட்டது என்று நிறுவப் பட்டு விட்டது (பார்க்க [4]). சாந்தோம் மாதா கோவில் சுற்றுப் புறத்தில் 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. திருஞான சம்பந்தரின் பூம்பாவைப் பதிகத்தில் 
‘மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’ 
என்ற குறிப்புப் படி கடற்கரையில் இன்றைய சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில்தான் அன்றைய கபாலி கோயில் இருந்தது,16’ம் நூற்றாண்டில் (1566 ல்) இது இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்களையும் ஈஷ்வர் சரண் தன் நூலில் தருகிறார்.

“புனித தோமையரை வெறியர்கள் ஈட்டியால் குத்திக் கொன்றனர்” என்பது இந்துக்களின் மீது வேண்டுமென்றே துவேஷத்தையும், வெறுப்பையும் உருவாக்குவதற்காகப் புனையப் பட்ட கதை என்று சென்னை ராமகிருஷ்ண மடத் துறவி சுவாமி தபஸ்யானந்தர் இது தொடர்பாக எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பார்க்க [5]). “The Legend of a Slain Saint to Stain Hinduism” என்ற அந்தக் கட்டுரையில் இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தோமையார் பயன்படுத்திய கைத்தடி, அவரைக் கொன்ற ஈட்டி இவையெல்லாம் செல்லரித்துப் போகாமல் இருப்பது எப்படி என்று? என்று எழுப்பிய சாதாரணக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. இந்தக் கொலையைப் பற்றி ஒவ்வொரு முறையும் சொல்லும்போதும், உணர்ச்சியையும், அனுதாபத்தையும் கிளப்பி இந்துக்களை சாத்தானின் தூதுவர்கள் என்று சித்தரிக்கிறார்கள். பரங்கி மலையில் புனித தாமஸை நாமம் போட்ட அந்தணர் ஈட்டியால் குத்திக் கொல்வதாக ஒரு சித்திரம் உள்ளதாம். சைவத்தையும், வைணவத்தையும் ஒரே அடியில் சாத்தானாக்க நல்ல யுக்தி இது! இதற்கு முந்தைய புராணத்தில் தோமையாரை டோபிக்கள் கொன்றுவிட்டதாகவும் எனவேதான் அவர்கள் கால் வீங்கிவிட்டதாகவும் இந்த கால்வீக்கத்துக்கு பெயரே தோமை வீக்கம் என்றும் கதை விட்டுக் கொண்டிருந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
வாடிகனிடம் இது பற்றி 1996ல் ஈஷ்வர் சரண் விசாரித்தபோது புனித தாமஸ் தொடர்பான எந்த வரலாற்று ஆவணமும் தங்களிடம் இல்லை என்று அவருக்கு வாடிகன் திருச்சபை அதிகாரபூர்வமான கடிதம் அனுப்பியது [6]. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா அவரது ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, தங்களது அடுத்த பதிப்புகளில் புனித தாமஸ் பற்றிய தகவல் வெளியாகும்போது இந்த விவரங்களும் சேர்க்கப் படும் என்று அறிவித்துள்ளது [7]. ஆனால், இந்தியாவில் புனித தோமையார் பற்றிய இந்த பொய்க்கதை பாடப் புத்தகங்களிலும், வெகுஜன ஊடகங்களிலும் ஆணியடித்தது போல பரப்பப் பட்டு விட்டது. சென்னை பற்றிய எல்லா “டூரிஸ்ட்” புத்தகங்களிலும் செயின்ட் தாமஸ் மவுன்ட், சின்னமலை இவை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள் என்ற பட்டியலில் இடம் பெற்று, இந்தக் கதை வரலாறாகவே சொல்லப் படுகிறது. போப் அறிக்கை வந்த நவம்பர் 22 க்கு அடுத்த வாரமே, ஜூனியர் விகடனில் (6/12/06 – பக்கம் 42) முடிந்த முடிபாய் இப்படி எழுதியிருக்கிறார்கள்:
“கிபி.52’ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை புரிந்த ஏசுவின் நேரடிச்சீடர் புனித தோமையார் இந்த மலையில் (St.Thomos Mount) வைத்துதான் கிபி.72’ம் ஆண்டு வெறியன் ஒருவனால் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்”
“வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி” என்று போப்பே இந்தக் கதை பொய் என்று சொல்லியும், இந்த வரலாற்றுத் தவறுக்கு மன்னிப்புக் கோரும் வாய்ப்பாக இதைக் கருதாமல் போப் சொன்னது தவறு என்று சொல்லும் போக்கு தான் இங்குள்ள மிஷநரிகளிடம் இருக்கிறது, இது துரதிர்ஷ்டவசமானது.

தோமையார் மரணத்தை மட்டுமல்ல, ஏசுவின் மரணம், ரத்தம் இவற்றைக் குறியீடுகளாக்கும் இறையியலிலேயே அதற்கு ஒரு கொலையாளியைக் காரணமாக்கும் துவேஷம் கலந்திருக்கிறது. இந்து ஆன்மிக நோக்கில் பார்த்தால் இது இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக சுவாமி ரங்க நாதானந்தா “நாங்கள் போற்றும் ஏசு” (பார்க்க [8]) என்னும் நூலில் கூறுகிறார் :

“தெய்வ அவதாரங்களில் ஒருவர் என்று இந்துக்கள் கண்டுணர்ந்து போற்றத் தகுந்த பல அம்சங்கள் ஏசு கிறிஸ்துவின் வாழ்விலும், உபதேசங்களிலும் உள்ளன. அவரது வாழ்வு இனிமையும், மென்மையும், துயரமும், சோகமும் இழைந்து ஆன்மீகத்தால் நிரம்பியது. ஆனால், இந்துக்களாகிய நமக்கு அவரது முடிவு என்பது ஒரு சோகம், அவ்வளவு தான். ஆன்மிகம் ததும்பும் அழகுணர்ச்சி எதுவும் அதில் இல்லை. நமது தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களது வாழ்க்கை முடிவுகளும் பெரும் சோகம் ததும்பியதாகவே இருந்தன. ஆனால் அந்த முடிவுகள் மீது நாம் சமயத்தைக் கட்டமைக்கவில்லை. இந்த மரணங்களை இயற்கை நியதியாக ஏற்றுக்கொண்டு அவர்களது வாழ்வின் அற்புதமான தருணங்களின் மீதே நம் சமயம் கட்டப் பட்டிருக்கிறது. ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைந்தல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்! ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.

