New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பி.சுப்பிரமணிய சாஸ்திரியார்.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பி.சுப்பிரமணிய சாஸ்திரியார்.
Permalink  
 


10425407_865395106866416_6280706636796600507_n.jpg?oh=2214a6a082b1f6dd113062dbf36c3010&oe=55FB2817&__gda__=1442469361_ef34784666709321a6f8b5d3718e5b85 

நண்பர்களே, தமிழில் முதல் முனைவர்ப்பட்ட ஆய்வேடு இது. தமிழ்இலக்கணக்கொள்கைவரலாறும் அதன் சமற்கிருத இலக்கண உறவும். 1930இல் முனைவர்ப்பட்டம் பெற்றவர்.பிசாசு. அதாவது பி.சுப்பிரமணிய சாத்திரியார். 1934 இல் வெளிவந்தது. இவர்யார்? திருச்சிராப்பள்ளி ஆண்டாள்தெருவில் வாழ்ந்தவர். திருவையாறு அரசர் சமஸ்கிருத தமிழ்க்கல்லூரி சமற்கிருத பேராசிரியர், முதல்வர், திருச்சி பிசப்ஹீபர்கல்லூரி கீழைமொழித்துறைப்பேராசிரியர் சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன் துணைஆசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியர். இவரின் தமிழ்மொழிநூல். சிறந்த tamil philology நூல். The comparative grammar of tamil, tamil phonology, தொல்காப்பிய எழத்து ,சொல், ஆராய்ச்சியுரைகள் நுண்மாண் நுழைபுலம் உடையவை. சமற்கிருத சார்பு இருந்தாலும் தமிழின் தனித்தன்மைகளைச்சுட்டிகாட்டியுள்ளார்.இவர் திருவையாறு அரசர்கல்லூரி முதல்வர் என்பதில் அங்கு படித்தவர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். இந்த நூலில் பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து, வீரசோழியம் என்ற வடநூல் சார்ந்த இலக்கணச்சிந்தனை, பாணினீயம், நிருக்தா, கயாதரம், கச்சாயனம் போன்ற வடநூல்ஒப்பீடு உண்டு. தொல்காப்பியத் தனித்தன்மையும் கூறுகிறார். சிலருடைய பெயருக்காகவே நூல் வாங்க வேண்டும். இலக்குவனார், பாவாணர், அகத்தியலிங்கம் பொற்கோ, செவை சண்முகம் ஆர். கோதண்டராமன், அந்த வரிசையில் மூத்தவர் இவர். இவர் தமிழ்வளர்த்த பார்ப்பனர்களில் ஒருவர். இவர் வாழ்ந்த போது இவர் இலக்கண அறிவைக்கண்டுயாவரும் அஞ்சி இவர் பிசாசு என்பர். பி.சா.சு. நூல்களை மீண்டும்‌ அச்சேற்றல் புதிய தலைமுறைக்குஉதவும்.549432_865395136866413_1707911887005440849_n.jpg?oh=d57cc8311b328caeb2e0bf011a88f4a7&oe=56022DDA&__gda__=1442410575_87916ff4f757f5a4e2ad48331fe39fd8 

11102926_865395156866411_6039212628810160102_n.jpg?oh=dedc2be92d04457387d301dee6ca5732&oe=55E96F39

 



-- Edited by Admin on Wednesday 3rd of June 2015 11:48:33 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பி.சுப்பிரமணிய சாத்திரியார்.
Permalink  
 


திருவள்ளுவன் இலக்குவனார் தமிழ்பற்றிய முதல் முனைவர் பட்ட ஆய்வேடாக இருக்கும்.

Sulaiman Sait நல்ல தகவல்கள். தொல்காப்பியர் முதல், பரிமேலழகர் என இன்றுவரை தமிழிற்கு அந்தணர் செய்துவரும் பணி மிகப்பெரிது

திருவள்ளுவன் இலக்குவனார் <Sulaiman Sait> நற்றமிழர் தொல்காப்பியரை அந்தணர் எனத் தவறாகக் கூறாதீர். அவர் காலத்தில் சாதியும் இல்லை. அவர் தமிழரே! அவரை இழிவுபடுத்து முயன்று முடியாததால் பிராமணராகக் கூறுகின்றனர் அச்சாதியினர்.

திருவள்ளுவன் இலக்குவனார் <Sulaiman Sait> பிராமணரான பி்.சா.சுப்பிரமணியம் அவர்களும் கற்றறிந்த அறிஞராக இருந்தும் தொல்காப்பியம் முதல் தமிழிலக்கியச் சிறப்புகளையெல்லாம் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாகத் தவறாகக் கற்பித்ததும். எழுதியும் வந்தவர்தான்.

//திருவள்ளுவன் இலக்குவனார் <Sulaiman Sait> நற்றமிழர் தொல்காப்பியரை அந்தணர் எனத் தவறாகக் கூறாதீர். அவர் காலத்தில் சாதியும் இல்லை.// 

இது என்ன கூத்து!பேராசிரியர்கள் தெரிந்து பொய் கூறுதல் தமிழை கேவல்ப்படுத்திவிடும்


-அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று நான்கு வகைச் சாதிகளைச் சுட்டி அவர்களின் இருப்பிடங்களையும் குறிப்பிட்டு, 

அறுவகைப் பட்ட பார்ப்பனர்ப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் 
(தொல்.பொருள்.இளம்.74) 

"வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" 
எழுத்ததிகாரம் » பிறப்பியல் 102. எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே.

நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே.
பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயப்பாவணர்.

தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள்.
தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)


தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினி என்பதாலும், தந்தை ஜமதக்னி முனிவர் என்பதா லும், தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக் களாலும் தொல்காப்பியர் ஆரியரே! என்று துணியப் படும். _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழி நுல். _ பக்கம்: 73)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பி.சுப்பிரமணிய சாஸ்திரியார்.
Permalink  
 


 

 

Abimanasingham Sitthawatthai Uthayakumar அப்பன்களே! தொல்காப்பியன் என்றது தமிழ் மஹாயாண பௌத்தப் பேரறிஞப் பெருந்தேரனின் கற்பனை உருவாக்கம். தமிழ் சமஸ்கிருத மொழி இலக்கியங்கள், நூல்களை இந்தப் பௌத்த தேரனே இயற்றியிருந்தான் சேந்தன் திவாகரம் நிகண்டின் 12 தொகுதி முடிவுகளின் பாட்டுக்களையும், சிங்கைச் சிலேடை வெண்பா, மற்றும் தனிப்பாடற்றிரட்டு தொகை நூல்களின் பாட்டுக்களையும் ஆராய்ந்தால் இதை உறுதிப்படுத்த முடியும். மேலும் தொல்பொருள்களின் ஆய்வுகளும் இதை உறுஞதிப்படுத்தும். மஹாயாண பௌத்தமானது தமிழ், சமஸ்கிருத மொழிகளில்தான் விடயங்களை கூறியுள்ளது. தேரவாத பௌத்தம் பாளி மொழியில் விடயங்களைக் கூறும்.

 

  • Shankar Narayanan தொல்காப்பியாின் இயற்பெயர் திரணதூமாக்கினி என்பது நச்சினார்க்கினயர் கூறிய ஆதாரமற்ற கதைகளில் ஒன்றல்லவா? அதை ஏற்றுக் கொள்ளலாமா? ஐயத்திற்கு விடை கிடைத்தால் மகிழ்வேன்.
  •  
    Tamil Susai Shankar Narayanan அது சமுக்காளத்தில் வடிகட்டிய பொய். ஆரியமயமாதல் காலந்தோறும் நடந்தது. அதில் இதுவும் ஒன்று.
    Tamil Susai Karuppaiah Ji அவர்களே நீங்கள் கூறும் நூற்பாக்கள் இடைச்செருகல் என பழுத்த சைவர் க. வெள்ளைவாரணர் நிறுவிஉள்ளார். அவர் பன்னிரு திருமுறை வரலாறு எழுதிய சான்றோர். அவை நீக்கிய மரபியல் அ்ச்சுப்பதிப்புகள் வந்ததுண்டு
    Karuppaiah Ji சுவிசேஷத்தில் ஏசு சாதாரணப் பாவி மனிதன் என வரும் வசனக்தை எல்லாம் இடைச்செருகல் எனப் புனைந்துள்ளன்ர். அது போலெ இங்கும் பலர் செய்துள்ளனர், இது போலே செய்யப்பட்ட போலி ஆய்வுகள் தவறு எனத் தெளிவாக பலமுறை சுட்டப்பட்டும் உள்ளதே. உள்நோக்கம் கொண்ட பொய்ப் பரப்புரை என்பதை பல நடுநிலையாளர் தவறு என நிருபித்தும் உள்ளனர்.

    கிறிஸ்துவப் பாவாணர் தமிழ் ஆய்வு போர்வையில் விஷம் பரப்பிய பலவற்றை நீக்கி இப்போது தமிழ் மண் பதிப்பக மறுபதிப்பில் வருகிறதே, தெரிந்து பாரத மக்களை ஆரியர் - திராவிடர் எனப் பாரப்பி பிரித்து சுரண்ட செய்தவை தானே அவை.http://solvanam.com/?p=5574
    தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின்...
    SOLVANAM.COM
  • தஞ்சை பா. இறையரசன் பி.சா.சு. ஆய்வ முறை நன்று. ஆரியச் சார்பு தவறு. தொல்காப்பியர் ஆரியர் அல்லர். தம் நூலுள் கூறியது அற்றைநாள் வாழ்வியல்.

  • Karuppaiah Ji மிக நிச்சயமாய் சர்ச் சூழ்ச்சியின் ஒரு ஊன்றுகோலாய் தேவநேயன் இருந்தார் என்பது வரலாறு. அவர் சீடர் திருவள்ளுவரை சர்ச் பணத்தில் கேவல்ப்படுத்தியதும், இன்னும் அகத்தியர், சித்தர் பாடல்கள் என அருவருப்பான போலி ஆய்வுகளை இன்னும் தொடர்கிறது. இது போலி ஏசு வேதம் என ராபர்ட் டி நொபிலியும், சிவப்பிரகாச சுவாமிகள் நூல்களை அழித்த பெஸ்கி வீரமாமுனியும், ஆறுமுக நாவலர் நூல்கள் அழித்த சர்ச் பணிகள் தமிழிற்கு ஆற்றிய துரோகங்கள் தமிழுலகம் அறிந்ததே.
  • Karuppaiah Ji தமிழரில் மூத்த குடியினர் அந்தணரை ஆரியர் என்பதே கிறிஸ்துவ சூழ்ச்சியின் ஆரம்பம்
    தன் மூட நம்பிக்கைக்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் இடைசெருகல் என்பதை எழிதாக்கத் தான் விவிலியம் பற்றி சொன்னது. மார்ட்டின் லூத்தர் பாஸ்டொரல் கடிதங்கள், வெளிப்படுத்திய விசேஷங்கள் பிற்காலத்தியவை நீக்கவேண்டும் என்றதும், உலகு அறிந்ததே.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பி.சுப்பிரமணிய சாத்திரியார்.
Permalink  
 


 

  • Tamil Susai Karuppaiah Ji. பாவாணர் ஒரு தூயதமிழ்அறிஞர். ஏழையாக வாழ்ந்து அரசுபள்ளி, கல்லூரி, பல்கலை என உயர்ந்த பேரறிஞர். அவர் திருக்குறள் உரை கூட உண்டு. எங்கே திருவள்ளுவர் பற்றி இகழ்ந்தார். இதில் அங்கே சர்ச் பணம். இன்னும் சொல்லப் போனால் அவரை அவர் சார்ந்த தரங்கம்பாடி அல்லது தென்னிந்திய திருச்சவை என நினைக்கிறேன் அவரை ஆதரித்ததில்லை. காரணம் அதைவிட. மதம் சாராத தமிழ் ஆய்வு அவருடையது. அய்யா, ஒன்று தெரியுமா? சமீபத்தில் முனைவர் தாமோதரன் ஜெர்மன் நூலக நன்னூல் கூழாங்கைத் தம்பிரான் உரை வெளியிட்டார் நம்மைவிட நம் சுவடிகளை ஜெர்மன் அரசு ஆவணக்காப்பகம் காப்பதாகக் கூறியுள்ளார். அவை சீகன் பால்கு கொண்டு சென்றவை. எந்த சர்ச் ஆறுமுக நாவலரின் எந்த நூலை எரித்தது. சான்று கொடுங்கள். அடுத்து விவிலிய மொழிபெயர்ப்பு ஆறுமுகநாவலருடையதே உண்டு. கிறித்தவ வினாவிடை போலசைவ வினாவிடை எழுதினார். நண்பரே ஒன்று தெரியுமா? சைவன் சங்க இலக்கியம் படிக்க கூடாது என்றபோது அதை விலக்கிய போது, கிறித்த அறிஞர் பலர் பாதுகாத்தனர்
  • திருவள்ளுவர் காட்டும் வழியில் வாழ வேண்டும். தமிழர் மெய்யியலை இழிவு படுத்த, மக்களை ஆரியர் திராவிடர் எனப் பொய்யாய்ப் பிரிவினை மூட்டி, சற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விவிலியப் புரட்டை பரப்ப செய்த செய்யும் முயற்சிகளை தோற்க அடிக்க வேண்டும். 

    சர்ச் பரப்பும் புரட்டிற்கு உதவும் தாங்கள் செய்திகளை தெளிவாக விளக்க முழு கட்டுரை ஓரிரு நாளில் தருகிறேன்.https://tamilsamayam.wordpress.com/.../%E0%AE%A4%E0%AE.../


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard