ஜாகிர் நாய்க்: “Na casya kascij janita na cadhipah.” “Of Him there are neither parents nor lord.” [Svetasvatara Upanishad 6:9] பொருள்: அவனுக்கு பெற்றோர்களோ ஆண்டவனோ இல்லை. (ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9)
The Truth: “na tasya kaścit patir asti loke na ceśitā naiva ca tasya liṅgaṃ / sa kāraṇaṃ karaṇādhipādhipo na cāsya kaścij janitā na cādhipaḥ” // 6.9 //
He has no master in the world, no ruler, nor is there even a sign of Him by which He can be inferred. He is the cause, the Lord of the lord of the organs; and He is without progenitor or controller. [Svetasvatara Upanishad 6:9]
பொருள்: அவனுக்கு இவ்வுலகில் தலைவனோ ஆட்சியாளனோ போன்ற அதிகாரம் செலுத்தும் யாரும் கிடையாது. அவனே மூலகாரணம், அவனே உறுப்புகளின் தலையாயவன். அவனுக்கு மூதாதையரோ, கட்டளையிடுவோரோ இல்லாதவன். அவனுக்கு எந்த சின்னமும் இல்லை. எந்த சின்னத்தையும் கொண்டு அவனை குறிக்க வேண்டாம். (ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9)
முழு வாசகத்தையும் பயன்படுத்தவும். முடியாதுன்னா.. அந்த வாசகத்தை முழுவதும் தவிர்த்துவிடவும்..
ஆனால் விசயம் உண்மை.. எது ஒன்றாகவும் தனித்து இல்லாத, தனித்து வரையறுக்கமுடியாத ஒன்றை எல்லாமுமாக பார்க்கவேண்டும். சுருக்கமாக சொல்லனும்னா.. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என அனைத்தும் அவனே என்றே பார்க்க வேண்டும்.
மத்த எல்லாம் பொய்.. காபா மட்டுமே நிஜம் என்பது அபத்தமான வாதம்.
ஜாகிர் நாயிக்: ““Na tasya pratima asti” “There is no likeness of Him.” [Svetasvatara Upanishad 4:19] பொருள்: அவனை போல் உருவமில்லை (ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)
The truth: “nainam ūrdhvaṃ na tiryañcaṃ na madhye parijagrabhat / na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ” // 4.19 //
No one can catch hold of Him either from above, or across, or in the middle. There is no likeness of Him. His name is Great Glory (Mahad Yasah).
உண்மை: “nainam ūrdhvaṃ na tiryañcaṃ na madhye parijagrabhat / na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ”
பொருள்: மேலிருந்தோ, பக்கமிருந்தோ நடுவிலிரிந்தோ என அவனை யாரும் பிடிக்க முடியாது. அவனை போல் உருவமில்லை. அவன் நாமம் மகா கீர்த்தி. (Mahad Yasah). (ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)
மஹத் யாஷ் என உள்ளதையும் அப்படியே கூறவும்.
மஹத் யாஷ் என சொல்வதில் ஜாகிருக்கு ஏன் தயக்கம்?.. மஹத் யாஷ் என்றால் அல்லாவின் தன்மை எனும் கட்டமைப்புகள் உடைபடும் என்பதால் தானே...
ஜாகிர் நாய்க் “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.” பொருள்: அவன் உருவம் தெரியாது. யாரும் அவனை தம் கண்ணால் காண முடியாது. (ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)
உண்மை: “na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ / hṛdā hṛdisthaṃ manasā ya enam evaṃ vidur amṛtās te bhavanti “ பொருள்: அவன் உருவம் காண்பதற்கான பொருள் அல்ல. யாரும் அவனை கண்ணால் காண முடியாது. கூர்மையான அறிவாற்றலும், ஆழ்ந்த சிந்தனை தரும் ஒருமித்த ஞானமும் கொண்டோர் அவன் நெஞ்சத்தில் குடி இருப்பதை உணர்ந்து மரணமில்லாமல் வாழ்வர். (ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)
மறுபடியும் அதே.. முழு வாசகத்தையும் மேற்கோள் காட்டி உண்மையை வெளிபடுத்தவும்.
