பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று பலர் பேசுகிறார்கள். இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே தீர்வாக இருக்கும். ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அதன் மக்களிடையே சகிப்பு தன்மையும், பரஸ்பர அன்பும், தேச பற்றும் இல்லாது போனால், அந்த பொருளாதார பலம் அழிவுக்கே வழி வகுக்கும். மேலும் இந்த மூன்றும் இல்லாது போனால் பொருளாதார வளர்ச்சி என்பதே சாத்தியம் இல்லைதான்.
பாரதம் என்கிற இந்த தேசம் எத்தனை பழமையானது ? பழங்காலத்திலேயே எத்தனை உயர்ந்து இருந்திருக்கிறது என்று பார்த்தோம் என்றால் நம்மை அது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஐரோப்பிய சமூகம் ஆதிவாசிகளாய் இருந்த காலத்திலேயே மிக உயர்ந்த விஞ்ஞானத்தை நம் வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. சிந்து சமவெளி நாகரீகம் பல்கலைகழகங்களையும், திட்டமிட்ட நகரங்களையும் உருவாக்கி வைத்திருந்த கால கட்டத்தில் ஐரோப்பியர்கள் கற்களை உரசி தீ மூட்ட அறிந்திருந்தார்களா ? என்பது கூட சந்தேகமாக இருக்கிறது. யேசு பிறந்ததாய் வெள்ளையர்கள் குறிப்பிடும் காலத்திற்கு முன்பே உலகின் முதல் அனையாம் கல்லனையை கரிகால சோழன் கட்டி விட்டான். அறுவை சிகிச்சைகளும், வானியல் சாஸ்திரங்களும், இலக்கிய கோட்பாடுகளும், பலவிதமான தத்துவ நெறிகளும் புழக்கத்தில் இருந்து விட்டன. உலகின் தலை சிறந்த நாடாக பாரதம் திகழ்ந்தது.
பாரதம் அகண்டு பரவி இருந்தது. அதன் எல்லைகள் காந்தாரம் எனும் ஆப்கான் முதல் பர்மா மற்றும் தெற்கே இலங்கை வரை விரிந்து பரவி இருந்தது. பல பேரரசர்களும், சிற்றரசர்களும் அதை ஆண்டு வந்திருந்தாலும் தர்மமே அதனை இனைக்கும் சக்தியாக இருந்தது. யுத்தம் முதல், சாமான்ய நிகழ்வுகள் வரை தர்ம நெறிப்படியே நடத்தப்பட்டன. பஞ்சமோ, பட்டினி சாவுகளோ, பெருநோய்களின் தாக்கமோ பண்டைய பாரதத்தில் அறியப்படவில்லை.
ஆனால் என்ன நடந்தது அதன் பிறகு ? அற்புதமான நாடாக இருந்த பாரதம் எப்படி அடிமை நாடாக மாறியது ? அந்நியர்கள் எப்படி நமக்குள் உட்புகுந்தார்கள் ? என்னவெல்லாம் அவர்கள் செய்தார்கள் ? அந்நிய சதிகாரர்கள் இந்த தேசத்தில் ரத்த ஆறு ஓட வைத்த சரித்திர சம்பவங்களில் முக்கியமானவற்றை ஆதாரத்தோடு ஆராய்வோம்.
உலக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு மிக முக்கியமானதாக இருக்கிறது. அது ஏன் என்பதை இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கையில் நாம் அறிந்துக் கொள்ளலாம். பாரதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து துறைகளிலும் தலை சிறந்து விளங்கி இருந்த நிலையில். பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டில் கேட்கவும் வேண்டுமா ? பழம்பெருமை வாய்ந்த நம் தேசத்திற்கு என்ன நடந்தது என்று அறிவதற்கு நாம் கால இயந்திரத்தில் அமர்ந்து ஏழாம் நூற்றாண்டிற்கு பயனித்தாக வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டில் கிரேக்கம், எகிப்து, பாரசீகம், சீனா என மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரதம் நாகரீகத்தின் மிக உச்சத்தில் இருந்தது. அது மட்டும் அல்ல, சிந்து சமவெளி நாகரீகம் தோன்றி 4000 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆரியப்பட்டா, வராஹமிஹிரர், திருவள்ளுவர், அகஸ்தியர், காளிதாஸர், சிஷ்ருதர், பரத்வாஜர், பாணினி, தொல்காப்பியர், என பல்வேறு ரிஷிகளும் மகான்களும் பல துறைகளில் தங்கள் பங்களிப்பை தந்து சென்று விட்டனர். இரண்டாம் புலிகேசி சாளுக்ய தேசத்தையும், நரசிம்மவர்மன் பல்லவ நாட்டையும் ஆண்டுக் கொண்டிருந்தார்கள். சோழப் பேரரசு மிகப்பெரும் அளவில் தெற்கே விரியத் தொடங்கிய காலம். பாரதத்தின் வடக்கு மேற்கு, கிழக்கு என விரிந்திருந்து, இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட குப்த சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட முடிவடைந்த காலம் அது. தமிழ் இலக்கியங்களும், பண்பாடும், ஆன்மீகமும் செழித்து கொண்டிருந்த காலம்.
உலகின் முதல் பல்கலைகழகமாக நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ராவல்பிண்டி (பாகிஸ்தான்) அருகே தொடங்கப்பட்ட "தக்ஷசீலா" பல்கலைகழகம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அது போலவே பொது ஆண்டு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட உலக புகழ் பெற்ற "நலந்தா பல்கலைகழகம்" இன்றைய பீகாரில் மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 800 அடி நீளமும், 1600 அடி அகலமும் கொண்ட கட்டிடங்கள் அதில் இருந்தது, 30 ஏக்கர் பரப்பளவு் கொண்ட நலந்தா பல்கலை கழகம் உலகில் உள்ள இன்றைய நவீன பல்கலைகழகங்கள் அனைத்திற்கும் சவால் விடும் வகையில் அது இருந்தது.
குப்தர்கள் காலத்தில் செழித்து வளர்ந்த அந்த பல்கலைகழகம். ஏழாம் நூற்றாண்டில் சீனா, திபெத், மத்திய ஆசியா, கொரியா, இந்தோனேஷிய மற்றும் கிரேக்க மாணவர்கள் அதில் பயின்று வந்தார்கள். அதில் உள்ள நூலகம் ஒன்பது அடுக்குகள் கொண்டதாக இருந்தது என திபெத்திய யாத்ரீகர்கள் குறிப்பிடுகிறார்கள். இலக்கணம், தர்க்க சாஸ்திரம், விஞ்ஞானம், வானியல் சாஸ்திரம், இலக்கியம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் உலகமெங்கும் இருந்து வந்து மாணவர்கள் பயின்றார்கள். அதன் நிர்வாகம் தனி ஒருவரால் இல்லாமல் ஒரு திறமையான நிர்வாக குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
பாரதம் இப்படி நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தான் மேற்கே கற்கால பழக்க வழக்கங்களோடு இருந்த அரேபிய பாலைவனத்தில் ஒரு மிகப்பெரும் சூறாவளி மையம் கொண்டிருந்தது. அது உலகையே அழிக்கப் போகிறது என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.