வைரமுத்து 'கோழை இரட்டை வேடப் போக்கில்' பயணிக்கிறாரா?
தமிழும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா? ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வாஎதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில்பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?
வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா? (‘'அழுகியது' கழகங்கள் மட்டுமா? 'அழுகல்' மனிதர்கள்எல்லாம், ‘அழுகல் இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்; http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html )
மேற்கத்திய குறிப்பாயத்தின் (Western Paradigm) 'மன அடிமையாக', அத்தகைய ' கோழை இரட்டை வேடப்போக்கின்' சான்றாக, ' மாதொரு பாகன்' வெளிவந்ததுள்ளதையும் நான் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
அத்தகைய 'கோழை இரட்டை வேடப் போக்கில்' இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் எல்லாம், சமூக குற்றம் புரியும் நோக்கில் செயல்படுபவர்கள் ஆவர். (The standard common law test of criminal liability is expressed in the Latin phrase actus reus non facit reum nisi mens sit rea, i.e. "the act is not culpable unless the mind is guilty". ( https://en.wikipedia.org/wiki/Mens_rea )
தமிழ்நாட்டில் உள்ள 'பொர்க்கி' தமிழர் பற்றிய சுப்பிரமணியசுவாமியின் கருத்தினை, இந்துத்வா எதிர்ப்பில்உள்ள 'பிரபல' தலைவர்கள் எவரும் கண்டித்தார்களா? அவர் வெளிப்படுத்திய 'பொர்க்கி தமிழர்' வரையறையின் அடிப்படையில், குறைந்த பட்சம், அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டார்களா? (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html ) மாறாக அவரின் ஆதரவில் பயணிக்கும் சசிகலா குடும்பஅரசியலை அவர்களும் ஆதரித்ததானது, எதை உணர்த்துகிறது? ஆதாய நோக்கற்ற இயல்பான எதிர்ப்புவலிமையின்றியும், அறிவுபூர்வ விவாத வலிமையின்றியும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, 'சமூககோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதானது, ஆண்டாள் சர்ச்சையில், வைரமுத்துவின் மூலம்வெளிப்பட்டுள்ளதா?
குறிப்பு :