New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சர்க்காரியா விசாரணை அறிக்கை.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சர்க்காரியா விசாரணை அறிக்கை.
Permalink  
 


சர்க்காரியா பாகம் 1

இன்றைய தலைமுறை இல்லாமல், சென்ற தலைமுறைக்குக் கூட தெரியாத விபரம், நீதிபதி சர்க்காரியா திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்தும், அதன் தலைவர் கருணாநிதியின் ஊழல்கள் குறித்தும், வெளியிட்ட விசாரணை அறிக்கை.

இந்த அறிக்கை, திமுகவினர் எப்படியெல்லாம் புது புது யுக்திகளை கடைபிடித்து, ஊழலில் ஈடுபட்டனர் என்பதை விளக்குகிறது. அன்று முதல் இன்றைய இமாலய ஊழலை அரங்கேற்றிய கருணாநிதி, கொஞ்சமும் மாறவில்லை மாறப்போவதுமில்லை என்பதையே சர்க்காரியா கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சர்க்காரியா என்ற பெயரைக் கேட்டாலே, இன்னும் கூட, திமுகவினருக்கு கிலி எடுக்கும். அப்படி சர்க்காரியா என்றவுடன் பயமுறுத்தும், அளவுக்கு என்ன அது என்ற கேள்வி எழுகிறதா ?

ரஞ்சித் சிங் சர்க்காரியா… இவர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிக மிக திறமையான ஒரு நீதிபதி. திறமையானவர் மட்டுமல்ல. நியாயமானவரும் கூட…

இவர்தான் திமுகவினருக்கு இன்று வரை பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். இன்று வரை ஏன் பயத்தை ஏற்படுத்துகிறார் என்றால் காரணம் இருக்கிறது.

15 ஜுன் 1975 இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக இன்று வரை வர்ணிக்கப் படுகிறது. அன்றுதான் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் படுகிறது. இதையடுத்து, இந்திரா காந்தி, 1976ல், திமுக அரசை டிஸ்மிஸ் செய்கிறார். அரசு டிஸ்மிஸ் செய்யப் பட்டவுடன், 1976ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் திமுக அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைக்கிறார் இந்திராகாந்தி.

அந்தக் கமிஷன் ஒரு நீண்ட விசாரணையை நடத்தி, தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். இந்த விசாரணை அறிக்கை மற்ற ஊழல் விசாரணைகளைப் போலவே கிடப்பில் போடப்பட்டது என்றாலும், இந்த விசாரணை அறிக்கையானது, அன்றைய திமுக ஆட்சி, இன்றைய ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முன்னோடியாக எப்படியெல்லாம் செயல்பட்டுள்ளது என்பதும், அன்றைய நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் விளக்கும் ஒரு முக்கிய ஆவணம்.

திமுகவினர் இந்த சர்க்காரியா அறிக்கையைக் கண்டு இன்று வரை ஏன் பயப்படுகிறார்கள் என்றால், திமுக ஆட்சி நடத்திய லட்சணம் தெரிந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான். இன்று வரை அதற்குப் பயந்து, இந்த அறிக்கையின் நகல்கள் ஒன்று கூட விடாமல், அழிக்கப் பட்டு விட்டது என்று கூறப்படுகிறது. நெருக்கடி நிலையின் அத்துமீறல்களை விசாரிப்பதற்கென்று அமைக்கப் பட்ட ஷா கமிஷனின் அறிக்கையை இந்திரா காந்தி, இது போலத்தான் ஒரு நகல் விடாமல் அழித்து விட்டதாக தெரிகிறது. ஆனால், முன்னாள் ஜனதா கட்சித் தலைவர் செழியனின் முயற்சியால், அந்தப் புத்தகம் இப்போது புதிய வடிவில் கிடைக்கிறது.

ஆனால், சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு அந்த பாக்கியமெல்லாம் இல்லை. ஏறக்குறைய அனைத்து நகல்களுமே அழிக்கப் பட்டு விட்டதாகத்தான் தெரிகிறது.

நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா
திமுகவின் ஆட்சி அன்று எப்படி நடந்தது என்பதை அதிகாரிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் சர்க்காரியா இவ்வாறு கூறுகிறார்.

“இந்த விசாரணையின் போது இக்கமிஷனின் கவனத்திற்கு அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள் சில வந்துள்ளன. மற்றபடி அப்பழுக்கற்ற பணிப்பதிவேட்டினைக் கொண்டிருக்கும் சில முதுநிலை ஐஏஎஸ் அதிகாரிகள் கூடத் தாங்கள் தவறாக நடக்கிறோம் என்பதை முழுவதும் தெரிந்தே தங்களது கடமையிலிருந்து தவறியுள்ளனர். அமைச்சர் வாய்மொழியாக பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றியதைத் தவிர வேறு வழி ஏதும் தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் சார்பில் பேச்சு வார்த்தைகளை நடத்தி லஞ்சம் வாங்கித் தரும் அளவிற்கு தங்களை பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் அனுமதித்துள்ளனர். “

அப்போது இருந்த அதிகாரிகள் வழி தவறி, அமைச்சர்கள் பேச்சைக் கேட்டு செயல்பட்டதற்கு சர்க்காரியா தனது கண்டனத்தை இவ்வாறு பதிவு செய்தார்.

“தவறாக நடந்து கொண்டாக குற்றம் சாட்டப்படுவதற்கு அமைச்சரை சம்பந்தப்படுத்திக் கூறுவதற்கு நேரடி சாட்சியம் ஏதுமில்லாவிடின், அரசு அதிகாரி, அரசனை விட, அரசன் போல் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அமைச்சரின் நல்லெண்ணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக முறைதவறிச் செயல்பட்டார் என்று அனுமானிக்க வேண்டும். அசட்டையாகவும், மெத்தனமாகவும், அஞ்சி அஞ்சிச் சாகும் கோழையாகவும், உள்ள இத்தகைய அரசு அதிகாரியால் அதிகாரவர்க்கம் முழுவதும் நேர்மை கெட்டு விடுகிறது. அதனால் அத்தகையவரிடம் பரிவு எதுவும் காட்ட வேண்டியதில்லை“

திமுகவின் ஆட்சி இப்படித்தான் இருந்தது என்று சர்க்காரியா பதிவு செய்திருக்கிறார். சர்க்காரியா நடத்திய விசாரணை பற்றி மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வழக்கமாக விசாரணை கமிஷன்களுக்கென்று ஒரு அளவு கோல் உண்டு. அது, அந்த கமிஷனை அமைத்த ஆட்சியாளர்கள் என்ன விரும்பிகிறார்களோ, அவ்வாறே அறிக்கை கொடுப்பதற்கு வசதியாக, நீதிமன்றங்களில் கடைபிடிக்கப் படும் “சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப் பட்டது“ என்ற அளவு கோலை பின்பற்றாமல், தங்கள் இஷ்டத்திற்கு, நடத்துவது. தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சில விசாரணைக் கமிஷன்களும் அவ்வாறே நடைபெற்றன. ஒரு உரையாடல் வெளியானது எப்படி என்று அமைக்கப் பட்ட ஒரு விசாரணை கமிஷன், அந்த உரையாடலை பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வெளியிட்டவரை கடைசி வரை விசாரிக்காமலேயே தனது அறிக்கையை அளித்தது குறிப்பிடத் தகுந்தது. அந்த அளவுக்கு ‘விரிவான’ விசாரணையை அந்த ஆணையம் நடத்தியது.

ஆனால், சர்க்காரியா, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில் கடைபிடிக்கப் படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் கடைபிடித்தார். பூர்வாங்கமான ஆதாரங்கள் பல குற்றச் சாட்டுகளில் இருந்தும், சந்தேகத்திற்கு இடமில்லா வகையில் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று பல குற்றச் சாட்டுகளை நிராகரித்தார்.

இவ்வளவு சிறப்பாக விசாரணை நடத்தி, சாட்சிகளை விசாரணை செய்து, ஆவணங்களை பரிசீலித்தும் அளிக்கப் பட்ட ஒரு விசாரணை ஆணையத்தின் அறிக்கை அரசியல் காரணங்களுக்காக குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதையடுத்து, இந்திராகாந்தி, இந்த விசாரணை கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திரா காந்தி.

அப்போது உள்ளதற்கும் இப்போது உள்ளதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா ? அப்போது இந்திரா காந்தியின் காலில் திமுக விழுந்ததும், கொடுத்த வாக்கை காப்பாற்றினார் இந்திரா. திமுகவோடு கூட்டணி அமைத்தவுடன், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்தார். ஆனால், இன்றும், திமுக காலில் விழுந்தது. ஆனால், காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் விசாரணையில், திமுகவுக்கு அந்த அளவுக்கு உதவியைச் செய்யவில்லை செய்யவில்லை. ‘மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும்’ என்பது போல, உதவி செய்கிறோம்.. ஆனால் செய்ய மாட்டோம் என்று தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் ‘இந்திரா’ இவர் ‘தந்திரா’ இல்லையா ?

உச்ச நீதிமன்றம் என்ற ஒன்று இல்லாவிட்டால், ஸ்பெக்ட்ரம் விசாரணையும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை புதைக்கப் பட்ட, அதே கல்லறையில் புதைக்கப் பட்டிருக்கும்.

புதைக்கப் பட்ட அந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை….

உங்களுக்கு ஒரு பரம்பரைச் கட்டிடம் ஒன்று ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் ஒருவர் பல ஆண்டுகளாக குடியிருக்கிறார். அந்தக் கட்டிடத்தில் தொழில் செய்வதால், அவருக்கு மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் வருமானம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனால் உங்களுக்கு அவர் வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகையாகத் தருகிறார் என்றால் ஒப்புக் கொள்வீர்களா ? அதே போலத்தான், சென்னை மவுன்ட் ரோடில் இருந்த க்ளோப் தியேட்டரின் கதையும்.

சென்னை அண்ணா சாலை எல்ஐஜி அருகே, ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறதல்லவா ? அதுதான் அந்தக் கட்டிடம். முதலில் க்ளோப் தியேட்டராக இருந்து, நியூ க்ளோபாக மாறி, பிறகு அலங்கார் தியேட்டராக மாறி, இப்போது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாக மாறி இருக்கிறது.

அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பரின் பரம்பரைச் சொத்தாகும். இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால், தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வருமானம் 8000 ரூபாய். ஆண்டுக்கு நாலு லட்சத்து பதினாலாயிரம். வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்.

வாரம் 5000 லாபம் பார்க்கும் வரதராஜப் பிள்ளை விடுவாரா ? எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு, பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

வரதராஜப் பிள்ளைக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. அய்யய்யோ… ‘வடை போச்சே’ என்று மிரள்கிறார். சரி உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிப்பது. நாம் சட்டத்தையே மாற்றுவோம். நடப்பது திமுக ஆட்சிதானே என்று திமுக அரசின் அதிகார மையங்களை அணுக தீர்மானிக்கிறார். திமுகவின் அதிகார மையங்கள் என்றதும், கோபாலபுரம், சிஐடி காலனி என்று எண்ணாதீர்கள். அப்போதெல்லாம் அமைச்சர்களும் அதிகார மையங்களாக இருந்தார்கள். அப்போதும் அதிகாரமாக இருந்தது, மாறன் சகோதரர்களின் தந்தை முரசொலி மாறன்.

சர்க்காரியா கமிஷனில் அளிக்கப் பட்டுள்ள சாட்சியங்களின் படி, வரதராஜ பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகத்தை சந்தித்த போது, இது தொடர்பான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார். முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப் படுகிறது.

இதற்குப் பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜ பிள்ளையிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டால், வெறும் 40 ஆயிரம் தான் கொடுத்திருக்கிறீர்கள், சட்டம் திருத்தப் படுவதற்கு மேலும் 60 ஆயிரம் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

ஆனால் வரதராஜ பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம் தான் மேற்கொண்டு தர முடியும் என்று சொன்னதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி பின்னர் ஒரு நாளில் 30 ஆயிரத்தை ஒரு பழுப்பு நிறக் கவரில் வைத்து பெற்றுக் கொண்டதாகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்தப் பணம் பெற்ற பிறகு, மந்தகதியில் செயல்படும் அரசு இயந்திரம் மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறது. உடனடியாக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. எம்எல்ஏக்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொடுக்கப் பட வேண்டிய வரைவுச் சட்டம், முதல் நாள்தான் கொடுக்கப் படுகிறது.

அவசர அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு, தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால், தாமதமாகும் என்று, ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று, குடியரசுத் தலைவரின் ஒப்பந்ததை பெற்று வருகிறார். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து, ‘ஆட்டையைப் போட்டவருக்கு’ வந்து சேர்ந்தது.

இது அவசியமற்ற சட்டத் திருத்தம் என்று குறிப்பு எழுதிய அரசு அதிகாரி மிரட்டப் படுகிறார்.

இந்த விசாரணையின் முடிவில் நீதிபதி சர்க்காரியா “இந்தச் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து விவாதித்து நிறைவேற்றுவதில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும், உணவு வருவாய்த்துறை அமைச்சர் ப.உ.சண்முகமும், சட்டத் துறை அமைச்சர் மாதவனும், வரதராஜ பிள்ளைக்கு மறைமுகமாக உதவ வேண்டும் என்ற தீய நோக்கத்துக்காக உந்தப் பட்டிருக்கின்றனர்.” என்று கூறுகிறார் நீதிபதி சர்க்காரியா



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சர்க்காரியா 2

இந்தியா சந்தித்த ஊழல்களில் பெரிய ஊழல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். போபர்ஸுக்கு அடுத்தபடியாக உர இறக்குமதி, சர்க்கரை இறக்குமதி, என்று சவப்பெட்டி வரை இந்த பட்டியல் நீண்டது.

ஆனால் பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல்நடந்ததைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? பூச்சிமருந்திலும் ஊழல் நடந்தது. அதைக் கண்டுஇந்தியாவே வியந்தது. அதுதான் கருணாநிதி. இதனால்தான் விஞ்ஞான முறைப்படி ஊழல்செய்பவர் என்ற பெரும்பெயரைப் பெற்றார்.

கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைதாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைபார்த்திருப்பீர்கள். அது போல, ஒரு பூச்சி மருந்துதொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார்.

1970ம் ஆண்டு விவசாயத்தில் இந்தியா தன்னிறைவுஅடைய வேண்டும் என்ற நோக்கோடு, மத்திய அரசுவிமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் திட்டம்ஒன்றை அறிமுகப் படுத்துகிறது. அதிகமாக பூச்சிதாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்துதெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இத்திட்டத்தைமத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்காக போதுமான நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஒரு ஏக்கருக்கு ரூ.7 க்கு மேற்படாமல், செலவிடப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்படிஒரு ஏக்கருக்கு ரூபாய் ஏழுக்கு மேல் செலவானால், அந்த செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்.

திமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளராகஇருந்தவர், அன்பில் தர்மலிங்கம். அன்பில்தர்மலிங்கத்தை ராஜகோபால் என்பவர் சந்திக்கிறார். அறிமுகப் படுத்திக் கொள்கிறார். இந்த ராஜகோபால்,பொதுப்பணித் துறையின் காண்ட்ராக்டர். பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர்களோட ுகருணாநிதியின் நெருக்கம், அறிஞர் அண்ணாஅமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக அவர் இருந்த போதே தொடங்கிவிட்டது.

அன்பிலுக்கு வேண்டியதை செய்து தருகிறார் ராஜகோபால். ராஜகோபாலுக்கு வேண்டியதை செய்துதர அன்பில் தயாராகிறார்.

மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்றதிட்டத்தை அறிவித்த உடனேயே, அன்பிலைசந்திக்கிறார் ராஜகோபால்.

‘அண்ணே.. இந்த விமான கம்பேனிக் காரங்க பூச்சி மருந்து தெளிக்கறதுல,நெறய்ய சம்பாதிக்கிறாங்க… நாம இதுல தலையிட்டு,கமிஷன் வாங்கலாம்னே…’ என்ற யோசனைதெரிவிக்கிறார்.

கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும் ? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார். மருந்துத் தெளிப்பு கம்பேனிகளோடு பேச்சுவார்த்தையை தொடங்க உத்தரவிடுகிறார். கம்பேனியின் பிரதிநிதிகள் அழைக்கப் பட்டு, ஒருஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்கஇயலும் என்று கேட்கப் படுகிறார்கள். ஒரு ஏக்கருக்கு7 ரூபாய்க்கு தெளிக்க இயலும் என்றே அவர்கள்ஒப்புக் கொள்கிறார்கள்.

மத்திய அரசு நிர்ணயித்த விலையில் மருந்துதெளித்தால் பிறகு அது திமுக ஆட்சியா ? 
திமுகவின்வரலாறு என்ன ? 
பாரம்பரியம் என்ன ? 
மத்திய அரசுஒரு ஏக்கருக்கு ரூபாய் ஏழு நிர்ணயித்திருந்தாலும், நீங்கள் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 9 என்று டெண்டர்கொடுங்கள். அந்த 9 ரூபாயில் ஒரு ஏக்கருக்கு 40பைசா வீதம் கமிஷனாக கொடுங்கள் என்று பேசுகிறார்அன்பில். முக்கிய நிபந்தனை என்னவென்றால், பூச்சிமருந்து தெளிக்கும் வரையெல்லாம் காத்திருக்கமுடியாது. கமிஷனை உடனடியாக தந்து விடவேண்டும் என்பதே. ஏழு ரூபாய்க்கு மருந்துதெளித்தாலே லாபம். இதில் கமிஷன் போக 8 ரூபாய்60 காசுக்கு மருந்து தெளிக்க வேண்டுமென்றால்தனியார் முதலாளிகளுக்கு கசக்குமா என்ன ?உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.

அப்போதெல்லாம் கருப்புப் பணம் இப்போதுஇருப்பது போல சகஜமாக புழக்கத்தில் இல்லை.நாசூக்காக ஹவாலா வழியாகவோ,சுவிட்சர்லாந்திலோ பணத்தைப் போடும் வழக்கம்அப்போது வளர்ந்திருக்கவில்லை. ஆகையால் அந்ததனியார் நிறுவனங்கள், நாங்கள் கொடுக்கும்அத்தனை பணத்துக்கும் ரசீது வேண்டும் என்றுகேட்கிறார்கள். நூதனமான யோசனைக்கு வருகிறார் அன்பில். அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒருநிறுவனத்தை தொடங்குகிறார். மருந்து தெளிக்கஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்சீஸோடு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.

அதாவது, பொன்னி ஏஜென்சீஸ்,அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக, ஒருஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் தருவதென்று….இந்த ஏற்பாட்டின் படி, 75 ஆயிரம் முன்பணமாகஅன்பில் தர்மலிங்கத்திற்கு கொடுக்கப் படுகிறது.இந்தப் பணம் கொடுக்கப் படுகையில் அன்பில்திமுகவின் மாவட்டச் செயலாளர் அவ்வளவுதான்.வெறும் 75 ஆயிரம் தானே என்று நினைத்துவிடாதீர்கள்.

75 ஆயிரம் 1970ல் என்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ஒரு பவுன் 147ரூபாய். 75 ஆயிரத்தின் மதிப்பு என்ன என்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தற்போது போலவே, அப்போதும் திமுகவில்அனைவருக்கும் பேராசைதான். உரியவர்களுக்குபங்கு முறையாக சேரவில்லை. பூச்சி மருந்துதெளிப்பதில் ஊழல் செய்தவர்கள், விவசாயத்துறைஅமைச்சருக்கு பங்கு தராமல் விட்டு விட்டார்கள்.

வேளாண் துறை அமைச்சராக அப்போது இருந்தவர்,சத்தியவாணி முத்து. தாழ்த்தப்பட்டோர்முன்னேற்றக்கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கிநடத்தி வந்தவர், பின்னாளில் தமிழர்அனைவரையுமே முன்னேற்றத்தான் திராவிடமுன்னேற்றக் கழகம் இருக்கிறதே.. தனியாக எதற்குஒரு கழகம் என்று தனது தாழ்த்தப் பட்டோர்முன்னேற்றக் கழகத்தை திமுவோடு இணைத்துவிட்டார். அவர்தான் அப்போது விவசாயத்துறைஅமைச்சர்.

தான் விவசாயத்துறை அமைச்சராக இருக்கும்போது,தனக்கே தெரியாமல் யார் இந்த முடிவை எடுத்ததுஎன்று வெகுண்டெழுந்த சத்தியவாணி முத்து,உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள்அனைவரும் தன்னை 1970 ஜுன் மாதம் 4ம் தேதிதன்னை வந்து சந்திக்குமாறு உத்தரவிடுகிறார்.

இதையடுத்து அன்பில் தர்மலிங்கத்திற்கும்,ராஜகோபாலுக்கும் கிலி எடுக்கிறது. இந்தஅம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டால்என்ன செய்வது என்று ? உடனடியாக விமானகம்பெனி நபர்களை அழைத்து, சத்தியவாணிமுத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில்,ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு குறைவாக மருந்து தெளிக்கஇயலாது, என்று கூறி விடுங்கள். அந்த அம்மாமீண்டும் வலியுறுத்தினால், அதற்கு குறைவாக பூச்சிமருந்து அடித்தால், பூச்சிக்கு பதிலாக நாங்கள்தான்சாக வேண்டும் என்று கூறி விடுங்கள் என்று கூறிவிடுகிறார் அன்பில் தர்மலிங்கம்.

சத்தியவாணிமுத்துவோடு கம்பெனி பிரதிநிதிகளின் மீட்டிங்நடக்கிறது. சத்தியவாணி முத்து ஒரு ஏக்கருக்கு8.25க்கு மேல் தர முடியாது என்று உறுதியாகநிற்கிறார். விமான கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில்உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின்பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, 8.25க்கு மருந்து தெளிக்க முன்வருபவர்கள்,விவசாயத்துறை இயக்குநரை சந்திக்கலாம்,மற்றவர்கள் கிளம்புங்கள் காற்று வரட்டும் என்று கூறிவிடுகிறார். நடந்த விஷயங்களை அப்படியே கோப்பில் பதிவு செய்கிறார்:

ஏற்கனவே, வேலையை முடித்துக் கொடுக்கிறேன்என்று ‘அட்வான்ஸ் லஞ்சத்தை’ பெற்றுக் கொண்டஅன்பிலுக்கு திருடனுக்கு தேள் கொட்டியதைப் போலஇருந்தது. உடனடியாக முதலமைச்சர் கருணாநிதியைசந்திக்கிறார். இதுக்குத்தான் பொம்பளைங்களைஅமைச்சரவையில சேக்கக் கூடாதுன்னு சொன்னேன்.இப்போ பாத்தீங்களா…. எவ்வளவு அழகா ஒரு ஊழல்பண்ணோம். இந்த அம்மா இப்போ ஆட்டையைகலைக்கப் பாக்குது என்று புலம்புகிறார். கருணாநிதி முதலமைச்சர் அல்லவா ? அதுவும் விஞ்ஞானமுறையில் ஊழல் செய்வதை அறிந்தவர் அல்லவா ?

கருணாநிதிக்கு வந்ததே கோபம்….. நான்முதலமைச்சராக இருக்கிறேன்… இந்தஅம்மையாருக்கு என்ன இப்படி ஒரு துணிச்சல் என்று,தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவைஅழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்குபூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறுஉத்தரவிடுகிறார். அமைச்சர் கையெழுத்துவேண்டியதில்லை. கோப்பில் நான்கையெழுத்திடுகிறேன் என்று கூறுகிறார்.

ராயப்பாவும், அப்படியேஅவர் உத்தவை நிறைவேற்றுகிறார். இப்படிபோடப்பட்ட உத்தரவில் கையெழுத்திட ஒரு அதிகாரிவேண்டுமல்லவா ? அந்த அதிகாரிதான்ஈ.பி.ராயப்பா. அது வரை, ஐஏஎஸ் பணியில்மூத்தவர்களை தலைமைச் செயலாளராக நியமிக்கும்வழக்கம் இருந்து வந்தது. அந்த வழக்கத்தை மாற்றி,ராயப்பாவை விட பணி மூத்தவர்கள் எட்டு பேரைஓரங்கட்டி விட்டு, ஈ.பி.ராயப்பாவை தலைமைச்செயலாளராக்கி உத்தரவிடுகிறார் கருணாநிதி. இதற்குகைமாறாக, ராயப்பாவும், பூச்சி மருந்து தெளிப்பதுதொடர்பான கோப்பில் கையெழுத்திடுகிறார்.

அதற்கு அடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில்,அந்தக் கோப்பை பார்வையிட்ட, சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்குவதற்கு எதிர்ப்புதெரிவித்து, தான் எழுதிய குறிப்பு கோப்பிலிருந்துகாணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதிர்ந்துஎன்ன செய்வது ? உத்தரவுகள் வழங்கப்பட்டு,வேலையே முடிந்து விட்டது.

ஆனால், இந்த சம்பவத்தில் இருந்து சத்தியவாணிமுத்து பாடம் கற்றுக் கொண்டார் என்றே எண்ணவேண்டியிருக்கிறது. அதன் பிறகு, அவர் மீது, கப்பல்கட்டுமானத்தில், ஊழல் புகார் எழுந்தது

அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது அடுத்தஅத்தியாயம். இது 1971-72 இந்த அத்தியாயத்தில்பல திருப்பங்கள். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றுஎம்எல்ஏ ஆன, அன்பில் தர்மலிங்கம்,விவசாயத்துறை அமைச்சராகிறார். ஏற்கனவே பூச்சிமருந்து விவகாரத்தில் ருசி கண்ட கருணாநிதியும்,அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சராக்குவதில்,அதுவும் விவசாயத்துறை அமைச்சராக்குவதில்துளியும் தயக்கம் காட்டவில்லை.

இந்த முறை, நேரடியாக விமான கம்பெனிகளிடம்பேச்சுவார்த்தையை தொடங்குகிறார் தர்மலிங்கம்.விமானக் கம்பெனிகளின் பிரதிநிதிகளிடம், ‘பாருங்கபாஸ். போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசுகுடுத்தீங்க. இப்போ விலைவாசி ஏறிப்போயிருச்சு.அதனால, ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனாகொடுத்துடுங்க. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11ரூபாய் தர்றோம்’ என்று பேசுகிறார். அதிர்ந்து போனவிமானக் கம்பெனிக்காரர்கள், அவ்வளவு தரமுடியாது, ஒரு ஏக்கருக்கு 80 காசு கமிஷனாகத்தருகிறோம், அதற்கு ரசீது தாருங்கள் என்றுகூறுகிறார்கள். இதற்கு ஒப்புக் கொண்ட தர்மலிங்கம்,ராஜகோபால் மூலமாக கொடுங்கள் என்று கூறுகிறார்.இந்த இடத்தில் தான் கதையில் ட்விஸ்ட் வருகிறது.ராஜேகோபால் இந்த விவகாரத்தில் நிறைய ‘உள்குத்து’செய்வதாக அன்பில் சந்தேகிக்கிறார்.

அதனால்,ராஜகோபாலை கழற்றி விட முடிவு செய்து, விவசாயத்துறை செயலாளராக இருந்த வேதநாராயணனைஅழைக்கிறார்.
‘நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம்பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய்கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90பைசாவுக்கு குறைய மாட்டார். மேலும் 25 சதவிகிதகமிஷன் முன்னதாகவே கொடுக்கப் பட வேண்டும்’என்றும் கூறுகிறார். இதன்படி, விஷயம் விமானகம்பெனிகளுக்கு சொல்லப் படுகிறது. எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்துஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள்பணிக்கப் படுகிறார்கள். அதன்படியே, பணியையும்தொடங்குகிறார்கள்.

இப்போது புதிய சிக்கலாக, கடந்த ஆண்டு செய்தவேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும்,அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும்கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. இதேஇப்போதைய கருணாநிதியாக இருந்திருந்தால்,சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் தள்ளியிருப்பார்.அப்போது அந்த அளவுக்கு கருணாநிதி தேர்ச்சிபெறவில்லை. முன் பணம் மட்டுமே வந்திருந்தது.முழு கமிஷனும் வரவில்லை. மருந்துக்கம்பெனிகளிடம் ஒழுங்காக பேச்சுவார்த்தை நடத்திபணத்தை வசூல் செய்ய துப்பில்லாத அன்பில்தர்மலிங்கத்தை 12.09.1971 அன்று பதவி நீக்கம்செய்து விட்டு, ப.உ.சண்முகத்தை வேளாண்அமைச்சராக்குகிறார்.

அடுத்தாக கருணாநிதிபிறப்பித்த உத்தரவு, ‘கம்பெனிகள் ஏக்கருக்கு 90பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை.அதனால் அவர்களுக்கு சேர வேண்டிய தொகைகள்அத்தனையையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.ஒரு வேளை வங்கியிலிருந்து பணம் எடுக்கப் பட்டு,டிமாண்ட் டிராப்டாக இருந்தாலும், அதையும் நிறுத்தவேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிநிறுத்தவும் என்று உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை,கருணாநிதியின் செயலாளர், வைத்தியலிங்கம்நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டு போய்,வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைசந்தித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரை கை காட்டுகிறார்.

கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக்கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி, 1,17,273 ரூபாயை வசூல் செய்து, கருணாநிதியின்செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள்.அவர் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு,விவசாயத்துறை செயலாளருக்கு, கம்பெனிகளுக்குசேரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்கஉத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின் போது, சாட்சியம் அளித்தகருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம், தனதுசாட்சியத்தில் “என்னைப் பொறுத்த வரையில், குற்றநோக்கமோ, உள்நோக்கம் கொண்டோ, தெரிந்தோ,எனது சொந்த ஆதாயத்துக்காகவோ, இந்தப் பணம்பெற்றுக் கொள்ளப் படவில்லை. நான்செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சருக்குசேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாகஇருந்ததுதான்”.

இந்த ஊழலைப் பற்றி தனது முடிவை பதிவுசெய்கையில், நீதிபதி சர்க்காரியா

“இந்தச் செயல்வகை எல்லாம் முதலமைச்சர்,வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின்வாய்மொழி உத்தரவுகளினால் விளைந்ததாகும்.மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்தமுறையற்ற தந்திரங்களினால் இந்த ஆப்பரேட்டர்கள்(கம்பெனிக்காரர்கள்) முதலில் கவரப்பட்டுமீளமுடியாத ஒரு சிக்கலில் மாட்டிவிடப்பட்டு,அவர்கள் “வழிக்குக் கொண்டுவரப்படும் வரை”நிர்பந்தப் படுத்தப் பட்டனர். முதலமைச்சர்,வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர்லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களதுகோரிக்கைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று.இந்தக் கட்டாயக் கோரிக்கைகளுக்குஇணங்காவிட்டால், தங்கள் கதி சர்வநாசம்தான் என்றஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அவர்கள்தள்ளப்பட்டனர்.”

2010ம் ஆண்டு அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதை ஒட்டி கருணாநிதி வெளியிட்டஅறிக்கையில்

“என்னையும் உன்னையும் சிலை வடிவில் நின்றுசிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்எத்தனையோ கோபதாபங்கள் எம்மிடையேஊடல்கள் உறவுகள்! எதையும் உரிமையுடன் உணர்வுகலந்த உண்மை நட்புடன் கணமும் பிரியாமல்கண்ணின் கருவிழி போல என்னையும் என்நட்பையும் எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்” என்று குறிப்பிடுகிறார்.

விவசாயிகளுக்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும்,மத்திய அரசு உருவாக்கிய பூச்சிக் கொல்லி மருந்துதெளிக்கும் ஒரு விவகாரத்தில் எப்படி பணம் பண்ணியிருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தீர்களா ?

அன்று பூச்சிக் கொல்லி மருந்து. இன்று ஸ்பெக்ட்ரம். தொகை வேறு முறை ஒன்றே. அடித்ததும் ஒரே நபர் தான். உதவிய நபர்களே வேறுபடுகின்றனர்.

அவர்தான் கருணாநிதி.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சர்க்காரியா 3

கடந்த ஐந்தாண்டுகளில் புதிது புதிதாக படக் கம்பெனிகள் தொடங்கப் படுவதைப் பார்த்திருப்பீர்கள். ரெட் ஜெயின்ட் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் பிக்சர்ஸ், சன் பிக்சர்ஸ். இந்தப் பட நிறுவனங்களின் உரிமையாளர்கள், கல்லூரியிலிருந்து இப்போதுதான் வெளி வந்த இளைஞர்கள். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பில்லக்கா பசங்க. இவர்களுக்கு ஏது இந்த அளவுக்கு பணம் என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. அவர்களும் வெட்கமேயில்லாமல் திரைப்படம் எடுத்து வெளியிட்டு, பணமும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்கள்.

இந்த அத்தனை பட நிறுவனங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இந்த பட நிறுவனங்கள் எல்லாம், கருணாநிதி குடும்பத்தாரால் நடத்தப் படுபவவை. கல்லூரியிலிருந்து இப்போதுதான் வெளி வந்த இளைஞர்களுக்கு படத் தயாரிப்பில் ஈடுபடும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான். அவர்களும் படம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் சின்னத் திரையில் முதன் முறையாக வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதற்கெல்லாம் முன்னோடி இருக்கிறது. அதுதான் அஞ்சுகம் பிக்சர்ஸ். கருணாநிதி எம்ஜிஆரின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பயந்தார். எம்ஜிஆருக்குப் போட்டியாக, தனது முதல் மனைவியின் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக போட்டு, “பிள்ளையோ பிள்ளை” (பொறுத்தமான பெயர்தான்) என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெறாமல், பெட்டிக்குள் சுருண்டது. நல்ல நல்ல ஹீரோக்கள் நடித்த படங்களே தோல்வியைத் தழுவும் போது, கருணாதியின் பிள்ளையை ஹீரோவாகப் போட்டால், என்ன ஆகும் ? பிள்ளையோ பிள்ளையின் தொடர்ச்சியைத் தான் இன்று நாம் “வம்சம்” பார்த்தோம்.

பிள்ளையோ பிள்ளை படத்தில் ஒரு காட்சி

இந்தப் படத்துக்கான மொத்த தயாரிப்புச் செலவு 15 லட்சம். அஞ்சுகம் பிக்சர்ஸின் மொத்த முதலீடே 10 ஆயிரம் ரூபாய்தான். பிறகு எப்படி 15 லட்சம் செலவில் திரைப்படம் எடுக்க முடியும். அதுதான் திமுக. இதற்காக 1.25 லட்சம் வெளியிலிருந்து வாங்கிய கடன். மீதம் உள்ள 14.23 லட்சம், விநியோகஸ்தர்களிடமிருந்து வசூல் செய்யப் பட்ட அட்வான்ஸ். ரஜினியின் எந்திரன் படத்துக்குக் கூட, இப்படி போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே…. ஒரு புதிய நடிகர் நடிக்கும் படத்தை, அதுவும், எம்ஜிஆருக்கு போட்டியாக, எம்ஜிஆரை காப்பி அடிக்கும் ஒரு புதுமுக நடிகரின் படத்தை வாங்குவதற்காக 14.23 லட்சம் அட்வான்ஸ் கொடுப்பார்களா என்பது ‘மில்லியன் டாலர் கேள்வி’. இன்றைக்காவது திரைப்படத்துறையில் கார்ப்பரேட்டுகள் நுழைந்து, பல கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறார்கள். ஆனால் அன்றைக்கெல்லாம் வெகு சில திரைப்பட நிறுவனங்களே களத்தில் இருந்தன. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரைத் தவிர்த்து வேறு எந்த நடிகரின் திரைப்படத்துக்கும் முன் பணம் தந்து படத்தை வாங்கும் வழக்கமெல்லாம் கிடையாது.

இந்த 14.23 லட்சத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ராசி அன்ட் கோ, கிரெசென்ட் மூவீஸ், மற்றும் சேது பிலிம் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் வாங்குகின்றன. இந்த மூன்று நிறுவனங்களிலும் பங்குதாரர் முகம்மது யாசின் என்கிற கட்டுமானக் கம்பெனி நடத்துபவர் என்பது யதேச்சையான நிகழ்வாக கருத முடியாது. அதிலும், சென்னையிலுள்ள அண்ணா மேம்பாலத்தை கட்டுவதற்கான கான்ட்ரக்ட், அவரிடம் தான் வழங்கப் பட்டுள்ளது என்பதும் யதேச்சையான நிகழ்வு அல்ல. சரி எப்படித்தான் இது நடந்தது ? இதை சம்பந்தப்பட்ட சாட்சி ஏ.எம்.அஹமது யாசீன் வாயாலேயே கேட்போமா ?

“சாதாரண சமயமாக இருந்தால் ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்டத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நான் முன்வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது, சென்னையிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் கூட்டுப் பங்குதாரராக இருந்தேன். இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசிற்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. குறிப்பிட்ட சில வரையறுக்கப் பட்ட சலுகைகளுக்காக சென்னைக்கு தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்த உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான கேட்கப் பட்டேன். திரு.கருணாநிதியின் மகன் திரு.மு.க.முத்து தனது திரைப்பட வாழ்வில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதாலும், திரு.கருணாநிதியின் குடும்பத்தினரால் ‘பிள்ளையோ பிள்ளை’ தயாரிக்கப் பட்டுள்ளதாலும், நான் அதை மறுக்கவில்லை. விதிக்கப் பட்ட அந்த உயர்ந்த விலை வீதத்தில் அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு திரு.மு.கருணாநிதியை திருப்திப் படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை.”

பிள்ளையோ பிள்ளைக்கும் கருணாநிதிதான் கதை வசனம். நீங்கள் இதையும், கருணாநிதி கதை வசனத்தில் வெளி வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ள, ‘இளைஞன்’ படத்தைத் தயாரித்த, லாட்டரி அதிபர் மார்ட்டினின் செயலையும் முடிச்சுப் போடக் கூடாது.

பிள்ளையோ பிள்ளை படமும், டப்பாவுக்குள் சுருண்டு, படு நஷ்டத்திற்கு உள்ளானது. ஆனால், மேம்பாலம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட காண்ட்ராக்டுக்கு ஈடாகத்தான், லஞ்சத் தொகையாகத்தான் அந்தப் பணம் தரப்பட்டுள்ளது.

திமுக அரசு, பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும், வேண்டாத செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்களை வழக்கு போட்டு மிரட்டுவதும், பிறகு சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அரசிடம் பணிந்ததும், அந்த வழக்குகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும், நாம் பார்த்து பழகிப் போன ஒரு விஷயம்.

ஆனால், இது போன்ற நடவடிக்கைகளெல்லாம், திமுக அரசால், 1969லேயே துவங்கப் பட்டது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

“பிராட்வே டைம்ஸ்“ என்பது ஒரு ஆங்கில வார இதழ். பொதுவாழ்வில், தந்தையும் மகனும் தங்களுக்கென விதியை உருவாக்கிக் கொள்கிறார்கள், என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. வர்கீஸ் என்ற ஐசிஎஸ் அதிகாரி, தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு, அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆலோசகராகவும், விஜிலென்ஸ் ஆணையராகவும் பணியாற்றி வந்தார். அவரின் மகன் ஓபல் காரை இந்தியாவில் இறக்குமதி செய்வதில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தான் பிராட்வே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை அடுத்து ஐசிஎஸ் அதிகாரி வர்கீஸ் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில், கார் இறக்குமதி செய்வது தொடர்பாக சரியான நடைமுறைகள் பின்பற்றப் பட்டன என்றும், அதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்றும், பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கை, அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அதனால், அந்தப் பத்திரிகை மீது, அரசு அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்.

இந்தக் கடிதம் கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப் பட்டது. அந்தப் பத்திரிக்கையாளர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப் படுகிறது. ‘அப்போது நானே ஒரு பத்திரிக்கையாளர்’ என்பது மறந்து மறந்து விட்டதா என்பது தெரியவில்லை.

வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம், பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கைக்கு சம்மன் அனுப்பியதும், பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. முதலமைச்சரின் செயலாளர், அந்தப் பத்திரிகையின் அதிபரை தொடர்பு கொண்டு, முதலமைச்சரிடம், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி முறையீடு செய்யப் பட்டதாகவும், அதனால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்று தகவல் தெரிவிக்கப் படுகிறது.

அந்த பத்திரிக்கையின் அதிபரும் ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் வெளியிட்ட செய்திக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல், “பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், இப்போது எனது பத்திரிக்கைக்கும் முன்னேற்ற நோக்கங்கள் கொண்ட உங்கள் அரசுக்கும் (??????) இடையில் நெருங்கிய உறவு நிலவுவதால் வழக்கை வாபஸ் பெற்றக் கொள்கிறேன்” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப் படுகிறது. இக்கடிதத்தை படித்த கருணாநிதி, அக்கடிதத்தின் மீதே, “வழக்கு வாபஸ் பெறப்படலாம்” என்று உத்தரவிடுகிறார்.

ஆனால் பிராட்வே பத்திரிக்கை அதிபர் செரியன் வழங்கிய கடிதத்தில் மன்னிப்பு கேட்பது போன்ற எந்தத் தொனியும் இல்லை. மாறாக தான் வெளியிட்ட கட்டுரைக்கு நியாயம் கற்பிப்பதாகவே இருந்தது.

மேலும், பிராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது வழக்கு தொடருவதற்கு முன்பு விரிவாக நடந்த ஆலோசனை, சட்டத் துறை அமைச்சருடனான ஆலோசனை எதுவுமே, வாபஸ் பெறும் போது கவனிக்கப் படவில்லை. அவசர கதியில், அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்ட அதே வேகத்திலேயே, அந்நிறுவனம், கருப்புப் பட்டியலில் இருந்தும் எடுக்கப் பட்டிருந்தது.

இந்த வழக்கின் மூலமாக ஏற்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி, மற்றோரு காரியத்தைச் சாதித்துக் கொண்டதுதான் விசித்திரமான விஷயம். பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கையை அச்சிடுவது, அந்த பத்திரிக்கை நிறுவனத்துக்குச் சொந்தமான, தாம்சன் அன் கம்பெனி. பிராட்வே டைம்ஸ் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்வதற்கு முன்பாகவே, தாம்சன் அன் கம்பேனி அரசுடன் எவ்விதமான கான்ட்ராக்டுகளிலும் ஈடுபடக் கூடாது என்று கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தது. அந்தக் கம்பேனி அரசு பாடப்புத்தகங்களை தயாரிப்பதில், கவனக்குறைவாக இருந்த காரணத்தால் இந்நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தது. அந்த உத்தரவையும் இந்நிறுவனம் தந்திரமாக வாபஸ் பெற வைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் மொத்தமாகப் பார்த்தால், எதற்காக கருணாநிதி இவ்வளவு முனைப்பாக, வழக்கை வாபஸ் பெறுவதிலும், அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் முனைப்பு காட்டினார் என்ற கேள்வி எழும். அங்கேதான் முரசொலி மாறன் வருகிறார். பிராட்வே டைம்ஸின் அதிபர், மேத்யூ செரியனும், முரசொலி மாறனும், நெருங்கிய நண்பர்கள். மாறன் இந்த வழக்கை வாபஸ் பெற்று, கருப்புப் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டி, தன்னிடம் வலியுறுத்தினார் என்பதை கருணாநிதியே தனது வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டார்.

இவ்வாறு மாறன், கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்தது, வெறும் நட்பா என்றால் இல்லை. இந்த நட்பின் அடிப்படையில், மாறனுக்கு பல்வேறு உதவிகளை பிராட்வே டைம்ஸ் தேர்தல் சமயங்களில் மாறனுக்கு தன்னுடைய காரை வழங்கி உதவி செய்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இவ்வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு தனியார் நிறுவனம், அரசின் கான்ட்ராக்டை பெற்று, பாடநூல் தயாரிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது. அவ்வாறு நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க ஒரு நேர்மையான அதிகாரி அரசுக்கு பரிந்துரை செய்து, அவ்வாறே அந்நிறுவனத்தை கரும்பட்டியலில் வைக்கிறார். அந்த அதிகாரியை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, அந்த பத்திரிக்கை அவரைப் பற்றிய அவதூறான செய்திகளை வெளியிடுகிறது. அப்பத்திரிக்கை மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று அதனால் பாதிக்கப் பட்ட அதிகாரி, அரசுக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கும் தொடுக்கப் படுகிறது.

வழக்கு தொடுக்கப் பட்ட பின், முதலமைச்சரின் மருமகன், முதல்வர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததோடு, ஊழலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இருந்தும் நீக்க உதவுகிறார்.

கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி சர்க்காரியா “இவ்வழக்கில் வரக்கூடிய நியாயமான முடிவு என்னவெனில், சரியான நடைமுறையைப் பின்பற்றாமல், குறுக்கு வழியில் செல்லவும், தம்முடைய சட்டத் துறை அமைச்சரின் கருத்தை முரட்டுத் தனமாக ஒதுக்கி விட்டு செல்லவும், தொடர்புடைய மற்ற இரண்டு அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பை தர மறுக்கவும், திரு மாறனின் அலுவல் சார்பற்ற தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக திரு.கருணாநிதி திரு.செரியனுக்கு உதவும் நோக்கத்திற்கு தூண்டப்பட்டுள்ளார் என்பதேயாகும்”

சர்க்காரியா கமிஷன் முன்பாக, பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரே 30க்கும் மேற்பட்ட புகார்களைக் கூறினார். ஆனால் நீதிபதி சர்க்காரியா அனைத்துப் புகார்களையும் விசாரித்து, எந்தப் புகார்களின் மீது தெள்ளத் தெளிவாக ஆதாரங்கள் இருந்தனவோ, அந்தப் புகார்களை மட்டுமே நிரூபிக்கப் பட்டதாக அறிக்கை அளித்தார். நிரூபிக்கப்பட்ட சில புகார்களை மட்டுமே நாம் மூன்று தொடர் கட்டுரைகளில் பார்த்தோம்.

1970ம் ஆண்டு முதல், கருணாநிதி அரசையும் ஆட்சி அதிகாரத்தையும் தன் குடும்பத்தின் நலனுக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுகிறது. கருணாநிதியும், திமுகவும் எழுபதுகளிலேயே தமிழ்நாட்டை விட்டு ஒழிக்கப் பட்டிருந்தால், இந்தியாவுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியும், மேலும் பல ஆயிரக்கணக்கான கோடிகளும் சேமிக்கப்பட்டிருக்கும்.

அன்று இந்திரா காந்தி, கருணாநிதிக்கு அளித்த மடி பிச்சையால், இந்தியாவையே சூறையாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இந்திரா காந்தியும் சிபிஐ மூலமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்து, கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தால் இந்நேரம் கருணாநிதி தண்டிக்கப்பட்ட குற்றவாளியாகி யிருந்திருப்பார். மாறாக, இந்திரா காந்தி விசாரணை ஆணைம் அமைத்ததன் விளைவு, இன்று கருணாநிதி தமிழர்களே.. தமிழர்களே என்று கதையடித்துக் கொண்டிருக்கிறார்.

கருணாநிதி மற்றும் திமுகவின் ஊழல்கள் இப்படி ஆவணப்படுத்தப் பட்டிருந்தாலும் கூட, இன்றும் திமுகவினர், தெருவெங்கும் வந்து, உதயசூரியனுக்கு வாக்களியுங்கள், இந்தியாவை ஒளிமயமாக்குங்கள் என்று கூச்சமே இல்லாமல் பேசுகிறார்கள்.

இந்தக் கட்டுரைகள் இப்போது வாசகர்களுக்காக வழங்கப்படுவதன் ஒரே நோக்கம், புதிய வாக்காளர்களாவது, திமுவின் சூழ்ச்சி வலையில் பலியாகக் கூடாதே என்ற ஒரே நோக்கத்தில்தான்.

கருணாநிதி ஒரு தீயசக்தி என்று ஜெயலலிதா கூறியது மிகைச் சொல் அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சர்க்காரியா 4

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற பாலிசியை கடைபிடித்து, பெரும் கொள்ளை அடித்ததை நாம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்த்தோம். முதலில் வராதவருக்குக் கூட முன்னுரிமை என்பதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? சொல்வதைச் செய்வதை விட சொல்லாததையும் செய்வது கழக அரசல்லவா ?

இன்று பட்டி தொட்டியெங்கும், இண்டு இடுக்குகளிலெல்லாம், அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும், மதுக் கடைகளை திறந்து வைத்து, ஒரு புறத்தில் மக்களை குடிகாரர்களாக்கி, அதே மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கி வைப்பதில் கருணாநிதி அரசு திறமை வாய்ந்தது. இந்த திட்டத்திற்கெல்லாம் முன்னோடியாகத் தான் பூரண மதுவிலக்கு இருந்த தமிழ்நாட்டில், மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியது. மதுவிலக்கை நீக்கியாயிற்று. மது தயாரிக்க மது ஆலைகள் வேண்டுமல்லவா ?

யார் யாருக்கெல்லாம், மது ஆலை நடத்துவதற்கான தகுதி இருக்கிறது என்பதையும் விண்ணப்பங்களை வரவேற்கும் முன்பே அறிவிக்கப் படுகிறது. அதன் படி, விண்ணப்பிப்பவரின் நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும், நிர்வாகத் திறனை மாநில அரசு மதிப்பிட்டு சான்றளிக்க வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். போதையிலும் போதை தமிழ் போதை தலைச்சிறந்த போதையல்லவா ?

ஒரு எட்டு கம்பெனிகள் விண்ணப்பித்தார்கள். எட்டு கம்பெனிகளைப் பற்றியும் தொழில் துறை செயலாளர் கோப்பில் எழுதிவைக்கிறார். இவ்வாறு எழுதிய பிறகு நடக்கும் கூட்டத்தில் கருணாநிதி புதிய உத்தரவிடுகிறார். “பீர் தொழிற்சாலையை நிறுவுவதற்காக இன்னொரு விண்ணப்பதாரரை தெரிந்தெடுக்கலாம்” ஏன் அந்த எட்டு கம்பெனிகள் பீர் தயாரிக்காதா ? இல்லை தயாரிக்க மாட்டேன் என்று கருணாநிதியிடம் சொன்னார்களா ? ஆனால் கருணாநிதி இன்னொரு பெட்ரோமாக்ஸ் லைட் வைத்திருக்கும் இன்னொரு நிறுவனம்தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். கருணாநிதி முதலமைச்சர் அல்லவா ? முதல்வர் வார்த்தைக்கு மறு பேச்சு உண்டா ?

இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, ஏ.எல்.சீனிவாசன் என்பவர் புதிய விண்ணப்பத்தை அளிக்கிறார். இப்போது இந்த எட்டு பேரில் யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் ? கண்டு பிடித்து விட்டீர்களா… ? வேறு யார் ? எட்டாவதாக வந்த நபர்தான். அந்த கடைசி நபருக்குத்தானே டெண்டரே மாற்றப் பட்டது ? கடைசியாக விண்ணப்பித்தவர் பெயர் ஏ.எல்.சீனிவாசன். ஏ.எல்.சீனிவாசனோடு சேர்ந்து மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கும் மது ஆலைக்கான ஆணை வழங்கப்படுகிறது.

ஏ.எல்.சீனிவாசன், சுல்தான் மரைக்காயர் அன்ட் சண்ஸ் லிமிட்டெட், கோத்தாரி அண்டு சன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.

சரி ஏ.எல்.சீனிவாசன் மட்டும் தான் பின்வாசல் வழியாக நுழைந்தார், மற்ற இரு நிறுவனங்களும் ஒழுங்காக ஆணை பெற்றிருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். சுல்தான் மரைக்காயர் மற்றும் கோத்தாரி நிறுவனங்களின் மீது, சர்க்காரியா விசாரணை ஆணையத்திலேயே இரண்டு தனி விசாரணைகள் நடைபெற்றன.

சரி யார் இந்த ஏ.எல்.சீனிவாசன் ?

சாரதா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர்தான் இவர். எதற்காக கருணாநிதி இவருக்கு உதவ வேண்டும் என்றால், ஏ.எல்.சீனிவாசன் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மெஜெஸ்டிக் ஸ்டுடியோ தொடர்பாக தனக்கு வரவேண்டிய பாக்கியை கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் தள்ளுபடி செய்ய வேண்டி வந்தது என்று பக்தவச்சலம் என்பவர் சாட்சியம் அளித்தார்.

இது மட்டுமல்ல, அரசு செய்தி நிறுவனம் இருக்கிறது அல்லவா… ? அது தயாரிக்கும் படங்கள் தொடர்பாக பெரும்பாலான பணிகள் ஏ.எல்.சீனிவாசனின் சாரதா ஸ்டுடியோவுக்கே வழங்கப் பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு கட்ட வேண்டிய வருங்கால வைப்பு நிதியை சாரதா ஸ்டுடியோஸ் கட்டவேயில்லை. இது தவிரவும் பல்வேறு காரணங்களுக்காக சாரதா ஸ்டுடியோஸில் நடந்த வேலை நிறுத்தத்தை அப்போது இருந்த தொழிலாளர் துறை அமைச்சர் என்.வி.நடராஜனை வைத்து, தொழிலாளருக்கு எதிராக ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட தொழிலாளர் அமைப்புகளை வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், விசாரணையில் தெரிய வந்தது.

பாட்டாளிகளின் பிரதிநிதி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, தொழிலாளிகளின் வயிற்றிலும் அடிக்கத் தவறவில்லை. சென்னையில், செங்கொடி இயக்கத்தின் பிடியில் இருந்த பெரும்பாலான தொழிற்சங்கங்களை உடைத்து, அதில் திமுக சங்கமான தொ.மு.ச வை தொடங்கி, முதலாளிகளோடு சமரசம் செய்து தொழிலாளிகள் வயிற்றில் அடிக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தது திமுகவே.

மது ஆலை அமைக்க விண்ணப்பிக்க தகுதியானவை என்று சில நிபந்தனைகள் விதிக்கப் பட்டிருந்தன என்று குறிப்பிடப் பட்டிருந்தது அல்லவா ? அதில் ஒரு விதி, நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பது, சாதாரணமாக அரசு ஆணை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். அரசுத் துறைக்கு டெண்டர் விண்ணப்பித்தீர்கள் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளின் ஆண்டுக் கணக்கு, வருமான வரி கணக்கு ஆகியவற்றை இணைக்கச் சொல்வார்கள்.

அவற்றுள் முக்கியமானது, தொழிலாளர் வைப்பு நிதியை தவறாமல் செலுத்த வேண்டும் என்பதே. தொழிலாளர் வைப்பு நிதியை பல்வேறு நிறுவனங்கள் கட்டாமல் ஏமாற்றுகின்றன என்பதற்காக, அந்த தனியார் நிறுவனங்களை கட்ட வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, தொழிலாளர் வைப்பு நிதியை சரியாக செலுத்தாத நிறுவனங்கள், அரசு டெண்டர்களில் பங்கெடுக்க முடியாது.

தொழிலாளருக்கு சட்டபூர்வமான ஒரு விதிப்படி கட்ட வேண்டிய கட்டணத்தையே செலுத்தத் தவறிய ஒரு நபர் எப்படி நல்ல நிதி நிலையில் இருப்பார் ? அவருக்கு எப்படி ஆணை வழங்க இயலும் ? ஏ.எல்.சீனிவாசன், தொழிலாளர் வைப்பு நிதியை கட்டாமல் ஏமாற்றியவர். ஆனாலும் என்ன ? தமிழினத் தலைவரின் ஆருயிர் தோழருக்கு இந்த விதிகளெல்லாம் பொருந்துமா என்ன ?

1973 ஜுன் மாதத்தில், ஏ.எல்.சீனிவாசனுக்கு பீர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப் படுகிறது. அனுமதி கடிதத்திலேயே ஆறு மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்று, குறிப்பிடப் படுகிறது. சீனிவாசன் என்ன செய்கிறார் தெரியுமா ? ஆறு மாதங்களுக்குள் என்னால், தொழிற்சாலையை நிறுவ முடியாது… அதனால், 18 மாதங்கள் அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறார். இவ்வாறு கேட்ட ஒரே காரணத்திற்காகவே, இவரது லைசென்ஸை ரத்து செய்திருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவத் தவறிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டு, அடுத்த நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவரது கோரிக்கையை பரிசீலித்து, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்கிறது.

அப்போதாவது அந்த ஆள் தொழிற்சாலையை தொடங்கினாரா என்றால் இல்லை. அப்போதும் மேலும் 12 மாதங்கள் அவகாசம் கேட்கிறார். அதற்குள் செப்டம்பர் 1974 முதல், மீண்டும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படுகிறது. ஏ.எல்.சீனிவாசனைப் பார்த்து “நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று, அவருக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்கிறார்கள்.

விசாரணையின் இறுதியில், மதுபான தொழிற்சாலை அமைப்பதற்காக ஏ.எல்.சீனிவாசன், ஒரு துண்டு நிலத்தைக் கூட வாங்கவில்லை என்பது தெரிய வந்தது. சீனிவாசனின் உண்மையான நோக்கம், சென்னை புறநகரில், இந்த மதுபான தொழிற்சாலைக்கு கிடைத்த லைசென்சை வைத்து 100 ஏக்கர் நிலத்தை ஆட்டையயை போட முயற்சித்தது மட்டும் தான் என்பதும் தெரிய வந்தது.

இப்படி ஏ.எல்.சீனிவாசன் நிலத்தை அபகரிக்க எழுபதுகளிலேயே உதவி, அன்றைக்கே நில அபகரிப்பு டெக்னிக்கை தொடங்கியவர்தான் கயவர் கருணாநிதி. இந்தக் குற்றச் சாட்டும் நீதிபதி சர்க்காரியாவால் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அன்ன ஏ.எல்.சீனிவாசனுக்கு அளித்த சலுகையின் தொடர்ச்சியே, இன்று ஜெகதரட்சகனின் மது ஆலையும், அதிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு கருணாநிதி அரசு வாங்கிக் குவிக்கும் மதுக்களும்.

கொள்ளையடிப்பது, அரசுப் பணத்தை அபகரிப்பது, ஊரை அடித்து உலையில் போடுவது, இவை அத்தனையின் மொத்த வடிவமும் கருணாநிதிதான்.

அடுத்ததாக நீதிபதி சர்க்காரியா நிரூபணம் செய்த இறுதிக் குற்றச்சாட்டு, நாம் அனைவரும் ஓரளவு கேள்விப்பட்டது.

அடுத்த பாகத்தில் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சர்க்காரியா 5

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப் படும்.

திமுக அரசு, ரியல் எஸ்டேட் மூலமாக நிலத்தில்செய்தஊழல்களை பார்த்தோம்.

ஆகாயத்தில் செய்த ஊழல்களை விமானம் மூலமாகபூச்சி மருந்து தெளித்த வகையில் பார்த்தோம்.

ஸ்பெக்ட்ரம் மூலமாக ஊழல் நிறைவு பெற்றுவிட்டது.

நீரில் எப்படி ஊழல் செய்தார்கள் என்பதைஇப்போது பார்ப்போம்.

சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு இப்போதுதான்என்று இல்லை. எழுபதுகளிலேயே இருந்தது. பல்வேறுதிட்டங்கள் போட்டும், இன்று வரை உருப்படியான ஒருதிட்டமும் செயல்படுத்தப் படவில்லை என்பதுதான்வேதனையான விஷயம்.

பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டதுதான்வீராணம் திட்டம். சென்னை நகரிலிருந்து 222 கிலோமீட்டரில் கடலூர் மாவட்டத்தில் உள்ளதுதான் வீராணம்ஏரி. வீராணம் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப் படாத நீரைஎடுத்து, நெய்வேலிக்கு அருகிலுள்ள வடக்குத்து என்றஇடத்தில் அமைக்கப் பட இருந்த சுத்திகரிப்புநிலையத்தில் சுத்தம் செய்து, சென்னை மாநகருக்கு 198கிலோ மீட்டர் குழாய்கள் பதித்து, அதன் மூலமாககுடிநீரைச் சென்னைக்கு அனுப்ப வேண்டும்என்பதுதான் இந்தத் திட்டம்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு முன்பாக ஒருவிஷயம் நடந்தது. ஐம்பதுகளிலெல்லாம், பொதுப்பணிக்கான ஒப்பந்தம் வழங்குவதை ஒரு சிலபொறியாளர்கள் முடிவெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.

1954ம் ஆண்டு, சுந்தரம் என்ற ஐசிஎஸ்அதிகாரி, இது போல, தனி நபர் ஒருவருக்கு அதிகாரம்வழங்குவது மக்களாட்சி முறைக்கு உகந்ததல்ல என்றும்,நான்கு துறைகளின் பொறியாளர்கள் அடங்கிய குழுஒன்றை அமைத்து முடிவெடுக்கலாம் என்றும்ஆலோசனை தெரிவித்தார்.

காமராஜர் காலத்தில், கக்கன்பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது,பொறியாளர்கள் குழுவை அமைத்து, அதன் மூலம்முடிவெடுக்கலாம் என்று உத்தரவிடுகின்றனர். இதுபோல, பொறியாளர்கள் குழுவை அமைத்தனால் தான்காமராஜரால், ‘தமிழினத் தலைவராக’ பரிணமிக்கமுடியவில்லையோ…. ?

காங்கிரஸ் ஆட்சி போனதும் திமுக ஆட்சியில்கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக ஆகிறார்.

‘எல்லா முடிவையும் பொறியாளர்கள் எடுத்தா, நாமஎதுக்கு இருக்கோம்’ என்று தோன்றுகிறது அவருக்கு.உடனடியாக பொறியாளர்களிடம் கருத்து மற்றும்பெற்றுக் கொண்டு, முடிவை அரசு எடுக்கலாமா என்றுஒரு புது ஐடியாவை உருவாக்குகிறார். இது தொடர்பாககோப்பு உருவாக்கப் பட்டு, பல்வேறு விவாதங்களுக்குப்பிறகு, ஜுலை 69ல், இருக்கும் விதிகளே சரியாகஇருக்கின்றன, அதனால் மாற்ற வேண்டாம் என்று கருணாநிதியே உத்தரவிட்டு, கோப்பை முடிக்கிறார்.

இதற்கு நடுவே, வீராணம் குழாய் அமைக்கவேண்டிய திட்டத்தைப் பற்றி பேச்சு கிளம்புகிறது. ‘வீராணம்போன்ற திட்டம் வந்தால், இந்த என்ஜினியர் பசங்கக்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கனும், அதனால, கருத்தஅவங்க சொல்லட்டும், முடிவ நாம எடுப்போம்‘ என்றுதிட்டமிட்ட கருணாநிதி, இது தொடர்பானஅரசாணையை திருத்தி புதிய அரசாணைவெளியிடுகிறார். அரசாணை வெளியிடப்பட்டு, அதுதொடர்பான விதிப் புத்தகங்களையும் மாற்றி உத்தரவிடப்படுகிறது.

அமைச்சர்கள் குழு கூடி ஆலோசனை செய்துமுடிவெடுக்கப் பட்ட 3ஜி ஏலம், ஒரு லட்சம் கோடி ரூபாய்வருவாயை ஈட்டித் தந்தது. ஆண்டிமுத்து ராசா என்றதனி நபர் எடுத்த முடிவு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதல்லவா ? அதேமெத்தட்தான் இது.

குழாய் அமைக்க விரும்புவோர் வரலாம் என்றுடெண்டர் வெளியிடப் படுகிறது. இந்த டெண்டரில், 5 நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. ஐந்து நிறுவனங்களில்,சத்யநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனம்தேர்ந்தெடுக்கப் படுகிறது. ஏறக்குறைய ஒரே விலையைசொல்லியிருந்த மற்றொரு நிறுவனம் தாராப்பூர் என்றநிறுவனம்.

ஒரு வேலைக்காக டெண்டர் கோரப்படும் சமயங்களில்,தரம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்முன்னனுபவம் மற்றும், கூறப்பட்டுள்ள விலைஆகியவற்றின் அடிப்படையில் அனைத்துநிறுவனங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி, சரியானநிறுவனத்தை தேர்ந்தெடுப்பதே அரசுத் துறைகளில்வழக்கம்.

ஆனால் ஏறக்குறைய சமநிலையில் இருந்த தாராப்பூர்நிறுவனத்தோடோ, போட்டியிட்ட மற்ற நிறுவனங்களான,இன்டியன் ஹ்யூம் பைப்ஸ், கேரளா ப்ரேமோ பைப்மற்றும், யுனிவர்சல் பைப்பிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் போன்றஎந்த நிறுவனத்தோடோ, பேச்சு வார்த்தை நடத்தி,அவர்கள் டெண்டரில் அளித்த விலையைகுறைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை.

இதற்குப் பிறகு, சத்யநாராயணா நிறுவனம், கூட்டுஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களைநேரில் ஆய்வு செய்து, அந்த நிறுவனங்களுக்கு,இத்திட்டத்திற்கு தேவையான குழாய்களை தயாரிக்கும்அளவுக்கு வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து,அதன் பிறகு, இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கலாம்என்று, பொதுப்பணித் துறையின் தலைமைப்பொறியாளர் குறிப்பு எழுதுகிறார்.

இந்தக் குறிப்பு அப்போதைய பொதுப்பணித்துறைஅமைச்சராக இருந்த சாதிக் பாட்சாவிடம், (இந்தப் பெயர்உள்ளவர்களே ஊழலில் சம்மந்தப் பட்டிருக்கிறார்கள்என்பது என்ன ஒரு ஆச்சர்யம் ?) அளிக்கிறார். அவர்தலைமைப் பொறியாளரை அழைத்து, “இதோ பாருங்கபாஸு… முதலில், வேலைக்கான ஆணையை வழங்கிவிட்டு, அதன் பிறகு, தகுதி இருக்கிறதா என்றுபார்ப்போம். முதலமைச்சர் விருப்பப் படி நடந்துகொள்ளுங்க. அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்றுகூறுகிறார். அதன் பிறகு, இந்தக் கோப்பு, அப்போதையநிதித் துறைச் செயலாளரிடம் போகிறது.

இப்போது இருப்பது போல,ஆட்சியாளர்களுக்கு காது கிழியும் வகையில் ஜால்ராஅடிக்கும் அதிகாரிகள் அப்போது இல்லை.அப்போதைய நிதித்துறை செயலாளர், கோப்பைவிரிவாக ஆராய்ந்து தன் அறிக்கையை அளிக்கிறார்.அவர் தனது அறிக்கையில், முதலில்இந்நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நேரில் சென்றுஆய்வு செய்தால் தான் இந்த நிறுவனம் சரியானநிறுவனமா இல்லையா என்பதை முடிவு செய்ய இயலும்.இவர்கள் கூறும் வசதிகள் இல்லாவிட்டால் டெண்டரைநிராகரிக்க வேண்டும்.

மேலும், வெளிநாட்டில் உள்ளதொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்தால், அந்தநிறுவனங்களோடு, நேரடியாக ஒப்பந்தம் செய்து,அரசுக்கான செலவை குறைக்கவும் வழி இருக்கும் என்றுகூறுகிறார். மேலும், சத்யநாராயணா நிறுவனம், அதுநிறுவ இருக்கும் தொழிற்சாலைக்காக 75 சதவிகிதத்தொகையை வட்டியில்லாத முன்பணமாக வழங்கவேண்டும் என்று கேட்பது, முறையற்ற செயல், ஆகவே,அனைத்து நிறுவனங்களோடும் பேச்சு வார்த்தைநடத்தலாம் என்று எழுதுகிறார்.

இவர் நிதித்துறை செயலராக இருந்தால் இவர்சொன்னதையெல்லாம் கேட்க வேண்டுமா என்ன ? ‘போடா வெண்ணை’ என்று, சத்ய நாராயணா பிரதர்ஸ்நிறுவனம் அளித்த டெண்டர் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது என்று முடிவெடுக்கப் படுகிறது.

இதன் பிறகு, பொதுப்பணித் துறை அமைச்சர் சாதிக்பாட்சா, கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வநாதன்,மற்றும் தலைமைப் பொறியாளர் உசேன் ஆகியோர்,ஈரான், மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஹாலந்து,இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் ஆகியநாடுகளுக்கு சென்று தொழிற்சாலைகளை ஆய்வுசெய்வதற்காக செல்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு சந்தேகம்தோன்றும். பொதுப்பணித்துறை அமைச்சர் செல்கிறார்,தலைமைப் பொறியாளர் செல்கிறார்…. கூடுதல்தலைமைச் செயலாளர் எதற்காக செல்கிறார் என்றுதோன்றுமே…. வேறு ஒன்றும் இல்லை… அவர்வெளிநாடு சுற்றிப் பார்க்க வேண்டாமா ?

நன்றாக ஊர் சுற்றிப் பார்த்து விட்டு, திரும்பி வந்து,ஆய்வுக் குழு கூட்டாக தொழில் நுட்ப அறிக்கைஅளிப்பதற்கு பதிலாக, தலைமைப் பொறியாளர் உசேன்மட்டும், ‘சுருக்கமான அறிக்கை’ ஒன்றை சமர்ப்பிக்கிறார்.அந்த அறிக்கை தொழில் நுட்ப அறிக்கை போலஇல்லாமல், ‘சுற்றுப் பயணக் குறிப்பு’ போல இருந்ததுஎன்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார். பேக்டரியைபாருங்கன்னா, இவர்கள் கிரேக்க நாட்டில், ‘பெல்லிடான்ஸ்’ பார்த்திருப்பார்கள். அப்புறம் எப்படி தொழில்நுட்ப அறிக்கை சமர்ப்பிப்பது ?

சுற்றுப் பயணம் முடிந்ததும், சத்யநாராயணாபிரதர்ஸுக்கு ஆணை வழங்கலாம். அவர்கள் டக்கராகவேலையை முடிப்பார்கள் என்று முடிவெடுக்கப்படுகிறது. தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப் பட்டடெண்டர், நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.தொழிற்சாலை அமைப்பதற்காக 75 சதவிகித முன்பணம்வட்டியில்லாமல் வழங்கவும் உத்தரவிடப் படுகிறது.இந்த நிதித் துறைச் செயலாளர் இருக்கிறாரே….அப்போதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது போலமுன்பணம் வழங்கக் கூடாது என்று கூறுகிறார்.

ஓரளவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு நின்றிருப்பார்போலிருக்கிறது.. இல்லையென்றால்,பொதுப்பணித்துறை அமைச்சரும், முதலமைச்சரும்ரொம்ப நல்லவர்கள் என்று லெட்டர் எழுதி வைத்துவிட்டு, தூக்கில் தொங்கியிருப்பார்.

ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவே தொழில் நுட்பஒப்புதல் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்றவிதியை மாற்றி, அதிகாரங்கள் அனைத்தும்பொதுப்பணித் துறை அமைச்சராகிய தன்னிடம் வரும்வகையில் விதிகளை மாற்றி, முழு அதிகாரத்தையும்கைப்பற்றிய கருணாநிதியின் நடவடிக்கைகள், அதன்நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது என்றுநீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார்.

மேலும், வீராணம் திட்டம் வரப்போகிறது என்பதைஅறிந்தே, முடிந்து போன ஒரு கோப்புக்கு மீண்டும் உயிர்கொடுத்து, விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப் பட்டதுஎன்பதும், இத்திருத்தத்தில் உள்நோக்கம் இருக்கிறதுஎன்பதை நிரூபிக்கிறது என்கிறார் சர்க்காரியா.

இந்த ஆணையத்தின் முன் சாட்சியமளித்த நிர்வாகப்பொறியாளர் சிவராமன் “முதலமைச்சர் விருப்பப் படிதிருவாளர்கள் சத்தியநாராயணா பிரதர்ஸ் அனுப்பியடெண்டரை நான் பரிந்துரை செய்யவில்லை என்றால்கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.இக்காரணத்தினால்தான் நான் என் முடிவை மாற்றிக்கொண்டு அதிகாரத்திற்கு பணிந்தேன்.

உலகிலுள்ளஎல்லா நாடுகளில் இருந்தும் டெண்டர்கள் கேட்ட பிறகு,குறிப்பாக ஒரு டெண்டரை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வது என்பதை என்னுடைய 31 ஆண்டுகாலப்பணி அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. வீராணம்திட்டத்தில் தான் இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளதிலிருந்து,இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒவ்வொருவரும்எப்படி மிரட்டப் பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.

சரி… இவ்ளோ கஷ்டப் பட்டு, சத்யநாராயணா பிரதர்ஸ்நிறுவனத்துக்கு, கருணாநிதியும், அமைச்சர்பொதுப்பணித் துறை அமைச்சர் சாதிக் பாட்சாவும்,எதற்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வேலைபார்த்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறதல்லவா ?

இதற்கான விடையை அந்நிறுவனத்தின் உரிமையாளர்சத்யநாராயணாவின் மகன், புருஷோத்தம் தனதுஅறிக்கையில் விளக்குகிறார். பல்வேறு தவணைகளில்எப்படி 21 லட்சம் ரூபாய் லஞ்சமாக கருணாநிதிக்குகொடுக்கப் பட்டது என்பதை எடுத்துக் கூறுகிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard