New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் ஸ்நானகரும் ஏசுவும் வரலாற்று உண்மையும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
யோவான் ஸ்நானகரும் ஏசுவும் வரலாற்று உண்மையும்
Permalink  
 


யோவான் ஸ்நானகரும் ஏசுவும் வரலாற்று உண்மையும்

ஏசுவின் கதைகளை முதலில் வரைந்த மாற்கு சுவி ஆரம்பம் என ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று

பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந்தது என்று கதை தொடங்குகிறது.

மாற்கு1: 4  திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

9 அக்காலத்தில் ஏசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

 யோவானிடம்  பாவமன்னிப்பு ஞானஸ்நானம்பெற்றதால், பெற்றபின்தான்ஏசுதெய்வீகர்நிலைஆரம்பம்.  இச்சம்பவத்தில் ஏசுவைவிட யோவானின் பெருமை அதிகமாகிறது,  இதை மத்தேயு மாற்றுகிறார்.  

மத்தேயு3:13 ஏசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ‘ நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ‘ என்று கூறித் தடுத்தார்.15 ஏசு, ‘ இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ‘ எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 ஏசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

லுக்கா3:22 பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.

நாம்வானில்இருந்துவந்தகுரலைப்பார்ப்போம்.
 

மாற்கு- என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்

 மத்தேயு-என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் 

குரல்ஏசுவிடம்பேசியதாவேறுசுற்றிஇருந்தமக்களுக்குசொன்னதா- இந்த வான்குரல் கதை ஏசு சீடர் சேர்க்குமுன்பானது, எனவே இது முற்றிலும் உருவாக்கப்பட்ட கதை. வெற்றுபுனையல்கள்.

யோவான்1:33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘ தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ‘ என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். ‘

 


 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

யோவானிற்கு பார்த்தவுடனே தெரியவில்லை என்கிறார் யோவான்மத்தேயு சொல்வதை தெளிவாக

 மறுக்கிறார் நான்காவது சுவி.  மேலும் யோவான்ஸ்நானனை ஏசுவின் தாய் மேரி உறவினர் எனவேறு

லுக்காவில் ஒரு கதை உள்ளது.  

பரிசுத்த ஆவி வரும் புறா வடிவில் வந்ததாய் கதைவான் குரலில் குழப்பம் எனப் பார்த்தோம் மாற்கு லூக்காவில்

ஏசுவிடம் குரல் சொன்னதாய் கதை. மத்தேயுவில் மக்களுக்கு சொல்லப்பட்டதாய் கதை. யோவான்ஸ்நானனே  பரிசுத்த ஆவி

வரும் புறா வடிவில் வந்ததை கண்டதாய் நான்காம் சுவியில்  கதை- ஆனால் வான்குரலே இங்கு இல்லை. சுவி கதைகள்படி

ஏசுவிற்கு முன்பே யோவான்ஸ்நானன் மரணம்;  எனவே இது கதை என்பது புரியும் இக்கதை புனையக் காரணம் என்ன

என்பதை காண்போம்

ஏசுவிடம்நீங்கள்இயங்கஎன்னஅதிகாரம்என்றகேள்விக்குஏசுசொன்னபதில்

மத்தேயு21: 23 ஏசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, ‘ எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? ‘ என்று கேட்டார்கள்.24 ஏசு அவர்களுக்கு மறுமொழியாக,  நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? என்று அவர் கேட்டார். அவர்கள்,  ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார்.26 ‘ மனிதரிடமிருந்து ‘ என்போமானால்,மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்  என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.27 எனவே அவர்கள் ஏசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் ‘என்றார்.

நீங்கள் இயங்க என்ன காரணம் - அதிகாரம் என ஏசு கேட்கப்பட, பைபிள் ஞானம் கொண்ட யூதகுருமார்களிடம் ஏசு தான்

மேசியா எனச் சொல்லிக் கொள்ள ஏசு தான் தாவீது பரம்பரை - தீர்க்கர் தன்னை காட்டியுள்ளனர் எனச் சொல்லாமல் உலகம்

அழியும் யுகமுடிவு வந்துவிட்டது என இயங்கிய பிரபலமான யோவான்ஸ்நானர்பற்றி எதிர் கேள்வி கேட்டு ஏதும் சொல்லாது

ஏசு சென்றதாய் இச்சம்பவம் காட்டுகிறது.

யோவான் மிகப் பிரபலமானவர் என்பதும் மேலு தெளிவாக மன்னர் ஏரோதும் பயந்தான்.

மாற்கு6:20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு 

அளித்து வந்தான்அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும்அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.

.

யோவான்ஸ்நானன்ஏசுவை தெய்வீகர் என அறிந்தாரா?
ஆனால் சிறையில் யோவான் அடைக்கப்பட்ட போது

மத்தேயு11: 2 யோவான் சிறையிலிருந்தபோதுமெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை ஏசுவிடம்அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ‘வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ‘ என்று கேட்டார்.

அப்போஸ்தலர் நடபடிகளில் ஒரு கதை

அப்போஸ்தலர் பணி18:24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோஅலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் விவிலிய வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே பிழையற அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.

28 அப்பொல்லோ எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் விவிலிய வாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.

அப்போஸ்தலர் பணி19:1அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர். எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள். பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.

6.அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர்.

ஏசு மரணமடைந்து 20 ஆண்டுகள் கழித்து பவுல் ஒரு ஊருக்கு செல்லுகையில் ஏசுவே கிறிஸ்து என அறிந்த அப்பல்லோ எனும் சர்ச் ஊழியர் யோவானின் ஞானஸ்நானம் தான் தந்து வந்தார். பவுல் ஏசு பெயரில் ஞானஸ்நானம் தர் அவர்கள் மீது ஆவி வர பல மொழிகளில் பேசினராம்.

யோவான்ஸ்நானன் ஏசுவை ஏற்கும்படி தன் சீடர்களிடம் சொல்லி இருந்தால் இவை ஏற்பட்டிருக்கவெ வாய்ப்பே இல்லை.யோவான்ஏசுவைஏற்கவேஇல்லை.

 

 



-- Edited by Admin on Sunday 30th of October 2016 04:13:48 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: யோவான் ஸ்நானகரும் ஏசுவும் வரலாற்று உண்மையும்
Permalink  
 


பைபிள் அறிஞர்கள் சொல்வது -யோவான்ஸ்நானன் தன்னை தாழ்த்துவதாயும் ஏசுவை உயர்த்துவதாகவும் சுவிசேஷக் கதாசிரியர்கள் வரையக் காரணம், முதல் நூற்றாண்டு இறுதியில் யோவான் சுவி எழுதும்போதும் பலர் யோவானை தெய்வீகமாக ஏற்று அவர் வழி என வாழ்ந்தவர்களை மாற்றிடவே.

 

ஏசு தன் இயக்கம் தொடங்கியது எப்போது?

மாற்கு 1:14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். 

மத்தேயு 4:12 யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். 13 இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். 

லூக்கா 3:19ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான்.20 எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். ஏரோது யோவானை சிறையிலிட்டான்.

லூக்கா கதையில் ஏசுவிற்கு ஞானஸ்நானம் தந்த உடனே கைது எனவும் , அதன் பின்பு தான் ஏசு 40 நாள் பாலைவன விரதம் எனும் கதை.

மாற்கு கதையில் யோவான்ஸ்நானனிடம் பாவ மன்னிப்பு ஞானஸ்நானம் பெற கலிலேயாவிலிருந்து ஏசு யூதேயா வந்தவர், பின் கலிலேயா திரும்பி சென்று சீடர்களை அங்கே சேர்த்துக் கொண்டு, கலிலேயாவில் தான் இயங்கினார்.

ஆண்டு தோறும் பஸ்கா பண்டிகைக்கு யூதத் தொன்மக் கதையின் அடிப்படையில் ஆடுகொலை பலி தர வந்தபோது ரோம் ஆட்சியின் கவர்னரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனையில் கொல்லப் பட்டார். ஏசு சீடரோடு இயங்கிய காலம் 7 - 8 மாதங்கள் மட்டுமே, இது முழுமையும் கலிலேயாவில்

யோவான் 3:22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).

மாற்கு கதாசிரியரை முக்கிய சீடர் பேதுருவின் மொழிபெயர்ப்பாளர் எனபது சர்ச் செவிவழி கதை மரபுக. யோவான் சுவி ரோம் மன்னர் ட்ராஜன் காலத்தில் பொகா 98-117ன் போது வரையப்பட்டதாய் மரபு.



 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பைபிளியல் அறிஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் கேடவுக்ஸ் கூறுவது, நான்காம் சுவியில் ஏசு பேசியதாய் உள்ளவையில் அத்தனை மாறுபாடுகள்பின்னாள் சர்ச் சார்பான கதாசிரியர் தங்கள் நம்பிக்கையை ஏசு பேசியதாய் ஏற்றி சுவி இயற்றினார். ஒத்த கதை சுவிகளின் ஏசு பேச்சும் நான்காம் சுவி ஏசு பேச்சும் ஒரே நேரத்தில் உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை.

மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவாரம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயாயூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர்[ii] உறிதியாய் சொல்கிறார்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியர் 

F.F.புரூஸ்[iii] தன்  “The Real Jesus”  என்ற  நூலில்.  சொல்வது மாற்கு சுவியில் ஏசுவின் இயக்கம் கலிலேயாவில் எனக் காட்ட, நான்காம் யோவான் சுவியோ பெரும்பாலும் ஜெருசலேமிலோ அதன் சுற்றுப்புறத்திலோ என்கிறது என தெளிவாய் உரைக்கிறார். 

 

4ம் நூற்றாண்டில் சர்ச் வரலாறு எழுதிய பாதிரி இசுபியஸ்[iv],  2ம் நூற்றாண்டின் பாபியாஸ் சொல்லியதாய் மாற்கு கதாசிரியர், ஏசுவைப் பார்த்தோ கேட்டோ அறியாதவர், ஆனால் பேதுருவின் மொழெபெயர்ப்பாளர், தனக்கு ஏசு பற்றி சொல்லப்பட்ட அனைத்து சம்பவங்களையும் எதையும்ஜ் விடாமல், ஆனால் ஏசு சொன்னவற்றை முழுமையாய் எழுதவில்லை, மாற்கு தான் ஏசு பற்றி கேடவற்றை எதையும் விடாமல் எழுதிவைத்தார். வரிசையாய் சரியாய் எழுதினார், ஆனால் ஏசுவின் போதனைகளை சுருக்கமாய் கூறிவிட்டார் .

 



 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

யோவான்ஸ்நானனும் ஏசுவும் உறவினர்களா?

 

லூக்கா 1:36 காபிரியேல் தூதன் மரியாளிடம் –“ உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம்

மோசே சட்டம் யூதர்கள் தங்கள் கோத்திரம் உள்ளே தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறது. எனவே இவர்கள் -அதிலும் லேவியர் கோத்திரத்தின் தூய்மை மிகவும் கட்டாயம், இதையெல்லாம் ஆராய்ந்து அமெரிக்க நியூயார்க் யூனியன் பைபிளியல் கல்லூரி பேராசிரியர் ரேமண்ட் ப்ரௌன்[ii] மேரியை - யோவான்ஸ்நானன் தாய்  உறவினர் என்றது  உண்மையற்ற கதை மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகபைபிளியல் அறிஞர் பேராசிரியர் கெசா வெர்ம்ஸ்[iii] லூக்கா கதாசிரியராய் செய்த கட்டுக் கதை என்கிறார்.

 



எண்ணாகமம் 36:8-9 

[ii] Brown, Raymond Edward (1973), The Virginal Conception and Bodily Resurrection of Jesus, Paulist Press, p. 54

[iii] Vermes, Geza. The Nativity, p. 143.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 யோவான்ஸ்நானன் தான் எலியாவா?

ஏசு யோவான் ஞானஸ்நானானை பற்றி சொன்னதாக

மத்தேயு11: 8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா?

9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.10 இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

14 உங்களுக்குவிருப்பம்இருந்தால்வரவேண்டியஎலியாஇவரேஎனஏற்றுக்கொள்வீர்கள்.

ஏசு யோவான் ஞானஸ்நானானை வரவேண்டிய எலியா என்றார்

யோவான்1:24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 21. பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான் யோவான்ஸ்நானான்.

யார் சொல்வது உண்மை யோவான் ஸ்நானனாஏசுவா?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard