எனது நண்பர் ஒருவரின் மகனுக்கு நடந்த உண்மை சம்பவம். அப்பட்டியே எழுதி விடுகிறேன்.
ஒரு மாலை வேளையில் என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் பேச்சு கொடுத்தார். அவர் ஒரு ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். ”ப்ளஸ் ஒன்னா படிக்கிற?” “ஆமா அண்ணாச்சி” “ஃபர்ஸ்ட் க்ரூப்பா?” “ஹ்ம் ஆமா”.. இந்த ஃபர்ஸ்ட் குரூப் என்று வெளியில் பீற்றிக்கொள்ள பெருமையாகத்தான் இருக்கும்.. ஆனால் படிப்பதற்குள் தான் டவுசர் கழண்டு விடும்.. “ரொம்ப கஷ்டமா இருக்கும்ல ஃபர்ஸ்ட் குருப்புன்னா?” எனக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.. ஆஹா நம்ம கஷ்டத்தை புரிந்த ஒரே ஜீவன் என்று நினைத்து “ஆமாண்ணாச்சி” என்றேன்.. “நீ ஈசியா படிச்சி பாசாயி நல்ல மார்க எடுக்க என்ட்ட ஒரு ஐடியா இருக்கு” “என்னண்ணாச்சி அது?” “நீ டெய்லி ஏசப்பா கிட்ட pray பண்ணு.. நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட்” “நெஜமாவா?” “ஆமா..” “ஏசு சாமிய கும்பிட்டா நான்...” குறுக்கிட்டு, “கும்பிடுறதுன்னுலாம் சொல்லக்கூடாது.. Prayer இல்லனா ஜெபம் பண்ணுறதுன்னு சொல்லணும்.. எங்க சொல்லு பாப்போம்” “சரி. ஏசு சாமிய pray பண்ணுனா நான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துருவேனா?” “ஃபர்ஸ்ட் மார்க் என்ன? அதுக்கு பெறவு எல்லாத்துலயும் நீ தான் ஃபர்ஸ்ட்..” என்று சொல்லி என்னை அவர் வீட்டுக்குள் அழைத்துச்சென்று எப்படி முட்டி போட்டு ப்ரேயர் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுத்தார்.. பைபிளை திறந்து எனக்காக என்னமோ வாசித்தார்.. நான் நல்லா மார்க் எடுக்கணும்னு வேண்டினார்.. எனக்கு அவரையும், ஏசு சாமியையும் மிகவும் பிடித்துவிட்டது.. ‘ச்சே நமக்காக எவ்வளவு தூரம் சாமிட்ட வேண்டுறாரு? இல்ல இல்ல ஜெபம் பண்ணுறாரு?’ என்று அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒன்றை சொன்னார், “ஒங்க வீட்ல இருக்கிற ஃபோட்டோவ எல்லாம் இனிமே கும்பிடாத.. அதெல்லாம் சாத்தான்.. அதனால தான் நீ இப்ப கஷ்டப்படுற, புரியுதா?”.. நான் தயக்கத்துடன், “அப்புடியா?” “ஆமா.. சாமினா ஒன்ன இப்டி கஷ்டப்பட விடுமா? அது எல்லாமே சாத்தான்.. ஏசப்பா தான் ஒரே சாமி.. உண்மையான சாமி.. இனிமேல் அவர மட்டும் ப்ரே பண்ணு, சரியா?” “சரிண்ணாச்சி”. மறுநாளில் இருந்து நான் ஏசப்பாவை தான் ஜெபம் செய்தேன்.. சாத்தான்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தார் ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடு போட்டது போல் என் நெற்றியில் இருந்த திருநீறு அதற்கு அடுத்த நாளில் இருந்து இருக்கவில்லை. முதல் மாதத்தேர்வு முடிந்து பரிட்சை பேப்பரை கொடுத்தார்கள். தமிழ், இங்கிலீஷை தவிர அனைத்திலும் ஃபெயில். அதிலும் மேத்ஸ்சில் முட்டை.. என் வாழ்க்கையில் அது தான் நான் முதன்முதலில் ஃபெயில் ஆகிய தருணம். முட்டை மார்க் எல்லாம் என் கனவிலும் வாங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் மட்டும் முட்டை அல்ல, வகுப்பில் முக்கால்வாசி பேர் முட்டை தான்.. ஒரு க்றிஸ்டியன் பிள்ளை கூட ஃபெயில் ஆகி அழுதுகொண்டிருந்தது பாவம்.. எனக்கு கடுப்பாகிவிட்டது, ‘என்னடா இது ஏசப்பாவ கும்பிட்டும் இப்படி ஆயிருச்சே? அவருக்கு இவ்வளவு தான் பவரோ?’னு.. மாலை அந்த பக்கத்து வீட்டு அண்ணாச்சியிடம் விசயத்தை சொன்னேன்.. அவர் சொன்னார், “நீ அந்த சாத்தான இப்ப கும்பிடாம ஏசப்பாவ ஜெபம் பண்ணுறீல, அதான் சாத்தான் ஒன்ன இப்படி தண்டிக்குது”.. “ஆனா க்ளாஸ்ல எல்லாருமே ஃபெயில் தான்ண்ணாச்சி.. ஒரு க்றிஸ்டின் பிள்ள கூட ஃபெயில் தான் தெரியுமா?” “அதான்டா சொல்றேன்.. நீ ஏசப்பாவ கும்பிடுறது தெரிஞ்சதும் அந்த சாத்தான் எல்லாரையும் இப்படி பழிவாங்குது. அதான் எல்லாரையும் ஃபெயில் ஆக்குது” எனக்கு கோபம் வந்துவிட்டது.. தன்னை நம்பி கும்பிட்ட, ஸாரி, ஜெபம் பண்ணிய ஒருத்தனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை, அவனால் பிறர் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆளா எல்லாம் வல்ல கடவுள்? அவரை நம்பியா இனியும் நாம் போவது? சாத்தான் என்றாலும் இத்தனை நாட்களில் என்னை ஃபெயில் கூட ஆக்கியதில்லை பிள்ளையாரும், சரஸ்வதியும். படிக்காமல் போனதால் வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொடுத்தாலும், பரிட்சை அன்று கும்பிட்டு போனால் கண்டிப்பாக பாஸ் தான்.. ஆனால் இந்த புதுக்கடவுள் என்னை ஃபெயில் ஆக்கும் வரை, அதுவும் முட்டை வாங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அந்த ஆள் வேஸ்ட் என முடிவு செய்து கொண்டு, அந்த அண்ணாச்சியிடம் இருந்து மெல்ல நகர்ந்தேன்.. “டேய் எங்க போற? வா சாத்தான்ட்ட இருந்து ஒன்ன காப்பாத்த ஒரு ப்ரேயர் பண்ணிருவோம்” ’ஒன்னும் வேண்டாம்.. ஒங்க ஏசுவ விட எங்க சாத்தானுக்கு தான் பவர் ஜாஸ்தின்னு தெரியுது, நான் அவரையே கும்பிட்டுக்கிறேன்’னு சொல்ல நெனச்சேன்.. ஆனா தைரியம் இல்லாதனால, “எங்கம்மா தேடுவாங்க அண்ணாச்சி, நான் பெறவு வாரேன்”னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.. அதற்கு பின் நான் அவர் முகத்தில் கூட முழிக்கவில்லை.. ஜெபமும் செய்வதில்லை, சாமி தான் கும்பிடுகிறேன் தினமும் என் நெற்றியில் வெள்ளைக்கோடு போன்ற திருநீறு இட்டு கொள்கின்றேன் என்றான் அந்த சிறுவன்.
ராமசாமி என்பவா் அறிவிழந்து மதம்மாறி ராபா்ட் ஆனால் குடியா மூழ்கிட போகுது என்றே பலாின் எண்ணம். தமிழக கிராமத்தில் நடந்தஉண்மை நிகழ்வு. குளத்துப்பாசனத்தை அடிப்படையாக கொண்டது அந்த கிராமம். அங்கே ஓா் மாாியம்மன் கோவில் அந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா நடைபெரும். அந்த ஊா் கோவில் வழக்கப்படி குளத்து மண்னை குடும்பமாய் வந்து சறிதளவேனும் அகற்ற வேண்டும் அப்போது மாாியம்மன் மனம் மகிழ்வாள் என்ற நம்பிக்கை. அதன்படி ஊரே ஈடுபாட்டுடன் செய்தது இதனால் பைசா செலவின்றி குளமும் தூா் வாரப்பட்டது விவசாயமும் செழித்து, ஊா் மக்களும் நலமுடன் மகிழ்ச்சியாய் இருந்தனா். இப்படியாய் இருந்த கிராமத்தில் பாவாடை கோஷ்டி அதாங்க பாதாியாா் டீம் உள்ளே நுழைந்தது வழக்கம் போல் ஆசை வாா்தைகளால் ஆரம்பத்தில் சிலரை மதமாற்றி பின் அவா்களை வைத்தே பெரும் எண்ணிக்கையில் ஏனையேரையும் கூட்டல் குறியீட்டை கும்பிட வைத்தனா். ஹிந்துகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததனால் மாாியம்மன் கோவில் தருவிழாவும் அதையொட்டி நோ்ந்து கொண்டு தூா் வாரும் வைபவமும் நின்றது. குளமும் தூா்ந்து போய் விவசாயமும் மறைந்து, பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அதிகம் போ் பஞ்சம் பிழைக்க ஊரை காலிசெய்தனா். மதமாற்றத்தினால் நமக்கும் நம் நாட்டிற்கும் ஏற்படும் இழப்புகள் ஒன்றா இரண்டா அப்பப்பா எண்ணிலடங்காதது.