கிறிஸ்தவ தொன்மக்கதையில் பிரளயத்திலிருந்து (கிறிஸ்தவ நம்பிக்கையின் படி ஏசுவின் தகப்பனான) யஹீவா தேவனால் நோவா என்பான் காப்பாற்றப்படுகிறான். ஏனெனில் அவனே யஹீவா தேவனுக்கு விசுவாசமானவனாம் ஆனால் அவன் அதீதமாக திராட்சை மது அருந்தி வெறியில் ஆடை நழுவக் கிடக்கிறான். இனி பைபிள்:
அப்போது கானானுக்கு தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேதும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் தோள் மீது போட்டுவித்து பின்னிட்டு வந்து தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் எதிர்முகமாய் போகாதபடியினால் தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை காணவில்லை. நோவா திராட்சை ரசத்தின் வெறி தெளிந்து விழித்த போது தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். யாப்பேதை தேவன் விர்த்தியாக்குவார் ; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான் கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். (ஆதி 9: 22-27)

இந்த பைபிள் வாசகங்கள்தான் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தவும் அவர்கள் மீது எண்ணற்ற கொடுமைகளை செய்ததுமான வரலாற்று நிகழ்வுகளை நியாயப்படுத்த கிறிஸ்தவ மிசிநரிகளாலும் போதகர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் எப்போதுமே இனவாதத்தை எதிர்த்ததில்லை என்பது மட்டுமல்ல எப்போதெல்லாம் இனவாத வெறுப்பியல் எழுந்துள்ளதோ அப்போதெல்லாம் அங்கே இனவாத வெறுப்பியலை தனது மத மேலாதிக்கத்துக்காக ஆதரித்துள்ளது. அது அமெரிக்க தோட்டங்களில் வதைக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்களை கொடுமை செய்த வெள்ளையராகட்டும், ஹிட்லராகட்டும், ருவாண்டா இனப்படுகொலைகளாகட்டும் அல்லது ஈவெராவாகட்டும் அல்லது மு.கருணாநிதி ஆகட்டும். வெள்ளை மிசிநரி 'ஆராய்ச்சியாளர்கள்' அவர்கள் சென்ற பிரதேசங்களில் வாழ்ந்த வேற்று இன மக்களை ஹாமின் சந்ததிகளாக காட்டும் 'ஆராய்ச்சிகளில்' ஈடுபடுவர். இதன் மூலம் அவர்கள் முறை தவறியவர்கள் நாகரிகத்தில் வெள்ளையர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அதே போல ஆன்மிக புலத்திலும் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அல்லது கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் என்பதாகக் காட்டுவார்கள். கறுப்பின மக்கள் மீது கிறிஸ்தவம் அவிழ்த்துவிட்ட வன்முறைகளையும் அடக்கு முறையையும் இனப்படுகொலைகளையும் நியாயப்படுத்த இந்த விவிலிய இனவாத போலி ஆராய்ச்சி பயன்படுத்தப்பட்டதை ஸ்டீபன் ஆர் கெய்ன்ஸ் எனும் வரலாற்று பேராசிரியர் அவர் எழுதிய 'நோவாவின் சாபம்: அமெரிக்க அடிமை முறைக்கு விவிலிய அடிப்படையில் ஆதரவு' (Noah's curse: Biblical support for American slavery) எனும் நூலில் விவரித்துள்ளார். அதிலுள்ள சில விசயங்களை பார்த்தால் இந்த மிசிநரி கும்பலின் விவிலிய அடிப்படையிலான இன ஆராய்ச்சியின் பின்னால் இருக்கும் இரத்தம் பருகும் விசமத்தனம் விளங்கும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்நூல் கூறும் தரவுகளை நோக்கிய பிறகு இந்தியாவில் இந்த இனவாத மத மேலாதிக்கவாதிகள் ஈடுபட்டுள்ள விசமத்தனங்களை காணலாம்.

"அமெரிக்காவில் அடிமை அமைப்புக்கு எதிர்ப்பு அதிகமாக அதிகமாக அடிமை அமைப்பு ஆதரவாளர்கள் 'நோவாவின் சாபம்' என்பதை தங்கள் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அவர்களது பிரசுரங்களில் அடிமை அமைப்புக்கு ஆதரவான பிரச்சாரங்களில் விவிலிய-ஆதியாகமத்தின் 9 ஆவது அத்தியாயம் முக்கியமான இடத்தைப் பெற்றது."

அமெரிக்காவில் உள்நாட்டு யுத்த காலகட்ட அடிமை-அமைப்பு ஆதரவு அறிவுசீவிகள் வட்டாரத்தில் ஹாமின் ஆப்பிரிக்க தொடர்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியமாகிவிட்டது. அமெரிக்க அடிமை அமைப்பின் உச்சநிலை காலகட்டத்தில் ஹாமினை ஆப்பிரிக்க கறுப்பின மக்களுடன் தொடர்பு படுத்துவதற்கு எவ்வித சான்றும் கூட தேவையில்லாமல் அது உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகிவிட்டது.


ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக விவிலியத்தை வாசிப்பவர்கள் ஹாமையும் அவன் சந்ததிகளையும் அடிமை அமைப்பினை நியாயப்படுத்தவும் பாலியல் வக்கிரங்கள் பாலியல் ஒழுக்கமின்மை என்பவற்றுக்கு காரணமாகவும் காட்டி வந்துள்ளார்கள். விக்கிர வழிபாட்டு மதங்கள் உருவாக அவர்களே காரணம் என கூறினர். கொடுமை, திருட்டு, கலகங்கள் , தெய்வ நிந்தனை போர் இறைக்கொலை ஆகிய அனைத்துக்கும் அவர்களே காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமந்தார்கள்.
ஆக, ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் உண்மை வரலாறு மற்றும் அவர்களது சொந்த தொன்மங்கள் பாரம்பரியங்கள் ஆகியவை மறக்கடிக்கப்பட்டு கிறிஸ்தவ புனைகதை ஒன்று அவர்களின் வரலாறாக அவர்கள் மீது சுமத்தப்பட்டு அந்த புனனகதையின் அடிப்படையில் அவர்கள் மீதான கொடுமைகள் நியாயப்படுத்தப்பட்டன.



இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தவும் மதமாற்றவும் கிறிஸ்தவ மிசிநரிகள் செய்த இதே 'ஆராய்ச்சி' விசமத்தனம் இன்றைக்கு இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது - அதுவும் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் முழு முயற்சியுடன் என்பது அதிசயமாக இருக்கிறதா?
இதோ கிறிஸ்தவ டயஸீஸ்களில் விற்கப்படும் 'India is a christian nation' எனும் நூலில் காணப்படும் விசமத்தனமான இனவாத பிரச்சாரம்.


இந்நிலையில் இந்த மிசிநரி கோட்பாட்டினைக் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறியதை இங்கே பார்க்க வேண்டும்.
"ஆரியப்படையெடுப்புக் கோட்பாடு என்பது ஒரு புனைவு ஆகும். அது ஒரு வக்கிரம் பிடித்த ஆராய்ச்சியின் விளைவாகும். அது தரவுகளின் அடிப்படையில் உருவானதல்ல. "என பாபா சாகேப் அம்பேத்கர் கருதினார். அவர் தெள்ளத்தெளிவாக கூறினார்:
"சாதியை குறித்து 'ஆராய்ச்சி' செய்யும் ஐரோப்பியர்கள் ஏற்கனவே நிறம் குறித்த முன்முடிவுகள் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவே அதனையே இந்திய சாதி குறித்த பிரச்சனைக்கும் அடித்தளமாக்கினார்கள். ஆனால் உண்மையிலிருந்து இது போல விலகிய விசயம் வேறெதுவும் இல்லை. டாக்டர்.கேட்கர் 'அனைத்து அரசரும் திராவிட-இனம் என கருதப்பட்டாலும் ஆரிய-இனம் என (இன்றைய ஆராய்ச்சியாளரால் -அநீ) ஆரியரே' எனக்கூறுவது முற்றிலும் சரியான முடிவாகும். எந்த ஒரு சமுதாயமும் ஆரிய இனமா திராவிட இனமா என்பதெல்லாம் இந்திய பாரம்பரியத்தில் ஒரு கேள்வியே இல்லை ஐரோப்பிய 'ஆராய்ச்சியாளர்கள்' அத்தகைய பிரிவினையயக் கொண்டு வரும் வரை."மேலும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்:
"அந்தணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. அந்தணர்கள் திராவிடரெனில் தலித்துகளும் திராவிடரே. அந்தணர்கள் நாகர்களெனில் தலித்துகளும் நாகர்களே. அந்தணர்களும் தலித்துகளும் வெவ்வேறு இனத்தவர் எனும் ஐரோப்பிய கோட்பாடு உண்மைத் தரவுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவு ஆகும்."அண்ணல் அம்பேத்கர் வேதங்களையும் இதிகாசங்களையும் சமுதாய யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்து ஆராய்ந்து கூறிய இந்த முடிவினை அறிவியலும் உண்மை என ஒத்துக்கொண்டு உள்ளது.
அண்மையில் PNAS வெளியிட்ட ஆய்வு ஒன்று 'A prehistory of Indian Y chromosomes: Evaluating demic diffusion scenarios' (January 24, 2006 | vol. 103 | no. 4 | 843-848)
அதன் முடிவினை பின்வருமாறு கூறுகிறது:
"Y க்ரோமோஸோம் தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆரரய்ச்சி முடிவுகள் இந்தியாவிற்குள் பெரும் படையெடுப்போ புலப்பெயர்வோ நடந்தது எனும் கோட்பாட்டுக்கு எதிராகவே அமைந்துள்ளன."ஆனால் இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் மக்களின் அறியாமையை பயன்படுத்தி மதம் வளர்க்க போலி இனவெறி கோட்பாடுகளை பரப்பும் கிறிஸ்தவ மிசிநரிகளை என்னவென்பது. அல்லது தங்களை கீழ்மைப்படுத்தும் இனவாதக் கோட்பாடுகளை மிசிநரிகள் கூற அதனை ஏற்று அதற்கு 'ஆமாம் சாமி' போடும் நம்மூர் 'தமிழின காவலாளிகளை' என்னவென்பது?
அது போலவே நோவாவின் சந்ததிகள் உலகில் சென்று அங்குள்ள இனங்களானார்கள் என்கிற பிற இனத்தவர், மதத்தவர் மீது மிசிநரிகள் திணித்த கிறிஸ்தவ புனைகதையும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்தே மானுட இனம் பரிணமித்து பரவியது மரபணு ஆராய்ச்சியால் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எனில் ஏன் இன்றைக்கும் இத்தகைய பொய்யான இனவாதங்களை 'ஆராய்ச்சி' என்ற பெயரில் மிசிநரிகள் பரப்ப வேண்டும்? இதுதான் மிசிநரி கருத்தாக்கங்களின் இரட்டை நிலை. கீழே உள்ள ஓவியத்தையும் புகைப்படத்தையும் பாருங்கள். இவற்றுக்கான தொடர்பு என்னவோ அதுதான் அன்பை போதிப்பதாக கூறும் கிறிஸ்தவத்துக்கும் அது தன் மேலாதிக்கத்துக்காக பரப்பும் இனவாத வெறுப்பியலுக்குமான தொடர்பு.


கிறிஸ்தவ இறையியல் இல்லாமல் நாசி வெறுப்பியல் இல்லை. மற்ற இனவாத வெறுப்பியல் கோட்பாடுகளான ஹட்டூ-டட்ஸி, திராவிட-ஆரிய இனவாதம் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.
உலகையே பாழ்படுத்தும் இந்த வியாதி அழிய மருந்தொன்றிருக்குது. அதுதான் பாரதத்தின் இந்து தருமம்.
