New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா?


Guru

Status: Offline
Posts: 24774
Date:
திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா?
Permalink  
 


திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா? (Post No.3068)

 

brahmin valluvar

 

Written by London swaminathan

Date: 17th August 2016

Time uploaded in London: 6-08 AM

Post No.3068

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

திராவிடங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ் நாட்டில் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் வள்ளுவர் ஒரு அரைப் பார்ப்பனர் என்று எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டில் கிடைத்த பழைய வள்ளுவர் சிலை பூணூலுடன் காட்சி தருகிறது. அது மட்டுமல்ல. அந்தப் பூணூல் தெரியக்கூ டாது என்பதற்காக அதே வாக்கில் ஒரு மேல் துண்டு போட்டுச் சுற்றிக் காட்டப்பட்டுள்ளது.

நிற்க.

 

திருவள்ளுவர் பல இந்து தெய்வங்களைக் குறிப்பிடுகிறார். அவர் சைவரா (ஐயர்) அல்லது வைஷ்ணவரா (ஐயங்கார்) என்று ஒரு பட்டி மன்றம் நடத்தினால் நான் ஐயங்காரே! என்ற கட்சியில் நின்று வாதாடி ஜெயிப்பேன். ஏனெனில் அதற்குத்தான் அதிக ஆதாரங்கள் உள்ளன.

 

சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள். ஏனெனில் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை; வள்ளுவனோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறான் (திருக்குறள் 619, 50, 702, 43, 55, 1023.

 

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

 

திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–

அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

 

அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)

ஆதி பகவன் – 1

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083

பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை

பிரம்மா – உலகு இயற்றியான் 1062

இந்திரன் – 25

கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103

லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,

மூதேவி – மாமுகடி 617, 936

பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258

tiruvalluvar-at-soas-university-of-london

The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture.Place SOAS, University of London.

வள்ளுவன், பல நூறு குறள்களில் சொன்ன— தவம், தானம், வேள்வி, தர்மம் (அறம்), நோன்பு, பார்ப்பான்,அந்தணன், புத்தேளிர் (தேவர்), மேல் உலகம், பிறவாமை, மறை, மறை மொழி (மந்திரம்), விதி, நிலையாமை, மெய்ப்பொருள், மாசறு காட்சி, நூல் (வேதம்) முதலிய இந்துமத விஷயங்களைப் பட்டிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

 

லெட்சுமியும் விஷ்ணுவும், லெட்சுமியின் அக்காளும், பத்து அவதாரங்களில் ஒன்றும், அமிழ்தமும் வைஷ்ணவ விஷயங்களாதலால் திருவள்ளுவர் வைஷ்ணவரே என்று முடிவு செய்யலாம்.

 

இதற்கு அடுத்தபடியாக வருவது வேத கால தெய்வங்களான இந்திரன், யமன் ஆகும்.

 

பிரம்மாவைக் கூட — (உலகு இயற்றியான் 1062) — குறிப்பிட்ட வள்ளுவன் சிவனை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் கடவுள் வாழ்த்தில் வரும் பத்து விஷயங்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுவான விஷயங்களே. அதே போல பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுத்ததும் சிவ- விஷ்ணுவுக்குப் பொதுவான விஷயங்களே.

 

சிவனைப் பற்றியும் பிரம்மாவைப் பற்றியும் மறைமுகக் குறிப்புகள், இரண்டு குறள்களில் வருகின்றன:

 

“வள்ளுவர், சாக்ரடீஸ்,சிவபெருமான் – இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு? “ என்ற எனது மிகப்பழைய கட்டுரையில் (தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள், பக்கம் 126, நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009)

 

பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டுபவர் (580)

 

சிவனையும், சாக்ரடீசையும் வள்ளுவர் குறிப்பிட்டது பற்றி எழுதியுள்ளேன். இது 1997ல் லண்டனில் ‘மேகம்’ பத்திரிக்கையில் நான் எழுதியது.

valluva-nayanar

இன்னொரு குறளில் (377)  ‘வகுத்தான்’ என்று பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். ஆனால் இவை இரண்டும் எனது வியாக்கியானமேயன்றி உரைகாரர்கள் செப்பியது அல்ல. வகுத்தான் என்பதை தலைவிதியை எழுதிய தெய்வம் என்று மட்டுமே உரைகாரர்கள் காட்டுவர்.

 

திருவள்ளுவ ஐயங்கார் வாழ்க!!!

 

My old Articles on the same subject:–

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன், 5 நவம்பர் 2012

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

Albert Einstein and Thiruvalluvar, Post No. 749 dated 17th December 2013.

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

Who was Tiruvalluvar?, 24-7-2013

Tamil Merchant who dumped Gold into Sea, Post No. 1239; Dated 17th August 2014.

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

–Subham—



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard