நபியவர்கள் கூறினார்கள்...'பனீ இஸ்ரவேலர்களில் தவறான நடத்தை உள்ள விபச்சாரம் புரியும் ஒரு பெண் பாலைவனத்தில் நடந்து செல்கிறாள். அப்போது அங்கே ஒரு நாயைக் காண்கிறாள். அந்நாய் அருகிலிருந்த கிணறில் சுற்றி வருவதும் அதில் ஏறுவதுமாக இருந்தது. தாகத்தின் கடுமையால் நாவைக் கீழே தொங்கப் போட்ட வண்ணம் இருக்கிறது. தாக மேலீட்டால் உயிரை விடக் கூடிய நிலையில் இருக்கிறது. தவறான நடத்தையுள்ளவள், அவளது இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தவள், பிறரை வழி கெடுத்தவள், பாவங்களில் மூழ்கி இருந்தவள், தவறான முறையில் உழைத்துச் சாப்பிட்டவள் அந்த நாயின் பரிதாப நிலையைப் பார்த்து இரங்குகின்றாள். தனது பாதணியைக் கழட்டி தன் முகத்தை மூடும் துப்பட்டியால் அதனைக் கட்டி அதனைக் கிணற்றிணுள் விட்டு நீரினை அள்ளி அந்த நாய்க்கு நீர் புகட்டுகின்றாள். அல்லாஹ், அவளின் இந்தச் செயலுக்காக அவளை மன்னித்து விட்டான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
அதாகப்பட்டது மக்கழே விபச்சாரம் குற்றம் ஆனால் அந்த விபச்சாரி ஒரு நாயிக்கு தண்ணீர் கொடுத்து விட்டால் போதும் ..அவள் குற்றமற்றவள் என்று அல்லாவே மன்னித்து விடுகிறான் ....இப்படிப்படிப்பட்ட அருமையான தீர்ப்பு ஹதீஸில் இருக்கும் போது விபச்சாரத்திற்கு கசையடி மரணதண்டனை என்பதெல்லாம் வீண் தானே!😀😀😀😀
30. நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக்கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.
31. (நபியின் மனைவியரான) உங்களில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நல்லறம் செய்பவருக்கு அவரது கூலியை இரண்டு தடவை வழங்குவோம். அவருக்கு மதிப்புமிக்க உணவையும் தயாரித்துள்ளோம்.
32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
33. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
திருக்குர்ஆன் 33:33
இவ்வளவு எச்சரிக்கைக்கு பிறகும் முகமது தனது மனைவிகள் அனைவரையும் தலாக் செய்யுமளவுக்கு அவர்கள் செய்த தவறு என்ன.? அதற்கு அல்லாஹ் பஞ்சாயத்தை கூட்டவேண்டிய தேவையென்ன.?
3. இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறிய போது, அம்மனைவி அச்செய்தியை (மற்றொருவரிடம்) கூற அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டினான். அப்போது அதில் சிலவற்றை (அம்மனைவியிடம்) நபி எடுத்துக்காட்டி, சிலவற்றை எடுத்துக்காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்த போது "இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்'' என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும், நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என நபி விடையளித்தார்.
4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் (அதுவே நல்லது.) உங்கள் இருவரின் உள்ளங்கள் தடம் மாறி இருந்தன. அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால் அல்லாஹ்வே அவரது உதவியாளன். ஜிப்ரீலும், நம்பிக்கை கொண்டோரில் நல்லோரும், வானவர்களும் அதன் பின் (இவருக்கு) உதவுபவர்கள்.
5. உங்களை அவர் விவாகரத்துச் செய்துவிட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான நம்பிக்கை கொண்ட, கட்டுப்பட்டு நடக்கிற, திருந்திக் கொள்கிற, வணக்கம் புரிகிற, நோன்பு நோற்கிற விதவைகளையும், கன்னியரையும் மனைவியராக அவரது இறைவன் மாற்றித்தரக் கூடும்.
திருக்குர்ஆன் 66:5
இந்த வாசகங்கள் கடவுளிடம் இருந்து வந்தவையா இல்லை இளம் அழகிகளை மனைவிகளாகக் கொண்ட ஆண்மையற்ற கிழவனிடமிருந்து வந்தவையா?
அபூ உசைத் அறிவித்தார் நாங்கள் நபி அவர்களுடன் ‘அஷ்ஷவ்த்’ என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்திற்கு கிளம்பினோம். இரண்டு சுவர்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். ஜௌவனியா (ஜவ்ன் குலத்துப் பெண்) அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார், அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். நபி அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ (உடலுறவுக்காக ) என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் இளவரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாவிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி அவர்கள் அவரை நோக்கி ‘அடைக்கலம் கொடுப்பவனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் போக விடு’ என்று கூறினார்கள். [Bukhari Volume 7, Book 63, Number 182]
முகமதுக்கு முன்னரே இருக்கும் மனைவிகள் போதாதா? தான் பார்க்கும் அழகான பெண்களுடன் எல்லாம் படுக்க வேண்டுமா? அவரின் குணத்தைப் பாருங்கள். சிறுமி ஜௌவனியாவை பார்த்த உடனே அவரின் காமம் தலைக்கேறுகிறது. “உன்னை தானமாக கொடு” என்கிறார் மறுக்கப் பட்டவுடன் அவர் கோபம் தலைக்கேறி அவளை அடிக்க கையை ஓங்குகிறார். அவள் கடவுளே காப்பாற்று என்று அலறியவுடன் அந்த வெறியர் மனம் திரும்பி தனது அருவருப்பான நடத்தைக்காக குற்ற உணர்ச்சி கொள்கிறார் தனது மனசாட்சியை தேற்ற அந்த பெண்ணுக்கு இழப்பீடாக சில துணிகளை கொடுக்க முடிவெடுக்கிறார். இது போன்ற நடத்தை ஒரு ஆரோக்கியமான மனவளர்ச்சியுள்ள மனிதனுடையதாகுமா?
82. “நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தங்கள் முகத்தையும் இரண்டு கைகளையும் தழுவினார்கள். காலுறைகளின் மீது தடவினார்கள்“ என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது