அ) கம்பராமாயணம்
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம். இது இரகுவம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது ஆகும். இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி என்னும் முனிவர் இயற்றினார். அதனைத் தழுவி தமிழ்மொழியில் படைத்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
சிறப்புகள்: 6 காண்டங்களையும் 113 படலங்களையும் 10569 பாக்களைக் கொண்ட கம்பராமாயணமே தமிழ் இலக்கியப் பரப்பில் மிகப்பெரிய பனுவலாக அமைந்துள்ளது. வடமொழி மூலத்தைத் தழுவி எழுந்த போதும் தமிழ் மரபிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமனத்திற்கு முன்னரே இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் விருப்புற்றிருந்தனர், வாலி மாண்ட பின்பு அவனது மனைவி தாரை கைமை நோன்பு பூண்டொழுகியது போன்றன இதற்குச் சான்றாகளாகும். கதை நிகழ்ச்சிக்கும் பாத்திரங்களுக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் ஓசை அமைத்து திறம்பட பாடியுள்ளார் கம்பர். இதன் காரனமாகவே சந்த வேந்தன் என்ற பெயரினை அவர் பெற்றார். ‘கவிச்சக்ரவர்த்தி’, ‘கம்பன் கவியே கவி’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ போன்ற புகழ் மொழிகள் கம்பரது கவித்திறத்தினை உணர்த்துவன.
2. அயோத்தியா காண்டம்
2. 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
இராமன் முடிசூட இருக்கும் செய்தியைக் கோசலையிடம் மங்கையர்அறிவித்தலும், கோசலைசுமித்திரையுடன் மகிழ்ந்து திருமால் கோயில் சென்று வழிபட்டுக் கோதானம் புரிதலும், தயரதன் முடிசூட்டு விழாவிற்குரிய நல்நாள் நாளையே என்பது அறிந்து, வசிட்டனை வரவழைத்து இராமனுக்கு அறிவுரை வழங்கும்படி கூறுதலும், வசிட்டன் இராமன் மனை புகுந்து அவனுக்கு அறிவுரை கூறுதலும், இராமன்வசிட்டனுடன் திருமால் கோயிலை அடைதலும், இராமனுக்குத் தீர்த்த நீராட்டிச் சடங்குகள் செய்யப்பெறுதலும்,
நகரமாந்தர் மகிழ்ச்சியும், நகர் அழகு செய்தலும், அது கண்ட மந்தரையின்சீற்றமும், இராமன்மேல்கொண்ட கோபத்தோடு கைகேயியின் அரண்மனைஅடைந்து உறங்கும் கைகேயியை அவள் எழுப்புதலும், கைகேயியிடம்இராமபட்டாபிஷேகச் செய்தியை மந்தரை கூறுதலும், அதுகேட்டு அவள் மகிழ்ந்துமாலை அளித்தலும், அளித்த பொன்மாலையை அறத்து வீசி மந்தரை பலமாற்றத்தால் கைகேயியை மனமாற்றம் செய்தலும், மனம் மாறிய கைகேயிமந்தரையைப் பாராட்டி ஆலோசனை கேட்டலும், உபாயம் கூறுதலும், உரைத்த மந்தரையைப்பாராட்டி மகிழ்ந்து பெரும்பரிசுகள் அளித்துக் கைகேயி அவ்வாறே செய்வேன் என உறுதியளித்தலும்ஆகிய செய்திகள் இப்பதியில் கூறப்பெறுகின்றன.

அயோத்தியா காண்டம்
மந்தரை சூழ்ச்சிப் படலம்
‘பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்கு’ என்றனர்,
திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெருந் திண் மால் யானையான், ‘பிழைப்பு இல் செய்தவம்
வருந்தினான் வருக’ என, வசிட்டன் எய்தினான்.
திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெருந் திண் மால் யானையான், ‘பிழைப்பு இல் செய்தவம்
வருந்தினான் வருக’ என, வசிட்டன் எய்தினான்.
(நூல்களில்) தேறியவர்களாகிய கணித நூல் அறிஞர்கள் ‘உன் மகனுக்கு, (முடி சூட்டுவதற்கு); பொருத்தமான நல்ல நாள் நாளைக்கேயாகும்’ என்று சொன்னார்கள் அந்த வார்த்தையைக் கேட்ட புனைந்த வீரக்கழலணிந்த பெரிய வலிய மதமயக்கம் உடைய யானையை உடைய தயரதன்; தவறில்லாத தவத்தைச் செய்து வருத்திய மேனி உடைய வசிட்டன் வருக’ என்று அழைக்க வசிட்ட முனிவன் வந்து சேர்ந்தான்.
‘நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு, ‘வேண்டுவ
ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது’ என, தொழுது சொல்லினான்.
வில் இயல் தோளவற்கு ஈண்டு, ‘வேண்டுவ
ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது’ என, தொழுது சொல்லினான்.
(தயரதன் வசிட்டனைப் பார்த்து) நல்ல இயல்புகளையுடைய (கோள் நிலை உடைய) முகூர்த்த நாளும் நாளைக்கேயாகும் (ஆதலால்) அந்த வில் பழகிய தோள் உடையவனாகிய இராமனுக்கு இவ்விடத்தில் வேண்டியனவாய விரதம் முதலிய சடங்குகளை செய்து (அதன்மேல்) நல்ல அரசியல் அறமாகிய உண்மைகளை மிகவும் சொல்வாயாக என்று தொழுது வணங்கிச் சொன்னான்.
முனிவனும், உவகையும் தானும் முந்துவான்,
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும்,
இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான்.
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும்,
இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான்.
வசிட்டனும் தன் மகிழ்ச்சியைவிடவும் முந்திச் செல்வானாய் வைவஸ்வத மனுவின் வமிசத்தில் தோன்றியஇராமனது அரண்மனை வாயிலை அடைந்தான் அந்த வசிட்டனது வருகையைக் கேள்வியுற்று மாலையணிந்த இராமனும் இனிமையாக வரவேற்று (அழைத்துக் கொண்டு) தன் இருப்பிடத்தை அடைந்தான்.
ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
‘புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
நல்கும் நானிலம் நாளை நினக்கு’ என்றான்.
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
‘புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
நல்கும் நானிலம் நாளை நினக்கு’ என்றான்.
தளர்ச்சி இல்லாத தவத்திற் சிறந்த; புண்ணியனாகிய வசிட்டன்; கற்றற்குரிய
நூல்களையும்; நிரம்பிய கேள்வி அறிவினையும் உடைய; இராமனை; நோக்கினான்- பார்த்து; போரில் வல்லவனே!; (உன்பால்) நெருங்கிய பிரியத்தை உடைய அரசன் தயரதன்; உனக்கு; அரசாட்சியை; நாளைக்கு; தருவான்; என்று சொன்னான்.
நூல்களையும்; நிரம்பிய கேள்வி அறிவினையும் உடைய; இராமனை; நோக்கினான்- பார்த்து; போரில் வல்லவனே!; (உன்பால்) நெருங்கிய பிரியத்தை உடைய அரசன் தயரதன்; உனக்கு; அரசாட்சியை; நாளைக்கு; தருவான்; என்று சொன்னான்.
‘வையம்ம மன் உயிர் ஆக, அம் மன் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு,
ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள்
மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ?
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு,
ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள்
மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ?
உலக மக்கள்; நிலைத்த உயிராக; அந்த நிலைத்த உயிர்களை; வாழும்படி;
சுமக்கின்ற; உடம்பை ஒத்த அரசனுக்கு; மேற்கொண்ட நெறியின் உறுதிபற்றிய சந்தேகம்
இல்லாமல்; அறத்தை விட்டு விலகாது அருளிலும், சத்தியத்திலும் நிலைபெற்று நின்ற பிறகு; யாகங்களும் செய்தல் வேண்டுமோ’ (வேண்டாம் என்றபடி.)

‘சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ?
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ?
நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி; சிவந்த பொன்னை நிறுத்துகின்ற
தராசினது நடுநாவை ஒத்த; ஒப்பற்ற நடுவு நிலைமையை; உடைய; உலகை ஆளும் அரசனுக்கு; அமைச்சர்கள்; ஆராய்ந்துரைத்த; பொழுது அல்லாமல்; வேறு கண்ணும் உண்டாகுமோ?’ (இல்லை).
தராசினது நடுநாவை ஒத்த; ஒப்பற்ற நடுவு நிலைமையை; உடைய; உலகை ஆளும் அரசனுக்கு; அமைச்சர்கள்; ஆராய்ந்துரைத்த; பொழுது அல்லாமல்; வேறு கண்ணும் உண்டாகுமோ?’ (இல்லை).
ஏனை நீதி இனையன, வையகப்
போனதற்கு விளம்பி, புலன் கொளீஇ,
ஆனவன்னொடும் ஆயிர மௌலியான்
தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான்.
போனதற்கு விளம்பி, புலன் கொளீஇ,
ஆனவன்னொடும் ஆயிர மௌலியான்
தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான்.
மெய்ப்பொருள் உணர்வில் நெருங்கியவனாகிய வசிட்டன்; உலகத்தை உண்டு
வயிற்றகத் தடக்கித் காக்கும் திருமாலின் அம்சமான இராமனுக்கு; இப்படிப்பட்ட ஏனைய நீதிகளையும்; சொல்லி; அறிவு கற்பித்து; அவனுடனே; ஆயிர மணிமுடிகளை உடைய திருமாலினது; திருக்கோயிலை; சென்றடைந்தான்.
வயிற்றகத் தடக்கித் காக்கும் திருமாலின் அம்சமான இராமனுக்கு; இப்படிப்பட்ட ஏனைய நீதிகளையும்; சொல்லி; அறிவு கற்பித்து; அவனுடனே; ஆயிர மணிமுடிகளை உடைய திருமாலினது; திருக்கோயிலை; சென்றடைந்தான்.
நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப்
புண்ணியப் புனல்ஆட்டி, புலமையோர்
எண்ணும் நல்வினை முற்றுவித்து, எற்றினான்,
வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ.
புண்ணியப் புனல்ஆட்டி, புலமையோர்
எண்ணும் நல்வினை முற்றுவித்து, எற்றினான்,
வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ.
அரவணையில் அறிதுயில் அமர்ந்த அண்ணலைச் சென்றடைந்து; (வழிபட்டு அவனக்கு முன் இராமனை) நால் வேத முறைப்படி அமைந்த; நன்மையுடைய தீர்த்தங்களால் நீராட்டி;
அறிவுடையோர் எண்ணுகின்ற; நல்ல சடங்குகளை; முடியச்செய்து; வெண்மையான; தருப்பைப் புல்லைப் பரப்பி; அதன்மேல் எழுந்தருளச் செய்தான்.
அறிவுடையோர் எண்ணுகின்ற; நல்ல சடங்குகளை; முடியச்செய்து; வெண்மையான; தருப்பைப் புல்லைப் பரப்பி; அதன்மேல் எழுந்தருளச் செய்தான்.
ஏவின வள்ளுவர், ‘இராமன், நாளையே
பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்
கோ நகர் அணிக!’ என, கொட்டும் பேரி அத்
தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார்.
பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்
கோ நகர் அணிக!’ என, கொட்டும் பேரி அத்
தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார்.
(அரசனால்) ஏவப்பட்ட வள்ளுவர்; இராமன்; நாளைக்கே; நிலமகள் கணவனாய்;
மகுடம் சூடுவான்; (ஆதலால்) இந்தத் தலைமை நகரத்தை; அலங்கரிக்க; என்று சொல்லி;
முழுக்குகின்ற; முரசத்தை; விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள; நகர் எங்கும் சுற்றி; அடித்து முழக்கினார்கள்.
மகுடம் சூடுவான்; (ஆதலால்) இந்தத் தலைமை நகரத்தை; அலங்கரிக்க; என்று சொல்லி;
முழுக்குகின்ற; முரசத்தை; விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள; நகர் எங்கும் சுற்றி; அடித்து முழக்கினார்கள்.
ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர்; தடித்தினர்; சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;
தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம்.
வேர்த்தனர்; தடித்தினர்; சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;
தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம்.
(நகர மக்கள்) ஆரவாரித்தனர்; மகிழ்ந்தனர்; ஆடிப் பாடினர்; உடல் வியர்க்கப் பெற்றனர்; (மகிழ்ச்சியால்) உடல் பெருத்தனர்; உடம்பில்; மயிர்க் கூச்செறியப் பெற்று மூடப் பெற்றனர்; தயரதனை; துதித்து வாழ்த்தினர்; இந் நற்செய்தியைச் சொன்னவர்களுக்கு எல்லாம்; பெருஞ் செல்வத்தை; நிரப்பினார்கள்.
திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல்,
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியிடை வேகடம் வகுக்குமாறுபோல்,
அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே.
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியிடை வேகடம் வகுக்குமாறுபோல்,
அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே.
அன்புடைய அயோத்தி நகர மக்கள் நெருங்கிய கதிர்களையுடைய சூரியனைச் சீர்திருத்தும் தன்மையைப்போலவும்; பாம்பின் இடையே படுத்துறங்கும் திருமாலின்; அகன்ற மார்பின் நடுவில் அமைந்த; கௌஸ்துப மணியினை; சாணை பிடித்து மாசு போக்குதலைப் போலவும்; முன்போ அழகுற உள்ள அயோத்தி நகரை மேலும் அலங்கரித்தார்கள்.
துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம்
வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின;
புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின.
பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே.
வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின;
புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின.
பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே.
அழகிய (வெண்மையான) துணி உறைகளுக்குள்ளே விளங்கித் தோன்றுவனவாகிய;
குற்றம் அற்ற; சிவந்த மாணிக்கத்தால் ஆகிய தூண்கள்; நீல நிறம் உடைய பார்வதியை;
தன்னுடைய இடப்பாகத்தில் உடையவன் ஆகிய சிவபெருமானது; (திருநீறு பூசிய செம்மை) வடிவத்தை; காண்பித்தன; (வெள்ளுறையில் பொதிந்த) பவளத்தால் ஆகிய தூண்கள்; பனியில் மறைந்த காலைச் செஞ்சூரியன் என்னும்படி (விளங்கித் தோன்றின.)

அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.
அந்த அயோத்தி நகரத்தை; அழகு படுத்துகின்ற; பேராரவாரத்தால்; தேவர்களது;
அமராவதி நகரத்தின் தன்மை எனச் சொல்லும்படி; விளங்குகின்ற; நேரத்தில்; (உலகிற்குத்) துன்பம் செய்கின்ற; இராவணன் செய்த தீமை (அவனை அழிக்க இப்பிறப்பில்
உரு எடுத்து வந்தது) போல; அணுகுதற்கரிய கொடிய மனம் படைத்த; கூனி என்னும் மந்தரை; வெளியில் வந்து நகரைப் பார்த்தாள்.

தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;
ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;
கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்.
ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;
கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்.
அவ்வாறு வெளியில் வந்த கூனியும்; (நகர் அணிசெயப் பெறுவருகண்டு ஆத்திரம் அடைந்து) கோபத்தால் துடிக்கின்ற மனமுடையவளாய்; கால்கொண்டு நிலைநின்ற கோபம் உடையவனாய்; வேதனைப்படும் மனம் உடையவனாய்; நெருப்புக் கக்கி எரிகின்றகண்ணுடையளாய்; படபடப்பாகத் தோன்றும் சொல்லுடையவளாய்; மூவுலகங்களுக்கும்; ஒப்பற்ற; (தீர்க்க முடியாத) துன்பத்தை; செய்யத் தொடங்குகிறவளாய் (ஆயினள்)
தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் - வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்.
மண்டினாள் - வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்.