New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்
Permalink  
 


கிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1286991

மதம் மாற நிலம்: சிறுபான்மையினர் கொதிப்பு

சேலம்: சேலத்தில், இலவச நிலம், பணம் கொடுத்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை, மதம் மாற்றும் முயற்சி நடந்தது. தகவலறிந்து சென்ற, ஒரு மதத்தினர், திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் பிரச்னை

சேலம், களரம்பட்டி யில், கிறிஸ்தவ மதத்துக்குரிய, ஜீவ ஒளி திருச்சபை கட்டடம் உள்ளது.

இங்கு, பாதிரியாராக, ஐசக் என்பவர் உள்ளார்; இவர், இஸ்லாமிய மதத்தில் இருந்து,

கிறிஸ்தவ மதத்துக்கு, தன்னுடைய குடும்பத்தினருடன் மதம் மாறியவர். இதை தொடர்ந்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலரை, கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கும் முயற்சியை, இவர் மேற்கொண்டதாக தெரிகிறது. இதற்காக, இலவச நிலம், பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறிஉள்ளார். நேற்று காலை, கிச்சிப்பாளையம், களரம்பட்டி, லைன்மேடு, முகம்மதுபுறா உள்ளிட்ட, பகுதிகளில் இருந்து, இஸ்லாமிய பெண்கள், 50க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, திருச்சபையில் அமர வைத்துள்ளார். பின், அந்த பெண்கள் அணியும், சில நகைகளை கழற்றி விடுமாறு கூறியுள்ளார். மதம் மாற்றம் நடப்பது தொடர்பான தகவல், சேலம் கோட்டை, த.மு.மு.க., நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்கள், சம்பவ இடத்துக்கு சென்ற போது, திருச்சபையின் உள்ளே, முஸ்லிம் பெண்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து, பாதிரியார் ஐசக்கிடம், த.மு.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தினரிடையே எழுந்த திடீர் பிரச்னை, போலீசார் கவனத்துக்கு சென்றது.

போலீசில் புகார் –போலீசார், களரம்பட்டி வந்து, இரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் சமாதானப் படுத்தினர். தொடர்ந்து, திருச்சபையில் இருந்த பெண்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பினர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. த.மு.மு.க., அம்மாபேட்டை மண்டல துணை செயலர் இப்ராகிம் கூறியதாவது:

களரம்பட்டியில் உள்ள சர்ச்சில், கிச்சிப்பாளையம் கரீம்காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்களை, மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று, சம்பந்தப்பட்ட பாதிரியாரிடம் விசாரித்தோம். அவர், ‘அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்படி, நிலம் கொடுப்பதற்காக அழைத்து உள்ளோம்’ என்றார்.

ஆனால், மதம் மாற்றும் வகையில், சில தகவல்களை அந்த பாதிரியார் கூறியிருப்பது, எங்களுக்கு தெரியவந்தது. இதனால், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். பின், இந்த பிரச்னை போலீசாருக்கு தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், எங்களிடம் பேச்சு நடத்தினர்.

அப்போது, நடந்த சம்பவங்களை தெரிவித்தோம். ‘புகார் மனு கொடுங்கள்; வழக்கு பதிவு செய்வதற்கான முயற்சி எடுக்கிறோம்’ என்றனர். கிச்சிப்பாளையம் போலீசில் புகார் மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard