New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் காட்டுமிராண்டி மொழி? -அருள்மொழி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தமிழ் காட்டுமிராண்டி மொழி? -அருள்மொழி
Permalink  
 


மே 2016 ஆழம் இதழில் அருள் மொழியின் நேர்காணல் கண்டேன். இந்த நேர்காணலில் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் கூறியதை நியாயப்படுத்துகிறார். அதற்குப் பெரியாரிடமிருந்து ஒரு மேற்கோளையும் எடுத்துக்காட்டுகிறார். பெரியார் கூறினாராம் - "இரண்டு தமிழர்கள் திட்டி சண்டை போட்டுக் கொள்ளும் போது கேளுங்கள் . . . தமிழ் காட்டுமிராண்டி மொழியா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்வீர்கள். அந்தளவுக்கு மோசமான வார்த்தைகள்." ஆங்கிலத்திலும் கூட எதிராளியின் தாயைப் பழிப்பது உள்பட மோசமான வார்த்தை வசவுகளைக் கேட்டிருக்கிறோமே எனப் பதிலுக்குக் கேட்கிறது ஆழம். ஆங்கிலத்தில் மிஞ்சிப் போனால் 4 வசவுச் சொற்கள்தான் இருக்கும் என்கிறார் அருள்மொழி. ஆக, தமிழைக் காட்டுமிராண்டி மொழி, அசிங்கமான மொழி எனத் திட்டித் தீர்ப்பதுடன் பெரியார் ஆதரவாளர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. கூடவே ஆங்கிலம் எப்படிப்பட்ட மொழி தெரியுமா எனப் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆங்கிலத்தின் இலட்சணத்தைத் தோலுரித்துக் காட்டவே நான் ஆங்கில மாயை என்னும் புத்தகத்தை எழுதினேன். பெரியார் ஆதரவாளர்கள் ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்கும் கருத்துகளுக்கு அப்புத்தகத்தில் விரிவாக பதில் சொல்லியிருந்தேன். அவர்களின் வாதப்படி ஆங்கிலமும் காட்டுமிராண்டி மொழியே, மூடநம்பிக்கை மொழியே என நிறுவியிருந்தேன். தமிழ் போல அதிகமான கெட்ட வார்த்தைகள் அதிகம் ஆங்கிலத்தில் இல்லை என்கிறார் அருள்மொழி. ஆங்கிலத்தில் Dictionary of Vulgar Words என்ற பெயரில் பல அகராதிகள் கிடைக்கின்றன. அதில் ஆயிரக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் கெட்ட வார்த்தைகள் எதுவும் இவர்களுக்குத் தெரியாமல் போனது ஏனோ?

இதோ, 500க்கு மேற்பட்ட இங்கிலீஷ் கெட்ட வார்த்தைகளுடன் இணையப் பக்கம் ஒன்று -

http://www.youswear.com/index.asp?language=English

அருள்மொழிகளே! தயவு கூர்ந்து பெரியார் கூறிய அனைத்தையும் காப்பாற்றும் முயற்சியில் தமிழை இழிவுபடுத்தும் செயல்களில் இனிமேலேனும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்..



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

10406787_916284298438455_3064046350805360483_n.jpg?oh=63d530e215e3502022ecf6824fcbaf7c&oe=56151D80



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ!

ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை.
கேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்த கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள் – எளிய, இளைய திராவிடர் இயக்கத் தோழராலும் கூட விளக்கமளிக்கப்படக் கூடியவையே! அப்படியொரு தோழரின் பதில்கள் கீழே!
 
கேள்வி 1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
 
பதில் 1. பார்ப்பான் ஜாதி பேதம் பார்ப்பவன் மட்டுமல்ல; ஜாதி பேதங்களை உருவாக்கி, அதைச் சாஸ்திர ரீதியாக வலுவூட்டி வழக்கில் கொண்டு வந்ததோடு, இன்றளவும் அதைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்; எதிர்காலத்திலும் நிலைநிறுத்த முயல்பவர்கள். அதனால்தான் அவர்களை முதன்மை இலக்காக்கி கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.
மனிதர்களுக்குள் ஜாதிபேதம், மதபேதம், பிறப்பால் பேதம் யார் பார்த்தாலும், அவர்கள் எந்த ஜாதியினராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம் என்பது உண்மைக்கு மாறான புரட்டு.
 
கேள்வி 2: கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?
பதில் 2:  கடவுள் இல்லை என்றால் எக்கடவுளும் இல்லையென்பதே பொருள். நாங்கள் இந்துக்கடவுள் இல்லையென்று சொல்லவில்லையே! எனவே, உங்கள் கேள்வி புரட்டு; மோசடி!
 
கேள்வி 3: தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
பதில் 3: அடிப்படையில் இவ்வொப்பீடே தவறானது. ஒருவருக்கு விழா எடுப்பதை கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இனிய தமிழிசையை விட்டுவிட்டு தெலுங்குக் கீர்த்தனை, கர்நாடக இசை என்று அலையும் எம் இன மக்களை நாங்கள் விழிப்பூட்டுவதை திசைதிருப்பி, சம்பந்தமில்லாததோடு இணைத்து முடிச்சுப்போடும் உம் நரித்தந்திரம், வித்தைகளெல்லாம் எங்களிடம் பலிக்காது.
தமிழில் பேசு, அந்திய மொழிக்கு அடிமையாகாதே! தமிழ்ப் பெயர் சூட்டு, ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து தமிழைக் கெடுக்காதே என்று சொல்வது எப்படி தமிழர் கடமையோ அப்படித்தான் தமிழிசையைப் பாடு, அதற்கு உயர்வு கொடு என்பதும். இதை முதலில் புரிந்து  கேள்வி கேள்! தவிர, பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி என்ற பெயரிலோ, அல்லது எந்த ஜாதியின் பெயரிலும் நடைபெறும் ஜாதி நடவடிக்கைகளையும், பேரணிகளையும், அதனால் ஏற்படும் ஜாதிக் கலவரங்களையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும், ஓட்டுக்காக இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்பதையும் கண்டித்தே வந்துள்ளோம். இதில் எந்த தயக்கமும் மறைப்பும் இல்லை.
 
கேள்வி 4: பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?
பதில் 4 : முதலில் நாங்கள் பூணூல் அறுக்கவில்லை. எனவே, எங்களிடம் இக்கேள்வியைக் கேட்பதே அயோக்கியத்தனம். எனினும் இக்கேள்விக்கு எம் பதில்.
பூணூலை அறுத்தவர்கள் ஏன் சிலுவையை அறுக்கவில்லை, தொப்பியை, தலைப்பாகையை அகற்றவில்லை என்பது அர்த்தமில்லை, அறியாமையின்பாற்பட்ட கேள்வி.
தொப்பியும், சிலுவையும், தலைப்பாகையும் மற்றவர்களை இழிவுபடுத்தவில்லை. பூணூல் மற்றவர்கள் இழிமக்கள், சூத்திரர்கள் என்று அறிவிக்கும் அடையாளமாகவும், தான் மட்டுமே உயர்பிறப்பாளன் என்று கூறுவதாயும் இருப்பதால் பாதிக்கப்படுவோர், இழிவுபடுத்தப்படுவோரில், உணர்ச்சி வசப்படும் ஒரு சிலரின் எதிர்வினை இது. எதிர்வினை வரக்கூடாது என்றால், மாற்றாரை மட்டப்படுத்தும் இழிவுபடுத்தும் பூணூலை அவர்களே கழற்றி, மனிதர்களைச் சமமாக மதிப்பதே சரியான தீர்வு.
 
கேள்வி 5: தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?
பதில் 5: தாலி அகற்றுவது ஒரு நிகழ்வு, அது ஓர் விழிப்பூட்டும் பிரச்சாரம், செயல் விளக்கம். அதைப் போராட்டம் என்பதே முதலில் புரட்டு, தவறு. போர் என்பது ஒருவருக்கு எதிராகச் செய்யப்படுவது. தாலி அகற்றும் நிகழ்வு. யாருக்கும் எதிராகச் செய்யப்படுவதில்லை.
திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ உரிய இணையரை இச்சமுதாயத்திலிருந்துதான் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, கடவுள் மறுப்பையும், தாலி மறுப்பையும் கட்டாயப்படுத்த இயலாது. முடிந்தமட்டும் முயற்சி செய்து சடங்கு ஒழிப்பு, புரோகித மந்திர ஒழிப்பு செய்கிறோம்.
நாங்கள் எங்கள் குடும்பத்தினராயினும் அவர்களைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்யச் சொல்வதில்லை. அவர்களாக மனம் மாறி உண்மையை, சரியானதை ஏற்கச் செய்யவே முயற்சிப்போம். அப்படியிருக்க கட்சிக்காரர்களை, நண்பர்களை, உறவினர்களை கட்டாயப்படுத்துவதில்லை.
 
திராவிடர் கழகத்தவர் கடவுள் மறுப்பிலும், சடங்கு மறுப்பிலும், புரோகித மந்திர எதிர்ப்பிலும், தவிர்ப்பிலும் உறுதியாய் இருப்பர். தாலி கட்டுவதில் கட்டாயப்படுத்த இயலுமா? திருமணம் திராவிடர் கழகக் குடும்பத்துக்குள்ளே செய்ய இயலுமா?
திராவிடர் கழகத்தவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வீட்டிலும், தாலி அணிய விரும்புகின்றவர் வீட்டிலும் திருமண சம்பந்தம் கொள்ளும் கட்டாயம் வரும்போது சம்பந்திகளை எப்படி கட்டாயப்படுத்த முடியும்? அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறோம்… திருமணத்திற்கு முன்போ, பின்போ! திருமணத்திற்கு முன்பே ஏற்போரின் திருமணங்கள் தாலியில்லாமல் நடக்கின்றன. திருமணத்திற்குப் பின்பு காலப்போக்கில் மனம் மாறி கழற்றுகின்றவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம், அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கிறோம்.
 
இப்போது நடந்ததும் அப்படியொரு நிகழ்வே! இது ஒன்றும் புனிதப்படுத்தும் சடங்கு அல்ல; அடிமைத் தளையை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி! சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் அகற்றிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் பிறர் துணிவு பெறுகிறார்கள்.
 
திராவிடர் கழகத்திலோ, அல்லது பெரியார் டிரஸ்டிலோ என்று வலியுறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டுவது என்ன காரணம் என்பதையும் நாங்கள் அறிவோம். ‘திராவிடர் கழகத் தலைவரின் மனைவி கழுத்தில் இருக்கும் தாலியை முதலில் கழட்டுங்கள்’ என்று கட்டியிருப்பதைப் பார்த்தவர் போல பேசும் அவசரக் குடுக்கைகளின் கேள்வி தான் வேறு வடிவில் நாசூக்காக கேட்கப்படுகிறது. அந்தக் கவலையே வேண்டாம். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமணம் (இவர்களின் கருத்துப்படி) கொழுத்த ராகு காலத்தில் ஜாதி மறுப்பு, தாலி மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு என முழுமையாக நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் ஆகும். 
 
கேள்வி 6: எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?
பதில் 6:  அறியாமையின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்வி; அரைவேக்காட்டுத்தனமான கேள்வி இது.
முதலில் நாங்கள் தேர்தலில் அல்ல; எனவே, நாங்கள் எங்களுக்காக வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆனால், அரசியலில் பங்குகொண்டு வாக்கு கேட்கும் எக்கட்சியும் கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்ட கட்சியல்ல. அதனால், அதை ஒரு நிபந்தனையாக வைத்து வாக்குக் கேட்டால், எந்தக் கட்சிக்கும் அதிக வாக்கு கிடைக்காது. காரணம் பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.
தேர்தலும் வாக்கெடுப்பும் மக்களுக்கான அரசை, மக்கள் மேம்பாட்டை, நாட்டின் வளர்ச்சியை உருவாக்குவதற்காகவே. மாறாக, கடவுள் உண்டா இல்லையா என்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை.
கடவுள் இல்லை என்பது அறிவியல் உண்மை. அறிவியல் மனப்பான்மையை, பகுத்தறிவை, அறிவியல் உண்மைகளை மக்களுக்குச் சொல்லி விழிப்பூட்ட வேண்டும் என்பது ஒரு குடிமகனின் கடமை என்கிறது நமது அரசமைப்புச் சட்டம். அதை நாங்கள் பொறுப்போடு செய்கிறோம். இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நம்பிக்கை, விழிப்புணர்வு அவர்களாகத் தெரிந்து விழிப்பு பெற்று வரவேண்டியது. கட்டாயப்படுத்தி உருவாக்குவது அல்ல. இதுவே எங்கள் கொள்கைப் பரப்பும் நெறி!
 
கேள்வி 7:  கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?
பதில் 7 :  இது நீண்டகாலமாகக் கேட்கப்படும் கேள்வி. இதற்குப் பலமுறை பதில் கூறியிருக்கிறோம். கடவுள் என்பது இல்லாதவொன்று. கற்சிலைக்குப் பாலும், தேனும் ஏன்? உண்ணும் பொருளை ஏன் பாழாக்க வேண்டும். அதை ஏழைக்குக் கொடுக்கலாமே என்றுதான் கேட்கிறோம்.
பூ என்பது அன்றைக்குப் பூத்து மாலை வாடக்கூடியது. தலைக்கு வைத்தாலும் சிலைக்கு வைத்தாலும் அதுதான் நிகழும்.
பெரியார் சிலைக்கு மாலை போடுவது, சமாதிக்கு மாலை வைப்பது பெரியார் அதை விரும்புகிறார் என்பதற்காக அல்ல. பெரியார் உயிருடன் இருக்கும்போதே மாலையை விரும்பியவர் அல்ல. மாலைக்குப் பதிலாய் பணமாய்க் கொடுங்கள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறி அதன்படி நடந்த பகுத்தறிவுவாதி.
பெரியார் போன்ற தலைவர்களுக்கு பூமாலை வைப்பது அதை அழுகுபடுத்தவே. பிறந்த நாளில், நினைவு நாளில் அச்சிலை, நினைவிடம் அன்றைய நிகழ்வுக்காக அடையாளப்படுத்தப்படுகிறது; அழகுபடுத்தப்படுகிறது அவ்வளவே.
இந்த பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள்கூட சடங்கல்ல. அவை பிரச்சார வழிமுறைகள். மக்களுக்கு அவர்களின் கொள்கையை, பணியை அறியச் செய்வதற்கான செயல்திட்டம் இது.
ஆனால், பால், தேன், பருப்பு, பழம், எண்ணெய், ஆடையென்று மக்களுக்குப் பயன்படக் கூடியவை பாழாக்குவதையே நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
 
கேள்வி 8: பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?
பதில் 8 : பார்ப்பன (பிராமண)  எதிர்ப்பு என்பது தனிநபர் விரோத எதிர்ப்பல்ல என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த தனிப்பட்ட பார்ப்பனரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. பெரியார் இராஜாஜியோடு நண்பராக இருந்தார். கமலகாசன், ஞாநி போன்றவர்களை நாங்கள் மதிக்கிறோம்; பாராட்டுகிறோம். சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்களையே நாங்கள் எதிர்க்கிறோம்.
தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் எதிர்ப்பு பற்றி மிகத் தெளிவாக 1953லே கூறியுள்ளார்.
பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வது எல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டில் நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைமைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்ளலாம். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. நமக்குள் பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறேன்.
 
எனவே, பார்ப்பன எதிர்ப்பு என்பது தனிமனித வெறுப்பின் விளைவல்ல. பார்ப்பனிய (பிராமணிய) செயல்பாடுகள், சாஸ்திரங்கள் பெரும்பாலான மக்களின் இழிவிற்கும், தாழ்விற்கும் காரணமாகி, தமிழ்மொழியின் இழிவிற்கும், இனமான, சுயமரியாதை உணர்வுகளுக்கும் எதிராய் இருப்பதால் அதை எதிர்க்கிறோம்.
 
மற்றவர்கள் தாங்கள் எப்படி வளர்வது என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்கள் மற்றவர்கள் வளரக் கூடாது என்றும், தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.
 
அவர்கள், மற்றவர்களையும் சமமாக ஏற்று, சுயமரியாதைக்கு கேடில்லாமல் செயல்பட்டால் அவர்களை நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை உலக மக்களை ஒப்பாக எண்ணுகிறோம்; நேசிக்கிறோம் என்பதே உண்மை.
 
கேள்வி 9: நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?
பதில் 9 : நாங்கள் என்ன காவல்துறையா நடத்துகிறோம்? இந்தக் கேள்விக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? எதனால் இக்கேள்வி கேட்கப்படுகிறது? அர்த்தமற்ற கேள்வி என்றாலும் பதில் சொல்ல விரும்புகிறோம்.
முதலில் இக்கேள்விகளையெல்லாம் கேட்பதே ஒரு பார்ப்பனர்தான் என்பது எங்களுக்குப் புரியும். பெரியார் தொண்டர்கள் ஆள் அசைவை மட்டுமல்ல, அவர்கள் எழுத்தைக் கொண்டே ஆளைக் கணக்கிடுவோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் ஜாதியோடு தொடர்புடையது அல்ல. தனிநபர் இயல்பை, சூழலை, நடத்தையைப் பொறுத்தது. நல்லவர்கள் எல்லா ஜாதியிலம் உண்டு, எல்லா மதத்திலும் உண்டு. அதேபோல் கெட்டவர்களும் எல்லா ஜாதியிலும், மதத்திலும் உண்டு. இதில் ஜாதிவாரி, மதவாரி கணக்கெடுப்பு தவறு.
நீங்கள் கேட்கும் கேள்வியின் நோக்கம் புரிகிறது. பார்ப்பனர்கள் இவற்றில் அதிகம் ஈடுபடுவதில்லை. அவர்கள் நல்லவர்கள் என்று இதன்மூலம் சொல்ல முயல்வது புரிகிறது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியே உண்டு. கோயிலில் பக்தையை கற்பழித்த பார்ப்பனர் உண்டு. கடத்தல், நாட்டைக் காட்டிக் கொடுத்தல் செய்த பார்ப்பனர்கள் உண்டு. காந்தியையே சுட்டவன் ஒரு பார்ப்பான்தானே. இது கிடக்கட்டும்.
ஆயிரமாயிரமாண்டுகளாய் தான் மட்டுமே (தன் ஜாதி மட்டுமே) படிக்க வேண்டும். மற்றவன் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆதிக்கம் புரிந்து சமுதாயத்தில் உயர்நிலையில் தன்னை அரசு ஆதரவோடு வைத்துக்கொண்ட பார்ப்பன இனம் ஒரு பக்கம். கல்வியில்லாது, உடலுழைப்பை நம்பி ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி, அடக்கி வைக்கப்பட்டு, தீண்டக் கூடாது என்று தள்ளிவைக்கப்பட்ட சமுதாயம் மறு பக்கம். இங்கு தவறுகள் எங்கு அதிகம் நடக்கும். அவற்றுக்குக் காரணம் யார்?
வன்னியர், முக்குலத்தோர் உள்ளிட்ட 89 ஜாதியினரை தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரையாகவே வைத்திருந்தார்கள். வன்னியர்களெல்லாம் குற்றவாளிகளா? அவர்களில் உயர்குணமும், தியாகமும் புரிந்தவர்கள் ஏராளம் இல்லையா?
எல்லோருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கொடுக்கப்பட்ட பின் அவர்களிடம் இருந்த குற்றங்குறைகளும் இன்றைக்கு மறைந்து வருகின்றன.
சுற்றுச் சூழலும் சமுதாய அமைப்பும் குற்றவாளிகள் உருவாகக் காரணமாகிறது. எனவே, இது ஜாதியைப் பொறுத்ததல்ல. சமுதாயம் ஒட்டுமொத்தமாக முயன்று அரசின் துணையோடுதான் இவற்றைக் களைய வேண்டும்.
 
கேள்வி 10: கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு, தெருவில் நடமாடத் தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?
பதில் 10 :  கோவில் நுழையத் தடை, தடுப்புச் சுவர், இரட்டை டம்ளர், கவுரவக் கொலையெல்லாம் பார்ப்பனர் உருவாக்கிய ஜாதிக் கொடுமைகளின் விளைவுகள். உண்மையான குற்றவாளி அவர்களே! ஜாதிமுறை எக்காலத்துக்கும் வேண்டும் என்று இன்றளவும் முயற்சி செய்யக்கூடியவர்கள் அவர்கள்.
 
இவற்றை ஒழிப்பதில் எல்லா ஜாதியைச் சேர்ந்த பெரியவர்களும் முயற்சி செய்திருக்கிறார்கள். காரணம், எல்லா ஜாதியிலும் உயர்ந்தவர்கள், சமதர்மவாதிகள், மனித நேயர்கள் உண்டு. எனவே, இதை வைத்து இதில் எந்த ஜாதிக்கு அதிகப் பங்கு என்றெல்லாம் தராசு பிடிக்க முடியாது.
 
ஆனால், சில உண்மைகளை எல்லோரும் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.
நந்தனை கோவிலுக்குள் நுழையாமல் தடுத்து, அவர் பிடிவாதம் பிடிக்க அவரை நெருப்பில் தள்ளி கொளுத்தியது யார்?
இராமலிங்க வள்ளலார் ஜாதி வேண்டாம் என்றதற்காக அவரை அடித்துக் கொன்றது யார்?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகத் தடையாய் இருப்பது யார்?
தமிழை பூசை மொழியாக ஆக்கக் கூடாது, அது நீசபாஷை என்றது யார்?
காந்தியாரையே வீட்டிற்குள் அனுமதிக்ககாது தாழ்வாரத்தோடு அனுப்பியது யார்?
பார்ப்பனர் வீட்டில் மலம் எடுக்கக் கூட ஒரு தாழ்த்தப்பட்டவன் வரக்கூடாது. அதைவிட உயர்ஜாதிக்காரன் வந்துதான் பார்ப்பான் கழித்த மலத்தை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் மாநகராட்சியில் தீர்மானம் போடச் செய்தது யார்?
 
இரட்டைக் குவளை எதிர்ப்பு, தடுப்பு சுவர் எதிர்ப்பு, கோயில் நுழைவு, ஜாதியொழிப்பு இவற்றிற்கு திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், செய்த தியாகங்களும் எத்தனை எத்தனை? பார்ப்பன ஊடகங்கள் அதைச் சொல்லாது மறைக்கும். உங்கள் அறியாமைக்கு இதைவிட அடையாளம் வேறு வேண்டாம்.
 
இதையெல்லாம் மறைத்துவிட்டு இன்றைய இளைஞர்களை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்! முறியடிப்போம்!


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ! (பகுதி 2)

கேள்வி 11: ஒரு பிராமணப் பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிடக் கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?
பதில் 11: பார்ப்பனப் பெண் ஆட்சி என்பதால் அதை என்றைக்குமே நாங்கள் எதிர்த்ததில்லை. தி.மு.க. தவறு செய்தபோது, ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தோம். இடஒதுக்கீடு உயர வழி செய்தமைக்கு பட்டம் கொடுத்துப் பாராட்டினோம்.
தப்பு செய்தால் யாரையும் எதிர்ப்போம். சமூகநீதி காக்கும் யாரையும் பாராட்டுவோம். எங்கள் தைரியம் அவாளுக்கு நன்றாகவே தெரியும் வோய்!
 
 
கேள்வி 12: அந்த ஒரு பிராமணப் பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?
பதில் 12: யார் காலில் விழுந்தாலும் அதைக் கண்டிப்பதில் முதலாக நிற்பது நாங்கள் என்பதை நாடே நன்கறியும். யாருக்கும் அஞ்சும் இயக்கம் இதுவல்ல.
 
 
கேள்வி 13: பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?
பதில் 13: பிச்சையெடுத்துப் பிழைக்க இந்த நாட்டுக்கு வந்து, தமிழன் கட்டிய கோயிலுக்குள் புகுந்து, ஆட்சியில் புகுந்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள் பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களில் வேலையிலிருந்து வெளியேறிவிட்டு, பார்ப்பன நிறுவனங்களில் மற்றவர்களை சேர்ப்பதில்லை என்று முடிவு செய்! அதை விட்டுவிட்டு நீ எங்கள் நிறுவனத்தில் நுழைந்து பிழைப்பாய். எங்கள் நாட்டிலிருந்து கொள்ளையடித்து நீங்கள் உருவாக்கியிருக்கும் நிறுவனத்தில் நாங்கள் வரக்கூடாது என்பது அயோக்கியத்தனம் அல்லவா?
 
 
கேள்வி 14: பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு, பார்ப்பானைக் கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?
பதில் 14: பைத்தியக்காரா! இது என்ன உளறல். இதைச் சொன்னது பெரியார் அல்ல என்ற உண்மை நொய்யரிசிகளான நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
 
இது ஓர் வடநாட்டுப் பழமொழி என்பதை பீவர்லி நிக்கல்ஸ் என்பவர்  1944ல் எழுதிய  Verdict on India என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டி எப்போதோ விளக்கமளித்துவிட்டார் ஆசிரியர் கி.வீரமணி.
 
நாங்கள் எந்த தனி நபரையும் எதிர்ப்பவர்களும் அல்ல. வன்முறையில் ஈடுபடுகின்றவர்களும் அல்ல. அப்படி இற்ஙகியிருந்தால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்.
 
 
கேள்வி 15: குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப் பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?
பதில் 15: அவரே பதில் சொல்லிவிட்டாரே! எதையும் அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக நீயெல்லாம் கேள்வி கேட்டு வந்துவிட்டாய்! ஆன்மீகத் தலைவர்கள் சுயமரியாதைக்கும் சமதர்மத்திற்கும் பாடுபட்டிருப்பின் அவர்களை நாங்களே பாராட்டியிருக்கிறோம்.
தொடர் வரும்போது தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயம்வரின் தட்டிக் கேட்போம். கொள்கையில் சமரசம் என்றைக்கும் எங்களிடமில்லை! தி.மு.க.வோடு நாங்கள் கடுமையாக மோதிக்கொண்டதெல்லாம் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். உமக்கெங்கே தெரியப் போகிறது.
 
 
கேள்வி 16: ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?
பதில் 16: அடிமைச் சின்னம் எது இருந்தாலம், அறிவுக்கு ஒவ்வாதது எதுவாயினும் அதை அகற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதைச் செய்ய யார் முன்வந்தாலும் நாங்கள் வாய்ப்பளிப்போம். கிறிஸ்தவர்களின் திருமண மோதிரம் இருபாலருக்குமானது; தாலியைப் போல பெண்கள் கழுத்தில் மட்டும் திணிக்கப்படுவதல்ல.
 
அதே நேரத்தில் மத அடையாளங்களாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் பூணூலும் சிலுவையும் அகற்றப்பட்டதை வரவேற்றுப் பாராட்டியவர்கள் நாங்கள்.
 
கிறித்தவ, இஸ்லாமிய மதங்களை விமர்சித்து நாங்கள் நூல் வெளியிடுவது உம்மைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இனிமேலாவது படித்துத் தெரிந்து கொள்.
 
 
கேள்வி 17: பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன், சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?
பதில் 17: அதென்ன பிறப்புத் திறன்? அட அடிமுட்டாளே! பிறவியில் திறமை பேசியவனெல்லாம் இன்று வெட்கித் தலைகுனிய, பார்ப்பனரல்லாதார் படிப்பில் சாதிப்பது உமக்குத் தெரியாதா?
சமையலுக்கு மட்டுமே பெண் என்ற நிலையை மாற்றி பெண்கள் சாதிப்பது உமக்குத் தெரியாதா?
 
தொழில்துறை, கலைத்துறை, அறிவியல்துறை, அரசியல் என்று எல்லாவற்றிலும் பார்ப்பானைவிட தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சாதிப்பது உமக்கு மறந்து போயிற்றறா?
பார்ப்பான் மற்றவர்களைவிட எதில் புத்திசாலி, திறமைசாலியாய் இன்று சாதிக்கிறான்? காட்ட முடியுமா?
அப்துல்கலாமையும், மயில்சாமி அண்ணாதுறையையும்விட எந்த பார்ப்பான் சாதித்துவிட்டான்.
வழக்கறிஞராகட்டும், நிதியாகட்டும், நிர்வாகமாகட்டும் எதில் மற்றவர்கள் சாதிக்கவில்லை?
உம் கருத்துப்படி இராணுவத்திற்கு ஷத்திரியன் மட்டுந்தானே போகவேண்டும். பார்ப்பான் ஏன் போகிறான்? உம் வாதப்படி அது தப்பாயிற்றே!
 
ஆட்சிக்கும் ஷத்திரியன்தானே உரியவன். பார்ப்பான் எப்படிச் செல்கிறான். வணிகம் வைசியர்க்கு உரியது என்னும்போது இன்று பார்ப்பான் வருகிறான். தொழிற்சாலைக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? தர்ப்பைப் புல்லை புடுங்கி, பூணூலைத் தடவி வேதம் படித்துக்கொண்டல்லவா இருக்க வேண்டும்.
 
இதில் நாய் உதாரணம் வேற! ஒரு நாயைப் பார்த்தவுடன் இது இன்ன வகை என்று சொல்ல முடியும். ஆனால் ஒரு மனிதனைப் பார்த்தவுடன் இன்ன ஜாதி என்று சொல்ல முடியுமா? பிறப்பால் திறமை கூறும் நீயெல்லாம் ஒரு சமுதாய துரோகி, சமுதாய நோய் அல்லவா? அப்படியிருக்க, உமக்கெல்லாம் கேள்வி கேட்கும் யோக்கியதை ஏது? மனிதனைப்பற்றி பேசும்போது நாய் உதாரணம் தருகிறாயே!  நீயும் மனிதனும் ஒன்றா?
 
இன்றைய இடஒதுக்கீடுகூட, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அமுக்கப்பட்டவர்கள் உடனடியாக உயர் ஜாதியினரோடு போட்டியிட முடியாது என்பதால்தானே ஒழிய, அவர்களுக்குத் திறமை இல்லை என்பதற்காக அல்ல. இடஒதுக்கீடு ஓர் இழப்பீட்டு உரிமை! அவ்வளவே!
 
உண்மை இப்படி இருக்க பிறப்புத் திறன் என்கிறாயே! உம்மையெல்லாம் மனிதன் என்றே அங்கீகரிக்க முடியாதே!
பிறப்புத் திறன்பற்றி பேசும் உமக்கு ஓர் உண்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன். பார்ப்பான் திறமையெல்லாம் சூழ்ச்சியும், பித்தலாட்டமும் மட்டுமே! மற்றபடி திறமை, அறிவுக்கூர்மை என்பதெல்லாம் அசல் மோசடி. இன்றைய சாதனைகளை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.
 
 
கேள்வி 18: ஈ. வெ. ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?
பதில் 18: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கி பரப்பலாமே. ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டே.
 
பெரியாரின் தொண்டர் வெளியிட்ட நூலிலே பெரியார் பாஸ்போர்ட் இல்லாமல் அயல்நாடு போனார் என்று தவறான கருத்து வெளிவந்த வரலாறு உமக்குத் தெரியாது. இதுபோன்ற தவறு நிகழக் கூடாது என்பதற்குச் சொல்லப்பட்டதே அது!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இலாப நோக்கில் நூல் வெளியிடுவதில்லை என்பது உமக்குத் தெரியுமா? தெரிந்தால் சில்லறைத்தனமாக கேட்டிருக்க மாட்டாயே!
 
 
கேள்வி 19: பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
பதில் 19: அசல் அயோக்கியத்தனமான கேள்வி இது! பூணூலும் கருப்புச் சட்டையும் ஒன்றா? கருப்புச் சட்டை ஒரு இயக்கத்தின் சீருடை. அது இழிவு நீக்கவந்த ஏற்பாடு. அது யாரையும் இழிவு படுத்தாது.
 
 
கேள்வி 20: ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?
பதில் 20: மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் கூட்டம் இந்தக் கேள்வியைக் கேட்பதுதான் வேடிக்கை! தன் வீட்டுச் சாப்பாடு, தன் பணம், பதவி – பலன் எதிர்பாராத ஆனால், இழிவு, ஏச்சு, பேச்சு எல்லாவற்றையும் ஏற்று இந்த மக்கள் சுயமரியாதையும், சூடு, சொரணையும், விழிப்பும் சமவாய்ப்பும் பெற உழைப்பவர்கள் நாங்கள். இது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நன்கு தெரியும். இந்து என்ற போர்வையில் நீங்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று கனவு காணாதீர்கள்! பார்ப்பனரல்லாதார் விரைவில் விழிப்புடன் வீறு கொண்டு எழத்தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் உங்கள் நிலை! எச்சரிக்கை!


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?

கேள்வி எண்1
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் உள்ள சமஸ்கிருதம் ஆரிய மொழி
200 ஆண்டுகளுக்குள் வந்த உருது திராவிட மொழியா ?


விடை:
எத்தனைத் திரிப்புகள் ஒரு கேள்வியில்!
சமஸ்கிருதம் எந்த ஆண்டில் தோன்றியது.அதற்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டா. கற்காலத்தில் இருந்து கல்லில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவம் வட்டு எழுத்து சதுர எழுத்து புள்ளி இல்லாத ஓலை எழுத்து என தமிழின் வரி வடிவ மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் கல்வெட்டு ஆதாரஙங்கள் உள்ளன. சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை எழுத்தே இல்லை. எந்தக் கல்வெட்டு ஆதாரமும் இல்லை.
சமஸ்கிருதம் முதலில் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது.பிறகு தேவநகரி வடிவில் எழுதப்பட்டு வருகிறது.
இரவல் எழுத்தில் வாழும் ஒரு மொழியை அதனினும் சிறந்த வரலாற்று மொழியை தாய்மொழியாகக்கொண்ட தமிழர்கள் ஏன் வழிபாட்டு மொழியாக ஏற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி.

தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியமே 5000ஆண்டுப்பழமையுடையது என்றால் அதற்கு முன்பு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்த மொழி உருவாகி பேசப்பட்டு எழுதப் பெற்று இலக்கிய வடிவங்களை அடைந்து பின் இலக்கணம் பெற்றிருக்கும் என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறதே.

உங்கள் வேதங்களில் மைத்ரியில் தொடங்கி மூன்று அல்லது நான்கு படித்த பெண்களைக்காட்டமுடியும்.
சங்கத் தமிழ் இலக்கியங்களிலோ இதுவரை கிடைத்திருக்கும் பெண் கவிஞர்கள் மட்டும் 44 பேர்.
ஆங்கிலத்தைப்போல எல்லா நாட்டிலும் பிற மொழிகளில் கிடைக்கும் அறிவு வளத்தை தனது மொழியில் எழுதி வைத்துக்கொண்டு என் மொழி அநாதி காலத்தில பிறந்தது. கடவுள்களால் பேசப்பட்டது என்று கதை விடுவதாலேயே உங்கள் மொழி எம்மொழியை விட உயர்ந்தது பழமையானது என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லமுடியாமல் உருது மொழியைக் கொண்டு வந்து பிணைப்பது என்ன நியாயம்?

உருது மொழியின் வளத்தை அறிந்தவர்கள் அதன் வயது இருநூறு தானா என்று விளக்கட்டும்.நாம் அந்த ஆராய்ச்சிக்குப் போகவேண்டாம்.
உருது திராவிடமொழி என்று யார் சொன்னது? எனக்குத் தெரியவில்லை.இந்தக்கேள்வியை பதிவிட்ட நண்பர்கள் அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் நாம் அதுபற்றி பதில் சொல்லமுடியும்.

ஆனால் ஒன்று : சமஸ்கிருதம் , அரபி, ஹீப்ரு மூன்றுமே மத்திய ஆசிய மக்களால் உருவாக்கப்பட்டவையே. ஹிந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களும் அந்த மண்ணில் இருந்து தொடங்கியவையே.
கிருஷ்ணன் பிறப்பும் கிருஸ்துவின் பிறப்பும் பற்றிய ஒரேமாதிரியான கதைகளே அதற்கு சான்றாக இருக்கின்றன.
வேதங்கள் எழுதப்படவில்லை.அவை காற்றிலே இருந்தன அவற்றை ரிஷிகள் ஞானக்கண்ணால் படித்தார்கள் என்பதைப்போல்தான் மகமது நபிகளுக்கு குரான் வசனங்கள் அருளப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட எந்தக்கதையும் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை.

மேலும் சம்ஸ்கிருதத்தின் அருமை பெருமைகளை ஆராய்ந்து பதிவு செய்த ஓரியண்ட்டல் ஜோன்ஸ் ( கீழைநாட்டு மொழிகளுக்குத்தான் ஓரியண்டல் என்று பெயர் ) முதல் அனைத்து மொழி ஆய்வாளர்களும் சமஸ்கிருதத்தை ஆரியமொழிக் குடும்பத்தில் இந்தோ ஆரிய மொழியாகத்தான் வகைப்படுத்தினார்கள். ஆரிய ஜெர்மானிய மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள உறவை போற்றி வளர்த்தவர் மேக்ஸ்முல்லர். அவர் பெயரால் இந்திய அரசின் உதவியோடு நிறுவப்பட்டமேக்ஸ்முல்லர் பவன் இன்றும் இயங்கிவருகிறது. சமஸ்கிருதத்திற்கு ஆரியத்தொடர்பு இல்லை. அது இந்தியாவின் பழங்குடி மக்களின் மொழி என்று அவர்கள் உறுதியாக மறுத்திருந்தால் இந்தியாவில் மேக்ஸ்முல்லர் பவன்கள் இருந்திருக்காது.
சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் எழுந்த சமஸ்கிருத எதிர்ப்பலையை எதிர்கொள்ளவும் நாங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள் இஸ்லாமியர்களதான் அன்னியர்கள் என்று திசைதிருப்பவும் மேலோட்டமாக வைக்கப்படும் ஒரு கருத்துதான் சமஸ்கிருதம் இந்தியமொழி என்ற வாதம். அதை பார்ப்பனர்களைவிட நம்மவர்கள்தான் நம்புகிறார்கள்.

எனவே நமது தாய் மொழியை நீசபாஷை என்றும் சமஸ்கிருதத்தை தேவபாஷை என்றும் சொல்பவர்கள் நமக்கு அந்நியர்கள்தான்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.

- அ.அருள்மொழி, வழக்குரைஞர்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

மே 2016 ஆழம் இதழில் அருள் மொழியின் நேர்காணல் கண்டேன். இந்த நேர்காணலில் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் கூறியதை நியாயப்படுத்துகிறார். அதற்குப் பெரியாரிடமிருந்து ஒரு மேற்கோளையும் எடுத்துக்காட்டுகிறார். பெரியார் கூறினாராம் - "இரண்டு தமிழர்கள் திட்டி சண்டை போட்டுக் கொள்ளும் போது கேளுங்கள் . . . தமிழ் காட்டுமிராண்டி மொழியா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்வீர்கள். அந்தளவுக்கு மோசமான வார்த்தைகள்." ஆங்கிலத்திலும் கூட எதிராளியின் தாயைப் பழிப்பது உள்பட மோசமான வார்த்தை வசவுகளைக் கேட்டிருக்கிறோமே எனப் பதிலுக்குக் கேட்கிறது ஆழம். ஆங்கிலத்தில் மிஞ்சிப் போனால் 4 வசவுச் சொற்கள்தான் இருக்கும் என்கிறார் அருள்மொழி. ஆக, தமிழைக் காட்டுமிராண்டி மொழி, அசிங்கமான மொழி எனத் திட்டித் தீர்ப்பதுடன் பெரியார் ஆதரவாளர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. கூடவே ஆங்கிலம் எப்படிப்பட்ட மொழி தெரியுமா எனப் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆங்கிலத்தின் இலட்சணத்தைத் தோலுரித்துக் காட்டவே நான் ஆங்கில மாயை என்னும் புத்தகத்தை எழுதினேன். பெரியார் ஆதரவாளர்கள் ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்கும் கருத்துகளுக்கு அப்புத்தகத்தில் விரிவாக பதில் சொல்லியிருந்தேன். அவர்களின் வாதப்படி ஆங்கிலமும் காட்டுமிராண்டி மொழியே, மூடநம்பிக்கை மொழியே என நிறுவியிருந்தேன். தமிழ் போல அதிகமான கெட்ட வார்த்தைகள் அதிகம் ஆங்கிலத்தில் இல்லை என்கிறார் அருள்மொழி. ஆங்கிலத்தில் Dictionary of Vulgar Words என்ற பெயரில் பல அகராதிகள் கிடைக்கின்றன. அதில் ஆயிரக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் கெட்ட வார்த்தைகள் எதுவும் இவர்களுக்குத் தெரியாமல் போனது ஏனோ?

இதோ, 500க்கு மேற்பட்ட இங்கிலீஷ் கெட்ட வார்த்தைகளுடன் இணையப் பக்கம் ஒன்று -

http://www.youswear.com/index.asp?language=English

அருள்மொழிகளே! தயவு கூர்ந்து பெரியார் கூறிய அனைத்தையும் காப்பாற்றும் முயற்சியில் தமிழை இழிவுபடுத்தும் செயல்களில் இனிமேலேனும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard