கேள்வி: பெரியார் சொன்னதாகச் சொல்வார்கள். பாப்பானையும், பாம்பையும் பார்த்தால், முதலில் பாப்பானை அடி என்று சொல்வார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
சோ: முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். பாப்பான் என்பது ஒன்றும் கேலிப் பேச்சு இல்லை. மிகவும் உயர்ந்த விஷயம். இந்த மாதிரி ஒருவர் சொன்னார் என்றால் சந்தோஷப்பட வேண்டியதுதான். ஏனென்றால், பாப்பான் என்கிறவன் எவன்? பார்வையுடையவன் பார்ப்பான். Seer என்று ஆங்கிலத்தில் சொல்கிறான். அதுதான் பார்ப்பனர் என்று தமிழில் வந்தது. ஏனென்றால் வேதம் - இதெல்லாம் படித்தவர்கள் என்ற நம்பிக்கை - படித்ததால் அவர்களுக்கு விஷயங்கள் தெரியும். பார்வையுடையவன் பார்ப்பான்.
கேள்வி: பாப்பானுக்கு சொல்லி விட்டீர்கள். ஐயருக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
சோ: ஐயர் என்றால் என்ன அர்த்தம்?
ஐயத்தை அறுப்பவர் ஐயர். அதனால்தான் ஐயர் என்று வந்தது. ஈஸ்வரனையே அப்படி குறிப்பிடுவார்கள். எல்லா சந்தேகங்களையும் போக்கக் கூடியவர் ஈஸ்வரன். அதனால் அவரையே ஐயர் என்பார்கள். வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் பாட்டில், ‘ஐயரைக் கண்டேனடி’ என்று வரும். அதாவது ஈசனைப் பார்த்து விட்டேன் என்று. அதுதான் ஐயர். இன்றைக்கு இருக்கிற ஐயர்களெல்லாம் அப்படியா என்று கேட்டால், அது வேறு சமாச்சாரம். அது போகட்டும்.
இப்பொழுது நீங்கள் சொன்னது,
பெரியார் சொல்லியிருக்கிறாரே, ‘பாம்பையும் பாப்பானையும் கண்டால் முதலில் பாப்பானை அடி’ என்று. அவர் என்ன இருந்தாலும் பெரிய ஆள்தான். அதனால்தான் பெரியார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் சூட்சுமமாகச் சொல்லியிருக்கிறார். நாம் அதனுடைய அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
என்ன சொல்லியிருக்கிறார் அவர்? ‘பாம்பையும் பாப்பானையும் பார்த்தா, முதலில் பாப்பானை அடி. சரி! பாப்பானை அடிக்கிறோம். அடி அடி என்று அடிக்கிறோம். அதற்குள் பாம்பு என்ன ஆகும்? ஓடிப் போய் விடும். தப்பித்துக் கொள்ளும். விஷமுள்ள ஜீவன், தீமை விளைவிக்கக் கூடியது தப்பி ஓடி விடும். நீங்கள் பாப்பானை அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் ‘பாப்பானை அடித்தால், தீமை வளரும். பாம்பு தப்பித்து நன்றாக வாழும். அது வாழ வேண்டும் என்றால் நீ பாப்பானை அடி!’ என்ற சொல்லியிருக்கிறார் அவர். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாமல் நாம் ஏதோ ஏடாகூடமா அர்த்தம் செய்து கொண்டால் அவர் மீது தப்பே கிடையாது.
திருவள்ளுவர் என்று ஒருவர் வாழ்ந்தாகவோ அவர் திருக்குறளை இயற்றியதாகவோ நான் கருதவில்லை ஒரு தொகைநூலாகவே (compendium, anthology) திருக்குறளை நான் காண்கிறேன், பல வடமொழி நூல்களின் சாரம் அவற்றில் உள்ளது இதை பன்மொழி அறிஞர் வையாபுரி பிள்ளை தெளிவாகவே எடுத்து கூறியிருக்கிறார். நான் நினைப்பது என்னவென்றால் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்த வெண்பாக்கள் 5 ஆம் நூற்றாண்டில் களப்பரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கம் எடுப்பித்த வஜ்ரநந்தி தலைமையில் இருந்த சமணர்களால் தொகுக்கப்பட்டு அவர்களாலேயே கடவுள் வாழ்த்தும் இயற்றப்பட்டிருக்கலாம் அதனாலேயே அதை சமண நூல் என்று சில அரைவேக்காடுகள் கூவும்.
இதை உறுதி செய்யும் விதமாக பொயு 600 முதல் மதுரையில் ஒரு நிரந்தரமான சமண சங்கம் செயல்பட்டதாக பெர்க்லி பல்கலைக்கழக தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட் அறுதியிட்டு கூறுகிறார். திருக்குறள் போலவே இருக்கும் 400 பாடல்களை கொண்ட நாலடியார் கூட இந்த சங்கத்தை சேர்ந்தவர்களால் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் அதுவும் ஒரு தொகைநூல் தான்..
புலால் மறுப்பு, கள்ளுண்ணாமை போன்ற சில அதிகாரங்கள் தவிர இதை சமண நூல் என்று சொல்ல ஒரு சான்றும் இல்லை அது கூட சுயகட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு வைணவன் எழுதியிருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம். குலச்சிறப்பு, குடிச்சிறப்பு, வேளாண்மையின் சிறப்பு போன்றவை ஒரு சமணன் எழுதியது போல தெரியவில்லை. சமணர்களுக்கு அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்களுக்கு வேளாண்மை மறுக்கப்பட்ட செயல் சரி அதை பிறகு பார்ப்போம் இப்போது இந்த குறள்களை பார்ப்போம்.
மு.வ உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும். சாலமன் பாப்பையா உரை: தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும். கலைஞர் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
கலைஞர்,சாலமன் பாப்பையா போன்றோர் உரைகளை சிறிது திரித்தே எழுதி இருக்கிறார்கள் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோர் உரைகள் படிப்பவர்களுக்கு சிறிது கடினமாக இருக்கலாம் அதனால் இதையே அளிக்கிறேன். திரித்து எழுதியவர்களால் கூட இழி பிறப்பையும் இழிவான குடியையும் மறுக்க முடியவில்லை.
இடுகாட்டில் ஈமக்கிரியைகளை செய்யும் ஊழியனை இழி பிறப்பினன் என்கிறது புறநானூறு அது அவன் பிணத்தை எரிக்கும் இழிவான தொழிலை செய்வதனால் இருக்கலாம் எப்படியாகிலும் பிறப்பினால் அமையும் உயர்வு தாழ்வு சங்ககாலம் தொட்டே தமிழரிடம் இருக்கிறது. வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் என்கிற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் பாடலும் இதை உறுதி செய்கிறது, சரி இப்படி ஒழுக்கம் குன்றினால் என்ன ஆகும் அடுத்த குறள் இது.
மு.வ உரை: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம். சாலமன் பாப்பையா உரை: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான். கலைஞர் உரை: பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்
என்ன ஆகும் பார்ப்பானின் குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். அதாவது வேதத்தை மறந்தால் கூட திரும்ப கற்றுக்கொள்ளலாம் அது குடிப்பிறப்பை அழிக்காது வேதம் தெரியாத, சாஸ்திரங்களை மறந்த பார்ப்பானும் பார்ப்பானே ஆனால் அவன் அடிப்படை மானுட அறம் என்னும் பிறப்பினால் உண்டாகும் ஒழுக்கத்தை காக்க தவறினால் பார்ப்பனன் என்னும் குடியின் சிறப்பை கெடுத்தவன் ஆகிறான்.
பார்ப்பானை எடுத்துக்காட்டி குடிசிறப்பை கூறும் இவரை தான் நாஞ்சில் நாட்டு வள்ளுவர் என்கிறார்கள், புலால் மறுத்த தவநோன்பை மேற்கொண்ட சமணன் என்கிறார்கள். கலைஞரும் அன்றைய திராவிடர் கழகத்தவரும் எதற்கு திருக்குறளை பிடித்துக் கொண்டு தொங்கினார்கள் என்பது தான் எனக்கு இன்றும் புரியாத புதிர். ஒரு 50 குறளை குறிப்பிட்டு எடுத்து வைத்திருக்கிறேன் அவ்வப்போது இனி பதிவிடுகிறேன் தெளிவான குறிப்புகளுடன்..
மிக அருமையான கருத்துக் கதைத்தார். முக்தி அடைந்த ஞானியரையே சமணம் தெய்வநிலைக்கு உயர்த்துகிறது; வேறு எல்லாம்வல்ல கடவுள் என்பது போன்ற கோட்பாடுகள் சமணத்தில் கிடையா. ஆக பூவுலகில் முயற்சியுடையவனுக்கு எந்த ஒரு சமணக் கடவுளரும் உதவார். மேலும் வரிந்து கட்டிக்கொள்வதற்கு துறவு மேற்கொண்டு முக்தி பெற்ற சுருத கேவலியர்க்கு எந்த ஆடையும் கிடையாது.
மேற்காணும் பாடல் சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் இருந்து எடுக்கப்ப்ட்டது. இப்பாடலின் பொருள்:
“அந்தணர் அறம் செய்யச்சொல்லும் நான்மறை ஓதுவர். பிறருக்கு நன்மை செய்வர்.”
திருக்குறள் அந்தணர்களை பார்ப்பான், அறுதொழிலார் என்றெல்லாம் குறிப்பிடுகிறது. இருப்பினும் அந்தணர், பார்ப்பான், அறுதொழிலார் அனைவரும் சமம் இல்லை என்றும் கருத்துகள் உள்ளன. வள்ளுவரின் 972-ஆம் குறள் “பிறப்பினால் அனைவரும் சமம், செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்”
இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ளலாம் என்றால், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தொழில் வாரியாக மக்கள் பிரிந்திருந்தனர். உயர்வு தாழ்வு இருந்ததாக தெரியவில்லை. பிரிவினை இருந்தாலும், அனைவரும் சமமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்திருக்கின்றனர்.
மேலும், திருக்குறளில் அந்தணர் எனும் சொல் மூன்று குறள்களில் காணப்படுகிறது. 8-ஆம் குறளில், கடவுளை அறவாழி அந்தணன் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அடுத்ததாக, 30-ஆவது குறளில் “எல்லா உயிர்களிடமும் இரக்கமும் அன்பும் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.” என்கிறார் வள்ளுவர். மேலும், 543-ஆம் குறளில் “அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.” என்கிறார் வள்ளுவர்.
அடுத்தபடியாக, பார்ப்பான் எனும் சொல் 134-ஆம் குறளில் இருக்கிறது. “பார்ப்பான் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்” என்பதே அக்குறளின் பொருளாகும்.
அறுதொழிலோர் யார்? ஆறு தொழில்களை உடையவர்கள். அந்தணர்களுக்கு ஆறு தொழில்கள் உள்ளன. அதாவது மறைகளை ஓதுதல், மறைகளைக் கற்று தருதல், யாகங்களை நடத்துதல், யாகங்களைக் கற்று தருதல், அறவழியில் நடத்தல், அறவழியைக் கற்று தருதல்.
*இந்த ஆறு தொழில்களிலும் அவர்கள் அதிகமாகப் பயன்படுத்துவது வாயை தான்* (ஏன் இதை சொன்னேன் என்று பிறகு பாப்போம்)
பார்ப்பான், அந்தணர், அந்தணாளர் முதலான சொற்கள் நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிறப்பால் யாரும் அந்தணர் ஆக முடியாது, மாறாக நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்தணர்கள். பிறப்பால் தன்னை அந்தணர் என்று பிதற்றிக் கொண்டு திரியும் அன்பர்கள் மாய உலகில் வாழ்கிறார்கள்.
பிராம்மணர் என்பது இப்பொழுது சாதியாகி விட்டது. ஆனால், முன்பு பிராம்மணர் என்பதும் அந்தணர் போலவே இருந்திருக்ககூடும். அதாவது நன்னடத்தையோடு வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர் பிராம்மணர் ஆவர். ஆனால், இப்பொழுது உள்ளத்தில் அன்பு இல்லாமல், சக மனிதர்களை தாழ்ந்தவர் என்று ஏளனம் செய்து வாழ்பவர்கள் வள்ளுவர் கூறிய அந்தணர்கள் இல்லை.
அவர்கள் கூறுவார்கள், “நாங்கள் இறைவனின் வாயில் இருந்து தோன்றினோம். தாழ்ந்தவன் இறைவனின் காலில் இருந்து தோன்றினான்”. யாரும் இறைவனுடைய வாயை தொட்டு வணங்குவது இல்லை, காலை தான் தொட்டு வணங்குகிறார்கள். காலில் இருந்து ‘தோன்றியவரே’ உயர்ந்தவர் என்று கூறலாமா? வேண்டாம். பிறகு நாமும் மாய உலகில் வாழ்பவர்கள் ஆகி விடுவோம்.
உண்மையில் “வாயில் இருந்து வந்தவன் பிராம்மணன்” என்று எந்த சாத்திரமும் சொல்லவில்லை. மாறாக "வாயானவன் பிராம்மணன்” என்கிறது மனுதரும சாத்திரம். வடமொழி அறிந்தவர்களுக்கு அது நன்கு தெரியும். எனினும், மௌனம் சாதிக்கிறார்கள். அந்தணர் என்பவர் அறுதொழிலோர், ஆறு தொழில்களை உடையவர். *அந்த ஆறுதொழில்களுமே வாயைப் பயன்படுத்தும் தொழில்*. எனவே “வாயனவன் அந்தணன்” என்றானார்கள். யாராகினும் ஒழுக்கத்தோடும், உள்ளத்தில் அன்போடும், நல்லறிவு புகட்டி வாழ்ந்தால் அந்தணர் ஆகலாம்.
களவு தொழில் செய்து வந்த வால்மீகி மனம் திருந்தி, ந்ல்லொழுக்கத்தைப் பேணி இராமயணம் இயற்றி நல்லறிவைப் புகட்டினார். எனவே, அவர் பிராம்மணர் ஆகினார். (பிறக்கும் போது வால்மீகி மனிதராகப் பிறந்தார், சூழ்நிலையால் கள்வர் ஆனார். எனினும், முறையான வழிகாட்டுதலுக்குப் பின்னர் மனம் திருந்து நல்லோர் ஆனார்)
மேலும், காலில் இருந்து தோன்றியவன் என்று எவனும் இல்லை. “இறைவனின் காலானவன்” என்று தான் உள்ளது. நான் காலில் இருந்து தோன்றினேன் என்பதற்கும், நான் தான் கால் என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஏன் கால்? ஓடி ஓடி உழைக்க கால்கள் வேண்டும். எனவே ஓடி ஓடி உழைப்பவர்கள் இறைவனின் கால்கள். அவர்களே மதிப்பிற்குரியவர்கள். அவர்களைப் போற்றவேண்டும். எனவே தான் இறைவனின் தாளை (கால்களை) வணங்குவோம் என்றனர் பெரியவர்கள். ஆனால், நாம் கோவிலுக்கு சென்று இறைவனின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு, ஓடி ஓடி உழைக்கும் மக்களை ஏளனமாகப் பார்க்கிறோம். இப்படி இருந்தால் இறைவன் எப்படி அருள் தருவார்? திருந்துங்கள்.
இந்த ‘கால் கை வாய் கதை’ எல்லாம் பெரியவர்கள் நல்ல நோக்கத்தோடு தான் சொல்லி வைத்து சென்றார்கள். ஆனால், நாமோ அதைப் புரிந்து கொள்ள முடியாமால் கேவலமான ஒன்றாக மாற்றிவிட்டோம். இந்த ‘கால் கை வாய்’ கதை புரியலனா அதை மறந்திருங்க. புரிந்தால் மற்றவர்களுக்கு சொல்லி புரிய வையுங்கள்.
சில பேருக்கு இதை அந்த இறைவனே வந்து சொன்னாலும் புரியாது. ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். எனினும் சொல்ல வேண்டியது என் கடமை, நானும் சொல்லிவிட்டேன்.
இறுதியாக, நம் பொய்யாமொழி வள்ளுவர் கூறியது போல பிறக்கும் போதே யாவரும் சமமாகவே பிறக்கிறோம். செய்யும் தொழிலே நமக்குள் வேறுபாடுகள் காட்டுகின்றன. அதுபோல தான் அந்தணரும், எல்லாரையும் போல இரு கண்கள் இரு கைகள் இரு கால்கள் ஒரு வாய் என்று மனிதராய் பிறப்பவர்கள், நல்லொழுக்கத்தைப் போற்றியும் புகட்டியும் வாழ்ந்தால் அந்தணர் எனப்படுவர். நன்றி. யாரையும் நோகடிக்கும் எண்ணமில்லை, நம்ம உறவுகள் நாலு பேரு மனதில் இருக்கும் சாதி என்ற அழுக்கை துடைக்க ஒரு சிறிய ஆசையே.
எக் குடியில், எப்
பெற்றோருக்கு,
எக் குடும்பத்தில்
பிறக்கிறோம்
என்பது நம்
விருப்பத்தை,
கட்டுப் பாட்டை
மீறிய ஒன்று.
அதில் பெருமைப்பட,
சிறுமையுற
என்ன இருக்கிறது?
பிறந்த பின் என்ன
சாதித்தோம்,
நற்செயல்களால்
எத்தனை பேருக்கு
உதவினோம், நம்
இறப்புக்கு வரும்
கூட்டம் இவையே
நம் பிறப்பின் வெற்றி,
தோல்வியை
தீர்மானிக்கின்றன.
வெள்ளையரின்
இனத் திமிருக்கும்,
தாம் தான் பிறப்பால்
உயர்ந்தவர் என்று
இதர இனத்தினர்
பால் வெறுப்பையும்,
துவேஷத்தையம்
வளர்த்தவர்களைத்
தான் மகாத்மாவும்,
தந்தை பெரியாரும்
எதிர்த்துப் போராடினர்,
போராடத் தூண்டினர்.
அவர்கள் இல்லாத
இச் சூழலிலும் இன்னும்
இருத்தலுக்காகவும்,
வாழ்வுரிமைகளுக் காகவும்
போராட வேண்டிய தருணங்கள்
தற்பொழுது நிறையவே
நம்மை எதிர்கொள்கின்றன.