1923ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட India and its Missions என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு Spiritual Advantages of Famine and Cholera (“பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்”). இக்கட்டுரையில், ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்ச் பிஷப் எழுதுகிறார் –
கிறித்துவ மறைப் பணியாளர்கள் பஞ்ச காலத்தை எளிதான மதமாற்றக் காலமாகக் கருதியுள்ளனர். அவ்விதம் அதைப் பயன்படுத்தவும் செய்துள்ளனர். டிரிங்கால் என்னும் பாதிரியார் எழுதியுள்ள கடித வாசகம் '...ஆயிரக்கணக்கில் பிராங்க்ஸ் என்னிடமிருந்தால் பாதி நாடு திருமுழுக்குக் கேட்டு என்னிடம் வந்துவிடும்' என்று கூறுகிறது.