New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெங்குளூர் குணா(சாமுவேல் குணசீலன்) கிறிஸ்துவரா? திருவள்ளுவரை தோமோ வடிவில் செய்துள்ளனர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பெங்குளூர் குணா(சாமுவேல் குணசீலன்) கிறிஸ்துவரா? திருவள்ளுவரை தோமோ வடிவில் செய்துள்ளனர்
Permalink  
 


  பெங்குளூர் குணா என்னும் சேமுவேல் குணசீலர் 

10420123_789916264440691_4455513205718759625_n%2B%25281%2529.jpg  11074002_789916311107353_1325724018004442912_n.jpg  11417665_789916441107340_936600097342624318_n.jpg10289816_789916354440682_3282855403004596950_n.jpg

திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களின் நற்கைகளால் திறப்புவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புனிதர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மலேசியாவிலிருந்து வாழ்த்துரை வழங்கிய திரு. சாமுவேல்ராஜ் அவர்களின் உரை அனைவரும் எழுச்சி கொள்வதாய் இருந்தது. 

1904254_789921354440182_2455363005279067632_n.jpg  1978733_789921437773507_2350111628267440708_n.jpg  11401101_789919301107054_6036341848248448425_n.jpg  11401412_789918937773757_6193413334145131684_n.jpg

12.06.2015  - திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் ஒரு சிற்றூர் 

25 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது இந்த சிற்றூர் உலகின் முன்னணி கிராமமாக திகழப்போகிறது என்று. 
சிறுமலர் பண்புச்சோலை சிறார் காப்பகமாக தொடங்கப்பட்டு சிறுமலர் தொடக்கப்பள்ளியாக தோன்றி இன்று உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. 
ள்ளியின் முன்பகுதியில் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது திருவள்ளுவரின் திருவுருவச் சிலை! அச்சிலை ஞானச் செல்வத்தால் உருவாகி அரிமாவால் நிமிர்ந்து நிற்கிறது! ஆய்வறிஞர் திரு குணா அவர்களின் திருக்கையால் திறப்புவிழா நிகழ்ந்தது. ஆன்றோர்களும் சான்றோர்களும் முன்னிலை வகிக்க அனைத்து தமிழ்ப் பற்றாளர்களும் தமிழர் களத்தின் வீர வேங்கைகளும் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். 

அடுத்ததாக தொடக்கப்பள்ளிக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்வுகள் தொடங்கியது. தமிழறிஞர்களின் படங்களை தங்கள் பிஞ்சுக் கைகளால் ஏந்தியபடி மழலைகள் ஊர்வலமாய் புறப்பட்டது கண்கொள்ளாக் காட்சி அது! திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களின் நற்கைகளால் திறப்புவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புனிதர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மலேசியாவிலிருந்து வாழ்த்துரை வழங்கிய திரு. சாமுவேல்ராஜ் அவர்களின் உரை அனைவரும் எழுச்சி கொள்வதாய் இருந்தது. 

11401338_789920271106957_5481378624676873904_n.jpg 10432478_789919114440406_2523593154805377107_n.jpg  10344799_789919501107034_7204920469234471398_n.jpg

ஒரு தமிழர் ஆதினமோ எவருமே இல்லை

உள்ள ஆண்கள் எவரும் தமிழர் மெய்யியலில் உடன்பாடு இல்லை. பாழ் நெற்றி. பெண் லில்லி பொட்டு வைக்கவில்லை.  

அனைவரும் தமிழர் பண்பாட்டில் நம்பிக்கையில்லாத பாலைவன கிறிஸ்துவ அடிமைகள்

 

 



-- Edited by Admin on Monday 29th of June 2015 08:22:43 PM



-- Edited by Admin on Tuesday 30th of June 2015 08:21:51 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அறிஞர் குணா கிறிஸ்துவரா? திருவள்ளுவரை தோமோ வடிவில் செய்துள்ளனர்
Permalink  
 


''தொல்காப்பியத்தின் காலம் '' நூல் வெளியீடு

http://namvaergall.blogspot.in/2011/08/blog-post_16.html

சென்னை மாவட்ட தமிழர் கள பொறுப்பாளர் திரு சாம்சன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் . 

 நிகழ்வில் டேவிட் பிரபாகரன் அவர்கள் அய்யாவின் நூலை அறிமுகம் செய்து துவக்க வுரை நிகழ்த்தினார் . நூலை திரு. பழனியப்பன் விஸ்வநாதன் வெளியிட முனைவர் தெய்வநாயகம் அவர்கள் பெற்றுக் கொண்டார் . 

நிகழ்வின் இறுதியாக மை பா . சேசுராசு அவர்கள் நன்றியுரை வழங்கினார் .05.jpg

 

 

உள்ள ஆண்கள் எவரும் தமிழர் மெய்யியலில் உடன்பாடு இல்லை. பாழ் நெற்றி. .  

அனைவரும் தமிழர் பண்பாட்டில் நம்பிக்கையில்லாத பாலைவன கிறிஸ்துவ அடிமைகள்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குணா அவர்களுக்கு 29 - 08 - 2008 நாளிட்ட மடல்

 

நாகர்கோயில்,
29-08-2008.

அன்பு நண்பர் குணா அவர்களுக்கு வணக்கம்.

நேற்று நண்பகலில் தாங்கள் தொலைபேசியில் கூறிய செய்திகள் குறித்து என் வருத்தத்தைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். 1982 இறுதி அல்லது 83 தொடக்கம் என்று நினைவு, சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு ஒன்று நடைபெற்றது. நான் அப்போது சென்னையில் இருந்தேன். எனவே நானும் சென்றிருந்தேன். அங்கு திரு.அரணமுறுவலிடம் திரு.பொன்.பரமேசுவரன் காசோலை கொடுத்தபோது தான் பஃறுளி முதல் வையை வரை நூலை அச்சிடும் பொறுப்பை அரணமுறுவலிடம் ஒப்படைத்திருந்தீர்கள் என்று தெரிந்தது. நூலுக்கான முன்னுரையில் அரணமுறுவலின் பங்கு பற்றிக் குறிப்பிடாத என் தவறைப் பின்னர் உணர்ந்தேன். நிற்க, அரணமுறுவல்தான் பின்னொரு நேரம் பேசும் போது ″ஆய்வரணுக்கு அயல் நாட்டுப் பணம் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?″ என்று கேட்டார். நாம் பின்னர் ஒருமுறை சந்தித்த போது இதைச் சொன்ன போது உங்கள் விடை ″அதனால் என்ன?″ என்றிருந்தது. இப்பொழுது தாங்கள் தொலைபேசியில் பேசிய போது கூறிய செய்தியை அப்போது சொல்லவில்லை. அதாவது தாங்கள் பணியாற்றிய இந்திய ஏம வங்கி அலுவலகத்தில் உரூ.16,000/- (பதினாறாயிரம்) கடன் வாங்கித்தான் அந்த நூலை வெளியிட்டீர்கள் என்ற செய்தி இந்தத் தொலைபேசி உரையாடலில்தான் வெளிவந்தது. இந்தச் செய்தி இடைவெளிதான் நான் செய்த தவறுக்குக் காரணம். இருந்தாலும் நடப்புக்குப் புறம்பான ஒரு பதிவு என் மூலமாக நேர்ந்ததற்கு நான் மிக வருந்துகிறேன். எந்தக் கட்டுறவும் இல்லாத மன்னிப்பைத் தங்களிடம் கேட்கிறேன். என்னைப் பொறுத்தருள்க.

இது குறித்து மனந்திறந்து..... பகுதியின் இறுதியில் ஒரு பதிவும் செய்துள்ளேன். இணையத்திலும் பார்க்கலாம். இந்த மடலையும்தான். அந்தப் பதிவின் படியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

அனைவரையும் குறை கூறுகிறேன் என்று அன்று நீங்கள் தொலைபேசியில் கூறியது இரண்டாவது முறை. இது பற்றி நான் ஏற்கனவே தமிழ்த் தேசியம் ″மனந்திறந்து….″ பகுதியில் எழுதியுள்ளேன்.

நான் சில குறிப்பிட்ட நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளேன். ″தமிழ்″, ″தமிழ்த் தேசிய″ இயக்கங்கள் நடத்துவோரில் பெரும்பாலோருக்கு அவை குறித்த கட்டுரைகளை விடுத்துள்ளேன். நான் வேலையை விட்டுத் தொழில் செய்து ஐந்து குழந்தைகளைக் கொண்ட என் குடும்பத்தைத் தாங்கிய வறுமை மிகுந்த சூழலிலும் என் வரவில் கணிசமான பகுதியை இதற்குச் செலவு செய்தேன். என் செலவில் எங்கெங்கோ சென்று நிகழ்ச்சிகளில் பங்குகொண்டேன். என் கருத்துகளை ஆணித்தரமாகத் தயங்காமல் எடுத்துரைத்தேன். அவர்கள் நடத்திய இதழ்கள் குறித்து மனம் திறந்த திறனாய்வுகளை எழுதி அவர்களுக்கு விடுத்தேன். ஆனால் அவர்களில் எவரும் என் முன்வைப்புகள் பற்றிய தங்கள் உணர்வுகளை, திறனாய்வுகளை முன்வைத்ததில்லை. பொறுக்க முடியாதவர்கள் புறக்கணிக்கின்றனர். அது பற்றி எனக்கு வருத்தமோ கவலையோ இல்லை. என் கருத்துகள் உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளப்படும் என்றோ என்னைப் புகழின் வெளிச்சத்தில் நிறுத்திவிடும் என்றோ நான் எப்போதும் நினைத்ததில்லை.

இந்த இயக்கங்களுடன் நான் தொடர்பு கொள்ளத் தொடங்கிய காலத்தில் தமிழகத்தில் இருந்த நிலையிலிருந்து நாள்தோறும் தமிழகத்தின் நிலை இறங்குமுகமாகவே இருக்கிறது. தங்கள் விருப்பங்களையும் மீறி தங்கள் மனதுக்குள் தாங்கள் போற்றும் அல்லது போற்றுவது போல்காட்டிக் கொள்ளும் தமிழகத் தலைவர்களை குறைகூறுவதைத் தவிர்க்க முடியாத நிலைக்குப் பலர் வந்துள்ளனர். அவர்களிலும் பலர் சிக்கல்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். என் கருத்து நோக்கி வரவேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அதேவேளையில் இவர்கள் முற்றிலும் மாற்றமடைந்து என்னுடன் தோழமை கொள்வார்களென்று நான் கனவு கூடக் காணவில்லை, ஏனென்றால் அவர்களின் வகுப்புப் பின்னணி அத்தகையது. திராவிட இயக்கத்தால், குறிப்பாகப் பெரியாரின் அரசியல் செயற்பாடுகளால் தமிழகத்தில் உருவாகிவிட்ட செல்வாக்கு மிக்க ஒட்டுண்ணிகளின் நலம் காப்பவர்கள் இவர்கள். ஆனால் விளைப்பு விசைகளை தமிழ்த் தேசிய முதலாளியர் - தொழிலாளர் - வாணிகர்கள் என்ற வகுப்புகளை அரசியல் களத்தில் கொண்டுவந்து நிறுத்துவதுதான் என் பணியின் முதல் கட்டமாக இருக்கும். அதற்கான எந்தக் களப் பணியிலும் இதுவரை என்னால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடைய முடியவில்லை. இதுவரை அதற்கான துணை கிடைக்கவில்லை. என் வாழ்நாளில் அது கிடைக்காமலே கூடப் போகலாம். அந்தப் பணி பிறரால் கூட, பின் இன்னொரு நாளில் நிறைவேறலாம்.

நான் உறவுகளைத் தேடியோ நட்புகளை நாடியோ இங்கு வரவில்லை. புற உறவுகளோ நட்புகளோ இன்றி வாழ்ந்து பழகிவிட்டவன் நான். என் குடும்பம் என்ற மிகச் சிறு வட்டம் என் அந்தத் தேவைக்குப் போதுமானது. அது அரசியல் கொள்கை, கோட்பாடு அடிப்படையில் அமைந்ததல்ல என்பதால் அது தொடர்வதில் பெரும் சிக்கல் இருக்காது.

எனது ஒட்டுமொத்த குறிக்கோள் தமிழக மக்கள் உலகிலுள்ள வேறு எந்த மக்களுக்கும் அடிப்பட்டவர்களாய், அடிமைகளாய் இல்லாமல் உலகிலுள்ள எந்த மனிதக் குழுவுக்கும் இணையாக வரவேண்டும்; தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களும் அவ்வாறே; உலகிலுள்ள எல்லா மக்கள் குழுவினரும் சமநிலையில் வாழ வேண்டும்; அந்தப் பணியைத் தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்; அதற்கு நல்ல கோட்பாட்டு வழிகாட்டி மார்க்சியத்தின் வரலாற்றுப் பருப்பொருளியம், இயங்கியல் பருப்பொருளியம் ஆகியவையே என்பது என் நிலைப்பாடு. பொதுமையியம் இப்போதைக்கு மனித குல வரலாற்றில் இடம் பெற முடியாது; இன்றைய பொதுமைக் கோட்பாடும் பொதுமைக் கட்சிகளும் இயக்கங்களும் மார்க்சியத்தின் மறுப்பு அல்லது அகற்றலே(Negation) என்பது எனது கருத்து. ஏழை நாட்டு மக்களின் இன்றைய துயரங்களுக்கெல்லாம் மட்டுமல்ல வல்லரசுகளின் எல்லையற்ற அரக்கத் தனமான வளர்ச்சிக்கும் காரணம் அந்த ஏழை நாடுகளின் வளர்ச்சி நிலைக்கும் பொருந்தாத பொதுமைக் கோட்பாடும் செயல்திட்டங்களும்தாம் என்பதும் என் உறுதியான கருத்து.

நாம் சந்தித்த ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடையே கருத்துகளில் இடைவெளி தொடங்கி இன்று நெருங்கி வர முடியாத தொலைவில் நாம் இருப்பது போன்ற புரிதல் எனக்கு உள்ளது. மீண்டும் நாம் பழைய புரிதலுக்கு வருவோமா என்பது கேள்விக்குறியே.

தமிழ் அணுவியம் என்ற தலைப்பில் எழுதியிருந்த தங்கள் நூலின் தலைப்பை வள்ளுவத்தின் வீழ்ச்சி என்று மாற்றியதன் பின்னணியில் என்ன முரண்பாடுகள் செயற்படுகின்றனவோ அவையே கர்னாடகத் தமிழர்களின் இன்றைய வீறுகெட்ட மந்த நிலைக்குக் காரணமாகவும் வெளிப்பாடாகவும் எனக்குத் தோன்றுகின்றன. கர்னாடகத் தமிழர்களின் இடையில் உள்ள உறவு நிலைகளை அல்லது உறவுச் சீர்கேடுகளைத் தமிழகத்துத் தமிழ் பேசும் மக்களிடையில் விதைப்பதாக உங்கள் அணுகல் உள்ளது. கர்நாடகத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும் பிறமொழியாளருக்கும் உள்ள முரண்பாடுகளை தமிழக மண்ணில், குறிப்பாக 1956 நவம்பர் 1ஆம் நாளுக்கு முன் பிறந்த(வட இந்தியப் பனியாக்கள் நீங்கலாக) தமிழ் தவிர்த்த வீட்டுமொழி பேசும் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் உருவாக்கித் தமிழகத் தேசியத்துக்குக் கேடுசெய்வதாக உள்ளது.

இன்றைய வானியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று பறையரில் ஒரு பிரிவான வள்ளுவர் சாதியினரைக் குறிப்பிடுகிறீர்கள். அந்த வள்ளுவரில் எத்தனை பிரிவினர் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி தொழில் அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா? அவர்களில் எந்தப் பிரிவினருக்கு வானியல் கண்டுபிடிப்புகள் உரியவை என்பன போன்றவற்றுக்கு விடை தேடியிருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்க விரும்புகிறேன்.

வானியல் உன்னிப்புக்கு அல்லது நோட்டமிடுவதற்கு மக்களில் பல்வேறு தொழில் செய்வோருக்குத் தேவை இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும் போது என் தந்தை பின்னிரவில் எழுந்திருந்து சிறுநீர் கழித்துவிட்டு ″ஏழாங்கோட்டை வெள்ளி″ மேலே இருக்கிறது என்று சொல்லி விட்டுப் படுத்துவிடுவார் அல்லது சாய்ந்து விட்டதென்று கூறி ஊளையிடுவார். அதற்கு மறுமொழியாக வேறு ஊளைகள் கேட்கும். முகத்தைக் கழுவி விட்டுச் சந்தைக்குப் புறப்படுவார். பல வேளைகளில் அவரோடு சந்தைக்குச் செல்பவர்கள் விழித்துக் கொண்டு ஊளையிட்டு இவரை எழுப்புவதும் உண்டு.

என் மனைவியின் ஊர் சற்று ஒதுக்குப் புறமானது. பேருந்து வருமிடமும் ஒலி கேட்காத தொலைவு. பேருந்து வரும் நேரத்தை அறிய வெட்ட வெளியில் நின்று நிழலை அளந்து நேரத்தை அறிவதாக என் மாமனார் கூறுவார்.

அதுபோல் ஊர்ப்புறத்து மக்கள் நெல் அவிக்க வேண்டுமானால் கூட வானத்தையும் பிற அடையாளங்களையும் வைத்து மழை வருமா வராதா என்று அறிவார்கள். பல வேளைகளில் அவர்களது கணிப்புகள் தவறாகப் போய்விடுவதும் உண்டு. ஆனால் இன்றைய வானியல் முன்னறிவிப்பை விட அவர்களது கணிப்புகள் சிறப்பாகவே இருந்தன. இதுபோல் குமுகத்தில் மக்களில் ஏறக்குறைய அனைத்துப் பிரிவினரும் தத்தம் வாழ்நிலை தேவைகளுக்காக தத்தமக்குரிய வானியல் உள்ளடங்கிய, பல்வேறு அடையாளங்களைக் குறியாக வைத்திருந்தனர். உழவன், குயவன், செங்கல் அறுப்போன், இடையன் என்று எத்தனையோ பேர் வானத்தைப் பார்த்து வயிறு வளர்க்க வேண்டியவர் நம் குமுகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளனர். இடையர்கள் என்று எடுத்துக்கொண்டால் இடைக்காடரை விட்டுவிட்டு தமிழர்களின் வானியலை நடுநிலைச் சிந்தனை உடைய எவராலும் பேச முடியுமா? அவரைப் பற்றிய ஒரு தொன்மைக் கதையைப் புறக்கணிக்க முடியுமா? பன்னிரண்டு ஆண்டு வரட்சிக்குப் பின் அவரைப் பார்க்க ஒன்பது கோள்களும் வந்ததாகவும் அவர்களுக்கு தினையை மண்ணில் கலந்து குழைந்து தான் கட்டிய சுவரிலிருந்து தினையைப் பிரித்து ஆட்டின் பாலில் கஞ்சி வைத்து ஊட்டி தலைமாடு, கால்மாடு மாறித் தூங்கிய அவர்களை ஒழுங்காகப் படுக்க வைத்தார் என்ற கதையின் உட்பொருளைத்தான் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? அறுபது ஆண்டுகளுக்கும் அவர் பெயரில் இருக்கும் பாடல்களில் உள்ள தட்ப வெப்பநிலை, வேளாண்மை, செய்தொழில்கள் ஆகியவற்றுக்கான உறவு நிலைகள், விளைந்த முகாமையான உணவுப் பண்டங்களும் ஆமணக்கு போன்ற கொழுப்புப் பொருட்களும், உப்பு போன்ற பண்டமாற்று ஊடகங்களும் என்று அதிலடங்கிய செய்திகள் உலகில் வேறெங்காவது உண்டா? அதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

சேம்சு பெர்க்குசன் என்றொருவர், பெயர் சரிதானா என்று ஐயமாக இருக்கிறது, தொடக்கப் பள்ளியில் படித்தது, எட்டாவதோ, பன்னிரண்டாவதோ கடைக்குட்டி, பள்ளிக்கு விடுக்கவில்லை. அண்ணன்மாரைப் பார்த்து எழுத்தறிவை வளர்த்துக் கொண்டவர். சிறுவனாக இருக்கும் போதே இரவில் ஆடுகளுக்குக் காவலிருந்தார். கையில் செபமாலையை வைத்துக் கொண்டு விண்மீன்களை நோட்டமிட்டு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். பல கதிர்க்கடிகைகளை யாத்தவர்.

இடையர்கள் ஆடுமாடுகளை மேயவிட்டு விட்டு ஓய்வு வேளைகளில் என்னென்னவோ செய்ய முடியும். திருமூலரைப் போல் அரிய சிந்தனைகளையும் உருவாக்க முடியும். இரவில் இடைக்கடரைப் போல், சேம்சு பெர்க்குசன் போல் வானியல் இறும்பூறு பற்றிய புதிர்களை விடுவிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. நீங்கள் குறிப்பிடும் வள்ளுவர்களுக்கு அப்படி இருந்த வாய்ப்பு என்ன?

இனி கடலோடிகளுக்கும் மீனவர்களுக்கும் வருவோம். கடலிலிருந்து பார்க்க கரையும் மரங்களும் கட்டடங்களும் மலைகளும் மறைந்துவிடும் தொலைவில் சென்ற நொடியிலிருந்து பகலில் கதிரவனும் இரவில் வான் பொருட்களும் இன்றி அவர்களால் எவ்வாறு திசையை அறிய முடியும்? அதனால்தான் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் கடற்கரை கண்ணிலிருந்து மறையாத தொலைவுக்குள்ளேயே கடற்செலவு மேற்கொண்டிருந்தனர். தமிழர்களின் முன்னோர்கள் வான்பொருட்கள் மூலம் திசையறிந்து இரவு வேளைகளிலும் நடுக்கடலில் கலம் செலுத்தினர். ஆனால் நாள் முழுவதும் மேக மூட்டத்துடனிருக்கும் காலமழையின் போது எப்படித் திசையறிய முடியும்? அவ்வேளைகளில் அவர்கள் கடற் செலவைத் தவிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் கால், காற்று, காலம், கால மழை போன்ற சொற்கள் வழக்குக்கு வந்தன போலும்.

இந்த இடர்ப்பாடுகளுக்கும் ஒரு முடிவு வந்தது. காந்தத்தின் தன்மையறிந்து காந்த ஊசியைக் கண்டுபிடித்தனர். அதற்குச் சான்றாக காந்த ஊசி தன்னை நிறுத்திக் கொள்ளும் வட திசைக்கு ஊசித் திசை என்ற பெயர் வந்தது. இந்தக் காந்த ஊசியை ஆமை வடிவில் அமைந்த கொள்கலனில் உள்ள எண்ணெயில் மிதக்கவிட்டனர், இரும்பாலான அந்த ஊசி துருப்பிடிக்காமல் இருக்கவும் நூல் போன்றவற்றில் தொங்கவிட்டால் துல்லியம் இருக்காது என்பதாலும். இந்த ஆமை தொன்ம வடிவில் திருமாலின் தோற்றரவுகளில் ஒன்றாக மறைந்து கிடக்கிறது. சீனர்களின் வரலாற்றில் அம்மணமான உண்மையாகப் பதிவாகியிருக்கிறது. தமக்குள் முரண்பாடு கொண்ட இரு நிலப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ″ஆமை″யைப் பயன்படுத்தி குமரிக் கடலைக் கலக்கியதில் எத்தனை எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை இயற்றினர் என்று நம் தொன்மங்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகளில் உங்கள் ″வள்ளுவர்″களின் பங்கு யாது? இப்படிப் பல்வேறு மக்கள் குழுவினரிடையிலும் பொதுமக்களிடையிலும் பரந்துகிடந்த உண்மைகளை ஒருவரோ பலரோ தொகுத்திருக்கக் கூடும். அவர்கள் யார்? அவர்களுக்கு ″வள்ளுவர்″களோடு ஏதாவது உறவு உண்டா என்றாவது உங்களால் காட்ட முடியுமா?

தெற்கன் ஆகிய தட்சன் தன் மக்களில் 27 மகள்களை நிலவுக்கு மணம் முடித்துக் கொடுத்தான் என்று தொன்மம் கூறுகிறது. கதிரவன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் புவியிலிருந்து பார்க்கும் போது 27⅓ நாட்கள், கிட்டத்தட்ட (உண்மையாக அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வது 25⅓ நாட்களில் கிட்டத்தட்ட) அந்த 27⅓ நாட்களை 27 ஆகப் பிரித்து 27 நாண்மீன்களாக வகுத்துள்ளனர். அவற்றை நிலவின் இயக்கத்தோடு சேர்த்துக் கணித்தவன் தெற்கன் என்பது இந்தத் தொன்மக் கதையின் உள்ளடக்கம். ஆனால் நீங்களோ, யாரோ எழுதியவற்றை வைத்துக்கொண்டு, தொன்மங்கள் வான்பொருட்களின் இயக்கங்களை விளக்குகின்றன என்று தலைகீழ்ப் பாடம் படிக்கிறீர்கள். தொன்மங்களின் மனித வரலாற்றுக் குறிதகவுகளிலிருந்து உங்கள் படைப்புகளைப் படிக்கும் மக்களின் கவனத்தைத் திருப்புகிறீர்கள். சிவன் காலனை உதைத்தாக வரும் கதை உண்மையில் காலசாமி வழிபாட்டை ஒழித்துச் சிவன் வழிபாட்டை நிறுவிய நடைமுறையின் ஒரு பதிவு. (எங்கள் வட்டாரத்து அம்மன் கோயில்களில் இன்றும் காலசாமி பீடங்கள் உள்ளன. கொடைவிழாவின் போது மார்க்கண்டன் கதையை வில்லில்பாடும் போது காலசாமி வந்து ஆடுகிறார். இவ்வாறு பல சிறுதெய்வங்களையும் பெருந்தெய்வங்கள் அகற்ற முயன்று தோற்றுப்போன வரலாற்றுண்மையின் புதைபடிவங்களாக ஊர்ப்புற வழிபாடுகள் நிலவுகின்றன.) அதில் வான் பொருட்களின் இயக்கத்தைத் தடம்பிடித்து, இந்தக் குமுக வரலாற்றிலிருந்து உங்கள் எழுத்து திசை திருப்புகிறது. ஒவ்வொரு நாண்மீனுக்கும் தலைவர்கள் இன்னின்னாரென்று ஏதோ நூலில் உள்ளவற்றைப் படித்து எழுதியுள்ளீர்கள். ஒருவேளை அந்தத் தலைவர்கள் தாம் அந்தந்த நாண்மீனை இனம் கண்டவர்களாக இருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றவில்லை.

இவ்வாறு அரிய கருப்பொருட்களை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு சாதிப் பெருமைபேசி அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

நாள், பக்கம், நாண்மீன், யோகம், கரணம் என்ற ஐந்து உறுப்புகளைக் கொண்ட பஞ்சாங்கம் எனப்படும் ஐந்திறத்தை, இந்த ஐந்து உறுப்புகளுக்கும் ஒரு பட்டியல், பகல் நேர நீட்சியான ″அகசு″க்கொரு பட்டியல், கதிரவனின் ஒரு நாளின் 60 நாழிகைக்குள் இடம்பெற்றிருக்கும் ஓரையைக் காட்டும் ஒரு பட்டியல், அந்தந்த மாதத்தில் ஓரைகளின் இருப்பைக் காட்டும் ஓர் ஓரை வட்டம் ஆகியவற்றைக்கொண்டதாகப் படைத்துள்ளனர். வாக்கியம் என்பது பட்டியலைக் குறிக்கும் சொல். எனவே இதனை வாக்கிய ஐந்திறம் என்கின்றனர். புலனங்களை எடுத்துவைப்பதற்கு வாகாக(வாக்காக என்பதுதான் குமரி மாவட்ட வழக்கு) இருப்பதால் பட்டியலை வாக்கு என்று குறித்திருக்கலாம். அதை உருவாக்கியவர் சிவவாக்கியராக இருக்கலாம். இந்த ஐந்திறம் பாண்டியர்களின் தலைநகர் நிலநடுக்கோட்டில், தென் மதுரையில் அமைந்திருந்தபோது அல்லது அதற்கும் முன்பு உருவாகியிருக்க வேண்டும், ஏனென்றால் இப்போதிருக்கும் ஐந்திறத்தில் முதன்மைப் பட்டியல் தலைநகர் கபாடபுரத்துக்கு மாறி ஆண்டுப்பிறப்பு 24 நாட்கள் பின்னோக்கி நகர்ந்த பின்னுள்ள காலத்துக்கு உரியவையாக இருந்தாலும் பழைய நிலைமைக்கு உரிய பதிவுகளையும் அவை கொண்டுள்ளன. இது நம் மரபின் ஒரு சிறப்புக் கூறு. மாற்றங்கள் வரும்போது பழையவற்றின் இடைச்சொருகலாகப் புதியவற்றை வைப்பது ஓர் உத்தி. இங்கே புதியவற்றின் இடைச்சொருகலாகவும் பழையவற்றை அப்படியேயும் இரு உத்திகளையும் கையாண்டுள்ளனர். மாதத் தலைப்பில் மிதுனரவி என்று போட்டிருந்தால் 7, 8, அல்லது 9ஆம் நாளில் கடகாயனம் என்ற குறிப்பு உள்ளது. அன்றே கதிர் உண்மையில் மிதுனத்திலிருந்து கடகத்தினுள் நுழைந்துவிடுகிறது என்பது இதன் பொருள்.

″அகசு″க்கான பட்டியலில் 1, 5, 15 என்று ஐந்தைந்து நாட்களுக்காக பகல் நேர நீட்சியைக் கொடுத்திருக்கையில் 5க்கும் 15க்கும் இடையில் மட்டும் கடகாயனம் என்று குறிப்பிட்டிருக்கும் நாளுக்குக் கொடுத்திருக்கிறது.

அதுபோலவே ஒவ்வொரு மாதத்திலும் கதிர் தோன்றும் நேரத்தில் குறிப்பிட்ட ஓரையின் இருப்பு நேரத்தைக் காட்டும் பட்டியலும் அடுத்த மாதத்துக்குத்தான் பொருந்தும்.

அதுமட்டுமல்ல 12 நேர் கோடுகளில் 12 ஓரைகளையும் காட்டும், நம் கணியர்கள் பயன்படுத்தும் ஓரைவட்டம் ஆகிய அந்தப் பட்டியல் நமக்கு என்றும் பெருமை சேர்க்கும் சிவவாக்கியரின் அருஞ்செயலாகும். இவ்வாறு, பட்டியலிடும் உத்தியை உலகுக்கு வழங்கியவர்களே நாமாகலாம். இதைச் செய்தவர் அல்லது செய்தவர்கள் வள்ளுவர்கள் என்றாவது நம்மால் நிலைநாட்ட முடியுமா?

நானறிந்தவரை வள்ளுவர்கள் என்ற சாதியார் தமக்கே உரிய ஓர் ஒப்பற்ற முறையில் சாதகம் கணித்துப் பலன் சொல்பவர்கள் என்பது தெரியும். ஆனால் குமரி மாவட்டத்தில் அவர்கள் செயற்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. நெல்லையில் ஒரு நண்பர் சொல்லித்தான் தெரியும். அவருக்கு வள்ளுவர் எழுதிக்கொடுத்திருந்த சாதகக் கட்டின் கனத்தைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். நான் அதுவரை தமிழகத்தின் பிற பகுதிகளில் கூட ஒற்றைப் பனை ஓலை நறுக்கில் எழுதப்பட்ட சாதகக் குறிப்பை அல்லது ஒரு சிறு குறிப்பேட்டில் எழுதப்பட்டதைத்தான் பார்த்திருக்கிறேன். நிற்க, நான் சொல்ல வருவது என்னவென்றால் வள்ளுவர்கள் வானியல் நுட்பங்களைத் தாமாக அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச் சூழலை இனங்காணாமல் இன்று பஞ்சாங்கங்களில் கிடைக்கும் வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து சாதகம் பார்ப்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள்தாம் அனைத்து வானியல் கண்டுபிடிப்புக்கும் மூலவர்கள் என்பது பேருந்து, சரக்கி ஓட்டுநர் அனைவரும் ஒன்றுசேர்ந்து தாங்கள்தாம் உள்ளெரிப் பொறிகள்(Internal combustion engines) உட்பட உந்துத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூலைப் படித்ததிலிருந்து, இது வள்ளுவத்தின் வீழ்ச்சி அல்ல, குணாவின் வீழ்ச்சி என்று நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அது கூடப் பெரிதில்லை. தமிழகம் இந்தியப் பனியா அரசின் பின்னணியோடு சுரண்டப்படுவதை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட்டுக் கொண்டிருந்த குணா திடீரெனத் திசைமாறி தமிழக மக்களிடையில் மொழி அடிப்படையில் பகைமை வேர்கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியது எனக்குப் பேரிடியாக இருந்தது. இப்பொழுது தமிழ் பேசும் மக்களிடையில் கூட சிவனியத்துக்கு எதிராகவும் கருத்துச் சொல்லத் தொடங்கியுள்ளது, தன் செயல்களின் தன்மையையும அவற்றின் விளைவுகளையும் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டதையே காட்டுகிறது. வேறு வகையான சிந்தனைகள் உங்களை ஆட்கொண்டு விடாதபடி விடுதலை இறையியல் கூட்டம் அரணிட்டுக் காத்து நிற்பது ஊரறிந்த உண்மையாகிப் போனது. இதைப் பயன்படுத்தி படையெடுப்பாளர்களின் காலைப் பற்றிக்கொண்டு தமிழகத்தில் நாட்டுணர்வுடன் பகைவர்களை எதிர்த்துநின்ற மண்ணின் மைந்தர்களை ஒடுக்கிய, இன்றும் ஒடுக்கி வரும் சாதி வெறிபிடித்த ″தமிழ்″ச் சாதியினர் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பதும் அனைவருக்கும் தெரிகிறது.

தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், தமிழகத்தில் உணர்வும் ஈகை நோக்கும் உள்ள இளைஞர் மட்டுமல்ல மூத்தவர்களையும் கொண்ட கூட்டம் ஒன்று உங்கள் வழிகாட்டலில் தங்கள் சிந்தனைகளைத் திருப்பிக்கொண்டு நிற்கிறது. அவர்களுக்குத் தவறான வழியைக் காட்ட வேண்டாம். தமிழக மக்கள் பொருளியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டிய சரியான பாதையை அவர்களுக்குக் காட்டுங்கள். புற முரண்பாடுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய கற்பனைக் கெட்டாத கடும் போரில் உள்முரண்பாடுகள் உருகி மக்கள் ஒன்றாகக் கலந்து விடுவார்கள் என்று வரலாறு நெடுகிலும் நாம் காணும் உண்மையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மேலே எழுதிய கருத்துகளின் மூலம் தங்கள் மனதுக்கு ஏதாவது வருத்தம் நேர்ந்திருந்தால் அதற்காகவும் என்னை மன்னித்திருங்கள்.

நான் தங்களுக்குப் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவற்றைப் பற்றி ஏற்கனவே அந்தக் குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன். அதனை மீண்டுமொருமுறை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்
குமரிமைந்தன்.

http://kumarimainthan.blogspot.in/2008/11/29-08-2008.html



-- Edited by Admin on Saturday 27th of June 2015 06:47:25 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: அறிஞர் குணா கிறிஸ்துவரா? திருவள்ளுவரை தோமோ வடிவில் செய்துள்ளனர்
Permalink  
 


http://kumarimainthan.blogspot.in/2008/11/blog-post.html

"தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தாமசு" என்ற செயமோகனின் வரைவைப் படித்தேன். 80களிலேயே திரு.தெய்வநாயகம் அவர்கள் திராவிட சமயம் இதழுடன் என்னை வந்து சந்தித்தார். அவருடைய நோக்கம் மதமாற்றம்தான் என்பதைப் புரிந்துகொண்டு அவருடன் தொடர்பை நான் ஊக்கவில்லை.

அடுத்துச் சில ஆண்டுகளில் மதுரை இறையியல் கல்லூரியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. சங்க இலக்கியம் பற்றிய ஒரு கருத்தாடல் குறித்து என்று நினைவு. அதில் நிகழ்ச்சிக் குறிப்பில் தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருக்கக் கூடும் என்று ஓர் அடிக்குறிப்பு இருந்தது. நான் சென்றிருந்தேன். ″பரட்டை″ என்ற புனைபெயர் வைத்திருந்த கிறித்துவத் ″தந்தை″ தியாபலசு அப்பாவு அமர்வை நெறிப்படுத்தினார். எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் உள்ள சில சொற்கள் தொல்காப்பியத்தில் வருவதால் தொல்காப்பியம் அதற்குப் பின் தோன்றியிருக்கலாம் என்று ஒரு கருத்தை அவர் முன்வைத்தார். அதை மறுக்கவோ எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவோ இல்லை மற்றவர்கள். நான் அதே சொற்களை இன்றும் ஆவண எழுத்தர்கள் பயன்படுத்துகின்றனர் என்று சுட்டிக் காட்டி அவர்களது நோக்கத்தின் மீது ஐயம் கொண்டு கடுமையாகப் பேசினேன். அதுதான் அவர்கள் முதலும் முடிவுமாக என்னை அழைத்தது. அன்று என்னோடு கலந்து கொண்டவர்களில் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.அக்கினிபுத்திரன் - இப்போது கனல்மைந்தன், பேரா.க.ப.அறவாணன் - பின்னாள் துணைவேந்தர் ஆகியோரை நினைவிருக்கிறது. அனைவரும் இறையியல் கல்லூரியுடன் நீண்ட தொடர்புடையவர்களாகத் தோன்றினர். க.ப. அறவாணன் மிக உரிமையோடு வசதிகளைக் கேட்டுப் பெற்றார்.

அங்கிருக்கும் போது இளைஞரான ஒரு ″திருத்தந்தை″யுடன் பேசினேன். அவர்கள் அங்கு சீருடையில் இல்லை. ஏசு தன்னை சிலுவையில் அறைந்த பின் ″தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னித்தருளுங்கள்″ என்று கூறியதாக வரும் புதிய ஏற்பாட்டை எழுதியவர் அந்த நேரத்தில் ஏசுவுடன் இருந்தவரில்லை. அவரிடம் அப்போது இருந்தவர் இன்னொருவர். அவர் எழுதிய புதிய ஏற்பாட்டில் இந்தக் கூற்று இல்லை. இந்தக் கூற்று எப்படி உண்மையாக இருக்கும் என்று நான் கேட்ட போது புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள் என்று கூறி ஒப்பேற்றினர். நல்ல திறமையானவர்களைப் பொறுக்கி நன்றாகப் பயிற்றுவித்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

1996இல் நாகர்கோவிலில் அலெக்சந்திரா அச்சகச் சாலையில் இருந்து மனித நேய மன்றம் என்ற அமைப்பின் பெயரில் கொடிக்கால் சேக் அப்துல்லா என்பவர் தொலைபேசியில் பேசினார். அதன்படி ″தமிழகத்தில் ஆரியமும் வகுப்புவாதமும்″ என்ற பொருள் பற்றிப் பேச அழைத்தனர். றா.சோகன்னா என்பவர் மடல் எழுதினார். பேரா.வே.தி.செல்லம் தலைமை. 24-3-96 அன்று கிறித்துவக் கல்லூரிச் சாலையும் தொலை பேசி நிலையத்திலிருந்து நகரவை அலுவலகம் செல்லும் சந்தும் சந்திக்கும் இடத்தில் தெற்கே கிழக்குப் பக்கம் இருக்கும் ஒரு கட்டட மாடியில் நிகழ்ச்சி நடந்தது.

″வரலாற்றில் ஆரிய இனம் என்ற ஒன்று இடம் பெற்றிருப்பது தவறானது. வேதங்களும் தொன்மங்களும் தமிழர்களுக்குரியவை. சாதிகளை உருவாக்கியவர்களும் தமிழர்களே. கற்பனையான ஆரியர்கள் மீது பழியைப் போட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. சாதிச் சிக்கலுக்கு நாம்தான் தீர்வு காண வேண்டும்″ என்று நான் பேசினேன். எடுத்துக்கொண்ட தலைப்பில் நான் பேசவில்லை என்று கூச்சல் போட்டார்கள். ஆரியம் பற்றிப் பேசச் சொன்னீர்கள் பேசினேன், வகுப்புவாதம் பற்றிப் பேசச் சொன்னீர்கள் பேசினேன்; வகுப்புவாதம் என்பது மதம் குறித்ததாக இருக்கலாம், சாதி குறித்ததாக இருக்கலாம், அல்லது பொருளியல் வகுப்புகள் குறித்தாக இருக்கலாம்; நான் சாதிகளை எடுத்துக்கொண்டு பேசினேன்; நீங்கள் நினைப்பதையே பேசவேண்டுமென்ற கட்டாயம் எனக்கில்லை என்று நான் கூறினேன். கூச்சல் குழப்பத்துடன் நிகழ்ச்சி முடிந்தது. அழைத்தவர்கள் ஒரு தேநீர் கூட எனக்குக் கொடுக்கவில்லை. இவர்களின் நோக்கமும் மதமாற்றம்தான்.

தமிழார்வலர்கள், தமிழ்த் தேசியர்கள் எனப்படுவோரின் அழைப்புகளுக்குச் சென்று பேசும்போது என் கருத்துகளை கூறத் தொடங்கியவுடனேயே சீட்டு வரும். என்னைப் பேசவிடவில்லை என்பதைக் கூட்டத்தாருக்குப் புரிய வைத்துவிட்டு இறங்குவேன்.

ஆக, இறையியல் கல்லூரியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி ஒரு நீண்டகாலத் திட்டத்தின் முதல் அடி என்று தெரிகிறது.

நண்பர் செயமோகன் கட்டுரையில் என் பெயரும் இடம் பெற்றுள்ளதால் இச்செய்திகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

இனி கட்டுரை குறிப்பிடும் கிறித்துவத்தினுள் நுழைவோம்.

நமக்குத் தெரிய மோசேயோ ஏசுவோ அரிட்டாட்டில் போன்று மெய்யியல்(தத்துவம்) எதையும் கூறியதாகத் தெரியவில்லை. மோசே இறைவனின் ஆணைகளைச் சொல்லி மிரட்டுவார், கேட்காதவர் ஐயத்துக்குரிய வகையில் மாண்டு போவார். மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் சட்ட வடிவில் வழங்கியுள்ளார். தொன்ம வடிவில் ஒரு வரலாற்றை எழுதியுள்ளனர். எகிப்து அரண்மனை நூலகத்தில் தான் படித்த நூல்களிலிருந்து அறிந்துகொண்டவற்றை வைத்து அவர் எழுதினார் என்று எரிக் வான் டெக்னிக்கன்(Eric Von Denicken) கூறுவார். ஏசு நிறைய கதை கூறியுள்ளார். அவற்றில் அவரது கோட்பாடுகள் மறைந்துள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்து வந்த தோமா, பெரும் கல்வியோ, மெய்யியல் சிந்தனையோ இல்லாத தோமா தன் வெற்று டப்பாவிலிருந்து நீர் ஊற்றித் தமிழர்களை ஆன்மவியலில் குளிப்பாட்டித் தூய்மை செய்தார் என்று சொல்வதற்கு நிறைய துணிவு வேண்டும், பாராட்டலாம். நெஞ்சழுத்தம், கொழுப்பு என்ற சொற்களை நாகரிகம் கருதித் தவிர்க்கிறோம்.

இடைச் சொருகலாக ஒரு செய்தி; என் தந்தை இளமையில் நண்பர்களோடு மருத்துவாழ் மலைக்குச் சென்றிருந்தாராம். அங்கும் நாம் மேலே கூறியது போல மலையில் ஓர் ஓட்டை இருந்ததாம். அவர் அதனுள் ஏறி நுழைந்தாராம். உள்ளே செல்லச் செல்ல ஓட்டை அகன்றதாம். அதற்குள் வெளியே இருந்த அவரது நண்பர்கள் அவரது காலைப் பிடித்து இழுத்து வெளியேற்றி விட்டனராம். நான் சிறுவனாக இருந்த போது அவர் எனக்குச் சொன்ன செய்தி இது. இப்போதும் மருத்துவாழ் மலையில் குகைகளுக்குள் சித்தர்கள் சாவில்லாத, பசி இல்லாத வாழ்வைத் தரும் பச்சிலைக்களை உண்டு வாழ்கின்றனர் என்று சிலருக்கு நம்பிக்கை உள்ளதே. இன்றிருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அத்தகைய ஓட்டைகளுக்குள் மின்விளக்கையும் புகைப்படக் கருவியையும் செலுத்தி உள்ளே என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் என்ன?

சமணத்தையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம். அம்மணமாக ஊர் நடுவே சுற்றித் திரிந்த அநாகரிகர்களும் தங்கள் மயிரைத் தாங்களே பிடுங்கிக்கொண்ட மனநோயாளிகளுமான சமணர்களும்தாம் தமிழர்களுக்கு நாகரிகம் சொல்லித் தந்தார்கள் என்று ஐராவதம் மகாதேவன்களும் க.ப.அறவாணன், தொ.பரமசிவம் உட்பட இந்தியப் பல்கலைக் கழகக் கட்டமைப்பு மட்டுமல்ல இந்தியப் பனியா அரசும் நிறுவியே தீர்வது என்று வரிந்துகட்டிக்கொண்டு களத்திலுள்ளனர். அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்து நிற்கின்றனர். அந்த ஒரே நோக்கத்துடன் இந்திய வரலாற்றை ஆரியர் நுழைவு என்ற புனைகதைக்கேற்ப, கி.மு.2500க்கு அப்பாலும் தமிழக வரலாற்றை மகாவீரர் காலத்துக்குப் பின்னால் வருமாறு கி.மு.400க்கு அப்பாலும் போகவிடாமல் தடுத்துப் பார்க்கின்றனர். வெளிநாட்டு, உள்நாட்டுக் கழுகுகளுக்கும் வல்லூறுகளுக்கும் ஓநாய்களுக்கும் இன்று தமிழகமே ஒரே இலக்கு. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு வீணான தப்பெண்ணங்களையும் கவைக்குதவாத கற்பனைகளையும் உண்மை எனும் எரியும் நெருப்பில் வீசிச் சுட்டெரித்துவிட்டு அந்தக் கழுகுகளையும் வல்லூறுகளையும் ஓநாய்களையும் அடித்துத் துரத்தித் தமிழகத்தை மீட்க உண்மை நாட்டமும் தமிழகத்தின் மீதும் தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அன்பும் கொண்ட தோழர்களை அறைகூவி அழைக்க வேண்டிய காலம் இது.

இப்பொழுது நாம் நண்பர் செயமோகனிடம் கொஞ்சம் பேச வேண்டும். இந்திய ஆன்மவியலையும் மெய்யியல்களையும் பற்றி அவர் மிக அழுத்தமாகப் பேசுகிறார். மெய்யியல்கள் எனப்படுபவை, அதை முன்வைத்தவர்கள் காலத்துக் குமுக நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அச்சூழலுக்கு ஏற்றவாறு இயற்கை, குமுகம், மனித சிந்தனை, கடவுள் ஆகியவை பற்றிய ஒரு விளக்கமாகும். எடுத்துக்காட்டாக பத்தி இயக்கக் காலத்தில் சிவன் தன்னை அங்கிருந்து அழைத்தான் இங்கிருந்து அழைத்தான் என்று கோயில்களை நிறுவி அங்கெல்லாம் எந்த சாதியினராக இருந்தாலும் பூசாரி ஆக்கி சிவப் பார்ப்பனர்களை உருவாக்கி மக்களையும் ஒருங்கிணைத்து புத்த, சமண சமயங்களால் பார்ப்பனியத்துக்கு வந்த அறைகூவலை எதிர்கொண்டாயிற்று. இறைவன் மெய்யியலுக்கு அடங்காதவன், அவனைத் தஞ்சமடைவதே அடியவனுக்கு உய்தி என்பது போல் அரசனது அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியாது அவனுக்கு அடிபணிவதே நல்வாழ்வுக்கு வழி என்று ஆட்சியாளர்களின் துணையையும் பெற்றாயிற்று. இப்போது இந்த எழுச்சியில் மங்கிக் கிடந்த பழைய பார்ப்பனர்களை மீட்பிக்க வேண்டுமே. வந்தார் சங்கரர். ஞானம்தான் உய்திக்கு வழி, வேள்விப் பார்ப்பனர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என்று சுமார்த்தப் பார்ப்பானை சிவப் பார்ப்பானுக்கும் மாலியப் பார்ப்பானுக்கும் மேலே தூக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

19ஆம் நூற்றாண்டில் கிறித்துவத்திலிருந்து தாய் மதத்தைக் காப்பதற்காக இந்து சீர்திருத்த அமைப்புகள் வலுவாகச் செயற்பட்டன. அதைக் கண்டு நடுங்கிப் போயிருந்தனர் சாதிவெறியினர். அந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்து வந்தனர் ஆல்காட்டும் பிளாவட்கியும் இறையியல் கழகத்துடன் சென்னைக்கு, வருணமுறை மனித குலத்தின் உயர்ந்த குமுக அமைப்பு என்ற முழக்கத்துடன். சாதிவெறியர்கள் அங்கு சென்று மொய்த்துக் கொண்டனர். சீர்திருத்தர்கள் களத்தில் இல்லாமல் போயினர். இதற்கு அடிப்படை அமைப்பதற்கென்றே அனைத்துச் சமய மாநாட்டைக் கூட்டி அரசன் சேதுபதியை அமெரிக்கா அழைத்தது. அவர் விவேகானந்தரை விடுத்துவைத்தார்.

இறையியல் கழகத்தில் நடந்த மறைமுக அமெரிக்க அரசியலைக் கண்டுதான் அங்கு உறுப்பினராக இருந்து வெளியேறிய ஆங்கிலரான இயூம் இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியை உருவாக்கினார் என்றொரு ஐயம் எமக்கு உண்டு. அதன் பின்னர் ஆங்கிலரான அன்னி பெசன்று இறையியல் கழகத்தைக் கைப்பற்றிக்கொண்டு வீரார்ப்பாக தன்னாட்சி கோட்பாட்டை வகுத்து முனைப்பிய(தீவிரவாத)த் தலைவர்களைக் களத்திலிருந்து அகற்றியது போன்றனவெல்லாம் நடைபெற்றது. இன்றும் அந்த இறையியல் கழகம் சாதி வெறியர்களின் புகலிடமாக விளங்குகிறது.

எனவே தாய் மதத்தைக் காக்க வேண்டும், அயல் மதங்களின் பெயரால் ஊடுருவும் அயல் விசைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தாய்மதச் சீர்த்திருத்தத்தில் முனைப்பாக ஈடுபட்டு வெற்றி ஈட்டியாக வேண்டும். நம்மிடையில் இன்று வேர்கொண்டிருக்கும் அயல் மதங்கள் நம் குமுகக் கோட்பாடுகளின் போதாமைகளால், அவற்றால் நமக்கு ஏற்பட்ட இயலாமைகளால் நம் குமுகத்தின் உடலில் ஏற்பட்ட சீழ் வடியும் புண்கள் என்ற உணர்வுடனும் அது இன்னொரு முறை நிகழ்ந்துவிடாமல் விழிப்புடனும் நாம் செயற்பட வேண்டும்.

அயல் நாட்டுப் பணம், அது உதவியாக வந்தாலும் சரி, முதலீடாக வந்தாலும் சரி நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பணம், அறிவு, உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் பொருளியல் வலிமையை, நாட்டின் பொருளியலை, வளத்தை வளர்க்க கட்டுப்பாடில்லாத உரிமையைப் பெறப் பாடுபடவேண்டும். அவற்றின் பலன்கள் எக்காரணத்தாலும் நம் நாட்டை விட்டு வெளியேறிவிடாமல் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோள்களுக்கு எதிர்நிற்கும் தடைகளை எதிர்த்துப் போராட வேண்டும். இணக்கம் என்பதின்றிப் போரிட வேண்டும். அவ்வாறு தற்சார்பு கொண்டால்தான், நாட்டின் பொதுவான செல்வ நிலையும் மக்களின் தனிப்பட்ட வாழ்நிலையும் மேம்பட்டால்தான் தெய்வநாயகம் போன்றோரின் ஏமாற்றுகளுக்கு இடம் கொடுக்காத, வெளிநாட்டுப் பணத்துக்கு மயங்காத மனநிலையை நம் மக்கள் பெறுவார்கள்.

எந்தச் சமயம் உண்மையான மனித நேயத்தை, மக்களுக்குள்ள பொருளியல் சம உரிமையைப் போற்றிப் பாதுகாக்கிறதோ அதுதான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஒரு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு குழந்தையைக் கண்டு, எடுத்து வளர்க்க விரும்பும் எந்த ″இந்து″வும் அது எந்த சாதியோ என்று குழம்பி வாளா இருக்கிறான். ஒரு கிறித்துவச் சாமியார் கண்டால் அதை எடுத்து கோயிலின் பராமரிப்பில் கிறித்துவக் குழந்தையாக வளர்க்கிறார். இது உண்மையில் பாளையங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி. முகம்மதியர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்றோ பலவோ ஆளற்ற, ஏழ்மையிலுள்ள குழந்தைகளைத் தத்தெடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஆளாளுக்கும் வளர்த்துத் தங்கள் பக்கத்துக்கு வலுவைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் இன்றோ நேற்றோ நம் தாய் மதத்திலிருந்து சென்றவர்கள் தாமே! அவர்களால் முடிவது ஏன் நம்மால் முடியாமல் போயிற்று? இதனால்தான் இன்று இந்து சமயம் அழிவை நோக்கி நிற்கும் உலகச் சமயங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நம் தாய்மதத் தலைவர்களுக்கு, தலைவர்கள் கூடத் தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றுவது தொடர்ந்து வரும் நிகழ்வு, எனவே நேர்மையும் நாணயமும் நாட்டுப்பற்றும் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஓர் எச்சரிக்கை!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அறிஞர் குணா கிறிஸ்துவரா? திருவள்ளுவரை தோமோ வடிவில் செய்துள்ளனர்
Permalink  
 


10420123_789916264440691_4455513205718759625_n%2B%25281%2529.jpg  thomas.jpg  images?q=tbn:ANd9GcRVOI2BZDmxZuW4Fg3yzeuOfmw7ZTBJ5bDAIyFPrJn8wUHTIOWj



-- Edited by Admin on Saturday 27th of June 2015 07:45:42 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: அறிஞர் குணா கிறிஸ்துவரா? திருவள்ளுவரை தோமோ வடிவில் செய்துள்ளனர்
Permalink  
 


பெங்களூர் அறிஞர் குணா கிறிஸ்துவ ஏமாற்றுக்காரர் - தெலுங்கர் கன்னடியர்கள், பார்ப்பனர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட வேண்டும் என இனவெறி தூண்டும் புத்தகங்கள் புனைந்தவர்.- All India Catholic University Federation (AICUF) என்ற கிறித்தவத் தன்னார்வத் தொண்டு நிறுவனம்- லயோலா கல்லூரி மாணவர்களும்.ஒரு கிறித்துவத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு பெங்களூர் குணாவின் விஷம் தோய்ந்த அரசியலில் அவ்வளவு என்ன அக்கறை? 
தமிழ் நாட்டில் எப்போதும் நீரு பூத்த நெருப்பாய் இருக்கும் தமிழ் தேசிய உணர்வலைகள் ஆரோக்கியமான திசைகளில் சென்றுவிடாமல் இனவெறிப்பாதையில் திரும்புவது ஏகாதிபத்தியங்களால் வழிநடத்தப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வெல்லக்கட்டிதானே. அதைத் தான் அவர்கள் சலிக்காமல் செய்தார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் எழுந்த தமிழ் தேசிய உணர்வலைகள் ஆரோக்கியமான திசைகளில் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட மறக்கப்பட்டிருந்த பெங்களூர் குணாவின் கருத்துக்கள் திடீரென்று சூன்யத்தில் இருந்து முளைத்தது போன்று தலையெடுத்தன – ”நாம் தமிழர்” கட்சியின் ஆவணத்தின் வழியாகவும் அவர்களது இனவெறிப்பார்வைகளின் ஊடாகவும். https://vinaiyaanathogai.wordpress.com/.../%E0%AE%AA%E0.../

 
Posts about பெங்களூர் குணா written by Valarmathi
VINAIYAANATHOGAI.WORDPRESS.COM

Valluvars.jpg  val%2Bcoins.jpg  new%2Bval.jpg  XT%2BVALL.jpg  Thoma%2BGuna.jpg Valluvar%2Bthoms.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சங்கதமாக்குதல் (Sanskritisation) என்பதே ஒருவகையான திருட்டு போல உள்ளது. உண்மையை மறைப்பது, வரலாற்றைத் திரிப்பது, பொய்யுரைப்பது, அரசியல் செய்வது என்று பல உள்நோக்கத்தோடு இவை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைப் பற்றி பக்கம் 417 -இல் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது:

"சங்கதமாக்கம் என்னும் பெயரிலேயே தமிழ்த் தெய்வங்கள் ஆரியமயமாக்கப்பட்டன. இவ்வாறே, தமிழரின் வரலாற்று நாயகர்களும் தலைசிறந்த முனிவர்களும் சங்கதப்படுத்தப்பட்டனர். அகத்தியன் என்ற தமிழ் மாமுனியும் ஆரியமயமாக்கப்பட்டார். தமிழரின் பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும் பெண்தெய்வங்களும் போர்த் தெய்வங்களும்கூடச் சங்கதப்படுத்தப்பட்டன.

பாகத மொழியில் 'விண்ஃஉ' (Vinhu) என்றிருந்ததே விஃழ்ணு (Vishnu) என்றானது. விண்டு என்னும் தமிழ்ப்பெயரின் திரிபுகளே அவையாகும். அதேபோல், 'கண்ஃஅ' (Kanha) என்றிருந்ததே சங்கதத்தில் 'கிருஃழ்ண' (Krishna) என்று திரிந்தது. 'கண்ஃஅ' என்பது கண்ணன் என்னும் தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே என்பதைச் சொல்லித்தானா தெரிய வேண்டும்? தமிழிலிருந்த மூலப்பெயர்களைச் சங்கதப்படுத்தியதனால் வரலாறே குழப்பப்பட்டுத் திசை திருப்பப்பட்டது. ஆந்திரன் என்ற காரணத்தாலேயே கண்ணன் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறுவர். இருக்குவேதத்தில் இக் கண்ணன், இந்திரனுக்குப் பகைவனான ஓர் அரக்கன் ஆவான்."

 

தமிழர்கள் மதச்சார்பற்ற ஞாயிற்று ஆண்டையே ஆண்டுவந்தார்கள் என்றும், பின்னர் வடக்கிலிருந்து வந்த சமயத்தின் தாக்கத்தினால் திங்கள்-ஞாயிற்று ஆண்டை பின்பற்றினர் என்றும் அறிஞர் குணா அவர்கள் குறிப்பிடுகிறார் (பக்கம்: 156)

"திங்கள் மாதங்களெல்லாம் சமய நாள்காட்டியைச் சார்ந்து இருந்தன வென்பதும், ஞாயிற்று மாதங்களெல்லாம் சமயஞ்சாரா நாள்காட்டியைச் சார்ந்து இருந்தன வென்பதும் உலகளாவிய ஓர் உண்மையாய் இருப்பதால், சித்திரை தொடங்கிப் பங்குனி வரை என்னும் திங்கள்-ஞாயிற்று ஆண்டுமுறையை வடக்கிலிருந்து வந்தேரிய ஆரிய மதங்களான அருகத்தையும் புத்தத்தையும் சார்ந்தவர்களே புகுத்தியிருக்கலாம். காலப்போக்கில் சமயச் சார்புநிலையே மெல்ல மேலோங்கியதை இது காட்டுகின்றது. அருக, புத்த சமயச் சார்பு மேலோங்கியதனால் தமிழர்களிடம் வழக்கிலிருந்த சமயஞ்சாரா ஞாயிற்று ஆண்டுக்கணக்கு காலத்தால் மெல்ல மதிப்பிழந்து, திங்கள்-ஞாயிற்று ஆண்டுமுறை மேலோங்கியது.

அருகரும் புத்தருமாகிய ஆரியச் சமயத்தவர்கள் வடித்த திங்கள் மாதக்கணக்கையும் மாதப் பெயர்களையும் தமிழ்ப் பிராமணர்கள் தழுவிக்கொண்டனர். சித்திரை தொடங்கிப் பங்குனி வரையின் என்னும் திங்கள்-ஞாயிற்று ஆண்டு மாதங்கள் அதனால் வந்தவையேயாகும்."

 

தமிழெழுத்துக்கள் தெற்கிலிருந்து சிந்துவெளிக்கு சென்றது என்ற கருத்தை அறிஞர் குணா அவர்கள் முன்வைக்கிறார். (பக்கம் 117)

"'சிந்துவெளி' எழுத்துகளைப் போன்ற சிலவற்றை அவற்றின் பொருள் விளங்காமலேயே பொங்கல் திருநாளுக்காக வெள்ளைக்கல் மலைப்பகுதி மக்கள் தத்தம் வீட்டின் முன்புறச் சுவரில் இன்றுவரை வரைந்து வருகின்றனராம்.

கருநாடகத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள தொல்தமிழர்கள் (திகிளர்கள்), நோயுற்றவருக்கு ஓணான் வெட்டிப் பொங்கலிடுகையில், அந்த ஓணானைப் புதைக்கும் குழியை மூடும் கல்லின்மீது பொருள் தெரியாமலேயே ஏதோ ஒரு 'சிந்துவெளி' எழுத்தை இன்றளவும் எழுதிவைப்பதுண்டாம்.

எழுத்து வரிவடிவம் வடக்கேயிருந்து தெற்குக்கு வரவில்லை என்பது இவற்றால் புலப்படவில்லையா? தென்புலத்திலிருந்தே - குறிப்பாக, தமிழ்நிலத்திலிருந்தே - எழுத்து வரிவடிவம் வடபுலம் நோக்கிப் பரவியது என்ற உண்மை இன்னும் விளங்கவில்லையா?"

                           ////////////////////////////////////

வடக்கிருத்தல் என்ற முறையை ஆசிரியர் இவ்வாறு சாடுகிறார் (பக்கம்: 102)

"வடநாடு தெய்வத்தன்மையைக் கொண்டது என்னும் ஆரிய மாயையையே அவ்வந்தேறி மதங்கள் தமிழர்களிடம் விதைத்தன. இதனால், அறிவையும் தன்மானத்தையும் இழந்த தமிழ் ஆண்டைகள் அடிமை மனப்பான்மைக்கு ஆளாயினர். அருகர்களாக மதம் மாறிய இவ்வடிமை மனநிலையினரில் சிலர், வடக்குநோக்கித் தவமிருந்து செத்தனர். இதையே வடக்கிருத்தல் என்றனர். அவர்களிடம் சற்றேனும் இனமான உணர்விருந்திருந்தால், அவ்வாறு செத்தாலும், குமரிப் பெருங்கடலில் தோன்றிய கடற்கோள்களில் மூழ்கி மடிந்த தொல்தமிழ் முன்னோர்க்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகத் தெற்கிருந்து செத்திருப்பார்கள்."

 

 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

 

பூரணரின் வினைமறுப்பியம் பற்றி விவரிக்கும்போது (பக்கம்: 87)

"பார்ப்பாருக்கு அள்ளியள்ளிக் காணிக்கை தந்தால் மறுமையில் பயன் உண்டு என்ற சுரண்டல் கொள்கையை எதிர்ப்பதுவே அவர்களுடைய கொள்கையாகும். காணிக்கைகளாலும் கொலை வேள்விகளாலும் யாதொரு நன்மையும் தீமையும் விளைவதில்லை என்றதும் அதனாலேயாகும். உயிர்களை யாரும் படைக்கவில்லை; அவை யாவும் தத்தம் இயல்பால் (சுபாவத்தால்) தோன்றி வளர்ந்து வாழ்ந்து மறைகின்றன என்னும் இயற்பியமே 'தாயும் இல்லை, தந்தையும் இல்லை' என்னும் கூற்றின் உள்ளீடாகும். நல்வினைகளாலும் தீவினைகளாலுமே உயிர்கள் இயங்கும் என்றால், அது வாழ்வியல் வினைகளை இயற்கையின்மீது ஏற்றிக் கூறுவதாகும். அவ்விரு வினைகளே உயிரை இயக்கிவருவதாக அமையும் அந்தப் புறக்காரணக் கொள்கையை அசித்தரும் பூரணரும் விட்டுக்கொடுக்காமல் எதிர்த்துவந்தனர். இதனாலேயே அவர்களின் வினைமறுப்பியம், அக்கால் பார்ப்பாரிய, அருக, புத்த சமயங்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது."

 

xxxxxxxxxxxxxxxxxxx

 

  

தொல் தமிழர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது என்பதை குறிக்கும்வகையில் (பக்கம்: 54)

"பக்குடுக்கையாரின் அணுவியமும் மற்கலியின் ஊழியலும் பூரணரின் வினைமறுப்பும் தமிழரின் அறிவு மரபுகளாகும். இதை அடித்துக் கூறிவிடலாம். ஆனால், இந்த அறிவுமரபுகள் முளைக்கவும் வளரவும் தழைக்கவும் நிலைக்கவும் வாய்த்த ['இந்தி'யம் என்ற பொய் மரபே இல்லாத] தமிழ் வரலாற்றுப் பின்புலம்தான் என்னவென்று யாராவது கேட்டால், நம்மால் விழிக்கத்தான் நேரும்."

 

 

மற்கலியைப் பற்றிய ஒரு குறிப்பு (பக்கம் 49-50):

ஆலகாலா என்னும் குயப்பெண்ணிடம் தங்கியிருந்த மற்கலி, தான் இறப்பதற்குச் சற்று நேரம் முன்னர் வரையில் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தாராம். அந்நேரம் பார்த்து, மற்கலியின் மாணாக்கர்களில் ஒருவரான ஐம்புலன் (Ayampula), தனக்குத் தெரியாததைப் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டாராம். மற்கலி, அம்மாணாக்கரை நோக்கி, 'கேள்விகள் அப்புறம், முதலில் பாடு!' என்னும் பொருள்பட 'யாழை மீட்டு கிழவனே! யாழை மீட்டு!' என்றாராம். தமிழ்ப் பாணர்களுக்கும் விறலியர்களுக்கும் குயிலுவர்களுக்கும் மாகதர்களுக்கும் இடையில் விளங்கிய உறவுகளையே இவை யாவும் காட்டுகின்றன.

 

 

 

 

இரண்டாம் பதிப்பு. பகுதி: தமிழ் அணுவியம். பக்கம்: 31.

உடம்புக்கும் உணர்வுக்கும் இடையிலான உறவை விளக்குகையிலும், தமிழ் அணுவியத்தின்மீது பொருண்மையிய விளக்கமே கோலோச்சுகின்றது. 'உடம்பின்றி உணர்வில்லை; உடம்பால் வருவதே உணர்வு' என்னும் பொருள்பட,

"உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை;
யுடம்பினா லுன்னியதே யாம்"

என்று வருகின்ற ஔவை குறள், அத் தொல்தமிழ் அணுவிய மரபிலேயே ஊன்றி நிற்கின்றது.

 

 

தமிழ் அணுவியத்தைப் பற்றி குணா அவர்களின் 'வள்ளுவத்தின் வீழ்ச்சி' நூலில்:

"திண்மம், நீர்மம், வளி (solid, liquid and gas) என்னும் மூன்றும், பொருளின் முந்நிலைகள் (Three States of Matter) ஆகும் என்று இன்றைய அறிவியல் விளக்குகின்றது. கிளர்ச்சியுள்ள துகள்கள் (excited particles) என்னும் நிலைக்கு உரியதே தீ. வெப்பமே அதன் இயல்பு. தீய்மம் (Plasma) என்பதே தீயாகும்.

காற்றில் தனிஅணுக்களும் அயைகளும் (ions) தனி மின்மங்களும் (Free Electrons) பிறவும் உண்டு என்றோம். அதேபோன்று, அந்தத் தீய்மத்திலும்கூட அயைகளும் தனிமின்மங்களும் உண்டு. ஆனால், அத்தீய்மத்தின் அணுக்களெல்லாம் கிளர்ச்சி நிலையில் (excited state) இருப்பன. இந்தக் கிளர்ச்சி நிலையில், இடையறா மின்மப் (electron) பரிமாற்றமும் நிகழ்கின்றது. அத்துடன், மின்மங்களும் அயைகளும் ஓயாது முட்டி மோதிக்கொள்கின்றன. இதன் ஊடாகவே ஒளிமங்கள் (Photons) வெளிப்படுகின்றன; ஒளிர்கின்றன. இதுவே தீ."

 

 

65660_1391330801125736_1291144434_n.jpg?oh=5d309abc6c9af99ce2785a3667f9c578&oe=561AE630

 

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://kaiman-alavu.blogspot.in/2007/05/blog-post_08.html

தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மையினருக்கு இருக்கும் ஒருவித பாதுகாப்பின்மை, தமிழ் தேசியவாதம் குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சம் ஆகியவற்றையெல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குஜராத்தி / மார்வாரி இளைஞனுக்கு நீங்கள் சொல்வதுபோல வீதிமொழியானத் தமிழ்மொழியின் தாக்கமே அதிகமாக இருக்கலாம். திலீப்குமாரைப் போல தமிழில் கதைகள் எழுதும் அளவுக்கு தமிழில் ஈடுபாடு இருக்கலாம். ஆனாலும் "தமிழகம்: வந்தேறிகளின் வேட்டைக்காடு" என்று புத்தகம் எழுதும் நெடுமாறனைக் குறித்து அவனுக்கு ஒரு அச்சம் இருக்கத்தான் செய்யும். மலையாளத் தாக்கம் அதிகமாக இருக்கும், தமிழகத்தில் எங்குப் போனாலும் மலையாளிகள் என்று முத்திரைக் குத்தப்படும், குமரிமாவட்டத்தின் மேற்கு பகுதியினர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா தளம், பாஜக என்று "தேசிய கட்சிகளை" மட்டுமே தேர்ந்தெடுத்துக் கருணாநிதியை "நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்களுக்குத் தொல்லை" என்று சொல்லவைப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? சௌராஸ்டிரர்கள் போன்ற சிறுபான்மை மொழியினர் பெரும்பாலும் தீவிர இந்திய தேசியவாதிகளாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஈழப் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் வைகோ (பால் தாக்கரே கூட தான் ஆதரிக்கிறார்), ராமதாசைப் போலவோ, திருமாவளவனைப் போலவோ, ஏன் கருணாநிதியைப் போலவோ தமிழ் மொழியை மையமாக வைத்து அரசியல் செய்வதில்லை என்பதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே? எல்லாமே தற்செயலானதா? இதற்கு அவர்களது தாய்மொழிப் பற்று அறவே காரணமில்லை. (மொழிப்பற்றை நான் ஒரு காரணமாக சொல்லாமலிருந்தும் ரத்தம், மரபணு என்றெல்லாம் எங்கேயோ போய்விட்டீர்கள்.) மாறாக அவர்களது பாதுகாப்பின்மையும், இன்று ஒரு சில இனங்களை மட்டுமே வந்தேறிகளாகச் சொல்லும் தமிழ் தேசியவாதம் வெற்றி பெற்றுவிட்டால் தங்களையும் வந்தேறி என்று சொல்லி எதிர்க்கும் என்ற அச்சமும் தான் முக்கிய காரணங்கள். 

கேரள எல்லையோரப் பகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு கேரளத்தில் வேர்களும் உறவுகளும் உண்டு. புவியியல் அடிப்படையில் மட்டுமல்ல, கலாச்சார அடிப்படையிலும் எங்களுக்கு மதுரையை விட திருவனந்தபுரம் பக்கம். சுதந்திரத்துக்குப் பிறகு பல வருடங்கள் குமரி மாவட்டம் கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. என் இந்த பின்னணி மற்றும் பேச்சுவழக்கு காரணமாக தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்தபோது மலையாளி என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்பட்டு வந்திருக்கிறேன். 

 

பெங்களூர் குணாவின் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" மற்றும் "நவ தமிழ் தேசியவாதி" ராஜேந்திர சோழனின் "தமிழ் தேசியம்" இரண்டையும் வாசித்திருக்கிறேன். பெங்களூரையும், மும்பையையும் விட சென்னையில் இருக்கக்கூடிய மொழிச் சிறுபான்மையினருக்கு இருக்கக்கூடிய அச்சம் மிகமிகக் குறைவாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. இந்த நூல்கள் சராசரித் தமிழர்களை மொழிசிறுபான்மையினருக்கு எதிராக எந்த அளவுக்கு உசுப்பிவிடும் என்பது சந்தேகத்துக்குரியது.

 

குணா போன்றோர் முன்வைக்கும் உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழருக்கும் பொதுவான "தமிழ் தேசியம்" என்பது ஒன்று இல்லை. இந்தியச் சூழலில் தமிழ் தேசியம் குறித்த கருத்தாக்கம் தோன்றியதற்கும், ஈழத் தமிழ் தேசிய உருவாக்கத்திற்குமே பெரிய வரலாற்று, அரசியல் வேறுபாடுகள் உண்டு. ஈழத்தமிழ் தேசியம் கூர்மைடைந்ததற்குக் காரணமான பெரும்பான்மை மொழியினத்தின் ஒடுக்குமுறை இந்தியச் சூழலில் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் "தமிழ் தேசியம்"த்திற்கான ஆதரவு--மொழிசிறுபான்மையினரை விடுங்கள்--தமிழர்களிடையே கூட செல்லுபடியாகும் என்று தோன்றவில்லை. வட இந்தியத் அரசியல் கட்சிகள் உருவாக்க முனைந்த (அதாவது "தேசிய"க் கட்சிகள்) "இந்தி தேசியம்" கடந்த 10-15 ஆண்டுகளாக சிதறுண்டு வருகையில் அதற்கு எதிராக வைக்கப்பட்ட தமிழ் தேசியம், இன்று அண்டை மாநில மொழியினருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. அதற்கும் நீர் பங்கீடு என்ற ஒற்றைக் காரணத்தைத் தவிர வேறெந்த கலாச்சார, பொருளாதார, அரசிய ஒடுக்குமுறைகள் காரணங்களாக இல்லை. இந்நிலையில் தமிழ் தேசியம் குறித்து இந்த அறிவுஜீவிகள் மூளையைக் குடைந்துக்கொண்டிருப்பதில் என்ன பயன் ஏற்படப்போகிறதென்று புரியவில்லை.

மே 15, 2007 இரவு 8:36



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா?

முன்னுரை

தமிழ் உணர்வு சிந்தனையாளர்கள் இடையேயும், தமிழர் அரசியல் முன்னெடுப்பளார்கள் இடையேயும் இன்று பெரிய சிந்தனை தாக்கத்தையும் தீவிர உரையாடல்களையும் தோற்றுவித்திருக்கும் களமாக அமைந்திருப்பது தமிழ்த் தேசியம் என்னும் இனவழி அரசியல் முன்னெடுப்பாகும். கடந்த நூற்றாண்டில் தேசியவாத கருத்தாக்கங்களின் எதிராகவும் காந்தியச்சிந்தனைகளின் எதிராகவும் நின்று, திராவிடர்கள் என்ற இனமரபுக்குள் தமிழர்களின் மாற்றுச் சிந்தனை களத்தை திராவிட கருத்தாக்கங்கள் கட்டமைத்திருந்தன. திராவிடம் என்னும் சொல் தமிழினத்தின் உந்து சக்தியாகவும் இன எழுச்சி முழக்கமாகவும் விளங்கிவந்ததை மறுப்பதற்கில்லை. தமிழ் நாட்டு தமிழர்கள் மட்டும் இன்றி, தமிழ் நாட்டிலிருந்து பொருள் தேடும் பொருட்டு உலகமெல்லாம் சென்ற எல்லா தமிழ் மக்களுக்கும் குறிப்பாக விளிம்பு நிலை தமிழர்களுக்கு திராவிடம் நம்பிக்கையூட்டும் பற்றுகோலாக விளங்கியது. மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் திராவிட கொள்கை பரப்பாளர்கள் தமிழின போராட்டவாதிகளாகவே செயல்பாடுகளை அமைத்துக் கொண்ட நிலையையும் கடந்த நூற்றாண்டின் மத்தியில் காணமுடிந்தது.

திராவிடம் என்ற சொல்லோடு தன்னைப் பிணைத்துக் கொண்ட ஆளுமை ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்னும் இயற்ப்பெயர் கொண்ட பெரியாராவார். பெரியாரும் அவர் முன்னெடுத்த ஆரிய – திராவிட போராட்ட அரசியலும் தமிழ்ச் சிந்தனை, பண்பாட்டு, அரசியல் பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மொழி, சமயம், பண்பாடு போன்ற கூறுகளில் அது மேல்தளத்தில் சில சலசலப்புகளை மட்டுமே உண்டாக்கி இருந்தாலும், தமிழ் நாட்டு அரசியல் வேராக அது இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் முன்னெடுத்த போராட்டங்கள் திராவிட இனங்களின் குறிப்பாக தமிழின இருப்பை இந்திய அரசியலில் உறுதியாக காலூன்ற வைத்தது. தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதில்லை என்று தன் கடைசி மூச்சுவரை மிக உறுதியாக இருந்தவர் ஈ. வெ. ரா. ஆனாலும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளின் உதவியின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்னும் நிலையே அங்கு நிலவி வருகிறது.

ஆயினும், கடந்த இருபது ஆண்டுகளாக, குறிப்பாக ஈழ இனப்போராட்டம் உச்சத்தை அடைந்து ஒரு இனப்படுகொலையில் முடிந்த பின்னர் திராவிடம் என்னும் சொல்லும் அச்சொல்லை ஓர் இயக்கமாக மாற்றிய பெரியாரும் மாற்றுக் கருத்தாளர்களின் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகி வருவது கண்கூடு. திராவிடம் என்னும் கட்டமைப்பின் வழி தனித்தமிழினம் சுரண்டப்பட்டு விட்டதாகவும், திராவிடர் என்ற சலுகையின் வாயிலாக தமிழ் நாட்டு அரசியலில் அதிகம் நன்மை பெற்றவர்கள் தமிழ் நாட்டு தெலுங்கரும் மலையாளியும் கன்னடருமேயாவர் என்பதும் அவர்களது குற்றச்சாட்டுகள். மேலும், தமிழ் நாட்டு அரசியலில் தமிழினத் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் பெருவாரியாக பிறப்பால் தமிழர்கள் அல்ல என்பதனால், தமிழினம் உலக பரப்பில் இன உணர்வுத் தலைமை இன்றி அனாதையாக்கப்பட்டுவிட்டதாகவும் எழும் குற்றச்சாட்டுகள் பெருகிவருகின்றன. திராவிடம் என்னும் கட்டமைப்பை ஒரு மாயை என்று சாடும் தரப்பினர் அதன் மாற்று கருத்தாக்கமாக தமிழ்த் தேசியத்தை முன்வைக்கின்றனர்.

தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் பண்பாட்டு வடிவம் அடிப்படிடையிலேயே திராவிடத்துக்கு எதிரான அணியாகும். கோவை ஞானி தன் “ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்’ என்னும் நூலில்  ‘திராவிடம் என்பதும் தமிழ்த் தேசியம் என்பதும் எந்த வகையிலும் இணைந்து செல்ல முடியாது என்று பதிவிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மிகவும் தீவிரத்தன்மையுடன் பேசப்படும் தமிழ்த் தேசியம் என்னும் கட்டமைப்பு பல்வேறு கோணங்களில் இருந்து அணுகப்படுவதாலும், அது முந்தைய திராவிட கருத்தாக்கத்துக்கு நேர் எதிர் அணியாக கிளம்பியுள்ளதாலும் பலரும் அது குறித்த பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசியும் எழுதியும் வருகின்றனர். வரலாற்று மறு வாசிப்பின் வழி தமிழின சார்பு உள்ள மறைக்கப்பட்ட தகவல்கள் சில முன்வைக்கப்படுகின்றன. ஆனால் வரலாற்று சம்பவங்களை திரிக்கும் செயல்களும் நடந்தேறுகின்றன.  சிலர் இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் தூற்றுதல்களையும் இன பாசீசத்தையும் தங்கள் கருத்துக்களினூடே கலந்து ஓடவிடுகின்றனர்.

ஆகவே ‘அறிதல் ஆய்தல் பின்பற்றுதல் என்னும் மூன்று அடிப்படை ஆய்வு நிலைகளில் இருந்து நாம் நமது புரிதல்களை மேம்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம். திராவிடம் என்னும் கருத்தாக்கம் ஏறக்குறைய 100 ஆண்டுகள் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அதன் உட்கருத்தையோ உட்கட்டமைப்பையோ பலரும் (பாசறை மானமிகுகள் உட்பட) தெளிவாக புரிந்து கொள்ளாத நிலையையே இன்றுவரை நாம் காணுகிறோம். தனிமனித துதிபாடல்களை முன்னிருத்தி பெரியாரையும் திராவிட அரசியலையும் தற்காக்கும் முயற்சியை சிலர் மேற்கொள்கின்றனர். மற்றொரு தரப்பில், ஆரியர் – திராவிடர் என்னும் மரபு இன கருத்தாக்கத்தை முன்னிருத்திய பெரியாரையும் திராவிட அரசியலையும் இன துவேசத்தின் காரணமாக சிலர் சாடுவதும் பழித்துரைப்பதும் வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், புதிதாக வெகுண்டெழுந்திருக்கும் தமிழ்த் தேசிய இளைய போராளிகளின் நிலை வரலாற்று தெளிவின்றியும் இனத்துவேசப்பார்வை கொண்டதுவாகவுமே அமைந்துள்ளது. தமிழர் யார்? அவர்களின் அரசியல் தேவை என்ன? தமிழ்த் தேசியத்தின் மையம் என்ன போன்ற தேடுதல்கள் இன்றி ஒரு சிலர் முன் வைக்கும் இன பாசீச கருத்துகளுக்கு உடனடியாக செவி சாய்த்து பொங்கி எழும் ஆபத்தான சூழ்நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆகவே, திராவிடம் – பெரியார் – தமிழ்த்தேசியம் என்னும் மூன்று முக்கிய நிலையிலும் நின்று நாம் தீவிர மீள்சிந்தனையை நிகழ்த்தவேண்டியது அவசியமாகிறது.

நான் இக்கட்டுரையை முழுவதும் ஒரு நீண்ட உரையாடலுக்கு வழிவிடும் முகப்பாகவும் வாசலாகவுமே அமைக்க விரும்புகிறேன். யார் கருத்து சிறந்தது? யார் நல்லவன்? யார் அயோக்கியன் என்பன போன்ற பாமர விமர்சனங்களில் இருந்து விலகி, இன்றைய, நாளைய தமிழினத்திற்கு தேவையான தமிழின மீட்சி எந்த கோணத்தில் இருந்து அணுகப்படவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியதே நம் கடமை. நாம் இந்த போராட்டங்கள் மிகுந்த தொழில்நுட்ப உலகில்; இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அட்டூழியங்களை கண்ட அனுபவத்தில் இருந்தும் உலகெங்கும் சிறுபான்மையினராகவும், நாடற்ற நிலையிலும் லட்சக்கனக்கான தமிழர்கள் வாழும் சூழலை கருத்தில் கொண்டும் கட்டப்போகும் புதிய கட்டமைப்பு எப்படி அமையவேண்டும் என்பதை அலசி ஆராயும் முகாந்திரமாகவே இப்பணியை முன்னெடுக்கிறேன்.

திராவிடம்

வரலாற்றில், முக்கிய நிகழ்வாக இருந்தாலும், ஆளுமையாக இருந்தாலும் அவை இரண்டு முறை அரங்கேற்றம் காணுகின்றன. முதலாவது முறை அவலத்துடனும் இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும் அரங்கேறுகின்றன என்பது காரல் மார்ஸ்சின் கருத்து. இக்கருத்துக்குள் சமுதாயம் முன்னெடுக்கும் கொள்கைகளையும் அடக்கலாம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஆரிய – திராவிட கருத்தாக்கங்கள்.

உலக பண்பாட்டியல் கோட்பாடுகள் (Theory of civilizations) கூறும் பண்பாட்டு வளர்ச்சிப் படிநிலைகளையும் அவற்றின் ஆக்கம் அழிவு குறித்த விளக்கங்களையும் ஒரு நிலப்பகுதியில் அலையென எழுந்து பின்னர் அடங்கும் அரசியல் விழிப்புணர்வுகள், சுதந்திர வேட்கைகள், பொருளாதார புரட்சிகள் போன்ற விடயங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியும். எல்லாவகை போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் துவக்கம் – வளர்ச்சி – உச்சம் – கலப்பு — சிதைவு – வீழ்ச்சி என்னும் படிநிலைகளில் உள்ளன. இந்திய வரலாற்றிலும் அரசியலிலும் முக்கிய உள்ளீடாக பேசப்படும் ஆரிய – திராவிட கருத்தாக்கங்களும் இப்போது தமிழ் நாட்டில் பேசப்படும் தமிழ்த் தேசியமும் உலக பண்பாட்டியல் கோட்பாடுகளுடன் ஒத்தே இருப்பதையும் கவனப்படுத்துதல் அவசியம்.

மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லும்   

19-ஆம் நூற்றாண்டில் இந்திய தேசம் உலகத்தால் குறிப்பாக ஐரோப்பாவால் மீண்டும் கண்டெடுக்கப்படுவதற்கு மிகவும் உதவியவர் மாக்ஸ்முல்லர். இவர் ஆங்கில உலகியல் பார்வையில் இந்திய ஆன்மீகத்தையும் பன்பாட்டையும் அணுகியதோடு, இந்திய பண்பாட்டு மேன்மைகளுக்கு இன்று அழிந்துவிட்ட, மிகவும் உயர்ந்த நாகரீகத்தோடு வாழ்ந்த ஆரியர் என்ற இனக்குழுவே காரணம் என்ற தனது கண்டுபிடிப்பை ஐரோப்பிய அறிவுலகத்தில் விதைத்தார். இக்கருத்து ஆங்கில அறிவுலகில் நல்ல வரவேற்பைப் பெறக் காரணம், ஆரியர்கள் என்று கூறப்பட்ட இனம் பயன்படுத்திய சமஸ்கிருதம் என்னும் மொழியின் வேர் பண்டைய கிரேக்கத்திலும் உள்ளது என்றும் ஆரிய இனம் மறந்துபோன ஐரோப்பிய பண்பாட்டு உலகின் பிரதிநிதிகளே என்றும் அவர் முன்வைத்த கருத்துகளே ஆகும். இதனால் சமஸ்கிருத – ஆங்கில ஒப்பீட்டு மொழியியலை கற்க பல ஐரோப்பியர்கள் ஆர்வம் காட்டியதோடு, ஆரியரது மேன்மைகளாக மாக்ஸ்மூலர் பட்டியலிட்ட விழுமியங்கள் அனைத்தையும் இந்தியச் சிறப்புகள் அனைத்திற்கும் அவர்கள் விரிவுபடுத்தினர். ஆரியர்களை செயலூக்கம் மிக்கவர்கள் என்றும் தெய்வீக பண்புகள் மிகுந்தவர்கள் என்றும் வீரமும் போர் ஆர்வமும் மிக்கவர்கள் என்றும் பல லட்சிய வார்புகளை உருவாக்கினார்கள். ஐரோப்பியர்கள் ஆரிய இனம் என்று அழைக்கப்பட்ட இனக்குழுவை இவ்வாறு புகழ்ந்துரைப்பதன் வழி அவர்கள் தங்கள் பண்டைய ஐரோப்பிய பண்பாட்டின் இழந்துபோனதோர் நட்பைக் கண்டுவிட்டதாக மனம் மகிழ்ந்தார்கள். ஆரியர்களை புகழ்வதன் வழி அவர்கள் தங்கள் மூதாதையர்களை புகழ்வதாகவே நாம் பொருள்கொள்ள வேண்டியுள்ளது.

ஆரிய இனம் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கியப்பின் ஆரியரல்லாதவர்கள் குறித்த தேடுதல் தொடந்தது. அதன் விளைவாக, ஐரோப்பாவில், யூதர்கள், செமிடிக் மக்கள் போன்றவர்களும் இந்தியாவில் திராவிடர்களும், தீண்டாச்சாதியர், பழங்குடி இனக்குழுக்கள் போன்றவையும் பட்டியல் இடப்படன.

மாக்ஸ்முல்லருக்கு, பின்னர் மொழி ஒப்பீட்டு ஆய்வின் வழி  இந்தியாவில் குறிப்பாக தென்மாநிலங்களில் பெரும் அதிர்வை கொடுத்தவர் ராபட் கால்டுவெல் என்னும் இங்கிலாந்து கிருஸ்துவ பாதிரியார். இவரது மொழி ஒப்பீட்டு ஆய்வுகள் மாக்ஸ்முலரின் கருத்துகளுக்கு நேரெதிரானவை. மாக்ஸ்மூலர் இந்திய மொழிகளின் தாய் ஆரிய இன மொழியான சமஸ்கிருதம் என்று நிறுவ முயன்றார். ஆனால் கால்டுவேல் தென் மாநிலங்களில் புழங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் அவை திராவிட குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் ஆதாரங்களோடு தன் கருத்தை நிறுவினார். அந்த திராவிட குடும்பத்தின் மைய மொழியாக இருப்பது தமிழே என்றும் அவர் நிறுவினார். மேலும் ராபட் கால்டுவேல் தமிழை சமஸ்கிருத சார்புக்கு அப்பாற்பட்ட மொழி என்றும் அது சுயமாக நின்று இயங்கவல்லது என்றும் கூறினார். அதோடு அவர் திராவிட இனம் என்பது மிகப் பழமையானது என்றதோடு அது ஆரிய இன எதிர்ப்பை மரபாக கொண்டது என்றும் எழுதினார்.

ஆகவே இதன் வழி இந்திய துணைகண்டத்தில் ஆரிய- திராவிட என்னும் இரண்டு வித ‘இனக் கோட்பாடு’ (racial theory) உருபெற்று வேர்பிடிக்கத் தொடங்கியது. ஆனால் “மொழியியலாளர் செய்த பெருந்தவறு மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டதுதான். இத்தவற்றை மக்ஸ்மூல்லர் பிற்காலத்தில் உணர்ந்தார். ஆனால் அதை அவர் வெளியிட்டுப் பிழையைத்திருத்தும் முன்னர் ‘ஆரிய இனம்’ என்ற கருத்து அறிவாளிகளிடையே பரவி நிலைத்துவிட்டது” என்று கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் ரெமீலா தாப்பார்.

இதே கருத்தை அ.மார்க்ஸ் அவர்களும் ‘ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களும் இனக் கோட்பாட்டை ஏற்பதில்லை. ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என இருப்பது உண்மை. ஆனால் ஆரிய/ திராவிட இனங்கள் என்று ஏதும் இல்லை’ என்று தெளிவுபடுத்துகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

பெரியார் (1879 – 1973)

பெரியாரின் பொதுவாழ்க்கை மிக நீண்ட வரலாற்றை உடையதாக இருந்தாலும் இக்கட்டுரையின் தேவையைக் கருதி அவரின் சுயமரியாதை இயக்க அல்லது திராவிட கழக  தொடர்புகளை மட்டுமே நான் கவனம் கொள்கிறேன்.

ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமிழ் நாட்டு சமூகவியலிலும் அரசியலிலும் பலதரப்பட்ட எதிர்மறை கருத்துகளையும் மாற்று சிந்தனைகளையும் முன்வைத்து தீவிரக் களப்பணியாற்றியவர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்ற இயற்பயரைக் கொண்ட பெரியார். அவர் வாழ்ந்த காலத்தில் அடித்தட்டு மக்களுக்குச் சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பெரும்பான்மை மக்களாலும் அதிகார வர்கத்தாலும் தொடர்ந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

பெரியார் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்தது. காந்தி, அம்பேத்கர் போன்ற ஆளுமைகளின் காலகட்டமும் அதுதான். இந்திய சுதந்திரத்தை முன்னிருத்தி காந்தி இந்தியர்கள் என்னும் அடையாளத்தையும் தேசியத்தையும் முன்னெடுத்தார். ஆனால் அதே காலகட்டத்தில் பெரியார் திராவிடன் என்னும் இனக் கோட்பாட்டையும் தனித்தமிழ் நாடு கோரிக்கையையும் (1940-க்குப் பிறகு அது திராவிட நாடு என்று மாற்றங்கண்டது குறிப்பிடத்தக்கது ) பிரிவினைவாதத்தையும் முன்னிருத்தினார். அக்கோரிக்கைகள் நிறைவேறாததால், 1947- ஆண்டு இந்தியா சுநந்திரம் பெற்றதினத்தை அவர் துக்க நாளாக அறிவித்தார்.

சாதீய சிந்தனைக்கும், பார்ப்பனீயத்துக்கும் பிற்போக்கு சிந்தனைக்கும் பிறப்பிடமாக திகழ்ந்த வைதீக தர்மங்களுக்கு எதிராக அவர் தொடுத்த போர் தமிழ் நாட்டில் பல ஆத்திகர்களின் கடுங்கோபத்திற்கு காரணமானது. பல ஆன்மீகவாதிகளும் மதவாதிகளும் பிராமணர்களும் சாதித்தமிழர்களும் பெரியாரை தங்கள் முதல் எதிரியாகவே கொண்டு தங்கள் எதிர்ப்பை பலவகையிலும் வெளிப்படுத்தினர். பிராமண சமூகத்தாரின் சிறப்பு தகுதிகளை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததால் அவரை அவர்கள் இன்றுவரை விரோதியாகவே பாவிக்கின்றனர்.

எதிர்ப்பும் அவதூறுகளும் பெரியாருக்கு புதியனவல்ல என்றாலும் இன்று அவர் இறந்து ஏறத்தால நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்மீது பல்வேறு கோணத்தில் இருந்தும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.  அவர் கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர் அல்ல. தேர்தல்களில் நின்றவரும் இல்லை. ஆளும் தரப்பில் இடம்பிடித்ததும் இல்லை. அரசாங்க பதவிகளில் இருந்தவரும் இல்லை. ஆரம்பகாலத்தில் அப்படி கிடைத்த சில வாய்ப்புகளையும் அவர் துறந்த பின்னரே தன் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அவர் தன் கருத்துக்களை தீவிர எழுத்துக்கள் மூலமும் மக்கள் நேரடி சந்திப்புகள் வழியாகவும் பரப்பினார். அவை ஒரு சிந்தனைப் போராட்ட கச்சாப் பொருளாகவே மக்கள் முன் வைக்கப்பட்டன.

ஈ.வெ.ரா. தன் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த காலத்தில் (1925) சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தென்நாட்டில் பிராமண மேட்டிமை, பெண்ணடிமை, தேவரடியார் வழக்கம், காணாமை, தீண்டாமை, கோயில்களில் நுழைய அனுமதி இல்லாமை போன்ற பல்வேறு மனித விரோத செயல்கள் சமுதாய அமைப்பில் இயல்பான ஒன்றாக இருந்ததோடு சமஸ்கிருத மொழி தேவபஷையாகவும் தமிழும் பிற தாய்மொழிகளும் நீஷபாசையாகவுமே அடையாளம் கொண்டிருந்தன. மேற்கண்ட பிற்போக்குத்தனங்கள் அனைத்திற்கும் இந்து சமய புராணங்களையும் வேதங்களையும் மேல்தட்டு மக்கள் ஆதாரம் காட்டியதோடு இவ்வழக்கங்களை மீறுவோரை கடவுள் நிந்தனையாளர்கள் என்று கூறி அடக்கி ஆளவும் செய்தார்கள்.

ஆகவே அவர் தன் சுயமரியாதை இயக்கத்தை வலுப்படுதவும் மக்களை ஒன்றுதிரட்டவும் தென்நாட்டு மக்களை ஒன்றாக ஆக்கும் பொருட்டும் பிராமணர் அல்லாதோர் அனைவரும் திராவிடர் என்று தன் இனக்கோட்பாட்டு அரசியலை வடிவமைத்துக் கொண்டார். திராவிடர் என்பவர் இந்து வேதச்சட்ட திட்டங்களுக்கும் சாங்கிய சம்பிரதாயங்களுக்கும் எதிரானவர்கள் என்று கூறுவதன் வழி அடிமைப்பட்ட இனமாக வாழும் பெருவாரி சமுதாயத்தை துணிவு கொண்டு எழச் செய்ய முடியும் என்று நம்பினார். இயல்பாகவே இந்திய மரபார்ந்த சிந்தனைகளும் தத்துவங்களும் சமயத்தின் கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பது தவறு என்னும் இறைநீக்கல் கோட்பாட்டில் (Secularism) ஈர்ப்பு உள்ளவரான ஈ.வெ.ரா  ஐரோப்பிய செக்குலர் சிந்தனை மாற்றங்கள் தமிழ் சிந்தனை உலகிலும் வேண்டும் என்று நினைத்தார். சமய சட்டதிட்டங்களை மனித உரிமை மீறல்களுக்குச் சாதகமாக பயனபடுத்தும் பார்ப்பன மேட்டிமையை தகர்க்க அதுவே வழி என்று கண்டறிந்தார். கார்டுவெல் வெளியிட்டு இருந்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ பெரியாரின் சிந்தனை போக்கிற்கு ஏற்றதாகவும் அவருடைய நோக்கங்களுக்கு வடிவம் கொடுப்பதாகவும் இருந்தது. ஆகவே, அவர் திராவிடர் இனக்கோட்பாட்டை முழுதும் கல்டுவேல்லிடம் இருந்தே பெற்றிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.

பெரியாரின் முதன்மை மாணவரான சி. என். அண்ணாதுரை 1949 – ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் வழி தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனார். அவர் திரைப்பட கலைஞர்கள் பலரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு ‘பெரியாரின் கொள்கைகள்’ என்ற போலி திட்டத்தை கட்டமைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரங்களைச் செய்தார். அதோடு அடித்தட்டு மக்களின்  சக்திவாய்ந்த சுயமரியாதைப் போராட்டங்களை  மேம்போக்கான மேடை நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் காட்டி ஜனரஞ்சக அரசியலாக்கி மலினப்படுத்தினார்.

மேலும் ஈ.வெ.ரா சமயம், மொழி, பண்பாடு போன்ற பல்வேறு விழுமியங்களின் மீது தன் கூர்மையான விமர்சனங்களை வைத்த போதும், அவர் வரலாற்று ஆய்வாளரோ, மொழி அறிஞரோ, தத்துவ ஞானியோ அல்லர். அவரின் விமர்சனங்களும் போராட்டங்களும் மனித இன சமத்துவத்தையும் சுயமரியாதையையும் மனித உரிமையையும் அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. ஒரு மனித உரிமை போராளி மொழி அறிஞனாகவோ, பண்பாட்டு ஆளுமையாகவோ அரசியல் வல்லுனராகவோ இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை நாம் அறிய வேண்டும்

ஆகவே, அவர் அன்றைக்கு பெரும் அறிவாளிகளாகவும் சிந்தனையாளர்களாகவும், மொழி அறிஞர்களாகவும் சமய ஆசானாகவும் இருந்தவர்கள் கவனிக்கத் தவறிய அல்லது அலட்சியப்படுத்திய கடைநிலை மனிதர்களின் மனிதநேயத் தேவையை தூக்கிப்பிடித்தவராக முக்கியத்துவம் பெருகிறார்.

அதேபோல் பெரியார் தான் கன்னடன் என்பதையோ தன் வீட்டில் தாய் மொழியான கன்னடத்தைப் பயன்படுத்தாமல் தெலுங்கு மொழி பயன்படுத்தப்படுதல் உண்டு என்பதையோ மறைத்தார் இல்லை. அவர் தன் மனதில் தோன்றிய கருத்துகளை எந்த சமரசமும் இன்றியே மிக வெளிப்படையாக முன்வைத்தார். அவர் கூறிய கருத்துகள் பல பின்னாலில் அவராலேயே மாற்றங்கண்டுள்ளன. அதேப்போல் அவர் முன் வைத்த கருத்துகளை அன்றைய அவரின் தொண்டர்களே ஏற்காத நிலையும் இருந்துள்ளது. அவர், “நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள் உங்கள் பகுத்தறிவுக்கு ஆட்படுத்தி சரியா, தவறா என சீர்தூக்கி பார்த்து நல்லது என்றால் .ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றே கூறிவந்தார்.

இச்சூழலில், அவர் மீதான மத அரசியல் அடிப்படையிலான பழைய வகை சாடல்கள் இன்றும் நீளும் நிலையில் கடந்த பத்து ஆண்டுக்களாக புதியவகை சாடல்களும் அவரையும் அவர் தொடங்கிய திராவிட கழகம் தொட்டும் உத்வேகம் கொண்டுள்ளன. புதிய தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் அவர் முன்னெடுத்த ‘திராவிட’ இனக்குழுவை சேர்ந்தவர்களே ஆவர். அதாவது முன்னர் எதிராளிகளிடம் பெரியாரியம் போராடியது போக இப்போது தன் சொந்த படையினரே அவர் மீது போர் தொடுக்க முனைந்துள்ளனர். இப்புதிய போரை தொடங்கி முன்னேறிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாவர்.

பொதுவாக தமிழ்த் தேசியவாதிகள் பெரியார் மீதும் அவர் தோற்றுவித்த திராவிட கழகம் மீதும் பல விமர்சனங்களையும் குறைகூறல்களையும் முன்வைகின்றனர். மேலும் சிலர் ஆதாரமற்ற அவதூறுகளையும் சுமத்துகின்றனர். அவற்றில் குறிப்பிடத்தக்கது:

1. பெரியார் ‘திராவிடம்’ அடையாளத்தை முன்னிருத்தி தமிழர்களின் இன உணர்வை சிதைத்து விட்டார்;
2. திராவிட இயக்கம், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை தெலுங்கு மலையாள, கன்னடர்கள்  அபகரித்துக் கொள்ள அனுமதித்து துரோகம் இழைத்து விட்டது; மற்றும்
3. கன்னடரான பெரியார் தமிழை மிகவும் தாழ்வாக பேசியதுடன் அதன் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்தார்

போன்ற குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை. அதோடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையும் ஆகும். ஆகவே மேற்கண்ட தமிழ்த்தேசியவாதிகளின் கருத்துகளை பரந்து சிந்தித்து விடைகாணவேண்டியது அவசியம்.

தமிழ் தேசியவாதிகள் தங்களை திராவிடர் என்று குறிப்பிடுவதையே வெறுக்கின்றனர். அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். ஆகவே பெரியார் ‘திராவிடன்’ என்ற போலியான அடையாளத்தை தங்கள் மேல் திணித்து தங்கள் சுய அடையாளத்தை சிதைத்து விட்டார் என்னும் குற்றச்சாட்டை அவர்கள் மிக காட்டமாக முன்வைக்கின்றனர். பழங்கால அரசியலில் தமிழ்ச் சமுதாயத்தை ஆரியனும் பார்ப்பனனும் ஏமாற்றி அடிமைப்படுத்தியதாக முழங்கிய பெரியார் சமகால அரசியலில் தமிழனை ஏய்த்துப் பிழைப்பவன் வடுகனும் வந்தேரிகளுமே என்னும் உண்மையை மறைத்துவிட்டார் என்பதே அவர் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டாகும்.

அதோடு திராவிட அரசியல் என்கிற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு மாயையை உருவாக்கி வந்தேறிகளும் தெலுங்கு, மலையாளி, கன்னடர் போன்ற பிற மாநிலத்தார் அரசியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேற வழி வகுத்ததோடு மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் பின்னடைய காரணமாகவும் இருந்த ‘கன்னட சதிக்காரனாக’ பெரியாரையாரை அவர்கள் மறுவாசிப்பு செய்கின்றனர்.

பெரியார் ஒரு கன்னட வெறியர், அவர் தமிழ்மொழியை மிகவும் இழிவாக நினைத்தார், தமிழ்ச் சமுதாயம் குறித்து அவருக்கு தாழ்வான மதிப்பீடுகளே இருந்தன போன்ற பல நூறு குற்றச்சாட்டுகள் இன்று பல தமிழ்த் தேசிய முன்னெடுப்பாளர்களால் முன்வைக்கப்படுகிறன. தமிழினம் ஒன்றினைந்து முன்னேற வேண்டுமென்றால் பெரியாரையும் அவர் முன்வைத்த கருத்துகளையும் ஒழித்தே ஆகவேண்டும் என்பது இன்றைக்கு சிலரின் தீவிர பிரச்சாரமாக உள்ளது. பெங்குளூர் குணா என்னும் சேமுவேல் குணசீலர் எழுதிய ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994)’ என்னும் நூல் பெரியாரையும் அவர் தலைமையேற்ற திராவிட கழக அரசியலையும் தகர்க்கும் ஒரே நோக்கத்துக்காக ஒரு ஆய்வாகவே எழுதப்பட்டுள்ளது. ‘பெரியார் யாருக்குப் பெரியார்? என்னும் கட்டுரையும் அவரின் சாதிய பார்வையை கேள்விக்குறியாக்குகின்றது.

ஆகவே பெரியார் இரண்டு பெரிய குழுக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுவது கண்கூடு:

1. இந்து-பிராமண- பார்ப்பனரும் அவர்களின் ஆதரவாளர்களும்; மற்றும்

2. தமிழ்த் தேசிய அரசியல் குழுவினர்

ஆகவே கடந்த நூற்றாண்டில் பெரியார் ஆரிய – பார்ப்பனர்கள் மேல் சுமத்திய அதே குற்றச்சாட்டுகளையும், அவர்களை பெரியார் நீதியின் முன் நிறுத்திய அதே இடத்திலும் இன்று தமிழ்த்தேசியவாதிகள் பெரியாரை வைத்து தங்கள் இருப்பை வலுப்படுத்த முயல்வது எதிர்ப்பாராத அரசியல் திருப்பமாகும்.  சுறுக்கமாக கூறுவதென்றால் பெரியார் முன்னர் மதச் சார்பாகவும் இன்று இனச்சார்பாகவும் இயங்கும் மக்களால் வெறுக்கப்படுவது தெளிவாகிறது.

இந்நிலையில், பெரியார் தன் வாழ்நாளில் என்ன செய்தார் என்று மீட்டுணர்வது மிகவும் அவசியமானது. பல தரப்பினரும் அவரை தூற்றவும் தாக்கவும் முயல்வதன் காரணம் என்ன என்பதும் நமக்கு தெளிவு படவேண்டும். அவர் முன்வைத்த கருத்துகளின் உண்மைகளையும் போதாமைகளையும் தீவிரமாக அலச வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

முதலில், பெரியார் சமுதாயம் தொடர்பான சில அடிப்படை முடிவுகளுடனேதான் தன் செயல்பாடுகளைத் தொடங்கினார் என்பது தெளிவாகிறது. அவர் மனம் எதை ஏற்று செயல்பட்டது என்பதை வைத்தே அவரின் செயல்களுக்கான காரணங்களை நாம் அறியமுடியும். அவ்வகையில் அவர் நான்கு திணை சார்ந்த இனக்கொள்கைகளை முடிவாகக் கொண்டிருந்தார். முதலாவதாக ஆரிய திராவிடங்களே இந்திய துணைகண்டத்தில் வாழும் அனைத்து இனமக்களின் மூதாதையர் என்னும் கோட்பாட்டை சந்தேகம் இன்றி ஏற்றுக் கொண்டார். அடுத்து, ஆரிய இனம் திராவிட இனத்தை அடிமைப்படுத்தி, திராவிட இனத்தின் மேன்மைகளைக் குழைத்து மேலான்மை புரிகிறது என்னும் இன அரசியலையும் ஐயம் இன்றி ஏற்றுக் கொண்டார். மூன்றாவதாக, சென்னை மாகாணத்தில் வாழும் பிராமணர் அல்லாத மக்களை எல்லாம் திராவிடர்கள் என்று ஏற்றுக் கொண்டார். அடுத்து திராவிடர்கள் வாழும் நிலப்பகுதியை அவர் முதலில் தமிழ்நாடு என்றும் பிறகு திராவிட நாடு என்றும் அடையாளப்படுத்தினார். ஆகவே அவரின் இனச்சார்பு கருத்துகள் அனைத்தும் மேற்கண்ட கண்ணோட்டதையே தளமாக கொண்டவையாகும்.

தொடர்ந்து, அவரது மொழியியல் செயல்பாடுகளின் தளம் பின்வருமாறு இருந்தது.  அவர் தமிழ் உட்பட எந்த மொழியையும் தொன்மை காரணமாகவோ புனிதம் அல்லது தெய்வத்தன்மை காரணமாக புகழுவதை பிற்போக்குத்தனம் என்று கருதினார். மொழி என்பது மனித தொடர்புக்கான ஒரு கருவி மட்டுமே என்னும் ஆங்கில நவீன மொழியியலார்களின் கருத்துகளை அவர் பின்பற்றினார். தொடர்ந்து, தமிழ் மொழியே திராவிட நாட்டில் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று வெவ்வேறு வகையில் பேசப்படுகிறது என்று கூறினார். அதாவது திராவிட இனத்தின் ஒரே மொழி தமிழ் மொழியே என்றும் அந்த ஒரே மொழி பிராந்திய /வழக்கு மொழியாக பலவகை உச்சரிப்பில் பேசப்படுவதாலேயே பிற மொழி போல தோன்றுகின்றது என்றார்.

“ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழி களென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்”.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

அதாவது திராவிட இனத்தின் ஒரே மொழி தமிழ் மொழியே என்றும் அந்த ஒரே மொழி பிராந்திய /வழக்கு மொழியாக பலவகை உச்சரிப்பில் பேசப்படுவதாலேயே பிற மொழி போல தோன்றுகின்றது என்றார்.

திராவிட நாடு என்னும் ஒரு நிலப்பகுதியை இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்றும் போராட்டங்களை நிகழ்த்தினார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது அதை விமரித்து வெளியிட்ட கருத்தில், ‘இந்தியா என்னும் பார்ப்பன ஆதிக்கதில் இருந்து திராவிட நாடு விடுதலை பெரும் வரையில் தமிழர்களை பார்பன அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்க முடியாது’ என்னும் கருத்துபட பேசினார்.  திராவிட சமூகம் என்பது வைதீகத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் எதிராது என்பதோடு பார்ப்பனீயம் முன்னிருத்தும் வர்ணாஸ்ரமம் மனித விரோதச் செயல் என்று கூறினார்.

பகுத்தறிவின் வழி அறியக்கூடிய (அறிவியல் ஆய்வின் வழி கண்டறியக் கூடிய) உண்மைகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்று கூறினார். கடவுளின் இருப்பை பகுத்தறிவுவாதத்தின் வழி மெய்ப்பிக்க இயலாது என்பதால் அவர் இயல்பாகவே நாத்திகராக தன்னை அறிவித்துக் கொண்டார்.

பெரியாரின் இயங்குதன்மையை கூர்ந்து நோக்கும் போது அவர் தன் வாழ்நாளில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார் என்பதை விட அவர் சில கலகங்களை செய்தார் என்பதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. சமுதாய கவனிப்பை கோரும் விடயங்களை நோக்கி மக்களின் கவனத்தை குவியச் செய்யும் ஆரம்பகட்ட பணியை கலகங்கள் செய்கின்றன. மரபாகிவிட்ட வழக்கங்களுக்கும் மரபை தொடர்ந்து கீழ்மட்ட மக்களின் மேல் செலுத்த முயலும் அதிகார மையங்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் கலகங்கள்தாம். கலகங்கள் சமுதாய சீரமைப்பை எதிர்மறை நிலையில் இருந்து தொடங்குகின்றன. உண்மையான கலகங்களின் நோக்கம் சமுதாய அமைப்புக்குள் தேங்கிவிட்ட அழுக்குகளை சுத்தம் செய்ய மக்களை சுயமாக சிந்திக்கத் தூண்டுவதே ஆகும்.

அவ்வகையில் பெரியார் அடிப்படையில்  அடித்தட்டு மக்களுக்கு தன்மான உணர்வை ஊட்டுவதையும் அவர்களை சமகால பிரக்ஞை உள்ள மக்களாக மாற்றுவதையும் சில கலகங்கள் வழி வழிநடத்தினார். அவரின் நோக்கத்திற்கு எதிராக நின்ற மதம், ஜாதீய உணர்வு, பண்பாடு, அரசியல், மொழி போன்ற அனைத்து அதிகாரங்களுக்கும் எதிராக அவரது கலகங்கள் நீண்டன என்றே நாம் புரிந்துகொள்ள முடிகிறது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தன்மான உணர்வை தூண்டுவதன் வாயிலாக அவர்கள் சுய சொரணை பெற்று தங்கள் நிலையை ஆய்வதோடு சமுதாயத்தில் தங்கள் தகுதியை ஆதிக்கச் சாதியினரோடு போட்டியிடும் நிலைக்கு வளர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். மக்கள் தொடர்ந்து சிந்திக்கும் பொருட்டே அவர் பல்வேறு துறைகளில் தன் கலகங்களை நிகழ்த்தினார். கலகங்களை நிகழ்த்துவதன் வழியே மட்டுமே மேல்தட்டு கீழ்த்தட்டு இரு தரப்பு மக்களின் கவனத்தையும் பெறமுடியும் என்று அவர் நம்பினார். அது நாள்வரை சமுதாயம் ஏற்றுக் கொண்டு மரபாக ஆகிவிட்ட சமுதாய விழுமியங்களை அவர் தன் விமர்சனங்களால் தகர்த்தார். புனிதம் தெய்வீகம் போன்ற சொல்லாடல்களின் வழி பதுக்கி வைத்திருந்த உண்மைகளை அவர் ஈவு இரக்கம் இன்றி போட்டுடைத்தார். தமிழை கலைமகளோடு தொடர்புபடுத்தி தெய்வீகம் என்ற போக்கை சாடி அதை காட்டுமிராண்டி மொழி என்றார். சாதிய கட்டமைப்புக்கு முழுபொறுப்பையும் இந்து சமயம் கொண்டிருப்பதால் அவர் இந்துசமய நம்பிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினார். இன்றைய நிலையில் அவரது கலக முறையை நாம் பின் நவீனத்துவ சிந்தனைகள் என்கிற வகையில்தான் அணுகமுடியும்.

ஆனால் இன்றைய அரசியல் சூழல்களில், அரை நூற்றாண்டுகளுக்கு முன் பெரியார் துணிந்து முன்வைத்த வாதங்களிலும் கலகங்களிலும் பாதியைக் கூட பொதுவில் வைக்க முடியாத நிலையிலேயே நாம் இன்று வாழ்கிறோம் என்பதே உண்மை. நமது பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் மதம், இனம், நாட்டு இறையாண்மை, போன்ற பல்வேறு காரணங்களின் வழி கட்டுப்படுத்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. மதமும் அரசியலும் ஒன்றர கலந்த நிலையை அதிகாரவர்க்கம் வலுக்கட்டாயமாக சமுதாயத்தின் மேல் திணிக்க முயலும் சூழலே இன்று பல வளரும் நாடுகளின் அரசியலாக உள்ளது. சமய வெறியையும் இன வெறியையும் அரசியலாக்கி ஆதாயம் தேடக்கூடிய பணியையே பல அரசியல் கட்சிகள் சமுதாய அக்கரை என்ற போர்வையில் முன்னெடுக்கின்றன. இந்தியாவிலேயே, மதச்சார்பின்மை கொண்ட அரசியலை நிலை நாட்டுவதில் இன்று பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளதை காணமுடிகிறது. 1950-களில் தீவிரவாதிகள் என்றும் மதவெறியர்கள் என்றும் கருதப்பட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற அமைப்புகள் இன்று மக்களை வழிநடத்தும் தலைமைக்கு வந்துள்ளதே இதற்கு போதுமான எடுத்துக்காட்டு.

பெரியார் முன்வைத்த பகுத்தறிவு சிந்தனை என்பது 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிவுலகம் முன்வைத்த எம்பரிகல் மற்றும் எக்ஸ்பெரிமென்டலீசம் (Empirical and Experimentalism) போன்ற சிந்தனை மரபுகளின் வழியாக வந்திருக்க கூடியதே என்பது தெளிவு. ஆங்கில அறிவுலகில் மக்கள் சிந்தனை செய்யும் பாங்கும் நவீன சமுதாயமாக அவர்கள் மாறிவரும் வேகமும் அவரை கவர்ந்தன. ஆங்கிலமொழி தன் தொன்மைகளை மட்டும் நம்பிக் கொண்டு செயல்படாமல் சமகால அறிவியல் மொழியாகவும் பொருளாதார மொழியாகவும் மேலோங்கி இருப்பதை முன்மாதிரியாக கொண்டு தமிழ் மொழியும் தன் தோற்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆரிய மாயையில் இருந்து தமிழ் இனம் விடும்பட ஆங்கில கல்வி மிக முக்கியம் என நம்பினார்.

1920களில் தமிழ் மொழி முழுதும் பார்ப்பனர் கட்டுப்பாட்டிலும் முதலியார், பிள்ளைமார் போன்ற உயர்சாதி தமிழர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. எழுத்தறிவற்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ் மொழியோடு விலகியே இருந்தனர். அயோத்திதாசர் போன்ற ஒரு சில அறிஞர்களின் ஆக்கங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

மேல்தட்டு புலவர்களின் கையில் சிக்கியிருந்த தமிழ் அதன் வழமை குன்றி பிராமண ஆதிக்க கருத்துகளை தமிழ் உலகுக்குள் கொண்டு செலுத்தும் கருவியாகவே பயன்பட்டு வந்தது. தமிழர் சமுதாய நலன் குறித்தோ அவர்களை மேம்படுத்தும் கவனம் கொண்டோ அது செயல்படவில்லை. (பாரதியின் பாடல்கள் விதி விலக்கு என்றாலும் அது தேசியமயத்தை உயர்த்துவதாக இருந்தது) தமிழ்மொழி என்றும் உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்லுவதற்கு பதிலாக அது புனிதம் என்றும் தெய்வீகம் என்றும் பல கற்பிதங்களைச் சுமந்து ஒரு சிறு வட்டத்துக்குள் அமுக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. தமிழ்மொழி கடவுளே பேசி மகிழ்ந்த மொழி என்று கூறிக்கொண்டாலும் அதன் சமகால நிலையையும் வளர்ச்சியையும் அறிஞர் பெருமக்கள் விரிவுபடுத்தவில்லை. சிற்றிலக்கியங்களும், புராணக்கதைகளும் மீண்டும் மீண்டும் இறைத்துதியையும் தனிமனிததுதியையும் பரப்பவே இயற்றப்பட்டனவே அன்றி விரிவான மொழி ஆய்வுகளோ, சமுதாய அறிவியல் ஆய்வுகளோ செய்யப்படவில்லை. மேலும் தமிழ் புலவர்கள் சாதியால் பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை தமிழுக்குள் கொண்டுவரும் எந்தவித முயற்சியையும் செய்ததில்லை. இதன் காரணமாகவே தமிழ் மொழியை அவர் ‘காட்டுமிராண்டி மொழி’ என்று மிகக்கடுமையாக சாடினார்.

இன்று அவர் ஒரு கன்னடன் என்னும் காரணத்தாலேயே தமிழை அவ்வளவு துச்சமாக கூறினார் என்று சொல்வோர், பெரியார் தன் வாழ்நாளில் கடைசிவரை தமிழிலேயே எழுதியும் பேசியும் வந்தார் என்பதை மறந்துவிடுகின்றனர். அதோடு அவர் திராவிட குடும்பத்தின் ஒரே மொழி தமிழே என்று ஏற்றுக்கொண்டவர். ஆனால் அவர் தமிழுலகு மரபாக கொண்டாடிய மொழிப்பற்று என்பதையோ மொழியின் தெய்வீகத்தன்மை என்பதையோ ஏற்பவர் இல்லை. எல்லா மொழியும் மனிதத்தொடர்புகருவியாக மட்டுமே செயல்படுகின்றன என்றும் அதற்கு மேல் மொழியில் ஒன்றும் இல்லை என்பதுமே அவர் வாதங்களாக இருந்தன. ஆகவே அவர் கன்னடவெறியின் காரணமாகவே தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றார் என்னும் பேச்சுக்கே இடமில்லை என்றுதான் கூற முடியும். இன்றைய அரசியல், உலகியல் பார்வையோடு வரலாற்று நிகழ்வுகளை சமன் படுத்தி ஒப்பிடுவது மிகப்பெரிய தவறாகும்.

ஆயினும் பெரியாரின் கருத்துப் போராட்டங்கள் தெளிவில்லாத நிலையை அடைந்த இடங்களையும் அரசியல் அடிப்படையில் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சில பாதகமான சூழல்களை விட்டுச் சென்றிருப்பதையும் நாம் மறந்துவிட முடியாது. பெரியாரை விமர்சிப்பதே மாபெரும் குற்றச்செயலாக என்னும் சில அரைவேக்காட்டு ‘திராவிட வெறியர்கள்’ இன்று பெரியாரை தனிமனித துதி பாடி தெய்வமாக்கும் அசட்டுத்தனத்தையே செய்துவருகின்றனர். இது பெரியார் முன்வைத்த பகுத்தறிவுச் சிந்தனைக்கு முற்றும் முரணான செயல் என்பது தெளிவு. பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதன் அல்ல. அதை அவரே பலமுறை கூறியும் இன்று சமுதாயத்தில் பெரியாரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தவும் தங்களைச் சமுதாய பற்றாளர்களாகவும் மிகச்சிறந்த அறிவாளிகளாகவும் பிம்பங்களை உருவாக்க முயல்வோர் சிந்திப்பதில்லை.

பெரியார் முன்னெடுத்த போராட்டங்களில் மிகவும் சிக்கலான பகுதியாக இன்று எஞ்சி இருப்பது, அவர் திராவிட இனம் என்று கொண்டாடிய இனக்குழுவில் பல மொழி பேசும் மக்களும் இருந்ததும் அவர்கள் பின்நாளில் தங்களை தங்கள் தாய்மொழி வழி மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள முன்வந்ததும் ஆகும்.

1956-ல் இந்திய அரசு மொழிவழி மாநிலங்களை அமைத்த போது சென்னை மாகாணம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு என்று மொழியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டன. அரசியல் சட்டப்படி ஒரு மொழியை தங்கள் பேச்சுமொழியாக வரித்துக் கொண்டவர்கள் அவர்களின் மொழி மாநிலங்களில் பிரஜையானார்கள். கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தோர் பெரும்பான்மை தங்கள் தாய்மொழி வழியே நின்றார்கள்.

ஆனால், தமிழ்நாடு பகுதியில் குறிப்பாக நகர்புறங்களில் பல வெளிமாநிலத்தார் தங்கள் தாய்மொழி பற்றோடு தமிழ் நாட்டு பிரஜைகளாகவும் வாழத்தொடங்கினார்கள். அவர்களை பழைய வழக்கப்படியே ‘திராவிடர்’ என்ற அரசியல் கண்ணோட்டத்திலேயே தமிழ் நாடு ஏற்றுக் கொண்டது. அதேப் போல் தமிழ் நாட்டு தமிழனுக்கு உள்ள அனைத்து சலுகையும் உரிமையும் தமிழ் நாட்டில் வாழும் புதிதாய் குடியேரும் அனைத்து இந்திய மக்களுக்கும் உண்டு என்ற திரந்த கொள்கையைத் திராவிட அரசியல் வகுத்தது. அதாவது பெயரளவில் தமிழ் நாடாக இருந்தாலும் அது உள்ளீட்டில் திராவிட நாடாகவே செயல்பட்டது

ஆகவே பெரியார் தென்னாட்டு மக்களை திராவிட கட்டுக்குள் வைத்துப் பேசிய கருத்துக்கள் அத்துடன் சார்புநிலையில் மிகப்பெரிய மாறுதலை சந்தித்தன. திராவிட கட்டுக்குள் தென்னாட்டு மக்களை ஒன்றிணைக்க நினைத்ததை தமிழர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டதை உணர முடிகிறது. அவரின் தாய்மொழி மக்களான கர்நாடக மக்களாலேயோ, தெலுங்கர்களாலேயோ, மலையாளிகளாலேயோ முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையே வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. பெரியார் வலிந்து சென்னை மாகாண மக்களை திராவிடர்கள் என்று கூறினாலும் தமிழர் அல்லாத பிறர் அச்சொல் (திராவிடன்) தங்களையும் உட்படுத்துவதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியாரின் நிலைப்பாடு இங்குதான் தெளிவில்லாத இடத்தில் நிற்பதை பார்க்க முடிகிறது. 1959க்குப் பிறகு தமிழ் நாட்டில் தமிழர் நலம் பேசி இருக்க வேண்டிய சூழலே மிகுந்திருந்த போதும் தொடர்ந்து திராவிட அரசியல் பேசியது ஒரு முரணே.

இக்கால கட்டத்தில் சி.என் அண்ணாதுரை தி.மு.கவை மிகவும் ஜனரஞ்சகமான அரசியல் கட்சியாகவும், பெரியார் உருவாக்கிய மூல கருத்துக்களில் இருந்து வெகுதூரம் விலகி சென்று விட்ட நிலையிலும் நடத்திக் கொண்டிருந்தார். அவரது அரசியல் தேவைக்கு ‘தமிழர்’ என்ற சொல்லைவிட ‘திராவிடர்’ என்ற சொல்லே மிகவும் பொருத்தமாக இருந்தது.  ஆனால் பெரியாருக்கு அப்படி ஒரு தேவை இல்லாத நிலையில் தமிழ் நாட்டில் பிற மாநிலத்தாரின் கை ஓங்குவதை அவரே சில முறை வெளிப்படையாக பேசியுங்கூட திராவிட இனக் கொள்கையை அவரால் விட்டுக் கொடுக்க முடியாததற்க்குக் காரணம் அவருக்கு இருந்த பிராமண அச்சம்தான் அன்றி வேறில்லை. தமிழன் என்ற கட்டமைப்பின் வழி ஆரிய ஆதரவாளர்களும் பார்ப்பனர்களும் தமிழ் மக்களோடு கலந்து தன் போராட்டங்களை சிதைத்து விடுவார்கள் என்று அவர் அஞ்சினார். ஆனால், திராவிடன் என்ற பொதுப் பெயரின் வழி பிற மாநிலத்தவர்களும் தமிழ் நாட்டில் ஊடுருவி தமிழ் நாட்டு தமிழர்களின் உரிமைகளை பரித்துக் கொண்டு விட முடியும் என்ற எதார்த்த அரசியலை அவர் கவனப்படுத்தவில்லை.

ஆயினும் பிற திராவிட மாநிலங்களில் நிலை சற்றே வேறுபட்டு இருந்தது. அங்கு அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு அரசியல், வேலை வாய்ப்பு, சொத்து முதலீடு, வியாபாரம் போன்ற பல விடயங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டது. அரசாங்க வேலைக்கு மண்ணின் மைந்தர்களே தகுதியானவர்கள் என்ற இனக்கொள்கையை கர்நாடகம் போன்ற மாநிலங்கள் சட்டமாகவே கொண்டு செயல்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. மலையாள மொழியை கற்காதவர் கேரளாவில் அரசாங்க வேலைகளில் இணைய முடியாது என்ற சட்டம் உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் மொழியை அறியாமலே ஒரு குடிமகன் உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும். தமிழ் நாட்டில் அண்ணாதுரைக்குப் பிறகு பிறப்பால் தமிழர் அல்லாத எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலித்தா, மு.கருணாநிதி போன்றோர் முதல்வரானாலும் அண்டை மாநிலங்களில் ஒரு தமிழருக்கும் அரசியல் உயர் பதவிகளில் வாய்ப்பு கிடையாது என்பது நல்ல உதாரணம்.

இதில் மு.கருணாநிதி அவர்கள் தெலுங்கு பின்னனி உள்ளவர் என்பது புதிய கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பில் உள்ள அபத்தம் என்னவென்றால் கருணாநிதியின் ஏறத்தாழ ஐந்து தலைமுறைகளுக்கு முன்பட்ட முன்பரம்பரையினர் தெலுங்கு இசை வேளாலர் சாதியைச் சார்ந்தவர் என்பதாகக் கூறுவதுதான். அதற்கான எவ்வித தரவுகள் உள்ளன என்பது சந்தேகத்திற்குறியது. அப்படியே இருந்தாலும் அதன் பின் பல தலைமுறைகளாக அவர் தமிழராகத்தான் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு தனிமனிதனின் இனத்தை முடிவு செய்ய இப்படி பலதலைமுறைகள் கடந்து சென்று ஆய்வு நடத்துதல் முறையா? சாத்தியப்படுமா? போன்ற கேள்விகள் நம்மை குழப்புகின்றன. ஒவ்வொரு தமிழ் நாட்டு குடிமகனின் இனமும் இவ்வகையில் ஆய்வுக்கு உட்படுத்தபடுதல் எங்கே கொண்டு விடும் என்று சிந்திக்க வேண்டாமா? இவ்வாறு அந்நிய இனத்தவர் பலரும் ஆண்ட தமிழகம் மற்றும் மலேசிய குடிமக்களை கணக்கில் எடுத்துப் பேசினால் அத்தனிப்பேரும் எல்லா தலைமுறையிலும் ரத்தக்கலப்பற்ற சுத்த தமிழராக இருப்பதை உறுதி செய்ய முடியுமா?

இன்றும் வேற்று மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழர் அல்லாதவர்கள் குறிப்பாக  சினிமா கலைஞர்கள் பிழைக்க வந்த தமிழ்நாட்டில், தங்களுக்கு இருக்கும் மக்கள் கவர்ச்சியைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளைத் தொடங்குவதும், தமிழர்களின் தலைவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதும், மொழி, இனம், பண்பாடு, போன்ற விடயங்களில் மூக்கை நுழைத்து அறிவுரைகள் கூறுவதும் போன்ற கேளிக்கூத்துகள் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் இந்நிலையை கற்பனையும் செய்து பார்க்க முடியாது. திரைப்படத்துறையில் இருந்து ஓர் ஆளுமையைத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்றாலும் ஆந்திரர்கள் என்.டி ராமாராவைத்தான் தேர்வு செய்தார்கள் என்பதை ஒரு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

மொழிவழி மாநில பிரிவுக்குப் பின் பெரியார், திராவிட கருத்தை மீட்டுக் கொண்டு “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற அவரது 1938-ஆம் ஆண்டு அரைக்கூவலைத் தெளிவாக தொடர்ந்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் மொழிவழி மாநிலங்கள் அமைந்த பின்னரும் தொடர்ந்து சில நேரங்களில் தமிழர் என்றும் பல நேரங்களில் திராவிடர் என்றும் அவர் பேசியதால் தமிழ் மக்கள் இன்றளவும் இனச்சிந்தனையில் தெளிவற்று வாழ்கிறார்கள். “வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு” என்ற புகழ் வார்த்தைகள் இன்று “வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழ் நாடு” என்ற குத்தலாக மாறியதற்கு திராவிட அரசியல் கடைபிடித்த இரட்டை போக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

ஆயினும் இந்த அரசியல் குறைகளை முழுதும் பெரியாரின் மேல் ஏற்றுவது சரியான அரசியல் கண்ணோட்டம் ஆகாது. பெரியார் முன்னின்று நடத்திய சமூக கிளர்ச்சிகளை அரசியல் மயமாக்கியவர் சி.என்.அண்ணாதுரையாவார். வசீகர மேடைப்பேச்சு, ஜனரஞ்சக திரைப்பட கலைஞர்களின் அலங்காரம், தமிழ் அறிஞர்களின் எழுத்துப் பணி போன்ற சாதனங்களின் வழி திராவிட அரசியலை ஜனரஞ்சக அரசியலாக மாற்றியவர் அவர். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளையும் பல சமரசங்களின் வழி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் சைவ சமய கோட்பாட்டுக்குள் கொண்டுபோய் தலைமுழுகியவரும் அவர்தான். திராவிட அரசியலை தமிழ்த் திரைப்படத்துறையின் புகழிடமாக மாற்றியவரும் சினிமா வெளிச்சத்தைத் தனிமனித வழிபாட்டு அரசியலாக்கும் கலையாக வளர்த்தெடுத்தவரும் பேரறிஞர் சி. என் அண்ணாதுரைதான்.

பெரியார் முன்னெடுத்த சமுதாய கலகங்கள் முழுமை பெறாமல் போனதற்கு பலரின் அரசியல் சுயநலன்களும் காரணமாகின்றன. இன்றைய அரசியல் கண்ணோட்டத்தில் அவரின் அரசியல் நகர்ச்சிகள் சில குழப்பங்கள் உள்ளவை என்பது தெளிவு. குறிப்பாக பிராமண ஆதிக்க பதற்றத்தில் அவர் தமிழனை தனித்து அடையாளம் காட்டாமல் விட்டது இன்று தமிழ்நாட்டு அரசியலில் தமிழர்க்கு சில பின்னடைவுகளை கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. தமிழ் நாட்டில் இன்று பிராமண ஆதிக்க இந்துதுவா கட்சிகளுக்கு இருக்கின்ற ஆதரவு கூட தமிழர் நலம் பேணும் திராவிட ஒட்டு இல்லாத கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை. இந்நிலை தமிழர் நலம் பேணும் தலைவர்களுக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருவது இயல்பு.  பிற மாநிலங்களில் இன மொழி அரசியல் பிடிப்பு முற்றிலும் வேறாக இருப்பதும் குறிப்பிட தக்கது.

ஆயினும் அரசியல் தளத்தைவிடுத்து சமுதாய தளத்திலும் பெரியாரின் பணிக்கு முக்கியத்துவம் இல்லை என்று தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதையும் ஏற்க முடியாது. ஐம்பது ஆண்டு வரலாற்றில் மக்களின் கல்வி வளர்ச்சியும் சமுதாய கண்ணோட்டமும் வெகுவாக மாறிவிட்ட நிலையில் பெரியார் முன்வைத்த பகுத்தறிவு, தன்மான கருத்துகளை மொத்தமாக புறக்கணிப்பது என்பது அறிவுடையோர் செயல் அன்று. அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று இழிவு படுத்தினார் என்றும் தமிழ்ப்புலவர்களை அவமதித்தார் என்றும் கூறி அவரை தமிழ் இனவிரோதி என்று கட்டமைக்க முயல்வதை உணர்ச்சி மேலீட்டால் முன்னெடுக்கப்படும் செயல்கள் என்றே கூறமுடியும்.

பெரியாரின் மொழி, மத பண்பாட்டு தேசிய எதிர்ப்புகள் மையமிட்டு இருந்தது சாதிய விடுதலையிலேயே என்பது உறுதி.

“நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்
நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி “

என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது. அவரின் எதிர்ப்புகளும் கலகங்களும் அவரின் மேற்கண்ட நிலைப்பாடுகளையே தளமாக கொண்டு எழுத்தவை.

சாதிய மேலான்மைகள், பெண்விடுதலை, தன்மானச் சிந்தனை போன்ற சமூக கருத்துகளை இன்றும் பலரும் பூசி மெழுகிவரும் நிலையிலும் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தும் சூழ்நிலையிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படையாக பேசி விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றவர் பெரியார். இன்று அரசியல் பொருளாதார இயலாமையில் திராவிட அரசியல் சிக்கித் தினறுவதை சாக்காக கொண்டு பெரியார் முன்னெடுத்த சமுதாய சிதனைகள் மொத்தத்தையும் கழுவி ஊற்றிவிட நினைக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் செயல் உள்நோக்கம் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் இனம் தலைநிமிர பெரியார்தான் தடைக்கல் என்று கூறும் கருத்துகள் பார்ப்பனீயத்தை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுசெல்லும் திட்டத்தின் ஒருபகுதி என்றே தோன்றுகிறது. தோழர் குணா தன் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்னும் நூலில் ஆரியம் வேறு பார்ப்பனீயம் வேறு, ஆரிய பார்ப்பணர், தமிழ் பார்பணர் என்றெல்லாம் எழுதுவது நவீன ஆரிய ஆதிக்கத்துக்கு தமிழர்களை தயார்படுத்தும் முயற்சியே ஆகும்.

ஒவ்வொரு இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராட துணியும் தலைவர்கள் நீண்டகால வரலாற்று பார்வையில் வெவ்வேறு கண்ணோட்டங்களில் விமர்சிக்கப்படுவது உலக இயல்பு. அமெரிக்காவை கண்டுபிடித்தவன் என்று புகழப்படும் கொலம்பஸ், தென் அமெரிக்க பூர்வ குடிகளை ஏமாற்றி நம்மவைத்து அடிமைப்படுத்தியவன் என்கிற மாற்று வரலாற்று பார்வையையும் நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும். இந்திய சுதந்திரத்துக்காக ஒரு துறவி போல வாழ்ந்த காந்தியின் அகிம்சை அரசியலை வியந்து நோக்கும் நாம், இந்தியாவில் இன்று நடைபெரும் மதம் சார்ந்த குழப்பங்களுக்கு அவரின் அரசியல் நடைமுறைகளும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. இந்தியாவில் பாகிஸ்தான் உருவாகவும் மத அடிப்படையில் நாடு பிளவுபடவும் காரணமே காந்திய காங்கிரசின் இந்துமதவாத அணுகுமுறைதான் என்னும் குற்றச்சாட்டுகளையும் காந்தி தன் ஆற்றல் வாய்ந்த அகிம்சா முறையை ஏகாதிபத்யங்களுக்கு சாதகமாகவும் சாமானியர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தினார் போன்ற குற்றச்சாட்டுகளும் வரலாற்று மறுவாசிப்பில் வெளிப்பாடுகளாகின்றன.

ஒரு காலகட்ட சூழலுக்கு ஏற்ப ஒரு தலைவனின் முடிவுகளும் செயல்களும் இருப்பதும், அந்த செயல்முறைகள் வேறு ஒரு காலப்பின்னனியில் வேறு பரிணாமம் கொள்வதும் தவிற்க முடியாத சமூக வரலாகிறது. ஆயினும் நல்ல விளைவுகள் கண்டு அத்தலைவனை கொண்டாடுவதும் மாற்றுச் சூழல் கண்டு அவனை வரலாற்றில் இருந்தே நீக்க துடிப்பதும் மிகவும் தவறு. வரலாறு ஒவ்வொரு மனிதனுக்குமான இடத்தை தானே முடிவு செய்து இருத்திக் கொள்கிறது. காந்தியை விரும்பினாலும் வெறுத்தாலும் வரலாற்றில் அவருக்கான இடம் எது என்பதை நாம் மாற்ற முடியாது. அது போன்றே பெரியாரை ஏற்றுகொண்டாலும் ஏற்க்காவிட்டாலும் அவர் வரலாற்றில் தமிழின தன்மானத்தை மீள்சிந்தனைக்கு உட்படுத்தியவர் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவரை புகழ்வதன்வழியோ அல்லது தூற்றுவதன்வழியோ மட்டுமே நம்மை நிறுவிக் கொள்ள முடியும் என்ற சூழலில் இருந்து விடுபட்டு இன்றைய அரசியல் சமுதாய கடப்பாடுகளில் கவனம் செலுத்துவதே முறை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா? (பகுதி 2)

இரண்டாம் பாகம்

004தமிழ்த் தேசியம்

தமிழ் தேசியம் என்னும் முழுமை இல்லாத கருத்தாக்கத்தை அவ்வளவு சுலபமாக விளக்கி விடவும் முடியாது. காரணம் அடிப்படையில் தமிழ் தேசியம் வேறொரு சமூக நீதியை பேசுவதாகவும் நடைமுறையில் வேறு ஒரு சமூகநீதியை கடைபிடிப்பதாகவும் உள்ளது. உலக தமிழர்களுக்கு தோதான மேடையை அமைக்கும் பேரியக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தினாலும் நடைமுறையில் அது தமிழ்நாட்டு அரசியல் சூழலை மாற்றி அமைக்கவே முனைப்புகாட்டுகிறது. பெரியார் காலத்தில் தமிழனை ஆரியன் மோசம் செய்தான்; ஏமாற்றினான் என்று ஒரு திராவிட கருத்து முன்வைக்கப்பட்டு மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை சுயசிந்தனையை அடமானம் வைத்தல் என்று கூறும் தமிழ்த்தேசியம் தமிழனை வடுகனும் வந்தேரிகளும் ஏமாற்றிப் பிழைப்பதாக வாதிடுகிறது. தமிழனை எத்தனை பேர்தான் ஏமாற்றுவார்கள்? எத்தனைப் பேரிடம் அவன் ஏமாறுவான்? தமிழனுக்கு சொந்த புத்தி மழுங்கிப் போனதேன்? வருவோன் போவோன் எல்லாரிடமும் ஏமாறும் ஒரு இனக்குழு எப்படி உலகில் சிறந்த இனமாக வாழ்ந்திருக்கும் என்றே நமக்கு சிந்திக்கத் தோன்றுகிறது.

மேலும் தமிழ்த் தேசியம் என்று பொதுவாகப் பலரும் பேசினாலும் அவர்களிடையே பல கருத்து முரண்களும் வெவ்வேறான நோக்கங்களும் உள்ளன. ஆகவே விடுபட்ட இடங்களை நிறைவு செய்யும் விதமாக நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம். அதன் வழி தமிழ் தேசிய கட்டமைப்பையும் அதன் குழப்பங்களையும் தேவைகளையும் போதாமைகளையும் புரிந்துகொள்ள முடியும்.

திராவிட அரசியல் பொய்த்துப் போன இடத்தில் இருந்து முளைத்திருப்பது தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் வியூகம் என்பது தெளிவு.  தமிழ்த் தேசியம் பெரியார் முன்வைத்த திராவிட இனமரபு கொள்கைக்கு எதிரானது என்றாலும் அது ஒரு சமுதாய புரட்சியோ அறிவு புரட்சியோ அல்ல. அது ஒர் அரசியல் வியூகம் மட்டுமே. ‘தமிழ் நாடு தமிழனுக்கே’ என்னும் பழைய முழக்கத்தை அதன் அசலான பொருளில் மீண்டும் முன்னிருத்தும் ஒர் அரசியல் அசைவு. ஆனால் மற்ற அரசியல் வியூகங்கள் போன்றே இதுவும் மக்களின் மனோநிலை, சமூக கண்ணோட்டம், வரலாறு ஆகியவற்றில் சலனங்களை உண்டாக்கி அவர்களை தனது நோக்கத்திற்கு தயார் செய்கிறது. பெரியார் சமூக அவலங்களையும் முரண்பாடுகளையும் பேசுவதன் வழி மக்களை அரசியல் விழிப்புணர்ச்சிக்கு கொண்டு சென்றார். ஆனால் தமிழ்த் தேசியம் நேரடியாக இன அரசியல் பேசுவதன் வழி சமுதாயத்தில் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறது.

ஆயினும், பெரியாரின் அரசியல் பார்வையை மட்டுமே தமிழ்த் தேசியம் முறியடிக்கிறதே அன்றி அவரின் மொத்த போராட்டங்களையும் அதனால் வென்றெடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். உதாரணமாக, தமிழனை பார்ப்பன ஆதிகத்திற்கும் ஆட்படுத்தாமல் திராவிட ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தாமல் தனித்தமிழ் இனமாக மீட்டெடுக்க வேண்டும் என்னும் சில தமிழ்த்தேசியவாதிகளின் குரல் நமக்கு பார்ப்பன அதிக்கம் என்பது உண்மையில் இன்னும் முற்றாக ஒழியவில்லை என்பதையே நன்கு புலப்படுத்துகிறது. அதோடு, தமிழ்த் தேசியம், சமகால அரசியல் தளத்தில் தமிழினத்தின் பொருளாதார இருப்பு,மொழி உரிமைகள், கல்வி, அரசு உரிமைகள்  ஆகியவற்றை மட்டுமே சிறப்பாக கவனப்படுத்துகிறது. சமூக ஏற்ற தாழ்வுகள், பண்பாட்டு கூறுகள், மத பின்னடைவுகள், அறிவார்ந்த சிந்தனைகள் போன்ற பிற சமுதாய மேம்பாட்டு சிந்தனைகளில் அது அடக்கிவாசிப்பதும் தெளிவு. ஆகவே தமிழ்த் தேசியம் ஒரு சமுதாய பேரியக்கமாக இயங்காமல் சில குறிப்பிட்ட குழுக்களின் சிந்தனை போக்கிற்கு ஏற்ப நகர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட அரசியல் அமுக்கமாக சில உள்திட்டங்களின் வழி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என்ற ஏமாற்ற உணர்வாலும், தன் சொந்த மண்ணில் தாங்கள் பிற இனத்தவரால் சுரண்டப்படுகிறோம் என்ற உரிமை உணர்வாலும் இன்று பல தமிழர்கள்தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.அதிலும் “உன் வீட்டில் அரிசி இல்லாததற்கு வந்தேரிகளே காரணம்”, “உனக்கு வேலை கிடைக்காததற்கும் வந்தேரி அரசியலே காரணம்” என்பன போன்ற மிக எளிய மனோவியல் தாக்குதல்களின் வழி பாமர இளையோர்களைக் கவரும் பணியைத் தமிழ்த்தேசியம் சுறுசுறுப்பாக செய்துவருகிறது.  இன்றைய தமிழ்த் தேசியத்தின் மைய கோரிக்கை எது என்பது தெளிவில்லாமல் இருந்தாலும், அதன் முக்கிய தேவைகளில் ஒன்று, தமிழ் நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்பதாக இருக்கிறது. (அண்ணாதுரை, பக்தவட்சலம், காமராஜர் போன்றவர்கள் பிறப்பால் தமிழர்கள் என்றாலும், தமிழ் உணர்வற்றவர்கள் என்பது தமிழ்ந்தேசியவாதிகளின் கருத்து!).

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனித்தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமாகவே இருந்தது. இந்திய துணைகண்டத்தில் இருந்து தமிழ்நாட்டு நிலப்பரப்பை பிரித்து சுதந்திர நாடாக்க வேண்டும் என்னும் கோரிக்கையாகவே அது ஒலித்தது. ஆனால் இன்று தமிழ்நாட்டு தமிழினத்தை பொருளாதார அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் மற்றவர் சுரண்டிப்பிழைக்காவண்ணம் வலுவான சட்டதிட்டங்கள் கொண்ட ஒரு இந்திய மாநிலமாகவே இருத்தலை அதிகாரப்படுத்தும் இயக்கமாக பரிணமித்துள்ளது.  காவிரி நதிநீர் சிக்கல், முல்லைபெரியாறு நதிநீர் போராட்டம் போன்ற வாழ்வாதார போராட்டங்கள் தமிழ் மக்களைத் தங்கள் அரசியல் செயல்பாடுகள் குறித்த மறு மதிப்பீட்டுச் சிந்தனைக்கு நகர்த்துகின்றன. தொப்புள் கொடி உறவுகள் வாழும் ஈழத்தில் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த துயரும் அதற்கு ஆக்ககரமாக தீர்வு காண முன்வராத தமிழ் நாட்டு அரசியல் போக்கும் பெரும்பான்மை தமிழர்களின் அரசியல் சித்தாந்ததில் மாற்றங்களை நிகழ்த்துவதும் மறுப்பதற்கில்லை. ‘தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியலை தமிழருக்கான அரசியல் என்று சொல்ல முடியாது. தமிழ்த் தேசியத்துக்கு எதிரான அரசியல்தான் இங்கு ஆதிக்கத்தில் இருக்கிறது’ என்னும் கோவை ஞானியின் கருத்துகள் இச்சூழலைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகவே தமிழ் தேசியம் சார்பு ரீதியாக திராவிட அரசியல் மூடிய கதவுகளை திறந்து விட்டு; திராவிட அரசியல் திறந்து வைத்த கதவுகளை மூடும் வேலையை செய்ய முணைந்திருக்கிறது என்பது உண்மை.

ஆயினும், தமிழ்த் தேசியம் என்னும் கருத்தாக்கம் இன்று சிலரால் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு இனவெறியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்தையும் நாம் பார்க்க முடிகிறது. அதுபோலவே மண் உரிமை சார்ந்த ஒரு அரசியல் சட்டப் பிரச்சனைக்குத் தீர்வுகான பொருத்தமான அரசியல் களத்தை நாடாமல் பொதுமக்களின் உணர்ச்சியை தூண்டிவிடும் வன்முறை செயல்பாடுகளையும் தமிழ்த் தேசியம் என்ற பெயரால் சிலர் முன்னெடுக்க முயல்கின்ற அவலத்தையும் கவனிக்க முடிகிறது.

ஆகவே, தமிழ்த் தேசியம் என்னும் இனம் சார்ந்த அரசியல் உணர்வலையை சரியான பாதையில் வழி நடத்த அதன் வரலாற்றிலிருந்தும் கவனிக்கப்படாத மக்களின் தேவைகளில் இருந்தும் மீட்டுணருவது அவசியம்.

தமிழ்த் தேசியம் அடிப்படையில் தமிழ் இன அரசியல் மீட்சிச் சிந்தனையைக் கொண்டது என்றாலும் அதன் அசைவுகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் நிகழ்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

தமிழ் தேசியத்தின் முன்னோடிகள்

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணத்தை தமிழ் நாட்டுடன் இறுத்தி வைப்பதில் தன் போராட்டத்தை தொடங்கினார் ம.பொ.சிவஞானம். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டு எல்லைகளை முடிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பங்களின் போது பல போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி கண்டார். ம.பொ.சி தமிழரசு என்னும் கட்சியை தொடங்கி நடத்தினார். இவரை எல்லைக்காவலர் என்றே புகழ்வதும் உண்டு. தமிழ் நாட்டில் ஈ. வெ. ரா வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தாலும் இவர் திராவிட சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. தீவிர சைவரான இவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து செயல்பட்டார். ஆகவே பெரியாரோடு முரண்பட்டே தன் இயக்கங்களை நடத்தினார். தமிழ் நாட்டு எல்லை (மண்) என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியவர் என்பதால் இவரை தமிழ் தேசியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம். ஆயினும் ம.பொ.சியின் தமிழ் தேசியம் என்பது தமிழ் நாட்டு எல்லைகளை உறுதிபடுத்துதல் என்ற அளவிலேயே இருந்தது.

இதே போன்று 1956-ஆம் ஆண்டு தமிழகத்தின் தென்மூலையில் உள்ள குமரி மாவட்டத்தை கேரளா, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரித்து தமிழ் நாட்டுடன் இணைத்த நேசமணியும் குறிப்பிடத்தக்கவர். மக்களுக்கு தமிழ் நாட்டு எல்லை என்ற தெளிவையும் இன உரிமை என்ற ஊக்கத்தையும் கொடுத்த முன்னோடியாக இவர் இருக்கிறார்.

அதே காலகட்டத்தில் பெரியார் தனித் தமிழ் நாடு என்னும் முழக்கத்தை முன்வைத்தாலும் பின்னர் அதை தனித் திராவிட நாடு என்னும் முழக்கமாக மாற்றினார். அவரின் கோரிக்கை வெற்றி பெறாததால் இந்திய சுதந்திர தினத்தை ‘துக்க நாளாக’ அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அண்ணா தனித்தமிழ் நாட்டு முழக்கத்தை கையிலெடுத்தார். “கடைசித் தமிழன் இருக்கும் வரை தனித்தமிழ் நாடு கோரிக்கை தொடரும்” என்று பேசினார். ஆனால் இந்திய அரசு 1972-ல் பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவந்ததும் அக்கோரிக்கையை மீட்டுக் கொண்டார்.

அடுத்து, பாவலரேறு பெருஞ்சித்தனார் முன்னெடுத்த தமிழ் தேசியம் என்பது சற்றே தீவிரமானதாக இருந்தது. மறைமலைஅடிகள், பாவாணர்போன்றவர்களின் தமிழிய உணர்வில் வளர்ந்தவரான இவர் தன் அரசியல் பார்வையில் அவர்களிடம் இருந்து வேறுபட்டார். தமிழ் நாடு என்னும் நிலப்பகுதியை இந்திய துணைகண்டத்தில் இருந்து பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்னும் முழக்கத்தை அவர் முன்னிருத்தினார். ஆரிய, பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தும் இந்து மதச் சிந்தனை கட்டுகளில் இருந்தும் தமிழனை பிரித்தெடுக்க ஒரே மார்க்கம் தமிழ் நாட்டு பிரிவினைப் போராட்டந்தான் என்பது அவரது கருத்து. தனது தேன்சிட்டு இதழில் தன் கருத்துகளைத் தொடர்ந்து எழுதினார். பல முறை சிறைவாசம் சென்றார்.

மேற்கண்ட வரலாற்று தகவல்களை தமிழ்த் தேசியத்தின் முதல் கட்டமாக குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் பார்ப்பன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றொரு இயக்கமாகவே செயல்பட்டது. திராவிட கருத்தாக்கங்களில் இருந்து அன்றைய தமிழ் தேசியம் இறையியல், மதம் போன்ற கருத்துகளிலேயே அதிகம் வேறுபட்டதாக இருந்தது. தலைவர்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர இனஅரசியல் கொள்கை மோதல்கள் இல்லை என்றே கூறலாம்.

தமிழ் தேசியப்போக்கின் மாற்றம்

ஆனால் பின்னர் வந்த தமிழ்த் தேசியம் தன் பாதையை வேறு திசைகளில் கொண்டு செல்லத் துவங்கியது.  இக்காலகட்டத்தில் இரண்டு வகை தமிழ் தேசிய செயல்பாடுகளைக் காணமுடிகிறது. முதலாவது, இலங்கை அரசியலை பெரிதும் சார்ந்தே இருக்கும் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசியம். இது, தமிழ் நாட்டு அரசியலில்  களமாடுவதை விட அதிகமாக இலங்கை போரையே மையமிட்டதாக அமைந்திருக்கிறது. வை.கோபால்சாமி, சீமான், பழ.நெடுமாறன் போன்றோரை இவ்வகையான தமிழ் தேசியவாதிகள் என்று குறிப்பிட முடியும்.

மேலும் இக்காலகட்ட தமிழ்த்தேசியவாதிகள் திராவிட அரசியலில் இருந்து பிரிந்து வந்தவர்களாகவோ, தேசிய அரசியலில் தோற்றுப் போனவர்களாகவோ இருந்தனர். சிறு சிறு இயக்கங்களையும் அரசியல் கட்சிகளின் வழியும் இவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டாலும் இவர்களின் நிலைப்பாடு உறுதியானதாக இல்லாமல் இருந்தது. ராமதாஸ், வை. கோபால்சாமி, திருமாவளவன் போன்ற பலர் இவ்வகையில் செயல்பட்டனர். அடிக்கடி கட்சி மாறுவது, கூட்டணிகளில் இடம் பெருவது, தேர்தலில் இடம் கிடைக்க பச்சையாக சாதீயம் பேசுவது அல்லது கொள்கை மாறுவது என்று பல அரசியல் நாடகங்களை இவர்கள் தொடர்ந்து அரகேற்றிவந்தனர்.

சீமான் பொதுவாக ஈழ ஆதரவாளராக செயல்பட்டாலும் அவரின் தமிழ்நாட்டு அரசியல், ஜெயலலிதா ஆதரவு அரசியலாகவே இருப்பது வெளிப்படையான முரண் மட்டும் அல்ல அவரின் போலி இனப்பற்றையும் காட்டுகின்றது. ஈழ மக்களின் அவலத்தை அனுதாப ஓட்டாக பெற முயலும் பல திராவிட அரசியல்வாதிகளில் இருந்து இவர் வேறுபட்டவர் அல்ல. தன் கட்சி கொள்கை அறிக்கையில் இனத்தூய்மைவாதத்தை தூக்கிப் பிடிக்கும் இவர் அது குறித்து வெளிப்படையாக பேசுவது இல்லை. மாறாக பெரியாரை தமிழ் இனத்தந்தை என்று பசப்பித் திரிகிறார் என்றே கூறமுடியும். இதை பசப்பல் எனச்சொல்ல காரணம் பெரியாரை ஒரு பக்கம் தூக்கிப்பிடித்து மற்றுமொரு பக்கம் தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்வார். முத்துராமலிங்கதேவரை ஒரு சமுதாயப் போராளி என கற்பனைக் கதை கூறுபவர்கள் கே.ஜீவபாரதி தொகுத்துள்ள தேவரின் மேடைப்பேச்சுகள் கட்டுரைகள் போன்றவற்றைப் பார்த்தாலே அவரின் சாதிய வெறி புலப்படும்.

தமிழ்த் தேசிய உணர்வு தோன்றிய காலத்தில் இருந்து, பின்னர் பல வகையிலும்  வேறுபட்டு அது தனி பாதை அமைத்துக் கொண்டிருப்பது உண்மை. வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனைப் பற்றிய பொதுவான சித்தரிப்பில் காணப்படும் மாற்றங்களை இதற்கு ஆதாரமாக கூறலாம். ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அவர்களால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாகவே கட்டபொம்பன் இருந்தான். அவனை கொள்ளைக்காரான் என்றே 18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வம்சமணிதீபிகை என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆனால் இது ஆங்கிலேய அரசின் சதிச் செயல் என்றும் கட்டபொம்மன் உண்மையில் தேசிய போராட்ட வீரன் என்றும் கட்டபொம்மனின் வரலாற்றை 20-ஆம் நூற்றாண்டில் மீள்வாசிப்பு செய்து அவனை இந்திய சுதந்திர போராட்ட முன்னோடி என்று நிறுவியவர் தமிழ்த் தேசிய முன்னோடியான  ம.பொ.சிவஞானமாவார். கட்டபொம்மனைப் பற்றிய பல நூல்களையும் நாடகங்களையும் இவர் எழுதினார். தன் சொந்த முயற்சியில் தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார். கட்டபொம்மன் விழா எடுத்தார். கட்டபொம்மு தெலுங்கு வம்சாவளிச்சார்ந்தவன் என்று தெரிந்தும் அவனை தமிழ்நாட்டில் தோன்றிய தேசிய போராட்டவீரனாக எந்த பிணக்கும் இன்றி முன்மொழிந்தார்.  அன்றைய தமிழறிஞர்கள்  டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை,பன்மொழிப்புலவர்தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பலரும் வீரப்பாண்டியகட்ட பொம்மனை ஒரு மாவீரனாக போற்றினர். இதே ம.பொ.சி தான் பின்னர், சென்னையை ஆந்திரா வசம் போகாமல் போராட்டம் நடத்தி தடுத்தார். தெலுங்கு தேசத்திற்கு எதிராக, தமிழ் நாட்டு எல்லைப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவருக்கு இல்லாத இனக்காழ்ப்பு இன்றைய தமிழ்த் தேசியவாதிகளிடம் உண்டு என்பது வருத்தம் தரும் உண்மை. இனம் சார்ந்த அரசியல் போராட்டத்திற்கும் இனக்காழ்புக்கும் அவருக்கு தெரிந்த வேறுபாடு பின்னர் வந்த தமிழ்த் தேசியவாதிகளிடம் இல்லாமல் போனது வேதனை. 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வீரபாண்டிய கட்டமொம்மனை தமிழ்த் தேசியவாதிகள் வடுக வந்தேரி (விஜயநகர அரசு விட்டுச் சென்ற மிச்சம்) என்றும் தமிழினத்தை சுரண்டித் தின்ற கூட்டத்தின் தலைவன் என்று மட்டுமே அடையாளப்படுத்துகின்றனர். ஆகவே ஆதியில் பேசப்பட்ட தமிழ்த் தேசியத்தினின்று மாறுபட்டு இன்றைய தமிழ்த் தேசியம் இனத்தாக்குதலுக்கு முக்கியத்துவம் தரும் போக்கை கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

வை. கோபால்சாமியும் தமிழ்த் தேசியம் என்று முழங்கினாலும் பெரியாரை ஏற்றுக் கொண்டவராகவே உள்ளார். ஆயினும் தமிழ் தேசியவாதிகளின் தீவிரப்போக்கு குழுவாக இயங்கும் தமிழர் களம், தமிழர் உலகம் போன்றவைகள் வை. கோபால்சாமியை தமிழர் போல நாடகமாடும் தெலுங்கர் என்றே ஒதுக்குகின்றனர்.

மேலும் சில பிரிவினர், தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பெரியாரே தமிழ்த் தேசியத் தந்தை என்ற கருத்தையும் துணிந்து முன்வைக்கின்றனர். பேரா. வீரபாண்டியன் போன்றோர் ‘திராவிட தமிழ்த் தேசியம்’ என்ற பெயரிலேயே இயக்கம் நடத்துவதும் குறிப்பிடத் தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

சுதந்திர தமிழீழமும் தமிழ் தேசியமும்

1980க்கு பின்னர் தோன்றிய தமிழ்த் தேசியவாதிகளும் இயக்கங்களும் புலிகள் தரப்பாக செயல்படுவதோடு இந்திய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரினவாத இலங்கை அரசை ஒடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கின்றனர்.  இவர்களின் பார்வையில் தமிழ்த் தேசியம் என்பது இலங்கையில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படப்போகும் சுதந்திர தமிழீழ அரசையே குறிக்கிறது. ஆனால் இந்தியாவின் இறையான்மைக்கு, காஸ்மீரிலோ, காலீஸ்தானிலோ ஆபத்து என்றதும் அதை வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தங்கள் அண்டை நாட்டின் இறையான்மையை உரசிப்பார்ப்பது முரணான செயலாகவே படுகிறது. இந்தியச் சட்டத்துக்குள் பிரிவினைவாதம் நிந்தனைக்குறிய குற்றம் என்பதை முழுதும் ஏற்றுக் கொண்டு அரசியல் செய்யும் இவர்கள் அண்டை நாட்டில் பிரிவிணையை ஆதரிப்பது வியப்பே. சுதந்திர ஈழ நாட்டு உதயத்திற்காக அரும்பாடுபடும் இவர்கள் சுதந்திர தமிழ்நாட்டு உதயத்திற்கு ஒரு சிறு  அறிக்கையாவது ஒட்டுவார்கள் என்றால் இவர்களின் அரசியல் நேர்மைக்குச் சான்றாக அமையும்.

அவர்கள் ஈழ வெற்றி தோல்விகளையும் தமிழ்மக்களின் அவலங்களையும் கொண்டு தங்கள் அரசியல் காய்களை நகர்த்துவது தெளிவாக தெரிகிறது. அதன் காரணமாகவே விடுதலைப் புலி இயக்கத்தலைவர் பிரபாகரனை தமிழ்த் தேசிய தலைவன் என்று கூறுகின்றனர். ஆனால், பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் என்றுமே தமிழ் தேசியம் குறித்து பேசியதாக தெரியவில்லை. அவர் தன்னை தன் மண்ணுக்கும் மக்களுக்கும் விசுவாசமான போராட்டவீரராகவே வரித்துக் கொண்டவர். மேலும் தமிழ்த் தேசியம் முன்வைக்கும் திராவிட விரோதம் எல்லாம் அவர் அறியாதது. எம். ஜி ராமச்சந்திரனிடம் அவர் நல்ல நட்பும் உதவியும் பெற்றுவந்தார் என்பது வரலாறு. ஆகவே பிரபாகரனை தமிழ் தேசியத்தோடு இணைக்க நினைப்பது அபத்தம்.

இனவாதமும் தமிழ் தேசியமும்

இரண்டாவது குழு, தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார நிலையைச் சார்ந்ததாக இருக்கிறது. இளைஞர்களை அதிகம் கவர்ந்த இப்பிரிவு, தமிழ் நாட்டு தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களையும் பொருளாதார உரிமைகளையும், அரசியல் அதிகாரங்களையும் பிற இனத்தாரிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்துகளை முன்வைக்கின்றது. திராவிட அரசியலை முற்றாக புறந்தள்ளும் இவர்கள் ஈ.வெ.ராவின் அரசியல் கொள்கைகளைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். தெலுங்கு, கன்னடர்களிடம் அரசியல் பலத்தையும், மார்வாடி வட இந்தியர்களிடம் பொருளாதார பலத்தையும், மலையாளிகளிடம் வியாபார பலத்தையும் இழந்து தமிழ்நாட்டுத் தமிழன் தன் சொந்தமண்ணிலேயே அடிமைகளாக வாழ்கின்ற சூழலை இவர்கள் முன்னிலைப் படுத்துகின்றனர்.  இச்சூழலை அடிப்படையாகக் கொண்டே‘தமிழ்நாடு வந்தேரிகளின் வேட்டைக்காடாகி விட்டதாக’ பழ.நெடுமாறன் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து கர்நாடக அரசும் கேரள அரசும் தமிழ் நாட்டின் மேல் காவிரி ஆறு இடைமறிப்பு, பாலாறு இடைமறிப்பு, பெரியாறு அணை நீர் மறுப்பு போன்ற தன்மூப்பான செயல்களின் வழி தொடுக்கும் நீர் முற்றுகையும் தமிழ்த்தேசியவாதிகளின் உரிமை மீட்பு போராட்டங்களுக்கு காரணமாகிறது. .  தமிழ்நாட்டில் அனைத்து மக்களையும் ஒட்டுமொத்தமாக பாதிக்கும் நீர் தட்டுப்பாட்டுக்கு காரணமாக சக திராவிட சகோதர மாநிலங்களே இருப்பது இவர்களின் திராவிட வெறுப்புக்கு மேலும் வலுசேர்க்கிறது.

மேலும் இவர்கள் தமிழ் நாட்டில் பிழைக்க வந்த அன்னியர்களின் நிலையையும் தமிழ் நாட்டில் இருந்து பிழைப்புதேடி வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்களின் நிலையையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றனர். ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன அடிப்படையிலான பகுப்பு முறைகளும் ஒதுக்கல்களும் அவர்களை ஆவேசப்படுத்துகிறது. தமிழ் நாட்டிலும் அதே போன்ற கட்டுப்பாடுகள் வேண்டும் என்று அவர்கள் அழுத்தம் தருகின்றனர். தோழர் தியாகு ஒரு நேர்காணலில் தமிழக இளைஞர்களின் இத்தகைய போக்கை ஆதரித்தே பேசுகிறார். “ சொந்த மண்ணில் தன் உரிமைகளை இழக்கும் எல்லாருக்கும் பொதுவான குணம்தான் இது” என்றே அவர் கூறுகிறார்.

பெங்குளூர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்னும் நூல் புதியவர்கள் பலருக்கும் பெரியார் மீதும் திராவிட அரசியல் மீதும் வெறுப்பை உமிழ ஒரு தூண்டுதலாக இருந்தது. ஏற்கனவே பெரியார் மீது கசப்பு உள்ளவர்களுக்கு அப்புத்தகம் ஒரு அதிகாரத்துவ ஆவனமானது. ஆயினும் அந்நூல் மையமாக சொல்லும் அரசியல் மிக எளிமையானது.

“பேதைத் தமிழனோ, “எல்லாரும் நம்மவரே” என்று பட்டாங்கு படிப்பவன். “எல்லாருக்கும் நல்லவனாக இருந்து கெட்டவன். தெலுங்கன் தன்னுடைய மனதின் கதவை அடைத்துக் கொண்ட பின்னர், கன்னடனும் அதேபோல் தன் உள்ளத்தின் கதவை நன்றாய் இழுத்து மூடிக்கொண்ட பின்னர், மலையாளியும் தன் மனக்கதவைச் சாத்திக்கொண்ட பின்னர், தமிழன் மட்டுமே தன் திருவுளவாயை அகல விரியத் திறந்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய பேதைமை! எதிரிக்கு எதிர் எதிர் ( -X – = +) தானே? எதிருக்கு நேர் எதிர்மறை ( – X + = – ) தானே? திராவிடர்கள் தமிழையும் தமிழரையும் நஞ்சென வெறுக்கின்றனர். ஆகவே, தமிழன் தனக்குத் தீங்கிழைத்த அந்தத் திராவிடரை முதலில் வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தச் சின்னக் கணக்குக்கூட விளங்க வில்லையெனில், அவன் உருப்படவே மாட்டான்.” என்பதே பெங்குளூர் குணா முன்வைக்கும் அரசியல் கோட்பாடு.

தமிழர் களம் கறிமாவளவன், தமிழர் உலகம் குழுவினர் போன்றவர்கள் பெங்களூர் குணாவின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவர்களாகவே தெரிகின்றனர். இன்னும் பல சிறு சிறு இளைஞர் குழுக்களும் இன உரிமையை இனதுவேச வார்த்தைகளால் வெற்றி கொள்ள தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். நமது கேள்வியெல்லாம், ஒரு இனத்தின் தேசியத்தைக் கட்டமைக்க விரும்புபவர்கள் இனவெறுப்பு அரசியலை அதன் அடித்தளமாக கொண்டு செயல்படுவது எப்படிப்பட்ட எதிர்காலத்தை கொண்டுவரும் என்பதுதான். ஒரு இனம் ஆற்றல் பொருந்தியதாகவும் அறிவாற்றல் மிக்கதாகவும், போட்டி மிக்க சந்தை உலகில் சவால்விட்டு வளரும் அதே நேரம் தன் இனம் மொழி பண்பாடு, ஆன்மீகம் போன்ற கூறுகளையும் உடன் கொண்டு செல்ல பிற இனம் மீதான வெறுப்பை மூலதனமாக்க வேண்டும் என்று கூறுதல் பிழையான போதனையாகும். சீனர்கள் மேல் ஜப்பானியர்கள் கொண்ட வெறுப்பும், யூதர்கள் மேல் நாசீக்கள் கொண்ட வெறுப்பும் கொலைக் களத்தில் முடிந்த இரண்டு உலக இனவெறுப்பு அரசியலின் உதாரணங்கள். இலங்கைத் தீவில் இன்றும் தொடரும் தமிழின அழிப்புக்கு அடிப்படைக் காரணம் இனவெறுப்பை அந்நாட்டு அரசாங்கம் அரசியலாக்கியதுதான். பல்லினம் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் இன வெறுப்பை அரசியல் கொள்கையாக செயல்படுத்துதல் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. சீமான் போன்ற நாடகதாரிகள் கர்நாடகா பால்தாக்ரே (சிவசேனா) வை முன்னுதாரணம் காட்டுதல் அடிப்படையிலேயே மனிதம் அற்ற செயல். மனம் பிறழ்ந்த மனிதர்களின் வக்ரங்களை அரசியல் முன்னுதாரணமாக கொள்ள முடியாது.

இன்றைய தமிழ் நாட்டு அரசியல் நகர்சிகள் மற்ற மாநிலங்கள் போன்றே மத்திய அரசாங்கத்தின் பிடியிலேயே உள்ளது. மாநில அரசாங்கங்களின் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது.  “தமிழர்களைத் தமிழ் ஆள்வதற்கோ, தமிழக எல்லைகளைக் காப்பாற்றிக் கொடுப்பதற்கோ, தமிழகத்தில் சாதியொழிப்புக்கு வித்திடும் சட்டங்கள் இயற்றவோ, அயலார் நுழைவைக் கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லாத அமைப்பே தமிழகச் சட்ட மன்றம் ஆகும். 234 தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தும் கச்சத்தீவைத் தூக்கி இலங்கைக்கு தில்லி கொடுத்தது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. சாதியில் பின்தங்கியவர்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒரு சில இடங்களைப் பெற்றுத் தரக் கூடிய 69% இடஒதுக்கீட்டைக் கூட காப்பாற்றித் தர முடியாத சட்டமன்றம் இது என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் இதற்குச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. இது இயற்றும் மசோதாக்களை இந்திய நாடாளுமன்றம் ஏற்றால்தான் அவை சட்டமாகும். எனவே இதனைத் தமிழ்நாடு மசோதா மன்றம் என்றும், அதன் உறுப்பினர்களை மசோதா மன்ற உறுப்பினர்கள் என்றும் கூறுவதே சாலப் பொருத்தம்’ என்று நலங்கிள்ளி எழுதுவது (ஏன் தேவை தமிழ்த் தேசியம்?) கவனிக்கத்தக்க கருத்து. ஆயினும் பெங்களூர் குணா இன்றைய தமிழக அரசியல் தோல்விகள் எல்லாவற்றுக்கும் பெரியாரையும் திராவிட அரசியலையும் காரணமாக காட்டினாலும் மத்திய அரசாங்கம் என்ற அதிகாரத்தைப் பற்றி வாய்திறக்காதது விந்தையாக உள்ளது.

பொதுவாக எல்லா சமுதாயங்களிலும் உள்கட்டமைபில் இன வெறுப்பு என்பது இருந்தே தீரும். போட்டிகளும் உரிமைப் போராட்டங்களும் மிக்க சமுதாய கட்டமைப்பில் பிற இனங்களைப் பற்றி தாழ்த்தி பேசுதல், குறை கூறுதல், அவதூறு செய்தல் போன்ற இனக்குழு குண இயல்புகள் எல்லா காலகட்டத்திலும் இருந்தே வந்துள்ளது. இவ்வகை மன அழுத்தங்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவோர் மத்தியதர வர்க்க மக்களேயாவர். உரிமை உள்ள மண்ணில் பிற இன மக்கள் வளமுடன் வாழ்தல் என்பது பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு வந்த இடையூராக அவர்கள் கருதுவதாலேயே இவ்வகை மனப்பாங்கு அமைகின்றது.

1940-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டு செட்டியார்கள் பர்மாவில் குடியேறி  வியாபாரம் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்ததும் சில ஆண்டுகளில் அங்குள்ள பூர்வீக குடிகள் தங்கள் நாட்டு உரிமையை வந்தேரிகளான செட்டியார்கள் அபகரித்துக்கொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டி அரசியல் கிளர்ச்சிகளை உண்டாக்கினர். பிழைப்பு தேடி பர்மாவிற்கு சென்ற தமிழர்கள் அகதிகள் போல் நாடு திரும்பினர். அந்த கிளர்ச்சிகள் பிறகு பெரும் அரசியல் மாற்றங்களை பர்மாவில் கொண்டுவந்தன. அமெரிக்கா, அஸ்திராலியா போன்ற வளர்ந்த நாடுகளிலும் சிறுபான்மையினர், வந்தேரிகள், ஆகியோருக்கு எதிராக பெரும்பான்மை மக்களின் மத்தியதர மக்கள் இழிச்சொற்களையும் அவதூறுகளையும் பேசுவது உண்டு. ஆனால் அது அந்நாட்டின் அரசியல் நிலைப்பாடு அல்ல.   ஆனால் ஒரு இனத்தின் தேசிய அரசியலில் அவ்வகை மனப்பான்மையின் அல்லது குணங்களின் பங்கு எத்தகையது என்பது மிக முக்கிய விடையமாகும். ஒரு இனத்தின் தேசிய கட்டமைப்பு என்பது அந்த இனத்தின் அரசியல் இயல்புகளை மட்டும் இன்றி அதன் குண இயல்புகளையும் நிர்மாணிக்கும் பணியைச் செய்வதால் மாந்த பண்புகளில் மேலானவற்றின் மேலேயே அது நிறுவப்படவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தோழர் குணாவின் கருத்து தமிழ் நாட்டு அரசியல் சூழலின் இயலாமையால் எழுந்த ஆதங்க வெறுப்பே அன்றி வேறில்லை என்பதே என் கருத்து. அந்நூலை ஆழ்ந்து வாசித்து அரசியல் உலகில் புறக்கணிக்கப்படும் தமிழர்தம் அக உலகின் இருண்ட பகுதிகளை புரிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த முடியுமே அன்றி தமிழ்த் தேசியத்தின் அடிப்படையாக கொள்ளுதல் தமிழ்த் தேசியம் என்னும் மாற்றுச் சிந்தனையை முலையிலேயே கருகவைக்கும் ஆபத்தையே கொண்டுவரும்.

ஆயினும், இன உரிமைப் போராட்டம் என்பது எப்போதும் கத்தி மேல் நடப்பது போன்றதுதான். இனப்பற்றுக்கும் இனவெறிக்கும் நூலாளவு வேறுபாடுதான் உள்ளது. ஒரு இனம் தன் புகழை மெச்சிக் கொள்வதற்கும் அளவு கடந்த மெச்சுதல், பாசீச வெறியாக மாறுவதற்கும் அதிக தூரம் இல்லை என்பதே உலக வரலாறுகள் உணர்த்தும் உண்மை. உணர்ச்சி பெருக்கில் பொங்கி எழும் மக்களைக் கட்டுப்படுத்தி நல்வழிகாட்ட ஒரு சிறந்த தலைவன் தேவை. ஆனால் தமிழ்த் தேசிய போராளிகளுக்கோ இன்று அப்படி ஒரு மகத்தான தலைவன் இல்லாதது மாபெரும் குறையாக உள்ளது. அதனினும் தமிழ்த்தேசிய போராளிகள் என்ற பெயரில் பல ஆபத்தான கருத்துகளை தமிழ் மக்கள் உள்ளங்களில் விதைக்கும் செயலும் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் முன் வைக்கப்பட்டதுமே தொடர்ந்து எழும் கேள்வி தமிழர் என்பவர் யார்? என்பதுதான். தமிழர்களுக்கு என்ற ஒரு நாடு இல்லாத சூழலில் அரசியல் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும் நாம் தமிழினம் என்ற ஒரு இனக்குழுவை வகுக்க முடியாது. ஆகவே, இன்று நாம் தமிழன் எனறு கூற எது அடிப்படையாகிறது என்பது சிந்தனைக்குறிய வினா. தமிழனின் இன அடையாளத்திற்கு அடிப்படை, பேசும் மொழியா? பெற்றோரா? அல்லது வாழும் மண்ணா? என்னும் கேள்விக்கு தீவிர ஆய்வுகளின் வழி விடை தேடவேண்டியுள்ளது.

தமிழ்த் தேசியத்தார் பல பிரிவுகளாக செயல்படுவதால் இச்சிக்கலைக் களைய பல்வேறு அணுகுமுறைகளை முன் மொழிகின்றனர். அவற்றில் சில சிந்திக்கத் தக்கன என்றாலும் சில ஆபத்தானவை. அவற்றில் தமிழர்களம், தமிழர் உலகம் போன்ற அமைப்பினர் இரண்டு கட்டுப்பாடுகளின் கீழ் தமிழனை அடையாளப்படுத்தலாம் என்று கூறுகின்றனர். அவை, தமிழை வீட்டு மொழியாக பேசுகிறவர்களை தமிழர் என்று ஏற்றுக் கொள்வதும் தமிழர் நலனில் அக்கறை உள்ளவரை தமிழர் என்று ஏற்றுக் கொள்ளுதலும் ஆகும்.. இதன்படி வை. கோவை அவர்கள் தமிழர் அல்லாதவர் என்று ஒதுக்குகின்றனர். காரணம் அவர் வீட்டில் தெலுங்கு மொழி பேசுபவர் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. அதே சமயம் பிறப்பால் தமிழரான ப. சிதம்பரத்தையும் புறக்கணிக்கின்றனர். இவர் வீட்டில் தமிழ் பேசினாலும் அவர் தமிழர் நலச் சிந்தனை அற்றவர் என்பதே அவர்கள் முடிவு.

இதில் இரண்டு வகை பலகீனங்கள் உள்ளன. ஒன்று, வீட்டில் தமிழ் பேசாதவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினரையும் அருந்ததியர், நரிக்குரவர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினரையும் வந்தேரிகள் அடையாளத்தை முன்வைத்து தமிழ்த் தேசியத்தில் இருந்து புறக்கணிப்பது இன துவேசச் செயலாகும். குறைந்தது ஐந்து தலைமுறைகளாக தமிழ் மக்களோடு ஒன்றாக வாழ்ந்து தமிழ் மண்ணோடு உரமாகி விட்ட ஒரு மனிதக் குழுவை, அவர்களின் தாய்மொழியை வீட்டில் பயன்படுத்துவதற்காக வந்தேரிகள் என்று ஓரங்கட்ட நினைப்பது அறம் அற்ற செயல் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்து, ஒரு மனிதனின் செயலை அடிப்படையாக வைத்து அவனை ஒரு இனக் குழுவுடன் இணைப்பதோ அகற்றுவதோ மிகவும் சிரமம். அது பொருத்தமற்ற அளவுகோலாகவும் ஆகிவிடும். ஒவ்வொரு மனிதனுக்கும் கருத்து சுதந்திரம், அரசியல் பின்புல ஈர்ப்பு, பொருளாதார தத்துவ நம்பிக்கை என்று இருக்கும் போது, ஒருவனின் செயல் அந்த இனமக்களின் நலனை முன்னிருத்தியதா இல்லையா என்பதை அளவிட முடியாது என்பதே என் நிலைப்பாடுக. ஒரு கால கட்டத்தில் தன் இன நலனுக்காக போராட முற்பட்ட மனிதனின் செயல் வேறு ஒரு கால கட்டத்தில் அதே மக்களின் துயரங்களுக்கு காரணமாவது அரசியல் வாழ்க்கையில் மிகவும் இயல்பான ஒன்றே ஆகும். இதற்கு நல்ல உதாரணமாக பெரியாரையும் பிரபாகரனையும் நாம் காட்டலாம். ஆகவே ஒரு மனிதனின் செயல் இனநலன் உள்ளதா அல்லதா என்று யார் எப்படி முடிவு செய்யமுடியும்? என்ற வினா நம்முன் வந்து நிற்கிறது.

அடுத்து, தமிழ் நாட்டில் நீண்ட காலமாகவே பல்வேறு இன மக்கள் குடியேறி வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் யார் தூயத் தமிழர்? யார் அன்னியர் என்று கண்டறிய முணைவது ஆபத்தான முடிவுகளைக் கொண்டுவரக் கூடும். தமிழ் பேசி தமிழர்களாகவே வாழும் பல்லாயிரம் அன்னிய இனமக்கள் தமிழ் நாட்டில் வாழக் கூடும். அவர்களை தமிழர்கள் அல்ல என்று அடையாளப்படுத்துவதன் வழி தமிழ் இனம் எப்படி முன்னேற முடியும் என்பது புதிர். இந்தியச் சட்டத்தில் இட ஒதுகீடோ, அரசியல் வாய்ப்புகளோ தமிழன் என்ற அடிப்படியில் கொடுக்கப்பட்டாத சூழலில் தமிழ் அல்லாதவரை அடையாளமிடுவதனால் தமிழ் நாட்டில் இனப் பதற்றம் வளருவதைத் தவிர வேறு எந்தப் பலனும் இல்லை என்பதே உண்மை.

முற்காலத்தில் தூயத் தமிழ் இனம் ஒன்று தென்னாட்டு நிலப்பரப்பில் வாழ்திருந்த சாத்தியங்கள் இருந்தாலும், இன்றுவரை அவர்கள் ஓரினமாகவே வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணுவது சமூக அறிவியல் கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும். ‘தூயஇனம் என்று ஒன்று நெடுநாள் கலப்புறாமல் அவ்வாறே இருக்க முடியும் என்பதை உயிரியல் விஞ்ஞானம் மறுக்கிறது. இனக்கலப்பால் உலக முழுவதும் தூய இனங்கள் சுருங்கிவரும் போக்கை உயிரியல் ஆய்வுகள் காட்டுகின்றன.” என்கிறார் வரலாற்று பேராசிரியை டாக்டர் ரொமீலா தாப்பர்

மேலும், இச்சிக்கலைக் களைய தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் மக்களிடையே சாதிய அடையாளத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்று கூறுவது மிக அபத்தமானது. “தமிழ்த் தேசியவாதிகள் இறுதியில் சாதிய களையத்துக்குள்ளேயே கையை விடுகின்றனர்” என்று பிரபஞ்சன் கூறுவது இதன் அடிப்படையிலேயே. இச்செயல் தமிழ் மக்களிடையே பிற்போக்குத் தனங்களையும் ஏற்ற தாழ்வுகளையும் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கக் கூடியதாகவே இருக்கும். இன்றைய நிலையில் வர்ணாஸ்ரம மனுதர்மமும் சாதிய கோட்பாடும் வேறு வேறானவை அல்ல. ஆகவே சாதியத்தை வெறும் அடையாளமாக (ஏற்ற தாழ்வு அற்றதாக) பயன்படுத்த முடியும் என்பது தோசையை அரிசியாக்க முயல்வது போன்றதேயாகும்.

சங்ககால தமிழனின் குடிபிறப்பு போன்றதல்ல இன்றைய சாதிய கட்டமைப்பு. பல்வேறு சாதி உட்பிரிவுகளும் கலப்புகளும் தொழில் அடிப்படையிலான சாதியமும் நிறைந்ததே இன்றைய சாதியம். இன்றைய சாதியத்தின் நோக்கம் சுயபெருமை பேசவும் இனக்குழுக்களாக தங்களை பிரித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது. இன்றும் தமிழர்சார்ந்த இயக்கங்களின் தலைமை பொறுப்பையும் கோயில் நிர்வாக பொறுப்பிலும் மேல்சாதிக்காரர்களின் ஆதிக்கமே வலுத்திருக்கும் சூழலில் சாதியத்தை இன அடையாளமாக பயன்படுத்தலாம் என்பது தமிழினத்தை முற்றும் அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும் என்பது தெளிவு. அன்மைய தர்மபுரி சம்பவங்களுக்குத் தீர்வு காணமுடியாத தமிழ்த்தேசியவாதிகள் தமிழனின் அடையாளம் என்ற பெயரில் சாதியத்தை வளர்க்க நினைப்பது அடித்தட்டு மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிச்செயல் என்றே கூறவேண்டி உள்ளது. இன்னொரு கோணத்தில், சமுதாய கட்டமைப்பில் உயர் நிலையில் இருக்கும் பார்ப்பனர்களை தமிழ்த் தேசியவாதிகள் தமிழர்களாகவே ஏற்றுக் கொள்வதும், கடைநிலை மக்களை தமிழன் அல்ல என்று ஒதுக்குவதும் தீண்டாமையின் நவீன வடிவங்களாகவே உள்ளது. ஆயினும் தமிழ்த்தேசியம் பெரும்பான்மை மத்திய சாதிகளின் நிலையை பாதிக்காததால் அவர்களின் நிலை சமுதாயத்தில் உச்ச சக்தியாக மாறும் என்பதும் மறுப்பதற்கில்லை.

ஆகவே தமிழ் நாட்டில் தமிழினம், ‘திராவிடன்’ என்கிற கருத்தாக்கத்தால் தங்கள் அசல் அடையாளத்தையும் உரிமைகளையும் இழந்து நிற்கிறது என்ற குற்றச்சாட்டையும் அதனின்று மீண்டு தங்களை (திராவிடன் அல்ல) தமிழன் என்று உணரும் பொருட்டும் இழந்த தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் பொருட்டும் தமிழ்த் தேசியம் முனைப்பாக செயல்படவேண்டியது அதன் அடிப்படை பணியாகும். ஆயினும் ஒரு தனி ஆளுமை இல்லாத ஆரம்பகட்ட திட்டங்களாலும், சுயநல அரசியல் திட்டங்களாலும், இன வெறி மேலன்மையாலும் அதன் வெளிப்பாடு சந்தேகத்துகுறியதாகவே உள்ளது. பொதுவாக இனவெறிக் கொள்கையை தேசிய கொள்கையாக கொள்வது மிகவும் ஆபத்தான முடிவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே திராவிட அரசியல் பல ஓட்டைகளை கொண்டிருப்பது தெளிவு என்றாலும் தமிழ் தேசியம் என்னும் கருத்து அறிவு தளத்தில் திடமாக கட்டமைக்கப்படாத, வெறும் மக்கள் உணர்ச்சியைத் தூண்டும் வாதங்களை மட்டுமே உள்ளடக்கி உள்ளது என்பதே அதன் இன்றைய நிலை.

மேலும் தமிழ்த் தேசியம் பெயரளவில் மட்டுமே இன்று உலக தமிழர்களை ஒன்றுபடுத்தக் கூடிய களமாக சித்தரிக்கப்படுகிறது. ஆயினும் அதன் உள் அடங்கல்கள் முற்றும் தமிழ்நாட்டு தமிழர்களின் இன்றைய அரசியல் குழப்பங்களுக்கு விடைகாணும் முகமாகவே செயல்படுகிறது. ஆயினும் ஈழ மக்களின் அரசியல் போராட்டங்களை முகவரியாக்கி தமிழ்த் தேசியம் பேசுவது வாடிக்கையாகிவிட்டது. ஈழ மக்களின் நிலையைத் தொட்டுப் பேசும்போது உலக தமிழ்மக்களின் கவனத்தை எளிதில் பெறமுடியும் என்பதே இதன் நடைமுறை எதார்த்தம்.

முடிவாக, தமிழ்த் தேசியம் என்னும் இயக்கம் உலகத்தமிழர்களுக்கு இன மான சிந்தனையை ஊட்டவல்லதாயும், உலகத் தமிழர்களை ஒரு அமைப்பாக ஆக்கவல்லதாயும் செயல்படமுடியுமா என்பதே நமது கேள்வி. மதம், சாதி, இன அரசியல் காழ்ப்புகள் கடந்து, போராட்டங்கள் மிகுந்த நவீன உலகில் தமிழ் மொழியையும் இன மேன்மையையும் அழுத்தமாக நிறுவக்கூடிய ஒரு எழுட்சியாக அது செயல்படவேண்டியது அவசியம். தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்தாக்கங்களை தமிழ்த்தேசியம் முன்னெடுக்கவேண்டும். உலகப் போக்குக்கு உடன்படாத எந்த அரசியல் சித்தாந்தமும் இயல்பாகவே காலாவதியாகிவிடும் என்பதால் நடைமுறை பொருளாதார சூழலில் தமிழ்த்தேசியத்தின் நிலைப்பாட்டை தெளிவாக்கவேண்டும். மாறாக அது வடுகனுக்கும் வந்தேரிகளுக்கும் எதிரான ஒரு இனத்தீவிரவாத இயக்கமாக தன்னைக் சுறுக்கிக் கொள்ளக் கூடாது. அன்றி, குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைப்பதாயும் தனிமனித சாடல்களைச் செய்து காலங்கடத்துவதாயும் இனவெறியையும் இனபதற்றத்தையும் பாமரத்தமிழர்கள் உள்ளத்தில் விதைக்க முற்படுவதாயும் செயல்படுமாயின் தமிழ்த்தேசியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியதாகவே இருக்கும். தூரநோக்கு சிந்தனை அற்று சந்தர்ப்பவாத அரசியல் செய்து ஐம்பது வருடங்களுக்குப்பின் தோல்வியின் விளிம்பில் நிற்கும் திராவிட அரசியலின் நிலை தமிழ்த் தேசியத்திற்கும் வராதிருக்க அர்ப்ப உணர்ச்சிகளை ஒதுக்கிவைத்து அறிவு பூர்வமான திட்டமிடல் தேவை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மலேசியாவில் திராவிட அரசியலும் தமிழ்த் தேசியமும்

கடந்த காலங்களில் மலேசியாவில் தமிழ்த் தேசியம் குறித்த வெளிப்படையான பேச்சுகள் மிகக் குறைவாகவே நடைபெற்றாலும் கடந்த சில ஆண்டுகளாக அது பற்றிய தீவிர கருத்துகள் சில இயக்கங்களால் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக 2012-ல் சீமானின் மலேசிய வருகைக்குப் பின் இங்கு சில இளைஞர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். தலைநகரிலும் வட மாநிலங்களிலும் ‘நாம் தமிழர்’ இயக்கம் இயங்கத்தொடங்கி இருக்கிறது. மேலும் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் தமிழ்த் தேசிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அறிகிறேன்.அரிமாவளவனின் முயற்சியில் மலேசிய தமிழர் களமும் தொடங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழ்த் தேசியத்தின் நிலை அல்லது தேவை குறித்து ஆராயும் முன்னர் கடந்த ஒரு நூற்றாண்டாக இங்கு புழக்கத்தில் இருக்கும் சமுதாய கட்டமைப்புகள், பிரிவுகள் குறித்த புரிதல் அவசியம். இதன் வாயிலாக மலேசியத் தமிழர் வாழ்வியலில்  தமிழ்த் தேசியத்தின் நிலையை நேரடி அணுகுமுறையின் வழியும் ,ஒப்பீட்டு அணுகுமுறையின் வழியும் ஆராய இடமுண்டு என்பது தெளிவாகிறது

மலேசியாவில் தமிழ் தேசியம் குறித்த பார்வை மிகவும் தட்டையானதாகவும் நம்மை அறியாமலேயே இரட்டை அளவுகோல் கொண்டதாகவும் உள்ளது. அதோடு தமிழ்த் தேசியம் குறித்த எந்த தெளிவான புரிதலும் இன்றி உணர்ச்சிக் கூச்சலிடும் கூட்டமும் பெருகிவருகிறது. ஆகவே, மலேசியாவில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கு முன் நாம் பல விடயங்களில் தெளிவு பெற்றவர்களாக இருப்பது அவசியம். மலேசியாவின் ஒரு நூற்றாண்டு வரலாற்று தெளிவும் இதுநாள்வரை இங்கு இந்திய சமூகம் எதிர்நோக்கிய பிரச்சனைகளும் அரசியல் உரிமை போராட்டங்கள் பற்றிய தெளிவும் வேண்டும். இவற்றோடு சமகால மலேசிய இந்தியர்களின் அரசியல் சமூக போராட்டங்களையும் உட்படுத்தப்படுத்தி சிந்திக்கவேண்டியது அவசியம்.

மலேசிய அரசியலில் இந்திய வழித்தோன்றல்களின் அதிகாரத்துவ அரசியல் அடையாளம் ‘இந்தியர்’ என்பதேயாகும். முன்பு இலங்கைத் தமிழர்கள் தம்மை ‘இலங்கைத் தமிழர்கள்’ என்று கொண்டிருந்த அடையாளம் 1980-ல் நீக்கப்பட்டது.  தமிழர், தெலுங்கர், மலையாளி போன்ற தென்னாட்டவரையும் சிறுபான்மை வடநாட்டவரையும் உட்படுத்தியதே இந்தியர் என்ற அடையாளம். மலேசிய இந்தியர்களின் உட்பிரிவாக தமிழர்கள் 85.1%, பஞ்சாபியர் 3.5%, மலையாளிகள் 3.2%, தெலுங்கர்கள் 2.4%, சிங்களர்கள் 1.9%  மற்றவர்கள் 3.9% என்ற விழுக்காட்டுப்படி வாழ்கின்றனர்.  (1981 கணக்கெடுப்பு) இந்திய வம்சாவளி மக்கள் மொழி, இனம், சமயம் ஆகிய அடிப்படைகளில் பிளவுபட்டவர்களாகவே வாழ்கிறார்கள். மலேசியர்களில் சிறுபான்மை இனமாக வாழும் இந்திய வம்சாவளி மக்கள் தங்களுக்குள் மிக நெகிழ்வான இணைப்பைக் கொண்டிருந்தாலும் பெரும்பான்மை தமிழர்களின் தாய்மொழியான தமிழையே தொடர்புமொழியாகப் பயன்படுத்திவருகின்றனர். அதிகார ஆவணங்களில் இந்தியர் என்று குறிக்கப்படும் எல்லாருமே ஓரளவேனும் தமிழ் பேசத் தெரிந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மலேசிய இந்தியர்களின் அதிகாரத்துவ அடையாளம் ‘இந்தியர்’ என்றிருந்தாலும் பேச்சு வழக்கில் ‘தமிழர்கள்’ என்றே உரைக்கப்படுகிறது.

மலேசியாவில் தமிழ் மொழி அரசு அதிகார மொழிகளில் ஒன்றாக நிலைப்பெற்று உள்ளது. தமிழ்க் கல்வி அரசு அனுமதியுடன் இயங்குகிறது. அதே நேரம் மலையாளம் தெலுங்கு போன்ற தாய்மொழிகளையும் வீட்டு மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். (சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் தெலுங்கு ஆரம்பள்ளிகள் இயங்கின. ஆனால் மலேசிய கல்விச்சூழலின் மாற்றத்தாலும் தெலுங்கு மக்கள் தங்கள் தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காததனாலும் அவை மூடப்பட்டன)   ஆகவே பிறப்புப்பத்திரம், அடையாள அட்டை போன்ற அதிகாரத்துவ ஆவணங்களில் இனம் ( BANGSA / RACE) என்ற பகுதியில் ‘இந்தியர்’ என்று குறிப்பிடுவதே வழக்கமாக இருந்துவருகிறது. முன்பு இனம் (BANGSA / KAUM) என்று குறிக்கப்பட்ட பிறப்புப்பதிவு இப்போது வழித்தோன்றல் (KETURUNAN) என்று மாற்றப்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். இனம் என்பதும் வழித்தோன்றல் என்பதும் வேறு வேறு பொருள் தருபவை. இனம் என்பது ஒரு இனக்குழுவாகவும் வழித்தோன்றல் என்பது இனக்குழுக்களின் தோற்றுவாயையும் குறிக்கின்றது. ஆகவே இங்கு வாழும் தமிழ், தெலுங்கு, மலையாள வட இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய வழித்தோன்றல்கள் என்ற ஒரு அடையாளத்தையே கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகளும் இந்தியப் பிரநிதித்துவ கட்சிகளாகவே செயல்படுகின்றன. அரசாங்க மானியங்களும் பிற ஒதுக்கீடுகளும் இந்தியர் என்ற அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது.

தமிழர் பெரும்பான்மையினராக இருந்த போதும் தமிழர்களுக்கு என்று தனி அரசியல் கட்சிகளோ தனி அரசாங்க ஒதுக்கீடுகளோ ஒதுக்கப்படுவதில்லை. இந்திய அரசியல் கட்சிகளாக  இருந்தாலும் அதன் தலைவர்கள் தமிழர்களாகவே இருப்பது (பெரும்பான்மை தமிழர்களின் ஆதரவைப் பெரும் பொருட்டு) ஒரு மரபாக உள்ளது.   மலையாளிகள், தெலுங்கர்கள் ஆகிய இனமக்கள் அவ்வப்போது தங்கள் சங்க திட்டங்களுக்காக அரசாங்க மானியம் பெறுவது உண்டு என்றாலும் (குறிப்பாக நஜீப் பிரதமர் ஆன பின்பு) அது பிற அரசு சாரா இயக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போன்ற ஒன்றாகவே அமைகின்றது. உதாரணத்திற்கு ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு அரசாங்கம் சில கோடி வெள்ளிகளை மானியமாக வழங்கியது. அதேப் போல் தெலுங்கு சங்கம் தொடங்கி உள்ள கல்வி நிதி திட்டத்திற்கு அண்மையில் ஐந்து கோடிகளைக் கொடுத்துள்ளது. மற்றபடி உயர்கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் போன்ற சலுகைகளில் 10% க்கும் குறைவான அளவிலேயே இந்தியர்கள் அடக்கப்பட்டுவிடுகின்றனர்.  ஆகவே மலேசிய இந்தியர்கள் என்ற ஒரு  ‘அடையாள குழு இனத்தையே’ மலேசிய அரசியல் அதிகாரப்படுத்துகிறது.

ஆயினும், நாடு சுதந்திரம் பெற்ற போது இந்தியர் என்ற வட்டத்துக்குள் இயங்கிய சீக்கியர்களும் இந்திய முஸ்லீம்களும் மெல்ல மெல்ல தங்களைத் தனித்துக் கொண்டுள்ளது மலேசிய இந்தியர் அரசியலில் ஒரு குறிப்பிடதக்க மாற்றம் ஆகும். சீக்கியர்கள் இன்று தனி இனமாக அடையாளம் பெரும் வேளையில் இந்திய முஸ்லீம்கள் தங்களை மலாய் இனத்தவரோடு கலந்துவிடுவதிலும் பூமிபுத்ரா தகுதி பெருவதிலும் குறியாய் உள்ளனர். முன்பு ம.இ.கா வில் இணைந்து பணியாற்றிய இந்திய முஸ்லீம்கள் இப்போது KIMMA என்னும் அரசியல் கட்சியை தொடங்கி அரசாங்க ஆதரவு கட்சியாக நடத்திவருகின்றனர். அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ சைட் இப்ராஹிம் பின் காதிர் மேலவை உறுப்பினராக தேர்வு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் மலேசிய இந்தியர்களின் அரசியல் தாய்கட்சியாக கருதப்படும் ம.இ.காவில் முஸ்லீம் தமிழர்களும், சீக்கியர்களும் இன்றும் தொடர்ந்து அங்கத்துவமும் பொறுப்புகளும் வகிக்கவே செய்கின்றனர்.

மலேசிய இந்தியர்கள் கோயில்கள் கட்டுவதையும் இந்து சமயத்தை இந்நாட்டில் நிலை நாட்டுவதையும் தங்கள் உரிமையாக கருத்துபவர்கள். தொடர்ந்து வளர்ந்துவரும் இஸ்லாமியமயமாக்களும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான மதமாற்றுச் சூழ்ச்சிகளும் மலேசிய இந்துக்களிடையே பதற்றத்தை உருவாக்கி தங்கள் மத அடையாளத்தை வலுப்படுத்திக் கொள்ள உந்துகிறது. உலகின் மிகப்பெரிய இந்து தெய்வ சிலைகளும், உயராமான கோபுரம் கொண்ட கோயில்களும், பல கோடி வெள்ளி செலவில் ஒவ்வொரு ஆண்டும் மலேசிய இந்தியர்களால் கட்டப்படுகின்றன. நாத்திகவாதத்தையோ சமய மறுப்பையோ அதிக பெரும்பான்மை மலேசிய இந்தியர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை இதன்வழி அறியலாம்.

அரசாங்க பொதுவிடுமுறைகள் தைப்பூசம், தீபாவளிப்பண்டிகை ஆகிய இரு தினங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதால் மதச்சார்புஅரசாங்கத் தரப்பும் மலேசிய இந்தியர்களின் பொது அடையாளமாக மதத்தையே முன்னிருத்துவது தெளிவு. மேலும் மலேசியாவில் இந்தியர்களை ஒன்றுதிரட்டக்கூடிய ஆற்றல் இனத்தை விட மதத்துக்குதான் உள்ளது என்பது ஹிண்ராஃப் (HINDRAF) போராட்ட காலத்தில் (2007) தெளிவானது. தங்கள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க ‘இந்தியர் உரிமை’ என்று அடையாளப்படுத்தாமல் ‘இந்து உரிமை’ என்று அடையாளப்படுத்தியவர்கள் அவர்கள். ஆகவே தமிழினம் உட்பட வேறெந்த அடையாளத்துக்கும் இல்லாத வலிமையை மலேசியாவில் இந்து சமயம் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

மலேசியாவில் திராவிட கழகங்கள் மலேசிய இந்தியர்களின் அரசியல் தலைவிதியை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவை அல்ல. அவை சமய, பண்பாட்டு சீர்திருத்த இயக்கமாக மட்டுமே தங்கள் பணிகளைச் செய்கின்றன. திராவிடர் கழகங்கள் பெரியார் கொள்கைகளாக பகுத்தறிவுவாதம், சாதி எதிர்ப்பு, சமுதாய சீர்திருத்தம் போன்ற விடயங்களை அடிப்படையில் பேசினாலும் அவை மலேசிய மக்களின் வாழ்வியலோடு பொருந்தமுடியாமலும், நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் நீர்த்துப் போய்விட்டன. மேலும் திராவிட கழகங்கள் திராவிட இனம் என்று குறிப்பிட்டாலும் ‘திராவிட இனம்’ என்பவர் யாவர் என்கிற குழப்பம் எல்லாருக்கும் உண்டு. தெலுங்கர்களும் மலையாளிகளும் ஒருநாளும் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்ள சம்மதியார்கள். ஆகவே தமிழர்களே திராவிடர் என்கிற வேறு பெயரில் அழைக்கப்படுவதாக நாம் பொருள் கொள்ளமுடியும். ஆயினும் சமூக அரசியல் தலைவர்கள், மேடைப் பேச்சுக்கு பெரியாரையும் அவரின் பகுத்தறிவு கருத்துக்கள் சிலவற்றையும் சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்றனர். தங்கள் மேல் சமூதாய சீர்திருத்தவாதி என்ற பிம்பம் விழும் பொருட்டு அவர்கள் அவ்வாறு செயல்படுவது உண்டு.

பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை நடைமுறைப் படுத்தும் சூழலில் மலேசியர்கள் இல்லை என்பதே உண்மை. பெரியாரின் மலேசிய வருகையின் போதுகூட அவர் மதத்தொடர்பான எதிர்கருத்துகருத்துகளையோ நாத்திக கருத்துகளையோ இங்கு பேசவில்லை என்றே அன்றைய குறிப்புகள் உணர்த்துகின்றன. (கவி: மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்) மலேசிய திராவிட கழக அமைப்பாளர்களும் இவ்வுண்மையை உணர்ந்து திராவிட கழக செயல்பாடுகளை ‘யார் மனமும் கோணாதவாறு’ நடத்தப் பழகிக் கொண்டுவிட்டனர். சாதிய ஒழிப்பில் மட்டும் ஓரளவு ஈடுபாடு கொண்டோர் இங்கு உள்ளனர். ஆகவே சாதிய கொடுமைகள் குறித்து கடந்த ஒரு நூற்றாண்டாக மீண்டும் மீண்டும் எழுதியும் பேசியும் வந்ததன் பயனாக, பெருவாரி பாமர மக்கள் சற்றே விழிப்படைந்து வெளிப்படையாக சாதியம் பேசுவது நவீன வாழ்வியலுக்கு அழகல்ல என்ற புரிதலோடு சாதியை மறைவாக பேசும் ‘நாகரீக’ வழக்கம் கொண்டுள்ளனர். திருமணங்களிலும் கட்சி தேர்தல்களிலும் மலேசிய இந்தியர்களின் சாதிப்பிடிப்பை நன்கு அறியலாம். ஆயினும் கடந்த இருபது ஆண்டுகளாக சில செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் படித்தறிந்தவர்களும் சாதிச் சங்கங்களை தமிழர் பண்பாட்டு உரிமை என்ற நிலைப்பாட்டுடன் நிர்வகித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

பெரியாரின் பகுத்தறிவுவாத கருத்துகள் மலேசியாவில் வளரவில்லை என்பது உண்மையானாலும் தமிழ் மொழி இந்நாட்டில் வேர் ஊன்றி வளர அவரின் செயல்பாடுகளும் மூல வித்தாக இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரியார் இரண்டு முறை மலேசியாவிற்கு (அப்போது மலாயா) வந்து சென்றுள்ளார். முதல் முறை 1929 லும் பிறகு 1954 திலும் அவர் வருகை தந்துள்ளார். அவரின் முதல் வருகையின் விளைவாக மலேசியாவில் பலர் சுயமரியாதை சிந்தனையை பெற்றனர் என்பதோடு தமிழ் மொழி மீதான பற்றையும் வளர்த்துக் கொண்டனர். நகரங்களிலும் தோட்டபுறங்களிலும் நூல் நிலையங்கள் பல தொடங்கப்பட்டதும் சுயமரியாதை கருத்துக்களின் தாக்கதின் வழிதான் என்பதை மறுக்க முடியாது.பெரியார் தமிழ் மொழியை சிறுமை படுத்தினார் என்ற வாதமெல்லாம் அன்று பேசப்படாத நிலையில் பலரும் தமிழ்ப்படிக்க பெரியாரும் ஒரு உந்துதலாக இருந்ததே வரலாற்று உண்மை. மலாயாவில் தமிழ் மொழி பற்றையும் இன உணர்வையும் அன்றைய பெரியார் தொண்டர்கள் ஒன்றாகவே கொண்டு சென்றனர். பெரியார் மலாயாவுக்கு வந்த போது இங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பிலும் அவர் ஆற்றிய உரைகளிலும் தமிழின உணர்வே மேலிட்டிருப்பதை அறிய முடிகிறது ஆயினும் இங்கு இனம் மதம் என்ற வேற்றுமை பாராமல் அவருக்கு சிறப்பு செய்துள்ளனர்.

மேலும் பெரியாரின் தாக்கத்தில் சமுதாய தொண்டாற்றுவதில் முனைப்பு காட்டிய கோ.சாரங்கபாணி, ச. அன்பானந்தன் போன்ற பலரும் தமிழ் மொழியை இந்நாடில் நிலைபெறச் செய்ய பாடாற்றினார்கள். அக்கால கட்டத்தில் தமிழுக்காக மலேசியாவில் உழைத்த பெரியவர்கள் எல்லாருமே பெரியார் தொண்டர்களாகவே தங்களை அறிவித்துக் கொண்டார்கள். ஆகவே மலேசியாவில் தமிழர்களுக்கு பெரியாரால் கிடைத்த மிகப்பெரிய நன்மை தமிழ் மொழியை தக்க இடத்தில் வைக்கமுடிந்ததாகும். பெரியாரின் தாக்கத்தால் இனமான உணர்ச்சி பெற்ற தமிழர்கள் கோ.சாவின் பின் ஒன்றுகூடி நின்றதனாலேயே மலாயா பல்கலைக்கழகத்தில் இன்றும் தமிழ் நிலைத்திருக்கிறது என்கிற வரலாற்று உண்மையை மலேசியாவில் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் உணரவேண்டும்.

மலேசிய வரலாற்றில் இந்தியர்கள் என்ற அடையாளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானிய ஆதிக்க கொடுமைகள், சயாம் மரண ரயில் நிர்மாணிப்பு, மே இனக்கலவரம், கம்போங் மேடான் சம்பவம் போன்ற வரலாற்று இடர்கள் அனைத்திலும் மலேசிய இந்தியர்கள் என்ற பொது இனமாகவே நமக்கு பாதிப்புகள் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஹின்ராஃப் போராட்டம் மட்டுமே இந்து என்ற புதிய அடையாளத்தில் செயல்பட்டது. வாரலாற்று காலந்தொட்டே அதிகார சக்திகள் மலேசிய இந்தியர்களை தமிழர், தெலுங்கர், மலையாளி என்று இன அடிப்படையில் வைத்து விணையாற்றியது இல்லை. தோட்டப்புறங்களில் சில நிர்வாகங்களிடம் தமிழர்களுக்கு எதிரான மலையாளிகள், யாழ்ப்பாணத்தமிழர்களின் இன ஆதிக்கப்போக்கு இருந்தது உண்மையென்றாலும் அது அரசியல் வடிவங்கொண்டதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே மலேசிய இந்தியர் அரசியலில் தமிழ்த்தேசியத்தின் இடம் என்னவாக இருக்கும் என்று ஆய்வது அவசியம். நேரடி அணுகுமுறையின் வழி சிந்தித்தால், அடிப்படையிலேயே, தமிழ்த் தேசியம் என்ற இயக்கம் நம் நாட்டு தமிழர் வாழ்வியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் முதன்மை கோரிக்கையே திராவிட அரசியலில் இருந்து விடுபடுதல் என்பதுதான். நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வில் தனி அரசியல் களம் காண்பதே அவர்களின் நோக்கம். காரணம் அவர்கள் திராவிட சித்தாந்தங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியலால் பாதிப்புற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அதன் அடிப்படியிலேயே தமிழ் நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்னும் இயக்கமும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் மலேசியாவில் நாம் அரசியல் அதிகாரத்தால் எந்நாளும் திராவிடர் என்று குறிப்பிடப்பட்டதே இல்லை. அதை நாமேதான் பேச்சு வழக்கில் வலிந்து கூறிக்கொள்கிறோம். உண்மையில் அப்படி ஒரு இனக்குழுவோ மக்களோ இங்கு இல்லை. ஒரு இயக்கத்தின் பெயர் என்ற அளவிலேயே ‘திராவிடத்தை’ இங்கு ஏற்றுக் கொண்டுள்ளோம். இங்கு வாழ்பவர்கள் இந்திய வம்சாவளி மக்களான தமிழர், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்றோர்தான். எல்லாருக்கும் சொந்த தாய்மொழி உண்டென்றாலும் பெரும்பான்மை தமிழ்மொழியே ஊடக மொழியாக உள்ளது என்பதே எதார்த்த உண்மை. இங்கு நாம் இந்தியர்கள் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் ஆளப்பட்டுவருகிறோம். இந்து சமயம் மலேசிய இந்தியர்களின் பேராதரவில் இயங்கும் சமயமாகும். இங்கு ஆரியர்-பார்ப்பனர் போன்ற வாதங்களுக்கும் முக்கியத்துவம் இல்லை. மேலும் ஒரு காலத்தில் மூட நம்பிக்கைகள் என்று பெரியார் சாடிய சடங்குகளும் வழக்கங்களும் இன்று மலேசிய இந்தியர்களால் அறிவியல் பின்புலம் கற்பிக்கப்பட்டு சந்தைப்படுத்தபடுகின்றன. இந்து சமய சடங்கு சம்பிரதாயங்கள் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டவை என்று பலரும் உறுதியாக நம்புவதோடு அதில் பெருமையும் கொள்கின்றனர். மலேசிய தமிழர்கள் திராவிட அரசியலாலோ திராவிட சீர்திருத்த கருத்துகளாலோ கட்டமைக்கப்பட்டவர்கள் அல்ல என்பதே உண்மை. அவர்கள் புராதன மதநம்பிக்கைகளாலும், பண்பாட்டு கூறுகளாலும் தங்களை மென்மேலும் நெருக்கிக் கொள்ளும் மக்களாகவே இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே மலேசியாவில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

மலேசியத் தமிழர்கள் வீழ்ந்ததாக வாதிட்டாலும் அது ‘இந்தியத்தாலோ’ ‘இந்துத்துத்துவத்தாலோ’ வாகத்தான் இருக்க முடியும். காரணம் அவைதான் மலேசியத் தமிழர்களை வழிநடத்தி வருகின்றன.    இங்கு இயங்கும் அரசியல் கட்சிகள் இந்தியர் அரசியல் கட்சிகளாகும். நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்மை ஆட்சி செய்பவர்கள் மலாய், சீனர் போன்ற பிற இனத்தார்தான். ஆகவே திராவிட அரசியலில் இருந்து விடுபடுதல் என்ற தமிழ்த் தேசியத்தின் முதன்மை கோரிக்கை இங்கு பொருளற்றதாகி விடுகின்றது.

அடுத்த நிலையில், தமிழ் நாட்டு பூர்வகுடிகளான தமிழர்களின் மண்ணையும் உரிமைகளையும் பிற இன வந்தேரிகள் அபகரித்துக் கொண்டார்கள் என்ற சீற்றம் தமிழ்த்தேசியம் அமைய இன்னொரு காரணம். அங்கு தமிழ்த்தேசியம் தொல்குடிகளின் உரிமைப் போராட்டமாகும். தமிழர்களை, பிழைக்க வந்த கூட்டம் சுரண்டி வாழ்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது என்னும் பொருளாதார விழிப்புணர்வின் தீவிர வடிவமாகவும் நாம் தமிழ்த் தேசியத்தை கொள்ளலாம். அது தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டம். ஆகவே மலேசிய சூழலில் மேற்கண்ட தேவைகள் எதுவுமே பொருந்திவருவதாக இல்லை. இங்கு நம்மையே வந்தேறிகள் என்று மலாய்காரர்கள் தூற்றிக் கொண்டிருக்கையில் நாம் எந்த முகாந்திரத்தில் தமிழ் தேசியத்தை ஆதரித்து பேசுகிறோம் என்பது சிந்தனைக்குறியது. மேலும் வந்தேறி சிறுபான்மையை ஒரு தேசிய இனம் ஓரங்கட்டும் செயலை நாம் தமிழ்த் தேசியத்தின் ஊடாக ஆதரிக்க தலைப்படுகிறோம் என்றால், நாம் நம்மை அறியாமலேயே இந்நாட்டில் இப்ராஹிம் அலி (PERKASA) போன்ற இனவாதிகளின் செயலுக்கும் ISMA போன்ற இனவாத இயக்கங்களுக்கும் ஆதரவு கொடுகிறோம் என்றே பொருளாகிறது. பெர்காசா நமக்கு செய்ய நினைக்கும் அநீதிகளை நாம் இனவாதம் என்று பொங்கி எழும் அதே நேரம் தமிழ் நாட்டில் இருந்து சீமானோ, கரிமாவளவனோ வந்திருந்து ‘வடுகன் அயோக்கியன்’ என்று பேசும் போது நாம் கைத்தட்டி வரவேற்கிறோம்.

அதேப் போல் மலேசியாவில் தெலுங்கு சங்கமும், மலையாளிகள் சங்கமும் இரண்டு தலைமுறைகளாக மறக்கப்பட்டுவிட்ட தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்க முயலும் செயல்களை சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் தமிழில் பேசுவதை விட தங்கள் தாய்மொழியில் பேசுவதை அதிகப்படுத்தும் போது அது தமிழுக்கு வந்த அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. தெலுங்கு மொழி ஆரம்ப பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நஜீப்பிடம் மனு போட்டதும் பல தமிழ் ஆர்வாளர்களும் தொண்டர்களும் சோர்வுற்றதைக் கண்டேன். தமிழ்த் தேசிய கண்ணோட்டத்தில் இதை விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இதே நிலை தமிழர்க்கு மொரிசியஸ், மியன்மார், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டபோது, அதாவது அவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை மீட்டெடுக்க முயன்றபோது நமது செயல் எப்படி இருந்தது என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்பது நல்லது. சிறுபான்மையினரின் தாய்மொழிக் கல்வி என்பது இந்நாட்டில் அனைத்து இனங்களுக்கும் சட்டம் வழங்கும் உரிமையாகும். ஆகவே எந்த இனமாக இருந்தாலும் அது தன் தாய்மொழிக் கல்வியை வளர்க்க முயலும் போது அதை கேள்வி கேட்பது ஏற்புடையது அல்ல.

தற்போதைய நிலையில் மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க் கல்வியும் முழு அதிகாரத்தோடு இயங்குகின்றன என்றாலும், அந்த வாய்ப்புகளை எத்தனைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஆய்வுக்கு உட்பட்டது. 2000 ஆண்டு கணக்கெடுப்புபடி மலேசிய தமிழர்களில் சுமார் 48.7% பேர்தான் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இப்போது இந்த விழுக்காடு மேலும் குறையக்கூடும்.  ‘தமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வு” என்று இயக்கம் நடத்தி நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர் பதிவை அதிகரிக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றோம். இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுக்கவே அலட்சியம் காட்டுகின்றனர். பெற்றோர்களே இவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது அவலம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

SPM, STPM போன்ற தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்வோர் சில ஆயிரம் மாணவர்கள்தான். நாட்டில் தமிழ் நாளிதழ்கள் பல வெளிவந்தாலும் அவற்றை வாங்கி வாசிப்பவர்களின் எண்ணிக்கை 40% பேர்தான். மலேசியாவில் வெளியிடப்படும் தமிழ் நூல்களை வாங்கி ஆதரவு தருவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுவதில்லை. வீட்டில் தமிழ்ப்பேசுவதால் தங்கள் பிள்ளைகளின் பிற மொழி அறிவு தடைபடும் என்று காரணம் கூறி பிள்ளைகளிடம் மலாயிலோ ஆங்கிலத்திலோ பேசும் தமிழர்கள் செய்யாத பாதகத்தையா பிற இனத்தார் தமிழுக்குச் செய்துவிடப் போகிறார்கள்?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரைப்படங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் மட்டுமே தமிழை நுகரும் தமிழர்களே இங்கு அதிகம். ஆகவே பிற சிறுப்பான்மையினரின் தாய்மொழி வளர்ச்சி தமிழ்மொழிக்கு அச்சுறுத்தல் என்பது நமது இயலாமைகளை மூடிமறைக்கும் மாயையாகும். தமிழுக்கு இன்று இந்நாட்டில் நம் மூதாதையர் போராடி பெற்றிருக்கும் வாய்ப்புகளைத் தமிழர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். தமிழின் இடம் அசைக்க முடியாததாக இருக்கும்.

அடுத்து, இலங்கைப் இனப்படுகொலைகளுக்கு எதிராக  மலேசியத் தமிழர்களாகிய நாம் வெகு நெடுங்காலமாகவே எதிர்ப்புகளை காட்டியே வந்துள்ளோம். அவ்வப்போது பல வழிகளில் ஈழ மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வந்துள்ளோம் என்பதும் உண்மையே. தமிழினம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவ வேண்டியது நமது தார்மீகம் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். ஆகவே தமிழீல மக்களுக்கான ஆதரவு நமக்கு தமிழ்த் தேசிய முழக்கத்தின் வழிதான் வரவேண்டும் என்ற சூழல் இல்லை.

இலங்கையில் இருந்து இங்கு அகதிகளாக வருவோரும் தமிழ்த் தேசிய முழக்கங்களை நம்மிடம் வைப்பதில்லை. அவர்கள் தங்கள் மண்சார்ந்த போராட்டத்துக்கு மொழி இன அடிப்படையில் ஆதரவுகேட்டு நிற்பதே இயல்பு. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் பேச்சாளர்கள்தான் இங்குள்ள பிரபாகரன் ஆதரவாளர்கள், ஈழ மக்களுக்கு உதவும் நன்நெஞ்சர்கள், மனிதாபிமான தமிழர்கள் அனைவரையும் தங்கள் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமாக திரட்டும் முயற்சிகளைச் செய்கின்றார்கள். தமிழ்த் தேசியத்தின் வழி ஈழமக்களுக்கு நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மலேசிய தமிழர்களும் குறிப்பாக இளைஞர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். உதாரணத்திற்கு சீமான்மலேசியாவில ஈழ மக்களின் துயர்களையும் ராஜபஷேவின் கொடுமைகளையும் உணர்ச்சியோடு பேசி ஆதரவு பெற்று இறுதியில் அவரது ‘நாம் தமிழர்’ இயக்கம் உதயமாக வழிதேடிக் கொண்டதைக் குறிப்பிடலாம். அண்மையில் பினாங்கில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் வை.கோவும் இதே பாணியில்தான் பேசினார். அவர்களின் பார்வையில் மலேசிய தமிழர்கள் மிக செழிப்பாக வாழ்வதாகவும் அவர்களின் ஆதரவை தங்கள் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசியல் சூழலை மூலதனமாக ஆக்குவதாகவுமே இருக்கிறது.

ஆக பலவகையிலும் நமக்கு (மலேசியாவில்) தமிழ்த் தேசியம் நேரடி தொடர்பற்றதாகவே உள்ளது. ஆகவே மலேசியாவில் தமிழ் தேசியம் பேசுவோர் தமிழ் நாட்டின் அதே அச்சில் நின்று பேசுவது பொருளற்ற செயல். அங்கு அதற்கு  தேவை இருக்கும் பட்சத்தில் அதற்காக பலர் களம் இறங்குவது ஒப்புக்கொள்ளக் கூடியதே. ஆனால் நாம் தமிழ் நாட்டு பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு, அதை அப்படியே இங்கே ஒப்பித்துக் கொண்டு இருப்பது அறிவுடமை அன்று.

ஆகவே இன்று தமிழக மின்னூடகங்களின் வழி பரப்பப்படும் தமிழ்த்தேசியம் என்னும் அரசியல் அச்சு நேரடி மலேசியச் சூழலில் பொருந்தக்கூடியதாக இல்லை. ஆயினும் பல்வேறு சாக்குபோக்குக்களைக் கூறி அவற்றை இங்கு பொருத்திவிட சிலர் முயல்கின்றனர். தமிழ்த் தேசியத்தை முன்னிருத்தி இங்கு இயங்குதல் என்பது இப்போதைக்கு ‘இல்லாத எதிரியோடு போரிடும்’ குழப்பமான நிலைக்கு நம்மை கொண்டு சென்று விடும். காரணம் மலேசியத் தமிழர்கள் திராவிட அரசியலால் தோற்றார்கள் என்ற ஒரு நிலை அறவே பொருந்தாத நிலையில் திராவிடத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியமும் பொருத்தமற்ற ஆயுதமாகவே இருக்கும். புலி வேட்டைக்கு தயார் செய்யப்பட்ட ஆயுதம் திமிங்கில வேட்டைக்குப் பொருந்தாது. தெளிவாகச் சொன்னால் இங்கு திராவிட அரசியல் இல்லை. ஆகவே திராவிடத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியமும் தேவை இல்லை.

அடுத்து மலேசியாவில் தமிழ்த் தேசிய அரசியல் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது உறுதியானாலும் அது தமிழ்மக்களுக்கு சொல்லவரும் அடிப்படை செய்தியை புறக்கணிக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம் தமிழ்த் தேசியம் ‘தமிழர்கள்’ என்ற ஒற்றைச் சொல்லின் வழி உலகில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களோடு உரையாட முற்படும் தகவல்களை நாம் நமது சூழலுக்கு ஏற்ப கவனப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவே உணர்கிறேன். மலேசியாவில் சிலர் தமிழ்த்தேசியத்தை ஆதரித்து குரல் எழுப்பிக் கொண்டிருப்பதன் உளவியல் காரணம் இவ்வகை ஒப்பீட்டின் அடிப்படையிலேயே அமைவதாக கருதுகிறேன். அதாவது தமிழ் நாட்டிலும் தமிழர்கள் தெலுங்கர், மலையாளிகளுடன் வாழ்கிறார்கள். மலேசியாவிலும் தமிழர்கள் தெலுங்கர் மலையாளிகளுடன்தான் வாழ்கிறார்கள். ஆகவே அங்கு உள்ள நிலை இங்கும் நமக்கு வரும் என்ற பதற்றமான ஒப்பீடே அது.  ஆகவே தமிழ்த் தேசியத்தை ஒப்பீட்டு முறையில் நம் சூழலோடு பொருத்தி ஆராய்வது நன்மை பயக்கும்
.
இந்தியர்களும் திராவிடமும்

தமிழகத்தில் திராவிடர் என்று குறிக்கப்படும் மரபினத்திற்குள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் பேசும் மக்கள் அடக்கப்படுகிறார்கள். மலேசியாவில் இதே மொழி மக்கள் இந்தியர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.  அங்கு திராவிட அரசியல் கட்சிகளின் தலைமையில் இவர்கள் ஆளப்படுகிறார்கள். இங்கு இந்திய அரசியல் கட்சிகளின் தலைமையில் இவர்கள் ஆளப்படுகிறார்கள். ஆகவே அங்கு திராவிட அரசியலின் இடத்தை இங்கு இந்திய அரசியல் பிடித்திருக்கிறது. அங்கு திராவிடம்; இங்கு இந்தியர். இந்த அடிப்படை ஒற்றுமைகளைக் கொண்டு நாம் தமிழ்த் தேசியம் சொல்லும் இன அரசியலை ஓரளவு ஒப்பீட்டு அடிப்படையில் ஆராய்ந்து பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

கடந்த 7.12.2014 அன்று  நடந்து முடிந்த மலேசிய தெலுங்கு சங்க ஆண்டுக் கூட்டம் நமக்கு சில புதிய சிந்தனைகளையும் மலேசிய இந்தியர் அரசியலின் எதிர்காலம் குறித்த வினாக்களையும் முன்வைக்கின்றது. தமிழ் நாட்டில் திராவிட கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு தமிழ்த் தேசியம் தமிழர்களை வெளியேற்றும் பணியைச் செய்கிறது. மலேசியாவில் தெலுங்கு சங்கம் அதே வேலையை அதாவது இந்தியர் அரசியல் கூட்டமைப்பில் இருந்து தெலுங்கு மக்களை வெளியேற்றும் திட்டத்தில் இறங்கி உள்ளது தெளிவாகிறது. இதன் அடிப்படை வேலையே மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர். அட்சயகுமார் அரசாங்கத்திடம் முன்வைத்த தெலுங்கு மக்களின் தனி அடையாள கோரிக்கையாகும். பிறப்பு பத்திரத்தில் இனம் என்னும் விடயத்தில் இதுவரை பொதுவாக ‘இந்தியர்’ என்று குறிக்கப்படுவதை மாற்றி, ‘தெலுங்கு’ என்று குறிப்பிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தெலுங்கு என்பது ஒரு தனி இனமாகும். தெலுங்கு மக்களுக்கு தனி மொழியும் பண்பாடும் உண்டு என்று கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது (தினக்குரல் ப.1, மக்கள் ஓசை ப.16; 8.12.2014). இக்கூற்றுகளும் கோரிக்கைகளும் ஏற்புடையனவா என்பது சந்தேகத்திற்கு உரியன என்றாலும் நமது கவனம் அதுவல்ல. தங்கள் இன அடையாளங்கள் மறைந்து விடக் கூடாது என்கிற விழிப்பு உள்ள சிறுபான்மையினரிடம் உள்ள பதற்றமே டாக்டர் அட்ஷயகுமாரிடம் உள்ளது. ஆனால் அதை அவர் அரசியல் சட்டத்தின் வழி முன்னெடுக்க நினைப்பது ஆபத்தான பின்விளைவுகளையே மலேசிய இந்தியர் அரசியலில் ஏற்படுத்தும்.

உண்மையில் ஆழ்ந்து நோக்கினால் டாக்டர் அட்சயகுமார் பேசுவது மலேசிய சூழலுக்கான ‘தெலுங்கு தேசியமாகும்’. அதாவது தனி மொழியும் பண்பாடும் உள்ள ஒரு இனமான தெலுங்கர்கள் இனி இந்தியர் என்ற கூட்டு இன அடையாளத்தில் வாழ்வதை விரும்பவில்லை என்பதையே இது புலப்படுத்துகிறது. தங்களுகென்று ஒரு இன அடையாளம், கல்வி, வானொலி ஒலிபரப்பு என்னும் கோரிக்கைகள் ஒரு தேசிய இனமாக தங்களை இருத்திக் கொள்ளும் முயற்சியாகும். இதன் அடுத்த கட்டம் தனி தெலுங்கு அரசியல் கட்சி தொடங்குவதாக அமையக்கூடும்.

தமிழ் முஸ்லீம்கள் இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டாலும் அவர்கள் தமிழ் முஸ்லீம்கள் என்ற சிறப்பு அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் உண்மை. அவர்கள் இஸ்லாமிய/மலாய் கலப்புமணங்களின் வழி தங்களை பூமிபுத்ராக்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் மலேசிய வரலாற்றில் இருந்து இஸ்லாமிய தமிழர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பது உறுதி.மிகச் சிறுபான்மை சீக்கியர்கள் தனி இனமாக மலேசிய சட்டத்தில் இடம் பிடித்து விட்டனர் என்பது உண்மை என்றாலும் அவர்கள் தமிழர்தம் பண்பாட்டு வாழ்வியலோடு ஒட்டு அற்றவர்கள் என்பதையும் மறுக்க முடியாது.

சாபாய் நாடாளுமன்ற உறுப்பினர் காமாட்சி இது குறித்து கூறும் போது “ நாம் மலேசிய இனமாகும், இந்தியா என்பது ஒரு நாட்டின் பெயர். இனத்தின் பெயரல்ல. ஆகவே மலேசியர்களாகிய நாம் நமது இனமாக தமிழ், தெலுங்கு மலையாளி என்று குறிக்கப்படுவதே முறை, ஆகவே டாக்டர் அட்சயகுமாரின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன்.” ( ம.ஓசை ப. 6 10.12.2014) என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் மலேசியாவில் தங்களின் இனம் என்று தமிழரோ தெலுங்கரோ மலையாளியோ தனி அரசியல் அடையாத்தைக் கோருவது மீண்டும் நம்மை தூய இன கண்டுபிடிப்பு சிக்கலுக்குள் கொண்டு போய்விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. யார் உண்மை தமிழன்?, யார் உண்மை தெலுங்கன்? என்று தேடி அலையும் அவலம் வரக்கூடும். ஆகவே, தாய்மொழி வளர்ச்சியில் நாம் காட்டும் அக்கரையே இனத்துக்கு செய்யும் உண்மையான சேவையாகும்.  எனவே, திட்டமிட்டோ அல்லது அதிகார ஆசையினாலோ டாக்டர் அட்ஷய குமார் தனி தெலுங்கு அடையாளத்தை கோரினாலும் அதை நாம் முற்றாக மறுக்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். மலேசியாவில் தமிழன் என்றோ தெலுங்கன் என்றோ மலையாளி என்றோ தனித்து அரசியல் அடையாளம் தேடவேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதே உண்மை. இங்கு இந்திய இனங்களுக்குள் ஒதுகீட்டு பிரச்சனைகளோ, பின் தள்ளப்படும் நிலைகளோ இல்லை. ஆகவே டாக்டர் அட்ஷய குமார் போன்றவர்கள் தங்களை இயக்கத்தில் உறுதிபடுத்திக் கொள்ளவும் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கவும் இதுபோன்ற பரப்புரை உத்திகளை செய்வது இயல்பு என்றே கொள்ளமுடியும். ஆனால் இவ்வகை ஆபத்தான உத்திகளினால் இதுவரை நாட்டில் தமிழ்த் தொண்டு ஆற்றியும் தமிழ் மொழி நிலைக்கவும் பாடுபட்ட அனைத்து பிற இன மக்களின் மீதும் கலங்கம் படிவதையும் அவர்கள் அறிய வேண்டும். சுயநல அரசியலை மையமாக கொண்டு சிலர் எடுக்கும் நடவடிக்கைகளால் பெரும்பான்மை மக்களின் நலம் பாதிப்புறுவதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஆகவே, தமிழகத்தில் திராவிட அரசியல் ஆட்டம் கண்டிருப்பதுபோல் மலேசியாவில் இந்திய அரசியல் ஆட்டங்கான தொடங்கி உள்ளது தெளிவாகிறது. மலேசியாவில் தெலுங்கர்கள் தனி இனமாக அடையாளம் காண விரும்புவது இயல்பாகவே இந்தியர் என்ற ஒரே கூடாரத்தில் இருந்த தமிழர்களையும் மலையாளிகளையும் சிந்திக்கவைக்கும். எனவே தெலுங்கு சங்கத்தலைவர், இந்தியர் என்ற அடையாளத்தை மறுக்கத்துணிந்த நிகழ்வை காரணம் காட்டி தமிழ் நாட்டு பாணி தமிழ்த்தேசியம் பேசுவது இனக் கசப்பை மட்டுமே மேலோங்கச் செய்யமுடியும். நாம் இவ்விடயத்தில்தெலுங்கு சங்கத்தலைவர் டாக்டர் அட்ஷயகுமாரை மட்டுமே விமர்சனம் செய்வது முறையாகும். அவரின் பொறுப்பற்ற பேச்சையும் அதிகார சிந்தனையையும் விமர்சிக்கவேண்டியது நமது கடமையாகும். ஆனால் அவரை ஒரு இனத்தின் அடையாள குரலாக சித்தரிக்கவேண்டிய தேவை இல்லை. அதே போல் மலேசிய தெலுங்கு வழிதோன்றல்களையும் மொத்தமாக குற்றஞ்சாட்ட முடியாது. அதனால் யாருக்கும் பயன் ஒன்றும் இல்லை. ஊர் இரண்டுபட்ட பின்பு கொண்டாட்டம் போடப்போவது அரசியல்வாதிகள் மட்டுமே

ஆகவே மலேசியாவின் தமிழ்த் தேசியம் என்பது தமிழுக்கு தொண்டாற்றுபவர்கள் அனைவரையும் இனம் மொழி சாதி பேதம் பாராமல் ஏற்று செயல்படும் இயக்கமாக இருப்பதே சிறப்பு. தமிழை இந்நாட்டில் வாழவைக்க பங்காற்றும் எல்லாருமே தமிழ்த்தேசியத்தால் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். உதாரணத்திற்கு, தமிழ்ப் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் தெலுங்கு மலையாளிகளைவிட மலாய்/சீன பள்ளிக்கு தன் பிள்ளையை அனுப்பும் ஒரு தமிழன் எந்தவகையிலும் சிறந்தவனாகிவிட முடியாது. இங்கு இந்தியர் அடையாளத்திற்குள் தமிழர்களாக நாம் வாழ்ந்தாலும் நமது மொழி, பண்பாடு என்ற அடிப்படைகளில் நம்மோடு கைகோர்க்க முன்வரும் எல்லாரையும் ஏற்று செயல்படக்கூடிய தெளிவே மலேசிய தமிழ்த் தேசிய வடிவமாக இருக்க முடியும். தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது வரலாற்று அடிப்படையில் பிராமனர் முதல் வடுகர் வரை அனைத்து தரப்பு மக்களாலும் முன்னெடுக்கப்பட்டது என்பதே உண்மை என்பதால் அந்த மரபு காக்கப்படவேண்டும். தமிழ்நாட்டு தமிழ்த் தேசியத்துக்கு இங்கிருந்தபடி ஆவேசப்படும் அன்பர்கள் இனி தங்கள் சிந்தனையை மலேசியச்சூழலை குழைக்காத மலேசிய தமிழ்த்தேசியம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

மிக முக்கியமாக மலேசியத் தமிழர்களுக்குச் சேர வேண்டிய கவனமும் கலைத்துறை வாய்ப்புகளும் வருமானமும் தமிழ்நாட்டுச் சினிமா சூழல் அபகரிப்பதையும் அதற்கு ஆஸ்ட்ரோ போன்ற காப்பிரெட் நிறுவனங்கள் வழியமைப்பதையும் மலேசிய வாழ்வியலுக்கு ஒவ்வாத தமிழ்நாட்டு வெகுசன இதழ்கள் நமது பொது வாசிப்புக்குள் வருவதையும் வானொலிகளில் 80% தமிழக பாடல்கள் நிறைவதையும் நமது அன்றாட உபயோகத்திற்கான சோப்பிலிருந்து அணியும் நகைகள் வரை தமிழக இறக்குமதி பொருளாக இருக்க வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் உறுதி செய்வதையும் மீள் பரிசோதிக்க வேண்டியுள்ளது. கலை, கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் நாம் நமது பணத்தை தமிழகப் பொருள்களுக்குத் தாரைவார்க்கப் பழகியிருக்கிறோம். மலேசிய தமிழர்களின் உற்பத்திக்கும் அவர்களின் கலை சார்ந்த முயற்சிகளுக்கும் பாராமுகம் காட்டும் நாம் தமிழ்த் தேசியம் பேசுவது எந்த நியாயத்தில் என்பதே அவசியமான கேள்வி. மலேசிய தமிழர் பொருளாதாரம், கலை, இலக்கியம் , அரசியல் என நமது கவனம் இன்னும் கூர்மை பட வேண்டியுள்ளது. நாம் நம்மை தமிழ்நாட்டின் விழுதுகள் என கற்பனையில் இருக்கும் வரை வாழும் நாட்டின் சூழலுக்கு ஏற்ப ஆக்ககரமாகச் சிந்திக்கவோ செயல்படவோ முடியாது.

ஆகவே, வழக்கமான உணர்ச்சி மேலீட்டில் வடுகன் என்றோ வந்தேரிகள் என்றோ, திராவிட அரம்பர்கள் என்றோ கொந்தளிப்பது சரிவராது. இங்கு அந்தச் சூழல் இல்லை. இங்கு நமக்கு சவால்விடவும் போட்டியிடவும் பல கோணத்தில் போட்டியாளர்கள் உள்ளனர். மலாய் சீன இனத்தவரோடு 10 ஆண்டுகளுக்கு முன் குடியேறி  இன்று அடையாள அட்டையுடன் அலையும் வங்காளதேசியும் இந்தோனேசியர்களும் தமிழனுக்கு போட்டியாளர்கள் ஆவர். நாம் தமிழர் என்று கூறிக் கொண்டு கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடம் போர் புரியும் போலி மறம் இனி வேலைக்கு ஆகாது. இதே நாட்டில் இதே மண்ணில் எதிர்கால தமிழனின் நிலை எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியதே தமிழ்த் தேசியத்தின் பணியாக இருக்கும்.

முடிவு

ஆகவே, தமிழ்த் தேசியம் என்பது உலகத் தமிழர்களுக்கு எல்லாம் ஏற்ற ஒரே மேடையை அமைத்துக் கொடுக்கும் என்பது பொய்மைவாதமாகும். பல நாடுகளிலும் பிரிந்து வாழும் தமிழர்கள் அவர்களின் சூழலுக்கு ஏற்ற தமிழ்த் தேசியத்தை அவர்களே சுயமாக கண்டெடுக்க வேண்டும். ஆனால் அதை இன காழ்ப்பாகவோ பிறரை ஆதிக்கம் செய்யும் யந்திரமாகவோ மாற்றாமல் தமிழ் இன அடையாளத்தை வலிமை படுத்தும் பேரியக்கமாக முன்னெடுக்க வேண்டும். யாரை நீக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு வாதிடுவதை விடுத்து யாரை கூட்டு சேர்த்து வெற்றிபெறமுடியும் என்று சிந்திப்பதே தமிழினத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்யும். ஆகவே தமிழ்த் தேசியம் என்பது இன்றைய சூழலில் நம் நாட்டை பொருத்தவரை ஒரு தமிழ் அணியாக, இயக்கமாக ஆக்ககரமான செயல்பாடுகளுடன் முன்னேறுவதே வரவேற்க தக்கது. மாறாக, தமிழ் நாட்டு ஆரவார தமிழ்த் தேசியத்தை பின்பற்றி இங்குள்ள, தெலுங்கரையும் மலையாளியையும் பாசீச வெறியோடு பேசுவதும் தூற்றுவதும் மலேசியத்தமிழர்களை உயர்த்திவிடப் போவதில்லை. நம் மொழியை, நம் பண்பாட்டுச் சிறப்புகளை, நம்முடன் ஒன்றற கலந்துவிட்ட சமயத்தை, தமிழின ஒற்றுமையை மேலும் மேலும் உயர்த்திக்காட்ட ஆகக் கூடிய காரியங்களில் நம் சக்தியை செலவழிப்பதே ஆக்கச்செயலாகும்.

உதவிய நூல்களும் ஆக்கங்களும்

1. திராவிடத்தால் வீழ்ந்தோம் –பெங்களூர் குணா
2. வரலாறும் வக்கிரங்களும்- டாக்டர் ரொமிலா தாப்பார்
3. பின் நவீனநிலை இலக்கியம் அரசியல் தேசியம்- அ. மார்க்ஸ்
4. மலேசிய இந்தியர்கள் ஓராய்வு –க.கலைமுத்து
5. சீமானின் ஜனரஞ்சக தமிழ்ப் பாசீசம் : ஒரு அபாயம் –குமரன்தாஸ் குவர்னிக்கா 41-இலக்கியச் சந்திப்பு மலர்-
6. பெரியார் என்ற கலகக்காரர் : மெல்ல முகிழ்க்கும் உரையாடல் –ம.மதிவாண்ணம்
7. குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம்- அ. மார்க்ஸ், கோ.கேசவன்
8.ஏன்வேண்டும்தமிழ்த்தேசியம்- கோவை ஞானி
9.  அறிபபடாத தமிழகம்- தோ.பரமசிவம்.
8. http://oviyaselvan1.blogspot.com/2014/08/blog-post_12.html
9. http://vinaiyaanathogai.wordpress.com
10.https://www.facebook.com/KarurMDMK/posts/314942605282233
11. http://www.aazham.in/?p=2001ஏன்தேவைதமிழ்த்தேசியம்? –நலங்கிள்ளி
12. http://namvaergall.blogspot.com/
13.  https://www.facebook.com/pages/Thamizhar-Kalam
14.http://tamil.thehindu.com/opinion/columnsஎம்.எஸ்.எஸ். பாண்டியன் ‘தேசியப் பழமைவாதத்தை மறுதலித்தல் பெரியாரின் அரசியல் கருத்தாடலில் தேசம்’
15.மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் – தொகுப்பு கவி

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

திராவிடமா? தமிழியமா? மருத்துவர் இராமாதாசின் தமிழியம் – அ.மார்க்ஸ்

உ.பி மாதிரியில் இங்கே ஒரு சமூகப் பொறியியல் ஒன்றைக் கட்டமைக்கப் போவதாக நேற்று சேலத்தில் விரிவாகப் பேட்டியளித்துள்ளார் மருத்துவர் இராமதாஸ். திராவிடக் கட்சிகளாலும், அவர்கள் பேசிய ‘திராவிடம்’ என்கிற கருத்தியலாலுந்தான் தமிழர்கள் இன்று தாழ்ந்துள்ளனர் எனக் கூறியுள்ள இராமதாஸ் அவர்கள், தனது இந்தச் சமூகப் பொறியியல் திராவிடத்திற்குப் பதிலாகத் ‘தமிழியத்தை’ முன்வைக்கும் என்றுள்ளார். இனி இரண்டு திராவிடக் கட்சிகளுடன் மட்டுமல்ல, திராவிடம் என்று பெயர் தாங்கியுள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டில்லை எனச் சமீபகாலமாகச் சூளுறைத்து வரும் மருத்துவர், இந்த அடிப்படையில் தன் எதிர்காலத் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

அவரது சமூகப் பொறியியலின் உள்ளடக்கம் என்ன? பல சாதிக் குழுமங்கள் தன்னை அணுகுவதாக அவர் தெரிவிக்கிறார். அதாவது திராவிடக் கட்சிகளை ஒதூக்கிவிட்டு, இத்தகைய சாதி அமைப்புகளை இணைத்து ஒரு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்பதுதான் அவரது சமூகப் பொறியியல்.

இந்தச் சாதி அமைப்புகள் அனைத்தும் எப்படியானவை? தத்தம் சாதியின் முன்னேற்றத்தைப் பேசுபவை. தத்தம் சாதியின் பெருமையையும், உயர்வையும் வலியுறுத்துபவை. தத்தம் சாதிக்குக் கீழே உள்ளவர்கள் மீது ஆதிக்கம் செய்வதை நியாயப்படுத்துபவை. தத்தம் சாதியின் தூய்மையைப் பேணுபவை. அவற்றில் கலப்பு ஏற்படுவதை என்னாளும் ஏற்காதவை.

இந்தச் சாதி அமைப்புகள் அனைத்தும் சமீப காலங்களில் இரு அம்சங்களை வலியுறுத்துவதில் ஒற்றைக் குரலில் பேசுவதை எல்லோரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவை: 1) சாதி மறுப்புக் (கலப்புத்) திருமணங்களை அநுமதிக்கக் கூடாது. 2) தீண்டாமை ஒழிப்பில் மிகப் பெரிய ஆயுதமாக நமக்கு வாய்த்துள்ள “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை” ரத்து செய்ய வேண்டும்.

ஆக மருத்துவர் பேசுகிற சமூகப் பொறியியலில் தமிழ்ச் சமூகம் இறுக்கமான சாதிப் பிரிவுகளின் தொகுப்பாக இருக்கும். தீண்டாமை உள்ளிட்ட மரபு வழிப்பட்ட கிராம சமூக அமைப்பு தக்கவைக்கப்படும். இதற்குப் பெயர் “தமிழியம்”. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றொரு தத்துவத்தைப் பல்வேறு பொய்கள், அபத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முன் வைத்த பெங்களூரு குணாவின் இன்றைய வாரிசுகள் முன்வைக்கும் “தமிழ்ச் சாதிகளின் ஒற்றுமை” என்கிற கருத்தாக்கத்துடன் மருத்துவர் அவர்களின் சமூகப் பொறியியல் மிகவும் நெருக்கமாக வருவதை யாரும் உணர இயலும். ஆனால் குணாவின் வாரிசுகள் முன்வைக்கும் தமிழ்ச் சாதிகளின் ஒற்றுமையில் ‘நாயுடு’. ‘நாயக்கர்’. ‘அருந்ததியர்’ முதலான ‘கன்னட’, ‘தெலுங்குச்’ சாதிகளுக்கு இடமில்லை. அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது எனவும், “அம்பேத்கராம் மராட்டியரைத்” தலைவராக ஏற்கக் கூடாது எனவும் சொன்னவர் குணா என்பதை யாரும் மறந்துவிட இயலாது. மருத்துவர் அவர்களுக்கு இந்தக் கருத்தில், அதாவது தெலுங்கு, கன்னட, மலையாளச் சாதிகளை ஒதுக்கவேண்டும் என்கிற கருத்தில் உடன்பாடு உண்டா என்பது விளங்கவில்லை.

அடுத்துக் குணா வழித் தமிழியக்காரர்களுக்கு பார்ப்பன எதிர்ப்பில் உடன்பாடில்லை. மருத்துவர் அவர்களின் பொறியியலில் பார்ப்பன எதிர்ப்பிற்கு இடமுண்டா, இல்லை, உ.பி மாதிரியில் பார்ப்பனர்களுக்கு முக்கிய இடமளிக்கப்படுமா என்பதும் விளங்கவில்லை.

‘திராவிட’ என்னும் பெயர் தாங்கிய எந்தக் கட்சியுடனும் கூட்டில்லை என்றால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகளுடன் கூட்டிற்குத் தடையில்லையா என்பதும் விளங்கவில்லை.

பெரியாரும் பின் வந்த திராவிடக் கட்சிகளும் “திராவிடம்” என்பதைப் பெயரில் சுமந்திருந்தாலும் அவர்கள் முன்நிறுத்தியது தமிழ்த் தேசியத்தைத்தான். தமிழ்நாடு என்கிற புவியியல் எல்லைக்குள் வாழ்கிற எல்லா மக்களையும் உள்ளடக்கியதே அவர்களது தேசியம். பெரியார் அதைத் தெளிவாகவே சொன்னார். “தமிழன் என்று சொன்னால் பார்ப்பானும் வந்து ஒட்டிக் கொள்வானே என்பதால்தான் நான் திரவிடன் என்று சொல்கிறேன்” என்றார். ஆனால் பார்ப்பனரை வெளியேற்ற வேண்டுமென்றோ, அவர்கள் மீது வன்முறையை ஏவ வேண்டுமென்றோ அவர் எந்நாளும் சொன்னதில்லை. பார்ப்பனர்களது ஆதிக்கம் கூடாது என்று மட்டுமே அவர் சொன்னார். எல்லோருக்கும் அவரவர் விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று சொன்னபோது பார்ப்பனர்களுக்கு அவர்களுக்குரிய முன்று சத ஒதுக்கீடு அளிப்பதை அவர் ஏற்றுக்கொண்டார்,

பெரியாரைப் பொருத்த மட்டில் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது அடிப்படையில் சாதி எதிர்ப்பு என்பதுதான். அவர் ஒருவரே தமிழக வரலாற்றில் சாதி ஒழிப்பிற்காகப் போராட்டம் நடத்தியவர். பெருந்திரளாக மக்களைப் போராட்டத்தில் இறக்கிச் சிறைக்கு அனுப்பியவர். அவர்கள் எல்லோரும் மூன்றாண்டுச் சிறைவாசம் அநுபவிக்க வேண்டியதாயிற்று, இந்திரா ஆண்டபோது அவர் தனித் தமிழ்நாடு கேட்டுப் போராடினார். அப்போதுகூட சாதி இல்லை, பாப்பான் இல்லை, சூத்திரன் இல்லை என்று அரசியல் சட்டத்தைத் திருத்து நான் போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார். “இல்லாவிட்டால் பிரிவினை, பிரிவினை, பிரிவினைதான்” என்றார்.

ஆக, திராவிடம் என்கிற கருத்தாக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் சாதி எதிர்ப்பு என்பதை ஒரு  அங்கமாகக் கொண்டிருந்தது. இதன் பொருள் பின்னால் வந்த திராவிடக் கட்சிகள் எல்லாம் இதே தன்மையைக் கொண்டிருந்தன என்பதல்ல. என்றைக்கு அவர்கள் தேர்தல் அரசியலில் குதித்தார்களோ அன்றைக்கே சாதி அடிப்படையிலான ஓட்டு வங்கிகளை அவர்கள் மையப்படுத்தியே செயல்படத் தொடங்கினர். ஆக, பெரியாருக்குப் பிந்திய திராவிடக் கட்சிகளின் மிகப் பெரிய வீழ்ச்சியே அவர்கள் திராவிடக் கருத்தியலிலிருந்து பிறழ்ந்தது என்பதுதான். பார்ப்பன எதிர்ப்பு என்பது இடை நிலைச் சாதிகளின் உறுதியாக்கத்திற்கு இட்டுச் சென்றது.

உண்மையில் இந்தியச் சமூக முரணின் அடிப்படை சாதிதான். புலே, அம்பேத்கர், பெரியார் போன்றோர் இது ஒரு சாதீயச் சமூகம் என்கிற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி ஒரு அரசியலைக் கட்டமைத்தனர். சாதியைக் காப்பாற்ற முயலும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவை அதன் காரணமாகவே இந்தியச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடு சாதி அல்ல, மதம்தான் எனத் திரிக்கின்றனர், இந்துத்துவவாதிகள் இப்படிச் சாதி முரண்பாட்டைப் பின்னுக்குத் தள்ளி மத முரண்பாட்டைக் கட்டமைப்பதை ரொமிலா தப்பார் சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தோன்றிய தமிழ்த் தேசிய உருவாக்கத்தில் இரு போக்குகள் ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளன. இதை நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன். முதலாவது சற்றுமுன் கூறிய பெரியாரின் தமிழ்த் தேசியம். அவர் தனது திராவிடக் கருத்தியல் வாயிலாக, பார்ப்பன எதிர்ப்பு என்கிற குறியீட்டின் வாயிலாக முன்வைத்த தமிழ்த் தேசியம். அதாவது சாதி ஒழிப்பை நிபந்தனை ஆக்கிய தமிழ்த் தேசியம். மற்றது ம.பொ.சி, குணா ஆகியோருடையது. அதாவது பார்ப்பனீயத்தையும் சாதிப் பிரச்சினையையும் பின்னுக்குத் தள்ளி மொழிவாரியான ஒரு முரண்பாட்டைக் கட்டமைப்பது. மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் முக்கிய எதிரி என்பது. ம.பொ.சியைப் பொருத்தமட்டில் இந்துப் பெருமை பேசுவதற்கும் அவர் தயங்கியதில்லை. ம.பொ.சி, குணா போன்றவர்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே கைவிட்டதாகத் தோன்றும். ஆனால் இன்று அவர்கள் “தமிழ்ச் சாதிகளின் ஒற்றுமை” என்கிற முழக்கத்தை முன் வைக்கும்போதுதான் அவர்கள் சாதி ஒழிப்பிற்கே எதிரிகள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆக, ‘திராவிடம்’, ‘தமிழியம்’ என்கிற பிரச்சினை வெறும் சொல் வேறுபாடு தொடர்பான பிரச்சினை அல்ல. தமிழ்ச் சமூக முரணின் அடிப்படை சாதியா இல்லையா என்பதுதான். நமது முதன்மை நோக்கம் சாதி ஒழிப்பா இல்லையா என்பதுதான். சாதிகளுக்கு அப்பாற்பட்ட, சாதிகளின் இருப்பை முதன்மைப் படுத்தி ஆதாயம் தேடாத ஒரு அரசியலா, இல்லை சாதிகளை முதன்மைப் படுத்தி சாதிகளின் கூட்டணியை உருவாக்கும் அரசியலா என்பதுதான்.

மருத்துவர் அவர்கள் தன் நிலைப்பாட்டை விளக்கிவிட்டார். இப்படியான சாதிக் கூட்டணித் தமிழியத்தில் தன்னுடைய இடம் என்ன என்பதை மதிப்பிற்குரிய திருமாவளவன்தான் விளக்க வேண்டும். திருமாவளவன் மட்டுமல்ல, ஏதோ அம்பேத்கர், புலே போன்றோர் தோன்றிய மராட்டியம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலெல்லாம் தீண்டாமைக் கொடுமைகளே இல்லை என்பது போல எதெற்கெடுத்தாலும் திராவிடக் கருத்தியலைக் குறை சொல்லும் தலித் அறிவு ஜீவிகளும் இது குறித்துச் சொல்ல வேண்டும்.

பார்ப்பனீயம் என்கிற குறியீட்டின் மூலம் சாதிய முரணை முதன்மைப் படுத்திய திராவிடக் கருத்தியலைச் சுமக்கும் திராணியை பெரியாருக்குப் பிந்திய திராவிட இயக்கங்கள் இழந்தன. தேர்தல் அரசியல், ஊழல்கள், வாரிசு அரசியல் என்பதாகச் சீரழிந்த இவற்றால் சாதி ஒழிப்பை முதன்மைப்படுத்திச் செயல்பட இயலாது என்பது அப்பட்டமான உண்மை. ஆனால் திராவிடக் கட்சிகளின் இந்தப் பலவீனங்களுக்காக சாதி உறுதியாக்கத்தை முன்வைத்து இயங்கும் ஒரு அரசியலை திராவிட எதிர்ப்பு, தமிழியம் என்கிற பெயர்களால் ஏற்க இயலாது. இடைநிலைச் சாதிகளின் உறுதியாக்கத்திற்குத் திராவிடக் கட்சிகளின் பார்ப்பன எதிர்ப்புத்தான் காரணம் என்றொரு கருத்து உண்டு. அப்படியாயின் திராவிடக் கருத்தியல் செயல்படாத பிற மாநிலங்களில் யாதவ்களும் தாக்கூர்களும் எப்படி வலிமையான அரசியல் சக்திகளாக மாறினர் என்கிற கேள்விக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். இது ஒருபுறம் இருக்க,  திராவிடக் கருத்தியலின் பார்ப்பன எதிர்ப்பு இடைநிலைச் சாதிகளின் உறுதியாக்கத்திற்கு வழிவகுத்தன என்றே வைத்துக் கொண்டாலுங்கூட, அதற்கு மாற்று வெளிப்படையாகச் சாதி உறுதியாக்கத்தை முன்னிறுத்திச் செயல்படும் சாதிகளின் கூட்டணி அரசியல் அல்ல.

திராவிடக் கருத்தியல், திராவிட இயக்க ஆட்சிகள் ஆகியவற்றால் தமிழகம் தாழ்ந்துவிட்டது என மருத்துவர் அவர்களும், இதர தமிழ்ச் சாதிகளின் ஒற்றுமை பேசும் தமிழியவாதிகளும் எழுப்பும் முழக்கம் உண்மையிலேயே அதைப் பொருள் கொள்வதில்லை. அந்த முழக்கத்தின் உள் நோக்கம் சாதி அடையாளங்களுக்கு அப்பாலான ஒரு அரசியலே கூடாதென்பதுதான்.

இப்படியாக உருவாகும் சாதி உறுதிப்பாடு இன்னும் பல தருமபுரிக் கொடுமைகள் உருவாவதற்கே வழிவகுக்கும்..



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குச் சில கேள்விகள்

 

 
தமிழர்களின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குச் சில கேள்விகள்......
தமிழர்களாகிய எங்களின் வாக்குகள் அடுத்து வரும் தேர்தல்களில் உங்களுக்கு வேண்டுமா?
ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் செய்து முடிப்பதாக உறுதியளித்தால்தான் எங்களின் வாக்குகள் உங்களுக்கு!

1. தமிழர் இழந்த ஆற்றுநீர் உரிமைகளை மீட்க உருப்படியான உங்களின் திட்டம் என்ன என்பதைத் திட்டவட்டமாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். காவிரி, பாலாறு, தென்பெண்ணை, முல்லைப்பெரியாறு அணை ஆகியவற்றின் மீதான வழிவழி வந்த உரிமையை அண்டை மாநிலத் 'திராவிடர்கள்' அடாவடித்தனமாகப் பறிப்பதையும், கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களையும் ஆணையங்களின் இடைக்காலத் தீர்ப்புகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காததையும் கண்டும் காணாமல் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஆற்றுநீர்ப் பங்கீடுகளை வாங்கித் தராமல், தமிழகத்தையும் தமிழர்களையும் வஞ்சித்துக் கொண்டிருக்கும் தில்லி வல்லரசை எதிர்த்து உருப்படியாகப் போராடுவீர்களா?

2. தமிழர்களிடமிருந்து பறித்து மலையாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்ட இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்தோடு சேர்க்கும்படி போராடாமல் முல்லைப்பெரியாற்று அணையின் மீதான உரிமைக்காகக் குரலெழுப்புவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதானே? அதனால், தமிழர்கள் பெரும்பான்மையராக வாழும் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்தோடு சேர்க்குமாறு போராடத் துணிவீர்களா?

3.தமிழர்கள் பெரும்பாலோராகவுள்ள சித்தூர் மாவட்டம் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருட்டினனின் அடாவடித்தனத்தால் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டது. சித்தூர் மாவட்டத்துக் குப்பத்தில் அணை கட்டித் தமிழ் நாட்டுக்குப் பாலாற்று நீர் வராமல் தடுக்கத் தெலுங்கன் முயல்கின்றான். இந் நிலையில், சித்தூர் மாவட்டத்தைத் தமிழகத்தோடு மீண்டும் சேர்க்கச் சொல்லிக் கேட்காமல், பாலாற்றின்மீது தமிழருக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்பது வெற்றுப் பம்மாத்துத்தானே? ஆகவே, சித்தூர் மாவட்டத்தை மீட்கப் போராடத் துணிவீர்களா?

4. மேற்குமலையில் தோன்றி நெல்லை மாவட்டத்தில் ஓடிய கருப்பானாறு முதலில் கிழக்குநோக்கி ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு மலைப்பாறைகளை வெடிவைத்துத் தகர்த்த மலையாளிகள், அந்த ஆற்றை மேற்குநோக்கி ஓடுகின்ற ஆறாகச் செய்துவிட்டனர். தமிழகத்தை ஆண்ட/ஆளும் கழக ஆட்சிகள் எதுவும் இந்த அட்டூழியத்தை ஏனென்று தட்டிக் கேட்டதில்லை. கருப்பானாற்றின்மீது அவை உரிமை பாராட்டியதும் கிடையாது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால், மலையாளிகள் தான்தோன்றித்தனமாகவும் அடாவடியாகவும் மேற்குநோக்கி வலிந்து திருப்பிக்கொண்ட கருப்பானாற்றை மீண்டும் கிழக்குநோக்கித் திருப்பிவிடுவீர்களா?

5. கருநாடக, கேரள, ஆந்திர எல்லைப்புறங்களில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 1956 மொழிவழி மாநில உருவாக்கங்களின்போது தமிழ்நாட்டுக் கன்னடரும் தெலுங்கரும் வடவரும் தலைமையேற்றிருந்த திராவிட இயக்கமும் பேராயக் கட்சியுமே அதற்குக் காரணமாகும். இதனால், தமிழர் வாழும் கொள்ளேகாளம், பெங்களூர், கோலார்த் தங்கவயல், சித்தூர், இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு, கன்னியாகுமரியின் சில பகுதிகள் முதலான வளம் மிக்கப் பகுதிகளை இழந்தோம். அவற்றையெல்லாம் மீண்டும் தமிழகத்தோடு இணைப்பதற்கான உருப்படியான போராட்டங்களையும் உத்திகளையும் முன்னெடுப்பீர்களா?

6. 1956ஆம் ஆண்டில் 'தனிக்' கேரளம் அமைக்கப்பட்டது. பின்னர்ப் பழைய கன்னியாகுமரியின் ஒரு பகுதி மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆயினும், கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான 837 கட்டை (கிலோமீட்டர்) எல்லை இந்நாள் வரையில் வரையறுக்கப்படவில்லை. இதனால், மலையாளிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி, கண்ணகி கோயில் உள்ளிட்ட தமிழர்பகுதிகளையெல்லாம் மெல்ல விழுங்கி வருகின்றனர். எல்லையை வரையறுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டங்களில் தமிழக அரசின் சார்பாக அனுப்பப்பட்ட தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளெல்லாம் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருந்தனர். இதனால், கேரளத்துடனான தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்படாமலேயே அரை நூற்றாண்டுக் காலம் ஓடிவிட்டது! தனித்தோ கூட்டணியாகவோ நீங்கள் ஆட்சிக்கு வந்தால், கேரளத்துடனான தமிழகத்தின் எல்லையை விரைந்து வரையறுப்பீர்களா? கேரளத்துடனான எல்லை வரையறுப்புப் பேச்சுகளுக்குத் தமிழக அரசின் சார்பாக மலையாள அதிகாரிகளை அனுப்பாமல் இருப்பீர்களா?

7. தமிழகம் வாசலில்லா வீடு! தமிழரின் எல்லைகளில் அயலாரின் ஊடுருவல் ஓயாது நடந்து வருவதால், தமிழகத்தின் எல்லைப்புறங்கள் உள்ளுக்குத் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன. நீங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்றே எல்லைக்காப்புப் படை ஒன்றைக் கட்டியெழுப்புவீர்களா?

8. பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவரே அம் மாநிலங்களின் முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் இருப்பதைப்போல், தமிழின உணர்வு கொண்ட தமிழர்கள் மட்டுமே தமிழகத்தின் முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் வர வேண்டும் என்னும் மரபைத் தோற்றுவிப்பீர்களா? அம் மரபைக் கண்ணெனக் காப்பீர்களா?

9. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வழங்கிய தில்லி அரசு, அச் செம்மொழித் தகுதியைப் பெற வேண்டின், ஒரு மொழி 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தால் போதும் என்று வேண்டுமென்றே ஒரு சூழ்ச்சிப்பொறியை இட்டுள்ளது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் கன்னடமும் தெலுங்கும் தமிழின் வட்டார வழக்குகளாயிருந்தன. அவற்றைக் கொடுந்தமிழ் என்கிற வடுகு மொழிகள் என்றனர். அண்மையில், நாகை மாவட்டத்துச் செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்துக் கற்கோடரியின்மீது தமிழ் எழுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புதிய கற்காலத்திலேயே தமிழுக்கு எழுத்து இருந்தது என்னும் உண்மை இதனால் தெரிய வந்தது., தமிழகத்தின் புதிய கற்காலம் 45,000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆயினும், செம்பியன் கண்டியூரில் கிடைத்த தமிழ் எழுத்துகளைக் கொண்ட கற்கோடரியின் காலம் வெறும் கி. மு. 1000 ஆண்டளவிலானதுதான் என்று வாய் கூசாமல் குறைத்து மதிப்பிடுவது ஒரு புறம் கிடக்கட்டும். புதிய கற்காலத்திலேயே தமிழுக்கு எழுத்து இருந்தது என்ற உண்மையைத்தான் இங்குக் கோடிட்டுக் காட்டுகின்றோம். குறைந்தது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்தும் இலக்கியமும் வரலாறும் கொண்டிருந்த தமிழ் மட்டுமே செம்மொழி எனப்படும் தகுதிக்கு உரியது என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வந்தபின் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

10. பிற மாநிலங்கள் எல்லாவற்றிலும் அந்தந்த மாநில மொழிகளைப் பிற மொழியினரும்கூடக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தமிழருக்கும்கூடத் தமிழ் கட்டாய மொழியாக இல்லாத அவலநிலை உள்ளது. இந்த இழிவைப் போக்க, உங்கள் கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்திலுள்ள எல்லாரும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் சட்டத்தை இயற்றுவீர்களா?

11. தமிழகத்தில் தமிழை ஆட்சிமொழியாகவும் அலுவலக மொழியாகவும் பாடமொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஆக்குகின்ற சட்டத்தை இயற்றுவீர்களா?

12. 'தமிழே முதன்மொழி' என்ற பாவாணரின் மொழிக்கோட்பாடே தமிழக அரசின் மொழிக்கொள்கை என்று ஏற்றுக்கொண்டு, தமிழின் தாய்நிலையை மறுக்கும் 'மூலத்திராவிடம்' என்னும் பொய்க்கோட்பாட்டுக்குக் கடைவிரிக்கும் தமிழ் எதிர்ப்பாளர்களின் சூழ்ச்சியைக் கண்டித்துச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?

13. தமிழர்களைத் 'திராவிடர்கள்' என்று அடையாளப்படுத்தவே கூடாது; தமிழர்களைத் 'தமிழர்கள்' என்று மட்டுமே எல்லா அரசு ஆவணங்களிலும் மடல்தொடர்புகளிலும் பாடநூல்களிலும் பிறவற்றிலும் குறிப்பிட வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

14. தமிழைத் 'திராவிடமொழி' என்று இனிமேல் குறிப்பிடவே கூடாது என்றும், தமிழிலிருந்து கிளைத்த மொழிகளை இதற்குமேல் தமிழிய மொழிகள் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? பழந்தமிழ் எழுத்துகளைப் 'பிரமி' எழுத்துகள் என்று குறிப்பிடக்கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?

15. தமிழில் வேண்டுமென்றே பிறமொழிக் கலப்புடன் எழுதுவதைப் பிரான்சு முதலான நாடுகளில் உள்ளதைப்போல் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இயற்றுவீர்களா?

16. இனி வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் கூட்டணிகள் தமிழரால் மட்டுமே தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுப்பீர்களா? அந்தக் கூட்டணிகள், தமிழர்களின் கூட்டணிகளாக மட்டுமே இருக்குமாறு கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொள்வீர்களா?

17. தமிழ்நாட்டில் பணிபுரியும் இந்திய ஆட்சித்துறை அதிகாரிகளும், இந்தியக் காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும், நடுவணரசு மாநில அரசு அதிகாரிகளும் தமிழர்களாகவே இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அதைச் செயல்படுத்துவீர்களா?

18. பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்களுக்குத் தோள்கொடுப்பது தாய்த்தமிழகத்தின் கடமை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? அங்கெல்லாம் உள்ள தமிழர்கள் தமிழைக் கற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்களா? புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழகத்துக் கல்வியகங்களில் தனி இடம் ஒதுக்குவீர்களா? "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!" என்னும் பாவேந்தரின் கொள்கையை நடைமுறைப்படுத்துவீர்களா?

19. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கத் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற சட்டத்தை இயற்றுவீர்களா?

20. சாதி இடஒதுக்கீட்டையும் சலுகையையும் பற்றிய சட்டநாதன் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்து வீர்களா?

21. மேல்சாதி கீழ்ச்சாதி என்று பாராமல் தமிழர்கள் எல்லாருக்கும் இடஒதுக்கீடும், தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையில் இலவயக் கல்வியும் உண்டு என்று சட்டம் இயற்றுவீர்களா?

22. கன்னடருக்கு உள்ளதைப்போல் தமிழகத்திற்கென ஒரு தனிக்கொடியை உருவாக்குவீர்களா?

23. கருநாடகத்தில் பொதுத்துறையிலும் தனியார்த்துறையிலும் 80% வேலைகள் கன்னடருக்கே ஒதுக்கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாட்டிலும்கூட எல்லாத் துறைகளிலும் 80% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு என்று ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவார்களா?
தமிழகத்திலுள்ள உந்துவண்டித் தொழிற்சாலைகளில் ஓர் உந்துவை உருவாக்க 40,000 குடுமை (கேலன்) தண்ணீர் வேண்டுமாம். சென்னையைச் சுற்றியுள்ள உந்துவண்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில் 60% தெலுங்கர்களாகவும் 20% மலையாளிகளாகவும் இருக்கின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மையராயுள்ள பெரிய, சிறிய தொழிற்சாலைகளுக்கு இலவயமாகவோ சலுகை அடிப்படையிலோ தண்ணீர், மின்சாரம் முதலியவற்றை வழங்குவதை உடனே நிறுத்துவீர்களா?

24. தமிழக மீனவர்கள் கடல்மேல் கொண்டிருந்த உரிமையைப் பறித்துக்கொண்ட இந்தியப் பேரரசு, அந்த உரிமையை இப்போது சிங்களவனுக்குக் குத்தகை விட்டுள்ளது. இதனால், தமிழக மீனவரின் வாழ்வுரிமை பறிபோயுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையம், கல்பாக்கம் அணுவுலை, கூடங்குளம் அணுவுலை, இறால் பண்ணைகள், கரையோரப் பவழக்கொடிகளின் அழிப்பு, அலைவாய்க்காடுகளின் அழிப்பு முதலானவற்றால் தமிழகக் கரையோரத்தில் மீன்வளம் ஒழிந்து அது ஆழ்கடலுக்குத் தள்ளிப்போய்விட்ட நிலையில், தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள்தான் மீன்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பெரிய அட்டூழியமாகும். தமிழகத்தின் கடல் எல்லைகளைக் கடந்து ஆழ்கடலுக்குப் போய் மீன்பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?
சிங்களவன் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றும் காயப்படுத்தியும் தளைப்படுத்தியும் அட்டூழியம் செய்யும் போதெல்லாம், தில்லி ஆண்டைகள் ஒரு முறைகூட வாய் திறந்து சிங்களவனைக் கண்டித்ததில்லை. இறந்த மீனவருக்கும் காயமுற்றவர்களுக்கும் உடைமைகளைப் பறிகொடுத்தவர்களுக்கும் சிங்களனிடமிருந்து இழப்பீடு கேட்டதும் இல்லை; வாங்கித் தந்ததும் இல்லை. இதனால், சிங்களன் சுட்டு இதுவரை செத்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் தில்லி அரசு சிங்களனிடமிருந்து இழப்பீடு வாங்கித் தர வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? தமிழக மீனவர்களின் தற்காப்புக்காக அவர்களுக்குத் துப்பாக்கிகளை வழங்குவீர்களா?

25. ஈழத் தமிழினத்தையே இல்லாது அழித்தொழிப்பதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் சிங்களன் தொடுத்துள்ள இனஒழிப்புப் போரானது 'இந்தி'யன் தமிழினத்தின்மீது நடத்துகின்ற ஒரு மறைமுகப் போரே என்பது உறுதி. இதனால், ஈழத்தமிழினம் எங்களின் சொந்த இனம் என்றும், அவர்களின் விடுதலைப் போருக்குத் துணைநிற்கத் தமிழகத் தமிழர்களுக்கும் உலகெலாமுள்ள தமிழர்களுக்கும் உரிமை உண்டு என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவீர்களா?

26. தமிழீழ விடுதலைப்புலிகளின்மீது இந்தியா விதித்துள்ள தடையை உடனே நீக்க வேண்டுமெனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

27. சிறப்புப் பொருளியல் மண்டிலங்கள் என்னும் பெயரில் வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டினப் பெருமுதலைகளுக்கும் ஆயிரமாயிரம் குறுக்கங்கள் என்று தமிழகத்தின் மண்ணைத் தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்தித் தமிழரின் மண்ணும் நீரும் தமிழருக்கு மட்டுமே சொந்தம் என்றும், அதை விற்கவோ வாங்கவோ பறிக்கவோ அயலார் யாருக்கும் உரிமை இல்லை என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? 
இந்திய அரசுச்சட்டத்தின் 370ஆம் பிரிவின்படி காசுமீரத்தில் உள்ளதைப்போல் தமிழரல்லாதார் யாரும் தமிழகத்து நிலத்தை வாங்கவோ விற்கவோ ஒற்றி வைக்கவோ முடியாது என்னும் சட்டத்தைத் தமிழகச் சட்டப்பேரவையில் இயற்றுவீர்களா?

28. ஆற்றுமணலை வரைமுறை இன்றிக் கொள்ளையடித்துச் சுற்றுசூழலுக்கும் அடிநீர் வளத்துக்கும் மிகப் பெரிய தீங்கைச் செய்துவரும் பெரும்புள்ளிகளுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கும் வாழ்நாள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து அச் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவீர்களா? அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வீர்களா?

29. ஆலைக்கழிவுகளை ஆறுகளில் விட்டு ஆற்றுநீரை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை உடனே மூடுவீர்களா? இயற்கையை மாசுப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சட்டம் இயற்றுவீர்களா?

30. பட்டித்தொட்டியெலாம் என்றும் தெருத்தெருவாக என்றும் தமிழக அரசே சாராயக்கடைகளைத் திறந்து வைத்துத் தமிழகத்தையே குடிகார நாடாகக் கெட்டழித்துக் கொண்டிருக்கும் கொடுமையை ஒழித்துத் தமிழரின் ஒட்டுமொத்த இனச்சீரழிப்பைத் தடுத்து நிறுத்துவீர்களா?

31. திரைப்பட மாயை, பிறவகைப் போதைப்பொருள்கள், மேலைப்பண்பாட்டை வரைமுறையின்றித் தழுவுதல் என்பவற்றால் நேர்ந்து வரும் பண்பாட்டுச் சீரழிவைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்களா?

பெங்களூர் குணா -


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பெங்குளூர் குணா(சாமுவேல் குணசீலன்) கிறிஸ்துவரா? திருவள்ளுவரை தோமோ வடிவில் செய்துள்ளனர்
Permalink  
 


தமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை


கூட்டத்தின் தலைவர் அவர்களே!
கூடியிருக்கும் அறிஞர் பெருமக்களே!
அரசியல் பெருந்தகைகளே!
அறிவார்ந்த சான்றோர்களே!
இனிய தமிழ் நெஞ்சங்களே! 


வணக்கம். வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற என்னுடைய நூலின் இரண்டாம் பதிப்பை இந்த அவையின் முன்னால் வைக்கின்றேன். இந்த நூலின் முதற்பதிப்புக்கு வெளீயீட்டு விழா எதுவும் எடுக்கப்பட வில்லை. திருச்சியில் இந் நூலைப் பற்றிய சிறிய அறிமுகக் கூட்டம் மட்டுமே நடைபெற்றது. இதன் முதற்பதிப்பின் மீதான மதிப்புரையோ திறனாய்வோ வரவில்லை. ஓரிரு சிற்றிதழ்கள் மட்டும் ஆறுதலாய், சிறிய அறிமுகத்தை மட்டுமே செய்தன. அதே நிலை என்றில்லாமல், மதிப்புரைகளும் திறனாய்வுகளும் இந்த முறை வரும் என்ற எதிர்பார்ப்புடன் இந் நூலின் இரண்டாம் பதிப்பை உங்கள்முன் வைக்கின்றேன்.

நூலின் உள்ளீட்டைப் பற்றிய சுருக்கமான குறிப்பு இது: தமிழரின் அணுவியம், கிரேக்க அணுவியத்தைவிட மிகவும் முந்தையது. மணிமேகலை, நீலகேசி முதலான நூல்களில் காணப்படும் தமிழரின் அணுக் கோட்பாடு, கிரேக்க அணுக்கோட்பாட்டைவிடச் செறிவானது; செம்மையானது; மேம்பட்டது. இந்த நூலின் முதல் படலம் அதை விளக்குகின்றது.

கணியத்திலும் வானியலிலும் முன்னோடிகளாயிருந்தவர்கள் வள்ளுவக் கணியர்கள். அவர்கள் கதைகளாய்ப் புனைந்து வைத்த வானியல் உருவகங்களே மறைந்த தமிழ் நான்மறையின் உள்ளீடு. இந்த மெய்ம்மையை விரித்துரைக்கின்றது நூலின் இரண்டாம் படலம். 

உலகளாவியது -- பொதுவானது -- குறிப்பானது அல்லது சிறப்பானது என்பன அறிதலின் -- கருத்தாக்கத்தின் -- வெவ்வேறு வரம்புகளாகும். இதைக் கருத்தில்கொண்டே சிறப்பியம் (வைசேடிகம்) என்ற தனி மெய்யியல் பார்வை தமிழில் தோன்றியது. 

மற்கலி என்பாரின் அணுக்கோட்பாட்டைத் தழுவிக் கணி ஆதன் (கணாதன்) என்பார் வடித்த தனி மெய்யியல் பள்ளியே சிறப்பியமாகும். அம் மற்கலி, ஒன்பதாம் கதிர் என்னும் நூலை இயற்றினார். அந் நூலின் திருட்டு வடிவமே கணி ஆதன் சங்கதத்தில் (சமற்கிருதத்தில்) இயற்றிய வைசேடிக சூத்திரம் என்ற நூல். இந் நூலின் மூன்றாம் படலம் அதைப் புலப்படுத்துகின்றது. 

இறுதியாக, தீர்ப்பு என்ற பகுதி இந் நூலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே நூலாயிருந்த தமிழ்நான்மறையை -- மூலமறையை -- நான்காக்கிப் பௌழிகம், தைத்திரியம், சாமம், தலவகாரம் என்று பாகதமொழியில் முதலில் மொழிபெயர்த்தனர். பின்னர்ப் பாகதத்திலிருந்து இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் பெயர்களில் கி. பி. 4ஆம் நூற்றாண்டில் அவற்றைச் சங்கதமாக்கினர். இதைச் செய்தவர்கள் ‘ஆரியர்’ என்ற பெயரில் வந்த வடுகப் பிராமணர்களே ஆவர். அவ்வாறு செய்தபின், மூலநூலான தமிழ் நான்மறையை இல்லாது ஒழித்தனர். இதனை எடுத்துரைக்கின்றது தீர்ப்பு என்னும் படலம். இதுதான் நூலின் சுருக்கம். 

இனி நாட்டு நடப்புக்கு வருவோம்! 

சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை அமைப்பதற்காக, டாட்டாவுக்கும் அம்பானிகளுக்கும் பன்னாட்டு முதலாளியப் பெருமுதலைகளுக்கும் தமிழகத்தையே பங்கு போட்டுத் தந்துவிட்டால், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுமாம்! அச் சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை எதிர்ப்பவர்களெல்லாம் தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களாம்! தமிழரின் காணிகளை -- மண்ணை -- வந்தவனுக்கெல்லாம் தாரை வார்த்துவிட்டால், வேலை வாய்ப்புகள் மலைபோல் குவியுமாம்! இதுதான்வளர்ச்சி -- Development -- என்பதாம். உலகமயமாக்கம் என்னும் பெயரில் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளையும் அவற்றின் பொருளியல்களையும் இயற்கை வளங்களையும் இறைமையையும் உலகப் பணநிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றின் காலடியில் வைக்கச் செய்யும் சூழ்ச்சிக்குரிய உத்திகளில் ஒன்றுதான் வளர்ச்சி (Development) என்னும் திருமந்திரம். தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட வந்தேறிகளுக்கு அதனுடைய உண்மையான பொருள் தெரியுமோ என்னவோ தெரியவில்லை. ஆயினும், ‘வளர்ச்சி’ (Development) என்னும் மந்திரத்தை இவர்களும்கூடக் கிளிப்பிள்ளை போல் ஒப்புவிக்கின்றனர். இந்த வளர்ச்சியைப்பற்றி என்ன சொன்னாலும் நமக்கு ஏறாது. IMF ஆட்களாயிருந்தால்தான் அதன் உண்மையான பொருள் விளங்கும். மாண்புமிகு மன்மோகன் சிங், மாண்டேக் சிங் போன்ற மூளைகளுக்கு -- சிந்தனை தாங்கிகளுக்கு -- மட்டுமே அதன் சூழ்ச்சுமம் தெரியும். காணியை உழுவது, விதைப்பது, நீர் பாய்ச்சுவது, களையெடுப்பது, அறுப்பது என்னும் வேளாண் அறிவை மட்டுமே தெரிந்துவைத்துள்ள பட்டிக்காட்டான் மருத்துவர் ஐயாவுக்கு Development என்றால் என்ன புரியும் என்கின்றன திராவிடங்கள்? அந்த வித்தையின் அரிச்சுவடிகூட விளங்காத இந்த ஆள், சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை எதிர்க்கின்றார்! அடாத செயல்!மண்ணை விற்று --மன்னிக்கவும், கண்ணை விற்று -- சித்திரத்தை வாங்க வேண்டுமா என்று கேட்பது பட்டிக்காட்டுத்தனமில்லையா? வந்தேறிகள் இப்படியெல்லாம் கேட்டு நம்மை மடக்குகின்றனர். 

1780க்கும் 1820க்கும் இடையில் இங்கிலாந்தில் மாபெரும் தொழிற் புரட்சி நடந்தது. நிலக்கிழமை வாழ்வியல் ஒழிந்து முதலாளியம் என்ற விளைப்புமுறை அங்கு கொலுவேறியது. முதலாளிய தொழிலாக்கம், உழவை விஞ்சி வளர்ந்தது; மலைபோல் குவிந்த தொழிற்பண்டங்களைக் கடல்கடந்து கொண்டு சென்று விற்றனர். ஆங்கிலேயர்கள் கடல்கடந்து போய்க் கைப்பற்றிய மூன்று கண்டங்களிலும் நாடுகளிலும் கிடைத்த இடுபொருள்களை அள்ளிக்கொண்டு வந்தமையால் இங்கிலாந்தில் பஞ்சாலைகள், இரும்பாலைகள் போன்ற பெருந்தொழில்கள் பெருகின. இவற்றால் இங்கிலாந்தின் வணிக வகுப்பு ஏற்றம் கண்டது. தொழிற் புரட்சியால் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய புதிய வேளாண் கருவிகளை அந் நாடு ஆக்கியது. அப்படி இருந்தும், உணவுப் பயிர்களை விளைவிப்பதைவிட பருத்தி முதலான வணிகப்பயிர்களின் பெருக்கத்திற்கே அது வழிகோலியது. இதனால், வணிகமும் பெருந் தொழிலும் வேளாண்மையை மூன்றாம் நிலைக்குத் தள்ளின. வணிக மும் தொழிலும் வேளாண்மையை விஞ்சி நின்றதால் தோன்றிய எதிர் விளைவுகளை இங்கிலாந்து அன்று உணரவில்லை. ஏனெனில், அதன் குடியேற்ற நாடுகள் அதற்குச் சோறு போட்டன. ஆனால், இங்குள்ள நிலையோ வேறு. 

“வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா தொல்காப்பியத்தில் உண்டு. இந் நூற்பா ஓர் இடைச் செருகல் என்பது உண்மைதான். உழவுத்தொழில் நன்கு வளர்ந்து நிலக்கிழமை வாழ்வியலாக இலங்கிய காலமே தொல்காப்பியத்தின் காலமாகும். இடைச்செருகல்கள் எனக் கூறத் தக்கனவற்றையெல்லாம் தொல்காப்பியத்திலிருந்து நீக்கிவிட்டுப் பார்த்தாலும், அத் தொல்காப்பியம் கி. மு. 1500 ஆண்டளவில் இயற்றபட்ட நூல் என்பது என்னுடைய கருத்தாகும். அதாவது, 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி நன்கு குதிர்ந்திருந்த நிலக்கிழமை வாழ்க்கையைத் தொல்காப்பியத்தின் ஊடே காண முடிகின்றது. 

அடிமை, குடிமை என்ற சொல்லாட்சிகள் தொல்காப்பியத்தில் உண்டு.
 
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”

என்றுரைத்துத் தமிழரின் வேளாண் நாகரிகத்தைப் பற்றியும் அது சுட்டு கின்றது. நகர்ப்புற வாழ்க்கையை அடியொற்றிய முதல் நாகரிகத்தைக் கண்டவன் தமிழன். ஆண்டை-அடிமை என்னும் வகுப்புகள் உருவாகாமல் நகரங்களும் நாகரிகங்களும் தோன்றியிருக்க முடியாது. பண் டங்களும் பண்டமாற்றங்களும் இல்லாத வேளாண் வாழ்வியல் இருந்திருக்கவியலாது. பண்டங்களை விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் வணிகன் என்னும் இடைத்தரகன் இல்லாத மருத வாழ்வியலை எண்ணிப் பார்க்க முடியாது. கோட்டை அரணை முற்றுவது உழிஞைப் போராம். அந்த அரண் எதிரியிடம் விழாமல் தற்காப்பது தும்பைப் போராம். தொல்காப்பியத்திலேயே இந்தப் போரியல் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் நிலக்கிழமை இருந்ததையே இவை காட்டுகின்றன. 

தமிழரின் நாகரிகம் தோன்றியபோதே, உழவுக்கும் வணிகத் திற்கும் இடையிலான முரண்பாடும் தோன்றியிருக்க வேண்டும். அம் முரண்பாடு சில வேளைகளில் பகையானதும்கூட உண்டு. உழவுக்கும் வணிகத்திற்கும், உழவுக்கும் தொழிலுக்கும் இடையிலான முரண்பாடுகள் பண்டுதொட்டு பல்வேறு அகடு முகடுகளைத் தொட்டு நிற்பதைத் தமிழரின் வரலாறு நெடுகிலும் காணலாம். வணிகம் எப்போதெல்லாம் உழவை அடக்கியொடுக்கப் பார்த்ததோ, அப்போதெல்லாம் அரசு தலையிட்டு முடிவில் உழவுக்குச் சார்பாக நின்று வணிகத்தின் சிறகுகளைக் கத்தரித்தது. இதுவே பண்டைத் தமிழரின் பொருளியல் வரலாறு.“ஏர்ப்பின்னது உலகம்” என்றும், “உழுவான் உலகத்தார்க்கு ஆணி” என்றும் வகுத்துக்கொண்டதே தமிழரின் பொருளியல் உளத்தியல்; அதுவே ஒரு மரபாகவும் இருந்துவந்துள்ளது. ஐரோப்பிய வாய்பாடுகள் இங்குப் பொருந்தா. 

தமிழகத்தின்மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர். விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாயிருந்தது அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தானென வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர். தமிழகத்தின்மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர். விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான். விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடுதான்! அன்று மட்டுமே 10 இலக்கம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்! 

“சோணாடு சோறுடைத்து” என்பர். அச் சோழநாட்டின் இன்றைய நிலை என்ன? ஒரு பாலைநிலமாக அது திரிந்து வருகின்றது! காரணம்? காவிரிமீது தமிழருக்கு வழிவழியாயிருந்த உரிமையைக் கன்னடன் பறித்துக்கொண்டான். அதுவும், தில்லி ஆண்டையின் பக்கத்துணையோடு! மொழிவழி மாநிலங்கள் என்ற சாக்கில் தமிழகத்தைக் கூறாடியபோது, வற்றாத பெரியாறு ஓடுகின்ற இடுக்கி மாவட்டத்தைத் திராவிடங்களும் இந்தியங்களும் மலையாளிக்குத் தாரை வார்த்தன. அதனால், வெள்ளைக்காரன் கட்டிய முல்லை-பெரியாறு அணையை ஏற்றிக் கட்டிக்கொள்ள மலையாளி விடமாட்டேன் என்கிறான். உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பையும் மதிக்க மாட்டேன் என்கிறான். மேற்காகப் பாய்ந்து கடலில் வீணாகக் கலக்கின்ற ஆற்றுநீரையும் தமிழன் கிழக்கே திருப்பிக்கொள்ள விடமாட்டானாம். பாலாற்றைக் கன்னடன் மடக்கியது போதாதென்று தெலுங்கனும் தன்பாட்டுக்கு அணை கட்டி இருப்பதையும் பறிக்கத் துணிந்துவிட்டான். தொன்றுதொட்டுத் தமிழருக்கிருந்த ஆற்றுரிமை பறிபோவதைப்பற்றித் தமிழகத்தை ஆளவந்தவனுக்கும் அக்கறையில்லை. இதற்குக் காரணம் அவர்களது கோழைத்தனமா அல்லது திராவிட வடுகப் பற்றாஎன்பது உங்களுக்கே தெரியும். அண்டை அயல் மாநிலங்களுடன் தமிழகத்திற்கு உள்ள பூசல்களிலெல்லாம் தில்லிக்காரன் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக வாய்செத்துக் கிடப்பதையும் அறிவீர்கள். 

இந்தச் சூழலில்தான், சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை அமைத்துக்கொள்ள தமிழகத்தின் கன்னிநிலங்களெல்லாம் வந்தேறிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. பொட்டல் நிலமாயிருந்தால் என்ன? திருவாரூரின் வளங்கொழிக்கும் கழனிகளாயிருந்தால் என்ன? அங்கெல்லாம் இனிச் சிறப்புப் பொருளியல் மண்டிலங்கள்தான் பூக்கப் போகின்றனவாம்! வளர்ச்சி -- Development -- என்னும் செப்படிவித்தையைக் காட்டித் தமிழனின் அடிமடியிலேயே கைவைக்கும் வேலை இது! தமிழரை மண்ணில்லாத மக்களாக்க முனைந்துள்ள வந்தேறிகளின் சூழ்ச்சி இது! தமிழகத்தின் தற்சார்பு வேளாண் பொருளி யலைத் திட்டமிட்டுக் குலைக்கின்ற -- அழிக்கின்ற -- கொடுமை இது! 

தமிழா, உனக்குக் காவிரி நீர் எதற்கு? பாலாற்று நீர் எதற்கு? முல்லை-பெரியாறு நீர் எதற்கு? பொன்னையாற்று நீர் எதற்கு? உனக்கென டாஸ்மாக் தண்ணீர் இருக்கையில் என்று அரசே சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் கொடுமை என்ன தற்செயலாகவா நடக்கின்றது? இல்லை! தமிழரின் இளைய தலைமுறையினரில் இன்னொரு தலை முறையை அழிக்கத் துடிக்கும் முயற்சி இது! தமிழரின் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிவகுக்கின்ற திட்டமிட்ட சூழ்ச்சி இது! தமிழர் இன ஒழிப்பின் ஒரு காட்சி இது! தமிழ்நாட்டில் தமிழே இல்லை! தமிழ்வழிக் கல்வியும் இல்லை! ஈழத்தைப் பாருங்கள்! அங்கே சிங்களவன் தமிழரின் குடியிருப்புகளை வேண்டுமென்றே குறிவைத்துக் குண்டுமழை பொழிகின்றான். பல்குழல் ஏவுகணைகள் என்றும் மோட்டார் குண்டுகள் என்றும் வான் குண்டுமாரி என்றும் ஓயாது வீசி மக்களை அலைக்கழிக்கின்றான். இருந்தும், அங்குப் பள்ளிகள் இயங்குகின்றன. தாய்மொழிக் கல்வி -- தமிழ்வழிக் கல்வி -- என்ற நுந்தாவிளக்கின் சுடர் அணைந்து விடாமல் இரு கை குவித்துக் கண்ணெனக் காக்கின்றான் அங்கு எம் தலைவன். 

ஆனால், இங்கோ, ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களைப் புற்றீசல் போல் வளரவிட்டு பெருவணிகமாக்கித் தமிழ்வழிக் கல்வியைத் திட்டமிட்டு ஒழித்து வருகின்றனர் திராவிட வந்தேறிகள்! தமிழில் பேசுவதே தாழ்வு என்னும் தாழ்வு மனப்பான்மையைத் தமிழரின் நெஞ்சங்களில் ஊன்றி வருகின்றனர் வடுக ஆளவந்தார்கள்! அன்றைய நாயக்கராட்சியும் தமிழ்வழிக் கல்வியை முற்றாகப் புறக்கணித்தது. இன்றைய நாயக்க ராட்சியிலும் அதே கதை. 

தற்செயலான நடப்பா இது? இல்லை, இல்லை! தமிழ் ஒழிந்தால் தான் தமிழன் ஒழிவான் என்னும் தீய எண்ணத்துடன் திட்டமிட்டே அரங்கேற்றப்படும் சூழ்ச்சி இது! 

கடலை ஆண்ட குடி, எம் பரதவர்குடி. மெசொப்பொத்தாமியாவின் உபைதிய நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் ஈழமிய நாகரித்திற்கும், எகிப்தின் நாகரிகத்திற்கும் மெக்சிக்கோவின் மயன் நாகரிகத்திற்கும் வித்திட்டவர்கள் தமிழ்ப் பரதவர்கள்தாம். தமிழரின் நாகரிகத்தை உலகெலாம் கொண்டு சென்று பரப்பிய பண்பாட்டுத் தூதுவர்கள் எம் பரதவர்கள். ஒருகாலத்தில் பாண்டியப் பேரரசையே எதிர்த்து நின்ற பெருங்குடி எம் பரதவர்குடி. அந்தப் பரதவர்கள் வடுகரின் ஆட்சிக்காலத்தில் நீலக்கடல் மீதான உரிமையை இழந்து வெற்று மீனவர்களாகிக் கெட்டுக் குறுகினர். இந்த மீனவர்களின் கடல் சார்ந்த வாழ்வுரிமை இன்று ஒரேயடியாகப் பறிக்கப்படுகின்றது. சிங்களவன் வந்து அவர்களின் மீன்பிடி உரிமைக்கே வேட்டு வைக்கின்றான். அவர் களைச் சுட்டுச்சுட்டுத் தள்ளுகின்றான். ஈழத்தமிழரின் இனவொழிப்புக்கு மட்டுமன்றி எம்முடைய மீனவத் தமிழனின் வாழ்வுரிமைப் பறிப்புக்கும்கூட இந்தியன் அந்தச் சிங்களனுக்கும் துணை போகின்றான். 

இவற்றையெல்லாம் பார்க்கையில்,

“நாற்புறத்தும் பகைவர் கூட்டம்
நடுவினில் எம் தமிழ்த்தாய்”

என்ற பாவேந்தனின் குமுறல்தானே நெஞ்சில் நிழலாடுகின்றது? 

குமரிமுனைக்கும் தெற்கே இருப்பது இலங்கைத்தீவு. கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எச்சம் அது. அங்குள்ள தமிழனைப் பாருங்கள்! தமிழனின் அறிவும் அறமும் மறமும் அங்கு வீடுகட்டிக் களமாடுகின்றது. உலகமே அதைக் கண்டு வியக்கின்றது. 

ஆனால், இங்குள்ள தமிழனோ பேய்த்தூக்கத்தில் சமைந்து கிடக்கின்றான்! இவனும் ஒரு பூதம்தான்! தன் ஆற்றலையும் பெருமை யையும் ஓர்மையையும் மீளப் பெறாதவண்ணம் ஆளவந்தார்கள் அவனுக்குப் பல்வகைப் போதைகளை ஊட்டி உறங்க வைத்துள்ளனர். கை கால்கள் விலங்கிடப்பட்டு அவன் மலையாய்ச் சாய்ந்து கிடக்கின்றான். நம்மவரில் படித்ததுகளுக்குப் போதை தரும் கஞ்சம்புல் கொத்து ஒன்றை வடுகன் தந்தான். அதைக் கொண்டுபோய் அவர்கள் உறங்கி கிடக்கும் தமிழன் என்ற அந்தப் பூதத்தின் மூக்கருகில் நீட்டி, ‘திராவிடத் தமிழா எழு! திராவிடத் தமிழா எழுந்திரு!’ என்று சொல்லி அவனை எழுப்பப் பார்த்தனர். அவனோ, எழுவதாய் இல்லை. நாமும் அவன் அருகில் போனோம். ‘தமிழன் திராவிடன் அல்லன்; இந்தியனும் அல்லன்; இந்துவும் அல்லன்; தமிழன் தமிழன்தான்; நாம் தமிழர், நாம் தமிழர், நாம் தமிழர் என்போம்!’ என்று அவன் காதில் ஒரு மந்திரத்தை ஓதினோம். மெல்லப் புரண்டு படுத்தான் அத் தமிழன்! புரிந்துவிட்டது! இத் தமிழன் விழித்துக்கொள்வான் என்பது தெரிந்துவிட்டது! 

நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து அத் தமிழன் விழித்தெழுந்தால், உலகம் நடுநடுங்கும்! விண் அதிரும்! காற்று முரசறையும்! இருட்கிழித்துத் தளையறுத்துத் தமிழன் வானளாவி நிற்பான்! 

அந்த நாள் நெருங்கிவிட்டது!
அதனால், கையை உயர்த்திக் கூறுவேன்;
எம் இனம் எழும்!
எந்தமிழினம் உயிர்த்தெழும்! சிலிர்த்தெழும்!
எழும்! எழும்! எழும்!


நன்றி. http://thamizharkalam.org/Valluvaththin%20Veezhchi.html வணக்கம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

விடுதலை இறையியல் - சில கேள்விகள்

 

 

பாளையங்கோட்டை,
19-8-95.

அன்புள்ள ஆசிரியர் (நிகழ்) அவர்களுக்கு வணக்கம்.

நிகழ் 30-இல் வெளிவந்த திரு கே.அல்போன்சு அவர்களின் ′விடுதலை இறையியல்′ குறித்து சில கேள்விகள், ஐயங்கள்.

விடுதலை இறையியல் தமிழர் (தேசிய) விடுதலையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போக்கு இப்போது இங்கு புதிதாக அரும்பியுள்ளது. ஆனால் ஏசுநாதரின் வரலாற்றோடு தேசிய விடுதலைக்கு ஓர் உறவு உண்டு. அது தரும் செய்தி வேறு வகையானது.

ஏசுவின் தொடக்ககால நடவடிக்கைகள் இசுரேலைத் தன் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த உரோம வல்லரசு எதிர்ப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கைகள் யூதர்களிடையிலிருந்த ஆதிக்கர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் திரும்பியமையால் அவரது இயக்கமே மறைமுகமாக வல்லரசுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. யூத குமாரனாகத் தொடங்கிய ஏசு தேவ குமாரனாக மாறிவிட்டார். அதனால் தான் வல்லரசு ஆளுநன் வழக்குசாவலை யூதத் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டான். தண்டனையிலிருந்த ஒருவரை விடுவிக்கக் கிடைத்த வாய்ப்பை அவன் ஏசுநாதருக்கு அளிக்க முன்வந்ததும் ஏசுநாதரால் வல்லரசுக்கு எந்தக் கேடும் நேராது என்ற அவனது கணிப்பின் விளைவேயாகும்.

ஏசுநாதருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது பொதுமக்களிடையில் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாததும் அவருக்குப் பின் அவரது மாணவர்கள் யூதர்களிடையில் வாழ முடியாததும் அவரால் தம் மக்களின் மனதில் தன் மீது ஒரு பரிவுணர்ச்சியை உருவாக்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன. ஏசுநாதரின் மாணவர்கள் செயலூக்கம் மிக்கவர்கள். அவரது மரணத்துக்குப் பின் உலகெங்கும் பரந்து சென்று தம் ஆசானின் செய்திகளைப் பரப்பிய அருஞ்செயலே இதற்குச் சான்று. அத்தகையவர்களால் கூட அவரது மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றால் ஏசுவும் அவரது மாணவர்களும் யூத மக்களிடமிருந்து அயற்பட்டிருந்தனரென்றே பொருட்படுகிறது. இதற்கான காரணங்களை ஏசுநாதரின் வாழ்க்கையைப் புதிய கோணத்திலிருந்து ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஏசுநாதரின் இயக்கத்தால் அவர் வாழ்நாளில் மட்டும் யூதத் தேசியத்துக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோம வல்லரசு கிறித்துவத்தை அரச மதமாக ஏற்றவுடன் தங்கள் இறைவனான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் யூதர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தி அவர்களை அடுத்த பதினாறு நூற்றாண்டுகள் உலகெலாம் ஏதிலிகளாக அலையவும் வைத்தது.

தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல, எந்த ஓர் இயக்கத்துக்கும் ஒரு திரிவாக்கம் உண்டு. அது குமுகத்தின் உச்சியிலிருந்து தொடங்கி பிற்போக்கு விசைகளைக் கழித்தும் அடுத்த மட்டத்து மக்களை ஈர்த்தும் படிப்படியாகக் கீழ்மட்டத்தை நோக்கி நகர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கீழ்மட்டத்து மக்களின் சிக்கல்களை மட்டும் அதாவது உள்முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினால் யூதர்களின் பட்டறிவு காட்டுவது போல் சிதைவுதான் மிஞ்சும். இன்றைய தமிழகம் கண் முன்னால் காணக்கிடைக்கும் இன்னொரு சான்று.

உருசியாவிலும் சீனத்திலும் பொதுமைக் கட்சிகளிடத்தில் அரசியல் நடுவம் கொள்வதற்கு முன் மேல்மட்டத்திலும் பல இயக்கங்களின் திரிவாக்கம் இருந்தது. அத்தொடர்ச்சியில் தொய்வு இன்றி அவ்வந்நாட்டுப் பொதுமைக் கட்சிகள் உரிய காலத்தில் களத்தில் இறங்கிச் செயற்பட்டன.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன்னைப் பேராய(காங்கிரசு)க் கட்சியினுள் உட்படுத்திக் கொண்டதுடன் நில்லாமல் வெள்ளையனை எதிர்ப்பதற்குப் பகரம் உள்முரண்பாடுகளுக்கு அதிலும் உடமை முரண்பாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றது, நிற்கிறது இந்தியப் பொதுமை இயக்கம்.

தமிழகத்தில் திரைப்படங்களில் தமிழகத் தேசிய விடுதலைக் குறிப்புகள் வரும்போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற காலம் ஒன்று இருந்தது. அதை உருவாக்கிய இயக்கம் தொய்வடைவதைக் கொடுநெஞ்சுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல அவ்வாறு தொய்வடைந்த இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கொஞ்ச நஞ்சமிருந்த தேசிய இயக்கத்தையும் அழித்தொழிந்துவிட்டன தமிழகப் பொதுமைக் கட்சிகள். இன்று தமிழகத் தேசியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கனவாகவே இருக்கிறது.

இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மக்களியக்கத்தை அதன் இயல்பான படிமுறையில் வளர்த்தெடுக்க விடுதலை இறையியலாரும் பொதுமையரும் ஆயத்தமாக இருக்கிறார்களா? அதாவது தமிழகத் தேசியத்தின் வலிமையாகத் தக்கவர்களாகிய தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடைமை வகுப்பினர் மீது இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத்தக்க ஒரு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா? இந்திய, பன்னாட்டு முதலைகளைப் பாதிக்காத ஆனால் உள்நாட்டினரின் குரல்வளையை நெரிக்கிற வருமானவரி, நில உச்சவரம்பு, வேளாண் விலை நிறுவுதல், தொழில் உரிமம், மூலப்பொருள் கட்டுப்பாடு, உள்ளூர் விளைப்புக்கும் நுகர்வுக்கும் எதிரான கட்டுப்பாடுகள்(ஏற்றுமதிப் பொருட்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் கிடையா. எ-டு. இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பருப்பு வகைகள்) போன்றவற்றுக்கு எதிராகவும் கோயில் நிலங்கள் உட்பட அனைத்து நிலவுடைமையிலும் குத்தகைமுறையை ஒழித்து நேரடியாகப் பயிரிடுபவனுக்கே நிலத்தை உரிமையாக்குவதற்கு ஆதரவாகவும் போராட வருவார்களா? அவ்வாறு தொடங்கினால் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனவரும் இந்தியத் தரகு அரசிடமிருந்தும் அதனைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளிடமிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.

அத்தகைய ஒரு ″விடுதலை இறையியலை″ உருவாக்கும் மனநிலை யாருக்கும் இப்போது இல்லை என்பதே என் கருத்து.

அன்புடன்
குமரிமைந்தன்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அன்புள்ள சத்யநாராயணன்

நீங்கள் தெரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவ்வளவு எளிதாகப்புரிந்துவிடாது.

இப்படிச் சொல்கிறேன். ஓரளவு தெளிவாக இருக்கும். ஆனந்த், வ.கீதா முதலியோர் பிராமணர்களுக்குள் உள்ள முற்போக்குத் தலித்துக்கள். அ.மார்க்ஸ் காஞ்சா அய்லய்யா போன்றவர்கள் பிறபடுத்தப்பட்டோருக்குள் உள்ள முற்போக்குத் தலித்துக்கள். கெய்ல் ஓம்வெத் போன்ற வெள்ளைக்கார முற்போக்குத் தலித்துக்களும் உண்டு. தலித்துக்களை வாழ்க்கையில் முன்னேற்றி ஒளியேற்றி வைப்பது பற்றி இவர்களுக்குள் கடும்மோதல் நிலவுகிறது.

இவர்கள்தான் உண்மையான தலித்துக்கள். தலித்துக்கள் கொஞ்சம் கீழான தலித்துக்கள். சென்னையில் உள்ள ‘ஒரிஜினல் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி’ மாதிரி. திண்டுக்கல்லில் உள்ளது ஒரிஜினல் ஆகாது. அதற்கு பண ஓட்டம் கம்மி இல்லையா?

தலித்துக்கள் தங்களைத்தாங்களே முன்னேற்றிக்கொள்ள அவர்களுக்கு நிதி ஏதும் சென்றுசேர்ந்துவிடக்கூடாது என்பது உலகறிந்தது. அது அவர்களுக்குத் தீங்கை விளைவிக்கும் என்பதனால் இவர்கள் அந்த நிதியை நடுவே நின்று செவ்வனே கையாளுகிறார்கள். அயோத்திதாசருக்கு ஒரு மலர்போடுவதற்கோ அவர் பேரில் ஒரு கருத்தரங்கு போடுவதற்கோ தலித்துக்கள் தெருத்தெருவாக நன்கொடை கேட்டு அலைவதிலிருந்தே அவர்கள் துப்புக்கெட்டவர்கள் என்று தெரிகிறதல்லவா? ஆகவேதான் இவர்கள் உதவுகிறார்கள். கையில்லாதவர்கள் சாப்பிடமுடியாமல் கஷ்டப்படும்போது அவர்கள் தட்டில் இருந்து எடுத்துச் சாப்பிட்டு தட்டைக்காலிசெய்ய உதவுவது எவ்வளவுபெரிய தர்மம்!

பொதுவாக அன்னியநிதி என்பது பிராமண முற்போக்கு தலித்துக்களுக்கே கிடைக்கும். [இன்னும் சொல்லப்போனால் அய்யர்களுக்கு. அய்யங்கார்கள் அன்னியநிதியிலும் கர்நாடக சங்கீதத்திலும் ஒடுக்கப்படுவதற்கு எதிராக அணிதிரளவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அனைத்துலக அய்யங்கார்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு அக்கார அடிசிலன்றி வேறேதுமில்லை] பிற்படுத்தப்பட்ட முற்போக்கு தலித்துக்கள் கடுமையாக களத்தில் உழைத்தாலும்பிராமண முற்போக்குத் தலித்துக்களாகப் பார்த்து ஏதேனும் கிள்ளிக் கொடுப்பதைத்தான் எடுத்துக்கொள்ளமுடியும். அல்லது மானம்கெட்டு இஸ்லாமியத் தீவிரவாத மேடைகளிலெல்லாம் ஏறி நின்று கத்தவேண்டும். சிக்கல் அங்கேதான் ஆகவேதான் மார்க்ஸ் இப்படிச் சாத்துகிறார்.

நவயானா சர்வதேச உதவியுடன் தலித்துக்களை உய்விக்க போராடும் பிராமண முற்போக்குத் தலித் அமைப்பு. கிறித்தவச் சாயல் கொண்ட நூல்கள் அவர்களுக்கு நன்றாக உதவக்கூடியவை. ஆழிசூழ் உலகு ஏசுசபைப் பாதிரியார்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு நாவல். வழக்கம்போல முழுதாகப் படிக்காமல், அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்கள். இப்போது அவர்கள் விலகிக்கொண்டிருப்பது அவர்களின் கொள்கைகளினால் அல்ல. எஜமானர்களின் கோபத்தை அஞ்சித்தான். அ.மார்க்ஸிடம் கேட்டால் அந்த ரகசியங்களைச் சொல்லக்கூடும்.

நீங்கள் எந்தச் சாதி என்று தெரியவில்லை. ஒரு அமைப்பை உருவாக்கி முறையான ‘பிராஜக்டு’களுடன் உரியமுறையில் முயன்றால் நீங்களும் தலித்துக்களை முன்னேற்ற உழைக்க முடியும். நல்ல வரும்படி உள்ள தொழில்.நீங்கள் பிறப்பால் தலித் அல்ல, நல்ல குடும்பப்பின்புலமும் படிப்பும் வருமானமும் உள்ளவர் என்றால் நீங்கள்தான் ஒரிஜினல் தலித்.

அதாவது தெள்ளத்தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் அனைத்து தலித்துக்களும் தலித்தே, தலித்தல்லாதவர்கள் கூடுதல் தலித். அவ்வளவுதான்.

ஜெ

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

போராட்டங்கள் அனைத்தும் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கானதே. இதை உணராத போராட்டங்கள் எவ்வளவு வீரியத்துடன் (உண்மையில் சாரத்தை இழந்துவிட்ட இத்தகையப் போராட்டங்கள் வீரியமானதேயில்லை) நடந்தாலும் முழு வெற்றியை அல்ல தற்காலிகத் தீர்வைக் கூட அடைய முடியாது. இந்த உண்மையை நமது அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

tuticorin church 600

அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் மீனவர் சமுதாயம் தங்களது ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தி வழி காட்டியது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவ மக்கள் பெண்கள், குழந்தைகள், பெரியவர், ஆண்கள் என அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் அணு உலையை எதிர்த்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தனர்.

இந்தப் போராட்டத்தின் நியாயத்தை இன்னொரு வழியில் எடுத்து செல்லத்தான் போராட்டக்குழுவிலிருந்து மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் மூன்று பேரும் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தனர். இவர்களின் தோல்வி தனிநபர் தோல்விகளல்ல. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தோல்விகளாகும். இருக்கின்ற அணு உலைகளை மூடும் போராட்டத்தின் தோல்வி மட்டுமல்லாது, இனி நிறுவ இருக்கின்ற 3, 4 அணு உலைகளை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டதைப் போன்ற தோல்வியுமாகும்.

இந்த வெளிப்படையான உண்மை நமக்கு முன் சில கேள்விகளை எழுப்புகிறது.

இந்தப் போராட்டத்தில் மீனவர் சமுதாயத்தை வழிநடத்தியது யார்?

போராட்டக்குழுவா? அல்லது கிருத்துவ திருச்சபைகளா?

போராட்டக்குழுவாக இருந்தால் போராட்டத்தில் உறுதியாக நின்ற மீனவர்களின் வாக்குகளை ஏன் பெற முடியாமல் போயிற்று?

கிருத்துவ திருச்சபைகள் என்றால் போராட்டக்குழுவை தோற்கடித்ததில் சபைகளுக்கு என்ன லாபம்?

திருச்சபைகளும் – மீனவர் சமுதாயமும்

பொதுவாகவே மீனவர் சமுதாயம் நிலவுகிற அரசு மற்றும் அதன் அதிகாரம் குறித்து அதிகமாக கவலைப்படாதவர்கள். மீனவர்களின் வாழ்வை கடலும் கடல் சார்ந்த இயற்கையுமே தீர்மானிப்பதால் அவர்களின் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றாத அரசு குறித்து அலட்டிக் கொள்வதேயில்லை. முதலாளித்துவ வளர்ச்சியில்தான் மீனவர் சமுதாயத்தின் மீது அரசின் தலையீடு உண்மையில் உருவாகத் தொடங்குகிறது.

சந்தைக்கான போக்குவரத்தில் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் அரசுக்கு முக்கியத்துவமாகி விடுவதோடு நாட்டின் அனைத்து மக்களையும் தனது பொருள் உற்பத்தி நடவடிக்கையில் (உற்பத்தி செய்ய – விற்க – வாங்க) ஈடுப்படுத்தவும் மீனவர் மீது அரசின் தலையீடு அவசியமாகி விடுகிறது.

மீனவர் சமுதாயத்திற்கும் முதலாளித்துவ கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகள் காரணமாக பொது அரசியலுக்குள் நுழைவது அவசியமாகி விடுகிறது.

இவ்வாறு மீனவர் சமுதாயத்தின் மீது அரசின் தலையீடும், மீனவர் சமுதாயம் பொது அரசியல் அரங்கிற்குள் நுழைகிற தேவையும் நமது நாட்டில் வெள்ளையர் வருகையால் (அவர்கள்தானே முதலாளித்துவத்தைத் திணித்தார்கள்) விழைந்தது. ஆனால் மீனவர் சமுதாயத்தின் மீது நேரடியாக வெள்ளை அரசின் அதிகாரம் நிறுவப்படாமல் அவர்களின் கிருத்துவ மெஷினரிகளின் அதிகாரமே நிறுவப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவ மக்கள் கிருத்துவ மெஷினரிகளின் கீழ்தான் இந்த அரசின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அரசு கிருத்துவ மெஷினரிகளான திருச்சபைகள் மூலம்தான் அம்மக்களை வழிநடத்தியது; இப்போதும் நடத்தி வருகிறது.

ஒருவகையான சுய பொருளாதார வாழ்க்கைமுறையைக் கொண்ட மீனவ மக்களுக்கு அரசின் நேரடியான அதிகாரத்தின் கீழ் வாழ்வதைவிட சுயசார்பு கொண்டதைப் போல் தோற்றமளிக்கிற திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் வாழ்வது பெரிய சிக்கலை உருவாக்கிவிடவில்லை.

இயற்கையோடு இணைந்த நிலையான பொருளாதார வாய்ப்புகள் இருப்பதால் மீனவர்கள் இதுவரை பெரிய அரசியல் நெருக்கடிகள் எதையும் எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு நேர்ந்த வழிபாடு சம்பந்தமான அனைத்து நெருக்கடிகளையும் திருச்சபைகளே முன்னின்று அரசிடம் பேசித் தீர்த்து வைத்துள்ளன. திருச்சபைகளால் முறைப்படுத்தப்பட்டு அமைப்பாக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் இன்றுவரை திருச்சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறார்கள்.

அணு உலை எதிர்ப்புப் போராட்டமும் – திருச்சபைகளும்

திருச்சபைகளை மீறி அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடக்கவில்லை. மீனவ மக்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக திருச்சபைகளோடு முரண்பட்டதாகவோ, மோதியதாகவோ எந்த ஆதாரமும் கிடையாது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் திருச்சபைகள் முழுமூச்சாகப் பங்கேற்றன. போராட்டக்குழுவில் பங்குத் தந்தைகள் இருக்கிறார்கள். பங்குத் தந்தைகளின் விடுதலை இறையியல் அரசியல் மேடைகளில் அனல் பரப்பின. ஆக திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீனவ மக்கள் துளியும் விலகாதப் போராட்டமே அது. ஒன்றின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள்தான் அதை வழிநடத்தவும் முடியும். எனவே போராட்டத்தை திருச்சபைகளே வழிநடத்தின.

திருச்சபைகளும் – தேர்தல் தோல்வியும்

பணத்துக்காக ஓட்டுப் போடுகிறவர்களல்ல மீனவர்கள். கடலன்னை அள்ளித் தருகிற அளவில்லாச் செல்வத்திற்கு சொந்தக்காரர்களான அம்மக்கள் அற்பக்காசுக்கு ஆசைப்படுகிறவர்களில்லை. அதேபோல திருச்சபைகளின் சொல்லை மீறி வாக்களிக்கிறவர்களில்லை. அவ்வளவு கட்டுப்பாடானவர்கள்.

ஆக மீனவர்கள் போராட்டக்குழுவினருக்கு ஓட்டுப் போடாமல் மற்றவர்களுக்கு போட்டார்கள் என்றால் திருச்சபைகளை ஏமாற்றி விட்டார்களா? திருச்சபைகளின் வழிகாட்டல் இல்லாமல் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை.. பெண்கள், குழந்தைகள், பெரியவர், ஆண்கள் என குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்ற மக்களிடம் ஓட்டை மாற்றிப் போடுவதற்கான வலிமையான வற்புறுத்தல்கள் இருந்துள்ளது. இப்பகுதி மீனவர்களிடம் திருச்சபைகளைத் தாண்டி யாரும் வற்புத்திவிட முடியாது. எனவே போராட்டக்குழுவினரின் தோல்விக்குப் பின்னால் திருச்சபைகளின் வழிகாட்டல் இருக்கிறது.

திருச்சபைகளின் அரசியல்

திருச்சபைகள் என்பது தேவனின் துதிப்பாடி பக்தர்கள் தருவதைக் கொண்டு உயிர்வாழ்கிற மடங்களல்ல. அவைகள் பல்வேறு கல்வி நிறுவனங்களையும், வணிக வளாகங்களையும், தேவாலய இடங்கள் மற்றும் விளைநிலங்களையும் கொண்ட பலகோடி மதிப்புடைய சொத்துக்களுக்கு அதிபதிகளாகும். இந்த சொத்துக்களின் பொருட்டு அவைகள் அரசோடு சமரசம் செய்துக் கொள்ள வேண்டுமே தவிர அரசை வீழ்த்துகிற வேலைகளில் ஈடுபடவே முடியாது.

எல்லா சொத்துடைய வர்க்கங்களைப்போல் திருச்சபைகளும் ஒரு பிரச்சினையில் ஆளும்வர்க்கங்களுக்கு இடையில் பிளவு இருக்குமானால் தனக்கு சாதகமான பக்கம் சாய்ந்து கொள்ளலாம். அப்படியில்லாமல் ஆளும்வர்க்கம் ஒன்றாய் நின்று நிறைவேற்றுகிற செயல்களை எதிர்க்க முடியாது. அப்படி எதிர்க்கத் துணிந்தால் திருச்சபைகள் தங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாது.

இவ்வளவு நீண்ட காலமாக ஆளும்வர்க்கத்தில் ஒரு அங்கமாக நீடித்துக் கொண்டிருக்கும் திருச்சபைகளுக்கு இது தெரியாதா? தெரிந்தும் எப்படி இவ்வளவு பெரியப் போராட்டத்தில் இறங்கின?

தெரிந்ததுதான். அதனால்தான் அவைகள் போராட்டத்தில் இறங்காமலிருந்தன.

ஆம். உதயகுமார் உள்ளிட்டோர் வந்து சொல்லும்வரை மக்கள் அணு உலையின் ஆபத்தை உணராமலிருந்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால் உயர்கல்வியாளர்களையும், பல ஆய்வாளர்களையும், உலக ஞானம் உடையோர்களையும், உலகத் தொடர்புகளையும் கொண்ட திருச்சபைகள் அணு உலையின் ஆபத்தை உணராமலா இருந்தன? அதேபோல அணு உலைப் பிரச்சினையில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் முடிவுகள் குறித்தும் உணராமலா இருந்தன?

இவை மட்டுமல்ல, மீனவர் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சேது சமுத்திரத் திட்டம், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரைப் பண்ணைவிடுதிகள், இறால் பண்ணைகள், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், சிங்கள கடற்படைத் தாக்குதல்கள் என எல்லாம் தெரியும். எல்லாம் தெரிந்து அவைகள் அரசுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. நகர்த்தினால் அவைகளின் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாது.

திருச்சபைகளுக்கு மீனவ மக்களின் நலன்களைவிட தமது சொத்துக்களின் நலங்களே முதன்மையானது. அதனால் அரசோடு சமரசம் செய்கிற அரசியலை மேற்கொள்ளுமே தவிர அரசுக்கு எதிரான அரசியலை ஒருபோதும் நடத்தாது.

மீனவர்களுக்கு முன்னால்...

அணு உலைகள் மட்டுமல்ல மீனவர் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சேது சமுத்திரத் திட்டம், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரைப் பண்ணைவிடுதிகள், இறால் பண்ணைகள், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், சிங்கள கடற்படைத் தாக்குதல்கள் என மீனவர் சமுதாயம் இப்போது பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான தொடக்கமாகவே அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இருந்தது. அந்தப் போராட்டம் ஏற்கனவே பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது தேர்தலில் கையாண்ட முறைகள் இன்னும் நெருக்கடிகளையே ஏற்படுத்தும்.

மீனவர் சமுதாயம் மக்களின் நலனைவிட தமது சொத்துக்களின் நலந்தான் பெரிதென மாறிவிட்ட திருச்சபைகளின் பிடியில் இருந்து முதலில் மீள வேண்டும். அடுத்து நாடு முழுவதும் ஒரு புரட்சிக்கான சூழல் இல்லாத நிலையில் நமதுப் போராட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச்செல்ல அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். தேர்தலும் நமக்கு நல்ல வாய்ப்பேயாகும்.

நாம் தேர்தலைப் பயன்படுத்த வேண்டுமென்றால் இப்போது இருக்கிற தேர்தல் முறைக்குள்ளே சில மாற்றங்களை உருவாக்க வேண்டும். ஒன்று இப்போது நடக்கிற 10 பேர் போட்டியிட்டு அதில் ஒருவர் வெற்றி பெறுகிற முறைக்கு மாறாக விகிதாச்சார பிரதிநிதித்துவம் பெறுகிற முறையில் தேர்தலை மாற்ற வேண்டும். ஓட்டுக்கு ஏற்றபடி கட்சிகளுக்கு பிரதிநிதிகள் கிடைப்பதென்பது கண்டிப்பாக மீனவர் கட்சிக்கும் பிரதிநிதிகளைக் கிடைக்க செய்யும். ஆனால் இதற்கு நாடு முழுக்க குரல் எழுப்பப்பட வேண்டும். நமது கோரிக்கைகளில் நாம் பின்தங்கியிருக்கும்போது மற்ற பலருக்கான கோரிக்கையை நாம் முன்னெடுக்க முடியாது. மற்றவர்கள் முன்னெடுத்தால் நாம் இணைந்து கொள்ள முடியும்.

இன்னொன்று மீனவர்களுக்கான தனித்தொகுதிகளை கோருவது. சமூகத்தின் ஒரு பிரிவினரான நமக்கு நம்மைப் பற்றித் தீர்மானிக்கிற சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நம்முடைய பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை. ஆகவே மீனவர் தொகுதி! மீனவர் பிரதிநிதி! என்ற கோரிக்கையை முன்னெடுப்பதாகும். இது சாத்தியமானது. நமக்கான தொகுதி உருவாக்கம் என்பது நம்மை ஒட்டி வாழ்வோரின் தொகுதியை மறு ஒழுங்குக்கு உட்படுத்துவதால் நமது நியாயத்தை மற்றவர்களையும் பேச வைக்கக் கூடியதாகும். அது நமது எல்லாப் போராட்டங்களுக்கும் ஆதரவைத் திரட்டுவதற்கான அரசியல் வெளியை உடனடியாக உருவாக்குவதாகும்.

- திருப்பூர் குணா (gunarpf@gmail.com)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பார்ப்பனியத்தை அகழ்ந்தால் வருவது வள்ளுவமே!

KESAVAN ON 22 JULY 2014. POSTED IN பொது

அறிஞர் குணா

அணு அறிவியலா? உலகுக்கு அதை ஆக்கித் தந்தவர்கள் வள்ளுவர்கள் தாமே? மருத்துவரா? முற்கால அறிவர்கள் தாமே பிற்காலச் சித்தர்கள்? சித்தர்களும் வள்ளுவர்கள் அல்லரோ? கணியமா? வானியலா? தூய கணக்கியலா? அளவையியலா? மொழியியலா? இலக்கணமா? தொன்மமா (புராணமா) எத்துறையில்தான் வள்ளுவர்கள் முன்னோடிகள் இல்லை!

இசை எனினும் அவ்வள்ளுவ மரபினரின் கைவண்ணம்தான். பாணர்களும் விறலியரும் தாமே இசையையும் கூத்தையும் வளர்த்தவர்கள்? ஏழிசை மரபை உலகுக்குத் தந்ததே இப்பாணர் மரபுதான். இப்பாணர்களும் வள்ளுவ மரபிற் குரிய தொல்தமிழரேயாவர். கி.பி. பன்னிரண் டாம் நூற்றாண்டு வரையில், பாணரும் கூத்தருமே இசையையும் கூத்தையும் பரவலாகப் பழகிவந்தனர்.

“பாட்டுப் பாடுவது கூத்தாடுவது முதலான சாத்திரத்திற்கு முரணான செயல்களின் வழியாகப் பொருளை ஈட்டக்கூடாது”

என்றுரைத்து, இசையையும் நடனத்தையும் பார்ப்பனர் கற்க மனுநூல் தடை விதிக்கும். பாணர் - கூத்தர் மரபின் முன்னோடி நிலையையே அது சுட்டும். இசைவாணர்களைத் திருடரென அர்த்தசாஸ்திரம் பழித்துரைக்கும்.

பார்ப்பன மறைகளை ஓதாமல் வரிப் பாட்டைப் பாடியதால் பார்ப்பனிய ஒழுக்கத் திலிருந்து தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப் பெற்றுச் சாதிக்கட்டுக்கு ஆட்பட்ட பார்ப்பனர் சிலர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்ததைப் பற்றி,

“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்

புரிநூல் மார்பர் உறைபதி...’’

எனச் சிலப்பதிகாரம் சொல்வதைப் பாவாணர் கோடிட்டுக் காட்டுகின்றார்.

காலப்போக்கில் அத்தடையை மீறி இசை கற்ற பார்ப்பனர், பின்னர் பாணர்களுக்கே பிழைப்பின்றிச் செய்துவிட்டனர். முதலில் நரம்புக் கருவிகளையும், அடுத்து துளைக்கருவி களையும் இசைக்கக் கற்றுக்கொண்ட பார்ப்பனர், மத்தளம் போன்ற தோல்கருவி களையும் கற்கத் தொடங்கி, இன்று மரபிசையே பார்ப்பனர் உருவாக்கிய இசை மரபுதா னென்னும் மயக்கத்தைத் தோற்றுவித்துள்ளனர்.

கி.பி. பதினொறாம் நூற்றாண்டு வரையில், பாணர்களாகிய தொல்தமிழரே இசைத்துறையில் சிறந்து விளங்கினர். நம்பியாண்டார் நம்பியும் அபயகுலச் சோழனும் பார்ப்பனரின் இருட் டடிப்புகளிலிருந்து தில்லையில் மீட்டெடுத்த தேவாரத் திருப்பதிகங்களுக்கு இசையமைப் பதற்கு, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மரபில் வந்த ஒரு பாணப் பெண் தானே தேடியமர்த்தப் பட்டாள்? இசைப் புலமையில் பாணர் மரபிற்கிருந்த மேனிலையைத் தம்வயமாக்கிக் கொண்ட பார்ப்பனர், அவற்றையெல்லாம் தமதே போல் கடைவிரிக்கும் காலத்தின் கோலத் தைத்தானே இசை வரலாறு காட்டுகின்றது,

“பார்ப்பனர் பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால்

பாணர் பிழைப்பும் கணியத் தொழிலை மேற்கொண்டதால்

வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமை

யாக்கியதால் தமிழ்ப் புலவர் பிழைப்பும் கெட்டன”

எனப் பாவாணர் அதைச் சுருங்கச் சொல்வார்.

பரசுராமனின் காலத்திலேயே வள்ளுவம் மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கியது. ஆயினும், அறிவராகிய வள்ளுவர்களுக்கு இருந்துவந்த குமுக மதிப்பு, ஒரு வரலாற்று எச்சமாக, மிக நெடுங்காலம் நீடிக்கவே செய்தது. அரசியல் _ குமுகியல் அதிகாரத் தகுதியை வள்ளுவர்கள் இழந்தபின்னரும், அவர்களுக்கெனத் தனிச் சிறப்பும் தனிமதிப்பும் இன்றுவரை என்றுமே இருந்து வந்துள்ளது.

இல்லாதொழிந்தது

இறைப்பற்று (பற்றி அல்லது பத்தி) இயக் கத்தின் இறுதிக்கட்டத்தில் விளங்கிய பெரிய கொள்கைகளை எல்லாம், சிவனியப் பார்ப் பனர்கள் ஆறு அகச்சமயங்களாகவும் ஆறு புறச் சமயங்களாகவும் வகுத்தனர். அந்நிலையில், வள்ளுவர்களின் வாழ்வியல் தகுதி மேலும் தாழ்ந்தது. சைவம், பாசுபதம், மா விரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்னும் ஆறும் அறுவகை அகச்சமயங்களாம். உலகாய்தம், மீமாஞ்சை, புத்தம், ஆருகம் (சைனம்), மாயா வாதம், பஞ்சராத்திரம் ஆகிய ஆறு கொள்கை களும் புறச்சமயங்களாம்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்த இவ் விளக்கங்களால், ஆசீவகரான வள்ளுவக் கணியர்கள் எல்லாம் சைனராக குறிக்கப் பெற்று, தங்களின் மூலமுதல் அறிவுத்தலைமையையும் தனித்தன்மையையும் ஒரேயடியாய் இழந்தனர். இதனாலேயே ஆசீவகத்தைப் புறச்சமயங்களில் ஒன்றாகச் சூடாமணி நிகண்டு சொல்லவில்லை. ஆசீவகர் என்னும் பெயரால் இழித்துரைக்கப் பட்ட வள்ளுவக் கணியர்கள், பின்னர் முற்றிலு மாய்ப் புறக்கணிக்கப்பட நேர்ந்த ஒரு வாழ்வியல் மாற்றத்தையே அது காட்டுகின்றது.

பின்னர், சாளுக்கியராம் கன்னடத் தெலுங் கரின் படையெடுப்புகள் தமிழகத்தை அலைக் கழித்தன. முதலாம் குலோத்துங்கன் எனப் பின்னர் பெயர் கொண்ட சாளுக்கிய இளவரசன் இராசேந்திர சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு தமிழர் மீது சாளுக்கியர் ஆக்கிய மனுநெறியைத் திணித்தான். தமிழரை வலங்கையர் என்றும் இடங்கையர் என்றும் சாதியால் கூறாடிய போலிச் சோழ வந்தேறி ஆட்சியில், வள்ளுவர்களும் பிற தொல் தமிழர் களும் குடிக்கூலியாகப் பறை என்னும் முகத்தலளவையால் நெல் அளந்த ‘குடியானவர்’ என்னும் பொருளில் ‘பறையர்’ ஆகினர். பின்னர், திராவிடராம் கன்னடத் தெலுங்கு நாயக்க வந்தேறி ஆட்சியில் அம்மண்ணின் மைந்தர்கள் ‘தீண்டப்படாதோர்’ ஆகினர்.

அறிவுப்பறிப்பு

வள்ளுவக் கணியரிடம் இருந்து வந்த ஆசான் பெருங்கணி என்னும் அரசனுக்கு அடுத்த அரசுப் பதவியையும் பட்டத்தையும் பார்ப்பனர் பையப்பையப் பறிக்கத் தொடங்கியதே வள்ளுவர் வீழத் தொடங்கியதன் முதற்கட்டம். பார்ப்பனர், அவ்வள்ளுவர்களிடமிருந்து அடுத்தடுத்து அறிவு மடிபறிப்புச் செய்யத் தொடங்கினர்.

இன்று சொல்லப்படும் வேதிய கணக்கியல், வேதிய அறிவியல், வேதிய வானியல், வேதிய மருத்துவம், வேதிய மெய்யியல் முதலான அறிவுச் சரக்குகளை எல்லாம் ‘பார்ப்பனர் செய்தது’ என்னும் பெயரொட்டியுடன் கடைவிரிக்கும் பார்ப்பனர்கள், பார்ப்பனியம் எட்டிய அறிவு முகட்டையும் அறிவு ஆழத்தையும் அகலத்தை யும் சிறப்பையும் பற்றி வாய்கிழியப் பேசுகின் றனர். முழுப் பூசணைக்காயையே இலைச் சோற்றில் மறைக்கின்றனர். வள்ளுவக்கணியர் ஆக்கித் தந்த கணக்கியலே இவர்தம் ‘வேதியக் கணக்கியல்’. வேதிய  வானியலும் அவ்வாறே யாகும். பார்ப்பனிய மறைகளையும் மறையொட் டுகளையும் (உபநிடதங்களையும்) பற்றிய ஆய்வுகள் அவ்வுண்மையை மெய்ப்பிக்கின்றன.

வள்ளுவத்திடம் பாடம் கற்ற பார்ப்பனியம்

சாம வேதத்தின் பின்னொட்டாகிய சாந்தோ கிய உபநிடதத்தில் ஒரு கதை வருகின்றது.

சைவலி என்னும் மன்னனின் மகன் பிரவாகனன். பாஞ்சால நாட்டை ஆண்டு வந்தான். சேதகேது என்னும் ஒரு பார்ப்பனச் சிறுவன், அவ்வரசனிடம் சற்றுத் திமிராக நடந்து கொண்டான். அவனை அடக்கக் கருதிய அரசன், அவனிடம் கீழ்க்கண்ட ஐந்து கேள்வி களைக் கேட்டான்.

முதல் கேள்வி : “மாந்தரெல்லாம் இம் மண்ணுலகிலிருந்து எழுந்து எங்கே செல்கின் றனர் என்பதை அறியாலாமா?” (அதே கதையைக் 

கூறும் பிருகதாரணியக உபநிடதம், “செத்த உயிர்களெல்லாம் வெவ்வேறு வழிகளில் செல்வது எங்ஙனம் எனத் தெரியுமா?” எனச் சற்று மாற்றிக் கூறுகின்றது.

இரண்டாவது கேள்வி : “(இவ்வுலகை விட்டுச் சென்ற) அவர்கள் மீண்டும் எவ்வாறு திரும்பி வருகின்றனர் என்பதைப் பற்றித் தெரியுமா?” (“அடுத்தடுத்து இவ்வுலகை விட்டுச் சென்றவர் எல்லாம் மீண்டும் திரும்புவதே இல்லையென் பதை அறிவாயா?” என்னும் கேள்வியைப் பிருக தாரணியக உபநிடதம் மூன்றாவது கேள்வியாக வைக்கின்றது’’.

மூன்றாவது கேள்வி : “தேவயானமும் பிதிர யானமும் வகுபடுவது எங்கேயெனத் தெரியுமா?’’

(“தேவயானம் என்னும் பாதையையும் பிதிரயானம் என்னும் பாதையையும் எட்டுகின்ற வகை உனக்குத் தெரியுமா? ஒன்று, நம் மூதாதையரின் பாதை, மற்றது தெய்வங்களின் பாதையென இரு வேறு பாதைகளின் ஊடே மாந்தரெல்லாம் செல்ல வேண்டுமென மாமுனிவர்கள் சொல்லிச் சென்றதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? தந்தையிலிருந்து தாய் வேறாவதைப் போன்றே, மூதாதையரின் பாதையும் தேவர்களின் பாதையும் வெவ்வே றானவை என்பதை அறிவாயா?’’ எனப் பிருக தாரணிய உபநிடதம் அதை விரித்துரைர்க்கும்...

நான்காவது கேள்வி : “(செத்த பின்னர் மக்கள் போகும்) அவ்வுலகம் ஏன் நிறைவதேயில்லை என்பதைப் பற்றி அறிவாயோ?’’

ஐந்தாவது கேள்வி : “ஐந்தாவது, அவியுண வின் சாறுதான் புருடன் என்பதை அறிவாயோ?’’ (எந்தப் படையலைச் செய்கையில், மாந்தரின் சொற்கள் நீராக மாறவும், எழுந்து பேசவும் செய்கின்றன என்பதை அறிவாயோ?’’ என்பது பிருகதாரணியக உபநிடதத்தில் வரும் ஐந்தாவது கேள்வி).

இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாது அப்பார்ப்பனச் சிறுவன் விழித்தான். அப்போது அரசன்,

“உன் தந்தை இவற்றையெல்லாம் உனக்குக் கற்பிக்கவில்லையா?’’

என்று கேட்க, அப்பார்ப்பனச் சிறுவன் சடாரென எழுந்து நடைகட்டினான். நேராகத் தன் தந்தையிடம் போய்,

“பாழாய்ப் போன அந்த அரசன் என் மானத்தை வாங்க எல்லோர் முன்னாலும் ஐந்து பெரிய கேள்விகளைக் கேட்டானே? அவற்றில் ஒன்றுக்கேனும் எனக்கு விடை தெரிய வில்லையே’’

எனச் சொல்லி பொருமினான். கோதமர் குலப் பார்ப்பனர் அதற்கு,

“அவற்றில் எனக்கே ஒரு கேள்விக்கேனும் விடை தெரியாதபோது உனக்கு எப்படிக் கற்பித்திருக்க முடியும் மகனே? தெரிந்திருந்தால் உனக்குக் கற்பித்திருக்க மாட்டேனா?’’

என்று சொன்னான். பின்னர் அக்கேள்வி களுக்கான விடையறிய அரசனிடம் நேரில் சென்றான்.

அப்பார்ப்பனனை வணங்கி வரவேற்ற அரசன், என்ன பரிசில் வேண்டுமென அவனைக் கேட்க,

“பரிசில் கிடக்கட்டும், என் மகனிடம் நீர் கேட்ட கேள்விகளுக்கான விடையை முதலில் சொல்லும்? எனப் பார்ப்பனச் சொன்னான்.

பார்ப்பனன் கேட்ட முறையைக் கண்டு வருந்திய அரசன், அவனைப் பார்த்து,

“நீர் கேட்டதால் உமக்குச் சொல்கின்றேன். அக்கேள்விகளுக்கான விடைகள் எந்தப் பார்ப்பனனுக்கும் இதுவரை தெரியாது. அப்பொருளைப் பற்றிப் பாடம் புகட்டும் உரிமை, இதுவரை அரசகுடியினரிடம் மட்டுமே இருந்து வந்துள்ளது’’ எனக் குறிப்பிட்டுவிட்டு ஐந்து வகைத் தீக்களைப் பற்றிய பாடத்தை அப்பார்ப்பனனுக்குப் படித்தான். இதுவே சாந்தோகிய உபநிடதத்தில் வரும் கதை.

சாந்தோகிய உபநிடதத்தை ஆங்கிலப்படுத்திய இராசேந்திர லாலா மித்ரா, அந்த ஐந்து கேள்விகள்தான் வேதிய இறையியலின் அடிப்படைக் கூறுகள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றார்.

தொன்மையில் பூசைகளையும் வேள்விகளை யும் செய்திட மட்டும் பார்ப்பனருக்குத் தெரிந் திருந்ததேயன்றி, மறைபொருள் விளக்கங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறுகின்றார். பார்ப்பனரின் அறிவுநிலை அன்றைய அரசரின் அறிவுநிலையை விடத் தாழ்ந்திருந்தது என்பதை அக்குறிப்பு மெய்ப்பிப்பதாக இராசேந்திரலாலா மித்ரா தனது மொழியாக்கத்தின் ஓர் அடிக்குறிப்பில் கூறுகின்றார்.

பிதிரயானம், தேவயானம் என்னும் பாதை களைப் பற்றி வருகின்ற கேள்வியே உபநிடதக் கேள்விகளில் மிகவும் சீரிய கேள்வி. தென் செலவு (தட்சிணாயானம்) என்னும் ஞாயிற்று மண்டிலப் பகுதியைக் குறிப்பதே ‘பிரதியானம்’. வடசெலவு (உத்திராயனம்) என்னும் ஞாயிற்று மண்டிலப் பகுதியைக் குறிப்பதே ‘தேவயானம்’. உபநிடதங்களில் வரும் பிற குறிப்புகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஞாயிற்று மண்டலமும் வான் நடுவரையும் ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளே மேழவிழுவும் துலைவிழுவும் ஆகும். பிரவாகனன் எழுப்பிய கேள்விகள் இவற்றைப் பற்றியன.

மேற்சொன்ன உபநிடதக் கதை, அக்காலத்தில் ஆரியப் பார்ப்பனருக்கு வானியல் அறிவு இல்லையென்பதைக் காட்டும். வள்ளுவக் கணியர் ஆக்கிய அறிவியலே வானியல் என்பதை யும் அது புலப்படுத்தும். அவ்வள்ளுவர்களின் வானியல் அறிவையும் வான் நிகழ்வுகளையும் பல கட்டுக்கதைகளாகச் சொல்லும் இருக்கு வேத வானியலும் கணக்கியலும் கணியமும் ஆகியன வெல்லாம், பார்ப்பனியம் வள்ளுவத்திடம் கற்ற பாடங்களே என்பதை மெய்ப்பிக்கும் சான்று அஃதாகும்.

உத்கீதையைப் பற்றிய அறிவே அடிப்படை அறிவென உபநிடதங்கள் கூறுகின்றன. ‘ஓம்’ என்னும் மந்திரத்தைக் குறிப்பதே உத்கீதை. உயிரும் பேச்சும் என்னும் பொருளில், உத்கீதை (அல்லது) உத்கீதம் என்னும் சொல்லை உத் + கீதை என பிருகதாரணியக உபநிடதமே பிரித்துக் காட்டும்.

உள்+கீதம் என்னும் புணர்ச்சி, தமிழில் உட்கீதை என்றாகும் என்பதைத் தமிழ் இலக்கணம் அறிந்தோர் நன்கறிவர். உள் என்னும் தமிழ்ச் சொல்லும், கீதம் என்னும் வடசொல்லும் கலந்த சொற்புணர்ச்சியால் வந்த ‘உட்கீதம்’ என்னும் கலப்புச் சொல்லே ‘உத்கீதம்’ எனத்திரிந்துள்ளது.

இத்துடன் ‘ஓம்’ என்னும் சொல் ஒரு தமிழ்ச் சொல்லேயன்றி ஒரு மூலச் சங்கதச் சொல் ஆகாதென ஆய்ந்தோர் தெளிவாக நிறுவி யுள்ளனர். பிரவாகனன் சேதகேதுவைப் பார்த்து, “உன்னுடைய தந்தை உனக்குக் கற்பித்துள் ளானா?’’ எனக் கேட்டபோது, அதற்கு, “ஆம்’’ என்னும் பொருள்படும்படி, “ஓம்’’ என்றே விடையிறுத்ததாகப் பிருகதாரணியக உபநிடதம் சொல்கின்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள், “ஆம்’’ என்பதை இன்றுவரை “ஓம்’’ என்றே வழங்கி வரவதை இங்குச் சுட்டிக் காட்டலாம்.

இவை யாவும் வேதியப் பார்ப்பனிய அறிவின் அடிப்படைகளெல்லாம் தமிழ் வள்ளுவர்களிட மிருந்து பார்ப்பனர் கற்ற பாடங்கள் என்பதையே மெய்ப்பிக்கின்றன. ‘பார்ப்பானுக்கு மூத்த பறையன், கேட்பாரின்றிக் கீழ்ச்சாதி யாவான்’ என்னும் பழமொழியும் இதற்குச் சான்றுரைக்கும்.

மீண்டும் சொல்வோம்! அதை அழுத்திச் சொல்வோம்! வள்ளுவக்கணியர்கள் ஈன்று வளர்த்த அறிவுச் செல்வங்களை எல்லாம் தம்வயமாக்கித் தமதாக்கிக் கொண்ட பார்ப்ப னரின் அறிவுத்திரட்டின் விளைவே வேதிய அறிவியல். வேதிய மருத்துவமும் அவ்வாறே யாகும். அவ்வள்ளுவர்களின் மெய்யியல் மரபைத் தம் வயமாக்கிக் கொண்டதால் வந்ததே வேதிய மெய்யியல். வேதியஇசை என்பதும், பாணர்களும் கூத்தர்களும் வடித்த ஏழிசை மரபின் தழுவலும், அதன் தன்வயமாக்கமுமாகும். வள்ளுவத்தின் ஆக்கமாகவும் கொடையளிப்பாகவும் விளங்கி வந்த அறிவுத் துறைகளை எல்லாம் தமதாகவும், தாமே ஆக்கித் தந்தனவாகவும் பார்ப்பனியம் சொல்லித் திரிவது எவ்வளவு பெரிய ஏமாற்று.

பார்ப்பனிய அறிவுக் கொடையும் மரபும் என்று எதையெதைக் காட்டி வேதிய அறிவு எனக் கூறுகின்றனரோ, அவற்றில் தொண்ணூறு விழுக்காடு வள்ளுவர்களின் அறிவு மரபாகவும் ஆக்கமாகவும் இருப்பதைப் புதிய பல ஆய்வுகள் காட்டுகின்றன. மாந்தநேயத்திற்கும் ஒப்புரவு நெறிக்கும் புறம்பான சாதிவெறி மட்டுமே அர்ப்பார்ப்பனியத்தின் (பிராமணீயத் தின்) சொந்தப்படைப்பு என்றிடலாம். பிற யாவும் அப்பழுக்கற்ற இரவல்களும் அறிவுக் களவாடல்களுமே என்னும் உண்மை விளங்கும் நாள் மிகத் தொலைவில் இல்லை.

வேதம் பிறந்த தமிழ்நாடு

“ஈறான கன்னி குமரியே காவிரி

வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்

பேறான வேதா கமமே பிறத்தலான்

மாறாத தென்றிசை வையகஞ் சுத்தமே”

என்னும் திருமந்திரப் பாட்டு, வேதம் பிறந்த இடம் தமிழ்நாடே எனச் சுட்டுவதாக மாகறல் கார்த்திகேயனார் சொல்வதையும் இங்குக் குறிப்பிடலாம்.

“பழமைறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற

பச்சைப் பசுங்கொண்டலே”

என்னும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் அதை மெய்ப்பிக்கின்றது.

“அண்டபிண்டம் பிறந்ததெங்கே சிவசிவ

அந்தணர்முனிவர் வந்துதித்ததெங்கே?

பிண்டம்பலவுயிரும் வந்து பிறந்தவகை

பிரபந்தமிதையறிந்து பேசுவீர்காண்!

மண்டலமும் மண்டலஞ்சூழுங் கதிர்மதியும்

வன்னியும் பிறந்த தெங்கே வானுமெங்கே?

விண்ட பொருளாண்டருங்கானார் வேதியர்களே

விசுவரூபமறிந்து விளக்குவீரே! தந்தன”

என்னும் ஞானவெட்டியான் பாடல் பார்ப் பனரை நோக்கி விடுகின்ற கேள்விகள். அவ் வுண்மையை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டி களாக உள்ளன.

பின்னாளில் கோயில் அறங்காவலராக இருந்த பிற்கால வள்ளுவர்கள், அவ்வுரிமையையும் படிப்படியாக இழந்தனர். கோயில்களில் அன்றாடப் பணிகளை ஆறு வள்ளுவர்களை வைத்தே நடத்த வேண்டுமென்பது இடைக்கால மரபு.

பழைய வள்ளுவம் ஒரு வாழ்வியல் எச்சம். அது புறமை வடிவிலான அன்றைய வள்ளுவம். பார்ப்பனியத்திற்கு முந்திய வாழ்வியல் அமைப்பாகவும், அரசியல் நெறியாகவும் இலக்கணமாகவும் விளங்கியதே முற்கால வள்ளுவம். அக்கால அறிவு உலகமே பழைய வள்ளுவம். ஆனால், அப்பழைய வள்ளுவத்தின் மிச்சம் மீதிகளும் கூடச் செத்துவிட்டன. வள்ளுவர்களில் சிலர் புதிய பார்ப்பனராகப் போலிகை செய்து கொண்டு பழைய பார்ப்பனி யத்தில் கரைத்துவிட்ட இயற்பாடு ஒருபுறம். பண்டாரங்களாகத் திரிந்த வேறு சில வள்ளுவர்கள், அங்கும் நிலைக்க முடியாமல் கெட்டழிந்து கொண்டிருப்பது மறுபுறம். இந்நிலையில், எஞ்சியுள்ள வள்ளுவர்களோ இடுகாட்டுக்கும் சுடுகாட்டுக்கும் தள்ளப்பட்டுச் செத்துவருவதை வைத்தே அவ்வள்ளுவர்களின் வீழ்ச்சியின் இறுதிப்படலத்தை இன்று எழுத வேண்டியுள்ளது.

இருட்கூறு

வள்ளுவத்தினால் எல்லாம் நல்லதே விளைந்த தென்னும் கருத்தும் தவறாகும். ஒன்று மற்றொன் றாதல் என்பது இயங்கியல் அறிவன்றோ? நல்லதில் கெட்டதும் இருக்க வேண்டுமென்பது தானே இயல்பு?

தொல்மாயையியல் பெற்றெடுத்த இரட்டைப் பிறவிகளே தொல் அறிவியலும் தொல் வழிபாடும். பக்குடுக்கை நன்கணியார், கணி ஆதன் முதலான தொல் அறிவர்களாகிய வள்ளுவர்களிடம் அறிவியல் கூறு மேலோங்கி நின்றது. பிற்கால வள்ளுவர்களிடமோ எதிர்மறைப் போக்கிலான வழிபாட்டுக் கூறு வலுவாக இருந்தது. அவ்வழிபாட்டுக் கூறுதான், பின்னர் புறவழிபாடு, அகவழிபாடு என வகுபட்டது. பிற்காலத்தவரான சித்தர்களிடம் அகவழிபாட்டுக் கூறே மிக மேலோங்கி நின்றது. மருத்துவம், மாறணம், கணியம் என்னும் அளவுக்கு அவர்களிடமிருந்த அறிவியல் கூறு, காலப்போக்கில் மெல்லச் சுருங்கியது.

அகவழிபாடு என்றால் என்ன? பொது அறிவுக்கோ, புலனறிவுக்கோ (காட்சிக்கோ) அப்பாற்பட்டு, பட்டறிவுக்கும் ஆய்வுக்கும் புறம்பான அகவுணர்வைக் கொண்டு, அகக்காட்சியின் வாயிலாகக் கடவுளை (அல்லது ஒரு சமயக்கருத்தை) உடனடியாகவும், நேரடியாக வும் அறியமுடியும் என்னும் கருத்தியக் கொள்கையும் நம்பிக்கையுமே அகவழிபாடு ஆகும். உள்ளத்திலடங்கிய உள்ளொளியையோ அதன் வெளிப்பாட்டையோ கொண்டு வாழ்க்கையின் அத்தனைப் புதிர்களுக்கும் விடை காணப் பார்க்கும் அறிவுநெறியே அகவழிபாடு. புறமை நிலையிலான மாந்தப் பட்டறிவு என்னும் அடிப்படையின்றி, கனவுநிலை ஊழ்கங்களையும் எண்ணோட்டங்களையும் தழுவியதே அந்த அகவழிபாட்டு நெறி.

பிற்கால அறிவர்களின் (சித்தர்களின்) கருத்தியப் பார்வை, முற்கால அறிவர்களின் (கணியர்கள்) பொருண்மையியப் பார்வைக்கு நேரெதிரானது. ஒன்று மற்றொன்றாகிய நிலை இஃதாகும். முற்கால வள்ளுவத்தின் தொடர்ச்சி யும் எதிர்மறையுமே பிற்கால வள்ளுவம் ஆகும். முற்கால, பிற்கால வள்ளுவர்களின் அறிவியல் நெறியும் அற நெறியுமே வள்ளுவமாயின. அதன் அடிப்படைகள் இக்காலத்துக்கும் நன்மை பயக்கும். ஆனால், வள்ளுவர்கள் பழகிவந்த மந்திர தந்திரங்கள், கணியம் என்னும் அறிவுக் கொவ்வா கரவு அறிவே வள்ளுவமாயின், அதனால் நன்மை இல்லை. கேடுதான் தொட ரும். மூடநம்பிக்கைக்கு முட்டுக்கால்களாகித் தமிழரினம், மேன்மேலும் கெட்டழியச் செய்யவல்ல வள்ளுவத்தின் அம்முகப்பு, இனித் தேவையில்லையென அடித்துச் சொல்லவல்ல துணிவும் நேர்மையும் அறிவு நாணயமும் நமக்கு வேண்டும். அதுதான் வள்ளுவமாயின், அதைக் கொண்டு போய் அருங்காட்சியகத்தில் வைப்பதைத்தவிர வேறுவழி இல்லை.

பிற்காலத்தில் கணியம், நிமித்தம் வழியிலான மூடநம்பிக்கைகள் அறிவுக்கொவ்வா அளவில் பெருகவும், அதனால் தமிழினமே வீழவும், பிற்கால வள்ளுவர்களும் பெரிய காரணமாகினர் என்பது ஒரு கசப்பான வரலாறு. தன்முயற்சியும் தன்னம்பிக்கையும் இழந்தவர்களாய் எதற்கெடுத் தாலும் நல்லபொழுது, கெட்டபொழுது என்றும் ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தை)ப் பார்த்துக் கெடுவதும், பூனை குறுக்கே போதல் முதலான வெல்லாம் தீக்குறிகளனெ நம்பிச் செயலறுவதும், தனி மாந்த வாழ்வில் நோய் நொடி முதலான அன்றாட வீட்டு நடப்புகளுக்கும்கூட நாள்கோள்  நிலைகள்தாம் காரணமெனக் கருதி வருந்துவதும், அவற்றின் வழியாக ஆழப்புரை யோடிய மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப் பதும், எதையும் தலையெழுத்தென எடுத்துக் கொள்ளும் தற்குறித்தனமும் ஆகியனவெல்லாம் வள்ளுவர்களின் குறி (நிமித்தம்) பார்த்தல் என்னும் தொழிலால் வந்த கேடுகளாகும். தமிழினமே தன்மானம் இழந்து, அறிவை மயக்கும் அயல்புலக் கொள்கைகளுக்கும் புரட்டுக்களுக்கும் ஆட்பட்டமைக்குத் தமிழரிடம் காணப்படும் கணியப்பித்தும் ஒரு காரணமாகியது. பகுத்தறிவு என்னும் மூளையை மூட்டைக்கட்டி எறிந்துவிட்டுத் தமிழர் தம் தன்மானம் சொத்தையாகிக் கெடச்செய்த அப்பகுதியே, வள்ளுவத்தின் இருட்கூறு. முற்கால வள்ளுவத்தின் அறிவியலுக்கும் அறிவுக் கும் புறம்பான பகுதி அது. ஆயினும், பார்ப்பனி யடத்திடம் சைனம், பவுத்தம் முதலான அயல்புல மதங்களிடமும் முற்கால வள்ளுவம் தோற்ற  பின்னரே, அத்தகைய சீரழிவுகள் மளமள வெனப் பெருத்தன என்பதை மறத்தலாகாது.

முற்காலக் கணியர்களின் அறிவியலை வீழ்த்தியது ஆரியப்பார்ப்பனியத்திடம் அடி பணிந்த பிற்கால வள்ளுவப் பிறங்கடைகளே என்னும் வரலாற்றுப்புதிரும் விளங்காமல் இல்லை. கணியத்தையும் மருத்துவத்தையும் ஒருசேரப் பழகிவந்த சிலர், தம்முன்னோர் சேர்த்து வைத்திருந்த மருத்துவ நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டுபோய் ஏரியில் எறிந்துவிட்ட நிகழ்வுகளும் உண்டு. தம் வள்ளுவ முன்னோர் வளர்த்த அறிவியலை அறியாமையால் தூக்கியெறிந்துவிட்டு, பிழைப்புக்குக் கணியத்தையும் புள்குறியையும் மட்டுமே பற்றிக்கொண்ட அவ்வள்ளுவப் பிறங்கடைகளும்கூட முற்கால வள்ளுவ அறிவர்கள் ஆக்கித்தந்த வளமான அறிவியலும் மெய்யியலும் அழிவதற்கான காரணமாகினர்.

அக்கணியர்கள் வளர்த்த அணுவியம், மருத்துவம், மாறண வடிவிலான இயைபியல், பொருண்மையிய மெய்யியல் ஆகிய அனைத்தும், கிரேக்கத்தில் நிகழ்ந்ததைப் போன்ற தூய அறிவியல் என்னும் வளர்ச்சிப் போக்கில் செல்லவில்லை. தொல்மாயையியல் பெற்றெடுத்த இரட்டைப் பிறவிகளான அறிவியலும் மதமும் ஒன்றோடொன்று முரணி, பிளவுபட்டு, தனித்தனியாக முழுமையடைந்தமையைக் கிரேக்க வரலாற்றில் காணலாம். ஆனால், வள்ளுவம் வளர்த்திட்ட அறிவியலும் மெய்யியலும் புள்குறி (புள் நிமித்தம்), கணியம் முதலான மூடுமந்திர ஓட்டினை உடைத்துக் கொண்டு, சிம்புள் பறவைக் குஞ்சுகளாக வெளிவராமையே தமிழரின் அறிவு வரலாற்றின் அவலமாகும்.

அவ்வள்ளுவ அறிவியல் மெய்யியல் நூல்களையெல்லாம் சங்கதம் (சமஸ்கிருதம்) என்னும் செயற்கை மொழியில் மொழிபெயர்த் துக் கொண்டு வள்ளுவர்களின் மூலநூல்களை அழித்தொழித்த பிறகு, அவை யாவும் தம் சொந்த மரபிற்குரியவெனச் சொந்தம் பாராட்டி வரும் பிராமணரான பார்ப்பனரே, அவ்வள்ளுவ மரபை எதிர்மறை நிலையில் இன்று பேணிக் காத்து வருகின்றனர் என்பது புதிரிலும் பெரிய புதிர். இதுவே ஒன்று மற்றொன்றாகிய தலைகீழ்க் கோலம். இதனால், அன்றைய வள்ளுவத்தை இன்றையப் பார்ப்பனியத்திடமிருந்து மீட்க வேண்டும்.

ஒளிக்கூறு

வள்ளுவ மரபில் வந்த சிலர் மறைத்தொழித்த சில அரிய தமிழ் நூல்களை வழிவழியாய்ப் பேணிக் காத்து, சென்ற நூற்றாண்டு தொடங்கி அவற்றை அச்சேற்றிய வரலாற்றுச் சிறப்பும் சிறிதன்று. மற்றவர்களே ஆடிப்பெருக்கில் அரிய தமிழ் நூல்களை அள்ளிக்கொட்டிக் கடுதாசிக் கப்பலோட்டியவண்ணம் பார்ப்பனியத்தின் தொண்டரடிப் பொடியராய் கிடந்தபோது, மறைந்த சில தமிழ் நூல்களையும் மீட்ட அவ்வள்ளுவ மரபினருக்குத் தமிழுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

குமாரசாமியம், மணிகண்ட கேரளம், சோதிடாலங்காரம், வருடாதி நூல் முதலான கணிய நூல்களை வள்ளுவ மார்க்க லிங்கப் பண்டாரம், மரணகண்டி, கேரளம் முதலிய வற்றைக் குழந்தைவேல் பரதேசி, திருவள்ளுவரின் திருக்குறள், நாலடி நானூறு, அறநெறித்தீபம் ஆகியவற்றை நடுவர் ஆரிங்டனின் ஏவலரான கந்தப்பன் ஆகியோர் பேணிக்காத்து, அந் நூல்கள் அச்சேற்றப்படக் காரணமாக இருந் தனர். திருமயிலைக் குழந்தைவேல் பண்டாரம் தான் சித்தர் பாடல்களையும் புதுப்பேட்டைத் திருவேங்கடசாமிப் பண்டிதர்தான் வைத்திய காவியம், சிவவாக்கியம், இரத்தின தீவகம் ஆகிய சில நூல்களையும், க.அயோத்திதாச கவிராய பண்டிதர்தான் போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சமிட்டிரத்தினச் சுருக்கம், பாலவாகடம் முதலான மருத்துவ நூல்களையும் வெளியிடக் காரணமாயினர். அரிச்சுவடி, வரிக்குவாய்ப்பாடம், கொன்றைவேந்தன், பெயர்ச்சுவடி, வெற்றிஞானம், மூதுரை, திவாகர நிகண்டு, என்சுவடி, நெல்விலக்கம், பொன் னிலக்கம் ஆகிய தொன்னூல்களை எல்லாம் பேணிக்காத்து வெளிக்கொணர்ந்தவரும் அவ்வள்ளுவ மரபினரேயாவர். திருக்குறள், ஆத்திச்சூடி, ஔவை குறள், வெற்றி ஞானம், மூதுரை நீதிவெண்பா, விவேக சிந்தாமணி ஆகிய அரிய தமிழ் நூல்களை இயற்றியவர்கள் எல்லாம் அம்மரபின் வழிவந்தவரேயாவர்.

வள்ளுவமென இந்நூற்றாண்டில் சொல்லப் பட்டு வருவது, அணுக்கொள்கையோ, கணக் கியலோ மருத்துவமோ முதலான அறிவியல்களும் மெய்யியல்களும் அல்ல. திருக்குறள் கற்பித்த நன்னெறிகள் மட்டுமே இன்று வள்ளுவமென நம்மிடையே கற்பிக்கப்பட்டு வருகின்றன. அஃது அகமை வடிவிலான புதிய வள்ளுவம். உலகம் போற்றும் திருக்குறளைத் தழுவியது அவ் வள்ளுவம். வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி யாகவும் அறநெறியாகவும் இலக்கியமாகவும் அமைந்த அந்நூலைச் சார்ந்த புதிய விளக்கமே இவ்வள்ளுவம்.

பிற்கால வள்ளுவம் பெரிதுபடுத்திய அறிவியலுக்குப் புறம்பான மூடுமந்திரங்களையும் (புறவாய்ப்புள் என்னும்) சொல் கணியத்தையும், அதைத் தழுவிய மூடநம்பிக்கைகளையும் மீட்பதென்பது அவ்வள்ளுவத்தையே மீட்ப தெனப் பொருள்படாது. வள்ளுவம் வளர்த்த அறிவியலையும் மெய்யியலையும் இக்கால நெறிகளுக்கேற்ப மீட்பதென்றே அது பொருள்பட வேண்டும். திருக்குறள் காட்டும் அறமும் பொருளும் இன்பமும்கூட, இன்றைய அறிவு இலக்கணங்களுக்கேற்ப புதிய விளக்கங் களைக் காட்டப் பயன்படுதல் வேண்டும். பார்ப்பனியம் மடிபறித்துச் சென்ற அறிவு மரபை மீட்டு அப்பார்ப்பனியத்தின் பெரும் பகுதி வள்ளுவ அறிவு மரபிற்குரியதே என்னும் உண்மையை உலகுக்குக் காட்ட வேண்டும்.

இன்றைய தமிழ் இளைஞருலகம் இவ்விளக் கத்தால் நல்லறிவும் ஊக்கமும் பெறவேண்டும். அதனால் விளையும் தன்னம்பிக்கையும் தன்மானமும் தமிழரின் ஓர்மையும், அவற்றால் விளைவும் போர்க்குணமும், தேசிய இன விடுதலை வேட்கையாகவும் தமிழகத்தின் அடிமைத் தளையொடிக்க வல்ல அறிவுக் கருவியாக, அணுவாற்றலாய், பூதமென வடிவெடுக்க வேண்டும். தமிழரின் அறிவுத்துறை நாட்டமாக அவர்தம் நெஞ்சங்களில் அது கால்கொள்ள வேண்டும்.

‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’

நூலிலிருந்து...

பக்கங்கள் 402_416

புதிய பார்வை | ஜூலை 16 - 31, 2014 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://namvaergall.blogspot.in/2013/04/blog-post_2.html 

  சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்

- தேவமைந்தன்

 

பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர். தந்தையார் திரு அ.மா.து. சாமுவேல் அவர்கள். தாயார் திருமதி மனோன்மணி அவர்கள்.

 

ஏந்துகள் மிக்க வங்கிப் பணியைத் துறந்து மக்கள் இயக்கங்களில் இறங்கிப் பாடாற்றிய அறிஞர் குணா, கருநாடகச் சிறைகளில் பலமுறை இருந்தவர். அண்மைய நெடுஞ் சிறைக்காலத்துக்குப்பின் மக்கள் உரிமை இயக்கத்தின் தொடர்ந்த முயற்சிகளால் விடுதலை பெற்றவர்.

 

இவரைப் போற்றிய தூயதமிழ் இயக்கம் சார்ந்த அறிஞர்களில் திராவிட இயக்கத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள் வெறுத்தாலும் சரி என்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற ஆய்வைத் துணிந்து வெளிப்படுத்தியவர். அந்த ஆய்வின் முடிபுகள், நம் திண்ணை வலையேட்டின் மே 1, 2008 பதிவேற்றத்தில், தோழர் எஸ்ஸார்சி தந்துள்ள குறிப்புகளாக வெளிவந்துள்ளன.

 

குணாவின் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர் அறிவாற்றலின் தோழர்கள் அமைத்துக் கொண்டதுதான் 'FORT' என்ற அமைப்பு. 'Forum For Research On Tamilnadu' என்பது இதன் விரிவாக்கம். பெங்களூரு நகரில் 'டிஸ்பென்ஸரி சாலை' 48ஆம் இலக்கத்தில் இது இயங்கத் தொடங்கியது. இதுவே 'தமிழக அரண்' என்று பின்னர் பெயர் தாங்கியதாக நினைக்கிறேன்.

 

குணாவின் சிறந்த ஆராய்ச்சிகளாக எனக்குத் தெரிந்தவை பின்வருமாறு:

 

1. சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979)

2. தமிழர் மெய்யியல்(1980)

3. Marxist Dialectics(1983)

4. Asiatic Mode - A Socio-cultural Perspective(1984)

5. தமிழியப் பொதுவுடைமை(1985)

6. மார்க்சியமும் பெரியாரியமும்

7. மார்க்சிய இயங்கியல்

8. தமிழீழ அரசியலின் அகப்புற அழுத்தங்கள் (கட்டுரை)(1985)

9. இந்தியத் தேசியமும், திரவிடத் தேசியமும்(1986)

10.தமிழ்த் தேசிய இனச் சிக்கல் - உலக நம்பிகளின் இயங்காவியல்(The Metaphysics of the Abstract Internationalists)(1987)

11.வகுப்பும் சாதியும் வரணமும்(1988)

12.திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994)

 

இவற்றுள் முதலாவதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

 

சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979)

 

இந்நூலை 1972ஆம் ஆண்டே குணா எழுதினார். மூன்றாண்டுகளுக்குப் பின், அச்சுக்குத் தந்துவிட்டு வீடு திரும்பிய போது, 'மிசா'வின்கீழ் சிறையிடப்பெற்றார். இதன் சுருக்கத்தை 1974ஆம் ஆண்டே, 'Origin Of Casteism - An Integral Theory' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதற்குப்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தமிழில் முழுமையான வடிவம் பெற்று ஆறு ரூபாய் விலைக்கு 1979 சனவரியில் வெளிவந்தது. கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் தென்றல் நூலகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு முன் அத்தகைய சிந்தனை தமிழில் - தூயதமிழில் வெளிவந்ததில்லை. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணருக்கு மிகவும் பிடித்த குணாவின் ஆய்வு இது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாவாணருக்கு இடதுசாரிச் சிந்தனைகள்மேல் ஈடுபாடு இருந்ததில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக விளங்கியவர் பாவாணர். அப்படிப்பட்டவரையே ஈர்த்த நூல் 'சாதியத்தின் தோற்றம்.'

 

"சாதியம் என்பது ஒருவகைப் பொருளியல் - சமுதாய வாழ்க்கை முறை. இன்றைய அரை நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியல், பண்பாட்டுத் துறைகளின் உள்நோக்கமாகவும் அது அமைகின்றது. அச் சாதியத்திற்கு, அதற்கே உரிய கட்டுமானங்கள் உண்டு; தனி வடிவமைப்புகள் உண்டு. அவ் வடிவமைப்புகள் அதற்கேயுரிய உருவவியலைப் படைக்கின்றன. அச் சாதியத்திற்குத் தனித்த உள்ளியக்கமும் உண்டு. அவ்வுள்ளியக்கமே அதனை நீட்டிக்கும் உள்ளாற்றலாகும்" எனத் தொடங்கி, சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம் பற்றிய சிக்கலைப் பொருள்முதல் இயங்கியல் என்னும் மார்க்சிய முறையில் அணுகி, அவற்றின் காரணங்களைப் பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம், பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம் ஆகிய அகநிலை(பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம்)க் காரணங்கள் மூன்றாகவும் புறநிலைக் காரணங்கள் மூன்றாகவும்(பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம்) பகுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்திருக்கிறார். அறிவாராய்ச்சியியல்(epistemology), மார்க்சீயச் சிந்தனையியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அம்பேத்கர் சிந்தனையியலில் ஈடுபாடு கொண்டவர்களும் வாசித்தறிய வேண்டிய ஆராய்ச்சி இது.

 

இதில் உள்ள நான்காம் - அகநிலைக் காரணமான - பண்பாட்டுக் காரணம் குறித்த ஆய்வில் டாக்டர் பாபுராவ் சாகேப் அம்பேத்கர் அவர்களின் 'Castes in India - their Mechanism, Genesis and Development' என்ற நூலில் இடம்பெறும் அறிஞர் கப்ரியேல் தார்த் கண்டறிந்த 'போலி நடத்தை விதிகளை' சாதியத்தின் தோற்றத்துக்கு அறிவியல் விதிகளாக அம்பேத்கர் எடுத்தாள்வதைக் குணா திறனாய்ந்திருப்பதை மீள்வாசிப்பில் தலித்தியக் கொள்கை அறிஞர்கள் திறனாய்ந்திருக்கிறார்கலா என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் எவரேனும் தெரிவித்தால் பயன்பெறுவேன்.

 

ஐந்தாம் இயலான மத/சமயக் காரணம் பற்றிய பகுதி... பண்டைக் கிரேக்கத்தில் பெலொப்பனீசியப் போருக்குப் பின்னர் ஏதென்சு, கடலரசியாகத் தான் செம்மாந்திருந்த நிலையினின்றும் தாழ்ந்து இழிந்தபொழுது, அத்தீனிய உயர்குடியாட்சியினருக்கு (Athenian aristocrats) பிளேட்டோ அகத்தியமானதோர் அறிவுரை தந்தார். அறநிலையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அந்த அறிவுரை, "மேன்மையான பொய்களை(Noble Lies) வடித்துச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!" என்பதே. அப்பொழுதுதான் அவர்கள், பெலொப்பனீசியப் போரின் முடிவால் தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேட்டை மக்களிடையில் மறைத்து, தங்களுக்கே உரியதாகத் தாங்கள் நம்பிவந்த நாட்டாட்சியாகிய 'உயர்குடியாட்சி''(Aristocrocracy)யைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அவர் தருக்கம்.

 

இதை, பண்டைய இந்திய ஆட்சியாளர்கள், புரோகித வர்க்கத்துடன் சேர்ந்துகொண்டு புனைந்த நான்முகன் - நால்வருணக் கோட்பாட்டுடன் குணா ஒப்பிடும் பகுதி(ப.122) ஆய்வாளர்களுக்கு விருந்தாகும். இதே இயலில் தொடர்ந்து பிளேட்டோ போன்றே மக்கள் சமமானவர்களாக வாழ்வதை விரும்பாத அவர்தம் மாணவர் அரிஸ்டாட்டிலின் கருத்தோட்டங்களை, இந்து வேதங்கள் - குறிப்பாக இருக்கு வேதம், அதன் பின்னுழைவு என்று கருதப்படும் 'புருஷசூக்தம்' ஆகியவற்றின் நால்வருணச் சாதிப்புடன் ஒப்பிட்டு ஆராயும் குணாவின் திறன் வாசித்தறிய வேண்டியதாகும்.

 

வேதங்கள் இந்திய மண்ணிலேயே பிறந்தவை, குறிப்பாக ஆரியர் அல்லாதவர்களாலேயே பெரிதும் இயற்றப்பட்டவை என்பதற்குப் பாவாணர் தம் 'தமிழர் வரலாறு' என்ற நூலில் காட்டும் எட்டுக் காரணங்களை குணா எடுத்துக்கூறியிருக்கிறார். பிந்திய சமணர்கள் வருணாச்சிரம தர்மத்தை சூழ்நிலைக்கேற்பத் தாமும் ஏற்றுக்கொள்ள முன்வந்ததை இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை தம் 'பண்டைய கேரளம்' என்ற நூலில் ஆய்ந்திருப்பதை எடுத்துக் கூறியுள்ளதோடு அதற்குத் தமிழகச் சான்றாகத் திருத்தக்க தேவர் தம் சீவக சிந்தாமணியின் இலக்கணையார் இலம்பகத்தில்(பாடல்கள் 2462 - 2469) சீவகனின் திருமணச் சடங்குகள் வைதிக முறையில் நடந்ததாகப் பாடியிருப்பதை ஒப்புநோக்கியுள்ளார். பிந்திய காலப் பௌத்தமும் அதே வருணாச்சிரம வழியில் சென்ற நிலையை எடுத்துரைக்கிறார்.

 

கிட்டத்தட்ட நூற்று அறுபது பக்கங்கள் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள 'சாதியத்தின் தோற்றம்' முதற்பதிப்பில் குணா மொழிந்த கருத்துகளையெல்லாம் குறிப்புகளாக்குவதோ கூறிமுடிப்பதோ என்னால் இயலாதவை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தாமோதரன் கபாலி to திருவள்ளுவன்  இலக்குவனார் https://www.facebook.com/IlakkuvanarThiruvalluvan/posts/1207535329285338

முப்படிவம் (திரிமூர்த்தம்)

மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம்பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும், அதன்பின் படைப்புணர்ச்சியும் தோன்றுவதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத்தொழிலும் கூறப்பட்டன. பின்பு படைப்புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப்பட்டது, ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி.

இதே,

“தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா
மந்த மாதி யென்மனார் புலவர்”

என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது.

பிராமணர் தென்னாட்டிற்கு வந்தபின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குலமுதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளாமையால் அவருக்குக் கோயில்வழிபாடேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது.

பிராமணரின் குலமுதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரமதாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்குகளாலும், வீரமகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச் சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாவைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தியாலும் உணரப்படும்.

திருமால் முகில்வடிவின ராதலின், மேகத்தைச் சமுத்திர மென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு இடமாக்கினர் ஆரியர். திருமால் வணக்கம் வர வரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப் பட்டார் போலும். ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலைமகள் (சரஸ்வதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ்மாது என மொழிப்பெயராற் கூறினரே யன்றிக் கலைப்பெயராற் கூறவில்லை, ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கினமையின்.
பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான். அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபவனாதலின், 'உலகக் கருமான்' (விசுவகர்மா) எனப்பட்டான். 'உலக விடைகழி' என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், கருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே.

உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்றும் பெயருண்டு. ஒ.நோ: Gk. architekton - archi, chief, and tekton, a builder, E. architect.

ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் கருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும். உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.

பிராமணர் தம் குலமுதல்வராகிய பிரமனைப் படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர்மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தது பிற்காலமாதலின், பிரமாவை நான்முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவுபற்றியே யிருத்தல் வேண்டும்.

மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

 

Devapriyaji தமிழர் சமயத்தை ஆரியம் எனச் சொல்ல கிறிஸ்துவ வெறி தேவநேயர் ஏன் விவிலியம் முழுதும் கட்டுகதை என்பதை ஓரிடத்தில் சொல்லவில்லை, தன் வாரிசுகளுக்கு கிறிஸ்துவம் இல்லா தமிழ் பெயர்கள் வைக்கவில்லை.
தாமோதரன் கபாலி
 
தாமோதரன் கபாலி தமிழர் சமயத்தை ஆரியமென்று தேவநேயப் பாவாணர் சொல்லவில்லை! ஆரிய மதம் வேறு தமிழர் சமயம் வேறு!
மிக்க நன்றி ஐயா! வாழ்க தமிழன்னை!
Like · Reply · 10 hrs
 
Devapriyaji ஐயா, அசோகர் காலம் முதல் கல்வெட்டுகள் உள்ளன, நம் முப்பாட்டனர் நம்மை விட அறிவாளிகள், இந்தியனைப் ஆரியன் திராவிடன் எனப் பிரித்து, வந்தேறி அன்னியர்கள் கானான் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து, கன்னிப் பெண்களை அனுபவித்து அதில் அந்த சிறிய இஸ்ரேலின் கடவுள் யாவே கர்த்தர் கேட்ட பங்கு கொடுத்தனர், வேறு வழி சென்றால் கொன்று விடு எனும் பாசீச இனவெறி சித்தாந்த பைபிள் கட்டுக்கதையை பைத்தியக்காரத்கனம் எனச் சொன்னாரா பாவாணர், அவர் வேர்சொல் ஆய்வுகளின் 95% மிகை, குமரிக் கண்டம் வெற்று பொய்கள் என விஞ்ஞானம் நிருபித்தபின்னும், சர்ச் மீண்டும் அதே கட்டுக் கதையை விக்டர் மூலமும், பெங்களூர் குணா எனும் சாமுவேல் குணசீலன மூலமும் ஐதீகமாக்க முயல்கிறது.
தமிழர்கள் தமிழைப் போற்றுவோர்கள் கிறிஸ்துவர்களை- பைபிள் முழு பாசீச இனவெறியை போதிக்கிறதே, யூதர் அல்லாத கிரேகப் பெண்ணை நாய் என்றாரே ஏசு, யூதர் அல்லாதவர்களை பன்றி என்றாரே அவரைப் பற்றி முதலில் உங்கள் கருத்தை சொல்லுங்கள் எனக் கேளுங்கள்.
பாரத துணைக் கண்டம் முழுக்க் இருந்த ஒரே பண்பாடு பாரம்பரியம் தான் தமிழனதும், அதை ஆரியம் எனப் பிரித்தது ஒரு வெறி பிடித்த கிறிஸ்துவச் சதி அதன் முகமே தேவநேயர், அத்தனையும் திரிபு சதிகள். வாழ்க
பாரதத் தாய், இந்தியராய் தமிழைப் போற்றி வாழ்வோம்.https://tamilsamayam.wordpress.com/.../%E0%AE%A4%E0%AF.../
Devapriyaji's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

அல்லெலூயா கும்பல் திருக்குறள் இப்படி மாத்தினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை

1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதாம் ஏவாள் முதற்கே உலகு

2) தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே சிலுவையில் அடித்த அடி

3) நன்றி மறப்பது நன்றன்று நன்றள்ளது நபிகள் வழி நடப்பதே நன்று

4) கற்க கசடற கற்பவை கற்றபின் காணிக்கை பெயரில் கொள்ளையடித்துகொள்க

5) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் மேரி அன்னை போல் வாழ்வார்

6) அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவதற்கு அஞ்சுவது அல்லெலூயா தொழில்

7) உடுக்கை இழந்தவன் கைபோல நாம் தமிழர் டியூஷனில் கவர்வதாம் நட்பு

8) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் அல்லேலூயா பிறப்பு

9) எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் அபேஸ்பண்ண பொருளாய் காண்பது அறிவு

10) எந்நன்றி கொண்டார்க்கும் ஊய்வுண்டாம் ஊய்வில்லை பெந்தகொஸ்தே திருச்சபைக்கு........

அறிவு கெட்ட நாதாரிகள் , நரி ஊருக்குள்ள வரதே தப்பு இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதா ?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard