லீனா மணிமேகலை என்னடா இப்படி எழுதியிருக்குன்னு கேட்டபோது...
ஏன் பெண் எழுதக்கூடாதா?ன்னு பொங்குனாங்கே...
இப்போ ஆண்டாள் பாசுரத்துல... கிருஷ்ணன் பற்றி பாடினதுல... ஆண்டாள் இப்படி பாடலாமான்னு கேக்குறாய்ங்கே...
அடேய்களா... லீனா மணிமேகலை எழுதினதாச்சும்... எல்லாம் ஒரே சாயலில்... ஆண்குறி, பெண்குறி, யோனி, மயிர், மலம், மூத்திரம், விந்து, புணர்தல் ரத்தம், புணர்ந்த வியர்வை... இதில் ஏதாச்சும் ஒன்னும்... அது தொடர்பான வரிகளும்... இடம்பெறும்.... அதை நவீனத்துவம்... முற்போக்கு சிந்தனை... பெண்ணியம்... பெண்கள் மீதான கட்டுடைப்புன்னு... புது பெயர்கள் வச்சு... சொறிஞ்சுக்கிட்டவனுகதான்... இப்போ... ஆண்டாள் பாடினது அசிங்கமில்லையான்னு கேக்குறாய்ங்கே....
தமிழர் வாழ்வியல்ங்கிறதே.... அறம், பொருள், இன்பம், வீடுபேறு ன்னு... நாலு பகுதிதான்...
இந்த நாலுமே... அதே வரிசை அமைவுலயே... ஆண்டாள் பாசுரத்துல இருக்குமேடா...
குற்றச்சாட்டே இல்லாத அளவுக்கு அறவழி வாழ்ந்த பெண் ஆண்டாள்.. கிருஷ்ண துதியே பொருட்செல்வம்னு வாழ்ந்த பெண் ஆண்டாள்.. கிருஷ்ணன் பற்றிய நினைவே இன்பம்னு வாழ்ந்த பெண் ஆண்டாள்.. கிருஷ்ணனுடனேயே கலந்து வீடுபேறு பெற்ற பெண் ஆண்டாள்..
ஆச்சா...
உங்க அறிவுக்கு எட்டும்படி சிம்பிளா சொல்றேன்டா...
உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவே ஆயிரம் காதல் காவியம் இருக்கலாம்... அவங்களோட பர்சனல்... அப்படியேதும் இல்லைன்னாதான்... பிரச்சனை....
சமுதாய புரட்சி போராளீஸ் பார்வைக்கு... லீனாவின் ஒரு கவிதை... நிறைய உண்டு என்றாலும்.. இது உங்க பார்வைக்கு...
்......்
இரண்டு கவிதைகள்
1.
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்
எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
2.
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இப்படி எழுதுவது... நவீனத்துவம்... முற்போக்கு சிந்தனை... பெண்ணியம்... பெண்கள் மீதான கட்டுடைப்பு என்றால்... ஆண்டாள்... தன்னோட காதலனான கிருஷ்ணன் பற்றி பாடினதுல எப்படி ... உங்களுக்கு தப்பு வருது??
இந்தவழியில் பார்த்தாலும்... ஆண்டாள் காலத்தில் இருந்த பெண்களுக்கான உரிமை... பிற்பாடுதான்... இல்லாம போச்சுன்னு அர்த்தம் வருது...
எந்த ரூட்டுல பார்த்தாலும்... போராளீஸ்களான.. நீங்கதான்டா அவுட்டு ..