New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும். -- Jayasree Saranathan on Daniel Selvaraj ****


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும். -- Jayasree Saranathan on Daniel Selvaraj ****
Permalink  
 


 Friday, June 29, 2012

My reply to the blasphemous story on Andal and Periyaazhwar. (please read and circulate)

 
ஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும்.
 
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையைப் போல காமுகன் கையில் கிடைத்தபாமாலையும் சின்னாபின்னமாகி விடும். அதுதான் ஆண்டாளது உயரிய பாடல்ஒன்றுக்கு நிகழந்திருக்கிறது. பாவை நோன்பை முடித்த கையோடு, அனங்கனைத்தொழுது வேண்டிக் கொண்ட ஆண்டாள்,  நாச்சியார் திருமொழியின் முதல்பத்தின் எட்டாவது பாசுரத்தில் "மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்கண்டாய் மன்மதனே" என்று, மனிதனை மணம் புரிய மாட்டேன், மணந்தால்பார்க்கடல் வண்ணனான பரந்தாமனைத்தான் மணம் புரிவேன் என்றுசொன்னாலும் சொன்னாள், முற்போக்கு எழுத்தாளர் ஒருவருக்கு சிந்தனைக் கடல்பொங்கி விட்டது. ஆண்டாள் ஏன் அப்படி எழுதினாள் என்று ஆராய்ந்தார். அந்தஆராய்ச்சிக்கு எந்த ஆதாரத்தையோ அல்லது சரித்திரச் சான்றுகளையோ அவர்தேடவில்லை. மாறாக, காமக் கண்ணோட்டத்தில் ஒரு கதையைப் பின்னினார்.அதை ஆண்டாள் கதையின் மறு வாசிப்பு என்றும் சொல்லிக் கொண்டார். அந்தவாசிப்பைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கான பாடப்புத்தகத்திலும் வைத்துவிட்டார்கள். இதுவே தற்கால மக்களது தரம்! 
 
 
நோன்பு என்னும் தலைப்பில் இடம்பெற்ற அந்தச் சிறுகதை மனோன்மணியம்சுந்தரனார் கல்லூரி மாணவர்களுக்கான பாடமாக தமிழ்ப் பாடத் திட்டத்தில்நுழைக்கப்பட்டுள்ளது. நோன்பு என்றாலே எந்தத் தமிழ் ஆர்வலருக்கும் பாவைநோன்புதான் நினைவுக்கு வரும். சங்க கால வழக்கமான அந்த நோன்பைப் பற்றிநமக்கு அதிகம் தெரியாது. ஆனால் அதைப் பற்றி நமக்கு ஒரளவேனும் தெரியவருகிறது என்றால் அதற்கு ஆண்டாள்தான் காரணம். இறைவனுக்குகந்த பூமாலைசூடிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவள் தொடுத்த பாமாலையின்மூலமாகவும் நோன்பைப்பற்றியும், எப்படி நோன்பிருக்க வேண்டும் என்பதைப்பற்றியும் நமக்குச் சொல்லியிருக்கிறாள். "நோக்கின்ற நோன்பினைக் குறிக் கொள்கண்டாய்" என்று ஆண்டாள் சொல்லிவிட்டதால் அதிலிருந்து 'நோன்பு" என்றதலைப்பை அந்தக் கதாசிரியர் குறித்துக் கொண்டார். ஆனால் அந்த நோன்பைஅவள் ஏன் மேற்கொண்டாள் என்று அவள் மீண்டும் மீண்டும் சொல்வதை மட்டும்அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவர் பெயரிலும், அவர் பின்பற்றும்கொள்கையிலும் இருக்கிறது. 
 
 
அவரது பெயர் டேனியல் செல்வராஜ். பழைய தமிழ் இலக்கியங்களைமுற்போக்குச் சிந்தனையுடனும், தற்காலத்துக்கு ஏற்றவாறும் எழுதி மக்களிடையேகொண்டு செல்ல வேண்டும் என்னும் கொள்கை உடைய கம்யூனிஸ்ட் தலைவர்ஜீவானந்தத்தைப் பின்பற்றுபவர் என்று Frontline கட்டுரை கூறுகிறது. (http://www.hindu.com/fline/fl2416/stories/20070824506012000.htm ). அந்தக் கொள்கையை அவர்சார்ந்திருக்கும் சமயக் கதைகளில் வைத்துக் கொள்ளட்டும். எந்த இலக்கியத்தில்பொருந்துமோ, அதில் முற்போக்கைப் புகுத்திக் கொள்ளட்டும். ஆனால்பூமாதேவியே உருவெடுத்துப் பிறந்தாள் என்று கருதப்படும் ஆண்டாளை தாசிக்குப்பிறந்தவள் என்றும், திருவரங்கப் பெருமானுக்கே மாமனாரான பெரியாழ்வார்,கோவிலுக்கு வந்த அப்சரஸ் போன்ற பெண்களைப் பார்த்ததால் எழுந்த உள்ளத்துஅரிப்பையும், உடல் தினவையும் தணித்துக் ள்ள தாசி வீட்டுக்குச் செல்வதைவாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என்றும் எழுதுவதா முற்போக்குச் சிந்தனை? 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: ஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும். -- Jayasree Saranathan on Daniel Selvaraj ****
Permalink  
 


தெய்வத்தின் மீது கொண்ட காதலால் மனிதனை மணக்க ஆண்டாள்விரும்பவில்லை. ஆனால் இந்த முற்போக்குக் கதாசிரியருக்கு இதெல்லாம் புரியாத விஷயம். ஆண்டாளுக்கு ஏதோ நெருக்கடி ஏற்பட்டது, அதிலிருந்து தப்பிக்க மனிதனை மணக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக அவர் புனைகிறார். இந்தப் புனைதலுக்குப் பின்னணியில் காமத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்க அவருக்குத்  தெரியவில்லை. கற்பனைச் சூழ்நிலைகளைப் புனைவதற்கு எந்தக் கதாசிரியனுக்கும் உரிமை உண்டு. ஆனால் அவற்றை அவர் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு புனைந்திருந்தால்யாரும் கேள்வி கேட்கப்போவதில்லைஆனால் உண்மையில் வாழ்ந்துஉன்னதபிறவிகளாக இருந்து, இன்றும் கொண்டாடப்பட்டு வரும்  பெரியாழ்வார்ஆண்டாள்போன்றவர்களது வரலாற்றைத் திரித்துகாமக் கண்ணோட்டத்தில்  எழுதுவதுஏற்றுக் கொள்ளத்தக்கதா?

 
அதிலும் இந்த இருவரது வாழ்க்கைக் குறிப்புகள் ஏறத்தாழ பத்து மூலங்களில்இருக்கின்றனஅவையாவன:-
(1) இவர்கள் இருவருமே தங்கள் பாசுரங்களில் காட்டுயுள்ள அகச் சான்றுகள்.
(2) 1000 வருடங்களுக்கு முன்பே ராமானுஜர் காலத்தில் கருடவாஹன பண்டிதர்என்பவரால் வடமொழியில் இயற்றப்பட்ட "திவ்யசூரி சரிதம்"
(3) பின்பழகாரம் பெருமாள் ஜீயர் எழுதிய 'குரு பரம்பரா பிரபாவம்"
(4) மணவாள மாமுனிகள் இயர்றிய 'உபதேச ரத்ன மாலை'
(5) வேதாந்த தேசிகர் எழுதிய "தேசிகப் பிரபந்தம்"
(6) மூவாயிரப்படி "குரு பரம்பரா பிரபாவம்"
(7) வடமொழியில் இயற்றப்பட்ட "பிரபந்நாம்ருதம்"
(8) கந்தாடையப்பன் எழுதிய "பெரிய திருமுடியடைவு"
(9) திருவரங்கம் பெரிய கோவில் வரலாறு கூறும் "கோயிலொழுகு"
(10) பல ஆசாரியர்கள் வழங்கிய தனியன்கள்வாழித் திருநாமங்கள்.
 
பெரியாழ்வாரும்ஆண்டாளும் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கஇத்தனை ஆதாரநூல்கள் இருக்கஅவற்றையெல்லாம் ஒதுக்கிஅவை எதிலும் சொல்லப்படாத,யாராலும்கனவிலும் கூட நினைக்க முடியாத பாத்திரப்படைப்பாக செல்வராஜ்அவர்கள் எழுதியிருக்கிறாரேஎன்ன காரணம்இந்து மத துவேஷமாஆண்டாள் சரித்திரத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே அவள்பால் மக்கள் ஈர்க்கப்படுவதால்,அதைக் கெடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்யப்படும் மத மாற்ற மூளைச் சலவை முயற்சியாஅல்லது அவரது மன அழுக்கின் வெளிப்பாடா? அப்படி எழுதியதன் மூலம் பெரியாழ்வாரையும்ஆண்டாளையும் மட்டும்செல்வராஜ் இழிவுபடுத்தவில்லை'பார் முழுதாண்ட பஞ்சவர் குலமுதல்'வனான'சீர் கெழு செங்கோல் சீவல்லபன்' (சித்தன்ன வாயில் கல்வெட்டு) என்னும் பாண்டிய அரசனையும் இழிவு படுத்தியுள்ளார். தமிழர் கலாசாரத்தையும்கேவலப்படுத்தியுள்ளார்அது மட்டுமல்லதமிழ் ஒரு காட்டுமிரண்டி மொழி என்றுபெரியார் சொன்னதையும் உண்மை என்றே நிரூபித்துள்ளார்.
 
 
 
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ஆம், பெரியார் வழித் தோன்றல் இவர் என்று சொல்லும் வண்ணம் எழுதப்பட்ட இந்தச் சிறுகதையின் மூலம் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதை ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் மெய்ப்பித்துள்ளார். தமிழை இயல்தமிழ்இசைத் தமிழ்நாடகத் தமிழ் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.அதைக் காட்டுமிராண்டித் தமிழ் என்று சொன்னவர் பெரியார்தமிழை அப்படிச்சொன்னீர்களே என்று அவரை ஒரு பேட்டியாளர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்"ஆமாம் நான் சொன்னேன்என்ன தப்பு.. ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போடும்போது திட்டுகிறானேசண்டை போட்டவனை மட்டுமா திட்டுகிறான்அவன்மனைவி மக்கள் எல்லோரையும்தானே திட்டுகிறான்எப்படித் திட்டுகிறான் என்றுபெரியார் சொன்னதைக் கேட்டவர் அவ்வார்த்தைகளை எழுத மனமில்லாமல்விட்டு விடுகிறார் " (ஆதாரம்நெல்லை ஜெபமணி அவர்கள் எழுதிய "கண்டுகொள்வோம் கழகங்களை!:"பக் -41). அதாவது பெரியார்தமிழைக் குறைசொல்லவில்லைஅதைப் பேசியவர்களது பேச்சைத்தான் குறை சொல்லியுள்ளார்.பேசுபவனால்ஒரு மொழிக்கு உயர்வும், அல்லது காட்டுமிராண்டி மொழி என்றதாழ்வும் கிடைக்கிறது என்பதை அவரது பேச்சு காட்டுகிறது.

 
அதைத்தான் நாம் இயல்இசைநாடகத் தமிழின் மூலம் காண்கிறோம்உன்னதவிவரங்களைக் கொடுக்கும் போதுஅதைக் கொடுக்க உதவும் மொழியும் உயர்வுபெறுகிறதுஅந்த மொழிக்கு சக்தி கூடுகிறதுஅதை உறுதிபடுத்தியே ஆண்டாளும்,ஏனைய ஆழ்வார்களும்ஒவ்வொரு பாடல் தொகுப்பின் முடிவிலும்அந்தத்தமிழ்ப் பாடல்களைப் பாடுவதால் இன்னின்ன பலன்கள் உண்டாகும் என்றுசொல்லியுள்ளார்கள்உதாரணமாகமானிடருடன் வாழகில்லேன் என்று ஆண்டாள்கூறும் நாச்சியார் திருமொழியின் முதல் பத்தை "விருப்புடை இன் தமிழ்மாலைவல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவாரே" என்று முடிக்கிறாள்அதாவதுஇனிய தமிழில் மாலை போல் கோர்க்கப்பட்ட அந்தப் பத்துப் பாடல்களைப்பாடுபவர்கள் விண்ணிலுள்ள தேவர்களுக்கெல்லாம் அரசனான பரந்தாமனதுஅருகாமையை அடைவார்கள் என்கிறாள்தமிழால் இறைவனை அடைய முடியும்என்பதையும்பக்தியை ஊட்ட முடியும் என்பதையும் இந்த வரிகள் காட்டுகின்றன.ஆண்டாளது மறக்க முடியாத மற்றொரு பாடல் தொகுப்பு, 'வாரணமாயிரம்' என்றுதொடங்கும் இறைவனை மணம் செய்து கொண்ட கனவுப் பாடலாகும்அவற்றைமுடிக்கும் போது "கோதை சொல் தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரேஎன்கிறாள்குழந்தைச் செல்வத்தைஈட்டித்தரும் வல்லமையைத் தமிழ் பெறும் வண்ணம் ஆண்டாள்இயற்றியிருக்கிறாள்அந்தத் தமிழே மருந்தாகும் வண்ணம் "கோதை சொல்மருந்தாம்என்று நாச்சியார் திருமொழியை முடிக்கிறாள்தான் இயற்றியசொல்லால் தமிழை மருந்தாக்கினாள்

 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  பேசுபவரது குணத்தால்எண்ணத்தால்சொல்லப்படும் சொற்களால் தமிழைக்காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதற்கொப்பாகவேதங்கள்எண்ணத்தால்பக்தியால்இன் தமிழிலும்தீந்தமிழிலும் இன்ன பிறவாகஉயர்வாகச் சொல்லப்பட்ட தமிழிலும், ஆழ்வார்கள் அளித்த சமயத் தமிழால்,தமிழும் உயர்வு பெற்றதுஅதைப்பாடினவர்களும் உயர்வு பெற்றார்கள்;வருங்காலத்தில் அவற்றைப் பாடுபவர்களும் உயர்வு பெறப்போகிறார்கள் என்பதைஒவ்வொரு பத்து பாடல்கள் முடிவிலும் ஆழ்வார்கள் சொல்லியுள்ளார்கள்.அப்படிப்பட்ட உயர் தமிழ்ப் பாடல்களை ஒன்றியும்ஊன்றியும் படிக்காததால்,செல்வராஜ் அவர்கள் கொடுத்த சிறுகதை தமிழுக்கு ஒரு புண்கலனாகஅமைந்துள்ளதே தவிர பொன்கலனாக அல்லஅவர் எழுதிய தமிழைப் படிக்கவும்நா கூசுகிறதுகாட்டுமிராண்டித்தமிழ் எப்படி இருக்கும் என்பதை அவர் நன்றாகவேகாட்டி விட்டார்.

  தமிழைத்தான் இழிவு படுத்தினார் என்பது மட்டுமல்லஆண்டாள்காலக்கட்டத்துக்கு ஒவ்வாத காட்சிகளையும்ஆண்டாள்பெரியாழ்வார்பாண்டியமன்னன் ஸ்ரீவல்லபன் ஆகியோரது குணநலன்களையும்,  வரலாற்றுநிகழ்வுகளையும் திரித்துபொருந்தாத வகையில்அபத்தக் களஞ்சியமாக சித்தரித்துள்ளார்அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பௌர்ணமி நாளிரவில் கதை நடக்கிறதுபொழுதுவிடிந்தால் தேர்த் திருவிழாவாம்அந்தத் திருவிழாவைப் பற்றின இன்ப நினைவில்மக்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களாம்தேர்த் திருவிழாவுக்குஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் போனது என்பது உண்மைஅது இந்தக் கதாசிரியருக்குத்தெரிந்திருக்கிறதுஆனால் அந்தத் தேர்த் திருவிழா என்றுஎதற்காகக்கொண்டாடப்படுகிறது என்பதை அவர் அறியாமல்கதை எழுத வந்துவிட்டார்.தேர்த் திருவிழா ஆரம்பித்ததே ஆண்டாள் வைபவம் நிகழ்ந்த பிறகுதான்.இறைவனை அவள் மணந்த அதிசய நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஆண்டாள் கோவில்கட்டப்பட்டுஅவள் பிறந்த ஆடி மாதம்பூர நட்சத்திரத்தன்று தேர்த் திருவிழாகொண்டாடும் வழக்கம் ஏற்பட்டதுஅந்த ஆடிப்பூரமும்பௌர்ணமியன்றோ,அதற்கு மறுதினமோ வராது.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  

2.   அந்தப் பௌர்ணமி இரவில் அரசன் அவனது கோட்டையின் உப்பரிகையில்வருகிறானாம். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோவிலின் உயர்ந்தகோபுரத்தைக் காண்கிறானாம். ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தில் கோபுரம்கட்டப்பட்டதா என்பதே சர்ச்சைக்குரியது. அது மட்டுமல்லாமல், ஸ்ரீவில்லிபுத்தூரில்கோட்டையும், அரண்மனையும் இருந்ததற்கான ஆதாரமும் எதுவும் இல்லை. ஸ்ரீவல்லபன் காலத்தில், வாணிபப்போக்குவரத்து கொண்ட இடமாக ஸ்ரீவில்லிபுத்தூர்இருந்திருக்க வேண்டும் என்று எண்ணும் வண்ணம் 'தேசி உய்யவந்தப் பட்டணம்"என்னும் இடம் அந்தப் பகுதிகளில் இருந்திருக்கிறது. (கல்வெட்டு எண் 269, A.R. No 56 of 1929.  ராமநாதபுர மாவட்டம், திருப்பட்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ளஸ்வயம்ப்ரகாசர் கோவில். திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லபனது 24 ஆம்ஆட்சியாண்டு) தேசி உய்யவந்த பட்டணம் என்னும் பெயரைக் கொண்டு, இது பிறஊர்களிலிருந்து வாணிபம் செய்ய வந்த மக்கள் குடியமர்ந்த இடமாக இருந்திருக்கிறது என்று அறியலாம். 'கேரள சிங்க வளநாட்டி'லிருந்து இங்குமக்கள் வந்திருக்கிறார்கள். (மேற்படி கல்வெட்டு, ஸ்ரீ வல்லபன் காலம்).பின்னாளில் பாளையக்காரர்கள் பாதுகாப்பில் இந்த இடம் இருந்திருக்கிறது.பொதுவாக வாணிப மையங்களைச் சுற்றி பாளையங்கள் மற்றும் காவல்அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதை கொங்கு நிலங்களில் காணலாம்.ஸ்ரீவில்லிபுத்தூரும், 1750 வரை கொல்லம்கொண்டான் பாளையக்காரர் என்பவர்வசம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அவர்களது கோட்டை நவாப் தளாபதிகள் வசம் சென்றது. இந்த விவரங்கள் மூலம், ஸ்ரீவல்லபன்காலத்தில் அவன் தங்கும் வண்ணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரண்மனை, கோட்டைகொத்தளங்கள் இருந்தனவா என்பது சந்தேகத்துக்குரியது. வெறும் காவல் படைவீடுகள் தான் இருந்திருக்க வேண்டும். மேலும் அந்த அரசன் மதுரையில்தான்வசித்து வந்தான் என்று ஆழ்வார்கள் சரித்திரத்தைக் கூறும் குரு பரம்பரைபிரபாவம் என்னும் நூல் கூறுகிறது. மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சுமார் 75கி.மீ தொலைவில் இருக்கிறது. எனவே ஸ்ரீவல்லப அரசன் தன் கோட்டையின்உப்பரிகையிலிருந்து வடபெருங் கோவில் கோபுரத்தைக் கண்டான் என்பது, ஏதோமனதுக்குத் தோன்றினபடி எழுதியதுதான். மொத்தக் கதையுமே தாறுமாறாக மனம்போன போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மிக உயர்ந்த உண்மையானபாத்திரங்கள் பெயரில் கதையைப் பின்னியிருப்பதுதான் வேதனைக்குரியது.கண்டனத்துக்குரியது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 3.   கதையின் 2 ஆம் பக்கத்திலேயே கதாசிரியர் சொல்லும் தவறான விவரம்,கோவிலை ஒட்டிகிழக்கு ரத வீதியில்தாசி வீடு இருந்தது என்பது.ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர் 'அன்ன வயல்'கள் சூழப்பட்டதும், "நீதியால் நல்லபத்தர் (பக்தர்வாழுமூர்நான் மறைகள் ஓதும் ஊர்" என்று வைணவஆசாரியர்களால் வருணிக்கப்பட்டதுமான சிறப்புடைய ஊர்.  இந்த வருணனைகற்பனை அல்ல என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் தெற்குச் சுவரில் உள்ளஒரு கல்வெட்டு மூலம் அறியலாம். (கல்வெட்டு எண் 91. A.R. No 548 of 1926) வீரப்பாண்டியனின் 13 ஆம் ஆட்சி எதிராண்டில்செய்யப்பட்ட நில விற்பனைகளையும்,கொடைகளையும் இது தெரிவிக்கிறதுஇதில் ஸ்ரீவில்லிபுத்தூரை மல்லி நாட்டின்'பிரம்மதேயம்' என்று குறிக்கப்பட்டுள்ளதுபிரம்ம்தேயம் என்றால்,வேதவல்லுனர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்டது என்று பொருள்அங்கு ஒருகோவில் இருக்கும்அதைச் சுற்றி வேத வல்லுனர்கள் வாழ்வார்கள்அங்குள்ளஎல்லா மக்களுமே அந்தக் கோவிலின் உயர்வுக்கும்வேதம் தழைக்கவும் ஏதேனும்ஒரு கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பார்கள்சிறந்த பக்தர்களாகவும் இருப்பார்கள்.பிரம்மதேயமாக இருந்த அமைப்பைத்தான் ஆசாரியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்வாழ்த்துப் பாடலில் பிரதிபலித்துள்ளார்கள்அப்படிப்பட்ட ஒரு பிரம்மதேயத்தில்தாசி வீடுகள் இருக்க முடியாது.

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

4.   ஒரு ஊரைபிரம்ம தேயமாக அரசன் அறிவிப்பான்அந்த அறிவிப்புஸ்ரீவில்லிபுத்தூரைப் பொருத்தமட்டில்பெரியாழ்வாரை முன்னிட்டுத்தான்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்எந்த அரசனைக் காமாந்தகனாக செல்வராஜ்வர்ணிக்கிறாரோ அந்த அரசனால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்ஏனெனில்ஆரம்பத்தில் பெரியாழ்வார் நந்தவனம் அமைத்துபூமாலைக் கைங்கரியம் செய்துவந்த சாதாரணாராகத்தான் இருந்தார்அவர் ஒரு வேத விற்பன்னர் அல்லர்.ஆனால் ஓரிரவில்  தெய்வமே அவரது கனவில் வந்துமதுரைக்குச் சென்று அரசன்கேட்ட சமயத் தத்துவக் கேள்விக்கு பதில் அளிக்குமாறு சொல்லவே அவர்மதுரைக்குச் சென்று அரசனுக்கு விளக்கம் அளித்தார்திருடனாக இருந்தவால்மீகிக்கு எவ்வாறு திவ்விய ஞானம் பிறந்ததோஅவ்வாறே ஆழ்வாருக்கும்தெய்வ அனுக்கிரகத்தால் ஞானம் பிறந்ததுஅவர் அளித்த விளக்கத்தால் அரசன்உட்பட அனைவரும் தெளிவு பெற்றனர்அவரைப் போற்றிஅவருக்குப் 'பட்டர்பிரான்' என்னும் பட்டமும் அளித்தனர்அதன் தொடர்ச்சியாக அவர் வாழ்ந்தஸ்ரீவில்லிபுத்தூரை பிரம்ம தேயமாகஸ்ரீ வல்லபப் பாண்டியன் அறிவித்திருக்கவேண்டும்ஏனெனில்பெரியாழ்வாரும்ஆண்டாளும் எழுதின பல பாசுரங்களில்பெரியாழ்வாரைப் "புதுவை மன்னன் பட்டர்பிரான்", என்றும் "புதுவைக் கோன்"என்றும்'புத்தூர்க் கோன்' என்றும் பலவாறாகச் சொல்லியுள்ளார்கள்கோன்,மன்னன் என்னும் சொற்கள் தலைவன்அரசன் என்று குறிக்கும்இதனால் பட்டர்பிரானாக இவர் பட்டம் பெற்றவுடன்இவர் வாழ்ந்த ஸ்ரீ வில்லிபுத்தூரையும்பிரம்மதேயமாகஅரசன் கொடுத்திருக்க வேண்டும்அதற்கு இவரே தலைவராகஇருந்திருக்க வேண்டும்.  இவர்கள் இருவரும் எழுதின அனைத்துப் பாசுரத்தொகுப்புகளிலுமே புத்தூர் கோன் என்னும் அடையாளம் அல்லது பட்டர் என்னும்பெயர் இடம் பெருவதால்பெரியாழ்வார் பட்டர் பிரான் என்னும் பட்டம்பெற்றபிறகேவில்லிபுத்தூரும் பிரம்மதேயமாக ஆன பின்பே பெரியாழ்வார்திருமொழியும்திருப்பாவையும்நாச்சியார் திருமொழியும் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறதுஅதற்கேற்றாற் போல ""திருவில் பொலிமாமறைவாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான்" (பெ-திரு -3-5-10) என்றும், "திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான்" (பெரிதிரு – 4-1-10) என்றுபெரியாழ்வாரே சொல்லியுள்ளதால்அந்த ஊரின் பிரம்மதேயச் சூழலும்அதன்மகுடம் சூட்டினாற்போல பெரியாழ்வார் விளங்கினதும் புலனாகின்றனஅந்தச்சூழலில் தாசி வீடுகள் இருந்தன என்பதும்ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரே தனதுதகப்பனார் என்று தெரியாமல் 20 வயது வரை வளர்ந்தாள் என்பதும்அபத்தக்கற்பனைகள்.   
 
5.   பௌர்ணமியன்று கதை தொடங்கும் முதல் பத்தியிலேயேகண்டனத்துக்கிரிய கருத்தைச் சொல்கிறார் கதாசிரியர்வாழையடி வாழையாக ஆண்டவனுக்குத்தங்களை அடிமைப் பொருளாக அர்பணித்துக் கொண்ட தேவதாசி வம்சத்துஆண்டாள் என்கிறார்இதுவே தவறான கருத்துஆனால் இங்கு அடிமை செய்யும்தேவ தாசி என்பதை மட்டும் பார்ப்போம்ஏனெனில் இதில் தமிழ்ப் பண்பாடும்,கோவில் கலாசாரமும் சம்பந்தப்படுகிறதுஇந்தக் கதை, தமிழ் நாட்டுக்கோவில்களில் தேவ தாசிகள் இருந்தனர்அவர்களை மக்களும்மன்னனும்காமக்கிழத்திகளாகப் பார்த்தனர் என்பது போன்ற எண்ணங்களை உருவாக்குகிறது.தமிழகக் கோவில் கலாசாரத்தின் உண்மை நிலவரங்களை மக்கள் அறியவில்லை என்றால்இப்படிப்பட்ட கதைகள் சொல்லும் கருத்துக்களே நிலைத்து விடும்.எனவே உண்மை நிலையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

6.   இந்து சமயத்தில் அடிமை என்னும் நிலை இருக்கிறதுஇதையே தாசன்தாசிஎன்று இருபாலாருக்கும் சொன்னார்கள்இந்தச் சொற்களுக்கு அடிமை என்றே பொருள்தாசிதாசன் என்ற சொற்களைப் பக்தர்கள் தங்களைக் குறித்தேசொல்லிக் கொண்டிருக்கிறார்கள்இவர்கள் யாருக்கு அடிமை என்றால்இறைவனுக்குத்தான் அடிமைஇறைவனுக்கு மட்டுமே அடிமைமனிதனுக்குமனிதன் அடிமை என்ற எண்ணமே இந்து மதத்தில் கிடையாதுஇந்த அடிமையில்இரண்டு வகை இருந்து வந்திருக்கிறதுஒன்று ஒரு கோவிலுடன் தன்னைஇணைத்துக் கொண்டுஅந்தக் கோவில் இறைவனுக்குத் தன்னை அடிமையாகசாஸனம் செய்து கொண்டுகோவில் தொண்டுகள் செய்வதுஇரண்டாவதுதனியாகக் கோவில் பணிகள் என்றில்லாமல்எந்த பணியில் இருந்தாலும்,எந்ந்நேரமும்எக்காலமும் இறைவனுக்குத் தான் அடிமை என்னும் எண்ணத்துடன்இருப்பது. இந்த இரண்டு வகைகளுக்குமே இறைவன் தான் எஜமானன்இவர்கள்,இறைவனுக்கு மட்டுமே தாங்கள் அடிமை என்று பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்ஆண்டவனுக்குத் தங்களை அடிமையாக அர்ப்பணித்துக்கொணடவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்இருந்திருக்கிறார்கள்.பெரியாழ்வாரும்ஆண்டாளும்அன்றைக்கும்இன்றைக்கும் உள்ள பல வைணவ அடியார்களும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள்பெரியாழ்வார், "எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழிஆட்செய்கின்றோம்" என்று  திருப்பல்லாண்டில் கூறுகிறார்தந்தைதாத்தா,கொள்ளு தாத்தாஎள்ளு தாத்தா என்று ஏழேழு தலைமுறைகளாக இறைவனுக்குஅடியவர்களாக ஆட்பட்டிருக்கிறோம் என்கிறார்அவரைப் போலவே ஆண்டாளும்,"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம்உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றுஎன்று கேட்டுக் கொள்கிறாள்.இவர்களைப் பின்பற்றியே வைணவப் பெரு மக்கள் அனைவரும்இன்றுவரைதங்களை இறைவனுக்கு அடிமை என்று சொல்லிக் கொண்டும்தாசன்தாசி என்றுதங்களை அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்தன்னைத் தோழர் என்றுஅடையாளப்படுத்திக் கொள்ளும் செல்வராஜ் அவர்களுக்குப் புரியும் வழியில்சொல்வதென்றால்இறைவன் ஒருவனே முதலாளி என்று அன்றைய மக்கள்நினைத்தனர்மற்றவர்களெல்லாம் அவனுக்கு அடிமைகளேஇன்றும் அப்படிநினைப்பவர் பலர் உண்டுமக்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளேஏனெனில்அவனன்றி மக்கள் உற்பத்தியே கிடையாதுஅவனே படியளப்பவன்அவனேஎல்லாமுமாக இருப்பவன்இந்த அறிவைப் பெற்ற பெரியாழ்வாரும்மற்றும்பலரும்அவனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்.
 
 

 

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

7.   அந்த அடிமைத்தனத்துக்கு ஒரு சின்னமும் இருக்கிறதுஅவனது சின்னத்தைப்பொறித்துக் கொண்டுஅவனுக்கே தாங்கள் ஆட்பட்டவர்கள் என்று சொன்னார்கள்.தன் தந்தைதாத்தா காலத்திலிருந்து இறைவனுக்கு அடிமைப்பட்டோம் என்றும்சொன்ன பாடலுக்கு அடுத்த பாட்டில் "தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ்திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடியாட்செய்கின்றோம்" என்கிறார் பெரியாழ்வார்அதாவது இறைவனிடம் அடிமைசெய்பவர்கள் தாங்கள் என்பதை உறுதி படுத்தஅந்த இறைவனது சங்கு சக்கரப்பொறிகளை தீயில் சுட்டுஅவற்றைக் கொண்டு தங்கள் தோள்களில் அழியாதஅடையாளச் சின்னங்களை ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் அவனுக்கு மட்டுமேசேவகம் செய்பவர்கள் என்று காட்டிக் கொண்டிருக்கின்றனர்இந்த வழக்கம்இன்றும் வைணவத்தைப் பின் பற்றும் மக்களிடையே இருக்கிறதுபெரியாழ்வார்காலத்திலும் இருந்திருக்கிறது.  
 
8.   இவர்களைத் தவிர இருந்த மற்றொரு வகை அடிமைகள் தங்களையே கோவிலுக்குத் தானமாகவும், விலைக்கு விற்றுக் கொண்டும் கோவில்அடிமைகளாக இருந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில்காணப்படுகின்றன. நாகப்பட்டினம் கொறுக்கையில் உள்ள வீரட்டானேஸ்வரர்கோவில் கல்வெட்டின் மூலம், மொத்தம் 100 பேர் தங்கள் குடும்பத்தினர் சகிதமாகஇறைவனுக்கு அடிமைகளாக சாசனம் செய்து கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. திருவிடந்தைப் பெருமாள் கோவிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்தமீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்ட சாஸனம்இருக்கிறது. திருவக்கரைக் கோவில், தஞ்சாவூர் கீழையூர்க் கோவில்,திருப்பாம்புரம் கோவில் ஆகியவற்றிலும் அடிமைகளாகத் தங்களை  சாஸனம்செய்து கொண்ட ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அடிமைகளுக்கும் சூலப்பொறிவைத்த குறிப்புகள் இருக்கின்றன. இதைக் கொண்டு ஏதோ அடிமை வியாபாரம்நடந்தது என்று அதீதக் கற்பனையில் எழுதும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.ஆனால் பெரியாழ்வார் கூறுவதையும், இன்றும்  வைணவ மக்கள் சங்கு சக்கரப்பொறியை தோளில் பொறித்துக் கொள்வதையும் பார்த்தாவது, இறைவனுக்குஆட்பட்டு இருத்தலின் அடையாளமாக, சூலப்பொறி இட்டுக்கொள்ளும்வழக்கத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 
9.   இந்த அடிமை விவகாரத்தின் தொடர்ச்சியாக அந்தச் சிறுகதைத் தொகுப்பின் 10, 11 ஆம் பக்கங்களில் இன்னுமொரு மாபெரும் அபத்தம் அரங்கேறுவதைக்காணலாம். ஆண்டாள் தேவ தாசிக்குப் பிறந்தவளாம். தேவதாசி என்றாலே இந்தக்கதாசிரியர் போன்றவர்களுக்கு காமக் கிழத்திகள் என்று எண்ணம். ஆண்டாள்கோவிலில் தேவதாசியாக நடனம் ஆடுவதைப் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன்பார்த்தானாம். அதைக் கண்டு அவளை மோகித்து, போகப் பொருளாக எண்ணிஅழைத்து விட்டானாம். அதை ஏற்றுச் செல்லாவிட்டால் மறுநாளே அவர்களுக்குக்கிடைக்கும் மானியத்தை நிறுத்துவிட உத்தரவு பிறக்குமாம். ஆண்டாளும் அவள்தாயும் தெருவில் நாய் போலச் சாக வேண்டி வருமாம். என்ன ஒரு முற்போக்குச்சிந்தனை!? ஒருவரையும் பாக்கி வைக்காமல் எல்லோரையும் இழிவு படுத்திவிட்டார் செல்வராஜ். அது மட்டுமல்ல, அந்தக் காலக்கட்டத்தில் கோவிலில்அடிமையாய் சேவகம் செய்தவர்கள் நிலை என்ன, என்ன சேவகம் செய்தார்கள்,அவர்களுக்கு என்ன மானியம் கிடைத்தது, அதை அரசன் மனம் போன போக்கில்நிறுத்த முடியுமா என்றேல்லா ஆராயாமல், நாலாந்தர சினிமா வசனம்எழுதியிருக்கிறார்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 
10.  கோவிலில் அடிமைகளாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்கள் தேவரடியார், பதியிலார், தளியிலார், தளிச்சேரிப் பெண்டுகள் என்னும் பலபெயர்களில் அழைக்கப்பட்டனர். தேவரடியாள் என்னும் பெயர் இன்றைக்கு எந்தபொருளில் சொல்லப்படுகிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை., ஆனால்,ஆண்டாள் காலத்தில் அதாவது 1000 ஆண்டுகளுக்கு முந்தின கல்வெட்டுகளில்அது தெய்வத்துக்குத் தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்ட ஒருஒப்பற்ற நிலையைக் குறித்தது. அந்த நிலையை ஒரு திருத் தொண்டாகச்செய்தனர். தேவரடியார்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுகிடல்,இறைவனுக்கு அமுது படைப்பதற்கான அரிசியைத் தூய்மை செய்தல், திருப்பதிகம்பாடுதல், இறைவனுக்குக் கவரி வீசுதல் ஆகியவற்றைச் செய்தனர். விழாக்காலங்களில் திரு நீற்றுத் தட்டையும், மலர்த் தட்டையும் ஏந்தியிருந்தனர்.
 
11.  தளியிலார் என்பவர்கள் ஆடல் பாடல்களில் வல்லவர்கள். இவருள் சிவன்கோவிலில் பணி செய்தவர்கள் 'ரிஷபத் தளியிலார்: என்றும், வைணவக்கோவில்களில் பணி செய்தவர்கள் "ஸ்ரீ வைஷ்ணவ மாணிக்கம்" என்றும்அழைக்கப்பட்டனர். பார்ப்ப்வர்கள் மனம் தறி கெடும் படியும்,போகப்பொருளாகாவும் இவர்கள் இருந்தனர் என்றால், இப்படியா சிறப்புப் பெயர்பெற்றிருப்பார்கள்?


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

12.  பதியிலார் என்போர் பெரிய கோவில்களில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.தஞ்சைப் பெரிய டையார்க் கோவிலில் நானூற்றுக்கும் மேற்பட்டப் பதியிலார்பணியாற்றி இருக்கின்றனர்அவர்களது வீட்டு எண்தெருப் பெயர் போன்றவிவரங்கள் எல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனஇந்த்தேவரடியார்களும்பதியிலார்களும் ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களில்லைஎல்லாவகுப்புப் பெண்டிரும் தேவரடியார்களாக இருந்திருக்கின்றனர்முதலாம்குலோத்துங்க சோழன் காலத்தில் 'ஆச்சப் பிடாரன் கணபதி நம்பி' என்கிற அழகியபாண்டியன் பல்லவரையன் என்னும் படைத் தலைவன்பாலாற்றங்கரையிலுள்ளதிருவல்லம் கோவிலில் பணிகள் செய்வதற்கு தன் குடும்ப்ப் பெண்களைத்தேவரடியார்களாக ஒப்படைத்தான்அப்பெண்கள் சூலப்பொறி பொறிக்கப்பட்டு,கோவில் பணிகளில் ஈடுபட்டனர் என்று அந்தக் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.ஆடல் பாடல் என்பதும் கோவில் பணிகளில் ஒன்றாகச் செய்யப்பட்டது.தெய்வத்துக்கே அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் விரும்பினால்ஒருவரை மணம்செய்து கொண்டு வாழவும் வசதியளிக்கப்பட்டதுசதுரள் சதுரி என்ற தேவரடியாள்,நாகன் பெருங்காடன் என்பவனை மணந்து கொண்டாள் என்று கூறும்திருவொற்றியூர்க் கல்வெட்டு மூலம் அவர்கள் தெய்வத்துக்கு அடிமைத் தொண்டுசெய்தாலும்தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்ற சுதந்திரம்இருந்தது என்பதும் தெரிய வருகிறதுசெல்வராஜ் போன்றவர்கள் நினைப்பது போலஇறைவனுக்கு ஆடலும் பாடலும் சமர்ப்பித்த பெண்கள்போகப்பொருளாகப்பார்க்கப்படவில்லைமேற்சொன்ன கல்வெட்டுச் செய்திகள் ஆண்டாள் வாழ்ந்தகாலக்கட்டத்தை ஒட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
13.  செல்வராஜ் கதையில் சொல்வது போல அரசன் மானியத்தை நிறுத்திஇவர்கள்நாய் போல நடுத்தெருவுக்கு வரும் நிலை அன்று இல்லவே இல்லைஅரசன் தன்மனம் போன போக்கில் மானியம் தரவில்லைதந்ததைப் பிடுங்கவும் இல்லை.எந்தக் கொடையையும் சாஸனம் செய்து வைத்தார்கள்அதை முறைப்படிகொடுக்க ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள்பெரும்பாலான கொடைகள் நிலமாகஇருந்தனஅவற்றில் கிடைக்கும் விளைச்சலே இவர்களுக்கு வருமானமாகும்.தளியிலார்தேவரடியார்தளிச்சேரிப் பெண்டுகள் ஆகியோருக்கு "பாணக் காணி" "நட்டுவக் காணிஎன்னும் பெயரில் நிலங்கள் கொடுக்கப்பட்டனதமிழ்க்கூத்தாடுபவர்களுக்கு "கூத்தாட்டிக் காணியும்", இசை பாடும் முரலியனுக்கு "முரலியக் காணி"யும் கொடுக்கப்பட்டது. "பதியிலார்க் காணி", "சாக்கைக் காணி", "வீணைக் காணி", "உவச்சக் காணிபோன்றவற்றை இந்த மக்கள் பெற்றனர்.அன்றைய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளாமல்செல்வராஜ் அவர்கள்கொச்சைப்படுத்தி எழுதிவிட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

14.  அம்மாவும்பெண்ணுமாகதங்கள் தாசிக் குலத்தை நொந்து கொள்ளும்வசனத்துக்கிடையேபெரியாழ்வார் பெற்ற பெண்ணான தான்தாசிக்குப்பிறந்ததால்தாசியாகவே வாழ வேண்டுமா என்று ஆண்டாள் எண்ணுவதாகசெல்வராஜ் எழுதுகிறார்அப்பொழுதுதான் ஆண்டாளுக்குப் பெரியாழ்வார் தனதுதந்தை என்று தெரிய வந்த்தாம்தன் மனதில் அவள் அரற்றுகிறாளாம் – "அப்பா,நான் தேவதாசியின் வயிற்றில் பிறந்ததனால் என் தலைவிதி இதுதானா?படைப்பில் எல்லோரும் சமம் என்று பேசும் உங்கள் தத்துவம் சொல்லித் தந்ததுஇதுதானா?" செல்வராஜ் போன்றோருக்கு பிடித்தமான பாயிண்ட் இதுஆனால்சமதர்மத்தைப் பற்றிப் பேச செல்வராஜ் இப்படி ஒரு காட்சியைத் தர வேண்டுமா?பெரியாழ்வார் பாசுரத்தைப் படித்திருந்தாலே தெரிந்திருக்குமேபெரியாழ்வார்வேயர் குலத்தில் உதித்தவர்வேய் என்பது மூங்கிலைக் குறிக்கும்மூங்கில்கம்புகள் மீது நின்றாடும் கழைக்கூத்து அமைப்புஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவிலில்செதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி ஒருகாலத்தில் மூங்கில் காடாகஇருந்திருக்கலாம்மூங்கில் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால் அந்த ஊருக்கும்,அதில் வாழ்ந்த மக்களுக்கும் ஆதியில் வேயர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.அப்பொழுதே சுதை வடிவிலான வடபத்ர சாயி அங்கு கோவில் கொண்டிருக்கிறார்.பின்னாளில் வில்லி என்பான் அந்தப் பெருமாளைக் கண்டெடுத்து கோவில்கட்டியிருக்கிறான்அவன் காலத்தில் புதிதாக நிர்மாணம் செய்யவே அது புத்தூர்என்றும்அவன் பெயரைக் கொண்டு வில்லிபுத்தூர் என்றும் பெயர் பெற்றது.அதற்கு முந்தின காலத்திலேயே அந்தப் பகுதியில் இருந்த வேயர் மக்கள் குடியில்பெரியாழ்வார் தோன்றியிருக்க வேண்டும்வேயர் என்பதற்கு இன்னொருபொருளும் உண்டுவேயர் என்றால் ஒற்றன் வேலை செய்பவன் என்று பொருள்.ஒற்று வேலை என்பது அரசுப் பணியாகும்பல தலைமுறைகளாக அவரதுமுன்னோர் ஒற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடும்ஒற்றுப் பணியில் இருந்தாலும்வீர்ர்களாக இருந்திருக்க வேண்டும்ஏனெனில் தன்னை "வீரணி தொல் புகழ்விட்டு சித்தன்" என்று பெரியாழ்வார் திருமொழி 4-6-10 இல் குறிக்கிறார்இன்னொருஇடத்தில் "பாழித்தோள் விட்டு சித்தன்என்று சொல்லிக் கொள்கிறார் (பெரி-திரு -4-5-10). 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பாழி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றனஆனால் தோள் என்றுசேர்த்துச் சொல்வதால்வலிமைபோர் என்னும் அர்த்தங்களே பொருத்தமாகஇருக்கும்வீரத்துக்குப் பெயர் போன மரபில் அவர் வந்தவராக இருக்க வேண்டும்.நாளடைவில்அவரது முன்னோர்கள் வேயர்களாகப் பணியாற்றியிருக்கவேண்டும்அதனால் இவர் வேயர் குலத்தவராகிறார்வேயர் குலத்தில் பிறந்தஇவர் பாடின திருப்பல்லாண்டைக் கேட்டுத்தான் இன்றைக்கும் எல்லாகோவில்களிலும் பெருமாள் நாளை ஆரம்பிக்கிறார்இவர் பாடின சென்னியோங்குமுதலான பத்துப் பாசுரங்களேமோட்சத்து வழிகாட்டும் சாதனம் என்று வைணவஆச்சாரியர்கள் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்அதில் "வேயர் தங்கள்குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்என்னும்அந்த நாராயணனை அந்தப் பத்துப் பாசுரங்களால் பாட வல்லார் இறைவனுக்குஅணுக்கர்கள் ஆவார்கள் என்று முடிக்கிறார்.  உயர் குலம் என்றுசொல்லப்படுகிறவர்கள் உள்ளிட்டோர் அனைவருமே இந்தப் பாசுரங்களைப் பாடிப்பாடியே உய்யும் வழி தேடுகின்றனர்சமத்துவம் பற்றிப் பேச செல்வராஜ் அவர்கள்விழைந்தால்வேயர் குலத்துதுதித்த பெரியாழ்வாருக்கு வைணவத்தில்கொடுக்கப்பட்டுள்ள உயர்வையும்மேன்மையையும் பற்றிப் பேசியிருக்கலாம்.ஆனால் அவரையல்லவா இழிவுபடுத்திப் பேசி விட்டார்?
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

15.  செல்வராஜின் காமக் கண்ணில் எல்லாமே காமமாகத் தெரிகிறதுகோவிலில்நடனமாடும் பெண்ணைப் பார்த்து உள்ளம் அரிப்பெடுத்ததாம்உடல்தினவெடுத்ததாம்இதெல்லாம் நடந்தது விட்டுசித்தருக்குபெரியாழ்வாரை விட்டுசித்தன் என்றுதான் மக்கள் அழைத்தனர்சதா சர்வ காலமும் விஷ்ணுவையேஅவர் நினைத்துக் கொண்டிருந்ததால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.அப்படிப்பட்டவரை சபல சித்தராக வர்ணிப்பது மன்னிக்க முடியாத குற்றம்.வைணவ மரபில் ஒன்று சொல்வார்கள்இறைவன் தனக்கு யாரேனும் அபசாரம்செய்தாலும் பொருட்படுத்த மாட்டான்ஆனால் தனது பக்தனுக்கு அபசாரம்செய்தால் பொறுக்க மாட்டான்தெய்வத்தாலும் பொறுக்க முடியாத குற்றத்தைசெல்வராஜ் செய்துள்ளார்.
 
16.  பூமாலை தொடுத்துஅதை இறைவனுக்கு சாற்றி அழகு பார்த்த விட்டுசித்தர்சாதாரண மானுடப் பெண்ணின் அழகைப் பார்த்து மனம் தடுமாறி இருக்கவேமுடியாதுஅப்படி தடுமாறி இருந்தாலும்அதை மறைக்கும் பழக்கம்வைணவத்தில் இருந்ததில்லைஉள்ளதை உள்ளபடியே எழுதி வைத்துள்ளார்கள்.உதாரணமாக தொண்டரடிப்பொடி ஆழ்வார்பூர்வத்தில் ஒரு வேசியிடம்மயங்கியிருந்ததை மறைக்கவில்லைதிருமங்கை ஆழ்வார் வழிப்பறி செய்ததைமறைக்கவில்லைபெரியாழ்வார் வாழ்விலும் அப்படிச் சம்பவங்கள் நடந்திருந்தால்அதை மறைத்திருக்க மாட்டார்கள்மேலும் மனம்மொழிமெய் ஆகியவற்றில்எந்த விஷ்ணு பக்தனும் பிறழ்ந்ததில்லை என்ற நிலை இருந்ததுஇந்தக் கதையைஎழுதுவதற்கு முன்ஒரு சிறு ஆராய்ச்சி முயற்சியாகஆழ்வார்கள் சரித்திரத்தைசெல்வராஜ் அவர்கள் படித்திருந்தால்தெரிந்திருக்கும்ஸ்ரீ வைஷ்ணவர்கள் தவறுசெய்தவர்களாக இருந்தால் தன்னைப் பாம்பு தீண்டிக் கொல்க என்று சொல்லிபாம்பு இருந்த குடத்தில் கையை விட்டார் குல சேகர ஆழ்வார்பாம்பு அவரைத்தீண்டவில்லை என்ற சம்பவத்தின் மூலம்விஷ்ணு பக்தர்கள் தவறிழைக்கமாட்டவே மாட்டர்கள் என்ற நம்பிக்கை அன்றைக்கு எந்த அளவுக்கு இருந்த்துஎன்பது தெரிய வந்திருக்கும்பெருமாள் திருமேனியிலேயே எண்ணத்தைச்செலுத்தும் ஆழ்வார் போன்றவர்களுக்குஎந்தப் பெண்ணின் புற அழகும்சலனப்படுத்தாதுஇன்னும் சொல்லப்போனால் புற அழகையே உருமாற்றக் கூடியசக்தி படைத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதைத் திருமழிசை ஆழ்வார் வரலாற்றின்மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்ஒரு கிழவிக்கு இளமையைக் கொடுத்தவர் இந்த ஆழ்வார்அந்த கிழவி செய்து வந்த தொண்டில் மனம் குளிர்ந்து அவள்கேட்டுக் கொண்டதன் படி அவளுக்கு இளமை திரும்புமாறு வரம் கொடுத்தார்திருமழிசை ஆழ்வார்அவள் அடைந்த இளமையும்அழகும்எப்படிப்பட்டதென்றால்அந்த நாட்டுப் பல்லவ அரசன் அவள் அழகில் மயங்கிஅவளைத் திருமணம் செய்து கொள்கிறான்அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார்சபலத்துக்கு இடம் கொடுத்தவராகச்சித்தரித்துஎழுதியவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

17.   அடுத்த வக்கிரம்பெரியாழ்வாருக்குப் பொருள் மேல் ஆசையாம்.அதற்காகத்தான் மதுரைக்குச் சென்று விவாதத்தில் கலந்து கொண்டாராம்.ஆழ்வாரது பெருஞ்செல்வம் அகாரம்தான்எல்லாவற்றுக்கும் ஆரம்பமாகவும்,மூலமாகவும் இருக்கின்ற 'என்னும் எட்டெழுத்துக்களால் அறியப்படுகின்றஅகார வாக்யனான நாராயணனையே தனமாகக் கொண்ட அவர்அந்தஅகாரத்தையே விவரித்து விவாதத்தில் வென்றார்அந்த விவாதத்திற்குத்தாமாகவே அவர் செல்லவில்லைஅவர் வணங்கி வந்த வடபத்ரசாயி பெருமான்கனவில் தோன்றி அவரைச் செல்லுமாறு பணிக்கவே அவரும் சென்றார்சென்றுவென்ற தனத்தையும் வடபத்ர சாயிக்கே உரியது என்று சமர்ப்பித்தார்."வடபெருங்கோயிலுடையான் திரு முன்பே வைத்து 'தேவரீராலே உண்டான தனம்தேவரீருக்கேஎன்று தெண்டன் சமர்ப்பித்தார்என்று ஆழ்வார்கள் சரித்திரத்தைக்கூறும் குரு பரம்பரைப் பிரபாவம் என்னும் நூல் கூறுகிறதுஅந்த தனத்தைக்கொண்டுதான் அவர் கோவிலை விரிவாகக் கட்டியிருக்க வேண்டும் என்றுசொல்லப்படுகிறதுஅப்படிப்பட்டவரை பணத்துக்கு ஆசைப்பட்டு விவாதத்துக்குச்சென்றார் என்று வாய் கூசாமல் சொல்கிறார் செல்வராஜ்!
 
18.  எல்லாவற்றையும் தியாகம் செய்தால்தான் இறைவனுக்கு அருகாமையில்செல்ல முடியும் என்பது வைணவக் கருத்து. ''சகல தர்மங்களையும் தியாகம்செய்து விட்டு வாஉன்னைப் பீடிக்கும் எல்லா பாபங்ளிலிருந்தும் நான் காப்பாற்றிஉனக்கு மோட்சம் தருகிறேன்'' என்று தேர்த் தட்டில் நின்று அர்ஜுன்னுக்குகிருஷ்ணன் சொன்ன வாக்கைத் தலையாய வாக்காகப் பின்பற்றும் வைணவர்கள்இன்றும் இருக்கிறார்கள்அவ்வாறு இருக்க, 1000 வருடங்களுக்கு முன்விட்டுசித்தராக இருந்த ஆழ்வார் பணத்துக்கு ஆசைப்பட்டா விவாதத்துக்குச்சென்றிருப்பார்ஒன்று பாக்கியில்லாமல் எல்லா வித்த்திலும் character assassinationசெய்திருக்கிறார் செல்வராஜ் 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 19.  பாண்டிய அரசன் ஸ்ரீ வல்லபன் மிகவும் பராக்கிரமம் கொண்டவன்இவன்குண்ணூர்சிங்களம்விழிஞம் போன்ற இடங்களில் போரிட்டு வென்றவன்இவன்பெற்ற ஈழத்து வெற்றியை மகாவம்சம் குறிப்பிடுகிறதுஇவனது வெற்றிகளைப்பறை சாற்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் "வாடாத வாகை சூடிக் கோடாதசெங்கோல் நடப்பஎன்று புகழ்கின்றனவளையாத செங்கோலை உடையமன்னன் பிரம்மதேயமான ஊரில் காமக் கண்ணுடனா செல்வான்இந்த மன்னன்பல போர்களையும் வென்றவன் என்பதைப் பெரியாழ்வாரும் தன் பாடலில்குறித்துள்ளார். "குறுகாத மன்னரைக் கூடி கலக்கி வெங்கானிடைச் சிறுகால்நெறியே போக்குவிக்கும் செல்வன்" என்று கூறுயுள்ளது இம்மன்னையே.அப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற்ற மன்னன் பெற வேண்டியது ஒன்று இருந்தது.அது மறுமைக்குத் தேவையான செல்வம்ஒருமுறை மதுரை நகரில் இரவுசோதனைச் சென்ற போது திண்ணை ஒன்றில் படுத்திருந்த ஒரு பார்ப்பனனைக்கண்டு 'நீ யார்?' என்று வினவஅவன் தான் கங்கையாடி வந்த்தாகச் சொன்னான்.அவன் கற்றுக் கொண்ட வந்த விஷயத்தைப் பற்றி மன்னன் வினவஅவன்'மழைக்காலத்துக்கு வேண்டியதை மற்ற எட்டு மாதங்களிலும்இரவுக்குவேண்டியதைப் பகலிலும்முதுமைக்கு வேண்டியதை இளமையிலும்மறுமைக்குவேண்டியதை இம்மையிலும் தேடுகஎன்ற பொருள் படும் ஸ்லோகத்தைச்சொன்னான்.  அரசனிடம் எல்லாம் இருந்ததுஆனால் மறுமைக்கு என்னவேண்டும் அதை இம்மையில் எவ்வாறு தேட வேண்டும் என்பது தெரியவில்லை.அதைப் பற்றித் தனது புரோகிதரான செல்வ நம்பியிடம் வினவஅவர்வித்வான்களை அழைத்துஅவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.அப்படி வந்தவர்தான் பெரியாழ்வார்அவர் பரத்தத்துவத்தை நிலைநாட்டஅவரால்ஈர்க்கப்பட்ட அரசன் ஸ்ரீ வல்லபன்அவருடைய சிஷ்யனானான் என்று ஆதாரநூல்கள் கூறுகின்றனஅப்படிப்பட்டவன் அவரது மகளான ஆண்டாளைப் பார்த்துக்காமுறுகிறானாம்அவரையே கைது செய்கிறானாம் (அவனது சிப்பாய்கள்ஆழ்வாரைப் பிடித்து கோவில் சன்னிதியிலே நிறுத்தினராம்). இதெல்லாம் என்னகற்பனையோஇந்து மதப் பெரியவர்களைக் கேவலப்படுத்த வேண்டும் என்றுநினைப்பவர்களால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும்
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெருமாளுக்குக் கண்ணடி படக்கூடாதே என்று பல்லாண்டு பாடியவர்பெரியாழ்வார்அவர் பரத்தத்துவம் நிர்ணயம் செய்தபின்பட்டர்பிரான் என்றபட்டத்தைப் பெற்றுஅரசனது பட்டத்து யானையின் மீது ஊர்வலம் வரும்போதுமகன் பெரும் பெருமையைக் காணதாய் தந்தையர் நேரே வந்துபார்ப்பது போலநாராயணனேபிராட்டியுடன் கருடன் மீது ஆரோஹணித்துஅவருக்குக் காட்சி தரபெரியாழ்வாருக்குக் கவலை வந்து விடுகிறதுஅரக்க,அசுரர்கள் வாழும் பூமியாக இருக்கும் கலி காலம் இதுஅந்தக் கலியால் இருள்சூழ்ந்திருக்கும் நேரத்தில் ஒளிமயமாக இந்தத் தெய்வம் காட்சி தருகிறானே,இவனுக்குக் கண் பட்டுவிடாதோஅதனால் தீங்கு வந்து விடாதோ என்றுகவலையுற்றுஇறைவன் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.திருப்பல்லாண்டு பாடுகிறார்அப்படிப்பட்ட அவருக்கு இந்தக் கலியுகசெல்வராஜால் சொல்லடி கிடைக்கிறது'பின்னைகொல்நிலமாமகள் கொல்,திருமகள்கொல்  பிறந்திட்டாள்" – இவள் நப்பின்னையோபூதேவியோ,ஸ்ரீதேவியோ என்று பெரியாழ்வார் ஆசாரியப்பட்ட ஆண்டாளுக்குசெல்வராஜ்உபயத்தில் புது அரிதாரம் கிடைத்திருக்கிறது.
பெருமாளுக்குக் கண்ணடி படக்கூடாது என்று பதறிய ஆழ்வார் மீது சொல்லடிவிழுகிறதே இதுதான் கலியின் இருள் என்பதாகலி இருளில் ஞானச் சுடர்விள்க்கேற்றப் பாடினாரே அதற்கு இதுதான் கைமாறாஐயைந்துமைந்தும்அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று 30 திருப்பாவைபாசுரங்களையும் அறியாதவர்களை இந்தப் பூமி சுமப்பதால் வம்புதான் நேரிடும்என்றார்களே அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறதா?. செல்வராஜ்போன்றவர்களை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறோமே என்று இந்த வையம்அழுது கொண்டுதானே இருக்கும்?  

 
நோன்பு என்ற தலைப்பிட்டுஅந்தத் தலைப்பை எப்படியாவது கதைக்குள்நுழைக்க முயன்ற செல்வராஜ்கடைசி வரியில் அதைக் கொண்டு வருகிறார். 'அந்த மூன்று பேர்கள் நோன்பு ஆரம்பமாயிற்று" என்கிறார்அந்த மூன்று பேர்,பெரியாழ்வார்ஆண்டாள்ஸ்ரீ வல்லபன் என்பது செல்வராஜனது நினைப்பு.உண்மையில் இவரைப் போன்றவர்களைப் பெற்றதனால்இந்த பூமித்தாய்தான்நோன்பிருக்க வேண்டும் - இனியும் செல்வராஜைப் போன்றவர்கள்பிறக்கக்கூடாதுஇப்படிப்பட்டவர்களை தான் சுமக்கக்கூடாது என்று அவள்எப்படி பரிதவித்துக் கொண்டிருப்பாள்ஆண்டாளாகப் பிறந்து அன்று நமக்குஞானச்சுடர் ஊட்டின பூமாதேவிஇன்று அந்தச் சுடரை அணைக்கப்பார்க்கும்எல்லாப் பதர்களிடமிருந்தும் நம்மைக் காக்க நோன்பிருக்கத்தான் வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Replies 

கோவிலில் அடியவர்களாகச் சேர்ந்தவர்கள் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் பலர் இருந்தனர். அதிலும் திருமணாமாகாத ஆண்கள் கோவில் காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். “தளிப்பணிச் செய்மாணி” என்னும் சொல்லாட்சி கோவில் காரியம் செய்யும் பிரம்மச்சாரியைக் குறிக்கிறது என்பதை நியமம், ஐராவுதீஸ்வரர் ஆலயக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. 

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கோவிலில் நடனமாடி இருக்கின்றனர். அதிலும் திருமணமாகாத ஆண் நடனமாடிய விவரத்தை ராமநாதபுரத்தை ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்ட செப்பேட்டில் காணலாம் (கி.பி. 1714). ராமேஸ்வரம் ராமலிங்க ஸ்வாமி திருக்கோவிலில் திருப்பணி நடைபெற்றபோது, கோவிலில் சபை கூடியிருந்தனர். அப்பொழுது, நாராயணப்புலவர் மகன் ஆதித்தனாலங்கராயன் என்பவனின் கைப்புத்திரனான முதுகுளத்தூரில் வசிக்கும் குமாரப்புலவன் மகன் அச்சபையில் ‘வெகுசாரி” ஆட்டம் ஆடினான். அதைப் பாராட்டி அவனுக்கு “விசைய ரெகுநாத அனுமக் கொடினாலங்கராயன்” என்னும் சிறப்புப் பெயர் கொடுக்கப்பட்டது. மேலும் அவனுக்குத் திருமணம் செய்யும் போது பெண் வீட்டார், பிள்ளை வீட்டாருக்கு ஒவ்வொரு பணமும், தின்மைகள் நடக்கும் போது ஒரு பணமும், குடும்புக்கு ஒரு பணமும், அது தவிர பள்ளு ஒன்றுக்கு ஒரு குறுணியும் கொடுக்கக் கட்டளையிடப்பட்ட செய்தி அந்தச் செப்பேட்டில் காணப்படுகிறது. ( ஆதாரம் :-தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் காலாண்டிதழ், ஜனவரி 2010).

நாலங்கராயன் என்றால் நாலு + அங்கம் + ராயன். நாங்கு அங்கங்களையும் ஆட்டி அபிநயம் செய்வதைக் குறிப்பதாகும், வெகுசாரி ஆட்டம் என்பது, வேடம் கட்டி ஆடும் ஆட்டம், அதாவது உருமாறி ஆடுதல் என்பர். பெண்ணுருக்கொண்டு ஆடினானோ தெரியாது. ஆனால் நடனம் கற்றுணர்ந்த பிரம்மாச்சாரிகள் கோவிலில் நடனம் ஆடுவது வழக்கம் என்று தெரிகிறது. இவர்களது அக வாழ்க்கையை அறிந்து கொள்ள யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் பெண்கள் நடனமாடினர் என்றால் கற்பனை எங்கோ பறந்து விடுகிறது. 

இந்த நடனக்காரரது திருமணத்தின் போது செய்யவேண்டிய கொடையைப் பற்றி செப்பேடு தெரிவிப்பதால், இவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடை ஏதும் இல்லை என்று தெரிகிறது.

கோவில் பணியில் இருப்பவர்களது அக வாழ்க்கை தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று சொல்லும் வண்ணம் பார்த்திவசேகரபுரச் செப்பேடுகளில் (சுமார் 1000 வருடங்களுக்கு முந்தினது), ஆண்கள் அங்குள்ள கல்விச் சாலையில் கல்வி பயிலும் காலத்தில், மண உறவில் ஈடுபடக்கூடாது என்ற கட்டளை காணப்படுகிறது. இது, கோவில் வளாகத்தில் சம்பந்தப்படும் மக்கள், அக வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நியதியைக் காட்டுகிறது. அவ்வாறிருக்க, கோவிலில் நடனமாடும் பெண்கள், காமக் கிழத்திகளாக இருந்தனர் என்பது ஆதாரமில்லாத கருத்து. 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பதியிலார் என்ற சொல்லில் பதி என்பதைக் கணவன் என்று பொருள் கொண்டு கணவன் இல்லாதவர், என்ற கருத்து எழுந்துள்ளது. தெய்வத்தையே பதியாக வரித்தவர்கள் என்றால், பதியிலார் என்று ஏன் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்? இந்தச் சொல் ராஜராஜன் போன்ற மாமன்னர்களது ஆணைப்படி வெட்டப்பட்ட கோவில் கல்வெட்டுகளில் காணப்படுவதால், அந்தப் பெண்கள் நெறிப்படி வாழந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பதி என்னும் சொல்லுக்குத் தவறாகப் பொருள் காணவே இந்த நிலை. 


கல்வெட்டுச் சொல்லாட்சிகளை நாம் ஆய்ந்தால், பதி என்னும் சொல் நகரம், அல்லது ஊர் என்னும் பொருளில் வந்துள்ளதைக் காணலாம். முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாம் மகனான இரண்டாம் ராஜேந்திர தேவனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி 1051 – 1068) செங்கல்பட்டு மணிமங்கலம் ராஜகோபாலப் பெருமாள் கோவிலில் வைக்கப்பட்ட கல்வெட்டில் ‘நதிகளும் நாடும் பதிகளும்’ என்ற தொடர் வருகிறது. இதில் பதி என்றால் நகரம் அல்லது ஊர் ஆகும். எனவே தனது பதியை (ஊரை) விட்டு விட்டு தெய்வமே கதி என்று வந்தவர்களைப் ‘பதியிலார்’ என்றழைக்கும் வழக்கம் வந்திருக்க வேண்டும். இவர்கள் பலவித கோவில் பணிகளச் செய்துள்ளனர். இவர்களில் சிலர் ஆடல், பாடலும் செய்திருக்கின்றனர் என்பதே உண்மை நிலவரம் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.


தளியிலார் என்ற சொல் அளியிலார் என்றும் காணப்படுகிறது. இவர்களைத் தளிச் சேரிப் பெண்டுகள் என்று தஞ்சைக் கல்வெட்டு கூறுகிறது. தளி என்றால் கோவில் என்று பொருள். தளிப் பரிவாரம் என்ற சொல் பல்லவர் காலத்திலிருந்தே காணப்படுகிறது. கோவில் பணியாளார்கள் அனைவருமே தளிப் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களுள் நாட்டியமாடுபவர்களும் இருந்திருக்கிறார்கள். இரண்டாம் நந்திவர்மன் காலத்து முந்தீஸ்வரர் கோவிலில் இருந்த தளிப் பரிவாரத்தில் மூன்று மறையவர், இரண்டு தட்டளி கொட்டுபவர், 44 தேவரடியார்கள், இந்தத் தேவரடியார்களுக்கு உணவளிக்க தவசிகள், கோவிலை விளக்கும் 12 தவசிகள், அவர்கள் அனைவரையும் கவனித்துக் கோவில் நிர்வாகம் செய்யும் “தளி ஆழ்வார்கள்” என்று பலரும் இருந்தனர். இங்கு சொல்லப்பட்ட தேவரடியார்கள் அனைவருமே நடனப் பெண்கள் அல்லர். அவர்கள் பல் வேறு கோவில் காரியங்களைச் செய்தனர். இவர்கள் நிச்சயமாக விலைமாதர்களாகவும், காமக் கிழத்திகளாகவும் இருந்திருக்க முடியாது. அப்படிச் சொல்பவர்கள் செல்வராஜ்தனமான அறிவு கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

இது தவிர தளிச்சேரி என்ற இடமும் கோவிலில் இருந்திருக்கிறது. இது கோவிலின் உட்பகுதியில் அமைந்த வாழ்விடம் என்பதைக் கல்வெட்டு மூலம் அறியலாம் (S.I.I. Vol XIII, p1). எனவே இந்தப் பெண்டுகள் நெறியற்று வாழ்ந்தார்கள் என்று சொல்வது தவறு.

இனி இலக்கியம் காட்டும் காட்டும் கருத்துக்களைப் பார்ப்போம். 

பரத்தையர் என்ற சொல் வடிவம் சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம். ஒரு விலை போட்டு தங்களை விற்றுக் கொள்பவர்கள் என்று காட்டும் ‘பூவிலைப் பெண்டு” என்ற சொற்றொடர் புறநானூறு 293 இல் வருகிறது. பெண்மையைப் பூவாகவும், அதை விலைக்குக் கொடுப்பவர்கள் இந்த மாந்தர் என்றும் இந்தச் சொல்லாட்சி காட்டுகிறது, இக்கருத்தை நிலை நாட்டி, புறநானூறு 32 இல் ‘விறலியர் பூவிலை பெறுகென” விறலியருக்குப் பூவிலையாக மாட மதுரையையே சோழன் நலங்கிள்ளி கொடுத்து விடுவான் என்று கோவூர் கிழார் பாடியுள்ளார். விறலியர் என்பார் பாணன் என்னும் சொல்லுக்குப் பெண்பால். இவர்கள் அபிநயித்துப் பாடி ஆடுவர். உள்ளக் குறிப்பை புறத்தில் காட்டுபவர் விறலி எனப்படுவர், அந்த விறலியருக்கு, மன்னன் பூவிலை கொடுக்கிறான் என்றால், அதன் பொருளை ஊகித்துக் கொள்ளலாம். விலை கொடுத்துப் பெறப்படவே அந்த மகளிர் விலைமாது என்றழைக்கப்படும் சொல்லாட்சி இன்றும் இருக்கிறது. புறநானூறு தொட்டு அந்தச் சொல்லாடல் இருக்கவே, தமிழ்ச் சொல்லாட்சியில், விலை என்னும் குறிப்பைக் கொண்டே அந்த வகை மகளிர் அழைக்கப்ப்ட்டிருக்கின்றனர் என்பது புலனாகிறது.


அவ்வாறு இருக்க பதியிலாரையும், தளியிலாரையும், விலைமாதர்களாகவும், காமக் கிழத்திகளாகவும் காட்டி வந்தது, அறியாமையும், வக்கிரமும் கலந்த கலப்பே. அரசாட்சி அழிந்த பிறகு, பலதரப்பட்ட மக்களைப் போல இவர்களும் கொடுமைகளுக்கு ஆளாயினர். இங்கு நாம் சொல்ல வருவது, கோவில் கலாசாரத்தில் இப்படி ஒரு நிலை இல்லை என்பதே. 




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பார்த்தால், அதில் மிகத் தெளிவாக பலதரப்பட்ட பெண்டிரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மாதவி விலைமாது அல்ல, அவள் நாட்டியக் கணிகை ஆவாள். அவள் இந்திர லோகத்து ஊர்வசியின் வழி வந்தவள் என்று இளங்கோவடிகளும், அடியார்க்கு நல்லாரும் கூறுவர். அவர்களது ஆட்டத்தை மெச்சி தலைக் கோலி என்ற பட்டம் தரப்பட்டது. அந்தப் பட்டத்துக்கு 1008 கழஞ்சு பொன் தரப்பட்டது. இது புகாரில் (சோழ நாட்டில்) மட்டுமல்ல, பாண்டிய நாட்டிலும் இருந்து வந்த வழக்கம் தான் என்பதை ஊர்க்காண் காதையில் காணலாம். நாட்டியக் கணிகையருக்கான விதி முறைகள் சிலப்பதிகாரக் காலத்துக்கும் முன்பே இருந்திருக்கிறது என்பதை ”விதிமுறைக் கொள்கை”ப்படி 1008 கழஞ்சு பெறுமான மாலையை அரசன் கொடுத்தனன் என்று சிலப்பதிகாரம் சொல்வதன் மூலம் தெரிகிறது. அந்த மாலையை வாங்கும் சக்தியுள்ளவன் அவளுக்குக் கணவனாவான். அவளை விலைமாதுவாக இங்கு காட்டவில்லை. ஆயினும் அந்த வாழ்க்கை துன்பமயமானது (கணவன் ஏமாற்றி விட்டால்). அதனால் தன் மகளான மணிமேகலையை நாட்டியக் கணிகையாக ஆக்கக்கூடாது என்று மாதவி தன் தாயிடம் கூறுகிறாள். இதன் மூலம் நாட்டியக் கணிகை வாழ்க்கை, தவிர்க்க முடியாததோ அல்லது நிர்பந்தப்படுத்தப்படுவதோ அல்லது வழிவழியாக வருவதோ அல்ல என்று தெரிகிறது. சொந்த விருப்பத்தின் பேரில்தான் அவர்கள் நாட்டியக் கணிகையராக இருந்திருக்கின்றனர். 

இந்தத் தலைக்கோலிகளைப் பற்றி கல்வெட்டுகள் பேசுகின்றன. ஜெயங்கொண்ட சோழத் தலைக் கோலி என்றும், ஓலோக மாதேவி தலைக்கோலி என்றும் பெயர்கள் காணப்படுவதால், அரசன், அரசி பெயரில் தலைக்கோலி பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. விலைமாதர்களாக இவர்கள் இருந்தால் இப்படி அரசி பெயரிலும் பட்டம் கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது. 

மேலும் இந்தத் தலைக்கோலிகள் கோவில் கல்வெட்டுகளில் பதியிலார், மற்றும் நக்கன் என்னும் பெயருடன் சொல்லப்பட்டுள்ளனர். நக்கன் என்பார் சிவன் கோவில்களில் நாட்டயமாடும் மகளிர் ஆவார். (A.R.E. 341 /1921). இந்த நாட்டியங்களை ஏற்பாடு செய்வதற்கான செலவுக்காக “நக்கக் கடமை” என்னும் தொகையும் கொடுக்கப்பட்டது. (S.I.T.I Vol III, pt., 2.p. 1451 S.I.I. Vol II No 66). மாதவியும் விரும்பியிருந்தால் கோவிலில் பதியிலாராகவும், நக்கனாகவும் ஆகியிருக்கலாம். அவள் காலத்திலும் பிறவா யாக்கைப் பெரியோன் கோவில் இருந்தது. ஆனால் நாட்டிய அரங்குகள் கொண்ட பெருங்கோவில்களாக அப்பொழுது கோவில்கள் இருந்தனவா என்பது ஆய்வுக்குரியது. 

கோவில்கள் கற்றளியாக கட்டப்பட்ட காலம் பல்லவர் தொடங்கித்தான் ஆரம்பித்தது. 3000 ஆண்டுகளுக்கு முன் (குஜராத், கச்சுப் பகுதியிலிருந்து / சிந்து சமவெளி நாகரிகம் தொய்வடைந்த காலம்) காஞ்சியில் குடியேறிய கல் தச்சர்களது திறமையைப் பல்லவர்கள்தாம் முதலில் பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்பே இமயத்தில் புலிச் சின்னம் பொறிக்க, கச்சியிலிருந்து கல்லைத் தகர்க்கும் உளி என்னும் செண்டைக் கரிகாலன் எடுத்துச் சென்றான். (காண்க http://jayasreesaranathan.blogspot.in/2012/03/vedic-kurma-excavated-near.html ) 

தேவதாசிகள் என்ற குறியீட்டில் எந்தப் பிரிவினரும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படவில்லை. பட்டினப்பாக்கத்திலும், மதுரையின் புறப்பகுதியிலும், இருந்த தெருக்கள், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றி சிலப்பதிகாரம் விவரிக்கிறது. அதில் பலவிதமான வர்ணனைகள் வருகின்றன. ஆடல், பாடல், கூத்து, கணிகை, காமக் கிழத்தி என்று பலவிதங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒருவித மக்களையே குறிக்கவில்லை. 

உதாரணமாக ‘காவற் கணிகையும், ஆடற் கூத்தியரும் பூவின் மடந்தையரும்’ இருந்த இருக்கைகள் (இருப்பிடங்கள்) சொல்லப்படுகிறது. தற்காலத்தில் இவற்றை ஜாதிகள் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அவரவர் செய்த செயல்களின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் எழுந்தன. அதன்படி பூவின் மடந்தையர் மட்டுமே விலைமாதர்களாக இருக்க வேண்டும்.

கணிகையர் என்ற சொல் உண்மையில் ஆய கலைகள் 64 உம் அறிந்தவர்களைக் குறிக்க எழுந்த்து. ராமாயண காலத்திலேயே இந்தக் கலைகள் அறிந்த கணிகையர் இருந்தனர். அவர்கள் அரசுப் பணியாளர்களாக இருந்தனர். பெண் வாசனையே அறியாதவரும், காட்டை விட்டு அகலாதவருமாக இருந்த ருஷ்ய ஸ்ருங்கர் என்னும் ரிஷியை, இந்தக் கணிகையர் மயக்கி நாட்டுக்குக் கொண்டு வந்தனர். இதை ஒரு அரசுப் பணியாகத்தான் பார்த்தார்கள். இந்த ருஷ்யஸ்ருங்கர் தசரதனுக்காக செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் காரணமாக ராமன் பிறந்தான். 


64 கலைகளும் அறிந்த கணிகையர் இருந்த வீதிகள் இரண்டு, மதுரையில் இருந்தன என்று சிலப்பதிகாரம் மூலம் அறிகிறோம். அந்தக் கலைகளில் ஒன்று நாட்டியமும். அதனால், மாதவியை நாட்டியக் கணிகை என்றழைத்தனர். ஆண்களும் இந்தக் கலைகளைக் கற்றனர், போஜ ராஜன் என்னும் மன்ன்ன் 64 கலைகளும் அறிந்திருந்தான். 


இவற்றையெல்லம் வைத்துப் பார்க்கும் போது, கோவில் அடியார்களாகப் பணி புரிந்த மகளிர் இன்றைய மக்கள் நினைப்பதுபோல இல்லை. கோவில் கலாசாரமும், அரசின் பாதுகாப்பும் அழிந்தபட்ட பிறகு, அவர்களது நிலையும் வீழ்ந்திருக்கிறது என்பதே உண்மை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard