ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானின் நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக அனுசரிப்பவர்கள் சூரிய கடவுளைதான் வணங்குகின்றனர் என்று சவன்த் டே அடவன்டிஸ்ட்காரர்கள் என்ற கல்ட் குரூப்புகள் அப்படி சொல்வதினால் ஞாயிற்றுக்கிழமை ஆலய ஆராதனை நடத்துகிறவர்கள் அனைவரும் சூரிய ஆராதனைக்காரர்களாகிவிட மாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்கள் விசுவாசிகளும் அல்ல ஊழியர்களும் அல்லவே அல்ல என்று கல்ட்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்வது இல்லை. கல்ட் குரூப்புகள் தவறாக நினைக்கிறார்கள் என்பதற்காக நாம் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை மற்ற கிழமைகளுக்கு மாற்றப்போவதுமில்லை. சூரியனையும் ஆலயத்தில் யாரும் வழிபடுவதுமில்லை. ஞயிற்றுக்கிழமை ஆராதனைகளில் கலந்துகொள்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் சூரிய நமஸ்காரம் பண்ணுவதுமில்லை.
சிலர், டிசம்பர் திங்கள் 25ம் நாள் வருகின்ற கிறிஸ்மஸ் என்பது சூரியபகவானின் நாளில் வருகின்றது அதனால் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்ற கிறிஸ்தவர்கள் அனைவரும் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்று சொல்வதையும் ஒத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்மஸ் ஆராதனையில் கிறிஸ்தவர்கள் சூரியனையா வழிபடுகின்றோம்.??? கிறிஸ்மஸ் நாளிலும் ஆங்கில புத்தாண்டு தினத்திலும் டாஸ்மாக் அதிக விற்பனையாகிறது அதனால் கிறிஸ்மஸ்ம் ஆங்கில புதுவருடமும் குடிகாரர்களின் பண்டிகை அந்த பண்டிகையை ஆராதிக்கின்ற கிறிஸ்தவர்கள் அனைவரும் குடிகாரர்களே அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல சத்தியத்தை அறியாதவர்கள் என்று சொன்னால் அதை கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்ள முடியுமா?
தை திங்கள் முதல்நாளான தமிழர்திருநாளான பொங்கல் திருநாளில் குடும்பத்தோடு பொங்கல் பண்டிகையை தமிழர்கள் குறிப்பாக தமிழ்விவசாயிகள் கோலகலமாக கொண்டாடுகிறார்கள். இது தமிழ் பண்டிகை. மதம் ஜாதிக்கு அப்பாற்பட்டடு தமிழர்கள் குதூகலமாக கொண்டாடுகின்ற பண்டிகை. திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாள் தமிழ் வருட பிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மதசாயம் பூசுவது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
பொங்கல் பண்டிகை கொண்டாடுகின்ற கிறிஸ்தவர்கள் தேவன் படைத்த சூரியனையோ, இயற்கையையோ, பசு மாட்டையோ வழிபடுவதில்லை. தேவனை அறியா ஜனங்கள் இயற்கையை வழிபடுகிறார்கள் என்பதனால் கிறிஸ்தவர்களும் அப்படிதான் செய்வார்கள் என்று விதண்டாவாதம் பேசுவது தவறு. புதிய உடைஉடுத்தி, அறுவகை பலகாரங்களும் சுவையான சமையல்களும் செய்து, வீட்டின் வாசலில் கரும்புகளை தோரணமாக கட்டி, கோலமிட்டு, வீரவிழையாட்டுகளோடு சந்தோஷமாக குடும்பத்தோடு பண்டிகை கொண்டாடுகின்றனர். கிறிஸ்மஸ், ஆங்கில புதுவருடம் மற்றும் ஈஸ்டர் பண்டிகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதைப்போன்று தமிழ் புத்தாண்டாகிய பொங்கல் நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்கின்றோம்.
ஆனால் விவசாயத்தின் அருமை தெரியாமல் அதன் உழைப்பு என்பது என்னவென்றே தெரியாமல் கடவுள் பெயரை பயன்படுத்தி ஊரை ஏமாற்றி காணிக்கை வசூல்பண்ணி வயிறுவளர்த்துக்கொண்டு திரிகின்ற பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் அநேகர் இன்றைக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்ற தமிழர்களையும் கிறிஸ்தவர்களையும் ஏளனம் செய்துகொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை மகாபெரிய பாவம் என்றே சொல்லி மக்களை மூளைசலவை செய்து பகிரங்கமாக பிரசங்கிக்கின்றார்கள். தமிழ் விசுவாசிகளின் உள்ளத்தில் தேவையில்லாத குழப்பத்தையும் ஒருவிதமான பயத்தையும் உருவாக்குகின்றனர்.
காணிக்கை திருடர்களான சோம்பேரி திருட்டு பெந்தேகோஸ்தே பாஸ்டர்களே உழைப்பின் அருமை தெரியுமா உங்களுக்கு? யாரோ உழைத்து கொடுக்கின்ற காணிக்கைப்பணத்தில் உழைக்காமல் வயிறு வளர்ப்பவர்களே விவசாயிகள் படுகின்ற கஷ்டங்கள் பாடுகள் வேதனைகள் தெரியுமா உங்களுக்கு? ஊழியத்தைவைத்து உல்லாசமாக வாழும் கேடுகெட்ட பாஸ்டர்களே, இன்றைக்கு நீ சாப்பிடுகிறாயே சோறு, அது கிடைப்பதற்காக ஒரு விவசாயி படுகின்ற கஷ்டங்கள் பாடுகள் வேதனைகள் என்னவெல்லாம் என்பது தெரியுமா உங்களுக்கு? சரியான காலத்தில் மழைக்காக அவன் பாரத்தோடு ஏங்குவதாவது புரியுமா?
கண்ணீரோடு விதைவிதத்து கஷ்டப்பட்டு நட்டு நோயிலிருந்தும் விலங்குகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் இராப்பகல் கண்விழித்து பயிரை பாதுகாத்து தங்கள் முழு உழைப்பையும் கொட்டுகின்ற விவசாயிகளின் உழைப்புக்கு பலனை கர்த்தர் கொடுக்கிறார். அதை கெம்பீரத்தோடு அறுவடை செய்து சந்தோஷமாக பொங்கல் பண்டிகை கொண்டாடுகின்ற தமிழ் கிறிஸ்தவர்களையும், விவசாயிகளின் பண்டிகையையும் கிண்டல் பண்ணுகின்ற சோம்பேரி பாஸ்டர்களே நீங்கள் மடையர்கள் என்பதை உங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறீர்கள். கிறிஸ்தவனாக இருப்பதனால் தமிழர்திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உரிமை இல்லையா?
காணிக்கை பணத்தில் உல்லாசமாக உல்லாசமாக வாழும் அயோக்கியனே, பைபிளை கையில் தூக்கிதிரிவதனால் நீ கிறிஸ்தவனாகிவிடுவாயா???? வெள்ளாடை உடுத்தி காணிக்கை திருடுகிறவனுக்குப்பெயர் சத்தியத்தை அறிந்த ஊழியக்காரனா????? அப்பாவி விசுவாசிகளிடம் ஏமாற்றி மிரட்டி தசமபாகம் வசூலிக்க உனக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்? உழைக்காமல் அடுத்தவர் பணத்தில் உயிர்வாழும் சோம்பேரியல்லவா நீ? உழைப்பின் அருமை தெரியாதவனே, உனக்கு நீயே ஆர்டினேஷன் கொடுத்துக்கொண்டால், ஊழியக்காரன் என்றும் பட்டம் சூட்டிக்கொண்டால் நீ ஊழியக்காரனாகிவிடுவாயா? பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்ற தமிழ் கிறிஸ்தவர்களை கிறிஸ்தவனல்ல விசுவாசியல்ல என்று சர்டிஃபிக்கேட் கொடுப்பதற்கு நீ யார்?
(கடவுள் பெயரால் பிளாக்மெயில் பண்ணி தசமபாகம் வசூலித்து, காணிக்கை திருடி, வெள்ளையுடை தரித்து வேஷம்போட்டுக்கொண்டு பாஸ்டர் என்ற போர்வையில் அயோக்கியதனம் பண்ணுவது, மொட்டை கடிதங்கள் எழுதி பிறரைக்கெடுப்பது, குடும்பங்களை கெடுப்பது, பிரிப்பது, ஏழைஎழிய அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பது போன்ற ஒட்டகங்களையெல்லாம் லபக்லபக்கென்று விழுங்கிவிட்டு கொசுக்களைப்போன்ற பண்டிகை கொண்டாட்டத்தை பூதக்கண்ணாடிபோட்டு பார்த்து அவைகளை வடிகட்டுகின்ற குருட்டு வழிகாட்டிகள் இவர்கள்)
தமிழ் கிறிஸ்தவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது தவறல்ல. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மதசாயம் பூசி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது தவறு என்றும் அது மகா பெரிய பாவம் என்றும் சொல்வதற்கும் பிரசங்கிப்பதற்கும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்கும் அட்டூழியர்களுக்கும் எந்தவிதமான தகுதியுமில்லை.
இப்படிக்கு பொங்கல் பண்டிகையை கெம்பீரத்தோடு கொண்டாடும் விவசாய குடும்பத்தில் பிறந்த பச்சை தமிழ் கிறிஸ்தவன்,
Ponnudurai Joseph// பின்னணி என்ன ஏன் இதை கொண்டாடினார்கள் என அறிந்து நாம் இது கிறிஸ்தவராகிய நான் கொண்டாடலாமா என நிதானிப்பது நல்லது. //
சவன்த் டே கல்டுகளின் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனை நடத்துவது தவறு என்று சொல்வதின் பிண்ணணியைப்பார்த்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் ஆராதனை நடத்தவே முடியாது.
கிறிஸ்மஸ் நாளிலும் ஆங்கில புத்தாண்டு தினத்திலும் டாஸ்மாக் அதிக விற்பனையாகிறது அதனால் கிறிஸ்மஸ்ம் ஆங்கில புதுவருடமும் குடிகாரர்களின் பண்டிகை அந்த பண்டிகையை ஆராதிக்கின்ற கிறிஸ்தவர்கள் அனைவரும் குடிகாரர்களே என்று சொன்னால் அதை கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்ள முடியுமா?
தமிழ் பண்டிகை நாட்களில் தேவ நாமம் தூஷிக்கப்படாதபடி கொண்டாடுவதில் தவறில்லை.