பெரியார் படத்தில் ஒரு பாட்டு. அந்தப் பாட்டில் இப்படி ஒரு வரி...
அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூன்று. அப்படியே இருக்கிறது. அழியவில்லை பாருங்கள்.
ஓஹோ! முதுகை தொட்டதும் மூன்று கோடுகள் விழுந்திருச்சோ? சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்லை. ஸ்ரீராமர் சீதையை தொடவே இல்லையா?
மனதில் இந்து தெய்வங்களின்மீது அடக்கமுடியாத வக்கிரமும், வன்மமும் இருந்தால்தான் இப்படி எழுத முடியும்.
இந்த பாடல் மற்றும் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா?
இந்து மதத்தின் மேல் இருந்த வக்கிரம், வன்மத்தை ஆண்டாள் மீது கொட்டி ஆண்டாளை தாசி என்று கேவலப்படுத்திய ஆபாச எழுத்தாளர் வைரமுத்துதான் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.
இப்போது சொல்லுங்கள்.... ஆண்டாள் பற்றி அறியாமல் பேசினாரா வைரமுத்து?
வருத்தத்திற்கும் மன்னிப்புக்கும் வித்தியாசம் என்ன ?
நான் எழுதியதில் தவறு இல்லை. உண்மையைத்தான் எழுதினேன். உண்மை கசந்து உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். --- இப்போது வைரமுத்து கேட்டிருப்பது இதுதான்.
நான் ஆதாரம் இல்லாமல் எழுதிவிட்டேன். அதில் உண்மை இல்லை. உங்கள் உணர்வுகளை காயடித்து இருக்கிறேன். அதனால் உங்கள் மனம் புண்பட்டிருக்கிறது. ஆகவே நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இரண்டாவதைத்தான் இந்துக்கள் எதிர்பார்க்கின்றனர்.