362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமைமற்றது வேண்டாமை வேண்ட வரும். ஒருவன் ஒன்றை விரும்புவதனால்மீண்டும்மீண்டும்பிறக்கும்படி இல்லாதுபிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது ஆசைஅற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்
7
370:ஆரா இயற்கைஅவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கைதரும். ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு பிறவா நிலையில்வாழும் இயல்பைக் கொடுக்கும்.
8
357:ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
9
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.குறள் 10 -கடவுள் வாழ்த்து
மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின்திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.
10
501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.