ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி.ஏ மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலை – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?
தனியார் வீடு என்று அனுமதி பெற்று ஹெபரான் சர்ச் கட்டியது: ஹெபரான் சர்ச் என்று இரு கிருத்துவ சர்ச்சை கே. பி. எடிசன் என்பவர் நடத்தி வருகிறார் [Dr. K.B. Edison,. Hebron Castle Church,. Kings Highway, No: 4, 7th Cross, Lake Area,.Nungambakkam,. Chennai – 600034, India. Phone: 044-28170007]. முதலில் சிறியதாக ஆரம்பித்தது, நாளடைவில் பெரிய கட்டடமாக மாறியது. அதுமட்டுமல்லாது, தனியார் வீடு என்று தான் சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால் பணம் வரவர, அடுக்கு மடி கட்ட ஆரம்பித்தார். பிறகு, வெளீப்படையாக சர்ச், ஊழியம், என்று கூட்டம் கூடியதால், அக்கம்-பக்கம் உள்ளவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. மூன்று மாடி கட்டடம் என்று ஆரம்பித்து, ஏழு மாடிகள் கட்ட ஆரம்பித்தார். மேலும், கல்யாண மண்டபம் எனவும் வாடகைக்கு விட ஆரம்பிக்கப் பட்டது. இதனால், வருபவர்களின் எண்ணிக்கை பெருக, கார்கள், வேன்கள் என்று வந்த வாகனங்கள் சுற்றியுள்ள தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால், அப்பகுதி மக்களுக்கு பெருத்த தொந்தரவு ஏற்பட்டது. இதனால், லேக் ஏரியா குடியிருப்பு சங்கம் என்ற அமைப்பு, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வீடு என்று அனுமதி வாங்கிக் கொண்டு, பிறகு, சர்ச், கல்யாண மண்டபம் என்று மதம் மற்றும் வணிக ரீதியில் உபயோகப்படுத்தப்படுவதால், அங்கு உடியிருக்கும் அக்களுக்கு பலவிதமான தொந்தரவுகள் ஏற்படுகின்றன, அதனால், விதிமீறல் முறையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று செப்டம்பர் 2016ல் முறையிட்டனர்[1]. முன்னர் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எடிசனும் முறையிட்டார்[2].
வீடு சர்ச் ஆகி, கல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், தனியார் ஒருவர், தேவாலயம் மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டி உள்ளார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சி.எம்.டி.ஏ மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் நிராகரித்து தீர்ப்புவழங்கியது: இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது[3]: “கட்டட உரிமையாளர்தரப்பு விளக்கத்தை கேட்க, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பின் அந்த குறிப்பிட்ட கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதுஉறுதி செய்யப்பட்டு, ‘சீல்‘ வைப்பதற்கான நோட்டீஸ் ஏற்கனவேவழங்கப்பட்டது. ஆனால், உரிமையாளர் நீதிமன்ற தடை பெற்றுநடவடிக்கையை முடக்கினார். இந்நிலையில், கட்டட உரிமையாளர், குடியிருப்போர் சங்கம் ஆகிய தரப்பு கருத்துகளை கேட்ட பின், கட்டடத்துக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது”, இவ்வாறு அவர் கூறினார்[4]. பிப்ரவரி 2017லேயே, சென்னை உயர்நீதி மன்றம் இந்த ஆணையை, “மூன்று மாடிகளுக்கு பதிலாக, ஆறு மாடிகள் மனுதாரர் கட்டியுள்ளார். அதனால், அவரது சீரமைப்பு மனு சி.எம்.டி.ஏ.வால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டு மாத காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் அவர் விதிமீறலை சரிசெய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால், சி.எம்.டி.ஏ சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என்று, வெளியிட்டது[5].