New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவ அறக்கட்டளைகள் கொள்ளைஸ்தலங்களாக மாறிப்போய்விட்டது.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கிறிஸ்தவ அறக்கட்டளைகள் கொள்ளைஸ்தலங்களாக மாறிப்போய்விட்டது.
Permalink  
 


 

கிறிஸ்தவர்களல்லாதோர் நடத்துகின்ற அறக்கட்டளைகள் மூலமாக இந்தியாவில் நற்பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றது. ஆனால் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் இன்றைக்கு கொள்ளைஸ்தலங்களாக மாறிப்போய்விட்டது.

குறிப்பாக அங்கிகளை அணிந்து தங்களைப்பரிசுத்தவான்களாக வெளியே காட்டிக்கொண்டு சுற்றித்திரியும் அட்டூழியர்களான கிரிமினல்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற சி.எஸ்.ஐ. போன்ற ஸ்தாபனங்களில் பண்ணப்படுகின்ற அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தியாவில் ஏதாவது பேரழிவுகள் ஏற்பட்டால் இவர்கள் காட்டில் மழைதான். காரணம் ஊழியம் மற்றும் தொண்டு செய்வதாக பில்டப்பு கொடுத்து வெளிநாட்டுக்காரர்களிடமிருந்தும் உள்ளூர் அப்பாவிகளிடமிருந்தும் ஊழியங்கள் பெயரில் பலகோடிகளை சுருட்டி தங்கள் மனைவிகள், கீப்புகள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் வைத்துக்கொண்டு கள்ள கணக்குகள் எழுதி எடுத்துக்கொள்வது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.

அங்கிகளின் இந்த அட்டகாசங்களை வெளியே சொன்னால் அங்கிகளுக்கு கோபம் பொத்துக்கொண்டுதான் வருகின்றது. இந்த சி.எஸ்.ஐ. அங்கிகள், மனசாட்சியோடு உண்மையாக தொண்டுகள் செய்துவருகின்ற புறஜாதியாரைப்பார்த்தாவது இனிமேலாவது திருந்தவேண்டும்.

சில வருடங்களுக்குமுன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD அனுப்பி உதவிய பல கோடிகளில் ஊழல் செய்து களவாடிய பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கொடுக்காமல் பல கோடிகள் தன் மகள் பெயரில் சினாட் பொறுப்பாளர்கள் சிலர் பல கோடிகளை வங்கியில் போட்டுவைத்ததை போலீஸ் கண்டுபிடித்தது.

சினாடில் பொதுசெயலர் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் பொதுசெயலரின் கர்ப்பிணியான நிலையில் இருந்த மகள் ஆகியவர்களை போலீஸ் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கடலே இல்லாத இடங்களில் உள்ள CSI பிஷப்மார்களும் சுனாமி உதவி தொகையில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்று வாங்கிப்போன அநியாயங்களும் CSIயில் நடந்தது.

சுனாமி உதவி தொகை அனுப்பிய அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD, CSI மீது வழக்கு தொடுத்துள்ளது. ERD உதவி ஸ்தாபனம் CSI சினாடிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கிறது. பணம் வாங்கின எந்த பிஷப்பும் திருமண்டலத்தில் இதுவரை கணக்கு ஒப்புவிக்கவில்லை.

பிரதம மந்திரிக்கு ERD தகவல் அனுப்பியுள்ளது.

நீதிமன்ற வழக்கை CSI சினாட் வேண்டுமென்றே வாய்தா வாங்கி வருடகணக்கில் நீட்டிக்கொண்டு போகிறார்கள்.

ஊழல் வழக்கை இழுத்தடிப்பவர்களை நாடே கண்டிக்கின்றது. ஆனால் கொள்ளையடிக்கின்ற CSI அங்கிகளின் கிரிமினல் வழக்குகளுக்காக ஏழைகளின் காணிக்கை பணத்தால் செலவுசெய்யப்பட்டு வாய்தாக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்படுவதை யார் கண்டிப்பது ?

கொடூரமான ஆபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தியாகத்தோடு கொடுக்கப்பட்ட உதவி பணத்தை அநியாயமாக கொள்ளையடித்து அவைகளை சுருட்டிக்கொண்ட சி.எஸ்.ஐ. அங்கிகள்தான் உருப்படுவார்களா? அல்லது இந்த கொடூர கொள்ளைக்கார அங்கிகளின் குடும்பங்கள்தான நல்லாயிருப்பார்களா??? அல்லது அவைகளை தட்டிக்கேட்க மனமில்லாமல் ஜால்ராப்போடுகின்ற அந்த கிறிஸ்தவ அறக்கட்டளைகளின் உறுப்பினர்களின் குடும்டபம்தான் நல்லாயிருக்கபோவுதா???

கிறிஸ்தவ விசுவாசிகளே இந்த திருட்டு அங்கிகளின் தவறுகளுக்கு உடந்தையாக ஜால்ரா போடாதீர்கள் அதே தேவகோபாக்கினைகள் உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் உங்கள் குடும்பங்கள் மீதும் வரப்போகின்றது என்பதை மட்டும் ஒருபோதும் மறந்துவிடவேண்டாம் (2நாளா 36:16) ஜாக்கிரதை !!!!!!

— with Partha Boaz and 17 others.
Ponnudurai Joseph's photo.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard