New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்- குறளை திரித்து தமிழர் மெய்யியலை இழிவு படுத்தும் திராவி


Guru

Status: Offline
Posts: 24811
Date:
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்- குறளை திரித்து தமிழர் மெய்யியலை இழிவு படுத்தும் திராவி
Permalink  
 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.  குறள்:50 இல்வாழ்க்கை
இந்த உலகில் புகழோடு நீதி நூல்கள் காட்டும் அற வழியில் வாழ்ந்தவர் வானுலகில் (சொர்கத்தில்) வாழும் தேவர்களோடு (தெய்வம்) வைக்கப் படுவார்

திருவள்ளுவர் வானுறையும் தெய்வம் என்பது என்ன?
வானுறையும் தெய்வம் என்ற சொல் தேவர்களை குறிக்கிறது என்பதை நாம் வள்ளுவத்திலேயே காணலாம்

வானில் உள்ள தெய்வத்திற்கு சிறப்பான பூஜைகள் எனக் (குறள்18) கூறுகிறார்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. குறள் 18: வான்சிறப்பு.

விருந்தினரை நன்கு உபசரித்து, வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவன் வானுலக தேவர்க்கு நல்ல விருந்தினன் (குறள்-86)ஆவான்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: விருந்தோம்பல்.
மேலே உள்ளது வானுலகம் - மேலுலகம் (குறள்-222)
இந்த வான் எனும் அகன்ற மேலுலகத்தின் அரசன் இந்திரன் (குறள்-25)

நரகம் -தேவர்கள் வாழும் சொர்கம் மேலுலகம், வான் என்ற வள்ளுவரே, நரகம் என்பதை  மீள முடியாத இருள்(ஆர் இருள்), இருள் சேர்ந்த இன்னா உலகம், மீள் முடியாத அளறு என்கிறார்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 121
மணக்குடவர் உரை: மன மொழி மெய்களை அடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை அடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

மனிதன் தூங்குவது போல பிறப்பு, தூங்கி எழுவது போலே பிறப்பு (குறள்-339),   இந்த பிறப்பில் நல்ல அற வாழ்க்கை அடக்கத்தோடு வாழ்ந்தால் தேவர் வாழும்  சொர்கம்  செல்லம்

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். குறள் 346: துறவு
உடம்பை நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், தேவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
மு. கருணாநிதி உரை:துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
மு. கருணாநிதி உரை:அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. குறள் 353:மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
மு. கருணாநிதி உரை:ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. குறள் 222: ஈகை.
மணக்குடவர் உரை:ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.
மு. வரதராசன் உரை:பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
மு. கருணாநிதி உரை:பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. குறள் 247: அருளுடைமை.
மணக்குடவர் உரை:அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
மு. வரதராசன் உரை:பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
மு. கருணாநிதி உரை:பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
சாலமன் பாப்பையா உரை:பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.



-- Edited by Admin on Sunday 6th of August 2023 05:36:55 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
Permalink  
 


உலக உயிர்களெல்லாம் தொழும் பண்புகள்
நல்ல பண்பு தவம் பெற்றால் உலகின் அனைத்து உயிர்களும் தொழுவார்கள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260: புலான்மறுத்தல்.
இறைச்சியைத் உண்ணாதவர்களையும் அதற்காக எந்த உயிரையும் கொல்லாதவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். குறள் 268: தவம்.
தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் இல்லாதவர்களை மற்ற உயிர்கள் எல்லாம் தொழும்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். குறள் 1033: உழவு.
உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
முதல் இரண்டு குறட்பாக்களும் துறவையும், உயிர் கொலை செய்து மாமிசம் தின்பதையும் எதிர்த்து இப்பண்பு கொண்டோர் போற்றப் படுவர் என்பதை உயர்வு நவிர்ச்சியில் கூறினார். சமணத்தில் உழவு செய்தால் மண்ணில் உள்ள உயிர்கள் இறக்கும் என்பதால் தடை என்பதை எதிர்த்தது 3ம் குறள்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். குறள் 294: வாய்மை
சாலமன் பாப்பையா உரை:உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். ஒழுக்கமுடைமை. குறள் 140:
மணக்குடவர் உரை:அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
பரிமேலழகர் உரை:உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)
மு. வரதராசன் உரை:உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. அறிவுடைமை. குறள் 425:
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
மு. வரதராசன் உரை:உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
மு. கருணாநிதி உரை: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. குறள் 425: அறிவுடைமை
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
பரிமேலழகர் உரை:உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம். ('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).
மு. வரதராசன் உரை:உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. குறள் 426: அறிவுடைமை
மணக்குடவர் உரை:யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிமேலழகர் உரை:உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். ஒழுக்கமுடைமை. குறள் 140:
மணக்குடவர் உரை:அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
பரிமேலழகர் உரை:உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)
மு. வரதராசன் உரை:உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். குறள் 294: வாய்மை
மணக்குடவர் உரை:தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
பரிமேலழகர் உரை:உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
மு. கருணாநிதி உரை:மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 திருக்குறள் தமிழர் மெய்யியலின் வேர் வேதங்களும், தர்ம சாஸ்திரங்கள் என்பதை பொருட் பாலில் நல்ல அரசனின் செங்கோன்மையிலும், மோசமான அரசனின் கொடுங்கோன்மையிலும் உறுதியாகக் கூறி உள்ளார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை.
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். கொடுங்கோன்மை. குறள் 560:
மணக்குடவர் உரை:பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
ஒரு அமைச்சர் அரச்னிற்கு வழி காட்ட அளவியல் நூல்கள் அறிந்து இருக்க வேண்டும், நல்ல அற வழிக்கான அளவியல் நூல்கள் என்ன என்பதை தமிழ் மெய்யியல் மரபை உறுதி காட்ட தமிழ் சமணர் மணக் குடவரின் உரை உறுதி செய்கிறது

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவையஞ்சாமை.
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

121 அறத்துப்பால் 2.இல்லற இயல் 13. அடக்கம் உடைமை.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
நாமக்கல் கவிஞர் : அடக்கமுடைமை என்ற நல்ல குணம் ஒருவனை தேவர்களோடு சேர்த்து வைக்கும் அடங்காமை என்ற கெட்ட குணம் அவனை மிகுந்த இருட்டான இடத்தில் தள்ளிவிடும்.
திருக்குறளார் வீ.முனிசாமி : அடக்கமாகிய அறம் ஒருவனை அமர்கள் உலகில் கொண்டு செலுத்தும், அடக்கமில்லாத தீய குணம் பொறுத்தற்கரிய இருண்ட துன்ப உலகில் செலுத்தும்.
மு.வரதராசனார் : அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்,அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
சாலமன் பாப்பையா : அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
மு. கருணாநிதி : அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
G.U.Pope :Self- control will place a man among the gods. the want of it will drive him into the thickest darkness of hell.

50 அறத்துப்பால் 2. இல்லற இயல் 5. இல்வாழ்க்கை.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
நாமக்கல் கவிஞர் : உலகத்தில் மனைவி மக்களோடு இல்லறம் நடத்தி வாழ வேண்டிய முறையில் வாழ்கின்றவன், அதற்கென்று அவன் வேறு முயற்சி செய்யாமலேயே, வானத்திலுள்ள தெய்வத்தோடு சேர்க்கப்படுவான்.
திருக்குறளார் வீ.முனிசாமி : இவ்வுலகில் இல்லறத்தினை நடத்தி வாழவேண்டிய முறையில் வாழ்பவன் வானத்தில் வாழ்கின்ற தெய்வங்களுள் ஒன்றாக வைத்து மதிக்கப்படுவான்.
மு.வரதராசனார் : உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா : மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
மு. கருணாநிதி :தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்
G.U.Pope : He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the gods who dwell in heaven.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 திருக்குறள் தமிழர் மெய்யியலின் வேர் வேதங்களும், தர்ம சாஸ்திரங்கள் என்பதை பொருட் பாலில் நல்ல அரசனின் செங்கோன்மையிலும், மோசமான அரசனின் கொடுங்கோன்மையிலும் உறுதியாகக் கூறி உள்ளார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை.
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். கொடுங்கோன்மை. குறள் 560:
மணக்குடவர் உரை:பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

ஒரு அமைச்சர் அரச்னிற்கு வழி காட்ட அளவியல் நூல்கள் அறிந்து இருக்க வேண்டும், நல்ல அற வழிக்கான அளவியல் நூல்கள் என்ன என்பதை தமிழ் மெய்யியல் மரபை உறுதி காட்ட தமிழ் சமணர் மணக் குடவரின் உரை உறுதி செய்கிறது

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவையஞ்சாமை.
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன?

tvm%2013ba.png

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50: இல்வாழ்க்கை.
நீதிநூல்கள் காட்டும் வழியில் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் அதில் வழிகாட்டி பூமியில் நெறியோடு வாழ்பவன் - அவனோடு வாழும் மக்களால் வானுலகில் வாழும் தேவர்களுக்கு சமமாக போற்றப் படுவான்.
photo_2023-05-21_15-44-40.jpg

"வைக்கப்படும்" என்ற இதே வழியில் மேலும் மூன்று குறட்பாக்கள் உள்ளது
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல்.
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர்

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை.
இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்பவர்களால் இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

நம் மேலே பார்த்த நான்கு குறட்பாக்களிலும் உடன் வாழும் மக்கள் அவரை செத்தாருள், ஈறை, பேய் எனக் கருதுவர், என்பது போலே வாழ்வாங்கு வாழ்பவர் நிலையும், அவர் தெய்வம் ஆகிவிட்டாதாக் வள்ளுவர் கூறினார் என்பது திருவள்ளுவர் உள்ளத்தின் வழி அல்ல, தவறான (உங்கள்) கருத்து வள்ளுவம் மீது திணிக்கப் படுகிறது.

தமிழ் இலக்கிய மரபில் - கடவுள், இறைவன் & தெய்வம்
மூன்று சொற்களையும் பயன் படுத்துவது உள்ளது. 3 சொற்களுமே முழு முதற் கடவுளை, தேவர்களை, ஊழ் மற்றும் அரசனைக் குறிக்கவும் வரும்.

ஊழ்வினைக்கு ஏற்றபடி பயனை ஊட்டும் ஒரு பொருள் இருக்க வேண்டும். அப்பொருளே பரம் பொருளாகிய கடவுள். ஊழின்படியே நுகர்ச்சியை வரையறை செய்வதால்தல கடவுளையே பால் வரை தெய்வம் என்று குறிப்பதுண்டு.
'பால்வரை தெய்வம் வினேயே பூதம்
ஞாயிறு திங்கள்’ (கிளவியாக்கம், 57) தொல்காப்பியச் சூத்திரம் வினையைத் தனியாகவும், பாலாகிய அதனே வரையறை செய்யும் தெய்வத்தை வேறாகவும் கூறுகிறது.

திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் உரை இதை உறுதி செய்யும்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. குறள் 377: ஊழ்.
மணக்குடவர் உரை: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் ஆறு முறை உள்ளதில் - ஊழ் எனும் பொருளில் 2 முறை
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் தேவர் எனும் பொருளில் 2 முறை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குறள் 702
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் முழு முதற் கடவுள் எனும் பொருளில் 2 முறை
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை - குறள் 6:5
வள்ளுவர் தென்புலத்தார் என முன்னோரையும் தெய்வம் என வேறாக் கூறி உள்ளதே பெரும் ஆதாரம் ஆகும் 

photo_2023-05-21_15-44-40%20(2).jpgtvm%2013ba.png
திராவிடியார் வழி நாத்தீகரும் தன்னை பயித்தறிவுவாதி எனக் கூறு மோகனராசுவின் கட்டூரைகள்/ நூல்கள்தேவநேயர்-அருளப்பா- தெய்வ நாயகம் மோசடி கிறிஸ்துவ உரையோடு திருக்குறள் ஓலைச் சுவடி தயாரிப்பின் அடிப்படை என்றால் கிறிஸ்துவ மதவெறி என்றால் மோகனராசு கட்டுரைகள் திராவிடியார் மதவெறி எனலாம்
நவீன திராவிடியார் புலவர்களும் அன்னிய கிறிஸ்துவ மதவெறியர்களும் தமிழர் மெய்யியல் சிதைக்க வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்பதை முனோர் வழிபாடு எனவும்; வள்ளுவம் மனிதன் தெய்வம் ஆக்குகிறது என்போர் வள்ளுவத்தை சிறுமை செய்யும் கயமை செய்பவரே



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்- குறளை திரித்து தமிழர் மெய்யியலை இழிவு படுத்தும் திரா
Permalink  
 


திருக்குறளில் தேவர் உலகம்-வள்ளுவரும் வானவரும்! -By ச.நாகராஜன்
பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!
மிகப் பழைய சங்க இலக்கிய நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.
தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை பாரத நாடெங்கும் உள்ள மக்கள் அறிவர். ஹிந்துப் பண்பாட்டை விளக்கும் ஏராளமான கதைகளும் அதைச் சார்ந்த சடங்குகளும், விழாக்களும், நம்பிக்கைகளும் தொன்மங்களும் வான உலகில் –விண்ணுலகில் – இருக்கும் வானவரைச் சார்ந்தே உள்ளன.
திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கே தேவர் என்ற பெயரும் உண்டு. அவருக்குரிய பத்துப் பெயர்களும் அவரது உயரிய பண்பையும் அருமையையும் எண்ணி, போற்றித் தரப்பட்டு வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர் –என்ற ஔவையாரின் பாடலில் தமிழ்ம்றையும் நான்மறையும் ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறப்படுகிறது!
இனி, வள்ளுவரின் கிண்டல் குறள்கள் அவரது அரிய மேதைத் தனமையையும் அதில் இழைந்து ஊடாடி விளங்கும் நகைச்சுவையையும் காட்டுவன.
இந்த நகைச்சுவைக் குறள்களில் முக்கியமான குறள் ஒன்று தேவர் குறள்.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – குறள் 1073
“தேவர் அனையர் கயவர்”-தேவரும் கயவரும் ஒன்று போலத் தான் என்று வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் திடுக்கிடுகிறோம். தூக்கிவாரிப் போடுகிறது.
ஆனால் அவர் அடுத்து அதற்கான காரணத்தை விளக்கும் போது சிரிக்கிறோம். இருவரும் தம் மனம் போன போக்கிலேயே அனைத்தையும் செய்யும் தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் தேவர் அனையர் கயவர்!!
வையத்துள் புண்ணியச் செயல்களைச் செய்பவரே வானுறையும் பேறு பெற்றவர்கள். அவர்கள் மனம் போன போக்கில் நல்லதையே செய்வர்.
ஆனால் பூமியில் மனம் போன போக்கைச் செய்யும் கயவர் தீயவற்றையே செய்வர். உயர்ச்சியும் இழிவுமாகிய காரண வேறுபாட்டால் நகைச்சுவையை ஊட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வள்ளுவர். நகைச்சுவையுடன் கூடிய கருத்தால் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்.
அடுத்து வான் நாட்டை புத்தேள் நாடு என்றும் வானவரை புத்தேளிர் என்றும் வள்ளுவர் கூறி இருக்கும் குறட்பாக்கள் சுவையானவை.
இப்படி வரும் ஆறு குறள்களைப் பார்ப்போம்.
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 213
பிறர்க்கு உதவி செய்யும் நல்ல பிரதிபலன் பாராத உதவி செய்யும் தன்மை தேவர் உலகத்திலும் பூவுலகத்திலும் காண்பது அரிதாகும்.
ஈவாரும் இல்லை, ஏற்பாரும் இல்லை என்பதால் தேவருலகில் ஒப்புரவு அரிது. யாவருக்கும் ஒப்பது இது போல வேறு ஒன்று இல்லாமையால் பூவுலகில் இது அரிது.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு – குறள் 234
ஒருவன் நிலவுலகில் பொன்றாத புகழைச் செய்வானாயின் வான் உலகம் அவனை வரவேற்குமேயல்லால் தன்னை எய்தி இருக்கும் ஞானிகளைப் போற்றாது.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு குறள் 290
களவினைச் செய்வார்க்கு உடம்பில் உள்ள உயிர் தவறும். அந்தக் களவினைச் செய்யாதவர்க்கு வானுலகம் வாய்த்தல் தவறாது.
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார் பின் சென்று நிலை குறள் 966
மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பவர்கள் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை அவனுக்கு இவ்வுலகப் புகழைத் தராது. தேவர் உலகத்திலும் கொண்டு சேர்க்காது. இப்படி அவமதிப்பார் பின் செல்வதால் அவனுக்குப் பின் என்ன தான் பயன்?
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து குறள் 1323
நிலத்தில் நீர் கலந்தாற் போல ஒன்று ப்ட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் ஊடலில் காணப்படுவது போன்ற இன்பம் தேவருலகில் உண்டா?
பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு குறள் 58
பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுவாராயின் தேவருலகில் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
அடுத்து வரும் மூன்று குறள்களில் அமரர் என்ற வார்த்தையையும், வானவர் என்ற வார்த்தையையும் தேவர் பயன்படுத்துகிறார்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் குறள் 121
ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவர் உலகத்து உய்க்கும். அடங்காமையோ ஆர் இருள் கொண்ட நரகத்தில் செலுத்தும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (குறள் 18)
வானம் வறண்டு மழை இல்லாது போனால் இவ்வுலகில் வானவர்க்குச் செய்யும் பூஜை, திருவிழா எதுவும் நடைபெறாது.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு (குறள் 86)
தேவர்கள் விரும்பி வரவேற்கும் விருந்தினர் யார் தெரியுமா? பூவுலகில் வந்திருந்த விருந்தினரை நன்கு உபசரித்து அனுப்பி விட்டு அடுத்து வரும் விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றானே அந்த உத்தமன், அவனைத் தம் விருந்தினராக ஆவலோடு வரவேற்பார்களாம் தேவர்கள்!
இன்னும் ஒரு குறளில் வானோர்க்கும் மேலான உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்.
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)
யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும்.
தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்
அமையார்தோள் அஞ்சு பவர் (குறள் 906)
மனைவியின் அழகிய தோளுக்கு அஞ்சி நடக்கின்றவர் தேவரைப் போல இந்த உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்மை இல்லாதவரே ஆவர்.
ஹிந்துக்களின் வேதம், உபநிடதம், புராணம் ஆகியவை கூறும் பெரும்பாலான செய்திகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.
பாரதம் முழுவதற்குமான ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவரே வள்ளுவர் என்பதும் அதைத் தன் குறள் நெடுகிலும் சுட்டிக் காட்டுகிறார் என்பதற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்.
கடைசியாக் ஒன்று. இமையவர் கோமானான இந்திரனையும் அவர் விட்டு விடவில்லை.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)
ஐந்து புலன்களின் ஆசையை ஒழித்தவர்க்குச் சான்று கூற விசும்புளார் கோமானான இந்திரனே வருவான்
ஆஹா, பதிமூன்று குறள்களில் பண்பாட்டைத் தெள்ளென விளக்கும அனைத்தையும் வள்ளுவர் தரும் பாங்கிற்கு ஈடு இணை உண்டோ!
ஏராளமான செய்திகளைப் பெறுகிறோம்.
வானவர் உலகம் உண்டு.  அதற்கும் மேலான உலகமும் உண்டு. வானவர்க்கு பூவுலகினர் பூஜையும் திருவிழாவும் எடுப்பர். மழை இல்லையேல் அவை நடைபெறா. (இந்திரவிழா உள்ளிட்ட பழைய செய்திகளையும், மழை தரும் பொறுப்பு இந்திரனுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)
அடக்கம் தேவ லோகத்தையும் அடங்காமை நரகத்தையும் தரும். மனைவி கணவனைப் போற்றல் வேண்டும். அது அரிய வானுலக வரத்தைத் தரும்.
தாம்பத்ய இன்ப உறவில் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.
புகழுடைச் செயல்களைப் புரிபவன் பொன்னுலகம் போவான்.
களவுத் தொழில் செய்தலும், தன்னை அவமதிப்போரின் பின்னால் செல்லுதலும் தேவர் உலகை அடைய முடியாமல் தடுக்கும் தீமைகளாகும்
இன்னும் தேவாமிர்தத்தைச் சொல்லாமல் வள்ளுவரால் சும்மா இருக்க முடியுமா?
நான்கு குறள்களில் சாவா மருந்தான தேவாமிர்தத்தையும் குறிப்பிட்டு விடுகிறார்.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று – (குறள் 11)
மழையை உலகம் அமிழ்தம் எனப் போற்றுவதை இங்கு வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (குறள் 64)
தன் குழந்தையின் சிறுகை அளாவிய கூழை விட தேவாமிர்தம் சிறந்ததா, என்ன? இல்லை என்று ஓங்கிச் சொல்வோம் நாம். உலகியல்பு இது!
நம் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஒரு உவமையையும் அவர் தந்து விடுகிறார்.ஏனெனில் அப்படிச் சொன்னால் தான் அவர் சொல்ல வரும் பொருளுக்கு வலிமை சேரும்! அதனால் தான்!
நல்ல கற்றறிந்தோர் கூடிப் பேசும் அவையில் ஒன்றுமே படிக்காத ஒரு முட்டாள் உளற ஆரம்பித்தால், ஐயகோ, அது தூய்மை இல்லாத முற்றத்தில் படைக்கப்பட்ட நல்ல அமிர்ததிற்கு ஒப்பாகும். (‘அசுத்தம்’ உள்ள இலையில் அமிழ்தம் வைக்கப்பட்டால்….?!)
அங்கணத்துள் உக்க அமிழ்தத்தால் தங்கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல் (குறள் 720)
இன்னும் ஒரு குறள்- தலைவியின் தோள் அமிர்தத்தினால் ஆனது!
உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் (குறள் 1106)
தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் (போக இருக்கும்) உயிர் தளிர்ப்பதால் இவள் தோள் அமிர்தத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்!
எப்படி இருக்கிறது நான்கு குறள்கள்.
1330 குறள்களில் சுமார் 17 குறள்களில் தேவலோகத்தைக் காட்டுகிறார் தேவர்! அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக!
இதுவே அவர் தன் கருத்துக்களுக்கு வானுலகைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
என்ன இருந்தாலும் அவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துள் சேர்ந்தவர் தானே ‘தனது இனத்தை’ விட்டுக் கொடுப்பாரா என்ன?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard