ஆண்டாள் செய்த "குத்துவிளக்கெரிய" என்ற அந்தக் குறிப்பிட்ட பாடலில், வாய்வைத்துத துயில்வது என்று பொருள்கொள்ளும்படியான எந்த வரியும் இல்லை. (உடல் / மார்பின்) மேல் வைத்துத் துயின்றான் என்றே இருக்கிறது.
குத்துவிளக்கெரிந்து கொண்டிருக்கிறது, யானை தந்தத்திலான கால்களைக் கொண்ட கட்டில் இருக்கிறது. அதன் மேல் ஐந்து வகையான மென்மையான பொருட்களாலான மெத்தென்ற படுக்கை இருக்கிறது. இந்த ஐந்து மென்மையையும் தாண்டி, நப்பின்னையின் கொங்கைகளும் எனும் ஆறாம் மென்மையைத் தன் மேல் வைத்துக் கிடக்கிறான் கண்ணன். ஆண்டாள் அவனோடு பேசக் காத்திருக்கிறாள். கண்ணா நீ என்னோடு பேச மாட்டாயா என்று ஏங்குகிறாள். உடனே இவன் ஏன் நம்மிடம் பேசாமல் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கையில் இயல்பாகவே நப்பின்னையின் மேல் ஓர் ஆதங்கம் எழுகிறது. உடனேயே அவள் நப்பின்னையிடம், அகன்ற விழிகளில் மைதீட்டி, அடர் கூந்தலில் மலர்ந்திருக்கும் பூக்களைச் சூடிக் கொண்டிருக்கும் நப்பின்னையே, நீ கண்ணனை ஒருபோதும் எழுந்திருக்க விட மாட்டேன் என்கிறாயே. ஒரு நொடியும் அவனைப் பிரிந்திருக்கிறாயில்லையே, நாங்கள் எவ்வாறு அவனோடு உரையாடுவது? இது நன்றன்று, இஃது உனக்குத் தகாது என்று சொல்கிறாள் கோதை.
இதுவே பாடலின் பொருளாகும். வேறு ஊகங்கள் அனைத்தும் மன வக்கிரங்களே
இந்தப்பாடலின்பின்னணியைப்புரிந்து கொள்ள இதற்கு முந்தைய பாடலைக் காண வேண்டும்.
அந்தப் பாடல் இதோ: உந்து மதகளிற்றின் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்; பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
இதன் பொருள்: யானைகளை உடையவனும், புறமுதுகிடாத வீரனுமான நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னையே! மணம் வீசும் கூந்தலை உடையவளே! கோழிகள் அழைப்பதைப் பார். மாதவிப் பந்தல் மீது குயில்கள் வந்து கூவுகின்றன. பந்தாடி மகிழ்பவளே, உன் கணவனின் புகழ்பாட, உன் அழகிய கையில் வளையல்களின் ஒலியெழும்ப வந்து கதவைத் திறப்பாயாக.
என்பதாகும்.
இப்போது, இதற்கடுத்த பாடலான "குத்துவிளக்கெரிய" என்ற அந்தக் குறிப்பிட்ட பாடலைப் பொருத்திப் பாருங்கள் பாடலின் பின்னணியும், சூழ்நிலையும், பொருளும் தெள்ளென விளங்கும்.
என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா? ......
இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து. கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும்.
தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.....
- கவிப்பேரரசு
*******
இக்கவியால் எப்படி இவ்வாறு பொருள்கொள்ள முடிகிறது.
கொங்கையைத் தன்மேல் வைத்துக்கிடந்தான் என்று பொருள் கொள்ள வேண்டியதை எவ்வாறு வாய்வைத்துக் கிடந்தான் என்று பொருள்கொள்ள முடிகிறது?
வாய்திறவாய் என்பது பேசுவாயாக என்றே கொள்ளப்பட வேண்டும்!
****** சரி முழு பாடலைக் காண்போம் :
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
பொருள்: குத்துவிளக்கெரிய, யானைத்தந்தங்களினாற் செய்த கால்களுடைய கட்டிலின் மேலுள்ள மெத்தென்ற ஐந்து மென்மையான குணங்களைக் கொண்ட படுக்கையின் மேலேறி, கொத்து கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களுடன் கூடிய கூந்தலையுடைய நப்பினையின் கொங்கைகளை மேல் வைத்துக் கொண்டு கிடந்த மலர்மார்பா, நீ வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்வாயாக. மையிட்ட அகன்ற கண்களைக் கொண்ட நப்பினையே, நீ உன் மணாளனான கண்ணனை ஒருபோதும் உறக்கத்தில் இருந்து எழவிட மாட்டேன் என்கிறாய், ஒரு நொடியும் பிரிவு தாங்காதவளாக இருக்கிறாய். இது நன்றன்று. இது தகாது.
******
இந்தப் பாடலை மேற்கோள் காட்டி,
"கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?" என்று கேட்பதும்
"சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?" என்று கேட்பதும் எவ்வளவு பெரிய கயமை?
கட்டுரையின் ஒவ்வொரு வரியும் ஒரே நோக்கத்தை நோக்கியே முன்னேறுகிறது.
இக்கவிக்கொத்தூத இன்னும் நான்கு கவிகளாம். கவிகளின் அட்டகாசத்தை வனம் தாங்கும்; திருப்பாவை தாங்குமா?
SenthilKumar Manoharanஆண்டாள் , பாடல்கள் அதீத சுதந்திரத்தோடு இருப்பதாக , அச்சுதந்திரம் எதனால் கிடைத்தது என்று கேட்கிறார் வைரமுத்து , இதற்க்கு விவேகானந்தர் ஏற்கனவே பதில் அளித்து விட்டார் , அதாவது - மேலைநாடுகளில் பௌதீக சுதந்திரம் மேலோங்கி உள்ளது , இந்தியாவில் ஆன்மீக சுதந்திரம் மேலோங்கி உல்லது என்பதே அந்த பதில் . கடவுளை காமுற்றதாலேயே அவள் காமமும் , காதலும் கூட இங்கே கொண்டாடப்படுகிறது... புத்தரை போல் மனித ஆசைகளை இழித்து எண்ணவைத்து அவறை தாழ்த்தி, முக்தியை மட்டுமே சாதிப்பதே வாழ்வின் பயன், என்பது போன்ற அழிவு வழிமுறை இந்துமதத்தில் இல்லை, பக்தனின் ஆசைகளை புனிதமானவைகளாக ஏற்றிவைத்து அவனை முக்திக்கு இட்டுச்செல்லும் , படைப்பின் அனைத்து ஆசைகளையும் உல்லது உல்லபடியே ஏற்றுக்கொண்டு முன்னேறும் மதமாகவே இந்து மதம் உல்லது... எல்லாவற்றையும் காக்கும் விஷ்ணு மனித ஆசைகளான காம உணர்வுகளையும் காக்கிறார் அவர் காவாமல் விட்டால் அதுவும்கூட சுய பலத்தை இழந்து அழிந்துவிடலாம் , இறைவன் - இறைவியின் செயல்கள் காராண காரியம் இல்லாமலா நடை பெற்றிருக்கமுடியும்...? ஆண்டால் உணர்வுமீரலும் கூட உயிர்ளின் இயற்கையாக எழும் இச்சை மீதான கருணையானால் மீரப்பட்டதாகவே கருதுகிறேன்...