இதற்கு பெயர் ஆராதனையா? இதுக கடவுள் பெயரை பயன்படுத்தாமல் கிச்சுகிச்சுமுட்டும் கூட்டம் தாராளமாக நடத்தலாம். பரித்தமான தேவனை இப்படி கேலிப்பொருளாக்க நினைக்கிறாங்க மெண்டலுங்க ...
இதையம் தேவ ஆவின்னு நம்பி எப்படிதான் இந்த கூட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்கிறார்களோ? பைபிள படிப்பாங்களான்னு தெரியவே இல்லை....
பள்ளியில் படிக்க வருகின்ற இந்த இளம் வாலிப பிள்ளைகளுக்கு ஜெபம் என்ற பெயரில் கிறிஸ்தவத்துக்கும் இயேசுவுக்கும் சம்பந்தமில்லாத குண்டலினி ஆவிகளை இறக்கிவிடுகின்ற பெந்தேகோஸ்தே திருடர்களையும் இத்திருடர்களுக்கு அசுத்த ஆவிகளை இறக்க அனுமதியளித்த பள்ளி நிர்வாகிகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பிள்ளைகள் நன்றாக படித்து பரிட்சை எழுதினால் நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணலாம் அதை விடுத்து இப்படி ஆவியிறக்கிதான் பாஸ் பண்ணணும் என்கின்ற மூட நம்பிக்கை முற்றிலும் தவறானது. நல்ல சுகத்தையும் அறிவையும் ஞானத்தையும் தேவன் கொடுப்பதற்காக ஜெபிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. பாடத்தை ஒழுங்காக கற்பிப்பதை விடுத்து இப்படி குறுக்கு வழியில் குண்டலினி ஆவியிகளின் துணையோடு பாஸ்பண்ணலாம் என நினைப்பது முற்றிலும் அபத்தமானது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு படிக்கதான் அனுப்புகிறார்கள். பெற்றோர்களுக்கு தெரியாமல் இப்படி அசுத்த ஆவிகளை இறக்கிவிடுகின்ற கும்பலை கொண்டுவந்து பிள்ளைகளை சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாவம் இப்பிள்ளைகள் தன்னம்பிக்கையை இழந்து படிப்பையும் தங்கள் வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்ளும் அபாயம் இருக்கின்றது.
ஐயையோ இந்த அப்பாவி பிள்ளைகள் மனநிலை பாதிப்புள்ளாகிவிடுவார்களே !!! வாலிப பிள்ளைகளை தொட்டு தொட்டு ஜெபிக்க இந்த கேணப்பல்களுக்கும் யார் அதிகாரம் கொடுத்தது???
வாலிப பிள்ளைகளை தலையை தொட்டு ஜெபிப்பது கையைப்பிடித்து ஜெபிப்பது பின்னால் கைவைத்து ஜெபிப்பது கண்டிக்கத்தக்கது ....
தயவு செய்து இந்த பள்ளியின் விபரங்களை தெரிந்தவர்கள் யாராவது தருவீர்களா? இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பொதுநல வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி இந்த திருட்டு விபசார குண்டலினி ஆவி கும்பலுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கலாமே.
இன்றைக்கு பணத்துக்காக சபைகளை ஆரம்பித்து நடத்துகிறவர்கள் காணிக்கை பணத்தில் சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்கி குவிக்கிறார்கள். தங்களைப்பற்றி பில்டப் கொடுத்து வசூலுக்குமேல்வசூல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
நேரம் வரும்போது எல்லா சொத்துக்களையும் விற்று எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விடுவார்கள். பாவம் ஏமாளிகோமாளி விசுவாசிகள்தான்.
(யோவா 10:13) கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
பணத்திற்காக சபைகளை ஆரம்பித்து நடத்துகிறவர்கள் இப்படிதான் இருப்பார்கள். வெறும் பிலடப்புதான். குறிக்கோள் என்னவோ பணம்மட்டும்தான்.
காணிக்கை பணத்தில் சொத்துக்களை வாங்கி தன் பெயரில் சொத்துக்களை எவன் ஒருவன் எடுத்துக்கொள்கிறானோ அவன் கொள்ளைக்காரன்தான். இவர்கள் காணிக்கை வசூலிக்க அப்பாவிகளை பிளாக்மெயில் பண்ணுவார்கள்.
எவன் ஒருவன் காணிக்கை பணத்தில் சேர்க்கின்ற சொத்துக்களையெல்லாம் தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சின்னவீடுகள் பெயரிலும் தங்கள் பிள்ளைகள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் எழுதி எடுத்துக்கொண்டு சபை விசுவாசிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றார்களோ அவர்கள் திருடர்களும் கொள்ளைக்காரர்களுமே. அந்த சபையின் விசுவாசிகள் அனைவரும் ஏமாளிகளே !!! அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்.