New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலத்தில் பலதார மணம், பரத்தையர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்க காலத்தில் பலதார மணம், பரத்தையர்
Permalink  
 


 

தமிழர் பண்பாடு
காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்
பிரபஞ்சன்

பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1

தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு. பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம் அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம் என்கிறார் அவர்.

o

நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும் திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத் தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத் தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில் கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.

இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும் யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக் கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

o

சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும் சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.

சில காதலர்களை நாம் சந்திக்கலாம். ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்: (குறுந்தொகை)

first-row-erotic-sculptures.jpg

குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும் நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.

காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல் காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான் தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.

‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின் தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில் போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால் எனக்கு அதைச் சொல்வாயாக’

- குறுந்தொகை

இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டிச் சொல்லும் வாசகம். தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணம் கொண்ட வேறு ஒரு பொருள் பூக்களிலும்கூட இருக்க முடியாது என்பது அவன் தீர்மானம். அவனுக்கும் அவளுக்குமான புணர்ச்சி (உடல் புணர்ச்சிதான். இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.) நடந்து முடிந்த பிறகு, தலைவியின் இன்ப நலத்தைச் சொல்லிச் சிலாகிக்கிற பாடல் இது. தலைவிக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும்தான். இந்த இரண்டு பாடல்களையும் ஒப்புநோக்கும்போது, நமக்குப் பிடிபட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. தலைவி சொன்ன முதல் பாடலின் காதல் உக்கிரமும் அழகியல்ரீதியாக அதன் ஆழமும் திடநம்பிக்கையும் தெளிவும் தலைவன் நலம் பாராட்டலில் இருக்கின்றனவா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். தலைவன் பேச்சில் அனுபவித்த திருப்தியும் ஒருவகை எக்களிப்பும் இன்னும் கூடுதலாக ஓடும் நதியின் நீருக்குள் புரளும் கிளிஞ்சல்போல, சத்தம் எழுப்பாத ஆண்தன்மையைக்கூட உணரக் கூடும்.

சங்கக் காதலர்களின் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது. தனிமையில் அவர்கள் சந்திக்க நேரும்போது, அக்காலத்தில் மக்கள்தொகைக் குறைவும் காடுகள் நிறைந்த நிலப்பகுதியையும் கணக்கில் கொண்டால், மெய்யுறு புணர்ச்சி ஏற்படுதல் இயல்பும் இயற்கையுமே ஆகும். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்புணர்வை ஏற்கவுமே செய்கின்றன. புணர்ச்சிக்குப் பிறகு, தலைவன் நியாயமான காரணத்தாலோ நியாயமற்ற காரணத்தாலோ சந்திப்பைத் தவிர்க்க முனைந்தால் தலைவிக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வண்டு மற்றொரு மலருக்குத் தாவிவிட்டதோ என்று தவித்துப்போகிறாள். மீண்டும் சந்திக்கும்போது அவன் அவளிடம் ஆயிரம் சத்தியம் செய்கிறான்.

‘குவளை மலரின் மணம் வீசுகின்ற, திரண்ட கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணம் தரும் பவள வாயினையும் உடையவளே. அஞ்சாதே என்று நான் சொல்லிய சொல்லே உனக்கு அச்சமூட்டியதோ? உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் நட்பே எனக்குப் பெரிது . . .’

பெண்ணுக்கு அப்போதைக்குச் சமாதானம் ஏற்படுகிறது. தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் அவளிடம் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய காதலர்கள் நிறைய காதலிகளிடம் செய்த சத்தியங்கள் வெடித்த பஞ்சுபோலக் காற்றில் பறப்பதையும் உதிர்த்த மதுமயக்கம் நனைந்த வார்த்தைகள் நீரில் மிதந்து செல்வதையும் காதல் செய்த பெண் திடுக்கிடலோடு பார்க்க நேர்கிறது. ‘பொய்யும் வழுவும் புகுந்த காலம்’ என்று இலக் கணக்காரர்கள் இக்காலத்தையே சொல்கிறார்கள். மேலும் பெண்ணின் காதல் உறவு மற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் ‘அலர்’ தூற்றப்படுகிறது. சங்க இலக்கியம் இந்த மற்றவர் வாழ்க்கையை மகிழ்ந்து புறம் பேசுகிற வழக்கத்தை ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் குறிப்பிடுகிறது.

குறிப்பாகப் பெண்கள் அந்தரங்கம் பற்றிப் பிறர் பேசும் வழக்கத்துக்கு 2500 ஆண்டு வயது என்பதிலும் தமிழர் பெருமைப்படலாம். இப்படிப் பேசப்படும் அவர் பேச்சுக்கு மனம் நைந்துபோகிறாள் தலைவி. திருமணத்தை நோக்கிய அவளது நகர்வுக்கு ‘அலர்’ முக்கியக் காரணமாகிறது. புணர்ச்சி காரணமாகவும் கவலை காரணமாகவும் (தான் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற கவலை) உடல் இளைக்கிறது. உடம்பில் பசலை படர்கிறது. தாய் இதைக் கவனிக்கிறாள். பெண்ணுக்கு முருகு அல்லது அணங்கு போல ஏதோ காத்துகருப்பு தோஷம் என்று எண்ணி வேலனை (பூசாரியை) அழைத்துப் பூசை போட்டுக் (வெறியாட்டு) குறி கேட்கிறாள். தாய்மார்களுக்குத் தம் பெண்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும்கூடும் என்கிற நம்பிக்கையே வருவதில்லை. தாய்மார்களுக்குத் தம் பெண்கள் என்றும் குழந்தைகள். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிபடுகிறது, தாய்மார்களுக்கும். தாய்மார்கள் சிலர் பெண்களைக் கோல் கொண்டு அடித்ததாகச் சங்கப் பாடல்கள் உண்டு. காதலனுக்குத் தன் உடம்பில் சுதந்திரம் கொடுத்த பெண்ணுக்குப் பல சந்தர்ப்பங்களில் அவன் முகவரிகூடத் தெரிவதில்லை. அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்று பொத்தாம்பொதுவாக அவன் சொல்வதை அவள் கேட்டு அமைதி அடைந்திருக்கிறாள். ‘அவனை நான் விட்டுவிடுவேனா என்ன, ஊர், நாடு எங்கும் போய் வீடு வீடாகத் தேடி அவனைக் கண்டுபிடித்து விடமாட்டேனா?’ என்கிறார் சங்கப் பெண்மணி ஒருவர். ‘அடக் கஷ்டகாலமே. என்னை அறிந்த அவன், நாளை உன்னை எனக்குத் தெரியாதே என்றால் என்ன செய்வது? எங்கள் உறவை அறிந்தவர்கள் யாரும் இல்லையே. ஆங். . நாங்கள் உரையாடிக் களித்த அந்தக் குளத்தருகே ஒரு நாரை நின்று கொண்டிருந்தது’ என்று பேதைத்தனமாக நினைக்கும் தலைவியையும் சங்கப் பாட்டில் காண முடிகிறது.

பெண்ணின் காதல் விவகாரம் தாய்க்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது. தேரில் (இன்று காரில்) வந்த இளைஞன் ஒருவன் ஊர்ப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் சொல்கிறார்கள். வீட்டுக்கு எதிரே தெருவில் ஒருவன் நின்றதாகப் பார்த்தவர்கள் வந்து சொல்கிறார்கள். குளிக்கப்போன இடத்தில் தலைவி அருவியில் வழுக்கிவிழ, எங்கிருந்தோ வந்த இளைஞன் ஒருவன் அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியதையும் தோழிகள் தாய்க்குச் சொல்கிறார்கள். ‘அடடா, அவள் கூந்தல் மாறுபட்டும் முலை முகம் மாறுபட்டும் வளர்ந்தும் இருந்ததைப் பார்த்துச் சந்தேகித்த அன்றைக்கே அவளை வீட்டுக்குள் (இற்செரிப்பு) அடைத்துவைக்காமல் போனேனே’ என்று வருந்துவார் தாய். வீட்டுச் சூழல் மாறி அனலடிப்பதையும் தாயின் கண்களில் சினம் வழிவதையும் காண நேர்ந்த தலைவி தலைவனுடன் உடன்போக்கில் (இன்றைய தமிழ் - ஓடிப்போதல்) அவன் ஊருக்குச் செல்கிறாள். காதலின் ஆழத்தை அறிந்த பெற்றோர் அவளையும் அவனையும் அழைத்து வந்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

o

தமிழ்ப் பண்பாட்டின், சங்கத் தமிழர் வாழ்க்கை முறையில் மிக முக்கியமானதாக அறிஞர் உலகம் கருதிவரும் தமிழர் தம் ‘களவு’ வாழ்க்கையை அது திருமணத்தில் முடிவுற்றமையை மிகச் சுருக்கமாகக் கண்டோம். பெற்றோர் அறியாமல் பெண்ணும் ஆணும் ‘ஊழ்’ வலிமையது காரணமாக எதிர்ப்பட்டுக் காதலாகிக் கரந்து புணரும் வாழ்க்கை நெறியே களவு ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய, கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டை, ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’ என்று பின்வந்தோர் பரவலாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இயற்கைப் புணர்ச்சியையும் அது பற்றிய செய்திகளையும் தோழி அன்னைக்குச் சொல்லிக் காதலர்களின் களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாட்டாகும் இது. இதைத் ‘தமிழ் அறிவித்தல்’ என்றே குறிப்பிட்டார்கள் என்றால், தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் களவு வாழ்க்கை முறையைக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். என்றாலும் இது குறித்து மேலும் விளங்கிக்கொள்ளச் சில புரிதல்களுக்கு நாம் வருதல் வேண்டும்.

1. சங்க இலக்கியங்களாகிய பாட்டும் தொகையும் (ஆக மொத்தம் 18 நூல்கள்) காதலை மிகுத்தும் மேல் வழியும் புளகாங்கிதத்தோடும் பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும் ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.

2. இற்செரிப்பு எனும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்பம் தருகிற துறை, அன்றைச் சமூகத்தில் நிலவிய வழக்கத்தையே சொல்கிறது எனில், பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம் இருக்க வேண்டும்.

3. களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள். இது காதலுக்கு அவர் காட்டிய முகம்.

4. அலருக்கும் அம்பலுக்கும் பெண்கள் இவ்வளவு அச்சம்கொள்ள வேண்டி இருப்பது சமூகத்துக்குப் பயந்தல்ல. மாறாகத் தம் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் இது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் கருதலாம்.

5. உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.

மாறிவரும் சமூகச் சூழலையே சங்கக் கவிதைகள் சித்தரிக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் சங்க காலத்துக்கும் முன்னால் பெண்களை, இள மகளிரைப் பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி மறுபுறக் கயிற்றைத் தங்கள் கையில் வைத்துக் காத்திருக்கிறார்கள் தாயார்கள். இரவு நேரத்தில் அவர்கள் கால்களில் கயிறு கட்டிக் காத்திருக்கிறார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக் கயிறு மேகலை (ஒட்டியாணம்) ஆகவும் கால் கயிறு சிலம்பாகவும் மாறியது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கு ஒன்று இருந்துள்ளது. அதற்குச் சிலம்புக் கழி நோன்பு என்று பெயர்3 என்று கூறுகிற பாலசுந்தரம் அவர்களின் கூற்றால் பழங்காலம் என்கிற காலத்திலிருந்து சங்க காலம் எனப்பட்ட காலத்துக்கும் முந்தைய, சம காலத்திய தமிழர் எண்ணங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்று யூகிக்கலாம்.

பேராசிரியர் மாதையன் ஒரு குறிப்பை நல்குகிறார். குறுந்தொகையில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றின் (136, 205) சாரம் இது.

‘காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதி மதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும் (மதம்போல) பரவச நீட்சியாகும் காமம்.

காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும் சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து (மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல் காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும். அது விருந்தே ஆகும்.’

இந்த இரு குறுந்தொகைப் பாடல்களும் முக்கியமானவை. காமம் குறித்து அதாவது சமூகத்தில் பெருகிவரும் காதல் - காதல் திருமணம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதே இப்பாடல்கள். தவிரவும் ‘விருந்து’ என்ற சொல், ‘புதியது’ என்று பொருள் தந்து சமூகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிற புதிய (பெண் ஆண் காதல் கொள்வது, பிறகு திருமணம் செய்துகொள்வது) பழக்கத்தையும் புதிய சமூக நடைமுறை ஒன்று உருவாகிவருவதையும் உணர்த்துவதாக இருக்கிறது என்பதாக மாதையன் கருதுகிறார்.

இது மேலும் ஆராயப்பட வேண்டிய கருத்து என்றாலும் ஏற்றுச் சிந்திக்கத் தக்கதாகவே இருக்கிறது. மனித சமூகம் அதன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் அறிவோம். அப்படி மாறிக்கொண்டே வந்த சமூகச் சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் புதிதாக வந்தது காதல். ஒரு காலத்தில் பாலுறவு அக்கணத்து மனம் விருப்பம் தேவை சார்ந்ததாக, உறவுமுறைகள் ஏதும் அற்றதாக, வரையறையற்ற புணர்ச்சிச் சுதந்திரமாக இருந்துள்ளது. புணர்ச்சிச் சுதந்திரம் சுருங்கிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த ஒருவன் ஒருத்தி கருதுகோள் அப்போது புதிதாக அமைந்துகொண்டு வந்த அரசுகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் வசதியாக இருந்தது. குடும்பங்கள், ஒரு சின்ன அளவு அரசாங்கம். அரசாங்கத்தில் அரசன் முதன்மை என்றால், ஆண் ஆதிக்கக் குடும்பத்தில் கணவன் அதிகாரி. அரசனுக்கு ஆளப்படுபவர் மக்கள் என்றால் கணவன் ஆட்சிக்கு உட்பட்டவர் மனைவி. அரசனுக்குட்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை ஒடுக் குவதுபோல, தந்தைக்கும் தாய்க்கும் ஒடுக்குவதற்கு ஏற்றபடியாகப் பிள்ளைகள். தனிச் சொத்துரிமை வழக்கத்துக்கு வந்ததும் கற்பு என்கிற ஆண் இன்பக் களவுகளும் உருவெடுக்கின்றன. மன்னனின் அந்தப் புரங்கள், மனைவிகள், விருப்பப் பெண்கள், போரில் கொண்டுவந்த மகளிர்கள் என்று நிரம்பி வழிகிறது என்றால், குடும்பத் தந்தைக்கு அல்லது தலைவனுக்குப் பரத்தைகள். (ஒரு நல்ல விஷயம்: பரத்தைக்கு ஆண்பாலாகப் ‘பரத்தன்’ என்ற சொல்லும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)

தலைவனின் சொத்து அவன் வாரிசுகளுக்கே சென்று சேர்வதை ஒருவன் ஒருத்தி திருமணம் உறுதிப்படுத்தியது. பெண் தன் சுதந்திரத்தை உறுதிபட இழக்கிறாள் என்பதையும் அத்திருமண முறை உறுதிப்படுத்தியது.

o

சங்கத் திருமணங்கள் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் சடங்குகள் இன்றி நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.

காலையிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தோடுகூடிய நாளையே திருமணத்துக்கு நல்ல பொழுதாகத் தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். நிறைய கால்களை நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள். மகன்கள் பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக் கிறார்கள். சுற்றத்தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள். அன்றே முதல்(?) இரவு நடைபெறுகிறது.

இன்னொரு வசதியான வீட்டுத் திருமணம் இது. நெய்மிக்க வெண்மையான சோற்றினை இறைச்சியுடன் சேர்த்து ஆக்கி எல்லோரையும் உண்பித்தார்கள். புள் (பறவை) நிமித்தம் பார்த்தார்கள். வளர்சந்திரன் ரோகிணியோடு கூடிய நாளில், மண இடத்தை அழகுபடுத்தினர். கடவுள் வழிபாடு நடந்தது. மண வாத்தியம், முரசுகள் முழங்கின. மங்கள மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர். மணமகனுக்கு வெள்ளை நூலால் காட்டி நூலை (பேய் பிசாசுகளிடம் இருந்து காக்கும் நூல்) அணிவித்துப் புதுப் புடவையால் சுற்றினார்கள். அணிகலன்கள் பூட்டினார்கள். பெண்ணுக்கு வியர்வை தோன்றியது. அதைத் துடைத்துவிட்டார்கள். அன்றே முதல் இரவு நடந்தது.

சங்கத் தமிழர் திருமணம் இவ்வளவுதான். ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டும் காலம் வரவில்லை . . . ஆனால் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச் சடங்கோடும்தான் நடந்தது. சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகளாவது பிராமண சாட்சியாகத் திருமணம் செய்துகொள்ளக் கோவலன் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வைணவப் பிராமணக் கொழுந்தும் மாபெரும் கவியுமான ஆண்டாள் கண்ட திருமணக் கனவு சமூக வளர்சிதை மாற்றத்தை உணர்த்தும்.

வில்லிபுத்தூர் நகரத்தில் ஊர் முழுக்கத் தோரணங்கள் கட்டப்பட்டுப் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை வதுவை மணம் என்றுதான் குறிப்பிடப்பட்டு விட்டது. பாளையும் கமுகும் மற்றும் முத்துச் சரங்களும் தொங்கவிடப்பட்ட பந்தலில் அவர் அமர்ந்திருக்கிறார். இந்திரன் முதலான தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து நாரணன் நம்பி சார்பாக மணம் பேசுகிறார்கள். மந்திரிக்கிறார்கள். நால்திசைகளில் இருந்தும் புனித நீர்க் குடங்கள் வருகின்றன. பார்ப்பன சிஷ்டர்கள் அவனுக்குக் காட்டிக் கட்டுகிறார்கள். மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ், மதுசூதனன் வந்து அவளைக் கைப்பற்றுகிறான். வாய் நல்ல பிராமணர்கள் மறை ஓதுகிறார்கள். ‘நாங்கள்’ தீவலம் செய்கிறோம். நம்பி என் காலை எடுத்து அம்மிமேல் வைக்கிறான். என் கையையும் நாராயணன் கையையும் என் தாய் மற்றும் சுற்றத்தார் இணைத்துவைக்கிறார்கள் . . .

ஆண்டாள் தன் சாதிக்குரிய சடங்குகளோடு கூடிய திருமணத்தைப் பார்த்து இருக்கக்கூடும். அப்படியே கனவும் காண்கிறாள். சில கற்பிதங்கள் இருந்தாலும் அவள் விரும்பிய திருமணம் இது.

o

தமிழர் திருமணத்தில் தாலியும் தீவலம் வருதலும் இல்லை என்பதையும் முக்கியமாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உறங்கி எழுந்ததும் தலைவிமார்கள் தங்கள் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தாலியின் மகிமையைப் பற்றியும் பேசிமாயும் நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.

காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது. ஒருதாரக் குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. பெண்ணின் பெருந்தகைமையை அவளது உடலுக்குள் பிரவேசித்த அதிகாரபூர்வமான கணவனின் உறுப்பு மட்டுமே தீர்மானித்தது. பெண் என்கிற மனுஷியின் மனமோ விருப்பமோ தேர்வோ தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் எப்போதும் உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை.

திருமணத்துக்குப் பிந்தைய தலைவிகள் தங்கள் கணவர்கள்மேல் காட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்ட விசுவாசத்தில் வெகுகுறைவான சதமானமே கணவர்மார்களால் தங்கள் தலைவிகள் மேல் காட்டப்பட்டது என்பதற்கே நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. களவுக் காலத்தில் காதலன் தன்னைப் புறக்கணித்துவிடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்பட்ட பெண் கற்புக் காலத்தில் கணவன் தன்னைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந்து விடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்படுவது தான் நம் சங்கப் பெண்களின் பேரவலம். குறுநில மன்னனும் பெரும் வள்ளலுமான பேகன், மனைவி கண்ணகி என்பவளைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந் தான். இதைக் கண்டிக்கும் (மிக மிக மென்மையாக) முகமாகக் கபிலர், பரணர், பெருங்குன்றூர் கிழார், அரிசில் கிழார் என்று அக்காலத்திய பெரும்புலவர்கள் பஞ்சாயத்து பண்ணிப் பேகனைக் கண்ணகியிடம் கொண்டு சேர்க்கிறார்கள். பரத்தையர் பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவே சமூகத்தில் இருந்துள்ளது. அறிவாளர்களாகிய புலவர்கள் தலைவியர்கள் பால் கரிசனம் கொண்டார்களே தவிர, பரத்தையரின் அவலத்தைப் பாடவில்லை என்பது கருதத்தக்க ஒன்று. இன்னொன்றையும் கூடவே சொல்ல வேண்டும். இன்னல்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டவர்களேனும் பரத்தையர், தலைவிகளைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

கற்பு வேடம் பூண்ட பெண்டிர் சற்றேறக்குறைய தெய்வங்களாகவே புனையப்பட்டுள்ளார்கள். தாய் வீட்டில் தேனும் பாலும் பருகி வளர்ந்த பெண், கணவன் வீடு வறுமையுற்றதால், மான் கலக்கிய கலங்கல் நீரைக் குடித்துப் பசியை ஆற்றுகிறாள் என்கிறது ஒரு சங்கக் கவிதை. அடுப்புப் புகையால் கண் சிவந்து, நீர் சொரிந்தாலும் தான் சமைத்த உணவைக் கணவன் மிக விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு பேருவகை அடைகிறாள் ஒரு கற்புக்கரசி. கணவன் பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்தால் மனைவி கோபப்படக் கூடாது, ஊடல் கொள்ளலாம். அதற்கு மேல் தம் கோபத்தை வெளியிடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. போர் காரணமாகவோ கல்வி மற்றும் பொருள் சேர்க்கவோ கணவன் 12 மாதங்கள்வரை பிரியலாம். மனைவிகளுக்கு இந்த மூன்று உரிமைகள் இல்லை. மனைவி வீட்டுக்கு விலக்காக (கலம் தொடா மகளிர் என்று பெயர் இவர்களுக்கு) இருக்கும்போது, கணவன் பரத்தையரிடம் போகலாம். ஆனால் மனைவி குளித்து முழுகித் தயாராகிக் கணவன் என்னும் தெய்வத்தை வரவேற்கத் தயார் ஆக வேண்டும். வெறும் டி.எம்.டி. கம்பிகளுக்கு இருக்கிற மரியாதைகூடப் பெண்களுக்கு அக்காலத்திலும் இல்லை. எக்காலத்திலும் இல்லை.

ஆண் குழந்தை பெறும்போது பெண்ணுக்குக் குடும்பத்தில் ஓரளவு கவனிப்பு கிடைக்கிறது. ஆண் குழந்தை பெற்றவரே மங்கள மடந்தையர். மற்றவர்கள் அமங்களர்கள்.

கணவனை இழந்த பெண்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு பாடல் - புறம் 146.

“சான்றோர்களே! உன் கணவன் இறந்துவிட்டான். நீ அவனது சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறு என்று சொல்லாமல் என்னைத் தடுக்கின்ற சான்றோர்களே! நான் என் கணவனுடன் எரிந்து போகவே விரும்புகிறேன். வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்த, தண்ணீர் பிழிந்த சோற்றைக் கீரைக் குழம்போடு, எள் துவையலுடன், சமைத்த வேளைக் கீரையைத் தின்று கொண்டு பாய்கூட இல்லாமல் பருக்கைக் கல் மேல் படுத்துக் கைம்மை நோன்பு இயற்றி வருந்தும் பெண்களைப் போல நான் இல்லை. என் கணவனை எரிக்கத் தயாராகும் இந்தத் தீ, எனக்குத் தாமரைப் பொய்கையைப் போன்றது. . . என்னைச் சாகவிடுங்கள். . .”

கைம்மை நோன்புக்கு அஞ்சி உயிரையே கொடுக்கச் சித்தமான இந்தப் பெண் சராசரிப் பெண் அல்ல. மன்னன் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு! மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?

o

1. பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மண நிலையை எய்தியது சங்க காலத்துக்குச் சற்று முன்னர்தான். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை ஓரளவாவது பெற்றார்கள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காதல் திருமணத்தை விரும்பவில்லை.

2. சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள்- தலைவர், தலைவி இருவரும் உயர்குடும்பத்தினர். உழைக்கும் வர்க்கத்தினர் இழிசனர்கள் என்றும் புலையர்கள் என்றும் வினைவளர்கள் என்றும் அடியோர்கள் என்றும் இழிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிப் பாடினால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற உயர்காதல் ஒழுக்கத்தை வைத்துப் பாடும் ஐந்திணைகளில் பாடாமல் கைக்கிளை, பெருந்திணை போன்றவற்றில் வைத்துப் பாடலாம். அந்த இழிசனர்களுக்குக் காதலின் நுணுக்கம் தெரியாது. அதோடு காதலை முழுமையாக எடுத்துச் சென்று பயிலத் தகுதி இல்லாதவர்கள் அவர்கள் என்கிறது, திட்டவட்டமாக இலக்கணம்.

3. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பதே தமிழ் இலக்கணம்.

4. வைதீக இந்து மதத்தின் வருணாஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம் கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது ஆரோக்கியமானது.

5. சமண சித்தாந்தங்களும் பௌத்தக் கருத்தாடல்களும் விரவிவருகிற காரணத்தால், சங்க இலக்கியம் உயர்தன்மையைப் பெற்றுள்ளது.

6. சங்க இலக்கியம் சுமார் 500 ஆண்டுக் காலப் படிநிலை வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் சார் சிந்தனையும் மன்னர் சார் சிந்தனையும் விரவிவருகிற இலக்கியமாகவும் இருப்பதற்கு அதுவே காரணம்.

7. 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டின் சில பகுதிகள் குறித்த சங்க இலக்கியம் இப்படியாக நமக்குச் சில தெளிவுகளைத் தருகிறது.

o

1. தமிழர் பண்பாடு, வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், பதிப்பு 1949, பக். 51, 55.

2. சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். பதிப்பு 2010.

3. தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகை உரை, பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம், பதிப்பு 1989.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தமிழ் இலக்கியங்களில் பெண்கள்:

உலகிலுள்ள பிற எல்லா இலக்கியங்களையும் போலவே தமிழ் இலக்கியங்களும் பெண்ணை அடிமைப்படுத்தியே நோக்கியுள்ளன. சங்ககாலத்திலும் பெண்ணடிமைத் தனம் வேரூன்றியிருந்ததை “வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” போன்ற பாக்கள் தெளிவுறுத்துகின்றன. ஆனால் பிறமொழி இலக்கியங்களோடும், தமிழின் பிற்கால இலக்கியங்களோடும் ஒப்பீட்டு நிலையில் பார்க்கும்போது, சங்ககாலத்தில் பெண்கள் மிகுதியாகவே கல்வி கற்றிருந்தனர், புலவர்களாகவும் பாடினிகளாகவும் விறலியராகவும் விளங்கினர் என்பதை அறியமுடிகிறது. சங்கக் கவிதையில் பெண்குரலின் பதிவுகள் ஆழமாக இருக்கின்றன. ஒளவை என்ற ஓர் மகா ஆளுமையை அதில் நாம் காண்கிறோம். இன்னும்-ஆதிமந்தி, வெள்ளிவீதி, இப்படிப்-பலபேர் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

திருக்குறளிலும், “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் பெயனப் பெய்யும் மழை” என்பன போன்ற பெண்ணடிமைத்தனக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பெண்வழிச் சேறல் (செல்லுதல்) கூடாது என்று தனியாக ஓர் அதிகாரமே அமைந்துள்ளது.

தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டில் மட்டுமே பெண்களை ஓரளவு மதித்துப் போற்றும் போக்கு காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பெண்ணை மேம்படுத்தி நோக்கினாலும், கற்பு என்னும் கூண்டிற்குள் அடைத்து அவளை தெய்வமாக்கிவிடுகிறது. மணிமேகலையில் மட்டும்தான் மிகக் கீழ்நிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆசிரியர் உயர்த்திக் காட்டியிருக்கிறார். பிற எல்லா நூல்களும் பெண்களை நுகர்பொருள் என்னும் அளவிற்கு மேல் நோக்கவில்லை. இதனால்தான் பாதாதிகேச வருணனை போன்ற வருணனை மரபுகள் எழுந்தன.

சங்கக் கவிதையை விட்டால், பெண்குரல் பதிவுகள் ஆழமாக இடம்பெறுவது ஆண்டாள் வழியாகவே. ஆண்டாளுக்கு முன்னதாகவே காரைக்காலம்மையார் வாழ்ந்திருக்கிறார் என்றாலும் அவரது குரல் பெண்ணின் தனித்த குரலாகப் பதிவாக வில்லை. சிவபெருமானோடு அவரது உறவு தந்தை-மகள் உறவாகவும், தாய்-மகன் உறவாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பதிவு ஆண்டாள் போல் ஆழமாக இல்லை. காரைக்காலம்மை வாயிலாக ஒலிப்பது காலங்காலமாகப் பின்னர் பக்திக்காலத்தில் நாம் கேட்கப்போகும் ஆண் குரல்களே. ஆண்டாளுக்குப் பின் நீண்ட மௌனம்.

தமிழில் ஒளவையார் பெண் கவிஞர்களில் மிகச் சிறந்தவர். ஆனால் குறைந்தது ஆறு ஒளவையார்களேனும் வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்பர் அறிஞர். ஓர் ஒளவையின் நோக்கிற்கும் மற்றொரு ஒளவையின் நோக்கிற்கும் வேறுபாட்டை நாம் நன்றாகக் காணமுடியும். பாரியின் பெண்களோடு தொடர்பு கொண்டிருந்த ஒளவைக்கும், பெண் சற்றே ஏறுமாறாக நடந்தாலும் கூறாமல் சந்நியாசம் கொள் என்று போதிக்கும் ஒளவைக்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

பக்தி இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் பெண் இறுதிநிலையில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவள் என்றும், அப்போதுதான் முக்தியடைய இயலும் என்றும் போதிக்கின்றன. இந்த நோக்குதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை கோலோச்சியிருந்தது. பெண்கள் உடல்களாகவே நோக்கப்பட்டனர். பெண் உடலின் சமூக அடையாளம் என்பது மறு உற்பத்தியில் அவள் ஈடுபடக்கூடியவள் (ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே), குடும்ப அடையாளம் ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சங்க காலம் / தேடல் - 07

காமத்திலிருந்து காதலுக்கு

seed_Sunflowerமுதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காமமே இருந்ததுஅந்த முரட்டுக்காமம் காலவோட்டத்தில் தன்னிலையில் சற்று வீரியம் குறைந்துகாதலாகக் குவிந்து,பெண் மீதும் ஆண்மீதும் அன்பாக மலரத் தொடங்கியது.இதற்குக் காரணங்கள் பல.ஆண்  பெண் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம்.பெண்வழிச் சமுதாயத்தின் ஆளுகையாக இருக்கலாம். “வன்முறையால் எவற்றையும் அடைந்துவிடமுடியாது“ என்ற உயரிய சித்தாந்தமாகக்கூட இருக்கலாம்.

அந்த அன்புமலரைக் காதலாகவும் காமமாகவும் சற்றுக் கூடுதலாக முரட்டுக்காமமாகவும் மாற்றும் வித்தையை ஆணும் பெண்ணும் படிப்படியாக அறியத்தொடங்கினர்ஆம்அவர்கள் காமத்தை அன்பாகவும் அன்பைக் காமமாகவும் கையாளக் கற்றுக்கொண்டனர்ஆனால்,அவர்களால் அவற்றை ஒருபோதும் காதலாக மட்டும் வைத்துக்கொள்ள முடியவில்லைகுளிர்ந்த நீரானது பனிக்கட்டியாக உறையுமுன் உள்ள தனிநிலை போலவோபனிக்கட்டி வெப்பமாகிக் குளிர்ந்த நீராவதற்குமுன் உள்ள தனிநிலை போலவோ காதலும் ஒரு பிடிபடாத சமமற்ற தனிநிலை.

காதற்திணைகள்

தொல்தமிழர் தங்கள் நிலங்கள் நான்கினுள் பாலையையும் சேர்த்து அவற்றை மொத்தமாக “அன்பின் ஐந்திணை“ என்று கூறும் வழக்கம் உள்ளதுஅதாவதுஅவை காமம் கனிந்துகாதற்கனியாக விளைந்த அன்பின் ஐந்திணைஅந்த ஐந்து நிலத்திலும் காதல் இருந்ததுஆனால்தன் வீரியத்தில் மாற்றங்களைப் பெற்றிருந்தது.

குறிஞ்சி என்றால் ஆண்-பெண் சேர்க்கை (பின்னிப்பிணைந்த இல்லறம்),முல்லை என்றால் பெண் தன் கற்பினைக் காத்திருத்தல் (இடைவெளியோடு கூடிய இல்லறம்), மருதம் என்றால் ஆண்-பெண் இல்லறவாழ்வில் இடைச்செருகலாக “சக கிழத்தி“ (சக்காளத்திவந்ததால் ஏற்பட்ட மனக்கசப்பு(ஊடல்), நெய்தல் என்றால் தலைவனைப் பிரிந்த தலைவி “அவன் வருவான்“ என்ற நம்பமுடியாத நம்பிக்கையில் இரங்கியிருத்தல் அல்லது புலம்புதல் (கேள்விக்குறியான இல்லறம்), பாலை என்றால் ஆண்-பெண் இல்லறவாழ்வில் ஏற்பட்டுவிட்ட, தாற்காலிகத்திலிருந்து நிரந்தரத்தை நோக்கிய பிரிவு (கேள்விக்குறியான வாழ்க்கை).

இப்படி வேறுபட்ட இல்லற வாழ்வுடைய ஐந்நிலங்களிலும் காதல் இருந்ததாஇருந்ததுஅது இல்லையெனில் நெய்தல் திணையிலும் பாலைத் திணையிலும் தலைவி உயிருடன் இருந்திருக்க மாட்டாள்ஆம்!தலைவி உயிர்த்திருக்க அருமருந்தாக இருந்தது காதல்தான்ஒருவிதத்தில் அது அவளின் உயிராகவும் இருந்தது.

காதலும் காதல் நிமித்தமும்

சங்க இலக்கியங்களை அதன் பாடுபொருள் சார்ந்து அகம்புறம் எனப் பாகுபாடுசெய்துள்ளனர்அகம் என்றால் அகத்திணைபுறம் என்றால் புறத்திணைஇங்குத் திணை என்பதனை ஒழுக்கம் என்ற பொருளில் கருதவேண்டும்ஆகஅகம் என்பது அகம் சார்ந்த ஒழுக்கம்அதாவது,அன்புகாதல்காமம் மற்றும் பிறரிடத்தில் வெளிப்படையாகச் சொல்லத்தகாத அனைத்தும் அகத்திணையுள் அடக்கம்புறம் என்பது புறம் சார்ந்தஅகம் சாராத மற்ற ஒழுக்கங்கள்அவையனைத்தும் புறத்திணையுள் அடக்கப்படும்சங்க இலக்கியப் பாக்கள் 2381. அவற்றுள் அகத்திணையைச் சார்ந்தவை 1862. அதாவது, 78.20 சதவிகிதப் பாடல்கள் அகத்திணையைச் சார்ந்தவை.

காதல்“ என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைத் தானே எண்ணி, “89 இடங்களில் காதல் என்ற சொல் இடம்பெற்றுள்ளது“ என்ற கருத்தினை முனைவர் பெ.மாதையன் தெரிவித்துள்ளார்.iஅதாவதுபுள்ளிவிவரப்படி பார்த்தால் 21பாடலுக்கு ஒருமுறை “காதல்“ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

எல்லாத்திணைகளிலும் காதல் இலைமறை காயாகத்தான் இருந்துவந்துள்ளதுஅதனால்தான் அதனைக் களவு (திருட்டுத்தனம்என்ற சொல்லால் நாசுக்காகக் குறிப்பிட்டனர்ஒழுக்கம் என்பதுபெற்றோருக்குத் தெரியாதஅவர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் “களவொழுக்கம்“ என்றும் அவர்களுக்குத் தெரியவந்துஅது அவர்களால் ஏற்கப்பட்டால் அது “கற்பொழுக்கம்“ என்றும் இருவகையில் பொருள்படுத்தப்பட்டது.

தேவதைகள் காத்திருக்கிறார்கள்

தலைவியும் தலைவனும் முதன்முதலில் சந்திக்கும் இடமாகப் பூம்பொழில்(சோலைவனம்), நீர்நிலை (அருவிகுளம்ஆறு,), விளைநிலங்கள்(தினைப்புனம்), விளையாட்டு ஆயம் (ஆடுகளம்ஆகிய நான்கும் இருந்தன.இந் நான்கு இடங்களும் தலைவி தன் பெற்றோரின் அனுமதியினைப் பெற்றுத் தன் தோழியுடன் உலாவும் அல்லது சிறுசிறு பணிகளைப் புரியும் இடமாக இருப்பதனால் அங்கு அவளைத் தனித்துக் காணத் தலைவனுக்கு வசதியாக இருந்திருக்கலாம்.

பூக்களைப் பறித்து மாலைகட்டி மகிழ பூம்பொழிலுக்குத் தலைவிசெல்வது உண்டுகுளித்துக் கரையேறவோ அல்லது நீராடி மகிழவோ நீர்நிலைகளுக்குத் தலைவிசெல்வதும் உண்டுதன் வீட்டாருக்குச் சொந்தமான நிலங்களில் தினைசோளம்சாமைவரகு முதலான பயிர்களை விளையச் செய்திருந்தால்அவற்றின் கதிர்முற்றிய காலங்களில் அவற்றைப் பறவைகளிலிருந்து காக்கப் பரணமைத்துகவன்கற்களின் உதவியுடன் அவற்றை விரட்டும் பணிக்குத் தலைவிசெல்வதும் உண்டு.பந்து விளையாடமணல்வீடு கட்ட மற்றும் இன்னபிற விளையாட்டுகளில் பொழுதினைக் கழிக்கும் பொருட்டு தலைவி தன் தோழியுடன் விளையாட்டுத் திடலுக்குச் செல்வதும் உண்டுஇந்த இடங்களிலெல்லாம் இளம்பெண்கள் தங்கள் பெற்றோரின் துணையின்றி வருவார்கள் என்பது இளைஞர்களுக்குத் தெரியும்இங்கெல்லாம் இளைஞர்கள் தங்களைக் காண ரகசியமாக வருவார்கள் என்பது இளம்பெண்களுக்கும் தெரியும்.தலைவியின் தாய்க்கும் தெரியும்அத்தாயும் ஒருகாலத்தில் தலைவியாக இருந்தவள்தானேஇருந்தாலும் மகள் மீது கொண்ட நம்பிக்கை அவள் கண்களை மறைத்துவிடுகின்றது.

காதற்தீ

தலைவி மருதநிலத்துக்காரியாகவோ முல்லைநிலத்துக்காரியாகவோ இருக்கலாம்அதேபோலதலைவன் மலைநாடனாகவோ,நெய்தல்நிலத்துக்காரனாகவோ இருக்கலாம்இருவரும் எதிர்ப்படும்போது அவர்களுக்குள் இருக்கும் உணர்வுத் தீ அவர்களை இணைத்துப் பற்றிக்கொண்டால் போதும்பின்னர்அத் தீ அணையாமல் இருக்கத் தோழியும் பாங்கனும் (தலைவனின் நண்பன்காவல் காப்பர்.

முதல்சந்திப்புக்குப் பின்னர் அடுத்தடுத்த சந்திப்புகளை ஒழுங்குபடுத்திக்கொடுப்பது தோழியும் பாங்கனும்தான்அவர்களின் பகற்சந்திப்பினைப் பகற்குறி என்றும் இரவுச்சந்திப்பினை இரவுக்குறி என்றும் அழைப்பர்சந்திப்பு என்பது வெறும் பேச்சுமட்டுமல்லஉடல்சார்ந்த அன்புறவும்தான்.

அவர்களின் காதலை அதாவது நட்புறவினைக் குறுந்தொகைப் பாடல் நிலத்தைவிடகடல்நீரைவிடவானைவிடப் பெரியதாக உயர்த்திக் கூறியுள்ளது.

ஊர் சிரித்தது

தலைவியின் காதலை அவளின் நடவடிக்கைகளிலிருந்தும் அறிந்துகொண்ட ஊரார் நீர்த்துறைகளில் கூடும்போது தங்களுக்குள் பேசிக்கொள்வர்.இதனைச் சங்க இலக்கியங்கள் “அம்பல்“ என்று குறித்துள்ளனஇவ்வாறு இவர்கள் பேசிக்கொள்வதனைத் தலைவியோ அல்லது தலைவியின் உறவினர்களோ அறியமாட்டார்கள்தலைவியை அவளது காதலனோடு இணைத்துக் கண்டுவிட்ட ஊரார் அவர்களின் உறவு பற்றி தலைவியின் உறவினர் அறியுமாறு வெளிப்படையாகவே பேசுவர்இதனைச் சங்க இலக்கியங்கள் “அலர்“ என்று சுட்டியுள்ளனஒரு பெண்ணைப் பற்றி “அலர்“ எழுந்தால்அது அப்பெண்ணின் கற்புக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.இந்த அலர் ஊர்முழுவதும் பரவுவதனைத் தோழிதலைவனுக்குத் தெரியப்படுத்துவாள்இதனை “அலர் அறிவுறுத்தல்“ என்று கூறுவர். “உங்கள் காதல் ஊராருக்குத் தெரிந்துவிட்டதுஊர் சிரிக்கிறதுஉடனே வந்து தலைவியை மணந்து கொள்“ என்பது இதன் உட்குறிப்பு.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நல்ல தோழி

இந்தக் களவு உறவு நீட்டித்தால் தலைவி கருவுற நேரிடும்ஆதலால்,தோழிதலைவன்  தலைவியின் திருமணம் குறித்து (அதனை வரைவு என்பர்தலைவனிடம் வலியுறுத்திக்கொண்டே இருப்பாள்.திருமணத்துக்காகப் பொருள்தேட(செல்வம்தலைவன் வெளியிடங்களுக்குச் செல்லத் துணிவான்அப்போதுதலைவி தன் தலைவனைப் பிரிந்து தனித்திருக்க நேரிடும்தலைவனின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் மனவோட்டத்தைச் சங்க இலக்கியப் பாடல்கள் பல எடுத்துக்கூறியுள்ளனஇரவில் அவள் தனித்து விழித்திருப்பாள்இரவுப் பொழுதில் ஏற்படும் சிறுசிறு ஒலிகளையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள்இதனால்அவள் உடல்,தோள்வளைகள் மற்றும் கை வளையல்கள் நெகிழ்ந்து கழன்றுவிடும் அளவுக்கு மெலிவுறும்இதனைக் கண்ட தாய்தன் மகளைத் தெய்வம் அணங்கியதாகக் கருதி வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்துவாள்.இதுகுறித்து கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்.

இத்தருணத்தில்தான்தோழி தன் தலைவியின் காதல் புராணத்தை விரிவாகவும் நுட்பமாகவும் தலைவியின் தாய்க்கோ அல்லது தலைவியின் செவிலித்தாய்க்கோ (வளர்ப்புத் தாய்தெரிவிப்பாள்இப்பணியினைச் சங்க இலக்கியங்கள் “அறத்தொடுநிற்றல்“ என்று அருமையாகச் சொல்லியுள்ளது.அதாவதுஉண்மையைப் போட்டுடைத்தல்.

களவாகற்பா?

எந்தப் பெற்றோர்தான் காதலை ஏற்பர்இக்காலப் பொற்றோர் மட்டுமல்ல அதற்குச் சங்ககாலப் பெற்றோரும் விதிவிலக்கல்லசங்ககாலக் காதல் பெரும்பாலும் களவுதான்பின்னர் தலைவியின் வீட்டில் தோழியும்,தலைவனின் வீட்டில் பாங்கனும் அவர்களின் பெற்றோருக்கு எடுத்துக்கூறி,தலைவன்  தலைவியின் களவொழுக்கத்தினைக் கற்பொழுக்கமாக மாற்ற முயல்வர்அம்முயற்சி கைகூடினால்பெற்றோர்கள் அவர்களுக்கு மணமுடித்து அல்லது அவர்களை ஏற்றுக்கொண்டுதங்களுக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவர்அம்முயற்சி கைகூடவில்லையெனில் தலைவன்  தலைவி உடன்போக்கினை மேற்கொள்வர்அதாவது,குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசென்றுதங்களுக்கென்று ஓர் இல்லமைத்துக் கற்பொழுக்கத்தில் வாழ்வர்.

பெற்றோர்கள் தலைவன்  தலைவியின் காதலை ஏற்காதுபோது அவர்களைத் தன்வழிப்படுத்துவதற்காகவும் அவர்கள் ஓடிப்போய்விடக்கூடாது என்பதற்காகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும் உண்டுதலைவின் பெற்றோர் தலைவியைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள “இச்செறித்தல்“ (இல்லத்தில் வைத்தல்)உண்டுஅதாவதுஹவுஸ் அரெஸ்ட் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிடுதல்.கூண்டுக்கிளியாக்கப்பட்ட தலைவியின் நிலையினைத் தலைவனுக்கு எடுத்துக்கூறித் தலைவி தன் உயிரைவிட்டுவிடுவாள்ஆதலால்,எப்படியாவது அவளைக் காப்பாற்றி அழைத்துச்சென்று மணம்செய்துகொள் என்று தோழிதலைவனிடம் மன்றாடுதல் உண்டு.

பெத்தமனம் பித்து

வீட்டைவிட்டுத் தன் தலைவனுடன் வெளியேறிய தலைவியின் நிலையினைக் குறித்துத் தாயும் செவிலித்தாயும் அடையும் துயரம் அளவற்றதுதன் மகள் விளையாடிய பாவைகள் (பொம்மைகள்), பந்து முதலானவற்றைப் பார்த்துப் புலம்பும் புலம்பல்கள் குறித்தும் தன் மகள் இவ்வழியே சென்றிருக்கலாம் என்று கருதி சில பாதைகளின் வழியே சென்று அவளைத் தேடி தந்தைகளின் ஆற்றாமை குறித்தும் யார்வழியாகவோ தன் மகள் இன்ன ஊரில் இன்ன இடத்தில் இப்படி வாழ்கிறாள் என்பதனைக் கேள்வியுற்று மனம்வெதும்பும் பெற்றோர்கள் குறித்தும் தன் மகள் எங்கிருந்தாலும் அங்கு அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று தன் தெய்வத்தை வணங்கும் தாயின் மனவோட்டம் குறித்தும் சங்க இலக்கியத்தில் பதிவுகள் பல உள்ளனபிள்ளைகள் புதிய தம்பதியராக மாறி மகிழ்வுறும்போதும் அவர்களைப் பெற்ற பழைய தம்பதியரான பெற்றோர்கள் கலங்குவது ஒரு முரண்தான்.

அழியாக் காதல்

பெரும்பாலும் காதலுக்குத் தடையாக இருந்தவை நிலம்சார்ந்த வேறுபாடுகளும் வருவாய் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும்தான்வயல்சார் வாழ்க்கையையுடைய தன் மகளை ஒரு மலைநாடனுக்கு மணம்முடித்துவைக்கத் தந்தை விரும்புவதில்லைகாரணம்மருதம்,குறிஞ்சி என்ற நிலம்சார்ந்த வேறுபாடுநாவாய்கள் (கப்பல்கள்பல வந்துபோகும் துறைமுகத்துக்கு உரிமையுடையவர் தன் மகளை முல்லைநிலத்தில் பசுக்கள் சிலவற்றை மேய்க்கும் இளைஞனுக்கு மணம்முடித்துவைக்க விரும்புவதில்லைகாரணம்பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுஇவையே இப்போதும் வேறுவடிவில் உள்ளனஅவற்றாலும் காதலை அழிக்க முடியவில்லைகாரணம்காதல் என்றும் அழிவதில்லை.

- – -

i மாதையன்பெ., சங்க இலக்கியத்தில் குடும்பம். 38.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தலைவன், தலைவி, இன்ன பிறர்

chilambu1சங்க காலம் / தேடல் – 09

னியுடைமைச் சொத்து உருவானபின்னர்அச்சொத்தினைத் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தும் உரிமை யாருக்கு?என்ற வினா எழுந்ததுஒருவருக்கு உரிய ஒரு மனைவியின் புதல்வருக்கே அந்த உரிமை தரப்பட்டது.

ஒருவருக்கு உரிய மனைவி“ என்று ஒரு பெண்ணை மட்டும்தான் உறுதிப்படுத்தவேண்டியிருந்தது.அந்த உறுதிப்பாட்டுக்குக் “கரணம்“(எல்லோர் முன்னிலையிலும் மணமக்களுக்குத் திருமணம் செய்துவித்தல்என்ற திருமணம் உதவிற்றுஅவ்வாறு திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் புதல்வர்களே அடுத்த வாரிசு.

அத்தகைய திருமணம் இன்றி வேறுவகையான திருமணத்தால் மனைவியாகும் பெண்ணுக்கும் அத்தம்பதியருக்குப் பிறக்கும் புதல்வர்களுக்கும் சொத்துரிமைஇல்லறக் கடமைகள் மற்றும் சமூகச்செயல்பாட்டு உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன.

தொல்காப்பியம்“ என்ற இலக்கண நூலிலும் “சங்க இலக்கியங்கள்“ என்ற இலக்கிய நூல்களிலும் (காலத்தால் பிற்பட்ட பரிபாடலையும் மதுரைக்காஞ்சியையும் தவிர்த்துவிலைமகளிர் பற்றிய குறிப்புகள் இல்லைஆனால்தலைவனின் ஆசை நாயகிகள் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.

தலைவனின் மனைவிக்குதான் இல்லறக் கடமைகளும் சொத்தும் சமூகச்செயல்பாட்டு உரிமைகளும் வாரிசு உரிமையும் உண்டுஆசை நாயகிகளுக்கு அவ்வுரிமைகள் மறுக்கப்பட்டிருந்தனஇதனை நற்றிணையின் 330ஆவது பாடலும் அகநானூற்றின் 16ஆவது பாடலும் விளக்கியுள்ளன.

இல்வாழ்வில் “கற்பு“ என்பது இல்லறக்கடமையாற்றுதலைக் குறித்தது.அக்கடமையைச் செய்யத் தகுதியற்றவர்களாகக் கருதப்படும் சின்னவீடுகளைக் கற்பற்றவர்கள் என்று கருதினர்பின்னாளில்தான் கற்பு என்பது உடல்மனம் சார்ந்த்தாகக் கருதப்பட்டது.

தலைவனுக்குரிய மனைவி யார், ஆசை நாயகிகள் யாவர் என்ற வகைப்பாட்டினை விளக்கக் கரணம் என்ற திருமணம் உதவியதுஅவ்வாறு திருமணம் செய்துகொண்ட பெண்தான் தலைவனின் அதிகாரபூர்வமான மனைவி. யாருக்கும் தெரியாமலே அல்லது சிலருக்கு மட்டும் தெரிந்து அவன் மணந்துகொள்ளும் பெண்கள்ஆசை நாயகிகள். இதற்குச் சான்றுகளாக அகநானூற்றின் 36, 46, 66, 166, 206 ஆகிய பாடல்களும் நற்றிணையின் 313ஆவது பாடலும் உள்ளன.

காலத்தின் தேவையோ!

ஆசை நாயகிகளைச் சமுதாயம் ஏற்றுக்கொண்டது ஓர் விபத்துதான்அது காலத்தின் தேவையாகக்கூட இருந்திருக்கலாம்அதாவதுபழந்தமிழ்ச் சமுதாயம் முதலில் வேட்டைச் சமுதாயமாக இருந்து பின்னர் போர்ச்சமுதாயமாக மாறியதுவேட்டையிலும் போரிலும் ஆண்களின் உயிரிழப்பு மிகுதிஆதலால்ஆண் துணையினை இழந்த பெண்கள் மிகுந்திருக்கலாம்அக்காலத்தில் பெண்கள் ஆண்களைவிட எண்ணிக்கையில் மிகுந்ததால் “பலதார மணம்“ (ஓர் ஆண்பல பெண்களை மணப்பதுஅதற்கு ஒரு சமநிலைத் தன்மையைக் கொண்டுவரும் என்று அச்சமுதாயம் கருதியிருக்கலாம்அப்படியென்றால், “ஒருவனுக்கு ஒருத்தி“ என்ற தமிழ்ப் பண்பாடு என்னவாயிற்றுஅப்பண்பாடு வாரிசுரிமைக்காகத்தான் பின்பற்றப்பட்டதுவாழ்க்கை நலத்துக்காக அல்ல.

சங்க காலத்தில் ஆசை நாயகிகள் மட்டும்தான் இருந்தனரோவிலைமகளிர் என்று யாரும் இல்லையாஇல்லைசங்க காலத்தில் இல்லை. ஆனால்தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியங்களுக்கும் எழுதப்பெற்றுள்ள உரைகளில் விலைமகளிர் பற்றிய செய்திகள் இருக்கின்றன. மூலப் பாடல்களுக்கும் உரைகளுக்கும் இடைப்பட்ட காலம் மிகப்பெரியது.அதனால்தான்உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தின் சமூக வெளிப்பாடுகளே அவர்கள் உரைகளில் பிரதிபலித்துள்ளன.

தொல்காப்பிய மூல நூற்பாவில் பரத்தைகாமக்கிழத்தியர்பரத்தையர் என்ற சொற்கள் யாரைக் குறிக்கின்றனஅவை ஆசைநாயகியைத்தான் குறிக்கின்றனதலைவனின் பலதார திருமணத்தைக் (சமூகத்தால் ஏற்கப்படாதகுறிக்கின்றனவிலைமகளிரைக் குறிக்கவில்லை.

வெளியாள்

பரத்தை“ என்பதற்கு அயன்மைஅயலார்அயலாந்தன்மைஅயலவர்,வெளியாள்அந்நியர்புறப்பெண்டிர் என்று பொருள்கொள்ளலாம். பரத்தை என்பது, “வெளியாள்“ என்றால், “உள்ளாள்“ என்பது யாரைக்குறிக்கிறது?தலைவியைத்தான் குறிக்கிறதுதலைவியைத் தவிர்த்துத் தலைவனுக்கு இன்பம்தரும் பிற பெண்கள் வெளியாட்கள்தான் பரத்தையர்தான்.

ஆனால்அவ்வெளியாட்களாக அப்பெண்கள் தன் தலைவனுக்கும் அவனது தலைவிக்கும் பிறந்த குழந்தையைத் தன்குழந்தையாகப் பாவிக்கும் செயல்களும் அக்குழந்தைக்கு அணிகலன்களை வழங்குவதும் அக்குழந்தை அப்பெண்ணைத் தாய் என்று அழைப்பதும் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன.இப்பாசப்பிணைப்பினை எப்படிப் புரிந்துகொள்வது?

எக்காலத்திலும் எந்தப் பாலியல் தொழிலாளியும் தன் நுகர்வோரின் குழந்தையைத் தன் குழந்தையாகப் பாவித்ததில்லைஅக்குழந்தைக்குப் பொன்நகையை அணிவித்ததில்லைஅக் குழந்தை அவளைத் தாய் என்று அழைத்ததும் இல்லைஇவற்றின் வழியாக அவ் வெளியாட்கள் பரத்தையர் “விலைமகளிர் அல்லர்“ என்பது புலனாகின்றது.

சின்னம்மாக்கள்

தன் கணவரைப் போலவே தன் குழந்தையும் வெளியாட்களுடன் நட்புறவுகொள்வதைத் தலைவி கண்டிக்கும் நிகழ்வுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளனதலைவி அவ்வெளியாள்களை “எங்கையர்“ என்ற சொல்லால் அழைக்கின்றாள்.

அதாவது, “என்னுடைய தந்தை“ என்பது “எந்தை“ என்றானதுபோல, “என்னுடைய தங்கைகள்“ என்பது “எங்கையர்“ என்றானது.

தலைவிக்கு உடன்பிறந்த தங்கைகள் அவர்கள் அல்லர்ஆனால், “அம் முறையுடைய பெண்கள் அவர்கள்“ என்பது இங்கு குறிப்புணர்த்தப்படுகிறது.அப்படியானால்தலைவனின் குழந்தைக்கு அப்பெண்கள் சின்னம்மாக்கள்தானே!

அகநானூற்றின் 16ஆவது பாடல் பெரியம்மா-சின்னம்மாவின் உறவினை உறுதிப்படுத்தியுள்ளதுதன் தலைவனின் குழந்தையைக் கண்ட சின்னம்மா,அவனை அன்போடு அருகே அழைத்து, “வருக என்னுயிரே“ என்று கொஞ்சுகிறாள்அதனைக் கண்ட தலைவி, “குறுமகளேஏன் பேதுற்றனை.நீயும் இவன் தாய்தானே!“ என்று அன்புறவு பாராட்டுகிறாள்அத்தகைய அன்புறவு பலதார மணத்தில் பின்பற்றப்படுவதுதான்.

இச்சின்னம்மாக்கள் தம் தெருவில் (அவர்களுக்கெனத் தனித் தெருவும் இருந்தது பரத்தைச்சேரிதம் வீட்டில் தனித்திருந்துதலைவனோடு மட்டுமே வாழ்ந்தனர்அவர்களுக்குப் பிற ஆண்களோடுஎவ்விதமான தொடர்பும் இருக்கவில்லைஅவ்வாறு வெளியாட்கள் பிற ஆண்களோடு தொடர்பிலிருந்தால்தலைவி அவர்களை “எங்கையர்“ என்று அழைப்பாளா?ஆகசின்னம்மாக்கள் “விலைமகளிர் அல்லர்“ என்பது தெளிவாகின்றது.

இப்போதுஎன் மனத்தில் ஒரு கேள்வி எழுகின்றதுதலைவியைப் பெற்ற தாயினை “நற்றாய்“ என்றும் தலைவியை வளர்க்கும் தாயைச் “செவிலித்தாய்“ என்றும் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளனஆதலால்,செவிலித்தாய் என்பவள் தலைவியின் தந்தைக்கு ஆசைநாயகியாகாரணம்,இலக்கியத்தில் தலைவியின் தோழியாக வருபவள் செவிலித்தாயின் மகள் அல்லர்செவிலித்தாய்க்குச் சொந்த மகனோமகளோ இருப்பதாக இலக்கியத்தில் குறிப்புகள் இல்லைஇது மேலும் ஆய்வுக்குரியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குழப்பமும் தெளிவும்

தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள “காமக்கிழத்தியர்“ சொல் யாரைக் குறிக்கிறதுவிலைமகளிரையாஅல்ல. “கிழத்தி“ என்றால்தலைவியைக் குறிக்கும். “கிழவன்“ என்பதுதலைவனைக் குறிக்கும். “காமக்கிழத்தியர்“ என்பதுஆசைநாயகிகளைக் குறிக்கும்.

சங்க இலக்கியங்களில் காணப்படும் “காமக்கிழத்திகாதற்பரத்தை,சேரிப்பரத்தைநயப்புப் பரத்தைஇற்பரத்தைஇல்லிடப்பரத்தை“ போன்ற சொற்கள் அவ் இலக்கியங்களின் மூலப்பாடலில் இடம்பெறவில்லைஅப் பாடல்களின் திணைதுறைஅடிக்குறிப்புகள்பதவுரை போன்றவற்றில் காணப்படுகின்றனஇவை அனைத்தும் அப்பாடல்களைப் புரிந்து கொள்வதற்காகப் பிற்காலத்தில்சங்ககாலத்துக்குப் பின்னர் எழுதப்பெற்றவை.

முற்காலத்தில் “நாற்றம்“ என்ற சொல் “நறுமணம்“ என்ற பொருளில் கையாளப்பட்டதுபிற்காலத்தில் அதே சொல் “விரும்பத்தகாத மணம்“ என்ற பொருளில் கையாளப்பட்டுவருகின்றதுஅதுபோலத்தான்முற்காலத்தில் ஆசைநாயகிகளைக் குறித்த சொற்கள் பிற்காலத்தில் விலைமகளிரைக் குறிக்கப் பயன்படுகின்றன.

யாருக்குச் சொந்தம் யார் யாரோ?

வெளியாளுக்குத் தன் தலைவனின் மனைக்கிழத்தி (தலைவியார் அவளுடைய பிள்ளைகள் யார் யார் என்பதெல்லாம் நன்றாகத் தெரியும்.ஆனால்தலைவிக்குத் தன் தலைவனுக்கு யாரெல்லாம் ஆசைநாயகிகள் என்பது தெரியாதுஒன்றிரண்டு என்றால் தெரிந்திருக்கும்!

வழித்தடத்தில் தன் தலைவனின் தலைவியைச் சந்திக்கும் ஒரு ஆசைநாயகிஅவளருகில் சென்றுதன்னை அறிமுகப்படுத்தும் விதமாக, “நான் தூரத்தில் வசிப்பவள்உனக்குத் தங்கைமுறையை உடையவள்“ என்று கூறித் தலைவியின் நெற்றியையும் கூந்தலையும் அன்புடன் வருடுகிறாள்இந்தப் பாசவருடல் அகநானூற்றின் 386ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளதுஇப்படிப் பாசமாக அவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டைகள் வருவதும் உண்டு.

சக்களத்திச் சண்டைகள்

சக்களத்தி“ என்றால் சக கிழத்தி என்று பொருள்அதாவதுஅக்காள் தங்கைகள்அவர்களுக்குள் ஏன் சண்டைவருகிறதுஅவர்களுக்குத் தனித்தனியே கணவர்கள் இருந்துவிட்டால் ஏன் சண்டைவரப்போகிறது?ஒரே கணவன் என்பதால்தான்அதுவும் அவர்கள் ஒருதாய் வயிற்று அக்காள் தங்கைகளாக இல்லாமல் இருப்பதால்தான் இச் சண்டை வலுக்கிறது.

குறிப்பாக இச் சண்டைகள் அக்காலத்தில் மருதத்திணை சார்ந்த இடங்களில்(வயலும் வயல் சார்ந்த இடங்கள்மிகுதியாக உள்ளதுகாரணம்,தலைவனிடம் செல்வம் மிகுந்துள்ளதுஅவனுக்கு “வீடுகள்“ சிலவற்றைப் பராமரிக்கும் தெம்பும் வந்துவிடுகிறதுஅவன் ஆசைநாயகியிடம் மிகுதியான நேரத்தைச் செலவிடுவது தலைவிக்குப் பிடிக்கவில்லைதன் கணவனைக் கட்டுப்படுத்த இயலாத தலைவிதன் கணவனின் ஆசைநாயகியின் மீது சினத்தைக் காட்டுகிறாள்இதனை அகநானூற்றின் 76, 276, 336, 346 ஆகிய பாடல்களும் குறுந்தொகையின் 8, 164, 80, 364, 370ஆகிய பாடல்களும் விளக்கியுள்ளன.

தலைவனைப் பிரிந்து வருந்துவது தலைவி மட்டுமல்லசிலவேளைகளில் ஆசைநாயகிகளும்தான்இச்சோகத்தினை நற்றிணையின் 90, 216,குறுந்தொகையின் 238, அகநானூற்றின் 146 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றதுஆசைநாயகிகள் விலைமகளிர்களாக இருந்தால்,இச்சோகம் அவர்களை வாட்டியிருக்குமாஇதன்வழியாகவும்,ஆசைநாயகிகள் விலைமகளிர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள 320ஆவது பாடல் ஒரு பரத்தை தன் தலைவன் தன்னைப் பிரிந்து பிறிதொரு பரத்தையிடம் சென்றதால் வருந்திக் கூறுவதாக அமைந்துள்ளதுஅப்படியென்றால் அந்தப் பரத்தை கைவிடப்பட்டவள் ஆகிறாள்அவள் இனி வேறு ஒரு தலைவனைத் தேடிக்கொள்வாளோஅப்படியென்றால்இந்தப் பரத்தையும் விலை மகளாகிறாளோ?

ஆசைநாயகியைச் சரிவரப் பேணிக்காக்காத தலைவர்களால் அவர்கள் வேறுவழியின்றிவாழ்வாதாரத்துக்காக விலைமகளாக மாறுகின்றனர்.போரில் வென்று கொள்ளையடித்துவரும் பொருட்களுடன் அடிமைகளாகப் பெண்களையும் கொண்டுவருதல் வழக்கமாக இருந்துள்ளதுஅவ்வாறு கொண்டு வரப்பட்ட மகளிர் “கொண்டிமகளிர்“ என்று அழைக்கப்பட்டனர்.அப்பெண்களும் காலப்போக்கில் விலைமகளிராகிறார்கள்.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள 170ஆவது பாடல் பரத்தையைக் கண்ட ஊர்ப்பெண்கள் தம் தலைவனை அவளிடமிருந்து காத்துக்கொள்வதற்கு முற்படுவதாகக் கூறியுள்ளதுஅப்படியென்றால்ஆசைநாயகியைவிட விலைமகள் ஆபத்தானவளோ!

சங்க காலத்தில் பெண்ணுடல் விற்கப்படவில்லைசங்க காலத்துக்குப் பின்னர் பெண்ணுடல் பல வகைகளில் விற்கப்பட்டதுகாலத்தால் பிற்பட்ட பரிபாடலையும் மதுரைக்காஞ்சியையும் வீதிகளில் விலைமகள்கள் பெருகிவிட்ட தன்மையினைப் புலப்படுத்துகின்றன.

மதுரைக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள 569 முதல் 576 ஆம் வரையிலான அடிகள் அக்காலத்தின் பெரு நகரங்களுன் ஒன்றான மதுரை நகர வீதிகளில் விலைமகள்கள் வலம்வருவதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.

பரிபாடலின் 20ஆவது பாடலின் 48 முதல் 58 வரையிலான அடிகளில் தெருவில் செல்லும் விலைமகளைக் கடிந்துகொள்ளும் நிகழ்வு சுட்டப்பெற்றுள்ளது.

சங்ககாலத்திற்குப் பின் காலவோட்டத்தில் இவ் விலைமகளுக்குப் பொதுமகள்வரைவின் மகளிர்கணிகைசலதிதாசிவேசிதேவரடியாள்,விபச்சாரிபாலியல் தொழிலாளி இன்னபிற பெயர்கள் ஏற்பட்டன.

காலங்கள் மாறினாலும் மனைவிஆசைநாயகிவிலைமகள் என்ற முத்தரப்பும் வலுவுடன்தான் உள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 மாங்கல்யம் தந்துனானே...... 4:57 AM | மாங்கல்யம் தந்துனானே- இந்த மங்கல நாணை கண்டே பத்னாமி -  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து  சுபாகே- மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே  த்வம் சஞ்சீவ சரத சதம்”- நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்! திருமணம் என்பது ஒரு சமூக, ஒழுக்க, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தப் பதிவுமுறை பெண்கள் பாதுகாப்புக் கருதியே அமரிக்காவில் 1760 களில் சட்டமாக்கப்பட்டது. மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும்காணப்படுகின்றன. திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி தம் விருப்பத்தின் பெயரில் இணைந்திருந்தால் சமூகச் சீர்கேடு என்றும்; ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் பழி சுமத்துப்படுகின்றார்கள். ஆனால் அதே விடையத்தைப் பலர் அறியச் செய்து அவர்களைச் சமூகத்தில் அங்கீகரித்தலையே திருமணம் என்கிறார்கள். கவுண்டமணி சொல்லுவதுபோல் போர்த்திக்கொண்டு படுத்தாலென்ன; படுத்துக்கொண்டு போர்த்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஒப்பான இந்நிகழ்ச்சியை மணம் என்று அழைத்துனர். மேன்மையான ஒன்றைக் குறிப்பிடத:  'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது. திருமணம் குறித்த பிற சொற்கள் மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத்தமிழ் இலக்கியத்தில் வழிக்கில் இருந்தன. அவை முறையே கடிமணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. ஆனால்  "கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் வழக்கில் வந்துள்ளமையைக் காணலாம். கடி-மணம்  'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் தனிவாழ்க்கை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம். மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் காணப்படுவதால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்தும் திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம். கரணம் ஒரு தலைவனும் தலைவியும் களவியலிலேயே சுகம் காணுமிடத்து அது தவறெனக்கூறி சமயாசாரப்படி சமூகத்தினர் ஒரு ஒழுக்க நெறிக்குள் கொண்டுவந்துனர். கரணம் என்ற சொல் திருமணத்தை விளக்கும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணமென்ப" என்று தொல்காப்பியத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே" .."புணர்ந்துடன் போகிய காலையான" என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் தற்காலத்தில் வழக்கில் இல்லை. மன்றல் 'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, திருமுணத்தைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. தற்காலத்தில் இச் சொல்லும் வழக்கொழிந்து போயிற்று. வதுவை பாரதியார் தனது பாடலில் மூத்தவர் அவையில் வதுவை முறைகள் பிறகு செய்வோம் என்று குறிப்பிடுகிறார். வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டுள்ளது. வரைவு வரை என்பதற்கு மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். தமிழரும் திருமணமும் பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது. ஆகிய மண முறைகளைக் காணலாம். மரபு வழி மணம் இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருநது ஏறு தழுவுதல் தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது கலித்தொகையில் முல்லைக்கலியில் ஆயர்மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். வீரத்தின் அடிப்படையில் தங்கள் மகளுக்கு மணமகனைத் தேர்வுசெய்யும் ஒரு தமிழர் முறையாகும்.  மடலேறுதல் பனை மட்டையைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெண்கள் தங்கள் நாணம் கருதி மடலேறுவதில்லை.  போர் நிகழ்த்தி மணமுடித்தல் தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை தொல்காப்ப்பியம் சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப் புறநானூறு என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன. தசரதன் கையேகியை இவ்வாறே மணந்து கொண்டார்.  துணங்கையாடி மணத்தல் துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக்காலங்களில் துணங்கையும், மன்னர்ப்போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. பரிசம் கொடுத்து மணத்தல் மணமகளின் பெற்றோர் தனது மகளுக்கு வழங்கிய சீர்வரிசைப் பொருள்கள் மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும் மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு" உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர்.இக்காலத்தில் இவை பல சமூகத்தினரிடையே மாறி நடைபெறுகிறது. மணமகளைப் பெற்றவர்களே பொருள் பண்டம் பணம் கொடுத்து மணமகனைப் பெறவேண்டியுள்ளது.  பலதார மணம் ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறது. சங்க இலக்கியங்களில் காமக்கிழத்தி, பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மகட் பேறு மட்டும் கருதி மட்டுமே இப்பலதார மணம் நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம். இதன் காரணமாகவே சங்ககாலத்தில் பரத்தையர் என்ற ஒரு குலம் தோன்றக் காரணமாயிற்று. உறவு முறைத் திருமணம் உறவு முறைத் திருமணம் மணிமேகலை காப்பியத்தில் முதல் முதலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. . மைத்துனன் மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர். (இக்காலத்தில் நானறிந்தவரை ஐரோப்பாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகள் சொந்த மச்சானையோ சொந்த மச்சாளையோ மணம் முடிக்க விருப்பப் படுகிறார்கள் இல்லை) திணைக் கலப்பு மணம் சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்ததை அகநானூறறுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.  சேவை மணம் மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மணத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணி யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மணந்ததும், பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும்.  தமிழரின் திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது. ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது. பொருத்தம் பார்த்தல் பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம் நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி சிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். திருமணத்திற்குரிய பொருத்தங்களாக " பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடுஉருவு, நிறுத்த காமவாயில்,நிறையே, அருளே, உணர்வோடு திருவெனமுறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" என கி.மு 7ம் நூற்றாண்டில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை இளமை வனப்பு வளமை தறுக்கண் வரம்பில் கல்வி நிறைந்த அறிவு தேசத்தமைதி காத்தல் குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது.(இவை பொதுவாக மணமகனிடம் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களாகும்) சீவக சிந்தாமணியில் குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட பின்பே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம் பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது.(10 பொருத்தம் பார்த்த திருமணமும் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. சாயிபாபா தாலி எடுத்துக் கொடுத்த திருமணமும் விவாகரத்தில் முடிந்திருக்கின்றது) மண நாள் குறித்தல் தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் சாத்திரிமாரிடம் கேட்டு முடிவு செய்தனர். (சாத்திரிமார் பூமியை இருப்பில்வைத்து ஏனைய கிரகங்கள் சுற்றுகின்றன என்பதை அடிப்படையாகவைத்தே நம்மை சுத்துகிறார்கள்) மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோவலன் - கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய" என்றார்.  கம்பராமாயணத்திலும் வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம். இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும் பின்பற்றப்பட்டது. (ஐரோப்பாவில் விடுமுறை நாட்கள் எல்லாம் திருமண நாட்களாகக் கொள்ளப்படுகிறது மிகவும் முரணான விடையமாகும்) நகருக்கு உரைத்தல் மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில் இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில் பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்" என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண்ச் செய்தியை நகருக்கு உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து அறிவித்தனர். பெருங்கதையில் மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச் சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து, மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின் மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில் மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும், திலகமும் அணிவித்தனர் என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, (காரைக்கால் அம்மையார் )பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது. [தொகு]மணவினை நிகழும் இடம் பழந்தமிழர் திருமணத்தை பெண்வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டிருந்தன்ர். களவொழுக்கம் காரணமாகஉடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வது மரபாக இருந்தது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இதனை " நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்வையற விளங்கிய கழலடிப்பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே"  என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளி வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின் படி பரிசம் போடுதலும் பெண்வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்தது. இன்று அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், பொதுமன்றில்கள், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது. [தொகு]மணப் பந்தல் அமைத்தல் தற்காலத்தில் வீட்டில் மணவினை நடைபெறுவதைக் குறிக்க அமைக்கப்படும் தென்னை ஓலை மற்றும் வாழைத் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ள பந்தல் தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம் பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல் அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து காலகள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇயகைபுனை வனப்பின் கான்முதல் தோறும்ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்"  என்ற பெருங்கதை ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் நிறை குடங்கள் அழகுற அமைக்கப்படது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முகூர்த்தம் பார்த்து, மங்கல இசை முழங்க நடுதல் வழக்கம். இறை வழிபாடு நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல் அமைப்பர்.  இறைவழிபாட்டிற்குரிய பொருள்கள் திருமணச்சடங்கில் பயன்படும் மங்கலப்பொருள்கள் தக்கோலம் , ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மணப் பொருள்களுடன், வெற்றிலையையும் வலப்பக்கம் வைத்து, சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி, ' தேவீர் நீர் மலையிடத்திருந்தாலும், மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று தேவர்களை வேண்டினர். பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுள் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த இடங்களை செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர்,வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகைகளில் அடக்கிக் கொண்டு, காந்தள் இதழ் போன்ற தம் மெல்லிய கரம் குவித்து எல்லீரும் இங்கணம் ஏழுமுறை வணங்குமின் என உளுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டுவர். அக்கன்னியரும் அவ்வாறே வணங்கித் தெய்வங்கட்கு மடை கொடுப்பர்.  தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள் பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு மலர் தூவி வழிபட்டனர். மங்கல ஒலி திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின.கம்பராமாயணம் இதனை " மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்மாகடலும் போன்றதே" [12] எனக் குறிப்பிடுகிறது. நகரை அழகு செய்தல் மன்னர் மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாக அரண்மனை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் கோலமிடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டனர். மணமேடை ஒப்பனை மணவறை எனப்படும் நிலத்தை திருமகளின் இடை போலப் புனைந்தனர். வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை (இருக்கை) இட்டனர். பொற்காசும், மணியும், முத்தும் குவிக்கப்பட்டன. மங்கலகரமாக விளக்குகள் எழுந்தன. புகைகள் எழுந்தன. பெண்கள் கவரி ஏந்தி நின்றனர். இச்செயல்கள் மன்னரின் மணமேடைகளில் இடம் பெற்றன. [தொகு]புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள் பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம் மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது. காப்பு நூல் கட்டுதல் மங்கல நீர் கொண்டு வருதல் மண மக்கள் ஒப்பனை மணமகன் அழைப்பு வேள்வித்தீ அம்மி மிதித்தல் பாத பூசை செய்தல் அருந்ததி காட்டல் அறம் செய்தல் மங்கல அணி சீதனம் கொடுத்தல்





__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும். 4:43 AM | மனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில் தோற்றம்பெற்று ஐவகை நிலங்களுக்கும் தனித்தனி ஒழுக்கங்களாக வகுக்கப்பெற்றுத் தமிழர் வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தமையை அக்காலத்தில் எழுந்த எட்டுத்தொகை; பத்துப்பாட்டு; நூல்களினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அக ஒழுக்கத்தினை அகத்திணை என்றும் புற ஒழுக்கத்தினைப் புறத்திணை என்றும் அமைத்தனர்.(வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே (தொல்காப்பி) உலகியல் நடைமுறையை வழக்கு என்கின்றோம். பண்பாடு இல்லாதவருடைய பழக்கவழக்கங்களை உலகத்தார் வழக்கு என்று கருதுவதில்லை. உயர்ந்தவர்களது நெறிமுறைகளே வழக்கு என்று போற்றப்படுகின்றன. பெரியவர்களது பழக்கமே மக்களிடையே வழக்கமாகி பின்னர் அதுவே மக்களால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. எனவே இந்த அகம் புறம் என்னும் இருவகை ஒழுக்கமும் உயிரினும் மேலாக ஓம்பப்படும் என்பதைத் திருவள்ளுவர்  "ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்(குறள்) என்று குறிப்பிடுகின்றார்.  ஒழுக்கம் என்பது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குள்ளும் இருந்தபோதிலும் சிறப்பாக அகத்துறையில் குடும்ப வாழ்க்கையில் நெறியோடு வாழ்வதையே ஒழுக்கம் எனக்கொள்ளப்படுகின்றது. ஒருவனை ஒழுக்கம் கெட்டவன் என்றால் அது புறத்திணை ஒழுக்கத்தைக் குறிக்காது அகவியல் அதாவது குடும்ப வாழ்வில் கெட்டவன் என்ற பொருளையே உலகில் குறித்து நிற்பதைக் காணலாம். ஆண்களின் அகவாழ்வு நெறியை ஒழுக்கம் என்றும் பெண்களின் அகவாழ்வு நெறியைக் கற்பு என்றும் தமிழர் பண்பாடு நமக்கு அறிவிக்கின்றது. கற்பு என்பது கற்றலையும் கற்பித்தவழி நிற்றலையுமே குறிக்கின்றது. பெண்கள்; பெற்றோரும் ஆசிரியர்களும் கற்பித்தவழி நிற்றலையே போற்றி வாழ்ந்துள்ளனர். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்று மேற்குறிப்பிட்ட கருத்தைக் கொன்றைவேந்ததன் 14ம் வரி விளக்ககின்றது.  கற்பு என்ற சொல் பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும்  வருவதைக் காணலாம். ஞானசம்பந்தரை வெப்பு நோய் வாதத்திற்கு அழைத்தபோது  "மண்ணகத்திலும் வானிலும் எங்கும்; திண்ணகத்திரு வாலவாயானருள்; பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்; தெண்ணர் கற்பழிக்கத்திருவுளமே(தி 3. ப 47. பா 3) என்று பாடினார்.  இங்கு கற்பு என்பது சமணர் கற்ற கல்வியின் நேர்மை இல்லாத செயலை அழிக்க இறைவன் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதையே விளங்கப்படுத்துகின்றது. இந்த இடத்தில் இது மகளிரது ஒழுக்க நெறி என்று கொள்ளல் ஆகாது. சம்பந்தர் தமது இன்னுமொரு பாடலில் மகளிர் கற்பைப்பற்றியும் போற்றுகிறார்.  "மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து; மாயவர வன்றுரிசெய் மைந்துனிட மென்பர்; பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லிப் ; பாவையர்கள் கற்பொடுபொலிந்த பழுவூரே" (தி2.ப34.பா6) இப்பாடலில் பூவை என்னும் நாகணவாய்ப் பறவைக்கு இறைவனது புகழைக் கற்பிக்கும் பாவையர்கள் கற்புடன் திகழ்ந்த பழுவூர் என; கற்பு என்பது கற்றலுக்கும் கமளிர் கற்புக்கும் பொருந்தி இரண்டு நிலைகளையும் விளங்க வைக்கிறது.  "சிவபோகசாரம்" என்னும் நூலில் கற்பிலர் என்று வரும் கூற்று கல்லாதவரையும் கற்பொழுக்கம் இல்லாதவரையும் சுட்டி வருதலைக் காணலாம்.  "நீதியிலா மன்னன் ராச்சியமும்;  நெற்றியிலு பூதியிலார் செய் தவமும்; சோதி கழல் அறியா ஆசானும்; கற்பிலரும் சுத்த விழல் எனவே நீத்துவிடு" (சிவபோகசாரம் பா 130) கற்பு என்பது பெண்களுக்கு உரிய ஒழுக்கம் என்ற தொனிப்பிலும் கற்றல் என்ற தொனிப்பிலும் இலக்கியங்களில் கூறினாலும் திருவள்ளுவர் கற்புஎன்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒழுக்கமாகவே கொள்கிறார்.  "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாக்கப் பெறின்" (குறள் 54) என்று பெண்ணிற்கான ஒழுக்கத்தையும் ; "ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு" (குறள் 974) என்று ஆண்களுக்கான ஒழுக்கத்தையும் கற்பு என்றே குறிப்பிடுகினறார்.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sanjayan Selvamanickam திருமணத்தற்கு முன்னான உடல் உறவுகள் (இயற்கைப் புணர்ச்சி) பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எமது முன்னோர்கள் மத்தியில் இருந்திருக்கிறது என்பதை இந்த குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. . யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. செம்புலப்பெயல் நீரார். (குறுந்தொகை-40) இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவான் எனத் தலைவியின் மனம் அஞ்சுகிறது. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைவன் அவளை ஆற்றுவிப்பதாக இப்பாடல் அமைகிறது. குடிப்பிறப்பு, உறவுநிலை, செல்வநிலை, உயர்வு தாழ்வு, பார்த்து வருவதில்லை காதல்.என்பதைத் தலைவன் தலைவிக்கு அறிவுறுத்துகிறான். என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்? நானும் நீயும் எக்குடிவழிச் சார்புடையவர்கள்? செம்மண் நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி போல அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றாகக் கலந்தன. இப்பாடலில் செம்புலத்தில் வீழ்ந்த நீர்போல என்ற உவமையே இப்புலவருக்கும் பெயராயிற்று. சங்க இலக்கியத்துள் அதிகமாக எடுத்தாளப்பட்ட பாடல்களுள் குறிப்பிடத்தக்கது இப்பாடல். இப்பாடலில் உள்ள எளிமை, பொதுமை, உவமை ஆகிய பொதுக்கூறுகள் இப்பாடலை காலத்தை வென்ற பாடலாக்கியுள்ளன. .....................................................................................கடந்த 06.11.11 Oslo இல நடைபெற்ற இலக்கியப்பூங்காவில் பேராசிரியர் ரகுபதி அவர்களின் உரையில் இருந்து நான் அறிந்து கொண்டது இது தான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard