New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Yoga Satanic


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Yoga Satanic
Permalink  
 


 கவனம் அதிகம் தேவை!!!!! யோகா என்பது "அந்நிய தேவர்களின் வழிபாடு" 

சர்ப்பத்தின் வழிபாடாகிய யோகா.. 🐍 🐲
(23-June-15)

(முக்கிய குறிப்பு📌 : இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நபர்களுடன்😇 பகிர்ந்து, பிசாசின் சூழ்ச்சியில்👹 விசுவாசிகள் சிக்கி வீழ்ந்து விடாதபடி துரிதமாக செயல்படுங்கள்)

ஆதி மனிதர்களை பிசாசானவன் ஏமாற்ற முதலாவது அவன் பயன்படுத்திய மிருகமாக “சர்ப்பமும்🐲”, இரண்டாவது அவன் பயன்படுத்திய மரத்தின் கனியாக🍎, “நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியும்”, மூன்றாவது ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து அவர்களை ஏமாற்றுவதற்காக “நீங்கள் சாவதே சாவதில்லை😇” என்ற வார்த்தையையும், நான்காவது நயவஞ்சகமாக அவர்களை ஏமாற்றுவதற்காக “தேவர்களைப் போல் இருப்பீர்கள்👼” என்ற வார்த்தையையும் பயன்படுத்தினான்👺🐍. இந்த நான்கு காரியங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது தான் யோகா🐲. இதை வரைமுறைபடுத்தியவர் பதஞ்சலி முனிவர்👳. இவர் கி.மு. நாலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகின்றது. ஆயிரம் தலைகள்👽 அல்லது ஏழு தலைகள் கொண்ட பாம்பின்🐲 படுக்கையிலிருக்கும் சில விக்கிரகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பாம்பிற்கு ஆதிசேஷன் (சேஷன்=பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் – 📖வெளி 20:2) என்று பெயர். பதஞ்சலி தம்மை ஆதிசேஷனின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்டவர்.

பிசாசானவன் ஆதி மனிதர்களை ஏமாற்ற முதலாவது சர்ப்பத்தைப் பயன்படுத்தியதைப் போலவே, பதஞ்சலி முனிவரையும் பயன்படுத்தியுள்ளான். பதஞ்சலி முனிவரது சிலையானது இடுப்புக்கு மேல் மனித உருவமும், இடுப்புக்கு கீழே பாப்பின் உருவமும் கொண்டது. ஆகவே தான் யோகா கற்றுக்கொடுக்கும் இடங்களில் பாம்பின் படங்கள் வைத்திருப்பார்கள். இவர் யோகாவை எட்டு அங்கங்களாக வகைப்படுத்தினார். அதில் முதல் இரண்டு, “நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, அடுத்த இரண்டு, “ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, மீதமுள்ள நான்கு, “தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்ற நயவஞ்சக வார்த்தையின் மூலாமாக மனிதர்களை ஏமாற்றவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக:
1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை.
2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல்.

ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக:
3. ஆசனா – யோகாசனங்கள் 
4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.

“தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்று நயவஞ்சகமாக மனிதர்களை ஏமாற்றுவதற்காக:
5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வெளியே போகாமல் கட்டுப்படுத்துதல் 
6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல் 
7. தியானா- தியானம் 
8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்

ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பங்குபெற்ற இந்திய பிரதமர் யோகா நிகழ்ச்சியை உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் விளைவாக உலகெங்கும் யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது. இதற்கு கிறிஸ்துவ நாடுகள் உட்பட 177 நாடுகளின் ஆதரவு கிடைத்திருக்கின்றது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகெங்கும் கொண்டாட போகின்றார்கள். “யோகா எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல” என்று வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடுகின்றனர். யோகா தின அறிவிப்புக்கு பிறகு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் யோகா வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், யோகா வல்லுனர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் கூடிய சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் விரைவில் பள்ளி புத்தகத்திலும் யோகாவைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்றைக்கு பிசாசானவன்👺 யோகாவின் மூலமாக மக்களை வஞ்சிக்க துடிகின்றான். “உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்” (📖உபாகமம் 11:16). யோகா என்பது உடற்பயிற்சி முறையோ, தியானமோ, ஆசனமோ கிடையாது. இது அந்நிய தெய்வத்தின் வழிபாடு. உங்கள் அலுவலகத்திலோ கல்வி நிறுவனத்திலோ யோகோ வகுப்புகள் இருந்தால் நீங்கள் தைரியமாக புறக்கணிக்க வேண்டும். 
“ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (📖மத்தேயு 24:4) என்று இயேசு நமக்கு அறிவுறுத்தியுள்ளார். இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் சர்ப்பத்தின்🐍 வழிபாடாகிய யோகாவிற்கு எதிர்த்து நிற்க வேண்டும். சர்ப்பங்களை மிதிக்க அதிகாரம் தந்த இயேசுவின் நாமத்தினால் யோகா சர்ப்பத்தை மிதித்து போடுவோமாக. ஆமேன். அல்லேலுயா.

தானியேலைப்போல சிலை வணக்கத்திர்க்கு எதிர்த்ததுநிற்க்க 😇 இது நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் (அ) சவால் 

( இது நிதர்சனமான உண்மை)

Please Share This Article to your Christian Friends 😇
--------------------------------------
Thanks 🙏 ------tina--------

Tina Haran's photo.
Tina Haran's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சர்ப்பத்தின் தந்திரம் யோகா - பாகம் 2..🐍 🐲
(25-June-15)

Tina Haran's photo.  Tina Haran's photo.

(முக்கிய குறிப்பு📌 : இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நபர்களுடன்😇 பகிர்ந்து, பிசாசின் சூழ்ச்சியில்👺 விசுவாசிகள் சிக்கி வீழ்ந்து விடாதபடி துரிதமாக செயல்படுங்கள்)

அமெரிக்காவில்🗽 உள்ள பல்வேறு பள்ளிகளில் யோகா கற்றுத் தரப்படுகிறது. இந்தியர்கள்👳 அதிகம் உள்ள கலிபோர்னியாவில் அனைத்து பள்ளிகளிலும் முழு நேர ஆசிரியர்களைக் கொண்டு யோகா கற்றுத் தரப்படுன்கிறது. அங்கு உள்ள “என்சினிடாஸ் யூனியன் ஸ்கூல்” என்ற பள்ளிக்கூடத்தில் கட்டயமாக மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்பட்டதை எதிர்த்து ஒரு மாணவனின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 3 கிறிஸ்துவ நீதிபதிகள்💂, “யோகாசனம் என்பது மதம் சார்ந்ததல்ல. சில விஷயங்களில் அது மதம் சார்ந்தது போலத் தெரியலாம். இது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாகவும் கருதப்பட முடியாது. இந்து மதத்தைப் புகுத்துவதாகவும் கூற முடியாது” என்று தீர்ப்பளித்தனர்😥😰
ஒரு காலத்தில் மிஷனரிகளை அனுப்பிய நாடு இன்றைக்கு சர்பத்தின்🐍 🐲 தந்திரமாகிய யோகாவுக்கு பின் சென்றுவிட்டது.

யோகா செய்வது உடலுக்கு நல்லது தானேஎன்று அநேகர் கேட்கின்றனர். இவர்கள் “கதா யோகா” என்றழைக்கப்படும் ஆசனம் மற்றும் சுவாசப்பயிற்சியையே மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கேள்வியை கேட்கின்றார்கள். ஆதிஷேசனின் (பழைய வலுசர்ப்பம்🐲 🐍) அவதாரம் என்று தன்னை சொல்லிகொண்ட பதஞ்சலி முனிவர் உருவாகிய, யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என எட்டுவகையான வழிமுறைகள் உண்டு. 15-ம் நூற்றாண்டிற்க்கு பிறகு ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தோ அல்லது உடலை வளைத்தோ செய்யும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்தது. இதுதான் இன்றைக்கு உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.

சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த யோகா என்ற வார்த்தைக்கு "இணைப்பு" என்று பொருள். உட‌ல் ஆச‌ன‌ நிலைக‌ள் ம‌ற்றும் மூச்சுப்பயிற்சிக‌ள் மூலம் மனிதனை இறைவனுடன் இணைக்க முற்படும் மனித முயற்சியே யோகா ஆகும். ஆகவே யோகா வெளிப்படையாகவே கிறிஸ்தவ தத்துவங்களுக்கு எதிரானது. உடல் ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலமாக மனிதனும் இறை நிலையை அடைகிறான் என்பது யோகாவின் கருத்து. மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து. மேலும் யோகா உண்மை தெய்வத்திற்குப் பதிலாக ஒருவன் தன்னையே மையப்படுத்திக் கொள்ள‌ போதிக்கிற‌து. வாழ்வின் இக்கட்டான வினாக்களுக்கு தீர்வை வேதாகமத்தில் தேடுவதைத் தடுத்து அவன் தனது மனசாட்சியையே நாடும் படி ஊக்குவிக்கிற‌து. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும்.

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் யோகா வகுப்புகளுக்கு செல்கின்றனர். கிறிஸ்துவ யோகாவும் உருவாகிவிட்டது. இந்த செய்திகளைப் பார்த்து ஒரு கிறிஸ்தவ யோகா பயிற்சியாளர் என்னிடம் தர்க்கம் செய்ய வந்தார். இந்த உலகத்தில் எத்தனையோ நல்ல உடற்ப்பயிற்சிகள் இருக்கையில்🏊🏄🚴, நாம் ஏன் சர்ப்பத்தினால்🐲 🐍உருவாக்கப்பட்ட யோகாவை செய்ய வேண்டும். பரிசுத்த வேதாகம் இவ்வாறு கூறுகின்றது📕 📖, “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்” (📕கலாத்தியர் 6:8). யோகா போன்ற உலகத்தின் காரியங்கள் மாம்சத்திற்கென்று விதைக்கிறதற்கு ஒப்பாகும். வேத தியானம்📖, ஜெபம்👺 மற்றும் நற்செய்தி அறிவித்தல்😎 ஆவிக்கென்று விதைக்கின்ற அனுபவம் ஆகும். கடைசி காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக.. அநேக யோகா போன்ற சமபவங்கள் நடக்கும். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள் (📕மாற்கு 13:22-23). சர்ப்பம் தந்திரமாக விரித்திருகின்ற யோகா வலையில் நீங்களும் சிக்கிக்கொள்ளாதீர்கள். பிறரையும் சிக்கிக்கொள்ளாதபடி காப்பாற்றுங்கள். ஆமேன்😇. அல்லேலுயா👼
------------------------------------
Thanks -----தினா------- y g

 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard