கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)
பால் கிளாஸ்டன் என்பவர் பால் கிளாட்ஸன் என்று மாறியது ஏன்?: பால் கிளாஸ்டன் என்பவர் பால் கிளாட்ஸன் என்று மாற்றிக் கொண்டதாக, “டிரினிடி மிர்ரர்” நவம்பர் 2013 என்ற நாளிதழில் சிறியதாக வந்திருந்தது[1]. இதை யார் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை[2]. ஆனால், இதே பால் கிளாட்சன் முந்தைய ஆண்டில் 2012ல் ஒரு பண ஊழலிலும் சிக்கியவர் என்பது மிகவும் குறைவான மக்களுக்கே தெரியும் எனலாம்[3]. தோட்டா சினிவாசுலு, அகிலிகுன்டா சுவர்ணராஜு, செருகூரு ஏசுரத்னம் மற்றும் நள்ளாகட்ல அன்னாத ராவ் [Thota Srinivasulu, Akiligungta Suvarnaraju, Cherukuro Yesurathnam and Nallagatla Annadarao] முதலியோர் ஆந்திர சிஐடி.போலீசாரால் சென்னையில் ஆகஸ்ட் 2012ல் பிடிக்கப் பட்டனர். அதாவது ஆந்திராவிலிருந்து பணத்தை சென்னைக்கு எடுத்து வரும் போது பிடிக்கப்பட்டனர். இவர்கள் பணத்தை முதலீடு செய்தால், அதற்கு அதிக அளவில் வட்டி திரும்ப கிடைக்கும் என்று மோசடிகளில் ஈடுபட்ட ஏஜென்டுகள் என்று குறிப்பிடப்பட்டது. இந்த ஏஜென்டுகள் ரூ.10 கோடிகளை ஜெயராஜ் என்பவருக்கும், ரூ. 3 கோடிகளை பால் கிளாட்சன் என்பவருக்கும் கொடுத்துள்ளனர். இவ்விருவரும் தரும ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றனர்[4] என்ற செய்திகள் வெளிவந்தன. அதாவது 2012லேயே கிருத்துவ மோசடி நிறுவனங்களுக்கும் பால் கிளாட்ஸன் என்ற போதகருக்கும் தொடர்பு இருந்தது தெரிகிறது.