New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும் - 'மாதொரு பாகன்' எழுப்பும் கேள்விகள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும் - 'மாதொரு பாகன்' எழுப்பும் கேள்விகள்
Permalink  
 


  மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்

            'மாதொரு பாகன்'  எழுப்பும் கேள்விகள்

 
ஒரு சமூகத்தில் மனித உரிமைக்கான வரையறைகள்(definitions) மற்றும் வரை எல்லைகளை(limitations)  எப்படி தீர்மானிப்பது?
 
மனித உரிமை பாதுகாப்பாளர்களின் பாரபட்ச (discrimination) போக்கு, மிகவும் பாதகமான மனித உரிமை மீறல் ஆகாதா?
 
ஒரு சமூகத்தின் மொழி, பாரம்பரியம், பண்பாடு, நிலத்தடி நீர் தாரங்களாகிய ஏரிகள், குளங்கள், கிரனைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், மனித உரிமைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். மேலேக் குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள், அந்த தொடர்புகளின் அடிப்படையில் பெறப்படுபவை ஆகும். அந்த தொடர்பைப்பற்றிய தெளிவின்றி, மனித உரிமைகளைத் தனித்து, பிரித்து அணுகுவது ஆபத்தாகும். அந்த அணுகுமுறையில், மனித உரிமைப் பாதுகாப்பு முயற்சிகளில் பாரபட்சம்(discrimination)  கடைபிடிப்பது பேராபத்தாகும்.
 
தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள சீர் கேடுகளிலிருந்து, சுயநல நோக்கின்றி, மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் இனியும் புறக்கணிக்க முடியாத கேள்விகள் இவை. 'மாதொரு பாகன்' நாவல் பிரச்சினையும், அதை எழுதிய பெருமாள் முருகனின் 'மனித உரிமை' (?) பாதுகாப்பாளர்களும், தமிழ்நாட்டில் இக்கேள்விகளை குவிய விவாதத்திற்கு (focused debate)  உட்படுத்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளார்கள்.அந்த கேள்விகளுக்கான விடைகள், மனித உரிமைப் பாதுகாப்பில் சட்டத்தின் வரை எல்லைகள், மற்றும் சமூகத்தின் வரை எல்லைகள் பற்றியும் தெளிவுபடுத்தும். அந்த நாவல் தொடர்பான 'மனித உரிமை மீறல்' பிரச்சினைப்பற்றிய தகவல்கள் கீழுள்ள குறிப்பில் உள்ளன.
 
ஒரு மனிதன் தனி ஒரு ஆளாக ஒரு தீவில் வசிக்கும்போது, அவரின் மனித உரிமைக்கு அவசியமில்லை. மானம், மான நஷ்டம் போன்ற பிரச்சினைகளும் இல்லை.
 
ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சேர்ந்து வாழும்போது, கருத்துரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் ஆனவை, சம்பந்தப்பட்ட மனிதர்களில் எவரையும்பாதிக்காத வரையில், பிரச்சினை இல்லை. பாதிக்கும் போது தான், மனித உரிமைகளுக்கான வரையறைகளும், வரை எல்லைகளும் தேவைப்படுகின்றன.
 
அத்தகைய வரையறைகளையும், வரை எல்லைகளையும் சம்பந்தப்பட்ட மனிதர்கள் தமக்குள் கலந்து பேசி, உருவாக்கி, கடைபிடிக்கும் போதும் எந்த சிக்கலுமில்லை.
 
வரை எல்லைகள் மீறுவதைக் கண்காணித்து, நெறிப்படுத்தும் பணி, அந்த மனிதர்கள் வாழும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் மூலமே நிறைவேற்ற முடியும். அந்த அமைப்புக்கு உள்ள வலிமையைப் பொறுத்தே, அந்த அமைப்பின் கட்டளைகள் நிறைவேறும். 
 
சட்ட அடிப்படையிலான நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான், சட்டத்தை அமுல்படுத்தும் வலிமை, அரசுக்கு இருக்கும். அந்த வலிமை குறைந்து, பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் தடையான‌, ‘உள்மறை இரகசியத்தடைகள்’ - ‘Subterranean censorship’ - இந்தியாவில் அதிகரித்து வருவது பற்றி பின்னர் பார்ப்போம்.
 
சமூகத்தில் உள்ள மக்கள் கோரிக்கைகள் மூலமும், போராட்டங்கள் மூலமும் கொடுத்த அழுத்தங்களே, மனித உரிமைகளின் தோற்றம், மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாறு ஆகும்.
 
தனி மனித உரிமைகளை வலியுறுத்திய 'மாக்ன கார்த்தா'- Magna Carta (1215)-,'உரிமைகளுக்கான விண்ணப்பம்'- the Petition of Right (1628), 'அமெரிக்க அரசியல் சட்டம்'- the US Constitution (1787),  'மனிதர் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரெஞ்சு பிரகடனம்'- the French Declaration of the Rights of Man and of the Citizen (1789), 'அமெரிக்காவின் உரிமைகள் சட்டம்' - the US Bill of Rights (1791) , உணர்த்தும் வரலாறு அது தான்.
(Documents asserting individual rights, such as the Magna Carta (1215), the Petition of Right (1628), the US Constitution (1787), the French Declaration of the Rights of Man and of the Citizen (1789), and the US Bill of Rights (1791) are the written precursors to many of today’s human rights documents.- http://www.humanrights.com/what-are-human-rights/brief-history/cyrus-cylinder.html )
 
ஐ.நாவின் உலக மனித உரிமைகள் பிரகடனப்படி, -Universal Declaration of Human Rights-
 
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்குமான மரியாதை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளவையே மனித உரிமைகள் ஆகும். (Human rights are based on the principle of respect for the individual. Their fundamental assumption is that each person is a moral and rational being who deserves to be treated with dignity.-http://www.humanrights.com/what-are-human-rights.html )
 
ஒரு மனிதரின் மரியாதை -honour-, கெளரவம்- reputation, உள்ளிட்டு அவரின் தனி வாழ்க்கைக்கான உரிமை- The Right to Privacy (No one shall be subjected to arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honour and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks.);
 
ஒரு மனிதரின் சுதந்திரமான வளர்ச்சிக்கும்- free development, கெளரவத்திற்கும்- dignity  அத்தியாவசியமான சமூக பண்பாடு - social and cultural rights - உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உரிமை - Social Security  (Everyone, as a member of society, has the right to social security and is entitled to realization, through national effort and international co-operation and in accordance with the organization and resources of each State, of the economic, social and cultural rights indispensable for his dignity and the free development of his personality.)
 
மேலேக் குறிப்பிட்ட வரையறையின்படி, ஒரு மனிதரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மரியாதையைக் குலைக்கும் அளவுக்கு, இன்னொரு மனிதரின் அல்லது இன்னொரு சமூகத்தின் மனித உரிமைகள் செயல்பட முடியாது. அதாவது மனித உரிமையின் செயல்பாட்டுக்கான வரை எல்லைகளுக்குக் கட்டுப்பட்டே, எந்த மனிதரின் அல்லது எந்த சமூகத்தின் மனித செயல்பாடும், அந்த வரை எல்லைகளுக்குள் தான் செயல்பட வேண்டும். கட்டுப்பாடற்ற மனித உரிமை என்பது, நீண்ட வரலாற்றின் அடிப்படையில் உருவான மனித உரிமையின் வரையறையையும், வரை எல்லைகளையும் மீறியதாகும்.
 
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி தமக்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; தமது குடும்பத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; தமது சமூக வட்டத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; பொதுவில் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; என்று பேச்சுரிமை பல தளங்களில் செயல்படுவதாகும். அந்தந்த சமூக பாரம்பரிய, பண்பாடுகளின் அடிப்படையில் அவை செயல்படுவதாகும். ஐ.நாவின் மனித உரிமைகள்,  அந்த பாரம்பரிய, பண்பாடுகளைக் கணக்கில் கொண்டே, ஒவ்வொரு சமூகத்திலும் செயல்பட வேண்டும். மாறாக வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில் செயல்படுவது என்பது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமையும். மேற்கத்திய நாடுகளில் ' பூங்கா- park- ' போன்ற பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து புரள்வது அவர்களுக்குள்ள உரிமை. அதைப் பார்த்து, இந்தியாவில் அதை அனுமதிக்க முடியுமா? அந்த நோயில் சிக்கி, இந்தியாவில்,  'முத்தப் போராட்டம்' நடத்துபவர்கள், அடுத்து பொது இடங்களில் எல்லோரும் பார்க்க, ஆண்- பெண் உடலுறவு போராட்டம் நடத்துவார்களா?காலனியத்திற்கு முன் நமது பாரம்பரிய, பண்பாட்டு, கால வசதிக்குட்பட்ட 'இந்திர விழா' எவ்வாறு மறைந்தது? உலகமயமாதல் போக்கில், 'நுகர்வு கலாச்சாரத்தை' ஊக்குவிக்கும் ' வாலன்டை டே' என்ன சூழ்ச்சியில் 'காதலர் தினம்' என்று அறிமுகமானது?

அதன் வளர்ச்சிக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அதிகரித்து வரும் கீழ்வரும் நோய்களின் வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டா? 'காதல்' என்ற பெயரில் 'அனுபவித்து' விட்டு, கைவிடப்பட்டு, அது தொடர்பான கொலை, தற்கொலைகளில் சிக்காமல், குழந்தையுடன் ஏழ்மையில் உழல்பவர்கள் பற்றி, 'காதலர் தினம்' ஆதரவாளர்கள் கவலைப்பட்டு, ஏதேனும் நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்களா?அக்குற்றங்களில் ஈடுபட்ட 'அறிவுஜீவிகள்',  தமது திறமைகள் மூலம் 'கவிதை, கட்டுரை, கதைகள்' எழுதி, வசதியாக வாழ்ந்து, அந்த நோய்களின் வளர்ச்சிக்கு பங்காற்றி, 'எரிகின்ற குடிசை'யில் சிகிரெட்டை பற்ற‌ வைத்து,புகைத்து, இன்புறுகிறார்களா? அத்தகையோர் "தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணமும், நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள்,கிரனைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்படுவது"ம் பற்றி கவலைப்பட்டு ஏதேனும் 'படைத்திருக்கிறர்களா'?

"பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, தற்கொலை,கொலை, கொள்ளை,வன்முறை, குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள், திருமணமான சில வருடங்களுக்குளேயே விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் அதிகரிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக நோய்கள் ஆகும். இவை தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றைப் பாதித்துள்ள கடுமையான நோயின் வெளிப்பாடுகள் ஆகும்" (:'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 )'சமூக எபோலா'  நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்';
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )


 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உலகில் உள்ள சமூகங்கள் வெவ்வேறு பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் வெவ்வேறாக இருக்கும் போது, மனித உரிமைக்கான வரையறைகளும், வரை எல்லைகளும் வெவ்வேறாக இருப்பதில் வியப்பில்லை.  மேற்கத்திய கிறித்துவ உலகில், அந்த சமூக வரலாற்றில் உருவான 'மனித உரிமை' கோட்பாட்டை, இந்தியாவில் 'இறக்குமதி' செய்து, இந்திய சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில்,இயற்கையுடனும், சமூகத்துடனும் ஒரு மனிதருக்குள்ள தொடர்பைத் துண்டித்து, 'மனித உரிமை' என்று முன் வைப்பது சரியா? என்பதும் ஆய்விற்குரியதாகும். https://www.youtube.com/watch?v=aEh43aEOoLI
 
காலனி ஆட்சியில் அடிமைப்பட்ட நாடுகளில், இரு வேறு நாடுகளின் வரையறைகளும், வரை எல்லைகளும் ஒரு வகையான மோதலில் சிக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் அந்த பாதிப்புகளே காலனிய மன நோயாளிகளையும், திராவிட மன நோயாளிகளையும் உருவாக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (’ 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’;
http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
 
'மாதொரு பாகன்' நாவலில், திருச்செங்கோடு பகுதியில், பெருமாள் முருகன் குறிப்பிட்ட தகவல்கள் ஆதாரபூர்வமானவையா? இல்லையா? என்பது ஆய்விற்குரியது. ஆதாரபூர்வமானவையென்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அதை நாவல் மூலம் வெளிப்படுத்தி, அங்கு வாழும் மக்களின் மரியாதைக்கும், கெளரவத்திற்கும் களங்கம் கற்பிப்பது, உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் மீறல் ஆகாதா? பெருமாள் முருகனின் எழுத்துரிமைக்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் வரை எல்லைகள் பொருந்தாதா?
 
இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுக்கான 'அறிவுபூர்வமான கட்டுப்பாடுகள்' (reasonable Restrictions),  மேலேக் குறிப்பிட்ட வரை எல்லைகளின் அடிப்படையிலேயே உருவானவை, என்பதை, அது தொடர்பான இந்திய அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் தெரிவிக்கின்றன.
 
பேச்சுரிமையும், எழுத்துரிமையும்,அந்த வரை எல்லைகளை மீறும் போது, அவை 'மான நட்ட  வழக்கு'க்குரியவையாகக் (Defamation) கருதப்பட்டு, நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
 
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் மானநட்ட வழக்கு தொடுத்து தண்டிப்பதற்கு, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவை மூலமே வழக்கு தொடுத்தாக வேண்டும். அந்த இரண்டும் மேற்கத்திய சமூக வரலாற்றுப் பின்னணியில் உருவாகி, இந்திய சமூக சூழலில் எந்த அளவுக்கு நீதியை நிலைநாட்ட பயன்பட்டிருக்கிறது? குற்றவாளிகள் 'ஓட்டைகள்' மூலம் தப்பிக்க வழி வகுத்திருக்கிறது? என்பது ஆய்விற்குரியதாகும்

அதாவது சுதேசி புறக்கணிப்பில், இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய சமூகத்தின் கருத்து அமைப்பிற்கும் (Paradigm), சுதேசி கருத்து அமைப்பிற்கும் ஆன மோதலானது, இந்திய விடுதலைக்குப் பின்னும் தீர்க்கப்படாமல், பாரபட்சமான நீதிகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுத்துள்ளதா? அதுவே, மனித உரிமை பாதுகாப்பு என்ற போர்வையில், தீவிரவாத, பயங்கரவாத போக்குகளை வளர்த்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
 
பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்கு  பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும், தமக்குள்ள சமுக பலத்தின் மூலம் தடை செய்து வரும் வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார்(Subhradipta Sarkar)  ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை' -‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை இரகசியத்தடை ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார்.https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf
 
சமூகத்தில் வாழும் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு' முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.
 
ஒரு நாட்டில் நீதி மற்றும் சட்டம் எவ்வாறு செயல்படுவது என்று மதிப்பிடுவது தொடர்பாக‌,  அந்நாட்டின் குடிமக்கள் நினைப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் தெளிவுபடுத்தியுள்ளார். (Socrates argues that law and justice should be evaluated above what citizens think the proper action to take is. “I thought I should run any risk on the side of law and justice rather than join you, for fear of prison or death, when you were engaged in an unjust course” (32b-c). From ‘Moral Theories and Moral Obligations’ Written by Michael J. Ritter Edited by Michael J. Ritter and Richard J. Colling}
 
இந்திய விடுதலைக்குப் பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட‌ சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில் அரசு வலிமை இழந்து வருகிறதா?'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரை எல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின் கொள்ளை, 'மாதொருபாகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவையா? உரிய நீதி பெறுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், ஊழல் தொடர்புள்ள அரசு வக்கீல், நீதிபதிகள் உள்ளிட்ட குறைபாடுகளும் எந்த அளவுக்கு இருக்கின்றன? அவை மேற்குறிப்பிட்ட சமசீரற்ற பண்பு வலிமை பெற, எந்த அளவுக்கு துணை புரிந்துள்ளன? போன்ற கேள்விகளின் வலிமையை 'மாதொரு பாகன்' 'மனித உரிமை மீறல்' பிரச்சினை வெளிப்படுத்தியுள்ளது.
 
இந்திய வரலாற்றில் வேதங்களுக்கும், யாகங்களுக்கும் எதிரான 'அறிவுபூர்வ' விவாதங்கள் நடைபெற்றதற்கு சமஸ்கிருதத்திலும், தமிழிலும் பல சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதங்கள் உணர்ச்சிபூர்வமாக தடம் புரண்டு, பொது அரங்கில் எதிரணியினர் ஒருவரையொருவர் இழிவுபடுத்துவது, 1944இல் முளை விட்டு வளர்ந்ததை ஏற்கனவே பார்த்தோம்(பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அவ்வாறு தடம் புரண்டதானது, மேலேக் குறிப்பிட்ட கேள்விகள் எழ காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
 
தமிழ்நாட்டில்  மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட மக்களின், மனித உரிமைப் பாதுகாப்பு முயற்சிகளில் பாரபட்சம் கடைபிடிக்கிறார்களா? என்ற கேள்வியையும் 'மாதொரு பாகன்' நாவல் பிரச்சினை எழுப்பியுள்ளது.
 
பெருமாள் முருகனின் 'எழுத்துரிமையை'(?) கம்யூனிஸ்டுகளும் ஆதரிக்கிறார்கள். அவர்கள் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரால், பால் சக்கிரியா (Paul Zachariah,) என்ற மலையாள எழுத்தாளரை, கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கியதைக் (manhandled) கண்டித்தார்களா? பெருமாள் முருகன் எழுத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவ்வாறு பெருமாள் முருகனைத் தாக்கவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கொண்ட 'ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும்' (moral policing), கம்யூனிஸ்ட் தலைவர்கள் மிகவும் ஆடம்பர வாழ்க்கையில் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்ததையும்(“lavishly, indulging in sex”)  பால் சக்கிரியா கண்டித்து எழுதியதே, அந்த தாக்குதலுக்குக் காரணமாகும்.
 
திருச்செங்கோடு இந்து கோவில் முடநம்பிக்கையை பின்னணியாகக் கொண்டு, கதை எழுதியது போல, தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் 'தர்கா' பின்னணியில், இது போன்று கதையை, பெருமாள் முருகன் உள்ளிட்டு, எந்த எழுத்தாளரும் எழுத முடியுமா?

தமிழ்நாட்டில் கடந்த வருடங்களில், அரசியல் செல்வாக்குள்ள கொலையாளிகளால் மிரட்டப்பட்டு, அரசு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி, அந்த கொலையாளிகள் நிரபராதிகளாக விடுதலையானார்கள். பெருமாள் முருகனுக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆதரவாளர்கள், அந்த எந்த பின்பலமற்ற அப்பாவி சாட்சிகளின் மனித உரிமைக்கு குரல் கொடுத்தார்களா? ஆக மனித உரிமைப் பாதுகாப்பிலும் பாரபட்சம் காட்டுவது என்ன நியாயம்?
 
தமிழ்நாட்டில் மனித உரிமைப் போராளிகளால் முன்னெடுக்கப்படும்,  மனித உரிமைகள் தொடர்பான வரையறைகளும், வரை எல்லைகளும் எவ்வாறு உருவாகி, எந்த அளவுக்கு நேர்மையாக, அல்லது பாரபட்சமாக செயல்படுகிறது?
 
தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் உள்ள மனித உரிமை மீறல்களை 'வாழ்வியல் புத்திசாலித்த‌னத்துடன்' கண்டு கொள்ளாமல், 'ஆதிக்கவாதிகளுடன்' நல்லுறவாக இருந்து கொண்டு, தம்மையும் தமது குடும்பத்தையும் நன்கு செட்டில் செய்து, பெருமாள் முருகன் பிரச்சினை போன்றவற்றில் (சுயலாப நோக்கின்றி போராடுபவர்களுடன் சேர்ந்து), முன்னுக்கு நிற்கும் ‘மனித உரிமைப் போராளிகளை’(?)  எவராலும் அம்பலப்படுத்த முடியாது; அந்த அளவுக்கு மீடியா, நீதி மன்றம் உள்ளிட்டு அனைத்திலும் அவர்கள் வலிமையானவர்களா? ஒரு சமூகத்தின் மொழி, பாரம்பரியம்,பண்பாடு,நிலத்தடி நீர் தாரங்களாகிய ஏரிகள், குளங்கள், கிரனைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், மனித உரிமைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். சமூகத்தில் வெளிப்படும் ஆற்றல் செயல்பாடானது (‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’;http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html   ), அந்த தொடர்பை துண்டித்து, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி, பாரபட்ச போக்கில், தமக்கு 'வேண்டியவர்களின்' மனித உரிமைகளுக்காக மட்டும் போராடுவது சரியா? 

ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டத்தில், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவிக்க, தமிழ்நாட்டிலிருந்து அழுத்தம் கொடுத்தவர்கள்; 

தமிழ்நாட்டில் கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பலரின் தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது: 
கண்டனம் தெரிவிக்க, தமிழ்நாட்டிலிருந்து அழுத்தம் கொடுத்தார்களா?
 
வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் மனித உரிமை என்.ஜி.ஓக்களுக்கு உள்மறை ‘Subterranean’  செயல்திட்டம் இருப்பதே மேற்குறிப்பிட்ட பாபட்ச மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளுக்கு காரணமா? உலக வர்த்தக வியாபார நலன்களுக்கு ஏதுவாக இந்திய மக்களை 'நுகர்வு கலாச்சாரத்தில்' சிக்க வைக்க, இந்திய பாரம்பரிய, பண்பாடுகளுக்கு இருக்கும் செல்வாக்கின்வலிமையையும், மேற்கத்திய சூழ்ச்சிகளுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையையும், குலைப்பதற்கு வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓக்கள் பங்களிப்பு வழங்கி வருகிறார்களா? ‘India Foundation for the Arts (IFA)’ என்ற என்.ஜி.ஓ அமைப்பு 'மாதொரு பாகன்' நாவல் எழுத பெருமாள் முருகனுக்கு ரூபாய் 3,28,500 நிதி உதவி செய்துள்ளது. 'மாதொரு பாகன்' நாவல் மூலம், பெருமாள் முருகன் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்படுவதற்குரிய குற்றவாளியானால், அந்த நாவல் எழுதத் தூண்டி, நிதிஉதவி செய்த அமைப்பும் குற்றவாளியாகாதா?
 
ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளில் உலக நாடுகளுக்கிடையே பாரபட்சமான செல்வாக்குகள் இருப்பதால், வலிமையான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ள மனித உரிமைகளை மீறி செயல்பட்ட போது, அதைத் தடுக்கும் வலிமை ஐ.நாவுக்கு இருந்ததில்லை. அது ஐ.நா அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும். தத்தம் சுயநல அரசியலில், ஐ.நாவினை அவமதித்து வரும் அமெரிக்க அரசானது, சிறிய நாடான இலங்கை அரசை, ஐ.நா மூலம் 'முள்ளி வாய்க்கால் போர்க் குற்ற விசாரணை'என்று அச்சுறுத்தி வருவதும், ரஷ்யா, சீன அரசுகள் அதனை எதிர்த்து வருவதும், தமிழ்நாட்டு கம்னியூஸ்ட் கட்சிகள் ரஷ்ய அரசையும், சீன அரசையும் கண்டிக்காமல், ஈழ மக்களின் மனித உரிமை ஆதரவாளர்களாக வலம் வருவதும், 'மனித உரிமை கேலிக் கூத்துகள்' ஆகாதா?

எனவே இந்தியாவிலும், உலக அளவிலும் மனித உரிமைப் பாதுகாப்பில் உள்ள பாரபட்சத்தையும், வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில், இன்னொரு சமூகத்தில் அந்த வரை எல்லைகளைத் திணிப்பதானது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமைவதையும், தமிழ்நாட்டில் பொது அரங்கில், சமூகப் பொறுப்புடன் விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, 'மாதொரு பாகன்' நாவலும், பெருமாள் முருகனும், அவரின் 'எழுத்துரிமை' (?) தரவாளர்களும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
 
குறிப்பு:
1.‘Perumal Murugan: Escape the Questions, Skip to Outrage’
 
Even while sections of elite might argue that the contents in the book should be tolerated in the name of liberalism, the factual misrepresentations relating to the temple festival and the casting of aspersion on the character of the local women supported by no evidence cannot be passed off as history

http://swarajyamag.com/culture/perumal-murugan-escape-the-questions-skip-to-outrage/

2.படிக்கவும்: 'பெருமாள் முருகன்,புலியூர் முருகேசன்,கவிஞர் தாமரை;
உள்மறை இரகசியத் தடைகளும் (‘Subterranean censorship’), குடும்பச் சீர்குலைவுகளும்' ; http://tamilsdirection.blogspot.sg/2015/03/12.html 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பெருமாள் முருகன்,புலியூர் முருகேசன்,கவிஞர் தாமரை;

உள்மறை இரகசியத் தடைகளும் (‘Subterranean censorship’), குடும்பச் சீர்குலைவுகளும்

 
பெருமாள் முருகேசனைத் தொடர்ந்து, எழுத்தாளர் புலியூர் முருகேனின் நூலை எதிர்த்தும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
After Perumal Murugan, another Tamil writer has landed in controversy. The bone of contention this time is a novel penned by Puliyur Murugesan. On Wednesday, a group of people allegedly attacked the 45-year-old writer in his village in Karur and demanded police action against him saying the book insulted their community.
According to sources, the police had already planned to register a case against Murugesan as soon as the contents of the book triggered riots in Karur town. After a series of discussions with law experts, police registered a case against the author under five IPC sections - 153 (wantonly provocating riot), 292 (writing and circulating obscene contents), 502 (sale of book containing defamatory matter), 504 (intentional provocation of breach of peace and 505 (causing fear or alarm to public).
 
ஏற்கனவே தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள், 'மெட்ராஸ் கஃபே' (Madras Café) உள்ளிட்டு தமக்குப் பிடிக்காத திரைப்படங்களை எதிர்த்துப் போராடி ,தடையில் வெற்றியும் பெற்றதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் நூல்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களும், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களும்; கருத்துரிமை எதிர்ப்பில் ஒரே வகையா? இல்லையா? பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட‌  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.
 
அதே போல், விடுதலைப்புலி ஆதரவாளர்களில் (குறிப்பாக அந்தந்த பகுதிகளில்)  யார் யார்  பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் கருத்துரிமை மீது மேற்கொண்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.
 
பாதிக்கப்பட்டதாகக் கருதிய மக்கள், பாதிப்புக்குள்ளாக்கியதாகக் கருதிய பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் உள்ளிட்ட  எழுத்தாளர்களை எதிர்த்து,போராடினார்கள். பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்  சார்ந்த சாதியினரையோ அல்லது கட்சியினரையோ தாக்கவில்லை.
 
ஆனால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஆய்விற்காகவும், ஆன்மீக சுற்றுலாவிற்காகவும் வந்திருந்தவர்களை, 'சிங்களவர், பெளத்தர்' என்ற காரணத்திற்காக தாக்கியவர்கள் தமிழ் உணர்வு' என்ற அடிப்படையில் செயல்படும் கட்சியினர் ஆவர். (http://dbsjeyaraj.com/dbsj/archives/18826 )
 
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் மேற்குறிப்பிட்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை எதிர்ப்பாளர்களும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் நடத்திய  போராட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்மறை இரகசியத்தடை  ‘Subterranean censorship’ என்று அழைக்கப்படும்.
 
பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்குள்ள சமுக பலத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும் தடை செய்து வரும் வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார்(Subhradipta Sarkar)  ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை' -‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை இரகசியத்தடை  ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார்.https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf
 
தமிழ்நாட்டில் ‘உள்மறை இரகசியத்தடைகளின்’ ‘Subterranean censorship’ தோற்றமும் வளர்ச்சியும், எந்தெந்த காலக்கட்டங்களில் உருவாகி, எவ்வாறு வளர்ந்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்பது ஆய்விற்குரியதாகும்.
ஒரு சமூகத்தின் செயல்பாடு ஆனது அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of the law), மற்றும் சமூக செயல்நெறி மதகுகள்(social functional checks)  மூலம் நெறிப்படுத்தப்படுபவையாகும்.
 
சமூகத்தில் உள்ள மனிதர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 'அரசியல்' செயல்நுட்பம் மூலம் அரசால் உருவாக்கப்பட்டு அமுலாவதே அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of law) ஆகும்.
 
சமூகத்தில் அரசியல் புலத்திற்கான வரை எல்லைகளுக்கு அப்பால், அந்த சமூகத்தின் பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளில் உருவாகி செயல்படுவதே, அந்த சமூகத்தின் செயல்நெறி மதகுகள்(social functional checks) ஆகும். (refer ’திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2) பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி”;
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
 
சட்டபூர்வ செயல்பாடும், சமூக செயல்நெறி மதகுகளின் செயல்பாடும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படும்போது, அந்த சமூகத்தில் குற்றங்கள் சிறுமமாக, இணக்கமான சூழலில் அச்சமூகம் வளர்ச்சி திசையில் பயணிக்கும்.
 
சட்ட அடிப்படையிலான நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,சட்டத்தை அமுல்படுத்தும் வலிமை அரசுக்கு இருக்கும்.
 
பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளிலான சமூக செயல்நெறி மதகுகள், கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,அவற்றின் செயல்பாட்டிற்கு வலிமை இருக்கும்.
சமூகத்தில் வாழும் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு' முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.
 
“இந்திய விடுதலைக்குப் பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட‌  சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில் அரசு வலிமை இழந்து வருகிறதா? 'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரைஎல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின் கொள்ளை, 'மாதொரு பகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவையா? உரிய நீதி பெறுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும்,ஊழல் தொடர்புள்ள அரசு வக்கீல், நீதிபதிகள் உள்ளிட்ட குறைபாடுகளும் எந்த அளவுக்கு இருக்கின்றன? அவை மேற்குறிப்பிட்ட சமசீரற்ற பண்பு வலிமை பெற எந்த அளவுக்கு துணை புரிந்துள்ளன? போன்ற கேள்விகளின் வலிமையை 'மாதொரு பாகன்' 'மனித உரிமை மீறல்' பிரச்சினை வெளிப்படுத்தியுள்ளது.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer  ‘மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்;  'மாதொரு பாகன்'  எழுப்பும் கேள்விகள்’;
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )  
 
அந்த சமசீரற்ற பண்பு உள்மறை இரகசியத்தடைகள் மூலம் வெளிப்படுவது போல, சமூகத்தின் மற்ற பரிமாணங்களிலும் வெளிப்படும்.
 
“தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணமும், நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள்,கிரனைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்படுவதும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை,கொலை, கொள்ளை,வன்முறை, குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள், திருமணமான சில வருடங்களுக்குளேயே விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் அதிகரிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக நோய்கள் ஆகும். இவை தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றைப் பாதித்துள்ள கடுமையான நோயின் வெளிப்பாடுகள் ஆகும்.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer ’ 'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 ) 'சமூக எபோலா'  நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்’;
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )
 
குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள்,விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் தமிழ்நாட்டில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி புற்றீசல் போல்  வளர்ந்து வருவது பற்றி, இதுவரை, 'தமிழ், தமிழர் அமைப்புகள் கவலைப்பட்டிருக்கிறர்களா? அல்லது தங்களின் உள்மறை இரகசியத்தடை தொடர்புள்ள சமூக ஆற்றலை, தங்களின் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய போக்கினால், தமிழர் அமைப்புகளும், தலைவர்களும் அதிகரித்து வருகிறர்களா? எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டில் தமிழர் குடும்பங்களில் 'சமூக எபோலா' நோய் போல, 'அதிவேகமாக'ப் பரவிவரும் குடும்ப சீர்குலைவுகளை, 'தமிழர் அமைப்புகள்' விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, அந்த அமைப்புகளில் 'அதிக அனுபவம்' பெற்ற கவிஞர் தாமரை உருவாக்கியுள்ளார். (அவரின் பத்திரிக்கையில் வெளிவந்தபொதுவிவாதத்திற்கான பகுதியும்,  சில மடல்களும் கீழே )
 
'தமிழ் உணர்வு, பகுத்தறிவு' போன்ற முகமூடிகளுடன், அல்லது அரசு பதவியில் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 'செல்வம், செல்வாக்கு' ஈட்டி வருபவர்களின் 'வாழ்வியல் வெற்றி இரகசியம்' பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 
“நான்காவது இரகசியம்:  புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த‌ நாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம் அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும். அதாவது புதிதாக சந்திக்கும் நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.” (refer  ‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍ - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;
http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html  )
 
குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளைக் காவு கொடுத்து, தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வரும், 'வாழ்வியல் வெற்றியாளர்களை' அடையாளம் கண்டு ஒதுக்கும் பொது விவாதத்தை, கவிஞர் தாமரை தூண்டியுள்ள 'விவாதத் தீ'யை உரிய முறையில் பயணிக்கச் செய்தால், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் மீட்சிக்கான சமூக ஆற்றலானது, தவறான உள்மறை இரகசியத்தடைகளிலும், குடும்ப சீர்க் குலைவுகளிலும் விரயமாவதைத் தடுத்து, மீட்சி திசையில் பயணிக்க வழி ஏற்படும். தவறினால், அடுத்த சில வருடங்களில் அவ்விவாதத்தைத் தவிர்க்கும், 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு' அமைப்புகள் சுவடின்றி உதிர்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.
 
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’  திருக்குறள் 4
தனக்கே தலைமை, செல்வம், செல்வாக்கு போன்ற விருப்பும்(desire), தனது சுயநலன்களுக்குப் பயன்படாதவர்கள் மீது வெறுப்பும், என்பது போன்ற தனிமனித பலகீனங்கள் இல்லாத பண்பினை அகவயபடுத்தியவர்களைக் (internalize)  கொண்ட  இயக்கமும், தலைமையுமே, இனி தமிழ்நாட்டில் எடுபட முடியும்.
 
கவிஞர் தாமரையின் அறிக்கையும், வெளிவந்த சில கருத்துக்களும்;
 
தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.------------ மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன்----------- அது என்ன புரட்சி, அதென்ன அரசியல்? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இவர் ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார்? எனவே அது என்னவகைப் புரட்சி, அதன் நன்மை / தீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது.  -------- நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.
நான் கனவு கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.
எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ் / திராவிடத் தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.----------- நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர், கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள்?
http://tamil.thehindu.com/tamilnadu
 
வெளிவந்துள்ள சில கருத்துக்கள்:
 
1.   தியாகு. தூக்கு தண்டனைக் கைதியாக இருந்த போது, 'பரோலில்' வெளிவந்து, தனது நண்பரின் சகோதரியை மணந்து, கர்ப்பமாக்கி விட்டு, சிறை சென்ற பின் குழந்தை பிறந்தது உண்மையா? தனது குழந்தையின் தகப்பனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு 'அந்த மனைவி' கொடுத்த கருணைமனு காரணமாக தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம் பெற்றதா? பின் சிறையிலிருந்து விடுதலையாகி, விடுதலைப் புலி ஆதாவாளராக, தாமரையைக் 'காதலித்து' திருமணம் செய்தது உண்மையா? 'என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவு' எடுத்தது உண்மையானால், அவர்களும் 'அந்த மனைவிக்கு' துரோகம் இழைக்கத் துணை போனார்களா? அந்த மனைவிக்கு' துரோகம் இழைத்து தாமரை தியாகுவை மணந்தது சரியா? இந்த தவறுகளை 'சரியான ஜனநாயகத் தீர்வு' என்று நியாயப்படுத்தலாமா?
 
 
2.   --சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியத் தலைவர் செய்கிற செயலாக இல்லை இது -- நல்ல ஜோக்!
 
3.   தமிழை வைத்து வணிகம் செய்யும் பலர் இணைவி துணைவி பிணைவி என வாழ்வது சகஜமாகி எத்தனையோ காலமாகிறது ஒழுக்கம் பற்றிப் பேசும் தானைத் தலிவர்களே களவொழுக்கம் கள்ளத்தொடர்பு மாற்றான் தோட்டத்து மல்லிகை என அலைவதும் உண்டு இரண்டாம் முறை தோற்ற தாமரை பாவம்
 
4.  இவர் தனது முதல் கணவரை விட்டு வந்தவர்.அது இவரது தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது கணவர் அதுதான் இப்போது ஓடி போயிருப்பவர், அவரும் தன் மனைவியும் மற்றும் ஒரு மகளையும் விட்டு இவருடன் இணைந்தார்.அந்த முதல் மனைவிக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் யார் வாழ்கை கொடுப்பார்கள்/கொடுத்தார்கள்.இந்த தமிழ் தேசியம்,திராவிட புரட்டு இதெல்லாம் பணம் சம்பாதிக்க ஒரு வழி- புண்ணாக்கு .அப்படி போகும் வழியில் தன் உடல் பசிக்கு ஏதேனும் கிடைத்தால் அது போனஸ்.இதை சீரியஸ் ஆக நினைத்து ஏமாறும் அப்பாவிகளும் இருக்கிறார்கள், தாமரையை போல. இவர் பல வருடங்களாக புலம்புவதே வேலையாக வைத்து கொண்டிருக்கிறார்.ஆனால் தமிழ் செனிமாவை பொறுத்தவரை ஒரு முதல் தர கவிஞர்.

"    in the immediate aftermath of that protest by her, Thiyagu had agreed that an investigation committee be set up to look into her allegations against him. "That committee comprised renowned writers, and it has been investigating what actually happened. It's almost a year now, and if they let me know their findings, I'd like to make that public so that other women are aware of what all can go wrong in a marriage. And I have decided that till I announce that result, I will not attend any public events in a personal capacity"
http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/My-life-is-not-a-love-poem-Thamarai/articleshow/50772132.cms


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard