New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி - கந்தர்வன்


Guru

Status: Offline
Posts: 19539
Date:
பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி - கந்தர்வன்
Permalink  
 


 

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1

February 15, 2011
கந்தர்வன்

முன்னுரை:

நம் உள்ளம் கவர் திருவமர் மார்பனைத் தொன்றுதொட்டு தமிழர்கள் பாடி வணங்கி வரும் முறை பற்றியும் திருமால் சமய மரபின் தொன்மையைப் பற்றியும் விளக்க எழுந்த முயற்சி இது. சங்க கால இலக்கியம் தொட்டு, ஆழ்வார் பாசுரங்கள், இடைக்காலக் காப்பிய நூல்கள் ஆகியவற்றைத் துணைகொண்டு பல செய்திகளைக் காண்போம். இக்கட்டுரைத் தொடரில் வேதாந்த/பக்தி ரீதியிலான அனுபவ/அறிவு பூர்வமான விளக்கங்களுடன் பல அரிய செய்திகளை அலசுவதையும் ஒரு இலக்காகக் கொள்வோம். சில உதாரணங்கள்:

  • உபநிடதங்களில் வரும் பல தத்துவங்களை விளக்கும் களஞ்சியமாக இப்பாடல்கள் அமைந்தமை.
  • பழந்தமிழர் சமயம் வேத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையே என்பது.
  • வேதத்தின் கர்ம காண்டமாகிய பூர்வ பாகம், ஞான காண்டமாகிய உத்தர பாகம் (உபநிடதங்கள்), இதிகாசம், புராணம், கீதை ஆகியவற்றிலிருந்து பல செய்திகள் மாறாமல் சங்க இலக்கியங்களில் வருகின்றன. ஆகையால், இந்தியர்களுக்குப் பொதுவான இந்து மதநம்பிக்கைகளும் பழந்தமிழர் மரபுடன் சுருதி சேர்ந்து வேதாந்த-பக்தி மார்க்கம் எனும் இன்னிசைப் பிரவாகமாக வருவதையும் காணலாம்.
  • ஆழ்வார்கள் செய்தருளிய பாசுரங்களுக்கும், பிறகு கம்பர், புகழேந்திப் புலவர், வில்லிப்புத்தூராழ்வார் முதலானோர் காவியங்களுக்கும் சங்கப் பாடல்களில் பல முன்னோடியாக இருந்தமையையும் காணலாம்.
  • இவற்றிலிருந்து நம் பண்டைய தமிழர் பண்பாடு, நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் ஆகியவை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வந்தமையும் தெளிவாகிறது.
  • சமய நம்பிக்கைகள் குறித்த வரலாற்றாராய்ச்சிச் செய்திகள்.

இன்று வடமொழியிலுள்ள சாஸ்திர-பாஷ்ய நூல்களில் தேர்ச்சி பெற்று ஈடுபாடு உடையவர்கள் தமிழிலக்கியங்களைப் பற்றி ஆராய்வதில்லை. அதே போல், தமிழ்மொழியில் அமைந்த சங்க நூல்களிலும், காப்பியங்களிலும், சமயப் பாடல்களிலும் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்களுக்குப் பொதுவாகப் பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஈடுபாடு காணப்படுவதில்லை. ஆங்காங்கு விதிவிலக்குகள் காணப்படினும், இன்று பொதுமேடைகளில் பரவலாக நாம் காணும் நிலை இது. பாண்டித்யத்தில் கதிரவனுக்கெதிர் மின்மினி போன்ற நிலையில் இருந்தாலும் எனக்குத் தமிழ், சமஸ்கிருத இலக்கியம் இரண்டிலும் அதிக ஈடுபாடும் ஆர்வமும் உண்டு. இத்தகு ஆர்வத்தின் வெளிப்பாடே இச் சிறு முயற்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இத்தொடரின் முதற்பகுதியாகிய இக்கட்டுரைக்கு நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடலானது, பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:

மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.

(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).

இப்பாடலில், உலகத்திற்குக் காரணப்பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக, சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் உருவகப்படுத்துகிறார் பெருந்தேவனார்.

இவ்வுருவகமானது வேதப் பகுதியாகிய “முண்டக உபநிடதத்தில்” உள்ளதை அடியொற்றியே வருகிறது. அவ்வுபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதியில், “அனைத்துக்கும் மேலான பரம புருஷனிடமிருந்தே நெருப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்புவனபோல் எல்லாம் பிறந்து இறுதியில் அவனிடத்தேயே ஒடுங்குகின்றன” என்னும் செய்தி விளக்கப்படுகிறது. அவனே அனைத்துக்கும் உட்பொருளாக உள்ளுறைந்து ஆள்வதையும், அவன் பிரபஞ்சமனைத்தையும் சரீரமாகக் கொண்டமையையும் விளக்கும் வண்ணம் பின்வருமாறு வேதம் உரைக்கிறது:

அக்3னிர் மூர்தா4 சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யௌ திச’: ச்’ரோத்ரே வாக்3விவ்ருதாச்’ச வேதா3: வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விச்’வம் அஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹி ஏஷ ஸர்வபூ4த-அந்தராத்மா

[முண்டக உபநிடதம், 2.1.4]

இம்மந்திரத்தில் நெருப்பைப் பரமனது முகமாகவும், திங்களையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும், வேதத்தை அவன் வாய்மொழியாகவும், ஞாலத்தைச் சூழ்ந்து வீசும் வாயுவை அவன் மூச்சுக்காற்றாகவும், பிரபஞ்சத்தை அவன் இதயமாகவும் கூறி, அவன் பாதங்களிடத்தே பூமி பிறந்ததாகவும் உருவகப்படுத்தி இம்மந்திரம் கூறுகிறது. தொன்றுதொட்டு வடமொழியிலும் தமிழிலும் திருமாலைக் குறித்து வழங்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற உருவகம் இது. ஆதி சங்கரர் தம் உபநிடத உரையில் இவ்விடத்திற்கு, “இதில் சொல்லப்படுபவர் விஷ்ணுவாகிய அனந்தன். சரீரத்தை உடையவர்களில் முதன்மையானவர். மூவுலகையும் தம் உடலாகக் கொண்டிருப்பவர். அனைத்து உயிர்களுக்கும் உயிராக — அந்தராத்மாவாகத் திகழ்பவர்” [“ஏஷ தே3வோ விஷ்ணுர் அனந்த: ப்ரத2ம ச’ரீரீ த்ரைலோக்ய தே3ஹோபாதி4: ஸர்வேஷாம் பூ4தானாம் அந்தராத்மா”] என்று பாஷ்யமிட்டுள்ளார்.

image3vishnu

பிரம்ம சூத்திர பாஷ்யத்திலும் ஸ்ரீ சங்கரர் இம்மந்திரம் குறித்த விசாரம் செய்துள்ளார் (சாரீரக மீமாம்ச பாஷ்யம், 1.2.25). “வேதத்தின் முடிவாக, உபநிடதங்களின் கருப்பொருளாக நிற்பது பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாகவும் கர்த்தாவாகவும் விளங்குவதாகிய, உண்மைப்பொருளாகிய, பரம்பொருளே” என்று சங்கரர் பாஷ்யத்தின் முதலத்தியாயத்தில் நிலைநாட்டியுள்ளார். “ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் பேசுவது போல் தோன்றும் சுருதி வாக்கியங்களைப் புஷ்பங்களென்று எடுத்துக் கொண்டால், பிரம்ம சூத்திர கர்த்தாவாகிய வியாசர் செய்திருப்பது அவற்றை நூலால் கோர்த்து சீர்ப்படுத்தி, முரண்பாடு சிறிதும் இல்லாத மாலையாகத் தொடுத்துத் தந்திருப்பது” என்பது சங்கரர் கூறும் விளக்கம் (‘சூத்திரம்’ என்ற வடமொழிச் சொல் ‘நாண்’ எனும் பொருளை உடையது). இப்படி பிரம்ம சூத்திரம் விசாரத்திற்குப் பல சுருதி வாக்கியங்களை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், ஆங்காங்கு ஸ்ம்ருதிகளாகிய இதிகாச-புராண-ரிஷி வாக்கியங்களிலிருந்தும் உதாகரித்துச் செல்வதாக பாஷ்யகாரர்கள் பலர் விளக்கி வந்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் மேலெடுக்கப்பட்ட முண்டகோபநிடத மந்திரம்.

பரம்பொருளே பிரபஞ்சம் அனைத்துக்கும் உபாதான-நிமித்த காரணங்களாகவும், சர்வ-அந்தர்யாமியாகவும் விளங்குவதையே இவ்வுபநிடத மந்திரம் உணர்த்துகிறது என்பது உரை எழுதிய சங்கரர், ராமானுஜர் முதலானோர் கொள்கை. “சர்வாந்தர்யாமி” என்பதற்கு “அனைத்தையும் உள்ளுறைந்து ஆள்பவன்” என்று பொருள். “உபாதான-நிமித்த காரணங்கள்” பற்றி எளிதில் விளக்க வேண்டும் என்றால், “பானைக்கு மண் உபாதான காரணம்; குயவன் நிமித்த காரணம்” என்ற உதாரணம் போதும்.

image4potter

இவ்விடத்தில் இரண்டு சந்தேகங்கள் எழக்கூடும்:

(1) முதல் சந்தேகமானது — உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டும் ஒரே பொருளாக இருக்க முடியுமா? அப்படி இருப்பதைப் பார்ப்பதில்லையே? குயவன் பானை செய்வதைப் பார்க்கின்றோம். ஆனால், குயவனே பானை ஆவதில்லை; களிமண் குயவன் உதவி இல்லாமல் தானாகவே பானை ஆவதில்லை.

(2) இரண்டாவதாக — பரம்பொருள் பிரபஞ்சமாகவே பரிணமித்தது என்று கூறிவிட்டால், பரம்பொருளை மாறுதல் அடைந்து அழியும் தத்துவம் போலக் கூற வேண்டுமே? அப்படி இல்லாமல் அதை “என்றென்றும் இருப்பது”, “காலத்தால் மாறுபடாதது”, “காலத்திற்கு அப்பாற்பட்டது” என்று மறையாகிய வேதம் கூறுகிறதே?

இச் சந்தேகங்களுக்கான தீர்ப்பை எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமானால், மயிலை உதாரணமாகக் கொள்ளலாம். மயில் கார்மேகத்தைக் கண்டவுடன் தோகை விரித்தாடுகிறது. இந்தத் தோகை விரித்தாடும் நடனத்தையும் அதே மயில் தான் உருவாக்குகிறது. அக்காட்சியை உருவாக்க அம்மயிலானது, பானை செய்ய குயவன் உபயோகிக்கும் களிமண் போலவோ, நாற்காலி-மேசை செய்ய தச்சர் உபயோகிக்கும் மரம் போலவோ தனக்கு வெளியே கிடக்கும் எந்த ஒரு பொருளையும் உபயோகிப்பதில்லை; மயில் தன்னையே அந்நிலைக்கு மாற்றிக் கொள்ளுகிறது என்று கூறுகிறோம். இவ்வாறு, பரம்பொருளுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை “மயிலுக்கும் தோகைக்கும் உள்ள தொடர்பு போல” என்று விளகினால், பரம்பொருளே பிரபஞ்சத்தின் உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டுமே என்று கூறுவதில் பிழை இல்லை.

மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை. தோகையை விரித்து ஆடுவதாலோ, தோகையை உள்வாங்கிக் கொள்வதனாலோ “மயில் மாறுதல் அடைந்துள்ளது” என்றோ, “மயில் அழிந்து விட்டது” என்றோ எவ்வாறு நாம் கூறுவதில்லையோ, அவ்வாறே பரம்பொருளின் அங்கமாக பிரபஞ்சம் நாம-ரூபங்களுடன் விரிந்து கிடக்கும் நிலையில் “பரம்பொருள் மாற்றம் அடைந்துவிட்டது” என்றோ, பிரளயத்தின்போது நாம-ரூபங்கள் அழிந்த நிலையில் “பரம்பொருள் அழிந்துவிட்டது” என்றோ கூறுவதில்லை.

image2pea****

இதைப்போன்றே திருச்சந்தவிருத்தத்தில் திருமழிசையாழ்வார் கடலுக்கும் அலைக்கும் உள்ள தொடர்பை வைத்து பிரம்மத்திற்கும் பிரபஞ்சத்தில் சராசரங்களுக்கும் உள்ள தொடர்பைப் பின்வரும் பாசுரத்தில் விளக்குகிறார்:

image1alwar


“தன்னுளே திரைத்தெழுந் தரங்கவெண் டடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவுந் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின்க ணின்றதே.

[திருச்சந்த விருத்தம், 10]

இத்தகைய காரிய-காரண தொடர்ச்சியிலும் பரம்பொருள் விகாரமடையாமல் என்றென்றும் நிலைத்து நிற்கும் தத்துவமாக விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக பொன்னையும் ஆபரணத்தையும் கூறுவர். பொன் ஆபரணத்திற்குக் காரணப்பொருள். ஆபரணம் பொன்னைக் காரணப்பொருளாக உடையதால் அது ’காரியங்கள்’ எனும் குழுவில் அடங்கிவிடுகிறது. ஆபரணமான பிறகும் பொன் பொன்னாகவே இருக்கிறது, ஈயமாகவோ பித்தளையாகவோ மாற்றம் அடைவதில்லை. அவ்வாறே பிரபஞ்சமாக விரிந்து நின்றாலும், அதற்குக் காரணப்பொருளும் அந்தராத்மாவ்வுமாகிய பரம்பொருள் விகாரமடைவதில்லை. இத் தத்துவத்தைக் கம்பர் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் நமக்கு அறிவிக்கிறார். அவ்விடத்தில் நரசிங்கப்பிரானைக் குறித்து நான்முகனார் இவ்வண்ணம் கூறுகிறார்:

நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே !
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்.

[கம்பராமாயணம்: இரணியன் வதைப்படலம், 160]

இது பின்வரும் திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை நினைவூட்டுகிறது. இதுவும் நரசிங்கப்பிரானைக் குறித்தே பாடியிருப்பது:

தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே — உகத்தில்
ஒரு நான்று நீயுயர்த்தி உள்வாங்கி நீயே
அருநான்கு மானா யறி

[நான்முகன் திருவந்தாதி, 5]

இப்பாடலில் “அரு நான்கும் ஆனாய்” என்றவிடத்திற்கான ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் மணிப்பிரவாள வியாக்கியானத்தில், “தேவ திர்யங் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே அந்தராத்மதயா ப்ரகாசித்து நின்ற” (அதாவது, தேவர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் உள்ளுறையும் ஆன்மாவாக நின்ற) என்று காணப்படுகிறது.

முன்பே சங்கப்புலவர்களும் மாயோனை,

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” [பரிபாடல், 3]

“ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்
,”

[பரிபாடல், 13]

என்று ஜகத்காரணப் பொருளாகப் பாடியுள்ளனர்.

நிற்க. பிரபஞ்சத்துக்கு உயிராய் உள்ள இறைவனின் நிலையை “சரீர-சரீரி பாவம் (शरीर-शरीरि भावम्)” என்று மற்றொரு விதமாக வேதாந்திகள் கூறுவர். அதாவது, பிரபஞ்சத்தைச் சரீரமாக உடையவனாதலால் இறைவன் “சரீரி” ஆகிறான். நாம் மேற்கண்ட முண்டக உபநிடத பாஷ்யத்தில் சங்கரர் “சரீரத்தை உடையவர்களுள் முதன்மையானவர்” என்று விளக்குகிறார்.

ஆகையால் சூரியனையும் சந்திரனையும் பரம்பொருளுக்குக் கண்களாகவும், தரணியைப் பாதமாகவும், திக்குகளைச் செவியாகவும், அண்டவெளியை உடலாகவும் சுருதி வாக்கியம் உருவகப்படுத்துதுவதன் நோக்கம் “பரம்பொருள் உலகனைத்துக்கும் உட்பொருளாக, அந்தராத்மாவாக, உயிருக்கு உயிராக இருப்பதை உணர்த்தவேயன்றி, விகாரமடையும் குணத்தை உடையது என்பதைக் கற்பிப்பதற்கல்ல” என்று சங்கரர் பாஷ்யத்தில் விளக்கியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் பின்வரும் இதிகாச-புராண வாக்கியங்களை எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றில் நமக்குச் சில ஆர்வமூட்டும் செய்திகள் கிடைக்கின்றன:

“யஸ்ய-அக்3னிர்-ஆஸ்யம் த்3யௌர்-மூர்தா4 க2ம் நாபி4ச்’-சரணௌ க்ஷிதி: |
ஸூர்யச்’-சக்ஷு: தி3ச’: ச்’ரோத்ரம் தஸ்மை லோகாத்மனே நம: ||”

[“யாருக்குத் தீ முகமாகவும், சுவர்க்கம் தலையாகவும், ஆகாயம் வயிறாகவும், காலாக பூமியும், கதிரவன் கண்ணாகவும், திசை செவியாகவும் விளங்குமோ, உலகத்தைத் தாங்கும் உயிரான அவனுக்கு வணக்கங்கள்.” — மகாபாரதம், 12.47.44]

இது ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தின் பனிரண்டாம் பருவமான சாந்தி பருவத்தின் தொடக்கத்தில் வருகிறது. இவ்வத்தியாயத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கையில் கண்ணனை நோக்கி நீண்ட துதி ஒன்று பாடுகிறார். பீஷ்மர் தன்னைக் கூவி அழைத்ததைத் தன் ஒப்பற்ற ஞானத்தின் மூலம் அறிந்த பகவானாகிய ஹரி, பாண்டவர்களை அழைத்துக்கொண்டு போர்க்களம் செல்கிறார். அதன் பிறகே பீஷ்மர் நாரணனுடைய அருளால் அம்புப்படுக்கையில் கிடந்த நிலையிலும் அயர்ச்சியடையாமல் தருமனுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும் ராஜ தர்மம் முதலியன பற்றிய பல அறிவுரைகளைச் செய்கிறார். இப்படிக் கண்ணன் பாண்டவர்களுடன் பீஷ்மரைக் காணச் செல்லக் காரணமாய் இருந்த பீஷ்மர் துதியிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு வரிகளே மேற்கண்டவை. வெறும் மிகைப்படுத்தப்பட்ட வாழ்த்தாக அமையாமல், இதிகாச-புராணங்களில் வரும் மற்ற துதிகளைப் போலவே இப்பகுதி முழுதும் தத்துவ ஆழம் மிக்க வரிகளாக அமைந்துள்ளன.

image6bhishma

இவ்வரிகள் இன்னொரு முக்கியமான செய்தியிக்கு எடுத்துக்காட்டாக சங்கரர் நமக்கு அறிவிக்கிறார் (பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் 1.2.25). அதாவது, “ஸ்ம்ருதிகளில் உள்ள வாக்கியங்கள் மூல சுருதிகளை ஆதாரமாகக் கொண்டவையாக இருந்தால், அவை அச் சுருதி வாக்கியங்களைத் தெளிய உரைப்பதாகக் கொள்ளலாம்” என்பது. இவ்வாறு அமைந்துள்ள ஸ்ம்ருதி வாக்கியங்களை “வேத உபப்பிரம்மணம்” என்று கூறுவர். ஆகையால், மேற்கண்ட மகாபாரதச் சுலோகம் முண்டகோபநிடத மந்திரத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் சங்கப் புலவரும் நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் என்பதும் தெரிகிறது.

சங்கரர் எடுக்கும் மற்றொரு மேற்கோள் இன்றைய பிரம்மாண்ட புராண அத்தியாயம் ஒன்றில் உள்ளது:

“த்3யாம் மூர்தா4னம் யஸ்ய விப்ரா வத3ந்தி க2ம் வை நாபி4ம் சந்த்3ர-ஸூர்யௌ ச நேத்ரே |
திச’: ச்’ரோத்ரே வித்3தி4 பாதௌ3 க்ஷிதிம் ச ஸோ(அ)சிந்த்யாத்மா ஸர்வபூ4தப்ரணேதா ||”

[வேதமறிந்த ஞானிகள் யாருடைய உச்சந்தலையை சுவர்க்கமாகவும், ஆகாயத்தை உதரமாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும் பாதங்களை பூமியாகவும் அறிவரோ, அந்த அறிவுக்கெட்டாத பரமாத்மா அனைத்து உயிர்களுக்கும் தலைவன் ஆவான். — பிரம்மாண்ட புராணம், 1.5.107]

பிரம்மாண்ட புராணத்தில் இவ்வரிகளைக் கொண்ட பிரகரணமும் சிருஷ்டியை விளக்குவதாகும். சங்கரரால் கீதை விளக்கவுரையில் மங்கள சுலோகமாக எடுக்கப்பட்ட “நாராயண: பரோ அவ்யக்தாத்” எனத் தொடங்கும் வரிகளும் இதே அத்தியாயத்தில் மேலெடுக்கப்பட்ட வரிகளுக்கு மிக அண்மையில் காணப்படுகின்றன. இது தவிர, மற்றொரு இடத்திலும் (சூத்திர பாஷ்யம், 2.1.1) இப்புராணத்தில் காணப்படும் வேறொரு வரியைச் சங்கரர் மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து இப்புராணத்தில் உள்ள பகுதிகள் பிரமாணமாகக் கையாளப்பட்டமை தெரிகிறது.

திருமாலை இப்படிப் பாடும் மரபு வேதாந்தத்தை ஒட்டி வருகின்றது என்பதற்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து மேலும் பல அரிய மேற்கோள்களையும் காணலாம். உதாரணமாக ஆதிகவி வால்மீகி முனிவரின் இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் சீதையை மீட்டு வரும் தருணத்தில் நான்முகக் கடவுள் முகமாக தேவர்கள் அனைவரும் இராமனை பக்தியுடன் பாடும் பகுதி வருகிறது. இப்பகுதியும் பரம்பொருளின் பரத்வ நிலையைப் பாடும் பல ஆழ்ந்த வேத வாக்கியங்களை அடியொற்றியவண்ணம் அமைந்துள்ளது. அதில் நான்முகனார்,

அச்’விநௌ சாபி தே கரணௌ சந்த்3ர ஸூர்யௌ ச சக்ஷுஷீ”
“ஜக3த் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தை2ர்யம் தே வஸுதா4 தலம்

[— இராமாயணம், யுத்த காண்டம், 6.105.7, 6.105.23]

என்று பெருமாளின் கண்களைச் சூரிய-சந்திரர்களாகவும், திடமான நிலையை பூமியாகவும், அவன் செவிகளை அச்வினி தேவதைகளாகவும் பாடியபிறகு உலகனைத்தும் அவனுக்கு சரீரமாகவும் பாடியுள்ளார் பிரம்மா.

இம்மரபை ஒட்டியே அமரகோசத்திலும் விஷ்ணு பெயர்களில் ஒன்றாக “விச்’வம்பர” என்ற பதமும் படிக்கப்படுகிறது. இதற்கு “பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவன்” என்று பொருள்.

நாம் எடுத்துக்கொண்டிருக்கும் நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தை முழுமையாகக் கொண்ட வடமொழிச் சுலோகம் ஒன்று இன்று அனைவராலும் ஓதப்படுகிறது. “தோடகாசாரியார்” என்ற ஆதி சங்கரர் வழி வந்த வேதாந்தியரின் “ச்’ருதி ஸார ஸமுத்34ரணம்” என்ற நூலில் மங்கள சுலோகமாக வருகிறது–

image5vishwarupa

பூ4: பாதௌ3 யஸ்ய க2ம் சோத3ரமஸுரநில: சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாசா’: சி’ரோ த்3யௌர்முக2மபி த3ஹனோ யஸ்ய வாஸ்தவ்யமப்3தி4: |
அந்த:ஸ்த2ம் யஸ்ய விச்’வம் ஸுர-நர-க23-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம்
ரம்ரம்யதே தம் த்ரிபு4வனவபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||

[“பூமியைப் பாதங்களாகவும், ஆகாயத்தை வயிறாகவும், வாயுமண்டலத்தை மூச்சாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திக்குகளைச் செவிகளாகவும், வானுலகை உச்சந்தலையாகவும், அக்னியை வாயாகவும், ஆழ்கடலைக் குடலாகவும், எவன் கொண்டுள்ளானோ, எவனுள்ளே தேவரும், மானுடரும், புள்ளும், அரவும், கந்தருவரும், அசுரர்களும் இயங்கி விளையாடுகிறார்களோ, மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட விஷ்ணுவாகிய அந்த சர்வேஸ்வரனை வணங்குகிறேன்.” — ச்ருதிஸாரஸமுத்தரணம், 179]

இச் சுலோகம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தில் தியான சுலோகங்களில் ஒன்றாக இன்று வாசிக்கப்படுகிறது. நற்றிணையின் பாயிரத்தில் “மாநிலஞ் சேவடியாய்” என்பது மேற்கண்ட தியான சுலோகத்தில் “பூ4: பாதௌ3” என்றும், “விசும்பு மெய்யாக” என்பது “2ம் சோத3ரம்” என்றும், “பசுங்கதிர் மதியொடு சுடர்க்கண் ணாக” என்றது “சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ர” என்றும் வருவதைக் காணலாம்.

“இயன்றவெல்லாம் பயின்று அகத்து அடக்கிய” என்ற சரீர-சரீரி அடிப்படையிலான தொடர்பும் விரிவாக “யஸ்ய விச்’வம் ஸுர-நர-க23-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம் ரம்ரம்யதே” என்றும் வருவதைக் காணலாம்.

இது “ஸர்வம் க2லு இத3ம் ப்3ரஹ்மா” என்ற சாந்தோக்ய உபநிடதத்தில் (மூன்றாம் அத்தியாயம், பதிநான்காவது பகுதியில் உள்ள) “சாண்டில்ய விதயை” வாக்கியத்தையும் ஒட்டி வருகிறது. அதே அர்த்தத்தைப் புருஷ ஸூக்தமும் “புருஷ ஏவேத3ம் ஸர்வம்” என்ற மந்திரத்தில் உணர்த்துகிறது. தைத்திரீய நாராயணீய உபநிஷதும்,

யச் ச கிஞ்சிஜ் ஜக3த் ஸர்வம் த்3ருச்’யதே ச்’ரூயதேபி வா
அந்தர் ப3ஹிச்’ ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:

[பிரபஞ்சத்தில் காணப்படுவது கேட்கப்படுவது எல்லாவற்றையும் உள்ளிருந்தும் வெளியிலும் சூழ்ந்து நாராயணன் நிலைத்து நிற்கிறான்.]

என்று இயம்பிற்று.

இங்ஙனம் பிரபஞ்சம் அனைத்தையும் இறைவனுக்குச் சரீரமாகக் கூறுவதால் அனைத்துயிர்களும் அவனுக்கு உடைமையாகின்றன. இத்தகையதொரு சித்தாந்தத்தில் பரஸ்பர சகோதரத்துவக் கண்ணோட்டத்திற்கே இடமுண்டு. இவ்வர்த்தத்தை நாம் பகவத் கீதை மூலமாக அறியலாம்:

மற்றோ ரிடத்து மறமற்று மித்திரனா
யுற்றான் கருணை யுறுமமதை — செற்றா
னகங்கார மற்றா னமர்பொறையன றுக்கஞ்
சுகங்காணி லொப்பான் றுணிந்து.

[பகவத் கீதை வெண்பா, 12.13]

இப்படிக் கீதாச்சாரியனாகிய கண்ணன் சொல்லுமிடத்தே, “இவரை நினைவில் வைத்துக் கொண்டுத் தன் இச் சுலோகத்தைச் செய்துள்ளானோ” என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ பிரகல்லாதாழ்வான். தன்னுடைய விஷ்ணுபக்தியைப் பொறாத தன் தன்தை பலவாறு துன்பப்படுத்தியும் பிரகல்லாதன் இத்தகைய துவேஷமற்ற தூய சிந்தையுடன் திடமாக இருந்தார். அனைத்து உயிர்களையும் தனக்குச் சினேகிதராக, மிக விரும்பத்தக்கவர்களாகவே பாவித்தார். “தூய விஷ்ணுபக்திக்கு இது இன்றியமையாத அங்கம்” என்ற கொள்கையை ஸ்திரமாகப் பற்றியிருந்தார்.

image0bhakta
உலகனைத்தும் திருமாலுடைய தோற்றமன்றி வேறில்லை. அவனே அனைத்துடனும் ஒன்றி நிற்பவன். ஆகையால் ஞானிகள் உலகனைத்தையும் தம்மைக் காட்டிலும் வேறாக நினைக்காமல், அனைத்தையும் தாமாகப் பாவிப்பர். ஆகையால், நம்முடைய குலத்தில் வேரூன்றியிருக்கும் குரோத குணத்தை விலக்குவோம். இதன் மூலம் நாம் நித்தியமான, சுத்தமான, ஆனந்தமான ஆன்ம ஸித்தியை அடையலாம்.

அனைத்துயிர்களையும் சமமாக பாவிப்பீர்கள் அசுரர்களே! இத்தகைய சமத்துவ பாவமே அச்சுதனை ஆராதிக்கும் முறையாகும்

[விஷ்ணு புராணம், 1.17.82-90]

என்னும் பிரகல்லாதன் கூற்றைக் காணலாம். இக்காரணத்தால் கம்பர்,

தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்” [கம்பராமாயணம்: இரணியன் வதைப் படலம், 82]

என்று பிரகல்லாதனை அடைமொழியிட்டுப் பாடியுள்ளார். “வைஷ்ணவ ஜனதோ” எனத் தொடங்கும் குஜராத்தி மொழிப் பாடலின் கருத்தும் இத்துடன் உடன்படுவதை உணரலாம். “பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் அந்தராத்மா அச்சுதனே, அனைத்தும் அவன் சரீரமே” என்று பார்க்கையில், “ஒரு சிலர் மாத்திரம் வேண்டியவர்கள், ஏனையோர் வேண்டாதவர்கள்” என்றோ, “இவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நமக்கு நம் ஜாதிக்காரன் ஒழுங்காக இருந்தால் போதும்” முதலான பாகுபாடுகளுக்கும் சுயநல புத்திக்கும் இடமில்லை.

அடுத்த பகுதியில் பாடலின் கடைசி இரண்டு வரிகளான

“வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”

என்பதற்கான விளக்கத்தைக் கண்டுவிட்டு, இடமிருந்தால் வேறு சிலவற்றையும் பார்ப்போம்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
RE: பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி - கந்தர்வன்
Permalink  
 


முனைவர் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில்:

சங்கரரின் கொள்கைப்படி பிரபஞ்சத்தின் உபாதான நிமித்த காரணம் இரண்டும் பிரம்மமே. இதற்கான சான்றுகள்:

(1) பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் முதல் அத்தியாயம், நான்காவது பாதம், இருபத்தி மூன்றாவது சுலோகம்: (1.4.23) இங்கு “பிரமமே உபாதான நிமித்த காரணங்கள் இரண்டும்” என்று சூத்திரம் சொல்வதாக பாஷ்யம் இட்டுள்ளார். அச் சூத்திர பாஷ்யத்தில் முதலில் காணப்படும் வரிகள்:

“பிரமத்துக்கு ‘ஜன்மாத்யச்ய யத:’ என்றதால் லக்ஷணமும் கூறப்பட்டது. அந்த லக்ஷணமும் குடம் நகை இவற்றுக்கு மண் பொன்னாதியவை போன்று பிரகிருதியாகுதலிலும், குயவன் நகைசெய்வோன் ஆகியவர் போன்று நிமித்தமாவதிலும் ஒத்திருப்பதிலிருந்து இந்த விசாரம் ஏற்படுகிறது. பிராமத்தினது காரணத்தன்மையாவது எவ்வடிவமாயுள்ளது என்பதாம்.” என்று தொடங்கி, “நிமித்த காரணம் மட்டுமே” என்ற பூர்வபக்ஷத்தை விளக்குகிறார். பிறகு, சித்தாந்தம் இதுவென விளக்குகிறார்: “பிராமமாவது பிரக்ருதியாகவும், அதாவது உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் ஒப்பவேண்டுவதாக ஆகிறதே ஒழிய தனித்த நிமித்த காரணமாக மட்டும் கூறவியலாது” என்று கூறி, “ஆகவே வேறு அதிஷ்டா இல்லாததால் (பரம) ஆத்மாவுக்கு கர்த்திருத்துவமும் (நிமித்தத்துவமும்) வேறு உபாதானமில்லாததால் பிரக்ருதித்துவமும் (உபாதானத்துவமும்) ஏற்படுகிறது” என்று முடிக்கிறார்.

(2) இரண்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அவர் எழுதியுள்ள அவதாரிகை: “முதலாவது அத்தியாயத்தில் எல்லாமறிந்த சர்வேஸ்வரன் குடம், ருச்சகம் (ஓர்வித நகை) முதலியவற்றுக்கு மண், பொன் முதலியன போன்று ஜகத்துக்கு உத்பத்தி காரணம் என்றும்… என்றுமான இது வேதாந்த வாக்கியங்களுக்கு சமன்வயம் கூறும் வாயிலாக விளக்கப்பட்டது”.

(நன்றி: பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் “பிரம்ம சூத்திர சாங்கர பாஷ்யம்” தமிழ் மொழிபெயர்ப்பு)

//
உபாதான நிமித்த காரணங்களுக்கு மயில் தோகையை விரித்தாடுவது எடுத்துக்காடாக அமையுமா.? மயிலின் உறுப்பு பீலி, தோகை. அதை விரிப்பதும் ஆடுவதும் நாம் நம் கைகால்களை மடக்குவதும்விரிப்பதும் நடப்பதும் ஓடுவதும் போன்ற செயல்களே அன்றி உபாதான நிமித்த காரணங்களாகா

இதற்கு நீங்கள் மேற்கோளாகக் காட்டிய முண்டகோபநிஷத்தில் உள்ளதாகக் கூறப்படும் ‘ஊர்ணநாபி”யை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கலாமே.
//

முண்டக உபநிஷதத்தில் கூறியிருக்கும் “ஊர்ணநாபி” (சிலந்தி) உதாரணத்திற்கும் மயில் உதாரணத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வாசகர்களுக்கு எளிதில் புரியும்படி சொல்லவே மயிலை உதாகரித்தேன். மேற்கூறியதில் உள்ள மற்றொரு கேள்விக்கு, விசிஷ்டாத்வைதத்தின் படி எனக்குப் புரிந்த விளக்கம் — நாம-ரூபங்களைத் தான் பிரபஞ்சம் என்று சொல்கிறோம். அந்த நாம ரூபங்கள் சித்து, ஜீவர்களாகிய அச்சித்துக்கள் இரண்டையும் கொண்டவையே. மயில் தொகை நிலை போல, அசித்து பிரபஞ்சமாக விரிந்து ஆன்மாக்களுக்கு ஜடமாகிய உடல்கள் தரப்பட்டு பல ஜீவ ராசிகளாகப் பிறக்கின்றன.

பிரமத்தை வெறும் நிமித்த காரணமாக மாத்திரம் ஏற்றால் பல குற்றங்கள் வரும் என்று சங்கரரும் ராமானுஜரும் சூத்திர பாஷ்யங்களில் விளக்கியுள்ளனர். ஆனால், தவித்த மதத்தில் பிரம்மம் நிமித்த காரணம் மாத்திரம், பிரகிருதி தான் உபாதான காரணம் என்பர், அவர்கள் உபாதான-நிமித்த காரனத்துவ ஐக்கியத்திற்கு எதிராக சில வாதங்களை முன்வைப்பார். அதற்குப் பதிலாக உபாதான-நிமித்த காரண ஐக்கியவாதிகள் வேறு சில பிரதிவாதங்களை வைப்பார். இவற்றை முழு அளவில் புரிந்துக் கொண்டு விளக்க எனக்குச் சக்தியில்லை தான். ஆனால், சாஸ்திரத்திலேயே (அதாவது, வேதம், ஸ்மிருதிகள், புராணங்கள்) உபாதான-நிமித்த காரணம் இரண்டும் ஒன்றே என்று பல வாக்கியங்கள் உண்டு. உதாரணமாக விஷ்ணு புராணத்தில் காணப்படும் இச் சுலோகம் திருச்சந்த விருத்தத்தில் “தன்னுளே” எனத் தொடங்கும் பாசுரத்தின் வியாக்கியானத்தில் வருகிறது:

“கட மகுட கர்ணிகாதி பேதை:
கனகம் அபெதமபி இஷ்யதே யதைகம் |
சுர பசு மனுஜாதி கல்பனாபிர்
ஹரிரகிலாபீருதீர்யதே ததைக: ||” (விஷ்ணு புராணம், 3-7-16)

இதன் பொருள்: “(கார்யதசையில்) பானை, மகுடம், குண்டலம் என்னும் பேதங்களோடு கூடியதாக ஆனாலும் பொன்னானது எப்படி ஒன்றாகவே கருதப்படுகிறதோ, அப்படியே (கார்யநிலையில்) தேவர், மனுஷ்யர், விலங்கு-பறவைகள் முதலிய பேதங்கள் எல்லாவற்றையும் உடையவனானாலும் ஹரி ஒருவனாகவே சொல்லப்படுகிறான்” என்பது.

இதிலிருந்து “ஜகத்துக்கு உபாதான-நிமித்த காரணம் பிரம்மம் ஒன்றே” என்ற கருத்து சங்கரர் காலத்துக்கும் மிகப் பழமையானது என்று தெரிகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

Sarang on February 23, 2011 at 6:07 pm

முனைவர் அவர்களே

//
உபாதான நிமித்த காரணங்களுக்கு மயில் தோகையை விரித்தாடுவது எடுத்துக்காடாக அமையுமா.? மயிலின் உறுப்பு பீலி, தோகை. அதை விரிப்பதும் ஆடுவதும் நாம் நம் கைகால்களை மடக்குவதும்விரிப்பதும் நடப்பதும் ஓடுவதும் போன்ற செயல்களே அன்றி உபாதான நிமித்த காரணங்களாகா
//

இதை வேறு விதமாக பார்க்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்.

மயில் தொகை விரித்தாடுவது மற்றும் மயில்
கடல் அலை மற்றும கடல்
தீபச்சுடர் மற்றும் தீபம்

இவை அனைத்தும் cause-effect என்ற இரண்டும் ஒன்றே என்பதை விளக்க வந்தவை.

கடல் ஆகிய காரணம் தான் அலைகளாகிய காரியமாக தோன்றுகிறது – (கடல் அலையை செய்கிறது) இது போல் மயில் தொகை விரியச்செய்கிறது, தீபம் தீபச்சுடரை செய்கிறது இதிலிருந்து நாம் அறிவது மூல காரணம் ஒன்றே என்பதே

இதை சற்றே விரிவு படுத்தி பார்த்தால் – குயவன் மற்றும் குடம் என்பதுவும் கூட இதற்குள்ளே அடங்கிவிடும்
அதாவது பஞ்ச பூதனான ஒரு குயவன் பஞ்ச பூதமாகிய ஒரு குடத்தை செய்கிறான் (பஞ்ச பூதம் பஞ்சபூதமாகிய குடத்தை தோன்றசெய்கிறது)

இதிலிருந்து effect = cause என்பது நிரூபணம். இந்தன்வழியாகவே உபாதான காரணமும் நிமித்த காரணமும் தோன்றுவது ஓர் இடத்திலிருந்துதான் என்பதும் முடிவாகிறது__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2

March 4, 2011
கந்தர்வன் rss_icon16.jpg

 

முந்தைய பகுதிகள் – பகுதி 1

சென்ற பகுதியில் எடுக்கப்பட்ட நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலில்,

 

"வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே"

 

என்பன கடைசி இரண்டு வரிகள். இவை முகில்வண்ணனை வேத முதற் பொருளாக அறிவித்து, அவனைச் சக்கரப்படை ஏந்தியவனாக அடையாளம் காட்டும் வரிகளாம்.  "வேத முதல்வன்" என்று திருமாலைக் கூறியதற்குப் மறைவழியும், தத்துவார்த்தமாகவும், புராணச் செய்தி வழியும், உலகவழக்குப்படியும் பல விதமாக விளக்கம் காண இயலும். இத்தொடரில் வந்துள்ள முதற்பகுதியைப் போலவே, வரப்போகும் மற்ற பகுதிகளைப் போலவே, இவ்வனுபவங்களுக்கான அடிப்படை மரபினைச் சங்கநூலிலும் இடைக்காலக் காப்பியங்களிலும் கண்டுவிட்டு தகுந்த இடத்தில் சமஸ்கிருத நூல்களிலும் மூலத்தைக் காணலாம்.

 

(1) “வேதம் கூறும் முழுமுதற்பொருள்”:

 

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரைநூலில் "வேத முதல்வன்" என்ற இடத்திற்கு, "வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு" என்னும் விளக்கம் காணப்படுகிறது.veda-1.jpg

 

இக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் திருமால் பிரபஞ்சத்தின் காரணப் பொருளாக அறிவிக்கப்பட்டார். பின்பு வேதத்தில் கூறப்பட்ட பரப்பிரம்மம் என்று அறிவிக்கப்பட்டார். பிரம்ம சூத்திரமும் இங்ஙனமே பரம்பொருளை அறிவிக்கின்றது. முதல் சூத்திரத்தில், "இனி பரம்பொருளை அறிவோம்" ("அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸ:") என்று அறிவித்து இரண்டாம் சூத்திரத்தில், "எதனிடமிருந்து பிரபஞ்சத்தின் தோற்றம் முதலானவை ஏற்படுகின்றனவோ" ("ஜன்மாதி3 அஸ்ய யத:") என்றும், மூன்றாவது சூத்திரத்தில், "மறை மூலம் அறியப்படுகிறது" ("சா'ஸ்த்ர யோனித்வாத்") என்றும் இலக்கணம் கூறிற்று.

 

நான்மறைகளின் முடிவாகத் திருமால் அறியப்படுவதால் "வேதாந்த வேத்யன்" என்று அவனை அழைப்பதுண்டு (வேத்3ய: = அறியப்படுபவன்). இப்படி அவனை "மறைவழியாக அறியப்படுபவன்" என்று அறிவிக்கக் காரணமென்? "இதிகாச-புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் அறியப்படுபவன்" என்று கூறலாமெனின், அந்நூற்கள் பொய்யா மறையாகிய வேதத்தை, அதாவது "சுருதிகளைச்" சார்ந்தே நிற்பவையேயன்றி, தனித்து நிற்பவையாகா. சுருதியாகிய வேதம் ஒன்றே எதையும் சாராமல் தனித்து நிற்கும் பிரமாணமாகும்.

 

அத்துடன், வேதமென்பது பரமனுடைய வாய்மொழியே என்று வேதமே அறைகிறது. அயல் நாட்டவர் ஒருவர் நம் தாய்மொழியிலேயே நமக்கு வணக்கம் கூறினால் மகிழ்கின்றோமே, அது போல வேதத்தின் வழி அவனை அறிவதால் பரமனுக்கு உகப்பு ஏற்படுகிறது. மேலும், ஒரு தாய் தன்னுடைய குழந்தை "அம்மா”" என்று தான் பேசும் மொழியிலேயே என்று அழைப்பதைக் கேட்பதால் எவ்வளவு ஆனந்தப்படுகிறாள்? அதுபோலவே,

 

“புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்!

அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்;”

[– பரிபாடல், 13]

 

“‘அன்னை நீ; அத்தன் நீயே;

        அல்லவை எல்லாம் நீயே;”

[– கம்பராமாயணம், IV, வருணனை வழிவேண்டு படலம், 72]

 

“தாய் தன்னை அறியாத

கன்று இல்லை; தன் கன்றை

ஆயும் அறியும்; உலகின்

தாயாகின், ஐய!”

[—- கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 54]

 

என்று அனைவரும் இசைந்தபடி, பிரபஞ்சம் அனைத்துக்கும் தாயாகக் கூறப்படும் பரமனுடைய குழந்தைகள் அவன் சொந்த மொழியாகிய வேதத்தின் வழியிலேயே அறிந்து வணங்குவதில் அவனுக்குப் பேரானந்தம். ஆகையால், "வேத முதல்வன்" என்று கூறுதலின் சிறப்பு விளங்கிற்று. இதைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோரும் நன்கறிந்தனர் என்பதை,

 

"மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்

மாயா வாய்மொழி உரைதர வலந்து"

 

"பதினாயிரம் கை முதுமொழி முதல்வ"

 

"முன்னை மரபின் முதுமொழி முதல்வ"

[– பரிபாடல், 3]

 

என்று பாடியதிலிருந்து காணலாம். இதிலிருந்து, நற்றிணைப் பாயிரப்பாடலானது சங்க காலத்திற்குச் சற்று பின்பே எட்டுத்தொகை நூற்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் தான் சேர்க்கப்பட்டது எனினும், பழந்தமிழர் மரபைக் காட்டும் சங்கநூல் கூறும் செய்தியையே எதிரொலிக்கின்றது என்னும் கருத்துடன் இசைவதற்கு இடமுள்ளது. கீதாச்சாரியனாகிய கண்ணனும், "வேதைச்' ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்3ய:" [அனைத்து வேதங்களாலும் அறிவிக்கப்படுபவன் யானே — பகவத் கீதை 15.15] என்று கூறுகிறான். “அனைத்து வேதங்களும் இவனையே கூறுகின்றன என்று எப்படி சொல்ல முடியும்? இந்திரனும், அக்னியும், வருணனும், வாயுவும் கூட தான் வேதத்தில் படிக்கப்படுகின்றனரே?” என்ற கேள்வியை எழுப்ப, வங்கதேசத்து அத்வைத தத்துவ ஞானியும், பரம பக்தருமாகிய மதுசூதன சரஸ்வதியின் உரையில் பதில் கிடைக்கிறது:veda-2.jpg

 

"(கண்ணன் கூறுகிறான்) வேதத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் படிக்கப்படுகின்றனராயினும், உண்மையில் மறையானது அவர்களுக்கு உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கும் என்னையே கூறுகின்றது. ஏனெனில், ‘இந்த்3ரம் மித்ரம் வருணம் அக்3நிம் ஆஹுரதோ2 தி3வ்ய: ஸ ஸுபர்ணோ க3ருத்மாந். ஏகம் ஸத் விப்ரா ப3ஹுதா4 வத3ந்தி அக்3நிம் யமம் மாதரிச்’வாநமாஹு:’ என்று மந்திரமும், ’ஏஷ உஹ்யேவ ஸர்வே தே3வா:’ என்று உபநிடதமும் கூறுகிறது" [– கூடார்த்த தீபிகை, கீதை 15.15-க்கு உரை].

 

திருமாலின் ஆயிரம் பெயர்களுக்குச் சங்கரர் உரையில், "ச'ப்3தச':" (#912), "கதி2த:" (#848), "மந்த்ர:" (#280) என்ற நாமங்களுக்கான விளக்கங்களும் இக்கருத்தையே கூறுகின்றன. இவையனைத்தும் பரம்பொருளுக்கு மறை கூறும் இலக்கணமாகும். சங்கரருடைய கீதையுரைக்கு ‘டீகை’ இட்ட ஆனந்தகிரியும் மேலெடுக்கப்பட்ட 15.15-ஆம் சுலோகத்தின்கீழ் "வேதத்தால் அறியப்படும் பரம்பொருள் பகவான் அன்றி வேறா என்ற சந்தேகம் தீரும்படி கண்ணன் உரைக்கின்றான்" என்று விளக்கியுள்ளார். மறைமுடிவாகிய உபநிடதம் பரமனையே சொல்ல வருகின்றது என்ற செய்தியைக் கம்பரும்,

 

kambar1.jpg

"சொன்ன நான்மறைத் துணிவினில்

         துணிந்த மெய்த்துணிவு

நின் அலாது இல்லை;"

[– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 98]

 

"‘முன்பு பின்பு இருபுடை எனும்

         குணிப்பு அரு முறைமைத்

தன்பெருந் தன்மை தான் தெரி

         மறைகளின் தலைகள்,

"மன்பெரும் பரமார்த்தம்" என்று

         உரைக்கின்ற மாற்றம்,

அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு

         யாரையும் அறையா. "

[– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 100]

 

என்று பல இடங்களில் பாடியுள்ளார். இவ்விளக்கம் தொடர்பாகவே, பரமனுடைய "கோவிந்தன்" (#539) என்ற நாமத்திற்குச் சங்கரர் சஹஸ்ரநாம உரையில் “‘கோ3’ என்பதை ‘மொழி/பதம்’ என்ற பொருளுடையதாய் எடுக்கலாம். ஆகையால, ‘கோவிந்தன்’ என்பதற்கு ‘பதங்களால் அறியப்படுபவன்’, அதாவது வேதாந்த வார்த்தைகளால் அறியப்படுபவன் என்று பொருள் கொள்ளலாம்.” என்று விளக்கம் கூறியுள்ளார். இக்கருத்தையே "அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரம்" என்று திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வாரும், அதைப் பின்பற்றி வருவதைப் போல,

 

"அன்னவூர்தியை முதலாம்

   அந்தணர்மாட்டு அருந்தெய்வம்

நின் அலால் இல்லாமை

   நெறி நின்றார் நினையாரோ."

[– கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 55]

 

என்று கம்பரும் பாடியுள்ளதைக் காண்க (அந்தணர் மாடு = அந்தணர்களுடைய ஒரே செல்வமாகிய வேதம், அந்தணர் மாட்டு அந்தி = வேதாந்தம்).

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

(2) “வேதத்தின் முதலில் ஓதப்படும் ஓங்காரத்தின் உட்பொருள்”:

 

வேதத்திற்கும் மூலமாய் அமைந்துள்ள ஓங்கார அட்சரமே திருமாலின் வடிவம் என்று மறைகள் அறிவிக்கின்றன. அத்துடன், வேதம் ஓதும்போது முதலிலும் முடிவிலும், "அரி ஓம்" என்று பரமனின் பெயரை ஓம்காரத்தோடு ஒரே வேற்றுமையில் படிப்பது உலகவழக்கு. ஆகையால், வேதத்திற்கு முதலில் ஓதப்படுவதால் ‘வேத முதல்வன்’ என்று முகில்வண்ணனைப் பாடுவதாகவும் கொள்ளலாம். இச்செய்தியைக் கம்பரும்,

 

hariom.jpg

‘ஓங்காரப் பொருள் தேருவோர்தாம்

           உன்னை உணர்வோர்;

   ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து

           இருவினை உகுப்போர்;

   “ஓங்காரப் பொருள் ஆம்”, “அன்று” என்று,

           ஊழி கண்டாலும்

   ஓங்காரப் பொருளே பொருள்

           என்கிலா உரவோர்.’

[– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 110]

 

என்று பாடியுள்ளார். ஆதியிலும் அந்தத்திலும் ஓதப்படும் ஓங்காரத்திற்கு உயிராய் நிற்பவன் பரமனே என்று நாராயணீய உபநிஷதத்தில்,

 

"யோ வேதா3தௌ3 ஸ்வர: ப்ரோக்தோ வேதா3ந்தே ச ப்ரதிஷ்டி2த: |

தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய ய: பர: ஸ மஹேச்'வர: ||"

[– தைத்திரீய ஆரண்யகம், 10.10.6]

 

எனும் மந்திரம் செப்புகிறது. இம்மந்திரத்தை ‘ஸ்ரீதரர்’ என்பவர் தாம் எழுதிய பிராசீனமான பாகவத வியாக்கியானத்தில் பின்வரும் சுலோகத்திற்கு மூல வேதப் பிரமாணமாகவும் எடுத்துள்ளார். இச்சுலோகமும் நாம் கூறும் கருத்தைக் கூறுகின்றது:

 

“பிண்டே3 வாயு-அக்3னி-ஸம்சு'த்தே

ஹ்ருத்-பத்3ம-ஸ்த2ம் பராம் மம |

அண்வீம் ஜீவ-கலாம் த்4யாயேன்

நாதா3ந்தே ஸித்3த4 பா4விதாம் ||”

 

[என்னுடைய சூட்சும ரூபத்தை பக்தன் தன்னுடைய சுத்தீகரிக்கப்பட்ட உடலின் நடுவில், இதயத்தில், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமாகத் தியானிக்க வேண்டும். பரமனது இந்த வடிவத்தை ஆன்ம ஞானம் பெற்ற முனிவர்கள் ஓங்காரத்தின் அசைவின் இறுதியில் தியானிப்பர் — ஸ்ரீமத் பாகவதம், 11.27.23]

 

கீதையிலும் கண்ணன் இவ்வர்த்தத்தை எட்டாவது அத்தியாயத்தில் (8.13) உரைத்தான். மேலெடுக்கப்பட்ட நாராயணீய மந்திரம் கூறும் பொருளையே கம்பர் பிரகல்லாதன் வாய்மொழியாகக் கூறியுள்ளார்:

 

“‘சுருதி ஆதியில் தொடங்கு உறும்

   எல்லையில் சொன்ன

ஒருவன், யாவர்க்கும் நாயகன்,

   திருப்பெயர், உணரக்

கருதக் கேட்டிடக் கட்டுரைத்து

   இடர்க் கடல் கடக்க

உரிய மற்று இதின் நல்லது ஒன்று

   இல்' என உரைத்தான்."

[– கம்ப ராமாயணம், VI, இரணியன் வதைப் படலம், 40]

 

“ஓம் எனும் ஓர் எழுத்து

   அதனின் உள் உயிர்

ஆம் அவன், அறிவினுக்கு

   அறிவும் ஆயினான்

தாம மூவுலகமும்

   தழுவிச் சார்தலால்,

தூமமும் கனலும்போல்

   தொடர்ந்த தோற்றத்தான்.”

[– கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இரணியன் வதைப் படலம், 76]

 

திவ்யகவி பிள்ளை பெருமாள் ஐயங்காரும்,

 

“பூங்கா விரிப்புனற் கோவில் உள்ளே மிக்க போகமெலாம்

யாங்காண யோகத்துயில் கொள்வார் மெல்லெயும் போய்

நீங்காதுலகத் துயிர்க் குயிராகி நீயாமகனாய்

ஓங்கார மாயமாய் நின்ற ஒண் சுடரே.”

[– திருவரங்க மாலை]

 

என்று அஷ்டபிரபந்த நூலொன்றில் பாடியுள்ளார்.

(3) “வேதத்தை அருளிய முதல்வன்”:

 

இது புராணக்கதை கூறும் செய்தியின் அடிப்படையில் எழுந்த விளக்கம். கல்பத்தின் தொடக்கத்தில் ‘மது’ ‘கைடபன்’ என்று இரு அரக்கர்கள் வேதத்தைப் பிரமனிடமிருந்து அபகரித்து மறைத்தனர் என்பதும், பெருமாள் பரிமுகனாக (ஹயக்ரீவ) அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டு வந்தார் என்பதும், அன்னமாக உருவெடுத்து (ஹம்ஸாவதாரம்) சிறகடித்து பிரளய நீர் வரண்டு போக, நான்முகனாருக்கு அதை ஓதுவித்தார் என்பதும் புராணங்கள் கூறுபவை. ஆக, வேதத்தை அருளிச்செய்த முதல்வன் என்பதாலும், "வேத முதல்வன்" என்னும் அடைமொழி பொருந்தும். இதனாலேயே மணிவண்ணனை "வாய்மொழிப் புலவ" என்றும் "தொல் இயல் புலவ" என்றும் பரிபாடலில் (முதல், மூன்றாம் பாடல்களில்) பழந்தமிழர் பாடினர். இவைகளில் வரும் "புலவ" என்ற பதத்தை இரண்டு விதமாகப் பொருள் கொண்டு "வேதத்தைப் புலப்படுத்துகிறவன்" என்றும் "வேதத்தாற் புலப்படுபவன்" என்றும் விளக்கம் கூற இடமிருக்கிறது. அன்னமாய் அவதரித்து உயிர்கள் உய்யும்பொருட்டு மறைகளை வெளிப்படுத்திய இப் புராணக்கதையை ஒட்டி,hayagrivar.jpg

 

"'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்    

சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,"

[– பரிபாடல், 2]

 

என்று சங்ககாலத்தவரும்,

 

 

''அன்னமாய் நூல் பயந்தாற்

காங்கிதனைச் செப்புமினே",

 

"அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த"

[– பெரிய திருமொழி, 9.4.2, 11.4.8]

 

"புள்ளதாகி வேதநான்கு மோதினாய தன்றியும்"

[– திருச்சந்த விருத்தம், 19]

 

swan.jpg

 

என்று ஆழ்வார்களும்,

 

"அன்னம் ஆய் அருமறைகள்

   அறைந்தாய் நீ, அவை உன்னை

முன்னம் ஆர் ஓதுவித்தார்?

   எல்லாரும் முடிந்தாரோ?

பின்னம் ஆய் ஒன்றாதல்,

   பிரிந்தேயோ? பிரியாதோ?

என்ன மா மாயம் இவை

   ஏனமாய் மண் இடந்தாய்! "

[– கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், விராதன் வதைப் படலம்,  59]

 

என்று கம்பரும் பாடியுள்ளனர். இச்செய்தி வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதத்திலும்–

 

“யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம் யோ வை வேதா3ம்ச்’ச ப்ரஹிணோதி தஸ்மை |

தம் ஹ தே3வம்-ஆத்மபு3த்3தி4-ப்ரகாச’ம் முமுக்ஷுர்வை ச’ரணமஹம் ப்ரபத்3யே ||”

 

[எவன் ஆதியில் பிரமனைப் படைத்து அவனுக்கு வேதத்தை ஓதுவித்தானோ, அந்தத் தேவனை, ஆன்மாவிற்கும் அறிவிற்கும் ஒளிதருபவனாய்த் திகழும் அவனை வீடுபேற்றினை விரும்பும் நான் சரணடைகிறேன் — சுவேதாச்வதார உபநிடதம், 6.18.]

 

என்னும் இடத்தில் விளக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கான சாங்கர பாடியத்தில், "கு3ருதம:" (#210) மற்றும் "ஸுமுக2" (#456) என்ற இடங்களில் வருகிறது.

 

இக்கட்டுரையில் இதுவரை கண்ட சான்றுகளிலிருந்து இன்னொரு செய்தியும் புலப்படுகிறது. "வாய்மொழிப் புலவ", "தொல் இயல் புலவ", "முதுமொழி முதல்வ", "மாயா வாய்மொழி" என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதிலிருந்து, அக்காலத் தமிழ் மக்கள் "வேதமானது காலத்தால் வரையறுக்கப்படாதது" என்றும், "ஒருவராலும் புதிதாகப் படைக்கப்படாதது" என்றும் அதனுடைய "அபௌருஷேய" நிலையின் மீது அசையாத நம்பிக்கை வைத்திருந்த ஆத்திகர்களே என்று தெரிகிறது. இன்றுவரை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வரும் இந்துப் பண்பாட்டின் தத்துவவியலைச் சேர்ந்த துல்லியமான விவரங்களிலும் ஊறியிருந்த விப்ரர்களாக அக்காலத்துத் தமிழ்ச் சான்றோர்கள் விளங்கியிருந்தனர் என்றால் மிகையாகாது.

 

thirumangai-azhvar.jpgthirumazhisai-azhvar.jpg

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

(4) “உற்சவத்தில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவன்”:

 

இது அனுபவபூர்வமான, லௌகீகமான, உலக வழக்கு விஷயமான விளக்கமாகும். திவ்ய தேசமாகட்டும், வேறெந்த பெருமாள் கோயிலாகட்டும், கருவறைமுன் சென்று அருள்பெற சக்தி இல்லாத மக்களுக்கும் அவனருள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடக்கும் திருவிழாக்களில் உற்சவர் ரூபமாக எழுந்தருளச் செய்து பெருமாளை ஊர்வலமாகக் கொண்டு வருவது அனைவருமறிந்த வழக்காகும். அப்போது உற்சவருக்குப் பின் வேத முழக்கம் செய்யும் அந்தணர்கள் அவரைத் தொடர்ந்து வருவதுண்டு. இவ்வழக்கை வைத்தும் "வேத முதல்வன்" என்று திருமாலைக் கூறலாம்.

 

இதற்கும் சங்ககாலத்திற்கும் என்ன தொடர்பு எனில், இத்தகைய உற்சவங்கள் மிகப் பழமையான காலத்திலிருந்து நடந்து வந்திருக்கிறது என்று எண்ணுமளவிற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு என்பதே. அகநானூற்றில் (137-ஆம் பாடல்) "பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்…தீயில் அடுப்பின் அரங்கம் போல" என்று அரங்கத்திற்கு அருகே உள்ள உறையூரைச் சேர்ந்த புலவரும், "விழவுடை விழுச்சீர் வேங்கடம்" (61-ஆம் பாடல்) என்று வேறொரு புலவர் கூறுவதிலிருந்தும், திருவரங்கத்தில் பங்குனி உத்திரம் மற்றும் திருமலையில் பெரிய விழாக்களும் அந்நாளில் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்ததைக் காட்டுகின்றன. திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா பற்றிய மிகத்தெளிவான குறிப்பும் 'இறையனார்' என்னும் சங்கம் மறுவிய காலப் புலவருடைய ‘அகப்பொருளில்’ காணலாம்:

 

"ஊர் துஞ்சாமை என்பது — ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்பாடில்லையாமாகவும் இடையீடாம் என்பது; அவை மதுரை ஆவணி யவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்தரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும், இவைபோல்வனபிறவும் எல்லாம் அப் பெற்றியான பொழுது இடையீடாம் என்பது"

[– களவியல், 16-ஆம் சூத்திரம்].

 

sri-rangam-panguni-uthiram.jpg

 

இப்படிப்பட்ட திருவிழாக்களில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவனாகப் பல தமிழ்ப்புலவர்கள் தொன்றுதொட்டு மாயவனை வாழ்த்தியுள்ளனர். அவை அனைத்தும் கற்பனைவளம் மிக்கதாயும் காணப்படுகின்றன. இவர்கள் வரிசையில் முதலில் வருபவர் புகழேந்திப் புலவர்:

 

"மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் – மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை."

[– நளவெண்பா, 334 (கலிநீங்கு காண்டம்)]

 

என்ற பாடலில், "கண்ணனை வேத முழக்கத்திற்கு முன் செல்பவனாயும், ஆநிறைகளைப் பின்தொடர்பவனாயும் காணலாம்" என்று அழகு கொஞ்சும் வரிகளில் பாடியுள்ளார். (காலி = ஆநிறை). அடுத்ததாக வில்லிப்புத்தூராழ்வார்,

 

"உரலும் வேதமும் தொடர, நந்தகோனுடன் அசோதை

                    கண்டு உருக, வாழ்வு கூர்

தரணிமீது செங் கையும் மா முழந் தாளும் வைத்து

                     வைத்து, ஆடும் மாயனார்,

விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தெனத்

                     தவழ்ந்தருளி, மீளவும்

புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள்

                     மெய் புளகம் ஏறுமே. "

[– வில்லிபாரதம், ஏழாம் போர்ச் சருக்கம், கடவுள் வாழ்த்து]

 

எனும் கற்பனை வளம் மிக்க வரிகளில், "யசோதை கட்டிய உரலை இழுத்துக்கொண்டு கண்ணன் செல்ல அவ்வுரலும் வேதமும் அவனைப் பின்தொடர்ந்து சென்றன" என்று பாடியுள்ளார். மேலும்,

 

"படர்ந்து கானகம் திரிந்து, மீண்டு, அன்புடன்

                   பணிந்த பஞ்சவர்க்காக,

கடந்த ஞானியர், கடவுளர், காண்கலாக் கழல்

                   இணை சிவப்பு ஏற,

தொடர்ந்து நான்மறை பின் செல, பன்னக

                   துவசன் மா நகர்த் தூது

நடந்த நாயகன் கரு முகில்வண்ணம் என்

                   நயனம் விட்டு அகலாதே."

[– வில்லிபாரதம் : படை எழுச்சிச் சருக்கம் : கடவுள் வாழ்த்து]

 

என்னும் வரிகளில், "கண்ணன் பாண்டவர்களுக்குத் தூது நடந்தபொழுது வேதமுழக்கம் அவனைப் பின்தொடர்ந்து வந்தது" என்று பாடுவது இளங்கோவடிகளுடைய ஆய்ச்சியர்கள் பாடிய முறையைப் பின்பற்றி வருகிறது:

 

"தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது

நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே!

நாராய ணாவென்னா நாவென்ன நாவே!!"

[– சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை]

 

veda-parayana-goshti.jpg

 

இறுதியாக, இதில் மற்றொரு வியக்கவைக்கும் தகவல் உண்டு. இப்படி உற்சவராக எழுந்தருளி வீதி உலா வரும்பொழுது வடமொழி வேதம் அவன் பின்னே செல்ல, தமிழ்மறையாகிய ஆழ்வார் பாசுரங்கள் அவனுக்கு முன்னே ஒலிக்கும்! நமது பாரம்பரிய வைணவ ஆசிரியர்களே சமஸ்கிருத வேதத்திற்கும் பெருமாளுக்கும் முன்பு தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முதலிடம் கொடுக்கும் மரபை உருவாக்கியவர்கள்! அவ்வாசாரியார்கள், "பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணியாதலால் உபாசனையில் தமிழர் மரபுக்கு முதன்மை தருவதே கண்ணனை உகப்பிக்கும் வழி" என்பதை நன்கு அறிந்தவர்களாவர்.

 

(தொடரும்)

குறிச்சொற்கள்: அத்வைத தத்துவ ஞானிஓம்கடவுள் வாழ்த்துகண்ணன்கம்பர்சக்கரப்படைசங்கரர்சஹஸ்ரநாம உரைசுருதிதிருமால்நற்றிணை உரைநற்றிணைக் கடவுள் வாழ்த்துநான்மறைநாராயணீய உபநிஷதபரமனுடைய வாய்மொழிபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணிபின்னத்தூர் நாராயணசாமி ஐயர்மதுசூதன சரஸ்வதிமந்திரம்மறைவழிவேத முதல்வன்வேதாந்த வேத்யன்ஸ்ரீதரர்ஸ்ரீமத் பாகவதம்__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

C.N.Muthukumaraswamy on March 4, 2011 at 10:55 am

//இப்படி உற்சவராக எழுந்தருளி வீதி உலா வரும்பொழுது வடமொழி வேதம் அவன் பின்னே செல்ல, தமிழ்மறையாகிய ஆழ்வார் பாசுரங்கள் அவனுக்கு முன்னே ஒலிக்கும்! நமது பாரம்பரிய வைணவ ஆசிரியர்களே சமஸ்கிருத வேதத்திற்கும் பெருமாளுக்கும் முன்பு தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முதலிடம் கொடுக்கும் மரபை உருவாக்கியவர்கள்! அவ்வாசாரியார்கள், “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணியாதலால் உபாசனையில் தமிழர் மரபுக்கு முதன்மை தருவதே கண்ணனை உகப்பிக்கும் வழி” என்பதை நன்கு அறிந்தவர்களாவர்.//

இந்த உன்னதமான மரபைச் சைவர்களும் போற்றுகின்றனர். திருமழிசையாழ்வார் “பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள்” என்று கூற சொன்னவண்ணம் கேட்ட பெருமாளின் செயலை விரித்துரைத்த குமரகுருபரசுவாமிகள் ” பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்று திருமாலைப் போற்றுகின்றார். மதுரைச் சொக்கநாதருக்கு விட்ட தமிழ் விடு தூதில்
“ஆடரவத் தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ, சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ” என்று இம்மரபு போற்றப்படுகின்றது.

அருணகிரிப் பெருமான், தாம் முருகன் அருளிய அருளைக் கொண்டு, கொடிய மறலியுடன் செய்யும் வெல்போரைக் காண முருகப் பெருமானை , அவனுடைய மனைவியருடனும் பரிவர்ரங்களுடனும் வரவேணும் என அழைக்கின்றார். அப்பொழுது , ‘பழய அடியவ ருடன் இமை யவர்கணம் இருபுடையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதில் அருணையில் ஒருவிசை வரவேணூம் ” என வேண்டுகின்றார். (கொடிய மறலியும் – திருச்செங்கோட்டுத் திருப்புகழ்)

இவ்வேண்டுகோளில் தமிழ்கொடு பரவும் அடியவருக்கு முத்லிடமும் மறைகொடு பரவும் இமையவருக்கு அடுத்த இடமும் அளிப்பது அறியத் தக்கது. இதுவே மரபு. இதுவே தமிழகத்தில் சைவ வைணவநெறியினர் கைக்கொள்ளும்,கைக்கொள்ள வேண்டிய மரபு.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on March 4, 2011 at 12:25 pm

//
இந்த உன்னதமான மரபைச் சைவர்களும் போற்றுகின்றனர். திருமழிசையாழ்வார் “பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள்” என்று கூற சொன்னவண்ணம் கேட்ட பெருமாளின் செயலை விரித்துரைத்த குமரகுருபரசுவாமிகள் ” பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்று திருமாலைப் போற்றுகின்றார். மதுரைச் சொக்கநாதருக்கு விட்ட தமிழ் விடு தூதில்
“ஆடரவத் தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ, சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ” என்று இம்மரபு போற்றப்படுகின்றது.
//

இம்மரபில் குமரகுருபரர் முதலானோர் ஈடுபாடு கொண்டு போற்றியிருப்பது பற்றிய செய்தி படித்து மகிழத்தக்கது. சுட்டிக் காட்டிய முனைவர் அவர்களுக்கு நன்றி.

‘பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே’

சமஸ்கிருத மறை முறையிட்டதா என்று பார்த்தால், “இல்லை. தோல்வியை ஒத்துக் கொண்டு பின்தொடர்ந்து வந்தது” என்று தான் கூற இடமிருக்கிறது.

“…. ஆர் அறிவார் – ஞாலத்
தொருபொருளை வானவர் தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை யான் அறிந்த வாறே!” [நான்முகன் திருவந்தாதி, 3]

என்று தமிழ்மறை கூற, சமஸ்கிருத வேதம், “அவனைப் பற்றிக் கூற வந்த வாக்கு அது இயலாமல் போய் திரும்பிச் சென்றது” (“யதோ வாசோ நிவர்த்தந்தே”) என்று கூறிற்று!

அனுபவம் ஒரு பக்கம் இருக்க, தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடுவே போட்டி என்பதே இல்லை. இவ்விரு மொழிகளும் நம் தமிழ் இந்து கலாச்சாரத்திற்குத் தாய் தந்தையரைப் போலவே. இதனை வலியுறுத்தவே ஔவையார் “அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்” என்று தமிழ் வார்த்தைகளை மட்டும் உபயோகிக்காமல் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று தமிழும் சமஸ்கிருதமும் கொண்ட சொற்களை உபயோகித்தார் என்று கூறுவார்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

April 23, 2011
கந்தர்வன் rss_icon16.jpg

 

முந்தைய பகுதிகள் – பகுதி 1 |
பகுதி 2

பரிபாடலில் பிரபஞ்ச சிருஷ்டி

nebula

வேதங்களின் சிகரங்களாகிய உபநிடதங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை விளக்கும் இடங்களில், அச் சிருஷ்டிக்கு முதற்காரணமாகிய ’அவ்யக்தம்’, 'மூலப் பிரகிருதி', 'தமஸ்' எனப் பலவாகக் கூறப்படும் மாயையானது ஆதியில் பரம்பொருளுடன் ஒன்றியிருந்த நிலையைக் கூறுகின்றன. சிருஷ்டிக் காலம் தொடங்கியபின் ஜடப்பொருளாகிய அம்மாயையிலிருந்து ’மகான்’, ’அகங்காரம்’ என்னும் தத்துவங்கள் தோன்றின என்றும், அகங்காரத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து மண் என்னும் பஞ்சபூதங்களாகப் பரிணமித்தன என்றும் கூறும். உபநிடதங்கள் கூறியவழி பிரபஞ்சம் விரிவதற்கு முன் இருந்த நிலையையும், முறையே பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையையும் ’கீரந்தையார்’ என்னும் சங்கப் புலவர் பாடிய இரண்டாம் பரிபாடலில் கீழ்க்கண்ட வரிகள் விளக்குகின்றன:

"தொல் முறை இயற்கையின் மதியொ

. … … … … … … … மரபிற்று ஆக,

பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,

கரு வளர் வானத்து இசையின் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;

செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்"

[— பரிபாடல், 2:1-12]

என்பன அவை. இதில் முதலிரண்டு வரிகள் இப்பொழுது உள்ள தொகுப்பில் முழுமையாகக் கிடைக்கவில்லை யெனிலும், "மண்ணுலகமும் பசும்பொன்னுலகமும் பாழ்பட, ஒன்றுக்கொன்று மாறி வருதலாகிய பழைய இயல்பினையுடைய மதியமும் ஞாயிறுங்கெடுதலால் அழகிழந்த இயல்பிற்றாக விசும்புகெட்ட ஊழிகள் முறைமையாகக் கழிந்தனவாக" என்னும் பரிமேலழகர் உரையிலிருந்து இவ்வரிகளின் செய்தி நமக்குக் கிடைக்கிறது (விசும்பு = வானம், ஆகாயம்). ஊழி கழிந்த இந்நிலையை கேரள தேசப் பண்டிதராகிய நாராயண பட்டரும் நாராயணீயத்தில்,

 

guruvayurappan.jpg

"வ்யக்தாவ்யக்தம் ந கிஞ்சித்3-அப4வத்-ப்ராக்-ப்ராக்ருத-ப்ரக்ஷயே

மாயாயாம் குண ஸாம்யருத்34 விக்ருதௌ த்வய்-யாகதாயாம் லயம் |

நோ ம்ருத்யுச்'ச ததா3(அ)ம்ருதம் ச ஸமபூ4ன்னாஹ்னோ ந ராத்ரே: ஸ்தி2தி:

தத்ரைக: த்வம் அசி'ஷ்யதா2 கில பரானந்த3ப்ரகாசா'த்மனா ||"

 

[பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய்— ஸ்ரீமத் நாராயணீயம், 5.1]

என்னும் பாடலால் குறிப்பிடுகிறார். (இங்கு ’மாயை’ என்றும், வேறு சில நூற்களில் ’தமஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ள மூலப் பிரக்ருதியின் இலக்கணமும் பெயரும் நவீன விஞானிகளால் கூறப்படும் "Dark matter" என்பதன் இலக்கணத்தோடும் பெயரோடும் ஓரளவு உடன்படுவது சிலருக்கு ஆர்வமூட்டலாம். தமஸ் என்பதற்கு இருள் என்றும் பொருள் உண்டு.)

வராகக் கற்பம்

இனி அடுத்து வரும் வரிகளில் கீரந்தையார் சிருஷ்டி குறித்துப் புராணங்களில் கூறப்படும் செய்தியொன்றைச் சுருக்கமாக எடுத்துள்ளார். ஊழியின் தொடக்கத்தில் படிப்படியாகப் பஞ்ச பூதங்கள் முறையாகத் தோன்றிய பிறகு, நான்முகக் கடவுளை நாரணன் பிறப்பித்தான். அதன் பிறகு, நான்முகக் கடவுள் நாரணன் துணை கொண்டு மரீசி முதலான பிரஜாபதிகளையும் சுயம்பு மனுவையும் (ஸ்வாயம்பு4வ மநு) படைத்தார். காச்யப பிரஜாபதியின் ஒரு மனைவியாகிய அதிதிக்குத் தேவர்களும், மற்றொரு மனைவியாகிய திதிக்கு அசுரர்களும் பிறந்தனர். சுயம்பு மனுவும் பிரஜாபதிகளும் மேற்கொண்டு சிருஷ்டியைத் தொடரும் வேளையில் அசுரர்களுள் ஒருவனாகிய இரணியாட்சன் பூமியைக் கடலுக்குள் ஆழ்த்தி ஒளித்து வைத்தான். நிலம் மறைந்ததால் மேற்கொண்டு பிராணிகளின் சிருஷ்டி தடுக்கப்பட்டது. கல்பத்தின் தொடக்கமாகிய அக்காலத்தில் வாசுதேவன் வெண்ணிற வராகமாய் அவதரித்து அசுரனை வென்று மூழ்கியிருந்த நிலத்தைத் தன் கொம்பிலே உயர்த்தி மீட்டான் என்பது பல புராணங்களில் வரும் செய்தி. வராக அவதாரம் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு யஜுர் வேதத்திலும் காணப்படுகிறது.

varaha-avataram

ஒரு கல்பமானது நான்முகனாகிய பிரம்மாவுடைய ஒரு நாள். இது பத்தாயிரம் கலியுகக் காலங்களுக்குச் சமமாகும். கல்பத்தின் தொடக்கத்தில் திருமால் வெண்ணிற வராகவுருக் கொண்டவதரித்து உலகம் காத்ததால் இக்கல்பத்திற்குச் "சுவேத வராக கல்பம்" என்று பெயர். வைதீக ஒழுக்கத்தில் சங்கல்பம் செய்யும்பொழுது "ச்'வேத வராஹ கல்பே" என்று கூறும் வழக்கும் இன்றுவரை கடைபிடித்து வரப்படுகிறது. சங்ககாலமாகிய அந்நாளிலேயே இப்பெயர் வழங்கப்பட்டு வந்திருப்பதைப் பரிபாடல் கீழ்க்கண்ட வரிகளில் படம்பிடித்துக் காட்டியுள்ளது:

"நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,    

மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய    

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய

ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு

ஊழி யாவரும் உணரா;

ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது."

[— பரிபாடல், 2:13-19]

"மகா பிரளயம் முடிந்தபிறகு ‘நெய்தல்’, ‘குவளை’, ‘ஆம்பல்’, ‘சங்கு’, ‘கமலம்’, ‘வெள்ளம்’ என்றெல்லாம் கல்ப காலங்களுக்குப் பெயரிடப்பட்ட வண்ணமே, இப்பொழுது நிகழும் கல்பத்தின் பெயரானது நீ வராகவுருவெடுத்து மண் மடந்தையை மீட்டு வந்த ஒரே ஒரு செயலைக் குறிக்கும் எனப் பார்க்கும்போது, எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்துள்ள உனது காலத்தை எத்தனை கல்ப காலங்களாலும் அளவிட முடியாது எனத் தெரிகிறது. ஆகையால் உன் முதுமையை எவராலும் உணர இயலாது." என்பது இவ்வரிகளின் பொருள். இதன் மூலம் மாயோன் அழிவற்று விளங்கி நிற்கும் பரம்பொருளே என்னும் கொள்கையையும் அவன் அவதாரச் சிறப்பையும் காட்டுகிறார் சங்கப்புலவர். இக்கருத்தையே ஆதி சங்கரருடைய சீடரான சுரேஷ்வரர் பிருகதாரண்யக வார்த்திகத்தில்  "முதியவனாகவும் அழிவற்றவனாகவும் விளங்கும் திருமால்" ("புராண: சா'ச்'வதோ விஷ்ணு:" — 1.4.135, 2.1.268; "புராண: சா'ச்'வதோ அசிந்த்ய:" — 4.4.1288-1289) என்று கூறியுள்ளார்.

கம்பரின் புலமையும் ஞானமும்

இங்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பரிபாடலில், தத்துவ விளக்கங்களுக்கு இடையே கீரந்தையார் நகைச்சுவையாகப் பாடும் பாடற்பகுதி ஒன்று வருகிறது:

"ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்

பூணணி கவைஇய வாரணி நித்தில

நித்தில மதாணி அத்தகு மதிமறுச்

செய்யோள் சேர்ந்தநின் மாசில் அகலம்

வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்

வைவான் மருப்பின் களிறுமணன் அயர்பு

புள்ளி நிலனும் புரைபடல் அரிதென

உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று"

[திருமாலே! மிக உயர்ந்த விசும்பிடத்தே இடப்பட்ட வளைந்த இந்திர வில்லையொத்த பல்வேறுநிற ஔிகளையுடையதும், பூணப்படுவனவாகிய பிற அணிகலன்களாலே அகத்திடப்பட்டதுமாகிய உன் மார்பானது, நெடிய அழகிய

முத்துமாலைகளாலே இயற்றப்பட்ட 'நித்தில மதாணி' என்னும் அழகிய திங்களுக்குற்ற மறுவைப் போன்று இலத்சுமிப் பிராட்டியைக் கொண்ட உன் குற்றமற்ற மார்பானது, 'ஆதி வராகமாகப் பூமியை நீ மணந்தாய்' என்று கூறுவோர் கூற்றுடன் தகுமோ? தகாது. — பரிபாடல், 2:28-35]

 

arulmigu-srimushnam-bhoovaraha-swami

'திருமகள் உன் மார்பில் இருக்க, நீ பூமிப் பிராட்டியை மணந்தாய் என்னும் கூற்று தகாது' என்று நகைச்சுவையாக, வஞ்சிப்புகழ்ச்சியணியில் பாடியுள்ளார். வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரோ, ‘(வாமன அவதாரத்தில்) அளந்தும், (வராக அவதாரத்தில்) நீரிலிருந்து தூக்கி எடுத்தும், (பிரளய காலத்தில்) தன்னுள்ளே மறைத்து வைத்தும், (சிருஷ்டிக் காலத்தில் மீண்டும்) வெளிப்படுத்தியும், மிகப்பெரிய திருத்தோள்கள் நிரம்பும்படி தழுவிக்கொள்பவனாய்’ பூதேவியிடம் பெருமாள் கொண்டுள்ள அன்பை வருணிக்கிறார்:

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்

கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,

தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்

மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.

[— திருவாய்மொழி, 2.8.7]

பரிபாடலில் உள்ள விளையாட்டான புகழ்ச்சியை, திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடிய விதத்துடன் இணைத்துக் கம்பநாட்டாழ்வார் பின்வரும் பாடலில் பாடுகிறார்:

"அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால்

ஒருவாயின் விழுங்குதியால் ஓரடியால் ஔித்தியால்

திருவான நிலமகளை இஃதறிந்தாற் சீறாளோ!

மருவாருந் துழாயலங்கன் மணிமார்பின் வைகுவாள்"

[பாதாள லோகத்தில் அனந்தன் என்னும் பெயருடன் பாம்பு உருவம் கொண்டு பூமியைத் தாங்கி நிற்கிறாய். வராக மூர்த்தியாகிக் கொம்பிலே உலகத்தைத் தாங்குகிறாய். பிரளய காலத்தில் விழுங்கி ’ஞாலமுண்டவன்’ எனப் புகழ் பெற்றாய். வாமன அவதாரத்தில் ஒரே அடியால் பூமியை உன் திருவடிக்கீழ் ஒளியச் செய்தாய். நீ பூமிப் பிராட்டி மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை உன் திருமார்பில் வீற்றிருக்கும் திருமகள் அறிந்தால் சினம் கொள்ள மாட்டாளோ? — கம்பராமாயணம்: III, விராதன்வதைப் படலம், 58]

இவ்வாறு பலவிடங்களில் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் சங்கத் தமிழர் மரபையும், ஆழ்வார்கள் வழிமொழிந்ததையும், வேத வேதாந்த இதிகாச-புராண செய்திகளையும் இணைத்தே தம் காவியத்தில் பல பாடல்களைப் படைத்துள்ளார். வைணவ சம்பிரதாயத்தில் கம்பருக்கு இருந்த ஈடுபாட்டினையும் இவற்றிலிருந்து நாம் அறிகின்றோம். மேலும் பல உதாரணங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.

வேள்விகளுக்கு நாயகன்

ராகப் பெருமானின் வீரச்செயலைக் கண்டு மகிழ்ந்த யோகிகளும் முனிவர்களும், வேதத்தில் பூர்வ பாகத்தில் கூறப்பட்ட வேள்விகளெல்லாம் திருமால் சொரூபமே என்றும், வேள்விகளை வியாபித்து நின்று பலன்களை அளிப்பவனும் அவனே என்றும் பாடுவதாக பராசர பகவான் விஷ்ணு புராணத்தில் காட்டுகிறார் [விஷ்ணு புராணம், 1.4.31-34]. இவ்வாழ்த்து மகாபாரதப் பகுதியாகக் கருதப்படும் ஹரிவம்சத்திலும் வராக அவதாரம் படிக்கப்படும் இடத்தில் உள்ளது. 'யக்ஞ வராகப் பெருமாள்’’யக்ஞ மூர்த்தி’ என்ற பெயர்களும் திருமாலுக்கு இதனால் ஏற்படுகின்றன. உலகவழக்கிலும் ’யக்ஞ நாராயணன்’ என்ற பெயரையும் சிலர் சூட்டிக்கொள்வதைப் பார்க்கிறோம். சுருதிகளின் சாரமாகிய பகவத் கீதையிலும் கண்ணனும், "அதி4யஜ்ஞோ அஹம் ஏவ" [அதியக்ஞம் எனப்படுவதும் நானே — பகவத் கீதை, 8.4] என்றான். இவ்விடத்திற்கு சங்கரர் பாஷ்யத்தில் "யஜ்ஞோ வை விஷ்ணு:" [வேள்வியைக் குறிக்கும் யக்ஞ சப்தம் விஷ்ணுவே — யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதை, 1.7.4] என்ற வேதவாக்கைச் சான்றாக எடுத்துள்ளார். பல இடங்களில் கண்ணன் இதை மேலும் வலியுறுத்துகிறான் (4.24, 9.16).

vedic ritual

கேழலாய் உருவெடுத்து ஊழிக்காலத்தில் உலகம் காத்தவனை வேள்விநாயகனாகச் சங்கப் புலவரும் விஷ்ணு புராணத்தில் வருவதைப் போல வராகவவதாரத்தை விளக்கும் பகுதியிலேயே பாடுகிறார்:

"செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,

படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,

புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்

திகழ் ஔி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,

நின் உருபுடன் உண்டி;

பிறர் உடம்படுவாரா

நின்னொடு புரைய

அந்தணர் காணும் வரவு."

[சிவந்த வாயை உடைய கருடனைக் கொண்ட உயர்ந்த கொடியை உடையவனே! வேள்வியாசிரியன் கூறும் மறைமொழி நினது உருவமாகும்; வேள்வித் தூண் நீயே ஆகலான், அதன்கட் பிணிக்கப்படும் விலங்கு நினது உணவாகும்; அவ் வேள்வியின்கண் வேதமுறைப்படி அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீ நீ அவ் வந்தணர் கண்கூடாகக் காணும் பொருட்டுத் தோன்றும் வெளிப்பாடாகும் — பரிபாடல், 2:60-68]

இச்செய்தியையே திருமழிசை ஆழ்வாரும்,

"வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்

ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே."

— திருச்சந்த விருத்தம், 34]

என்றும், வால்மிகி முனிவர்,

"த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் ஓம்கார: பராத்பர: |

ப்ரப4வம் நித4னம் வா தே நோ விது3: கோ ப4வானிதி ||"

["நீயே யக்ஞமூர்த்தி. ’வஷட்’ என்னும் (வேள்வி நடத்துபவரால் உச்சரிக்கப்படும்) சொல் நீயே. நீயே ஓங்காரம். மேலானவைகளுக்கும் மேலானவன் நீயே. உன்னுடைய முதலும் முடிவும் எவரும் அறியார்." — வால்மிகி இராமாயணம், 6.117.20]

என்றும் வலியுறுத்தி உள்ளனர். கம்பரும்

'மண்பால்-அமரர் வரம்பு

        ஆரும் காணாத,

எண்பால் உயர்ந்த, எரி

        ஓங்கும் நல் வேள்வி

உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ;

        இரண்டும் ஒக்கின்ற

பண்பு ஆர் அறிவார்?

        பகராய், பரமேட்டி!

 

[— கம்பராமாயணம்: III, கவந்தன் வதைப் படலம், 47]

என்னும் விருத்தத்தில் வேள்விகளெல்லாம் திருமால் சொரூபம் என்று பாடுகிறார் (பரமேட்டி = பரம்பொருள்; ’பரமேஷ்டி’ எனும் வடமொழிச் சொல் திரிபு).

திருமாலின் ஆயிரம் பெயர்களை அறிவிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாம அத்தியாயத்திலும், வேள்விமுதல்வனாகப் பரந்தாமனைப் பல நாமங்களில் படிக்கப்பட்டது. இந்நாமங்களுக்குச் சங்கரர் எழுதியுள்ள உரையிலிருந்து சுருக்கமான விளக்கங்கள் பின்வருபவை. பரிபாடல் வரிகளுக்கும் இவ்வுரைப்பகுதிகளுக்கும் உள்ள ஒற்றுமை தெளிவாக விளங்குகிறது:

இஷ்ட: (308-வது நாமம்) — வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன்.

ஹவிர்ஹரி: (359) — யாகத்தில் அக்கினியில் இடப்படும் அவிப்பாகத்தை (ஹவிர்பாகத்தை) எடுத்துக் கொள்பவன்.

யஜ்ஞ (445, 971) — வேள்விகளின் சொரூபமாக இருப்பவன்; வேள்வி ரூபத்தில் எல்லா தேவர்களையும் போஷிப்பவன்.

யஜ்ஞபு4க் (979) — வேள்விகளில் வழங்கப்படும் அவியுணவை நுகர்பவன்.

யஜ்ஞாங்க3: (974) — வராகமூர்த்தி ரூபத்தில் வேள்விகளை அங்கமாகக் கொண்டவன்.

இத்தகைய விளக்கங்களுக்கெல்லாம் அடித்தளமாக விளங்கும் தத்துவம் என்னவென்றால், நாரணனே அனைத்துயிர்களுக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவனே என்பதாம். அங்ஙனமே, அந்தந்த தேவதைகளைக் குறித்துச் செய்யப்படும் யாகங்கள் எல்லாம் எல்லா தேவர்களுக்கும் உயிராய், அவர்களுக்கு உள்ளிருந்து நியமிப்பவனாக விளங்கும் மாயவனைக் குறித்ததே என்பதாகும். கண்ணன் இதைக் கீதையில் தெளிவாக விளக்குகிறான். இதை,

"ஆங்கனைத்து வேள்விகளுக்கு மாராத் தியனானே

பாங்கதனி னானே பலங்கொடுப்பே — னீங்கென்னை

யிவ்வா றறியா ரிதனாலத் தத்துவத்தின்

அவ்வா நழுவுவர்சார் வற்று."

[ — பகவத் கீதை வெண்பா, 9.24]

என்ற அழகிய மணவாள ஜீயரின் தமிழ் வெண்பாவிலிருந்து அறியலாம் (ஆராத்தியன் = வணங்கப்படுபவன்). மிகவும் கடினப்பட்டுப்  பொருளீட்டி யாகங்களைச் செய்தே கண்ணனை வழிபடவேண்டும் என்பதும் இல்லை; அவன் எளிதில் அடையக்கூடியவன். அவரவர்களுக்கு இயன்ற ஒரு இலையையோ, மலரையோ, கனியையோ, அல்லது மிஞ்சிப்போனால் சிறிது தண்ணீரையோ பக்தர்கள் தூய மனத்துடன் அவனுக்குச் சமர்ப்பித்தால் மிகப்பெரிய பேறாகிய வீட்டின்பத்தைக் கண்ணன் தருகிறான் என்பதை,

"பத்ரேஷு புஷ்பேஷு ப2லேஷு தோயேஷு அக்ரீத லப்4யேஷு ஸதை3வ ஸத்ஸு

4க்தி-ஏக லப்4யே புருஷே புராணே முக்த்யை கிமர்த2ம் க்ரியதே ந யத்ன"

[பத்திரம் (இலை), புஷ்பம், பழம், தண்ணீர் முதலானவைகளைக் கொண்டு பக்தி செய்வதாலேயே எளிதில் அடையப்படுபவனாக அந்த புராண புருஷன் இருக்க, மோட்சத்தைப் பெறும் முயற்சியில் ஏனோ இறங்குவதில்லை!]

என்ற மகாபாரத வசனம் கூறுகிறது. கீதையிலேயே கண்ணனும்,

"பத்திரமும் பூவும் பழமும் புனலுமெனக்

கொத்தியலும் பத்தி யுடனுதவி — சுத்திய

தூமனத்தான் றன்ததனைத் துய்ப்பனவ னப்பத்தி

யாமனத்த தென்றுநா னார்ந்து."

— பகவத் கீதை வெண்பா, 9.26]

என்று உரைத்துள்ளான்.

இன்னுமொரு செய்தி இங்கு நோக்கத்தக்கதாகும். விஷ்ணுவுக்கும் வேள்விக்கும் உள்ள தொடர்பை வைத்து சில அதிசயமான விளக்கங்களை வேதாந்த ஆச்சாரியர்கள் அளித்துள்ளனர். கீதையில் (3.9), "யக்ஞத்திற்காகச் (வேள்விக்காகச்) செய்யப்படும் வினைகளைத் தவிர மற்ற கர்மங்கள் ஒருவனைப் பிறவிக்கடலில் ஆழ்த்துபவை" என்று உள்ளது. இங்கு ஆதி சங்கரர், "யக்ஞம் என்று இங்கு சொல்லுவது பகவானாகிய விஷ்ணுவையே. ’யஜ்ஞோ வை விஷ்ணு:’ என்று வேதம் கூறுகின்றதன்றோ. ஆகையால், பகவானை அடையும்/ஆராதிக்கும் பொருட்டு செய்யப்படும் கர்மங்களைத் தவிர மற்றவை சம்சாரத்தில் ஆழ்த்தும்." என்றே வியாக்கியானம் செய்துள்ளார்! பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆனந்தகிரி என்னும் பண்டைய அத்வைத சம்பிரதாய ஆசாரியாரும் "யக்ஞம் முழுமைபெறுவதன் பொருட்டு செய்யப்படும் கன்ம வினைகள் ஞானியைச் சம்சாரக் கடலில் ஆழ்த்துவதில்லை" என்று தொடங்கும் 4.23-ஆம் கீதை வாக்கியத்திற்கு, "யக்ஞம் என்ற பதத்தால் குறிக்கப்படும் பகவான் நாராயணனை, விஷ்ணுவை, உகப்பிக்கச் செய்யப்படும் வினைகள்" என்று தமது பாஷ்ய டீகையில் வழங்கியிருப்பதும் நோக்கத்தக்கது. 'இறைவனை உகப்பிப்பதைத் தவிர தாழ்ந்த மற்ற பலன்களில் ஈடுபடாமல் கடமைகளை செய்து மக்கள் நற்கதி ஏந்தவேண்டும்' என்பதே அவர்கள் நோக்கம்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

ஜடாயு on May 5, 2011 at 11:42 pm

வராக அவதாரம் பற்றீய பல இலக்கியச் செய்திகளை அருமையாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். அருமை. வராக வழிபாடு மிகத் தொன்மையானதும் பாரதத்தின் பல பகுதிகளிலும் பரவியிருந்த ஒன்றாகும். குப்த, சாளுக்கிய, ஹொய்சள கால வராகச் சிற்பங்கள் ஏராளம் கிடைக்கின்றன.

சமீபத்தில் ஒரு வைணவ அறிஞர் வீட்டிற்குச் சென்ற போது அங்கு coffee table book அளவில் இருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன்…

Varaha Images in Madhya Pradesh: An Iconographic Study – By Haripriya Rangarajan.

அழகிய புகைப்படங்கள். நூலும் மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருந்தது. மத்தியப் பிரதேசம் என்ற ஒரு மாநிலத்தில் மட்டுமே எத்தனை எத்தனை வராகங்கள்! கண்டு மலைத்தேன். சில சிற்பங்களில் வராகத்தின் வாய்க்குள்ளும், உடல்மீதும் பிரபஞ்ச இயற்கை முழுவதையும் சித்தரிக்கும் காட்சிகள் செதுக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு சிற்பமும் ஒரு கலை அற்புதம்! பூமிப் பிராட்டியைத் தாங்கி நிற்கும் 4-5-6ம் நூற்றாண்டு வராகச் சிற்பங்கள் பலவற்றில் பூமி தெளிவாக கோள வடிவில் காட்டப் பட்டிருந்தது. மேற்கத்தியர்கள் இந்த அறிவியல் கருத்தாக்கத்திற்கு வந்து சேர்வதற்குப் பல நூற்றாண்டுகள் முந்தைய காலத்தவை அவை.

 

க்ருஷ்ணகுமார் on May 6, 2011 at 5:48 pm

ஸ்ரீ கந்தர்வன் நமஸ்காரம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணியின் மூலம் மிகச்சுவையாக தமிழ்ச்சங்க நூல்களிலும் வேத இதிஹாஸ புராணங்களிலும் சொல்லப்படும் விஷயங்களின் சாம்யதையை தெளிவாக எடுத்துரைக்கிறீர்கள். நன்றிகள் பல. வராஹப் பெருமான் சம்பந்தமாக விஷ்ணு ஸஹஸ்ரநாமம், உபநிஷத், விஷ்ணுபுராணம், பகவத்கீதை போன்ற பல நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் பரிபாடல், கம்பராமாயணம் மற்றும் திருவாய்மொழி போன்ற நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களுடன் கருத்தொருமிக்க இருப்பது ஆஸேது ஹிமாசலம் நாம் ஒருவரே என்பதை த்ருடமாக்குகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தின் த்ருதீய ஸ்கந்தத்திலும் (பதின்மூன்றாவது அத்யாயம்) ஹிரண்யாக்ஷ வதத்திற்குப் பிறகு வராஹப்பெருமானை ரிஷிகள் “ஜிதம் ஜிதம் தே” உமக்கு ஜெயம் என வராஹப்பெருமானை யக்ஞ ஸ்வரூபமாகவே ஸ்துதி செய்கிறார்கள்.

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

இது ரிக் வேத காலத்திலேய பிரசித்தம்

ரிக் வேத மந்த்ரம்

த்ரினாபி சக்ரம் அஜரமனர்வம் யத்ரேமா
விஷ்வா பூனானி தரது: 1.164.2

this clearly proves that rig vedic people had the knowledge that the planets had elliptical shape and also travelled in an elliptical path. thrinaabi (elliplse needs three points)

சூர்ய சித்தாந்த ஸ்லோகம்

யோஜனானி ஷதான்த்யஷ்டௌ பூகர்ண த்விகுணாணி ச
தத்வத்கர்தோ தஷகுணாத் பதம் பூபரிதிர் பவேத்

deduces the circumference of the earth to 4.008 X 10^7 meters__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on May 6, 2011 at 9:13 pm

திரு கிருஷ்ணகுமார்,

தங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

// ஸ்ரீமத் பாகவதத்தின் த்ருதீய ஸ்கந்தத்திலும் (பதின்மூன்றாவது அத்யாயம்) ஹிரண்யாக்ஷ வதத்திற்குப் பிறகு வராஹப்பெருமானை ரிஷிகள் “ஜிதம் ஜிதம் தே” உமக்கு ஜெயம் என வராஹப்பெருமானை யக்ஞ ஸ்வரூபமாகவே ஸ்துதி செய்கிறார்கள். //

இப்பொழுது தான் பார்த்தேன். கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கலாம் ஏனோ விட்டுப் போய்விட்டது.

அதே போல, இன்னொரு கம்பராமாயணச் செய்யுளையும் சான்றாக மேற்கோள் காட்டியிருக்கலாம். ஈரானிய வதைப் படலத்தில் கீழ்க்கண்ட விருத்தம் வருகிறது:

‘”மந்திரம் மா தவம் என்னும் மாலைய,
தந்துறு பயன் இவை, முறையின் சாற்றிய
நந்தல் இல் தெய்வம் ஆய், நல்கும் நான்மறை
அந்தம் இல் வேள்விமாட்டு அவிசும் ஆம்-அவன்.”__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4

 

முந்தைய பகுதிகள் – பகுதி 1 பகுதி 2 | பகுதி 3

vishnu3

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!

[– பரிபாடல், 3]

சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களின் மேற்கண்ட கூற்றில், நம் ஹிந்து சனாதன தருமத்தில் சிருஷ்டி குறித்த முக்கிய நம்பிக்கை ஒன்று இடம்பெறுகிறது. “மகாபிரளயம் முடிந்த பிறகு ஆதிக் கல்பத்திலே பெரிய அளவதாகிய பூமி தோன்றுவதற்கு முன் பிரளய நீரின் நடுவே, வாய்மொழியாகிய வேதத்தை உரைக்கும் பிரம்ம தேவருடன் ஒரு தாமரை மலர் தோன்றியது. மகரந்தப் பொகுட்டை உடைய அப் பெரிய தாமரை மலரை உந்தியில் கொண்ட திருமாலது திருச் சக்கரப் படையே (இந்த உலகனைத்திற்கும்) நிழலாகிறது” என்பது இவ்வரிகள் வரையும் படிமம்.

திருமகள் கொழுநனுடைய திருநாபியிலிருந்து ஊழிக்காலங்களின் தொடக்கத்தில் ஒரு தாமரை மலர் தோன்றியதென்பதும் அதில் நான்முகனாராகிய பிரம்மதேவர் படைக்கப்பட்டார் என்பதும் தொன்றுதொட்டு நம் வேதங்களிலும் இதிகாச-புராணங்களிலும் வழங்கப்பட்டுவரும் செய்தியாகும். கலையுலகம் ஓங்கியிருந்த காலங்களில் பாரதநாடெங்கிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும், சிற்பிகளும் ஓவியக்கலைஞர்களும் இப் படிமத்தைத் தம் ஆக்கங்களில் பதித்துள்ளனர். மேலும், இவ்விதிகாசத்தைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களும் அறிந்திருந்தனர் என்பது மேற்கண்ட பாடல் வரிகள் காட்டும் செய்தி.

திருவுந்தித் தாமரையை நினைவுப்படுத்தவே ‘பத்மனாபன்’ முதலான நாமங்களும் அவனுக்கு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் ’பத்மனாப சுவாமி’ என்ற பெயருடன், “கிடந்த திருக்கோலத்துடன்” கோயில் கொண்டுள்ள திருவுருவைப் பற்றிச் சேர வேந்தர்களைக் குறித்த ’பதிற்றுப்பத்து’ என்ற சங்கநூலிலேயே உள்ளது; விரிவாக வேறொரு கட்டுரையில் காண்போம். இப்பொழுது பொதுவாகத் திருநாபிக் கமலம் கூறும் தத்துவத்தைச் சங்க இலக்கியம் விளக்கும் விதத்தையும், அது வடமொழி நூல்களோடும் ஒத்திருப்பதையும் காண்போம்.

temple

வேதப்பகுதியிலேயே நான்முகன் உட்பட உலகமெல்லாம் நாரணனின் திருநாபிக் கமலத்தில் உண்டாயிற்று என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளதாக ஆசாரியார்களும் உரைகளில் குறிப்பிடுகின்றனர்:

அஜஸ்ய நாபா4வத்4யேகம் அர்பிதம் யஸ்மின் விச்’வானி பு4வனானி தஸ்து2:

என்பது ரிக்வேதத்தில் விஸ்வகர்மா சூக்தத்தில் (10-வது மண்டலம், 82-வது சூக்தம்) வரும் மந்திரம். “பிறப்பில்லாதவனுடைய நாபியிலே ஒன்று உண்டானது. அதில் உலகனைத்தும் நிலைபெற்றன.” என்பது இதன் பொருள். சிருஷ்டியை விளக்கும் மிக முக்கியமான சூக்தத்தில் இம்மந்திரம் வருகிறது. ஆதி சங்கர பகவத்பாதர் தாம் பண்ணிய விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில், அத்தியாயத்தின் மூலப்பகுதியில்

அப்ரமேயோ ஹ்ருஷீகேச’: பத்3மநாபோ(அ)மரப்ரபு4:

எனுமிடத்தில் வரும் ’பத்மனாபன்’ என்ற நாமத்திற்கு, “சர்வ ஜகத் காரணமாகிய தாமரை மலர் எவன் நாபியில் இருக்கிறதோ, அவன் பத்மனாபன்” என்ற விளக்கத்தைக் கூறி அங்கேயே மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தைப் பிரமாணமாக எடுத்துள்ளார்.

ஆதி சங்கரரின் இவ் வேத விளக்கத்தை ஊர்ஜிதப்படுத்தும் வண்ணம் மகாபாரதத்தில் ஒரு சுலோகம் வருகிறது. அம்புப் படுக்கையில் கிடந்தவண்ணம் பீஷ்மர் கண்ணனுக்குச் செய்த வாழ்த்து பற்றி முதல் பகுதியில் கண்டோம். அவ்வாழ்த்தில் பலவிடங்கள் வேத உபப்பிரம்மணமாக (அதாவது, வேதத்தின் பொருளைத் ஐயமற உரைப்பதாக) வருவதைப் பற்றியும் பார்த்தோம். நாம் எடுக்கப்போகும் இச்சுலோகமும் அப்படித்தான் — மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தின் பொருளை விளக்குகிறது:

அஜஸ்ய நாபா4வத்4யேகம் யஸ்மின் விச்’வம் ப்ரதிஷ்டி2தம் |
புஷ்கரம் புஷ்கராக்ஷஸ்ய தஸ்மை பத்3மாத்மனே நம: ||

[– மகாபாரதம், 12.47.40]

பிறப்பில்லாத தாமரைக்கண்ணனுடைய நாபியிலிருந்து தோன்றிய தாமரை உலகத்திற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கிற்று. அந்தத் தாமரை வடிவில் உள்ள அவனுக்கு வணக்கங்கள்” என்பது இதன் பொருள். இச் சுலோகம் சொல் அமைப்பிலேயே வேத மந்திரத்துடன் ஒத்திருப்பதும் நோக்கத்தக்கது.

அதே வேதமந்திரத்தை விளக்கும் பின்வரும் ஸ்கந்த புராணச் சுலோகமானது, த்வைத மத ஆசாரியாராகிய மத்வரால் பிரம்ம சூத்திர விளக்கவுரையில் பிரமாணமாக எடுக்கப்பட்டுள்ளது:

அஜஸ்ய நாபா4விதி யஸ்ய நாபே4ர்பூ4ச்ச்ருதே: புஷ்கரம் லோகஸாரம் |
தஸ்மை நமோ விஸ்தஸஸ்த விச்’வபூ4தயே விஷ்ணவே லோககர்த்ரே ||

[பிரபஞ்சத்தை உள்ளடக்கிய தாமரையானது, ’அஜஸ்ய நாபௌ4’ (பிறப்பற்ற பெருமான் திருவுந்தியிலே) எனத்தொடங்கும் வேத வாக்கியத்தாலே எவனுடைய நாபியிலிருந்து உண்டானதாக அறியப்படுகிறதோ, வெளிக்காணும் எல்லா உலகையும் செல்வமாகக் கொண்ட உலகங்களுக்குக் காரணமான அந்த விஷ்ணுவுக்கு நமஸ்காரம். — பிரம்ம சூத்திர மாத்வ பாஷ்யம் 1.1.1]

இவ்விளக்கங்களுடன் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்கள் பாடும் பின்வரும் வரிகளையும் ஒப்பிட்டுப் படிக்கலாம்:

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனை

[– சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை]

alwar1

இவ்வாறு பிரமனையும் படைத்த திருமாலின் உந்தித் தாமரைமலர் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகிப் பெரிதாகக் காணப்பட்டது. இந்நினைவாலேயே, இவ்வுலகில் பிரம்மாண்டமாக அழகுடன் விரிந்து காணப்படுவனவற்றிற்கும் அம்மலரையே உவமையாகக் கூறினர் சங்கப் புலவர்கள்:

1) பத்துப்பாட்டில் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப்படையில், காஞ்சி நகரத்திற்குத் திருமாலின் உந்தித்தாமரை உவமையாகக் கூறப்பட்டது:

நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்,
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்,
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி

[– பெரும்பாணாற்றுப்படை, 401-405]

(நெடியோன் = திருமால், கொப்பூழ் = வயிறு, பொகுட்டு = பூவின் இடையில் காணப்படும் மகரந்தக் கூட்டம்)

2) இதுபோலவே, மதுரையைப் பற்றிய பரிபாடல் திரட்டுப் பகுதியும் இதே உவமையைக் கூறிற்று:

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

[– பரிபாடல் திரட்டு, 7]

இப்பாடலைப் பாடிய புலவர், தாம் வாழும் ஊரான மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும் அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம். அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம். அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும் பருகப் பறந்துவரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம்.

lotus1

அத்துடன், அத்தாமரைமலரின்கண் தோன்றிய பிரமனது வாயில் பிறந்த நான்கு வேதங்களையும், அவ்வூரில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் அதிகாலையில் பாராயணம் பண்ணுகிறார்களென்று மேற்கண்ட சங்கநூற் பாடல் வரிகள் கூறுகின்றன. இவ்விடத்தில், “பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்து நான்கு வேதங்கள் பிறந்தன” எனும் புராணச் செய்தியையும் காணலாம் [விஷ்ணு புராணம், 1.5.48; பாகவத புராணம், 3.12.34-37].

இப்படி உவமைகள் போய்க்கொண்டிருக்க, திருமாலின் அவயவங்களுக்கு எதை அளவையாகச் சொல்ல? வேறிடத்தில் புலவர்கள்,

‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;

[மாயக்கண்ணனே! ’இவரைப் போல நீ இருக்கிறாய், இத்தகைய தொழில்களை உடையாய்’ என்று கூறும் வண்ணம் வேறு ஒன்றைக் காணாமையால், உயிர்கட்கு முதல்வனாகிய – பீதாம்பரம் அணிந்த – வலக்கையில் சக்கரம் கொண்ட உன்னையே, உனக்கு உவமையாகக் கூறுவோம். — பரிபாடல், 1] என்று “அவனுக்கு அவனே உவமையாவான்” கூறுகையால்,

நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை
அன்ன நாட்டத்து அளப்பரியவை;

[பெருமானே! உன்னிடத்தே தோன்றிய அடர்த்தியான இதழ்களைக் கொண்டுள்ள தாமரையைப் போன்ற அழகிய கண்களை உடையாய் — பரிபாடல், 4]
என்றனர்.

விஸ்வகர்மா சூக்தம் தவிர இன்னும் சில வேத வாக்கியங்கள் நான்முகனைப் படைத்த உந்தித் தாமரையின் தத்துவத்தைக் கூறுகின்றன. விரிவிற்கந்சி ஒரு உதாரணத்துடன் நிறுத்திக்கொள்வோம். கொப்பூழ்த் தாமரை பற்றிய குறிப்பு மூல மறைநூலாகிய வடமொழி வேதத்திலேயே உள்ளமையால், “வேதமாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரை” என்றும் பழந்தமிழ்ப் பெரும்புலவர் பாடியுள்ளனர்:

‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும்
நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை.

[திருமாலே! வேத/உபநிடதங்களாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரைப்பூவினுள் பிறந்தவனும், அவன் தந்தையும் நீயே என்று அந்தணர்கள் ஓதும் மறை மொழிகிறது — பரிபாடல், 3]

மேற்கண்ட வரிகளில் நான்முகக் கடவுளாகிய பிரமனைத் திருமாலுடன் அபேதமாகப் படிக்கப்படுவதும் நோக்கத்தக்கது. முதற் பரிபாடலிலும் இதே பொருளையுடைய வரியொன்று உள்ளது. ’உலகத்தில் காணப்படும் காரியப்பொருள்களனைத்தும் திருமாலே. நிகழ்வதெல்லாம் அவ்விறைவனின் லீலைகளே’ என்று படித்துவிட்டு இறுதியில்,

நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ

[நன்மை முழுதும் பொருந்திய குற்றமற்ற மெய்யுணர்வினை அளிக்கும் வேதமும், மலரின்மேலிருப்பவனாகிய பிரமனும், அப் பிரமனுடைய தொழிலாகிய படைப்புத்தொழிலும் நீயே — பரிபாடல், 1:45-46]

என்று சங்கப் புலவர்கள் பாடுகிறார்கள். கம்பரும்,

“‘ஆதிப் பிரமனும் நீ!
ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு
அப்பால் உண்டாகிலும் நீ!
சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ‘
என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால் வெள்காரோ
வேறு உள்ளார்?

[– கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம், 45]

என்றார். இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கண்ட வரிகள் பிரபஞ்ச சிருஷ்டியில் காரியப்பொருளுக்கும் காரணப்பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன. திருமால் காரண நிலை; நான்முகன் முதலான சித்துக்களாகிய ஆத்மாக்களையும், அசித்துக்களாகிய ஜடப்பொருள்களையும் அடக்கியுள்ள பிரபஞ்சமானது காரிய நிலை. பொதுவாகப் பார்த்தால் காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருப்பதாலும், குறிப்பாகப் பார்த்தால் நாரணனே பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உயிருக்கு உயிராய் இருப்பதாலும் காரியமாகிய பிரமனைக் காரணமாகிய திருமாலோடு அபேதமாக, “தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும் நீ” என்று பரிபாடல் வரிகள் இயம்பின. இப்படிப் பொருள் கொள்ளாமல் நேரிடையாக திருமாலும் பிரமனும் எல்லா வகையிலும் ஐக்கியம் என்று கொண்டால், பரம்பொருளின் அருளுக்கு உட்பட்டவராகவும், காரியநிலையிலுள்ள ஒருவராகவும் பிரமனைக் குறித்து வரும் பற்பல வேத வாக்கியங்கள் அர்த்தமற்றுப் போய்விடும்; காரணப்பொருளுக்கே உண்டான தனிப்பட்ட குணங்கள் பரம்பொருளுக்கு உண்டு எனும் வேத வாக்கியங்கள் கேள்விக்குறிகளாகிவிடும்.

நான்முகனைப் படைக்கும் திருமாலது தனிப்பெருமையை,

பிரமனையும் படைத்த ஆதி கர்த்தாவே!”, “’பிதாமஹ’ என்று சொல்லப்படும் பிரமனுக்கும் தந்தையாகிய உன்னை ’பிரபிதாமஹ’ என்று சொல்லலாம்” [– கீதை, 11.37,11.39]

என்று அர்ஜுனனும் கீதையில் கண்ணனைத் துதிக்கையில் செப்பினான். கௌசல்யா தேவியை வர்ணிக்கும்பொழுது கம்பர்,

இருந்த அந்தணனோடு எல்லாம்
ஈண்றவன் தன்னை ஈனப்
பெருந்த தவம் செய்த நங்கை

[– கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம், 62]

என்று பாடுகிறார் (இருந்த அந்தணன் = நான்முகக் கடவுள்).

krishnagopika

திராவிட வேதமாகிய பிரபந்தத்திலும்,

தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக

[– திருவாசிரியம், 1]

என்று நம்மாழ்வாரும்,

பூவலர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டுமிழ்ந்த,
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற,
கோவலர் கோவிந்தனை

[– பெரிய திருமொழி, 9.9.1 ]

என்று திருமங்கை ஆழ்வாரும்,

என்னரங்கத் தின்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர்

[– நாச்சியார் திருமொழி, 102]

என்று ஆண்டாளும், இன்னும் பல ஆழ்வார்களும், இப்பெருமையைப் பாடியுள்ளனர்.

படைக்கும் கடவுளாக பிரமனையும் படைத்தவனாகக் காணப்படுவதால் திருமால் சகல காரணங்களுக்கும் காரணனாகிறான். இக்காரணத்தால்,

நமோ நமஸ்தே அகி2ல காரணாய
நிஷ்காரணாய அத்3பு4த காரணாய

[– ஸ்ரீமத் பாகவதம், 8.3.15]

என்று கஜேந்திராழ்வான் முதலைப் பிடியிலிருந்து விடுபட “ஆதி மூலமே” என்று கண்ணனை அழைக்கும்போது கூறுகிறான். உலகத்திலுள்ள காரணப்பொருள்கள் எல்லாவற்றுக்கும், அந்தந்த பொருட்களுக்கு மேலான ஒரு காரணப்பொருள் காணப்படுகிறது: குடத்துக்குக் காரணம் மண்ணும் குயவனும், ஆனால் அம்மண்ணுக்கும் குயவனுக்கும் வேறு காரணப்பொருள் இருக்கிறது. இப்படி காரிய-காரண தொடர்ச்சி போய்க்கொண்டிருக்க, ஒரே ஒரு காரணப்பொருள் மாத்திரம் தனக்கு மேல் ஒரு காரணம் இல்லாதபடி தனித்து நிற்கிறார் (‘நிஷ்காரணாய’). அவர் எல்லாவற்றுக்கும் மூல காரணமாகிறார் (‘அகில காரண காரணாய’). இப்பெருமைகள் வேறெந்த காரணப்பொருளுக்கும் காணப்படாமையால், அவரே ’அற்புத காரணன்’ (‘அத்3பு4த காரணாய’) என்று கஜேந்திரனால் அழைக்கப்படும் திருமால்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

June 29, 2011
கந்தர்வன் 

தெய்வ வடிவத்தை ஆலயங்களில் வழிபடுவது நம் பாரத நாடெங்கிலும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரப்படும் வழக்கமாகும். அங்கு பிரதிட்டையான விக்கிரகத்தை ‘வெறும் கல்’ என்றோ, ‘எண்ணங்களைச் சீர்ப்படுத்திக் குவிக்கத் தேவையானால் உபயோகிக்கத்தகதொரு வெறும் கருவி’ என்றோ, ‘பக்குவமடையாத ஆன்மாக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட படிநிலை’ என்றோ பார்க்காமல், ‘தெய்வம் தன் அடியவர்களுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் எளிய வடிவம்’ என்ற கண்ணோட்டத்துடன் அணுகுவதே சான்றோர்களால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும். ஆதி சங்கரரும் பிரம்ம சூத்திரஉரையில் பாஞ்சராத்திர அதிகரணத்தில் (2.2.42-2.2.45 சூத்திரங்கள்) “இறைவனை அபிகமனம் (கோயிலுக்குச் செல்லுதல்) முதலான வழிமுறைகளால் ஆராதனம் செய்வது அனைவர்க்கும் ஏற்கத்தக்கதே; இது சுருதி-ஸ்மிருதி சித்தமாகும்” என்று கூறியுள்ளார்.

இசுலாமியக் கொடுங்கோல் மன்னர்கள் நம் கோயில்களைச் சூறையாடுவதையும், நம் சனாதன தருமத்தை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு படையெடுப்புகள் நிகழ்த்தியது அனைவரும் அறிந்த வரலாறு. அத்தருணங்களில் சான்றோர்கள் பலர் மூல மூர்த்திகளையும் உற்சவ மூர்த்திகளையும் காப்பாற்ற உயிரையே பணயம் வைத்தனர்; பெரும் அல்லல்களையும் சந்தித்தனர். “வெறும் கற் சிலை. இது போனால் வேறு செய்து கொள்ளலாம்” என்ற கொள்கையை உடையவர்களாக இருந்திருந்தால், அப்பெரியோர்கள் அத் தியாகங்களைச் செய்திருப்பார்களா என்பது அனைவரும் சிந்திக்கத்தக்கது.

தத்துவ ஆழம் மிக்கதும் மிகுந்த இன்பம் தரக்கூடியதுமாகிய உருவ வழிபாட்டின் அருமை பெருமைகள் அன்னிய மதத்தவர்கள் மனதிற்கு எட்டாக்கனி; கருத்துச்செறிவும், பிரமிக்கத்தக்க அழகும், பண்பட்ட கலையுணர்வும் சேர்ந்த இந்நம்பிக்கையின் மேன்மையை உணர வாய்ப்பும் இல்லாமல், அதனை ‘அறிவற்ற பழங்குடிக் கலாச்சாரம்’ என்றெல்லாம் தூற்றுகின்றனர் அந்தோ! இத்தகைய சாரமற்ற, கலாரசனையற்ற, தூற்றுதல்களுக்கெல்லாம் மாறாக, வேத, வேதாந்த, இதிகாச-புராணங்களில் வல்லவர்களாக விளங்கிய நம் பழந்தமிழ்ச் சான்றோர்கள் ஆலயங்கள் மீது எத்தகைய உயர்ந்த அபிமானத்தை வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவது இக்கட்டுரையின் ஒரு நோக்கம். இத்தொடரின் மற்ற பகுதிகளைப் போல, சங்க காலம் தொட்டு திருமால் சமயம் சார்ந்த செய்திகளை இங்கு பார்க்கலாம்.

gopuram

வைணவத்தில் திருமால் கோயில்கொண்டுள்ள திருமேனிகளை ‘அர்ச்சாவதாரங்கள்’ என்றே அழைக்கின்றனர். திருமாலின் ஐந்து நிலைகளாகிய ‘பரம்’, ‘வியூகம்’, ‘விபவம்’, ‘அந்தர்யாமி’, ‘அர்ச்சை’என்பனவற்றில் ஐந்தாவதாகச் சொல்லப்படுவது. இவ்வைந்து நிலைகளையும் சுவாமி நம்மாழ்வார்,

“விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!”

[திருவாய்மொழி, 6.9.5]

எனும் பாசுர வரிகளில் காட்டியுள்ளார். இதில் ‘விண்மீதிருப்பாய்’ என்பது பரவாசுதேவனாக ஸ்ரீவைகுண்டத்தில் கோயில்கொண்டுள்ள பர நிலையைக் குறிக்கிறது; ‘மலைமேல் நிற்பாய்’ என்பது திருவேங்கடம் முதலான திருத்தலங்களில் அர்ச்சை நிலையைக் குறிக்கிறது; ‘கடல் சேர்ப்பாய்’ என்பது திருப்பாற்கடலில் அனந்த சயனக் கோலத்தில் உள்ள வியூக நிலையைக் குறிக்கிறது; ‘மண்மீதுழல்வாய்’ என்பது இராமன் கண்ணன் முதலான வடிவங்களைக் குறிக்கிறது; இதுவே விபவ அவதார நிலையாகும். ‘இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்’ என்பது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து, உயிருக்குயிராய் அனைத்தையும் ஆள்பவனாக விளங்கும் அந்தர்யாமி நிலையைக் குறிக்கிறது.

மேற்கண்ட பாசுரமும் வடமொழி வேதவாக்கியம் ஒன்றை ஒட்டியே வருகிறது. அது தைத்திரீய உபநிடதத்தின் நாராயணீய அனுவாகத்தில் (சிலர் இதை ‘மகா நாராயண உபநிஷத்’ என்றும், சிலர் ‘யாக்ஞிக உபநிஷத்’ என்றும் அழைக்கின்றனர்) உள்ள,

“அம்ப₄ஸ்ய பாரே பு₄வனஸ்ய மத்₄யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் |
சு’க்ரேண ஜ்யோதீஹும்ஷி ஸமனுப்ரவிஷ்ட: ப்ரஜாபதிச்’ சரதி க₃ர்பே₄ அந்த: ||”

என்னும் முதல் மந்திரம். இம்மந்திரமானது பதத்திற்குப் பதம் மேற்கண்ட திருவாய்மொழிப் பாசுரவரிகளுடன் உடன்படுகிறது. நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று அழைப்பது வெறும் மிகைப்படுத்திப் புகழ்வதற்காக ஏற்பட்ட அடைமொழியன்று; இவ்வாறு நூற்றுக்கணக்கான பாசுரங்களில் வடமொழி வேதாந்தத்தின் உட்பொருளை உண்மையிலேயே தமிழில் செய்திருக்கிறார் என்பதற்காக.

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சையாகிய இவ்வைந்து இறைவடிவங்களில் ஒவ்வொன்றும் சிறப்பானவை, முழுமையானவை. எனினும், அர்ச்சை நிலையானது அனைவராலும் எளிதில் அடையத்தக்கதாக – எளிமையின் சிகரமாக இருப்பதனால் மற்ற நான்கிற்கும் இல்லாத தனிப்பெரும் பெருமை உள்ளதாகப் பெரியோர்கள் பகர்வர். அனுபவத்திற்காகச் சில பெரியோர்கள் இப்படி விளக்கம் கூறுவர்:

(1) பிறவிப் பிணி நீங்கப்பெற்று முக்தி நிலையை ஏந்தியவர்கள் வாழும் பரமபதத்தில், பிறவி நோய்க்கு மருந்தாகிய திருமால் பர வாசுதேவனாகக் கோயில் கொண்டிருப்பது, வற்றாத கடலுக்கு நீர்ப்பாசனம் செய்வதைப் போன்றதாம்.

(2) பாற்கடலில் வியூக மூர்த்தியாகப் பள்ளிகொண்டிருக்கும் வடிவமானது நல்வினைப் பயன்களால் உயர்பதவி ஏந்தியுள்ள தேவர்கள், முனிவர்கள் முதலானோர்க்கு மட்டும் அடையக்கூடியது.

(3) அந்தர்யாமி நிலையானது எங்கும் வியாபித்திருக்கும் தன்மையாகும். இந்நிலையானது நமக்கு மிக அருகில் – ஏன், நமது இதயத்திலேயே – இருந்தாலும், அதுவும் யோகிகளுக்கும் சித்தர்களுக்கும் முனிவர்களுக்குமே எட்டக்கூடியது. “முழுமதி முகத்தவனின் வடிவழகையும் கம்பீரத்தையும் தம் இதயத்தாமரை தன்னில் கண்டு பிரம்மானந்தத்தை அடையும் மகானுபாவர்களுக்கு எனது வணக்கங்கள்” என்று தியாகப் பிரம்மம் பாடுவதிலிருந்து அந்த அந்தர்யாமி நிலையும் சாமானியர்களுக்கு எட்டாக்கனி என்றே விளங்குகிறது.

(4) விபவ அவதாரம் என்பது இராம கிருஷ்ணாதி அவதாரங்களைக் குறிக்கும். என்றைக்கோ பெருக்கெடுத்து ஓடியிருந்தாலும் இன்றைக்கு நாம் நேரிடையாகப் பயனடையாதபடி வற்றியுள்ள காட்டாறு போன்று, வேறு யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கு மாத்திரமன்றோ விபவாவதாரத்தை நேரில் கண்டு கூடிக்குலாவும் அனுபவமும் கிட்டியது!

(5) 
அர்ச்சை நிலை என்பது இன்றுவரையிலும் என்றென்றும் அனைவருக்கும் காட்சி தரும் மிக எளிய நிலையாகும். இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு.

“எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளைக் கோயில் கருவறையில் ஒரு சிறிய உருவமாகக் காண நினைப்பது சரியா?” என்ற ஐயம் பலருக்கு எழக்கூடும். பரம்பொருள் தன் சொரூபத்திற்கு – இலக்கணத்திற்கு ஏற்றவாறு எங்கும் நீக்கமற முழுமையுடன் நிறைந்திருப்பதற்கு “பொதுப் படர்தல்” என்று பெயர். எங்கும் நிறைந்துள்ள பொழுதும் மெய்யடியவர்கள் கல்லிலும் மரத்திலும் உலோகத்திலும் தாம் விரும்பும் மூர்த்தியை அமைத்து வழிபட விரும்பும்பொழுது அவ்வுருவில் இறைவன் மறுபடியும் தன் கலியாண குணங்களுடன் இறங்கி வந்து, அதை சுத்த சத்துவமாக மாற்றித் திருமேனியாகவும் ஏற்றுக்கொள்கிறான். இதற்கு “சிறப்புப் படர்தல்” என்ற பெயருண்டு. “பொதுப் படர்தல்” வகையைச் சேர்ந்தவைகளுக்கு முக்குணங்களின் தாக்கமும் அதனால் விளையும் குறைபாடுகளும் உண்டு; ஆயினும் “அங்கும் பரம்பொருள் உள்ளது” என்ற மனோபாவத்துடன் அவ்வப் பொருள்களுக்கு ஏற்றவாறு தக்க மரியாதையைத் தருவது அவசியமே. ஆயினும், வழிபடத்தக்க – பூஜிக்கத்தக்க உருவங்கள் என்பது “சிறப்புப் படர்தல்” வகையைச் சேர்ந்தவையே; அவற்றிற்கு முக்குணங்களின் சம்பந்தமில்லை. (வடமொழியில் இவ்விரண்டு வகையான படர்தலுக்கும் “சாமானிய வியாப்தி“, “விசிஷ்ட வியாப்தி” என்று பெயர். இவ்விளக்கம் இக்குறும்படத்திலுள்ள சொற்பொழிவைத் தழுவி எழுதப்பட்டது.)

கோயில்களில் உள்ள அர்ச்சை வடிவங்கள் சுத்த சத்துவ மயமானவையே என்ற நம்பிக்க ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டும் அல்ல. நாராயண பட்டரும் நாராயணீயத்தின் முதலிரண்டு சுலோகங்களில் இதை வலியுறுத்தியுள்ளார்:

“ஸாந்த்₃ரானந்தா₃வபோ₃தா₄த்மகம் அனுபமிதம் காலதே₃சா’வதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃ம-ச’த-ஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமானம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்த்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்-தாவத்₃-பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவனபுரே ஹந்த பா₄க்யம் ஜனானாம் ||”

guruvayoorappan[நிறைந்த ஆனந்தமயமானதும், ஞானமயமானதும், ஒப்பில்லாததும், இடம், காலம் முதலிய வரையறைகளுக்குள் உட்படாததும், இருவினைகளால் விளையும் களங்கங்களிலிருந்து என்றைக்கும் விடுபட்டதும், நூறாயிரம் வேத வாக்கியங்களாலும் தெளிந்து அறியவொண்ணாததும், வீட்டின்பத்தை அளிக்கவல்லதுமாகிய பிரம்ம தத்துவமானது எளியோர்க்கும் கிட்டும்படியாக, கண்கூடாக, குருவாயூரில் நின்று மிளிர்கிறது. என்ன பாக்கியம் செய்தோம் ஜனங்களாகிய நாம்! — நாராயணீயம், 1.1]

நாராயணீயத்திற்கு உரை எழுதிய ‘தேசமங்கள வாரியார்’ என்பவர் முதல் சுலோகத்திற்கு விளக்கம் எழுதும்பொழுது குருவாயூரில் உள்ள அர்ச்சை விக்கிரகத்தைப் “பரப்பிரம்மம் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்ய, குருவாயூரில் மிகத் தெளிந்த சுத்த சத்துவ மயமான திருமேனியுடன், சகல ஜனங்களின் கண்களுக்கும் எட்டும்படியாக இறங்கி வந்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இத்தகைய அபிமானத்துடன் திருமாலைக் கோயில்களில் பிரதிட்டை செய்து பழந்தமிழர்கள் ஆராதித்து வந்துள்ளமை சங்க இலக்கியங்கள் கூறும் செய்தி.

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே

[– பரிபாடல், 4:66-71]

என்பன சங்க இலக்கியத்தில் உள்ள வரிகள். திருமால் வெவ்வேறு பெயர்களுடன் அடியவர்கள் விரும்பும்வண்ணம் கோயில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

srirangam-moolavar

இதில் “நல் யாற்று நடுவும்” என்னும் பகுதி ஸ்ரீரங்கத்தையும், “கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பது திருவேங்கடத்தையும் (திருப்பதி) குறிப்பதாகச் சில அறிஞர்கள் கொள்வர். பரிமேலழகர் உரையில் “ஆற்றிடைக் குறையும்” என்று காணப்படுகிறது (குறை = சிறிய தீவு). “கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பதற்கு “காலத்தால் சேர்க்கப்பட்ட முன்வினைகளை அறுத்து முக்தி நிலையை அளிக்கும் குன்றம்” என்று பொருள் கொண்டால் திருவேங்கடத்தையும் குறிக்கிறது எனலாம். கம்பரும்,

‘கோடு உறு மால் வரையதனைக் குறுகுதிரேல்,
உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்;’

[– கிட்கிந்தா காண்டம், நாட விட்ட படலம், 29]

என்ற பாடலில் சுக்கிரீவன் வானரர்களைச் சீதையைத் தேடுமாறு அனுப்பும்பொழுது, “நீங்கள் திருவேங்கட மலைக்கு மாத்திரம் போகாதீர்கள். அங்கு சென்றால் முக்தி நிலை கிடைத்து விடும். நீங்கள் அந்நிலையைப் பெற்று விட்டால் சீதையை யார் தேடுவது?” என்று நகைச்சுவையாகப் பாடுகிறாரன்றோ. மேலும், ‘பனம்பாரனார்’ என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்” என்று வருமிடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும்,

நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை

என்று விளக்கியுள்ளமையும் நோக்கத்தக்கது. இங்கு திருமால் வாமன அவதாரத்தில் மகாபலியிடம் சென்று உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை “நிலங்கடந்த நெடுமுடி அண்ணல்” எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்.

tirupati-hills

இத்தொடரின் இரண்டாம் பகுதியில் உறையூரில் பங்குனி உத்திர விழா நடந்து வந்ததைப் பற்றியும் சங்க நூல் குறிப்புகள் இரண்டைக் கண்டோம். இத்தகைய சான்றுகளில் சற்றே ஊகித்துத் தான் திருமால் கோயில் கொண்டுள்ள தலங்களைக் குறிப்பதாக அறிகிறோம். ஆகையால் இது பற்றி நியாயமான கருத்து வேற்றுமையும் ஐயங்களும் எழலாம். எனினும் சிலப்பதிகாரத்தில் மிகத் தெளிவாக இவ்விரு தலங்களில் வழிபாடு சிறப்புற்று இருந்தமைக்குச் சான்று கிடைக்கிறது.

மதுரைக் காண்டத்தின் காடு காண் காதையில் கோவலன் மாங்காடு சென்றிருந்த பொழுது அங்கு வடநாட்டைச் சேர்ந்த முதிய வைதிகர் ஒருவரைக் கோவலன் சந்திக்கிறான். அவரை “எதற்குத் தென்னகம் வந்தீர்?” என்று கோவலன் வினவ, அதற்கவர்:

“‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்

[ — சிலப்பதிகாரம், 11.35-41]

(துருத்தி = ஆற்றின் நடுவில் உள்ள தீவு; திரு அமர் மார்பன் = இலக்குமி தேவியார் அமர்ந்திருக்கும் திருமார்பை உடையவன்; கிடந்த = சயனித்த)

என்ற வரிகளில் தான் திருவரங்கத்தில் திருமால் பள்ளி கொண்ட கோலத்தையும்,

tirupati-balajiவீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்-
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற

வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன்”

[ — சிலப்பதிகாரம், 11.42-55]

(பகை அணங்கு ஆழி = பகைவர்களுக்கு அச்சத்தைத் தரும் சக்கரப்படை; மின்னுக் கோடி = மின்னல்)

என்ற வரிகளில் திருவேங்கடத்தில் அவன் நின்ற கோலத்தையும் கண்குளிரக் காண்பதற்காகவே தமிழகம் வந்திருப்பதாகக் கூறுகிறார்.

“மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல” என்னும் வரிகளில்,

“நீல தோயத₃ மத்₄யஸ்த₂ வித்₃யுல்லேகை2வ பா₄ஸ்வர:” [ — நாராயண சூக்தம்]

என்று வேதம் திருமாலுக்குக் கூறும் உவமையைத் தமிழாக்கம் செய்கிறார் இளங்கோ.

மேற்கண்ட சிலப்பதிகாரப் பாடல் வரிகளிலிருந்து ஆலய வழிபாடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பெரிதாகச் சிதறல் சிதைவுகள் ஏதுமில்லாமல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளமைக்குத் தெளிவான சான்று கிடைக்கிறது. இத்தகைய சங்க கால / சங்கம் மருவிய கால இலக்கியச் சான்றுகள் மேலும் சிலவற்றை விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

மலை நாகராஜன் on July 3, 2011 at 11:44 am

அன்புள்ள கந்தர்வன் ,

தங்களுடைய இந்த தொடர் ஐந்து கட்டுரைகளும் , முழுவதும் , மிக அருமையாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.

நம் முன்னோர் ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களை தங்கள் உயிர் போல அல்லது தங்கள் உயிரை விட மேலாக பாது காத்தனர் என்பது உண்மையே ஆகும். ஆனால் நம் ஆலயங்களும் சரி,ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் அல்லது உத்சவர் விக்ரகங்கள் எதுவாயினும் சரி. இவை எதுவுமே நிரந்தரம் அல்ல. இஸ்லாமிய கொடுங்கோலர்களால் ஏற்பட்ட பேரழிவு மட்டுமல்ல, இயற்கை சீற்றங்களாலும் பல நூற்றாண்டுகளாக பலவேறு திருக்கோயில்களும் , பலவேறு விக்கிரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

நமக்கு எல்லைகள் எதுவும் கிடையாது. எவ்வளவு பாதிப்புக்கள் வந்தாலும், மீண்டும் புதிய திருக்கோயில்களும், புதிய விக்கிரகங்களும் உருவாக்கப்படும். இது காலத்தின் கட்டாயம். சமீன்பத்தில் காளகஸ்தி என்ற ஆந்திர திருத்தலத்தில் திருக்கோபுரமே சிதைந்து இடிந்து விழுந்தது. அது இன்றுவரை புதுப்பிக்கப்படவில்லை. ஏனெனில் ஆந்திர அரசியல்வாதிகள் தெலுங்கானா சண்டைபோட்டுக்கொண்டு , இதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் உள்ளனர்.

பழைய காலகோயில்கள் பலவும் போதிய பராமரிப்பின்றி உள்ளன. எதிர்காலத்திலும் பல திருக்கோயில்களும், விக்கிரகங்களும் பெரிய அளவிலான பாதிப்புகளை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அதை நாம் தடுக்க முடியாது. புதியன சமைப்போம். புதுப்பிப்போம் அல்லது புதியன கட்டுவோம்.

கோயில்களும் அங்குள்ள விக்கிரகங்களும் மிக புனிதமானவை. ஆனால் நம் மதம் அவற்றை மட்டுமே நம்பி உள்ள மதம் அல்ல. ஒரு கோயில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டால் வேறொரு கோயில் கட்டப்படும். விக்ரகம் தேய்ந்து போய், பின்னமேற்பட்டால் புதிய விக்ரகங்கள் செய்வோம்.

 

பதிற்றுப்பத்து-  4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது.

