டாவு – 7
தலித் அவதாரம் டாவுல தலித் மக்களின் சக்தி பற்றி “PA 10 RAT 100 TAI 1000″ என்ற கம்ப்யூட்டரின் கணிப்பினை படித்தோம். அது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரிஞ்சு போச்சு.
ஆகஸ்ட் ஆறாம் தேதி தலித் மக்கள் ஊர்வலம் போகிறதாக அறிக்கை விட்டாங்க. உடனே தமிழக அரசுக்கு பயம் வந்துருச்சி. இயந்திர துப்பாக்கியில் இருந்து, இன்டெலிபிள் இங்க் (அதான் அழியாத மை) வரைக்கும் தயார் பண்ணிட்டாங்க. சாதிக் கலவரம் நடக்கும்போது கூப்புடாத வெளி மாநில போலீசை கூப்புட்டாங்க. நெறைய பேரை கைது பண்ணினாங்க.
இப்படி அரசாங்கமே பயப்படுகிற அளவுக்கு தலித் மக்கள் சக்தி வாய்ந்தவங்கன்னு தெரியுது. சில பேரு அரசாங்கம் தலித் இயக்கங்களை வன்முறை இயக்கமின்னு கொச்சைப்படுத்தத்தான் இப்படி செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க.
நான் தமிழக அரசு ஏன் இப்படி நடந்திடுச்சு? யின்னு “PA 10 RAT 100 TAI 1000″ கிட்ட கேட்டேன். உடனே அது ஒரு கதை சொல்லிச்சு.
முன்னொரு காலத்துல ஒரு ராசா இருந்தாராம். அவரு பட்டத்துக்கு வரும்போது நாடு நகரங்க எல்லாம், முன்னால ஆண்ட ராணி தயவால காடுகளா மாறிடுச்சாம். ராசா ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளு தெக்கு பக்கத்துல இருக்கிற காடுகள்ல ஒரே கலவரம்
ஏஞ்சாமி, இந்த பக்கம் ஒரே கலவரமாயிருக்குதே ஏன்?ன்னு ஒரு பூணூல் போட்ட நரிகிட்ட கேட்டாராம்.
நரிக்கு ஒரே சந்தோஷம். நம்மளை பார்த்தாலே அடியின்னு சொன்ன விரோதியோட ஆளு, நம்மளை கும்பிடுறானே இவனை ஒரு வழி பண்ணிடுவோம்-ன்னு நெனச்சி, பேரை மாத்துடா அம்பி, கோயில்ல சமபந்தி வைய்யி. நாக்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாளாகுதுன்னு நரி சொல்ல, ராசா பேருகளை எல்லாம் மாத்னாராம். கோயில்ல சமபந்தி வைச்சாராம். மகாநாடு, கருத்தரங்கு எல்லாம் நடத்துனாராம். கலவரம் நிக்கலயாம்.
குழம்பிப் போன ராசா மறுபடியும் அந்த பூணூல் போட்ட நரிகிட்ட வந்து, சாமி கலவரம் நிக்கலியேன்னு புலம்பினாராம்.
நரி பெரியவா, சாம, பேத, தண்டம்-ம்பாங்கோ. நீ கடைசி ஆயிதத்தை எடு. சுட்டுத்தள்ளு-ன்னு சொல்லிச்சாம்.
யாரை சாமி சுட்டுத் தள்ளறது? ன்னு ராசா கேட்டாரம். உடனே நரி, பலமுள்ளவனைச் சுட்டுத் தள்ளுடா அம்பி, உடன்பிறப்பு, கிடன் பிறப்புன்னு பார்க்காதே-ன்னு சொல்ல, ராசா தனக்கு ஓட்டுப் போட்ட மக்களைச் சுட்டு கொடுமை படுத்தினாராம்.
நரிக்கு ரொம்ப சந்தோஷம். இவன் ஓட்டு வங்கி காலி. இனி நம்மவா தாராளமா ராசா ஆகலாம்-ன்னு ஆவலோட காத்துகிட்டு இருக்குதாம்.
இந்த கதைய “PA 10 RAT 100 TAI 1000″ ன்ற கம்ப்யூட்டர் சொல்லிட்டு, என்ன புரியுதா-ன்னு கேட்டிச்சி.
எனக்கு ஒரு எழவும் புரியல. உங்களுக்கு புரியுதா? ஏன் இந்த அரசு இப்படி நடக்குதுன்னு.