எந்த விதமான ஆதாரங்களோ, அடிப்படைகளோ இல்லாத ஆரிய படையெடுப்பு புரட்டுக்கதை, கிறிஸ்தவ வெள்ளையர்களிடமிருந்து, அரசியல் கொள்ளையர்களுக்கு நாட்டை இன ரீதியாக பிரிக்கவும், ஆளுமை செய்யவும் மட்டுமே பயன்பட்டு வருகின்றது என்பதை நாம் தெளிவாக பார்த்தோம். இத்தனை ஆதாரங்களுக்கு பிறகும் ஒருவர் ஆரியர்-திராவிடர் என இன வேற்றுமையை உருவாக்கினால் அது பாரத நாட்டை எப்படியாவது பிரிக்க வேண்டும் எனும் காழ்ப்புணர்வைதான் காட்டுகின்றதே தவிர வேறு காரணம் ஏதும் இல்லை.
சுதந்திர இந்தியாவில் நடைப்பெற்ற பல்வேறு அகழ்வாய்வு பணிகள், 'சிந்து சமவெளி நாகரீகம்', சிந்து நதியின் மேற்கு பகுதியை விட (இன்றைய பாகிஸ்தானிய பகுதிகள்) அதன் கிழக்கு பகுதியில்தான் (இன்றைய இந்திய பகுதிகள்) பரவி இருந்ததை உணர்த்தியது. ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட, பல புராதான இடங்கள் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் புலப்படத் தொடங்கியது. அவை சரஸ்வதி நதியின் வறண்ட பகுதிகளின் கரையிலும், 'திரிஷட்வதி' நதியின் கரையிலும் புலப்பட்டன.
இது உண்மையா ? என்ன ஆதாரம் என நீங்கள் கேட்பது புரிகிறது. 'ஐ ஐ டி' கரக்பூரூம் இந்திய அகழ்வாய்வுதுறையும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சிகளில் சிந்து சமவெளி நாகரீகம் குறைந்தபட்சம் எட்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றது. அதாவது எகிப்திய நாகரீகம் (பொது ஆண்டுக்கு முன் 7000 முதல் பொ,மு,.3000 வரை) மற்றும் 'மெஸப்படோமிய' நாகரீகம் (பொ.மு. 6500 முதல் 3100 வரை) ஆகியவற்றை விட மிகப் பழமையானது சிந்து சமவெளி நாகரீகம் என்று கண்டெடுக்கப்பட்டது. இன்றைய பாகிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட ஹரப்பன் நாகரீகத்தை விட இந்திய துனை கண்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையானது என்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டுபிடிப்பு, உலக பிரசித்தி பெற்ற 'நேச்சர்' (Nature) பத்திரிகையில் மே 25 ம் தேதி வெளியிடப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகமே உலகின் முதல் நாகரீகம் என்பதை சந்தேகம் இல்லாத வகையில் இது உணர்த்தியது.
இந்த ஆராய்ச்சி எப்படி நிகழ்த்தப்பட்டது ? என்ன கண்டுப்பிடிக்கப்பட்டன ?
"நாங்கள் உலகின் மிகப்பழமையான மண் பாண்டங்களை கண்டெடுத்தோம். இதற்காக 'ஆப்டிக்கள் ஸ்டிமுளேஷன்' (optically stimulated luminescence) எனும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம் என்கிறார் 'ஐஐடி காரக்பூரின்' 'ஜியாலஜி' துறைத் தலைவர் 'அனிந்த்யா சர்கார்' (Anindya Sarkar) , சிந்து சமவெளி நாகரீகம் என்று அனைவருக்கும் பரிச்சயமான 'ஹரப்பா', 'மொஹஞ்சதாரோ' வுக்கு அப்பாற்பட்ட பாரத பிரதேசங்களான 'பீரனா' மற்றும் 'ரகிகர்ஹி' (Bhirrana and Rakhigarrhi in Haryana) ஆகிய பகுதிகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை முதல் முதலில் 1965ல் கண்டெடுக்கப்பட்ட பழமையான பகுதிகள்தான் என்றாலும், நவீன விஞ்ஞான உபகரணங்களுடன் சமீப காலத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள்தான் பெரும் வியப்பூட்டும் வண்ணம் பலவற்றை வெளிக் கொணர்ந்தது. இந்த ஆராய்சிகள் அதந நவீன கருவிகளை கொண்டு, மிகவும் துல்லியமாகவும், சர்வ ஜாக்கிரத்தையுடனும் மேற்கொள்ளப்பட்டவை என்றால் அது மிகையில்லை. . "இன்றைய பாகிஸ்தானிய பகுதிகளில் உள்ள சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியின் போது நடந்த தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது என நாங்கள் சிரத்தையாக இருந்தோம்" என்கிறார் டெக்கான் கல்லூரியின் துனை வேந்தராக இருக்கும் 'வசந்த் ஷிண்டே'. "முந்தைய ஆராய்ச்சிகளில் கிடைத்த பழமையான எலும்பு கூடுகளை மக்கள் பார்வைக்கு வைத்திருந்த நிலையில், புராதான முறையில் எலும்புக்கூடுகள் அகழ்வாராயப்பட்டதும், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதும் அவற்றில் நவீன மனிதர்களின் 'டி என் ஏ' கலவை ஏற்பட வழிவகை செய்து விட்டது. இம்முறை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு அவற்றை கையாண்டோம். கிடைத்த எலும்புக்கூடுகளின் 'டி என் ஏ' க்கள் முழு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டன. இடுப்பு பகுதி எலும்பை சுற்றி இருந்த மண்ணை கூட பாதுகாத்து வைத்தோம். அந்த மண்ணில் இறந்தவர்களின் வயிற்றில் இருந்திருக்கக் கூடிய ஓட்டுன்னிகளின் முட்டைகள் இருக்க வாய்ப்பிருக்கும்.. இந்த முட்டைகள் மூலம் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் உணவு பழக்கத்தையும், ஆரோக்கியத்தையும் நாம் அறிந்துக் கொள்ளலாம்" என்கிறார் அவர்.
ஒவ்வொரு நாட்டிற்கும் தங்களுடைய தட்ப வெப்பங்களுக்கு தகுந்தது போல் பிரத்யேக 'டி என் ஏ' ஆராய்ச்சி முறைகள் தேவைப்படுகின்றது என்கிறார் மற்றொரு ஆராய்ச்சியாளரான 'ராய்'. இந்தியா முதன் முதலில் 2009-10 ல் தான் இந்திய தட்ப வெப்பத்திற்கு தகுந்தார் போன்ற 'டி என் ஏ' பரிசோதனை முறைகளை உருவாக்கியது என்கிறார் அவர். பாரதத்தின் 'சி. சி. எம். பி.,' (Centre for Cellular and Molecular Biology) எலும்புகளின் 'டி என் ஏ' க்களை ஆராய்ச்சி செய்யும் முறைகளை இந்தியாவில் முதல் முறையாக கண்டு பிடித்திருந்தது இந்த ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது .என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
" 'பீரனா'வில் கிடைத்த மனித மற்றும் கால்நடை எலும்புகளை நாங்கள் 'கார்பன் 14' ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அங்கு சிந்து சமவெளி நாகரீகம் செழித்திருந்ததை கண்டு பிடித்தோம்" என்கிறார் டெக்கான் கல்லூரியின் 'ஆரதி தேஷ்பாண்டே முகர்ஜி'. இவற்றை வைத்து 'அகமதாப்பாத்தில்' உள்ள 'பிஸிக்கல் ரிசர்ச் பரிசோதனை கூடத்தின் (Physical Research Laboratory) உதவியோடு ஆராய்ந்து, பலவற்றை வெளிபடுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.
ஆராய்ச்சிகள் மேலும் விரிவடைந்து முழு பரிமாணம் பெறத் தொடங்கியதும், சிந்து சமவெளி நாகரீகம் என்பது இன்றைய இந்தியாவின் சரஸ்வதி நதி அல்லது 'காகர்-ஹக்ரா' நதி வரை பரவி இருப்பது தெரிய வந்தது. "இந்த பகுதி ஆராயப்படாத பகுதியாக இருந்தது. நாம் இதுவரை ஆங்கிலேய அகழ்வாய்வுகளையே அடிப்படையாக கொண்டு இருந்தோம், ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளால் சிந்து சமவெளி நாகரீகம் மிகவும் பரவலாகவும், பொது ஆண்டுக்கு முன் ஒன்பதாயிரம் முதல் எட்டாயிரம் வரை பழமையானதாகவும் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது" என்கிறார் சர்கார். இந்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இந்த ஆராய்ச்சிகள் மூலம் நமக்கு என்ன தெரிய வந்தது ?
உலகின் அனைத்து நாகரீகங்களுக்கும் தாயாக பாரதமே இருந்துள்ளது என்பது இந்த ஆராய்ச்சிகள் மூலம் தெள்ளத் தெளிவாகியது. உலகின் எந்த ஒரு பகுதியிலும் பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித நாகரீகம் இருந்திருக்குமா என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த புரிதலை நாம் ஆழமாக மனதில் ஏற்படுத்திக் கொண்டு, பாரதத்தை பல்வேறு விதங்களில் சிறுமை படுத்திய கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திற்கு பயனிப்போம்.
எங்கிருந்து தொடங்கியது கிறிஸ்தவம் ? யேசு என்பவர் யார் ?
கிறிஸ்தவத்தின் வேர்களை நோக்கி நாம் நம் பயனத்தை தொடங்குவோம். யேசு பிறந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு முன் இன்றைய இஸ்ரேல் மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளில் எப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளை கொண்டிருந்தார்கள் என்பதை பார்த்தாக வேண்டும். சனாதன தர்மம் எனும் இந்து மதத்தை போல அங்கும் பல கடவுளர்களை வணங்கும் வழக்கமே இருந்து வந்தது. பண்டைய எகிப்து ஆகட்டும், பண்டைய அரேபியா ஆகட்டும், இன்றைய ஜோர்டானுக்கு மேற்கே இருந்த பண்டைய 'லெவண்டைன்' (Levantine) பகுதிகள் ஆகட்டும் (லெவண்ட் பகுதி என்பது கிழக்கு மெடிட்டேரியன் கடல் பகுதிக்கு அருகே உள்ள பகுதிகளை குறிக்கும்), 'எலாமைட்' எனப்படும் இன்றைய தென்மேற்கு ஈரான் பகுதியை சேர்ந்த பண்டைய மதங்கள் ஆகட்டும், இன்றைய ஈராக், சிரியா பகுதிகளை சார்ந்த 'மெஸப்பொட்டாமிய' மதங்கள் ஆகட்டும், இவை அனைத்துமே பல கடவுளர்களையே வணங்கி வந்தன. நம் இந்து மதத்திற்கும், இங்கு நிலவி வந்த மதங்களுக்கும், பல்வேறு ஒற்றுமைகளை நாம் காணலாம். ஏன் அதை குறித்து தனியாக ஒரு புத்தகமே கூட எழுதலாம். கிறிஸ்தவத்தின் வேர்களை நோக்கி நாம் பயனித்துக் கொண்டிருப்பதால் அந்த அலசலை ஒதுக்கி, மையப் பொருளை நோக்கி நாம் பயனிப்போம்.
கிறிஸ்தவத்தை தோற்று வித்த யேசுநாதர் இந்த பிரதேசத்தில் தான் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அவர் பிறந்ததாக சொல்லப்படுகிற 'பெத்தலஹம்' எனும் சிறு கிராமம் தற்போது பாலஸ்தீனியத்தின் ஆளுமையில் உள்ளது. ஜெருசலம் நகரத்தில் இருந்த ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெத்தலஹம்.
பாலஸ்தீனியர் வசம் எப்படி பெத்தலஹம் சென்றது ?
பெத்தலஹம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரோமானிய பேரரசின் ஆளுமையில் இருந்தது. அதன் பின் முஸ்லீம்கள் வசமும், எகிப்திய சுல்தான் வசமும், பின் ஒட்டாமன் பேரரசின் வசமும் அது கைமாறியது. சுமார் நூறாண்டுக்கு முன் ஆங்கிலேயர்கள் அதை முதல் உலகப் போரில் கைப்பற்றி 1920 முதல் 1948 வரை தங்கள் ஆளுமையில் வைத்திருந்தனர். ஆங்கிலேயர்களின் உதவியால் இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட, அதில் புலம் பெயர்ந்த யூதர்கள் பலர் குடியேறினார்கள். பெத்தலஹம் யாருக்கு சொந்தம் என்பதில் பெரும் சர்ச்சை தொடர்ந்து நிலவி வந்தது. 1948ல் நடந்த அரபு-இஸ்ரேல் போரில் அந்த பகுதி ஜோர்டானால் கைப்பற்றப்பட்டது. அதன் பின் 1967ல் நடந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல் அதை கைப்பற்றியது.1995 வரை அப்பகுதியை தன் வசம் வைத்திருந்த இஸ்ரேல், 'ஓஸ்லோ' அமைதி ஒப்பந்தத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர் வசம் கொடுத்தது. தற்போது அது பாலஸ்தீனிய பகுதியாக உள்ளது.
அடுத்து நாம் யேசுவின் பிறப்பு, கிறிஸ்தவத்தின் தோற்றம் போன்றவற்றை எல்லாம் பார்க்கும் முன் இன்றைய இஸ்ரேலிய பகுதிகளின் முந்தைய சரித்திரத்தையும், ஆப்ரகாமிய மதங்களின் தோற்றத்தையும் சற்றே சுருக்கமாக பார்த்து விட்டு வருவது நல்லது. யூதர்களின் வரலாற்றை தெரிந்துக் கொண்டால்தான் நம்மால் கிறிஸ்தவத்தின் பின்னனியை புரிந்துக் கொள்ள இயலும்.
இன்றைய இஸ்ரேல் எங்கு உள்ளது ? அதன் நிலப்பரப்பு என்ன ?
இஸ்ரேல் ஒரு குட்டி நாடு. அதன் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்து உள்ளது. யூதர்களின் 'ஜெனஸிஸ்' எனும் பழைய ஏற்பாடு படி அதன் நிலப்பரப்பு இன்றைய 'எகிப்திய', 'ஜோர்டானிய' மற்றும் 'சிரிய' தேசங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக பெரிதாக இருந்தது. ஆனால் தற்போதைய இஸ்ரேல் மிகவும் சிறியது. வெறும் 20770 சதுர கிலோமீட்டர்களையே கொண்டது. அதாவது இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அல்லது கேரளத்தின் நிலப்பரப்பில் பாதி.
இஸ்ரேலின் மேற்கு பக்கம் 'மெடிட்டேரியன்' கடல். இந்த கடற்கரை பகுதி நாற்பது கிலோமீட்டர் நீளமுள்ளது. இதுதான் பசுமையான நில பரப்பை கொண்டது. இஸ்ரேலின் பாதிக்கு மேலான மக்கள் இங்குதான் வாழ்கிறார்கள். அதன் தலைநகரமான 'டெல் அவிவ்' இந்த மேற்கு கடற்கரையில் தான் உள்ளது. நிலப்பரப்பின் தெற்கு பகுதி கிட்டத்தட்ட பாதி அளவு மக்கள் தொகை அதிகம் இல்லாத 'நெகவ்' (Negev) பாலைவனத்தால் சூழ்ந்துள்ளது. இஸ்ரேலுக்கு வடக்கே லெபனானும், வட கிழக்கே சிரியாவும், தென் கிழக்கே ஜோர்டானும் உள்ளது. வடக்கே 'ஹெர்மான்' மலையில் உற்பத்தியாகும் ஜோர்டான் நதி முன்னூற்று இருபத்தி இரண்டு கிலோமீட்டர்களுக்கு கிழக்கு நோக்கி பாய்கின்றது. தற்போதைய இஸ்ரேலில் (2016 கணக்குபடி) எண்பத்து ஐந்து லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆம் சரியாகதான் குறிப்பிட்டுள்ளேன். வெறும் எண்பத்து ஐந்து லட்சம் பேர் தான். மீண்டும் நினைவு படுத்துகிறேன், நாம் பார்த்துக் கொண்டிருப்பது தற்போதைய இஸ்ரேலை. தற்போதைய இஸ்ரேலே இத்தனை குறைந்த மக்கள் தொகையை கொண்டதாக இருக்கும் நிலையில் அக்கால இஸ்ரேல் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள் ?
பண்டைய இஸ்ரேலில் மக்கள் தொகை மிகக் குறைந்தே இருந்தது. யேசு பிறந்ததாக சொல்லப்பட்ட இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு மக்கள் சிறு குழுக்களாகவே அங்கு வாழ்ந்து வந்திருந்தனர். அகழ்வாய்வு ஆராய்ச்சிகள் பண்டைய இஸ்ரேல் முந்நூறு முதல் நானூறு வரை மக்கள் தொகையை கொண்ட சிறு கிராமங்களையே கொண்டிருந்ததாக குறிப்பிடுகின்றது. யேசு பிறந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே இஸ்ரேலின் நாகரீகம் தொடங்கியதாக சொல்கிறார்கள். அதன் வட பகுதிகள் 'இஸ்ரேலிய ராஜ்ஜியம்' என்றும் அதன் தெற்கு பகுதிகள் 'ஜூதா ராஜ்ஜியம்' என்றும் அழைக்கப்பட்டது. (படம் பார்க்க) பொது ஆண்டுக்கு 900 ஆண்டுகள் முன்பே இஸ்ரேல் ராஜ்ஜியம் உருவாகியதாகவும், பொது ஆண்டுக்கு 750 ஆண்டுகள் முன்பே ஜூதா ராஜ்ஜியம் உருவாகியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
இந்த பிரபஞ்சத்தின் அளப்பறிய அதிசயமான நம் பூமி தோன்றி பல கோடி வருடங்கள் கழிந்துவிட்டாலும். உயிர்கள் பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக உருவெடுக்க பல கோடி ஆண்டுகள் பிடித்து விட்டது. 454 கோடி ஆண்டுகளை கடந்துவிட்டதாக நவீன அறிவியல் குறிப்பிடும் நம் பூமியில், மனிதர்களின் மூதாதையர்களான "ஹோமோ எரக்டஸ்" நெருப்பை கட்டுப்படுத்த பழகி சுமார் எட்டு லட்சம் வருடங்களே ஆகி இருப்பதாய் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த 'ஹோமோ எரக்டஸ்' எனும் ஆதி மனிதர்கள், மொழியை தங்கள் வசம் கொண்டிருந்தார்களா என்பது அறிவியலுக்கு புலப்படாத ஒன்று, ஆனால் அந்த ஆதி மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று, ‘ஹோமோ சேபியன்’களாக மாறிய பின்னர்தான், மொழிகள் வடிவம் பெற துவங்கியதாக கூறுகிறார்கள். இப்படி நவீன மனிதர்களாக ஹோமோ சேபியன்கள் இரண்டு லட்சம் வருடம் முன்புதான் பரிணாம வளர்ச்சி பெற்றதாக கூறுகிறார்கள். இந்த கால கட்டத்தில் தான் அவர்களின் மொழிகள் செம்மை அடைய தொடங்கியதாகவும், வேட்டைக்காக தங்கள் ஆயுதங்களை அவர்கள் சீர்படுத்தியதாகவும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பரிணாம வளர்ச்சி என்பது என்ன ? அது உயிர்கள் வளர்ந்து கொண்டே அல்லது மேம்பட்டுக் கொண்டே வருகிறது என்று குரிப்பிடவில்லை. உயிர்கள் மாறிக் கொண்டே வருகின்றன என்பதையே அது குறிக்கின்றது. ஒரே ஒரு 'செல்'லை கொண்ட 'அமீபா'வுக்கு கூட சில தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சங்களும் உண்டு, அதே வேளையில் பரிணாம வளர்ச்சியின் சமீபத்திய உருவாக்கமான 'மனிதனுக்கு' கூட பல இயலாமைகளும் உண்டு. ஆகையால் ஒன்று மற்றதை விட மேம்பட்டது என்று நாம் கூறுவது, எந்த வரையறைகளை மையமாக கொண்டுள்ளது என்பதை பொறுத்தே உள்ளது. உதாரணத்திற்கு 'தாவும் திறனே' வரையறையாக இருக்கும் பட்சத்தில், குரங்குகளில் இருந்து பரிணாமம் பெற்ற மனிதன் வளர்ச்சி அடையாமல் குன்றி விட்டான் என்றே பொருள் கொள்ள இயலும். ஆகையால் ஒவ்வொரு பரிணாமமும் ஒரு மாற்றத்தை குறிப்பிடுகின்றதே தவிர ஒட்டு மொத்த மேம்பட்ட தன்மையை அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்களும் ஒரு தனித்தன்மையை கொண்டிருக்கின்றன என்பதையும், ஒன்றோடொன்று ஒரு பினைப்பு சங்கிலியை கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.
சரித்திரத்தை குறித்து நாம் நீண்ட நெடிய பயனத்தை தொடங்குவதற்கு முன் சில அடிப்படைகளை தெரிந்துக் கொண்டாக வேண்டும். மனித இனத்தின் சரித்திரத்தை 'முன் வரலாறு' என்றும், 'பண்டைய வரலாறு' என்றும் 'இடைக்கால வரலாறு' என்றும் 'நவீன வரலாறு' என்றும் பிரிக்கிறார்கள். வரலாறு அறியப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட காலத்திற்கு முந்தைய காலத்தை, 'முன் வரலாறு' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த முன் வரலாற்றின் இறுதிப்பகுதி, ஒவ்வொரு நிலப்பகுதி அல்லது கலாச்சாரத்திற்கு தகுந்தாற் போல் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு எகிப்து எனும் பழம் பெருமை வாய்ந்த தேசத்தின் முன் வரலாற்றின் இறுதிப் பகுதி, பொது ஆண்டுக்கு முன் 3200 ம் ஆண்டை குறிக்கின்றது, அதுவே புதிதாக கண்டுப் பிடிக்கப்பட்ட பசிபிக் மகா சமுத்திரத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் 'பபுவா நியு கினி' யின் முன் வரலாற்றின் இறுதிப் பகுதி, 19ம் நூற்றாண்டை குறிக்கின்றது. அதாவது வெறும் நூறு ஆண்டுகள் முந்தைய காலக் கட்டத்தை குறிக்கின்றது. அது போலவே ஐரோப்பாவின் பண்டைய நகரங்களான கிரேக்கமும், ரோமாபுரியும் மற்ற ஐரோப்பிய புதிய நகரங்களோடு ஒப்பிடுகையில், இந்த கால வரையறைகளில் பெரிதும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு நகரம் அல்லது பகுதியின் சரித்திர மற்றும் கலாச்சார பின்னனியை பொறுத்தே ஆய்வாளர்கள் கால வரையறைகளை நிர்னயிக்கிறார்கள்.
அது போலவே மனித சரித்திரத்தை கற்காலம், உலோக காலம் என்றும் பிரிக்கிறார்கள். கற்காலத்தின் பிற்பகுதியாக 'ஐஸ் காலம்' என வரையறை செய்கிறார்கள். உலோக காலமோ 'தங்க காலம்', 'செம்பு காலம்', 'வெண்கல காலம்', 'இரும்பு காலம்' என வரிசையாக இந்த உலோகங்கள் மனிதனால் கண்டுப்பிடிக்க காலக்கட்டங்களை குறிக்கின்றது. இது தவிர மனித சரித்திரத்தை ஆய்வு செய்ய, வேறு பலவிதமான வரையறைகளையும் பல்வேறு சரித்திர ஆய்வாளர்கள் முன்நிறுத்துகிறார்கள். இந்த சரித்திர ஆய்வுகள் பெரும்பாலும் பதிணெட்டு மற்றும் பத்தொண்பதாவது நூற்றாண்டை சேர்ந்த சரித்திர ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். மேலும் இவர்களில் மிகப்பெரும்பாலோர் கிறிஸ்துவ நம்பிக்கைகளை பின்புலமாக கொண்ட ஐரோப்பியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதி மனிதனாக இருந்த மனிதன் பல லட்சம் வருடங்களுக்கு பிறகுதான் நாகரீகம் கொள்ள தொடங்கினான் என்றும் அந்த நாகரீகங்களில் மிகப் பழமையானதாக "மெஸப்பொட்டோமிய' நாகரீகத்தை முன் நிறுத்தினார்கள் இந்த (ஐரோப்பிய) ஆய்வாளர்கள். மெஸ்பொட்டாமிய நாகரீகம் 'சுமேரியன்' மற்றும் வேறு மொழிகளை கொண்டிருந்தது. அந்த பகுதி இன்றைய ஈராக், தென்கிழக்கு துருக்கி, சிரியாவின் சில பகுதிகள் என கொண்டிருந்தது. 'யூப்ரேட்ஸ்' மற்றும் 'டைக்ரிஸ்' நதிகளின் இடையே அது பரவி இருந்தது. அதுதான் உலகின் மிகப்பழமையான நாகரீகம் என ஐரோப்பிய ஆய்வாளர்கள் வரையறுத்தார்கள். பொது ஆண்டுக்கு 6500 ஆண்டுகள் முந்தையதாக அதை ஆய்வாளர்கள் இனம் கண்டார்கள். உலகில் 'மெஸபோட்டாமிய' நாகரீகம் மற்றும் 'எகிப்திய' நாகரீகமே மிகப் பழமையானவை என்று இவர்கள் பலரும் குறிப்பிட்டு வந்தனர். பாரதத்தின் தொன்மையை குறித்து நம் பழம்பெருமை வாய்ந்த வேதங்களும், நம்முடைய பண்டைய இலக்கியங்களும் வெளிப்படுத்திய கூற்றுகளுக்கு இவர்கள் போதிய மதிப்பளிக்கவில்லை. ஆனால் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கு இந்திய கம்பெனி ‘கராச்சி’ முதல் ‘லாகூர்’ வரை ரயில்வே பணிகளை துரிதப்படுத்திய நிலையில், எல்லாமே மாறிப் போனது. உலகின் பழம் பெரும் நாகரீகமும், பாரதத்தின் ஒப்பற்ற பெருமையும் உலகின் பார்வைக்கு வரத் தொடங்கியது. அதற்கு ஹரப்பா நாகரீகம் என்றும் சிந்து சமவெளி நாகரீகம் என்றும் பெயரிட்டார்கள்.
படத்தில் : சிந்து சமவெளியில் நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்ட பசுபதிநாதரின் (சிவபெருமான்) வடிவம்..
இன்றைய ஜோர்டானுக்கு மேற்கே இருந்த பகுதிகள் தான் பொது ஆண்டுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'லெவண்டைன்' பகுதிகள் என்று அழைக்கப் பட்டது. இப்பகுதிகள் கிழக்கு மெடிட்டேரியன் கடல் பகுதிக்கு அருகே உள்ள பகுதிகளை குறிக்கும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த லெவண்ட் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் தான் இன்றைய இஸ்ரேலின் பகுதிகளாக இஸ்ரேல் ராஜ்ஜியமாகவும், ஜுதா ராஜ்ஜியமாகவும் இரண்டு பகுதிகளாக இருந்தன. இந்த தெற்கு லெவண்ட் பகுதிகளை தான் 'கெனான்' என்று கிறிஸ்தவ பைபிள் குறிப்பிடுகின்றது. பொது ஆண்டுக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் இங்கு பல்வேறு பழங்குடிகள் சிறு சிறு குழுக்களாக இருந்ததாக சொல்கிறார்கள். 'சுமேரிய', அக்காடிய', 'அசிரிய', 'பேபிலோனிய' நாகரீகங்களை தன்னகத்தே கொண்டிருந்த மெஸப்பட்டோமிய நாகரீகத்தின் தாக்கம் இந்த பகுதிகளில் இருந்தது. இந்த மெஸப்பொட்டாமிய நாகரீகங்களில் பழமையானதாக சுமேரிய நாகரீகம் திகழ்ந்தது. மேலும் பண்டைய எகிப்திய நாகரீகங்களும், பிற்காலத்தில் கிரேக்க நாகரீகமும் இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின.
இந்த லெவண்ட் பகுதிகளில் இருந்த சிற்றரசர்களும், நாடோடி தலைவர்களும் பண்டைய எகிப்திய 'ஃபேரோ'க்களுக்கு (pharaoh) கப்பம் கட்டி வந்தனர். 'ஃபேரோக்கள்' என்றால் அரசர்கள் என்று பொருள். இந்த ஃபேரோக்கள்தான் பொ.மு மூவாயிரத்து இருநூறு வருடங்கள் முன் இருந்து, பொ. மு. முப்பது ஆண்டுகள் வரை (ரோமப் பேரரசால் ஆக்கிரமிக்கப்படும் வரை) கிட்டத்தட்ட மூவாயிரத்து நூறு ஆண்டுகள் எகிப்தை ஆண்டவர்கள்
பொ ஆ 1332ல் லெவட்ண்ட் பகுதிக்கு வடக்கே உருவாகி இருந்த 'ஹிடைட்' (Hittite) சாம்ராஜ்ஜியம் லெவண்ட் பகுதிகளை எகிப்திய ஆளுமையில் இருந்து கைப்பற்றியது. இந்த ஹிடைட் சாம்ராஜ்ஜியம் மத்திய அசிரிய சாம்ராஜ்ஜியத்தால் பிற்காலத்தில் வீழ்த்தப் பட, அசிரிய சாம்ராஜ்ஜியத்தின் ஆளுமையில் லெவண்ட் பகுதிகள் வந்தன. லெவண்ட் பகுதிகளின் சிற்றரசர்கள் மத்திய அசிரிய பகுதிக்கு கப்பம் கட்டத் தொடங்கினர். (இந்த அசிரிய சாம்ராஜ்ஜியம் 'பண்டைய அசிரிய' என்றும் - அதாவது பொ.மு. 2075 முதல் பொ மு 14ம் நூற்றாண்டு வரை, 'மத்திய அசிரிய' என்றும் - பொ. மு. 1392 முதல் பொ.மு. 1056 வரை மற்றும் 'பிற்கால அசிரிய' - பொ,மு, 911 முதல் பொ மு 609 வரை என ஆய்வாளர்களால் பிரிக்கப்படுகிறது)
பொ.மு. பத்தாம் நூற்றாண்டுக்கு பின் தான் தெற்கு லெவண்ட் பகுதிகளில் இருந்த பழங்குடிகள் மற்றும் நாடோடிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரிக்க தொடங்கியது. சாதகமான சீதோஷ்ன நிலைகளும், சூழ்நிலையும் இதற்கு காரணம் என்கிறார்கள். அப்பகுதியின் மக்கள் தொகை இருபது ஆயிரம் முதல் நாற்பதாயிரம் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கிறார்கள். பெரும்பாலும் மேட்டுப் பகுதிகளில் சமேரியா எனும் நகரத்தை தலைநகராக கொண்டு வாழ்ந்து வந்த இவர்கள்தான் ஹெப்ரு பழங்குடிகள் என அழைக்கப்பட்டனர் என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த குழுக்கள் ஒன்று சேர்ந்துதான் அக்காலகட்டத்தில் இஸ்ரேல் எனும் ராஜ்ஜியம் உருவானதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் யூதர்களின் 'ஜெனசிஸ்' எனும் பழைய ஏற்பாட்டின் படி, 'டேவிட்' எனும் அரசன் ஒருமித்த இஸ்ரேலிய ராஜ்ஜியத்தை (இஸ்ரேல் ராஜ்ஜியம் மற்றும் ஜுதா ராஜ்ஜியத்தை) ஆண்டதாக குறிப்பிடப்படுகிறது, டேவிட்டின் மகன் சாலமனின் மரணத்திற்கு பிறகு இஸ்ரேலில் இருந்த பல பழங்குடிகளுக்குள் பிணக்கம் ஏற்பட்டு ஐக்கிய இஸ்ரேல் 'செஹ்செம்' மற்றும் 'சமேரிய'ப் பகுதிகளை கொண்ட இஸ்ரேல் ராஜ்ஜியமாகவும், ஜெருசலத்தை தன்னகத்தே கொண்ட ஜூதா ராஜ்ஜியமாகவும் பிரிந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இதை அகழ்வாய்வு துறையினர் முற்றிலும் மறுக்கிறார்கள். இரண்டு ராஜ்ஜியங்களுக்கு முற்றிலும் தனித்துவம் வாய்ந்த கலாச்சாரம் மற்றும் பூகோள அமைப்புகள் இருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள்., இரண்டு ராஜ்ஜியத்துக்கும் இடையே எந்த விதமான பரஸ்பர உறவுகளும் இல்லை என்றும் தீர்மானமாக சொல்கிறார்கள். மேலும் ஜெனசிஸ்ஸில் ஜெருசலத்தின் முதல் வழிபாட்டு தளம் உட்பட பல பொது கட்டிடங்கள் கட்டப்பட்டது சாலமனின் காலத்தில் தான் என்று சொல்லப்படுகிறது. சாலமனின் காலத்தில் தான் பல புதிய நகரங்களும் அமைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பகுதிகளில் நடந்த அகழ்வாய்வு பணிகள் இதை மறுக்கின்றன. இது பொ.மு ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த அரசன் 'அஹப்பின்' காலத்தை சேர்ந்தவை என்று அவர்கள் கண்டறிந்தார்கள். ஜெனசிஸின் குறிப்புகள் படி, டேவிட்டின் மகன் சாலமனின் காலத்தில் அதாவது பொ மு 961 முதல் 922 ரை அப்பகுதியில் அமைதியும் செல்வ செழிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் 'ஐக்கிய இஸ்ரேல்' என்று ஒரு ராஜ்ஜியம் இருந்ததே ஒரு ஆதாரமில்லாத பொய்.
பொ.மு. 853ல் நடந்த 'கர்கார்' போரில் ((Qarqar) நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் போது, "அஹாப் எனும் இஸ்ரேலியன்" என அசிரிய அரசன் மூன்றாம் 'ஷால்மனேசர்' குறிப்பிடுவது இஸ்ரேல் எனும் ராஜ்ஜியம் உருவானதற்கு முக்கிய ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. இஸ்ரேல் ராஜ்ஜியம் உருவாகிய கால கட்டத்திலேயே அந்நாடு தன்னுடைய சுற்றுப் புறத்தில் இருந்த பல ராஜ்ஜியங்களின் அச்சுறுத்தலை சந்திக்கத் தொடங்கியது. உருவாகி ஒரு நூற்றாண்டே கழிந்திருந்த நிலையில், பொ.மு. 722ல், இஸ்ரேல் ராஜ்ஜியம் மீது படையெடுத்து அதை துண்டாடியது 'பிற்கால அசிரிய' சாம்ராஜ்ஜியம். அதன் தலைநகர் சமேரியா முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டு, அசிரிய பேரரசின் பகுதிகளில் இருந்த மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். ஒரு பகுதியை கைப்பற்றி விட்டால் அதை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர, அசிரிய பேரரசர்கள் அவ்வாறு செய்வது வழக்கம். (இன்றைய காஷ்மீரில் அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் அப்பகுதியை நாம் கட்டுக்குள் கொண்டு வர இயலும் என்று தோன்றுகிறது அல்லவா ? )
மேற்கண்ட இந்த நாடு கடத்தல்களில் இருந்து ஒன்றை நாம் புரிந்துக் கொள்ளலாம் யூதர்கள் எனச் சொல்லப்படும் இஸ்ரேலியர்களின் பூர்வக் குடிகள் அசிரிய சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்தவர்கள். அதாவது இன்றைய சிரியா, வடக்கு ஈராக், தென் கிழக்கு துருக்கி, வட மேற்கு ஈரான் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இஸ்ரேல் ராஜ்ஜியத்திற்கு பிறகுதான் சுமார் பொ மு. ஒன்பதாம் நூற்றாண்டில்தான், ஜெருசலத்தை தன்னகத்தே கொண்ட 'ஜூதா ராஜ்ஜியம்' உருவாகியது என்கிறார்கள். 'ஹெஜிகியா' (Hezekiah) எனும் அரசன் பொ.மு. 715 முதல் பொ.மு. 686 வரை, ஜுதா ராஜ்ஜியத்தை ஆண்டு வந்ததாக தெரிகிறது., இது அங்கு நடந்த பல அகழ்வாய்வுகளின் மூலம் அறிந்துக் கொள்ளப்பட்டது. பொ.மு. ஏழாம் நூற்றாண்டில் ஜெருச்சலம் பெரும் வளர்ச்சியை பெற தொடங்கியது. அது தன்னுடைய சுற்றுப்புற பகுதிகளின் மீது ஆளுமை செலுத்தவும் தொடங்கியது. ஜுதா ராஜ்ஜியத்தை பிற்கால அசிரியர்கள், தங்களுக்கு கப்பம் கட்டும் ஒரு பகுதியாகவும், தங்கள் சொற்படி கேட்கக்கூடிய ஒரு பகுதியாகவும் உருவாக்கி வைத்திருந்ததே காரணம்.
ஏழாம் நூற்றாண்டின் இடையில் பிற்கால அசிரிய சாம்ராஜ்ஜியம் பேபிலோனியர்கள் வசம் வீழ்ந்தது. அதன் பின் அப்பகுதி எகிப்திய மற்றும் பேபிலோனியர்கள் போட்டி ஆளுமையில் சிக்கித் தவித்தது. பேபிலோனியர்களின் ஆளுமையில் அதன் பொருளாதாரமும், மக்கள் தொகையும் சிதையத் தொடங்கியது. ஜெருசல பகுதிகளும் குறுகத் தொடங்கியது. பேபிலோனியர்களின் வழக்கமான அரசியல் யுக்தி படி, அதன் தலைநகரம் ஜெருசலத்தில் இருந்து மிஸ்பா (Mizpah) வுக்கு மாற்றப்பட்டது. பேபிலோனியர்களின் கட்டுப்பாட்டில் ஜுதா ராஜ்ஜியம், 'யெஹுத் மெதிந்தா' (Yehud Medinata) என்று அழைக்கப்பட்டது. ஜெருசலத்தில் இருந்த வழிபாட்டு தளங்கள் புறந்தள்ளப்பட்டு, அதற்கு வடக்கே 12 கிலோமீட்டரில் இருந்த பெஞ்சமின் பகுதியின் 'பெத்தல்' வழிபாட்டு தளங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த 'பெத்தல்' ஜெனசிஸ் எனப்படும் பழைய ஏற்பாட்டில் பலமுறை குறிப்பிடப்படுகின்றது. (இங்குதான் ஜெனசிஸ் 28 படி, ஜேகப் தன்னுடைய சகோதரனின் கோபத்துக்கு ஆளாகி தப்பித்து ஓடி ஒரு பாறையில் படுத்திருந்தாகவும், கடவுளானவர் ஒரு ஏணியை சுவர்கத்தில் இருந்து பூமிக்கு தொங்கவிட்டு, அந்த ஏணியில் உச்சியில் நின்றுக் கொண்டு, லெவண்ட் (கெனான்) பகுதிகளை ஜேகப்புக்கு தருவதாக வாக்குறுதி தந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது)