New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்தாத்தா பற்றி வைரமுத்துவின் அவதூறு -ஆரியத் தமிழன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தமிழ்தாத்தா பற்றி வைரமுத்துவின் அவதூறு -ஆரியத் தமிழன்
Permalink  
 


  1. தமிழ்தாத்தா பற்றி வைரமுத்துவின் அவதூறு

    தமிழ்தாத்தா பற்றி வைரமுத்துவின் அவதூறு
     
         தமிழ் இலக்கிய முன்னோடிகள் என்னும் தொடர் “தமிழ் காத்தான் சாமி” என்ற தலைப்பில் 7/9/17 அன்று வைரமுத்து பேசிய பேச்சு 8/9/17 தினமணியில் வெளியாகியுள்ளது.
     
         ஸ்ரீ ஆண்டாள் பற்றிய பேச்சில் எப்படி தவறான தகவல்களை மேற்கோள் காட்டி ஆண்டாளை அவதூறு பேசினாரோ அப்படியே தமிழ் தாத்தா உவேசாவையும் அவதூறு பேசியுள்ளது தெரிகிறது.
     
         வைரமுத்துவுக்கு இது தொடர் வாடிக்கைபோலும்.  
     
         வையாபுரிப்பிள்ளை அவர்கள் சொல்லியுள்ளதை கார்த்திகேசு சிவத்தம்பியும், மார்க்ஸும் மேற்கோள் காட்டியுள்ளார்களாம், இதை வைரமுத்து மேற்கோள்காட்டி பேசுகிறார்.
     
         அதாவது இண்டானியா பல்கலைக்கழகம் மேற்கோள் போல......
     
         வைரமுத்துவுக்கு, தமிழ் தாத்தா மேல் ஒரு வருத்தம் இருந்ததாம் இதோ அவரது வார்தைகளிலேயே பார்த்துவிடுவோம்..
     
         உவேசா மீது எனக்கு ஒரு வருத்தமிருந்தது, இதனை நான் சொல்லுவது சுகம் இதனை சொல்லியாகணும் அப்பத்தான் நான் உண்மையாக இருப்பேன்.
     
    u-ve-sa.jpg
     
     
    உவேசா மீது எனக்கு ஒரு வருத்தமிருந்தது, அவர் மகாகவி பாரதியை மத்தித்ததில்லை, பாரதியை அரசாங்க விரோதி என்றும், வருணாசிரம ஒழுக்கத்தினை தூ என்று தள்ளியவர் என்றும், இவரையும் இவரது கொள்கையையும் இவரது தமிழையும் கூட அய்யர் மதித்திருந்தார் என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை என்று வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார்.
     
     “வையாபிரிப்பிள்ளையை தவிர்த்து விட முடியாது, அவர் தமிழர்களின் காலத்தினை பின்னுக்கு கொண்டு வந்து விடுகிறார் என்று சொல்றீங்கள்ள, அத மட்டும் விட்டு விட்டு உண்மையெல்லாம் எடுத்துக்கணும் .... உண்மையிருந்திருக்கு அவர்கிட்ட .ஆராய்ச்சி வெறி .... “
     
    தமக்கு நடந்த பாராட்டுவிழாவிற்கு பாரதி எழுதிவந்த வாழ்த்துப்பாவை  சுவாமிநாத அய்யர் அனுமதிக்கவில்லை கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ் எழுதுகிறார்கள் எனவே உவேசாவை பிற்போக்குவாதி என்றே பெருங்கருத்து கொண்டிருந்தேன்.
     
    சரி இப்போது இந்த நிகழ்ச்சி உண்மையா என்று பார்போம்.
     
    இதோ அந்த நிகழ்ச்சிக்கு வருவோம்.
     
    ஒரு சமயம் பிரசிடென்ஸி காலேஜின் தமிழ் பேராசிரியராக இருந்த உவேசாவுக்கு மஹாமாஹோபாத்தியாய விருதை அரசாங்கத்தார் அளித்தார்கள். அதைக் கொண்டாட காலேஜ் மாணவர்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். நிர்வாகிகள் பாரதியை விஷயத்தினை சொல்லி விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.
     
    பாரதியும் உவேசாவும் ஒரு ஊரில் சென்னையில் வசித்த போதும் பரஸ்பரம் பரிச்சியம் இல்லை. ஐயர் அவர்கள் பாரதியாரைப் பற்றி ஒன்றும் அறியார். பாரதி என்ற பெயரைக் கூட கேட்டதில்லை.
     
    பாரதியார் மூன்று பாக்கள் எழுதி உவேசாவுக்கான பாராட்டு விழாக் கூட்டத்தில் பாடினார்.
     
    பாரதியின் நண்பர் ஒருவர் திருநெல்வேலிக்காரர். சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். பாரதியுடன் மிகவும் பழகியவர். கூட்டத்தில் பாரதி பாடி முடித்தவுடன் பாரதியிடம் சென்று அந்த பாக்கள் மூன்றும் ஆபாசம், சொல் குற்றம் , பொருட்குற்றம், நிறைந்திருக்கிறது என்று சபையில் உள்ள பிரமுகர்கள் கருதுகிறார்கள் என்று கூறினார்.
       
      களங்கமற்ற மனத்தினரான பாரதி அந்த வார்த்தைகளை நம்பி மனம் தளர்ந்து நொந்த மனதுடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
     
     
    பாரதியை உவேசா வாழ்த்துப்பா பாடவிடவில்லை என்று வையாபுரிப்பிள்ளை செய்த ஆய்வு அல்லது காய்வு முழு தவறு, என்பது புரிகிறது இதை அந்த விழாவில் நேரடியாக பங்கு பெற்ற ஸ்ரீ நாராயண ஐய்யங்காரே பதிவு செய்கிறார்.    
     
    அடுத்த தவறை பார்போம்.. கூட்டம் நிறைவுறும் சமயத்தில் ஐயரவர்கள், அதாவது உவேசா பேசினார்..
     
    இன்று சபையில் என்னை புகழ்ந்து முதலில் சில கவிகள் பாடப்பட்டன. சொற்சுவையும்,பொருட்சுவையும், உவமை நயமும் மிக்க அந்த கவிகளால் நான் மயங்கினேன். தயவு செய்து அக்கவிகளை மற்றொரு தடவையும் சொல்லிக் கேட்க விரும்புகிறேன்” என்று நடுச்சபையில் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார் தமிழ்த் தாத்தா.
     
    நிர்வாகிகள் சபையில் பாரதியாரைத் தேடினார்கள். பாரதியார் காணப்படவில்லை என்று வருத்தத்துடன் உவேசா விடம் கூறினர்.
       
        ஐயரவர்கள் பாரதியின் பெயரை அப்பொழுதுதான் முதல் முதலாக தெரிந்துகொண்டார். அந்த நாள் முதல் ஐயரவர்களுக்கு அன்பும் மதிப்பும் ஏற்படலாயின.
     
         பாரதியின் பெயரைக்கூட கேட்டரியாத உவேசா, தனக்கு வாழ்த்துப்பா பாடிய பிறகுதான் பாரதியின் பெயரை கேட்ட உவேசா எப்படி பாரதியை அரசாங்க விரோதி என்றோ,வர்ணாஸ்ரம தர்மத்தினை தூ என்று துப்பியவர் என்றோ அறிந்திருக்க முடியும்?
     
         பாரதி தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்,பத்திரிகையாளர், கவி.. என்று இன்னும் எத்தனையோ தகுதிகள் உள்ளவர் .
     
        உவேசாவோ தமிழ் காக்க, ஓலைச்சுவடிகள் தேடி ஓடிய தேனி, அவ்ருக்கு மற்ற விஷயங்களில் ஈடுபட நேரம் இல்லை அதனால் அவர் பாரதியை அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
     
         ஆனால் பாரதி தமிழ் உணர்வுள்ளவன் உவேசா செய்த சாதனைகளை அறிந்திருந்தான்.   
     
         கூட்டம் நடத்தியவர்கள் மறுநாள் காலை பாரதியாரைப் பார்த்து அவரைப் பற்றி ஐயரவர்கள் புகழ்ந்து கூறிய வார்தைகளை விவரித்து சொன்னார்கள். அப்போதுதான் பாரதியாரும் தமது நண்பரின் தவற்றை அறிந்து அவர் நடத்தைக்கு வருந்தினார்.
     
         பாரதியை அறிந்திராத உவேசா அவர் தன்னை பற்றி வாழ்த்து பாடிய பிறகுதான் அறிந்துகொண்டார் உண்மை இப்படியிருக்க...பாரதியை தன்னை வாழ்த்தி வாழ்த்துப்பா பாட வந்தபோது அதை தடுத்தார் என்று உவேசா மேல் கடும் குற்றச்சாட்டு வைக்கும் வைரமுத்துவின் மேற்கோள்கள், பொய் கோள்கள்.
     
         கவிதைக்கு பொய் அழகு என்று சினிமா பாடலில் எழுதினார் வைரமுத்து. அவரது ஆராய்ச்சிக்கு பொய்கள் அழகு சேர்க்காது.     
     
       பாரதியை மதித்ததில்லை, பாரதியை அரசாங்க விரோதி என்றும், வருணாசிரம ஒழுக்கத்தினை தூ என்று தள்ளியவர் என்றும், இவரையும் இவரது கொள்கையையும் இவரது தமிழையும் கூட ஐயர் மதித்திருந்தார் என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை என்று வையாபுரிப்பிள்ளை சொன்னதை ஆராயாமல் சொல்லுகிறார் வைரமுத்து, தேறாத தெளிவு வைரமுத்துவின் கட்டுரை.            
     
       தமக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு பாரதி எழுதிவந்த வாழ்த்துப்பாவை  சுவாமிநாத அய்யர் அனுமதிக்கவில்லை கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ் எழுதுகிறார்கள் எனவே உவேசாவை பிற்போக்குவாதி என்றே எண்ணினேன் என்கிறார் வைரமுத்து.
     
         அதாவது ஆண்டாள் பற்றி இண்டானியா பல்கலைகழக ஆய்வு என்று சொன்னார். ஆனால் அதை வெளியிட்டது அந்த பல்கலைக்கழகமில்லை அதை எழுதிய நாராயணன்,கேசவன் இருவரும் நாங்கள் சொன்னது ஆதாரமில்லாத யூகம் என்று சொன்னார்கள்
     
         இப்போது உவேசா பற்றி  வையாபுரிப்பிள்ளை சொன்னதாக அதை அ.மார்க்ஸ், கார்த்திகேசு சிவத்தம்பி, வழிமொழிந்ததாக சொல்லுகிறார்.
     
     உவேசாவை வர்ணாஸ்ரமவாதி என்கிறார். பாரதியை மதிக்கவில்லையாம் பாரதியின் தமிழை மதிக்கவில்லையாம் அடுக்கிக் கொண்டே போகிறார் வைரமுத்து. அபத்த ஆராய்ச்சி,உவேசா பற்றி இவர் எழுத இதற்கு நான்கு மாதம் ஆனதாம்.
     
         கசடில்லாதவற்றினை அல்லவா கற்கவேண்டும்.  
     
       கட்டுக்கதைகளையல்லவா கற்று அதனை தினமணி நாளிதழில் இலக்கிய தொடர் என்று எழுதி பேசி வைத்துவிட்டார் வைரமுத்து. இந்த அபத்தத்தினை என்ன சொல்லுவது?
     
         இதோ மேலும் பார்ப்போம் ..
     
       இதோ பாரதியை வெறுத்த உவேசா என்னும் வர்ணாஸ்ரமவாதி அதாவது வைரமுத்து பார்வையில் வர்ணாஸ்ரமவாதி, அவருக்கு உவேசா பற்றி தவறான தகவல் சொன்னவர்களுக்கு அதாவது பாரதியை மதிக்காத உவேசா பாரதிக்கு செய்தது என்ன என்று பார்ப்போமா?
     
         மித்ரன் ஆசிரியர் ஜி‌. சுப்ரமணிய ஐயரையும் சந்தித்து பாரதியின் அருமையை விளக்கிச்சொல்லி அதிக பரிவு காட்டும்படி உவேசா கேட்டுக்கொள்ள அதனை ஒட்டி பாரதிக்கு மாதம் பத்து ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தது.
     
         அத்துடன் நின்றுவிட்டாரா ஐயர் பாரதியை மதிக்காதவர் ஆயிற்றே..
     
        திருவாடுதுறை ஆதினத்தினை சந்தித்து பாரதியை பற்றி பேசி பாரதியை திருவாடுதுறை அழைத்து வர ஏற்பாடு செய்தார். சன்னிதானம் சம்மதித்தும், பாரதி அந்த சந்திப்புக்கு சம்மதிக்கவில்லை.
     
          சன்னிதானத்தின் அன்பினால் பாரதியின் வறுமையை முழுமையாக போக்கிவிட உவேசா போட்டிருந்த திட்டம் பாரதி ஏற்காததால் நிறைவேறாமல் போனது.
     
    இலக்கண இலக்கியங்கள் நிறைய அறிந்தவர்கள் தான் சன்னிதானத்துக்கு போகக்கூடும் அதற்கு நான் லாயக்கற்றவன் என்று பாரதியார் என்னிடம் வெளிப்படையாக சொன்னார் என்கிறார் பண்டிட் நாராயண ஐயங்கார்.
     
    சரி விழா நிகழ்ச்சி பற்றி விலாவாரியாக் சொல்லும் இந்த நாராயண ஐயங்கார் யார்?   
     
      


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தமிழ்தாத்தா பற்றி வைரமுத்துவின் அவதூறு
Permalink  
 


பண்டிட் எஸ். நாராயண அய்யங்கார் தமிழ் ஸம்ஸ்க்ருதம் இரண்டிலும் அறிஞர். ஆயுர்வேத சாஸ்திரத்தில் நிபுணர். பாரதியின் நெருங்கிய நண்பர். இளமையிலிருந்து பாரதிக்கு நண்பர்.
 
இந்த நிகழ்ச்சியைப் பற்றி பண்டிட் எஸ் நாராயண அய்யங்கார் என்பவர் “காசியில் சுப்பையா சென்னையில் பாரதி!” என்று தலைப்பிட்டு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்
பாரதி காவலர் ரா.அ. பத்மநாபன் 
 
அந்த கட்டுரை தினமணி சுடர் இதழில் 8/9/1956 , மற்றும் 16/9/1956 தேதிகளில் வெளியாகியுள்ளது. இதை வெளிவர செய்தவர் ரா.அ. பத்மநாபன் (1917 – 2014) பாரதி ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். பிரபலமான பாரதி காவலர்
 
                    
 
இந்த கட்டுரை பின்னாளில் காலச்சுவடு பதிப்பகத்தில் “பாரதியைப் பற்றி நண்பர்கள்” என்று நூலாக வந்துள்ளது. “காசியில் சுப்பையா சென்னையில் பாரதி” கட்டுரை நான்காவது கட்டுரையாக உள்ளது.
 
அ.மார்க்ஸ், கார்த்திகேசு சிவத்தம்பி, வையாபுரிப்பிள்ளை இவர்களை நான்கு மாதம் ஆய்வு செய்து தேடிய வைரமுத்து, அவர்கள் சொன்ன நிகழ்ச்சி உண்மைதானா என்று தெரிந்துகொள்ள முடியாது தடுத்தது எது?
 
யார் எதை சொன்னாலும் எழுதினாலும் அதை தனது நாஸ்திக, அல்லது குறிப்பிட்ட ஜாதி மீதான வெறுப்புக்கு சாதகமாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளும் வைரமுத்து,உண்மையை ஏனோ மறக்கிறார், மறுக்கிறார் என்பதே உண்மை.
 
இந்த பொய்களை வரிசைப்படுத்த உவேசாவை நான் புகழ்ந்து கட்டுரையில் கூறியவற்றை பார்க்கவேண்டும் என்று ஸ்ரீ ஆண்டாள் விஷயத்தில் சொன்னதைப் போலவே சொல்லுவார்.
 
இவர் ஒருவரின் மீது பழியை அவதூரை வீச முதலில் புகழ்வார் கட்டுரையின் கடைசியில் இகழ்வார் அதாவது, பெரிய வாழை  இலையில் விதவிதமான அறுசுவை உணவுகளை பரிமாறி கடைசியாக ஒரு சொட்டு அறுவருக்கத்தக்க நரகலை வைப்பார் நாம் நரகலை வைக்கிறீர்களே என்றால் நீங்கள் ஏன் அறுசுவை உணவை பார்க்கவில்லை என்பார்.
 
ஆம் இவர் இளைய தலைமுறைக்கு தமிழ் இலக்கிய முன்னோடிகளை எடுத்து செல்லுகிறாராம் அதற்கு தினமணி களம் அமைக்கிறதாம்.
 
... சீ சீ சீ...
 
உவேசா வர்ணாஸ்ரமவாதி என்றும், ஸ்ரீ ஆண்டாள் தேவதாசியென்றும் இவர் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப் படுத்துகிறார்.. திருமூலரை பற்றி இவர் எழுதியதை படித்தால்தான் தெரியும் அதில் உள்ள ...
 
தனது நாஸ்திக மனதை இதோ மொழி காத்தான் சாமி கட்டுரையிலேயே கூறுகிறார்.
 
கரி வலம் வந்த பால்வண்ணனாதன் சன்னதியில் வரகுண பாண்டியன் ஏட்டுச் சுவடிகளை கூட்டிவைத்திருந்த தலத்தில் உவேசா சென்று அங்குள்ள சன்னிதானத்திடம் அந்த ஓலைச்சுவடிகளைப் பற்றிக் கேட்கிறார், ஆகமங்களில் சொல்லியுள்ளபடி நெய்யில் தோய்த்து ஓலைச்சுவடிகளை ஹோமத்துக்கு ஆகுதி செய்துவிட்டோம் என்றாராம்.
 
உடனே உவேசா அப்படியென்றால் அந்த ஆகமத்தைத்தான் ஆகுதி செய்யவேண்டும் என்றாராம்.
 
இதைப்படித்தவுடன் உவேசா மீது பாரதி விஷயத்தில் ஏற்பட்ட வருத்தம் வைரமுத்துவிற்கு குறைந்ததாம்.. அதாவது உவேசா ஆகமத்தினை அல்லவா கொளுத்தவேண்டும் என்று சொன்னதால்.. அதாவது உவேசா சொல்லியது நாஸ்திகத்துக்கு ஏற்புடையது என்பதால்.
 
சரி எந்த ஆகமத்தில் ஓலைச்சுவடிகளை நெய்யில் தோய்த்து கொளுத்த சொல்லியுள்ளது ?
 
எந்த ஆகமத்திலும் அப்படி இல்லை..
 
அது அறிந்துதான் அந்த பொய்யான ஆகமத்தினை கொளுத்த சொன்னார் எனபதே உண்மை. செல்லரித்த சுவடிகளை மறு படி எடுத்து வைப்பதுதான் வழக்கம்,
 
மறு “படி” (மீள் உரு) எடுத்த பிறகு தான் ஆற்றில் விடுவார்கள். இன்றும் கூட செல்லரித்து விட்ட புனித நூல்களை ஆற்றில் விடுவதுதான் வழக்கம்.   
 
வைரமுத்துவின் கட்டுரை லிங்க்
 
 
தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவரை போற்றும் திராவிட வைரமுத்துவிடமிருந்து ஓலைச் சுவடியில் உறங்கிக்கிடந்த தமிழை காலக் கறையான் தின்று கொண்டிருந்த தமிழை மீட்டெடுத்து உலகிற்கு தந்த தமிழ் தாத்தாவுக்கு புகழ்மாலையை நாம் எப்படி எதிர்பார்ப்பது.    
 
தமிழ் உணர்வாளர்கள் இப்போது குரல் கொடுப்பார்களா? கண்டங்களை வெளிப்படுத்துவார்களா?
 
சூரிய மூலையில் பிறந்த ஆரிய மூளைக்கு திராவிட வணக்கம் என்று முடிக்கிறார்,வைரமுத்து. அதாவது தன்னை திராவிடன் என்கிறார்.
 
வைரமுத்துவே இந்த கட்டுரையில் சொன்னபடி ஆரிய என்றால் உயர்ந்த என்று பொருள்..
 
சூரிய மூலையில் பிறந்த தமிழ்த் தாத்தாவின் புகழ் மீது திராவிட வைரமுத்து வீசிய அவதூரை நீக்கிவிட்டத் திருப்தியில் ஆரியத்தமிழனாகிய அடியேன் தமிழ்த் தாத்தாவுக்கு பல்லாண்டு பாடுகிறேன், மகிழ்வில் ...

      


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தமிழ்தாத்தா பற்றி வைரமுத்துவின் அவதூறு -ஆரியத் தமிழன்
Permalink  
 


 

உவேசா, பாரதியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆண்டாள் புகழ்ப் பேரரசர் சொன்னதாகச் சொன்னார்கள். அவர் பேசியது ஒருபுறம் இருக்கட்டும். உவேசா, பாரதியின் படத்தைத் திறந்து வைத்துப் பேசியது இது. இதைப் பிற இடங்களில் பதிந்திருக்கிறேன். இப்போது ஃபேஸ்புக்கிலும் பதிகிறேன்:

1936-ஆம் ஆண்டில் அகில இந்தியக் காங்கிரஸின் பொன்விழாவில் சென்னைக்காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய படம் திறக்கப்பட்டபோது ஐயரவர்கள்(தம் 81-ஆம் பிராயத்தில்) செய்த பிரசங்கம்

சுப்பிரமணிய பாரதியார்

பிறந்த தேசம், பழகும் மனிதர்கள் முதலிய தொடர்புகளால் ஒருவருடையவாழ்க்கையில் சில பழக்கங்கள் அமைகின்றன. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்எட்டயபுரத்திற் பிறந்தவர். இவர் பிறந்த பாண்டி நாடு தமிழுக்கு உரியநாடு. தமிழ் நாடென்று பழைய காலத்தில் அதற்குத் தான் பெயர்.கம்பராமாயணத்தில் ஆஞ்சநேயர் முதலியவர்கள் சுக்கிரீவனால் தென் தேசத்துக்குஅனுப்பப்பட்ட போது அங்கே உள்ளவற்றைச் சுக்கிரீவன் சொல்லுவதாக உள்ளபகுதியொன்றுண்டு; அங்கே ஒரு பாட்டில்,

"தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன் தமிழ்ச்சங்கம சேர்கிற்பீற்
பீரேல் என்றுமவ ணுறைவிடமாம்"

என்று அவன் கூறியதாக இருக்கிறது; "நீங்கள் பாண்டிய நாட்டை அடைந்தால்,அங்கே உள்ள பொதியில் மலைக்கருகில் செல்லும்பொழுது போகும் காரியத்தைமறந்து விடக் கூடாது; ஏனென்றால் அம்மலையில் அகத்தியருக்குரிய தமிழ்ச்சங்கத்தை அணுகினால் தமிழ் நயத்தில் ஈடுபட்டுவிடுவீர்கள்" என்று அவன்சொன்னதாகத் தெரிகிறது. இதனால் பாண்டி நாட்டின் பெருமைவெளிப்படுகிறதல்லவா?

பாரதியார் பிறந்த எட்டையபுர ஸமஸ்தானத்தில் பல வித்துவான்கள்இருந்தார்கள். அந்த ஸமஸ்தானத்து வித்துவானாகிய கடிகை முத்துப் புலவருடையபெருமையை யாரும் அறிவார்கள். அவருடைய மாணாக்கருள் ஒருவராகிய உமருப்புலவரென்னும் முகம்மதிய வித்துவான் முகம்மத் நபியின் சரித்திரமாகியசீறாப் புராணத்தை இயற்றியிருக்கிறார். அந்நூல் ஒரு தமிழ்க்காவியமாகஇருக்கிறது. எட்டையபுரத்தில் அங்கங்கே உள்ளவர்கள் தமிழ்ப் பாடல்களைச்சொல்லியும் கேட்டும் இன்புற்று வருபவர்கள். இதனால் பாரதியாருக்கு இளமைதொடங்கியே தமிழில் விருப்பம்உண்டாயிற்று. அது வர வர மிக்கது.

இவர் இளமையில் ஆங்கிலக் கல்வி கற்றார். தம்முடைய தமிழறிவை விருத்திசெய்துகொள்ளும் பொருட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்திற் சேர்ந்து சில காலம்படித்தார். சிறு பிராயமுதற்கொண்டே இவருக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம்உண்டாயிற்று. அக்காலத்திலேயே தேசத்தின் நிலைமை இவருடைய மனத்திற்பதிந்தது. தெய்வத்தினிடத்திலும், தேசத்தினிடத்திலும், பாஷையினிடத்திலும்அன்பில்லதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார். முயற்சியும்சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார்.புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாடவேண்டுமென்றஉணர்ச்சி இவருக்கு வளர்ந்துகொண்டே வந்தது.

இவர் சிலகாலம் சேதுபதி ஹைஸ்கூலில் பண்டிதராக இருந்ததுண்டு. பிறகு,சென்னைக்கு வந்தார். இங்கே ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயர் இவரிடத்தில்ஈடுபட்டுச் 'சுதேசமித்திரன்' உதவி ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கச்செய்தார். கட்டுப்பாடான வேலைகளைச் செய்வதிற் பிரியமில்லாத பாரதியார்அந்த வேலையில் அதிக காலம் இருக்கவில்லை.

சென்னையில் இவர் இருந்த காலத்தில், நான் இவரோடு பலமுறைபழகியிருக்கிறேன். பிரசிடென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு வருவார்; பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார்.வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார்.ஒரு முறை, ஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் அச்சங்கத்தில் ஸ்ரீ ஜி.ஏ. வைத்தியராமையர் பேசினார். கிருஷ்ணசாமி ஐயருடைய தமிழபிமானமும், தமிழ்வித்துவான்களை ஆதரிக்கும் இயல்பும் தெரியாத பலர், `இவருக்குத் தமிழ்ப்பாஷையில் பழக்கம் இல்லையே; தமிழில் என்ன பேசப் போகிறார்?' என்றுநினைத்தனர். அவரோ, "தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவானேன்? உலகத்திலுள்ளபல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு விளங்கும் திருக்குறளைத் திருவள்ளுவர்இயற்றிய பாஷை இந்தப் பாஷை. நவரஸமும் பொருந்திய ராமாயணத்தைக் கம்பர்செய்த பாஷை இது. எல்லோருடைய மனத்தையும் கரைத்து உருக்கித் தெய்வ பக்தியைஉண்டாக்கும் தேவாரத்தை நாயன்மார்கள் இயற்றிய பாஷை இது. ஆழ்வார்கள்திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய பாஷை இது" என்று உத்ஸாகத்தோடு பிரசங்கம்செய்தார். கேட்ட யாவரும் ஆச்சரியமுற்றார்கள். அந்தக் கூட்டத்திற்குவந்திருந்த பாரதியார், அந்தப் பிரசங்கத்தில் மிகவும் ஈடுபட்டார். பின்புகிருஷ்ணசாமி ஐயர் பாஷையின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும்வெளிப்படுத்தி யாவருக்கும் விளங்கும்படியான பாட்டுக்களைப் பாடியனுப்பவேண்டுமென்று என்னிடம் சொன்னார். எனக்கு அவகாசம் இல்லாமையால் வேறொருவரைஅனுப்பினேன். அவருடைய பாட்டுக்கள் அவருக்குத் திருப்தியை அளிக்கவில்லை.பிறகு பாரதியாரே அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். ஸ்ரீகிருஷ்ணசாமி ஐயரது பிரசங்கத்தில் இருந்த கருத்துக்களே பாரதியார், "கம்பன்பிறந்த தமிழ்நாடு" என்பது போன்ற பகுதிகளை அமைத்துப் பாடுவதற்குக் காரணமாகஇருந்தன.

தேசத்தின் பெருமையை யாவரும் அறிந்து பாராட்டும்படியான பாட்டுக்களைப்பாடவேண்டுமென்ற ஊக்கம் இவருக்கு நிரம்ப இருந்தது. அதனால் இவர் பாடியபாட்டுக்கள் மிகவும் எளிய நடையில் அமைந்து படிப்பவர்களைத் தம்பால்ஈடுபடுத்துகின்றன. இவர் உண்மையான தேச பக்தியுடன் பாடிய பாட்டுக்களாதலின்அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன.

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும்பாடியிருக்கிறார். இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். இவர்சங்கீதத்திலும் பழக்கம் உடையவர்.

கவிகளின் தன்மையை உபமானமாக அமைத்து ஒரு புலவர்,

"கல்லார் கவிபோற் கலங்கிக் கலைமாண்ட கேள்வி
வல்லார் கவிபோற் பலவான்றுறை தோன்ற வாய்த்துச்
செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத்
தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள இறுத்த தன்றே"

என்று சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப விளங்குபவை இவருடைய செய்யுட்கள்.இப்பாட்டில், "தேசத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ள" என்றது இவருடையபாட்டுக்களுக்கு மிக்க பொருத்தமுடையதாகும்.

பாட்டுக்களின் பாகம் ஐந்து வகைப்படும். அவை நாளிகேர பாகம், இக்ஷுபாகம், கதலீபாகம், திராக்ஷாபாகம், க்ஷீரபாகம் என்பனவாம். நாளிகேரபாக மென்பது தேங்காயைப் போன்றது. தேங்காயில் முதலில் மட்டையை உரிக்கவேண்டும்; பிறகு ஓட்டை நீக்கவேண்டும்; அதன் பிறகு துருவிப் பிழிந்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த வகையிலுள்ள பாட்டுக்கள் சில உண்டு. அதைப் பாடுபவர்கள் தம்முடன் அகராதியையும் எடுத்துக் கொண்டு போகவேண்டும். சில சமயங்களில் அவர்களுக்கே தாங்கள் செய்த பாட்டுக்களுக்கு அர்த்தம் விளங்காமற் போய்விடும்.

இக்ஷூபாகமென்பது கரும்பைப் போன்றது. கரும்பைக் கஷ்டப்பட்டுப் பிழிந்துரசத்தை உண்ணவேண்டும். கதலீபாகமென்பது வாழைப்பழத்தைத் தோலுரித்துவிழுங்குவது போலச் சிறிது சிரமப்பட்டால் இன்சுவையை வெளிப்படுத்துவது.திராக்ஷா பாகம் முந்திரிப் பழத்தைப் போல் எளிதில் விளங்குவது. க்ஷீரபாகம்அதனிலும் எளிதில் விளங்குவது; குழந்தை முதல் யாவரும்உண்பதற்குரியதாகவும், இனிமை தருவதாகவும் உடலுக்கும் அறிவுக்கும் பயன்தருவதாகவும் இருக்கும் பாலைப்போல் இருப்பது. பாரதியாருடைய கவிகள் க்ஷீரபாகத்தைச் சார்ந்தவை. சிலவற்றைத் திராக்ஷாபாகமாகக் கொள்ளலாம்.

ஆங்கிலம், வங்காளம் முதலிய பாஷைகளிற் பழக்கமுடையவராதலால் அந்தப்பாஷைகளிலுள்ள முறைகளை இவர் தம் கவிகளில் அமைத்திருக்கிறார். இவருடையகவிதைகள் ஸ்வ்பாவோக்தியென்னும் தன்மை நவிற்சியணியையுடையவை. பழையகாலத்தில் இருந்த சங்கப் புலவர்கள் பாடல்களில் தன்மைநவிற்சிதான்காணப்படும். அநாவசியமான வருணனைகளும் சொல்லடுக்குகளும் கவியின் ரசத்தைவெளிப்படுத்துவதில்லை. சில காலங்களில் சில புலவர்கள் தங்கள்காலத்திலிருந்த சில ஜமீன்/தார்கள், பிரபுக்கள் முதலியவர்களுடையவற்புறுத்தலுக்காக அநாவசியமான வருணனைகளை அமைத்ததுண்டு.

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும்ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகைவிரித்தும், நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப்புலப்படுத்தியும் விளங்குகின்றன.

இவருடைய வசனத்தைப்பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். பாட்டைக் காட்டிலும்வசனத்திற்குப் பெருமை உண்டாயிருப்பதின் காரணம் அது பாட்டைவிட எளிதில்விளங்குவதனால்தான். பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும்எளிய நடையுடையது. வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான்சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அர்த்தபுஷ்டியுடையது. இவருடைய கவிகளின் பொருள் படிக்கும்போதே மனத்தில்பதிகின்றது. வீர ரசம், சிருங்கார ரசம் ஆகிய இரண்டும் இவருடையபாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பாரதியார் அழகாகப் பேசும்ஆற்றல் வாய்ந்தவர்.

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ்நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்துகொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலியஇடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில்சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு."மணவைமகன் கூத்தன் வகுத்தகவி, தளைபட்ட காலுட னேகட லேழையுந் தாண்டியதே"என்று ஒரு புலவருடைய கவியைப்பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார். ஸ்ரீராமனுடைய கவியாகிய ஆஞ்சனேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன்கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது. ஸ்ரீ ராமனுடைய கவி தளையில்லாமல்தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமன்று. இந்தப் புலவர் கவியோ,தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கிறார். தளையென்பதற்குவிலங்கென்றும் கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள். இந்தப்பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையையுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ் நாட்டின் புகழாகும்.

இந்த உவேசாதான் பாரதியை ஏற்காமல் போய்விட்டாராம்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard