மதபோதகவர் பிடியில் சிக்கிய எனது மனைவியை மீட்டு தாருங்கள் என்று குமரி எஸ்பியிடம் சலவை தொழிலாளி புகார் செய்துள்ளார்.
நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சலவை தொழிலாளி ஒருவர், எஸ்பி அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் எனக்கு மனைவி, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எங்கள் ஊரில் உள்ள திருச்சபையில் போதகராக உள்ள ஒருவர், என் குடும்பத்துடன் நெருங்கி பழகினார். மனைவி, குழந்தைகள் போதகர் இல்லத்துக்கு சென்று சேவைகள் செய்வார்கள். ஒருநாள் திடீரென தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று என் மனைவியை அனுப்பி வைக்குமாறும் கூறினார். போதகர் மீதான நம்பிக்கையில் மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட போதகர், என் மனைவிக்கு ஆசைவார்த்தைகள் கூறி மயக்கி உள்ளார். இதன் பிறகு அவர்களுக்கு ரகசிய தொடர்பு ஏற்பட்டது. மனைவியின் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பார். இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள். இதன்பிறகு இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர். நான் கேட்ட போது, போதகர் என்னை மிரட்டினார். என் மனைவிக்கு ஆறுதல் கூறுவது போல் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். என் வீட்டுக்கு வந்து காரில் ஏற்றிச் செல்வார். இருவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து என்னிடம் தெரிவித்துள்ளனர்.
போதகரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இப்ேபாது என் மனைவியை அவரின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவரது பேச்சை அப்படியே மனைவி கேட்கிறார். போதகரின் பிடியில் உள்ள மனைவியை மீட்டு தர வேண்டும். எனது உயிருக்கும், குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் மனுவுடன் போதகர் அனுப்பி வைத்த எஸ்.எம்.எஸ். ஆதாரங்கள் மற்றும் இருவரும் பல மணி நேரம் பேசிய ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.