போப்பே சொன்னபிறகு, இனிமேலும், கொலைக்கதை கலந்த இத்தகைய துவேஷப் பிரசாரம் தேவை தானா? இந்திய கிறிஸ்தவ போதகர்கள் தான் சொல்ல வேண்டும்.

http://jataayu.blogspot.com

சுட்டிகள்:
[0] ““I am telling the truth in Christ, I am not lying, my conscience testifies with me in the Holy Spirit” – Romans 9:1
[1] http://www.zeenews.com/znnew/articles.asp?rep=2&aid=337251&sid=REG
[2]http://www.cybernoon.com/DisplayArticle.asp?section=fromthepress&subsection=inbombay&xfile=November2006_inbombay_standard11461
[3] http://www.hamsa.org/arulappa.htm
[4] http://arvindneela.blogspot.com/2006/12/1_16.html
[5] http://www.hamsa.org/StThomas_Chapt_3.htm
[6] http://www.hamsa.org/vatican.htm
[7] http://www.hamsa.org/britannica.htm
[8] “The Christ We adore”, Swami Ranganathananda, Sri Ramakrishna Math__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

நம்முடைய இளைய தலைமுறைக்கு நாம் கொடுத்து செல்லும் மிகப் பெரிய பொக்கிசம் வரலாறு.

 

 

புனைக் கதை
இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள்.இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.
இந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.
அதை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களால் அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது
புனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சமசுகிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்.
எண்ணற்ற நூல்களை இப்படி பட்ட கருத்துகளை மையப்படுத்தி எழுதி தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். எல்லா கிறிஸ்துவ சபைகளிலும் இந்த வரலாறு தமிழனுடையதாக்கப் படுகிறது. திராவிடம் என்பது தமிழனால் ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டதால் திராவிடத்தையே கிறிஸ்துவமாக மாற்ற பார்க்கின்றார்கள். சம அளவு வரலாற்று உண்மைகளையும் அப்படியே இடைச் சொருகள்களாக புனைவுகளையும் எழுதும் திறனை தமிழனிடமிருந்துதான் கற்க வேண்டும்.
இந்த கருத்துகளில் உள்ள பொய்கள் –
தாமஸ் இந்தியா வந்தாரா என்பதே பெரிய கேள்விக் குறி. மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றில் கூட தாமஸ் இந்தியா வந்து ஒரு மன்ன்னை மதம் மாற்ற முயன்று அதில் தோற்று அந்த மன்ன்னால் கொல்லப்பட்டார் என்கிறது.
ஆனால் இவர்கள் தாமஸை கொலை செய்தது பிராமணர்கள் என்று படமிட்டு பரப்பி வருகின்றார்கள்.
ஔவையை ஏவாள் என்கிறார்கள். என்ன ஒரு கொடுமை இது.
தமிழ் ஆன்மீகத்தின் மிகச் சிறந்த கூறான சிவஞானபோத்த்தை கிறித்துவ நூலாக மாற்ற பார்க்கின்றார்கள். சிவஞான போதம் சைவத்தை சார்ந்த்து என்று வாதாடுபவர்களை. அன்பே சிவமென்பது கிறித்துவம் என்கிறார்கள். ஏற்கனவே திருக்குறளை தங்கள் நூலாக்க இவர்கள் செய்த பித்தலாட்டங்களை எல்லோருக்கும் சொல்ல கடமை படுகிறேன். 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார்.
நாத்திகர்களின் பங்கு –
பிராமணர்களை எதிர்க்கும் விதமாக இந்த தாமஸ் கதை சொல்லப்பட்டிருப்பதும், தமிழர்களின் அடையாளங்களை பிராமணர்கள் அழித்தார்கள் என்பதும், அந்த அடையாளங்கள் தாமஸின் கிறித்தவம் என்பதும் நாத்திகர்களின் ஆதரவிற்காக எழுதப்பட்டது. இங்கு இருக்கும் நாத்திகர்களின் முதல் குறிக்கோள் பிராமர்களை ஒழிப்பது. அதை நன்றாக உணர்ந்து கொண்டு கதை கட்டியிருக்கின்றார்கள்.
சரி இந்த கதைகளை தங்கள் பகுத்தறிவு மிக்க அறிவுஜீவிகள் என்று தாங்களே சொல்லிக் கொள்ளும் நாத்திகர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்றால். ஆம் ஏற்றுக் கொண்டு இதை பரப்பியும் வருகின்றார்கள். நாத்திக நடிகன் கமலே இதற்கு உதாரணம். மிக சமீபத்திய பேட்டியில், ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று சொல்லியிருக்கின்றார். 50 ஆண்டுகள் திரை துறையில் சாதனை செய்தவருக்கு ஒரு வேளை திருக்குறள் கிறித்துவ நூலாக இருக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சோழ பாண்டிய வரலாறுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழனுடைய வரலாற்றையும் அழித்து வரலாறில்லாத தமிழனுக்காக பாடுபடுபவர்களில் மேதாவி தமிழர்களும் இருப்பதை என்னவென்று சொல்லுவது.__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

Peruyir
19-01-2005, 04:40 PM
ஸ்ரீரங்கதில் கணேஷய்யர் என்பவர் தனது பெயரை பால் கணேஷ் அய்யர் என்று மாற்றிக் கொண்டு, சென்னையில் ஆர்ச் பிஷ்ப் அருளப்பா என்பவரைச் சந்தித்தார். ''திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதுமட்டுமல்ல, மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் ஒரு காலத்தில் சர்ச்சாக் இருந்தது. இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது'' என்றார்.
ஆர்ச் பிஷ்ப் அருளப்பா இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த்ர். பால் கணேஷ் அய்யர் இது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகக் கேட்ட பல லட்சம் ரூபாய் பணத்தையும் அவருக்குக் கொடுத்தார். பால கணேஷ் அய்யர் 
ஆராச்ச � என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றினார். அதற்கான செலவையும் ஆர்ச்பிஷப் அருளப்பா 
வே ஏற்றுக் கொண்டார்.
இறுதியில், தானே செப்புத் தகட்டில் எழுதி தனது வீட்டிலேயே மண்ணில் புதைத்து எடுக்கப்பட்ட தகடுகளை ஆதாரமாகக் காட்டினார். அதனால் பால் கணேஷ் அய்யர் மோசடி அம்பலமானது. இந்த சம்பவத்தில் இரண்டு வழக்குகள் நீதி மன்றத்திற்குச் சென்ற்ன.
ஆர்ச் பிஷப் அருளப்பா , பால் கணேஷ் அய்யர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்ததை அடுத்து 
பால் கணேஷ் அய்யர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
ஆர்ச் பிஷப் அருளப்பா மீது ஒரு மோசடி பேர் வழியை நம்பி சர்ச் பணத்தைக் கையாடல் செய்ததாக ஒரு வழக்கினை சர்ச் ஊழியர்கள் இருவர் தொடுத்தனர்.
இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது ஆர்ச் பிஷப் சார்பில் வாதாடிய வழக்கறிஞ்ர்''ஆர்ச் பிஷப்பை நீதி மன்றம் விசாரிக்க முடியாது. அவர் இந்த நாட்டின் குடிமகன் அல்ல. அவர் போப்பாண்டவர அரசாளும் வாடிகனின் குடிமகன். அவர்மீது வாடிகன் நீதி மன்றம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். இதற்கு இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது'' என்று வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி சத்தியதேவன் அதிர்ச்சி அடைந்த்தார். சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்த நீதிபதி, இந்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுமாறு மத்திய அரசை வ்லியுறுத்தி தீர்ப்பு வழங்கினார்.
ஆர்ச் பிஷப் மீது இந்திய அர்சாங்கம் அவ்ர் கொலை செய்தால்கூட நடவடிகை எடுக்க முடியாது என்ற உண்மை அன்றுதான் வெளியே வந்தது.
இப்போது சட்டம் எல்லோருக்கும் சமம் என்று கூறுபவர்கள், ஆர்ச் பிஷப் விஷயத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்? எந்த் நாட்டில் ஆர்ச் பிஷப்புக்கு ஒரு சட்டம், இந்து சன்னியாசிக்கு ஒரு சட்டம். இந்த்த லட்சணத்தில் சட்டம் எல்லொருக்கும் சமம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.''
_ஆர்.பி.வி. எஸ்.மணியன் (மாநில துணைத் தலைவர் வி.ஹெச்.பி)
_'விஜய பாரதம்' 10.12.04 இதழ் 
ஒம் சக்தி ஜனவரி 2005
_________________________________
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4557.html


__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

திருவள்ளுவரும், திருச்சபை வள்ளுவரும்!

திருவள்ளுவரும், திருச்சபை வள்ளுவரும்!

 

இக்கட்டுரையின் நோக்கம் யாரையும் சிறுமைப்படுத்துவதோ, யாருடைய மத அல்லது இறை நம்பிக்கைகளைப் புண்படுத்துவதோ அல்ல. இது பலதரப்பட்ட தரவுத் தொகுப்புகளின் அலசலும், அதன் பயனாக சிந்தையிற் தெளிவைக் காணுவதுமே ஆகும்.

கிறிஸ்துவம் எங்கு சென்றாலும் கிறிஸ்துவர்களையும், வாசனைத் திரவியங்களையும் கண்டுபிடிக்கின்றது எனும் சொல் வழக்கிற்கு ஏற்ப, இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான புனித தோமாதிருவள்ளுவரைத் தமிழகத்தில் சந்தித்ததாகவும் – திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் முதலான சில சங்க இலக்கிய நூல்கள் புனித தோமாவின் கிறித்துவ சமயப் பரப்புரைகளின் தாக்கத்தினால் உருவானவையே எனுமொரு நல்ல கதை (சுவிசேஷம் or good spell) சில காலங்களாகவே திட்டமிட்டு பரப்பப்பட்டு, திருக்குறள் முதலான சைவ சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் கிருஸ்துவ நூல்களே என நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உண்மையில் இந்த கதை 1970 களிலேயே ஜான் கணேஷ் அல்லது ஜான் தாமஸ் அல்லது ஆச்சார்யா பால் என அறியப்படும் கணேஷ் ஐயர் என்பாரிலிருந்து தொடங்குகிறது [ Source : Article originally published under the title “Hoax!” in The Illustrated Weekly of India, April 26 – May 2, 1987, Bombay ]. இவர், தனது மறுபிரவேச பிரச்சார பயணத்தில், பாதிரியார் மைக்கேல் என்பாரினை பனாரஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் சமயங்களின் ஒப்பீட்டுத் துறைப் பேராசிரியர் எனும் அறிமுகத்தோடு திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். அவரது கிறிஸ்துவ சமய ஆராச்சிகளை மெச்சிய பாதிரியார் மைக்கேல், ஜான் கணேஷிற்கு திருவில்லிபுத்தூர் பாதிரியார் மரியதாஸ் என்பாரினை அறிமுகம் செய்து வைக்கிறார். இவர் ஜான் கணேஷின் ஓலைச் சுவடி மற்றும் செப்பேடு ஆய்வுகளுக்கு ரூபாய் இருபத்தி இரண்டாயிரம் நிதி உதவி அளிக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் அந்த ஆராய்ச்சி நிதி தீர்ந்துவிட, பாதிரியார் மரியதாஸ் ஜான் கணேஷினை அப்போதைய சென்னை கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் பேராயர் ஆர். அருளப்பாஅவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பேராயர் அருளப்பா தமிழ் மற்றும் சமஸ்கிருதப் புலமை பெற்றவர். திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் தோற்றம் குறித்த ஆராச்சிகளைச் செய்தவராக அறியப்பட்டவர். திருக்குறளினை கிறிஸ்துவ சமய நூலாக நிரூபிக்க முனையும் ஆராய்ச்சிப் புனைவுகளில் ஈடுபட்டிருந்தவர். இவருடனான ஜான் கணேஷின் அறிமுகமே திருவள்ளுவரை கிறிஸ்துவராக நிரூபிக்க முயலும் திட்டமிடப்பட்ட, உள்நோக்கமுடைய ஆராச்சிக்கு பெரிதும் உதவியது.

Thoma_The_language_controversyChristmas services in many Catholic Churches in Karnataka held under police protection.   Source: IndiaToday 

இதனிடையே, திருவள்ளுவரின் காலம் பற்றியத் தெளிவைப் பெறுதல் அவசியமாகிறது. திருவள்ளுவரின் காலம் 03 ஆம் B.C.E க்கும் 08 ஆம் B.C.E க்கும் இடைப்பட்ட காலமாயிருக்கலாம் என்று அவருடைய குறட் பாக்கள் மூலமும், அவரை மேற்கோள்கள் காட்டும் சங்கத்தமிழ்ப் பாடல்கள் மூலமும் கருத்தப்பட்டுவந்த நிலையில், அணுகுமுறை இலகு கருதி, 1921ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் கா. நமச்சிவாயர் அவர்கள் தொடங்கிவைக்க, தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையிலும், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார்தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணிய பிள்ளைசைவப் பெரியவர் சச்சிதானந்தம் பிள்ளைநாவலர் ந. மு. வேங்கடசாமிநாவலர் சோமசுந்தரப் பாரதியார்முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்ட தமிழ் மாநாட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் எனவும், அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுகள் எதனடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் “மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்” என்று விளக்கம் தந்தார்.

1921 ஆம் ஆண்டில் நடந்த இம்மாநாட்டில் எடுத்த முடிவையே, 1935 ஆம் ஆண்டு, சனவரி 18 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய விழாவின் முதல் நாளில் மறைமலை அடிகள் ஆற்றிய “திருவள்ளுவரும் திருக்குறளும்” எனும் உரையின் மூலம் மீண்டும் உறுதி செய்து அறிவித்தார். அவரது உரையின் சுருக்கத்தினை காண திருவள்ளுவர் ஆண்டு குறித்த மறைமலை அடிகளாரின் உரைச் சுருக்கம்.

மேலும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களின் திருவள்ளுவரின் காலம் பற்றிய கட்டுரை, இதனைப் பற்றி ஆழ்ந்த தெளிவு பெற நமக்குதவும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

பேராயர் அருளப்பாவின் நிதி உதவியில், ஜான் கணேஷின் 1975 – 76 களில் இந்த திட்டமிடப்பட்ட இந்த புனைவு ஆராச்சியானது நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலம் திட்டமிடப்பட்ட சதி என நிரூபிக்கப்பட்டு, ஜான் கணேஷுயே பேராயர் அருளப்பாவின் தூண்டுதலின் பேரிலேயே இத்தகைய ஆய்வில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்டதும், பேராயர் அருளப்பா பின்னர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதும் வரலாறு.

Thoma_Arulappa_HighCourtCaseMythical Thomas, devious Deivanayagam, and conniving Church – B.R. Haran Source: https://apostlethomasindia.wordpress.com

இந்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்த பிறகு, முனைவர் தெய்வநாயகம், “விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் (ஒப்பாய்வு )” எனும் ஆராச்சிக்கட்டுரை மூலம் திருவள்ளுவரை கிறிஸ்துவராகவும் திருக்குறளை கிறிஸ்துவ நூலாகவும் நிறுவ முயலும் உள்நோக்கம் கொண்ட, பேராயர் ஆர். அருளப்பாவின் விடயத்தில் கல்லறையில் அடைக்கப்பட்டுவிட்ட, அந்த ஆராய்ச்சிக்கு புத்துயிர் கொடுத்து, மீண்டும் உயிர்த்தெழுப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறார். அந்த நூலில் தான் திருக்குறள் கிறிஸ்துவ நூல் என நிறுவும் ஆதாரங்களைக் கூறியிருக்கிறார்.

அவரின் இந்த ஆராய்ச்சி நூலினை, “இது ஒரு ஆராய்ச்சி நூலே இல்லை” எனும் ஒரு சுற்றறிக்கை மூலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுப்புத் தெரிவித்ததும், சென்னை கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையிலிருந்து முனைவர் தெய்வநாயகம் வெளியேற்றப்பட்டதும் வரலாறு. இந்நிலையில் தருமபுரம் “International Shaiva Siddhanta Research Centre” சார்பில் வித்துவான் அருணை வடிவேல் முதலியாரும் இவரது ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்து, 1991 இல் மறுப்பாய்வு நூலும்வெளியிடப்பட்டது.

Thoma_RefutationThis book by Tamil and Shaiva scholar Vidwan Arunai Vadivel Mudaliar is the refutation of Deivanayakam’s spurious doctoral thesis Viviliyam, Tirukkural, Shaiva Siddhantam Oppu Ayvu.

இந்த நூலின் வெளியீட்டு விழாவில், மதிப்பிற்குரிய நீதிபதி உயர்திரு. கிருஷ்ணசாமி அவர்களின் கருத்து பின்வருமாறு:

Justice Krishnaswami Reddiar strongly criticised the modern tendency of publishing trash in the name of research. He said research must have an aim, a purpose, to get at the truth. Research was not meant to find evidence to denigrate an ancient faith. Research should not start with preconclusions or prejudices. Here the author’s motive was to show the superiority of Christianity. Religion was based not only on facts but also on faith and beliefs. The book had hurt Hindu beliefs.

Justice Krishnaswami Reddiar quoted from the works of Sita Ram Goel and Ishwar Sharan and asserted that the visit of St. Thomas to India was a myth. He wondered how could such a book be published by [the International Institute of Tamil Studies, Adyar, Madras,] set up by the Government. It was a crime that such a book had been written and published and awarded a doctorate degree [by the University of Madras,] he said.

இதனைப் பற்றிய மேலதிக விடயங்களுக்கு, Tamil scholars condemn Christian author for misrepresenting Tiruvalluvar as St. Thomas’s disciple – R.S. Narayanaswami

மேலும், “திருக்குறளில் கிறித்தவம்” எனும் ஆராச்சி நூலின் நூலாசிரியரும் (Presented at Venkateshwara University – Thirupathi), S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவரும், இயேசு சபையாளருமான மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம் அவர்கள்,

நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார்.

மேலும்,

1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா?
2. ஐந்தவித்தான் யார்?
3. வான்
4. நீத்தார் யார்?
5. சான்றோர் யார்?
6. எழு பிறப்பு
7. மூவர் யார்?
8. அருட்செல்வம் யாது?

என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar” என்று குறிப்பிடுகிறார்.

மேலும், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர் ப.ச.ஏசுதாசன் அவர்கள் அவரின் “திருக்குறளும் திரு விவிலியமும்” பக்கம் – 5, 6 இல்,

திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.” என்று குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் குரல் பீடத்தின் இணைந்து பணியாற்றிய விரிவுரையாளர் செல்வி. காமாட்சி சீனிவாசன்அவர்களின் மறைவுக்கு பிந்தைய தொகுக்கப்பட்டு வந்த நூலான “குறளும் சமூகமும்” நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் “மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது

இது, முழுக்க முழுக்க, நூறு விழுக்காடு சாந்தோம் சர்ச்சின் நிதி உதவியுடன், சென்னைப் பல்கலைக்கழத்தின் கிறித்துவத் தமிழ்த் துறையின் “ARCHDIOCESAN CHRISTIAN STUDIES” இருக்கையின் ஆராய்ச்சிக் கட்டுரை என்பதனையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2008 இல் “தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு” எனும் பெயரில் சென்னையில் நடந்த மாநாடு, இந்த ஆராய்ச்சிகளின் உள்நோக்கத்தினை தெள்ளத் தெளிவாக்கிவிட்டிருக்கிறது. இதனைப் பற்றிய மேலதிக விடயங்களுக்கு, தமிழ் ஹிந்து தினசரி நாழேட்டில் வந்த சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும் எனும் கட்டுரை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

திருவள்ளுவரையும், புனித தோமாவையும் இணைக்க இயேசு கிறிஸ்துவின் இறந்த வருடத்தினையும் (29 ஆம் C.E எனவும்), திருவள்ளுவரின் பிறந்த வருடத்தினையுமே (2 ஆம் B.C.E க்கும் 6 ஆம் B.C.E க்கும் இடைப்பட்ட காலம் எனவும்) மாற்றும் வேலையினைச் செவ்வனே செய்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பிற்கே வரலாற்று ரீதியான உறுதியான சான்றுகள் இல்லாத நிலையில் (பண்டைய ரோமானியப் பேரரசில், மரண தண்டனைக்கு உள்ளானவர்களை முறையாகக் கல்லறையில் அடைக்கும் வழக்கம் இல்லை. ஆனால், இயேசு கிறிஸ்து கல்லறைக்குள் அடைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது), புனித தோமாவின் இந்தியப் பயணமும் புதிரானதாகவே உள்ளது. இதனையே போப் பெனடிக்ட் XVI யும் வழிமொழிகிறார்.

Thoma_PopePope denies St. Thomas evangelised South India – Ishwar Sharan                 Source: https://apostlethomasindia.wordpress.com/

மேலும், Kerela United Theological Seminary at Trivandumபிரின்சிபலாக இருந்தவரும், உகாண்டாவின் பிஷப்பாகஇருந்தவரும் ஆகிய L. W. Brown அவர்களும், இதற்கு வலு சேர்க்கும் விதமாக “புனித தோமாவின் வட இந்திய வருகையை, தவறுதலாக தென் இந்திய வருகை எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும் எனவும், 200 ஆம் C.E யின் பிற்பகுதி வரை வரலாற்றாசிரியர்கள் அரேபியா மற்றும் எதியோபியாவின் பகுதிகளையெல்லாம் இந்தியா என்றே குறிப்பிட்டுவந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். மேலும், ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில், ஐரோப்பாவினைத் தாண்டிய எந்தப் பகுதியினையும் இந்தியா என்றே கருதிவந்தனர் எனவும் தெரிவிக்கிறார். பண்டைய இந்தியா என்பது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கை என்பதனை நாமே அறிந்திருப்போம்.

Thoma_BrownSource: The Origins of Christian Society in Ancient India by Crista Nalani Anderson from University of Connecticut for a honors scholar theses

பொதுவாக கிறிஸ்துவக் குழுக்களை / பிரிவுகளை கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்:

1. செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் (The Christians of St. Thomas),
2. நெஸ்தோரிய கிருத்துவர்கள் (Nestoria Christians),
3. சிரியன் கிருத்துவர்கள் (Syrian Christians),
4. ஜெகோபைட்டுகள் (Jacobites),
5. நஸாரின் கிருத்துவர்கள் (Nazarene Christians),
6. கத்தோலிக்கக் கிருத்துவர்கள்

அவர்களின் வாதப்படி, சிரியன் கிருஸ்தவர்கள் 345 C.E க்கும் 825 C.E க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாரசீகப் பகுதியிலிருந்து தங்களின் இரண்டாம் கோவில் இடிப்பிற்குப் பிறகு, புலம் பெயர்ந்தவர்கள். இவர்களின் இருப்பினை, 1259 C.E வாக்கில் இந்தியா வந்த தேசாந்திரி மார்க்கோ போலோவின் குறிப்புகளும் உறுதிப்படுத்துகிறது. இவர்கள் ரோமன் சர்ச்சுக்கு கட்டுப்பட்டவர்கள் கிடையாது. இவர்கள் ஜுடேய்ஸ்ம் (Judaism) த்தினைப் பின்பற்றியவர்களேயன்றி, கிறிஸ்துவத்தினை அல்ல.

அதே வேளையில், கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டதற்கு எந்தவித ஆதாரங்களும் வரலாற்றுக் குறிப்புகளில் காணக் கிடைக்கவில்லை. இவர்கள் அனைவரும் அன்றைய அரசியல் காரணங்களால் (பாரசீகப் படையெடுப்பு ) அகதிகளாக வந்தவர்களே. மதத்தினைப் பரப்பும் நோக்கத்துடன் வந்தவர்களாக இருக்கவே முடியாது.

இதனையே Stephen Andrew Missick உம் தனது “Socotra: The Mysterious Island of the Assyrian Church of the East” கட்டுரையில் கீழ்கண்டவாறு உறுதிப்படுத்துகிறார்:

Source: “Socotra: The Mysterious Island of the Assyrian Church of the East” by Stephen Andrew Missick

இந்தியாவில் கிருஸ்தவர்களின் வருகை ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இருந்தாலும், கிருஸ்தவ மிஷனரிகளின் இருப்பும், அதன் மூலம் கிருஸ்தவ மதம் பரப்பும் மதப் பிரச்சாரங்களும் வாஸ்கொ-ட-காமா வின் வருகைக்குப் பின்னரே நடந்தேறியிருக்கிறது. அதற்க்கு முன்னர் நடந்ததற்கான எந்தவொரு குறிப்புகளும் அல்லது தரவுகளும் காணக்கிடைக்கவில்லை. வாஸ்கொ-ட-காமா வின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் கீழ்கண்டவாறு பிரிந்தனர்:

Source: Saint Thomas Christians

52 C.E இல், தோமாவின் தென் இந்திய வருகை என்பது ஒரு புதிர் தான் என ஒரு சிலர் ஒப்புக்கொண்டாலும், அவர்கள் வைக்கும் மற்றொரு வாதம், வராத தோமா வந்ததாகக் கருதப்படும் காலத்திற்கு முன்னரே, சிரியக் கிருஸ்துவர்கள் வந்ததாகவும் அவர்கள் கிறிஸ்துவக் கருத்துக்களைப் பரப்பினர் என்பதுதான்.

சிரியக் கிறிஸ்தவர்கள் ஜுடேய்ஸ்ம் (Judaism) த்தினைப் பின்பற்றியவர்களேயன்றி, கிறிஸ்துவத்தினை அல்ல என்பதும், கிறிஸ்தவக் கொள்கைகளே கிறிஸ்துவின் சிலுவை அறைதலுக்குப் பிறகே பரப்பப்பட்டன என்பதனையும் அவர்கள் வசதியாக மறந்துவிடுகின்றனரோ என்றே தோன்றுகிறது. இவர்கள், சிரியாக் (Syriac) மொழி பேசுபவர்கள். இயேசுவும், அவருடைய சீடர்களும் பேசிய அராமைக் (Aramaic) மொழி அறியாதவர்கள்.

கிறிஸ்தவர்கள் எனும் வார்த்தைப் பிரயோகமே 46 – 48 C.E யில் பாலின் (Paul) ஆன்டியோச் (Antioch) வருகைக்குப் பிறகே உபயோகிக்கப்படுகிறது. மேலும், உலகின் பழமையான Church, Joardan இல் 33 – 70 C.E இல் கண்டுபிடிக்கப்பட்டதாக சில அகழ்வாராச்சி முடிவுகள் கூட தெரிவிக்கின்றன. இந்நிலையில், தோமாவுக்கு முந்தைய சிரியக் கிறிஸ்தவர்களோ அல்லது 52 C.Eஇல் தோமாவோ கிறிஸ்தவ Church கட்டியதாகவோ அல்லது கிறிஸ்தவ வழிபாடு நடத்தியதாகவோ நாம் நம்ப இயலாது.

இந்தியாவில் கிருஸ்தவம் என்பது, 1500 C.E களுக்குப் பிறகே, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் வருகைக்குப் பிறகே. அதற்கு முன் இந்தியாவில் கிறிஸ்தவம் என்பது அவர்களின் திட்டமிட்ட கட்டுக் கதையே. போர்ச்சுகீசியர்கள் சென்ற இடங்களில் எல்லாம், கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஏன் பிரியவில்லை ? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு வேளை, புனித தோமாவின் தென் இந்திய வருகை St. Thomas Syro-Malabar Church, Palayoor குறிப்பிடும்படி, தோமா 62 C.E இல் மயிலாப்பூருக்கு வந்திருக்கவேண்டும். எனில், அப்பொழுது திருவள்ளுவரின் வயது, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் படியே, 93 ஆக இருந்திருக்கும். மேலும், 01 C.E மற்றும் அதற்குப் பிந்தைய கால கட்டங்களில் கிறிஸ்தவம் பரவியிருப்பின், பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தனது “Discovery of India” (பக். 118) வில் குறிப்பிடுவது போல், புனித தோமா சென்ற இடங்களின் பெண்களின் வாழ்க்கைத் தரம் பண்டைய இந்தியாவிலுள்ளதை (இன்றைய இந்தியாவை விட கீழாக இருந்தாலும்) விடக் கீழாக இருந்ததேன்? என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே!

மேலும், புனித தோமா இந்தியாவிற்கு வந்ததாகக் கருதப்படுவதற்கு முன்னர், அவர் சென்ற இடங்களான சிரியா, ஈரான் (Parthians, Medes, Persians & Hyrcanians) மற்றும் ஆப்கானிஸ்தான் (Bactrians) நாடுகளில் இருந்து தமிழ்ச் சங்க இலக்கியங்கள் போன்றதொரு படைப்புகள் ஏன் வரவில்லை?என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே!

மேலும் முத்தாய்ப்பாக, 02 ஆம் C.E யின் பின்பகுதியில், மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்ட, ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான “மணிமேகலை“யில், காப்பிய நாயகி மணிமேகலை பத்து விதமான சமய வாதங்களை (அளவை வாதம், சைவ வாதம், பிரம வாதம், வைணவ வாதம், வேத வாதம், ஆசீவக வாதம், நிகண்ட வாதம், சாங்கிய வாதம், வைசேடிக வாதம் மற்றும் பூத வாதம்) உள்ளடக்கிய ஆறு வகை சமயக் கணக்கர்களுடன் (பௌத்தம், ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேத மதம், பூத வாதம்) வாதம் செய்கிறாள். இவைகளுள் எவற்றிலும் கிறிஸ்தவ மதம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை.

இவைகளுள் சிறப்பு என்னவெனில், மணிமேகலை செய்யும் வாதமும், சமயக் கணக்கர்களிடம் திறம் கேட்டறிதலும், புகார் மற்றும் வஞ்சி மாநகர்களில் நடைபெறுகிறது. இதில் வஞ்சி மாநகரம் சிரியக் கிறிஸ்தவர்களும், தோமாவும் வந்திறங்கிய பகுதியாகக் கருதப்படும், அன்றைய சேர நாட்டின் தலைநகரம் ஆகும்.

இன்னும் சிலர், மணிமேகலையின் காலத்தினை சற்றே பின்தள்ளி 7 C.E என்றும் குறிப்பிடுவர். அப்படியே கொண்டாலும், 7 C.Eகாலகட்டங்களில் கூட கிறிஸ்தவம் பரவவில்லை என்பது தெளிவாகிறது.

மற்றொரு ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான, 10 C.Eகாலகட்டத்திய பௌத்த நூலான “குண்டலகேசி“யில் காப்பியத் தலைவி நடத்தும் சமய வாதங்களிலும், கிறிஸ்துவம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் இதனை மறுத்து இயற்றப்பட்ட சமண நூலும், ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றுமான “நீலகேசி“யிலும் கிறிஸ்தவம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை.

மேற்கண்ட குறிப்புகள், திருவள்ளுவர் காலத்திலோயோ, திருக்குறள் இயற்றப்பட்ட காலத்திலோயோ கிறிஸ்தவம் என்கிற மதமே அல்லது தத்துவமோ பண்டைய தமிழகத்தில் பரவியதற்கான எந்தவொரு சான்றும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இத்தகைய ஆய்வுகளையும், ஆராய்ச்சிக்கட்டுரைகளையும், நூல்களையும் எதிர்த்து எதிர்வாதம் செய்த தமிழறிஞர்களும், சான்றோர்களும் கூட தமிழ் சார்ந்தல்லாமல், சைவத்திற்கும் கிறிஸ்தவத்திற்குமான இடையேயான போட்டியாகவே பாவித்து வாதிட்டதாகவே தோன்றுகிறது. தமிழினையும், தமிழரின் அறம், நீதி, அகம், புறம், உயிர் கொல்லாமை, தத்துவம் சார்ந்த பொருள் பொதிந்த வாழ்வியல் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் தத்தம் மதத்திற்கே உரியது என்று நிறுவும் முனைப்புமே அதில் ஓங்கி நின்றது சற்று ஏமாற்றம் தான்.

இறுதியாக, இக்கட்டுரையினை ஆசான் ஜெயமோகன் அவர்களின் தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்கட்டுரையின் முடிவுரையை மேற்கோள் காட்டி முடிப்பது சாலப் பொருந்தும் என்பது என் எண்ணம்…

கிறித்தவ மரபில் தாமஸ் முக்கியமானவர் அல்ல. ஏனென்றால் அவர் கிறிஸ்துவை ஐயப்பட்டவர். இருந்தும் ஏன் அவரை திடீரென மீட்டெடுக்கிறார்கள்?

இந்திய பாரம்பரியம் கிறித்தவம் வருவதற்கு முன்பு சிந்தனையற்ற இருண்டகாலம் கொண்டிருந்தது என்று சொல்வதற்கு தடையாக உள்ளவை இங்குள்ள பேரிலக்கியங்கள். அவற்ரை மறைப்பது கடினம்.ஆகவே அவற்றின் காலத்தை பின்னுக்குத்தள்ளி கிறித்தவத்தின் வருகையை முன்னுக்குக் கொண்டுசெல்கிறார்கள். அதற்கு தாமஸ் தேவையாகிறார்.

தாமஸின் சுவிசேஷம் என்று ஒன்று எகிப்தில் நாக் ஹமாதியில் கிடைத்துள்ளது. [விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம் ]பாப்பிரஸ் சுவடிகளில் எழுதப்பட்ட அந்தச்சுவடி கார்பன் டேட்டிங் முறைப்படி கிபி இரண்டாம்நூற்றாண்டுக்கு முந்தியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தாமஸ் எகிப்தில் வாழ்ந்தார் என்ற வரலாற்றுடனும் காப்டிக் சர்ச்சை நிறுவினார் என்ற வரலாற்றுடனும் அந்த விஷயம் பெருமளவு ஒத்துப்போகிறது. ஆய்வாளர் நடுவே அச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது

அந்த சுவிசேஷத்தில் [மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம் ] தாமஸ் ஏசுவை ஒரு தேவனாக, கடவுளின் மகனாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு ஞானகுருவாக முன்வைக்கிறார். கிறிஸ்து வானத்தில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வரவில்லை, மண்ணில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வருகிறார். பைபிளின் அதிகாரபூர்வ வரிகளில் இருப்பதைவிட ஆழமும் கவித்துவமும் கொண்டவையாக அவ்வரிகள் உள்ளன. நாக் ஹமாதியிலும் செங்கடல் பகுதிகளிலும் கிடைத்த பல பைபிள் வடிவங்களை வலுவான தொல்பொருள் சான்று இருந்த போதிலும்கூட கத்தோலிக்கத் திருச்சபை நிராகரித்துவிட்டது. ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இந்தியப் பண்பாடே தாமஸ் என்ற தனிநபரால் உருவாக்கப்பட்டது என்று நிறுவ முயல்கிறது.

மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை.. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப்பேசியிருக்கிறேன். மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?

அதற்கும் அப்பால்சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர்மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனை பொய்களைச் சொல்ல கூச மாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்.

வழி தவறிய ஆடுகள் நல்ல மேய்ப்பரைச் சென்றடையட்டும்!

 

Bibliography :

 1. India Has a Long History of Native Christianity – https://www.nytimes.com/1986/02/22/opinion/l-india-has-a-long-history-of-native-christianity-736486.html
 2. ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம் – http://www.tamilhindu.com/2008/10/slavish-tamil-christianit/
 3. திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து – https://tamilsamayam.wordpress.com/2014/02/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/
 4. இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் – http://www.tamilhindu.com/2009/08/christianity-in-india-book-intro/
 5. கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை – http://newindian.activeboard.com/t63739503/topic-63739503/
 6. தாமஸ் கட்டுக்கதை – https://thomasmyth.wordpress.com/
 7. Women held for bank fraud – http://www.thehindu.com/news/cities/chennai/Woman-held-for-bank-fraud/article14995672.ece
 8. The silk road – https://festival.si.edu/2002/the-silk-road/the-silk-road-crossroads-and-encounters-of-faith/smithsonian
 9. Christianity and mongols – http://factsanddetails.com/asian/cat65/sub423/entry-5241.html
 10. Christianity’s lost history – http://www.pbs.org/wnet/religionandethics/2009/05/01/april-29-2009-christianitys-lost-history/2834/
 11. Syncretism – https://www.khanacademy.org/humanities/world-history/ancient-medieval/syncretism/a/syncretism-article
 12. 2 – Mythical Thomas, devious Deivanayagam, and conniving Church – B.R. Haran – https://bharatabharati.wordpress.com/2010/05/14/2-mythical-thomas-devious-deivanayagam-and-conniving-church-b-r-haran/
 13. திருக்குறளும் இயேசு கிறிஸ்து சர்ச்சும் – https://saintthomasfables.wordpress.com/2010/05/24/church-and-thirukural/
 14. Background of the christian thirukural theory – http://ponniyinselvan.in/forum/discussion/5651/background-of-the-christian-thirukural-theory/p1
 15. Viviliyum, thirukkural, saivasithantham – http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/thewayofsalvation/Christian%20Tamil%20Ebooks/Viviliam%2C%20Thirukkural%20Saiva%20Siddhantam%20Oppaivu-Dr.M.Deivanayagam.pdf
 16. The Debate In Dharumai Adheenam Mutt and Our Victory Part -1 (Tamil) – https://www.youtube.com/watch?v=LIYEtLadt40
 17. The Difference Between Syriac and Aramaic – https://nazarani.org/wk/index.php/The_Difference_Between_Syriac_and_Aramaic
 18. World’s ‘oldest Christian church’ discovered in Jordan – https://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/jordan/2106752/Worlds-oldest-Christian-church-discovered-in-Jordan.html
 19. How did followers of Jesus come to be called Christians? – http://www.victorious.org/cbook/chur60-called-christians
 20. OVERVIEW OF RELIGIOUS HISTORY OF SYRIA – https://www.ewtn.com/library/chistory/syriahis.htm
 21. மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் – http://www.muthukamalam.com/essay/seminar/s1/p8.html
 22. மணிமேகலை நூலின் காலம் – https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaiap5
 23. மணிமேகலை நூலின் காலம் – http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=16
 24. WHAT WERE THEY BEFORE THEY WERE “CHRISTIANS”? – http://www.brentcunningham.org/?p=842
 25. The Mar Thoma Syrian Church of Malabar – http://www.mtcfb.org/marthoma-church-history


__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

 தாமஸ் கட்டுக்கதை

 

புனித தாமஸ் - தோமையர் 2000 வருடங்களுக்கு முன்பாக இந்தியா விற்கு வருகை புரிந்தார். அவர் கேரளக் கடற்கரையில் சில நாட்கள் தங்கியிருந்து கிறிஸ்துவின் மத போதனைகளைப் பரப்பினார். பிறகு அவர் சென்னைக்கு வருகை தந்து திருவள்ளுவரைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். புனித தோமையரின் கருத்துக்களால் உந்தப்பட்டு திருவள்ளுவர் திருக்குறளைப் படைத்தார். புனித தோமையரை சென்னை வாழ் மக்கள் அய்யர் என்று அன்புடன் அழைத்தனர். சென்னையில் வசித்து வந்த ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மணர் ஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொன்றார், தோமையர் உடல் தற்போதுள்ள சாந்தோம் கிறிஸ்துவ சர்ச்சில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது போன்ற நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் வகையில் திரைப்படத்தின் திரைக் கதையை அமைத்துள்ளனர்.

திருவள்ளுவர் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்தத் திரைப்படம் பொய் வரலாற்றைத் திணிக்கும் சதிச் செயலாகும். இத்தகைய முயற்சிகளை தமிழகத்து கிறிஸ்தவ மிஷினரிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இப்போது நமது தமிழ்நாட்டின் வரலாற்றைத் திருத்தி அமைக்கும் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வரலாறாக நுழைக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர். திரைப்படம் என்பது ஒரு வலிமையான ஊடகமாகும். 

புனித தோமையர் தமிழத்திற்கு வந்தார், திருவள்ளு வரோடு சமய விவாதங்களில் ஈடுபட்டார், பழந்தமிழ் இலக்கிய ங்களான பத்துப்பாட்டு எட்டுத் தொகை ஆகியவை தாமஸ் வந்தபின் நூறு வருடங்கள் கழித்து உருவானவை, சங்க இலக்கியங்கள் அனை த்துமே கிறிஸ்தவ சிந்தனைகளை உள்ளடக்கியவை, திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலே என்று வாதிட்டு ஐந்தவித்தான் என்பது கிறிஸ் துவையே (அவரது ஐந்து காயங்களை) குறிக்கிறது என்றும், திருக்குறளில் பொறி என்று குறிப்பிடப்படுவது சிலுவையே. திருக் குறளில் உள்ள வான் சிறப்பு பரிசுத்த ஆவியை வாழ்த்தும் அதிகாரம்.

கிறிஸ்தவத்தில் மகனாக அவதரித்த கடவுளுக்கு நான்கு குணங்கள் உள்ளன. சாத்தானை வென்றநிலை சூரனை வென்ற நிலையாக மாற்றம் செய்யப்பட்டது. இறந்து உயிர்த்தெழுந்த நிலை தலைவெட்டப்பட்ட பிள்ளையாராக ஆனது. உலகைப் படைத்த நிலை பிரம்மனாக ஆகியது. உலகின் ஒளியாக இருக்கும் நிலை மலைமீது ஒளியாகத் தெரியும் ஐயப்பனாக மாறியது. புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட ஆதிகிறிஸ்தவ சிந்தனைகள் இவை என்று தெரியாதபடி பிராமணர்களால் இவை புராணங்களாக ஆக்கப் பட்டன‘ போன்ற கிறிஸ்தவ ப்ரச்சார கருத்துகள் அதிக அளவில் நூல்கள் வழி பரப்பப்பட்டு வருகின்றன. இந்தக் கருத்துக்கள் தயாரிக்கப்பட உள்ள திரைப்படத்தில் இடம் பெறலாம்.

பாமர மக்களின் ஆழ்மனதில் முறையற்ற வரலாறு பதிவு செய்யப்படும் அபாயம் ஏற்பட உள்ளது. கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்காகத் தமிழக வரலாற்றை அடகு வைக்க முற்படுகிறார்கள் ‘சில திராவிட‘ அரசியல்வாதிகள். அரசியல் காரணங்களுக்காக, சிறுபான்மை வாக்கு வங்கிக்கு ஆசைப்பட்டு பண்டைய தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் திருத்தலாமா? இந்தத் திரைப்படம் வெளிவந்தால் மெல்லமெல்ல இது ஒரு வலுவான உண்மையாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகர் திரு. கமலஹாசன் திருவள்ளு வரை சிலர் சமணர் என்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்... என்றெல்லாம் பேசியுள்ளார். (1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் திருவரங்கத்தை இருப் பிடமாகக் கொண்ட கணேசய்யர் என்பவரால் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப் பட்டு திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்புக் கோரினார். இன்று அந்த செய்தி இயல்பான ஒரு வரலாற்றுச் செய்தியாக உருக்கொண்டுள்ளது. (இதுபற்றிய விரிவான செய்திகளுக்கு முந்தைய பாஞ்சஜன்யம் இதழ்களைப் பார்க்கவும்)

தமிழ்நாட்டின் தலைவிதி திரைப்பட நடிகர்களை தெய் வத்திற்கு ஒப்பாக கருதுவதும், கட்சி தொடங்கிய ஒவ்வொரு நடிகரும் முதலமைச்சராக வர ஆசைப்படுவதும் ஆகும். திரு.ரஜினி காந்த், திரு.கமலஹாசன் போன்றவர்கள் வரலாற்று உண்மைகளை கற்றறிந்த பேராசிரியர்கள் போலச் செயல்படுகின்றனர். அத்தகைய தொரு செயல் தான் கமலஹாசன் ரஜினிகாந்த் போன்றோர் செயின்ட் தாமஸ் பற்றிய திரைப்படத்தில் நடிக்க செய்யும் முயற்சி.
மேல்மருவத்தூர் என்ற கிராமம் திண்டிவனம் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு அந்த ஊரைப்பற்றி யாருக்கும் தெரியாது. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி என்ற பெயரில் இரண்டு மூன்று திரைப்படங்கள் திரு. ஜகதீசன் என்பவரால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. அதில் பல உதிரிக் கதைகள் சேர்க்கப்பட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மக்களை ஆபத்திலிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைச் சித்தரிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக இந்தக்கோயில் பிரபலமடைந்தது. இன்றைக்கு ஸமாச்ரயணம் ஆகி, பரந்யாஸம் பெற்றுக்கொண்ட ஸ்ரீவைஷ்ணவர்களும் அவர்தம் மனைவிமார்களும் இந்தக் கோயிலுக்குச் சென்று ‘அம்மாவின்‘ அருளாசியைப் பெற்றுக் கொள்வதை ஓர் பெறாப் பேறாகக் கருதி வருகின்றனர். அந்த அளவிற்கு அவர்கள் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளனர்.

இதேபோன்று திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன் ஆகிய கோயில்கள் திரைப்பட நடிகர், நடிகை களோடு தொடர்பு படுத்திய பிறகே பிரபலமடைந்துள்ளன. இவை எல்லாம் இந்து சமயத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளவை. ஆனால் புனிதத் தோமையர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் வரலாற்றையே திசை மாறச் செய்திடும். இந்தப் படத்தில் கமலஹாசனோ ரஜினிகாந்தோ பேசும் வசனங்களைத் தெய்வ வாக்காகக் கொண்டு திசை மாறக்கூடிய மக்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் புனித தோமையர் என்பார் யார், அவர் உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு வந்தாரா, அவர் பெயரில் ஆறு இடங்களில் கல்லறைகள் அமைந்துள்ளனவே அதற்கு என்ன காரணம், கிறிஸ்தவர்கள் இந்துக் கோயில்களை இடித்து அந்த இடங்களில் எவ்வாறு கிறிஸ்துவ தேவாலயங்களை நிறுவினர், எப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர், அவர்களுடைய பிரச்சாரம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது போன்ற வை பற்றிய ஆதார பூர்வமான குறிப்புகளை இனிக் காண்போம்.

1988 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் கீழ் அமைந்த பாட திட்டத்திற்கிணங்க இயற்றப்பட்டது என்ற முத்தாய் ப்புடன் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், பதிப்புரிமை தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டு சரித்திர ஆதாரமில்லாத செயின்ட் தாமஸ் கட்டுக் கதையைப் பரப்ப ஆரம்பித்தது. உதாரணத்திற்கு social science(சமூக அறிவியல்) ஆறாம் வகுப்பு, ஆங்கிலப் பதிப்பு குறிப்பிடுவதாவது:__________________


Guru

Status: Offline
Posts: 20711
Date:
Permalink  
 

https://www.indiatoday.in/magazine/indiascope/story/19810131-christmas-services-in-many-catholic-churches-in-karnataka-held-under-police-protection-805895-2014-01-21

Christmas services in many Catholic Churches in Karnataka held under police protection

Christmas in Bangalore was not the same this time. The Archbishop of Bangalore, the most Rev Dr Packiam Arokiaswamy, could not celebrate midnight mass on Christmas eve at St Francis Xavier Cathedral as he usually does..........

The language controversy is only one of the problems confronting the Catholic Church. In Tamil Nadu, two laymen, John Thomas and Anthony Royappa, obtained leave from the Madras High Court to file a suit against the most Rev. Dr R. Arulappa, Archbishop of Madras-Mylapore diocese, for "squandering" church funds. Dr Arulappa had "misused" over Rs 14 lakh by paying Ganesha Iyer alias Acharya Paul for conducting research about the origin of Christianity in India.

The research was meant to prove that Tiruvalluvar, the Tamil saint-poet, was a Christian and that the Kapaleeswarar temple in Mylapore and the Arunachaleswarar temple in Tiruvannmalai were ancient Christian places of worship. Thomas and Royappa said the Archbishop was the sole trustee of vast church properties and funds and since he was "frittering away" trust funds, they were constrained to file the suit. The High Court ruled that there was an imperative need for suitable legislation for proper management of church properties.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard