கவிஞர் – சிறுகதை எழுத்தாளர் – திரு வைரமுத்து அவர்கள்.
அதன் விளம்பரம் கீழே –
இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா …?
கடையைத் திறந்து வைக்க சம்பளம் வாங்குவாரா இல்லையா –
எவ்வளவு வாங்குவார் போன்ற விவரங்கள் நமக்குத் தெரியாது.
ஆனால் விளம்பரத்திலிருந்து ஒன்று தெரிகிறது.
திரு.வைரமுத்து இன்று திறந்து வைக்கும் கடையில்
செல்போன் வாங்குபவர்கள் அனைவருக்கும் ஒரு புத்தகம்
இலவசம்…. என்ன புத்தகம் என்கிறீர்களா …?
அண்மையில் 40 சிறுகதைகளை தொடர்ச்சியாக எழுதி,
திரு.ஜெயகாந்தன் அவர்களிடம் “சர்டிபிகேட்” வாங்கி,
கலைஞரின் திருக்கரங்களால் வெளியிடப்பட்ட
300 ரூபாய் விலையிடப்பட்டுள்ள
“வைரமுத்து சிறுகதைகள்” புத்தகம் தான்.
இலவசமாக புத்தகம் பெறுவதற்காக
செல்போன் வாங்குவார்களா
அல்லது செல்போன் வாங்குவதால்
புத்தகம் இலவசமாக கிடைக்கிறதா
என்றெல்லாம் அனாவசியமாக நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நாம் கவனிக்க வேண்டியதும், பாராட்ட வேண்டியதும்
திரு.வைரமுத்து அவர்களின் வணிகத்திறமையைத்தான்.
எவ்வளவு செல்போன் இன்று விற்கிறதோ, அவ்வளவு புத்தகங்களும் விற்பனையாகின்றன.
புத்தகத்தின் விலையை, வாசகர்கள் கொடுப்பதற்கு பதிலாக, கடை உரிமையாளர் கொடுக்கப்போகிறார்.
குறைந்தது ஒரு ஆயிரம் புத்தகமாவது போகாதா என்ன …?
கவிஞர்களுடன் கூடப்பிறந்தது ஏழ்மை என்பது அந்தக்காலம்.
எழுத்தில் திறமை இருக்கிறதோ இல்லையோ,
” மார்கெட்டிங் ” திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம்
என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்
திரு.வைரமுத்து அவர்கள்.
முன்னோடியான திரு.வைரமுத்து அவர்களின் இந்த ” திறமையை ” எல்லா எழுத்தாளர்களும் பெற வாழ்த்துவோம்…!!!