New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழ்வெண்மணி : நினைவுகள் அழிவதில்லை -மருதன்

Guru

Status: Offline
Posts: 24762
Date:
கீழ்வெண்மணி : நினைவுகள் அழிவதில்லை -மருதன்
Permalink  
 
சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சிலருடன் இணைந்து நாகப்பட்டிணத்தில் இருந்து கீழ்வெண்மணி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  மதிய நேரம், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். நீண்ட பச்சை நிலப்பரப்புகளையும் சிறிதும் பெரிதுமான பல குளங்களையும் கடந்து முன்னேறினோம்.  திரும்பும் திசையெங்கும் செங்கொடி. ஒரு பக்கம் ஜெயலலிதாவும் இன்னொரு பக்கம் பிரகாஷ் காரத்தும் டிஜிட்டல் தட்டிகளில் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள்.

சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நிறைவுபெற்ற தினம் அது என்பதால் நாகை வந்திருந்த தோழர்கள் கட்சி கொடி கட்டிய வண்டிகளில் சரசரவென்று பறந்துகொண்டிருந்தனர். வெண்மணிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருக்கும் வண்டிகள் ஒரு பக்கம். வெண்மணி நோக்கி சென்றுகொண்டிருக்கும் வண்டிகள் இன்னொரு பக்கம். அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, பாதை குறுகிய ஓரிடத்தில் அனைத்து வண்டிகளும் நிறுத்தப்பட, இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

தஞ்சாவூரில் இருந்தும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பல குடும்பங்கள் வந்துகொண்டிருந்தன. அவர்களில் சிலர் சாப்பாட்டு மூட்டையுடன் கால்நடையாகவே வந்திருந்தனர். சிலர் டிசம்பர் 1968-ஐ நினைவுகூர்ந்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் சிலர் அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள். சிலர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது ஊர்க்காரர்கள். ‘அப்போ நீ பிறந்திருக்கமாட்டே தம்பி…’ என்றபடி சம்பவத்தை ஒவ்வொரு கட்டமாக விவரித்துக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். ‘குடிசைக்குள் இருந்த அந்த 44 பேரும் கரிக்கட்டையா உதிர்ந்துபோனாங்க…’ என்று சொல்லி முடிக்கும்போது அவர் குரல் தழுதழுத்துவிட்டது.

இவ்வளவு கூட்டமா? ‘டிசம்பர் 25 வந்து பாருங்கள். கால் பதிக்கக்கூட இடம் இருக்காது. பொங்கலிட்டும் குலவையிட்டும் தியாகியரை மக்கள் நினைவுகூர்வார்கள். என்ன செய்வது? அவர்களுக்கு எதையுமே கடவுளைப் போல் வழிபட்டுத்தான் வழக்கம். அவர்கள் வாழ்ந்த, கற்ற பின்னணி அது.’

கீழ்வெண்மணியை அசைபோட ஒவ்வொருவரிடமும் ஏதோ விஷயமிருந்தது. புழுதி படர்ந்த சாலையைத் தவிர்த்துவிட்டு வயல் பரப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ராமய்யாவின் குடிசையில் ஒலிக்கும் குரல் நினைவுக்கு வந்தது. ‘சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடி வயல்லே எறங்கனும். சூரியன் மறைஞ்சுதான் கரையேறனும். அதுக்கப்பறம் கூலி வாங்கிட்டு வந்து ஒன்பது மணி, பத்து மணி ஆகியிடும். துண்ட இடுப்பிலே கட்டிக்கிட்டு வேட்டிய அவுத்து அதில நெல்ல வாங்கிட்டு வந்து அந்த பச்ச நெல்ல குத்தி சமைச்சி சாப்பிடனும். சமைச்சி சாப்பிட்டு அதுக்கப்பறம், தண்ணி அடைக்கப் போகணும். வயலுக்கு கிளம்பி விடிகாலம் பரவு வந்து நாலு மணிக்கு வந்து படுக்கறாங்களோ தூங்கறாங்களோ அது தெரியாது.’

இன்னொரு குரல். ‘தாழ்த்தப்பட்டவன் அவன் என்ன வயசா இருந்தாலும் மிராசுதாரர் வீட்டு புள்ள எட்டு வயசா இருந்தாலும் டேய் வாடான்னுதான் கூப்பிடுவான்… ஒரு நா தான் மாப்பிள்ளையா இருக்கமுடியும். அவன் பொண்டாட்டியும் அவனும் மறுநாள், சாணி எடுக்கப்போயிடணும். அவன் வேலைக்கி போயிடணும். அப்புறம் மறுவீடு மாமனார் வீடு அதுஇது எல்லாம் கிடையாது. அந்த ஊர் நாட்டாமைகாரன் வருவான். இந்த வூர் நாட்டாமை அவனும் போய் பொண்ணு மாப்பிள்ளைய அங்க அழைச்சுட்டு போகணும். அய்யா கால்ல விழுந்துட்டு ஏதோ நெல்லோ காசோ கொடுப்பாங்க அதை வாங்கிட்டு வந்துடணும்.’

பெண்கள் வயலில் மீன் பிடிக்கமுடியாது. சாப்பாடு மரக்காலில் கொடுக்கப்படும். டீ குடித்தால் கழுவி வைத்துவிட்டு வரவேண்டும். செருப்பு கூடாது. வேட்டி கூடாது. சைக்கிள் கூடாது. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் தொட்டு அடிக்கமாட்டார் என்பதால் குழந்தைகள் அதை ஒரு சிறப்புச் சலுகையாகக் கருதியிருக்கலாம்.

அடிமாட்டுக் கூலிதான் என்றாலும் அதையும்கூட உரிமையுடன் கேட்டுப் பெற்றுவிடமுடியாது. கொடுக்கும்போது முதுகை வளைத்து வாங்கிக்கொள்ளவேண்டியது. ‘இந்த நிலைமையை மாற்றியவர் பி. சீனிவாசராவ்!’ என்றார் தோழர். ‘சாணிப்பாலையும் சவுக்கடியையும் தலித் மக்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். விலங்குகளாக அடிமைப்பட்டுகிடந்தவர்கள் மனிதர்களாக நிமிர்ந்து நின்றார்கள். கம்யூனிசம் அவர்களுடைய ஊன்றுகோலாக இருந்தது.’

பத்து நிமிட நடைக்குப் பிறகு நினைவிடத்தை நெருங்கினோம். கிராம நூலகம் போல் சிறிய அளவில் வெள்ளையும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு மண்டபம். அருகில் சில கல் வீடுகளும் குடிசைகளும் இருந்தன. முகப்பில் உள்ள நினைவு ஸ்தூபியில் செங்கொடி பறந்துகொண்டிருந்தது.

குறுகலான அந்த மண்டபத்துக்குள் ஒருவர், இருவராக உள்ளே நுழைந்தோம். மிகச் சிறிய அந்த அறையில் இருபது பேருக்கு மேல் நிற்க முடியாது.

சிவப்பு வண்ணத்தில் மலர் மொட்டு போலவும் நெல் மணி போலவும் தீப்பந்தம் போலவும் நினைவு அடையாளம் எழுப்பப்பட்டிருந்தது. உச்சியில் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. நெல்மணிக்கதிர்களும் மலர் இதழ்களும் சுற்றிலும் தூவப்பட்டிருந்தன. பலர் உணர்ச்சி மேலிட அப்படியே நின்றுகொண்டிருந்தனர். கலங்கிய கண்களுடன் சிலர் வட்டமாகச் சுற்றி வந்தனர்.சிலர் நெல்மணிகளை இரு கைகளிலும் அள்ளி ‘இதற்காகத்தானே உயிரை விட்டீர்கள்’ என்று சொன்னபடி, கோயில் அர்ச்சனை போல் தூவிவிட்டனர். செஞ்சட்டைத் தோழர்கள் சிலர் வலக்கரத்தை மேலே உயர்த்தி வீர முழக்கம் இட்டனர். சிலர் வீர வணக்கம் செலுத்தியபடி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இடப்புறத்தி உள்ள சிறிய கதவு வழியாக வெளியேறினோம். வாசலில் அதற்குள் கூட்டம் கூடியிருந்தது. கீழ்வெண்மணிச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் பிரசுரங்களோ, சிறு பிரதிகளோ இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோழரிடம் சொன்னபோது, அவர் எதிரில் சுட்டிக்காட்டினார். நினைவிடத்துக்கு மிகச் சரியாக எதிரில், மிகப் பெரிய கட்டடம் ஒன்று உருவாகிக்கொண்டிருந்தது. ‘புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் நினைவிடம் அது. அங்கே நீங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும். அரசியல் வகுப்புகள் நடத்துவதற்கு வசதியாக பெரிய அறைகளும் உள்ளன. அரசியல் நூல்கள் அனைத்தும் இனி இங்கே கிடைக்கும்.’

இங்கே சிபிஎம் கட்சிக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது? ‘ஒரு காலத்தில் வலுவான கோட்டையாக இருந்தது. இப்போது அப்படிச் சொல்லமுடியாது. கம்யூனிஸ்டுகளை மிகவும் மதிக்கிறார்கள். ஆனால் ஓட்டு என்று வரும்போது திராவிட கட்சிகளின் நினைவு வந்துவிடுகிறது.’ தோழர் தொடர்ந்தார். ‘சிறிது காலத்துக்கு முன்பு, திருமாவளவன் கீழ்வெண்மணியைத் தனக்கான அடையாளமாக மாற்ற முயன்றார். சுற்றுப்பயணம் எல்லாம் செய்தார். ஆனால் அந்த முயற்சி எடுபடவில்லை.’

உழைப்புக்கு ஏற்ற கூலி அளிக்கப்படவேண்டும் என்று விவசாயக் கூலிகள் அறுபதுகளில் குரல் கொடுத்தபோது, பண்ணையார்களும நிலப்பிரபுக்களும் கோபமும் எரிச்சலும் அடைந்தனர்.  சங்கம் கொடுத்த துணிச்சல் இது என்பதால் வன்முறை கொண்டு சங்கத்தைக் கலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 25, 1968 அன்று வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இரு விவசாயிகளை மிராசுதாரர் ஒருவர் தன் வீட்டுக்கு இழுத்துச் சென்று கட்டி வைத்து உதைக்க ஆரம்பித்தார். விஷயம் கேள்விப்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து இருவரையும் மீட்டெடுத்துச் சென்றனர்.

அடிமைகளின் வெற்றி என்றல்லவா இந்தச் சம்பவத்தை வரலாறு பதிவு செய்யும்? அதை அனுமதிக்கமுடியுமா? கொதித்தெழுந்தார்கள் நிலச்சுவான்தார்கள். அவர்களில் ஒருவராக கோபால கிருஷ்ண நாயுடு தனது அடியாட்களை அழைத்துக்கொண்டு வெண்மணிக்குள் புகுந்து தென்பட்டவர்களையெல்லாம் வெறிகொண்டு சுட ஆரம்பித்தார். கோழிக்குஞ்சுகளைப் போல் சிதறியோடினார்கள் மக்கள். சுதந்தர இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் அரங்கேற ஆரம்பித்தது. குண்டடிப்பட்டவர்களும் குழந்தைகளும் பெண்களும் வயதானவர்களும் உயிர் பயத்துடன் கூக்குரல் எழுப்பியபடி ஓடிக்கொண்டிருந்தனர். தெருவின் இறுதியில் அமைந்திருந்த ராமையாவின் குடிசைக்குள் அவர்கள் ஓடியபோது, தப்பித்த நிம்மதியை அடைந்திருப்பார்கள். எட்டடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட குடிசை அது. இருப்பதிலேயே பெரிய மறைவிடம். எனவே, பாதுகாப்பானதும்கூட என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். சில நிமிடங்களில் குடிசைக் கதவு அறைந்து சாத்தப்பட்டது. மீண்டும் அவர்கள் குரல் எழுப்பி கத்துவதற்குள் கதவு பூட்டப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் குடிசை பற்றி எரிய ஆரம்பித்தது. ஆறு பேரால் வெளியில் தப்பி ஓடிவரமுடிந்தது. ஒரு தாய், தன் ஒரு வயது குழந்தையைத் தீயிலிருந்து காப்பாற்ற வெளியில் எடுத்து வீசினாள். தீயைக் காட்டிலும் அடர்த்தியாக எரிந்துகொண்டிருந்தது வெளியில் இருப்பவர்களின் உள்மன வன்மம். தப்பி பிழைத்த அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து தீயில் வீசியெறிந்தார்கள். அப்படியும் ஆத்திரம் தீராததால், குடிசைக்கு வெளியே பயத்தில் உறைந்து கிடந்த மூன்று குழந்தைகளைப் பிடித்து அவர்களையும் நெருப்புக்குள் தள்ளினர்.

நடக்க ஆரம்பித்தோம். ஏதேதோ நினைவுகளை, சோகங்களை, கோபங்களைப் பகிர்ந்துகொண்டே உள்நுழைந்த கூட்டம் இப்போது அமைதியாக திரும்பிகொண்டிருந்தது.

0

மருதன்

__________________

Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 
டோண்டு ராகவன்  March 14th, 2012 at 8:54 am

மனம் பதைக்க வைத்த இந்த நிகழ்வை கூலி உயர்வுக்காக கம்யூனிஸ்டுகள் அப்போதைய திமுக அரசுக்கு சங்கடம் விளவிக்கச் செய்த போராட்டம் என கொச்சை பேசி, மேலும் கொடுஞ்செயல் புரிந்த கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரைக் கூறாது கள்ள மௌனம் சாதித்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்னும் பலிஜா நாயுடுவையும் மறக்கலாகாது.

அன்புடன்,டோண்டு ராகவன்

வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?

ஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.

ங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.

தில் –

கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….

யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!

டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.

செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.

முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.

கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.

ங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள்.நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.

தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.

குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.

ற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!

ரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்!

ரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!

றந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!

றந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!

றந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!

வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.

தீர்ப்பு என்ன தெரியுமா?

முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!

ன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!

ரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!

44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.

தைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

தற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.

தற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.

ந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’

க, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.

ந்த வரலாற்றுக் களங்கம்…

நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…

மிழ்ச் சமுதாயத்திற்குள் இன்னும் நில பிரபுத்துவக் கொலைவெறி இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தப் படுபாதச்செயல் பற்றி ஈவேரா ஆற்றிய எதிர்வினை என்ன?

வேரா சொல்கிறார்:-

‘‘ந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி பொன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்துவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரச நாயகமாகப் போக வேண்டும் அல்லது தனித் தமிழ்நாடு பிரித்துத் தரப்பட வேண்டும் அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வர வேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் – ஜான்சன்’’

மிழ்நாட்டையே நடுங்க வைத்த சம்வத்திற்கு ஈவேரா ஆற்றிய எதிர்வினை இதுமட்டுமே!

து எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

த்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற சாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கொடூரமாக நடத்திவருவது சாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட சாதி இந்துக்களையும் எதிர்க்கவில்லையே ஏன்? அதனால்தானே இந்த 44 உயிர்கள் எரிந்துபோனது?

வேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.

‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

பிராமணருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல் வரும்போது உற்சாகமாக தாழ்த்தப்பட்டோரை உசுப்பிவிடுவதற்காக ஆதரித்த ஈவேரா பிராமணரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதல் வரும்போது தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்க முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களே பிரதான எதிரி. பிராமணரல் லாதார் எதிரிகள் இல்லை. அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பிராமணரல்லாத உயர்சாதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக கட்டமைத்துவிடக் கூடாது என்பதில் ஈவேரா எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே சூத்திரர்கள் பக்கம்தான் இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாகக் கீழ்வெண்மணிக் கொடூரத்தில் ஈவேராவின் எதிர்வினையை நாம் பார்க்கலாம்.

-- Edited by Admin on Sunday 2nd of June 2019 01:40:52 PM

__________________

Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 
கீழ்வெண்மணி

by RV மேல் திசெம்பர் 15, 2010

கீழ்வெண்மணியில் கூலியை உயர்த்த வேண்டும் என்று கேட்டதற்காக எரிக்கப்பட்டவர்களை நாம் எல்லாரும் அனேகமாக மறந்தேவிட்டோம். தமிழ் நாட்டின் மோசமான களங்கம் என்பது எரித்த கோபாலகிருஷ்ண நாயுடு கோர்ட்டில் நிரபராதி என்று வெளியே வந்ததுதான். இன்றைக்கு கீழ்வெண்மணி பற்றி சில சமயம் தலித் சார்பு கட்டுரைகள் குறிப்பிடுகின்றன, அவ்வளவுதான். இன்றைய இளைஞர்களுக்கு இது பற்றி தெரிந்தால்தான் ஆச்சரியம் என்று நினைக்கிறேன்.

இத்தனை மோசமான நிகழ்ச்சி கதைகளிலும் இலக்கியத்திலும் பெரிய இடம் வகிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை போன்ற ஒரு அநியாயம் இலக்கியவதிகளை எழுதத் தூண்டாதது ஆச்சரியம்!

இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல்மூலமாகத்தான் என் ஜெனரேஷன் ஆட்களில் பலர் இதை பற்றி தெரிந்தே கொண்டோம். இத்தனைக்கும் குருதிப்புனல் சுமாரான நாவலே. அதை தேவை இல்லாமல் நாயுடு காரக்டர் ஆண்மைக் குறைவு உள்ளவன் என்று இ.பா. எங்கெங்கோ கொண்டு சென்றார். தனி மனிதக் குறைபாடுகள் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தக் கூடும் என்று இ.பா. சொல்ல நினைத்தாரோ தெரியாது, ஆனால் நான் இந்த புத்தகத்தை பற்றி யாரிடம் பேசினாலும் அந்த ஆண்மைக் குறைவு பற்றி பற்றி பேச்சு வராமல் இருந்ததில்லை. ஒரு விதத்தில் அந்த பயங்கரத்துக்கு இந்த மாதிரி ஒரு விஷயம்தான் காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுவது போலவும், அந்த பயங்கரத்தை கொஞ்சம் cheapen செய்வது போல இருந்தது.

எனக்கு தெரிந்த முக்கியமான புத்தகம் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் என்ற நாவல். இலக்கியத் தரம் என்று பார்த்தால் அவ்வளவு நல்ல நாவல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மிக முக்கியமான ஆவணம். சித்தரிப்பு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு thinly disguised டாகுமெண்டரி போல இருந்தது.

பாட்டாளி என்பவர் எழுதிய கீழைத்தீ என்ற ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. லக்கி லுக் இதற்கு ஒரு அறிமுகம்எழுதி இருக்கிறார். விடுதலை ஆன நாயுடுவை நக்சலைட்கள் கொன்றதை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறதாம். யாராவது படித்திருக்கிறீர்களா? எப்படி இருந்தது?

இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நம் பிரக்ஞையில் இன்னும் அழுத்தமாகப் பதியவில்லை என்பது ஆச்சரியம்தான். மூன்றே மூன்று புனைவுகள்தானா? வேறு யாரும் எதுவும் எழுதவே இல்லையா? சினிமா கினிமா வரவே இல்லையா?

டாக்டர் ருத்ரன் குருதிப்புனல் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற முட்டாள்தனமான திரைப்படமாக வந்தது என்று தகவல் தருகிறார். எனக்கு அந்தப் படத்தைப் பற்றி நினைவிருப்பது மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் என்ற பாட்டுதான். ஜெயமோகன் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பா. கிருஷ்ணகுமார் ராமையாவின் குடிசை என்ற சிறந்த ஆவணப்படம் எடுத்திருக்கிறார் என்று தகவல் தருகிறார்.

__________________

Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 
 இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”

by RV மேல் செப்ரெம்பர் 16, 2010

இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பாப்புலரானது என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு.

இ.பா.வின் நாவல்களில் இது சிறந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு இ.பா.வைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை. அவருடைய அங்கதம், எழுத்து பொதுவாக என் ரசனைக்கு ஒத்து வருவதில்லை.

குருதிப்புனல்கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது நம் வரலாற்றில் அழியாத களங்கம். கூலி அதிகமாக கேட்டதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்த கோபால கிருஷ்ண நாயுடு நிரபராதி என்று கோர்ட்டில் தீர்ப்பு!

இதைப் பற்றி எனக்கு தெரிந்து மூன்று நாவல்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று குருதிப்புனல், இரண்டு சோலை சுந்தரப் பெருமாளின்செந்நெல்“, மூன்று பாட்டாளி எழுதி சமீபத்தில் வந்த “கீழைத்தீ“. இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியம்தான்.

குருதிப்புனல் டெல்லிவாசியான சிவா இரண்டு வருஷத்துக்கு முன் கீழ்வெண்மணி மாதிரி ஒரு கிராமத்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருவதுடன் தொடங்குகிறது. கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும் காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கூலி அதிகம் வேண்டுமென்று போராடுபவர்களுக்கு ராமையாதான் de facto தலைவர். அவருடன்தான் கோபால் தங்கி இருக்கிறான். நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு. தான் வீரியத்தை நிரூபிக்க அவர் நிறைய வைப்பாட்டி வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார். பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டுமென்று எண்ணி அவரிடம் பேசிப் பார்க்கப் போகும்போது ஆண்மையைப் பற்றி கோபால் இரண்டு வார்த்தை விடுகிறான். நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு, ஒரு ஹரிஜனப் பெண் கடத்தப்படுகிறார்கள். துப்பறிவதற்காக கோபால் நாயுடுவின் ஷோ வைப்பாட்டி பங்கஜத்தை சந்திக்கப் போகிறான். பங்கஜத்துக்கு எப்போதுமே கோபால் மேல் கண். கடத்தப்பட்டவர்கள் பங்கஜத்தின் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போது ஏற்படும் அடிதடியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். ராமையா மேல் பழி போட்டு அரெஸ்ட். தகராறு வலுத்துக்கொண்டே போகிறது. ஒரு “பறையன்” நாயுடுவை அடிக்கிறான். கடைசியில் நாயுடுவின் ஆட்கள் போலீஸ் பாதுகாப்போடு குழந்தைகளும் பெண்களும் நிரம்பி இருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறார்கள், கோபால் வன்முறையே வழி என்று தீர்மானிக்கிறான்.

நாயுடுவுக்கு கொலை வெறி கிளம்ப மூன்று காரணங்கள்: கூலிக்கார பசங்க நம்மை எதிர்த்து பேசுவதா என்ற ஆத்திரம்; உயர்ந்த ஜாதியில் பிறந்த தன்னை ஒரு பறப் பையன் அடித்துவிட்டானே என்ற வெறி; எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் குறையை சுட்டிக்காட்டும்போது வரும் கையாலாகாத கோபம். கூலிக்காரர்களின் “புரட்சி” தோற்க நாயுடு தரப்பின் பண, அரசியல், ஜாதி பலமும், தற்செயலாக புரட்சிக்கு தலைமை ஏற்கும் கோபால்/சிவாவின் அனுபவமின்மையும் காரணங்கள்.

புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது. படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள் இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம். அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம்.🙂

ஜெயமோகன் இதை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதைநூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

குறைகள் இருந்தாலும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.

பிற்சேர்க்கை: நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்கள்:

ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து இந்த நாவலை 80களில் திரைப்படமாக்கினார். கதாநாயகி இல்லாமற் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது.

குருதிப்புனல் முன்னுரையில் இ.பா.

தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள் மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப்படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் க.நா. சுப்ரமண்யம்

__________________

Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 
கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அவற்றையே மறுமுறை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

- George Santayana, தத்துவ அறிஞர்

இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது.

- Will Durant, வரலாற்றாசிரியர்

__________________

Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 
வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?

ஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.

ங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.

தில் –

கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….

யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!

டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.

செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.

முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.

கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.

ங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள்.நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.

தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.

குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.

ற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!

ரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்!

ரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!

றந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!

றந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!

றந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!

வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.

தீர்ப்பு என்ன தெரியுமா?

முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!

ன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!

ரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!

44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.

தைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

தற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.

தற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.

ந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’

க, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.

ந்த வரலாற்றுக் களங்கம்…

நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…

மிழ்ச் சமுதாயத்திற்குள் இன்னும் நில பிரபுத்துவக் கொலைவெறி இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தப் படுபாதச்செயல் பற்றி ஈவேரா ஆற்றிய எதிர்வினை என்ன?

வேரா சொல்கிறார்:-

‘‘ந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி பொன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்துவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரச நாயகமாகப் போக வேண்டும் அல்லது தனித் தமிழ்நாடு பிரித்துத் தரப்பட வேண்டும் அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வர வேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் – ஜான்சன்’’

மிழ்நாட்டையே நடுங்க வைத்த சம்வத்திற்கு ஈவேரா ஆற்றிய எதிர்வினை இதுமட்டுமே!

து எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

த்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற சாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கொடூரமாக நடத்திவருவது சாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட சாதி இந்துக்களையும் எதிர்க்கவில்லையே ஏன்? அதனால்தானே இந்த 44 உயிர்கள் எரிந்துபோனது?

வேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.

‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

பிராமணருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல் வரும்போது உற்சாகமாக தாழ்த்தப்பட்டோரை உசுப்பிவிடுவதற்காக ஆதரித்த ஈவேரா பிராமணரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதல் வரும்போது தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்க முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களே பிரதான எதிரி. பிராமணரல் லாதார் எதிரிகள் இல்லை. அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பிராமணரல்லாத உயர்சாதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக கட்டமைத்துவிடக் கூடாது என்பதில் ஈவேரா எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே சூத்திரர்கள் பக்கம்தான் இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாகக் கீழ்வெண்மணிக் கொடூரத்தில் ஈவேராவின் எதிர்வினையை நாம் பார்க்கலாம்.

__________________

Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 
சுயராஜ்யம் (முதல் அத்தியாயம்) - சித்திரபுத்திரன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

3.4.1948  - குடிஅரசிலிருந்து

கத்தி இன்றி இரத்தமின்றி இந்திய சுதந் திரம் பெற நடத்திய அகிம்சைப் போ ராட்டத்தில் 945 தபால் ஆபீசுகள், 332 ரயில்வே ஸ்டேஷன்கள் கொளுத்தப்பட்டன, இடிக்கப்பட்டன. 60 இடங்களில் ரயில் கவிழ்க்கப்பட்டன.

இவை தவிர, கொளுத்தப்பட்ட சர்க்கார் கச்சேரிகள் பல. கொளுத்தப்பட்ட கோர்ட்டு ரிகார்டுகள் ஏராளம். கத்தரித்த தந்திக் கம்பிகள் பல மைல் நீளம்.

பெயர்த்த தண்டவாளங்கள் பல மைல்கள் தூரம், கொல்லப்பட்ட அதிகாரிகள் பலர் ஆகிய இவை யாவும் உங்களுக்குத் தெரிந்தது தானே.

சுதந்திரம் கிடைத்த பின்பு

இவைதாம் போகட்டும் என்றால் சுதந் திரம் கிடைத்த பின்பும் அகிம்சா, சுயராஜ்யத்தில் இடிக்கப்பட்ட வீடுகள் பல, கொளுத்தப்பட்ட கட்டடங்கள், கடைகள் பல, கொல்லப்பட்ட மக்களோ பலப்பல. கற்பழிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பலபல என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே.

இந்து முஸ்லிம் ஒற்றுமை

சுயராஜ்யம் கிடைத்து விட்டால் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்றார் காந்தியார். ஆனால் சுயராஜ்யம் கிடைத்த பிறகு நூற்றுக்கணக்கான ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் கொள்ளை இடப்பட்டன. முஸ்லிம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம் தொழில் ஸ்தாபனங்கள் கொளுத்தப் பட்டன. இவையும் உங்களுக்குத் தெரிந் ததுதான்.

இவ்வளவு தானா?

இவ்வளவும் தவிர இன்னமும் என்ன நடந்தது என்று பாருங்கள். ஏராளமான எதிர்க்கட்சியார் கூட்டங்கள் குழப்பத்தால், காலித்தனத்தால் கலைக்கப்பட்டன. அவர் களது மகாநாட்டுக் கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. மகாநாட்டு மக்களை அடித்துக் கண், கால் ஊனமாக்கி அவர்களது சாமான்கள், பணங்கள் வழிப்பறி செய்யப்பட்டன.

என்ன நடந்தது?

இவ்வளவு காரியம் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்வதற்கு அகிம்சா ஆட்சிக்கு உரிமை ஏற்பட்டும், இவ்வளவும் போதாமல் இந்தத் தர்மராஜ்யத்தில் அடக்குமுறைச் சட்டங்கள் ஏராளமாக ஒவ்வொரு மாகாணத்திலும் செய்யப்பட்டன.

இவ்வளவோடு நிற்கவில்லை

எங்கு பார்த்தாலும் ஸ்ட்ரைக்கு, ஸ்ட் ரைக்கு! வேலை நிறுத்தம், வேலை நிறுத்தம்! என்பதாகவே கக்கூசு எடுப்பவர்கள் முதல் செக்ரட்டெரியேட் அதிகாரிகள் வரை நடந்தவண்ணமாயிருக்கின்றன.

பஞ்ச தேவதை திருவிளையாடல்

சோத்துப் பஞ்சம், துணிப் பஞ்சம் தாண்ட வமாடின.

வியாபாரிகள் கள்ள மார்க்கெட்டும், சட்டசபை மெம்பர்கள் கொள்ளையும், அதி காரிகள் லஞ்சமும், மந்திரிகளின் பாரபட்ச அநீதியும் ஆனந்தக் கூத்தாடின.

சந்தடி சாக்கில் கந்தப்பொடிக்கு கால் பணம் என்பதுபோல் வருணாசிரமம் வரம்பு கடந்து ஆட்சி புரிந்தது.

ஆண்டவனிடம் பிராது

இவ்வளவு நடந்தால் பிறகு மக்கள் என்ன செய்வார்கள். அழுதார்கள், ஆத்திரப்பட் டார்கள்,  ஆண்டவனிடம் முறையிட்டார்கள். ஆண்டவன்தான் என்ன செய்வான்? ஆண் டவனும் பார்ப்பன ரூபமாக இருந்துதானே உலகை நடத்துகிறார்.

இவை எல்லாம் ஆண்டவன் செயல்தானே?

ஆண்டவன் காரணம் என்றால் என்ன? பார்ப்பனர் காரணமென்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே?

எனவே, ஆண்டவன் பிராதை வாங்கிக் கொண்டு யோசித்தார் யோசித்தார், வெகுதூரம் யோசித்தார். எவ்வளவு தூரம்? யோசனை தூரம் யோசித்தார்.

யோசித்து என்ன முடிவுக்கு வந்தார்? வந்தார் ஒரு முடிவுக்கு. கண்டுபிடித்தார் ஒரு சங்கதியை, அதாவது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததுபோல் கண்டுபிடித்தார்!

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard