‘செத்துப்போனவர்களைப்பற்றி எதிர்மறையாகச் சொல்லக்கூடாது’ என்ற வரி என்னிடம் விவாதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு நேர்மை இல்லை. சில செத்துப்பொனவர்களைக் கண்மூடித்தனமாகத் துதிபாடி, தன் புனித பிம்பங்களை மற்றவர்கள் மேல் சுமத்தலாமாம் , ஆனால் அப்பிம்பங்களை மற்றவர்கள் தர்க்கத்தோடு அலசினால் , உடனே “செத்துப்பொனவர்களைப் பழிக்காதே” என்ற கூச்சல்தான் பலர் போடுகின்றனர் . சமீபத்தில் ஒரு கூகிள் விவாதக்குழுவில் ஞானமுத்து தேவநேசன் எப்படி கட்டுக்கதைகளையும், சயன்ஸ் ஃபிக்சன்களையும் எழுதி தமிழ் பற்றிய சிந்தனைகளின் தரத்தை மட்டமாக்கினார் என தேவநேசனைக் கண்டித்தேன் – இது அடிக்கடி பாவாணர், மொழிஞாயிறு போன்ற துதிபாடல்களின் எதிர்மறை. இதற்கு யாரும் அறிவுசார்ந்ததாக ஒரு பதிலும் தரவில்லை.
22 ஆகஸ்த் 2012 மாலைமுரசுப்படி (அட்டேச் செய்யப்பட்டுள்ளது) தேவநேசனை விமர்சிக்கும் கூகிள் குழுக்களையும், விக்கிபீடியாவையும் தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என – கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள் – பல தமிழ் அகாதமிக்குகள் கோரிக்கை விட்டுள்ளனர். மாலைமுரசுப்படி இந்தக் கோரிக்கையின் கையெழுத்தாளர்கள் (பொன்னுசாமி கோதண்டம் என்ற) முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, பொன்னவைக்கோ, இறையரசன், பூங்குன்றன், அரமமுறுவல், இறைஎழிலன், சுந்தர ஜெயபாலன், பெஞ்சமின் லெபோ (பிரான்சு), இளங்குமரன் என்ற சகாயராசு, தஞ்சை கோ. கண்ணன், தெக்கூர் தமிழ்தென்றல் ஆகிய “அறிஞர்கள்” . அவர்கள் கோரிக்கையில் ”……… வலைத்தளத்தில் மறைந்த தமிழ்ச்சான்றோர்களை இழித்தும், பழித்தும் குழு மடலாடல் என்ற பெயரில் இழிசெயல்கள் தொடர்ந்து நடை பெற்றுவருகின்றன. … இதன்மூலம் எங்களுக்கு தீராத மனவலியையும் கொந்தளிப்பையும் ஏற்ப்படுத்திவிட்டார்கள்… “
இதைப்போல் சரித்திரம், மொழியியல் ஆகிய துறைகளில் அதீத துதிபாட்டு மனப்பான்மை – அதுவும் சீனியர் தமிழ் அகாதெமிக்குகளே செய்வது – எப்படி விவாதங்களை அடக்க முயற்ச்சிக்கின்றது எனக் காட்டுகிறது. முக்கியமாக ஈவேரா துதி, தேவநேசன் துதி பாரதிதாசன் துதி மறைமலை அடிகள் துதி வரலாற்று பிரக்ஞையை நசுக்குவது மட்டுமல்ல, ஒரு rational approach ஐப் பொதுவெளியில் கொன்றுகொண்டு வருகிறது.
மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்
அன்புள்ள விஜி,
இச்செய்தியை நான் முன்னரே மீடியா வாய்ஸ் இதழிலும் வாசித்தேன். பாவாணரை இழிவுசெய்யும்’இணையதளங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் அதன் மேல் நடவடிக்கை இல்லை என்றும் ‘தமிழறிஞர்கள்’குமுறியிருந்தார்கள்’.அடைமொழி இல்லாமல் அவர் பெயரை சொல்லியிருந்ததுதான் இழிவுபடுத்தலாம்.
அப்பட்டமான ஃபாசிசம் இது. ஓர் ஆய்வாளர் முன்வைத்த கருத்துக்கள் அறிவுபூர்வமானவை அல்ல, அவை காழ்ப்பு கொண்ட கருத்துக்கள் என இன்னொரு ஆய்வாளர் ஆய்வின் அடிப்படையில் சொல்வது குற்றவியல் சட்டப்படி சிறையிலடைக்கப்படவேண்டிய குற்றம் என்றால் இந்த நாட்டில் கருத்துரிமை என என்ன இருக்கிறது? அம்பேத்கர் மாய்ந்து மாய்ந்து எழுதிவைத்த வரிகளுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நல்ல வேளையாக இந்த ஃபாசிஸ்டுகள் கோரும் தமிழ் தேசியம் இன்னும் வரவில்லை. வந்தால் இஸ்லாமிய நாடுகளை விட கருத்தடக்குமுறை மிக்க ஒரு தேசம் உலகுக்கு கிடைத்திருக்கும்
இந்த அபத்தமான கோரிக்கை பற்றி இதழ்களிலும் இணையத்திலும் வாய்கிழிய ஜனநாயகம் பேசும் பெரியாரியர்களும் இடதுசாரிகளும் ஏதேனும் சொல்வார்களோ என்ற நப்பாசை ஒரு பத்துப்பதினைந்துநாள் எனக்கும் இருந்தது
ஆனால் எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்றைய பலதரப்பினராலும் மிகமிகக் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டார். அவருடைய தாயின் கற்பே பெரும்பாலும் வசைக்குரியதாக இருந்தது. திராவிட இயக்கத்தவர் தேவநேயப் பாவாணர் தலைமையில் அதற்கு எதிரான பெரிய வெறுப்பியக்கத்தையே ஆரம்பித்தனர். அவர்கள் ஆட்சிக்குவந்தால் வையாபுரிப்பிள்ளையின் அகராதி கடலில் தூக்கிப்போடப்படும் என்றும், புதிய ‘சரியான’ அகராதி தயாரிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த ஐம்பதாண்டுக்காலத்தில் இன்றுவரை அப்படி ஒரு பேரகராதி முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை. பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பாலான முயற்சிகள் பாதிக்கிணறு தாண்டின. பல முயற்சிகள் வையாபுரிப்பிள்ளை அகராதியின் எளிய நகல்கள். வையாபுரிப்பிள்ளை அகராதியே இன்றும் தமிழ்ப்பேரகராதியாக நீடிக்கிறது. அதற்கு மறு அச்சுதான் வந்திருக்கிறதே ஒழிய மறுபதிப்பு கொண்டுவர இன்று ஆளில்லை.
அந்த எதிர்ப்புகள் குவிமுனை கொண்ட இடம் என்ன தெரியுமா? அவ்வகராதியில் வையாபுரிப்பிள்ளை ‘முதலி’ ‘செட்டி’ என்று சொற்பொருள் கொடுத்திருந்தார். அது தங்கள் சாதியினரை இழிவுசெய்வது என்றும் முறையே முதலியார் என்றும் செட்டியார் என்றும்தான் இருக்கவேண்டும் என்றும் அச்சாதியினர் பொங்கி எழுந்தனர். அவர்களை ஆதரித்து களமிறங்கினர் திராவிட இயக்கத்தவர்.
வையாபுரிப்பிள்ளை செட்டி என்றும் முதலி என்றும்தான் நூல்களில் இருக்கிறது என்றும், அச்சாதியினர் தங்கள் பெயரை தாங்களே எழுதும்போது செட்டி என்றும் முதலி என்றும்தான் எழுதுகிறார்கள் என்றும், ஆர் விகுதி மதிப்புக்குரியவர்களைச் சுட்டும்போது பிறரால் சொல்லப்படுவது என்றும், தன் பெயரை தானே பிள்ளைவாள் என்று போட்டுக்கொள்வதில்லை என்றும் சொல்லிப்பார்த்தார். கண் உடையும் வசை. இன்றுகேட்டாலும் கூசும் சொற்கள்.
அவர்கள்தான் இன்று பார்ப்பனர் என்று சொல்லலாம் அது வசை அல்ல என்று சொல்கிறார்கள். வையாபுரிப்பிள்ளை பார்ப்பனன் என்னும் சொல்லை அகராதியில் சேர்த்திருக்கிறார். அது வசை அல்ல. ஆவணப்படுத்தல்.
தங்கள் தலைவர்களை பெயர் சுட்டிச் சொல்வதே அவமதிப்பு என எண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலைகொண்ட கும்பல் இதைச் சொல்கிறது. பட்டப்பெயரால் தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்பவர்கள் உலகநாகரீகம் பற்றிப் பேசுகிறார்கள்.
அத்தனைக்கும் மேலாக சில சொற்கள் சொல்பவரால் வசை என பொருள் அளிக்கப்படும். கேரளத்தின் கீழோர் தமிழர்களை பாண்டிகள் என்பார்கள். நேர்ப்பொருள் பாண்டியநாட்டைச்சேர்ந்தவன் என்பதே. அவர்கள் அளிக்கும்பொருள் இழிந்தவன் என்பது. ஆகவே அது ஒரு வசைச்சொல்லே. சென்னையில் தெலுங்கர்களை கொல்ட்டிகள் என்கிறார்கள். வேடிக்கைச்சொல் அது. ஆனால் வசையாக அது பயன்படுத்தப்படும் என்றால் வசையே
ஒரு சாதி அல்லது குழு தங்களை ஒரு சொல் வசை எனக் கருதுகிறது என்றால் அதை சொல்வது வசையேதான். தமிழ்மரபில் முடவன் என்றும் நொண்டி என்றும் பெட்டை என்றும் பேடி என்றும் மூளி என்றும் எத்தனையோ சொற்கள் உள்ளன. அவை இன்று வசைகளாக ஆகிவிட்டன .அதைத் தவிர்ப்பதே நாகரீகம்.
ஆனால் அரசியல்நாகரீகத்திற்கும் வெறுப்பரசியலுக்கும் என்ன தொடர்பு? திராவிட இயக்க மேடைப்பேச்சாளர்கள் கடந்துசென்ற எல்லைகள் எல்லாம் மிகமிக அரியவை.
தங்களைத் தாங்களே வசைபாடிக்கொள்ளும்போதும் அவர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அதன் தடயங்களை பாரதிதாசன் அண்ணாத்துரைபற்றிச் சொன்னபோதும் வை.கோபாலசாமி மு.கருணாநிதி பற்றி சொன்னபோதும் கண்டோம்.
இரண்டாவது வாதம், தேவநேயப் பாவாணர் வழிவந்தது. அவர் சொற்திரிப்புக்கு உலகளவில் நிகரற்றவர். ஆதிபகவன் முதலிய அனைத்துச் சொற்களையும் இலக்கணநெறிகளைக்கூட மீறி விருப்ப்படி பிரித்து எந்த விதப் பண்பாட்டுக்குறிப்புகளும் இல்லாமல் பொருள்கொண்டு அவை குறிப்பிடுவது இறைவனையே அல்ல என்றும் தொல்தமிழ் மூத்தார்வழிபாட்டை மட்டும்தான் என்றும் அவர் சொன்னார்.
தஞ்சை பெரிய கோயில் இருக்கும் இடத்தில் முன்னர் பௌத்த கோயில்? --------------------------- இது என் கருத்தல்ல! கோயிற்கலை வல்லுநர் ஒருவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட கருத்து!! 25 ஆண்டுகளுக்கு முன் படித்தேன்! என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்: பெரிய கோயில் கருவறையின் தெற்கு வாயிற்படியின் புறச்சுவரில் உள்ள ஒரு சிற்பத் தொகுதியைச் சான்றாக் காட்டுகிறார். ஒவ்வொன்றாகப் பார்ப்போம் முதல் சிற்பத்தில் மரத்தடியில் ஒரு புத்தர்(புத்த துறவி)தியான நிலையில் உள்ளார், அருகில் மன்னரும் அமைச்சர் சுற்றமும் மெய்க்காப்பாளர்களும் உள்ளனர்.புத்தரிடம் ஏதோ கேட்கின்றனர். இரண்டாவது சிற்பத்தில் புத்தர் எழுந்து நிற்கிறார். மூன்றாவது சிற்பத்தில் கோயில் காட்டப்பட்டு அருகில் ஒருவர் சிவலிங்கத்தை தலையில் தூக்கிக் நிற்க மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர், அருகில் காளை காட்டப்பட்டுள்ளது. இதைக்கொண்டு கோயிற்கலை வல்லுநர் கூறும் கருத்தைப் பார்ப்போம்: பௌத்தப் பள்ளி இருந்த இடத்தில் பெரிய கோயில் கட்ட எண்ணிய இராசராச சோழன் பௌத்தர்களிடம் அனுமதி கேட்டுள்ளார். அதை முதல் சிற்பம் காட்டுகிறது.. பௌத்தர்கள் கோயில் கட்ட இடம் அளித்து அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்பதைப் புத்தர் எழுந்து நிற்கும் சிற்பம் விளக்குகிறது. கோயிலைக் கட்டி முடித்து சிவலிங்கத்தை நிறுவி காளையை அமையப் பண்ணினான் சோழன். மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். என்பதை மூன்றாவது சிற்பம் காட்டுகிறது என்று அவர் விளக்கமளித்துள்ளார். பெரிய கோயிலுக்குச் செல்லும் நாம் அதன் கட்டுமானத்தின் திளைத்து வியப்பில் ஆழ்ந்து விடுகிறோம். அதன் சிற்ப நுட்பங்களைக் கவனிப்பது இல்லை. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள சிறு சிற்பங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன.நாம் கவனிப்பதில்லை.இதுபற்றி ஆங்கிலத்தில் பல நூல்கள் வெளிவந்துள்ளன தமிழில் மிகக் குறைவே. இவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் இதுபற்றிய நூல்கள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே தலைப்பை இப்படி அமைத்து நேற்று வெளியிட்டேன் நண்பர்கள் பலர் அதற்கு எதிர்த்தும் எதிர்பார்த்தும் பதிவிட்டனர் அவர்களுக்கு நன்றி. ++ இந்தச் சிற்பம் பற்றிய தங்கள் கருத்துகள்,படித்த கருத்துகளைப்
பதிவிடுங்கள் நண்பர்களே கருத்து வளம் பெருகும். நன்றி. சுப.முத்தழகன். புதுக்கோட்டை. 22-9-2019. 9943315404..