ஏதோ வந்தோம் போனோம் என கடந்து போகாது ஏதோ நான் படித்தை கேட்டதை பார்த்த பதிவிடவே விரும்புகிறேன்...அவைகள் #நீள் பதிவாகவே அமைகின்றன..
வாசிக்க விருப்பமுள்ளோர் தொடரலாம்..விருப்பமில்லாதோர் நட்பிலிருந்து விலகினாலும் எந்த ஆட்சேபனையுமில்லை.......ஒரே ஒருவருக்கு தகவல் புரிந்தாலும் நலமே....
#உப்பு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்.. உப்பில்லா பண்டம் குப்பையில்... சிலருக்கு உப்பு சேர்க்கவே கூடாது உணவில்..
பன்னாட்டு வணிகத்தில் வெண்மை புரட்சியில் உப்பு பெரும் வணிகம்...
சோடியம் உடலில் இல்லையேல் மரணம்.. தினம் இரண்டு அவுன்ஸ் உப்பாவது நம் உடலில் சேர வேண்டும்... முக்கியமாக வெயிலில் வேலை செய்வோர்க்கு அவசியம்...
தரமான உப்பு என்பது வெள்ளை வெளேரென மணல் மணலாக.. அப்புறம் ரொம்ப முக்கியம் அது அயோடின் கலந்த உப்பாக இருக்க வேண்டும். ஆம் அரசும் இதையேதான் வலியுறுத்துகிறது.
ஏன்..?
(1) பொதுவாக அயோடின் குறைபாடால் பெரும்பாலோனோருக்கு தைராயிடு குறைபாடு ஏற்படுகிறது. (2) குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
இப்படித்தான் அரசும், மருத்துவ குழுவும், உப்பு விற்கும் கார்போரேட்டும் நம்மிடம் அயோடின் உப்பை சிபாரிசு செய்கிறார்கள்.
சரி. இதனை எப்போது கண்டுபிடித்தார்கள்..?
1924ல் அமெரிக்காவில் சமையல் உப்புடன் அயோடின் கலந்து விற்றால் எல்லோருக்கும் மிக சிறிய தேவையான அளவு அயோடின் துல்லியமாக போய் சேரும் என்பதை சோதனையாக செய்தறிந்து அதே வருடத்தில் வர்த்தக ரீதியில் விற்கவும் தொடங்கிவிட்டார்கள்.
அதன் பிறகு அதனை 1950 ல் இந்தியாவில் சோதித்தார்கள். இதில் பலன் இருப்பதாக உறுதி செய்து பின்னர் இந்தியாவிலும் அயோடின் கலந்த மேசை உப்பு ?தயாரித்து விற்பனைக்கு வந்தது. ஆனால் இயற்கையில் கிடைக்கும் கடல் உப்பு கிலோ 50 பைசாவுக்கு விற்கும்போது அயோடின் கலந்த உப்பை கிலோ ரூ.7 க்கு வாங்க யாரும் தயாராக இல்லை.
இந்திய மருத்துவ கவுன்சிலின் கணக்கெடுப்பின் படி 1990 - 2000 வரையிலான காலத்தில் மொத்த மக்கள்தொகையில் 2% முதல் 3% வரை #மட்டுமே அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் தாக்கிய மக்கள் இருந்தார்கள். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் யாருக்குமே அயோடின் பற்றாக்குறை நோய்கள் இல்லை.
#அயோடின் என எளிதாக சொன்னாலும் உப்பில் உண்மையில் கலப்பது #பொட்டாசியம்அயோடைடு எனும் வேதிப்பொருளை. இதை இந்திய #சுற்றுசூழல்அமைச்சகம் "#விஷம்" என குறித்துள்ளது. எனினும் 1997 ஆம் ஆண்டு முதல் அயோடின் கலந்த உப்பை விற்பதை அரசு சட்டபூர்வமாக்கியது. 15-08-2005 அன்று முதல் அயோடின் கலந்த உப்பு விற்பதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆனால் இதன் பிறகுதான் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, மகப்பேறின்மை, ஆட்டிசம் மற்றும் மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள், தேவையற்ற உடல் பருமன் பிரச்சினை, மிகையான பதட்டத்தால் வரும் பிரச்சினைகள் மிக அதிகமாகி விட்டது தெரியுமா..?
எனில் ஏன் இந்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஆகியோர் இன்னமும் அயோடின் கலந்த உப்பினை தீவிரமாக விற்று வருகிறார்கள் என தெரியுமா..?
காந்தியின் உப்பு சத்தியாகிரகமும்...இந்திய விடுதலை போராட்டங்கள் அதிகரித்ததும் உப்பினால் தான்... விருப்பமுள்ளோர் தொடரலாம்
#உப்பு#மினிதொடர்2 உலகின் நீளமான தடுப்பு சீன பெருஞ்சுவர்.. அதனை ஒத்ததாக உலகின் பெரும்தடுப்பு வேலியாக கிபி 1872ல் சுமார் 4000 மைல் நீளத்திற்க்கு 14000 ப்ரிட்டீஸ் ஊழியர்கள் காவலர்கள் பணிபுரிந்த , 12 அடி உயரம் கொண்ட ஓர் உயிர் வேலி இந்தியாவில் இருந்துள்ளது..
இதுமஹராஷ்டிரா பர்ஹான்பூரில் தொடங்கி மத்தியபிரேதேசம் உ.பி ஹரியானா பஞ்சாப் பாக்கிஸ்தான் சிந்து மாகானம் வழியாக கஷ்மீர் எல்லையில் முடிவடைந்துள்ளது..(வரைபடம் கமெண்டில்)
இத்தனை பெரிய சுங்க வேலி ஏன்?எதற்க்கு?
பண்டைய இந்தியாவில் கிராமங்கள் அனைத்துமே தற்சார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவை.. பால் நெய் இறைச்சிக்கு கால்நடைகள்..பருப்பு அரிசி காய்கறிகள் சுய உற்பத்தி.. இவைகளுக்கான நீர் ஆதாரம் என உள்கட்டமைப்புக்கள் மிக சிறப்பாகவே இருந்தன... இத்தோடு வேளான் உற்பத்தி கருவிகள் ஆயுதங்கள் கூட கிராமங்களிலேயே உருவாக்கப்பட்டன...நாம்கூட சுயமாய் கருவிகள் தயாரிக்கும் கொல்லர் உலைகளை கண்டிருக்கிறோம்..தற்போதும் ஆங்காங்கே உள்ளன..
உடைகளும் சில வாசனை பொருட்கள் மட்டுமே பண்டமாற்று முறை..பின் ஏன்? வேலி?
இந்தியாவின் நிலப்பரப்பில் வடகிழக்கு மாகாணங்கள் சில வட மாநிலங்கள் கடல் பகுதியிலிருந்து தொலைவில் உள்ளன.மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார்..உபி.மபி பகுதிகளுக்கு உப்பு பிற இடங்களில்இருந்தே சென்றன..
குஜராத்கட்ச் வளைகுடா பகுதிகளில் பெரும் ஆறுகள் கலக்காததால் இயற்க்கையாகவே உப்பு அதிகம் விளையும் இடமாக உள்ளது,மேலும் குஜராத் உப்பு ஏரியான சாம்பார் ஏரி கோடைகாலத்தில் வற்றி உப்பு வயல் ஏரியாக மாறிவிடுகின்றது..மஹராஷ்ட்டிரா ஒரிசாவிலும் உப்பு காய்ச்சபட்டூள்ளது.. இது போக தற்போது பாக்கிஸ்தான் கட்டுபாட்டிலுள்ள இமயமலை பகுதிகளில் இயற்க்கையாகவே உப்பு விளையும் இடங்கள் உள்ளன.. இவைகளிலிருந்து உப்பு எடுத்து செல்ல உப்பு பாதைகள் தனியாக இருந்துள்ளன.. அதாவது கேரளா ஆந்திராவில்லிருந்து அரிசிக்காக தனி பாதைகள் நம் பகுதிகளில் முன்னர் இருந்தனைப்போல...
அன்றைய பீகாரின் ஒரு விவசாயின் ஆண்டு வருமானத்தில் ஒரு மாத வருமானம் உப்புக்காகவே செலவிடபட்டதாக வரலாற்று ஆய்வாளர் #ராய்மாஸ்க்ஹாம் சொல்கிறார்..
பண்டமாற்று முறையாக நாணயமாக கள்ள பணமாக கூட உப்பு இருந்துள்ளது..
ஒரு நாளைக்கு சோடியம் குளோரைடு மனிதனுக்கு குறைந்தது 1500 மிகி லிருந்து 2500 மிகி வரை தேவை.இல்லையேல் Hyponatremia எனும் நோய் ஏற்படும்..குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.. இந்த நோய் ஏற்பட்டால் நோயுற்றவரோ மருத்துவரோ இது உப்பு குறைவால் என கண்டறிவது பெரும் சிரமமாம்..
கிழக்கிந்திய கம்பென உப்பு வணிகம்... அழிந்து போன உப்புக்குறவர்கள் எனும் பழங்குடி ....
ஆங்கிலேயர்கள் முதலில் #வங்காளத்தைக் கைப்பற்றினர்... வங்கத்தில் மகாநதி காரணமாக நன்னீர் நிலைகளே அதிகம்.. ஆகவே விறகுவைத்து நீரினை கொதிக்க வைத்து உப்புகய்ச்சினர்.. இதில் ஈடுபட்டது பெரும்பாலும் வருமானத்தில் கடை நிலை மக்களும் உடல் உழைப்பு தொழிலாளர்களுமான தலீத்துகளே.. இங்குதான் பிரச்சனை.... ஏற்க்கனவே சமைக்கப்பட்டது போல் தீயிட்டு எரித்து கிடைத்த உப்பு... இன்னொன்று தயாரிப்பது தலீத்... ஆகவே வங்க பிராமணர் இதனை பயன்படுத்த மறுத்தனர்..
ஆகவே ஆங்கிலேயர் கப்பல்களில் வியாபார பொருட்களை கொண்டுவரும் போது கப்பலின் அடியில் சம எடைக்காக உப்புக்களை நிறப்பி அங்கும் இங்கும்மாக கொண்டு சென்று வந்தனர்... அந்த உப்புக்களை மேல் தட்டு மக்கள் விரும்பி வாங்கினர்..இறக்குமதி செய்யப்பட்ட அதன் விலை அதிகம். ஆகவே உள்ளுர் உற்பத்தியின் வரியை உயர்த்தி இவைகளைவாங்க வைக்கப்பட்டனர்.(தற்போதைய கச்சா எண்ணை #பெட்ரோல் வியாபார தந்திரம் நினைவில் வந்தால் நான் பொருப்பல்ல😝)
தங்கள் பொருட்க்களுக்காக சுதேதி உற்பத்தியை நசுக்க உள்ளூர் உற்பத்திக்கு அதிக வரியை கட்டுபாட்டை விதித்தனர்.. இன்றைய உள்ளூர் உற்பத்தியை நசுக்கும் கார்பரேட் நரி தந்திரத்தின் வணிக யுக்தியின் முன்னோடிஅதுவாக இருக்கக் கூடும்..
ஆகவே ஒரிசாவிலிருந்து சூரிய ஒளியால் தயாரான உப்புக்கள் வங்கத்துக்கு வந்தன.. மொகலாயர்கள் ஆட்சியில் வரிகள் கட்டுக்குள் இருந்தன..பின் வந்த ஆங்கிலேயர்ஆட்சியில் #பிளாசி போரில் ராபட் கிளைவ் வங்காள நவாபை வென்று ஆட்சியை கைப்பற்றியதும் வரி சுங்கவரி என அதிகரித்தது.. உப்பு காய்ச்சும் ஆலைகளுக்கு வரியை பலமடங்காக்கினார்...பெரும் வருவாயை அது அன்றைய அரசுக்கு தந்தது... (எளிதான புரிதலுக்கு இன்றைய டாஸ்மாக் With தமிழக அரசு..)
ஒரிசா எல்லையில் மகாநதி கரையோரம் ஆரம்பித்த சுங்க வரி சாலைகள் ப்ரிட்டீஷார் ஆட்சி விரிய விரிய பீகார் உபி மபி என நீண்டு மஹரஷ்ட்டிர பாஹன்பூர் வரை நீண்டது.. அகலாபாத்திலிருந்து நேப்பாளம் வரையிலும் அங்கிருந்து சிந்து வரையிலும்1834 ஜி.என்.ஸ்மித் வேலிகளை முள்மரங்களால் அமைத்து நிறைவு செய்தார். இந்த #ஸ்மித் மற்றும் #ஹெஹல் எழுதிய இந்திய வரலாறே இன்றும் நாம் படித்து வருகிறோம்.. (இருவரும் எழுதிய வரலாற்றில் தமிழகத்தை பற்றி பெரும்ஆவனங்கள் உண்டு.முடிந்தால் பின்னர் காண்போம்) ஆனால் அதில் கூட இந்த உப்பு வரலாறு இல்லை..
#ஆலன் ஆக்டேவியம் ஹீயூம்.. சிப்பாய் கலகத்தை ஒடுக்கிய மிக முக்கிய ஆட்சியாளர்..இவர் மிக கடுமையாக வரிகளை கையாண்டார்.. இவரை பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?? உப்பு வரிகளை கடுமையாக்கம் போது ஏற்பட்ட சில எதிர் குரல் சலசலப்பிற்க்காக இவர் ப்ரிட்டீசாரிடம் சொன்னது இந்தியர்களுக்காக ஓர் அமைப்பு வேண்டும் என.. அந்த நேரத்தில் இந்திய மக்களை உற்று கவனித்த இவர் இந்திய ஆன்மிகத்திலும் தத்துவ ஞானத்திலும் கவனம் செலுத்தினார்.. இதனால் அவர் கண்டுபிடித்த உபாயம் வரிக்காக எழும் எதிர்ப்பை குறைத்து கொள்ள இந்தியர்களுக்கு தன்னுரிமை நிர்வாகத்தில்ல பணி கொடுக்க விரும்பினார்.. இதற்க்காக ஓர் அமைப்பு நிறுவி அதன் மூலம் எதிர்ப்பாளர்களை ஒறுங்கினைக்க நினைத்து ஓர் அமைப்பை 1885ல் உருவாக்கினார்....... பின்னாளில் விடுதலைக்காக போராடிய, இன்று நாம் விடுதைலைக்காக போராட வேண்டிய சூழலை உருவாக்கிய #காங்கிரஸ் ன் தொடக்கம் தான் அந்த அமைப்பு... #காந்தி#உப்புசத்தியாகிரகம் வரலாறு மாறிப்போனதை : இன்றைய #அரசுஅதிகாரிகளின் ஊழல் முன்னோடிகளை
#உப்பு#மினிதொடர்4 இந்தியாவில் உருவான மாபெரும் பஞ்சங்களில் இரண்டாவது இடம் 1876-78 ல் .. சுமார் ஆறரைக்கோடி பேர் மடிந்தார்கள்.. 30 லட்சம் பேர் வங்கத்தில்..... கிட்டதட்ட அன்றைய இந்திய மக்கள் தொகையில் கால்வாசி பேர்.. இந்த பஞ்சம் விளைச்சல் இல்லாமல் மக்கள் மரணிக்கவில்லை.. 1874-75 விளைச்சல் மிக சிறப்பாக இருந்தாகவே ப்ரிட்டீஷ் ஆவனங்கள் சொல்கின்றன..
பொதுவாகவே இந்தியாவின் ஒரு வருட விளைச்சல் ஐந்து வருடம் பஞ்சம் தாங்கும் தன்மை கொண்டது.. நம்மில் நுகர்வு கலாச்சாரம் குறைவு..தர்சார்பு அதிகம். **[(இவைகள் தற்போதைய காலத்தில் வெகுவாக குறைகின்றதனை நாமும் ஆட்சியாளர்களும் கவனிக்கவோ கவலை கொள்ளவோ இல்லை.)]
அன்று இந்தியாவில் உருவாக்கப்பட்ட அனைத்து ரயில் பாதைகளும் துறைமுகங்களிலேயே முடிந்தன. ப்ரிட்டீஷின் உலக விரிவாக்க போரின் முடிவில்லா உணவு தேவைக்கு இந்திய விளைச்சல்கள் கப்பல்களில் சென்றன..பின்னாளில் நாம் காண இருக்கும் #சாகர்மாலா போல..
இந்த நிலையில் முதலில் வங்க தேசத்தில்(அன்றைய இந்தியாவின் பகுதி) மக்கள் செத்துவீழ தொடங்கினர்.. உணவும் உப்பும் செல்ல வேலிகளும் சுங்க சாவடிகளும் தடுத்தன.. உணவே கிடைக்காத போதும் உப்புக்கான வரி நீக்கப்படவோ குறைக்கப்படவோ இல்லை..உணவுக்கே வழியில்லை..உப்புக்கு வரி கொடுத்து வாங்க இயலாது தவிர்த்தனர்..
உப்புக்குறைபாட்டால் மக்கள் மொத்த மொத்தமாக மடிந்தனர்..கால்நடைகளும் லட்சங்களில்..தமக்கு தேவையான உப்புக்களை மண்ணை நக்கி கிடைக்கும் படி கால்நடைகள் பெற்றுக் கொள்ளும்..அவ்வாறு இல்லாத போது வளர்ப்போர் நீருடன் கலந்து தருவது வழக்கம்..
இந்த நிகழ்வினால் 1879 ல் #வைஸ்ராய் லார்ட் லிட்டன் உள்ளுர் வரியை ரத்து செய்தார்..
#காந்தி உப்புசத்தியாகிரகம் தொடங்குகிறார்.. 1930 மார்ச் 12ல்... அவரை கேலி செய்கின்றனர்இந்திய பெரும் தலைவர்கள். அப்போது நேரடி உப்புகாச்சும் இடங்களுக்கு மட்டும் வரிவிதிப்பு விதிக்கப்பட்டிருந்தது..உப்பு காய்ச்ச பல சட்ட விதிமுறைகள் இருந்தன.. (இத் தொடர் எழுத ஆரம்பித்ததே தற்போதைய உப்பு வியாபாரத்தில் அரசின் நிலைப்பாட்டை பற்றியே...ஆக இரண்டிற்க்கும் வேறுபாடு இல்லை போல)
அந்த நேரம் மக்களும் பழைய உப்பு கணக்கை மறந்து போயினர்..(இன்றைய சீசன் போராளிகள் போல) அன்றைய நேரம் உப்புக்கு மட்டுமல்லாது நிலவரியும் மிக அதிகம்.. நிலவரி பெரும் பணக்காரர்களை பாதிப்பது..உப்புவரி அடித்தட்டு மக்களை பாதிப்பது.... ஆகவே அன்றைய உயர்குடிகள் காந்தியை மிக கடுமையாக எதிர்த்தனர்..நிலவரிக்காக மட்டுமே போராட சொன்னார்கள்.. ப்ரிட்டீஷார் உப்புவரியை அதிகரிக்க இந்திய உயர்குடீகளால் கட்டாயபடுத்தப்பட்டனர்.
இந்த வரிவிதிப்புக்கள் ஊழலுக்கே வழிவகுத்தன..#ராபட்கிளைவ் ஊழல் மூலமே இந்தியாவை வென்றுள்ளார்.. சாதாரண குமாஸ்த்தாவாக வந்த கிளைவ் பின் ப்ரிட்டிஷ்சின் முதல் பத்து செல்வந்தர்களில் ஒருவராகிப்போனார்.(எதும் மந்திரிகள நினைக்காதீங்க)
அன்றைய ப்ரிட்டீஸ் அதிகாரிகள் குருகிய காலகட்டத்திலேயே பெரும் பணக்காரர்களாக மாறிப் போனார்கள்.. கூடவே கீழ் மட்ட பணிகளில் இந்தியர்களை குறைந்த ஊதியம் கொடுத்து அவர்களின் மற்ற தேவைகளுக்கு தேவைக்காக தேடிவரும் மக்களிடம் பணம் பொருட்கள் பெற்று கொள்ள ஊக்குவித்தனர்.(நம்ம ஊரூ அரசு அலுவலங்கள் )
இதனால் இந்தியர்கள் #கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிய ஆர்வத்தோடு போட்டியிட்டனர்.. ப்ரிட்டீஷார் தங்களின் அதிகார வர்க்கத்தை இவ்வாறு தான் உருவாக்கினார்கள்.. சிலர் எழுதும் வரலாறு போல் அவர்கள் ஆட்சி அடிதள மக்களுக்கு அத்தனை சிறப்பாக இருக்கவில்லை...
இதன் நீட்சியாகவே இன்றும் நீடிக்கும் நம் அதிகார வர்க்கம் ஊழலால் #ஊழலுக்காகவே உருவாக்கப்படுகிறது...
#உப்பு#மினிதொடர்5 உலகில் முதன் முதலில் #எகிப்து மக்களே கடல் நீரிலிருந்து #சோடியம் உப்பை பிரித்ததாக வரலாறு சொல்கிறது..முன்காலத்தில் எகிப்து #ஐரோப்பியநாடுகளிடையே செல்வாக்காக விளங்க காரணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு உப்பு விற்று செல்வம் ஈட்டியதே..
போர்களத்தில் கூட வீரர்கள் சோர்வடையும் போது சிறு உப்பு கட்டிகள் கொடுத்து அவற்றை நாக்கில் வைத்து உற்சாகம் பெருவர் எனவும் ஆய்வுகள் சொல்கின்றன..
பண்டைய காலத்தில் #ஒஸ்டியாவிலிருநேது#ரோம்முக்கு உப்பு கொண்டு செல்லபட்ட சாலையின் பெயர் வயசாலரியா.. போர்வீரர்களுக்கு உப்புக்களோ அல்லது அதனை வாங்கும் அளவில் பணமோ ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது..
அதனால் தான் அந்த பணத்திற்க்கு சாலரியம் அர்ஜெண்ம் என்று பெயர்.. அதுதான் நாளைடைவில் மருவி #சாலரி#Salary என மாறிவிட்டது..
நம்நாட்டில் கூட செய்த வேலைக்கு பகரமாக நெல்லும் உப்புமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது..#நெல்(சம்பா)+உப்பு(அளம்)=சம்பாஅளம் =#சம்பளம்..
மன்னர் ஆட்சிகாலத்தில் அரசுக்கு செய்யும் கட்டாய ஊதியமில்லா வேலை "#வெட்டி" வேலை எனப்பட்டது..இதுவே காலப்போக்கில் குமரி மாவட்ட திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் "#ஊழியம்" என வழங்கப்பட்டது.. தற்காலங்களில் இறைவனுக்கு கோயில்களுக்கு செய்யும் பணியை நாமும் ஊழியம் என்றே அழைக்கிறோம்..
பைபிளில் 30 மேற்பட்ட இடங்களில் உப்பை பற்றி சொல்வதாக படித்துள்ளேன்..நேர்மை நீதிக்கு அடையாளமாக உப்பை குறிப்பதாகவும் வாசித்துள்ளேன்.. இந்து மதத்தின் மங்கல நிகழ்வுகள் உப்பு முக்கிய இடம் பெரும்..(புதுவீடு பால் காய்ச்சல் திருமண விருந்து சத்தியம் செய்வது ),என.. இஸ்லாமியர் மற்றும் சில சாதிய வழக்களில் மணமகள் மணமகன் வீடு செல்லும் போது உப்பும் சிறு கூடையில்ல உடன் கொண்டு செல்லபடுகிறது..கொண்டு சென்றதனை முதன் முதல் மணமகன் வீட்டு வேலையாக அதனை கீழே கொட்டி அளவைகளில் அள்ளும் வழக்கம் இன்றும் உள்ளன.
தமிழின் பெருமையும் முதுமையும் கூறும் #தொல்காப்பியத்திலும் ஐந்து வகை நிலங்கள் அவை சார்ந்த தொழில்கள் பற்றி சொல்கிறது..அதில் முக்கியமானது நெய்தல் நிலம்.. அங்கு கிடைக்கும் உப்புக்களை மாட்டுவண்டி கழுதை தலைச்சுமை மூலமாக பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்றவர்கள் #உமணர்கள் அல்லது உப்புக்குறவர்கள்..உப்பை கொடுத்து நெல் போன்ற உணவு பொருட்களை பண்டமாற்றாக பெற்றுள்ளனர்.. பின் #கிழக்கிந்திய கம்பெனி வரிவிதிப்புகளில் காணாமல் போன பல பழங்குடிகளில் இவர்களும் ஒருவர்...
கி.பி 12ல் உப்பு காசு என கல்வெட்டுகளில் கி.பி 14 ல் #பிரான்மலை சொக்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் #சடையவர்மன் நான்காம் சுந்தரபாண்டீயன் (1324-)கால கல்வெட்டு ஒன்று திருநள்ளாரில்..இராமநாதபுரம் ரகுநாத திருமலை சேதுபதி1647-72 உப்பள குடிகளுக்கான சம்பளம் செப்பு பட்டயத்தில் .. திருமலை நாயக்கர் கால செப்பேடு என உப்பு வரலாறு தொடர்கிறது . (கல்வெட்டுகள் அதில் சொல்ல பட்டவைகளை இங்கு பதிந்தால் நிச்சயம் வாசிக்க வருவோர் குறையலாம்....ஆகவே சுருக்கமாக)
#உப்பு#மினி தொடர்6 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்..என #ஏசு தன் சீடர்களிடம் கூறினார். (#மத்தேயு 5:13). நம் இருவரிடையே "உப்பு" உள்ளது என்பார்கள் #அரேபியர்கள் இருவர் ஒப்பந்தம் பேசும் போது....
ஆப்பிரிக்காவில் வாழ்ந்த #மூரீஷ் நடோடி வணிகர்கள் உப்புக்காக கிராமிற்க்கு கிராம் தங்கம் கொடுத்து வாங்கினர்..இன்றளவும் ஆப்பிரிக்காவில் உப்பளம் வைத்திருப்போர் பெரும் செல்வந்தர்கள்..
18 நூற்றாண்டு வரை விருந்து மேஜைகளில் உப்பின் அருகே அமர்ந்திருப்பவர் பெரும் மரியாதைக்குரியவராகவோ மன்னராகவோ இருப்பர்.. #லியானார்டோ டா வின்சி வரைந்த "#இராபோஜன"ஓவியத்தில் #யூதாஸ்காரியோத்துக்கு முன் உப்பு ஜாடி ஒன்று கவிழ்ந்து கிடக்கும்.. (#Last-Shaffer, ஏசு கடைசி இரவு உணவு என சொல்லபடுவது) உப்பு சிந்துவது அபசகுணம் எனும் கெட்ட சகுனம் என அக்காலம் தொட்டு இக்காலம் வரை சிலரால் நம்பப்படுகிறது...
உலகிலேயே உப்பை பிரித்தெடுக்கும் பெரிய நிறுவம் #மெக்சிக்கோ வில்லுள்ள #பாயீயா ஸேபாஸ்டியான் எனும்நிறுவனம்..
#சேர#சோழ#பாண்டியர்கள் காலத்திலும் உப்பளங்கள் உப்பு சார் தொழில்கள் அரசின் கட்டுபாட்டிலேயே தான் இருந்துள்ளது??
சரி இவ்வாறாக தொடர்ந்தால் நீண்டு கொண்டே செல்லும்.. தொடரை தொடங்கிய காரணம் #அயோடின் எனும் பொருள் உப்பில் தேவையா என? அதனை சொல்ல தற்க்கால அரசியலை பேச வேண்டும்..அதனை பேசும் முன் முற்காலங்களை கண்டு ஒப்பீடு செய்வது சிறந்ததாக இருக்கும் எனும் நோக்கமே...
இறுதியாக அயோடின் தேவையா? மற்றும் இன்றைய உப்பள #தொழிலாளர்கள் ஆலைகள் நிலை? உப்பின் மீது ஏன் அரசின் கரிசனம்?? #குஜராத்தின் பெரும் ஆலைகளினாலா?? #பெட்ரோல் கழிவுகளே நாம் உண்ணும் உப்புக்களா???
நெல்லுக்கு, அரிசிக்கு, உளுந்துக்கு மாற்றாக உப்பை விற்பார்கள். அந்த உப்புக்குப் பெயர் 'சோடியம் குளோரைடு' என்பதைக்கூட நாம் அறிந்திருக்கவில்லை. நமக்கு அது அவசியமாகவும் இல்லை. இன்று, வண்டி மாட்டு உப்பு வியாபாரிகள் காணாமல் போய்விட்டார்கள். பாக்கெட் பாக்கெட்டாக சோடியம் உப்பு கடைகளில் அடுக்கப்பட்டிருக்கிறது. நாம் சாப்பிட்ட உப்பில் அயோடின் இல்லையென்று கூறி, பாக்கெட் உப்பை அறிமுகம் செய்தார்கள்.
அமெரிக்க நிலப்பகுதியில் அயோடின் இல்லாததால் அவற்றில் விளையும் காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருள்களில் அயோடின் சத்து குறைவாக இருந்தது. அதனால் அதைச் சாப்பிட்ட அமெரிக்கர்களுக்கு ஹைபர் தைராய்டு ஏற்பட்டது. அதனால் அங்கே உப்பில் அயோடின் சேர்க்கச் சொன்னார்கள். படிப்படியாக நமக்கும் அதைப் பழக்கி விட்டார்கள்.
இதோ விகடனின் இந்த முழு கட்டுரையும் படியுங்கள்....உபயோகமாய் இருக்கும் --->