அபூமூஸா (ரளி) அவர்கள் அறிவித்தார்கள்; நிச்சயமாக இரண்டு ஆண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் விஷயமாக வழக்குத் தொடுத்தார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரும் அந்த ஒட்டகம் தனக்குரியது என நபி (ஸல்) அவர்களிடம் வாதிட்டார்கள். மேலும் அவ்விருவரில் ஒவ்வொருவருடனும் இரண்டு சாட்சியாளர்கள் (வந்து) அந்த ஒட்டகம் அவருக்குச் சொந்தமானது என சாட்சி கூறினர். எனவே நபி (ஸல்) அவர்கள், அந்த ஒட்டகம் அவ்விருவருக்கும் இரு பாதியாகும் என தீர்ப்பளித்தார்கள்
இந்த ஹதீஸை படித்த போது ஏதோ ஒரு தளத்தில் படித்த கதை நினைவுக்கு வந்தது
நவீன சாலமன் கதை
இரண்டு பெண்கள் ஓர் இளம்பெண்ணுடன் அவைக்கு வந்து, ”இவள் என் மருமகள். என்னோடு அனுப்பிவைக்க வேண்டும்” என்று வாதாடினார்கள். சாலமன் போலவே இந்த நவீன சாலமனும், அந்தப் பெண்ணை இரண்டாக வெட்டித் தரும்படி ஆணையிட்டான். அப்போது ஒருத்தி ‘வேண்டாம்’ என்று பதற, மற்றொருத்தியோ சிரித்துக்கொண்டிருந்தாள்.
உடனே, ‘மருமகள் வெட்டுப்பட வேண்டும் என விரும்பியவளே உண்மையான மாமியார்’ என்று நவீன சாலமன் தீர்ப்பளித்ததாக, மாற்றி யோசித்த ஒருவர், இணையத்தில் நகைச்சுவைக் கதை ஒன்றை உலவவிட்டிருக்கிறார்