ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!
ஃபினிஸியோ எண்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்!
எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி?
1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன்!
என்ன கேவலம், இப்ப்டியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா?
பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள்!
இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது.
ஐயப்ப பக்தர்களே உஷார்!
இந்த போலிகளை நம்பி, ஐயப்பனை விட்டுவிடப் போகிறீர்கள்!
கிருத்துவர்களால் சொல்லப்பட்ம் கதை: 1579ல் எலயிடது ஆட்சியாளன் முதேடது அனுமதி கொடுத்தபோது ஆர்துங்கல் என்ற இடத்தில் இருந்த மார்தோமா / சால்திய கிருத்துவர்கள், தாமஸ் பெயரில் ஒரு குடிசையைக் கட்டினார்களாம். போர்ச்சுகீசியர் அங்கு வந்தபோது பாப்டிஸம் பெறாத அந்த “கிருத்துவர்களை”க் கண்டனராம்! அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம்! 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம்.
ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்! பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.
இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும்.
மேலும், இந்தியாவில் இத்தகைய கட்டிட மாற்றங்கள் அன்னியர்கள் ஆட்சி காலங்களில் மிகவும் அதிகமாக நடந்துள்ளன.
இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.