தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்
அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில், சுயநல அரசியலுக்காக, அவசர கதியில், உரிய விதிகளின்றி, துவக்கப்பட்ட, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், எனது 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வினை, விருப்பமின்றி, நிர்பந்தத்தால், 'ஆய்வுத் திட்டமாக' நான் மேற்கொண்டு, மறக்க முடியாத அவமானத்திற்குள்ளானேன். முறையான விசாரணை மூலம், அதன் பரிந்துரையில், உரிய விதிகளின்படி, அந்நிறுவனம் செயல்படும் நாளை எதிர்பார்க்கிறேன். அதன்பின், சட்டபடியான முறையில், வாங்கிய நிதியைத் திருப்பிக் கொடுத்து, எனது ஆய்வுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி, அந்நூலை வெளியிட எண்ணியுள்ளேன். அந்த 'செம்மொழி' அனுபவங்களை பதிவாக, அதன்பின் வெளியிடவும் எண்ணியுள்ளேன்.