நானும் மற்றொரு மனிதரும் "பனூ ஆமிர்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம்.
அவள் கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்களில் ஒருவரைத்
திருமணம் செய்துகொள்ளுமாறு அவளிடம் நாங்கள் கோரினோம். அவள், "(மணக்கொடையாக)
நீங்கள் என்ன கொடுப்பீர்கள்?" என்று கேட்டாள். நான், "எனது மேலாடையை" என்றேன். என்னுடன்
வந்திருந்தவர் "எனது மேலாடையை" என்று கூறினார். என்னுடன் வந்திருந்தவரின் மேலாடை
எனது மேலாடையைவிடத் தரமானதாக இருந்தது. ஆனால், நான் அவரைவிட (வயது குறைந்த)
இளைஞனாயிருந்தேன். அவள் என்னுடன் வந்திருந்தவரின் மேலாடையைக் கூர்ந்து பார்த்தபோது,
அது அவளுக்குப் பிடித்தது. அதே சமயத்தில், அவள் என்னைப் பார்த்த போது, நானும் அவளுக்குப்
பிடித்திருந்தேன். பிறகு அவள், (என்னைப் பார்த்து) "நீரும் உமது மேலாடையுமே எனக்குப் போதும்"
என்றாள். நான் (அவளை மணமுடித்து) அவளுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்முத்ஆ முறையில் மணமுடிக்கப்பட்ட பெண்ணைத்
தம்மிடம் வைத்திருப்பவர், அப்பெண்ணை அவளது வழியில் விட்டுவிடட்டும்" என்று கூறினார்கள்.
மூன்று நாட்களுக்கு மட்டுமேயான திருமணத்துக்கு அனுமதி கொடுத்த அழகிய மார்க்கம்....
2722. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) மற்றும் சலமா பின் அல்அக்வஉ (ரலி) ஆகியோர் கூறியதாவது: (நாங்கள் "ஹுனைன்" அல்லது "அவ்தாஸ்" போரில் இருந்தபோது) எங்களிடம் அல்லாஹ்வின்
தூதருடைய அறிவிப்பாளர் ஒருவர் வந்து, "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்து
கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு (தாற்காலிகமாக)
அனுமதியளித்துள்ளார்கள் என்று அறிவிப்புச் செய்தார்.