பாடல் 31

நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன். மண்ணுலகத்தில் மாபெருஞ் ஞெல்வம் படைத்தவன் வண்டன். (வானுலகத்துக் குபேரனைப் போல) இந்த நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன். நார்முடிச் சேரலின் மனைவி அரண்மனைச் செல்வி வானில் மின்னும் அருந்ததி நட்சத்திரம் போலெ கற்பில் சிறந்தவள்.

பாடல் 31 – கமழ் குரல் துழாஅய்

குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த

மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்

கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து

நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்

5 தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென

உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி

வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்

கண்பொரு திகி¡¢க் *கமழ்குரல் துழாஅய்*

அலங்கற் செல்வன் சேவடி பரவி

10 நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர

இந்த செய்யுளில்- ஒரு கோயிலையும் அங்கு செய்யப்படும் விஷ்ணு வழிபாட்டையும் கூறுகின்றது. கோயில் கடற்கரையை அடுத்து இருந்தது. பல திசையிலுமிருந்து வந்த மக்கள் கையைத் தலைமேல் கூப்பித் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி வழிபடுவர். கோயில் மணி ஒலிக்கும் போது விரதமிருக்கும் உண்ணா நோன்பிகள் துறையில் நீராடிப் பின் கோவிலில் வழிபாடு செயவார். கண் பொரு திகிரியும் கமழ்குரல் துழாயும் உடைய திருமாலை இவ்வாறு வழிபடுவர்.நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன். மண்ணுலகத்தில் மாபெருஞ் ஞெல்வம் படைத்தவன் வண்டன். (வானுலகத்துக் குபேரனைப் போல) நார்முடிச் சேரலின் மனைவி அரண்மனைச் செல்வி வானில் மின்னும் அருந்ததி நட்சத்திரம் போலெ கற்பில் சிறந்தவள்.

 

இவ்வாறு கூறப்படும் வழிபாடு நிகழ்ந்த்தாக உள்ள கோயில் பெயர் செய்யுளில் இல்லவிடிலும் இது திருவனந்தபுரம் பத்மநாபரையே குறிக்கும். விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டது போலெ சயனக் கோலத்தில் அனந்தமாகக் காட்சி அளிப்பதினாலே தான் ஊர் திரு அனந்தபுரம் என்க் கோயிலின் பெயராலெ விளங்குகின்றது.

பயன் பட்ட நூல்கள் 1. பதிற்றுப்பத்து

2. குறள் கூறும் சமையம்- காமாட்சி சீனிவாசன் விளியீடு-மடுரைக் காமராசர் பல்கலைக் கழகம்__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

Dr.A.Anburaj on January 26, 2015 at 10:30 am

விக்கிரக ஆராதனை நமது பண்பாடு என்று அறுதியிட்டுக் கூறுவது முழுமையானது அல்ல. இன்னிசை வீணையா் யாழினா் ஒருபால் இருக்கோடு தோத்திரம் இயம்பினா் ஒரு பால் துன்னிய பினை மலா்கையினா் ஒருபால் தொழுகையா் அழுகையா் துவழ்கையா் ஒரு பால் சென்னியில் அஞ்சலி கூப்பினா் ஒரு பால் திருப்பெருந்துறை சிவபெருமானே என்று விக்கிரகம் அல்லாத வழிபாடுகள் சிறப்பிக்கப்படுவதைக்காணலாம். வள்ளல் பெருமாள் இராமலிங்க அடிகளாரும் அருட்பெருஞ்சோதி வழிபாடு என்ற முறையை எற்படுத்தி சிறப்பித்தது நினைவு கூறத்தக்கது.சிலை வணக்கத்தை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற கருத்து கொண்டவா் வள்ளல் பெருமானும் சுவாமி விவேகானந்தரும்.

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

முகப்பு » இந்து மத விளக்கங்கள்தொடர்வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி

திருவரங்கம், திருமலை ஆகிய இரண்டு தலங்களோடு மாத்திரம் அல்லாமல், தமிழகத்தில் மேலும் பல வைணவத் திருத்தலங்கள் சங்ககாலத்திலேயே பிரபலமான வழிபாட்டுத் தலங்களாக விளங்கியிருந்தன. அத் தலங்கள் பற்றி இப்பகுதியில் காண்போம்.

திருமாலிருஞ்சோலை (மாலிருங்குன்றம்):

திருமாலிருஞ்சோலை

பேச்சு வழக்கில் “அழகர் கோயில்” எனும் புகழ் பெற்ற திருமாலிருஞ்சோலையானது, பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் பழமையிலும் பெருமையிலும் குறைவிலாத் தலமாகும். சங்ககாலத்தில் இத்தலத்தில் பலராமனுக்கும் கோயில் இருந்ததாகப் பரிபாடலிலிருந்து அறிகிறோம். இம்மலையும் அதைச் சார்ந்த கோயிலும் தொன்றூதொட்டு இன்றுவரை மக்களை ஈர்த்திருக்கிறது. இது பல இலக்கியக்குறிப்புகளிலிருந்து புலனாகிறது. டாக்டர். வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் அவர்கள் எழுதிய “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில் உள்ள குறிப்புகளின் மூலம் இதை அறியலாம் [1][2]. இது தவிர இராமானுஜரின் பிரதான சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வானும் 132 சுலோகங்களைக் கொண்ட பெரிய நூலாகிய “சுந்தர பாஹு ஸ்தவம்” என்ற வடமொழி ஸ்தோத்திரத்தையும் படைத்திருக்கிறார்.

இக் கோயிலைப் பற்றிச் சங்கப் புலவர்களும் பாடியுள்ளனர். பதினைந்தாம் பரிபாடல் இத்தலத்தைப் பற்றிப் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறது. இப்பகுதியில், “மலைகளிலே புகழ் வாய்ந்த, பழம் புலவர்களால் பாடப்பெற்ற மலைகள் பல உள்ளன. அவற்றுள் மனிதர்களுக்குப் பல பயன்களைத் தரும் மலைகள் சிலவே உள்ளன. அவற்றுள் தெய்வங்கள் விரும்பும் மலைகள் இன்னும் சில. அச் சிலவற்றுள், பலதேவனையும் திருமாலையும் தாங்கி நிற்கின்ற மாலிருங்குன்றம் சிறந்ததாகும்” [– பரிபாடல், 15:1-14] என்று இத் தலத்தின் சிறப்பு பாடப்படுகிறது.

தமிழகத்தின் வட எல்லையின் தலையாய திருத்தலம் திருவேங்கட மலை என்றால், அதற்கு ஈடாகத் தெற்கே திருமாலிருஞ்சோலைமலை உள்ளது.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்

என்று இராமானுச நூற்றந்தாதியில் திருவரங்கத்தமுதனாரும் அருளிச் செய்தார். பண்டைய தமிழிலக்கியங்களின்படி இவ்விரு மலைகளுக்கும் வேறொரு ஒற்றுமையுமுண்டு:

வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.

[முறைமை கொண்ட வேடத்தை உடையோய்! நீயும் நறுமணைத்தை உடையதாகிய – ஒலிக்கும் அருவிகளால் பொலிவுபெற்ற திருவேங்கடத்திற்குப் போவாயானால், ஐம்பொறிகளால் உண்டாகும் தீவினைகளெல்லாம் நீங்கப்பெற்று திருவாழியாகிய சக்கரப்படையை ஏந்தும் திருமாலின் அருளைப் பெறுவாய் — புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம், 42]

என்று தீவினைகளையெல்லாம் நீக்கி வீடுபேறு அளிப்பதாகப் பாடப்பட்ட வடவேங்கடத்திற்கு இணையாக, திருமாலிருங்குன்றமும் முக்தியளிக்கும் குன்றமாகத் தெற்கே விளங்கியிருப்பதை,

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.
” [ — பரிபாடல், 15:15-18]

என்னும் சங்கப்பாடல் வரிகள் காட்டுகின்றன. இம்மாலிருங்குன்றமானது, திருமால் அருளாலன்றி பெறுதற்கரிய வீடுபேற்றினை, எளிதில் கிடைக்கக் கூடியதாகச் செய்யும் சிறப்பினை உடையது என்று மேற்கண்ட வரிகளில் புலவர்கள் பாடுகின்றனர்.

ஏவம் து3ர்லப்4ய வஸ்துனி-அபி ஸுலப4தயா ஹஸ்த2லப்3தே4 யத3ன்யத்
தன்வா வாசா தி4யா வா ப4ஜதி ப3த ஜன: க்ஷுத்3ரதைவ ஸ்பு2டேயம் |
ஏதே தாவத்3-வயம் து ஸ்தி2ரதரமனஸா விச்’வபீடா4பஹத்யை:
நிச்’-சே’ஷாத்மானமேனம் கு3ருபவனபுர-அதீச’ம்-ஏவ-ஆச்’ரயாம: ||

[இத்தகைய பெறுதற்கரிய (முக்தி நிலை என்னும்) பொருளானது (அனைவரும் வந்து அருள் பெறும்படி) எளிதில் கைக்கு எட்டும்பொழுது, அதை விட்டு (பொன்னும், பொருளும், புகழும், பதவியும் போன்ற) யாதொன்றை உடலாலோ வாக்காலோ புத்தியாலோ மக்கள் அடைய விரும்புகிறார்களோ, அப்பொருள் கீழானதென்று விளங்குகிறது. ஆகையால், நாம் உறுதி பூண்ட உள்ளத்துடன் அனைத்து பிறவித் துன்பங்களையும் நீக்கவல்ல குருவாயூர்க் கோமானாகிய கண்ணனையே தஞ்சமாகக் கொள்வோம். — ஸ்ரீமந் நாராயணீயம், 1.2]

என்று குருவாயூரைக் குறித்து ஸ்ரீ நாராயணபட்டர் பாடிய சுலோகத்தின் பொருளும் இங்கு ஒப்பிடத் தக்கது.

இத்தகைய பழம்பெருஞ் சிறப்பு வாய்ந்த இத் தலத்தில் “நூபுர கங்கை” என்ற புண்ணிய நதி இன்றும் உள்ளது. முத்துசுவாமி தீட்சிதர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ள “ஸ்ரீ ஸுந்த3ரராஜம் ப4ஜேஹம்” என்ற காசீராமக்ரியா (பந்துவராளி) இராகத்தில் அமைந்துள்ள கீர்த்தனையிலும் “நூபுரக3ங்கா3 தீர்த்த2 ப்ரபா4வ மாத4வம்” என்ற வரிகள் உள்ளன. தமிழில் இது “சிலம்பாறு” என்று வழங்கப்பெறும். “நூபுரம்” என்பதற்கு வடமொழியில் “சிலம்பு” என்று பொருள். திருமால் அண்டமனைத்தையும் ஈரடியால் அளந்தபொழுது பிரம்மாவின் லோகத்தை ஒரு பாதம் வருட, அப்பொழுது நான்முகக் கடவுள் தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் திருமாலின் அப் பாதத்தைக் கழுவ, அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. இச்சிலம்பாற்றின் பெருமையும் சங்க இலக்கியமாகிய பரிபாடலிலேயே திருமாலிருஞ்சோலைமலை குறித்த பாடலிலேயே வருகிறது. அதில், “ஆதிசேடனின் அவதாரமாகவும், கண்ணனுக்கு அண்ணனாகவும் விளங்கும் பலராமனுடைய வெண்கடம்பு மாலையைப் போல விளங்கி நின்ற சிலம்பாறு” என்று பின்வரும் வரிகள் கூறும்:

அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
” [— பரிபாடல், 15:19-23]

சிலப்பதிகாரமும் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில் திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பினை விளக்குகிறது. அதில்,

நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை

என்ற வரியில் “நிலம் பிளக்கும் வண்ணம் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரை” என்று இளங்கோவும் பாடியுள்ளார். சிலம்பாற்றின் சிறப்பை இப்படிப் பல இலக்கியங்கள் பேசுகின்றன.

கள்ளழகர்

இம்மலையைப் பற்றிய மேலும் பல செய்திகளையும் கூறுகின்றது. “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” புத்தகம் இதை நன்றாக விவரிக்கிறது:

“திருமாலைத் தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான். ‘இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம். அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன. புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள். பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும். இட்டசித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கைகூடும்.'”

மாலிருங்குன்றத்தின் சிறப்பைப் பரிபாடல் மேலும் பாடுகிறது. அவ்வரிகளின் பொருள் பின்வருமாறு:

“நீர்நிலைகளில் நறுமணம் கமழும் நீல மலர்கள் பூத்திருப்பதனாலும், அதனைச் சூழ அசோக மரங்களும் வேங்கை மலர்களும் பூத்திருப்பதனாலும் அம்மலை திருமாலின் தோற்றத்தைப் போலவே காட்சியளிக்கும். ஆகையால், கோயிலுக்குச் சென்று தொழ இயலாதவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அம்மலையையாவது கண்டு தொழுங்கள்.

“அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும். மயில்கள் அகவ, குருக்கத்தி மரங்கள் இலையுதிர அதனின்றும் குயில்கள் கூவும். அம்மலையின் குகைகளிலே எழுகின்ற எதிரொலி நிற்காது.”

“கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலை” [3a], “தண்டலை ஆர் திருமாலிருஞ்சோலை” [3b], “பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலைமலை” [3c] என்று திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அழகர் அந்தாதியில் உள்ள வருணிப்பு இங்கு ஒப்பிடத்தக்கது. இங்ஙனம் பரிபாடல் அம்மலையின் இயற்கை எழிலையும் வருணிக்கிறது. “ஸர்வக3ந்த4” என்று சாந்தோக்ய உபநிஷத் சொல்வதால் வெறும் “நீல மலர்கள்” என்று அல்லாமல், “நறுமணம் கமழும் நீல மலர்களே” இவ்வரிகளில் திருமாலின் திருமேனிக்கு ஒப்பாகிறது.

புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்
வௌவற் காரிருண் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்துந் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ இருங்குன் றத்தான்

[தன் உந்தியிலே தோன்றிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையும், நீரைத் தாங்கிச் செல்லும் மேகத்தையும் நீல மணியையும் ஒத்த திருமேனியையும் உடையவனாய், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு, உயிர்க்கூட்டங்களின் பிறவித் துன்பத்தை அறுக்கும் திருமால், அக்குன்றத்தே ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான் — பரிபாடல், 49-53]

இவ்விடத்தில் கண்களை வருணிக்கும்பொழுது “தஸ்ய யத: கப்யாஸம் புண்ட3ரீகம் இவ அக்ஷிணீ” என்ற சாந்தோக்ய உபநிஷத் வாக்கியமும், திருமேனியை வருணிக்கும்பொழுது “நீல தோயத3 மத்4யஸ்த2வித்3யுல்லேகை3வ பா4ஸ்வர:” என்ற தைத்திரீய உபநிஷத் வாக்கியமும் புலவர்களால் தமிழாக்கப்பட்டுள்ளது. “அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (உயிர்க்கூட்டங்கள் பிறவித்துன்பம் களையப்பெற தஞ்சம் புகும் இடம்)” என்பது “நாராயணன்” என்ற திருநாமத்தின் பொருளை உணர்த்துகிறது. அங்ஙனம் பிறவியறுக்கும் திருமாலே அம்மலையில் எழுந்தருளியுள்ளான் என்று கூறியிருப்பதும் பழந்தமிழர்கள் ‘கோயிலில் எழுந்தருளியிருப்பவன் தெய்வமே வெறும் கற்சிலை அன்று’ என்ற கொள்கையை உடையவர்களாயிருந்ததைக் காட்டுகிறது. “அன்பது மேஎ இருங்குன் றத்தான (ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான்)” என்பது மற்ற இடங்களில் பொதுவாக வியாபித்திருப்பது போல் அல்லாமல், தன் திருக்கல்யாண குணங்களுடன் சிறப்பாக எழுந்தருளியிருப்பதைக் காட்டுகிறது.

கூடல்/இருந்தையூர் (மதுரை):

கூடல் அழகர்

“திருக்கூடல்” என்று அழைக்கப்பெறும் மதுரைக் கூடலழகர் கோயிலைப் பற்றிய செய்தியும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது:

வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே
” [— பரிபாடல் திரட்டு, 1]

என்று பரிபாடல் இத்தலம் பற்றிக் கூறும். இங்கு திருமால் இருந்த (அமர்ந்த) திருக்கோலத்தில் காட்சியளிப்பதால் அந்நகரத்திற்கு “இருந்தையூர்” என்ற பெயரும், “இருந்தையூர் அமர்ந்த செல்வன்” என்று அவ் விறைவனுக்குப் பெயரும் ஏற்பட்டது. இந்நகர்வாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், இயற்கை எழில், முதலிய கூடல்மாநகரின் பல சிறப்புகளைப் பாடும் இதே பரிபாடல், அங்கு ஆதி சேடனுக்கும் கருடனுக்கும் தனியாகக் கோயில்கள் இருந்ததாகக் கூறுகிறது.

மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். சுட்டப்படும் வரிகளில், சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது:

“ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ ஆயிற்று.

“தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர். மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் எனவும் இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர். தொண்டை நாட்டில் பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும் சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர். நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும் சேருமிடம் முக்கூடல் ஆயிற்று. முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே.

“இஃதே போன்று ‘கிருதமாலா’ என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.”

வைகையாற்றால் சூழப்பட்ட மதுரையில் எழுந்தருளியிருப்பதால் இப்பெருமானை, “நீடுநீர் வையை நெடுமால்” என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக்குறிப்பு, ஆய்ச்சியர் குரவை முடிந்தவுடன் மாதரி என்ற ஆயர் மகள் புஷ்பம், தூபம், சந்தனம், மாலை முதலானவற்றால் இத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவதாக உள்ளது:

ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்.

[— சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், துன்ப மாலை:2-7]

மேற்கண்ட பகுதியில், “நெடுமால்” எனும் இடத்திற்கு, “இருந்த வளமுடையான்” என்று அரும்பத உரையாசிரியர் இட்டிருப்பதிலிருந்து கூடல் மாநகரில் உள்ள அழகர் எழுந்தருளிய கோயிலே இங்கு குறிக்கப்படுவதற்குச் சான்றாகிறது. மதுரைக்காஞ்சியிலும்,

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
” [590-591]

எனும் வரிகள் ஆவணி மாதத் திருவோணத்தில் கூடல் அழகருக்கு விழா நடந்திருப்பதைக் கூறுவதாக அறிஞர் கொள்வர்.

திருவிதாங்கோடு (திருவனந்தபுரம்):

பத்மநாபன்

இன்று ஸ்ரீ பத்மனாப சுவாமி கோயில் என்று வழங்கப்படும் திருத்தலம் குறித்த செய்தி சங்க இலக்கியத்தில், எட்டுத் தொகை நூல்களுள், மலைநாட்டு-சேர-அரசர்கள் பற்றிய பதிற்றுப்பத்தில் காணப்படுகிறது. இவ்வாலயத்திற்கு, மக்கள் தலைமேல் கைகூப்பி நான்கு திசைகளிலிருந்தும் திறள் திறளாக வந்து வணங்குவதாகக் கூறிவிட்டு, கோயில் கொண்டுள்ள திருமால் விக்கிரகத்தை வருணிக்கிறது:

வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
” [— பதிற்றுப்பத்து, 31:7-12]

(திருஞெமர் அகலம் = இலக்குமிப் பிராட்டி விரும்பும் மார்பு; திகிரி = சக்கரம்)

திருவிதாங்கோட்டு மன்னர்கள் ஈராயிரம் வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீ பத்மனாபனின் திருவடிகளைத் தொழுபவர்களாக இருந்து வருவது சிலப்பதிகாரத்திலுள்ள சில வரிகள் காட்டுகின்றன. “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” கூறும் சிலப்பதிகாரச் செய்தி:

“சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது.
சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன்
அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று ‘தொடுத்த
தூவாய்முடி சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற
பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,

” ‘ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’

என்கிறார் இளங்கோவடிகள். ஆடக மாடம் – திருவனந்தபுரம் சேடம் – மலர்மாலை.”

கச்சி மூதூர் (திருவெஃகா/காஞ்சிபுரம்):

திருவெஃகா

கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய ‘பெரும்பானராற்றுப்படை’ என்னும் பத்துப்பாட்டு நூலில், கச்சி மூதூரில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் பற்றி தெளிவாக உள்ளது. இவ்வரிகள், திருமால் பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதற்குக் குன்றுதனில் யானை படுத்திருப்பதை உவமையாகக் கூறுகிறது:

நீடுகுலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடி

அருந்திறற் கடவுள் வாழ்த்தி…

[– பெரும்பாணாற்றுப்படை, 372-391]

இங்ஙனம் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் ஆலயங்களில் திருமால் வழிபாட்டின் தொன்மை வெளிப்படுகிறது. வேதாந்தம், சிருஷ்டி, பிரபஞ்சவியல் தத்துவங்களைப் பல இடங்களில் பாடிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் உருவ வழிபாட்டையும் விரும்பிக் கடைப்பிடித்திருந்தது இச்சான்றுகளிலிருந்து தெரிகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

^[1] “பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய 6 ஆழ்வார்களால் 123 பாக்களால் பாமாலை சூடப்பட்ட மாண்புடைத்து இத்தலம். தந்தையும் மகளுமான ஒரு வீட்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும். ஆண்டாளும் இப்பெருமானிடம் கொண்ட பக்தி பற்றி தனி நூல் ஒன்றே எழுதிவிடலாம்.”

^[2] “திருப்புகழ் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. … கந்த புராணத்தில் “முக்திதரு பேரழகு திருமலை” என்று போற்றப்படுகிறது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் அழகிய மணவாளதாசர் இந்த அழகரைப்பற்றி அழகர் அந்தாதி பாடியுள்ளார். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கவிகாலருந்திரர் என்னும் புலவர் ஒருதனிப் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். வேம்பத்தூரைச் சேர்ந்த கவிகுஞ்சரம் அய்யர் என்பவர் அழகர் கலம்பகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல பட்டடை சொக்க நாதப் புலவர் “அழகர் கிள்ளை விடு தூது என்னும் இலக்கிய மணி மாலையை அழகருக்குச் சமர்ப்பித்துள்ளார். “கவிக் குஞ்ச(ர?) பாரதி” சோலைமலைக் குறவஞ்சி என்னும் நூலில் மலையழகையும், அங்குள்ள கோவில்களையும், இயற்கை காட்சிகளையும் வர்ணிக்கிறார். மற்றும் திவ்ய சூரி சரிதம், ஸ்ரீகம்ச சந்தேகம் (ஸ்ரீ ஹம்ஸ ஸந்தேசம்?), போன்ற நூல்களும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன. கோவில் ஒழுகு என்னும் நூலும் இத்தலம் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றது.”

^[3a] அழகர் அந்தாதி, 22. பொருள்: விரும்பிப் பறிக்கத்தக்க வாசனையுள்ள மலர்கள் சிந்தப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலை.

^[3b] அழகர் அந்தாதி, 23. பொருள்: குளிர்ச்சியான இடத்தையுடைய சோலைகள் நிறைந்த திருமாலிருஞ்சோலை.

^[3c] அழகர் அந்தாதி, 25. பொருள்: குஞ்சுகளுடன் மயில்கள் சூழப்பெற்ற குளிர்ந்த திருமாலிருஞ்சோலைமலை.

குறிச்சொற்கள்: அழகர் கோயில்இராமானுசர்இருந்தையூர்இளங்கோகருமணிகூடல்கூரத்தாழ்வான்சங்ககாலம்தமிழர்திருமலைதிருமாலிருஞ்சோலைதிருவனந்தபுரம்திருவரங்கம்நாராயணீயம்பத்மனாப சுவாமிபரிபாடல்புறப்பொருள் வெண்பாமாலைமதுரைவேதாந்தம்வைணவத் திருத்தலங்கள்__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

T.Mayoorakiri sharma on August 9, 2011 at 6:24 am

திருமாலிருஞ்சோலையில் தற்போது பலராமனுக்கு ஆலயம் இல்லை.. ஆக, இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிற முருகனைத் தான் வைணவர்கள் அல்லது விஷ்ணு பக்தர்கள் பலராமனாகக் கண்டார்களா? என ஐயுறுகிறேன்..

சாதாரணமாக கண்ணனும் கந்தனும் ஒன்றாகச் சங்கமிக்கும் சோலை மலையில் இவ்விரு தெய்வங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கின்ற சிறப்பு இந்து சமயத்தின் நீண்ட பெரும் ஒற்றுமையின் ஆதாரமாகக் காட்டலாம்.. இங்கே திருமுருகாற்றுப்படையையும் இணைத்துச் சிந்திப்பது அத்தியாவசியமானது..

பாலாஜி on August 9, 2011 at 10:53 am

முருகன் தான் பலராமனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் பகவானின் சதுர்வியூக வடிவங்களை மும்மூர்த்திகளாக ஒப்பிடலாம். வாசுதேவன், சங்கர்ஷணன், பிரதியும்ணன், அநிருத்தன் ஆகியவை சதுர்வியூகங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவையே முறையே கண்ணன், பலராமன், கண்ணனின் முதல் மகன், முதல் பேரனாக துவாபர யுகத்தில் அவதரித்தனர். உபன்யாசகர்தாக்களின் வார்த்தைகள்படி பிரதியும்ணன் படைப்புதொழிளையும் (பிரம்மதேவன்), அநிருத்தன் காத்தலையும் (திருமால்), சங்கர்ஷணன் அழித்தலையும் (சிவபெருமான்) செய்கின்றனர். வாசுதேவனான பரமாத்மா முத்தொழிலையும் புரிகிறான். இந்த சங்கர்ஷணன் என்ற பெயர் எனவே பகவானின் முதல் வியூகமான பலராமனுக்கும் பொருந்துகிறது. சிவபெருமானின் தலைசிறந்த துதியான ஸ்ரீ ருத்ரத்திலும் ‘சங்கர்ஷன மூர்த்தி ஸ்வரூபோ யோசா வாதித்யா’ என்று வருவது குறிப்பிடத்தக்கது. “பலராமனின் அம்சம் சிவன்” என்பது வைணவம், “சிவனின் அம்சம் பலராமன்” எனலாம் சைவம். அது அவரவர்களது நம்பிக்கை. மேலும், திருமாலின் தொழிலான காத்தலையே அநிருத்தன் செய்கிறான். “கண்ணனைப்போலவே அவன் முதல் பேரனான அநிருத்தன் விளங்கினான்” என்கிறது பாகவதம்.

சற்று விளக்குங்கள்…

நன்றி,
பாலாஜி.

க்ருஷ்ணகுமார் on August 9, 2011 at 2:22 pm

ஏகாதசி நன்னாளில் அழகனைப்பற்றிய இவ்வழகிய வ்யாசம் வாசிக்க நேர்ந்தது குரு க்ருபையே. சில நாட்களாய் அடுக்கடுக்கான நாழங்களும் அதற்கான உத்தரங்களும் படித்துப்புளித்தபின் இந்த வ்யாசம் வாசிப்பது கூட அடுத்தபடியே. நிகரிலா புவன சுந்தரனின் திருவிண்ணகரமும் அதன் பின்னே காட்சியளிக்கும் குளிர்மாமலையின் சித்ரமும் கூட அழகு பொலியவே இருக்கிறதே. கீழ்க்கண்ட பாசுரம் ஞாபகம் வருகிறது.

பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ்சோலையதே.

\\\\\\நீர்நிலைகளில் நறுமணம் கமழும் நீல மலர்கள் பூத்திருப்பதனாலும், அதனைச் சூழ அசோக மரங்களும் வேங்கை மலர்களும் பூத்திருப்பதனாலும் அம்மலை திருமாலின் தோற்றத்தைப் போலவே காட்சியளிக்கும். ஆகையால், கோயிலுக்குச் சென்று தொழ இயலாதவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அம்மலையையாவது கண்டு தொழுங்கள்\\\\

கனம்கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம்
இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே.

ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பலவாயிரமும்
ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே..

இதைப்படிக்குங்காலே சுந்தர சைலத்தின் தண் காற்று நம்மைத் தொட்டருள் புரிவது போலுள்ளது.

\\\\\\\\\அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும்\\\\\\\\

ஸுந்தரபாஹுஸ்தவத்தில் இந்த மந்திகளைப்பற்றி ஒரு ச்லோகம் வரும். இவ்வழகர் மலைவாழும் மந்திகள் கூட எப்படி தீர வைஷ்ணவர்கள் எனப்பொருள்படும் படியான ச்லோகம். நினைவில் வரவில்லை.

\\\\\\\\\\ சுட்டப்படும் வரிகளில், சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது:

“ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ ஆயிற்று.\\\\\\\\\\

அழகனைப்பற்றிய வ்யாசத்தில் தேச ஒற்றுமை பற்றிய ப்ரஸ்தாபம் ச்லாக்யமானது. ஆழிப்பேரலை போன்று தேசத்தைக் கபளீகரம் செய்யவிழைந்த ம்லேச்சப்பதர்களை ஹிந்துஸ்தானம் முழுதும் பகவன்னாம வைபவத்தால் எதிர்கொண்டவர்கள் வைஷ்ணவர்களன்றோ?

ஸுந்தரசைலம் பஜத

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

C.N.Muthukumaraswamy on August 9, 2011 at 9:43 pm

சேரன் செங்குட்டுவன் , “செஞ்சடை வானவன் (சிவபெருமான்”) அருளினில் விளங்க; வஞ்சித் தோன்றிய வானவன்”; “ஆனே றூர்ந்தோன் அருளில் தோன்றி, மாநிலம் விளக்கிய் மன்னவன்”. ஆதலின் , ஆடகமாடத் தறிதுயி லமர்ந்தோன், சேடங்கொண்டு சிலர்நின்றேத்த (அந்தணர் ஸ்வஸ்தி வாசகம் சொல்லி ஆசீர்வதிக்க), அவன் சைவநெறி நிற்போனாகையால், பெருமாளின் சேடத்தை அலட்சியம் செய்யாமல் “ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்”. புயத்துத் தாங்கினன் என்றதை நன்கு கவனிக்கவும் . மாலையாக மார்பில் அணியவில்லை. சேடம் என்பதற்கு மாலை என்பது பொருளோ? அத்தகைய சொல்லாட்சி இருப்பதாகத் தெரியவில்லை. சேடம் – பிரசாதம் என்னலாம். சேரன் செங்குட்டுவனின் தலைநக்ர் வஞ்சி எனப் பெயரிய கொடுங்கலூராம். அதற்கும் திருவனந்த புரத்திற்கும் இடையே அமைந்துள்ள தூரம் எவ்வளவு என்றும் அதனைக் கடக்க அக்காலத்தில் சேடக் குடும்பிக்கு எவ்வவளவு நாட்கள் ஆகியிருக்கும் என்றும் ஆடகமாடத் தறிதுயிலமர்ந்தோன் சூடிக் களைந்த மாலை வஞ்சிக்கு வருவதற்குள் சறுகாகியிருக்கும் என்றும் சொல்லத் தேவையில்லை.

பொதுவாக பெருமானின் பிரசாதம் எனினும் பெருமாளின் பிரசாதம் எனினும் உச்சியின் மீது வைத்துப் போற்றிப் பின் நெற்றியிலோ மார்பினிலோ அணிவது சமயநெறி. சேரன் ஏன் அவ்வாறு செய்யவில்லை? சேரனின் இளவல் இளங்கோ அடிகள் காரணத்தைத் தெளிவாகக் கூறுகின்றார். செங்குட்டுவனின் சிரசின் மீது ஏற்கெனவே சிவபரம்பொருளின் சேவடி பதிந்துள்ளது. “தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்”. சூடுவோன் உள்ளத்தின் நிலைக்கும் தாங்குவோன் உள்ள நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு பெரிது.

சிவனடியானாகிய சேரன் செங்குட்டுவன் மிகச் சிறந்த சமயப் பண்பாட்டை ஒழுகிக் காட்டினான்.

CN.Muthukumaraswamy on August 10, 2011 at 5:52 am

“.// “பலராமனின் அம்சம் சிவன்” என்பது வைணவம்சிவனின் அம்சம் பலராமன்” எனலாம் சைவம். அது அவரவர்களது நம்பிக்கை.///

செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான். எச்சைவனும் இவ்வாறு கூறான்.
“பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே” (புறம்)

பிறவாயாக்கைப் பெரியோன்” சிலப்பதிகாரம்) ‘எட்ன்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன் கோயிலும்’, ‘யாக்கையிற் பிறவாப் பெரியோன் எனினுமமையும்; என்றது அரூபி’ என்றபடி எனும் உரை

“விண்ணோ ரமுதுண்டு சாவ வொருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்வோய்” சிலம்பு

“கறைமிட றணியலு மணிந்தன்று அக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே” (புறநானூறு) முதலிய சங்கச் சான்றோர் வாக்குகளால் சிவன் யாரென அறிக.

சிவனைச் சார்ந்தவர்கள் தீயவரெனினும் உய்ந்து சிறப்புறுவர். இக்கருத்தை வைணவப் பாகவதமும் இயம்பும்.
“விடமும்வந் தீசன் கோல மிடற்றினி னீல வண்ண
வடிவுபெற் றணிய தாகி வயங்கிற்றுப் பெரிது மென்றால்
கொடியரும் பெருமையோரைக் கூடின்வெங் கோது நீங்கி
ஒடிவறு நலம்பெற் றுய்த லுரைப்பதெ னுலகி னம்மா”

பலராமனும் கண்ணனும் இராமனும் அவ்வாறு உய்ந்தோராவர் .இவர்கள் சிவனருள் பெற்றோரெனவே, சைவர்கள் இவர்களைச் சிவனடியார்கள் எனக் கொண்டாடவே செய்வர்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

நல்ல தொகுப்பு கந்தர்வன்.

// ஆடகமாடத் தறிதுயி லமர்ந்தோன் //

சமீபத்தில் ஒரு இலக்கிய அறிஞருடன் பேசிக் கொண்டிருக்கையில் இது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தைக் குறிக்கலாம் என்று கூறினார். சங்க இலக்கியங்களில் திருவனந்தபுரம் பற்றிய நேரடிக் குறிப்பு இல்லை. ஆனால் “வளநீர் வாட்டாறு” என்ற குறிப்பு உள்ளது.

திருவனந்தபுர ஆலய கட்டுமானத்தை விட திருவட்டாறு ஆலயத்தின் கட்டுமானம் பழமையானது. அளவிலும், கலைநேர்த்தியிலும் சிறப்பானது. எனவே “ஆடக மாடம்” எனப்பட்ட அணிமாடக் கோயில் அதுவாகவே இருக்கலாம் என்கிறார் அவர். என்ன நினைக்கிறீர்கள்?

ஜடாயு on August 10, 2011 at 10:32 am

அன்புள்ள பாலாஜி அவர்களுக்கு,

பொதுவாக, பலராமனைப் பற்றிய பல வர்ணனைகள் (மதுபானத்தால் சிவந்த கண்கள், முன்கோபம்.. ) அவனை தாமச குணமுடையோனாகவே சித்தரிக்கின்றன. யமுனையைத் தன் கலப்பையால் கீறி வரவழைத்த தொன்மம் விவசாயத்திற்காக ஆற்றைத் திருப்பி வாய்க்கால் உருவாக்குதல் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். வரலாற்று, சமூகவியல் ரீதியாக பலராமன் விவசாயத் தெய்வமாகவே கருதப் படுகிறான். அதனால் தான் கலப்பை அவனுக்கு ஆயுதமாகிறது. வைஷ்ணவ இறையியலில் ருத்ரனை பொதுவாக தாமச குணத்துடனேயே தொடர்பு படுத்துவார்கள். அதனடிப்பையில் நீங்கள் கூறுவது போன்ற கருத்தாக்கங்கள் எழுந்திருக்கலாம்.

அன்புள்ள முத்துகுமாரசுவாமி அவர்களுக்கு,

// செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான். எச்சைவனும் இவ்வாறு கூறான்.//

பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது

என்ற திருமூலர் வாக்கையும் மனதில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

துர்வாசர், கௌசிகர், பிரம்மா, மிருகண்டு முனிவரின் புத்திரர்கள், தேவேந்திரன், பாணாசுரன், ஹரி, சக்தி, கண்வர், அத்ரி, ததீசி, பிருஹஸ்பதி, கௌதமர் ஆகிய முனிவர்கள், ராமர்கள் (பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்), ஆகியோர் பாசுபதர்கள் என்று கூறும் ஒரு சுலோகத்தைப் படித்திருக்கிறேன்.

தூர்வாச கௌசிக விரிஞ்சி மிருகண்டு புத்ரான்
தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
கண்வாத்ரி பார்கவ பிரஹஸ்பதி கௌதமாதீன்
புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

பாசுபதர்கள் சிவாம்சம் பெற்றவர்கள் என்பது புராண வழக்கு. எனவே பலராமனை சிவாம்சம் உடையவன் என்று கருதுவது தவ்றாகாது என்பது சைவ நெறிப்படியே கூட தவறாகாது என்று தோன்றுகிறது.

கந்தர்வன் on August 10, 2011 at 11:01 am

அன்புள்ள ஜடாயு அவர்களே,

// சமீபத்தில் ஒரு இலக்கிய அறிஞருடன் பேசிக் கொண்டிருக்கையில் இது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தைக் குறிக்கலாம் என்று கூறினார். //

இது புதிதாக உள்ளது. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களின் பதிற்றுப் பத்தின் பழைய உரையில்,

“செல்வனென்றது திருவனந்தபுரத்துத் திருமாலை. ” என்று உள்ளது. அதற்கடியில் அடிக்குறிப்பாக சுவாமிநாத ஐயர் கூறுவது – “ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்” (சிலப். 26 : 62) என்றவிடத்து
‘ஆடகமாடம் – திருவனந்தபுரம்’ என்று அரும்பதவுரையாசிரியர் எழுதிய
குறிப்பு இங்கே கருதற்குரியது.”

அரும்பதவுரைக்காரர் காலம் நச்சினார்க்கினியர் காலத்திற்கும் முந்தையது என்பது நிதர்சனம்.

இது தவிர பத்தாம் நூற்றாண்டில் சர்வஞாத்மா முனிகள் என்ற அத்வைத ஆச்சாரியார் பத்மநாபனைத் தமது படைப்பில் மங்கள சுலோகத்தால் பாடியுள்ளார். இது பற்றி வேண்டுமானால் அடுத்த மறுமொழியில் விளக்குகிறேன். பத்மநாப சுவாமி ஆலயம் மிகப்பழையது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது (contrary to the newsmedia’s widespread report that it was built in the 16th century!!!!).

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

பூதிபூஷண் on August 10, 2011 at 12:18 pm

பழந்தமிழ் இலக்கியங்கள் போற்றும் திருமாலின் இரு ஆலயங்கள் பற்றி அழகாக திருமாலடியார் எழுதியிருக்கும் கட்டுரை அருமை. ஆனால் சைவர்கள் சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை பிறப்பதே இல்லை என்றே நம்புகிறார்கள். யாரையும் சிவபெருமானின் அவதாரமாகக் கருதுவதில்லை அப்படி கருதினால் அவர்கள் சைவர் அன்று. என்று முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா கூறுகிறார். அதுவே மிகச்சரியானது.
திரு கந்தர்வன்
பலராமன் ஆதி சேடனின் அவதாரம் என்று மகாபாரதம், பாகவதம், சங்க இலக்கியங்கள் கூறுகின்றபொழுது, எப்படி “செத்துப் பிறக்கின்ற மானிடர்” என்று சொல்ல முடியும்? எங்கிறார்.
அவதார புருஷர்களான ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் பிறந்ததும் இறந்ததும் ஆதாரப்பூர்வமானது. இதில் என்ன ஐயம். சைவர்களின் கருத்து இறைவன் அவதாரம் செய்வதில்லை என்பது. வைணவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் சைவர் இதனை ஏற்பதில்லை. அவ்வளவுதான்.

திரு ஜடாயு கூறுகிறார்
பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது

என்ற திருமூலர் வாக்கையும் மனதில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
திருமூலர் சொல்வது ஆன்மாவின் ஆன்மாவாக இறைவன் இருக்கிறார் என்பதே. ஆன்மாக்கள் இறைவனின் அம்சம் என்பதனை அல்ல.

திரு ஜடாயு சொல்வது போல் சைவர் போற்றும் சைவர் ருத்ரன் அன்று. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன், சதாசிவன், ருத்திரன் ஆகிய மூர்த்திகளுக்கு மேலான பரம்பொருளே சிவம். சிவபெருமானை முழுமுதலாகக் கருதுவோரே சைவர். இதற்கு வேதத்திலும், சிவாகமங்களிலும், புராணங்களிலும் சான்று உண்டு. சைவருள் பலப் பிரிவுகள் சைவர், வீரசைவர், காசுமீரசைவர் என் உண்டு. ஆயினும் எல்லோரும் இந்த அடிப்படைகளை நம்புகின்றார்கள்.
சைவ சித்தாந்தம் பஞ்சமூர்த்திகளில் ஒருவரான ருத்திரனை குணி ருத்ரன் என்றும் பரமேஸ்வரனை மகாருத்ரன் என்றும் போற்றும்.
திரு ஜடாயு சொல்வது போல் பாசுபதர்கள்,சாம்பவர்கள், ஜங்கமர்கள் அதாவது சிவனடியார்கள் எல்லாம் வணக்கத்திற்குறியவர் எனினும் சிவஅம்சம் அன்று. பலராமர் சிவ பக்தர் தான் ஆனால் அவர் சிவ அவதாரம் அன்று என்பதே இங்கு கருத்து. சிவபெருமானை அவதரிப்பவர் என்றும் உருத்திரன் என்றும் நம்புவோர் ஸ்மார்த்தர்கள் அன்றி சைவர் அல்லர் என்பதே துணிபு.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

க்ருஷ்ணகுமார் on August 10, 2011 at 2:38 pm

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ சுக சௌனக பீஷ்மதால்ப்யான்
ருக்மாங்கதார்ஜுன வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

என்று ஹரி பக்தர்களான பாகவதர்களைப் பற்றி சம்ஸ்க்ருத ச்லோகம் கேட்டுள்ளேன்.

தூர்வாச கௌசிக விரிஞ்சி மிருகண்டு புத்ரான்
தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
கண்வாத்ரி பார்கவ பிரஹஸ்பதி கௌதமாதீன்
புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

என சிவபக்தர்களைப் பற்றியதான ச்லோகம் முதல்முறையாக கேழ்க்கிறேன். நன்று.

மறந்தும் புறந்தொழார் என வைஷ்ணவர்களைப் பற்றி கேட்டிருக்கிறேன். சைவமும் அப்படியே என அறிகிறேன். அதனதன் படி இரண்டும் அழகே. தொன்று தொட்டு சான்றோர் அளித்த பக்தி நெறிமுறைகளாயிற்றே.

வைஷ்ணவர்கள் மற்றும் சைவர்களைத் தவிற சங்கரநாராயணர்களை ஒருங்கே பஞ்சாயதன பூசையில் வழிபடுவோரும் உண்டே,

சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணோஸ்ச ஹ்ருதயம் சிவ:
யதா சிவமயோ விஷ்ணு: ஏவம் விஷ்ணு மய: சிவ:

என சங்கரனையும் நாரணனையும் ஒருங்கே வழிபடும் வழிமுறையும் உண்டு.

இவ்வழிமுறையிலும் புறந்தொழல் என்ற கோட்பாட்டின் படி இல்லாவிடினும் ஏகாக்ர பக்தி வலியுறுத்தப்படுகிறதே

கந்தர்வன் on August 10, 2011 at 3:28 pm

//
அவதார புருஷர்களான ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் பிறந்ததும் இறந்ததும் ஆதாரப்பூர்வமானது. இதில் என்ன ஐயம். சைவர்களின் கருத்து இறைவன் அவதாரம் செய்வதில்லை என்பது. வைணவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் சைவர் இதனை ஏற்பதில்லை. அவ்வளவுதான்.
//

திரு சிவஸ்ரீ விபூதி பூஷன் அவர்களே,

கண்ணன் பிறப்பு நம்முடைய பிறப்பைப் போன்றதா? நாம் பிறப்பது கர்மாதீனமாக. இறைவன் பிறப்பது தன்னுடைய படைப்புகளான உயிர்களைக் காப்பதற்கு ஆசைப்பட்டு அவதரிப்பது. இது பற்றி நான் “அச்சுதனின் அவதாரப் பெருமை” கட்டுரைத் தொடரில் ஏற்கனவே எழுதியாயிற்று. சுருக்கமாக, சங்க இலக்கியத்தில் சான்றோர்கள் திருமாலை இப்படிப் பாடுகிறார்கள்:

“முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே” – பரிபாடல். பிறப்பித்தவர் இல்லாததால் அது கர்ம விளைவால் அன்றி தனிச்சிறப்பு வாய்ந்த பிறப்பு – தன்னிச்சையாக, அப்ராக்ருதமாகக் கொள்ளும் பிறப்பு. இந்த செய்தியையே

“அமூர்த்திமான்”, “அனேகமூர்த்தி” என்ற விஷ்ணு சஹாஸ்ரனாமத்திற்கு பாஷ்யமிடும் பொழுதும் சங்கரர் கூறியுள்ளார். “அமூர்த்திமான்” = பிறப்பித்தோர் இல்லை; அநேக மூர்த்தி = “பிறவாப் பிறப்பிலை”.

கண்ணன் “இறந்ததாக” எந்தப் புராணத்திலும் இல்லை. தன்னுடைய திருமேனியுடன் அப்படியே வைகுந்தத்தில் எழுந்தருளினான் என்று பாகவதம் கூறுகிறது.

 

sarang on August 10, 2011 at 5:34 pm

நண்பர் சிவ ஸ்ரீ விபூதி பூஷன் அவர்களே

//
பலராமன் ஆதி சேடனின் அவதாரம் என்று மகாபாரதம், பாகவதம், சங்க இலக்கியங்கள் கூறுகின்றபொழுது, எப்படி “செத்துப் பிறக்கின்ற மானிடர்” என்று சொல்ல முடியும்? எங்கிறார்.
அவதார புருஷர்களான ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் பிறந்ததும் இறந்ததும் ஆதாரப்பூர்வமானது. இதில் என்ன ஐயம். சைவர்களின் கருத்து இறைவன் அவதாரம் செய்வதில்லை என்பது. வைணவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் சைவர் இதனை
//

இப்படி கந்தர்வன் எழுதுவதற்க்கு முன் அனுபவமே காரணம். நம்பிக்கை இருக்கலாம் அதனாலேயே

“செத்து பிறக்கின்ற” என்ற வார்த்தை பிரயோகம் அழகாகவா உள்ளது

சரி சைவத்தில் அத்வைதமும் உண்டல்லவா – அங்கண் நோக்கினால் இப் பிரயோகம் அர்த்தமற்று தானே போகும்

பிறப்பது இறப்பது என்பது ஆன்மாவுக்கும் கிடையாது அப்படி இருக்க கர்ம வினையினால் உடல் எடுப்பது சிவமாகத்து என்று எழுதிவிட்டு போயிருக்கலாமே. ஒவ்வொரு ஆன்மாவும் உத்தமான ஒன்றே – அப்படி இருக்க இப்படிப்பட்ட வார்த்தை பிரயோகம் வருத்தத்தையே அளிக்கிறது.

CN.Muthukumaraswamy on August 10, 2011 at 7:02 pm

பூவினில் கந்தம் பொருந்தியவாறு,பலராமனின் உள்ளத்தில், சிவமணம் பூத்ததெனில் பலராமன் சிவாம்சம் பொருந்தியவனே. கண்ணபெருமான் அத்தகையவர் என்று சைவர் கொள்ளுவர். ஆனால் “பலராமனின் அம்சம் சிவன்” என்பது வைணவம், “சிவனின் அம்சம் பலராமன்” எனலாம் சைவம். அது அவரவர்களது நம்பிக்கை” என்னும் தொடரில் அந்தக் கருத்து உள்ளதா?

பாரதம் பாடிய பெருந்தேவனாரின் நற்றிணைக் கடவூள் வாழ்த்துப் பாடல் திரு கந்தருவன் அவர்களால் முந்திய கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டது. பெருந்தேவன் என்னும் பெயரே அவர் சைவர் எனக் காட்டும். மஹாதேவன் என்னும் பெயரே அழகு தமிழில் பெருந்தேவன் எனப்பட்டது. சம்போ மஹா தேவ,ஹரஹர மஹாதேவா என்னும் மொழி பாரதம் முழுதும் சிவாஜி போன்ற வீரர்களின் நாவில் ஒலித்த மந்திரமாகும். பெருந்தேவனார் சைவப் பண்பாட்டிற்கேற்ப , அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, ஆகியவற்றில் சிவனையும், குறுந்தொகையில் முருகவேளையும், நற்றிணையில் திருமாலையும் கடவுள் வாழ்த்தில் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருக்கலாம் என நச்சினார்கினியர் கருதும் பாடல் ஒன்று தொல்காப்பியம் உரையில் உள்ளது. அது வும் சிவத்தைப் பற்றியதே.

“தவநிந்தை செய்யாத சக்கரமால் அன்ப!
சிவநிந்தை இன்றிநீ செல்லின் – அவநிந்தை
காணாது வைகுந்தம் கண்டுமகிழ் வாய்அன்றேல்
வீணாளர் போல்உழல்வாய் மிக்கு”

 

T.Mayoorakiri sharma on August 10, 2011 at 8:19 pm

சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணுஸ்ய ஹ்ருதயம் சிவ:

சின்னப் பிள்ளைகள் கூடச் சொல்லுமே.. “அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு”

ஆக, அன்பிற்குரிய ஆய்வாளர்கள் ஹிந்துக்களாக அமையும் போது நடுநிலை நின்று சிந்திக்க வேண்டும்..

முக்கியமாக இக்கட்டுரையில் திருமாலிருஞ்சோலை பற்றி எழுதியிருக்கிற மதிப்பிற்குரிய கந்தர்வன் அவர்கள் நிச்சயமாக அதே திருமாலிருஞ்சோலை மலை பற்றி பழமுதிர்சோலை என்று பழந்தமிழ்ச் சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை குறிப்பிட்டுப் புகழ்வதை கட்டாயம் சுட்டிக் காட்டியிருக்கலாம்.. ஒன்றைக் காட்டி ஒன்றை மறைப்பது என்பது தவறான அபிப்ராயங்களுக்கு இட்டுச் செல்லுமல்லவா..?

ஹிந்துக்கள் எல்லோரும் சந்தியாவந்தனம் முதலாக எங்கணும் சங்கர நாராயண வந்தனம் செய்ய வேண்டும் என்பதே அடியேனின் அவா..__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 11, 2011 at 4:03 am

திரு மயூரகிரி ஷர்மா அவர்களே,

//
முக்கியமாக இக்கட்டுரையில் திருமாலிருஞ்சோலை பற்றி எழுதியிருக்கிற மதிப்பிற்குரிய கந்தர்வன் அவர்கள் நிச்சயமாக அதே திருமாலிருஞ்சோலை மலை பற்றி பழமுதிர்சோலை என்று பழந்தமிழ்ச் சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை குறிப்பிட்டுப் புகழ்வதை கட்டாயம் சுட்டிக் காட்டியிருக்கலாம்.. ஒன்றைக் காட்டி ஒன்றை மறைப்பது என்பது தவறான அபிப்ராயங்களுக்கு இட்டுச் செல்லுமல்லவா..?
//

முதல் கட்டுரையில் இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்தை என்னவென்று கூறினேன். திருமால் சமயம் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் குறிப்புகளை ஒன்றுதிரட்டி வைதிகவைணவ-பாகவத ஒழுக்கத்தின் தொடர்ச்சியைக் காட்டவே. ஆகவே முருக வழிபாடு பற்றிக் கூறவில்லை. கூறியிருந்தால் கட்டுரைத் தலைப்பிற்கும் தொடரின் நோக்கத்திற்கும் வெளியே போயிருக்கும்.

அது தவிர நீங்கள் கூறியது விந்தையாக இருக்கிறது. “முருகனைத் தான் பலராமன் என்று கூறினார்கள்” என்ற ஒரு ஊகத்தை முன்வைத்தீர்கள் – சமரசத்துடன். நல்ல எண்ணத்துடன் தான் – மறுக்கவில்லை. அதைத் தொடர்ந்து திரு பாலாஜி “சங்கர்ஷண மூர்த்தி ஸ்வரூபோ யோ அசாவாதித்யாத்மக ருத்ர” என்று ஸ்ரீருத்ரத்தில் நியாசத்தில் ஸ்மார்த்தர்கள் ஓதுவதை ஒட்டியும், ஸ்ரீமத் பாகவதம், மோக்ஷதர்மம் முதலான பிரமாண நூல்களில் வலுவாகக் கூறியிருப்பதை ஒட்டியும் பலராமனுக்கும் சிவபெருமானுக்கும் தொடர்புண்டு என்று கூறினார். (சங்கர்ஷணன் முத்தொழில் புரியும் திருமாலின் சாக்ஷாத் வியூக மூர்த்தி – கண்ணனுடைய தமையனுக்கும், மகனுக்கும், பேரனுக்கும் வியூக மூர்த்திகளின் பெயர்களையே வைத்திருந்தனர், அது வேறு விஷயம்).

மேற்கண்ட உரையாடலுக்குப் பிறகு பெரியார் ஒருவர்,

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறம்:58:14-16

எனும் பழந்தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணாக “செத்துப் பிறக்கும் மாபாரத மானுடர்” என்ற சொற்பிரயோகம் செய்திருக்கிறார். இதிலிருந்து தானே சர்ச்சை கிளம்பியது? நான் எழுதியதில் இருந்தா?

இத்துடன் நீங்கள் இரண்டு விஷயம் கவனிக்க வேண்டும்…

(1) வைணவம் போற்றும் பரம்பொருள் திருமால் ஒருவர் தான் – ஆனால் மற்ற தெய்வங்களை “செத்துப் பிறக்கும் மானுடர்” என்று ஒரு நாளும் கூறுவதில்லை. மாறாக, “மற்ற தேவதைகளுக்கு ஆயிரம் சதுர்யுகங்கள் ஆயுள். ஆகையால் அவர்கள் அமரர்கள் (‘முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று’ – திருப்பாவை)” என்பதும் “அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன் மேலான மும்மூர்த்திகள்” என்பதுமே வைணவர்களின் கொள்கை. “முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன்” – பொய்கையாழ்வார்.

(2) “வைணவர்கள் முருகனைத் திருமாலாகக் காண்பர்” என்று நீங்கள் எழுதியதற்குக் கடுங்கோபம் கொண்டு செவிசுடும் சொற்களையா பயன்படுத்தினோம்? “எல்லாம் திருமாலின் அம்சமே – சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்ற கொள்கையின்படி இதுவும் ஏற்கத்தக்கதே. மேலும் திருமாலின் அளவற்ற ஒப்பற்ற சிறந்த விபூதிகளுள் முருகனும் உண்டு என்று என்று geethaiyileye கண்ணன் கூறியுள்ளான். இக்கொள்கையின்படியும் ஏற்கத்தக்கதே” என்று தான் எழுதினோம். இதை எந்த வைணவ நூலும் எதிர்த்ததில்லை, எதிர்ப்பதுமில்லை, எதிர்க்கப்போவதுமில்லை.

இப்படியிருக்க, “தங்களை வயதிலும் அனுபவத்திலும் முதியவராக மதிக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது இத்தகைய பதிதமான வார்த்தைகள் தங்கள் கையெழுத்தாக வந்திருப்பது பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இப்படிக் கூறியிருக்க வேண்டாம்” என்று அப்பெரியார் குறித்து இங்கு ஒருவராவது கூறினீர்களா? இப்படி இருக்க நமக்கு மட்டும் ஏன் இந்த சமரச போதனை?

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 11, 2011 at 8:16 am

இன்னொரு விஷயம்…. எனக்குத் தோன்றியது. தவறிருந்தால் திரு மயூரகிரி ஷர்மா இடம் மன்னிக்கக் கேட்டுக் கொள்கிறேன்:

// திருமாலிருஞ்சோலையில் தற்போது பலராமனுக்கு ஆலயம் இல்லை.. ஆக, இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிற முருகனைத் தான் வைணவர்கள் அல்லது விஷ்ணு பக்தர்கள் பலராமனாகக் கண்டார்களா? //

இப்படி ஊகங்களை முன் வைக்குமுன், இதனால் விளையக்கூடிய அபவாதங்களை யோசிக்க வேண்டும். இதைப் பிடித்துக் கொண்டு மிஷ நரிகள் நாளைக்கு “பலராமனின் கோயிலைத் தான் சைவர்கள் அபகரித்தனர்” என்று சைவ-வைணவ சண்டையை மூட்டினாலும் மூட்டக்கூடும்.

ஏற்கனவே வேறு ஒரு பெரியவர் நல்ல நோக்கத்துடன் “பூரி ஜகன்நாதம் பௌத்த விகாரமாக இருந்தது” என்று ஒரு ஊகத்தை முன்வைத்ததை வைத்து இன்று மிஷனரிகள் “திருப்பதி, பழனி, இப்படி எல்லாக் கோயில்களும் பிராம்மணர்களால் பௌத்தர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட விகாரங்களே” என்று கூறுகின்றனர்.

அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூ⁴தாநாமீஸ்²வரோऽபி ஸந்|
ப்ரக்ருதிம் ஸ்வாமதி⁴ஷ்டா²ய ஸம்ப⁴வாம்யாத்மமாயயா ||4-6||

அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி = பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்
பூ⁴தாநாம் ஈஸ்²வர: அபி ஸந் = உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதி⁴ஷ்டா²ய = யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று
ஆத்ம மாயயா ஸம்ப⁴வாமி = என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

பாரதம் முழுதும் ஏககண்டமாகப் போற்றப்படும் பகவத் கீதையின் மேற்கண்ட வாக்கைப் பொய்யாக்காமல் இருப்பது நன்று.

கிறிஸ்தவர்கள் “incarnation” என்ற கொள்கையின் படி இயேசு மெய்யாகவே துன்பப்பட்டார், மெய்யாகவே இறந்தார், அவருடைய உடல் சதையும் மாமிசமும் கூடியது என்பதை வலுவாக நம்புபவர்கள். இதற்கும் சனாதன தர்மம் கூறும் அவதாரம் என்னும் கொள்கைக்கும் (திருமால் அவதாரம் அப்ராக்ருதம் – அமானுஷ்யம், அவர் மனிதர்களைப் போல பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை) உள்ள வேறுபாட்டினைப் புரிந்து பாராட்டுவது நம் தருமத்திற்கு நல்லது. இவ்விரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல. இதைத் தெளிவாகக் காட்டுவது மிஷ நரிகளுக்கும் நல்ல பதிலடி.

சமரசம் செய்கிறேன் என்று கிளம்பியதில் வீண் விவாதமும் கடுஞ்சொற்களும் தான் மிச்சம் – கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல. இனியாவது கட்டுரையின் கருப்பொருளுக்கு வருவோம்.

இதற்கிடையில் இரண்டு அன்பர்களுடைய அழகிய மறுமொழிகளுக்கு பதில் கூறாமல் போய் விட்டதாயிற்று:

திரு கிருஷ்ணகுமார்… பாசுர வரிகளைக் காட்டி சிறப்பித்ததற்கும், புனித ஏகாதசி நன்னாளை நினைவூட்டியதற்கும் நன்றி. தேவ் அவர்கள் மறுமொழியும் கண்டு மகிழ்ந்தேன். பரமச்வாமியின் படம் என்னிடம் இல்லை.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

C.N.Nuthukumaraswamy on August 11, 2011 at 9:05 am

திரு கந்தர்வன் அவர்கள் எழுதியுள்ள இத்தொடரில் அமைந்துள்ள இலக்கியச்சுவையையும் பக்திச் சுவையையும் சுவைத்தவர்களில் நானும் ஒருவன். இத்தொடரின் சிறப்பைப் பாராட்டலாம். அல்லது திருமாலின் வியூகங்களை எடுத்துக் காட்டி விளக்கலாம். வைணவத்தில் பலராமனின் இடத்தை விளக்கலாம். சிவத்தைப் பலராமனின் அம்சம் என்று கூறுவது விஷமம். என்னுடைய சொற்பிரயோகம் சைவவெறி என்றால் சிவனைப் பலராமனின் அம்சம் என்றும் சைவர்கள் வேண்டுமானால் பலராமனின் அம்சம் என்று சொல்லித் திருப்திப் பட்டுக்கொள்ளட்டும் என்று எழுதுவது வைணவவெறி அல்லாமல் வேறென்ன?

சைவம் வைணவம் இரண்டும் இருவிதமான முத்திப் பேறுகளைப் பரமுத்தியகக் காட்டுகின்றன. அதற்கான வழிகளைச் சாத்திரங்களும் தோத்திரங்களும் போதிக்கின்றன. அதை விளக்கும் எல்லையில் நிற்க.

பலராமனும் கண்ணனும் இராமனும் தாயின் குடல் விளக்கம் செய்யவந்த காவிய நாயகர்களன்றி யர்ர்? ஆதி சங்கரர் சிவோஹம் பாவனையால் சிவமேயாகத் திகழ்ந்தவர்தாம். கண்ணனும் உபமன்யு முனிவரிடம் “மந்த்ர சம்ஸ்காரதீட்சை” என்னும் விரஜாதீட்சை ” பெற்று சிவோகம் பாவனையால் சிவமாகத் திகழ்ந்ததை மஹாபாரத அநுசாஸநிக பர்வத்துப் 14ஆவது அத்தியாயத்திலும் பாரத துரோணபர்வத்திலும் காணலாம்.

இராமன் மறைந்து நின்று விடுத்த அஸ்திரத்தான் மரணமடைந்த வாலியே கிருஷ்ணாவதாரத்தில் ஒருவேடனாய்த் தோன்றியிருந்து கிருஷ்ணன்காலைத் தானுண்ணும் பிராணியாக நினைத்து மறைந்து நின்று அம்போச்சினன். அதனாற் கிருஷ்ணன் மரணமடைந்தனன் என்னும் செய்தி மஹாபாரதம் முதலியவற்றிலிருந்து அறிய வருகின்றது.
“இருப்புலக்கையின் சிறிய துணுக்கைத் தன் அம்புக்கு முள்ளாக வைத்துக் கொண்டவனான ஜரன் என்கின்ற வேடன் வந்தான். தூரத்திலிருந்து சுவாமியின் திருவடியை ஒருமிருகமாக நினைத்து, அவ்வம்பை அத்திருத்தாளினடிப்புறத்தில் எய்தான்” என்னும் செய்தி விஷ்ணுபுராணத்து 5ஆம் அமிசத்தின் 37ஆம் அத்தியாயத்தில் வருகின்றது.

கிருஷ்ணனுடைய உடம்பில் அருச்சுனன் விதிப்படி உத்தரகிரியை செய்து கொள்ளி வைத்த செய்தி 38ஆம் அத்தியாயத்தில் உள்ளது.

திரு பாலாஜி அவர்களே! பலராமன் , அண்டஙகள் அனைத்தையும் தாங்கும் பரம்பொருள் அல்லன். அப்பரம்பொருளைத் திருமால் என்றோ நாராயணன் என்றோ கூறுங்கள்.
” ஆலகால விஷத்தைப் பருகி அகிலத்தைக் காத்த ஐயனை எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபிகளுடன் ஒப்பிடுவது பெருமை”
இப்படி யார் கூறினர்? நீங்களே ஒன்றைக் கற்பித்து ஒருவர்மேல் திணிப்பது நியாயமில்லை.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 11, 2011 at 11:36 am

விவாதம் தொடரட்டும். என்ன சமாதானங்கள் மொழிந்தாலும் பலராமன் சிவ அம்சமோ அவ்தாரம் என்ற கருத்து சைவர்க்கு ஏற்புடையது அன்று.
திரு பாலாஜி
“தூர்வாச முனி எத்தனை பேரை சபித்துள்ளார்? அவரை சிவபெருமானின் அம்சம் என்று சிவமகாபுராணமே கூறுகிறதே!”
இது தவறு சாபம் கொடுத்தாலும் தவ ஆற்றல் வளரும் வல்லமைப் பெற்ற துர்வாச முனிவர் ருத்ராம்சம் பொருந்தியவர். அவர் மட்டுமல்ல ஆஞ்சனேயரும் அப்படியே. சைவர்க்கு சிவபரம் பொருள் வேறு ருத்திரன் வேறு.
திரு பாலாஜி,
“சில வைணவ வெறியர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல” என்று முனைவர் அய்யா அடிக்கடி நிரூபிக்கிறார். வெட்கப்படவேண்டிய விஷயம்!!!
இதுதான் கண்டிக்கத்தக்கது தனிமனிதரின் கருத்துரிமை அவமதிப்பதாகும்
ஐயாவின் கருத்தில் வெறி யேதும் துளியும் இல்லை. சைவர் யாரும் சிவபரம் பொருளை பிறவா யாக்கை பெரியோன் என்றே கொள்வர். சைவ நூல்கள் கருத்தினை அவர் மொழிந்தார் அவ்வளவே. ஹிந்து சமூகத்தின் ஒற்றுமைக்கு இக்கருத்து எதிர் இல்லை. சனாதனம் பல்வேறு பட்ட வழிபாடு முறைகளையும் சித்தாந்தங்களைக்கொண்டதாகும். ஐயா சொன்னது சைவப் பெரியோர் மொழி.
திரு பாலாஜி
அப்படியென்றால், “சிவோஹம்”.. நாந்தான் சிவம் என்று கூறிய சங்கரரையும், தன்னை சிவன் என்று எண்ணிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான அகோரிபாபாக்களும் உங்களைப் பொருத்தமட்டில் சைவர்களல்ல.. அப்படித்தானே! ஆம் இது ஸ்மார்த்தம் அத்வைதம் சைவம் அன்று. ஏன் சங்கர மடங்களில் கேட்டுப் பாருமே. விபூதி பூசினாலும் அவர்கள் சைவராகார். சமயத்தில் பைரவ உபாசகர்கள் தாந்த்ரீகர்களான அகோரிகள் தத்துவத்தில் அத்வைதிகள். அவர்கள் சைவர்கள் அல்லர்.
இன்னொன்றும் சொன்னார் திரு பாலாஜி
“ஆலகால விஷத்தைப் பருகி அகிலத்தைக் காத்த ஐயனை எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபிகளுடன் ஒப்பிடுவது பெருமை, ஆனால் அண்டங்களைத் தாங்கும் பரந்தாமனைத் தாங்குபவனோடு ஒப்பிட்டால், அது கௌரவக் குறைவாம்! நமக்கு எதிரிகள் வெளியில் இல்லை.. நாமே நமக்கு எதிரிகள்!” யார் நபியோடு ஈசனை ஒப்பிட்டது.
ஹிந்து ஒற்றுமையை முழுமையாக ஏற்கும், அதற்கு எல்லோர்க்கும் முதலில் வழிகாட்டும் சைவர்கள், ஸ்மார்த்த வைணவக் கருத்துக்களை கண்ணைமூடிக்கொண்டு ஏற்க வேண்டுமா என்ன. அவசியம் இல்லை.
திரு பாலாஜி போன்றவர்கள் பெரியவர்களை அறிஞர்களை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். கண்டபடி எழுதக்கூடாது. போற்றுதலுக்குறிய ஐயா அவர்கள் இதைப் பொறுத்தருளவேண்டும். தொடர்ந்து தங்களது கட்டுரைகள் இங்கே பதிப்பிக்க வேண்டும்.
திரு மயூரகிரி சர்மா
சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணுஸ்ய ஹ்ருதயம் சிவ: என்று கூறியுள்ளார். இது ஸ்மார்த்தம். சைவக்கொள்கை அன்று. ஹிந்துக்கள் எல்லோரும் இதனை ஏற்க வேண்டும் என்பது கட்டாயம் அன்று.சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 11, 2011 at 11:36 am

விவாதம் தொடரட்டும். என்ன சமாதானங்கள் மொழிந்தாலும் பலராமன் சிவ அம்சமோ அவ்தாரம் என்ற கருத்து சைவர்க்கு ஏற்புடையது அன்று.
திரு பாலாஜி
“தூர்வாச முனி எத்தனை பேரை சபித்துள்ளார்? அவரை சிவபெருமானின் அம்சம் என்று சிவமகாபுராணமே கூறுகிறதே!”
இது தவறு சாபம் கொடுத்தாலும் தவ ஆற்றல் வளரும் வல்லமைப் பெற்ற துர்வாச முனிவர் ருத்ராம்சம் பொருந்தியவர். அவர் மட்டுமல்ல ஆஞ்சனேயரும் அப்படியே. சைவர்க்கு சிவபரம் பொருள் வேறு ருத்திரன் வேறு.
திரு பாலாஜி,
“சில வைணவ வெறியர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல” என்று முனைவர் அய்யா அடிக்கடி நிரூபிக்கிறார். வெட்கப்படவேண்டிய விஷயம்!!!
இதுதான் கண்டிக்கத்தக்கது தனிமனிதரின் கருத்துரிமை அவமதிப்பதாகும்
ஐயாவின் கருத்தில் வெறி யேதும் துளியும் இல்லை. சைவர் யாரும் சிவபரம் பொருளை பிறவா யாக்கை பெரியோன் என்றே கொள்வர். சைவ நூல்கள் கருத்தினை அவர் மொழிந்தார் அவ்வளவே. ஹிந்து சமூகத்தின் ஒற்றுமைக்கு இக்கருத்து எதிர் இல்லை. சனாதனம் பல்வேறு பட்ட வழிபாடு முறைகளையும் சித்தாந்தங்களைக்கொண்டதாகும். ஐயா சொன்னது சைவப் பெரியோர் மொழி.
திரு பாலாஜி
அப்படியென்றால், “சிவோஹம்”.. நாந்தான் சிவம் என்று கூறிய சங்கரரையும், தன்னை சிவன் என்று எண்ணிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான அகோரிபாபாக்களும் உங்களைப் பொருத்தமட்டில் சைவர்களல்ல.. அப்படித்தானே! ஆம் இது ஸ்மார்த்தம் அத்வைதம் சைவம் அன்று. ஏன் சங்கர மடங்களில் கேட்டுப் பாருமே. விபூதி பூசினாலும் அவர்கள் சைவராகார். சமயத்தில் பைரவ உபாசகர்கள் தாந்த்ரீகர்களான அகோரிகள் தத்துவத்தில் அத்வைதிகள். அவர்கள் சைவர்கள் அல்லர்.
இன்னொன்றும் சொன்னார் திரு பாலாஜி
“ஆலகால விஷத்தைப் பருகி அகிலத்தைக் காத்த ஐயனை எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபிகளுடன் ஒப்பிடுவது பெருமை, ஆனால் அண்டங்களைத் தாங்கும் பரந்தாமனைத் தாங்குபவனோடு ஒப்பிட்டால், அது கௌரவக் குறைவாம்! நமக்கு எதிரிகள் வெளியில் இல்லை.. நாமே நமக்கு எதிரிகள்!” யார் நபியோடு ஈசனை ஒப்பிட்டது.
ஹிந்து ஒற்றுமையை முழுமையாக ஏற்கும், அதற்கு எல்லோர்க்கும் முதலில் வழிகாட்டும் சைவர்கள், ஸ்மார்த்த வைணவக் கருத்துக்களை கண்ணைமூடிக்கொண்டு ஏற்க வேண்டுமா என்ன. அவசியம் இல்லை.
திரு பாலாஜி போன்றவர்கள் பெரியவர்களை அறிஞர்களை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். கண்டபடி எழுதக்கூடாது. போற்றுதலுக்குறிய ஐயா அவர்கள் இதைப் பொறுத்தருளவேண்டும். தொடர்ந்து தங்களது கட்டுரைகள் இங்கே பதிப்பிக்க வேண்டும்.
திரு மயூரகிரி சர்மா
சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணுஸ்ய ஹ்ருதயம் சிவ: என்று கூறியுள்ளார். இது ஸ்மார்த்தம். சைவக்கொள்கை அன்று. ஹிந்துக்கள் எல்லோரும் இதனை ஏற்க வேண்டும் என்பது கட்டாயம் அன்று.

சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 11, 2011 at 11:55 am

திருமாலடியார் கந்தர்வன்
கண்ணன் “இறந்ததாக” எந்தப் புராணத்திலும் இல்லை. தன்னுடைய திருமேனியுடன் அப்படியே வைகுந்தத்தில் எழுந்தருளினான் என்று பாகவதம் கூறுகிறது.
ஆனால் மகாபாரதம் வேடன் மான் என்று தவறாக எய்த அம்பால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணர் இறந்தார் என்று உள்ளதே. ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி சரயுவில் மூழ்கி ஜல சமாதியானார் என்றும் உத்தர ராமாயணம் கூறுகிறதே. இதை நீங்கள் ஏற்க வில்லையா என்ன.

செத்து பிறக்கின்ற” என்ற வார்த்தை பிரயோகம் அழகாகவா உள்ளது.
இதில் தவறு இல்லை. உங்களைப் புண்படுத்தும் எந்த உள் நோக்கமும் காண்கிலேன்.

சரி சைவத்தில் அத்வைதமும் உண்டல்லவா – அங்கண் நோக்கினால் இப் பிரயோகம் அர்த்தமற்று தானே போகும்.
தவறு. சைவத்தில் உள்ள அத்துவிதம் வேறு. அது சுத்தாத்வைதம், சிவாத்வைதம். சிவம் ஒன்றே என்பது அதன் பொருள். ஆத்மாவும் இறையும் ஒன்றே என்பது சங்கரரின் அத்வைதம். இதனை சுத்தாத்வைதிகள் கேவலாத்வைதம் என்பர்.

 

ஜடாயு on August 11, 2011 at 12:39 pm

// என சிவபக்தர்களைப் பற்றியதான ச்லோகம் முதல்முறையாக கேழ்க்கிறேன். நன்று. //

அன்புள்ள க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு, நன்றி.

நான் கொடுத்திருந்தது பாசுபதர்களைப் பற்றிய சுலோகம்.

சிவபக்தர்களைப் பட்டியலிடுவது “ப்ரஹ்லாத நாரத” சுலோகத்துடன் சேர்த்து வழக்கமாக நான் கூறும் இன்னொரு சுலோகம். தங்கள் உவகை கருதி அதனையும் இங்கு தருகிறேன்.

நந்தீச கும்பஜ ததீசி ம்ருகண்டுஸூனு
ஸ்ரீசங்கரார்ய ஹரதத்தகுரூபமன்யூன்
சண்டீச ப்ருங்கிரிடி ஸுந்த்ரமூர்த்தி முக்யான்
சைவோத்தமான் ப்ரதிதினம் மனஸா ஸ்மராமி.

கும்பஜ – அகஸ்தியர்
ம்ருகண்டுஸூனு – மார்க்கண்டேயர்
ஸ்ரீசங்கரார்ய என்றது ஆதிசங்கரரை
ஹரதத்த குரு + உபமன்யு.
ஸுந்த்ரமூர்த்தி முக்யான் – சுந்தரைத் தலைவராகக் கொண்ட அறுபத்து மூவர் திருத்தொண்டக் குழாம்

 

sarang on August 11, 2011 at 1:24 pm

//
கிருஷ்ணனுடைய உடம்பில் அருச்சுனன் விதிப்படி உத்தரகிரியை செய்து கொள்ளி வைத்த செய்தி 38ஆம் அத்தியாயத்தில் உள்ளது.
//

நாம் வேதாந்தம் அறிந்த அழகு நன்றாக இருக்கிறது. யாவரது உடல் ஆனாலும் ஒன்று தண்ணீரில் இட்டு முழுகடிக்க பட வேண்டும் அல்லது தீயில் இடப்பட வேண்டும் – ராமன் தன்னை தண்ணீரில் முழுகிக் கொண்டான். தண்ணீருக்கும் தீயிர்க்கும் உள்ள தன்மையினால் அப்படி விதிக்கப்பட்டு இருக்கிறது.

அவதாரம் என்றாலும் இந்த விதியிலிருந்து விலக்கு கிடையாது. கண்ணன் சுவாமி ஆயிற்றே அவனுக்கு ஏன் பிருந்தாவனம் எழுப்ப வில்லை – இங்கேயும் கூட ஆஸ்ரம தர்மத்தை அனுசரணம் செய்கிறான் கண்ணன்.

அவதாரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் இதற்க்கு காரணம். மேலும் யாரோ ஒருவர் போட்ட நஞ்சு புத்தகத்திலிருந்து அச்சு அசல் எடுத்து இங்கு எழுதுவது தான் காரணம்.

தான் பரமாத்வாவே ஆனாலும் பிரக்ருதியின் சட்டத்திலிருந்து தன்னை விடுவித்து கொள்ளாதவன் நாரணன் – அது அவனது நேர்மையை காட்டுகிறது – கடவுள் என்ற அடாவடித்தனமில்லாதவன் அப்படித்தான் இருக்க வேண்டும்.

நானும் குறுக்கு உதாரணம் குடுத்து உங்களை சங்கடத்தில் தள்ள முடியும். அப்படி செய்ய விரும்பவில்லை என்றாலும் அது ப்ரசூரம் ஆகாது என்ற ஒரு நம்பிக்கை தான்.

கீதை 9.9

ந ச மாம் தானி கர்மணி நிபத்னந்தி தனஞ்சய
உதாசீனமதாசீனம் அசக்தும் தேஷு கர்மசு

nor do these actions bind me. o dananjeya for i remain as though un concerned unattached to these actions

கீதை 9.11

அவஜானந்தி மாம் மூட மானுஷீம் தனுமாஸ்ரிதம்
பரம் பாவமஜானந்தோ மாமா ப்ஹோதமஹெஸ்வரம்

the foolish disregard me, enshrined in human form knowing not my supreme state as the great lord of all beings

அடுத்த கீதை 9.11 நான் விவரிக்கவில்லை – ஆசை உடைவர்கள் படித்து பார்க்கலாம்

பெரியவாரனாவர் முன்னமே ராமன் சூர்பனகை சம்பாஷனையை தவறாக புரிந்து கொண்டு ராமன் காமமுர்றான் என்று சொல்லியாகிவிட்டது அடுத்து கண்ணன் அர்ஜுனனை போரிட வைத்து வஞ்சம் செய்தான் என்றும் சொல்லியாகிவிட்டது.

இனி சொல்வதிற்கு ஒன்றும் இல்லை – நான் இனி பெரியவருக்கு புரிய வைக்க முயல மாட்டேன்.

பரமாத்மாவை விட எமக்கு ஆடி சேடனான ராமனுசனே முக்கியம். அவனிடத்திலே தான் எமக்கு அன்பு. ஆம் பலராமன் பரமாத்மா இல்லை தான் அவன் ஒரு படி மேல் – அவனே உடையவன். பரமன், ஆழ்வார்கள் செய்ய இயலாதவற்றை செய்து முடித்த பெரியோன்.

சேர்ந்து செய்ய வேண்டியா காரியங்கள் பல உள்ளன – இப்படி பொது தளங்களில் வாக்கியங்களை விடாமல் இருந்தால் நல்லது. இதை முன்பே பல முறை சொல்லியாகிவிட்டது. editor களும் நமது தர்மத்தின் நலன் கருதி இது போன்றவற்றை edit செய்து ப்ரசூரித்தால் நன்றாக இருக்கும்

வருத்தத்துடன்__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 11, 2011 at 1:29 pm

திரு. முத்துக்குமாரசுவாமி அவர்களே,

// திரு கந்தர்வன் அவர்கள் எழுதியுள்ள இத்தொடரில் அமைந்துள்ள இலக்கியச்சுவையையும் பக்திச் சுவையையும் சுவைத்தவர்களில் நானும் ஒருவன். இத்தொடரின் சிறப்பைப் பாராட்டலாம். அல்லது திருமாலின் வியூகங்களை எடுத்துக் காட்டி விளக்கலாம். வைணவத்தில் பலராமனின் இடத்தை விளக்கலாம்.//

// சைவம் வைணவம் இரண்டும் இருவிதமான முத்திப் பேறுகளைப் பரமுத்தியகக் காட்டுகின்றன //

இத்துடன் நிறுத்தியிருக்கலாம்.

//பலராமனும் கண்ணனும் இராமனும் தாயின் குடல் விளக்கம் செய்யவந்த காவிய நாயகர்களன்றி யர்ர்?//

விந்தையாக இருக்கிறது???

(இந்த பல்லவியைப் பிடித்துக்கொண்டு “கதாநாயகர்களாகிய கற்பனைத் தெய்வங்களை வணங்குவதை விட்டு மெய்யான கர்த்தரை வணங்குங்கள்” என்று மிசனரிகள் நம்மைப் பார்த்து ஏசாத நாளில்லை. அந்தப் பாணியில் உள்ளது.)

எத்தனை இடங்களில் வால்மீகி, வேதம் தொகுத்து வளர்த்த வியாசர், சங்ககாலத் தமிழர், காளிதாசர், கம்பர் முதலானோர், ஆதி சங்கரர் முதலான ஆசார்ய புருஷர்கள், இவரெல்லாம் ஏககண்டமாக கண்ணனும் இராமனும் பரம்பொருளான சாக்ஷாத் நாராயணனின் அவதாரம் என்று கூறியிருக்க, “வெறும் காவிய நாயகர்கள்” என்று கூறுவது வினோத பிரக்ருதிகளின் பேச்சு.

அது தவிர சுருதியும் “ப்ரஹ்மண்யோ தேவகி புத்ர:, ப்ரஹ்மண்யோ மதுசூதன:” என்று தேவகி புத்ரனாகிய மதுசூதனனை பரப்பிரம்மம் என்று ஓதிற்று.

“நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்” – இதுவும் சுருதி.

தொன்றுதொட்டு ஸ்மார்த்த-வைஷ்ணவ விபாகமர அனைத்து அந்தனர்களாலும் இன்றுவரை அத்யயனம் செய்யப்படும் உபநிடதங்கள் இவை.

கண்ணன் வெறும் கதாபாத்திரம் என்றால் இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வதென்று தெரியவில்லை.

// சிவத்தைப் பலராமனின் அம்சம் என்று கூறுவது விஷமம். //

முதலில், பலராமனுக்கும் வியூக மூர்த்தியின் பெயர் அமைந்திருப்பதால் பலராமனும் வியூக மூர்த்தி சங்கர்ஷணனும் ஐக்கியம் அல்ல. (விவரம் தெரிந்த வைனவப்பெரியோர் தவறானால் விளக்குங்கள்).

இரண்டாவதாக, சிவபெருமான் சந்கர்ஷனனுடைய அம்சம் என்பது விஷமம் என்றால், ஸ்ரீமத் பாகவதமும் விஷமம் ஆகிவிடும். அதைச் சொன்ன சுகர், அதை எழுதிய தந்தை வியாசர் – இவர்களெல்லாம் விஷமிகளா?

சிவபெருமான் சங்கர்ஷணனின் அம்சம் என்பதற்குப் பிரமாணம் உண்டு:

Bhaktivedanta VedaBase: Srimad Bhagavatam 5.17.16

bhavani-nathaih stri-ganarbuda-sahasrair avarudhyamano bhagavatas catur-murter maha-purusasya turiyam tamasim murtim prakrtim atmanah sankarsana-samjnam atma-samadhi-rupena sannidhapyaitad abhigrnan bhava upadhavati

SYNONYMS

bhavani-nathaih — by the company of Bhavani; stri-gana — of females; arbuda-sahasraih — by ten billion; avarudhyamanah — always being served; bhagavatah catuh-murteh — the Supreme Personality of Godhead, who is expanded in four; maha-purusasya — of the Supreme Person; turiyam — the fourth expansion; tamasim — related to the mode of ignorance; murtim — the form; prakrtim — as the source; atmanah — of himself (Lord Siva); sankarsana-samjnam — known as Sankarsana; atma-samadhi-rupena — by meditating upon Him in trance; sannidhapya — bringing Him near; etat — this; abhigrnan — clearly chanting; bhavah — Lord Siva; upadhavati — worships.

TRANSLATION

In Ilavrta-varsa, Lord Siva is always encircled by ten billion maidservants of goddess Durga, who minister to him. The quadruple expansion of the Supreme Lord is composed of Vasudeva, Pradyumna, Aniruddha and Sankarsana. Sankarsana, the fourth expansion, is certainly transcendental, but because his activities of destruction in the material world are in the mode of ignorance, He is known as tamasi, the Lord’s form in the mode of ignorance. Lord Siva knows that Sankarsana is the original cause of his own existence, and thus he always meditates upon Him in trance by chanting the following mantra.

// சிவனைப் பலராமனின் அம்சம் என்றும் சைவர்கள் வேண்டுமானால் பலராமனின் அம்சம் என்று சொல்லித் திருப்திப் பட்டுக்கொள்ளட்டும் என்று எழுதுவது வைணவவெறி அல்லாமல் வேறென்ன? //

பாலாஜி அவர்கள் “திருப்திப் பட்டுக்கொள்ளட்டும்” என்று எழுதியதாகத் தெரியவில்லை. மேற்கொண்டு அவரே விளக்கலாம், விலக்காமலும் போகலாம்.

// இராமன் மறைந்து நின்று விடுத்த அஸ்திரத்தான் மரணமடைந்த வாலியே கிருஷ்ணாவதாரத்தில் ஒருவேடனாய்த் தோன்றியிருந்து கிருஷ்ணன்காலைத் தானுண்ணும் பிராணியாக நினைத்து மறைந்து நின்று அம்போச்சினன். அதனாற் கிருஷ்ணன் மரணமடைந்தனன் என்னும் செய்தி மஹாபாரதம் முதலியவற்றிலிருந்து அறிய வருகின்றது. //

மன்னிக்கவும் – மரணமடைந்தார் என்று இல்லை. இதற்குத் “திரோதானம்” (திருமேனியை மாயை எனும் திரையால் மறைத்தல்) என்று தான் கூறுவார்.

அண்டமனைத்தையும் திருவடியால் அளந்தபோழுது எத்தனை முட்கள் குத்தியும் கலங்காத பரமனை கேவலம் ஒரே ஒரு அம்பு தைத்து மரிக்கச் செய்தது என்பது எப்படி அறிவிற்குப் பொருந்தும்?

தானே ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஒரு நாடகத்தை நடத்தி அவதாரத்தை முடித்துக் கொண்டு எழுந்தருளினான் என்பதே தருக்கத்துக்கு ஒவ்வும். ஸ்ரீமத் பாகவதம்:

śrī-bhagavān uvāca
mā bhair jare tvam uttiṣṭha
kāma eṣa kṛto hi me
yāhi tvaḿ mad-anujñātaḥ
svargaḿ su-kṛtināḿ padam

SYNONYMS

śrī-bhagavān uvāca — the Supreme Personality of Godhead said; mā bhaiḥ — do not fear; jare — O Jarā; tvam — you; uttiṣṭha — please get up; kāmaḥ — the desire; eṣaḥ — this; kṛtaḥ — done; hi — indeed; me — My; yāhi — go; tvam — you; mat-anujñātaḥ — given permission by Me; svargam — to the spiritual world; su-kṛtinām — of the pious; padam — the abode.

TRANSLATION

The Supreme Personality of Godhead said: My dear Jarā, do not fear. Please get up. What has been done is actually My own desire. With My permission, go now to the abode of the pious, the spiritual world.

lokābhirāmāḿ sva-tanuḿ dhāraṇā-dhyāna-mańgalam
yoga-dhāraṇayāgneyyādagdhvā dhāmāviśat svakam

SYNONYMS

loka — to all the worlds; abhirāmām — most attractive; sva-tanum — His own transcendental body; dhāraṇā — of all trance; dhyāna — and meditation; mańgalam — the auspicious object; yoga-dhāraṇayā — by mystic trance; āgneyyā — focused on fire; adagdhvā — without burning; dhāma — the abode; āviśat — He entered; svakam — His own.

TRANSLATION

Without employing the mystic āgneyī meditation to burn up His transcendental body, which is the all-attractive resting place of all the worlds and the object of all contemplation and meditation, Lord Kṛṣṇa entered into His own abode.

rājan parasya tanu-bhṛj-jananāpyayehā
māyā-viḍambanam avehi yathā naṭasya
sṛṣṭvātmanedam anuviśya vihṛtya cānte
saḿhṛtya cātma-mahinoparataḥ sa āste

SYNONYMS

rājan — O King Parīkṣit; parasya — of the Supreme; tanu-bhṛt — resembling the embodied living beings; janana — of birth; apyaya — and disappearance; īhāḥ — the activities; māyā — of His illusory potency; viḍambanam — the false show; avehi — you should understand; yathā — just as; naṭasya — of an actor; sṛṣṭvā — creating; ātmanā — by Himself; idam — this universe; anuviśya — entering it; vihṛtya — playing; ca — and; ante — in the end; saḿhṛtya — winding it up; ca — and; ātma-mahinā — with His own glory; uparataḥ — having ceased; saḥ — He; āste — remains.

TRANSLATION

My dear King, you should understand that the Supreme Lord’s appearance and disappearance, which resemble those of embodied conditioned souls, are actually a show enacted by His illusory energy, just like the performance of an actor. After creating this universe He enters into it, plays within it for some time, and at last winds it up. Then the Lord remains situated in His own transcendental glory, having ceased from the functions of cosmic manifestation.

அது தவிர, வாலி தான் ஜரன் என்ற வேடனாக வந்ததாக எங்குமே இல்லை. கற்பனையில் விளைந்த நாடோடிக் கதையாக இருக்கும்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

ஜடாயு on August 11, 2011 at 2:00 pm

முன்பு ஒரு கட்டுரை மறுமொழியில், சைவத்திலும் கூட அவதாரக் கோட்பாடு ஒருவகையில் போற்றப் படுகிறது என்று முனைவர் அவர்களுக்கு சுட்டிய ஞாபகம். ’தீதகன்று உலகம் உய்யத் திருவவதாரம் செய்தார்’ என்பது பெரியபுராணம். ‘ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்’ என்ற கந்தபுராணப் பாடல் இடம்பெறுவது அதிலுள்ள ”திருஅவதாரப் படலத்தில்” தான். இது போக, சம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரம் என்று அருணகிரியார் உள்ளிட்ட பல சைவ சான்றோர்கள் சொல்லியுள்ளார்கள். இதற்கு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சுற்றி வளைத்து சுத்த சிவம், பர சிவம், அபர சிவம், அபர சுப்பிரமணியர் என்ற கருத்தாக்கங்களையெல்லாம் கூறி ஒரு நீண்ட விளக்கமும் அளித்துள்ளார். இதே போல “மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாகிடிலே” என்று திருவாசகத்தில் உள்ளது போல சிவன் மீனவ வடிவில் “அவதரித்ததற்கும்” சைவ சித்தாந்தரீதியாக விளக்கம் உண்டு.

மொத்தத்தில் அது சைவம் கூறும் அவதார விளக்கம். இதே போல வைஷ்ணவ சித்தாந்தத்திலும் அவதாரம் என்பதற்கு வேறு விதமான மிகச் சிறப்பான விளக்கம் உள்ளது, அவ்வளவே. எனவே அதைப் பழிக்கத் தேவையில்லை.

மதிப்பிற்குரிய முனைவர் ஐயா அவர்கள் தனிப்பட்ட அளவில் வைஷ்ணவம் கூறும் அந்த அவதாரக் கொள்கையை ஏற்காமல் இருக்கலாம். ஆனால் கோடிக் கணக்கான இந்துக்கள் வணங்கிப் போற்றும் ஸ்ரீராம, ஸ்ரீகிருஷ்ண அவதாரங்கள் குறித்து இவ்வளவு கடும் சுடுசொற்களை உபயோகித்து எழுதுவது வருத்தமளிக்கிறது. அதற்கு அவசியமுமில்லை என்பதே எனது பணிவான எண்ணம்.

ஜடாயு on August 11, 2011 at 4:30 pm

// சிவபெருமான் மானுட வடிவில் அருள் புரிய வந்தார் என்பது அவர் பிறந்தார் எனப் பொருள் படாது. ஸ்ரீ ராமன் மற்றும் ஸ்ரீ கிருஸ்ணர் ஆகியோர் பிறந்தனர் மறைந்தனர் என்பது உண்மை.//

ஐயா, இவ்வளவு தத்துவம் அறிந்தவர் நீங்கள்.. இது போன்ற சமயவாதங்கள் எவ்வளவு அற்பத் தனமானது, சிறுபிள்ளைத் தனமானது என்று இன்னொரு முறை படித்துப் பார்த்தால் உங்களுக்கே புலப் படும்.

Neither born, nor dead, he simply walked on earth என்று ஒரு வாசகம் புணேவில் ஓஷோவின் கல்லறையில் எழுதப் பட்டிருந்ததை அங்கு போயிருந்தபோது பார்த்தேன்… பேசாமல் அவரையும் உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் :))

நம்மாழ்வார் போன்ற அதி உன்னத ஆன்மீக நிலையடைந்த மகான், தத்துவ ஞானக் கடல், உங்களாலேயே நகைப்புக்கிடமாகக் கருதக் கூடிய ஒரு விஷயத்தை தன் வாழ்நாள் முழுவதும் ஏத்திப் போற்றிப் பாடி உபதேசித்தார் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? அப்படிக் கூட ஒரு எண்ணம் உங்கள் மனதில் தோன்றுமா என்ன?

இதற்கு மேல் வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை.

மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி
ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்,
பாறிப்பாறி அசுரர் தம் பல்குழாங்கள் நீறெழ, பாய்பறவையொன்று
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்!

– திருவாய்மொழி__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

T.Mayoorakiri sharma on August 11, 2011 at 5:11 pm

மதிப்பிற்குரிய ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு,

தாங்கள் என்னை விழித்து எழுதியிருக்கிற மறுமொழியில் முடிவில் இப்படி இருக்கிறது.

//இப்படியிருக்க “தங்களை வயதிலும் அனுபவத்திலும் முதியவராக மதிக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது இத்தகைய பதிதமான வார்த்தைகள் தங்கள் கையெழுத்தாக வந்திருப்பது பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இப்படிக் கூறியிருக்க வேண்டாம்” என்று அப்பெரியார் குறித்து இங்கு ஒருவராவது கூறினீர்களா? இப்படி இருக்க நமக்கு மட்டும் ஏன் இந்த சமரச போதனை?//

இது என்ன..? முனைவர் பரம சைவ சித்தாந்தி.. அவர் எழுதுவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவரை கிருஷ்ணாவதாரம் தொடர்பில் மரியாதையுடன் எழுதும் வண்ணம் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணன் நம் காதலன் அல்லவா..? அவனை விட்டால் வேறு ஒன்றுமே தெரியவில்லை.. ஹிந்து தர்மத்தின் மூலவிருட்சம் கண்ணன் காட்டிய பாதை (பகவத்கீதை) அல்லவா..?

//மிஷ நரிகள் நாளைக்கு “பலராமனின் கோயிலைத் தான் சைவர்கள் அபகரித்தனர்” என்று சைவ-வைணவ சண்டையை மூட்டினாலும் மூட்டக்கூடும்.//

இது நல்ல நகைச்சுவை… பழைய கோயில்களில் எல்லாம் மூல விமானத்தில் தெற்கு மேற்கு வடக்கு திசைகளில் முறையே சிவ விஷ்ணு பிரம்ம வடிவங்கள் செதுக்கப்பெற்றிருந்தன என்று குறிப்பிடப்படுகிறது.. ஹிந்துகக்ளிடத்தில் இப்படி ஒரு பேதம் பழங்காலத்தில் கிடையவே கிடையாது.. மிஷனரிகள் சொன்னால் கேட்பதற்கு ஹிந்துக்களின் மண்டையில் என்ன கிடக்கிறது..?

ஆக, ஜடாயு அவர்களின் வேண்டுதலை நானும் வழிமொழிகிறேன்… இந்த நல்ல தளத்தில் நல்ல கட்டுரையினை வைத்துக் கொண்டு சண்டையிட வேண்டாம்.. “நாம் அன்பே கடவுள் என்று நம்பும் ஹிந்துக்கள்..”

“சிவஸ்ய ஹிருதயம் விஷ்ணு விஷ்ணுஸ்ய ஹிருதயம் சிவ” என்பதே அடியேனின் நம்பிக்கை..

கந்தர்வன் on August 11, 2011 at 8:58 pm

// மாறிமாறிப் பல்பிறப்பும் பிறந்து எனத் த்ம்முடைய பல்பிறவிகளையே கூறிக் கொண்டாரே அன்றி பரம்பொருளுக்குப் பிறப்புக் கூறவில்லை. //

இதுவும் தவறு. நீங்கள் திருவாய்மொழியை முழுவதும் வாசிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

3615
இதுவோ பொருத்தம் மின்னாழிப்
படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே.
என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர
மதுரைப் பிறந்த மாயனே? – திருவாய்மொழி 8.5.9

3616
பிறந்த மாயா. பாரதம்
பொருத மாயா. நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா.
உன்னை எங்கே காண்கேனே? 8.5.10

2995
சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்,
இறப்பிலெய்துகவெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5

// ஆத்ம மாயை என்பது யாது?//

முன் காட்டிய தமிழ் மொழிபெயர்ப்பு சரியன்று. வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

“ஆத்மமாயை” என்பது “தன்னுடையமாயை” அதாவது “தன்னுடைய ஒப்பற்ற மாயாசக்தி” என்ற பொருளை உடையது. “தாம் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய” என்பதற்கு “என்னுடைய மாயா சக்தியை ஆட்கொண்டு பிறக்கிறேன்” என்பது தான் பொருள். இதில் இங்கும் “பரம்பொருளையே மயக்கி பிறந்துழலச் செய்கிறது” என்று மனம்போனபடி அனர்த்தப்பட இடமில்லை.

sarang on August 11, 2011 at 11:03 pm

கந்தர்வன்

நீங்கள் புரிந்துகொள்ளவில்லை நம் ஆழ்வார் சிவனை நிந்திக்கவில்லை அதனால் தான் பரம்பொருளுக்கு பிறவி இல்லை என்று சொன்னதாக நாம் கற்பனை செய்கிறோம்.

நம் ஆழ்வார் ஒரு அதீதஹர பக்தர் என்பது நாம் எப்படி தெரிந்து கொள்ளலாம்

ஏ ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
இ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார்
மாபாவம் விட ஆறர்க்கு பிச்சை பெய்
கோபாலக் கோலேறி வேறன்றியே

பெரியவர் வயது கூட பாரமால் இன்று கூட கற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் உள்ளது என்னை பரவசத்தில் தள்ளி விட்டது.

//
உங்கள் பாகவதம் வைதீகமானது அன்று அது தாந்த்ரீகமானது. அதில் வேத நிந்தனை உள்ளது என்பது சிவனருட் செல்வர்தம் கருத்து. தேவை எனில் அதனையும் எழுதுவோம்.
//

இப்படி ஒருத்தர் எழுதிகிறார் – அவர் காட்டும் பிரமாணம் பாருங்களேன் எப்பேர்பட்ட ஒன்று

சரி வியாசர் விசமி என்றால் – அவர் செய்த ப்ரம்மசூத்ரத்தை பின் பற்றி எழுதப்பட்ட பாடியங்கள் அனைத்தும் விஷமமா?

சரி வ்யாசர் வேறு பாதாராயனர் வேறு என்று சொன்னால் – அப்புறம் எழுதுவோம் இதை பற்றி

sarang on August 11, 2011 at 11:47 pm

வியாசரை விசமியாக்கும் முன் நாம் யோசித்திருக்க வேண்டிய இன்னொரு விஷயம்.

வேதம் த்ரயி வித்யா என்று தான் இருந்தது அதற்குள் அதர்வண வேதத்தை எதிர்ப்பையும் மீறி சேர்த்தது வியாச பகவான் தான் – அதர்வண வேதத்தில் தானே அதர்வ சிரஸ் இருக்கிறது – அதை வைத்துக் கொண்டு தானே நாம் என்னோமோ சொல்வோமே, அது என்ன?

நாங்க விடுவோமா – இதுக்கும் ஒரு வழி வச்சிருக்கோம் வியாசர் முன்னாடி நல்ல தான் இருந்தார் அப்புறம் புராணங்களை கோர்க்கும் பொது அவர் அறியாமையினால் செய்து விட்டார் என்று சொல்லுவோம் – இதோடு அல்லாமல் இதற்க்கு ஏறிச்சாமி சொன்ன பிரசித்திபெற்ற சான்றையும் நீட்டுவோம்.

நமது சமயப் பற்று எவ்வளவு தூரம் ஆழமாக இருந்தால் வியாசரை விசமி என்போம்.

வியாசர் ஒரு சந்தன தரமி மட்டுமல்ல – அவர் வேடத்தை எப்படி பிரித்துள்ளார் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவோம்

வேதத்தில் உள்ள ரிக்குகளை அவர் பத்தாக பிரிக்கிறார்
191, 43, 62,58,87,75,104,92,14,191,1017

இதை கூட்டினால் mercury, venus, mars, jupiter, saturn இவைகள் சூரியனை சுற்ற எடுக்கும் நாள் கணக்கு வரும்.

இது வெறும் ஒரு உதாரணமே

இப்பேற்பட்ட ஒரு ஞான விஞான வானை விசமி என்று புறம் தள்ள எப்படி தான் மனம் வருகிறதோ. இது பாரத ஞான மரபுக்கே ஒரு பெரும் களங்கம்.

நண்பரே அபிராமி அந்தாதியை வைணவர்கள் கிரமமாக படிப்பதில்லை – ஆனால் அது சொல்லும் விஞானம் அபாரம் அபாரம். அந்த ஒரு விசயத்திற்காகவே அபிராமி பாட்டரை போற்றி புகழ வேண்டும்

விவேகானந்தரே நீங்கள் மறுபடியும் வர மாட்டீரா?

வருத்தத்துடன்

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கதிரவன் on August 12, 2011 at 5:26 am

அன்புடையீர்,

இந்த கட்டுரைத்தொடர் மற்றும் அதன் மீதான கருத்துப்பரிமாற்றங்கள் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், தினமணி கதிர் வார இதழில் வந்த ஒரு கட்டுரையில் , அனுமன் சிவனின் அவதாரம் என்று கட்டுரையாசிரியர் குறிப்பிட்டிருந்தார். உடனே, சைவ சித்தாந்திகள் மட்டுமின்றி , அத்வைதிகளில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை குவித்தனர். மறுப்புக்களையும் அதே பத்திரிகை ஆசிரியர் வெளியிட்டார்.

இந்து மதத்தில் , பல குழுக்களிடையேயும் சண்டை மூட்டி, ரத்தம் குடிக்க மிஷினரிகள் பல பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். அது போதாதென்று இது வேறா ? இந்த நேரத்தில், ஒரு விஷயத்தை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர் இல்லம்( குடில்) உருவாக்கிய சுவாமி சித்பவானந்தா அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகம் , பகவத் கீதை இரண்டுக்கும் உரை எழுதியுள்ளார். தமிழில் அவற்றை விட சிறந்த உரைகளை காண்கிலேன். அவர் சைவ மூர்த்தி ஆவார். ஆன போதிலும் , திருவாசக உரையிலேயே சில பகுதிகளுக்கு உரை எழுதும்போது, சைவத்தை தவிர பிற பிரிவுகளை கண்டிக்கும் சில இடங்களில் , தமது மாற்றுக்கருத்தை பதிவு செய்துள்ளார். இது போன்ற நடுநிலை, வைணவர்களில் பொய்கையாழ்வாரிடமும், மேலும் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களில் சிலவற்றிலும், சிவனும், மாலும் ஒரே சக்தியின் இருவேறு தோற்றங்களே என்ற உண்மை வரையப்பட்டுள்ளது.

சில தீவிர வைணவர்கள், இந்த பாசுரங்களை கூட படிக்காமலும், அவற்றை படித்துவிட்டு சில தவறான விளக்கம் கொடுத்து குறுகிய மனத்துடன் செயல்படுகின்றனர்.

“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ” ( திருவாசகம் 235- திருத்தெள்ளேணம் – 1)

மகாவிஷ்ணு பாற்கடலில் மட்டும் இல்லை, தூணிலும் துரும்பிலும் உள்ளான். அவனே சிவன். சிவனே அவன். அரியும் சிவனும் ஒண்ணு. பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக சூடப்படுபவை ஆகும். பெயர்களை வைத்து அடையாளம் காட்ட வசதி என்பதற்காக மனித இனத்துக்கு வடிவமும், பெயர்களும் தேவைப்படுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், தீவிர வைஷ்ணவ- தீவிர சைவ சண்டை அறியாமையால் நடந்தது. இந்து மதம் என்பது all inclusive ஆகும். When limitations are created, there is no scope for improvement. எல்லைகள் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு ஒரு தடை ஆகும்.

ராமபிரானின் பக்தரான ஸ்ரீ ஹனுமார் போரில் ராமபிரானையே தோற்கடித்தார்.எவ்வாறு ? ராமபிரான் அனுமனின் நெஞ்சில் எப்போதும் நிலைத்திருப்பதால்.

ஒரே சக்திதான் எல்லா உருவத்திலும் உள்ளது, அதுவே பரம்பொருள். விஷ்ணு அல்லது சிவன் அல்லது கணபதி அல்லது சக்தி அல்லது சூரியன் அல்லது முருகன் என்று எந்தபெயரில் வேண்டுமானாலும் இறைவழிபாடு செய்யலாம். எல்லா பெயர்களும், எல்லா உருவங்களும் சமமே ஆகும். ஒரு பெயரும், ஒரு உருவமும் மற்ற பெயர்கள் மற்றும் உருவங்களை விட உயர்வு, மற்றவை தாழ்ந்தவை என்று வாதிடும் மூடர்களை ஒதுக்குவோம்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 12, 2011 at 11:53 am

திரு கந்தர்வன் திரு ஜடாயு திரு பாலாஜி, திரு சர்மா ஆகியோருக்கெல்லாம் அடியேன் சொல்லுவது. சிவ விஷ்ணு சம பாவனை சைவம் அன்று. திருமாலை சைவம் முழுமுதற் பொருளென்று எம் நெறி ஏற்பதில்லை. பெருமாளையும் அவரது அவதாரங்களையும் சிவனருட் செல்வரென்று வணங்குகின்றோம். முத்தி தரும் தன்னிகரில்லா தலைவன் சிவம் எம் இறை. அப்பரம் பொருள் பிறப்பு இறப்பு அற்றவர். உலகெங்கும் உள்ள ஹரே கிருஷ்ண இயக்கத்தினர், ஸ்ரீ வைணவர்கள்(கந்தர்வன் உட்பட) சிவ வழிபாடு முக்தி தராது என்றும் மொழிந்து வருகிறார்கள். இவையெல்லாம் நாம் என்னாளும் ஏற்போம் அல்லோம். ஸ்ரீ பாகவதமும் இக்கருத்துக்களை சொல்வதால் நாம் அதனையும் புறம்பு என்றோம். சிவ விஷ்ணு சமவாதம் பேசும் யாரும் சைவர் மட்டுமல்ல வைணவரும் ஆகார் எனவே அதனை நாம் கொள்வோம் அல்லோம். மாற்றுக்கருத்துக்களை உரைப்பதற்கு சைவர்க்கு உரிமை உண்டு. அதை யாரும் மறுத்தலும் கூடுமோ.
மீனவப்பெண்ணின் மகன் வந்தான் வேதங்களையே வகுத்தளித்தான் என்று வரும் பாடல் வரிகள் எனக்கு என்றும் பிடித்தமானவை. பகவான் வியாசர் வணக்கத்திற்கு உரியவர். இன்றைய நமது ஹிந்து சமயத்தின் அடிப்படையான வேதவாங்மயம் வேத இலக்கியங்களுக்கு அவரது கொடை ஒப்பற்றது. ஆனால் பதிணெண் புராணங்களில் வராத பாகவதம் வேத இலக்கியத்தின் பகுதி அன்று. அது வேததினை நிந்தனை செய்கிறது வேதத்திற்கு விரோதமாக உள்ளது.

ஒன்று. வியாச பகவான் வேதங்கள், பதிணெண் புராணங்கள் இரண்டு இதிகாசங்கள் எழுதியபின் ஞசானம் பெறாததால் பாகவதம் எழுதினார் என்று பாகவததில் உள்ளது. இது வேதமறுப்பாகும்.
இரண்டு பாகவதத்தில் பத்தாவது கண்டத்தி பாகவத தர்மத்தினை மட்டுமே நம்பி மற்ற தர்மங்களை வெறுத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. வேதவேள்விகளையும் பாகவதம் மறுக்கிறது. எனவே பாகவதம் வைதீகமானது அன்று.

sarang on August 12, 2011 at 4:16 pm

சிவஸ்ரீ அவர்களே

//
ஒன்று. வியாச பகவான் வேதங்கள், பதிணெண் புராணங்கள் இரண்டு இதிகாசங்கள் எழுதியபின் ஞசானம் பெறாததால் பாகவதம் எழுதினார் என்று பாகவததில் உள்ளது. இது வேதமறுப்பாகும்.
//

வியாசர் புராணங்களை எழுதவில்லை – தொகுத்தார். புராணங்கள் அவரக்கு முன்பே இருந்தன. ஆதாரம் – ப்ரிஹுதாரன்யாக உபநிஷத். இந்த உபநிஷத் புராணங்களையும் ஒரு இதிகாசத்தையும் வேதத்திற்கு சமமாக சொல்கிறது.

இதை சொன்னவர் யாஜ்யவல்கர் – சுக்ல யசுர் வேதத்தை கொண்டு வந்தவர்.

வியாசர் சாணம் வரதாதால் பாகவதம் எழுதவில்லை – இவ்வளவு செய்தும் ஒரு நெருடல் அவர் மனதில் இருந்தால் பாகவதம் எழுதினார். வேதத்தை பிரித்து என்ன பிரயோஜனம், புராணம் சொல்லி என்ன பிரயோஜனம் – சாக்ஷாத் பரமனின் லீலைகளை எழுதாமல் விட்டோமே என்ற ஆதங்கம்.

வியாசர் பாகவதம் எழுதி அதில் பரமன் யார் என்று சொல்லிவிட்டதால் உள்ள கடுப்பினால் அவரை குறை சொல்ல தேவை இல்லையே அவரை விசமியாக்க அவசியம் தான் என்ன.

உங்களை எதையும் ஒத்துக் கொள்ள சொல்லவில்லை. உங்களுக்குள்ளே என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் விஷ்ணுவை திட்டிக் கொள்ளுங்கள். அனால் தமிழ் ஹிந்து மாதிரி பொது இடங்களில் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் அவ்வளவே. ஸ்ரீமன் கந்தர்வன் ஸ்ரீ வைஷ்ணவர் என்று எப்படி முடிவு கட்டினீர்.? அவர் எழுதிய கட்டுரைகளில் ஒரு இடத்திலாவது மற்ற தெய்வங்களை குறை கூறினாரா.

நான் சைவான் எமக்கு இது உடன் பாடில்லை நான் பேசுவேன் என்பதானாலேயே பொதுவிடங்களில் என்ன வேண்டுமானாலும் பேசும் உரிமை உங்களுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் சந்தோஷம்

வேதத்தினை வேதமே நிந்தனை செய்கிறது – அத்ர மாதா அமாதா பிதா அபிதா, வேதா அவேதா. முக்தி நிலையில் வேதம் வேதமே இல்லை என்று வேதமே சொல்கிறது. இதை நிந்தனை என்று நினைத்தால் உங்கள் இஷ்டம்.
சங்கரர் பகவத் கீதா பாஷ்யத்தில் வேதத்தினால் கடவுளை அறிய முடியாதுஹ் அது சும்மா தான் என்கிறார் – அப்போ அவர் வேதத்தை நிந்தனை செய்கிறாரா – சிவா குருபரர் ஒரு வாக்கியத்தை எடுத்து கொண்டு அப்படி சொன்னாலும் சொல்வார்.
வியாசர் ஒரு நாளும் வேதத்தை நிந்திததில்லை. இப்படி தான் ஒரு வாக்கியத்தை எடுத்து பாரு பாகவதம் வேதத்தை நிந்திக்கிறது என்று சொன்னால் என்ன செய்ய.

ஸ்வாமின் – ஸ்மார்த்தர்களுக்கு வேதா வேதாந்தம் தான் மிக மிக முக்கியமானது (வைணவர்கள் பிரபண்டத்திர்க்கு முக்கியத்துவம் தருகிறார்கள்). அப்படிப்பட்ட ஸ்மார்த்தர்கள் வேதத்தை பாகவதம் குறை கூறுகிறது என்று இருந்தால் அதன் பக்கமே போகமாட்டார்கள் – இன்றைக்கு பாகவத்தில் வெளுத்து வாங்குவது யார் – அத்வைதிகள் தான்.

நீங்கள் சொல்ல வரும் விஷயத்தில் வரும் மற்றொரு லாஜிக் ஓட்டையை பார்ப்போம்.

வியாசர் பாகவதம் எழுதி விட்டார் என்று தானே கடுப்படிக்கிரீர்கள். விஷ்ணு புராணத்தை அவரது அப்பா தான் எழுதினார் – அதை தான் ஆதி புராணமாக கருதி சாடிவைக் புராணங்களில் தலயானதாக கருதி வியாசர் சேர்த்துள்ளார். சிவா குருபரர் விஸ்ணு புராணத்தையும் வெளுத்து வாங்கினாரா – இதுவும் வேதத்திற்கு முரனா – இப்படி 18 புராணங்களிலிருந்து விஷ்ணுவை பற்றி நல்லதாக கூறும் புராணங்களை எடுத்து விட்டால் எஞ்சுவது சிவ புராணமும் லிங்க புராணமும் தான் – ஆகா ரெண்டே புராணங்கள் தான். இப்படி மொத்தமாக பதினெட்டு புராணங்கள் இல்லை ரெண்டு தான் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே – பாகவத்தின் மேல் மட்டும் என்ன கடுப்போ?

நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு பின்புறம் ஆதாரம் இருக்கிறாத என்று ஒரு முறை அலசி விட்டு எழுதினால் நன்று

sarang on August 12, 2011 at 4:28 pm

//
வேதவேள்விகளையும் பாகவதம் மறுக்கிறது. எனவே பாகவதம் வைதீகமானது அன்று.
//

இப்படி தான் சங்கரரும் சொல்கிறார். கிருஷ்ணரும் பகவத் கீதையில் சொல்கிறார் – உங்களது லிஸ்டில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாகவதம் மோக்ஷோபாயம்
உபநிஷத்கள் மோக்ஷோபாயம்
பகவத் கீதா மோக்ஷோபாயம்

வேத வேள்விகள் மோக்ஷோபாயமா?

ஸ்வாமின் – கர்ம காண்டத்தினால் முக்தி நிச்சயம் இல்லை. வேத வேள்விகள் பலன் கருதி செய்யப்படுபவை – மோக்ஷம் பெற ஒரு வேத வேள்வி காட்டுங்கள் பாப்போம். சொர்க்கம் பெற, ராஜ்ஜியம் பெற, ஆரோக்கியம் பேரம், சுத்தி பெற இப்படிதான் வேதத்தின் பூர்வ பாகம் போகிறது. உத்தர பாகத்தை பின்பற்றுபவர் வேதாந்தி. பூர்வ பாகத்தை பின் பற்றுபவர் பூர்வ மிமாம்சர்கள்.

வியாசர் வேதாந்தி, சங்கரர் வேதாந்தி, பகவத் கீதா வேதாந்தம். சுக்ல யசுர் வேத வேள்விகள் வேதாந்தம் அல்ல

ஏன் இப்படி தெரிந்து கொள்ளாமால் ஒரு உதவாத உதாரனத்தை எடுத்துகொண்டு வியாசரை விசமி ஆக்குகிறீர்கள்.

எதாயவது எடுத்து எதாவது அர்த்தம் பண்ணுவது. ஏன் இப்படி. அதை ஆராய வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருப்பதா? இது நக்கு நல்லதல்லவே. யார் எழுதி வைத்தாலும் அதை நம்பி விடுவதா.

கந்தர்வன் on August 12, 2011 at 6:11 pm

//
ஆனால் பதிணெண் புராணங்களில் வராத பாகவதம் வேத இலக்கியத்தின் பகுதி அன்று. அது வேததினை நிந்தனை செய்கிறது வேதத்திற்கு விரோதமாக உள்ளது.
//

வேடிக்கையிலும் வேடிக்கை – சங்கரர், பாஸ்கரர், ராமானுஜர், நிம்பர்கர், மத்வர், சங்கரதேவர், சைதன்யர், வல்லபர், சுவாமிநாராயனர் முதலான ஞானிகளைப் பின்பற்றிவரும் பாரத தேசம் முழுதும் உள்ள சம்பிரதாய வித்வான்கள் கண்டுபிடிக்காத உண்மை இது.

முதல் சுலோகத்திலேயே “ஜன்மாதி அஸ்ய யதோ அன்வயாத் இதரஸ் ச அர்தேஷு அபிஜ்ஞ ஸ்வராட்” என்று தொடங்கி “ஸத்யம் பரம் தீமஹீ” பிரம்ம சூத்திரத்தின் முதல் சூத்திரத்தையும் காயத்ரி மந்திரத்தின் பொருளையும் சேர்த்துப் பாடும் பாகவதத்தை வேத நிந்தை செய்கிறது என்று கூறுவது அபத்தம்.

பாகவதபுராணத்திற்கு பாஷ்யமிட்ட பிராசீனர்களுள் ஸ்ரீதரர் “பதினெட்டு புராணங்களில் இது தான் பாகவதம்” என்று பல சான்றுகளைக் காட்டி வெளுத்துக் கட்டியுள்ளார். அவர் காட்டும் சான்றுகளில் ஒன்று பாத்ம புராணத்தில் உள்ளது –

“அம்பரீஷ சுக ப்ரோக்தம் நித்யம் பாகவதம் ச்ருணு
படஸ்வ ஸ்வ முகேன-அபி யதி-இச்சசி பவ-க்ஷயம்”

பொருள்: “அம்பரீஷராலும் சுகராலும் சொல்லப்பட்ட பாகவதத்தை தினமும் கேள் அல்லது வாயால் சொல் – முக்தி கிட்ட வேண்டும் என்றால்”.

// பகவான் வியாசர் வணக்கத்திற்கு உரியவர். இன்றைய நமது ஹிந்து சமயத்தின் அடிப்படையான வேதவாங்மயம் வேத இலக்கியங்களுக்கு அவரது கொடை ஒப்பற்றது. //

“வேதே ராமாயனே புண்யே பாராதே பரதருஷப
ஆதௌ மத்யே ததா ச அந்தே விஷ்ணுஸ் ஸர்வத்ர கீயதே”

“ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்யா ச புன புன
இதமேகம் சுநிஷ்பன்னம் த்யேயோன் நாராயணஸ் சதா”

“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ருத்ய புஜம் உச்யதே
வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”

என்று மகாபாரதத்தில் இறுதியில் அவர் ‘இது தான் வேதத்தின் துணிபு’ என்று முடிவாகக் கூறியிருப்பது மாத்திரம் பிரமானமாகாது போலும். இதற்கு எப்படி விளக்கம் கூறுவீர்கள் என்பது உங்கள் விவகாரம்.

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

C.N.Muthukumaraswamy on August 13, 2011 at 3:21 am

திராவிட வேதங்களான திருமுறைகள் எது சிவம் என எனக்குக் காட்டுகின்றன. திருஞானசம்பந்தசுவாமிகளது திருமறை “பெண்ணுரு ஆணுரு வல்லாப் பிரமபுரமேய அண்ணல்” என்று கூறுவதாலும், திருநாவுக்கரசு சுவாமிகளது திருமறை,”பெண்ணல்லை ஆணல்லை பேடுமல்லை பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே” என்றும் “விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமதிச் சோதியான்” என்றுங் கூறுதலினாலும் மணிவாசகப் பெருமான் “நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே, காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே” என்று கூறுவதனாலும், அப்பரடிகளின் நின்றதிருத்தாண்டகம் ஸ்ரீருத்திரம்போல சிவம் பிரபஞ்சத்திலுள்ள அறிவுடைப்பொருளகள் அறிவிலாப் பொருள்கள் அனைத்திலும் கலந்துநின்று அவற்றை இயங்கச் செய்து அவற்றினின்றும் வேறாக இருத்தலைப் பகர்தலினாலும், ஆகமம் “சிவம் பராத்பரம் ஸூக்ஷ்மம் நித்யம்” என்று
கூறுதலினாலும்
சிவஞானசித்தியார்,
“உலகினை இறந்து நின்றது அரனுரு என்பது ஓரார்;
உலகு அவன் உருவில் தோன்றி ஒடுங்கிடும் என்றும் ஓரார்;
உலகினுக்கு உயிரும் ஆகி உலகுமாய் நின்றதோரார்” என்று உரைப்பதினாலும்
இன்னும் பல எண்ணற்ற திருவாக்குகளால் சிவம் அகண்டப் பொருள் என்று நான் அறிகிறேன். அருவமெனும் நிட்களப்பொருள். அவ்வகண்டப் பொருளே பரமசிவம். அகண்ட அத்த்தன்மையினால் சிவம் , சிற்பரவியோமரூபம் என்றும் ஞானாகாசம் , பராகாசம் பெயர் பெறும்.

பார்க்கப்படும் உருவப் பொருளெல்லாம் சகளமான கண்டப் பொருளேயாம். கண்டப் பொருள்கள் காலம் இடம் ஆகிய வரையறைக்குட்பட்டனவே. பரசிவன் தன் வியாபகத் தன்மையால் எத்னையும் இருந்தாங்கு அறிவன். முழுவதையும் அறிவன். சகளப்பொருள் எத்துனை ஆற்றலுடையதேனும் சுட்டித்தான் அறியும்.

பலராமன் உருவுடையவன். அவதாரமே எனினும் அவனுடைய வியாபகமும் அறிவும் காலத்தாலும் இடத்தாலும் வரையறைக்குட்பட்டதே. அகண்டவியாபகத்தில் துவந்துவங்கள் இல்லை. ஆனால் பலராமன் அவருடைய சோதரன் கண்ணன் இருவருடைய கருத்தும் ‘க்டவுள்ராயினும் கட்வுள் என்னும் அடாவடித்தனம்’ இல்லாமல் மாறுபடுகின்றன. வஞ்சனையை வஞ்சனையால் சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும் எனும் சாணக்கியத்தனம் பேசும் கண்ணன் கட்சியிலும், அதர்மமாயினும் போரினை அதற்குரிய நீதிமுறைக்கேற்பவே நடத்தவேணும் எனக்காந்தியம் பேசும் பலராமன் கட்சியிலும் மக்கள் பிரிந்து வாதிடலாம். ‘இன்றுபோய் நாளைவா” என்ற இராமனின் கம்பீரமான தோற்றம் கண்ணுக்குப் புலப்படுகின்றது.

தமிழ் மட்டுமே அறிந்த எளியேனது கருத்து அகண்ட வியாபக வஸ்துவான பரசிவம், கண்டப் பொருளான, சகளமான, கால இட வரையறைகளுக்குக் கட்டுப்பட்ட பலராமனின் அம்சமாக இருக்க முடியாது. அப்படிக் கூறுவது தர்க்கத்துக்குப் பொருந்தாது. வியாசமுனி மற்ரும் யாரோ கூறியதாக மறுமொழிகளில் சுட்டிய வட்மொழி சுலோகங்களில் கூறப்பட்டது சைவசித்தாந்தம் கூறும் சிவம் அல்ல. வியாசர் அங்ஙனம் கூறார் என நம்பலாம். பரசிவத்தைச் சிறுமைக் குட்படுத்துவதாகக் கருதிக் கொண்டு யாரோ கூறிய கற்பனாக் கவுரவமே ஆகும். அவ்வளவில் மகிழ்க.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 13, 2011 at 9:25 am

// வியாசமுனி மற்ரும் யாரோ கூறியதாக மறுமொழிகளில் சுட்டிய வட்மொழி சுலோகங்களில் கூறப்பட்டது சைவசித்தாந்தம் கூறும் சிவம் அல்ல. வியாசர் அங்ஙனம் கூறார் என நம்பலாம். பரசிவத்தைச் சிறுமைக் குட்படுத்துவதாகக் கருதிக் கொண்டு யாரோ கூறிய கற்பனாக் கவுரவமே ஆகும். அவ்வளவில் மகிழ்க. //

ஐயா, மூன்று சுலோகங்களும் வியாச பாரதத்தில் உள்ளது.

Bhandarkar Oriental Research Institute வெளியிட்ட Mahabharatam Critical Edition அதனுடைய Electronic version Bhandarkar oriental research institute தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

அது தவிர, ‘Harivamsa edited by Pandit Ramachandrashastri Kinjawadekar and published by the Chitrashala Press in 1936’ என்ற பதிப்பில் மகாபாரத கிலா காண்டமாகிய ஹரிவம்ச புராணப் புத்தகமும் உள்ளது.

இவ்விரு நூல்களிலும் நான் காட்டிய சுலோகங்கள் உள்ளன:

13_013_0020 AloDya sarvazAstrANi vicArya ca punaH punaH
13_013_0021 idam ekaM suniSpannaM dhyeyo nArAyaNaH sadA

இது அனுஷாசணிக்க பார்வை ஸ்லோகம்.
Source: http://bombay.indology.info/cgi-bin/welcome.cgi

vede rAmAyaNe punye bhArate bharatarShabha |
Adau chAnte cha madhye cha hariH sarvatra gIyate ||3-132-95

இது மகாபாரத கிலா காண்டமாகிய ஹரிவம்சம்.
Source: http://mahabharata-resources.org/harivamsa/bhavishyaparva/hv_3_132_mpr.html

satyaM satyaM punaH satyamuddhR^itya bhujamuchyate l
vedashAstrAtparaM nAsti na daivaM keshavAtparam ll 2-15

இதுவும் ஹரிவம்சம்.
Source: http://mahabharata-resources.org/harivamsa/sheshadharma/sheshadharma-chap2.html

இவ்விரு நூல்களும் பாரத தேசத்திலிருந்து பல மூலைகளிலிருந்து பல பழைய Manuscript சுவடிகளிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டது. Critical edition என்றால் எல்லா சுவடிகளிலிருக்கும் சுலோகங்களை மட்டுமே வெளியிடுவது வழக்கம். ஒரு சில சுலோகங்கள் இடைச்செருகலாக இருந்தால் ஓரிரு சுவடிகளில் மட்டுமே காணப்படும். நான் காட்டிய வாக்கியங்கள் அப்படி இல்லை. Critical edition-இல் தான் உள்ளது.

அதுவும் தவிர ஆதி சங்கரர் மேலே காட்டியுள்ளவ்றில் முதல் சுலோகத்தை சஹஸ்ரநாம பாஷ்யத்தில் எடுத்து “இப்படி வியாசர் தீர்வாகக் கூறி முடித்துள்ளார்” என்று கூறுகிறார்:

“ஆலோட்ய ஸர்வஶாஸ்த்ராணி விசார்ய ச புனஃ புனஃ|
இதமேகம் ஸுனிஷ்பன்னம் த்யேயோ ~நாராயணஃ ஸதா||

இதி மஹாபாரதான்தே பகவதா ஶ்ரீவெதவ்யாஸேனோபஸம்ஹ்றுதம்|” – ஆதி சங்கரரின் விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம்.

ஆகையால், அவை வியாசரின் வாக்கியங்கள் என்று கொள்வதே சிறந்தது.

ஆகையால் இவற்றை “கற்பனா கவுரவம்” என்று தள்ளுவதற்கு இடமே இல்லை. இதைச் சொல்பவர்கள் சனாதன தருமத்தை அப்படியே ஒட்டுமொத்தமாகத் தள்ள வேண்டியதுதான்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

C.N.Muthukumaraswamy on August 13, 2011 at 10:41 pm

//இது போக, சம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரம் என்று அருணகிரியார் உள்ளிட்ட பல சைவ சான்றோர்கள் சொல்லியுள்ளார்கள். இதற்கு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சுற்றி வளைத்து சுத்த சிவம், பர சிவம், அபர சிவம், அபர சுப்பிரமணியர் என்ற கருத்தாக்கங்களையெல்லாம் கூறி ஒரு நீண்ட விளக்கமும் அளித்துள்ளார்//

சம்பந்தர் முருகனின் அவதாரம் என உபசாரமாகக் கூறும் வழக்கத்தை அருணகிரிநாதர்தாம் தொடங்கி வைத்தார். அதனை திருப்போரூர் சிதம்பரசுவாமிகள், வடலூர் வள்ள்லார் முதலியோர் பின்பற்றினர். இதில் சுற்றிவளைத்து வியாக்கியானம் கூற வேண்டியதே இல்லை. அவர் ஒரு ஆன்மாவே. அதனை அவரே தம்முடைய திருத்துருத்தித் தேவாரத்தில் கூறுகின்றார்.பத முத்தியில் இருந்த அவரை மையல் செய்து இறைவன் மண்மேல் ஒருபயன் கருதிப் பிறக்கச் செய்தான்.

“துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமாறு இலாத என்னை மையல்செய்து இம்மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய்” என்று சம்பந்தர் தம்மை ஒரு ஆன்மாவாகக் கூறினார். அவர் உமையம்மை அளித்த ஞானப் பாலை உண்டு , வைதிக சைவத்தையும் திருநீற்றொளியையும் பரப்பிய சிறப்பினால் அருணகிரிப் பெருமான் அவரை முருகனாகவே போற்றினார். சம்பந்தரை அவதாரம் எனப் போற்றியது உபசாரமே.
அப்படியே முருகன் திருவவதாரம் செய்தான் எனக் கந்தபுராணம் கூறியதும் கவிநயம் கருதியே அன்றி உண்மையல்ல. ஏனெனில், “செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்” கந்தபுராணம் சைவசித்தாந்தக் கருத்துக்களை உருவகமாகக் கச்சியப்பசிவாசாரியர் பாடிய புராணமே..
சைவநெறியில் பூரண அவதாரம் குறை அவதாரம் என்பனவெல்லாம் கிடையாது. புராணங்களில் அவதாரம் என்ற சொல்லாட்சியெல்லாம் உபசாரம் அல்லது கவிநயம் கருதிச் சொல்லப்பட்டவையே.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

sarang on August 14, 2011 at 9:25 am

இப்படி கூற வியாசர் ஆர் என்பதிலிருந்து வியாசர் இப்படி கூறார் என்று வந்ததற்கு மகிழ்ச்சியே.

வியாசர் செய்ததெல்லாம் waste என்பதிலிருந்து மகாபாரத்ததில் ஊடுரவல்கள் என்று வந்துள்ளது இதுவும் ஒரு வித முன்னேற்றமே – மகிழ்ச்சியே

வியாசரை விட்டு விட்டால் – நமது தர்மம் செம்ம அடி வாங்கும் என்பதை மனிதில் கொண்டாலே போதும்

பலராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஒரு எல்லை உண்டாம் ?

சைவத்திலிருந்து சில உதாரணங்கள் பாப்போம்

சிவா பெருமானுக்கு ஏன் இரண்டு பிள்ளைகள் மட்டும் என்கிறோம். சனத் குமாரரை இருந்த முருகப் பெருமானின் பிறப்பு எப்படி நேர்ந்தது? சிவ பெருமானின் திர்க்குமாரர்கலான கணபதிக்கும் முருகப் பெருமானுக்கும் எல்லைகள் உண்டா? இல்லையா?

சுந்தரர் மானுட உருவம் எடுத்து மீனாட்சியாக அவதரித்த பார்வதி அம்மையாரை மணக்கிறார். சிவனில் பாதி ஷக்தி – தன்னில் பாதி பிரக்ரிதி சம்பந்தத்தால் பிரப்புருகிறாள் (இதற்க்கு சைவ விளக்கங்கள் உண்டு தரப்படும் என்பது நான் அறிந்ததே, இதே போலத்தான் மாற்றுத் தரப்பினரும் சமாடானங்களும் விளக்கங்களும் தருவார்கள் – அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது பண்போடு மௌனம் காக்கும் மனம் நமக்கு வேண்டும்)

சுந்தர் ஏன் ஒரு எல்லைக்கு உட் பட்டு தானும் மானுடராய் (உருவில்) வந்து பார்வதியை மணக்க வேண்டும்.

மலை மகளாய் வந்த பார்வதியையும் இப்படி மானிடராய் வந்து தானே மணக்கிறார். இதெல்லாம் எல்லை இல்லையா.

பலராமனுக்கும் கண்ணனுக்கும் எல்லையா? – அவதாரங்களில் பல வகை – நரசிம்ம, அவதாரம் போன்ர்றவை பிரகிருதி சம்பந்தம் இல்லாமல் தோன்றுபவை. கிருஷ்ண ராமாவதாரங்கள் பிரகிருதி சம்பந்தத்துடன்.

நினைவில் வையுங்கள் வைணவருக்கு கண்ணனை விட சேஷன் தான் முக்கியம்.

சென்றால் குடையாம் இருந்தால் சிம்மாசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் – என்றும்
புனையா மணிவிளக்காம் பூம் பட்டாம் புல்கு
மனையாம் திருமார்க் கரவு

ஊழி முதல்வனையே
பண்ணப் பணித்த இராமானுசன் பரண் பாதமும்
என் சென்னித்தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவு இல்லையே

பரமாத்மா பிரகிருதி சம்பந்தத்துடன் ஒரு உடலில் தன்னை புகுத்தி கொள்ள மாட்டார் என்று எங்காவது வேதம் கூறுகிறதா? (வேதங்கள் மாறாக அவதாரங்களை போற்றி புகழ்கின்றன) உடனே பரமாத்மாவுக்கு பிறப்பில்லை இறப்பில்லை என்று சொல்ல வேண்டாம். வெறும் ஆத்மாவுக்கும் அதுவே செல்லும். வெறும் ஆத்மாவுக்கு கர்மத்தால் பிறப்பு. பரமாத்மாவுக்கு சங்கல்பத்தால் பிறப்பு.

பலராமன் சிவனாரின் அம்சம் இல்லை என்றால் – நாங்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை என்பதுடன் விட வேண்டியது தானே.

அதை விட்டு எல்லா பிரமானங்களுக்கும் எதிரான விஷயங்களை சற்றும் யோசிக்காமல் எழுதுவது தகுமோ? சரி எழுதுகிறோம், இதே போல சைவத்தில் ஏதாவது இருக்குமோ என்றாவது யோசித்தோமா? மேலே சொன்ன இரண்டே சம்பவத்திற்கு சால்ஜாப்பு சொல்லாமல் யோசித்தால் – கிருஷ்ணா பலராம அவதார்ணக்ளும் மீனாக்ஷி சுந்தரரின் தோற்றமும் சமானமேன்று தோன்றும்

நீங்கள் பலராமன் சிவ பெருமான் தான் என்று ஒத்தது கொண்டே ஆக வேண்டும் என்று சொன்னது யார்?

நீங்கலாக எதோ நினைத்துக் கொண்டு நீங்கலாக சேர் இறைத்தால் என்ன செய்வது. இதை மறுக்கப் போய் எவ்வளவு மகான்களை விசமிகள் ஆக்கிவிட்டோம். இதெல்லாம் நமக்கு தேவையா. முரண் படுவதற்கும் மாற்றுக் கருத்தை கூறுவதற்கும் இந்திய தர்மத்தில் அழகிய வழிகள் உண்டு, மொழி நடை உண்டு.

ஏரிச்சாமி விடம் கக்கினால் நாமும் அதை இங்கே cut-paste செய்ய வேண்டிய அவசியம் இல்லை__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

திராவிடன் on August 14, 2011 at 12:29 pm

மாயன்பிரம னுருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து
மாயனாகிய விஷ்ணுவும் பிரமனும் மகேசனும் வேதத்தில் ஆராயும் சதாசிவமும் ஐந்து பஞ்ச மூர்த்திகலாம்
அவ்வையாரை விட நாம் சிறந்த சிவ பக்தர்களா?

அபிராமி பட்டரின் வார்த்தைகள் அன்னையை விஸ்னுவாகவும் (தரங்க கடலுள் வெங்கண் பனி அணைமேல் துயில் கூறும் விழுப்பொருளே, பிரமன் முதாலாய தேவரை பெற்ற அம்மே )விஷ்ணுவின் தங்கையாகவும் (என்றும் மூவமுகுந்தற்கு இளையவளே)
சிவனையும் படைத்தவளாகவும்
தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்களமாம்
(அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்)
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

சிவனை படைத்தவளாக வர்ணித்து அவளை தொழுபவற்கே சிவலோகமும் சித்திக்குமே என கூறுகிறார் நின் புது மலர்த்தாள் தொழுமவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் (சிவலோகமும் சித்திக்குமே)
பட்டர் நிலை நாட்டுவது விஷ்ணுவும் அவளும் ஒன்று அவள் சிவனின் வாம பாகத்தை பெற்றவள் அவளை தொழுதாலே சிவலோகம்.
சைவ வைணவ இணைப்பாக படுகிறது.
என்னவோ முன்னோர்கள் ரசித்த மதம் இன்று தாருமாரகிவிட கூடாது.

வைணவர்களின் சைவ மதத்தின் மீதான இணக்கத்துக்கு சில எடுத்துகாட்டுகள்

குடந்தை ஸ்ரீ சக்கரபாணி சுற்று பிரகாரத்தில் விநாயகர், கோபுரத்தில் விநாயகர்.மற்றும் இங்கு சக்கரத்தழ்வருக்கு சிவனுக்கு உரிய வில்வம் அர்ச்சனையும் உண்டு
குடந்தை ஸ்ரீ ராமசாமி கோயிலில் சுற்று பிரகாரத்தில் விநாயகர்
நாச்சியார்கோயில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் அன்னை காளிதேவியின் ஐம்பொன் விக்ரகம்
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரெங்கநாதன்.
நேற்று முன்தினம் அன்னை காவிரிக்கு சீர்கொடுத்த ஸ்ரீ ரெங்கநாதன்
திரு நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்) கோயிலில் முன்புற சுவரிலேயே தல வரலாற்றில் குறிப்பிட பட்டுள்ள வாசகம் சிவனும் விஷ்ணுவும் ஒன்றே (நீங்களும் விஷ்ணுவும் ஒன்றே என்பதை அறியாமல் நந்தி செய்த பிழையை நீங்கள் மன்னிக்க வேண்டுமென வியாசர் சிவபெருமானிடம் முறையிடுவது) இங்கு நந்திதேவர் பெருமாளை வழிபடுகிறார்.
இவற்றை நான் குறிப்பிட காரணம் ஸ்ரீ வைனவத்தார் பிற சமயங்கள் மீது வெறுப்பு கொள்ளாதவர் என தெரிவிக்கவே__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

C.N.Muthukumaraswamy on August 14, 2011 at 12:58 pm

அன்பரே சாரங், நீங்கள்மாற்றுத் தரப்பினரும் சமாடானங்களும் விளக்கங்களும் தருவார்கள் – அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது பண்போடு மௌனம் காக்கும் மனம் நமக்கு வேண்டும் என்று சரியாகவே கூறினீர்கள்.

கிருஷ்ணனின் பெருமை பலராமனின் பெருமை, அர்ச்சாவதாரத்தின் சிறப்பு அர்ச்சைகள் அருள் வடிவம் என்னும் இவைபற்ரி எழுதுங்கள் நானும் படிப்பேன். நானும் எழுதுவேன் பாராட்டுவேன் இன்பப்படுவேன். அதனைவிட்டு தெரியாத ஒன்றைபற்றித் எதோகூறித் திசை திருப்ப வேண்டாம்.

மீண்டும் சொல்லுகின்றேன். திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள் அனைத்துக் கற்பனையே. சிவனுக்கு உமை என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் என்பதெல்லாம் அகண்டப் பொருளை அனுபவத்திற்குக் கொண்டுவர, உருவுடைய மனுடப் பிறவி அறிந்துகொள்ளப் பெரியவர்கள் மேற்கொண்ட உத்தியே. புராணக் கதைகளை உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர்.

சிவநெறியும் திருமால் வழிபாடும் ஆகிய சைவம் வைணவம் இரண்டும் தமிழர் மேற்கொண்ட ஆன்மீக நெறிகளே. குறிக்கோள்வேறுவேறு. சைவம் பரமுத்தி எனக் காட்டுவது சிவவியாபகத்தில் ஆன்மா இரண்டறக் கலத்தல். அதனையே வள்ளுவர் ‘மற்றீண்டு வாரா நெறி’ என்பர்.
வைணவத்தில் பெருமாளுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் நித்தியசூரிகளாய்க் கைங்கரியம் செய்துகொண்டு பெருமாளின் முகாரவிந்தத்தில் இன்புறுதல் என்பதாக அறிகின்றேன்.

இந்த குறிக்கோளை நோக்கியே சைவசாத்திரங்களும் வைணவசாத்திரங்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்லும். தோத்திரங்களும் அவைகளுக்கேற்பவே அமையும்.

சைவநெறியில் சிவயோக்ம் சிவபோகம் எனக் கூறுதல் போல விஷ்ணு யோகம் விஷ்ணுபோகம் எனக் கூறும் நிலைகள் இல்லை. ஆயினும் இருநெறிகளும் முழுதும் வேறுபட்டுள்ளவோ எனின் அவ்வாறும் இல்லை. யோக நரசிம்மர் எனும் வடிவமும் வைணவப் பெரியோர்களில் ஏகாங்கிகள் என்போர் நிலையும் வைணவத்திலும் ஒருவகை யோக நெறி இருப்பதைக் காட்டுகின்றன.

சைவம் அந்தர்முக வழிபாட்டை வலியுறுத்தினாலும் அதற்குரிய பகிர்முக வழிபாட்டைக் கைவிடாதிருக்கவும் வலியுறுத்ட்த்துகின்றது. பகிர்முகவழிபாடு என்றால் அர்ச்சையும் வடிவமும் கட்டாயம் வேண்டும். அதன் சிறப்பைப் புகழும்போது இலக்கியமும் அதனைத்தொடர்ந்து கற்பனையும் செழுமை பெறுகின்றன. எனவே சிவநெறி முழுவதும் அருவ வழிபாட்டைக் கொண்டிராமல் அர்ச்சைவழிபாட்டையும் கொண்டுள்ளது.

இரண்டு நெறிகளையும் அதன்போக்கிலேயே விளக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். இதுவே தமிழர் நெறி.

இதனை விட்டுவிட்டுச் சநாதனநெறி என்றுகூறி வருணப்பாகுபாட்டையும் சாதிப்பிரிவினையையும் பிராமணமுதன்மை(ஆதிக்கம்?) யையும் வலியுறுத்திக் கூறிக் கூறி இந்து சமுதாயத்தைப் போதுமான அளவுக்குப் பலமிழக்கச் செய்தாயிற்று. பாடியங்களிலும் சைவம் என்பது அவைதிக வழிபாட்டு நெறிகளாகிய காளாமுகம் காபாலிகம் என்று காட்டிச் சிறுமைப்படுத்தியாயிற்று. இன்றும் அகோரிகள்தாம் சிவநெறியாளர்கள் என்றுவோரும் நம்மிடையே உள்ளனர். இப்படியெல்லாம் பேசிப்பேசிச் சைவர்களைப் பிராமணவெறுப்பாளர் வடமொழி வெறுப்பாளர் கூட்டத்தில் தள்ளியாயிற்று. மீண்டும் வியாசர் மொழி இது, இதுதான் சநாதனம் இந்தச் சநாதனத்தை ஏற்றுக் கொள்பவன்தான் இந்து ஆவான் என்றமுடிவுக்குச் சிலமறுமொழிகள் தள்ளுகின்றன.
மீண்டும் சொல்கின்றேன். சநாதனம் என்றபெயரால் குழ்ப்பம் விளைக்க நினைப்பவன் யாரேயாயினும் விஷமிதான். அப்படிக் கூறும் நூல் தேவபாஷையாகக் கூறப்படும் வடமொழியில் இருந்தாலும் சமுதாயத்துக்கு ஊறு விளைப்பதுவேயாம் .

நீங்கள் ஆசிரியர் குழுவுக்கு அவ்வப்பொழுது உறுதியான ஆலோசனைகளை வழ்ங்குகின்றீர்கள். தமிழ் இந்து என்ற தளத்தின் பெயர் நீக்கிவிட்டு “சமஸ்கிருதசநாதனம்” என்று பெயர்மாற்றம் செய்துவிட்டீர்கள் என்றால் என்னைப் போன்ற சநாதனப்புறமான பாஷண்டிகள் அவைதிகர்கள் இது நம் இடமல்ல என்று ஒதுங்கி அப்புறம் சென்றுவிடுவோம்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

திராவிடன் on August 14, 2011 at 8:28 pm

அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||

மம பரம் பா⁴வம் = என்னுடைய மேலான இயல்பை
அஜாநந்த: மூடா⁴ = அறியாதவர்களான மூடர்கள்
மாநுஷீம் தநும் = மனித உடலை
ஆஸ்²ரிதம் பூ⁴தமஹேஸ்²வரம் = தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான
மாம் அவஜாநந்தி = என்னை புறக்கணிக்கிறார்கள்

மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.

சிவார்ப்பணம்

C.N.Muthukumaraswamy on August 15, 2011 at 7:40 am

//மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.//

திராவிடன் என்ற பெயர் தாங்கியுள்ள பெரியீர் யாரெனத் தெரியாவிட்டாலும் இப்பெயர் தாங்கியுள்ளமையால் சில உண்மைகளையும் வெளியிடுகின்றீர். தமிழன் என்னும் பெயர்தான் திராவிடன் என மருவியது என்பர் மொழி நூலாசிரியர்கள். திராவிடன் என்று முகத்தைக் காட்டினாலும் கீர்வாணர் என்றே புலப்படுகின்றது.

உங்களுடைய மேற்குறித்த வாசகம் எனக்கு முழுச் சம்மதம். ஆனால் இது யாரைக் குறித்த்ச் சொல்லப்பட்டது? சிவோஹம் பாவனையில் சிவமாகவே திகழும் சீவன் முத்தர்களை மானுடச்சட்டை தாங்கியுள்ள காரணத்தால் நம்மைப்போல சாதரனமனிதனாக்க் கருதுவது மூடம்.

சிவம் தன் சொரூப நிலையிலிருந்து பக்குவப்பட்ட ஆன்மா ஆட்கொள்ள குருவாகத் தடத்த வடிவங் கொண்டு வரும் . குரு மானுடச் சட்டைதாங்கி இருத்தலால் அவரை நம்மைப் போன்ற சாதாரணமனிதராகக் கருதுவது மூடம்.

நீங்கள் காட்டியிருக்கும் வடமொழிச் சுலோகம் கண்ணனின் கீதையெனில் அதுவும் எமக்கு உடன்பாடே.. கண்ணன் உபமன்யு முனிவரிடம் பாசுபத தீக்கை பெற்று, சிவோஹம் பாவனை கைவரப் பெற்றவர். சிவவியாபகத்தில் அருணகிரிப் பெருமான் கூறியதைப் போல,” எனது யானும் வேறாக எவரும் யாதும் யானாகும் இதயபாவனாதீதத்தில்” சர்வ வியாபக நிலை கூடும் என்பது பெரியோர் வாக்கு. கண்ணபெருமான் அந்நிலையி விசுவருபம் காட்டிக் கூறியதில் எனக்கு மட்டுமன்றி சைவர்களுக்குக் கருத்து வேறுபாடுஇருக்க ஏது இல்லை. அருச்சுனனுக்குச் சிவத்தைக் காட்டிய குருவாகவும் கண்ணபிரான் இருந்தார் என்பதைத் தமிழ்ப் பாரதம் கூறும்.
“குறியொடு தாமழியும் நெறியதனால் சிவமேயாய் நின்றிடுவர்
என்றால் நேசத்தால் தொழுதிடு நீ” (சிவஞானசித்தியார்)
“முருகன் தனிவேல் முனிநம் குருவென்று அருள்கொண்
டறியார் அறியுந் தரமோ?” (கந்தரநுபூதி )

எனவே, சிவஞானியரையும் குருவையும் சாதாரண மனிதர்கள் எனக் கருதுவது மூடம் யாரும் சொல்லித் தெரியவேண்டிய புதிய செய்தியல்ல.

சிவார்ப்பணம். சிவமயம்

சிவஸ்ரீ. விபூதிபூஷன் on August 15, 2011 at 10:45 am

ஸ்ரீ பாகவதம் அதாவது ஹரிகதைக் கேட்டாலே முக்தி என்று சொல்வார்களே அதனை பிரமாணமாக சிரமேல்கொள்வர் வைணவர்கள். ஆயினும் பரம வைதீகரான சைவர்கள் புராணங்களில் ஒன்றென்றோ வேத சம்மதமானது என்றோ ஏற்பதில்லை. ஆதி சங்கரர் பாகவதத்தினை ஏற்கவில்லை. அனால் பின்னல் வந்த ஸ்மார்த்தர்கள் சிலர் அதனை ஏற்றால் என்ன அதனை நாம் ஏற்பதில்லை. சைவர்கள் ஸ்ரீ சங்கரரை ஏற்பதில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டோம். ஸ்ரீ சங்கரரின் பரம்பொருள் நிர்குணம் என்பதையோ உபாசனை வழிபாடு சித்தசுத்தி மட்டும் நல்கும் முக்தி நல்காது என்கிற அடிப்படைக் கருத்தை சைவச்சார்யார்கள் ஏற்பதில்லை.
சைவக்கருத்துக்களை வலியுறுத்தும் பொருட்டு சைவர்களாகிய நாம் விஷ்ணு துவேசம் ஏதும் செய்யவில்லை. சில வைணவ ச்மார்த்தக் கோட்பாடுளை ஏற்க முடியாது என்கிறோம்.
திரு சாரங்கன் அவர்கள் அதர்வ வேதம் மட்டுமல்ல வேதம் அணைத்தலும் சிவபரமியத்திற்கு ஆதாரம் உண்டு. சிவச்சின்னங்கலான திரு நீறு, கண்டிகை(அக்கமணி ருத்ராக்ஷம் ), சிவநாமம், சிவலிங்கம், வில்வம் இவையாவும் வேதத்தில் உள்ளவை. ஆக அதர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு நாங்கள் வைதீகம் என்று எமது சமயத்தை நிலை நிறுத்தவில்லை. வைதீகத்தில் முதல் சமயம் சைவம் என்றே ஆன்றோர் புகன்றதை ஓர்க.
புராணங்கள் பதினெட்டில் பெரும்பான்மை சிவ பரமியத்தினைக் கூறுவன. ஸ்லோகங்களின் எண்ணிக்கையிலும் சிவ புராணங்களின் எண்ணிக்கையே மொத்தத்தில் அதிகம்.
வேதத்தினைக்க் காட்டிலும் பாகவதம் உயர்ந்தது என்று பாகவதத்தில் சொல்வதால் அது அவைதீகம் என்பது ஆன்றோர் கருத்து. வேதம் மூலம் ஆதலின் அதனைத்தாழ்த்திய பாகவதம் ஏற்புடையது அன்று என்பர் எமனோர்.
கர்மகாண்டம் மோக்ஷத்தினை அருள வல்லது அன்று என்பதை அறிவோம். அனால் பாகவதம் மோக்ஷோபாயம் எமக்கன்று. ஸ்ரீ கீதையை கொள்வோம் அனால் ஸ்ரீ கிருஷ்ண பரம் என்பதை அன்றி அவருக்கும் அகமாயுள்ள சிவத்தையே. உபநிடதங்களுள் சிவ பரமியத்தை பல பல நிலை நாட்டுவன என்பதை உணர்க.
ஸ்ரீ வியாசரை விசமி என்று முன் மொழிந்தது நான் அன்று. மாறாக சிவத்தினை தாழ்வாக கூறுவோர் விசமி என்றோம். அவ்வளவே.
சிவம் மானிட வடிவம் தாங்கி வந்தாலும். திரு முருகன், ஸ்ரீ விநாயக வடிவம் கொண்டாலும் அவர்க்கு எல்லை இல்லை ஏன் எனில் அது தோற்றமே. அன்றி மானிட யோனியில் நிகழ்ந்த பிறப்பு அன்று.
திரு கந்தர்வன்
ஸ்ரீ பாகவதம் காயத்திரி மற்றும் பிரம்மசூத்திரம் ஆகியவற்றை போற்றுகிறது என்பது உண்மையாக இருக்கலாம். அனால் பிரம்மசூத்திரத்திற்கு பாகவதம் விருத்தம் என்று ஸ்ரீ சங்கரர் கூறுகிறார். ஸ்ரீ காயத்ரி மந்த்ரத்தில் வரும் பர்கோ தேவன் என்பது பரம் பொருளாகிய சிவபெருமானை குறித்தது என்பர் எமது ஆச்சாரியார்கள்.
உங்கள் பல ஆச்சாரியார்களில் பாகவத தந்திரத்தினை போற்றுவோர் ஸ்ரீ சங்கரர் தவிர அனைவரும் வைணவர்கள். ஸ்ரீ சங்கரர் எங்கே பாகவததை மோக்ஷ உபாயம் என்று கூறுகிறார். ஆதாரம் காட்டுங்களேன்.
சரி பத்ம புராணத்தில் எப்படி சுகர் வந்தார் . அவர் வியாசரின் புதல்வர். அவரே பரீக்ஷித்திற்கு பாகவதம் சொன்னார் எனும் போது அவர் பிறப்பதற்கு முன்னே பத்ம புராணம் எழுதப்பட்டிருக்கும் அன்றோ. இது இடைச்செருகல் என ஒர்க.
ஸ்ரீ வியாசர் மகா பாரதம் மற்றும் ராமாயணத்தில் விஷ்ணு பரத்தினை கூறுகிறார் என்கிறீர்கள். மாபாரதமும் ராமாயணமும் சிவ பரத்தை செப்புவன என்று மகான் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் தனிதனியே நூல் எழுதி நிரூபித்தார். ஸ்ரீ கிருஷ்ணரும் புருஷோத்தமனான ஸ்ரீ ராமனும் சிவ பூஜை செய்தனர். சிவபெருமானின் திருவருளாலே பாசுபதம் என்னும் ஆயுதத்தாலே பாண்டவர் வென்றனர் பாரதப் போரில். ஸ்ரீ ராமரே சிவகடாக்ஷத்தால் ராவணனை வென்றோம் என்று ஸ்ரீ சீதப் பிராட்டியிடம் கூறுகிறார் புஷ்பகவிமானத்தில் அயோத்தி திரும்பும் சமயத்தில் . இந்த இருபெரியோர்களும் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்யும் சாம்பவர்களாக விளங்கினர் என்பதும் உண்மை. இவர்கள் மறந்தும் புறன் மனை தொழாது விஷ்ணு வழிபாடு செய்தார்கள், திருமண்காப்பு, துளசி மாலை மட்டுமே அணிந்தார்கள் என்பதற்கு நீங்கள் ஆதாரம் காட்டலாமே.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 15, 2011 at 11:51 am

திரு சிவஸ்ரீ அவர்களே,

//ஸ்ரீ சங்கரரின் பரம்பொருள் நிர்குணம் என்பதையோ உபாசனை வழிபாடு சித்தசுத்தி மட்டும் நல்கும் முக்தி நல்காது என்கிற அடிப்படைக் கருத்தை//

இது சுத்த தவறு. சங்கரர் பிரம்ம சூத்திரத்தின் கடைசி சூத்திரத்தில் “சகுண உபாசனை, நிர்குண உபாசனை இரண்டுமே முக்தி நல்கும்” என்று கூறியுள்ளார்:

And as those also who rely on the knowledge of the qualified Brahman in the end have recourse to that (Nirvâna), it follows that they also do not return.–The repetition of the words, ‘Non-return, according to scripture,’ indicates the conclusion of this body of doctrine.
(ஆங்கில மொழிபெயர்ப்பு)

கீதா பாஷ்யத்திலே,

“ஏவஂ பகவதஃ ஸத்யப்ரதிஜ்ஞத்வஂ புத்த்வா பகவத்பக்தேஃ அவஷ்யஂபாவி மோக்ஷபலம் அவதார்ய பகவச்சரணைகபராயணஃ பவேத் இதி வாக்யார்தஃ” (18.56) இதில் சங்கரர் கூறுவது “இப்படி பகவானுடைய வார்த்தைகள் உண்மையே என்று திடமாக நம்புவது, பகவத் பக்தியினால் அவசியம் மோட்சம் கிடைக்கும் என்று புத்தி பண்ணிக்கொண்டு பகவானுடைய பாதங்கள் ஒன்றையே புகலிடமாகப் பற்றி இருக்க வேண்டும் என்று வாக்கியார்த்தம்”.

அவருடைய சாக்ஷாத் சீடராகிய சுரேஸ்வரரும் “த்வாந்தச்சிதே நமஸ்தஸ்மை ஹரயே புத்தி சாக்ஷினே” அதாவது அஞானமாகிய திரையைக் கிழிக்கும் அரிக்கு – புத்திக்கு சாட்சியாய் இருப்பவனுக்கு நமஸ்காரம் என்று சகுண மூர்த்தியை மங்கள சுலோகத்தில் புகழ்கிறார். இது தோத்திர நூலில் அல்ல, அத்வைதத் தத்துவத்தை விளக்கும் தத்துவ நூலாகிய நைஷ்கர்ம்ய சித்தியில் தான் வருகிறது.

எங்குமே “சகுண உபாசனை வெறும் சித்த சுத்தியை மட்டுமே தருவது” என்று கூறியதில்லை. எங்கே ஒரு வாக்கியம் காட்டுங்கள் பார்ப்போம்?

//அனால் பிரம்மசூத்திரத்திற்கு பாகவதம் விருத்தம் என்று ஸ்ரீ சங்கரர் கூறுகிறார்//

சுத்தம் – ‘பாகவதர்கள்’ என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டாலே அது ஸ்ரீமத் பாகவத புராணம் தானா? சங்கரர் இங்கு பாஷ்யத்தில் பாஞ்சராத்ரம் பற்றிக் கூறும்பொழுது பாகவத தருமங்களுள் ஒன்றாகிய பாஞ்சராத்திர மதத்தின் “வியூக நிலை விளக்கத்தை” மாத்திரம். எங்குமே “பாகவத புராணம் பிரம்ம சூத்திர விருத்தம்” என்று கூறவில்லை. “பாஞ்சராத்திரத்தில் இறைவனை வழிபடும் முறைகள் சடங்குகள் எல்லாம் வைதீகமே. அதை நாங்களும் பின்பற்றுவோம். ஆனால், வியூக நிலை குறித்தும், ஓரிரு சந்கிதைகளில் இருக்கும் சில வசனங்களைக் குறித்தும் எங்களுக்கு மாறுபாடு உண்டு” என்று தான் கூறியுள்ளார். படித்துத் தான் பாருங்கள். பல முறையில் அதை இத்தளத்தில் சுட்டியாச்சு:

It is true, we reply, that a part of the system which we are going to discuss agrees with the Vedânta system, and hence affords no matter for controversy; another part of the system, however, is open to objection, and that part we intend to refute.

The so-called Bhâgavatas are of opinion that the one holy (bhagavat) Vâsudeva, whose nature is pure knowledge, is what really exists, and that he, dividing himself fourfold, appears in four forms (vyûha), as Vâsudeva, Sankarshana, Pradyumna, and Aniruddha. Vâsudeva denotes the highest Self, Sankarshana the individual soul, Pradyumna the mind (manas), Aniruddha the principle of egoity (ahankâra). Of these four Vâsudeva constitutes the ultimate causal essence, of which the three others are the effects.–The believer after having worshipped Vâsudeva for a hundred years by means of approach to the temple (abhigamana), procuring of things to be offered (upâdâna), oblation (îgyâ), recitation of prayers, &c. (svâdhyâya), and devout meditation (yoga), passes beyond all affliction and reaches the highest Being.

இனி கவனியுங்கள்:

Concerning this system we remark that we do not intend to controvert the doctrine that Nârâyana, who is higher than the Undeveloped, who is the highest Self, and the Self of all, reveals himself by dividing himself in multiple ways; for various scriptural passages, such as ‘He is onefold, he is threefold’ (Kh. Up. VII, 26, 2)’, teach us that the highest Self appears in manifold forms. Nor do we mean to object to the inculcation of unceasing concentration of mind on the highest Being which appears in the Bhâgavata doctrine under the forms of reverential approach,&c.; for that we are to meditate on the Lord we know full well from Smriti and Scripture.

இதில் “பாகவத தருமத்தால் மோட்சம் கிட்டுகிறது” என்பதை சங்கரர் எங்குமே கண்டிக்கவில்லை.

கந்தர்வன் on August 15, 2011 at 11:59 am

சிவஸ்ரீ அவர்களே,

// சரி பத்ம புராணத்தில் எப்படி சுகர் வந்தார் . அவர் வியாசரின் புதல்வர். அவரே பரீக்ஷித்திற்கு பாகவதம் சொன்னார் எனும் போது அவர் பிறப்பதற்கு முன்னே பத்ம புராணம் எழுதப்பட்டிருக்கும் அன்றோ. இது இடைச்செருகல் என ஒர்க. //

சரி, மகாச்சாரியார் ஒருவர் காட்டும் பத்ம புராண வசனத்தை இடைச்செருகல் என்று ஓரக.

// ஸ்ரீ வியாசர் மகா பாரதம் மற்றும் ராமாயணத்தில் விஷ்ணு பரத்தினை கூறுகிறார் என்கிறீர்கள். //

மகாபாரதத்தைக் காட்டியும், ஆதி சங்கரர் பிரமாணமாக எடுத்திருப்பதைக் காட்டியும் “கூறினார்” என்று சொல்லாமல் “கூறினார் என்று நான் சொல்கிறேன்” என்று எழுதும் அளவுக்கு நீங்கள் போய் விட்டீர்கள். உங்களுக்கு ஒரே ஒரு சவால் தான்…

//
13_013_0020 AloDya sarvazAstrANi vicArya ca punaH punaH
13_013_0021 idam ekaM suniSpannaM dhyeyo nArAyaNaH sadA

இது அனுஷாசணிக்க பார்வை ஸ்லோகம்.
Source: http://bombay.indology.info/cgi-bin/welcome.cgi

vede rAmAyaNe punye bhArate bharatarShabha |
Adau chAnte cha madhye cha hariH sarvatra gIyate ||3-132-95

இது மகாபாரத கிலா காண்டமாகிய ஹரிவம்சம்.
Source: http://mahabharata-resources.org/harivamsa/bhavishyaparva/hv_3_132_mpr.html

satyaM satyaM punaH satyamuddhR^itya bhujamuchyate l
vedashAstrAtparaM nAsti na daivaM keshavAtparam ll 2-15

இதுவும் ஹரிவம்சம்.
Source: http://mahabharata-resources.org/harivamsa/sheshadharma/sheshadharma-chap2.html
//

அந்த மூன்று மகாபாரத சுலோகங்களுக்கு நீங்கள் என்ன சமாதானம் கூறுகிறீர்கள்?

கந்தர்வன் on August 15, 2011 at 12:37 pm

திரு சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களே,

//ஸ்ரீ வியாசர் மகா பாரதம் மற்றும் ராமாயணத்தில் விஷ்ணு பரத்தினை கூறுகிறார் என்கிறீர்கள். மாபாரதமும் ராமாயணமும் சிவ பரத்தை செப்புவன என்று மகான் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் தனிதனியே நூல் எழுதி நிரூபித்தார். ஸ்ரீ கிருஷ்ணரும் புருஷோத்தமனான ஸ்ரீ ராமனும் சிவ பூஜை செய்தனர். சிவபெருமானின் திருவருளாலே பாசுபதம் என்னும் ஆயுதத்தாலே பாண்டவர் வென்றனர் பாரதப் போரில். ஸ்ரீ ராமரே சிவகடாக்ஷத்தால் ராவணனை வென்றோம் என்று ஸ்ரீ சீதப் பிராட்டியிடம் கூறுகிறார் புஷ்பகவிமானத்தில் அயோத்தி திரும்பும் சமயத்தில் . இந்த இருபெரியோர்களும் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்யும் சாம்பவர்களாக விளங்கினர் என்பதும் உண்மை. இவர்கள் மறந்தும் புறன் மனை தொழாது விஷ்ணு வழிபாடு செய்தார்கள், திருமண்காப்பு, துளசி மாலை மட்டுமே அணிந்தார்கள் என்பதற்கு நீங்கள் ஆதாரம் காட்டலாமே.//

அப்பைய தீட்சிதர் குறித்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? விஷ்ணு அபரத்துவம் பேசும் அவருடைய ஒரு சில நூல்களில் சங்கரருடைய கொள்கைகளைப் பலவாறு கண்டித்துள்ளார். இதற்கான சான்றுகளை அடுக்கடுக்காக என்னால் காட்ட முடியும்.

ஆனால், அதே ஸ்ரீ அப்பைய தீட்சிதர் “சித்தாந்த லேச சங்கிரகம்” என்ற நூல் ஒன்று எழுதியுள்ளார். அதில் ஆதி சங்கரருடைய கொள்கைகளையும், விஷ்ணு பக்தராகிய சர்வஞ்ய முனிகள் உட்பட பல பிராசீன அத்வைத ஆச்சாரியார்களுடைய கொள்கைகளையும் புகழ்ந்து “இது தான் வேதாந்தம்” என்று எழுதியுள்ளார். அதில் மங்கள சுலோகத்தில் கூட கங்கையை விஷ்ணுபாத தீர்த்தமாகப் பாடியுள்ளார். ஸ்ரீராமனுக்கு பிருகு சாபம் வெறும் நிமித்தம், வெறும் நாடகம், அதை வைத்து அவரை சீவன் என்று சொல்ல முடியாது என்று அழுத்திக் கூறியுள்ளார்.

Victorious is the auspicious birth-destroying discourse (the Sutrabhasya) , which issues from the blessed lotus face of the Bhagavat-pada, has for its sole purport the non-dual Brahman, and is diversified a thousand-fold on reaching the (numerous) ancient preceptors (who expounded it), in the same way as the river (Ganga), which, issuing from the foot of Visnu, 1 is diversified on reaching different lands. (1)

இது அந்நூலின் முதல் சுலோகம் ஆதி சங்கர பகவத்பாதரை முழுமனதுடன் பூஜிக்கும் சுலோகம்.

4-223 Nor is there the contingence of fresh bondage for the released, if they attain the state of the Lord, since ignorance, association with misery and so on are declared for the Supreme Lord in such incarnations as Raghunatha ; for, that has for purport only the acting of these (ignorance etc.,) by the Lord, like an actor, in order to uphold the rule made by Himself as to the non-futility of the curses of sages, and to create faith somehow in the curse of Bhrgu etc.; otherwise, there would be conflict with the Scriptural declaration of His being eternally released, unrestrictedly free, without an equal or superior and so on.

இதிலிருந்து அப்பைய தீட்சிதர் பல விவாதங்களுக்குப் பிறகு ஒரு பட்சத்திலிருந்து இன்னொரு பட்சத்திற்குச் சென்றிருக்கிறார் என்று தான் தெரிகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

திராவிடன் on August 15, 2011 at 12:42 pm

தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே ——56

மதிப்பிற்குரிய முனைவர் ஐயா இந்த சிவவாக்கியத்திற்கு தாங்களின் பதில் என்ன?
////திராவிடன் என்ற பெயர் தாங்கியுள்ள பெரியீர் யாரெனத் தெரியாவிட்டாலும்////
ஐயா நான் உங்களைவிட மிக சிறியவன்

சிவஸ்ரீ. விபூதிபூஷன் on August 15, 2011 at 1:05 pm

ஸ்ரீ கந்தர்வன் கூறுகிறார்
// ஏதாவது தத்துவ சிடுக்கு, விவாதம் என்று இறங்கி விட்டு அது வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் இப்படி சாதிப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை என்று வேறு களம் இறங்க வேண்டாம் //
முனைவர் முத்துகுமாரசுவாமி அய்யா எந்த கடும் சொல்லை யும் சொல்லவில்லை. திரு கந்தர்வன் அவர்களது பார்வையின் நீட்சியே வர்ண அடுக்கினை ஆதரிக்கும் போக்கு.தமிழை தாழ்த்தும் போக்கு. அனைவருக்கும் சாதிகளுக்கு அப்பால் பொது என்பது அவரது முழக்கம்.அவரை சனாதனத்தை நிராகரிக்க செய்வோம் என்று சொல்லவைத்தது உங்கள் வாதத்தின் தொனி . அவரது கோணம் சரிதான். நீங்கள் அதற்கு இல்லை வர்ண ஏற்றத்தாழ்வை ஏற்பதில்லை நாம் என்று கூறலாமே.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தெளிவு படுத்தியதற்கு நன்றி. பலரையும் வைதீகத்திலிருந்து வெளியேற்றவா இணையத்தில் கட்டுரை எழுதுகிறீர்கள். அவர் சொன்னதை மறுத்து இல்லை அப்படி யாரும் செய்யவில்லை என்று உங்களால் நிருபிக்க முடியுமா. இன்றும் வேதத்தைக் காட்டி மாந்தருள் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவோர் உள்ளனரே. உபநயனம் வேதியர் குலத்தில் பிறந்தவர்க்கும் மட்டுமே என்ற நிலைதானே. தெய்வத்தமிழ் மொழியை நீச்ச பாசை என்று மொழிந்தனரே.
ஐயா அவர்கள் எந்த வருத்தமும் தெரிவிக்கவேண்டாம். சிவபெருமானை பலராமன் என்ருகூரியதைவிட அவர் சொல் இனிமையாகவே உண்மையாகவே உள்ளது.
போற்றுதலுக்குரிய முனைவர் ஐயா அவர்களுக்கு
தமிழரிஞர் பலரும் வேதம் சிவ பெருமானை ஏற்கவில்லை என்றும் மதிக்கவில்லை என்று வடமொழியோடு வேதத்தை நிராகரித்து தமிழ் மறைகள் அனைத்துக்கும் போதும் என்று முழங்கு கின்ற இக்காலத்தே. தமிழர் சமயம் வைதீக சமயம் என இணையத்தில் எழுதியது நீங்கள் அன்றோ. சாதிக்கு அப்பால் வேதம் அனைவருக்கும் பொது வென்று முழக்கம் செய்தீர். தமிழ் வழிபாட்டை குடமுழுக்கை தமிழ் மறைகளை சிரம் மேற்கொண்ட அறிஞர் நீங்கள். உங்கள் கட்டுரை வேதத்தையும் தமிழ் மறைகளையும் ஒருங்கே போற்றி வாழ்வது எங்கனம் என கேட்கும் எமக்கு விடையாயின உங்கள் கருத்துக்கள். வேதாந்த நூல்கள் வேத ஒளியின் கம்பீரம் சிவ நாமங்களில் தலையான திருவைந்தெழுத்து இவை வேதத்தில் இருப்பதால் வேதத்தை ஏற்றோம். சிவம் மட்டுமே அம்ருதம் என்பது வேதம்.
சிவபரமபொருளை கண்டவர்கள் அவரோடு சோதியில் கலந்தவர், மரணமிலாப் பெருவாழ்வு பெற்றோர் தமிழிலே இறைவனை வழிபட்ட அறுபத்து மூவர் என உணர்ந்தோம். தாய் மொழி தமிழ் இல்லை ஆதலால் தந்தை மொழியென தமிழைகொண்டோம். வடமொழியில் மந்திரங்கள் சில உரைத்தாலும் பெரிதும் தமிழ் வழி வழிபடுகின்றோம். ஆயினும் அறிஞர் நூல் தேடுங்கால் தமிழ் சமஸ்கிருதம் ஒருபக்கம் சாயகின்றோரைக்காண்கிரோம், இரண்டையும் ஏற்றுப் போற்றுவோரை அறிகிலோம் . உங்கள் கட்டுரையே எம்முடைய நிலைப்பாட்டிற்கு உரம் சேர்த்தது. உங்கள் மறுமொழி பலவும் தமிழ் வழிபாடையும் வேத நெறியையும் ஒருங்கே போற்றின.
ஆகவே உங்களை எம்மைப் போன்றவர் இணைய சைவாசிரியராக கொள்கிறோம்.
நீங்கள்
// இதுதான் சனாதன தருமம் என்றால் அதனைத் தலைமுழுக வேண்டியதுதான்.//
என்று சொல்லக்கூடாது. இது அடியேனுக்கு வருத்தம் அளிக்கிறது.இவர்தம் முன்னவர்கள் இப்படி சொல்லியே நம் நாட்டை நெறியை குன்றச்செய் தனர் பலர் வெளியேறினர் என்பதும் உண்மையே.

இது மட்டும் தான் சனாதனம் என்று சொல்ல இவர்கள் யார் என்றே கேட்க வேண்டும். சைவசித்தாந்திகள் புராணங்களை எப்போதும் பிரமாணங்கள் எனக்கொள்வதில்லை. அவ்வளவு இவர்களுக்கு போதும்.

 

C..N.Muthukumaraswamy on August 15, 2011 at 1:15 pm

அன்புள்ள திராவிடன் அவர்களே, திராவிடன் என்ற பெயருக்குத் தாங்கள் கூறிய விளக்கம் சரியானதே. பிராகிருத மொழிகளான திராவிடம் முதலியவற்றின் உயர்ந்ததாகக் கருதப்படும் மொழி கீர்வாணம்.
உங்களுடைய சமயம் பற்றி எனக்கு எந்த முடிவும் கிடையாது. ஆனால் உங்களியறியாமலேயே சைவசித்தாந்தக் கொள்கையைக் கூறியிருக்கின்றீர்கள்.
//அந்த சிவமே விஷ்ணுவாகவும் இருந்து கிருஷ்ணனாக வந்திருக்கலாம் சுருக்கமாக கைலாயத்திலுள்ள சிவன் கூட சிவத்தின் ஒரு மூர்த்தமே என்பதே என் முடிவு.// இந்த சிந்தனை சரியானதே.

சிவம் எனக்கூறப்பட்டது சொரூபநிலை. கயிலாயத்தில் உள்ளதாகக் கூறப்படுவது தடத்தம்தான்.

சிவமே திருமால் (விஷ்ணு))ஆகவும் உளது. இதற்குத் திருமுறைகளிலேயே சான்று உளது. திருஞானசம்பந்தரின் தேவாரம் சிவமே பிரமனாக இருந்து படைப்புத் தொழிலைச் செய்வதை,
“பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே” என்றும்,
திருமாலாக இருந்து காத்தற்றொழிலைச் செய்வதை,
“அலைகடல் நடுவறி துயிலமர் அரிஉரு வியன்பர னுறைபதி
சிலைமலி மதிசிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே” என்றும்,
உருத்திரமூர்த்தியாக சங்காரத் தொழில் செய்வதை,
“முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே” என்றும் பாடுகிறார்.

சொரூபசிவம் உயிர்களுக்கு அருளும்பொருட்டுக் கொள்ளும் மாகேஸ்வர வடிவங்களுள் ஒன்று திருமால் வடிவம். எப்படி அம்பிகை விநாயகன் கந்தன் என்பன சிவமூர்த்தங்களோ அப்படியே திருமாலும் சிவமூர்த்தமே . இவற்றிற்ற்கும் சிவத்திற்கும் பேதமில்லை. அதனால் தான் சிவன் திருக்கோயில்கலில் சிவபரம்பொருளின் அர்வுருமூர்த்தமாகிய சிவலின்கத் திருமேனி மூலவராகக் கருவறையிலும், விநாயகன், கந்தன், அம்பிகை, திருமால் ஆகிய மூர்த்தங்கள் தனித்தனிக் கோயில்களிலும் வைத்து வழிபடப் பெறுகின்றனர். திருக்கயிலையிலிருந்து சைவம் சப்தகுருமார்களின் வழியே வந்தது. சைவ சப்த குருமர்களின் துதி,
“திருமால் இந்திரன் உபமனியன் தபனன்நந்தி
செவ்வேள் ஆதி
தருமமுது குரவருக்கும் தனதருளால் ஆசிரியத்
தலைமை நல்கி
வரும் எவர்க்கும் முதற்குருவாய் மெய்ஞ்ஞான முத்திரைக்
கைம்மலரும் வாய்ந்த
உருவழகும் குறுநகையும் காட்டியருள் தரும் சிவனை
உளத்தில் வைப்பாம்”

சிவம் திருமாலாக முதற்குருவாக இருந்து ஞானநெறியைப் போதித்தது.
மீண்டும் சொல்லுகின்றேன். சிவபெருமானுக்கும் பிறப்பிறப்பில்லை; திருமாலுக்கும் பிறப்பிறப்பில்லை.சிவன் எந்த தாய்தந்தையர்க்கும் மகவாய்ப் பிறந்ததில்லை. திருமாலும் எந்த தாய் தந்தையர்க்கும் மகவாகப் பிறந்ததில்லை.. சிவமே திருமால். சிவபெருமான் உலகத்தைக் காத்தல் தொழில் செய்வதற்காகத் தானே திருமாலாகத் திருமேனி கொள்கிறார். சைவசமயத்தில் சிவபேதங்கள் கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருமால் வடிவம். அனைத்துவடிவமும் சிவமே.
சிவசகஸ்ரநாமங்களில் 241 ஆவது திருநாமம் ‘வைஷ்ணவாய நம்:’ என்பதாம்.
‘ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோரை இகழ்வோர் ஏழுபிறவியிலும் நரகில் உழல்வார்’ என்பது அருணகிரிமுனிவர் வாக்கு.

இவை சைவமரபில் திருமாலுக்கு உரிய சிறப்பான இடங்கள். திருமால் வழிபாட்டைச் சைவம் தனிச் சமயமாகக் கருதவில்லை. திருமால் வழிபாடும் சிவவழிபாடே.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

சிவஸ்ரீ. விபூதிபூஷன் on August 15, 2011 at 1:24 pm

திரு கந்தர்வன் பஞ்சராத்திரமும் அவைதீகம் தான். பிரம்மா சூத்திரம் அப்படித்தான் சொல்கிறது. அதை திரித்துப் பொருள் கொள்வது தான் பிரம்மசூத்திரம் பஞ்சராத்திரத்தை ஏற்பதாக கூறுவது என்று ஸ்ரீ கண்டாச்சார்யார் கூறுகிறார். ஸ்ரீ வைணவ சின்னங்களாக பஞ்சராத்திராகமம் கூறும் சக்ரான்னிகம்(முத்திரை வைத்தல் திருவடி சம்மந்தம் என்று போற்றப்படுவது), துளசி மாலை, திருமண்காப்பு இவை எதுவும் வேதத்தில் இல்லை. சிவச்சின்னங்கள் யாவும் வேதம் போற்றுவது.

நீங்கள் மேற்கோள் காட்டும் மகாபாரத சுலோகங்களை யான் காண இயலவில்லை. முக்கியமானது இங்கே பரம பொருள் பற்றியது. திருமாலே பரம என்றால் சிவ ஆராதனையை ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள் வழிபடுவது ஏன். அவர்கள் ஏன் பரம வைணவர்களாக உங்கள் ஆகமங்கள் கூறும் படி வாழ்ந்துக் காட்டவில்லை என்று விளக்குங்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 15, 2011 at 8:44 pm

அன்புள்ள சிவஸ்ரீ அவர்களே,

// ஸ்ரீ வைணவ சின்னங்களாக பஞ்சராத்திராகமம் கூறும் சக்ரான்னிகம்(முத்திரை வைத்தல் திருவடி சம்மந்தம் என்று போற்றப்படுவது), துளசி மாலை, திருமண்காப்பு இவை எதுவும் வேதத்தில் இல்லை. //

உங்களுக்கு வைணவ சின்னங்கள் குறித்து சந்தேகங்கள் இருக்கின்றன. சந்தேகங்கள் இருப்பதில் தவறல்ல. நியாயமே. அந்த நியாயமான சந்தேகங்களுக்கு நான் விட கூற மகிழ்கிறேன்.

Source: http://www.stephen-knapp.com/ramanuja.htm

In the Sruti it is said:

sa te visnorabja-cakre pavitre[2]

janmambodhim tartave carnaninra

mule bahvordadhate’nye purana

linganyamge tavakanyarpayanti

“To free themselves from the ocean of repeated birth and death, the best of men decorate their bodies with the symbols of the lotus and cakra of Visnu.

aibhirbayamurukramasya cihnai rahnkita loke subhaga bhavamah

tad visno paramam padam ye’dhigaccanti lacchata[3]

“Just as those who go to the holy abode of Visnu are decorated with the conch, lotus, disc, and club, so shall we also wear these marks and thus attain that divine abode.

upavit-adi-baddharyah sanka-cakradayas tatha[4]

brahmanasya visesena vaisnavasya visesatah

“Brahmanas should not only wear the sacred thread, but they should also decorate their bodies with the conch, lotus, cakra, and club of Visnu,thus identifying themselves as Vaisnavas.

hare padakrtim atmano hitaya madhye cchidram-urdhva-purndram[5]

yo dharayati sa parasya priyo bhavati sa punyavan bhavati sa muktiman bhavati.

“One who decorates himself with the tilaka markings resembling the lotus feet of Visnu with a space in the middle becomes dear to the Paramatma, becomes pious, and attains liberation.”

[2] From the ®k-Ba›kala-sakha

[3] From Atharva-Veda

[4] From the Vayavya Upa-purÅna, a section of the BrahmaˆÎa-sa˜hita.

[5] From the Atharva-Veda.

// அவர்கள் ஏன் பரம வைணவர்களாக உங்கள் ஆகமங்கள் கூறும் படி வாழ்ந்துக் காட்டவில்லை என்று விளக்குங்கள்.//

ஸ்ரீராமன் தான் பட்டாபிஷேகம் ஏற்கும் முந்தைய நாள் ஸ்ரீமான் நாராயணனை ஆலயத்தில் வழிபடுவது ஆதி காவ்யமாகிய ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் உள்ளது:

gate purohite raamaH snaato niyatamaanasaH |
saha patnyaa vishaalaakshyaa naaraayaNamupaagamat || 2-6-1

1. purohite=(After) the family priest; gate= left; raamaH= Rama; snaataH= took bath; upaagamat= (and) meditated; naaraayaNam= on Narayana; niyatamaanasaH= with undistracted mind; saha= along with; vishaalaakshyaa= the wide eyed; patnyaa= wife (Seetha).

After Vasistha left, Rama took bath and meditated on Lord Narayana with undistracted mind along with his wide-eyed wife, Seetha.

pragR^ihya shirasaa paatraM havishho vidhivattadaa |
mahate daivataayaajyaM juhaava jvalitaanale || 2-6-2

2. tadaa= then; pragR^ihya= taking; paatram= vessel; havisho= of clarified butter; sirasaa= on head; vidhivat= as per ordinance of the scriptures; juhova=(Rama) offered; mahate daivataaya= to the great lord Vishnu; aajyam= the clarified butter; jvalitaanale= (by dropping it ) into blazing fire.

Taking the vessel with clarified butter on his head as per scriptures, he offered to Lord Vishnu the clarified butter, by dropping it into the blazing fire.

sheshhaM cha havishhastasya praashyaashaasyaatmanaH priyam |
dhyaayannaaraayaNaM devaM svaastiirNe kushasaMstare || 2-6-3
vaagyataH saha vaidehyaa bhuutvaa niyatamaanasaH |
shriimatyaayatane vishhNoH shishye naravaraatmajaH || 2-6-4

3, 4. naravaraatmajaH= The prince Rama; aashaasya= desiring; aatmanaH= his own; priyam= good; praashya cha= ate; sesham= remainder; tasya havishaH= of that clarified butter; dhyaayan= meditating; devam= on Lord; naaraayaNam= Narayana; bhuutvaa= becoming; vaagyataH= one of restrained speech; niyatamaanasaH= with regulated mind; sishye= slept; vaidehyaa saH= along with Seetha; svaastiirNe= on properly laid; kusha saMstare= bed of Kusa grass; shriimati aayatane= in a splendid temple; vishhNoH= of Lord Vishnu.

Rama ate the remainder of clarified butter after finishing the sacrifice, which he performed for his own good, silently meditated on Lord Narayana with controlled mind and slept along with Seetha on a properly laid bed of Kusa grass in a splendid temple of Lord Vishnu. *

ekayaamaavashishhTaayaaM raatryaaM prativibudhya saH |
alaJNkaaravidhiM kR^itsnaM kaarayaamaasa veshmanaH || 2-6-5

5. saH= He; prativibudhya= woke up; ekayaama avashishhTaayaam= with three hours of night yet remaining; kaarayaamaasa= (and) made done; kR^itsnam= entire; alankaaravidhim= required decoration; veshmanaH= of the house .

Rama woke up three hours before dawn and caused to complete the entire decoration of the house.

tatra shR^iNvan sukhaa vaachaH suutamaagadhavandinaam |
puurvaaM sandhyaamupaasiino jajaapa yatamaanasaH || 2-6-6

6. tatra= there; sR^iNvan= listening to; sukhaaH= gladdening; vaachaH= verses; suutamaagadha vandinaam= of professional reciters like Suta; Maagadha and Vandi; upaasiinaH= worshipping; puurvaam sandhyaam= the early sunrise(on Gayatri); jajaapa= meditated ; yata maanasaH= with undistracted mind.

Listening to the pleasing verses of professional reciters, he worshipped the early sunrise and meditated on Gayatri* with an undistracted mind.

Verse Locator

tushhTaava praNatashchaiva shirasaa madhusuudanam |
vimalakshaumasaMviito vaachayaamaasa cha dvijaan || 2-6-7

7. tushhTaava= (He) praised; madhusuudhanam= Lord Vishnu; praNataH= by bowing; shirasaa= the head; vimalakshouma samviitaH= by wearing pure silk clothes; vaachayaamaasa= got valedictory text recited by; dvijaan= Brahmans.

He praised Lord Vishnu by bowing his head before Him. By wearing pure silk clothes, he got valedictory text recited by Brahmans.

இது வால்மீகி ராமாயணம் கூறுவது. நீங்கள் கேட்ட

// அவர்கள் ஏன் பரம வைணவர்களாக உங்கள் ஆகமங்கள் கூறும் படி வாழ்ந்துக் காட்டவில்லை என்று விளக்குங்கள்.//

என்ற கேள்விக்கு இவை விடையாக இருக்கிறதென்று தெரிகிறது. சந்தேக பரிகாரங்களைக் கேட்டு தீர்த்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

க்ருஷ்ணகுமார் on August 17, 2011 at 12:27 am

\\\\\\\\தாங்கள் வருத்தப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. தீவிர வைணவமும், தீவிர சைவமும், இப்போதே இவ்வளவு பிரச்சினை என்றால் அந்த காலத்தில் நம் மக்களை என்ன பாடு படுத்தி இருப்பார்கள் என்பதை தயவு செய்து நினைத்துப்பாருங்கள்.

தன்னுடைய முறையே உயர்வு என்ற கருத்தும், மற்றவை தன்னைவிட சிறிதாவது குறைவு என்ற கிறுக்குத்தனமுமே, இதுபோன்ற தேவை இல்லாத விவாதங்களுக்கு காரணமாகிறது.

நான் ஒரு முருக பக்தன். என்னைப்பொருத்த மட்டில், பகவத் கீதை, திருவாசகம், திருப்புகழ், தேவாரம் எல்லாமே ஒரே கடவுளைப்பற்றிய கருத்தாக்கமே என்பதை நான் உணர்கிறேன்

இந்த சண்டைகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விடும். ஏனெனில் சண்டை போட இவர்கள் இருக்கமாட்டார்கள். வருங்கால இளைய தலைமுறை இவர்களை குப்பை கூடையில் தூக்கி போட்டுவிடும்..\\\\\\\\

அன்பார்ந்த ஸ்ரீ கதிரவன், தயவு செய்து இவ்வாறு கூறாதீர்கள். வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கைப்பாருங்கள் :-

“ஓதுவித்தவர் கூலிகொடாதவர்” என்ற திருப்புகழில் நரகுழலத்தக்காரின் பட்டியல் தருகிறார் அருணகிரிப்பெருமான்.

“ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை …… யிகழ்வோர்கள்

ஏக சித்ததி யானமி லாதவர்
மோக முற்றிடு போகித மூறினர்
ஈன ரித்தனை பேர்களு மேழ்நர …… குழல்வாரே”

இந்த திருப்புகழில் இரண்டு விஷயங்கள்.

முதலில், “ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை யிகழ்வோர்கள்”.

வள்ளல் அருணகிரிப்பெருமான் இதைக்கடுமையாக கண்டிப்பதால் எக்காரணமாயினும் நாம் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்களை இகழ்தல் என்பதில் அறவே ஈடுபடக்கூடாது. வள்ளல் பெருமான் வாக்கை மீறக்கூடாதல்லவா.

“தீவிர வைணவமும், தீவிர சைவமும், இப்போதே இவ்வளவு பிரச்சினை என்றால்”- நாம் பார்க்கும் கோணம் தான் தவறு என்பது என் அபிப்ராயம்.இதே திருப்புகழில் வள்ளல் பெருமான் சொல்லும் இன்னொரு விஷயம் பாருங்கள். “ஏக சித்த தியானமி லாதவர்”. தீவ்ரதை என்பதில் தோஷம் பார்க்காது குணத்தைப்பாருங்கள். தீவ்ரமான சைவரோ அல்லது வைஷ்ணவரோ நாம் நினைப்பது போல் சண்டையில் மட்டும் ஈடுபடுபவர் என்பது மிகத் தவறான கருத்தாகும். ஆசுதோஷியான சிவபெருமானிடத்தும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலிடத்தும் ஒரு க்ஷணம் கூட தம் சித்தத்தை அகற்றாதார் தீவ்ரமான சைவரும் வைஷ்ணவரும். நாம் வழிபடுவது முருகனாயிருக்கட்டும் மாரியம்மனாயிருக்கட்டும் அல்லது வேறு எந்த தெய்வமாகத்தான் இருக்கட்டுமே. தீவ்ரமான சைவ வைஷ்ணவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இந்த ஐகாக்ரியத்தைத் தான். அத்தெய்வத்திடம் மனம் ஆழ்ந்து ஈடுபட்டால் நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிடினும் சரி மனதகலாமல் ஓரிடத்திலேயே ஐக்யமுறும். நா மும் புறந்தொழாதார் ஆகிவிடுவோம்.

இகழ்ச்சி என்பது அவகுணம். என்னிடம் சற்று கூட தங்களிடம் சற்று குறைவாக என இந்த அவகுணம் இருக்கலாம். ஆனால் இகழ்ச்சி என்பது அவகுணம் என்று அறிந்து களைய முயற்சிக்கலாமே.அதுவும் அடியார்கள் பக்ஷத்தில் அறவே இகழ்தலையொழித்தல் என்றிருக்கலாமே.

\\\\\\ஆதி சங்கரர் பாகவதத்தினை ஏற்கவில்லை. அனால் பின்னல் வந்த ஸ்மார்த்தர்கள் சிலர் அதனை ஏற்றால் \\\\\\

அன்பார்ந்த ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களின் மேற்கண்ட முதல் விஷயத்திற்கு ஸ்ரீ கந்தர்வன் உத்தரமளித்துள்ளார்.

இரண்டாவதான தங்கள் ப்ரஸ்தாபத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்திலேயே உத்தரமுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் யாருக்கு மேலானது?

ஸ்ரீமத் பாகவதம் புராணம் அமலம் யத் வைஷ்ணவானாம் ப்ரியம்
யஸ்மின் பாரமஹம்ஸ்யமேவம் அமலம் ஞானம் பரம் கீயதே

பரமஹம்ஸர்கள் அறியத் தக்க ஞானத்தை வழங்கும் பாகவதம் வைஷ்ணவர்களுக்கு ப்ரியமானது.

நிகம கல்பதரோர் களிதம் பலம்
சுகமுகாத் அம்ருத த்ரவ சம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம்
முஹுரஹோ ரஸிகா: புவி பாவுகா:

சுகமுனிவரின் வாக்கால் அறியப்பட்ட ஸ்ரீமத் பாகவதம் என்ற அமுதம் வேதம் என்ற மரத்தினின்று கிடைத்த பழம். முழுதும் சாறாகவேயான பழம். பூலோகமெங்கும் உள்ள ரசிகர்காள் இதைப்பருகுவீர்.

வேதத்தை விபாகம் செய்த வ்யாசரின் புத்ரர் வாக்கு எப்படிப்பொய்க்கும். கடல் கடந்து த்வீபாந்தரத்தில் நம் தாய் மதமான ஹிந்து மதத்தை எப்போதோ இழந்தவர்கள் இன்று ருசித்து ருசித்து வாசிக்கும் மஹாபுராணம் ஸ்ரீமத் பாகவதம்.

சைவர்களுக்கு ஸ்ரீமத் பாகவதம் ஏற்பில்லை என்று தாங்கள் கூறலாம்.

ஆனால்,

“பின்னல் வந்த ஸ்மார்த்தர்கள் சிலர் அதனை ஏற்றால்” ………..தவறென்ன?

ஆனால் பின்னால் வந்த ஸ்மார்த்தர்கள் என்பது புரியவில்லை. வைதிகர் அனைவரும் ஸ்மார்த்தர்களே. இதில் பின்னால் என்ன முன்னால் என்ன. சைவரானால் என்ன வைஷ்ணவரானால் என்ன ஸ்மார்த்தரானால் என்ன ஆபஸ்தம்பமோ போதாயனமோ ஆஸ்வலாயனமோ த்ராஹ்யாயணமோ எல்லோருக்கும் ஒன்று தானே. ஸ்மார்த்தர் என்பது மட்டுமின்றி மேலதிகமாக ஆகம ப்ரகாரம் தீக்ஷை எடுத்து சிலர் வைஷ்ணவர் சிலர் சைவர். தவறிருந்தால் திருத்துங்கள்.

ப்ரம்ம ஸூத்ரமும் பாகவதமும் ஒரே போல் “ஜன்மாத்யஸ்ய யத:” என்றாரம்பிப்பதும் அந்த மஹாபுராணத்தின் மேன்மையைக்காட்டுகிறது.

\\\\\\\\\உலகெங்கும் உள்ள ஹரே கிருஷ்ண இயக்கத்தினர், ஸ்ரீ வைணவர்கள்(கந்தர்வன் உட்பட) சிவ வழிபாடு முக்தி தராது…………..\\\\\\\\\

சொல்லியிருக்கலாம். கௌடிய வைஷ்ணவர்கட்கு முக்யமான ஹரிபக்தி விலாஸம் என்ன சொல்கிறது பாருங்கள்:-

வைதிகர்கட்கு ஸ்ம்ருதிமுக்தாபலம் (வைத்யனாததீக்ஷிதீயம்) எப்படியோ அப்படியே கௌடிய வைஷ்ணவர்கட்கு ஹரி பக்தி விலாஸம்.
இயற்றியவர் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவின் சிஷ்யரான ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமியவர்கள். இவர் மஹாப்ரபுவிற்கு தக்ஷிணபாரதத்தின்று கிடைத்த ரத்னம். இதற்கு இன்னொரு சிஷ்யரான ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமியவர்கள் திக்தர்ஷனீ டீகா என்றொரு வ்யாக்யானமும் எழுதியுள்ளார்.

இருபது விலாஸங்களாய் (பாகம்) அதிவிஸ்தாரமாய் வைஷ்ணவர்களின் தினசர்யை, தீக்ஷாமுறை, நித்யோத்சவ, பக்ஷோத்சவ மாஸோத்சவங்களை சொல்லிக்கொண்டு போகுங்கால் பதினான் காவது விலாஸத்தில் பால்குன மாதத்தில் சிவராத்ரி வ்ரதத்தைப் பற்றி சொல்கிறார்.

சிவராத்ரி வ்ரதமிதம் யத்யபி ஆவஸ்யகம் ந ஹி
வைஷ்ணவானாம் ததாபி அத்ர ஸதாசாராத் விலிக்யதே (186)
சிவராத்ரி வரதம் க்ருஷ்ண சதுர்தஸ்யாந்து பால்குனே
வைஷ்ணவை: அபிதத் கார்யம் ஸ்ரீக்ருஷ்ணப்ரீதயே ஸதா (187)

வ்யாக்யானமெழுதிய ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமியவர்களும்
நனு வைஷ்ணவானாம் கிம் சிவராத்ரிவ்ரத கரணேன? தத்ர லிகதி . ஸ்ரீ க்ருஷ்ண ப்ரீதய இதி. என எழுதியுள்ளார்.

புறந்தொழா வைஷ்ணவர்கட்கு சிவராத்ரி வ்ரதம் ஆவஸ்யகமில்லாவிடினும் ஸதாசாரப்படி நியமிக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீக்ருஷ்ணருக்கு ப்ரீதி என்ற படிக்கு வைஷ்ணவர்கள் சிவராத்ரி வ்ரதம் அனுஷ்டிக்கவேணும்.

மேலும்,

மத்பக்த: சங்கரத்வேஷி மத்த்வேஷி சங்கரப்ரிய:
உபௌதௌ நரகௌ யாதௌ யாவச்சந்த்ர திவாகரௌ (191)

சங்கரரை த்வேஷிக்கும் ஹரிபக்தனும் ஹரியை த்வேஷிக்கும் சங்கர பக்தனும் சந்த்ர ஸூர்யர்களிருக்கும் வரை நரகுழல்வார்.

வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கும் இங்கே நினைவுக்கு வருகிறது

ஹயசீர்ஷ பஞ்சராத்ரத்தில் இருப்பதாய் குறிப்பிடுகிறார்.

ய: சிவ: ஸோஹமேவேஹ யோஹம் ஸ பகவான் சிவ:
நாவயோரந்தரம் கிஞ்சிதாகாஸானிலயோரிவ (192)

எது சிவமோ அது நான்; எது நானோ அது சிவம். கார்ய காரண நிமித்தமாய ஆகாசத்திற்கும் வாயுவிற்கும் எப்படி பேதம் என்பது அபேத துல்யமோ அப்படியே ஹரிஹரர்களிடையே பேதமில்லை. (சைவர்கள் மறுக்கலாம்)

ஆரம்பத்தில் என் உத்தரத்தில் எழுதிய ஸ்லோகம்

பஹ்வ்ருச பரிசிஷ்டத்தில் இருப்பதாய சொல்கிறார் :

சிவாய விஷ்ணு ரூபாய சிவரூபாய விஷ்ணவே
சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணோஸ்து ஹ்ருதயம் சிவ: (193)

ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமியவர்கள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த பெருமகனார். பின் ஸ்ரீ க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபுவிடம் மனம் ஈடுபட்டு அவர் வழி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

\\\\\\\\\\மீண்டும் சொல்லுகின்றேன். திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள் அனைத்துக் கற்பனையே. \\\\\\\\\
ஐயன்மீர், முத்துக்குமார ஸ்வாமி மஹாசய, மேற்கண்ட வாசகம் குழப்புகிறது. திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள் அனைத்தும் கற்பனையே என்றால் வாதபுரீசரும் நரியும் பரியும் பிட்டுக்கு மண் சுமந்ததும் பிரம்படி பட்டதும் அதைப்போற்றி அடியார்கள் தேவபாஷைகளாம் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் எழுதி வைத்த திருவிளையாடற்புராணம் மற்றும் சிவலீலார்ணவம் இவையெல்லாம் வெறும் கற்பனையா? வெறும் கற்பனை மட்டும் தானா?__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 17, 2011 at 8:16 am

அன்புள்ள டேவிட் நவீந்திரன்,

// இயேசுவின் அருளால் நான் அவரின் தந்தையை , ஆதிதேவனை , மூல கடவுளை ,போற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களை படித்து புண்ணியம் பெற போகிறேன். இந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்! //

உங்களுடைய ஆர்வம் என்னை நெகிழ வைத்தது. இருப்பினும் உங்கள் மேற்கூறிய கூற்றில் எனக்குக் குழப்பங்கள் இருக்கின்றன.

ஆழ்வார்களுடைய பாசுர வியாக்கியானங்களை படித்து அதில் உள்ளவற்றை அப்படியே ஏற்பது தான் சரி. ஆழ்வார்களை இயேசுவுடன் சம்பந்தப்படுத்தி ‘ஆழ்வார்கள் கிறிச்துவத்திற்குக் கடன்பட்டிருக்கின்றனர்’ என்று பறை அறைய பல மிஷனரிகள் காத்திருக்கிறார்கள். ஆகையால் ஆழ்வார் பாசுரத்தை, ‘நான் மோசேவின் ஆணைக்கு எதிராக எதையும் கூறப்போவதில்லை’ என்று மோசேவை புகழ்ந்த இயேசுவுடன் சம்பந்தப்படுத்தி அனுபவிப்பது பாவமாகும்.

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர் தாம் நரகில் – வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே! எப்பொழுதும் நீ அவர்பால்
சென்று அணுகக் கூசித் திரி!

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து நாம் அதனைப் பேசாதே – தம் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர
வாற்றது என்பவர் மூர்க்கர் ஆவார்.

— மணவாள மாமுனிகளின் உபதேச்ச இரத்தின மாலை

விவிலியத்தில் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம். அதற்காக ‘இதைத் தான் அதுவும் சொல்கிறது’ என்று கூறுவது தவறாகும். நம் இந்து நண்பர்களும் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

க்ருஷ்ணகுமார் on August 17, 2011 at 9:11 am

சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஆரம்பித்த வ்யாசம். நூறுக்கு மேற்பட்ட உத்தரங்கள். அழகரைப்பற்றிய அழகான வ்யாசம்.

மற்ற திவ்ய தேச பெருமாளுக்கு சிவபெருமானின் சம்பந்தம் எவ்வளவோ, இங்கு உத்தரமெழுதும் வைஷ்ணவ ஸ்ரேஷ்டர்கள் அறிவர். மதுரை என்றால் கண் முன் வந்து நிற்பது பெருமாள் தம் தமக்கையையை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அழகான காட்சி. அப்படி ஒரு சம்பந்தம் இருந்தும் இங்குள்ள அபிப்ராய பேதங்களை அழகரும் ஆசுதோஷியுமே களையவல்லார்.

ஆரோபங்களும் ப்ரத்யாரோபங்களும் சளையில்லாமல் தொடர்ந்ததில் ஏதோ சங்கல்பமே செய்தது போல் அழகரைப்பற்றி பேசாது மற்ற சகல விஷயங்களும் பரிமாறியாகி விட்டது. அழகரைப்பற்றிப் பேசாதது புறந்தொழா சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உறுத்தாமலிருக்கலாம். ஆனால் சிவபெருமானையும் மஹாவிஷ்ணுவையும் ஒருங்கே நிதம் தொழும் என்னைப்போன்றோருக்கு உறுத்துகிறதே. ப்ரதேசாந்தரத்தில் இருக்கும் என்போன்றோர் இந்த வ்யாஜத்தில் அழகரைப்பற்றி கற்றறிந்த வைஷ்ணவர்களிடமிறிந்து சுவை மிக பற்பல விஷயங்களை அறிவோம் என மிக ஆவலாக இருந்திருப்பர்..

அறைகுறையாக இருப்பினும் சரி. அழகர் மலை பற்றி நான் வாசித்து ரசித்தது:-

முதலில் குரங்கு வ்ருத்தாந்தம்.

\\\\\\\\\அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும்\\\\\\\\
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் இந்த மந்திகளைப்பற்றி ஒரு ச்லோகம் வரும். இவ்வழகர் மலைவாழும் மந்திகள் கூட எப்படி தீர வைஷ்ணவர்கள் எனப்பொருள்படும் படியான ச்லோகம். நினைவில் வரவில்லை.\\\\\\\

यदीयशिखरागताम् शशिकलाम् तु शाखाम्रुगा:
निरीक्षय हरशेखरी भवनमामृशन्तस्तत:
स्पृशन्ति न हि देवतान्तरसमाश्रितेति स्फुटम्
स एष सुमहातरुव्रजकिरिर्गृहम् श्रीपते:

யதீய சிகராகதாம் சசிகலாம் து சாகாம்ருகா:
நிரீக்ஷ்ய ஹரசேகரீபவனமாம்ருசந்தஸ்தத:
ஸ்ப்ருசந்தி ந ஹி தேவதாந்தர சமாஸ் ரிதேதி ஸ்புடம்
ஸ ஏஷ சுமஹாதருவ்ரஜகிரி: க்ருஹம் ஸ்ரீபதே:

அழகர் மலையுச்சியில் வாழும் குரங்குகள் சந்த்ரனைப்பார்த்து தொடலாமோ என எண்ணியதாம். ஆனால் சந்த்ரசூடன் என்ற படிக்கு தேவதாந்தர சம்பந்தம் இருக்கிறதே. நாம் அழகரின் திருவடியை ஆஸ்ரயித்த வைஷ்ணவர்களாயிற்றே என்று திரும்பி விடுகின்றனவாம்.

இது ஞாபகத்தில் இருப்பது எனக்கும் என் சஹோதரனுக்குமிடையே நிகழ்ந்த சம்வாதத்தால்

சஹோ :- அண்ணா இதைப்படித்தயா, பார் சிவத்வேஷத்தை
நான் :- இதில் த்வேஷம் என்னத்தை கண்டு விட்டாய்
சஹோ :-பக்ஷபாதமாய் பேசாதே
நான் :- ராகவா, இதில் த்வேஷம் என்ன இருக்கு
சஹோ :- சந்த்ராம் சந்த்ர சஹோதரீம் என்று சொல்கிறோம் தானே
நான் :- ஆமாம்
சஹோ :- சந்த்ரன் மஹாலக்ஷ்மியின் சஹோதரன் என்று குரங்குகள் பார்த்திருந்தால் ஸ்லோகம் இப்படி இருக்காது இல்லையா?
நான் :- உன்னுடையது கேள்வி அல்ல பதில்
சஹோ :- எப்படி
நான் :- ஸ்லோகத்தில் இருப்பது பாவம் (bhavam) த்வேஷமில்லை; மஹாலக்ஷ்மியின் சஹோதரன் என்ற பாவத்தில் சந்த்ர தர்சனம் செய்திருந்தால் அக்குரங்குகள் அழகர் மலை சிகரத்தில் உள்ள பூக்களை கொய்து சந்த்ரனுக்கு சமர்ப்பித்திருக்கலாம். தேவதாந்தர சம்பந்தம் என்ற பாவத்தில், த்வேஷத்தில் அல்ல , பார்த்ததால் திரும்பி வந்தன. ஆகவே,இஷ்டத்துக்கு அத்யாரோபம் செய்யாதே.
சஹோ :- அண்ணா, நீ வைஷ்ணவ வானரர்களுக்கு பரிந்து பேசுகிறாய்
நான் :- பின் என்னவாம், நீ வெறும் வானரமாய் பார்க்கிறாய், நான் ராமாலிங்கனம் கிடைக்கப்பெற்ற ஹனுமனாய் பார்க்கிறேன்.
சஹோ :- எப்படி
நான் :- ராமபிரான் அளித்த அங்குளீயத்தை அசோகவனத்தில் சீதாபிராட்டிக்கு சமர்ப்பித்து பின் சீதாபிராட்டி கொடுத்த சூடாமணியை திரும்ப ராமபிரானிடம் சமர்ப்பித்த போது, தேவியை நினைத்து கண்ணீர் மல்கி, ஹனுமனே உன்னைப்போல் இன்னொரு கைங்கர்யபரன் இருப்பனோ? நீ செய்த கைங்கர்யத்துக்கு கைம்மாறறியேன் என ப்ரபு ஹனுமனை ஆலிங்கனம் செய்தார். ஆனால் ராம பக்தர்களில் மிக ஸ்ரேஷ்டரான ஹனுமார் அதி வினயத்துடன் நாத்தழுதழுக்க, ப்ரபோ! என்னைப்போல் தங்களுக்கு ஆயிரம் பேர் கிட்டுவர், ஆனால் தங்களைப்போல் இன்னொரு ஸ்வாமி எங்களுக்கு கிடைக்கவொண்ணாரே என்று சொல்லி நமஸ்கரித்தாராம்.
சஹோ :- அண்ணா, க்ஷமிக்கவும் இப்படித்தான் பாவம் சித்திக்க வேணும்
நான் :- மிகச்சரி, போய் “உடுக்கத் துகில் வேணு நீள்பசி” திருப்புகழ் பாராயணம் செய்

க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ …… தொருநாளே

அருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.

மேற்கண்ட வரிகளில் சித்தத்தை இருத்தி வாசி. கதிர்காமக் கந்தன் நமக்கு தெளிந்த சித்தம் நல்கட்டும்.

———
அடுத்து நாச்சியார் வாக்கு

நாறுநறும் பொழில் திருமாலிருஞ்சோலைநம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ

என நாச்சியார் சொன்னதும்

பிற்காலத்தே ராமானுஜாசார்யார் நூறு தடா அக்கார அடிசில் பெருமாளுக்கு சமர்ப்பித்ததுமான வ்ருத்தாந்தம் ஸ்ரீவைஷ்ணவர்கள் சொல்லிக்கேட்டாலேயே பக்தி பாவம் ததும்ப இருக்கும். சமயப்பிணக்குகளன்றி இந்த வ்ருத்தாந்தம் பற்றியும் எழுதுமாய் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம் விக்ஞாபித்துக் கொள்கிறேன்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

வஸ்ரீ. விபூதிபூஷண் on August 17, 2011 at 10:59 am

திருமாலடியார் கந்தர்வன் அவர்களின் கட்டுரை யை தொடர்ந்து ஒரு நெடிய விவாதம் அதிலே பங்கேற்றதில் மகிழ்ச்சி. திரு கந்தர்வன் இன்னும் தொடர்ந்து சங்க இலக்கியம் பற்றி கட்டுரை எழுதவேண்டுகிறேன்.
சமயப் பிணக்கு என்பது இன்றைய சூழ் நிலையில் வேண்டாம் என்று பெரியோர் பலரும் எழுதியுள்ளீர்கள். எனது வணக்கத்திற்குரிய மலர்மன்னன், முனைவர் அய்யா மற்றும் பெரியவர் க்ருஷ்ண்குமார் மற்றும் அன்பர்கள் கதிரவன். உங்களோடு முழுமையாக 100% உடன் படுகின்றேன்.
வைதீகர்கள் வைதீகரல்லாதோர், வைணவர்கள் மற்றும் சைவர்கள், சித்தாந்திகள் வேதாந்திகள், அத்வைதிகள் மற்றும் த்வைதிகள் எனப் பலத்தரப்புகள் கொண்டதே நமது தர்மம். பல வழிபாட்டு நெறிகளும் சித்தாந்தங்களும் நம் தாயகமாம் புண்ணிய பூமியில் செழித்து வாழவேண்டும்.
ஆபிராகாமியம் போல் ஒரே நூல், ஓரே தூதுவர், ஒரே கடவுள் என்ற நிலை நமக்கு ஏற்புடையது அல்ல. ஏக இறைவன் என்ற கருது மட்டுமே நம்முள் வைதீகருக்கு உண்டு. இறைவழிபாடு இன்றியே விடுதலை சாத்தியம் என்ற ஜைனரும் பவுத்தரும் நம்மவரே. குலதெய்வ வழிபாடுகளும், ஊர்தெய்வ வ்ழிபாடுகளும் நம்மவையே. இதுவே எனது நிலைப்பாடு.
இதை எல்லோறும் ஏற்க சொல்லவில்லை. நமது தர்மத்தின் பன்முகத்தன்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
சமய் அறிஞர்களை அணுகி விவாதிக்கவேண்டும் அவ்வளவே.
அடியேனைப் பொறுத்தவரையில்
வைதீக சைவம் எனது சமயம் வேதாந்தம் சித்தாந்தம் எனது் தத்துவம். அதன் வழி நித்தியமாக சிவ வழிபாடு செய்தாலும் குல தெய்வ வழிபாடும், திருமால் வழிபாடும் செய்கின்றேன். எனது செல் பேசியில் மீனாட்சி கல்யாணக் கோலத்தில் அம்மையப்பரோடு அழகரான பெருமாள் எப்போதும் காண்கிறேன். என் தந்தைவழியில் மூன்று தலைமுறைக்கு மேலே சிவ நாமங்கள் பெயர்களாயும் தாய்வழியிலே அனைத்தும் திருமாலின் திருப்பெயர்கள் அமைந்தது கண்டு ஆச்சரியம் தான். எனது தாய்வழிப்பாட்டனார் ஒரு முத்திரைவைக்கப்பெற்ற தாசர்.ஆகவே திருமாலை போற்றுவது மட்டுமே இயலும்.

 __________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

C..N.Muthukumaraswamy on August 17, 2011 at 11:04 am

திருப்புகழ் அன்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, தக்கள் திருமுகம் இங்குக் காணப் பெற்றமிக்குப் பெரிதும் மகிழ்கின்றேன். அடியேனும், ‘உனது காவிய நூலாராய்வேன் இடர்படாதருள் வாழ்வே நீயே அருள்வாயே’ என்றும் ‘சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ’ என்றும் நாள்தோறும் குமார பரமேசுவரரை இறைஞ்சும் தொண்டன். தாங்கள் தங்கள் மறுமொழிய்ல் காட்டிய திருப்புகழை என் மறுமொழியில் மேற்கோள் காட்டியுள்ளேன்.

புராணம் பற்றி நான் எழுதியன குறித்து விளக்கம் கேட்டிருந்தீர்கள். அதனைப் பலரும் அறிவது முறையே. மணிவாசகப் பெருமான் தம்முடைய திருவாசகத்தில் அகச் சான்றாகத் தம்மைப் பாண்டிய மன்னன் பெருந்திரவியத்தைக் கொடுத்துக் குதிரை வாங்கக் கொற்கைக்கு அனுப்பியதையும் அவழியில் திருப்பெருந்துறையில் சிவபெருமான் அந்தணனாக வந்து ஆட்கொண்டதையும் பின் மதுரைமன்னன் சினந்து ஒறுத்ததையும் வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்ததையும் பெருமான் கூலியாளாகப் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதையும் நரியைக் குதிரையாக்கியதையும் மீண்டும் குதிரையை நரியாக்கினதையும் கூறியுள்ளார்.

பரஞ்சோதியாரின் திருவிளையாடல், வேம்பத்தூரர் பாடிய திருவிளையாடல் திருவாதவூரர்ப் புராணம் திருபெருந்துறைப் புராணம் வடமொழி ஹாலாஸ்ய மான்மியம் முதலிய புராணங்கள் நடந்த உண்மை நிகழ்ச்சியினைக் கற்பனை வளத்துடன் பாடியுள்ளன். அடிப்படை நிகழ்ச்சிகள் இவற்றில் ஒருபடித்தாக இருப்பினும் கவிஞனின் கற்பனை வளத்தால் பல வேறுபாடுகள் இவற்றிடையே காணப் பெறுகின்றன. இன்ன புராணம் கூற்வதுதான் உண்மையில் நிகழ்ந்தது எனத் தீர்மானித்தல் ஆகாது.

மணிவாசகர் காலத்தால் ஏனைய சைவசமயாச்சாரியர் மூவருக்கும் முந்தியவர். ஆத்லால். அவர்காலத்தில் வழங்கிய பல வரலாறுகளையும் கதைகளையும் கீர்த்தித் திருவகவல் என்னும் பகுதியில் கூறுகின்றார். பெயரளவிலேயே அவை அறிய வருகின்றன. அக்கதை அல்லது வரலாறு இன்னதெனத் தெளிவாக அறியக்கூடவில்லை.

அவற்றுள் ஒன்று,”கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும், மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் ” என்பது. கேவேடர் – செம்படவர். கெளிறு ஒருவகை மீன்.

இவ்வரியைப் பரஞ்சோதியார் ஒரு கதையாக ஆக்கிக் கொண்டார். சிவபிரான் அம்பிகைக்கு ஆகமம் போதித்தார் என்றும் அதனை பராக்குடை மனத்துடன் அம்பிகை கேட்டாரென்றும், அதனால் சினமுற்ற இறைவன் அம்மையைப் பரதவ்ர் குலத்தில் பிறக்கச் சபித்தார் என்றும், அம்மையின் மேல் அன்புடைப் பிள்ளைகள் கந்தனும் விநாயகனும் இந்த ஆகமநூல்தானே எம்மை அம்மியிடமிருந்து பிரித்தன என்று அவற்றைக் கிழித்துக் கடலில் எறிந்தனர் என்றும் அப்பிள்ளைகளை படிக்கும் இடத்தில் வரவிட்ட் நந்திதேவரை சுறாமீனாகுமாறும் சபித்தார் என்றும் இப்புராணம் கூறும்
இக்கதை வலியுறுத்த வந்த கருத்து இறைவன் நூலைப் பராக்கறக் கற்க வேண்டும் என்பதுதான். இதற்குச் சிவனுடன் பிரிக்கமுடியாத அனன்னிய தாதான்மிய சம்பந்த முடைய சத்தியைத் தனியே ஒரு பெண்ணாகப் பிரித்தும் சிவத்தின் மாகேசுர மூர்த்தங்களான அறுமுகச் சிவனையும் மாமுகத்தனையும் தனி மானுடர்போலப் பிரித்தும் அவர்களைச் சிவன் சபித்தனன் என்றும் கதைத்து அப்பின்னணியில் தாம் கூற வந்த கருத்தைப் பரஞ்சோதியார் வலிறுத்தினார். இது கதையே அன்றி வரலாறு அன்று. இதுபிரமாணமாகாது.

ஸ்காந்தபுராணம் வீரமாஹேந்திரகாண்டம் “தஸ்யதேஹேஸ்முத்பதிம் யாந்த்யண்டாநிபுநர்லயம்” என்று கூறுகின்றது. குமாரபரமேசுரன் சிவத்தினின்றும் பிரிக்கப்படா வொப்புயர்வில் பரம்பொருள் என்று சாத்திரங்களும் தோத்திரங்களும் கூற இப்புராணம், “அருவரை நெஞ்சு போழ்ந்த வள்ளிலை வடிவேற் செங்கை – முருகனை வணிகர் தம்மின் மூங்கையா கென்றான்” என்று சாபத்தினுட்படுத்தப் பட்ட ஓரான்மா எனக் கூறுகின்றது. இவைபோன்ற கதைகளே விருகாசுரன் என்னும் பஸ்மாசுரனுக்குப் பயந்து ஒருசெடியினுள் சிவனொளித்துக் கொண்டனன்; திருமழிசையாரது காலின் நகக்கணழலாற் சிவன் துரத்தப்பட்டனன் என்னும் வைணவப் புத்தக அசப்பியக் கதைகள் தோன்றக் காரண்மாயின.

வைணவப் புத்தக அசப்பியக் கதைகளைச் சைவர்கள் புறந்தள்ளுவது போன்றே சைவபுராணங்களில் உள்ள் இக்கதைகளின் சாரங்களை மட்டும் கொண்டு சக்கைகளைப் புறந்தள்ளுவர்.

திருவிளையாடற்புராணத்தில் இங்குக் காட்டப் பட்டவை போன்ற கதைகளைச் சைவர்கள் பொருட்படுத்தாத போதிலும் இப்புராணம் சைவர்களுக்கு முக்கியமானதொரு புராணமே யாகும்.
.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

கந்தர்வன் on August 17, 2011 at 6:06 pm

திரு டேவிட் நவீந்திரன்,

நான் உங்களைச் சந்தேகப்படவில்லை. நீங்கள் கிறித்தவப் பின்னணியிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் மெய்யான திருமால் பக்தராக இருந்தால் உங்களை வைஷ்ணவராக ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் எந்தத் தடையும் இருக்காது என்றே நினைக்கிறேன். வைணவச் சுடராழி D A Joseph போன்றவர்களை வைஷ்ணவ உலகம் பரிபூரணமாக ஏற்றது.

// இயேசு என்ற ஒருவர் பிறந்தார். இறைவனை பற்றி உபதேசித்தார் ! இது உண்மை! //

இப்பொழுது நான் கேட்கப்போவது உங்களைக் குறை கூறுவதற்காக அல்ல. இது தர்க்கமான கேள்வி. அதாவது logical question.

நீங்கள் புதிய ஏற்பாட்டை முழுமனதாக ஏற்கிறீர்களா இல்லையா? ஏற்கிறீர்கள் என்றால், புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் விக்கிரக ஆராதனை செய்யக் கூடாது என்று வருகிறது.

1 Corinthians ௧௦

10:19 What say I then? that the idol is any thing, or that which is offered in sacrifice to idols is any thing?

10:20 But I say, that the things which the Gentiles sacrifice, they sacrifice to devils, and not to God: and I would not that ye should have fellowship with devils.

10:21 Ye cannot drink the cup of the Lord, and the cup of devils: ye cannot be partakers of the Lord’s table, and of the table of devils.

ஆழ்வார்கள் முழுக்க முழுக்க அர்ச்சாவதாரத்தில் – அதாவது கோயில் கொண்டுள்ள மூர்த்திகளில் தான் ஈடுபட்டு வந்தனர். நீங்கள் ஆழ்வார்களை ஏற்றால் புதிய ஏற்பாட்டைத் தள்ள வேண்டியது தான்.

புதிய ஏற்பாட்டை நீங்கள் (முழுவதும்) ஏற்கவில்லை என்றால், அடுத்த கேள்விக்கு வர வேண்டும்.

இயேசு சொன்னதாகப் புதிய ஏற்பாட்டில் வருவதெல்லாம் உண்மையிலேயே அவர் சொன்னது தானா?

Matthew:

5:17 Think not that I am come to destroy the law, or the prophets: I am not come to destroy, but to fulfil. (an observer’s comment: In other words, there is no slightest objection to the cruelties of the Old Testament)

8:4 And Jesus saith unto him, See thou tell no man; but go thy way, shew thyself to the priest, and offer the gift that Moses commanded, for a testimony unto them.

இக்கேள்விக்கு பதில் ‘ஆமாம்’ என்றால் மோசே கூறியதை எல்லாம் இயேசுவும் ஆதரித்தார் என்று கொள்ள வேண்டி வரும். இதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? இருக்கிறது என்றால், Moses-இன் பத்து commandments பிரகாரம் விக்கிரக ஆராதனை புரியக் கூடாது என்று இயேசு கூறியிருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டி வரும்.

இதன் படியும் ஆழ்வார்களை ஏற்பவர்கள், இயேசு கூறியிருப்பதைத் தள்ள வேண்டியது தான்.

அப்படி நீங்கள் இயேசு கூறியவற்றை எல்லாம் பழைய ஏற்பாட்டில் திரித்துக் கூறிவிட்டனர் என்று கூறினால், எது இயேசு உண்மையிலேயே சொன்னது, எது இயேசு சொல்லவில்லை என்று நிர்ணயிக்க எந்த வழியும் இல்லை. மேலும், இயேசு என்ற ஒரு மனிதரைப் பற்றிய முக்கிய வரலாற்று ஆவணம் புதிய ஏற்பாட்டைத் தவிர வேறு கிடையாது.

இறுதியாக, சில வாக்கியங்களைக் கவனியுங்கள்:

Luke 14
14:26 If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple.

Matthew 10
10:35 For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter in law against her mother in law.
10:36 And a man’s foes shall be they of his own household.
10:37 He that loveth father or mother more than me is not worthy of me: and he that loveth son or daughter more than me is not worthy of me.

Vishnu Purana 3.7:

That vile wretch is no worshipper of Vishńu, who through avarice is unkind to his nearest friends and relations, to his wife, children, parents, and dependants.

இரண்டுக்கும் வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

david navindran on August 17, 2011 at 9:39 pm

சகோதரர் கந்தர்வன் அவர்களே, பழைய ஏற்பாடோ, அல்லது புதிய ஏற்பாடோ, … எல்லாவற்றிலும் அதிகம் இடைசெருகல் உள்ளது என்று ஒரு கிருஸ்துவ பெரியவரே என்னிடம் கூறினார். சிறுவயது முதல் எனக்கு என் மதத்தில் மீது பற்று இல்லை. எதோ எப்போதாவது தேவாலயம் செல்வேன். அனால், இயேசு என்ற ஒரு மகான் வாழ்ந்ததை நான் நம்புகிறேன்.

அப்படி நம்புவதால், உடனே, நான் 100 சதவிகிதம் கிருஸ்துவன் என்று அர்தம் இல்லை. என்னை பொருத்தவரை, இயேசு சொன்னதை , பிற்காலத்தில் வந்தவர்கள், நெறைய மாற்றம் செய்து உள்ளார்கள். மறுபடியும் சொல்கிறேன். இயேசு என்பவர் உண்மை. அனால், அவரின் போதனை என்று கூறப்படும் பைபளில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.

என் வாழ்நாளில், தேவாலயம் சென்றதை விட , கோவிலுக்கு சென்றதுதான் அதிகம்.பைபிள் படித்ததை விட, மகாபாரதம் படித்ததுதான் அதிகம்.

பைபளில் விக்கிரக வழிபாடு கண்டிக்கபடுகிறது என்றால், இங்கு நான் வசிக்கும் ஊரில் தேவாலயத்தில் இயேசுவே சுவரில் விக்ரகமாகதான் உள்ளார். இதை மட்டும் கிருஸ்தவர்கள் ஏன் வழிபடுகிறார்கள்? இந்த கேள்வி 15 வயதிலே நான் கேட்டுவிட்டேன். இன்னும் நிறைவான பதில் வரவில்லை.

எதோ எப்படியோ, ஹிந்து மதத்தில் விக்ரக வழிபாட்டின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆழ்வார்கள் ஒவ்வொரு திவ்யதேசம் சென்று அங்கு கோவில் கொண்டுள்ள மூர்த்தியை மங்களாசாசனம் செய்தார்கள் என்பதை நான் அறிவேன் .. திருமழிசை ஆழ்வாரை , அரசன் ஊரை விட்டு விரட்டியபோது , அந்த ஊரில் உள்ள பெருமாளும், ஆழ்வாரை பின் தொடர்ந்தார் என்பதை நான் அறிவேன். இவை எல்லாவற்றையும் நம்பாமலா , எனக்கு வைணவம் மீது பற்று வந்தது?

இயேசு என்பவர் வாழ்ந்தார். அனால் , அவர்தான் இறைதூதர் . அவர் சொன்னதுதான் வேதம், அவரை மட்டும் வணங்க வேண்டும். மற்ற மதங்கள் போலி,அந்த மதத்தின் தெய்வங்கள் எல்லாம் சாத்தான்கள், என்று கூறுபவர்களை நான் வெறுக்கிறேன். பாவிகளே ! என்று தமிழ் நாட்டில் தெருவில் நின்று கூச்சல் போடுவார்கள் , என்று கேள்விபட்டேன். அந்த பைத்தியகார கூட்டத்தின் நானும் ஒருவன் என்று என்ன வேண்டாம்.

இறுதியாக , என் தாத்தா கடைபிடித்த தர்மதிட்கு நான் திரும்ப போகிறேன்.15 வயதில் இதை செய்திருந்தால் வீட்டில் உதை விழுந்திருக்கும். இப்போது ,30 வயதில் யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது… வயது உள்ளது.! அனுபவம் உள்ளது. சிந்திக்க மூளையும் உள்ளது. ஆகவே உண்மையான நித்தியமான தருமதிட்கு திரும்ப விரும்புகிறேன்.

இங்குள்ள பெரியவர்கள் என்னை ஆசிவதியுங்கள். நன்றி.

.__________________


Guru

Status: Offline
Posts: 19539
Date:
Permalink  
 

பசுந்தமிழன் on August 28, 2011 at 11:35 pm

வியாசர் எழுதிய மாபாரததில்

வனபர்வத்தில் அர்ஜுனன் மூலமாக வியாசர் சிவ வடுவத்தில் விஷ்ணுவையும் விஷ்ணு வடிவத்தில் சிவனையும் வணங்குகிறோம், ஹரி ருத்ரனை வணங்குகிறோம்என்க் கூறுகிறார்.

அதே போலே மாபாரததில் சாந்தி பர்வத்தில் சிவஸகச்ரனாமத்தை வியாசரே வழங்கியும் உள்ளார்.
அதில் பீஷ்மர்
Poorva Bhaga

Early part
Yudhishtra Uvacha:-
Thwayaapagheya naamani sruthaniha jagatpathe,
Pithamahesaaya vibhor namanyaa chakshwa sambhave., 1
Bhabhrave viswaroopaya, mahabhagyam cha thathwatha,
Surasura gurou deve shankaravyaktha yonaye., 2
Yudhishtra asked:-
Oh my dearest grandpa,
Be pleased to tell me the various names,
Of him who is the lord of the universe,
Who is Shambhu with a gold coloured body,
Whose form is of the universe,
Who is the teacher of Asuras and devas,
Who is the god of all devas,
Who does all good,
And who is the cause of the eternal basis,
And also his fame,
As you have heard from others.
Bheeshma Uvacha:-

Asakthoham gunaan vakthum maha devasya dheematha,
Yo hi sarva gatho na cha sarvathra drusyathe., 3

Bheeshma replied:-Incapable I am to tell about the properties,Of the great God who is very great,For he is seen everywhere but seen nowhere.

Brahma Vishnu suresaanaam srushtaa cha prabhureva cha,
Brahmaadaya pisachaantha yam hi deva upasathe., 4
He is the one who created Brahma, Vishnu and other devas, He is their Lord and he is worshipped by,Brahma, devas, ghosts and others.

http://www.hindupedia.com/en/Shiva_Sahasranamam__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard