New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி


Guru

Status: Offline
Posts: 24788
Date:
நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி
Permalink  
 


கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)

 

கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)

 

பால் கிளட்சன் டிரஸ்ட் புகைப்படம்

பால் கிளட்சன் டிரஸ்ட் புகைப்படம்

பால்  கிளாஸ்டன்  என்பவர்  பால்  கிளாட்ஸன்  என்று  மாறியது ஏன்?: பால் கிளாஸ்டன் என்பவர் பால் கிளாட்ஸன் என்று மாற்றிக் கொண்டதாக, “டிரினிடி மிர்ரர்” நவம்பர் 2013 என்ற நாளிதழில் சிறியதாக வந்திருந்தது[1]. இதை யார் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை[2]. ஆனால், இதே பால் கிளாட்சன் முந்தைய ஆண்டில் 2012ல் ஒரு பண ஊழலிலும் சிக்கியவர் என்பது மிகவும் குறைவான மக்களுக்கே தெரியும் எனலாம்[3]. தோட்டா சினிவாசுலு, அகிலிகுன்டா சுவர்ணராஜு, செருகூரு ஏசுரத்னம் மற்றும் நள்ளாகட்ல அன்னாத ராவ் [Thota Srinivasulu, Akiligungta Suvarnaraju, Cherukuro Yesurathnam and Nallagatla Annadarao] முதலியோர் ஆந்திர சிஐடி.போலீசாரால் சென்னையில் ஆகஸ்ட் 2012ல் பிடிக்கப் பட்டனர். அதாவது ஆந்திராவிலிருந்து பணத்தை சென்னைக்கு எடுத்து வரும் போது பிடிக்கப்பட்டனர். இவர்கள் பணத்தை முதலீடு செய்தால், அதற்கு அதிக அளவில் வட்டி திரும்ப கிடைக்கும் என்று மோசடிகளில் ஈடுபட்ட ஏஜென்டுகள் என்று குறிப்பிடப்பட்டது. இந்த ஏஜென்டுகள் ரூ.10 கோடிகளை ஜெயராஜ் என்பவருக்கும், ரூ. 3 கோடிகளை பால் கிளாட்சன் என்பவருக்கும் கொடுத்துள்ளனர். இவ்விருவரும் தரும ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றனர்[4] என்ற செய்திகள் வெளிவந்தன. அதாவது 2012லேயே கிருத்துவ மோசடி நிறுவனங்களுக்கும் பால் கிளாட்ஸன் என்ற போதகருக்கும் தொடர்பு இருந்தது தெரிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
RE: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி
Permalink  
 


 

 

பெயர் மாற்றுதல் 2013ல் ஏன்

பெயர் மாற்றுதல் 2013ல் ஏன்

ஜெருஸியா  சேரிடபிள்  பவுண்டேஷன்  என்ற  தர்மஸ்தாபனம்  நடத்தும்  பால்  கிளாட்சன் (2012): பால் கிளட்சனின் பெயர் முன்னொரு முறை (மே 2012), ஜெருஸியா கிளாட்சன் என்ற சிறுமியுடன் தந்தை என்றும், அச்சிறுமி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்து வருவதாகவும், ஐந்து மணி நேரம் தொடர்ந்து பாடியதால், புதிய சாதனை படைத்து, லிம்கா போன்றா சாதனைப் பட்டியலில் சேர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன[5]. அவர், இவர்தானா என்று கூகுளில் தேடிப் பார்த்தபோது, ஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன் இவர் 19, லட்சுமி அம்மன் கோவில் தெரு, புழல் என்ற இடத்தில் வைத்துள்ளதாக தெரிய வந்தது[6]. “புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  பால் கிளாட்சன் (45)” என்று இப்பொழுது செய்தியில் உள்ளது. பெயர்மாற்றம் செய்த விவரத்தில் தனது பிறந்த தேதி 09-02-1969 என்றுள்ளது. அப்படியென்றால், 42 வயது என்பது சரியாகிறது. ஆனால், அதில் தனது விலாசத்தை “2, மீனாட்சி தெரு, புழல், சென்னை – 600 066” என்று கொடுத்திருக்கிறார். அதேபோல “ஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன்” என்றதற்கும் இரண்டு விலாசங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று – 19, லட்சுமி அம்மன் கோவில் தெரு, புழல், புழல் ஜெயிலுக்கு எதிரில்[7], 2. 70. செயின்ட் ஆன்டனி பிரதானத் தெரு, புழல் என்று கொடுத்துள்ளர். ஆக, தருமஸ்தாபனம் நடத்தும் பால் கிளாட்சனும், ஆவடி டேவிட்டை ஏமாற்றிய பால் கிளாட்சனும் ஒன்றுதான். இவருக்கு எச்.ஐ.எம். டிரஸ்ட் மற்றும் ஜான் பிரபாகரனுக்கும் தொடர்பு உள்ளது என்பது, “ரூ. 3 கோடிகளை பால் கிளாட்சன் என்பவருக்கும்” கொடுக்கப்பட்டது என்பது மூலம் ருஜுவாகிறது.

 

Paul Gladson money-spinning.August 2012

Paul Gladson money-spinning.August 2012

ஜெருஸியா  சேரிடபிள்  பவுண்டேஷன், கருணை  இல்லம், ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ் முதலியன (1997 முதல் 2007): “ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ்” என்ற தர்மஸ்தாபனம் சென்னையில் டா. பால் கிளாட்சன் 1993ல் துவங்கினார்[8]. அது ஜெருஸியா பவுன்டேஷன் கீழ் அனாதை மற்றும் இதர குழந்தைகளுக்காக செயல்படுகிறது. “கருணை இல்லம்” என்ற பெயரில் பாளையங்கோட்டையில் 28 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாவது கிளை 1997ல் திருநெல்வேலியில் 62 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்றாவது கிளை 2007ல் சென்னையில் 12 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது (REG NO-921/08). இதன் டிரஸ்டிகள், பின்வருமாறு[9]:

  1. பால் கிளாட்சன்
  2. ஜுலியஸ் ஜி. ராஜா சிங்
  3. ஜே. இன்பரசி.
  4. சிகாமணி.
  5. கிரேஸ் ஜோதிமணி

ஆனல், இணைதளத்தில் “வியாபார நிறுவனம்” என்ற முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. தாங்கள் விற்கின்ற பொருட்கள்:

  1. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு.
  2. ஏழைக் குழந்தைகளுக்கு உணவு.
  3. மருத்துவ உதவி.
  4. இருக்க இடம்.
  5. விதவைகளுக்கு ஆதரவு.

என்று படங்களுடன் போட்டுக் கொண்டது. ஆக, இத்தகைய “சேவை” என்பதெல்லாம், வியாபாரம் தான் என்று நன்றாகவே நிரூபித்துக் கொண்டனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

 

 

Jerushia Foundation products sold

Jerushia Foundation products sold

ரூ.500 கோடி வசூலித்து ஜான் பிரபாகரன் மாயம், மனைவி ஜூலை 2013ல் கைது: திருமுல்லைவாயலை சேர்ந்தவர் ஜான் பிரபாகரன் (38) ஹெச்ஐஎம் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கினார். இதில் ரூ.2,100 முதலீடு செய்தால் மாதம் ரூ.1,250ம், வருட முடிவில் ரூ.13,750ம் தருவதாக பாதிரியார்களிடம் உறுதி அளித்தார். அதேபோல் ரூ.10,500 செலுத்தினால் மாதம் ரூ.6 ஆயிரம் வருட முடிவில் ரூ.59,500, ரூ.26,250 செலுத்தினால் மாதம் ரூ.13,750ம் வருட முடிவில் ரூ.1 லட்சத்து 51,250ம் வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டினார். இதை நம்பி ஏராளமான பாதிரியார்கள், பாஸ்டர்கள் என்று தாராளமாக பணம் கட்டினர். தேவாலயத்திற்கு வருபவர்களிடமும் பரிந்துரைத்தனர். இதை நம்பி, பலரும் தொண்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.  தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் முதலீடு செய்தனர்.  ஆனால் சொன்னபடி பணம் தராமல் ஜான் பிரபாகரன் மாயமானார். ஏறத்தாழ ரூ.500 கோடி வரை அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்[10].  இதையடுத்து ஜான் பிரபாகரனையும் அவரது மனைவி சுகன்யாவையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஜான்பிரபாகரன் ஆந்திராவில் பிடிபட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், அவரது மனைவி சுகன்யாவை கைது செய்துள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தர். மனைவி சிக்கியுள்ளதால், ஜான் பிரபாகரனும் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது[11].

 

ஆப்ரோ ஏசுதாஸ் மோசடி

ஆப்ரோ ஏசுதாஸ் மோசடி

அப்ரோ  நிறுவனம், ஹெச்ஐஎம்  தொண்டு  நிறுவனம் தொடர்பு உண்டா? (செப்டம்பர் 2012): மகளிர் குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படும் என்று அப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்தது. இதற்காக பொது மக்களிடம் முன் பணமும் பெறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் விதி முறை களுக்கு உட்பட்டு கடன் வழங்கப் படுவதாகவும் அந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனல், இந்த விளம்பரத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்து இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிரடியாக விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து முறை கேடாக குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடி செய்த அப்ரோ நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலரை ஆகஸ்ட் 2012ல் கைது செய்தனர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் அதன் உரிமையாளர் ஏசுதாஸ் மட்டும் இன்னும் போலீசாரிடம்  பிடிபடாமல் தலை மறைவாக உள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கியதாக தெரியவில்லை. அதேபோன்று ஹெச்ஐஎம் தொண்டு நிறுவனம் பெயரில் குறைந்த அளவில் பணம் கட்டினால் அதை விட அதிகமான பணம் தருவதாக கூறி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பண வசூல் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த ஜான் பிரபாகரனும் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவருக்கு வலது கையாக இருந்த 7 ஏஜென்டுகளும் இன்னும் போலீசாரின் பொறியில் சிக்கவில்லை. ஜான் பிரபாகரன் மற்றும் ஏசுதாசை பிடிக்க முடியாமல் போலீசார் தொடர்ந்து திணறிய வண்ணம் உள்ளனர்[12]. அக்டோபர் 2012ல் பெங்களுரில் பதுங்கியிருந்த ஏசுதாஸ் மற்றும் தேவி கைது செய்யப்பட்டனர் என்று பிறகு செய்திகள் வெளியாகின.

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

ஜான்  பிரபாகரனும்ஹிம்  டிரஸ்டும்கோடிகள்  சுருட்டியதும்(2011-13): எச்.ஐ.எம். டிரஸ்ட் [HIM Trust] அல்லது ஹெவன்லி இன்டர் டினாமினல் மிஷம் டிரஸ்ட்  (Heavenly Inter Denominal Mission Trust) என்பது 2011ல் சிக்கிய பல கிருத்துவ நிதி மோசடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் மீது 2011ல் ஆந்திரபிரதேச நிதிநிறுவன பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கின் கீழ் [ section 5 of Andhra Pradesh Protection of Financial Establishment (APPDFE) Act 1999] மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் நம்பிக்கை துரோகம் [under sections 406 (criminal breach of trust)], ஏமாற்றுதல் [420 (cheating) ], குற்றவியல் ரீதியில் சதிதிட்டம் தீட்டுதல் [120-B (criminal conspiracy) of Indian Penal Code (IPC) ] மற்றும் போன்ற காரியங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது. எச்.ஐ.எம். டிரஸ்ட்டின் தலைவர் ஜான் பிரபாகர் இவ்வாறு கோடிகளை வசூலிக்க ஏஜென்டுகளை நியமித்ததற்காக ஆகஸ்ட் 2012ல் கைது செய்யப்பட்டார்[13]. சென்னையில் புகார்கள் பெருகியபோது, ஆந்திர சிறையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின[14]. இதனால், வசூல் செய்யப் பட்ட கோடிக் கணக்கான பணம் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால், 2011-13 காலக் கட்டத்தில் அவ்வாறு கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டது[15]. இவர்களது ஏஜென்டுகள் அசாமில் கூட பிடிப்பட்டனர்[16]. அப்பொழுது பணம் குறிப்பிட்ட கிருத்துவ நிறுவனங்கள் மூலம் புழக்கத்தில் விடப்பட்டது, வசூல் செய்யப் பட்டது என்ற விவரங்கள் வெளியாகின[17].

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

கிருத்துவ முதலமைச்சர் ராஜசேகர காங்கிரஸ் உதவியுடன் நடத்தப் பட்ட கோடிகள் கிருத்து ஊழல் (அக்டோபர்.2012): அக்டோபர் 2012ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த அரசியல்வாதியான சங்கராந்தி கல்யாண் என்பவரை ஆந்திர சி.ஐ.டி.போலீசார் ரூ.50 கோடி பண மோசடிக்காகக் கைது செய்தனர்[18]. இவரும் இவரது நண்பர்களும் நியூ விஷன் பௌண்டேஷன் [New Vision Foundation (NVF)], ஹோலி கிரைஸ்ட் சர்ச் [Holy Christ Church], பாரத் பிரேம் சதன் டிரஸ்ட் [Bharat Prem Sadan Trust] மற்றும் யூத் மற்றும் கிருத்துவ நல்வாழ்வு பலப்படுத்தும் சங்கம் [Youth and Strength Christian Welfare Association] என்று பல நிறுவனங்களுடன் தொடர்பு இருந்தது. இவற்றின் மீது கூட பணமோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆந்திர போலீஸ் அறிக்கையின் படி, கீழ் கண்ட கம்பெனிகளின் மீது, 79 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன[19]:

 

  1. HIM Trust (Heavenly Inter Denominal Mission Trust),
  2. Bharat Prem Sadan,
  3. Youth & Strength Christian Welfare Association,
  4. Youth Alive Society,
  5. Trogopan Farmers Society,
  6. New Vision Foundation,
  7. Little Lamb Baptist Church Mission Trust,
  8. Jesus Preaches Association,
  9. Trinity Grace Ministry,
  10. Maranatha,
  11. Help to Poor International Trust,
  12. Center for Women Solidarity,
  13. RMP Infotech (Resource Money Power) and
  14. Online Survey World Organisation.


