சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் இறைவனான சிவனைக்குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற என... இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக்காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.
லிங்கம் வானத்தைக்குறிக்கும். ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும். விண்ணுக்கும் மண்ணுக்குமாக சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது. மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக் குறிக்கும். அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும். இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது. இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்.
மற்றொரு கருத்தின்படி லிங்கமானது ருத்ர பாகம் விஷ்ணு பாகம் பிரம்ம பாகம் சக்தி பாகம் என நான்கு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என லிங்கம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.
ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்ர பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.
ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பூமியாகும். இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.
லிங்கம் பெயர்க் காரணம்
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். சமஸ்கிருத கூற்றின்படி, 'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். 'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்.
பொதுவான விளக்கம்:- லிங்கம் என்பது, உருவமற்ற அருவ வடிவிலான பொருளின் அடையாளம் எனப் பொருள். கை, கால் போன்ற எந்த உருவ அமைப்பும் இல்லாமல் அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவனின் அடையாளமே லிங்கமாகும். இவ்வுலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும், இறுதியில் பிரளய காலத்தில் அதனதன் பெயர் மற்றும் உருவம் மறைந்து அருவமாக இறைவனிடத்தில் (லிங்கத்துக்குள்) அடங்குகிறது என்னும் சிறப்பும் லிங்கத்துக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியன்று சிவராத்திரி எனப்படும். மாக (மாசி) மாதத்தில் நிகழும் இந்த நாள் மகா சிவராத்திரி எனப்படும். இந்த மகா சிவராத்திரி நாளன்று நள்ளிரவு நேரத்தில் சிவலிங்கத்தின் வடிவத்தில் சிவன் தோன்றினார் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள். இவரே #லிங்கோத்பவ_மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். அந்த நாள் முதல் சிவனை பக்தர்கள் லிங்க வடிவில் பூஜிக்க ஆரம்பித்தார்கள். ஒளியே வடிமாக நின்ற ஈசனை வானில் பிரம்மனும், நிலத்தினுள் விஷ்ணுவும் தேடிப்போய் கண்டடையமுடியாமல் திரும்ப காரணமான வடிவம்தான் இலிங்கம். அந்த எல்லையற்ற ஒளிவடிவானவனையே இலிங்கமாக இந்துக்கள் வழிபடுகிறார்கள்.
தஞ்சை ஆவுடையார்கோவில் லிங்கமும்.... அதைத்தாங்கியிருக்கும் தஞ்சை கோவிலும்.... இந்த அமைப்பை உடையவையே.... இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமாயின்..... கோவில் இருக்கும் நிலமும் அப்படிப்பட்டது..... ஒரே ஒற்றைப்பாறைக்கு மேலே 0-0° கோணத்தில் எழுப்பப்பட்ட கோவில் அது.... இலிங்கத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் ஆவுடையார் எனப்படும் பீடம்.... கோவில் கோபுரத்துக்கு இருக்கும் பிரகார தளம்.... கோவிலை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் அகழி மற்றும் நந்தவனம் என அனைத்துமே ஒன்றை லிங்கமாகவும் மற்றையதை ஆவுடையார் எனவும் கருதும்படி ஆவுடையார் சிறப்பை உணர்த்துகின்றன. எளிதில் புரியும்படி சொல்லவேண்டுமாயின்.. தஞ்சை சமவெளியில் ஒற்றைப்பாறைக்குமேலே எழுப்பப்பட்டிருக்கும் ஆவுடையார் கோவிலும் கூட லிங்க வடிவமேயாகும்.
சொற்பொருள்
சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச்சொல்லாகும். லிங்க வடிவம், வளம் என்பதற்கான குறியீடாக கொள்ளப்பட்டு, பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி பல பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது.
லிங்கம் பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது
இலிங்க வகைகள்
சிவபெருமான் சதாசிவ மூர்த்திதோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.
சிவ சதாக்கியம் (அ) மூர்த்தி சதாக்கியம் கர்த்திரு சதாக்கியம் கன்ம சதாக்கியம்
இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், லிங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,
சுயம்பு லிங்கம் - தானாய் தோன்றிய லிங்கம். தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம். காண லிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம். தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம். ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம். இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம். அசுர லிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம். மானுட லிங்கம் - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
இவை தவிர.....
பரார்த்த லிங்கம். சூக்கும லிங்கம், ஆன்மார்த்த லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள் உள்ளன.
பெரிய கோவில்
மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.இது 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.