ஜாகிர் நாய்க் முழு வாசகங்களை மேற்கோள் காட்ட மாட்டார். அப்படி செய்தால் அவருடைய ஆதரவாளர்களை அவர் இழந்து விடுவார் ஏனென்றால் முழு வாசகங்கள் அவருடைய மதத்திற்கு எதிராக இருக்கும்.
சனாதன தர்மப்படி வாழ்பவர்களே, இந்த ஜாகிர் நாயக்கை தூற்ற வேண்டாம். அவர்போலுள்ள மனிதர்கள் என்ன செய்வார்களோ அதைதான் அவர் செய்கிறார், அதாவது அதுதான் அவர் பணி. நம் கடமை அவர் பரப்பும் பொய்களை களைவது. ஜாகிரை பின்பற்றுவோரை கலாய்ப்பது. ஜாகிர் அவர் வேலையை செய்யட்டும். நாம் நமது வேலையை செய்வோம்.. இந்த ஏமாற்று ஆசாமியின் முகத்திரையை கிழிப்பதற்கும், நம் சனாதன தர்மத்தை பரப்புவதற்கும் நாம் வேதங்களை நன்கு கற்க வேண்டும்.
”தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ” அதாவது தருமத்தின் பாதுகாப்பே நமது பாதுகாப்பாகும்.
பொருள்: "ஹிரண்யகர்ப், யஸ்மான்ன ஜட், மா மா ஹின்சிட்" போன்ற வாசகங்களில் முதன்மையான கடவுளின் பெயரும் புகழும் அதிகமானவை. ஆனால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லை - (இதன் பொருள் - கடவுளுக்கு எந்த குறிப்பிட்ட கட்டமைப்பும் இல்லை ஆனால் உன்னுடைய தியான ஆற்றல் மூலம் அந்த கட்டமைப்பை உணரலாம். (இங்கே பிரதிமா என்கிற சொல் பிம்பத்தை குறிப்பது இல்லை கட்டமைப்பை குறிக்கின்றது) (யஜூர் வேதம் 32:3:5)
அவன் எங்கும் வியாபித்துள்ளான், அற்புதமானவன். அவனுக்கு உடம்பில்லை. நரம்பில்லை. தோல் துவாரங்கள் இல்லை. அவன் பரிசுத்தமானவன் பாவமற்றவன். அவன் கவிஞன் (இங்கே கவிஞன் என்பது அவன் நினைக்கிற எதையும் உருவாக முடியும் என்று பொருள்) அவனே மொழி ( சொற்கள் உதிக்கும் மனதை ஆட்சி செய்பவன்), வெற்றியாளன், தானே சிருஷ்டிதுக்கொண்டவன்(ள்). காலம் துவங்கியதிலிரித்து எல்லோரையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தகுதியானவன். (யஜூர் வேதம் 40:8:6)
ஜாகீர் நாயக்: “அந்தடம ப்ரவிஷாந்தி யெ அசும்பூதி முபஸ்தே” பொருள்: இயற்கையை(நீர்,நிலம், நெருப்பு போன்றவை) வணங்குபவர்கள் இருட்டிற்கு செல்கின்றனர். சம்பூதிகளை வணங்குபவர்கள் மேலும் ஆழ்ந்த இருட்டிற்கு செல்கின்றனர். குறிப்பு: சம்பூதி என்பது உருவாக்கப்படும் பொருள். எ-கா: மேஜை, நாற்காலி, சிலை போன்றவை. (யஜூர் வேதம் 40:9:7)
உண்மை: “அந்தம் தமஹ ப்ர விஷாந்தி யேஷம்பூதியுபஸ்தே த்தோ புய இவ தே தமோ ய ஓ சம்புத்யம் ரத” பொருள்: எவரெல்லாம் பிரிவுகளையும் அழிவுகளையும் வணங்குகிறார்களோ, அதை மட்டுமே விளையாட்டாக செய்கிறார்களோ, அவர்கள் இருட்டிற்கு (இருட்டு என்பது அறியாமை) செல்கிறார்கள். அந்த அறியாமையில் மூழ்கி அதில் உருவாக்கப்படும் பொருட்களை வணங்குகிறவர்கள் மேலும் அறியாமையில் மூழ்குகின்றனர். (யஜூர் வேதம் 40:9:7)
குறிப்பு: இங்கு வழிபாடு என்பது எப்போதும் பக்தியில் மூழ்கி இருப்பதாகும். சம்பூதி என்றால் கூடுவது, அசம்பூதி என்பது பிரிவு மற்றும் புறவாழ்க்கையில் மூழ்கி இறைவனை வணங்க மறுப்பதாகும். இங்கே எங்கேயும் இயற்கை (காற்று, தண்ணீர், அக்னி போன்றவை) வணக்கம் பற்றி சொல்லவே இல்லை.
ஜாகீர் நாயக்: யசூர் வேதத்தில் இந்த வாசகம் உள்ளது. "நம்மை நல்ல பாதையில் அழைத்து செல். தப்பான பாதையில் சென்று குழம்புவதற்கு காரணமாக இருக்கும் பாவத்தை நீக்குவாயாக." (யஜூர் வேதம் 40:16:8)
உண்மை: "அக்னே நய சுபத ராய அஸ்மன்விஷ்வாணி தேவ்வாயுனானி வித்வான" பொருள்: இறைவனே!! எங்களது அனைத்து செயல்களும் உங்களுக்கு தெரியும். தயவு கூர்ந்து எங்களை நல்வழிப்படுத்தி , வளமான ஆன்மீக பாதையில் எங்களை இட்டுச்செல்வாயாக.. (யஜூர் வேதம் 40:16:8)
The truth: baṇ mahāṃ asi sūrya baḍ āditya mahāṃ asi mahas te sato mahimā panasyate ‘ddhā deva mahāṃ asi . உண்மையாக. இறைவனே! நீ உண்மையில் மகத்துவம் வாய்ந்தவன். ஆதித்ய நீ மகா வல்லவன், கடவுளே!
(அதர்வண வேதம் 20:58:3:9)
ஜாகிர் நாய்க்: ரிக் வேதத்தில் சொல்லபடுவது "ரிஷிகள் (வேத பண்டிதரர்கள்) இறைவனை பல பெயர்களில் அழைக்கின்றனர். (ரிக் வேதம் 1:164:46)
உண்மை: índram mitráṃ váruṇam agním āhur / átho divyáḥ sá suparṇó garútmānékaṃ sád víprā bahudhâ vadanty / agníṃ yamám mātaríśvānam āhuḥ பொருள்: இந்திரா, மித்ரா, வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யமா, மாட்ரிஷ்வா போன்ற பெயர்கள் அவனுக்கு உண்டு. இறைவன் ஒருவனே. அறிவுள்ளோர் பல பெயர்களில் அழைப்பர்.
(ரிக் வேதம் 1:164:46)
குறிப்பு: மேலே உள்ள வரிக்கு ஜாகிர் நாய்க் கொடுத்துள்ள மொழிபெயர்ப்பு அந்த வசனத்துக்கான பொருளே கிடையாது என்று தெரிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால் ஜாகிர் நாய்க் இந்த வசனத்துக்குக்கு பொருளை கூறினால் அவர் தம்முடைய ஆதரவாளர்களை இழந்துவிடுவார் என்பதற்காக இறைவன் (அல்லாவை தவிர) இந்திரா, மித்ரா வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யம, மாட்ரிஷ்வா போன்ற பெயர்களை பயன்படுத்தவில்லை. .
ஜாகிர் நாய்க்: அடுத்து பயன்படுத்துவது "பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் தன்மையான படைத்தல், காத்தல் மட்டுமே." (ரிக் வேதம் 2:1)
மேலே உள்ள பொருளுக்கு ஏன் வசனம் காட்ட வில்லை? பதில் கீழே உள்ள வரியில்.
ஜாகிர் நாய்க்: “Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata" "அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன். (ரிக் வேதம் 8:1:1:10)
உண்மை: mā cidanyad vi śaṃsata sakhāyo mā riṣaṇyata | indramitstotā vṛṣaṇaṃ sacā sute muhurukthā ca śaṃsata || பொருள்: "அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன். அதனால் எந்த துயரமும் உங்களை அணுகாது. நீர் (தண்ணீர்) கொட்டும் போது வல்லமை பொருந்திய இந்திராவை புகழவும். உங்கள் பாராட்டுகளை தொடர்ந்து சொல்லவும். (ரிக் வேதம் 8:1:1:10)
ஜாகிர் நாய்க் என்ன சொல்ல நினைத்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இரண்டாவது வரியினை மிகவும் தந்திரமாக மறைத்து முதல் பாடலை மட்டும் காட்டி இருக்கிறார். ஜாகிர் நாய்க், இரண்டு வரியினைமுழுதாக பயன்படுத்த ஏன் பயப்படுகிறீர்கள்?
ஜாகிர் நாய்க்: “Devasya samituk parishtutih” பொருள்: உண்மையாக, புனித படைப்பாளனின் பெருமை மகத்துவமே. (ரிக் வேதம் 5:1:81:11)
உண்மை: yuñjate mana uta yuñjate dhiyo viprā viprasya bṛhato vipaścitaḥ | vi hotrā dadhe vayunāvid eka in mahī devasya savituḥ pariṣṭutiḥ || பொருள்: துதி பாடல்களில் தேர்ச்சிமிக்க அவனுடைய குருமார்கள் ஆன்மாவையும் புனித எண்ணங்களையும் ஒன்று குவிப்பார்கள். அவனுக்கு பணிவிடை ஒன்றே அவர்களுடைய திருப்பணி. இறை சவிதாவிற்கு கம்பீர பாராட்டுகள். (ரிக் வேதம் 5:1:81:11)
ஜாகிர் நாய்க்: "எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
ப³ஹூநாம் ஜந்மநாம் அந்தே = பல பிறவிகளின் இறுதியில் ஜ்ஞாநவாந் = ஞானவான் ஸர்வம் வாஸுதே³வ: இதி = எல்லாம் வாசுதேவனே என்று மாம் ப்ரபத்³யதே = என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான் ஸ: மஹாத்மா ஸுது³ர்லப⁴: = அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்
பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.
ய: ய: ப⁴க்த: = எந்த எந்த பக்தன் யாம் யாம் தநும் = எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை) ஸ்²ரத்³த⁴யா அர்சிதும் = நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ தஸ்ய தஸ்ய ஸ்²ரத்³தா⁴ம் = அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை அஹம் தாம் ஏவ = நான் அந்த தேவதையிடமே அசலாம் வித³தா⁴மி = ஸ்திரமாக செய்கிறேன்
எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.
स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते। लभते च ततः कामान्मयैवः विहितान्हितान्॥२२॥
ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்த: = அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து தஸ்ய ஆராத⁴நம் ஈஹதே = அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான் ச தத: காமாந் லப⁴தே = மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான் ஹி தாந் விஹிதாந் மயா ஏவ = எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது
அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.
அபு³த்³த⁴ய: மம அநுத்தமம் = அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும் அவ்யயம் பரம் பா⁴வம் = அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை அஜாநந்த: = அறிந்து கொள்ளாமல் அவ்யக்தம் மாம் = புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை வ்யக்திம் ஆபந்நம் = கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக) மந்யந்தே = கருதுகின்றனர்
மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.
ஸாதி⁴ பூ⁴தாதி⁴தை³வம் ஸாதி⁴யஜ்ஞம் ச = பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் கூடியவனாக யே மாம் = யாவர் என்னை ப்ரயாணகாலே அபி விது³: = இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ யுக்த சேதஸ: = யோகத்திற் பொருந்திய சித்தமுடைய தே மாம் ச விது³: = அவர்கள் என்னையே அறிகிறார்கள்
பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.
கீதை, குரானைப் போன்று தொடர்ச்சியற்ற வசனங்களைக் கொண்ட நூல் அல்ல. தனித்தனி – ஆனால் தொடர்புடைய தலைப்புகளில் கோர்வையாக எழுதப்பட்டுள்ள நூல். குரானில் இருப்பதுபோன்று திடீரென்று மக்கா சூரா, திடீரென்று மதீனா சூரா, திடீரென்று முகமதின் வீட்டு விஷயம், திடீரென்று அரபிக்களின் வழக்கங்கள், திடீரென்று பொதுவான உபதேசம் என்று கலீஃபா ஒருவர் அவசர அவசரமாய் தொகுத்து, வேறுபட்ட குரான்களை தீயிட்டு கொளுத்தி இதுதான் குரான் என்று அவசரகதியில் தொகுத்த நூல் இல்லை அது.
இதை சொல்வது, குரானை விட கீதை உயர்வான நூல் என்பதை நிறுவுவதற்காக அல்ல. இப்படி திடீரென்று ஒரு வசனத்தை எடுத்து அதன் அர்த்தத்தை மாற்றி இது அல்லாஹ்வை உயர்த்துகிறது என்று இஸ்லாமிஸ்டுகள் ஜல்லியடிப்பதை சுட்டிக்காட்டவே இதைக் கூறுகிறேன். எனவே, இந்த வசனம் அல்லாஹ் என்ற ஏக இறைவனை குறிக்கிறதா என்பதற்கு இதன் தொடர்ச்சியையும், கவனித்தால் அர்த்தம் விளங்கும். அடுத்த வசனமே இதைச் சொல்கிறது:
7.21 எந்த பக்தர் நம்பிக்கையுடன் எந்த உருவில், என்னை வணங்குகிறாரோ, அவர் அறியாமல் இருந்த போதும், அதை என்மீது செலுத்தும் பக்தியாக நான் ஏற்றுக்கொண்டு, அவரின் பக்தியை நிலை நாட்டுவேன்.
7.22 அந்த தீவிர நம்பிக்கையோடு, அந்த மனிதன் அந்த உருவத்தை வணங்குகிறான். அவன் வேண்டியது கிடைக்கிறது. அதை அளிப்பவன் நானே.
7.22 நம்பிக்கையோடு அவன் இந்திரன் மற்றும் இதர தெய்வங்களையும் தடங்கல் இல்லாமல் வணங்குகிறான். அவன், இந்திரன் மற்றும் இதர தெய்வங்களிடம் வேண்டியது, என் மூலம் கிடைக்கிறது. அவன் வணங்கும் வேளையில் அவனுக்கு தெரியாது இந்திரனும் இதர தெய்வங்களும் என் உடல்தான் என்று. அவர்களை வணங்குவது உண்மையில் என்னை வணங்குவதுதான். அவனுடைய ஆசைகளை நான்தான் நிறைவேற்றுகிறேன்.
எல்லாமே இறைவன் என்பதுதான் ஹிந்து மதம்; இறைவனுக்காகவே எல்லாம் என்பது இஸ்லாம் என திரிபுபட இவர்கள் எழுதுகின்றார்கள்.
கீதை தெளிவாக 7:19ல் அதை விளக்குகிறது. அதாவது எல்லாமே பரமாத்மா தான்.
7.19 எண்ணற்ற பிறப்புகளின் இறுதியில், தான்தான் வாசுதேவன் (உள்ளிருக்கும் ஆத்மா) என்பதை உணர்ந்த ஒருவன் என்னிடம் வருவான். அம்மாதிரியான மகாத்மாவை காண்பது கடினம்.
இதுவே அத்வைதம். அதாவது காண்பன யாவுமாய் இருப்பது இறைதான். நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் எல்லாமே இறைதான். அதனாலேயே நம் முன்னோர்கள் காளஹஸ்தியில் காற்றை வணங்கினார்கள், காஞ்சியில் மண்ணை வணங்கினார்கள், சிதம்பரத்தில் ஆகாயத்தை வணங்கினார்கள். எதை வணங்கினாலும், இறையை வணங்குவதாக எண்ணி, இறை ஞானத்தை வேண்டி வணங்கினால் அவர்கள் இறையை யே வணங்குகின்றார்கள். விருப்பங்களை நிறைவேற்றச் சொல்லி தெய்வங்களை வணங்கும்போதும், அதே இறையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வணங்குகின்றார்கள்.
இங்கே கிருஷ்ணனின் உபதேசத்திற்கும் அல்லாஹ்(வின் பெயரால் முகமது அடித்த ஜல்லியான) ஏகத்துவத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அதையே தொடர்புபடுத்தி ஜாகிர் போன்ற கள்ள மதவியாபாரிகளும் சனாதனத்துக்கு எதிரான தாக்குதல் என நினைத்து காற்றில் கத்தியை வீசுகிறார்கள். சனாதனம் காற்றைபோல எங்கும் உண்டு. இடத்திற்கேற்ப புறச்சூழலுக்கு ஏற்ப சிலரை தென்றலாய் வருடுகிறது. சிலரை சூறாவளியாக நிலைகுலைய வைக்கிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் பன்முகம் காட்டி தனது ஆளுமையை விளக்குகிறது.
இந்திரன் முதலான தேவர்களை , குறிப்பிட்ட சக்திகளை, செல்வங்களை வேண்டி வணங்கி செய்யப்படும் யாகங்கள், வழிபாடுகளைப் பற்றி கிருஷ்ணன் பேசுகிறான். பகவத் கீதையில் மற்ற இடங்களிலும் இப்படி தேவைகளுக்காக செய்யப்படும் வழிபாட்டு முறைகள், உண்மையான இறை ஞானத்தை வேண்டி செய்யப்படும் யோகத்துக்கு கீழானவை என்ற உபதேசம் வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் வருகிறது.
ஆனால், இங்கே கூட 'நீ எதை வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்' என்றுதான் கிருஷ்ணன் சொல்கிறானே தவிர, நீ என்னைத்தவிர (பரமாத்மாவை தவிர) வேறு எதாவது கடவுளை வணங்கினால் உன்னை நரகத்தீயில் இட்டு வாட்டுவேன் என்று சொல்லவில்லை, உன்மீது என் அடியார்கள் ஜிகாத் தொடுப்பார்கள் என்றும் சொல்லவில்லை.
ஜாகிர் நாயக் தான் ஒரு சமகால சமயங்களின் போதகர் என்று கூறிகொள்கிறார். அப்படியிருக்க, ஏன் அவர் நம் வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டும் போது, வாசகங்கள்/வரிகள் முழுதாக பயன் படுத்தாமல் அவர் விருப்பதிற்கேற்ப பகுதிபடுத்தி அவற்றின் பொருள்களை சிதைக்க வேண்டும்? ஒன்று அவர் திறமையற்றவராக இருக்கவேண்டும், இல்லையேல் அவர் கூச்சமிக்கவராக இருக்க வேண்டும்.
ஜாகிர் நாயக் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை.
வேதங்களை பற்றி தெரிந்து கொள்ள உள்நோக்கத்துடன் கற்கும் நபர்களை அணுக கூடாது. மாறாக, இவர் வேதங்களை, ஒரு தேர்ச்சிபெற்ற ஆன்மீக வழியில் வந்த குருவிடம் முறையாக கற்க வேண்டும்.
நண்பர்களே, ஜாகிர் நாய்க் தன் தவறான போக்கை அனேகமாக மாற்ற மாட்டார். ஆனால் நம் உண்மை போற்றும், புத்தியுள்ள சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள். ஜாகிர் நாயக்கின் போலியான, விஷமத்தனமான பிரசாரத்தை அப்பாவி மக்கள் நம்பாமல் இருப்பதற்கு இது போன்ற செய்திகளை அவர்களிடையே பரப்ப வேண்டும்.
வாசகத்தின் பாதி வரிகளை பயன்படுத்தினாலும் அதே பொருள்தானே வருகின்றது என்று சொல்வோருக்கு.
அந்த வாசகமே இல்லைன்னாலும் நிஷத்து, உபநிஷத்துக்கள் என்ன சொல்லும் என்பதை நிஷத்து, உபநிஷத்துக்கள் படித்தவர்கள் மட்டுமே அறிவார்கள். ஆனால் நீங்கள் இவற்றை விளக்கவேண்டியிருப்பது..
இருபது வயதுவரை எந்த ஒரு நூலும் அறியாமல் 21வது வயதில் மதம்மாறியதால்... குர்ஆன்ல எல்லாமே இருக்கு என மூளைச் சலவை செய்யப்பட்டு சிந்தனையறிவு மழுங்கடிக்கப்பட்ட மக்களிடம்...