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

இவ்வாறு இத்தகைய கிருத்துவ நிறுவனங்கள் திடீரென்று சட்டங்கள் படி பதிவு செய்து கொண்டு, அலுவலகங்கள் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதற்கும் கோடிக்க்கணக்கில் பணம் முதலீடு செய்யப் பட்டிருக்க வேண்டும். அவையெல்லாம் திடீரென்று ஆரம்பித்துவிட முடியாது. மேலும் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சுமுகமாக செயல்பட்டு, பணத்தை வசூல் செய்வது என்பது சாதாரணமான காரியம் அல்ல. எனவே இவற்றின் மூலம் கோடிக் கணக்கான பணம் வசூல் செய்யப் பட்டு, சுருட்டப் பட்டது எனும் போது, இது திட்டமிட்டு செய்யப் பட்ட காரியமாகும். சில கோடிகளைப் போட்டு, பல கோடிகளை அள்ளலாம் என்ற முறை வெளிப்படுகிறது. மேலும் சிறுபான்மையினர் / கிருத்துவர் நிறுவனங்கள் என்றால், அரசுதுறைகள், அதிகாரிகள் நமக்கேன் வம்பு என்று வேண்டிய காரியங்களை செய்து கொடுத்திருக்கலாம் அல்லது எம்.என்.சி பாணியில் வேகமாக காரியங்களை செய்து கொடுத்ததற்கு நன்றாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இப்படி ஏகப்பட கிருத்துவ நிறுவனங்கள் சம்மந்தப் பட்டத்தை மறைக்க, இது ஏதோ ஒரு சாதாரண வியாபார மோசடி போலவும் திரித்துக் காட்டப் பட்டது. அதாவது, பல்வேறு அடுக்குகள் கொண்ட விற்பனைமுறை [Multi-Level Marketing Schemes (MLM)], வலைபோன்ற வியாபரமுறை []Network Marketing (NWM) மற்றும் பணம் இரட்டிப்பு என்றெல்லாம் விவரிக்கப் பட்டன[20]. ஆனால், பின்னணியில் இதே நிறுவனங்கள் தாம் இருந்தன என்பது தெரிய வந்தன. மேலும் அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததால் அமுக்கியே வாசிக்கப்பட்டது.

 

© வேதபிரகாஷ்

20-03-2014

 


[2] Trinity Mirror, CHENNAI Wednesday 13-11-2013, VOL. 19 No.126.

[9] JESUS LOVES MINISTRIES is a charitable trust organization based in Chennai, and this dedicated trust was founded by Dr. Paul Gladson in the year 1993. It was laid by the Jerushiya foundation and is functioning sucessfully with an  aim to make lives better for the orphan and helpless children. Dr.Paul Gladson, who is the current chairman started the good work and has motivated others to come forward and help in providing basic amenities to these little innocent creatures that have no one but us to help them grow into responsible and gentle citizens of our society. The trust began in PALAYANKOTTAI  in the name of “KARUNAILLAM” with twenty-eight children initially. After its smooth functioning a second branch was started at THIRUNELVELI in the year 1997, with sixty-two children and after ten years a third branch was established at CHENNAI  in 2007 with twelve children. It is registered under the INDIAN TRUSTS ACT 1882, REG NO-921/08. We are a trustworthy organization and truly work for the emancipation of these deserted children and poor, needy, lonely widows and protect them from all kinds of exploitation which they may face if not helped. Our motto is to deliver the needy when they cry, & help the poor when they need help. The Trust is managed by five trustees, Mr.Paul Gladson, Mr. Julius.G.Raja Singh, Mr.J. Inbarasi , Mr.Sigamani and Mr.Grace Jothimozhi who are making best efforts to provide these underprivileged children with all basic requirements as food, shelter, education, medical aid, entertainment & above all hope to live.

http://www.made-from-india.com/showroom/jerushiya-foundation/products/

[17] The money was circulated through various societies including HIM Trust (Heavenly Inter Denominal Mission Trust), Bharat Prem Sadan, Youth & Strength Christian Welfare Association, Youth Alive Society, Trogopan Farmers Society, New Vision Foundation, Little Lamb Baptist Church Mission Trust, Jesus Preaches Association, Trinity Grace Ministry, Maranatha, Help to Poor International Trust, Centre for Women Solidarity, RMP Infotech (Resource Money Power) and Online Survey World Organisation.

http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=aug2112/oth07

[20] The CID has been cautioning people against joining money circulation schemes being operated in the guise of Multi-Level Marketing Schemes (MLM) or Network Marketing (NWM). Such schemes were banned under the Prize Chits and Money Circulation Scheme (banning) Act, 1978.

http://www.ndtv.com/article/south/man-behind-money-circulation-racket-nabbed-206274



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

kamal Says:

Hi கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – If U Want Any Details Call



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (2)

 

கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (2)

 

ஏசுவின் பெயரால் மோசடி - ஏசுதாஸ், ஜான் பிரபாகரன், பால் கிளாட்சன்

ஏசுவின் பெயரால் மோசடி – ஏசுதாஸ், ஜான் பிரபாகரன், பால் கிளாட்சன்

இதன் முதல் பகுதி இங்கு பதிவிடப்பட்டுள்ளது[1]. டா. பால் கிளாட்சன் “ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ்” என்ற தர்மஸ்தாபனம் சென்னையில் 1993ல் எப்படி துவங்கினார்[2], அது ஜெருஸியா பவுன்டேஷன் கீழ் அனாதை மற்றும் இதர குழந்தைகளுக்காக செயல்பட்டது, “கருணை இல்லம்” என்ற பெயரில் பாளையங்கோட்டையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது, 2007ல் சென்னையில் 12 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது, இந்திய டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது (REG NO-921/08)[3] முதலிய விவரங்கள் முன்னமே கொடுக்கப்பட்டன. ஆனால், இணைதளத்தில் “வியாபார நிறுவனம்” என்ற முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. தாங்கள் விற்கின்ற பொருட்கள்: ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு, உணவு, மருத்துவ உதவி, இருக்க இடம் மற்றும் விதவைகளுக்கு ஆதரவு, என்றுதான் படங்களுடன் போட்டுக் கொண்டது. ஆக, இத்தகைய “சேவை” என்பதெல்லாம், வியாபாரம் தான் என்று நன்றாகவே நிரூபித்துக் கொண்டனர். இப்பின்னணியில், ஆவடி டேவிட் எவ்வாறு ஏமாற்றப் பட்டார் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

 

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் விளம்பரம் தெலுங்கில்

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் விளம்பரம் தெலுங்கில்



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

புனிதமான பணமோசடியும், கோடிகளில் நடத்தப் பட்ட ஊழலும்: ஹெவன்லி இன்டர் டினாமினல் மிஷம் டிரஸ்ட் சார்பில் ஏகப்பட்ட முகவர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப் பட்டன. வவுச்சர் / ரசீது புத்தகங்களும் அச்சிடப்பட்டன, வசூலிக்கும் முகவர்களுக்குக் கொடுக்கப் பட்டன. ஆந்திராவில் உள்ளூர் செய்திதாள்களில் விளம்பரங்கள் கொடுக்கப் பட்டன. பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள் என்று பெரிய ஆட்கள் சம்மந்தப் பட்டதால், சர்ச்சுகளுக்கு வரும்போது, அவர்களே, பென்சன், மகளிர் முதலியவற்றைப் பற்றிய திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, பரிந்துரைத்தனர். மதத்தலைவர்கள் சொன்னார்களே என்று பணத்தைக் கட்டினர். தவணை முறையிலும் வசூலிக்கப் பட்டதால், தாராளமாகவே கொடுத்தனர். வழக்கம்போல, முதல் சில மாதங்களில் செக்குகள் கொடுக்கப் பட்டன, காசும் வந்தது. ஆனால், பிறகு செக்குகள் பவுன்ஸ் ஆகின, கேட்டால் “இதோ வரும்” என்று சொல்லி சமாளித்தனர். “கொஞ்சம் பொறுங்கள், பணம் வந்துவிடும், இப்பொழுது பிரச்சினை செய்தால், நம்முடைய மானம் போய் விடும்”, என்றும் வேண்டிக் கொண்டிருப்பார்கள். பிறகு மிரட்டியும் இருப்பார்கள். பெரிய ஆட்கள் எல்லோருமே மதத்தலைவர்கள் முதலில் மக்களே அமைதியாக இருந்தனர், பிறகு மோசடி என்றதும் கொதித்து எழுந்தனர், புக்கார்கள் கொடுக்கப் பட்டன. அரக்கோணத்தைச் சேர்ந்த பிஷப் ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தபோது மற்றவர்களும் புகார் கொடுத்தனர்.

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013

டேவிட் கொடுத்த புகாரின் படி உள்ள விவரங்கள் (தினகரன், மார்ச்.2014): சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக பால் கிளாட்சன் என்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா நகர் மேற்கு பொன்னி காலனியை  சேர்ந்தவர் டேவிட் (72). இவர் சென்னை போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், “ஆவடியில் நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாசரேத் கலை அறிவியல் கல்லூரி தலைவராக உள்ளேன். புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  பால் கிளாட்சன் (45) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ஒரு மத போதகர். இவர் அறக்கட்டளை தலைவராகவும் இருந்தார். கிளாட்சன்  நடத்தும் பக்தி கூட்டங்களுக்கு சென்று வந்தேன். அவர் மீது எனக்கு  மரியாதை ஏற்பட்டது. வெளிநாடுகளில் உள்ள பலரிடம் தொடர்பு  இருப்பதாகவும், அவர்கள் மூலம் கல்வி நிறுவனத்திற்கு நன்கொடை பெற்று  தருவதாகவும் பால் கிளாட்சன் ஆசை வார்த்தை கூறினார். அதற்கு ஒரு  குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தர வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். முதற்கட்டமாக  ரூ. 5 கோடி பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 லட்சம்  பெற்றார். படிப்படியாக  ரூ. 25 லட்சம் வரை என்னிடம் இருந்து பெற்றார்.  ஆனால், உறுதி அளித்தபடி பணம் பெற்றுத் தரவில்லை. நான் கொடுத்த  பணத்தை கேட்டபோது, உயிருடன் போகமாட்டாய் என்று மிரட்டல்  விடுத்தார்[4]. எனவே, சம்பந்தப்பட்ட பால் கிளாட்சன் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்”, என்று கூறி இருந்தார். இதுகுறித்து, போலீசார் உரிய  நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டேவிட் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார்  விசாரணை நடத்தினர். அதில், பால் கிளாட்சன் மோசடி செய்தது உறுதி  செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்[5].

 

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் அடையாள அட்டை ரசீது

எச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் அடையாள அட்டை ரசீது



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

இது  குறித்து  போலீஸ்  தரப்பில்  கூறப்பட்டதாவது[6](தினமணி, மார்ச்.2014): அண்ணா நகர் மேற்கு பொன்னி காலனியைச் சேர்ந்தவர் எஸ்.டேவிட் (72). இவர் ஆவடியில் மெட்ரிக் பள்ளியையும், கல்லூரியையும் நடத்தி வருகிறார். இவரிடம் புழலைச் சேர்ந்த பால் கிளாட்சன் (45) சில மாதங்களுக்கு முன் அறிமுகமானார். இவர் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வருகிறார். இந்நிலையில் கிளாட்சன் தனக்கு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் டேவிட்டின் கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடையாக நிதி பெற்றுத் தர முடியும் என்றும், அதற்கு கமிஷனாக தனக்கு பணம் தர வேண்டும் என கூறினாராம். டேவிட் அதற்கு கமிஷன் தருவதாக ஒப்புகொண்டாராம். இதற்கிடையே உடனடியாக ரூ.5 கோடி நன்கொடை பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் கமிஷன் வேண்டும் என கிளாட்சன் கேட்டதாக தெரிகிறது. டேவிட்டும் பணம் கொடுத்துள்ளார்[7]. இந்தப் பணம் கொடுத்த சில நாள்களில் கிளாட்சன் ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்துக்கான காசோலையை டேவிட்டிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

சீனாவின்  கோல்ட்  யூனிட்  நிறுவனத்தில் முதலீடு: அதன்பின்னர், சீனாவின் கோல்ட் யூனிட் நிறுவனத்தின் சார்பில் வருமான வரித்துறைக்கு கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இந்தப் பணத்தைக் கொடுத்தால் ரூ.10 கோடி தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய டேவிட் மேலும் ரூ.15 லட்சத்தையும் கொடுத்துள்ளார். கிளாட்சன் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியதில், அந்த கணக்கில் பணமில்லை என காசோலை திரும்பி வந்தது. மேலும் கிளாட்சன் கூறிய சீனா கோல்ட் யூனிட் குறித்து விசாரித்ததில், அது போலியானது என்பதும், கோல்ட் யூனிட் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டது விட்டதும் தெரிந்தது.  மேலும் அவர் சீனாவின் தங்க யூனிட் பத்திரம் என்று கொடுத்த பத்திரமும், தற்போது மதிப்பு இல்லாதது என்று சீனாவின் மத்திய வங்கி தெரிவித்து விட்டது. எனவே அதுவும் போலி[8]. இதனால், கொடுத்த பணத்தை திரும்பித் தருமாறு டேவிட் கேட்டாராம். ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கிளாட்சன் இழுத்தடித்தாராம். இந்த நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவில் டேவிட் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிளாட்சனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதுவும் ஏசுதாஸின் ஆப்ரோ மைக்ரோ பைனான்ஸும் ஒரேமாதிரியான யுக்தியைக் கையாண்டுள்ளததை அறிந்து கொள்ளலாம். ரிசர்வ் பேங் விதிமுறைகளை மீறி இக்கிருத்துவ நிதிநிறுவனங்கள் எப்படி ஈடுபட்டன என்பது வியப்பாகத்தான் உள்ளது.

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4

டேவிட்டின் அறியாமை வியப்பை அளிக்கிறது: பள்ளி-கல்லூரி என்று நடத்தி வரும் டேவிட்டுக்கு பால் கிளாட்சன் பற்றி ஒன்றும் தெரியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிருத்துவப் பள்ளி நிறுவனங்களை நடத்திவரும் இவரே பலமுறை டொனேஷன்கள் வாங்கியிருப்பார். எனவே, அதைப் பற்றியெல்லாம், இவருக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்நிய நாடுகளிலிருந்து வரும் என்பதால், ஆசைப் பட்டார் என்பதிலும் வியப்பாக இருக்கிறது. ஏனெனில், கிருத்தர்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாத விசயம் இல்லை. இருப்பினும் லட்சங்களைக் கொடுத்தார், என்றால், என்றால் ஒன்று ஆசைப்பட்டு கோடிகளை அள்ளவேண்டும் என்று லட்சங்களை கமிஷனாகக் கொடுத்தார் அல்லது அவரும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த கிருத்து பணமோசடி வலையில் சிக்கியிருக்கலாம். மற்றவர்களைப் போல, இவரிடம் சாம-தான-பேத-தண்டம் முறைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. வேறுவழியில்லை எனும் போது, போலீசிடம் புகார் கொடுத்தார் என்றும் தெரிகிறது.

 

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

கிருத்துவ பண இரட்டிப்பு மோசடி

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு நுழைந்த கிருத்துவ நிதிமோசடியின் பின்னணி என்ன?: ராஜசேகர ரெட்டி 2009ல் விபத்தில் திடீரென்று இறந்தபோது, அவர் பணத்தை எங்கு வைத்திருந்தார் என்று பேச்செழுந்தது. சோனியாவிடம் விசுவாசமாக இருந்த இவர் காலமானதும், சோனியாவுக்கும் ரெட்டி குடும்பத்திற்கும் சரியான உறவில்லாமல், எதிர்ப்பாகவும் மாறியது. மகன் ஜெகன்மோஹன் மீது சிபிஐ, வருமானத்துறை போன்றவற்றின் மூலமாக ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டன. அந்நிலையில் கிருத்துவர்களின் சர்ச்சுகள் கட்டும் வேலையும் அதிகமாகியது. எனவே, திடீரென்று அவ்வாறு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகின்றது. அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனரிகளின் நடமாட்டம் ஆந்திரா-ஒரிஸா கட ற்கரைப் பகுதிகளில் அதிகமாகின. அவர்கள் “சர்ச்-பிளான்டிங்”கிற்காக பணமும் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால், அந்நிய செலாவணி, வருமானத்துறை முதலியவற்றை ஈடுகட்ட புதிய-புதிய டிரஸ்டுகள் மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் பிவி 25ன் கீழ் லாபம் எதிர்பார்க்காத பிரைவேட் கம்பனிகளும் முளைத்தன. இவை மற்றும் டிரஸ்டுகள் பண பரிமாற்றம், புழக்கம் மற்றும் செலவீனங்களைக் காட்டுவதற்காக உபயோகப் படுத்தப் பட்டன. இந்நிலையில் தான் மேற்குறிப்பிடப்பட்ட கிருத்துவ நிறுவனங்கள் நிதிமோசடிகளில் இறங்கியது. கோடிகளைப் பெற்ற குற்றங்களை மறைக்க, ஒருவேளை, முன்னரே குறிப்பிடப் பட்டபடி பல்வேறு அடுக்குகள் கொண்ட விற்பனைமுறை [Multi-Level Marketing Schemes (MLM)], வலைபோன்ற வியாபரமுறை []Network Marketing (NWM) மற்றும் பணம் இரட்டிப்பு என்ற போர்வைகளில் நடத்தப் பட்டன[9]. இப்பொழுது, நன்கொடைக்கு கமிஷன் என்ற புதியமுறை, பால் கிளாட்சன் மூலம் தெரிய வருகிறது. இதுவும் வருமானவரித்துறையினரை ஏமாற்றுவதற்கு உபயோகிக்கப் பட்டது எனலாம்.

 

 

© வேதபிரகாஷ்

20-03-2014

 


[3] JESUS LOVES MINISTRIES is a charitable trust organization based in Chennai, and this dedicated trust was founded by Dr. Paul Gladson in the year 1993. It was laid by the Jerushiya foundation and is functioning sucessfully with an  aim to make lives better for the orphan and helpless children. Dr.Paul Gladson, who is the current chairman started the good work and has motivated others to come forward and help in providing basic amenities to these little innocent creatures that have no one but us to help them grow into responsible and gentle citizens of our society. The trust began in PALAYANKOTTAI  in the name of “KARUNAILLAM” with twenty-eight children initially. After its smooth functioning a second branch was started at THIRUNELVELI in the year 1997, with sixty-two children and after ten years a third branch was established at CHENNAI  in 2007 with twelve children. It is registered under the INDIAN TRUSTS ACT 1882, REG NO-921/08. We are a trustworthy organization and truly work for the emancipation of these deserted children and poor, needy, lonely widows and protect them from all kinds of exploitation which they may face if not helped. Our motto is to deliver the needy when they cry, & help the poor when they need help. The Trust is managed by five trustees, Mr.Paul Gladson, Mr. Julius.G.Raja Singh, Mr.J. Inbarasi , Mr.Sigamani and Mr.Grace Jothimozhi who are making best efforts to provide these underprivileged children with all basic requirements as food, shelter, education, medical aid, entertainment & above all hope to live.

http://www.made-from-india.com/showroom/jerushiya-foundation/products/

[4] தினகரன்,வெளிநாட்டுநிதிபெற்றுதருவதாககல்விநிறுவனஅதிபரிடம்ரூ.25 லட்சம்மோசடி:மதபோதகர்கைது, சென்னை, 19-03-2014.

[7]  தினமணி, கல்லூரிநிர்வாகியிடம்ரூ.25 லட்சம்மோசடி, By dn, சென்னை

First Published : 19 March 2014 03:39 AM IST

 



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

Dr.paul gladson Says:

Sir
Mr.paul gladson This massages pls delete my ads and my photos I have clear documents and court order if any clarifications pls call me 9940325502



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி
Permalink  
 


 http://www.moneylife.in/article/four-fraudsters-held-in-ap-for-running-money-spinning-schemes/27882.html

Moneylife » Life » Public Interest » Four fraudsters held in AP for running money-spinning schemes

Four fraudsters held in AP for running money-spinning schemes

MDT/PTI | 20/08/2012 12:43 PM |  printer.png 

The arrested accused from HIM Trust of Chennai had appointed 'agents' to collect money by luring people with handsome returns on their invest and were operating in AP, Tamil Nadu and Maharashtra

 
Hyderabad: Andhra Pradesh Criminal Investigation Department (CID) has arrested four prominent members of the Heavenly International Mission (HIM) Trust from Chennai for allegedly duping investors to the tune of several crores of rupees by operating fake money-spinning schemes in at least three states, reports PTI.
 
Thota Srinivasulu, Akiligungta Suvarnaraju, Cherukuro Yesurathnam and Nallagatla Annadarao, who were apprehended from Chennai, are main members and coordinators of HIM Trust, Additional Director General of Police (CID) SV Ramana Murthy said.
 
The arrested accused had appointed 'agents' to collect money by luring people with handsome returns on their investments. They were operational not only in Andhra Pradesh but also in Tamil Nadu and Maharashtra, he said, adding the conmen were on the run since the scam was exposed.
 
The CID had registered a case against HIM Trust in 2011 under sections 406 (criminal breach of trust), 420 (cheating) and 120-B (criminal conspiracy) of Indian Penal Code (IPC) and section 5 of Andhra Pradesh Protection of Financial Establishment (APPDFE) Act 1999.
 
About 40 people, including HIM Trust chairman John Prabhakar, were already arrested for allegedly appointing agents who collected crores of rupees from unsuspecting investors, Murthy said.
 
"One of the arrested accused Thota Srinivasulu allegedly cheated people of Rs120 crore by collecting Rs221 crore under a money circulation scheme. He collected the amount by appointing agents at Nellore, Warangal, Hyderabad, Vijayawada and at Chennai in Tamilnadu," the ADG said in the release.
 
The investigations so far have revealed that four persons arrested from Chennai have purchased properties with the public money and the CID has seized property documents from them, the release said.
 
According to CID, the accused have given about Rs10 crore to one Jayaraj and another Rs3 crore to Paul Gladson of Chennai who run "charity" foundations.
 
The accused will be produced in a local court at Nellore tomorrow, Murthy added.


-- Edited by Admin on Monday 1st of June 2015 07:22:15 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
RE: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி
Permalink  
 


10665691_1412315939082450_7831109910406310142_n.jpg?oh=e35244cf0667f0e4ca94ad360d6186ff&oe=56038B2D&__gda__=1443167910_6bea4eb503df93ef24d4e3d4cfe48c06

https://www.facebook.com/photo.php?fbid=1412315939082450&set=a.1377406335906744.1073741826.100009121715355&type=1

11038741_1402081576772553_6432994563234915042_n.jpg?oh=61d22f5a510cebc010b07ef7062e61fc&oe=55FF5846



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

Social Activities PAUL GALDSON and JERUSHIYA WITH Mr. Ramarajan

ADGP Mr. Rajentharan & Dr.Ravikumar With Jerushiya  ADMK MP Mr.Venugopal with Jerushiya and paulgladson

Mr.Murthi with Jerushiya

 



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

Dr. பால்கிளாட்சன் அவர்களை பற்றி..

  
 

 

Dr. பால்கிளாட்சன் - 1970-ல் பிறந்த இவர் தமது அரைகால் பேன்ட் ( Half Pant ) போட்ட 15 வயதில் ஊழியத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்தார்.

தனது தாய் தந்தை இருவரும் ஆசிரியப் பணியில் இருந்துகொண்டே தேவனுடைய பணியை செய்து வந்தார்கள். தனது தாய் தந்தையர்க்கு பிறந்த 10 பிள்ளைகளில் 9-வதாக பிறந்த இவர்  சிறு  வயதில் பெற்றோருக்கும் சுற்று வட்டாரத்திலுள்ள அனைவருக்கும், ஊழியத்திற்கும், சபைக்கும் சின்ன சின்ன சேட்டை செய்து வந்தார். தனது 14 வது வயதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்த போது அவருடைய நண்பர் ஜாஷ்வா மூலமாக சென்னை அருகிலுள்ள பொன்னேரியில் ஈடன் பள்ளி வளாகத்திலுள்ள இலேமென்ஸ் இவான்ஜலிக்கல் பெல்லோஷிப் ( LEF ) சபைக்கு அறிமுகமானார். அந்த சபையின் போதகர் Dr. மாசிலாதாஸ் மற்றும் அவர் மனைவி கிலாடி தாஸ் இவர்களின் அன்பில் கவரப்பட்டு சபை ஆராதனைக்கும், சண்டே கிளாசுக்கும் தவறாமல் செல்ல ஆரம்பித்தார்.

அந்த சபையின் மூப்பர் சகோ. தியோப்பீலாஸ் மூலம் இரச்சிபின் பாதையில் வழிநடத்தப்பட்டு 14 வயதிலேயே தேவன் Dr. பால்கிளாட்சன் அவருக்கு தரிசனம் ஆகி அவருடன் பேசினார். தமது 15 வயதில் அவருடைய ஜெபத்தாலும் நன் நடத்தையாலும் அனைவராலும் கவரப்பட்டு தமது 15 வயதில் தேவன் தம்முடைய வல்லமையாலும் பரிசுத்த ஆவியின் அபிசேகத்தை பெற்றார்.

வெளிநாட்டு ஊழியங்கள்

அதன் பின்பு தேவனுடைய ஊழியத்தின் அழைப்பை ஏற்று அரைகால் சட்டை போட்டுகொண்டு தமிழ் நாட்டிலும் , இந்தியாவில் பல பகுதிகளிலும் ஊழியம் செய்து வந்தார்.

திருநெல்வேலி CSI திருச்சபையின் கன்வென்ஷன் பிரசங்கியராக அந்த பகுதியில் ஊழியம் செய்து வந்தார். 15 வயதில் இருந்து 25 ஆண்டுகளில் இந்தியா, அந்தமான் தீவுகள் , இலங்கை, மலேசியா, சிங்கபூர், சீனா, ஆங்காங்க் , ஐரோப்பா போன்ற நாடுகள், மற்றும் வளைகுடா நாடுகள் என சுமார் 40-க்கும் மேற்கொண்ட நாடுகளுக்குச் சென்று தேவனுடைய வார்த்தைகளை பிரசிங்கித்து வருகின்றார். அவர் கொடுக்கும் அனல் மூட்டும் செய்திகள், கடைசி கால சத்தியங்கள் , வல்லமை ஊட்டும் செய்திகள், ஜெபத்தினால் அனல் பறக்கும் செய்திகள் போன்றவற்றால் லட்சக் கணக்கானோர் பயன் அடைந்துள்ளார்கள் .இவருடைய ஜெபத்தினால் அனேக வியாதிகளால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்துள்ளார்கள், பிசாசின் பிடியில் சிக்கியவர்கள், பில்லி சூன்ய கட்டுகளால் பாதிக்கபட்டோர் விடுதலை அடைந்துள்ளார்கள். இவர் மூலம் உலகத்திலுள்ள பல பகுதியிலுள்ள மக்கள் விடுதலை பெற்று தேவனை துதித்தார்கள்.

பரிசுத்த பவுல் போல், இவர்களின் ஊழியமும் பாடுகள் நிறைந்ததுதான். எதிர்ப்புகளும், பாடுகளும் பிரச்சனைகளும், போரட்டங்களும், சிறை வாசமும் போன்ற உபத்திரத்தின் மத்தியில்தான் இவருடைய ஊழியமும் அப்படியே ! சகோ Dr.D.G.S. தினகரன் , Dr. N.ஜீவானந்தம், சகோ. பால் தினகர் , சகோ. மோகன் சி லாசரஸ் , சகோ.சாம் ஜெபத்துரை, Father. பெர்க் மான்ஸ், சகோ. வின்சன் ஜெபக்குமார் , சகோதரி. அல்லேலுயா கஸ்தூரி, சகோதரி. யாகமால் , சகோதரி.பத்மா முதலியார், சகோ. ஜான் சாலமன், சகோ. ராபின்சன் , பிரதம பேராயர் எஸ்ரா சற்குணம், நெல்லை CSI பேராயர் J.J.கிறிஸ்சதாஸ் ,சிறுபான்மை ஆணையத்தின் பேராயர் Dr.M.பிரகாஷ் , ஜேசன்.S.தருமராஜ், பேராயர் தினத்தூது ராஜா, T.D.லாசர் , சாம் சுந்தர் , பேராயர் ஏ .சன்ஸ் .எஸ் தருமராஜ், பேராயர் ஜெயபால் டேவிட், பாஸ்டர் சுந்தரம் ஐயா ,  பாஸ்டர் விசுவாசம் , பாஸ்டர் மோசஸ் ராஜசேகர், பாஸ்டர் ஓவன் ராபட் , பாஸ்டர் ஹென்றி ஜோசப், சகோதரி எஸ்தர் பேபி , போன்ற பல தேவ தாசர்களுடன் அன்புடன் பழகி பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டு தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறார்.

Dr. பால்கிளாட்சன் மற்றும் குழந்தை ஜெருஷியா சாட்சிகள்

இவருக்கு திருமணம் ஆகி ஜெருஷியா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.14.06.2001-ல் பிறந்த இவருடைய மகள் பிறக்கும்போதே பல குறைபாடுகளுடன் பிறந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் 6 முறை அறுவை சிகிச்சை செய்தும் பேச்சு வராது என்று மருத்துவர்களால் கூறப்பட்டவள் , தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த குழந்தையை தேவன் பேச வைத்து 7 வயதில் பாடவும் தேவன் கிருபை செய்தார். ( கர்த்தருக்கே மகிமை உண்டாவுவதாக )

இந்த குழந்தைக்கு சிறந்த தகப்பனாக இருந்து ஆவிக்குரிய வாழ்க்கையிலும் , உலக பிரகடமைகளிலும் பல பயிற்சிகள் கொடுத்து வந்தார். ஆதலால் 7 வயதில் இந்த குழந்தை ஊழியத்திற்கு அற்பணிக்கப்பட்டு மேடையில் தேவனை உயர்த்தி பாட ஆரம்பித்தார்.  அதே
7 வயதில் குண்டு எரியும் விளையாட்டில் Gold Medal ( National level ) தேவனின் கிருபையால் வாங்கினார் . தனது 8 -வது வயதில் இரண்டு மற்றும் நான்கு சக்கரம் ஓட்டி சாதனை படைத்தார். மேலும் கராத்தேவிலும் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார்.

தமது 9 வது வயதில் உலகமே வியக்கவைக்கும் வகையில் 100 கிருத்துவ பாடல்களை தொடர்ந்து பாடி The Record book of India, The Record Book of Asia, மற்றும் புதிய கின்னஸ் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இவர் பாடிய பாடல்களை CD , DVDமூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்த்து , கேட்டு பயணடைந்து வருகிறார்கள்.

இப்பொழுதும் தமது 13 வயதில் தந்தையுடன்  இணைந்து  தேவனுடைய ஊழியத்தை செய்து வருகின்றார். இவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் தேவனுக்கு நன்றி செலுத்தும்   வகையில்
1000 கணக்கான ஏழை மக்களுக்கும் , மற்றும் தேவனுடைய ஊழியகாரர்களுக்கும் அன்னதானம் மற்றும் உடைகள் கொடுத்து அனைவரையும் கணப்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ,காவல் துறை உயர் அதிகாரிகள்
( IPS ), பல அமைச்சர்கள், MP, MLA, மற்றும் பல அரசியல் தலைவர்கள், பேராயர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், பாடகர்கள் , மூத்த தேவ ஊழியர்கள் என அனேகர் கலந்து கொண்டு விழாவில் தேவனுடைய நாமத்தை மகிமை படுத்துகிறார்கள் .

பிரபலங்களுடன் சகோ. Dr. பால்கிளாட்சன்

பல அரசியல் தலைவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளார்.  குறிப்பாக அ தி மு க, தி மு க,
பி ஜெ பி, காங்க்ரஸ் ,விடுதலை சிறுத்தைகள் , கம்னுயுஸ்ட், போன்ற கட்சி சார்பில் நடத்தும் விழாக்கள் , கவர்னர் ரோசையா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கட்சி சார்பில்லா அரசு விழாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்தும் விழாக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தேவனுடைய நாமத்தை   மகிமை படுத்தி கிருத்துவர்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சமூக சேவையில் சகோ. Dr. பால்கிளாட்சன்.

இவர் ஜெபத்திலும், வேத வாசிப்பிலும், ஊழியம் செய்வதிலும், சிறப்பாக இருந்தாலும் சமூக சேவையில் அதிக சிந்தையுள்ளவர் . அவர் கடந்த 25 ஆண்டுகளில் பல சமூக சேவைகள் செய்து வருகிறார்.   பல  அனாதை  இல்லங்கள்  உருவாக்கி,  பல  முதியோர்  இல்லங்களை  ஆதரித்து, மாற்றுதிரனாளிகளுக்கு உதவிகள் பல செய்து, விதவைகள், ஏழை ஊழியர்கள், சிறை வாசிகள்,
சிறை வாசிகளின் குழந்தைகள்,  மற்றும் அவர்களின் குடும்பங்கள் போன்ற நலிவடைந்த ஏழை
எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகின்றார் . மேலும் தமிழ்நாடு காவல்துறை லயன்ஸ் 
க்ளப் இவர்களுடன் இணைந்து சாலை போக்குவரத்து  விழிப்புணர்வு முகாம்,  ரத்ததான முகாம், எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம், கிராமங்களில் சாலை ஓரங்களில் மரங்கள் நடுவது, நலிவடைந்த கிராமங்களை  மேம்படுத்துவது  போன்ற  பல  சமூக  சேவைகளை  செய்து  வருகின்றார்.    வட மாநிலங்களில் missionaries-க்கு உதவுவதும், ஆதிவாசிகளின் முன்னேற்றத்திற்கு உதவிகள்
செய்து வருகிறார்.   இவர் பலமுறை சிறந்த சமூக சேவகர் பட்டம் வாங்கியுள்ளார்.

வேதாகமும் ஆராய்ச்சியும்

இவர் வேதாகமத்தை நேர் முழங்காலில் நின்று ஆதியாகம் முதல் வெளிபடுத்தல் வரை பலமுறை படித்து முடித்துள்ளார். சிறு வயது முதலே வேதாகமத்தை ஆராய்ச்சி செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர் .

அதாவது,

1. மனிதன் மரித்த பிறகு அடக்கம் செய்த பின்பு எலும்பு மண்ணோடு ஒட்டுவதில்லை . ஏன்? எலும்பை தேவன் எதனால் உண்டாக்கினான் .

2. யோசுவா ஜெபித்த போது சூரியன் நின்றதா ? அல்லது பூமி நின்றதா ?

3. நோவா ஒரு நீதி மான் .அவர் குறித்து வெறித்து இருப்பாரா ?

4. நரகம் எங்கே ? பாதாளம் எங்கே ?

5. பரதேசி எங்கே ? பரலோகம் எங்கே ?

6. அந்தி கிறிஸ்து யார் 666

7. Robat க்கும் , computer க்கும் அந்தி கிறிஸ்துக்கும் என்ன சம்மந்தம் ?

8. ஒளிவமலை மற்றும் ஏழு மலை ரகசியம் என்ன ?

9. மூன்றாம் மகாயுத்தம் எப்போது துவங்கும் போன்ற பல தலைப்புகளில் சிறப்புகளை ஆராய்ச்சி
செய்து சிறந்த வேதாகம் ஆராய்சியாளர் என்று பல பல்கலைகழகங்கள் Dr.பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி
Permalink  
 


Dr.Paul gladson  f.png jerushiya.png PAUL GALDSON and JERUSHIYA WITH SenthilPAUL GALDSON and JERUSHIYA WITH Ramarajan JERUSHIYA WITH VaiyapuriPAUL GALDSON WITH Kumarimuthu

Jerushiya with MLA's Jerushiya 12-th Birthday Function 9.png JERUSHIYA WITH Mr.Vaiyapuri Dr.Ravikumar With Paul Gladson

3.png  5.png 6.png

 

No. 2 , Meenatchi Nagar,

Puzhal , Chennai - 600 066,

Tamil Nadu , India.

For Prayers : +91 99403 25502

Email          : paulgaldson@gmail.com

 

  paulgaldson@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
RE: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி
Permalink  
 


http://araciyal.com/main/imp-news-brief.php?rowid=1207

உலக தமிழ் வர்த்தக கூட்டமைப்பு உதயம்,தமிழக ஆளுநர் ரோசய்யா துவக்கினார்

 

இன்று 10.01.2015 சனிக்கிழமை சென்னை அம்பிகா எம்பயர் தங்கும் விடுதியில் மேதகு தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்கள் உலக தமிழ் வர்த்தக கூட்டமைப்பு துவக்க விழா பெயர் பலகையை வெளியிட, மலேசிய பேரா மாநில சபா நாயகர் டத்தோ ஸ்ரீ S.K.தேவமணி பெற்றுகொண்டார்.

.10887555_766352016775092_5656452951005067422_o.jpg?_nc_eui=AWjU7v3--tNU_XMNbDRu7x7PA5vAT31vUSbHTw

 

இந்நிகழ்வில் முனைவர் பாரிவேந்தர், பேராசிரியர் CMK. ரெட்டி, அரிமா S.M. விஜயகுமார், திரு EVKS. இளங்கோவன் அவர்கள் (தலைவர் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு), திரு E.R. ஈஸ்வரன் அவர்கள் (பொதுசெயலாளர் கொங்குநாடு மக்கள் தேசியகட்சி), திரு த.வெள்ளையன், திரு டாக்டர் என்.ஆர்.தனபாலன், பேராயர் Dr.V.S.ஐசக் அய்யா, Rev Dr.B.பால் கிளாட்சன், திரு சுப. வீரபாண்டியன், திரு கே.தேவராஜ், கல்விதந்தை டாக்டர் MA. சூசை மும்பை, Dr. வேல்முருகன் பின்னணி பாடகர், கலாநிதி அடியார் விபுலானந்தா கனடா

தமிழ் தொழில் அதிபர்கள், தமிழ்தங்கம் தெ. சிவக்குமார், இளம்பாரி உ. கருணாகரன் பி.இ, DR. VP. விட்டல், திரு T.N. ஷங்கர் விகரானந், டாக்டர் JNS.செல்வன் மற்றும் திரு புகழ்நிதி நிறைந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக்காக ஏற்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு.

சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக கிறிஸ்தவ மதபோதகர் Rev Dr.B.பால் கிளாட்சன்கைது செய்யப்பட்டார்.

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/03/19/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.25-%E0%AE%B2%E0%AE%9F/article2117570.ece?service=print

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=83917

 



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

11393009_1602277856720880_2299651307314570239_n.jpg?_nc_eui=AWisbe8KIRWtuNj4-lR18BHs9Xqlg5D8vsy0Tg&oh=b37156dc0e151cb4029f6bc38a355b03&oe=55F875AB

பல தலைப்புகளில் சிறப்புகளை ஆராய்ச்சி செய்து சிறந்த வேதாகம் ஆராய்சியாளர் என்று பல பல்கலைகழகங்கள் Dr.பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard