New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரம் பிராமண காவியமா?


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சிலப்பதிகாரம் பிராமண காவியமா?
Permalink  
 


சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

29aa3-cheran-senguttuvan.jpg?w=600

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  11-28 am

 

 

 

Post No. 4616

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது.  தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்

 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட காப்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

 

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

22ccb-cheran2bsenguttuvan.jpg?w=600

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

 

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

 

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.

 

ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

 

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன்  4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய  நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

 

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

f0f2b-kannaki2b252812529.jpg?w=600

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.

சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

 

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

 

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை  ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

55b9e-kannaki.jpg?w=618&h=621

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்

 

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

 

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன்  உரைத்தல்

 

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

 

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக

 

6.பராசரன் தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை

7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

 

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சிபிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

 

9.பிராஹ்மணர்கள் வண்டமிழ் மறையோர்– கட்டுரைக் காதை

 

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–

நீர்ப்படைக் காதை

நடுகற் காதை

வரந்தரு காதை

 

9a6bd-kannaki2btemple2b2252csl.jpg?w=600

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

 

12.மாதரி தற்கொலைச் செய்தி

 

  1. கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

 

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

 

  1. மாதவி- மணிமேகலை நிலைமை

16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை

 

  1. ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

 

  1. பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

 

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

 

  1. மாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்பிராஹ்மணன் புத்திமதி

 

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து

 

 23e4f-kannaki2banklet2b252csl.jpg?w=600

Kannaki Anklet

23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

 

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை

 

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை

 

ஐயர்அந்தணன்பார்ப்பனன்மறையோன்

முழுக்கமுழுக்கமுழுக்க பிராஹ்மணர் புகழ்!!!

 

சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ஐயர் காலில் மன்னன் விழுகிறான்.

 

பேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

 c027e-kannaki-and-kovalan-in-poompuhar.j

ஏன்? ஏன்? ஏன்?

 

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

 

இல்லவே இல்லை.

 

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

 

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

 

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

e3e7d-kannaki-cooking1.jpg?w=600

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dik****ar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard