சர்ச்சில் காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சேகரகுருக்கள் இடையே சண்டை – அடிக்கடி வழக்குகளில் சிக்கி வரும் சி.எஸ்.ஐசர்ச்சுகள்!
அடிக்கடி வழக்குகளில் சிக்கி வரும் சி.எஸ்.ஐ சர்ச்சுகள்: சி.எஸ்.ஐ [Church of South India] அடிக்கடி வழக்குகளில் சிக்கி வருகின்றது. சென்ற பிப்ரவரி-மார்ச் 2017ல் மோசடி வழக்கில் பன்னிரென்டு பேர் மேல் வழக்குத் தொடரப்பட்டது. திருப்பூர் அவினாசி ரோட்டில் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயம் [ St Paul’s Church] அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆயராக பாதிரியார் விஜயன் (வயது 58) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்த திலீப்குமார், திருப்பூர் ஜே.எம்.1 கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்[1]. அதில் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.15 கோடி வரை மோசடி நடந்துள்ளது என்றும் மேலும் தான் நன்கொடையாக வழங்கிய ரூ.10 ஆயிரத்தை தேவாலய கணக்கில் வரவு வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்[2]. மேலும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்த கோவை பேராயர் திமோத்தி ரவீந்தர், திருப்பூர் ஆயர் விஜயன் உள்பட 12 பேர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது[3].
பன்னிரென்டு பேர் மீது வழக்குத் தொடரப் பட்டது[மார்ச்.2017]: வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்[4]. அதன்படி –
- கோவை பேராயர் திமோத்தி ரவீந்தர்,
- செயலாளர் பிரின்ஸ் கால்வின்,
- பொருளாளர் சாமுவேல் டேவிட்
- மங்கல் தாஸ்,
- திருப்பூர் பகுதி தலைவர் பாதிரியார் வில்சன் குமார்,
- திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலய ஆயர் விஜயன்,
- செயலாளர் ஜான் சந்திர ராஜ்,
- பொருளாளர் தாய் மணி ஜோசப்,
- சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலய முன்னாள் ஆயர் வில்சன் பிரேம்குமார்,
- முன்னாள் செயலாளர் மற்றும் பொருளாளர் பிராங்கின் பரிமளராஜ்,
- ஆலோசகர் ஜெய ரூபன் ஜான்சன், அவரது மனைவி பெர்சியா லிடியா ,
- கமிட்டி உறுப்பினர் வில்சன் ஆகிய 12 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்குள், பாளையங்கோட்டை சர்ச்சுகளில் காணிக்கைப் பணம் வசூலிப்பு மற்றும் பிரிப்பு போன்றவற்றில், இரு சர்ச்-பிரிவினர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சேகரகுரு இடம் மாற்றமும், சண்டையும்: நெல்லை சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ ஆலயங்களில் இருதரப்பு பாதிரியார்களிடையே நடந்துவரும் மோதல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருநெல்வேலி மாவட்ட சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ அமைப்பின் லே செசயலர் [Parish priest] பதவிக்கு நடந்த தேர்தலில் வேதநாயகம் அணியினர் வெற்றிபெற்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் பாதிரியார்கள் வெளியிடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். ஆனால் அங்கு ஏற்கெனவே பணியாற்றிவரும் பாதிரியார்களுக்கும் புதிதாக மாற்றப்பட்ட பாதிரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு அடிதடி மோதல்கள் நடந்துவருகின்றன. பாளையங்கோட்டை மகாராஜநகர் தூய திரித்துவ ஆலயத்தில் காந்திய நல்லபாண்டி [Kanthaiah Nallapandi] என்பவர் சேகரகுருவாக [Parish priest] இருந்தார்[5]. இவர் ராயகிரி சர்ச்சிற்கு மாற்றப்பட்டு, ஜெபரத்தினம் என்பவர் புதிய சேகரகுருவாக நியமிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை [25-06-2017] அன்று இவர் இருந்தார்[6].
ஞாயிற்றுக்கிழமை [25-06-2017] அன்று ஜெப ஆராதனையில்சண்டை ஆரம்பம்; மகராஜநகரில் உள்ள தூய திரித்துவ ஆலயத்தில் புதிய பாதிரியார் ஜெபரத்தினம் [Jebaratnam] வழிபாடு நடத்தினார். அங்கு பொதுமக்கள் வழங்கிய காணிக்கை பணத்தை முந்தைய பாதிரியார் நல்லபாண்டிய தரப்பினர் தராமல் பறித்துச்சென்றனர்[7]. இதனால் இருதரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். அங்கு போலீசார் வந்த இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல ரஹ்மத்நகரில் உள்ள நல்மேய்ப்பர் ஆலயத்தில் புதிய பாதிரியார் ஆபிரகாம் செல்வராஜ் [Abraham Selvaraj] பொறுப்பேற்க சென்றார். ஆனால் முந்தைய பாதிரியார் இயேசுநேசப்பாண்டி [Yesu Nesapandi], புதிய பாதிரியாரை உள்ளே விடாமல் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் அவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்தும் காயமுற்ற பாதிரியார் ஆபிரகாம் செல்வராஜ் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[8]. பொறுப்புள்ளவர்கள், ஆண்டவரின் பிரதிநிதிகள், கர்த்தரிடம் பக்தர்களின் குறைகளை எடுத்துச் செல்வர்கள் இவ்வாறு செய்தால், விசுவாசிகள் எங்கே செல்ல முடியும்.
காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சண்டை: நெல்லையில் சர்ச்சில் காணிக்கை பிரிப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது[9]. திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் மாறுதலாகிச் சென்றார். புதிய சேகரகுரு நேற்று ஆலய வழிபாட்டை நடத்தினார். அங்கு வழிபாட்டுக்கு வந்திருந்தவர்களிடம் இருந்து பெறப்படும் காணிக்கையை பிரித்துக்கொள்வதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் கை கலப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் சென்று அமைதி ஏற்படுத்தினர். இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. பொதுவாக பணம் எங்கு வருகிறதோ, அங்கியிருப்பவர்கள் கடைசி நிமிடம் வரை உட்கார்ந்து கொண்டு வசூல் செய்து விட்டு போக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள். இப்ப்ழக்கம் அரசு-தனியார் அலுவலகங்களில் கூட இருக்கிறது. ஆனால், கடவுளின் பெயரால், ஊழியம், சேவை செய்கிறோம் என்ற நிலையில் இத்தகைய சேகரகுரு, குரு, பாஸ்டர், பிஷப் என்றெல்லாம் இருப்பவர்கள், சர்ச்சிற்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வது, அவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை…..என்று எதுவுமே இல்லை என்றாகிறது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்கள் பிரதமப்பேராயராக ஆவது, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம்செய்வது: சி.எஸ்.ஐ சர்ச்சுகள் தொடர்ந்து இப்படி வழக்குகளில் சிக்குவது, குற்றங்களை செய்யும், செய்து தப்பித்துக் கொள்ளும், நீதி மன்றத்தில் இழுத்தடிக்கும் போக்கைக் காட்டுகிறது. இதுகுறித்து தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறியதாவது: “சினாடு நிர்வாகம் மிகப்பரந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில்பொறுப்பில் உள்ளவர்கள் குட்டிஅரசு நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பிற்கு இந்தியாவில் பேரழிவுகள், பேரிடர்கள்நடந்தால் வெளிநாட்டு உதவிகள் கணக்கில்லாமல் வருகிறது. இந்த
உதவிகளை வைத்துக் கொண்டு பதவியில்இருப்பவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே
இல்லை. இவர்களை எதிர்க்கும், தவறுகளை சுட்டிக்காட்டும்பேராயர்களை சஸ்பென்ட் செய்வது பதவியில் இருப்பவர்கள்செய்துவருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் சி.எஸ்.ஐ. சினாடு அமைப்பிற்கு சென்னை
ராயப்பேட்டையில் தான்தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு பலகோடிமதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. ஆனால்
தமிழர்கள்எவரும் சினாடு அமைப்பின் உயர் பதவிக்கு வருவது என்றால்மிகவும் கடினம். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச்சேர்ந்தவர்களே பிரதமப் பேராயராக வந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தைதலைமையிடமாகக் கொண்டு வெளிநாட்டு உதவிகளையும், சி. எஸ். ஐ. கிறிஸ்தவர்களின்
காணிக்கை பணத்தையும்கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டம் போட்டுவருகின்றனர். எனவே தமிழக முதல்வர்
தலையிட்டுதமிழகத்தை மதத்தின் பெயரால் சுரண்டி வருபவர்களையும், பெண்ணின் கற்பைசூறையாடி வருபவருமான பிரதமப் பேராயர் மற்றும் அவரதுகும்பல்களையும் அடையாளம்கண்டு அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், அவருக்கு உதவிகள் செய்துவரும் தமிழக மாபியாகும்பல்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்”, இவ்வாறு அவர்கூறினார்[11].
© வேதபிரகாஷ்
27-06-2017
[1] மாலைமலர், ரூ.15 கோடி மோசடி: கோவை பேராயர் மீதுவழக்குபதிவு, பதிவு: பிப்ரவரி 25, 2017 10:33.
[2]http://www.maalaimalar.com/News/State/2017/02/25103315/1070325/Rs-15-crore-fraud-in-Coimbatore-on-the-case-of-Archbishop.vpf
[3] Times of india, 12, including CSI Bishop, booked for misappropriation of church funds, TNN | Feb 26, 2017, 11.38 AM IST.
[4] http://timesofindia.indiatimes.com/city/coimbatore/12-including-csi-bishop-booked-for-misappropriation-of-church-funds/articleshow/57351345.cms
[5] குமரி ஆன்லைன், பாளை மகாராஜநகர் இறிஸ்தவ ஆலயத்தில்கோஷ்டி மோதல்: இரு தரப்பினர் மீது வழக்கு, ஜூன் ஞாயிறு.25, 2017. 6.38.03 PM (IST).
[6]http://www.kumarionline.com/view/31_140890/20170625183803.html
[7] தினமலர், சி.எஸ்.ஐ.,சர்ச்களில் மோதல்:பாதிரியார்கள் மீதுவழக்கு, பதிவு செய்த நாள். ஜூன்.27, 2017. 00.30
[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1799213
[9] தினமலர், சர்ச் காணிக்கை பிரிப்பதில் மோதல்:இருதரப்பினர்மீதும் வழக்கு, பதிவு செய்த நாள். ஜூன்.26, 2017. 00.24.
[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1798575
[11] https://christianityindia.wordpress.com/2016/05/05/csi-bishop-dyvasivadam-involved-in-sexual-harassment-case/