New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் பார்வையில் திரௌபதி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
என் பார்வையில் திரௌபதி
Permalink  
 


என் பார்வையில் திரௌபதி

3 years ago

draupadi

கற்புக்கரசிகள் என்று புராண மாந்தர் ஐவரைக் குறிப்பிடுவர். அவர்கள் சீதை, மண்டோதரி, அகலிகை, தாரை மற்றும் திரௌபதி.

இந்த ஐவரில் சீதை, இராமன் விருப்பப்படி தன் கற்பை நிருபிக்க தீக் குளித்தாள். அகலிகையோ தன் கணவனான கௌதம முனிவரால் சபிக்கப்பட்டுக் கல்லானாள். வாலியின் மனைவியான தாரை சுக்ரீவனுக்கும் மனைவியாக வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானாள். மண்டோதரி இராவணனுக்கு நல்ல அறிவுரைகள் கூறியும் அவளின் சொற்களை உதாசீனப்படுத்தி தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான்.

இவ்வைவரின் சூழ்நிலைகள் வெவ்வேறாக இருப்பினும் அவர்கள் தாங்கிய சுமைகள் கிட்டத்தட்ட ஒன்றே.

சீதை வனவாசத்திலும் அல்லல்பட்டு, பின் இராவணனால் கடத்தப்பட்டு அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானாள்.

கௌதம முனிவரின் சாபத்தால் அகல்யா கல்லாய் சமைந்து, இராமன் பாதம் அவள் மேல் பட்டு சாப விமோசனம் அடையும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

வாலி பலகாலம் திரும்பி வராததால் அவன் மனைவி தாரை சுக்ரீவனுக்கு வானர தர்மப்படி மனைவியானாள். அவளுக்கென்று தனி சுதந்திரம் இல்லை. வாலி திரும்பி வந்த பிறகும் அவளுக்கு விமோசனம் இல்லை. அவன் இறந்த பிறகு தன் கணவனை மறைந்திருந்து கொன்ற இராமனைக் கேள்வி மட்டுமே கேட்க துணிந்தாள்.

மண்டோதரியால் தன் கணவனுக்கு நல்லறம் புகட்ட முடியவில்லை, நல்வழிப்படுத்த முடியவில்லை. இவள் பேச்சைக் கேட்காததால் இராவணன் உயிரை இழந்தான், மண்டோதரி தன் கணவனையும் மகன்களையும்!

திரௌபதியைப் பார்ப்போம். அவளின் பிறப்பே மிகவும் சுவாரசியமானது. அவள் துருபத மகாராஜன் செய்த யாகத்தில் அவருக்கு மகளாக யாகக் குண்டத்தில் இருந்து தோன்றியாவள். பேரழகியான அவளின் வாழ்க்கை ஒரு சுழலும் சக்கரத்துக்கு ஒப்பானதாக இருந்தது. அரசிளங்குமரியாகத் தோன்றியவள் விதியின் விளையாட்டால் ஐவருக்கு வாக்கப் பட்டாள், இந்திரபிரஸ்தத்தின் ராணியாக அரியணை ஏறினாள், ஆனால் அது நிலைக்கவில்லை. துரியோததனனால் அரசு பறிக்கப்பட, காட்டுக்குச் சென்று பதிமூன்று ஆண்டுகள் கடின வாழ்க்கையை வாழ்ந்து, மேலும் பத்து மாத அஞ்ஞாத வாசத்தில் விராட நாட்டு அரசியின் சிகை அலங்கார சேடிப் பெண்ணாகவும் வாழ்க்கை நடத்தினாள். ஆனால் அவளின் சபதத்தினால் கௌரவர் குலமே அழிவுக்கு வந்தது. குருக்ஷேத்திரப் போர் முடிவில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரை இழந்தனர், அதில் அவளுடைய தந்தையும், சகோதரர்களும் ஐந்து மகன்களும் அடக்கம். போரில் வெற்றிப் பெற்றும் சோகத்தை அனுபவித்தவள் அவள்.

அவள் மண வாழ்க்கையின் முக்கியத் திருப்பம் தருமரின் சூதாட்டத்தின் மேல் உள்ள பற்றினால் நிகழ்ந்தது. அனைத்தையும் சூதில் இழந்து மனைவியையும் பணயமாக வைத்துத் தோற்றார். அதனால் சான்றோர்கள் நிறைந்த துரியோதனன் அரச சபையில் அவள் இழுத்து வரப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டாள், அச்செயலை அங்கிருந்த யாரும் தடுக்கவும் இல்லை, தவறு என்று சுட்டிக் காட்டவும் இல்லை. பகவான் கிருஷ்ணனும் அவள் அபயம் என்று கூக்குரலிட்ட பிறகு வந்து அவள் மானத்தைக் காப்பாற்றி அருளினார்.

draupadi1

பெண் என்றால் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டவள் திரௌபதி. இங்கு தான் அவள் மற்ற பெண்களை விட மாறுபடுகிறாள்.

தன்னையும் தன் சகோதரர்களையும் பணயம் வைத்துத் தோற்றப் பின்னும் யுதிஷ்டிரருக்கு எப்படி அவளைப் பணயம் வைத்து சூதாட உரிமை இருந்தது என்று தர்க்க ரீதியாக நியாயமான ஒரு கேள்வியை சபையின் முன் வைத்தாள். அதில் அவளின் அறிவுத் திறன் மிளிர்ந்தது.

சபையில் தன் கணவன்மார்கள் குனிந்தத் தலையுடன் இருந்தபோது துணிச்சலுடன் அவள் கேட்டப் பல கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் கிடைக்காவிடினும் அங்கிருந்தவர்களை அக்கேள்விகள் சிந்திக்க வைத்தன. தர்மம் எது என்பதை அவள் உணர வைத்தாள்.

இறுதியில் அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காதபோது தன்னை அவமானப் படுத்திய துரியோதனனும் துச்சாதனனும் பழிவாங்கப் படும் வரை தான் விரித்தக் கூந்தலை முடியப் போவதில்லை என்று சபதம் செய்து அதனை தன் ஐந்து கணவர்கள் மூலம் நிறைவேற்றவும் செய்தாள். இவ்வகையில் பார்க்கும்போது குருக்ஷேத்திரப் போருக்கு அவளே முக்கியக் காரணி ஆகிறாள்.

அவள் ஒன்றும் தவறே செய்யாதவள் இல்லை. கர்ணனை அவன் குலத்தைக் காரணம் காட்டி சுயம்வரத்தில் இருந்து விலக்கி வைத்தாள். துரியோதனன் இவர்கள் கட்டிய அரண்மனைக்கு விருந்தினனாக வரும்பொழுது தரை என எண்ணி தண்ணீரில் விழுந்தவனைப் பார்த்து உரக்க நகைத்து அவனை புண் படுத்தினாள். ஆனால் அதற்கு அவளுக்குக் கிடைத்தத் தண்டனை விகிதச் சமன் அற்ற தண்டனை.

கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகக் கௌர்வர்களிடம் தூது போனான். அந்த சமயத்திலும் தூதின் முடிவில் சமாதானம் வரக்கூடாதே என்று தான் திரௌபதி விரும்பினாள். சமாதானமாகச் சென்றால் இவள் சபதம் நிறைவேறாது. அது கண்ணனுக்கும் தெரியும். கண்ணனுக்கும் அவளுக்கும் விசேஷ பந்தம் உண்டு. (சிசுபாலனை வதம் செய்தபோது விரலில் அடிபட்டக் கண்ணனுக்கு தன் உடையில் இருந்து சிறிது கிழித்துக் கட்டுப் போட்ட திரௌபதிக்கு பின்னொரு நாள் எண்ணிலடங்கா புடைவைகளைக் கொடுத்து நன்றிக் கடன் தீர்த்துக் கொண்டவன் அவன்.)

உடலால் ஆணின் பலவந்தத்திற்கு உட்பட்டவள் திரௌபதி. இந்த மகாபாரத நிகழ்வு நடந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்றும் பெண்ணுக்குத் தனி ஒரு சுதந்திரம் வந்துவிடவில்லை. வன்புணர்வுகள் குறையவில்லை. பெண் இன்றும் தனக்கு ஏற்படும் அநீதிகளை சகித்துக் கொண்டும் மன்னித்தும் பொறுமை தான் காத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் அன்று திரௌபதி வனவாசத்தில் எவ்வளவு துன்பப் பட்டாலும், அஞ்ஞாத வாசத்தில் எவ்வளவு சிறுமைப் பட்டாலும் தன்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டும் அவள் பட்ட அவமானத்திற்கு கணவன்களை பொறுப்பேற்க வைத்து போரிட வைத்து வெற்றியும் கண்டாள் திரௌபதி.

அரச குமாரி, அவள் நினைத்திருந்தால் பிறந்த வீடு போய் அரச போகத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டின் பெருமையையும் புகழையும் நிலை நிறுத்த அவள் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தாள். பேரழகும் பெருங்குணமும் ஓருங்கே பெற்ற மாதரசி அவள்!

திரௌபதியின் அறச் சீற்றமே அவளை அம்மனாக மக்கள் இன்று வழிபடக் காரணமாகியது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதிலும் திரௌபதி அம்மன் கோவில்களில் நடக்கும் தீமிதி விழாக்கள் தீயில் தோன்றி தீயின் சுவாலையுடன் வாழ்ந்த அவளின் வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்தும் வழிபாடாக அமைந்துள்ளது.

சீதையை இராமனின் மனைவியாக, மண்டோதரியை இராவணனின் துணைவியாக, அகலிகையை இராமன கால் பட்டு சாப விமோசனம் அடைந்த முனி பெண்டாட்டியாக, தாரையை இராமனிடம் நியாயம் கேட்ட வானரப் பெண்ணாக மட்டுமே பார்க்கும் இச்சமூகம் திரௌபதிக்குக் கோவில் எழுப்பி வழிபட்டு வருவது அவளின் வாழ்க்கை நம் மேல் ஏற்படுத்தியிருக்கும் ஒரு தாக்கத்துக்கு எடுத்துக்காட்டு!

draupadi2

This article appeared in the recent internet magazine “Namdhu Thinnai”

Photos taken from the following websites with thanks.

http://deepsdmk.hubpages.com/hub/Story-of-a-Strong-and-Independent-Lady-in-Mahabharata#



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திரௌபதி பற்றிய 17 இரகசியங்கள்!
Permalink  
 


திரௌபதி பற்றிய 17 இரகசியங்கள்!

திரௌபதி பற்றிய யாரும் அறியாத 17 இரகசியங்களை இப்போது பார்க்கலாம்

ஐந்துக்கு பதில் 14 கணவன்களை கொண்டிருக்கவேண்டியவர் திரௌபதி!

தன் முன் ஜென்மத்தில் தனக்கு 14 குணங்கள் அடங்கிய கணவன் வேண்டும் என திரௌபதிகேட்டுக் கொண்டிருந்தார். சிவபெருமானும் அவருக்கு அந்த வரத்தை அளித்தார். ஆனால்யாராலும் அந்த அனைத்து குணங்களையும் கொண்டிருக்க முடியாததால், அந்த குணங்களைகொண்டுள்ள ஐந்து பேருக்கு அவர் மனைவியாவார் என சிவபெருமான் கூறியிருந்தார். அதில்தர்மம், பலம், வில்வித்தை, அழகு மற்றும் பொறுமை என சிறந்த ஐந்து குணங்களைகொண்டுள்ள கணவன் தனக்கு கிடைக்குமாறு சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார் திரௌபதி.


திரௌபதிக்கு குழந்தை பருவமே கிடையாது
பாஞ்சால அரசாட்சியை வென்று அதனை பிரித்திட, தன் மாணவர்களான பாண்டவர்களையும்,கௌரவர்களையும் பயன்படுத்திய துரோணாச்சாரியாவை ஆதரித்த குரு குடும்பத்தைஅழிக்கும் ஒரே நோக்கத்தில், தன் தந்தை மற்றும் பாஞ்சால அரசாட்சியின் அரசரானதுருபதனால் உருவாக்கப்பட்டவரே திரௌபதி. அதனால் வளர்ந்த நிலையில் இருந்த ஒருமங்கையாகவே அவர் பிறந்தார். ஆகவே குழந்தை பருவம் மற்றும் தாய் தந்தையின் வளர்ப்பைஆகியவற்றை பார்க்காதவர் திரௌபதி. ஒரு குடும்பத்தையே அழிக்கும் எண்ணத்தோடுவடிவமைக்கப்பட்ட திரௌபதி, வெறுப்பை காட்ட சொல்லி வளர்க்கப்பட்டார்.

காளி அவதாரம்

தென் இந்தியாவில் திரௌபதியை மகாகாளியின் அவதாரமாகவும் நம்புகின்றனர்.இந்தியாவில் உள்ள கொடுங்கோல் மன்னர்களை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணருக்கு (விஷ்ணுவின்அவதாரம், பார்வதி தேவியின் சகோதரனும் கூட) உதவிடவே இந்த காளி அவதாரம் எனநம்பப்படுகிறது. திரௌபதி அக்னியில் இருந்து உருவானவர் என்றாலும் கூட, அதனால் தான்அவர்கள் சகோதரன் மற்றும் சகோதரியாக கருதப்படுகின்றனர்.


தன் கணவன்களின் மீது திரௌபதி நம்பிக்கைகொள்ளவில்லை
பழி தீர்க்கும் எண்ணத்தோடு திரௌபதி விளங்கினாலும், தன் ஐந்து கணவன்களும் அவருக்குஅவமரியாதை தேடி தந்து விடுவார்களோ என்ற சந்தேகம் இருந்தது. தன் கொழுந்தியின்கணவனான ஜெயத்ரடா, தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள அவரை வீட்டை விட்டுவெளியே தன் தேருக்கு இழுத்து வந்த போது அவனை பாண்டவர்கள் கொல்லவில்லை.அதேப்போல் தங்களின் கடைசி வருட வனவாசத்தில் திரௌபதியை கிச்சகா சாடிய போது,எங்கே தங்களின் அந்தரங்க ரகசியங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கி விடுவானோ என்றபயத்தில் அவனை கொல்ல பாண்டவர்கள் தயங்கினார்கள்.


திரௌபதியின் வாகனம்
திரௌபதியின் வாகனம் லக்ஷ்மி தேவியின் அக்ஷய பாத்திரம் (எப்போதும் நிரம்பி வழியும்உணவோடு) போல் இருந்தது. இந்தியாவில் “திரௌபதியின் வாகனம்” என்றால் சமயலறைசிறந்த உணவுகளால் குவிந்துள்ளது என்பதை குறிக்கும். அப்படிப்பட்ட சமையலறையே ஒருநல்ல இல்லத்தரசிக்கு அடையாளமாகும். அப்படிப்பட்டவரை பொதுவாக அன்னபூர்ணா எனஅழைப்பார்கள். ஒரு நல்ல இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டும் என்பதையும், பெண்என்பவளை காமத்தின் சின்னமாக பார்க்க கூடாது என்பதையும் மகாபாரதம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

மகரிஷி துர்வாசரால் திரௌபதி காப்பாற்றப்பட்டாரா?
திரௌபதி துகிலுரிக்கப்பட்ட போது அவரை துர்வாசர் காப்பாற்றிய சுவாரசியமான கதைஒன்றும் உள்ளது. துர்வாசர் அளித்த வரத்தினால் தான் திரௌபதி அதிசயமாககாப்பாற்றப்பட்டார் என சிவபுராணம் கூறுகிறது. ஒரு முறை மகரிஷியின் கோவண துணிகங்கை நதியோடு அதித்து செல்லப்பட்டது. உடனே தன் ஆடையை கொஞ்சம் கிழித்துதுர்வாசருக்கு மூடி விட்டார் திரௌபதி. உடனே திரௌபதிக்கு ஒரு வரம் அளித்தார் அந்தமகரிஷி. அதன் படி, துச்சாதனன் திரௌபதியை துகிலுரிக்கும் போது, திரௌபதியின் ஆடைமுடிவில்லாமல் வந்த படி இருந்தது.

கடோத்கஜனை சபித்த திரௌபதி
தன் தந்தையின் ராஜ்யத்திற்கு கடோத்கஜன் முதல் முறை வருகை தந்த போது, தன் தாயின்(ஹிடிம்பா) ஆணையால் திரௌபதிக்கு அவன் மரியாதை கொடுக்கவில்லை. இதனால்அவமானமடைந்த திரௌபதி கடும் கோபமுற்றார். தான் ஒரு அபூர்வமான பெண், தான்யுதிஷ்டிராவின் ராணி, தான் ஒரு பிராமண அரசரின் புதல்வி, பாண்டவர்களை விட தன்அந்தஸ்து உயர்ந்தது என அவனை பார்த்து திரௌபதி உரக்க கூறினார். பொல்லாத தன் தாய்தனக்கு பக்க பலமாக இருந்ததால் பெரியவர்கள், முனிவர்கள் மற்றும் அரசர்கள் இருந்தசபையில் இப்படி நடந்து கொள்ள அவன் துணிந்தான்.

ஹிடிம்பாவின் பழிதீர்த்தல்
கடோத்கஜனின் ஆயுள் குறைந்து போகும், அவன் போரிடாமலேயே கொல்லப்படுவான்(ஷத்ரிய வம்சத்திற்கு மிக மோசமாக கருதப்படும் நிகழ்வு) என திரௌபதி மோசமான சாபத்தைஅளித்தார். திரௌபதியின் இந்த சாபத்தை கேள்விப்பட்ட ஹிடிம்பாவால் தன்னைகட்டுப்படுத்த முடியவில்லை. திரௌபதியிடம் சென்ற அவள், திரௌபதியை இழிவானமற்றும் பாவப்பட்ட பெண் என அழைத்தார். அவர் திரௌபதியின் குழந்தைகள் மீதுசாபமளித்தார். இந்த இரண்டு பெண்களால் பாண்டவர்களின் வம்சமே இல்லாமல் போனது.

திரௌபதியின் பல அவதாரங்கள்
நாரத புராணம் மற்றும் வாயு புராணத்தின் படி, திரௌபதி என்பவர் ஷ்யாமளா தேவி (தர்மனின்மனைவி), பாரதி (வாயுவின் மனைவி), சாச்சி (இந்திரனின் மனைவி), உதா (அஸ்வினின்மனைவி) மற்றும் பார்வதி தேவியின் (சிவபெருமானின்) கலவை அவதாரமாவார். அதற்குமுன் அவர் ராவணனுக்கு சாபமிட்ட வேதவதியாக அவதாரம் எடுத்திருந்தார். பின் சீதாவாகபிறந்து ராவணனின் மரணத்திற்கு காரணமாக விளங்கினார். அவருடைய மூன்றாவதுஅவதாரம் தமயந்தி மற்றும் அவள் மகளான நளாயனி என பகுதிகளாக இருந்தது. அவருடையஐந்தாவது அவதாரம் திரௌபதியாகவே இருந்தது.


திரௌபதியின் உட்கூறு
ஒரு சாதாரண மனைவியாக இருக்க திரௌபதி ஒத்துக்கொண்ட போது, தன்னுடையவீட்டுப்பொருட்களை வேறு எந்த ஒரு பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்றநிபந்தனையை விதித்திருந்தார். அதாவது அக்காலத்து பழக்கவழக்கங்கள் படி கூறவேண்டுமானால், பாண்டவர்கள் தங்களின் பிற மனைவிகளை இந்திரா பிரசாதத்திற்குஅழைத்து வர முடியாது. இருப்பினும் அர்ஜுனன் தன்னுடைய இன்னொரு மனைவியைவெற்றிகரமாக கொண்டு வந்தான். அவள் தான் கிருஷ்ணரின் தங்கையான சுபத்ரா.கிருஷ்ணரின் சிறு அறிவுரையோடு, அவள் ஒரு தந்திரத்தை கொண்டு இதைசாத்தியமாக்கினாள்.
திரௌபதியின் சுயம்வரத்தில் துரியோதனன் கலந்துகொள்ளவில்லை

திரௌபதியின் சுயம்வரத்தில் துரியோதனன் கலந்து கொள்ளாததற்கு ஒரு காரணம் உள்ளது.அதற்கு காரணம் கலிங்க நாட்டு இளவரசியான பானுமதியை அவன் ஏற்கனவேமணந்திருந்தான். வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவாக்களித்திருந்தான். அதை நிறைவேற்றியும் காட்டினான்.

நாய்களுக்கு சாபம் அளித்த திரௌபதி
பஞ்சாப் மாநில நாட்டுப்புறக் கதை ஒன்று இப்படி கூறுகிறது: திரௌபதியின் அறைக்குள் ஒருநேரத்தில் ஒரு சகோதரன் மட்டுமே நுழைய வேண்டும் எனவும் அந்நேரத்தில் மற்றசகோதரர்கள் அங்கே நுழையக் கூடத்து எனவும் பாண்டவர்கள் ஒத்துக் கொண்டிருந்தனர்.அவரின் அறைக்குள் நுழையும் சகோதரன் தன் செருப்பை கதவிற்கு வெளியே விட்டு விட்டுசெல்ல வேண்டும். இந்த நிபந்தனையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைவழங்கப்படும். அதன் படி அவர்கள் ஒரு வருட காலத்திற்கு வனவாசம் செல்ல வேண்டும்.

குற்றவாளியான அர்ஜுனன்
ஒரு நாள் யுதிஷ்டரன் திரௌபதியின் அறையில் இருந்தான். அப்போது கதவிற்கு வெளியேஇருந்த அவன் செருப்பை நாய் ஒன்று திருடி விட்டது. இதை அறியாத அர்ஜுனன், அறைக்குள்நுழைந்தான். உள்ளே த்ரௌபதியுடன் தன் அண்ணன் இருந்ததை கண்டான். அவர்களின்ஒப்பந்தத்தின் படி, அர்ஜுனன் வனவாசத்திற்கு செல்ல வேண்டியாயிற்று. தர்மசங்கடமாகஉணர்ந்த திரௌபதி செருப்பை திருடிய அந்த நாயின் மீது கடும் கோபத்திற்கு ஆளானார்.அதனால் அனைத்து நாய்களுக்கும் இந்த சாபத்தை அளித்தார் – “நீங்கள் உடலுறவில்ஈடுபடுவதை இந்த உலகமே பார்க்கும். இதனால் நீங்கள் அவமானமடைவீர்கள்”

திரௌபதியின் மறுபக்கம்
துரோணரின் மகனான அஸ்வத்தாமா கருணையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்ததிரௌபதியின் ஐந்து மகன்களை நடு ராத்திரியில் கொன்றான். அர்ஜுனனும் பீமனும்அஸ்வத்தாமாவை சிறை பிடித்தனர். திரௌபதியே அவன் மீது இறுதி முடிவை எடுக்கட்டும்என அவர் முன்பு அவனை ஒப்படைத்தனர். தன் தலையை தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தஅஸ்வத்தாமாவை பார்த்த திரௌபதி இரக்கம் அடைந்தார். இப்படிப்பட்ட கொலைகாரனைகொள்வதில் எந்த பாவமும் இல்லை என கிருஷ்ணர் கூறியிருந்தாலும் கூட, தன் மகனின்இழப்பு துரோணரின் மனைவிக்கு எப்படி இருக்கும் என்ற வலியை திரௌபதியால் உணரமுடிந்தது.

கற்புடன் இருக்க ஆசீர்வதிக்கப்பட்டார்
தன் அடுத்த கணவரிடம் செல்லும் முன்பு, தன் கற்பையும் புனிதத்தையும் மீண்டும் பெற,திரௌபதி அக்னி வழியாக நடப்பார். பல கணவன்களை கட்டுவதற்கு முன்னாள்,இம்மாதிரியான விதிமுறைகள் எல்லாம் இருந்ததில்லை. பாண்டவர்கள் அனைவருக்கும் பிறமனைவிகள் இருந்தனர். ஆனால் இந்த மனைவிகள் தங்களின் பெற்றோர்களுடன் வசித்துவந்தனர். திரௌபதி தங்களின் மற்ற சகோதரர்களுடன் வாழும் அந்த நான்கு வருடமும்தங்களின் மற்ற மனைவிகளை பார்ப்பதற்கு பாண்டவர்கள் நகரத்தை விட்டு வெளியே செல்லவேண்டியதாயிருந்தது.

கிருஷ்ணர் மட்டுமே திரௌபதியின் ஒரே நண்பர்
திரௌபதி எப்போதுமே கிருஷ்ணரை மட்டுமே தன்னுடைய நெருங்கிய நண்பராகநினைத்திருந்தார். அவர் கிருஷ்ணரை சகா என்றும், கிருஷ்ணர் அவரை சகி என்றும் அழைத்துவந்தனர். இது திரௌபதி மற்றும் கிருஷ்ணருக்கு இடையேயான தெய்வீக அன்பைவெளிக்காட்டியது. தன்னை புரிந்து கொண்ட ஒரே உண்மையான நண்பனாக விளங்கியதுகிருஷ்ணர் மட்டுமே. ஒவ்வொரு முறை ஆபத்தில் இருந்த போதும், தன்னை காப்பாற்றவந்ததும் கிருஷ்ணரே. தன் வாழ்க்கை முழுவதும் கிருஷ்ணர் தன்னுடனேயே இருப்பதைதெய்வீகமாக உணர்ந்தார் அவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard